12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2020
12 ஆம் வகுப்பு இயற்பியல் மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Sample 2 Mark Book Back Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
தேர்ந்தெடுக்கப்பட்ட உட்கவர்தல் பற்றி சுருக்கமாகக் கூறுக.
2.
ஆல்பா சிதைவில் நிலைத்தன்மையற்ற ஒரு அணுக்கரு ஏன் \(_{ 2 }^{ 4 }{ He }\) அணுக்கருவை உமிழ்கிறது? நான்கு தனித்தனி நியூக்ளியான்களை அது ஏன் உமிழ்வதில்லை?
3.
சரிவு முறிவு மற்றும் செனார் முறிவு ஆகியவற்றை வேறுபடுத்துக.
4.
ஒரு மின்தூண்டி எதற்குப் பயன்படுகிறது? சில உதாரணங்களைத் தருக.
5.
மின்காந்த அலைகள் என்றால் என்ன?
6.
சீபெக் விளைவு என்றால் என்ன?
7.
கூலூம் எதிர்த்தகவு இருமடி விதியைக் கூறு.
8.
9.
தூரப்பார்வை என்றால் என்ன? இதனைச் சரிசெய்யும் வழிமுறை யாது?
10.
ஒளியின் குவாண்டக் கொள்கையைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.
11.
அகஉள்நோக்கி (endoscope) செயல்படும் முறையை விவரி.
12.
ஒளி எதிரொளிப்பினால் ஏற்படும் திசைமாற்றக் கோணம் என்றால் என்ன?
13.
ஒளிமின் விளைவு என்றால் என்ன?
14.
நானோ பொருட்கள் மற்றும் பேரளவு பொருட்கள் இடையே உள்ள வேறுபாடு யாது?
15.
போர் அணு மாதிரியின் குறைபாடுகளைக் கூறுக.
16.
RADAR என்பது எதனைக் குறிக்கிறது?
17.
திறன் காரணியின் ஒரு வரையறையைத் தருக.
18.
ஓம் விதியின் பயன்பாட்டு வடிவத்தை கூறு.
19.
மின்காப்பு வலிமை என்றால் என்ன?
1.
தெரிவு உட்கவர்தல் என்பது பொருளின் ஒரு பண்பாகும். குறிப்பிட்ட ஒருங்கமைவு திசைக்கு இணையாக உள்ள தளத்தில் மட்டும் மின்புல அதிர்வுகளைப் பெற்றுள்ள ஒளி அலைகளைத் தன்வழியே செல்ல அனுமதித்தும், மற்ற அனைத்து ஒளி அதிர்வுகளையும் உட்கவரும் பொருளின் இப்பண்பிற்குத் தெரிவு உட்கவர்தல் என்று பெயர்.
2.
\(_{ 92 }^{ 238 }{ U }\) அணுக்கரு \( _{ 90 }^{ 234 }{ Th }\) அணுக்கருவாக சிதைவடையும் பொழுது நான்கு தனித்தனியான அணுக்கருத்துகள்கள் (2 புரோட்டான்கள் மற்றும் 2 நியூட்ரான்கள்) வெளியேற்றினால், சிதைவு ஆற்றல் Q எதிர்குறி அடையும். அதாவது விளைவுப் பொருளின் நிறை தாய் அணுக்கருவின் \(_{ 92 }^{ 238 }{ U }\) நிறையை விட அதிகம், இது ஆற்றல் மாறா விதிக்கு எதிரானது எந்த ஒரு சிதையும் ஆற்றல் மாறா விதி, உந்த மாறா விதி, கோண உந்த மாறா விதிப்படியே நடக்க வேண்டும். எனவே நான்கு தனித்தனியான அணுக்கருத்துகள்கள் வெளியாவதில்லை.
3.
| வ.எண் | செனார் முறிவு | சரிவு முறிவு |
| 1. | மிக அதிக அளவு மாசூட்டப்பட்ட p-n சந்திகளில் < 10-6 மீ க்கு குறைவான அளவுகளில் மெல்லிய இயக்கமில்லாப் பகுதி இருக்கும். | சரிவு முறிவானது குறைந்த அளவு மாசூட்டப்பட்டு அகலமான இயக்கமில்லாப் பகுதிகளைக் கொண்ட சந்திகளில் நடைபெறுகிறது. |
| 2. | மின்புலம் இயற்கையாகவே வலிமையாக உருவாகிறது. | இங்கு, மின்புலமானது முறிவினை ஏற்படுத்தும் அளவுக்கு வலிமையானதாக அமையாது. |
| 3. | சந்திகளின் குறுக்கே முறிவு எல்லை வரை பின்னோக்கு மின்னழுத்தத்தை அதிகரிக்கும் போது வலிமையான மின்புலம் மெல்லிய இயக்கமில்லாப் பகுதியின் குறுக்கே உருவாக்கப்படுகிறது. இந்த மின்புலம் படிக தளத்தில் உள்ள சகப்பிணைப்பை முறித்து அதன் மூலம் எலக்ட்ரான் துளை ஜோடியை உருவாக்கும். இந்த விளைவு செனார் முறிவு எனப்படும். | வெப்பத்தினால் உருவாக்கப்பட்ட சிறுபான்மை ஊர்திகள் இந்த மின்புலத்தினால் முடுக்கப்பட்ட போதுமான அளவு இயக்க ஆற்றலைப் பெறுகின்றன. இவை இயக்கமில்லாப் பகுதியில் செல்லும்போது குறைக்கடத்தி அணுக்களுடன் மோதி சகப்பிணைப்பை முறித்து எலக்ட்ரான் துளை ஜோடிகளை உருவாக்குகின்றன. |
| 4. | மிகச் சிறிய அளவில் பின்னோக்கு மின்னழுத்தத்தை அதிகரித்தாலும் கூட அது மிக அதிக அளவு மின்னூட்ட ஊர்திகளை உருவாக்கும். எனவே, சந்தியானது முறிவுப் பகுதியில் மிகக்குறைந்த மின்தடையைக் கொண்டிருக்கும். | புதியதாக உருவாக்கப்பட்ட மின்னூட்ட ஊர்திகளும் மின்புலத்தினால் முடுக்கப்பட்டு மோதல்களினால் மேலும் மின்னூட்ட ஊர்திகளை உருவாக்குகின்றன. |
| 5. | அணிக்கோவை தளத்தில் உள்ள பிணைப்புகளை முறித்து அதன் மூலம் எலக்ட்ரான் உமிழப்படுகின்றன. இச்செயல்முறை அக புல உமிழ்வு அல்லது புல அயனியாக்கம் என்று பெயர். இச்செயல்முறைக்குத் தேவைப்படும் மின்புலம் 106 V m-1 என்ற அளவில் அமையும். | இந்த ஒட்டுமொத்த செயல்முறை பெருமளவு மின்னூட்ட ஊர்திகளைச் சந்தியின் குறுக்கே ஏற்படுத்தி பின்னோக்கு மின்தடையைக் குறைக்கும். இதனால், டையோடு மின்னோட்டம் திடீரென உயரும். |
4.
மின்தூண்டியில் மின்னாற்றல் சேமிக்கப்பட்டு வருகிறது. இது குழல் விளக்குகளில் சோக் ஆக பயன்படுகிறது
உதாரணங்கள்:
கம்பிச்சுருள், வரிச்சுருள் மற்றும் வட்ட வரிச்சுருள்
5.
மின்காந்த அலைகள் முடுக்குவிடப்பட்ட மின்துகள்களால் உருவாகும். இவை குறுக்கலைகள் ஆகும். இவை வெற்றிடத்தில் ஒளியின் வேகத்தில் செல்கின்றன.
6.
ஒரு மூடிய சுற்றில் இரு வெவ்வேறு உலோகங்களின் இரு சந்திப்புகளை வெவ்வேறு வெப்பநிலைகளில் வைக்கும்போது மின்னழுத்த வேறுபாடு (மின்னியக்கு விசை) தோன்றுவதை சீபெக் கண்டறிந்தார். இம்மின்னியக்கு விசையினால் ஏற்படும் மின்னோட்டத்தை வெப்பமின்னோட்டம் என்றழைக்கலாம்.
7.
இரண்டு காந்த முனைகளுக்கு இடையே உள்ள ஈர்ப்புவிசை அல்லது விலக்கு விசை அவற்றின் முனைவலிமைகளின் பெருக்கல் பலனுக்கு நேர்விகிதத்திலும் அவற்றிற்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும், கணிதவியல் முறையில் பின்வருமாறு நாம் எழுதலாம்.
\(\vec{F} \propto \frac{\mathrm{q}_{\mathrm{m}_{\mathrm{A}}} \mathrm{q}_{\mathrm{m}_{\mathrm{B}}}}{\mathrm{r}^2} \hat{\mathrm{r}}\)
இங்கு \(\mathrm{q}_{\mathrm{m}_{\mathrm{A}}}\)மற்றும \(\mathrm{q}_{\mathrm{m}_{\mathrm{B}}}\)என்பவை இரண்டு காந்த முனைகளின் முனை வலிமைகளைக் குறிக்கும். r என்பது இரண்டு காந்த முனைகளுக்கு இடையே உள்ள தொலைவைக் குறிக்கும்.
\(\vec{F}=k \frac{q_{m_A} q_{m_B}}{r^2} \hat{r}\)
8.
9.
விழிக்கு அருகே உள்ள பொருளைத் தெளிவாக காண இயலாது. தகுந்த குவி லென்ஸ் அணிவதால் இக்குறையை சரி செய்யலாம்.
10.
ஆற்றல், அலைவடிவில் பரவாமல் சிறுசிறு சிப்பங்களாக பரவுகிறது என்பது மாக்ஸ் பிளாங்கின் குவாண்டம் கொள்கை.
இதேபோன்று, ஒளியானது ஃபோட்டான் வடிவில் ஊடகத்தின் துணையின்றி பரவுகிறது; ஃபோட்டான் என்பது தனித்தனி ஆற்றல் சிப்பங்கள் ஆகும்.
11.
உள்நோக்கு உடற்குழாய் என்பது ஒளி இழைகளின் கட்டு ஆகும். இது முழு அக எதிரொளிப்புத் தத்துவத்தில் இயங்குகிறது. குழாய் வடிவிலுள்ள இது, நோயாளியின் உடலுக்குள் ஒரு துவாரம் அல்லது வாய் வழியே செலுத்தப்படுகிறது. வெளி முனையிலிருந்து செல்லும் ஒளிக்கற்றை முழு அக எதிரொளிப்பு அடைந்து உடல் உள் உறுப்புகளின் மீது பாய்ச்சப்படும். மறு முனையில் உள்ள காமிரா மூலம் மருத்துவர் உள் உறுப்புகளை ஆராய முடியும். அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்ளலாம்.
12.
படுகதிர் மற்றும் விலகுகதிர் இவற்றுக்கு இடையே உள்ள கோணம் திசைமாற்ற கோணம் அல்லது விலகு கோணம் எனப்படும். d = 180 - 2i.
13.
உலோகத்தட்டு ஒன்றின் மீது ஒளி அல்லது தகுந்த அலைநீளம் (அல்லது அதிர்வெண்) கொண்ட மின்காந்த கதிர்வீச்சு படும் போது, அதிலிருந்து எலக்ட்ரான்கள் உமிழப்படுகின்றன. இதுவே ஒளிமின் விளைவு எனப்படும்.
14.
i) 1 - 100nm அளவுகள் வரை கொண்ட பொருட்கள் நானோ பொருட்கள் எனப்படும். 100nm அளவிற்கு மேல் உள்ள பொருட்கள் பேரளவு பொருட்கள் எனப்படும்.
ii) இரு பொருட்களின் வேதிப் பண்புகள் ஒன்று போல் உள்ளது. ஆனால் பருப்பொருளானது நானோ பொருட்களாக பிரிக்கப்பட்டால் இயந்திரவியல், மின்னியல், ஒளியியல், காந்தவியல் மற்றும் பிற பண்புகள் மாறுபடுகிறது.
15.
ஹைட்ரஜன் அணுவைவிட சிக்கலான அணுக்களை விளக்க முடியவில்லை.
நுண்வரி அமைப்புகளை விளக்க முடியவில்லை.
நிறமாலை செறிவில் ஏற்படும் மாற்றத்தை விளக்க முடியவில்லை.
அணுக்களில் எலக்ட்ரான்களின் பகிர்வு தொடர்பான முழுமையான விளக்கம் தரப்படவில்லை.
16.
ரேடார் (RADAR) என்பது RAdio Detection And Ranging என்ற சொற்றொடரின் சுருக்கமாகும்.
17.
திறன் காரணி = cosф = முந்தி அல்லது பின்தங்கி உள்ள கட்டக் கோணத்தின் கொசைன் மதிப்பு ஆகும்.
18.
”வெப்பநிலை மாறாமல் உள்ள போது கடத்திக்குக் குறுக்கேயுள்ள மின்னழுத்த வேறுபாடானது அதில் பாயும் மின்னோட்டத்திற்கு நேர்த்தகவில் இருக்கும்”. இதுவே ஓம் விதியாகும்.
V = IR ஓம் விதியின் பயன்பாட்டு வடிவம் ஆகும்.
இங்கு,
V ⟶ மின்னழுத்த வேறுபாடு
I ⟶ மின்னோட்டம்
R ⟶ மின்தடை
19.
மின்காப்பிற்கு அளிக்கப்படும் புற மின்புலம் அதிக வலிமை வாய்ந்ததாக இருந்தால் அது அணுக்களில் உள்ள எலக்ட்ரான் கட்டமைப்பை உடைத்து கட்டுண்ட மின்துகள்களை கட்டுறா மின்துகள்களாக்குகின்றது. இந்நிலையில் மின்காப்புப் பொருள் மின்னோட்டத்தைக் கடத்த ஆரம்பிக்கின்றது. இதையே மின்காப்பு முறிவு (dielectric breakdown) என்பர். இம்முறிவு ஏற்படும் முன் மின்காப்பு ஒன்று தாங்கக்கூடிய பெரும மின்புலம் மின்காப்பு வலிமை எனப்படும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards