12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 08/03/2020
12ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Biology All Chapter Five Marks Important Questions 2020 )
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
முதல்நிலை வழிமுறை வளர்ச்சிக்கும், இரண்டாம் நிலை வழிமுறை வளர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டை அட்டவணைப்படுத்துக,
2.
ஓசோன் அடுக்கு குறைந்து வரும் நிலையில் U -V கதிரியக்கம் சூரியனிலிருந்து பூமியை வந்தடைந்து சேதங்களை உயிரிகளில் ஏற்படுத்துகிறது.
ஓசோன் குறைதலின் விளைவுகள் எவை என்று கூறு.
3.
சில தாவரங்களின் இருப்பு அல்லது இல்லாமை எங்கு நிலவும் சூழலைச் சுட்டிக்காட்டும் விதத்தில் காணப்படும்? இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4.
ஒளிச்சேர்க்கையில் எந்த வகையான சூரிய கதிர்வீச்சுகள் பயன்படுகின்றன என்பதை விளக்குக? (அ) "ஒளிச்சேர்க்கை சார் செயலூக்கக் கதிர்வீச்சு எல்லா நேரங்களிலும் நிலையாக இருப்பதில்லை ஏனென்றால் மேகங்கள், மரநிழல்கள், காற்று, தூசு துகள்கள், பருவகாலங்கள், அட்சரேகை, பகலில் -சூரிய ஒளியின் அளவு" இவற்றால் மாறுபடுகிறது. எனவே ஒளிச்சேர்க்கை சார் செயலூக்கக் கதிர்வீச்சு என்றால் என்ன? இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
5.
உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள்
6.
r-தேர்வு செய்த மற்றும் k-தேர்வு செய்த சிற்றினங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.
7.
நீர்வாழ் விலங்குகள் வாழிடத்திற்கு ஏற்ப எவ்வாறு தங்களை தகவமைத்துக் கொள்கின்றன?
8.
தட்பவெப்ப நிலை மாற்றம் உயிரியப் பல்வகை தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இக்கூற்றை நியாயப்படுத்து.
9.
இந்தியாவின் உயிர்ப்புவி மண்டலங்கள் ஏதேனும் மூன்றினை விவரி.
10.
PHB, PHA & PLA போன்ற பயோபாலிமர்கள் வேறுபடுத்துக.
11.
உடல் வெளி கருத்தரித்தல் முறையின் மூலம் எவ்வாறு டாலி ஆட்டுக்குட்டி உருவாக்கப்படுகிறது. விளக்குக.
12.
PCR என்றால் என்ன? PCR ன் பல்வேறு படிநிலைகளை பற்றி விவரிக்கவும்.
13.
'உயிர் உரங்கள்' வரையறு. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் உயிர் உரங்களின் முக்கிய மூலாதாரங்களாக எவ்வாறு பயன்படுகிறது என்பதை விவரி.
14.
சணல் இந்தியத் தேசிய பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது? விளக்குக?
15.
இந்தியாவின் தேசியப் பழம் எது? விவரி?
16.
திடீர் மாற்றத்தின் வகைகளை அட்டவணைப்படுத்துக.
17.
யோகர்ட், பாலாடைக்கட்டி, பனீர் போன்ற பால் பொருட்கள் நுண்ணுயிரியாகப் பயன்படுத்தி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை அட்டவனைப்படுத்து.
18.
சைலின் லேட்டிபோலியோ (மெலாண்ட்ரியம் ஆஸ்பம்) தாவரத்தில் காணப்படும் பால் நிர்ணயத்தை விளக்கு.
19.
கலப்புறுத்தலின் படிநிலைகளைப் பற்றி விரிவாக்கவும்
20.
ஒரு அட்டவணையில் வாவிலோவின் பயிர் தோற்ற மையங்கள் மற்றும் வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தப்பட்ட பயிர்களை தருக
21.
பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கை சுழற்சியைப் பற்றி விரிவாக எழுதுக.
22.
நீர் மேல் மகரந்தச்சேர்க்கையை விவரி? (Epihydrophily)
23.
மனிதர்களில் காணப்படும் பொதுவான நோய்கள் அட்டவணையிடு.
24.
சூலின் வகைகளை விவரி?
25.
நீர்வள தாவரங்களின் உள்ளமைப்பு தக அமைவுகள் மற்றும் வாழ்வியல் தக அமைவுகள் யாவை?
26.
வெப்பநிலை அடிப்படையிலான மண்டலங்கள் யாவை? (அ) வெப்பநிலையினால் ஏற்படும் விளைவுகள் யாவை?
27.
ஒடுங்கு மரபணு மறைத்தலை விவரி
28.
மல்டிபிள் அல்லீல்களால் பல காரணியப் பாரம்பரியம் கட்டுப்படுத்தப்படும் பண்புகள் யாவை?
29.
இயற்கை தேர்வு கோட்பாடு டார்வினுக்கு பின் வந்தவர்களின் கண்டுபிடிப்புகள் எவ்வாறு விளக்கப்பட்டது. விவாதி.
30.
புரோகேரியாட்டுகள் மற்றும் யூகேரியாட்டுகள் எவ்வாறு பரிணாம வளர்ச்சியடைந்தது?
31.
மரபணு தொகை ஆராய்ச்சியில் ஏற்படும் அறம் சார் பிரச்சனைகள் யாவை?
32.
திசு வளர்ப்பிற்கான அடிப்படை ஆய்வக வசதிகள் யாவை?
33.
வேளாண் வேதிப்பொருட்களின் விளைவுகள் யாவை?
34.
நீர் மாசுறுதலின் மூல ஆதாரங்கள் யாவை?
35.
விந்து செல் உருவாக்கத்தில் ஹார்மோன்களின் பங்கு எது?
36.
பெண் பாலுறுப்புகளுக்குள் முதன்மையானது எது? விளக்குக.
37.
பாலூட்டிகளில் ஒரு 'X' ஆண்களில் ஒரு குரோமோசோம் மட்டும் உள்ளது.பெண்களில் இரண்டு இதை எவ்வாறு ஆண் பெண் உயிரிகளுக்கிடையே சரி செய்கின்றது?
38.
சிசு ஹீமோலைடிக் நோய் ஏற்றப்படக் காரணம் என்ன?
39.
விருப்பதுடனோ, வேண்டுமென்றோ, கருவளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவரும் மருத்துவமுறை எது? விளக்குக?
40.
இனப்பெருக்க, குழந்தை நலப் பாதுகாப்பின் (RCH) பெரும்பணிகள் கூறு?
41.
இழப்பு மீட்டல் மற்றும் அதன் வகைகள் பற்றி விவரி.
42.
இருசமப்பிளவு முறைகளை பற்றி விரிவாக விடையளி.
43.
புரதம் தாயாரித்தலின் தொடக்க நிகழ்வை விவரி:
44.
கடத்து RNA எனப்படும் இணைப்பு மூலக்கூற்றின் அமைப்பை விவரி.
45.
“காடுகளைப் பாதுகாத்தல்” எந்த வகையில் காற்று மாசுபாட்டை குறைக்க உதவுகிறது?
46.
காடுகள் அழிப்பு எவ்வாறு உலக வெப்பமடைவதில் பங்காற்றுகிறது என்பதை விளக்கு.
47.
உவர்சதுப்பு நிலத்தாவரங்களில் ஏதேனும் ஐந்து புறத்தோற்றப் பண்புகளை வரிசைப்படுத்துக.
48.
விலங்குகள் மூலம் விதை பரவுதலானது காற்று மூலம் விதை பரவுவதிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது என்பதைக் குறிப்பிடுக.
49.
செயற்கை விதை தயாரிப்பிற்கான நெறிமுறையை எழுதுக.
50.
மரபணுவளக்கூறு பாதுகாப்பு பற்றி நீர் அறிவது என்ன? அவற்றை விவரி.
51.
52.
ஒரு சமூகத்தின் நிலைப்புத்தன்மை அதன் சிற்றினங்களின் பல்வகைத்தன்மையைச் சார்ந்துள்ளது-நியாயப்படுத்துக.
53.
இனக்கூட்ட வயதுப் பரவலை விளக்குக.
54.
உயிரற்ற காரணிகளுக்கேற்ப உயிரினங்கள் எந்தெந்த வழிகளில் எதிர்வினை புரிகின்றன என்பதை விளக்கு.
55.
56.
புலனுணர்வுமாற்ற மருந்துகள் என்றால் என்ன? அபின் மற்றும் கஞ்சாச்செடி பற்றிய குறிப்பு வரைக.
57.
மறுசேர்க்கை மனித வளர்ச்சி ஹார்மோன் (recombinant hGH) உற்பத்தியின் படிநிலைகளை விளக்குக
58.
நகலாக்கத்தில் சாதக, பாதகங்களை குறிப்பிடுக.
59.
எ.இ.எமர்சன் சிற்றினமாக்கலை எவ்வாறு வரையறை செய்துள்ளார்? இதன் வகைகளைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
60.
பயிர் பெருக்கத்தில் புதிய பண்புக்கூறுகளை உருவாக்கும் புதிய பயிர்பெருக்க தொழில்நுட்ப முறைகளைப் பட்டியலிடுக.
61.
கலப்பின வீரியம் - குறிப்பு வரைக
62.
முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் யாவை?
63.
கீழ்கண்டவற்றிக்கு குறிப்பெழுதுக.
அ) புரூவரின் ஈஸ்ட்
ஆ) இடியோனெல்லா சாக்கையன்சிஸ்
இ) நுண்ணுயிரிய எரிபொருள் கலன்கள்
64.
ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர், கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட பாஸ்பரஸ் மற்றும் கந்தகத்தை ஏன் பயன்படுத்தினர்? அவர்கள் கார்பன் மற்றும் நைட்ரஜனை பயன்படுத்தினால் அதே முடிவுகளைப் பெறமுடியுமா?
65.
இரண்டு படிநிலை புரதச்சேர்க்கை நிகழ்ச்சியின் அனுகூலங்கள் யாவை?
66.
சுயதடைகாப்பு நோய் என்பது திசைமாற்றப்பட்ட தடைகாப்பு துலங்கலாகும்-நியாயப்படுத்துக.
67.
மேல் பூச்சாக்கம் விழுங்கு செல்களில் ஏன் திறன் வாய்ந்ததாக கருதப்படுகிறது?
68.
அ) யானைக்கால் நோயை ஏற்படுத்தும் யானைக்கால் புழுவின் அறிவியல் பெயரை எழுதுக.
ஆ) யானைக்கால் நோயின் அறிகுறிகளை எழுதுக.
இ) இந்த நோய் எவ்வாறு பரவுகிறது.
69.
ஒரு நோயாளி காய்ச்சல் மற்றும் குளிருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மெரோசோயிட்டுகள் அவரது இரத்தத்தில் காணப்பட்டன. உன்னுடைய கண்டறிதல் என்ன?
70.
பனிக்குடத் துளைப்பு எனும் வளர்கரு பால் கண்டறியும் ஆய்வு நம் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது. இது தேவைதானா?கருத்தைத் தெரிவிக்கவும்.
71.
மீண்டும் காடுகள் உருவாக்குவதால் ஏற்படும் விளைவுகள் யாவை மற்றும் வேளாண் காடு வளர்ப்பின் நன்மைகள் யாவை?
72.
73.
வழிமுறை வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முறைப்படி வரிசைப்படுத்தி, வழிமுறை வளர்ச்சியின் வகையைக் கண்டறிந்து விளக்குக.
நாணற் சதுப்பு நிலை, தாவரமிதவை உயிரிநிலை, புதர்செடி நிலை, நீருள் மூழ்கிய தாவரநிலை, காடுநிலை, நீருள் மூழ்கி மிதக்கும் நிலை, சதுப்பு புல்வெளி நிலை.
74.
கீழ்கண்ட விவரங்களைக் கொண்டு ஒரு பிரமிட் வரைந்து சுருக்கமாக விளக்குக.
உயிரினங்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது-பருந்து - 50, தாவரங்கள் -1000, முயல் மற்றும் எலி - 250 + 250, பாம்பு மற்றும் ஓணான் 100 + 50.
75.
கீழேயுள்ள படத்தில் பெண்ணின் அண்டகத்தில் ஏற்படும் தொடர் நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன.

அ) அண்டசெல் விடுபடும் படத்தை அடையாளம் கண்டு, அண்டசெல் உருவாக்கத்தில் அது எந்த நிலையைக் குறிக்கிறது என்பதையும் கண்டறிக.
ஆ) மேற்கண்ட நிகழ்வுகளுக்குக் காரணமான அண்டக மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.
இ) அதே நேரத்தில், எதிர் பார்க்கப்படும் கருப்பை மாற்றங்களை விளக்குக.
ஈ) C மற்றும் H நிலைகளுக்கிடையேயுள்ள வேறுபாட்டை எழுதுக.
76.
கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கண்டறிந்து ‘அ’, ‘ஆ’ ‘இ’ மற்றும் ‘ஈ’ எனக் குறியிடப்பட்டுள்ள பாகங்களின் பெயர்களைக் குறிக்க.

77.
பழப்பூச்சியை (டிரோசோஃபைலா) உதாரணமாக கொண்டு மரபு சமநிலை அடிப்படையில் பால் நிர்ணயம் நடைபெறுவதை விவாதி?
78.
தேனீக்களில் பால் நிர்ணயம் நடைபெறும் முறையை விவரி
79.
மனிதனால் உருவாக்கப்பட்ட தானியத்தின் பெயரை எழுதுக. இது எவ்வாறு உருவாக்கப்படுகிறது.
80.
81.
இளவுயிரி நிலை எவ்வாறு இனப்பெருக்க நிலையிலிருந்து வேறுபட்டுள்ளது?
82.
Bt பருத்தியின் நன்மை, தீமைகளை எழுதுக.
83.
களைக்கொல்லியைத் தாங்கிக்கூடிய பயிர்களின் நன்மைகள் யாவை?
84.
பசுங்கணிக மரபணு சார்ந்த பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் வெளிக்கொணர்க.
85.
தனியொரு மரபணுவானது பலபண்புகளைக் கட்டுப்படுத்தி உயிரினத்தின் புறத்தோற்ற பண்புகளை எவ்வாறு மாற்றி அமைக்கிறது? எடுத்துக்காட்டுடன் விளக்குக
86.
இருவிதையிலை மற்றும் ஒருவிதையிலை விதைகளின் அமைப்பை வேறுபடுத்துக.
87.
மூடுவிதைத் தாவரத்தில் நடைபெறும் கருவுறுதல் நிகழ்விலுள்ள படிநிலைகளின் சுருக்கமான தொகுப்பைத் தருக.
88.
ஒருங்கிணைவு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் யாவை?
89.
சுற்றுச்சூழல் அடர்வு, ஒழுங்கற்ற அடர்வு மற்றும் இனக்கூட்ட அடர்வு என்றால் என்ன?
90.
இனக்கூட்டம் நெறிப்படுத்தப்படுதல் குறித்து எழுதுக.
91.
J-வடிவ மற்றும் S வடிவ வளைவுகளை வேறுபடுத்துக.
92.
93.
உயிரினங்களில் காணப்படும் தகவமைப்புப் பண்புகளை வகைப்படுத்துக.
94.
புவியில் காணப்படும் நீர் சார்ந்த உயிர்த்தொகையை வகைப்படுத்துக.
95.
உயிர்த்தொகையின் பண்புகளை எழுதுக.
96.
பால்வினைத் தொற்று நோய்களைத் தடுக்கும் முறைகளை எழுதுக
1.
| முதல்நிலை வழிமுறை வளர்ச்சி | இரண்டாம் நிலை வழிமுறை வளர்ச்சி | |
| 1 | வெற்று நிலங்களில் ஆக்கமடைதல் | பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆக்க மடைதல் |
| 2 | உயிரிய மற்றும் பிற வெளிப்புறக் காரணிகளால் தொடங்கி வைக்கப்படுகிறது. | புறக்காரணிகளால் மட்டுமே தொடங்கி வைக்கப்படுகிறது. |
| 3 | மண் இல்லாத இடங்களிலும் முதல் நிலை வழிமுறை வளர்ச்சி தொடங்க முடியும். | ஏற்கனவே மண் உள்ள இடங்களில் மட்டுமே இது நிகழ்கிறது. |
| 4 | முன்னோடித் தாவரங்கள் வெளிச் சூழலில் இருந்து வருகின்றன. | முன்னோடித் தாவரங்கள் நிலவிவரும் உட்சூழலிலிருந்து உருவாக்கப் படுகின்றன. |
| 5 | இது முடிவடைய அதிக காலம் எடுத்துக்கொள்கிறது. | இது முடிவடைய ஒப்பீட்டளவில் குறைந்த காலத்தையே எடுத்துக் கொள்கிறது. |
2.
1. கண்ணில் புரை உண்டாதல், தோல் புற்றுநோய் அதிகளவில் தோன்றுதல், மனிதனின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து விடுதல்.
2. இளமைக்காலங்களிலேயே விலங்கினங்கள் மடிந்து போதல்.
3. சடுதி மாற்றங்கள் அடிக்கடி ஏற்படுதல்.
4. ஒளிச்சேர்க்கை வேதிப்பொருட்கள் பாதிக்கப்பட்டு அதன் மூலம் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை தடைபடுகிறது. ஒளிர்ச்சேர்க்கை அளவு குறைந்து வரும் வேளையில் உணவு உற்பத்தி குறைந்து உணவு பற்றாக்குறை ஏற்படும்/. மேலும் வளிமண்டலத்தில் CO2 அளவு அதிகரித்துப் புவி வெப்பமடையும்.
5. வெப்பநிலை அதிகரிக்கும் போது வானிலை, மழைப்பொழிவு போன்ற காலநிலையில் மாற்றம் ஏற்படும். இதன் விளைவால் வெள்ளப்பெருக்கு , வறட்சி, கடல்மட்டம் உயர்தல் போன்றவை ஏற்படும். சூழல் மண்டலங்கள் நடுநிலைத்தன்மை இழந்து தாவரங்களும், விலங்குகளும் பாதிப்பிற்குள்ளாகும்.
3.
தாவர சுட்டிக்காட்டிகள்:
சில தாவரங்களின் இருப்பு அல்லது இல்லாமை அங்கு நிலவும் சூழலைச் சுட்டிக்காட்டும் விதத்தில் காணப்படும், தனித்தாவர சிற்றினமோ அல்லது தாவரச் தொகுப்போ சூழல் நிலைகளைக் கண்டு அளவிட உதவுகின்றன. அவை உயிரிச்சுட்டிகாட்டிகள் அல்லது தாவர சுட்டிகாட்டிகள் எனப்படும். உதாரணமாக
| தாவரங்கள் | குறிகாட்டுவது | ||
|---|---|---|---|
| 1 | லைக்கண்கள்,ஃபைகஸ்,பீனூஸ்,ரோஜா | சல்ஃபர்-டை -ஆக்ஸைடு சுட்டிகாட்டிகள் | |
| 2. | பெட்டூனியா,க்ரைசாந்திமம் | நைட்ரேட் குறிகாட்டி சுட்டிகாட்டி | |
| 3. | க்ளேடியோலஸ் | ஃப்ளூரைட் மாசுபாடு சுட்டிகாட்டி | |
| 4. | ரொயீனா சூடாஅகேசியா | கன உலோகத் தூய்மைக்கேட்டை சுட்டிக்காட்டும். | |
4.
1. தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்குக் கிடைக்கக்கூடிய ஒளியின் அளவு ஒளிச்சேர்க்கைசார் செயலூக்க கதிர்வீச்சு எனப்படுகிறது.
2. இது 400-700 nm க்கு இடைப்பட்ட கதிர்வீச்சாகும். இது ஒளிச்சேர்க்கைக்கும் தாவர வளர்ச்சிக்கும் இன்றியமையாததாகும்.
3. பொதுவாக தாவரங்கள் திறம்பட ஒளிச்சேர்க்கை செய்ய அதிக அளவில் நீலம் மற்றும் சிவப்பு நிற ஒளிக்கதிர்களை ஈர்க்கின்றன.
4. மொத்த சூரிய ஒளியில் வளிமண்டலத்தை அடையும் 34% மீண்டும் வளிமண்டலத்திற்கே திருப்பப்படுகிறது.
5. 10% ஓசோன், நீராவி வளிமண்டல வாயுக்களால் ஈர்க்கப்படுகிறது.
6. மீதமுள்ள 56% மட்டுமே பூமியின் மேற்பரப்பை வந்தடைகிறது. இதில் 2-10% தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்காக பயன்படுகிறது மீதி வெப்பமாக சிதறடிக்கப்படுகிறது.
7. ஒளிச்சேர்க்கை சார் செயலூக்க கதிர்வீச்சின் அளவு சிலிகான் ஒளிமின் காண்கலம் ஒன்றின் உதவியால் நுண்ணறியப்பட்டு மில்லி மோல்கள் / சதுரமீட்டர் / வினாடி என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது.
8. இதில் 400-700 nm அலைநீளம் கொண்ட ஒளியை மட்டுமே நுண்ணறிய முடியும்.
9. ஒளிச்சேர்க்கை சார் செயலூக்கத்திற்கான கதிர்வீச்சின் அளவு 0-3000 மில்லி மோல்கள்/ சதுரமீட்டர் / வினாடி ஆகவும் உள்ளது.
10. இரவு நேரங்களில் PAR பூஜ்யமாகவும் கோடை காலங்களில் மதிய வேளையில் PAR 2000-3000 மில்லி மோல்கள் சதுரமீட்டர் / வினாடி ஆகவும் உள்ளது.
5.
பல்வேறு பிரிவுகளில் பயன்படுகிறது.
I. வேளாண்மை: மரபணு மாற்றமடைந்த தாவரங்கள்
Bt. பருத்தி, Bt. கத்திரி, பொன்னிற அரிசி, ஃப்ளேவர் சேவர் தக்காளி, Bt. உருளை, புகையிலை, காலிஃப்ளவர், வாழை
II. மருத்துவம்
1. இன்சுலின் rDNA தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படுகிறது. (E.Coli மூலம்)
2. இரத்த புரதம்
3. தடுப்பூசி மருந்து, நொதிகள், உயிர் எதிர் பொருட்கள், பால் சார்ந்த தயாரிப்புகள், பானங்கள் போன்றவை உற்பத்தி செய்யப்படுகிறது.
III. உயிரி சில்லுகள்
உயிரிசில்லுகள் சார்ந்த உயிரிய கணினி உருவாக்குதல்
IV. மரபணுப் பொறியியல்
இதன் மூலம் மரபணுக் கையாளுதல், திசு வளர்ப்பு, தனி செல்புரதம் (உணவு தொழிற்சாலை), இரண்டாம் வளர்சிதை மாற்றப் பொருட்கள், உயிரி உரங்கள், உயிரி பூச்சிக்கொல்லி
V. சூழல் சார்ந்தவை
1. உயிரித்திரள் ஆற்றல்
2. உயிரி எரிபொருள்
3. உயிரி வழி திருத்தம்
4. தாவர வழி திருத்தம் போன்றவை
6.
| r -தேர்வு செய்த சிற்றினங்கள் | k-தேர்வு செய்த சிற்றினங்கள் | |
| 1. | சிறிய அளவிலான உயிரினங்கள் | பெரிய அளவிலான உயிரினங்கள் |
| 2. | அதிக சேய் உயிரிகளை உருவாக்கும். | குறைவான சேய் உயிரிகளை உருவாக்கும் |
| 3. | வேகமாக முதிர்ச்சியடையும் | தாமதமான முதிர்ச்சி மற்றும் பெற்றோர் பராமரிப்பு காணப்படும். |
| 4. | ஒவ்வொரு உயிரினமும், வாழ்நாளில் ஒரு முறையோ அல்லது சில முறைகளோ மட்டுமே இனப்பெருக்கம் செய்யும். | பெரும்பாலான உயிரினங்கள் அதிக வாழ்நாளை எட்டும். |
| 5. | சுற்றுச்சூழல் நிலையற்றது, அடர்த்தி சாராதது. | சுற்றுச்சூழல் நிலையானது, அடர்த்தி சார்ந்தது. |
7.
1. மீன்களின் இடுப்புத் துடுப்பு மற்றும் முதுகுத் துடுப்புகள் சமநிலைப்படுத்தவும், வால் துடுப்பு சுக்கானாகவும் செயல்படுகின்றன.
2. மீன்களின் உடலில் உள்ள தசைகள் தொகுப்புகளாக இருப்பதால் அவை இடப்பெயர்ச்சிக்குப் பயன்படுகின்றன.
3. படகு போன்ற உடல் அமைப்பு நீரில் வேகமாக நீந்த உதவுகிறது,
4. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனைச் சுவாசிக்க மீன்களின் செவுள்கள் உதவுகின்றன.
5. காற்று நிரம்பிய காற்றுப் பைகள் மிதவைத் தன்மைக்கு உதவுகின்றன.
6. பக்கக்கோட்டு உணர்வுறுப்பு, அழுத்த உணர்வேற்பியாகச் செயல்படுகிறது. இவ்வமைப்பு நீரில் உள்ள பொருட்களை, எதிரொலியைப் பயன்படுத்திக் கண்டறியப் பயன்படும்.
7. கோழைச் சுரப்பிகளை அதிகமாகக் கொண்ட தோல், செதில்களால் மூடப்பட்டுள்ளது.
8. கழிவுநீக்க உறுப்புகள் மூலம் இவை நீர் மற்றும் அயனிகள் சமநிலையைப் பேணுகின்றன.
8.
1. புதைப்படிவ எரிபொருள் தான் இன்றைய தொழிற்சாலைகளை இயக்க ஆற்றலாகும்.
2. இதன் விளைவாக பசுமை இல்ல வாயுக்களில் ஒன்றான Co2 அதிகரித்து தட்பவெப்ப நிலை மாறுகிறது.
3. காடுகள் அழிக்கப்படுவதால் இந்த Co2 முழுமையாக உறிஞ்சப்படுவதில்லை.
4. எனவே கார்பன் டை ஆக்ஸைடின் அடர்த்தி அதிகரித்து வெப்பநிலை உயருகிறது.
5. இதனால் பனிப்பாறைகள் உருகுதல், வெள்ளப்பெருக்கு வானிலை நிலவரத்தை கணிக்க இயலாமை, மிக அதிக வெப்பம், குடல் நோய்கள் பரவுதல், விலங்குகளின் இடப்பெயர்வு ஆகியவை ஏற்படுகின்றன.
6. எனவே காலநிலை மாற்றம் உயிரியப் பல்வகைத் தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
9.
1. இமயமலை:
1. வடமேற்கு முதல் வடகிழக்கு இந்தியா வரை நீண்டு காணப்படும் முழு நீள மலைத் தொடராகும்.
2. இமயமலை பல்வேறு வகையான உயிரிய மாநிலங்களையும் மற்றும் உயிர் தொகைகளையும் உள்ளடக்கியது.
3. இமயமலையின் பரப்பு ஏறத்தாழ 7.2% ஆகும்.
காணப்படும் விலங்குகள்: செம்மறியாடுகள், மலை வெள்ளாடுகள், பனிச்சிறுத்தை, பாண்டா இவற்றில் பல அழியும் நிலையில் உள்ளன.
2. குறை - வறட்சி மண்டலம்:
1. இந்திய பாலைவனப் பகுதிக்கும் தக்காண பீடபூமிக்கும் இடையே உள்ள ஆரவல்லி மலைத் தொடரை உள்ளடக்கியது இப்பகுதி.
2. இதன் நிலப்பரப்பு 15.6%
காணப்படும் விலங்குகள்: நீலமான், கடமான், புள்ளிமான், அச்சுமான், சிங்கம், புலி, சிறுத்தை, ஓநாய்.
3. கங்கைச் சமவெளி:
1. கங்கை ஆற்றுப்படுகை மண்டலமான இது ஒரே சீரான தன்மை கொண்ட சமவெளி.
2. இதன் நிலப்பரப்பு 11% ஆகும்.
3. வளமான இச்சமவெளிப் பகுதி இமயமலையின் அடிவாரம் வரை பரந்து காணப்படுகிறது.
காணப்படும் விலங்குகள்: காண்டாமிருகம், யானை, எருமை, சதுப்பு நில மான், வராக மான்.
10.
| வகைகள் | PHB | PHA | PLA | |
| 1 | விரிவாக்கம் | பாலிஹைட்ராக்ஸி பியூட்டரேட் | பாலிஹைட்ராக்சி ஆல்கனோயேட்கள் | பாலிலாக்டிக் அமிலம் |
| 2 | இயல்பு | சிதைவுறும் உயிரி பாலிமர்கள் | சிதைவுறும் உயிரி பாலிமர்கள் -உயிரிய பெரும் மூலக்கூறு | உயிரிய சிதைவடையும் அலிபாடிக் பாலியெஸ்டர் பாலிமர் |
| 3 | ஆதாரம் | சில வகை நுண்ணுயிரிகள் | கிராம் பாசிட்டிவ்: 1. பேசில்லஸ் மெகாஸ்டிரியம் 2. பேசில்லஸ் சப்டைலிஸ் 3. கார்னிபாக்டீரியம் 4. குளுடேனிக்கம் கிராம் நெகட்டிவ் 1. சூடோமோனாஸ் சிற்றினங்கள் 2. ஆல்கலிஜீன்ஸ் யூட்ரோபஸ் |
மீள் புதுப்பிக்கத்தக்க மூலப்பொருட்களான மக்காச்சோள தரசம், மரவள்ளிக்கிழங்கு, வேர்கள், சீவல்கள் தரசம் (அ) கரும்பு போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது. |
| 4 | பயன்கள் | PHB & PHA பயன்பாடுகள் மருத்துவ பயன்: 1. சரியான ஏற்பிடத்தில் மருந்து சேர்க்கப்படுதல் 2. சாரக்கட்டு அமைப்பு 3. இதய வால்வுகள் அமைக்க 4. உயிரிய பெரும் மூலக்கூறு மற்றும் வெப்ப 5. பிளாஸ்டிக்குகள் |
உயிரிய சிதைவடையும் மற்றும் உயிரிய செயல்பாடுடைய வெப்ப பிளாஸ்டிக் | |
11.
(i) உயிரிய தொழில் நுட்பவியல் நகலாக்கம் என்பது உயிரியை உருவாக்குவது அல்லது செல்களின் நகல்களை உருவாக்குவது அல்லது டி.என்.ஏ துண்டங்களை உருவாக்குவது ஆகியவற்றை குறிப்பதாகும்.
(ii) ஐயன் வில்மட் மற்றும் கேம்ப்பெல் ஆகியோர் 1997ல் முதன் முதலில் டாலி என்னும் முதல் பாலூட்டியை நகலாக்கம் செய்தனர்.
(iii) முழுமைத்திறன் நிகழ்வாய்வு மற்றும் உட்கரு மாற்று தொழில் நுட்பத்தின் மூலம் மரபணு மாற்றப்பட்ட டாலி எனும் நகல் செம்மறி ஆடு உருவாக்கப்பட்டது.
(iv) முழுமைத்திறன் என்பது பல்வேறு செல்களை, திசுக்களை உறுப்புகளை மற்றும் முடிவாக ஒரு உயிரியை உருவாக்கும் ஒரு செல்லின் திறனாகும்.
(v) கொடையாளி செம்மறி ஆட்டின் பால்மடி செல்கள் தனிமைப்படுத்தப்பட்டு 5 நாட்களுக்கு உணவூட்டமின்றி வைக்கப்பட்டது. மடி செல்கள் இயல்பான வளர்ச்சி அடையாமல் உறக்க நிலையை அடைந்து முழுமைத்திறனைப் பெறுகின்றது.
(vi) வேறொரு செம்மறி ஆட்டின் அண்டசெல் பிரித்தெடுக்கப்பட்டு உட்கரு வெளியேற்றப்படுகின்றது. பின்னர் உறக்க நிலை மடிசெல் மற்றும் உட்கரு நீக்கிய அண்ட செல் இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டது.
(vii) மடிசெல்லின் வெளியுறை சிதைக்கப்பட்டு உட்கருவைச் சுற்றி செல் சூழும்படி செய்யப்பட்டது. இவ்வாறு ஒன்றிணைந்த செல் பிறிதொரு செம்மறி ஆட்டின் கருப்பையில் பதிவேற்றப்பட்டது. ஐந்து மாதங்களுக்குப்பின் "டாலி" பிறந்தது.
(viii) ஒரு முதிர்ந்த விலங்கின் மாறுபாடடைந்த உடல் செல்லிலிருந்து கருவுறுதல் நிகழ்வு இன்றி, நகலாக்க முறையில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட விலங்கு டாலி ஆகும்.
12.
PCR (பாலிமரேஸ் சங்கிலி வினை):
நமக்கு விருப்பமான டி.என்.ஏ துண்டுகளை எண்ணற்ற ஒத்த நகல்களாக அதிக அளவில் பெருக்கம் செய்யப்படும். ஒரு உடல் வெளி ஆய்வகத் தொழில் நுட்பமாக பாலிமரேஸ் சங்கிலி வினை செய்யப்படுகிறது.
1983ல் கேரி முல்லிஸ் என்பவரால் இத்தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டது.
அதன் படிநிலைகள்:
(i) இயல்பு திரிபு, இயல்பு மீள்வு அல்லது முதன்மை இணைப்பு இழை பதப்படுத்தல் மற்றும் அதன் உற்பத்தி நீட்சி ஆகிய மூன்று நிலைகள் பாலிமரேஸ் சங்கிலி வினையில் நடைபெறுகின்றன.
(ii) அதிக வெப்பநிலையைப் பயன்படுத்தி, நமக்குத் தேவைப்படும் இரட்டைச் சுருள் டி.என்.ஏ வின் இயல்பைத் திரித்து இரண்டு தனித்தனியான இழைகளாகப் பிரிக்கப்படுகிறது.
(iii) இதற்கு இயல்பு திரிபு என்று பெயர் ஒவ்வொரு இழையும் ஒரு முதன்மை இணைப்பு இழையுடன் கலப்பு செய்யப்படுகிறது. இந்த முதன்மை இணைப்பு அச்சு வார்பு இழையைக் கொண்டு Tag டி.என்.ஏ பாலிமரேஸைப் பயன்படுத்தி புதிய டி.என்.ஏ உருவாக்கப்படுகிறது.
(iv) இயல்பு திரிபு நிகழ்ச்சியில் வேதிவினைக் கலவையானது 95oC வெப்பநிலையில் சிறிது நேரம் வெப்பப்படுத்தப்படுகிறது. இதனால் இலக்கு டி.என்.ஏ தனது இயல்பு திரிந்து தனித்த இழைகளாகப் பிரிகிறது.
(v) இவ்விழைகள் புதிய டி.என்.ஏ க்களை உருவாக்கும் அச்சு வார்ப்பு டி.என்.ஏ க்களாகச் செயல்படுகின்றன. கலவையை விரைந்து குளிர்விப்பதன் மூலம் இரு முதன்மை இணைப்பு இழைகளும், இலக்கு டி.என்.ஏ வின் தனி இழைகளின் பக்கவாட்டில் இணைந்து கொள்கின்றன.
(vi) முதன்மை இணைப்பு இழையின் நீட்சி அல்லது உருவாக்கத்தின்போது கலவையின் வெப்பநிலை 75o C க்கு உயர்த்தப்பட்டு போதுமான கால அளவிற்கு நிலை நிறுத்தப்படுகிறது.
(vii) இதனால் Tag டி.என்.ஏ பாலிமரேஸ் தனித்த அச்சு வார்ப்பு டி.என்.ஏ விலிருந்து நகலெடுக்கப்பட்டு முதன்மை இணைப்பு இழை நீட்சியடையச் செய்யப்படுகிறது.
(viii) இந்த அடைக்காப்புக் காலத்தின் இறுதியில் இரு அச்சு வார்ப்பு இழைகளும் பகுதியளவு இரட்டைச் சுருள் இழைகளாக மாற்றப்படும்.
(ix) இவ்வாறு உருவாகும் இரட்டைச் சுருள்களிலுள்ள ஒவ்வொரு புது இழையும் கீழ் நோக்கிய வேர்ப்பட்டை தொலைவுகளில் நீண்டு காணப்படும்.
(x) இந்த நிகழ்வுகள் திரும்ப திரும்ப நடைபெறுவதன் மூலம் டி.என்.ஏ வின் பல நகல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு டி.என்.ஏ பெருக்கமடைதல் என்று பெயர்.
13.
1. 'உயிரிய உரங்கள்' மண்ணின் ஊட்டச்சத்து தரத்தை வளப்படுத்தக் கூடிய உயிருள்ள நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்டதாகும்.
2. இவை பல ஊட்டச் சத்துகள் மற்றும் போதுமான அளவு கரிம பொருட்களை வழங்குகிறது.
3. இதனால் மண்ணின் அமைப்பு முறை, கட்டமைப்பு, நீர் சேமிப்புத் திறன், நேர்மின் அயனி பரிமாற்ற திறன் மற்றும் கார அமிலத் தன்மை (pH) போன்ற இயற்பிய வேதிய பண்புகளை அதிகரிக்கச் செய்கிறது.
பாக்டீரியா:
4. ரைசோபியம் - இணைந்து வாழக்கூடிய (Symbiotic) நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியா ஆகும்.
5. இவை பயறு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் தொற்றி வளிமண்டல நைட்ரஜனை கரிம வடிவில் நிலைப்படுத்துகின்றன.
6. அசோஸ்பைரில்லம் மற்றும் அசிட்டோபாக்டர் போன்ற தனித்து வாழும் பாக்டீரியாக்கள் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தி மண்ணின் நைட்ரஜன் அளவை அதிகப்படுத்துகின்றன.
பூஞ்சைகள்:
7. பூஞ்சைகளும் தாவரங்களின் வேர்களும் இணைந்து வாழும் அமைப்பு மைக்கோரைசா எனப்படும்.
8. இதில் இணை வாழ் உயிரியான பூஞ்சை மண்ணிலிருந்து பாஸ்பரசை உறிஞ்சி தாவரங்களுக்கு அளிக்கிறது.
9. இத்தகைய இணை வாழ்வை கொண்டுள்ள தாவரங்கள் வேறு பல நன்மைகளையும் பெறுகின்றன.
10. வேரிலுள்ள நோயூக்கிகளுக்கு எதிரான எதிர்ப்புத் திறன், உப்புத்தன்மை மற்றும் வறட்சி தாங்கு திறன், தாவர வளர்ச்சியை மேம்படுத்துதல் போன்ற பிற நன்மைகள் ஆகும்.
எ.கா: குளோமஸ் என்ற பேரினத்தின் பல உறுப்பு இனங்கள் மைக்கோரைசாவை ஏற்படுத்துகின்றன.
14.
சணல் (கார்கோரஸ் சிற்றினம்) ((மால்வேசி குடும்பம்)
தோற்றம் விளையுமிடம்
(i) சணல்
1. கார்கோரஸ் கேப்சுலாரிஸ்
2. கார்கோரஸ் ஒலிடோரிஸ்
போன்ற 2 சிற்றினங்களிலிருந்து கிடைக்கிறது.
(ii) கார்கோரஸ் ஒலிடோரியஸ் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது.
(iii) கார்கோரஸ் கேப்சுலாரிஸ் இந்தோ பர்மாவை பூர்வீகமாகக் கொண்டது.
(iv) கங்கை சமவெளி, பங்களாதேஷில் விளைவிக்கப்படும்.
பயன்கள்
1. மிகப் பெரிய ஏற்றுமதியாகும் நார்ப்பொருட்களில் ஒன்று.
2. இயற்கையான, மறுசுழற்சி செய்யக்கூடிய, மக்கக்கூடிய, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதிகட்டும் பொருள்.
3. துணிகளைப் போர்த்த, மூட்டை கட்டப் பயன்படும்.
4. 75 சதவீதம் காலுறை, பை செய்யப் பயன்படும்.
5. போர்வை, கம்பளிப் போர்வை, திரைச்சீலை செய்யப் பயன்படும்.
6. நெசவு நாராகப் பயன்படும்.
15.
மா(மாங்கிஃபெரா இண்டிகா)
குடும்பம் : அனகார்டியேசி
தோற்றம், விளையுமிடம் :
1. தெற்காசியாவில் பர்மா, கிழக்கிந்தியா பிறப்பிடம்
2. ஆந்திரா, பீகார், குஜராத், கர்நாடகா அதிகம் பயிராகும் மாநிலங்கள்.
3. தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள்.
பயன்கள்
1. இந்தியாவில் அதிகம் உட்கொள்ளப்படும்.
2. பீட்டா கரோட்டீன் அதிகமுள்ளது.
3. பின் உணவுப் பண்டம், அடைக்கப்பட்டு, உலர்த்தி, பாதுகாக்கப்பட்டு பயன்படுத்தப்படும்.
4. சட்னி, ஊறுகாய், கூட்டு தயாரிக்க, உப்பு மிளகாயுடன் உண்ணப் பயன்படும்.
5. சதைப்பற்றுள்ள பகுதியிலிருந்து களிமம் (ஜெல்லி) தயாரிக்கப்படும்.
6. காற்றேற்றப்படாத சாறு பிரபல பானமாகும்.
16.
| வ.எண் | வகைப்பாட்டின் அடிப்படை | சடுதிமாற்றத்தின் முக்கிய வகைகள் | முக்கிய பண்புகள் |
| 1 | தோற்றம் | தன்னிச்சையான | தெரியாத சடுதிமாற்றிகளால் நிகழ்வது |
| தூண்டப்பட்ட | தெரிந்த சடுதிமாற்றிகளால் நிகழ்வது | ||
| 2 | செல்வகை | உடல் வழி | இனப்பெருக்கமில்லாத செல்களில் நிகழ்வது |
| இன வழி | இனப்பெருக்க செல்களில் நிகழ்வது | ||
| 3 | பணிகளின் மீது பாதிப்பு | செயல் இழப்பு (வெளியேற்றுதல் (Knockout), இன்மை (null) | இனப்பெருக்க செயல்பாட்டினைக் நீக்குவது |
| குறை அமைப்பு நிலை (hypomorphic) (லீக்கி) | இயல்பான செயல்பாட்டினை நீக்குவது | ||
| மிகை அமைப்பு நிலை (hypomorphic) | இயல்பான செயல்பாட்டினை அதிகரிப்பது | ||
| செயல் ஏற்பு (இடமறியா வெளிப்பாடு) | தவறான நேரத்தில் அல்லது பொருத்தமற்ற செல்களில் வெளிப்படுவது. | ||
| 4 | மூலக்கூறு அளவில் மாற்றம் | நியூக்ளியோடைடு பதிலீடு | DNA ஈரிழையில் உள்ள ஒரு கார இணைக்குப் பதிலாக மற்றொரு கார இணை இருப்பது |
| ஒத்த பதிலீடு (transition) | பியூரினுக்கு பதில் பியூரின் (A⟶G) அல்லது பைரிமிடினுக்கு பதிலாகப் பைரிமிடின் (T⟶C) | ||
| வேறுபட்ட பதிலீடு | பியூரினுக்கு பதில் பைரிமிடின் (A⟶T) அல்லது பைரிமிடினுக்கு பதிலாகப் பியூரின் (C⟶G) | ||
| இடைசெருகல் (insertion) | ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நியூக்ளியோடைடுகள் கூடுதலாக இருப்பது | ||
| நீக்கம் (deletion) | ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நியூக்ளியோடைடுகள் இல்லாமல் இருப்பது | ||
| 5 | மரபுச்செய்தி பெயர்வினை பாதிப்பது | அமைதியான (silent) (ஒத்த)(synonymous) | அமினோ அமில வரிசையில் மாற்றம் இல்லை |
| தவறுதலாகப் பொருள்படும் (missense) (ஒத்தில்லா) (non synonymous) | அமினோ அமில வரிசையில் மாற்றம் இருப்பது | ||
| பொருளுணர்த்தா (nonsense) (முடிவு) | மரபுச்செய்தி பெயர்வினால் முடிவு நிலை மரபுக்குறியான (UAA, UAG அல்லது UGA) தோற்றுவிப்பது | ||
| கட்ட நகர்வு (frameshift) | சரியான கட்டத்தில் உள்ள மூன்று மரபுக்குறியான (codon) நகர்த்துவது. |
வேறுபட்ட பதிலீடு: (Transversion)
ஒரு பியூரினுக்கு பதிலாக மற்றொரு பைரிமிடின் (அ) ஒரு பைரிமிடினுக்குப் பதிலாக மற்றொரு பியூரின்
ஒத்த (அ) அமைதியான சடுதி மாற்றம்:
ஒரு அமினோ அமிலத்திற்கான ஒரு மரபுக்குறியனை (codon) அதே அமினோ அமிலத்திற்கான வேறோரு மரபுக்குறியனாக மாற்றியமைக்கப்படும் சடுதிமாற்றம்
ஒத்திலா (அ) தவறுதாகப் பொருள்படும் சடுதிமாற்றம்:
ஒரு அமினோ அமிலத்திற்கான மரபுக்குறியின் வேறொரு அமினோ அமிலத்திற்கான மரபுக்குறியனாக மாற்றியமைக்கப்படும் சடுதிமாற்றம்
17.
| யோகர்ட் | பாலாடைக்கட்டி (cheese) | பனீர் (paneer) | |
| 1 | பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி பாலை நொதிக்க வைப்பதன் மூலம் யோகர்ட் மற்றும் அதன் துணை பொருளான லாக்டிக் அமிலம் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன. | பல வகை சுவைகள் மற்றும் அமைப்புகளில் உருவாக்கப்படுகிறது. | கொதிக்க வைத்த பாலில் எலுமிச்சை சாறு, வினிகர் (அ) உண்ணத்தகுந்த அமிலங்கள் சேர்த்து பாலை திரியச் செய்து இது தயாரிக்கப்படுகிறது. |
| 2 | பயன்படும் நுண்ணுயிரிகள்: ஸ்ட்ரெப்டோகாக்கஸ், தெர்மோஃபைலஸ், லாக்டோபேசில்லஸ் பல்கேரிகஸ். |
பயன்படும் நுண்ணுயிரிகள்: 1. லாக்டோ காக்கஸ் 2. லாக்டோ பேசில்லஸ் 3. ஸ்ட்ரெப்டோகாக்கஸ் போன்ற வினைத் தொடக்க பாக்டீரியாக்களின் உதவியோடு பல வகை பாலாடைக்கட்டிகள் உருவாக்கப்படுகின்றன. |
பயன்படும் நுண்ணுயிரிகள்: புரோபியோனி பாக்டீரியா ஷெர்மானி |
| 3 | இவை பால் புரதத்தை உறையச் செய்வதுடன் பாலில் உள்ள லாக்டோசை லாக்டிக் அமிலமாகவும் மாற்றுகின்றன. | பால் புரதமான கேசினை திரிய வைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது. | இந்த பாக்டீரியா உற்பத்தி செய்யும் அதிகப்படியான கார்பன்-டை-ஆக்ஸைடு தான் ஸ்விஸ் பாலாடைக்கட்டிகளில் காணப்படும் பெருந்துளைகளுக்கு காரணமாகும். |
| 4 | யோகார்டின் சுவைக்கு / மணத்திற்கு அதில் உள்ள அசிட்டால்டிஹைடு காரணமாகும். | அமில நிலைக்கு மாற்றப்பட்ட பால் திரிவதற்கு ரென்னட் நொதி சேர்க்கப்படுகிறது. | தெற்கு ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில் பனீர் என்ற புதிய பாலாடைக்கட்டி பயன்படுத்தப்படுகிறது. |
| 5 | இறுதியாக உறைந்த திடப்பொருளை பிரித்து எடுத்து அழுத்துவதன் மூலம் பாலாடைக்கட்டி பெறப்படுகிறது. |
18.
1.C.E. ஆலன் (1917) இல் தாவரங்களில் பால் நிர்ணயத்தை முதலில் கண்டறிந்தார்
2. இதைத் தீர்மானிப்பது
மரபணு
சுற்றுச்சூழல்
ஹார்மோன்கள்
3.சைலின் லேட்டிபோலியாவின் பால் நிர்ணயம் 3 தனிப்பட்ட பகுதிகளினால் கட்டுப்படுத்தப்படுகிறது.
4. Y குரோமோசோம் - ஆண் பாலினம்
5. X குரோமோசோம் - பெண் பாலினம்
6. X மற்றும் Y குரோமோசோம்களில் வேறுபட்ட துண்டுகள் (i,ii,iii,iv,v) காணப்படுகின்றன.
19.
அ) பெற்றோரைத் தேர்ந்தெடுத்தல்:
(i) தெரிவு செய்யப்பட்ட பண்புடைய ஆண் மற்றும் பெண் தாவரங்களைத் தேர்ந்தெடுத்தல்.
(ii) இத்தாவரங்களின் ஒத்த பண்பிணைவுத் தன்மையைச் சோதனை செய்தல் மிக முக்கியமாகும்
ஆ) ஆண் மலடாக்குதல்:
(i) தன் மகரந்தச்சேர்க்கையை தடுப்பதற்காக ஆணகச் சிதைவுறச் செய்தல்
(ii) அதை ஆண் மடலாக்குதல் என்றழைக்கப்படுகின்றன
இ) பையிடுதல்:
(i) சூலக முடியை உறையிட்டுப் பாதுகாக்கும் முறை பயிரிடுதல் ஆகும்
(ii) இது தேவையற்ற மகரந்தத்துகள்கள் சூலக முடியில் கலந்துவிடாமல் தடுக்கும்
ஈ) கலப்பு செய்தல்:
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண் மலரின் மகரந்தங்களை ஆண் மலடாக்கப்பட்ட பெண் மலரின் சூலக முடிக்கு மாற்றம் செய்வது
உ) விதைகளை அறுவடை செய்து புதிய தாவரங்களை உண்டாக்குதல்:
(i) மகரந்த சேர்க்கை மூலம் கருவுறுதல் ஏற்பட்டு விதைகள் உருவாகின்றன
(ii) இவ்விதைகளிலிருந்து உருவாகும் புதிய சந்ததிக்கு கலப்புயிரி எனப்படும்
20.
| இரகங்கள் | நோய் எதிர்ப்பு திறன் | |
| 1 | சீனா | நிவால் தினை, வெங்காயம், சோயாபீன்ஸ், மூங்கில், முட்டைக்கோஸ் குடும்பத்தாவரங்கள் |
| 2 | இந்தியா | நெல், கரும்பு, மா, ஆரஞ்ச், கத்தரி, எள் |
| 2a | தென்கிழக்கு ஆசியா | நெல், வாழை, தென்னை, லவங்கம், சணல் |
| 3 | மத்திய கிழக்கு பகுதி | கோதுமை, பட்டாணி, சணல், பருத்தி |
| 4 | அரேபியப்பகுதி | கோதுமை, ரை, மிதவெப்ப மற்றும் வெப்பமண்டலப் பழங்கள் |
| 5 | மத்தியதரைக்கடல் பகுதி | ஆலிவ், காய்கறிகள், எண்ணெய்த் தாவரங்கள், கோதுமை |
| 6 | எத்தியோப்பியா (அபிசினியன்) | கோதுமை, பார்லி, எள், ஆமணக்கு, காஃபி |
| 7 | மைய அமெரிக்கா (தெற்கு மெக்சிகன் - மைய அமெரிக்கா மையம்) | சோளம், பீன்ஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பப்பாளி, கொய்யா, புகையிலை |
| 8 | தென் அமெரிக்கா | தக்காளி, அன்னாசி |
| 8a | சிலி மையம் | உருளை |
| 8b | பிரேசிலியன் - பராகுயின் மையம் | நிலக்கடலை, முந்திரி, அன்னாசி, மிளகாய், ரப்பர் |
21.
1. இதன் வாழ்க்கை சுழற்சியில் மூன்று நிலையில் காணப்படுகின்றன. அவை ஸ்கிசோகோனி கேமிடோகோனி மற்றும் ஸ்போரோகோனி.
மனிதனில் காணப்படும் வாழ்க்கை சுழற்சி;
1. ஸ்போரோசோயிட்டுகள் கொசுவின் உமிழ்நீரின் மூலம் மனிதனுள் செலுத்தப்படுகிறது.
2. அவை கல்லீரலுள் செல்கிறது.
3. அங்கு அவை பாலிலா பல பிளவு முறையில் மீரோசோயிட்டுகளை உண்டு பண்ணுகிறது.
4. இவை சிவப்பணுக்களுக்குள் நுழைந்து டிரோபோசோயிட்டுகளாக மாறுகின்றன.
5. இது நுண்குமிழ் உருவாகி முத்திரை மோதிர நிலைமை அடைகிறது.
6. பாலிலா இனப்பெருக்கம் மூலம் பிளவுற்று ஸ்கிசாண்டுகள் உருவாகின்றது.
7. இவை பின்பு பிளவுற்று மீரோசோயிட்டுகளையும், ஹீமோசோயின் என்ற நச்சையும் இரத்தத்தில் வெளியிடுகின்றன.
8. சில மீரோசோயீட்டுகள், மேக்ரோகேமிட் டோசைட்டுகளாகவும் மைக்ரோகேமிட் டோசைட்டுகளாகவும் மாற்றமடைகின்றன.
கொசுவில் காணப்படும் வாழ்க்கைச் சுழற்சி :
1. அந்த கேமிட்டோசைட்டுகள் குடலில் ஆண் மற்றும் பெண் இனச்செல்களாக மாறுகின்றன.
2. பின் அவை இணைந்து ஊகனைட்டாக மாறுகிறது.
3. கொசுவின் குடலை துளைத்து சென்று ஊசிஸ்ட்டுகளாக மாறுகின்றன.
4. இவை ஸ்போரோகோனிடாக மாறுகிறது.
5. பின் அவை ஸ்போரோசோயிட்டாக மாறி உமிழ்நீர் சுரப்பியை அடைகிறது.
6. பின் அவை அடுத்த சுழற்சிக்காக தயாராகிறது.

22.
இவ்வகை மகரந்தச்சேர்க்கை, நீர்ப்பரப்பின் மேல் நடைபெறும் (எ.கா.) எலோடியா
வாலிஸ்நேரியா, ஸ்பைராலாசிஜிஸ் மகரந்தச் சேர்க்கை.
1. இது நன்னீர் மூழ்கி வேரூன்றி வளரும் ஒருபால் தாவரம்.
2. பெண் தாவரங்கள். தனி மலர்களை, மகரந்தச் சேர்க்கைக்கு ஏதுவாக நீரின் மேற்பரப்பு வரைக் கொண்டு செல்லும்.
3. இதற்கு நீண்ட சுருள் போன்ற காம்பு உதவும்.
4. நீரின் மேற்பரப்பில், பெண் மலரைச் சுற்றி குழிந்த கோப்பை வடிவப் பள்ளம் உருவாகும்.
5. ஆண் மலர்கள் நீர்ப்பரப்பில் மிதக்கும்.
6. ஆண் மலர்கள், பெண் மலர்களைச் சூழ்ந்த குழிந்த கோப்பை வடிவப் பரப்பில் படிந்து விடும். அப்போது பெண் மலரின் சூலக முடியுடன் தொடர்பு கொண்டு மகரந்தச் சேர்க்கை நிகழ்கிறது.
7. மகரந்தச் சேர்க்கை அடைந்த பெண் மலரின் காம்பு சுருண்டு மலர்கள், நீரின் மேற்பரப்பினின்று. நீருக்கடியில் கொண்டு வரப்பட்டு கனிகள் உருவாகும்.
23.

24.
திசையமைவு, வடிவம், சூல்காம்பு, சலாசாவுக்கு தொடர்பாக 6 வகைகள் உள்ளன.
i) நேர்சூல் (Orthotropous)
சூல் காம்பு, சூல் துளை. சலாசா நேர்கோட்டில் இருக்கும் (எ.டு) பைப்பரேசி, பாலிகோனேசி.
ii) தலைகீழ் சூல் (Anatropous)
சூல் முழுமையாகத் தலைகீழாக இருக்கும். சூல்தளை, சூல்காம்பு அருகிலிருக்கும் (எ.டு) ஒரு விதையிலை இரு விதையிலைத் தாவரம்.
iii) கிடைமட்ட சூல் (Hemianatropous)
சூலின் உடல் குறுக்குவாட்டில், சூல் காம்புக்கு செங்குத்தாக இருக்கும். (எ.டு) பிரைமுலேசி.
iv) கம்பைலோட்ராபஸ் (Campylotropous)
சூல் துளைப்பகுதியில், சூலின் உடல் வளைந்து அவரை விதை வடிவிலிருக்கும். விதைத் தழும்பு, சூல் தளை, சலாசா அருகாமையிலிருக்கும். சூல் துளை, சூல் ஒட்டுத்திசுவை நோக்கி இருக்கும்.
(எ.டு) லெகுமினாசே
v) ஆம்பிட்ராபஸ் (Amphitropous)
சூல் திசுவும், கருப்பையும் குதிரை லாடம் போல வளைந்திருக்கும். (எ.டு) அலிஸ்டமேசி குடும்பம்.
vi) சிர்சினோட்ராபஸ் (Circinotropous)
சூல் காம்பும் சூலை முழுவதும் சூழ்ந்துள்ளது. (எ.டு) காக்டேசி.
25.
(i) கியூட்டிக்கள் முழுமையாகக் காணப்படாமலோ அல்லது காணப்பட்டால் மெல்லியதாகவோ அல்லது குறைவாகவோ வளர்ச்சி அடைந்திருத்தல்.
(ii) ஓர் அடுக்கு புறத்தோல் காணப்படுவது
(iii) நன்கு வளர்ச்சியடைந்த ஏரன்கைமாவினால் ஆன புறணி காணப்படுவது.
(iv) வாஸ்குலத் திசுக்கள் குறைவான வளர்ச்சி அடைந்துள்ளது. வேரூன்றி வெளிப்பட்ட நீர்வாழ் தாவரங்களில் வாஸ்குலத்திசுக்கள் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது.
(v) வேரூன்றி வெளிப்பட்ட நீர்வாழ் தாவரங்களைத் தவிர மற்ற தாவரங்களில் வலுவைக் கொடுக்கும் திசுக்கள் பொதுவாகக் காணப்படுவதில்லை. பித் செல்கள் ஸ்கிளிரங்கைமவில் ஆனது.
வாழ்வியல் தக அமைவுகள் (Physiological adaptations of hydrophytes):
(i) நீர்வாழ் தாவரங்கள் காற்றில்லாச் சூழலைத் தாங்கிக் கொள்ளும் திறன் கொண்டது.
(ii) இவை வாயு பரிமாற்றத்திற்கு உதவும் சிறப்பு உறுப்புகளைக் கொண்டுள்ளது.
26.
(i) விரிவகலம் மற்றும் குத்துயரம் ஆகியவற்றில் உள்ள மாறுபாடுகள் பூமியின் மேற்பரப்பில் வெப்பநிலை மற்றும் தாவரக்கூட்டங்களை பாதிக்கிறது.
(ii) விரிவகலம் (Latitude) : விரிவகலம் என்பது பூமத்திய ரேகையின் 0°o முதல் துருவங்களின் 90°0 வரையில் காணப்படும் கோணமாகும்.
(iii) குத்துயரம் (Altitude): கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு மேலே அந்தப் பகுதியானது அமைந்துள்ளது என்பதைக் குறிப்பதாகும்.
வெப்பநிலையினால் ஏற்படும் விளைவுகள்:
(i) வெப்பநிலை ஒரு தாவர உடலில் நடைபெறும் அனைத்து உயிர்வேதியியல் வினைகளுக்கு உதவும் நொதிகளின் செயல்பாட்டைப் பாதிக்கின்றன.
(ii) இது உயிரியல் அமைப்புகளில் CO2 மற்றும் O2 கரைத்திறனை பாதிக்கிறது. சுவாசத்தை அதிகரிக்கிறது மற்றும் நாற்றுகளின் வளர்ச்சியை தூண்டுகிறது.
(iii) உயர் ஈரப்பதத்துடன் கூடிய குறைந்த வெப்பநிலை தாவரங்களுக்கிடையே நோய்களைப் பரப்புகிறது.
(iv) ஈரப்பதத்துடன் மாறுபடும் வெப்பநிலை தாவரக்கூட்ட வகைகளின் பரவலைத் தீர்மானிக்கிறது.
27.
ஒடுங்கு மரபணு மறைத்தல் 9 : 3 : 1
சொர்கம் (சோளம்) தாவரத்தில் ஓங்கு மரபணு (P) ஊதா நிறத்திற்கு காரணமாக உள்ளது. இது பழுப்பு நிறத்தின் (q) மீது ஓங்கு பண்பாக உள்ளது
P மற்றும் Q ஆகிய இரண்டு ஓங்கு மரபணுக்களும் கலப்பற்ற நிலையிலோ கலப்புற்ற நிலையிலோ ஒன்றாக கொண்டு வரப்படும் போது, ஊதா நிறம் சிவப்பு நிறமாக மாறும்
F2 புறத்தோற்ற விகிதம்
| சிவப்பு | : | ஊதா | : | பழுப்பு |
| 9 | : | 3 | : | 4 |
ஊதா நிறம் (PPqq) மற்றும் பழுப்பு நிறம் (ppQQ) கொண்ட தாவரங்களில் கலவியில் F1 கலப்புயிரிகள் சிவப்பு நிறமுடையவையாக காணப்படுகின்றன. F1 கலப்புயிரிகளை தன் கலப்பு செய்யும் போது மூன்று வித புறத்தோற்றங்களும் 9 : 3 : 4 என்ற விகிதத்தில் தோன்றும் (9 சிவப்பு 3 ஊதா 4 பழுப்பு) ஆகவே இந்த எடுத்துக்காட்டில் "P" ஜீன் மற்ற நிற மரபணுக்களை மறைக்கும் காரணியாக உள்ளது.
சோளம் தாவரம் pp ஆக இருந்தால் மற்ற ஜீனாக்கங்கள் இருந்தாலும், பழுப்பு நிறம் கொண்டுள்ளது. நிற மரபணுக்களின் வெளிப்பாடு pp இருந்தால் மறைக்கப்படுகிறது .
28.
ஒரு மரபணு ஆனால் பல அல்லீல்களால் கட்டுப்படுத்தப்படும் பண்பு இரத்தவகை.
மெண்டலின் பாரம்பரியக் கொள்கையின்படி ஒவ்வொரு பண்பும் இரு அல்லீல்கள் காரணமாக உள்ளன.
29.
1. சீவால் ரைட் பிஷ்ஷர், மேயர் ஹாக்ஸ்லே, டோப்ஷான்ஸ்கி சிம்ஸன் மற்றும் ஹேக்கல் போன்றோர் டார்வினுக்குப் பிந்தைய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் இயற்கை தேர்வுக் கோட்பாட்டை விளக்கினர்.
2. ஐந்து அடிப்படை காரணிகள் கரிமப்பரிணாம நிகழ்வுக்குக் காரணமாகின்றன.
(i) மரபணு திடீர் மாற்றம் (புள்ளி திடீர் மாற்றம்)
1. மரபணுக்களின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.
2. புறத்தோற்றங்களை மாற்றியமைக்கிறது.
3. சேய் உயிரிகளில் மாறுபாடுகளை உருவாக்குகிறது.
(ii) குரோமோசோம் பிறழ்ச்சி
1. குரோமோசோம் அமைப்பில் ஏற்படும் மாற்றம் ஆகும்.
2. நீக்கம், சேர்த்தல், இரட்டிப்பாக்கம், தலைகீழாக்கம் மற்றும் இடமாற்றம் காரணமாக குரோமோசோம் அமைப்பில் ஏற்படும் மாற்றமாகும்.
3. புறத்தோற்றங்களை மாற்றியமைக்கிறது.
4. சேய் உயிரிகளில் மாறுபாடுகளை உருவாக்குகின்றன.
(iii) மரபணு சேர்க்கை
1. குன்றல் பிரிவின்போது ஏற்படும் குறுக்கெதிர் மாற்றத்தால் நிகழ்கிறது.
2. மரபணு மாற்றங்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன.
(iv) இயற்கை தேர்வு
(i) எந்தவித மரபணு மாறுபாடுகளையும் தோற்றுவிப்பதில்லை.
(ii) தேர்வு சக்தி சில மரபணு மாற்றங்களை மட்டுமே உயிரினங்களில் அனுமதிக்கிறது. மற்றவை நிராகரிக்கப்படுகின்றன.
(v) இனப்பெருக்க ரீதியான தனிமைப்படுத்துதல் முறைகள்
தொடர்புடைய உயிரினங்களுக்கிடையே இனப்பெருக்கம் நடைபெறுவதைத் தடுக்கிறது.
30.
1. உயிரியப் பரிணாமத்தில் ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரினங்கள் அதிகரித்தல் கடலிலும் வளிமண்டலத்திலும் தனித்த O2-அளவு அதிகரித்தது.
2. O2 மீத்தேனுடன் சேர்ந்து CO2 அளவு அதிகரித்தது.
CH4+2O2\(\rightarrow \)CO2+2H2O
3.O2 அம்மோனியாவுடன் சேர்ந்து நைட்ரஜனை உருவாக்கியது.
4NH3+3O2\(\rightarrow \)2N2+6H2O
4. வளிமண்டலத்தில் காணப்பட்ட தனித்த O2 ஆல் காற்று சுவாச முறை பரிணாமம் ஏற்பட்டது.
5. இச்சுவாச முறையால் உணவுப் பொருட்கள் ஆக்சிகரணம் அடைந்து அதிக அளவு ஆற்றல் உருவாகி இருக்கக் கூடும் இதனால் புரோகேரியாட்டுகள் மற்றும் யூகேரியாட்டுகள் உருவாகின.
31.
(i) தனிமனித ரகசியம் மற்றும் நேர்மை பாதுகாத்தல்
தொழில் அமர்த்துதல் மற்றும் காப்பீடு, மரபணுசார் வேறுபாட்டை உள்ளடங்கிய மரபணு சார் பயன்பாடு
(ii) மரபணு சார் சோதனை போன்ற புதிய மரபணு சார் தொழில்நுட்பங்களைச் சிகிச்சை சார் மருத்துவ நடைமுறையில் ஒன்றிணைத்தல்.
(iii) மக்களின் முன் அனுமதியுடன் கூடிய மரபணு ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பைச் சார்ந்த அறநெறி சார் பிரச்சனைகள் போன்றவை - இதில் அடங்கும்.
32.
(i) கழுவும் & உலர்த்தும் வசதி
கண்ணாடிக் கலங்களைக் கழுவும் & உலர்த்தும் நுண்ணலை அடுப்பு
(ii) ஊடகம் தயாரிக்கும் அறை
(i) தன்னழுத்தக்கலன்
(ii) எலக்ட்ரானிக் தராசு
(iii) pH மீட்டர்
(iii) நுண்ணுயிர் நீக்கப்பட்ட அறை
(i) சீரடுக்கு காற்று பாய்வு அமைப்பு
(ii) உயர்திறன் துகள் காற்று வடிப்பான் (HEPA)
(iv) பிற வளர்ப்பு வசதிகள்
பிரிகூறு - வளர்ப்புக் குழாயில் பொதிக்கப்பட்டு 22 - 28°C வெப்பநிலையில், 2400 லக்ஸ் ஒளிச்செறிவில் 8 - 16 மணி நேர ஒளிக்காலத்துவதிலும் 60% ஈரப்பதத்திலும் வளர்க்கப்படுகிறது.
33.
1. நன்மையளிக்கும் பாக்டீரியாக்கள் மண்வாழ் உயிரினங்களை கொல்லக்கூடும்.
2. நீர் நிலைகளில் மிகை உணவூட்டத்தை ஏற்படுத்தும்.
3. நீர்வாழ் விலங்குகளையும் அவற்றின் உற்பத்தித்திறனையும் பாதிக்கிறது.
4. வேதிப்பொருட்களின் துகள்கள் மாசுபாட்டினை ஏற்படுத்தும்.
5. மாசடைந்த காற்றினை உள்ளிழுப்பது சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
6. உட்கொள்ளுதல் நச்சாகும்.
7. வேதிப்பொருட்கள் தோலில் அரிப்பினை ஏற்படுத்தும்.
8. பல வேதிப்பொருட்கள் புற்றுநோயினை ஏற்படுத்தக்கூடும்.
9. நன்மை செய்யும் பூச்சிகள் பாதிக்கப்படும்.
34.
மனித செயல்பாடுகளால் நீர் மாசுபடுகிறது.
மூலாதாரங்கள்
1. மைய மூலாதாரங்கள்
நீர் நிலைகளில் குறிப்பிட்ட இடத்தில் குழாய்கள் அல்லது கழிவுநீர்க் குழாய் மூலம் மாசுபடுத்திகளை வெளியிடுதல் மைய மூலாதாரங்கள் ஆகும்.
2. மையமற்ற மூலாதாரங்கள் :
ஒரு இடத்தில் வெளியேற்றப்படும் மாசின் மூலாதாரங்கள் கண்டறிய இயலாது.
எ.கா. அமிலமழை, நீர்நிலைகளில் கொட்டப்படும் நெகிழிப்பொருட்கள்.
3. கசிவுகள் மற்றும் சிந்துதல் கப்பல் விபத்து எண்ணெய் கசிவுகள்.
4. நகராட்சி கழிவுகள்:- வீடுகள் மற்றும் வணிக நிறுவன கழிவுநீர்.
5. தொழிற்சாலைக் கழிவுகள் - காட்மியம் குரோமியம் அடங்கிய கழிவுநீர்.
6. வேளாண் கழிவுகள்
7. நீர் மாசுபடுத்திகள் ஊடுருவல் மூலம் நிலத்தடி நீரினை அடைகின்றன.
35.
1. ஹைபோதலாமஸின், கொனடோடிராபின் வெளிவிடு ஹார்மோன் விந்து செல்லாக்கத்தை தொடங்கும்.
2. GnRH முன் பிட்யூட்டரி மீது செயல்படும்.
3. முன் பிட்யூட்டரி 2 கொனடோடிராபின்களை வெளியிடும்.
(a) FSH (நுண்பை செல் தூண்டும் ஹார்மோன்)
(b) LH (லூட்டினைசிங் ஹார்மோன்)
4. FSH விந்தக வளர்ச்சியைத் தூண்டும்.
5. செர்டோலி செல்கள் ஆண்ட்ரோஜன் இணைவுப் புரதத்தை உற்பத்தி செய்யும்.
6. FSH ஸ்பெர்மியோஜெனிசிஸ் நடைபெற உதவும்.
7. LH இடையீட்டு செல்கள் மீது செயல்படும். அவை டெஸ்டோஸ்டீரோனை உற்பத்தி செய்யும். இவ்வாறாக விந்து செல் உருவாக்கம் தூண்டப்படும்.
36.
1. அடி வயிற்றின் இரண்டு பக்கங்களிலும், அண்டகங்கள் அமைந்துள்ளன.
2. மீசோவோரியம் என்ற தசை நாரினால் அவை இடுப்புச் சுவர்ப்பகுதியுடனும், கருப்பையுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
3. நீள்வட்ட வடிவ அண்டகம் 2 முதல் 4 செ.மீ நீளமுள்ளது.
4. கனசதுர வடிவ எபிதீலியத்தால் சூழப்பட்டுள்ளது.
5. உள்ளே அண்டக இழைய வலை (ஓவரின் Stroma) உள்ளது.
6. இதில் வெளிப்புற கார்டெக்ஸ் உட்புற மெடுல்லா உள்ளது.
7. எபிதீலியத்தின் அடியில் 'டியுனிகா அல்புஜினியா' எனும் இணைப்புத் திசு உள்ளது.
8. மெடுல்லாவில் உள்ள இணைப்புத் திசு, இரத்தக் குழாய், நிணநீர் நாளம், நரம்பிழை போன்றவற்றைக் கொண்டுள்ளது.
37.
1. 1949 ஆம் ஆண்டு பெண் பூனையின் நரம்பு செல்லில் அடர்த்தியான ஒரு உறுப்பை கண்டறிந்தனர். அவை ஆண் பூனையின் காணப்படுவதில்லை.
2. இந்த அடர்த்தியான உறுப்பை பால்குரோமோட்டின் அல்லது பால் உறுப்புகள் என்றழைத்தார்கள்.
3. ஆண் உயிரிகள் இரண்டு X குரோமோசோம்களை கொண்டுள்ளன.
4. மற்றொரு X குரோமோசோம் செயல்படாமல் ஈடு செய்வது கொள்கின்றன.
5. ஆண் மற்றும் பெண் ஆகியவற்றில் ஒரு X குரோமோசோம் மட்டுமே செயல்திறன் பெற்றுள்ளது.
6. ஒரு செல்லில் உள்ள பார் உறுப்பின் எண்ணிக்கை அச்செல்லில் உள்ள X குரோமோசோம்களின் எண்ணிக்கையை விட ஒன்று குறைவாகும்.
7. உதாரணமாக XXY வகை ஆண் உயிரிகள் ஒரு பார் உறுப்பை பெற்றுள்ளன.
8. xo வகை பெண் உயிரிகளால் பார் உறுப்புகள் கிடையாது.
38.
1. வளர்கரு இரத்த சிவப்பணு சிதைவு நோய் அல்லது சிசு ஹீமோலைடிக் நோய் என்றழைக்கப்படுகிறது.
2. Rh- பெண் Rh+ ஆணை மணந்து கொள்ளும்போது அவர்களின் குழந்தை Rh+ வாக இருக்கலாம்.
3. இந்த Rh- தாய் தன் உடலில் Rh+ குழந்தையை சுமக்கும் போது உணர்வாக்கம் பெறுகிறார்.
4. தாயின் நோய்த்தடைக்காப்பு மண்டலம் Rh எதிர்பொருள் தூண்டிகளை அடையாளம் காண்கின்றன.
5.இதனால் Rh எதிர்பொருட்கள் உற்பத்தியாகின்றன,
6. இந்த எதிர்பொருட்கள் IgG வகையைச் சார்ந்தது.
7. இந்த எதிர்பொருட்கள் தாய்சேய் இணைப்புத்திசு வழியாக ஊடுருவி கருவின் இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன.
8. D -எதிர்பொருட்கள் தாய்சேய் இணைப்புத்திசு வழியாக ஊடுருவி கருவின் இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன.
9. அதே தாய் அடுத்தடுத்த Rh+ எதிர்பொருள் தூண்டிகளைக் கொண்ட கருவை சுமக்கின்றபோது அவைகளுக்கெதிராக தாய் உடலானது எதிர்பொருட்களை உற்பத்தி செய்கின்றது.
10. இவை இரத்த ஓட்டத்தில் கலந்து கருவின் இரத்தத் சிவப்பணுக்களை அழிக்கின்றன.
11. இதன் விளைவாக இரத்தசோகை மற்றும் மஞ்சள் காமாலை உண்டாகிறது.
39.
மருத்துவ ரீதியான கருக்கலைப்பு (Medical Termination of Pregnancy)
1. அறுவைச் சிகிச்சையோ, கருவிகள் உள்நுழைத்தாலோ இன்றி செய்யப்படும்.
2. முதல் மும்மாதம் (12 வாரத்திற்குள்) செய்தால் பாதுகாப்பானது.
3. இரண்டாம் மும்மாதம் செய்தால் ஆபத்தானது, வளர்கரு தாயின் உடற்திசுவில் இணைத்துள்ளதால் அதிக ஆபத்தானது.
4. 1971 ல் இம்முறை இந்தியாவில் சட்டபூர்வமானது.
5. கட்டுப்பாடுகளுடன் இச்சட்டம் இயற்றப்பட்டதால், பாலினப்பாகுபாடு, பெண் சிசுக்கொலை தடுக்கப்படும்.
6. போலி மருத்துவரால் செய்யப்பட்டால் பாதுகாப்பற்றது.
7. முதல் கர்ப்பக் கருக்கலைப்பு கடும் உளவியல் விளைவுகளை உண்டாக்கும்.
40.
1. உடல் நலம் மிக்க சமுதாயத்திற்கான, விழிப்புணர்வு மருத்துவ உதவி.
2. விடலைப் பருவ மாற்றத்திற்கான பாலியல் கல்வி.
3. தம்பதியர்க்கு குடும்பக் கட்டுப்பாடு பற்றிய அறிவுறுத்தல்.
4. கர்ப்பமான பெண்கள், தாய்சேய் பாதுகாப்பு, தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு
5. அரசு, அரசு சாரா முகவாண்மைகள் மூலம் குடும்பக்கட்டுப்பாடு முறைகளை மேம்படுத்துதல்.
41.
1. இழப்பு மீட்டல் பற்றிய ஆய்வை ஹைட்ராவில் முதன் முதலில் மேற்கொண்டவர் ஆபிரகாம் டிரம்பிளி (1740)
2. இழப்பு மீட்டல் இரண்டு வகைப்படும். அவை முழு உருவ மீட்பு மற்றும் உறுப்பு மீட்டலாகும்.
3. முழு உருவ மீட்பில் உயிரியின் சிறுபகுதி முழு உயிரியை உருவாக்கும்.(எ.கா) ஹைட்ரா
4. உறுப்பு மீட்பு இரு வகைப்படும். அவை சீராக்கல் மற்றும் மீண்டும் உருவாக்குதல்.
5. உடலில் ேதமுற்ற சில செல்கள் மட்டும் சரிசெய்யப்படுவது சீராக்கல் என்பதாகும்.
6. வெட்டுண்ட பகுதியை முழுமையாக உருவாக்குவது மீண்டும் உருவாக்குதல் என்பதாகும்.

42.
1. பெற்றோர் உயிரி இரு சமப்பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதியும் ஒரு சேய் உயிரியாக மாற்றமடைகிறது.
2. எளிய ஒழுங்கற்ற இருசமப் பிளவு முறை அமீபா போன்ற ஒழுங்கற்ற வடிவமுடைய உயிரிகளில் நடைபெறுகின்றது.
3. கிடைமட்ட இருசமப் பிளவு முறையில் பிளவுமட்டம் உயிரியின் கிடைமட்ட அச்சில் ஏற்படுகின்றது.
(எ.கா) பாரமீசியம்
4. உயிரியின் நீள் அச்சில் பிரிவடைவது, நீள்மட்ட இருசமப் பிளவு முறை எனப்படும்.
(எ.கா) யூக்ளினா
5. சில உயிரிகளில் பிளவுமட்டம் சாய்வாக இருக்கும் அவை சாய்வுமட்ட இருசமப் பிளவு முறையாகும்.
(எ.கா) செராட்டியம்

43.
தொடக்கி கூட்டமைப்பு உருவாதலுடன் புரதம் தயாரித்தல் தொடங்குகிறது.
1. ரிபோசோமின் இரு துணை அலகுகள் (30s & 50s)
2. ஆற்றலேற்றம் பெற்ற கடத்து RNA க்கள் (N -ஃபார்மைல் மெத்தியோனைன் கடத்து RNA)
3. தூது RNA
4. புரதத் தன்மை கொண்ட தொடக்க காரணிகள் 
GTP + Mg++
I) படிகள்: தொடக்க கூட்டமைவு -உருவாதல்
1. IF3-30s ரிபோசோம் துணை அலகுடன் இணைகிறது.
2. IF2-தூது RNA 5' துருவப்பகுதி + ஆற்றலேற்றம் பெற்ற கடத்து RNA +30s ரிபோசோம் அலகின் பிணைப்பை மேம்படுத்துகிறது.
படிப்புச் சட்டகம் -அதற்குரிய இடத்தில் பொருந்துகிறது.
II) தொடக்க கூட்டமைப்பு உருவான பின்
IF3+50s ரிபோசோம் +GTP ➝ முழுமையான 70s ரிபோசோம் GDP+
உருவாகிறது.
III) GDP யும் IF2 வும் -விடுவிக்கப்படுகிறது
துவக்க கடத்து RNA, ரிபோசோமின் 'P' இடத்திலும் 'A' இடம் -அடுத்த ஆற்றலேற்றம் பெற்ற கடத்து RNA க்காக பொருந்த வெற்றிடமாக வைக்கப்பட்டுள்ளது.
44.
வரையறை:
சைட்டோபிளாசத்தில் சிதறிக் காணப்படும் அமினோ அமிலங்களை எடுத்து வரும் கடத்தியாகவும் தூது குறியீடுகளை படிப்பதுமாக இரு பணிகளைச் செய்வதால் இது இணைப்பு மூலக்கூறு என்ற சொல்லை ஃபிரான்சிஸ் கிரிக் உருவாக்கினார்.
கடத்தி RNA அமைப்பு
ராபர்ட் ஹோலே கிராம்பு இலை மாதிரி
1. இரண்டாம் நிலை கட்டமைப்பு இவ்வாறு காணப்படுகிறது.
2. இறுக்கமான மூலக்கூறு தலைகீழ் L-வடிவத்தை ஒத்துள்ளது.
கிராம்பு இலை மாதிரி அமைப்பு

3. அமினோ அமில ஏற்பு முனையில் ➝ அமினோ அமிலம் உள்ளது.
4. எதிர்முனையில் ➝ எதிர் குறியீட்டிற்கான மூன்று கரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் தூது RNA இன் காரங்களின் நிரப்பு கூறுகளாயுள்ளன. சரியான அமினோ அமிலம் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது (அமினோ அசைலேஷன்)
5. T-வளையம் - ரிபோசோம் இணையும் பகுதி
6. D-வளையம் - அமினோ அசைல் சிந்தடேஸ் இணையும் வளையம்.
7. மாதிரி வளையம் - இதில் நியுக்ளியோடைடுகளின் கூறுகளும் நீளமும் வேறுபட்டுள்ளது.
45.
1. ஒளிச்சேர்க்கையின் போது CO2 உறிஞ்சப்படுகிறது.
2. CO2 ஒரு முக்கியமான மாசு ஆகும்.
3. எனவே மரங்கள் காற்று மாசினை குறைக்கும்.
4. காடுகள் மண் அரிப்பை தடுத்து நிலம் மாசடைதலை தடுக்கிறது.
46.
1. காடுகள் அழிக்கப்படுதல் என்பது பிற பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் நிலங்களை உருவாக்குவதற்காக காடுகளை அழிப்பதாகும்.
2. மரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது O2 வெளியிடுகின்றன. CO2 எடுத்துக் கொள்ளப்படுகிறது.
3. அதனால் காடுகளை அழிப்பது O2 குறைபட்டு வழிவகை செய்து CO2 அளவு அதிகரிக்கச் செய்து உலக வெப்பமடைதலில் பெரும் பங்கு வகிக்கிறது.
47.
புறஅமைப்பில் தக அமைவுகள்:
(i) மித வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் உவர் சதுப்பு நிலத்தாவரங்கள் சிறுசெடிகளாகவும், வெப்ப மண்டலப்பகுதிகளில் காணப்படும் உவர் சதுப்பு நிலத்தாவரங்கள் பெரும்பாலும் புதர் செடிகளாகவும் காணப்படுகின்றன.
(ii) இயல்பான வேர்களுடன் கூடுதலாக முட்டு வேர்கள் (still roots) இவற்றில் தோன்றுகின்றன.
(iii) சிறப்பு வகை வேர்கள் நிமட்டோஃபோர்கள் (pneumatophores) எனப்படுகின்றன. அதில் அமைந்துள்ள நிமத்தோடுகள் (pneumathodes) கொண்டு தாவரம் அதற்குத் தேவையான அளவு காற்றோட்டத்தைப் பெறுகிறது. இவை சுவாசிக்கும் வேர்கள் (breathing roots) எனவும் அழைக்கப்படுகின்றன. (எ.கா) அவிசென்னியா
(iv) தாவர உடலத்தின் தரைமேல் பகுதிகள் தடித்த கியூட்டிக்கிளை பெற்றுள்ளது.
(v) இலைகள் தடித்தவை, முழுமையானவை, சதைப்பற்றுள்ளவை, பளபளப்பானவை. சில சிற்றினங்களில் இலைகள் காணப்படுவதில்லை. (Aphyllous)
(vi) கனிக்குள் விதை முளைத்தல் காணப்படுகிறது.
48.
| காற்று மூலம் விதை பரவுதல் | விலங்கு மூலம் விதை பரவுதல் | |
|---|---|---|
| 1 | தனிவிதைகள் (அ) முழுக்கனிகளில் தோன்றும் மாற்றுருக்கள் காற்றின் மூலம் பரவ உதவி செய்கின்றன. | பறவைகள் மற்றும் பாலூட்டிகள் மனிதன் மூலம் விதைகள் கனிகள் பரவுதலுக்கு தகவமைப்புகளை பெற்றுள்ளன. |
| 2 | உயரமான மரங்களில் கனிகள் மற்றும் விதைகள் காற்றின் மூலம் பரவுகிறது. | கனிகள் மற்றும் விதைகளில் காணப்படும் கொக்கிகள் (சாந்தியம்) நுண்ணிழை செதில்கள் (அன்ட் ரொபோகன்) முள் போன்ற அமைப்புகள் (அரிஸ்டிபா) விலங்குகளின் உடல்கள் மனிதனின் உடைகளின் மீது ஒட்டி பரப்புகின்றன. |
| 3 | மிகச்சிறிய விதைகள் மேலும் சிறிய தட்டையான வெளிஉறை காற்று மூலம் விதை பரவ காரணம் (எ.கா) ஆர்கிட்கள். தட்டையான இறக்கைகள் கொண்ட விதை மற்றும் முழுக்கனிகள் காணப்படுகிறது. (எ.கா) மேப்பிள், கைரோகார்ப்பஸ் | சில கனிகளில் ஒட்டிக்கொள்ளும் சுரப்புத்துவிகள் உதவியால் மேயும் விலங்குகளின் ரோமங்கள் மீது ஒட்டி எளிதில் பரவுகின்றன. (எ.கா) போயர் ஹாவியா மற்றும் கிளியோம் |
| 4 | இறகு வடிவ இணை அமைப்புகள் கனிகள் மற்றும் விதைகளில் காணப்படுகின்றன. இவை விதைகள் மிதக்கும் திறனை அதிகரித்து உயர்ந்த இடங்களை அடைய உதவுகின்றன. (எ.கா) வெர்னோனியா, அஸ்கிலிபியாஸ் | கனிகளின் மீது காணப்படும் பிசிபிசுப்பான அடுக்கு பறவைகள் கனிகளை உண்ணும் போது அவற்றின் அலகுகளில் விதையுடன் ஒட்டிக் கொள்கிறது. பின்னர் பறவைகள் அலகை மரக்கிளைகளில் தேய்க்கும் போது விதை பரவுகிறது. (எ.கா) கார்டியா, அலாஞ்சியம் |
| 5 | வலுவான காற்று மூலம் கனிகள் அதிர்வடையச் செய்யும் போது அவை பிளக்கப்பட்டு அதன் மூலம் விதைகள் வெளியேறுகின்றன. | பகட்டான நிறமுடைய சதைப்பற்றுள்ள கனிகள் மனிதர்களால் உண்ணப்பட்டு பின்னர் அவற்றின் விதைகள் வெகு தொலைவில் வீசப்பட்டு பரவுகின்றன. (எ.கா) பப்பாளி |
49.
செயற்கை விதைகள்: தாவரத்தின் எந்த ஒரு செல் பகுதியிலிருந்து பெறப்பட்ட தனிச் செல்களை ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பு கருவுருக்களைக் கொண்டு சில உயிர்தொழில்நுட்ப முறையில் செய்யப்பட்ட இயற்கை விதைகளைப் போன்ற செயற்கை விதைகள்.
50.
வரையறை:
பயிர் பெருக்க நோக்கத்திற்காக, உயிருள்ள நிலையில் உள்ள உயர்ந்த மேம்பட்ட தாவரங்களிலிருந்து பெறப்பட்ட தாவரப் பொருட்களான மகரந்தம், விதைகள் (அ) திசுக்கள் போன்றவற்றை மகரந்த விதை வங்கிகளில் அவற்றின் உயிர்ப்புத் தன்மை கெடாமல் பாதுகாத்தல் மரபணுக்கூறு பாதுகாப்பு ஆகும்.
எ.கா: விதை வங்கி, DNA வங்கி
பயன்கள்:
(i) உயிர்ப்புத் தன்மை மற்றும் வளத்தன்மை பாதுகாக்கப்பட்டு பிறகு கலப்பினமாக்கம் மற்றும் பயிர் பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
(ii) DNA வங்கி, விதை வங்கி மூலம் சிறந்த ரக தாவரங்களின் உயர்ந்த மேம்பட்ட பண்புகள் பாதுகாக்கப்படுகின்றன.
(iii) உயிர் பன்ம பேணலுக்கும், உணவுப் பாதுகாப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
51.
52.
(i) உயிரிய பல்வகைத் தன்மை என்பது இந்த பூமியில் வாழும் பலவகையான உயிரினங்களைக் குறிக்கிறது.
(ii) மழைக் காடுகள், பவளப்பாறைகள், புல்வெளிகள், பாலைவனங்கள், பனிச்சமவெளிகள் மற்றும் துருவ பகுதியின் பனிப்பாறைகள் போன்ற வெவ்வேறு சூழ்நிலை மண்டலங்களில் உயிர்கள் வாழ்கின்றன.
(iii) நம் கோளத்தின் நல்வாழ்விற்கும், உயிரிகள் நிலைத்து இருப்பதற்கும் இவ்வாறான உயிரியப் பல்வகைத் தன்மை அவசியமானதாகும்.
(iv) மேலும் உயிரிய பல்வகைத் தன்மை சுற்றுச்சூழல் செயல்முறைகளை பராமரிக்கவும், மண் உற்பத்தி ஊட்டச்சத்துகளின் மறுசுழற்சி, தட்பவெப்பநிலை பாதிப்பு, கழிவுகளை சிதைத்தல் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
(v) சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தின் தன்மையை குறிக்கும் குறியீடாகவும் விளங்குகிறது.
(vi) மனித இனம் உயிர் வாழ்தல் என்பது தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட பூமிக் கோளத்தின் அனைத்து உயிரிகளின் நலமான உயிர் வாழ்தலைச் சார்ந்துள்ளது.
53.
(i) இனக்கூட்டத்தில் உள்ள உயிரினங்களின் வெவ்வேறு குழுவின் வயது விகிதம் (இனப்பெருக்கத்திற்கு முந்தைய வயது, இனப்பெருக்க வயது மற்றும் இனப்பெருக்கத்திற்கு பிந்தைய வயது) அதன் வயதுப் பரவலைக் குறிக்கிறது.
(ii) இது ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு இனக்கூட்டத்தின் இனப்பெருக்க நிலையை நிர்ணயிக்கிறது. இது எதிர்கால இனக்கூட்ட அளவைத் தீர்மானிக்கும் காரணியும் ஆகும்.
(iii) பொதுவாக வேகமாக வளரும் இனக்கூட்டத்தில் இளம் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.
(iv) ஒரு நிலைத்த இனக்கூட்டத்தில் வெவ்வேறு வயதுடைய குழுக்களின் பரவல் சீராக இருக்கும்.
(v) இனக்கூட்டத்தின் அளவு குறையும் நிலையில் முதிர்ந்த உயிரினங்கள் அதிகமாகக் காணப்படும்.
54.
ஒவ்வொரு உயிரினமும் அதன் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப வினைபுரிகின்றன. உயிரினங்கள் பல்வேறு வகைகளில் உயிரற்ற காரணிகளுக்கேற்ப துலங்கல்களை வெளிப்படுத்துகின்றன. சில உயிரினங்கள் மாறாத உடல் செயலியில் மற்றும் புறத்தோற்ற நிலைகளைப் பராமரிக்கின்றன. சில உயிரினங்கள் சுற்றுச்சூழல் மாற்றங்களைத் தாங்கிக் கொள்வதற்கான செயல்களைச் செய்கின்றன. இதுவும் ஒரு துலங்கல் வினையாகக் கருதப்படும்.
விலங்குகளில் உள்ள துலங்கல்களின் வகைகள்:
i) ஒழுங்கமைவு:
சில விலங்கினங்கள் உடற்செயலியல் செயல்கள் மூலம் சீரான தன்நிலை காத்தலைப் பராமரிக்கின்றன அச்செயல்பாடுகள் வழியாக உடலின் வெப்பநிலை, அயனிகள், ஊடுகலப்பு சமன் ஆகியவை உறுதி செய்யப்படுகின்றன.
எ.கா: பறவைகள், பாலூட்டிகள் மற்றும் சில எளிய முதுகுநாணிகள், மற்றும் முதுகு நாணற்ற சிற்றினங்கள்.
ii) ஒத்தமைவு:
பெரும்பாலான விலங்குகளால் உள்சூழ்நிலைகளை நிலையாகப் பராமரிக்க முடிவதில்லை. அவற்றின் உடல் வெப்பநிலை சுற்றுசூழல் வெப்பநிலைக்கேற்ப மாறுகிறது. மீன்கள் போன்ற நீர்வாழ் உயிரிகளில், உடல் திரவத்தின் ஊடுகலப்புச் செறிவு சுற்றுச்சூழலில் உள்ள நீரின் ஊடுகலப்புச் செறிவிற்கேற்ப மாற்றமடைகிறது.
இத்தகைய விலங்குகள் ஒத்தமைவான்கள் எனப்படும். அதீத சூழல்களில் விலங்கினங்கள் வலசை போவதன் மூலம் தங்களின் வாழிடங்களை இடம் மாற்றிக் கொள்கின்றன.
iii) வலசை போதல்:
ஒரு வாழிடத்தில் வாழும் விலங்குகள் அங்கு வாழும் அதிக சூழல் அழுத்தத்திலிருந்து தப்பிக்க, இடம்பெயர்ந்து அதன் வாழிடத்தில் சூழல் அழுத்தம் நீங்கும்போது அவை மீண்டும் தனது பழைய இடத்திற்கு வருகின்றன.
சைபீரியாவில் வாழும் பறவைகள் கடுங்குளிர் பருவத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வலசை போதல் முறையில் இடம்பெயர்ந்து தமிழ்நாட்டின் வேடந்தாங்கல் பகுதிக்கு வருகின்றன.
iv) செயலற்ற நிலை:
சில சமயம், விலங்கினங்கள் இடம்பெயர்ந்து செல்ல இயலாத சூழலில் சூழல் அழுத்தத்திலிருந்து விடுபட செயலற்ற நிலைத்தன்மையை மேற்கொள்கின்றன. சில கரடிகள் குளிர்காலங்களில் குளிர் உறக்கத்தையும், சில நத்தைகள் மற்றும் மீன்கள் போன்றவை வெப்பம் மற்றும் வறட்சி போன்ற வெப்பம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து விடுபட கோடைகால உறக்கத்தையும். மேற்கொள்கின்றன. சில எளிய வகை உயிரினங்கள் அதன் வாழ்க்கை சுழற்சியின் சில நிலைகளை இடைநிறுத்தம் செய்து கொள்கின்றன. இது "வளர்ச்சித் தடை நிலை" எனப்படும்.
55.
56.
சில தாவர வேதிப்பொருள்கள், ஒருவருடைய புலனுணர்வுக் காட்சிகளில் (Perception) மருட்சியை ஏற்படுத்தும். இவை புலனுணர்வு மாற்ற மருந்துகள்.
1. அபின் / கசகசா (Opium Poppy)
தாவரவியல் பெயர் : பப்பாவர் சாம்னிபெரம்
குடும்பம் : பப்பாவரேசி
தோற்றம், விளையுமிடம்
(i) தென்கிழக்கு ஐரோப்பா, மேற்கத்திய ஆசியா பிறப்பிடம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், வளர்க்க உரிமம் பெற்றவை.
(ii) தூக்கத்தை தூண்டும், மார்பின் ஒரு வலி நிவாரணி, அறுவைச் சிகிச்சையில் பயன்படும், அடிமைப்படுத்தும் மருந்து.
2. கஞ்சா செடி (Cannabis)
தாவரவியல் பெயர் : கன்னாபிஸ் சட்டைவா
குடும்பம் : கன்னா பியேசி
தோற்றம், விளையுமிடம்
(i) சீனாதான் பிறப்பிடம், குஜராத், இமாச்சலப் பிரதேசம், உத்தர்காண்ட், உத்திரபிரதேசம் மத்தியப் பிரதேசம் வளர்க்க சட்டப்பூர்வ அனுமதி பெற்றவை
(ii) மூல மருந்து - டிரான்ஸ் - டெட்ராஹைட்ரோ கெனாபினால் (THC)
(iii) வலி நிவாரணி
(iv) இரத்த அழுத்தம் குறைக்கும்
(v) கிளாக்கோமா எனும் கண் அழுத்தத்துக்கு சிகிச்சை
(vi) புற்று நோய்களுக்கு கீமோ தெரபி, கதிவீச்சுக் சிகிச்சைக்கு குமட்டலைக் குறைக்கும்
(vii) சுவாசக் குழாய் விரிவடையச் செய்யும்
(viii) நீண்ட காலப் பயன்பாடு போதை தரும், தனிநபர், சமுதாய பயன்பாடு ஆரோக்கியக் கேடு. எனவே பல நாடுகள் பயிரிட தடை விதித்துள்ளன.
57.
(i) ஆய்வுக் குழுவானது 'சொமட்டோஸ்டேட்டின்' மற்றும் 'சொமட்டோடிரோபின்' என்னும் இருவகை மனித வளர்ச்சி ஹார்மோன்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டது பிட்யூட்டரியிலிருந்து சுரக்கப்படும் இந்த பெப்டைடு ஹார்மோன்கள், அமினோ அமில உள்ளெடுப்பு மற்றும் புரத உற்பத்தியை ஊக்குவித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு மனித வளர்ச்சியைத் தூண்டவும் நெறிப்படுத்தவும் செய்கின்றன.
(ii) வளர்ச்சி ஹார்மோன் பற்றாக்குறையால் 'குள்ளத்தன்மை' ஏற்படுகிறது. மனித பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மனித வளர்ச்சி ஹார்மோனை ஊசி வழியாகச் செலுத்துவதன் மூலம் இக்குள்ளத்தன்மையைச் சரி செய்யலாம்.
(iii) பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து hGH உற்பத்திக்கு காரணமான மரபணு பிரித்தெடுக்கப்படுகிறது. பின்பு இந்த மரபணுவுடன் ஒரு கடத்தி பிளாஸ்மிட்டை இணைத்து எ.கோலை, பாக்டீரியத்தினுள் செலுத்தப்படுகிறது.
(iv) இவ்விதம் மறுசேர்க்கையுற்ற எ.கோலை மனித வளர்ச்சி ஹார்மோனை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இந்த எ.கோலை பாக்டீரியங்கள் வளர்ப்பு ஊடகங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு நொதித்தல் தொழில்நுட்பத்தின் மூலம் பெருமளவில் மனித வளர்ச்சி ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது.
(v) மறு சேர்க்கை வகையான 'சொமட்டோடிரோபின்' என்று அழைக்கப்படும் மனித வளர்ச்சி ஹார்மோனானது குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் மருந்தாக விளங்குகிறது.
58.
நன்மைகள்:
(i) மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு நன்மை பயக்கின்றது. மருத்துவத் துறையில் புரதங்கள் மற்றும் மருந்துகள் உற்பத்திக்கு உதவுகின்றது.
(ii) தண்டு செல் ஆராய்ச்சிக்கு வழிகோலுகிறது.
பாதகங்கள்:
(i) விலங்கு மற்றும் மனித செயல் முனைவோர் நகலாக்கம் என்பது உயிரிய பல்வகைமைக்கான சவாலானது எனக் கருதுகின்றனர். இச்செயல் பரிணாமத்தை மாற்றி இனத்தொகை மற்றும் சூழ்நிலை மண்டலத்தில் தாக்கத்தை உண்டாக்கும் என்று கருதுகின்றனர்.
(ii) நகலாக்க செயல்முறை கடினமானது மற்றும் விலையுயர்ந்தது.
(iii) இச்செயலால் விலங்குகள் பாதிப்படையும்
(iv) வாடகைத்தாய் உயிரிகள், எதிர்மறையாகி கேடுகளுக்கு ஆட்படுவதுடன் நகலாக்க விலங்குகள் நோய் பாதிப்புக்கு உட்பட்டு உயர் இறப்பு வீதம் ஏற்படுகின்றது.
(v) நகலாக்க விலங்குகளின் இறைச்சியை உண்பதால் உடல் நலனில் சமரசம் செய்ய வேண்டியுள்ளது.
(vi) இயல்பான விலங்குகளை விட நகலாக்க விலங்குகள் விரைவாக மூப்படைவதால் பெற்றோர் உயிரியை விட குறைந்த நலமுடையனவாக உள்ளன.
(vii) 90% மேற்பட்ட நகலாக்க விலங்குகள் சந்ததியை உருவாக்க இயலாத மலட்டுயிரிகளாகின்றன.
59.
சிற்றினமாக்கம்
மரபு ரீதியாக தனித்துவம் வாய்ந்த, இனப்பெருக்கத் தன்மை உடைய இயற்கையான இனக்கூட்டத்திற்கு சிற்றினம் என்று பெயர். சிற்றினமாக்கம் என்பது ஒரு சிற்றினம் பரிணாம மாற்றம் பெற்று ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வேறுபட்ட சிற்றினங்களாக மாறுவது ஆகும்.
வகைகள்
ஓரிடச் சிற்றினமாக்கம் அல்லது இனப்பெருக்கம் சார்ந்த சிற்றினமாக்கம்
ஒரிடச் சிற்றினமாக்கம் முறையில் ஒற்றை மூதாதை இடமிருந்து இரண்டு புதிய சிற்றினங்கள் பரிணாமம் பெற்றுத் தோன்றுகின்றன. ஒரே புவிப் பகுதியில் அவை இரண்டும் வாழ்கின்றன.
வேற்றிடச் சிற்றினமாக்கம் அல்லது புவி சார்ந்த சிற்றினமாக்கம்
வேற்றிடச் சிற்றினமாக்கல் முறையில் மரபணு ஓட்டம் ஆனது, ஒரு உயிரியல் இனக் கூட்டத்தினைச் சேர்ந்த ஒத்த சிற்றினங்கள் தனிமைப்படுத்தப்படும் போது தடுக்கப்படுகிறது. ஒரே சிற்றினத்தினை சேர்ந்த இனக்கூட்டம் ஆனது புவியியல் தடையின் காணமாக பிரிந்து இரண்டு சிற்றினங்களாக மாறுகின்றன.
60.
புதிய பயிர்பெருக்க தொழில் நுட்ப முறைகள் தேர்வு செய்தல், அறிமுகப்படுத்துதல், கலப்புறுத்தம், பன்மயம், சடுதிமாற்றம், திசு உற்பத்தி மற்றும் உயிரியல் தொழில்நுட்ப முறைகள்.
1. மரபணு தொகையத்தை வெட்டுதல் மற்றும் மாற்றியமைத்தலை CRISPR / Cas போன்ற முறைகள் செய்கின்றன.
2. மரபணு தொகைய திருத்தம் – ஆலிகோ நியூக்ளியோடைடு இயக்கத் திடீர் மாற்றக் காரணி (ODM) என்ற நுட்பத்தின் மூலம் சில இணை காரங்களில் மாற்றங்களைச் செய்தல்.
3. ஒரே சிற்றினம் அல்லது நெருங்கிய தொடர்புடைய சிற்றினத்திற்குள் மரபணுக்கள் மாற்றப்படுவது. (cisgenesis)
4. DNA வை மாற்றம் செய்யாமல் அதற்குள் இருக்கும் மரபணுவின் செயல்பாடுகளை ஒருங்கமைக்கும் முறை (epigenetic methods)
61.
(i) பெற்றோரை விடக் கலப்புயிரி முதல் மகவுசந்ததியில் செயல்திறன் மேம்பட்டிருப்பதால் ஈர்ப்பு கலப்புயிரி வீரியம் என்றழைக்கப்படுகிறது.
(ii) G.H ஷல் என்பவர் தான் முதன்முதலில் ஹெட்டிரோசிஸ் என்ற சொல்லை பயன்படுத்தினார்.
(iii) கலப்பின வீரியத்தின் வகைகள் மெய்கலப்பின வீரியம், சடுதிமாற்ற வீரியம், சமநிலை மெய்கலப்பின வீரியம் மற்றும் பொய்கலப்பின வீரியம்.
1) மெய்கலப்பினவீரியம் (Euheterosis): மெய்கலப்பினவீரியம் என்பது மரபு வழியாகப் பெறப்படும் கலப்பு வீரியமாகும். மேலும் இது கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.
அ. சடுதிமாற்ற மெய்கலப்பின வீரியம் (Mutational Euheterosis) - இது மெய்கலப்பினவீரிய வகைகளில் மிக எளிமையானது. அயல்-மகரந்தச்சேர்க்கை நடைபெறக்கூடிய பயிர்களில் மேம்பட்ட ஓங்கிய அல்லீல்கள் மூலம் தேவையற்ற, கேடுவிளைவிக்கக்கூடிய, கொல்லும் ஒடுங்குப்பண்புடைய அல்லது சடுதிமாற்றம் பெற்ற மரபணுக்களை நீக்குவதன் மூலம் ஏற்படுகிறது.
ஆ. சமநிலை மெய்கலப்பினவீரியம் (Balanced Euheterosis) : இவை வேளாண்மைக்கு உதவும் வகையில் பல சூழ்நிலைக் காரணிகளுக்கேற்பத் தகவமைத்துக் கொள்ளும் சமநிலை பெற்ற மரபணு இணைப்பு, சமநிலை மெய்கலப்பினவீரியமாகும்.
ii) பொய்கலப்பினவீரியம் (Pseudoheterosis): சந்ததி தாவரமானது உடல் வளர்ச்சியில் பெற்றோர் தாவரங்களை விட மேம்பட்டும் ஆனால் விளைச்சலிலும், தகவமைப்பிலும், மலட்டுத்தன்மையுடனோ அல்லது குறைந்தளவு வளமானதாகவோ காணப்படுகிறது. இது உடலவளவீரியம் என்றும் அழைக்கப்படும்.
62.
| முதல்நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு | இரண்டாம் நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு | |
| 1. | வடிகட்டுதல் மற்றும் படிய வைத்தல் முறைகள் மூலம் கழிவு நீரிலிருந்து திட, கரிம துகள்கள் மற்றும் கனிம பொருட்களை பிரித்தெடுப்பது முதல் நிலை சுத்திகரிப்பில் அடங்கும். | முதல்நிலையில் உருவான கலங்கள் நீரில் சுவாச நுண்ணுயிரிகள் வளர்ச்சியினால் கரிம பொருட்கள் சிதைக்கப்படுகின்றன. |
| 2. | மிதக்கும் குப்பைகள் தொடர் வடிகட்டல் முறையிலும் மண் மற்றும் சிறு கற்கள் படிய வைத்தல் முறை மூலம் நீக்கப்படுகிறது. | முதல்நிலையில் உருவான கலங்கள் நீரில் உள்ள கரிமப் பொருட்கள் சுவாச நுண்ணுயிரிகள் மற்றும் காற்றற்ற சுவாசம் மேற்கொள்ளும் பாக்டீரியாக்கள் மூலம் அழிக்கப்படுகின்றன. |
| 3. | உயிரிய ஆக்ஸிஜன் தேவை (BOD) அதிகமாகவே காணப்படும். | இதில் பெருமளவில் உயிரிய ஆக்ஸிஜன் தேவையை (BOD) குறைக்கின்றது. |
| 4. | முதல்நிலை படியும் தொட்டி, வடிகட்டல் தொட்டி பயன்படுத்தப்படுகிறது. | இங்கு காற்றூட்டல் தொட்டி மற்றும் காற்றில்லா சுவாச கசடு சிதைப்பான் போன்ற தொட்டிகள் பயன்படுகின்றன. |
| 5. | இதில் உயிரிய வாயு உருவாவதில்லை. | கசடிலுள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் செரிமானம் அடையும் போது உயிரிய வாயுவை (மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு) உற்பத்தி செய்கின்றன. இது ஆற்றல் மூலாதாரமாக பயன்படுகிறது. |
| 6. | இது குறுகிய காலத்தில் நடைபெறுகிறது. | இது நீண்ட காலம் நடைபெறுகிறது. |
63.
அ) புரூயர்ஸ் ஈஸ்ட்:
சாக்ரோமைசஸ் செரிவிசியே பொதுவாக புரூயரின் ஈஸ்ட் என அழைக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி மால்ட் அல்லது மாவு நிறைந்த தானியங்கள் மற்றும் பழரசம் போன்றவற்றை நொதிக்கச் செய்து பல்வேறு மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன.
பீர்: சாக்ரோமைசஸ் கார்ல்பெர்ஜென்சிஸ் (அ) சாக்ரோமைசஸ் செரிவிசியே ஆகியவை முளைக்கட்டிய பார்லி மால்ட் தானியங்களை பீராக மாற்றுகிறது.
ரம்: சாக்ரோமைசெஸ் செரிவிசியே மூலம் நொதிக்க வைக்கப்பட்ட சர்க்கரை (அ) கரும்பு சாற்றிலிருந்து நேரடியாக ரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
விஸ்கி: ஒரு வகையான காய்ச்சி வடிகட்டிய மதுபானமாகும். இது சாக்ரோமைசஸ் செரிவிசியே மூலம் நொதிக்க வைக்கப்பட்ட தானிய கூழ் மூலம் உருவாக்கப்படுகிறது.
ஆ) இடியோனெல்லா சாக்கையன்சிஸ்:
1. தற்பொழுது PET நெகிழிகளை மறுசுழற்சி செய்யும் பணியில் இது ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
2. இந்த பாக்டீரியா PETase மற்றும் MHETase நொதிகளின் துணையுடன் நெகிழிகளை டெரிப்த்தாலிக் அமிலம் மற்றும் எத்திலீன் கிளைக்காலாக சிதைக்கின்றது.
இ) நுண்ணுயிரிய எரிபொருள் கலன்கள்:
1. கரிம மூலக்கூறுகளை ஆக்சிஜனேற்றம் மற்றும் ஒடுக்க வினைக்கு ஆட்படுத்த பாக்டீரியாக்களை அனுமதிப்பதன் மூலம் நுண்ணுயிரிய எரிபொருள் கலன் இயங்குகிறது.
2. பாக்டீரியாக்களை பயன்படுத்தி அதனிடையே இயற்கையாக நடைபெறும் இடைவினைகளை, ஒப்புப் போலியாக்கி மின்சாரம் பெறும் உயிரிய மின் வேதியியல் முறையாகும்.
3. பாக்டீரியாக்களின் சுவாசம் ஒரு பெரிய ஆக்சிஜனேற்றம் ஒடுக்க வினையாகும்.
4. நுண்ணுயிரிய எரிபொருள் கலனில் ஒரு நேர்மின் வாய் மற்றும் ஒரு எதிர்மின்வாய் ஆகியன இருக்கும்
5. இவை எலக்ட்ரான்கள் சுழலும் போது புரோட்டான் பரிமாற்ற சவ்வின் மூலம் பிரிக்கப்படுகிறது.
6. நேர்மின்வாய் முனையில் இருக்கும் நுண்ணுயிரிகள் கரிம எரிபொருள்களுடன் ஆக்சிஜனேற்றம் செய்யும் போது புரோட்டான்கள் வெளியேறி எதிர்மின்வாயை அடைகின்றன.
7. அதே நேரம் நேர்மின்வாய் வழியாக எலக்ட்ரான்கள் புற சுற்றை அடைந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.
64.
I. கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட கார்பன்:
ஹெர்ஷே மற்றும் சேஸ் - கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட கார்பனை பயன்படுத்தியிருந்தால், - அது பாக்டீரியாவின் எல்லா செல்களிலும் காணப்பட்டிருக்கும்.(கார்பன் எல்லா கரிம மூலக்கூறுகளிலும் உள்ளது)
II. கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட நைட்ரஜன்:
1. அவர்கள் கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட நைட்ரஜனை பயன்படுத்தியிருந்தால், நியூக்ளியோலஸ், செல்சவ்வு மற்றும் முழுவதும், கூடவே பாக்டீரியோபேஜின் பிரிதலுற்ற பொருட்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
2. நைட்ரஜன் - புரதத்தில், DNA விலும் அமைப்புக் கூறாக உள்ளது.
3. எனவே கதிரியக்க ஐசோடோப்புகள் பாஸ்பரஸ் நியூக்ளிக் அமிலங்களில், கதிரியக்க கந்தகம் புரதங்களில் மட்டும் காணப்பட்டது.
4. இவர்கள் மரபுப்பொருள் DNA - RNA யா (அ) புரதமா உறுதிசெய்யவே இவ்வாறு பயன்படுத்தினர்.
65.
I - படியெடுத்தல்:
டி.என்.ஏவில் காணப்படும் செய்திகள் நகலெடுக்கப்படும் செயல்முறை:
DNA வின் ஒரு இழையில் காணப்படும் புரதத்திற்கான தகவல்களை குறியீடாக செல்லுக்கு கொண்டுசெல்வது தூது RNA (அ) mRNA
II - மொழிபெயர்த்தல்:
1. தூதுவிலுள்ள தகவல் குறியீடுகள் செல்லின் உட்கருவிலிருந்து சைட்டோபிளாசத்தை அடைகிறது.
2. இங்கு ரிபோசோம் RNA, கடத்தி RNA மற்றும் தூது RNA இவற்றுடன் பல்வேறு நொதிகளும் ஒரு அமைப்பாக சேர்ந்து மொழி பெயர்த்தல் படி நிலை நடைபெறும்.
3. இவ்வாறு ஒரு படிநிலைகளும் செல்லில் உட்கரு மற்றும் சைட்டோபிளாசம் நடைபெறுகிறது.
4. எனவே புரதச் சேர்க்கை இரண்டு படிநிலைகளில் நடைபெறுவதன் அனுகூலமாகும்.
66.
1. சுய தடை காப்பு குறைபாடு என்பது இலக்கு தவறிய தடைகாப்பு துலங்களாகும்.
2. இது சுய மற்றும் அயல் மூலக்கூறுகளை பிரித்தறிய இயலாத தன்மையினால் ஏற்படுவதாகும்.
3. நமது உடலில் சுய எதிர்பொருட்களையும் மற்றும் செல்நச்சாக்க T செல்களையும் உற்பத்தி செய்து நமது திசுக்களை அழிக்கின்றன.
4. இதுவே சுய தடைக் காப்பு நோய் எனப்படும்.
5. இது இரு வகைப்படும்.
i. உறுப்பு சார்ந்த சுயத்தடைக்காப்பு நோய் - எ.கா. அடிசன் நோய் கிரேவின் நோய்
ii. உறுப்பு சாரா சுயத்தடைக்காப்பு நோய் - எ.கா. ரூமாட்டிக் மூட்டுவலி தண்டுவட மரப்பு நோய்.
67.
68.
அ. உச்செரேரியா பான்கிராஃப்டி என்ற ஒட்டுண்ணிதான் யானைக்கால் நோயை ஏற்படுத்துகிறது.
ஆ. புழுக்களின் திரட்சியால் நிணநீர் மண்டலத்தில் ஏற்படும் அடைப்பு நிணநீர் முடிச்சுகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
இ. இந்த நோய் பெண் கியுலக்ஸ் கொசுவின் மூலம் பரவுகிறது.
69.
1. நோயாளியின் இரத்த மாதிரியை எடுத்து சோதித்தால், அதில் மெரோசோயீட்டுகள் காணப்படும் பட்சத்தில் அது மலேரியா என உறுதிப்படுத்தப்படுகிறது.
2. மலேரியா நோய்க்கான அறிகுறிகள் - மலேரியா வலிப்பு, அதிகப்படியான காய்ச்சல்.
3. சின்கோனா மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட குயினைன் மருந்து மலேரியாவை கட்டுப்படுத்த உதவுகிறது.
4. மற்றும் கொசுக்களின் இளம்வுயிரிகளை உண்ணும் கம்பூசியா போன்ற மீன்களை வளர்க்கலாம். கதவு மற்றும் ஜன்னல்களில் கொசு வலை அடிக்கலாம்.
70.
(i) இது கருவின் குறைபாடுகளை, கர்ப்பகாலத் தொடக்கத்திலேயே கண்டறியும் தொழில்நுட்பம்.
(ii) கருவின் குரோமோசோம் பிறழ்ச்சிகளைக் கண்டறியலாம்.
(iii) வளர்கருவின் பால் தன்மை அறியலாம்.
(iv) பால் தெரிந்தால் பெண்கருக்கொலை செய்ய வாய்ப்புள்ளது.
(v) எனவே இது சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
71.
1. ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் காற்றின் தரத்தை உயர்த்துதல்.
2. கார்பன் நிலைநிறுத்தலை அதிகரித்தல் மற்றும் வளிமண்டல கார்பன்டை ஆக்ஸைடை குறைத்தல்.
3. சிறிய வளவப் பொருட்கள் உற்பத்தி மற்றும் மருத்துவத் தாவரங்கள் அதிகரித்தல்.
4.உயிர்ப்பன்மம், வன உயிரிகள் மற்றும் மரபணு மூலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
5. வேளாண் காடுவளர்ப்பில் மரங்கள், பயிர்கள், கால்நடைகள் ஒருங்கிணைக்கப்படுவதால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதோடு இயற்கை வளம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் உயிர்ப்பன்மம் பாதுகாக்கப்படுகிறது.
72.

73.
1. தாவர மிதவை உயிரிநிலை (Phytoplankton state) -நீலப்பசும்பாலிகள், பாக்டீரியங்கள், சயனோ பாக்டீரியங்கள், பசும்பாசிகள், டயட்டம் போன்ற முன்னோடி குழுமங்களைக் கொண்ட வழிமுறை வளர்ச்சியின் முதல்நிலை இதுவாகும்.
2. இந்த உயிரினங்களின் குடிபெயர்பு, வாழ்க்கை செயல்முறைகள், இறப்பின் மூலமாக குளத்தின் கரிம பொருளின் அளவு மற்றும் ஊட்டச்சத்து செறிவடைகிறது. இது வளர்ச்சியின் அடுத்த படிநிலை வளர்ச்சிக்கு உதவுகிறது.
3. நீருள் மூழ்கிய தாவர நிலை (Submerged plant stage)- மிதவை உயிரிகளின் இறப்பு மற்றும் மட்குதலின் விளைவாலும், மழைநீர் மூலம் நிலத்திலிருந்து மண் துகள்கள் அடித்து வரப்படுவதாலும், குளத்தின் அடிப்பகுதியில் ஒரு தளர்வான மண் உருவாக்க வழி வகுக்கிறது. எனவே வேரூன்றி நீருள் மூழ்கி வாழும் நிர்வாழ்த்தாவரங்கள் புதிய வாழ்தளத்தில் தோன்ற ஆரம்பிக்கிறது. எ.காட்டுகள்: கேரா, யூட்ரிகுலேரியா,
4. தாவரங்களின் இறப்பு மற்றும் சிதைவு குளத்தின் அடித்தளத்தை உயர்த்துவதால் குளம் ஆழற்றதாக மாறுகிறது. எனவே இந்த வாழிடம் நீருள் மூழ்கி மிதக்கும் நிலையிலுள்ள வேறுவகையான தாவரங்கள் குடியேறுவதற்கு ஏதுவாக அமைகிறது.
5. நீருள் மூழ்கி மிதக்கும் நிலை (Submerged free floating stage)- இந்த நிலையில் குளத்தின் ஆழம் கிட்டத்தட்ட 2-5 அடியாக இருக்கும். எனவே, வேரூன்றிய நிர்வாழ்த் தாவரங்கள் மாற்றும் பெரிய இலைகளுடன் கூடிய மிதக்கும் தாவரங்கள் குளத்தில் குடியேற ஆரம்பிக்கின்றன.
எடுத்துக்காட்டாக, வேரூன்றிய மிதக்கும் தாவரங்களான தாமரை, அல்லி மற்றும் ட்ராபா.
6. இந்த தாவரங்களின் இறப்பு மற்றும் சிதைத்தல் மூலம் குளத்தின் ஆழம் மேலும் குறைகிறது. இதன் காரணமாக மிதக்கும் தாவரங்கள் படிப்படியாக பிற இனங்களால் மாற்றி அமைக்கப்படுவதால் புதிய நிலை ஒன்று உருவாகிறது.
7. நாணற் சதுப்பு நிலை (Reed -swamp stage) - இது நீர்-நில வாழ்நிலை எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த நிலையில் வேரூன்றிய மிதக்கும் தாவரங்கள் பிற தாவரங்களால் மாற்றியமைக்கப்படுகிறது. இது நீர் சூழ்நிலையிலும், நில சூழ்நிலையிலும், நில சூழ்நிலையிலும் வெற்றிகரமாக வாழக்கூடியது. எடுத்துக்காட்டு: பைஃபா.
8. சதுப்பு புல்வெளி நிலை (Marsh meadow stage)-நீரின் அளவு குறைவதால், குளத்தின் ஆழம் குறையும்பொழுது சைப்பரேசி மற்றும் போயேசி இவற்றின் அதிகம் கிளைத்த வேர்களின் உதவியால் பாய் விரித்தது போன்ற தாவரத்தொகுப்பு ஒன்று உருவாகிறது.
9. இது அதிக அளவு நீர் உறிஞ்சுவதற்கும், நீர் இழப்பிற்கு வழிவகுக்கிறது. இந்த நிலையின் முடிவில் மண் வறண்டு சதுப்புநிலத் தாவரங்கள் படிப்படியாக மறைந்து புதர்ச்செடிகள் குடிபுக வழிவகுக்கிறது.
10. புதர்ச்செடி நிலை (shrub stage)-சதுப்பு நிலத் தாவரங்கள் தொடர்ந்து மறைவதாக, மண் வறண்டு போகிறது. எனவே இந்த பகுதிகளில் நிலவாழ்த் தாவரங்களான புதர்ச்செடிகள் (சாலிக்ஸ் மற்றும் கர்னஸ்) ஆகியவை படையெடுக்கின்றன. இந்த தாவரங்கள் அதிக அளவிலான நீரை உறிஞ்சி வறண்ட வாழிடத்தை உருவாக்குகின்றன. அத்துடன் செழுமையான நுண்ணுயிரிகளுடன் கூடிய கரிம மட்கு சேகரமடைவதால் மண்ணில் கனிமவளம் அதிகரிக்கிறது. இறுதியில் அப்பகுதி புதிய மர இனங்களின் வருகைக்கு சாதகமாகிறது.
11. காடுநிலை (Forest stage)-நீர் வழிமுறை வளர்ச்சியின் உச்சநிலை குழுமம் இதுவாகும். இந்த நிலையின்போது பல்வேறு வகையான மரங்கள் படையெடுப்பதோடு ஏதாவது ஒருவகையான தாவரத்தொகுப்பு உருவாகிறது.
74.

1. ஒரு சூழல் மண்டலத்தின் அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் காணப்படும் கரிமப்பொருட்களின் (உயிரித்திரள்) அளவை குறிக்கும் திட்ட வரைபடம் உயிரித்திரள் பிரமிட் என்று அழைக்கப்படுகிறது.
2. புல்வெளி மற்றும் வனச்சூழல் மண்டலத்தில் உயிரித்திரளின் அளவு அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் உற்பத்தியாளர்களில் தொடங்கி இறுதி உண்ணிகள் (மூன்றாம் நிலை நுகர்வோர்) வரை படிப்படியாகக் குறைகிறது.
3. எனவே இந்த இரண்டு சூழல்மண்டலங்களிலும் உயிரித்திரள் பிரமிட் நேரான பிரமிட்டாக உள்ளது.
75.
அ) அண்ட செல் விடுபடுநிலை - புரோஜெஸ்டிரான்,ஈஸ்ட்ரோஜன்
ஆ) அண்டக ஹார்மோன்கள் - FSH நுண்பை செல்களை தூண்டும் ஹார்மோன்கள்
பிட்யூட்டரி ஹார்மோன்கள் - LH -லூட்டினைசிங் ஹார்மோன்
இ) i) எண்டோ மெட்ரியம் புதுப்பிக்கப்படுதல்
ii) கருமுட்டை பதிவதற்கு ஏற்ற சூழலை கருவுறுதல் உண்டாக்கும்.
iii) கருப்பையின் உட்சுவர் ஊட்டச்சத்து நிறைந்த திரவத்தை உற்பத்தி செய்கிறது.இது 'சுரப்பு நிலையில்' நடக்கிறது.
ஈ) C -இரண்டாம் நிலை நுண்பை செல்கள்
H - கார்பஸ் லூட்டியம்
| இரண்டாம் நிலை நுண்பை செல்கள் | கார்பஸ் லூட்டியம் | |
|---|---|---|
| 1. | நுண்பை நிலையில் காணப்படும். | இவை லூட்டியல் நிலையில் உருவாகும். |
| 2. | இவற்றைச் சுற்றி கிரானுலேசா செல்களும் தீகா அடுக்கும் காணப்படும். | இந்த இடைக்கால நாளமில்லாச் சுரப்பி, புரோஜெஸ்டிரானைச் சுரக்கின்றது. |
| 3. | இவை மூன்றாம் நிலை நுண்பை செல்களாகி பின்னர் முதிர்ந்த கிராபியன் ஃபாலிகிளாகின்றன. | கருவுறுதல் நிகழாவிடில், இது கார்பஸ் அல்பிகன்ஸ் என்ற வடுத்திசுவடு உருவாக்கும். |
76.
அ) விட்டலின் சவ்வு
ஆ) உட்கரு
இ) சோனா பெலூசிடா
ஈ) கொரோனா ரேடியேட்டா
77.
(i) C.B. பிரிட்ஜஸ் என்பவர் முதன் முதலில் பழப்பூச்சிகளில் மரபணு சமநிலை மூலம் பால் நிர்ணயிக்கப்படுவதைக் கண்டறிந்தார்.
(ii) பெண் தன்மைக்கான மரபணுக்களும் உடல் குரோமோசோம்களுக்கும் இடையேயான மரபுச் சமநிலையை இப்பூச்சிகளில் பாலினத்தை நிர்ணயிக்கிறது.
(iii) ஒவ்வொரு X குரோமோசோமிலும் பெண் தன்மைக்கான மரபணுக்கள் உள்ளன. அவற்றின் மதிப்பு 1.5.
(iii) ஆண் தன்மைக்கான மரபணுக்கள் உடல் குரோமோசோம்களில் உள்ளன.அவற்றின் மதிப்பு 0.
(iv) இயல்பான ஆண் A A xy ஆகும். எனவே ஆண் பெண் நிர்ணய விகிதம் 2:3 (AA xx =2.3) என்ற விகிதத்தில் உள்ளது. இங்கே மரபணு சமநிலை பெண் உயிரிக்கு சாதகமாக அமைகிறது.
78.
ஒற்றைமயம் - இரட்டைமயம் நிலை [உ.ம்] தேனீ,எறும்பு, குளவி.
(i) இம் முறையில் சேய் உயிரிகளின் பாலினம் அவை பெறுகிற குரோமோசோம் தொகுதியின் எண்ணிக்கையை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.
(ii) கருவுற்ற முட்டைகள் பெண் உயிரிகளாக வளர்ச்சியடைகின்றன.
(iii) கருவுறாத முட்டைகள் ஆண் தேனீக்களாக கன்னி இனப்பெருக்க முறையில் வளர்ச்சியடைகின்றன.
(iv) ஆண் தேனீக்களின் குரோமோசோம்களின் எண்ணிக்கை பாதியளவே உள்ளன. (ஒற்றைமயம்)
(v) பெண் தேனீக்களில் குரோமோசோம் இரு மடங்காக உள்ளன. (இரட்டை மயம்) இதனால் இம்முறை ஒற்றைமய-இரட்டைமய பால்நிர்ணயம் என அழைக்கப்படுகிறது.
79.
மனிதனால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தானியம் ட்ரிட்டிகேல். அறிமுக ட்ரிட்டிகேல் மக்ரோனி கோதுமை மற்றும் ரை -தாவரப் பண்புகளைக் கொண்டிருக்கும் (கோதுமையின் புரதத்தன்மையும் + ரை தாவரத்தின் அதிக அமினோ அமில லைசினையும் பெற்றுள்ளது.

80.
81.
இளவுயிரி நிலை :
(i) இது நிலை உயிரியின் பிறப்பிற்கும் இனப்பெருக்க முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட வளர்ச்சிக் காலம்.
(ii) சில விலங்குகளின் இளம் உயிரிகள்
பசு - கன்று,
பூச்சி - லார்வா,
மனிதகுரங்கு - குழந்தை,
பூனை - பூனைக்குட்டி,
இனப்பெருக்க நிலை :
(i) ஒரு உயிரியானது இனப்பெருக்கம் செய்து வழித்தோன்றல்களை உருவாக்கும் செயல்களைச் செய்யும் காலம் இனப்பெருக்க நிலை ஆகும்.
(ii) ஒரு ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் தொடர்ச்சியான இனச்சேர்க்கையாளர்கள் எனப்படும்.
(iii) பால் முதிர்ச்சிக் காலம் முழுவதும் இளம் உயிரிகள் ஈடுபடும் உயிரிகள் தொடர்ச்சியான இனச்சேர்க்கையாளர்கள் எனப்படும். எ.கா) முயல், கோழிகள்
82.
நன்மைகள்
1. விளைச்சல் அதிகரிக்கிறது. ஏனெனில் காய்ப்புழுக்களின் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது.
2. பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு குறைகிறது.
3. பயிர் வளர்ப்பில் உண்டாகும் செலவு குறைகிறது.
தீமைகள்
1. இதன் விதையின் விலை அதிகம்.
2. முதல் 120 நாட்கள் மட்டுமே வீரியமுள்ளதாக இருக்கிறது. பின்னர் இதன் வீரியம் வர வர குறைகிறது.
3. சாறு உறிஞ்சும் தத்துப்பூச்சிகள், அசுவினிப்பூச்சிகள், வெள்ளை ஈக்கள் போன்றவற்றிற்கு எதிராகச் செயல்படுவதில்லை.
4. மகரந்தச்சேர்க்கையில் துணைபுரியும் பூச்சிகளை பாதிக்கிறது. அதனால் விளைச்சல் குறைகிறது.
83.
| பண்பு | விளைவு | |
| 1 | களைகள் குறைக்கப்படுகிறது; | விளைச்சல் அதிகரிக்கிறது. |
| 2 | களைக்கொல்லி தெளிப்பு (அ) பயன்பாடு குறைகிறது. | செலவு குறைகிறது. சூழலுக்குகந்தது. |
| 3 | தாவரங்கள் களைகளின் போட்டி இன்றி வளர்கிறது. | ஆரோக்கியமான வளர்ச்சியடைய தாவரங்கள் |
| 4 | நச்சுப்பொருட்களின் பயன்பாடு குறைகிறது. | பாதிப்பு மண்ணில் குறைவாகவோ, செயல்திறன் குறைவாகவோ உள்ளது. மண்ணின் தன்மையையும் நுண்ணுயிரிகளையும் இதன் மூலம் பாதுகாக்கலாம். |
84.
(i) இரு வேறுபட்ட நிறமுடைய இலைகள் காணப்படுகின்றன.
(ii) இவற்றில் அடர்பச்சை நிறமுடைய (இலை) தாவரங்களை (ஆண்) வெளிறிய பச்சை நிற இலையுடைய தாவரங்களுடன் (பெண்) கலப்பு செய்த போதும் - (அ) அடர்பச்சை நிற இலையையுடைய தாவரங்கள் (பெண்) வெளிறிய நிற பச்சை நிற இலைகளையுடைய தாவரங்கள் (ஆண்) கலப்பு செய்தபோதும் மெண்டலின் மரபியல் தத்துவத்தின் படி ஒரே விதமான F1 தாவரங்கள் கிடைக்க வேண்டும். ஆனால் இப்பாரம்பரியத்தில் முதல் மகவுச் சந்ததி F1 வேறுபட்ட பண்புகளை வெளிப்படுத்தின.
(iii) இரு வகை கலப்பிலும் பெண் தாவரத்தின் பண்புகள் வெளிப்படக் காரணம், பெண் தாவரத்தின் பசுங்கணிக மரபணு சார்ந்து இப்பாரம்பரியம் நிகழ்வதே இவ்வேறுபாட்டிற்கு காரணம்.
85.
(i) தனியொரு மரபணுவானது, பல பண்புகளை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தி உயிரினத்தின் புறத்தோற்றப் பண்புகளைத் தீர்மானிக்கிறது. இது பல்பண்புக் கூறுகள் கொண்ட மரபணு அல்லது Pleiotropy என அழைக்கப்படுகிறது.
(ii) பட்டாணியில் ஊதாமலர்கள், பழுப்பு விதைகள், மற்றும் இலை அச்சுக்களில் அடர் புள்ளிகள் கொண்ட பண்புகளுடைய தாவரத்தை வெள்ளை மலர்கள், வெளிறிய நிறமுடைய விதைகள், புள்ளிகளற்ற இலை அச்சு ஆகியவற்றைக் கொண்ட பல பட்டாணித் தாவரங்களோடு கலப்புறச் செய்தபோது மூன்று பண்புகள் ஒன்றை மரபணுவால் பாரம்பரியமாவதைக் கண்டறிந்தார்.
(iii) எ.கா: கதிர் அரிவாள் இரத்த சோகை பினைல் கீட்டோனூரியா நோய்.
86.
| இரு விதையிலைத் தாவர விதை | ஒரு விதையிலைத் தாவர விதை | |
| 1. | இரண்டு விதையிலைகள் ஒட்டிக் காணப்படும். | ஒரு விதையிலையைக் கொண்டது. |
| 2. | விதை உறை தடித்த வெளியுறை (testa) மற்றும் மெல்லிய உள்ளுறை (tegmen) கொண்டது. | விதை பழுப்பு நிற உமியால் மூடப்பட்டிருக்கும். விதையுறை பழுப்பு நிறத்தில், சவ்வு போல விதையை நெருக்கமாக ஒட்டி இருக்கும். |
| 3. | பட்டாணியில் விதையிலைகள் உணவைச் சேமித்து வைக்கும். ஆமணக்கில் கருவூண் திசு உள்ளது. இது சேமிப்புப் பொருள் கொண்டது. | ஸ்கூட்டெல்லம், கருவூண் திசுவிலிருந்து உணவை கருவுக்கு வழங்கும். |
| 4. | முளைக்கருத்து உறை, (coleoptile) முளை வேர் உறை (coleorrhizae) இருக்காது. | முளைக்கருத்து உறை, முளை வேர் உறை உள்ளது. |
87.
மகரந்தத்துகள் சூலகமுடி மீது படிந்து மகரந்தக்குழாய் சூலினுள் நுழையும் வரையுள்ள நிகழ்வுகள் மகரந்தத்துகள் சூலக அலகு இடைவினை (Pollen Pistil Interaction) எனப்படும்.
அ. சூலக முடியில் மகரந்தக் குழல் உருவாதல்
1. சூலக முடியுடன் இணக்கமான மகரந்தத்துகள், முளைத்து மகரந்தக்குழாயை உருவாக்கும்.
2. இதற்கு ஈர சூலக முடியில், சூலக முடி பாய்மமும், வறண்ட சூலக முடியின் மெல்லிய உறையும் காரணமாக உள்ளன.
3. இவை சூலக முடிக்கும், மகரந்தத்துகள்களுக்கு இடையே உள்ள புரத வினைகளைக் கொண்டு இதை முடிவு செய்யும்.
4. சூலக முடியில் மகரந்தத்துகள் நீரேற்றமடையும், மகரந்தச்சுவரப் புரதங்கள் வெளியேறும்.
5. மகரந்தக்குழாயின் சைட்டோபிளாசப் பொருட்கள் நுனி நோக்கி நகர்கின்றன.
6. மகரந்தக்குழாயின் இதர பகுதி நுண் குமிழ்ப்பையால் ஆக்ரமிக்கப்படும்.
7. நுண்குமிழ்ப்பை, குழாய் நுனியிலிருந்து, கேலோஸ் அடைப்பால் பிரிக்கப்படும்.
8. மகரந்தக்குழாயின் நுனிப்பகுதி அரைவட்ட வடிவில், ஒளி ஊடுருவும் பகுதியாக உள்ளது. இது கேப் பிளாக் எனப்படும். இது மறைந்தவுடன் மகரந்தக்குழாயின் வளர்ச்சி நின்று விடும்.
ஆ. சூலக தண்டில் மகரந்தக்குழல்
மகரந்தத் துகளின் வளர்ச்சி, சூலகத்தண்டின் வகையைப் பொறுத்து
i) உள்ளீடற்ற சூலகத்தண்டு
சூலகத்தண்டின் உள்ளீடற்ற கால்வாயில் சுரப்பு செல்கள் உள்ளன. இவை மியூசிலேஜ் பொருட்களைச் சுரக்கின்றன. இவை வளரும் மகரந்தக்குழாய்க்கு உணவு மற்றும் சூலகத்தண்டுக்கும், மகரந்தக் குழாய்க்கு உணவாக பயன்படுகின்றன சூலகத்தண்டுக்கும், மகரந்தக்குழாய்க்கும் இடையே ஒவ்வாமை வினைகளைக் கட்டுப்படுத்தும்.
ii) திட அல்லது மூடிய திட சூலகத் தண்டுகளில், ஊடு கடத்தும் திசு (Transmitting Tissue) செல்களின் இடைவெளி வழியே வளர்கிறது.
இ. மகரந்தக் குழாய் சூலினுள் நுழைதல் 3 வழிகளில் நுழைகிறது
i) சூல் துளை வழியாக
ii) சலாசா வழியாக
iii) சூலுறை வழியாக
ஈ. மகரந்தக்குழாய் கருப்பையினுள் நுழைதல்
சூலுறை வழியாக நுழைய அமைப்பு வழி நடத்தி (obturator) வழிக்காட்டுகிறது. சினர்ஜிட் வழியாக மகரந்தக்குழாயில் நுழைந்து, அதன் உள்ளடக்கப் பொருட்கள் வெளியேற்றப்படும்.
உ. இரட்டைக் கருவுறுதல், மூவினைதல்
2 ஆண் கேமிட்டுகள் கருவுறுதலில் ஈடுபடுவதால் இரட்டைக் கருவுறுதல் எனப்படும். ஒரு ஆண் கேமீட் முட்டை உட்கருவுடன் இணைந்து கருமுட்டையை உருவாக்கும். மற்றொரு ஆண் கேமீட், இரண்டாம் நிலை உட்கருவுடன் இணைந்து முதல் நிலை கருவூண் உட்கருவாகும். இது மூவினைதல் ஆகும்.
88.
| ஒருங்கிணைப்பு | கருவுறுதல் | ||
|---|---|---|---|
| 1. | ஆண் மற்றும் பெண் முந்தைய மூல அணு உட்கரு, கருவுறுதலுக்குப் பின் இணைதல் | 1. | ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைவதை கருவுறுதல் |
| 2. | கருவின் ஈரிணை நிலையை உறுதி செய்கிறது. | 2. | இது கருவுறுதலை உறுதிப்படுத்துகிறது. |
89.
| அடர்த்தியின் உள்ளடக்கம் | விளக்கம் | |
|---|---|---|
| 1 | சுற்றுச்சூழல் அடர்வு | குறிப்பிட்ட அளவிலான மொத்த வாழிடப் பரப்பில் உள்ள, எண்ணிக்கை அடிப்படையிலான உயிரினத் தொகையின் அளவு. எ.கா: குறிப்பிட்ட கொள்ளளவு நீரில் வாழும் 1000 மீன்கள். |
| 2 | ஒழுங்கற்ற அடர்வு (அல்லது) கச்சா அடர்த்தி | மொத்த பரப்பை அலகாக் கொண்ட எண்ணிக்கை அடிப்படையிலான இனக்கூட்ட அளவு. எ.கா: 1000 மீன்கள் குளம். |
| 3 | இனக்கூட்ட அடர்த்தி | ஒரு அலகுப் பரப்பில் (அல்லது) கொள்ளளவில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை. எ.கா: 100 மரங்கள்/ ஏக்கர். |
90.
1. அனைத்து விலங்கினக் கூட்டத்தின் உள்ளார்ந்த நோக்கம் எண்ணிக்கை அதிகரிப்பதே ஆகும். ஆனால் எண்ணிக்கை எல்லையில்லாமல் அதிகரிப்பதில்லை.
2. சுற்றுச்சூழல் தாங்குதிறன் எல்லையை எட்டியவுடன், இனக்கூட்டத்தின் எண்ணிக்கை நிலையாகவோ, சுற்றுச்சூழல் நிலைகளுக்கேற்ப ஏற்ற இறக்கமாகவோ காணப்படும்.
3. இனக்கூட்டத் தொகையை பல காரணிகள் நெறிப்படுத்திக்கின்றன. அவை:
i) அடர்த்தி சாராதது - புறக் காரணிகள்
ii) அடர்த்தி சார்ந்தது - அகக் காரணிகள்
(i) உயிரினத்திற்கு கிடைக்கும் இடப்பரப்பு, வசிப்பிடம், தட்பவெப்பம், உணவு ஆகியன புறக் காரணிகள் ஆகும்.
(ii) போட்டி, கொன்றுண்ணுதல், வெளியேற்றம், உள்ளேற்றம் மற்றும் நோய்கள் ஆகியவை அகக் காரணிகள் ஆகும்.
91.
| J வடிவ வளைவு | S வடிவ வளைவு | ||
|---|---|---|---|
| 1 | ஒரு இனக்கூட்டத்தின் அளவு விரைந்து பெருகிக்கொண்டிருக்கும் போது சுற்றுச்சூழல் தடை அல்லது திடீரெனத் தோன்றும் கட்டுப்படுத்தும் காரணிகள் ஆகியவற்றால் வளர்ச்சி விகிதம் உடனடியாகத் தடை செய்யப்படுகிறது. | 1 | சில இனக்கூட்டங்களில் தொடக்கத்தில் உயிரினங்களின் எண்ணிக்கை மிக மெதுவாகவும் பின் வேகமாகவும் உயர்ந்து, பின்பு சுற்றுச்சூழல் தடைகளின் அதிகரிப்பால் மெதுவாகக் குறைந்து வளர்ச்சி வேகம் சமநிலையை எட்டி தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. |
| 2 | வளர்ச்சி விகிதம் வேகமாக காணப்படும். | 2 | சீரான வளர்ச்சியை கொண்டுள்ளது. |
| 3 | இவை பொதுவாக பூச்சிகளால் காணப்படுகிறது. | 3 | இவை பொதுவாக சிறிய பாலூட்டிகளில் காணப்படுகிறது. |
92.
93.
தகவமைப்புப் பண்புகளின் வகைகள் மூன்று வகைப்படும்.
(i) உடல் அமைப்பு சார்ந்தவை.
(ii) நடத்தை சார்ந்தவை
(iii) உடற்செயலியல் சார்ந்தவை.
94.
புவியில் உள்ள நீர் உயிர்த்தொகை:
1. நன்னீர் (ஏரிகள், குளங்கள், ஆறுகள்)
2. உவர் நீர் (கழிமுகப் பகுதி, ஈரநிலங்கள்)
3. கடல் நீர் (பவளப் பாறைகள், மேற்கடற் பகுதிகள் மற்றும் ஆழ்கடல் பகுதிகள்)
95.
உயிர்த்தொகையின் பண்புகள்:
1. இருப்பிடம் / புவியியல் நிலை
2. காலநிலை மற்றும் இயற்பியல் - வேதியியல் சூழல்
3. முதன்மையாகக் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள்
4. உயிர் தொகைகளுக்கிடையே உள்ள எல்லையைத் துல்லியமாக வரையறை செய்ய முடியாது. புல்வெளி மற்றும் வன உயிர்த்தொகையில், சந்திக்கும் இடைநிலைப் பகுதிகள் உள்ளன.
96.
(i) முன்பின் தெரியாதவர், பலருடன் பாலுறவைத் தவிர்த்தல்.
(ii) கருத்தடை உறைகளைப் பயன்படுத்துதல்
(iii) மருத்துவ ஆலோசனை, முழுமையான சிகிச்சை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards