12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Maths Applications of Matrices and Determinants Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 08/03/2020
12ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Biology All Chapter Three Marks Important Questions 2020 )
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்றால் என்ன?
2.
புவி வெப்பமடைதலை நாம் ஏன் தடுக்க வேண்டும்?
3.
அனைத்து வகையான சூழல் மண்டலத்திற்கும் பொதுவான உணவுச்சங்கிலி எது? ஏன்? (அ) மட்குபொருள் உணவுச்சங்கிலி என்றால் என்ன?
4.
பசுமை கார்பனை, சாம்பல் கார்பனிலிருந்து வேறுபடுத்துக.
5.
வெப்ப பாலைவனம் மற்றும் குளிர் பாலைவனங்களை வேறுபடுத்துக.
6.
இந்தியா பல்வகைத் தன்மையில் செழிப்பு மிக்க நாடாக இருப்பது ஏன்?
7.
தொழிற்சாலையில் நொதித்தலின் பயன்பாடுகள் யாவை?
8.
நவீன உயிரி தொழில்நுட்பத்தின் இரு முக்கிய அம்சங்கள் யாவை?
9.
கங்கை சமவெளியைப் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
10.
வரலாற்றின் பக்கங்களின், கால மாற்றங்கள் காரணமாக உயிர்த் தொகையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. காரணம் தருக.
11.
நறுமண எண்ணெய்கள் தயாரிக்க பயன்படும் தாவர பாகங்கள் கூறு?
12.
'பெர்ஃபியூம்' என்ற சொல்லுக்கு விளக்கம் தருக?
13.
அயனியாக்கும் கதிர்வீச்சுக்களினால் நடைபெறும் சடுதிமாற்றம் மற்றும் அயனியாக்காத கதிர் வீச்சுக்களினால் நடைபெறும் சடுதிமாற்றம் இவற்றை வேறுபடுத்துக்க.
14.
எந்த நாள் உயிர் எரிபொருள் துறையில் அரசு எடுக்கும் பல்வேறு முயற்சிகளை முன்னிலைப்படுத்துகிறது? எவ்வாறு?
15.
R.F. அல்லது மறுகூட்டிணைவு நிகழ்விரைவு என்றால் என்ன?
16.
'சைமாலஜி', 'ஈனாலஜி' - வரையறு.
17.
SCID என்றால் என்ன?
18.
எவ்வாறு இன்டர்ஃபெரான்கள் வைரஸ் எதிர் நொதிகளை உற்பத்தி செய்கிறது? ஏன் இது இரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்க முடியவில்லை? இந்த பிரச்சனையை சரி செய்வதற்கான வழிமுறைகள் யாவை?
19.
எதிர்பொருள் தூண்டி மற்றும் எதிர்பொருளுக்கிடையான வினை மூன்று நிலைகளில் நடைபெறுகின்றது. அவை யாவை?
20.
எதிர்ப்பொருள் தூண்டிகள் என்றால் என்ன?
21.
கைரமோன் என்றால் என்ன?
22.
இயற்கை நில அமைவு என்றால் என்ன? அதன் காரணிகள் யாவை?
23.
பூந்தேன் கொள்ளையரைப் பற்றிக் கூறு?
24.
அலியூரோன் திசு (Aleurone Tissue) குறிப்பு வரைக?
25.
சோதனைக்கலப்பு மற்றும் பிற்கலப்பு வேறுபடுத்துக
26.
ஹோமோசைகஸ் [ஒத்த பண்பினைவு] - ஹெட்டிரோசைகஸ் [வேறுபட்ட பண்பிணைவு] வேறுபாடு தருக
27.
'முன்னோடி உயிரினங்கள்' என்பவை யாவை?
28.
உயிரின்றி உயிர் தோன்றல் கொள்கையை கூறியவர் யார்? அது எதை விளக்குகிறது?
29.
வாழையின் நுண்பெருக்க நெறிமுறைகள் தருக.
30.
செயற்கை விதைகளின் சிறப்பம்சங்கள் யாவை?
31.
"மீச்சிறப்பு திட்டம்" என்பது எதைக் குறைக்கிறது?
32.
உலகம் வெப்பமடைதல் என்றால் என்ன?
33.
மார்பக அளவுக்கும், பால் சுரப்புத் திறமைக்கும் தொடர்பில்லை, விளக்குக.
34.
நடு அடுக்கிலிருந்து உருவாகும் உடல் உறுப்புக்கள் எவை?
35.
குரோமோசோம் தொகுப்பு வரைபடம் என்றால் என்ன?
36.
குரோமோசோம் குறைபாடுகளுக்கு உதாரணம் தருக.
37.
இயக்கத்தடுப்பு முறை, கருத்தடைச் சாதனமான கருத்தடை உறையின் நன்மைகள் எவை?
38.
இயற்கையான கன்னி இனப்பெருக்கத்தின் வகைகளை பற்றி எழுதுக.
39.
நீள்மட்ட சமபிளவு முறை என்றால் என்ன?
40.
ஸ்ட்ரெப்டோமைசின், டெட்ராசைக்ளின் பணி யாது?
41.
DNA மற்றும் RNA வை அதன் நிலைப்புத்தன்மை வேதி எதிர்வினைப்பண்புகள் அடிப்படையில் வேறுபடுத்துக.
42.
புறஊதாக் கதிர்களின் மிகைப் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் யாவை?
43.
உரம் கலந்த நீர் வழிந்தோடி நீர் நிலையில் கலப்பதால் நீர் சூழ்நிலை மண்டலத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் யாவை ?
44.
கரு கண்காணிப்புக் கருவி பற்றி விவரி?
45.
விதைப் பந்து என்றால் என்ன?
46.
கனிக்குள் விதை முளைத்தல் என்றால் என்ன? இது எந்தத் தாவர வகுப்பில் காணப்படுகிறது?
47.
தாவர திசு வளர்ப்பில் அடங்கியுள்ள அடிப்படைக் கொள்கைகளை விளக்குக.
48.
49.
உயிரியப் பல்வகைத்தன்மை முக்கியமானது ஏன்? பாதுகாக்கத் தகுதியானதா?
50.
வாழிட இழப்பை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?
51.
இனக்கூட்டம் நெறிப்படுத்தப்படுதல் குறித்து எழுதுக.
52.
சிறு தானியங்கள் என்றால் என்ன? அதனுடைய வகைகள் யாவை ? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டு தருக
53.
பாசிப்பயறு மற்றும் துவரம் பருப்பின் தோற்றம் மற்றும் விளையுமிடத்தை எழுதுக.
54.
மூலச் செல்கள் என்பன யாவை? மருத்துவத்துறையில் அதன் பங்கை விளக்குக.
55.
ஒருவர் பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாக தனக்கு HIV தொற்று ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணி இரத்தப் பரிசோதனைக்குச் செல்கின்றார். எலைசா பரிசோதனை உதவி புரியுமா? ஆம் எனில் எப்படி? இல்லை எனில் ஏன்?
56.
புதிய சிற்றினத் தோற்றத்தை விளக்கும் டி.விரீஸின் திடீர் மாற்றக் கோட்பாடு, எவ்வாறு லாமார்க் மற்றும் டார்வினியக் கோட்பாடுகளிலிருந்து வேறுபடுகிறது?
57.
டார்வினின் குருவிகள் மற்றும் ஆஸ்திரேலிய பைப்பாலூட்டிகள் ஆகியவை தகவமைப்புப் பரவலுக்கான சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும் சொற்றொடரை நியாயப்படுத்துக.
58.
பயிர் பெருக்கவியலாளர்கள் தற்போது பயன்படுத்தும் மிகச் சிறந்த வழிமுறைகள் என்னென்ன?
59.
60.
உயிர் உரங்களாக நுண்ணுயிரிகளின் பங்கினை நியாயப்படுத்துக.
61.
இயற்கை வேளாண்மையின் முக்கியப் பண்புகளை எழுதுக.
62.
இம்யூனோகுளோபுலினின் அமைப்பை தகுந்த படத்துடன் விளக்கு.
63.
எதிர்ப்பொருட்கள் H2 L2 எனக் குறிப்பிடப்படுவது ஏன்?
64.
ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ ஆகியவற்றுக்கிடையே உள்ள அமைப்பு சார்ந்த வேறுபாடுகள் மூன்றினைக் குறிப்பிடுக.
65.
கடத்து ஆர்.என்.ஏ, ‘இணைப்பு மூலக்கூறு’ என ஏன் அழைக்கப்படுகிறது?
66.
கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக.
| நோய்கள் | நோய்க்காரணி | அறிகுறிகள் |
| அஸ்காரியாசிஸ் | அஸ்காரிஸ் | |
| டிரைகோஃபைட்டான் | உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட, செதில் புண்கள் காணப்படுதல். |
|
| டைபாய்டு | அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல். | |
| நிமோனியா |
67.
68.
பன்ம பாதுகாப்பில் கோவில் காடுகள் எவ்வாறு உதவிபுரிகின்றன?
69.
காலநிலையினை நிர்வகிப்பதில் காடுகள் எவ்வாறு உதவிபுரிகின்றன?
70.
அனைத்து சூழல்மண்டலங்களிலும் பொதுவாக காணப்படும் உணவுச்சங்கிலியின் பெயரை கண்டறிந்து விளக்குக. அதன் முக்கியத்துவத்தை எழுதுக.
71.
கீழ்கண்ட தரவுகளைக் கொண்டு உணவு சங்கிலியை உண்டாக்குக.
பருந்து, தாவரங்கள், தவளை, பாம்பு, வெட்டுக்கிளி
72.
Rh காரணியின் மரபுக் கட்டுப்பாட்டை பற்றி விளக்கு
73.
இனச்செல் உருவாக்கம் – வரையறு?
74.
கர்ப்ப காலத்தில் தாய்சேய் இணைப்புத்திசுவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் யாவை?
75.
டவுன் சிண்ட்ரோமின் அறிகுறிகளை குறிப்பிடுக?
76.
மூலக்கூறு அடிப்படையிலான DNA மறுகூட்டினைவு செயல்முறையில் பங்குபெறும் படி நிலைகளைப் படத்துடன் எழுதுக.
77.
குறுக்கேற்ற செயல்முறையை விளக்குக.
78.
முட்டையிடும் விலங்குகளின் சேய்கள், குட்டி ஈனும் விலங்குகளின் சேய்களை விட பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. காரணம் கூறு.
79.
பாலிலா இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் ஏன் ‘பிரதி’ (clone) என்று அழைக்கப்படுகிறது?
80.
ஒரு தாங்கிக்கடத்தியை எவ்வாறு அடையாளம் காண்பாய்?
81.
உயிரிதொழில்நுட்பவியலின் பயன்பாட்டைக் குறிப்பிடுக.
82.
ஒரு பண்புக் கலப்பு அடிப்படையில் ஓங்குதன்மை விதியை விளக்குக.
83.
மெண்டலின் பெருக்கச் சோதனை வெற்றிக்கான காரணங்கள் யாவை?
84.
எண்டோதீலியம் என்றால் என்ன ?
85.
தன் மகரந்தச் சேர்க்கையைத் தடுக்க இருபால் மலர்கள் மேற்கொள்ளும் ஏதேனும் இரண்டு உத்திகளைப் பட்டியலிடுக.
86.
உயிரற்ற காரணிகளுக்கேற்ப உயிரினங்கள் எந்தெந்த வழிகளில் எதிர்வினை புரிகின்றன என்பதை விளக்கு.
87.
நமது இந்திய நாட்டில் முழுமையான இனப்பெருக்க ஆரோக்கியத்தை அடைய மேற்கொள்ள வேண்டிய உத்திகள் யாவை?
88.
நம் தேசிய விலங்கான புலியை பாதுகாக்கும் பொருட்டு 1993ல் இந்திய அரசு புலித்திட்டத்தை தொடங்கியது.
89.
இந்தியாவில் 1,62,099 ச.கி.மீ பரப்பளவில் 1000 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அமைந்துள்ளன.
1.
1. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்பது சுற்றுச்சூழல் மேலாண்மையின் ஒரு கருவியாகும்.
2. சூழல் மண்டலம் மற்றும் உயிரியல் சமுதாயங்கள் மீது ஏற்படுத்தப்படும் தாக்கத்தை வெகுவாக குறைக்கவும், இயற்கை வளங்களை உகந்த அளவு பயன்படுத்தவும், கட்டுப்படுத்தவும் பரிந்துரைக்க உதவிபுரிகிறது.
2.
1. புவியின் வெப்பம் அதிகரிக்கும் போது துருவப் பகுதியில் பனிக்குன்றுகள் மற்றும் பனிக்கட்டிகள் உருகத் தொடங்குகின்றன. இதன் காரணமாக கடல்நீர் மட்டம் உயர்ந்து உலகின் பல பகுதிகளிலுள்ள கடலோர நகரங்கள் மூழ்கும் நிலை ஏற்படும்.
2. காலநிலையில் தீவிர மாற்றங்கள் ஏற்பட்டு அதன் மூலம் கடும் வெள்ளப்பெருக்கு, அதிக வறட்சி போன்றவை நிலவும்.
3. உயிர்ப்பன்மயத் தன்மை குறைந்து வருவதோடு சில சிற்றினங்கள் அழியும் நிலை ஏற்படும்.
3.
1. இந்த வகையான உணவுச்சங்கிலி இறந்த கரிமப் பொருட்களிலிருந்து தொடங்குகிறது.
2. இது முக்கியமான ஆற்றல் மூலமாக உள்ளது.
3. கரிமப்பொருட்கள் பொதுவாக தாவர, விலங்கு கழிவுகளிலிருந்து பெறப்படுகிறது. எனவே இந்த உணவுச் சங்கிலி அனைத்து சூழல் மண்டலத்திற்கும் பொதுவானது.
4.
| பசுமை கார்பன் | சாம்பல் கார்பன் |
| பசுமை கார்பன் உயிர்கோளத்தில் சேமிக்கப்படுகிறது. | சாம்பல் கார்பன் தொல்லுயிர் படிவ எரிபொருளாக சேமிக்கப்படும் கார்பன் (நிலக்கரி, எண்ணெய், உயிரி வாயுக்கள்) |
| இது ஒளிச்சேர்க்கை மூலம் பசுந்தாவரங்களினால் உருவாகிறது. | இது மட்காதல் மூலம் மட்குண்ணிகளால் பூமிக்கடியில் உருவாகிறது. |
5.
| வெப்ப பாலைவனம் | குளிர் பாலை வனம் | ||
| 1 | மண் அதிக உணவூட்டம் உடையது. | 1 | மண் கனமானதாகவும், படிவு உடையதாகவும் உவர்ப்பு தன்மையுடன் காணப்படும். |
| 2. | கோடைக்கால வெப்பநிலை 43oC முதல் 49oC வரை வேறுபடுகிறது. | 2. | கோடைக்கால வெப்பநிலை 21oC முதல் 26oC வரை காணப்படும். |
| 3. | இங்கு பொதுவாகக் காணப்படக் கூடிய விலங்கினங்கள் இந்திய முள் வால் பள்ளிகள், கருப்பு மான்,வெள்ளைக் கால் நரி,ஆகியவையாகும். | 3. | இங்கு பொதுவாக காணப்படக் கூடிய விலங்கினங்கல் ஜாக் முயல், கங்காரு எலி,கங்காரு சுண்டெலி, பை,வெட்டுக்கிளி, எலி, தரை அணில்கள் ஆகியவையாகும். |
| 4. | எ.கா: வட ஆப்ரிக்காவின் சஹாரா, தென்மேற்கு அமெரிக்கா, மெக்சிகோ, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் தார் பாலைவனம் போன்றவை இவற்றுக்கு எடுத்துக்காட்டாகும். | 4. | எ.கா : அன்டார்க், கிரீன்லாந்து, நியார்க்டிக் பகுதி, இந்தியாவின் லடாக் பகுதி இவற்றுக்கு எடுத்துக்காட்டாகும். |
6.
தனித்தன்மை வாய்ந்த உயிரிய புவியமைப்பு கொண்ட இருப்பிடங்கள், பரந்த மாறுபாடுடைய காலநிலை கூறுகள், எண்ணிலடங்கா சுற்றுச்சூழல் பல்வகைத் தன்மை மற்றும் புவியியல் பல்வகைத் தன்மை ஆகியவற்றைப் பெற்றிருப்பதன் காரணமாக இந்தியா பல்வகைத் தன்மையில் செழிப்பாக உள்ளது.
7.
1. நுண்ணுயிரி உயிர்திரள் உற்பத்தி
ஒற்றைப் புரதம்:
ஈஸ்ட், பூஞ்சைகள், பாசிகள், பாக்டீரியங்கள் போன்றவை வளர்க்கப்பட்டு ஒற்றைப்புரதம் உருவாக்கப்படுகிறது.
இவை கால்நடை விலங்குகள், மனிதனுக்கு மாற்று உணவாக பயன்படுகிறது.
2. நுண்ணுயிரி வளர்சிதை மாற்றப் பொருட்கள்
வளர்சிதை மாற்றத்தினால் உருவாகும் வேதியப் பொருட்கள் மனிதன், விலங்குகளுக்கு பயனுள்ளதாக உள்ளது.
3. முதல்நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள்
நுண்ணுயிரிகளின் உயிர் செயல்முறைகளை பராமரிப்பதற்காக உற்பத்தி செய்யக்கூடியவை.
(எ.கா) எத்தனால், சிட்ரிக் அமிலம், அசிட்டிக் அமிலம்
4. நுண்ணுயிரி நொதிகள்:
நுண்ணுயிரிகள் வளர்ப்பு ஊடகத்தில் வளர்க்கும் போது சுரக்கும் சில நொதிகள் சோப்பு, உணவு, பதப்படுத்துதல், மதுபானம் மருந்தியல் ஆகியவை இந்நொதிகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
(எ.கா) புரோட்டியேஸ், அமைலேஸ், ஐசோமெரேஸ், லைப்பேஸ் போன்றவை
8.
1. மறு கூட்டிணைவு தொழில் நுட்பத்தின் மூலம் குறிப்பிட்ட தேவைக்காக புதிய தயாரிப்புகள் பெறுவதற்கு மரபணு மாற்றம் தேவைப்படுத்தல்.
2. புதிதாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் உரிமை மற்றும் அதன் சமூகத் தாக்கம்.
9.
1. கங்கை ஆற்றுப்படுகை மண்டலமான இது ஒரே சீரான தன்மை கொண்ட சமவெளியாகும்.
2. நாட்டின் நிலப்பரப்பில் 11% இப்பகுதியாகும்.
3. வளமான இச்சமவெளி இமயமலையின் அடிவாரம் வரை பரந்து காணப்படுகிறது.
4. காணப்படும் விலங்குகள்: காண்டாமிருகம், யானை, எருமை, வராக மான், சதுப்பு நில மான்.
10.
1. சஹாரா பாலைவனம் ஒரு காலத்தில் இப்பகுதி ஆறுகள் பாய்ந்த பசுமையான நிலப்பரப்பாக இருந்தது. அதனால் ஏராளமான மரவகைகளும், விலங்குகளான நீர்யானை, ஒட்டகச்சிவிங்கி, முதலை போன்றவையும் இங்கு வாழ்ந்தன.
2. காலப்போக்கில் காலநிலை வறண்டதால், இப்பகுதி புவிக்கோளின் மிகப்பெரிய பாலைவனமாக மாறிவிட்டது. இங்கு விலங்குகள் சாதகமான சூழல் நிலவும் அருகிலுள்ள பகுதிகளுக்கு இடம் பெயர்ந்திருக்கலாம்.
11.
1. இலை - கறிவேப்பிலை, புதினா
2. மலர் - ரோஜா, மல்லிகை
3. பழங்கள் - சிட்ரஸ், ஸ்ட்ராபெர்ரி
4. மரம் - சந்தனக்கட்டை, யூகலிப்டஸ்
12.
பெர்(வழி), பியூம்ஸ்(புகை) எனப் பொருள்படும் 2 இலத்தீன் சொற்களிலிருந்து உருவானது. 'புகைவழி ' எனப் பொருள்படும்.
13.
| அயனியாக்கும் கதிர்வீச்சுகளின் சடுதிமாற்றம் | அயனியாக்காத கதிர்வீச்சுக்களின் சடுதிமாற்றம் |
| இதின் குறுகிய அலை நீளம் உடையது. இது அணுவிலுள்ள எலக்ட்ரான்களை அயனியாக்கப் போதுமான அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது எ.கா.:X கதிர்கள், காமா, பீட்டா, ஆல்பா, மற்றும் காஸ்மிக் கதிர்கள் |
இவை அலை நீளங்களையும், குறைவான ஆற்றலும் குறைந்த ஊடுருவக் கூடிய திறன் கொண்டவை மேற்புற சவ்வுகளுக் கருகாமையில் உட்கரு கொண்ட ஒரு செல் நுண்ணுயிர்கள், வித்துக்கள், மகரந்தத் துகள்களை கதிரியக்கத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. எ.கா.: U.V.கதிர்கள் |
14.
1. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 ஆம் நாள் உலக உயிரிய எரிபொருள் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
2. மரபு சார்ந்த புதுப்பிக்க இயலாத புதை படிவ எரிபொருட்களுக்கு மாற்றாக, புதுப்பிக்கக்கூடிய உயிரிய எரிபொருளின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
3. இந்நாள் அரசு உயிர் எரிபொருள் துறையில் எடுக்கும் பல்வேறு முயற்சிகளை முன்னிலைப்படுத்துகிறது.
15.
மறு சேர்க்கை நடைபெறும் நிகழ்விரைவு பின் வரும் சூத்திரம் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.
16.
சைமாலஜி: நொதித்தலின் உயிர் வேதியியல் செயல்முறைகள் மற்றும் அதன் நடைமுறை பயன்களை பற்றி படிக்கும் பன்முறை அறிவியல் சைமாலஜி எனப்படும்.
ஈனாலஜி: ஒயின் மற்றும் ஒயின் உற்பத்தி செய்யும் முறைகளைப் பற்றிய அறிவியலுக்கு ஈனாலஜி என்று பெயர்.
17.
(i) ADA குறைபாடு அல்லது SCID என்பது ஒரு உடற்குரோமோசோமின் ஒடுங்கு ஜீன் வளர்சிதை மாற்றக்குறைப்பாடு ஆகும்.
(ii) ADA நொதி உருவாக்கத்திற்குத் தேவையான மரபணுவின் செயலிழப்பு அல்லது நீக்கம் காரணமாக இக்குறைபாடு உண்டாகிறது. இந்நோயாளிகளின் உடலிலுள்ள 'T' செல்களின் செயலிழப்பால் உள் நுழையும் நோயூக்கிகளுக்கு எதிரான நோய்த் தடைக்காப்பு பதில் வினைகளை அவற்றால் வெளிப்படுத்த முடிவதில்லை.
(iii) இந்நிலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செயல்புரியும் நிலையிலுள்ள அடினோசின் டி அமினேஸ் அளிக்கப்பட்டு அதன் மூலம் நச்சுத்தன்மையுள்ள உயிரியல் பொருட்களை அழிப்பதே SCID நோய்க்கான சரியான சிகிச்சை முறையாகும்.
18.
(i) இவை செல்லில் உள்ள டி.என்.ஏ வைத் தூண்டி வைரஸ் எதிர்ப்பு நொதிகளைச் சுரக்கச் செய்து அதன் மூலம் வைரஸ்களின் பெருக்கத்தைத் தடுத்து செல்களை பாதுகாக்கின்றன.
(ii) காரணி VIII ஐ போன்ற இன்டர்ஃபெரான்களை இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கலாம். ஆனால் இதற்கு மிக அதிக அளவில் இரத்தம் தேவைப்படுவதால் இது நடைமுறைச் சாத்தியம் இல்லை.
(iii) இச்சிக்கலைக் கடப்பதற்கு இன்டர்ஃபெரான்களை rDNA தொழில்நுட்பம் மூலம் உருவாக்குவது உகந்ததாகும்.
19.
1. முதல் நிலையில் எதிர்பொருள் தூண்டி - எதிர் பொருள் கூட்டமைப்பு உருவாகிறது.
2. இரண்டாவது நிலையில் திரிபடையச் செய்தல் மற்றும் வீழ்படிவாதல் போன்ற செயல்கள் நடைபெறுகிறது.
3. மூன்றாவது நிலையில் எதிர்பொருள் தூண்டிகளை அழித்தல் அல்லது நச்சை சமநிலைப்படுத்துதல் ஆகியவை நடைபெறுகின்றன.
20.
எதிர்ப்பொருள் தூண்டிகள் என்பவை கண்டுபிடிக்கக் கூடிய தடைக்காப்பு துலங்கல்களை ஏற்படுத்தும் பெரிய சிக்கலான மூலக்கூறுகளாகும்.
21.
பியரிஸ் ரேஃபே சிற்றினக் கம்பளிப்புழு வெளியிடும் கைரமோன் என்ற சேர்மம் காட்டுவகை முள்ளங்கியின் வாயிலாக காப்புத்தன்மை அதன் சந்ததிகளுக்குக் கடத்துகிறது.
22.
(i) புவியின் மேற்பரப்பு வடிவம் மற்றும் அம்சங்களை ஆய்வது இயற்கை நில அமைவு ஆகும்.
(ii) காரணிகள்:
1) விரிவகலம் மற்றும் குத்துயரம்
2) மலைகளின் நோக்கு திசைகள்,
3) மலையின் செங்குத்தான பகுதி
23.
அமோர்போபேலஸ் மலர். மலர் பொருட்களை வெகுமதியாகத் தருகின்றன. முட்டையிட பாதுகாப்பான இடத்தை தருகின்றன. பல உயிரினங்கள் மகரந்தத் துகள்களையும், பூந்தேனையும் உண்டு, மகரந்தச் சேர்க்கைக்கு உதவாது. இவை பூந்தேன் கொள்ளையார் ஆவார்.
24.
1. சிறப்படைந்த செல்களால் ஆனது.
2. ஒன்று அல்லது சில அடுக்குகளால் ஆனது.
3. தானியங்களில், கருவூண் திசுவைச் சூழ்ந்துள்ளது.
4. இதன் செல்களில் அலியூரோன் துகள்கள் உள்ளன. இவற்றில் ஸ்பீரோசோம்கள் உள்ளன.
5. விதை முளைக்கும் போது, இச்செல்கள் அமைலேஸ்கள், புரோட்டியேஸ் போன்ற நீராற்பகுப்பு நொதிகளைச் சுரக்கும். இந்நொதி கருவூண் திசு சேமிப்பு உணவைச் செரிக்கும்.
25.
| சோதனைக்கலப்பு | பிற்கலப்பு | |
| 1 | F1 சேயை அதனுடைய ஒடுங்கு பெற்றோரோடு செய்யும் கலப்பு சோதனைக் கலப்பு எனப்படும் | F1 சேய் தாவரத்தை அதனுடைய ஏதேனும் ஒரு பெற்றோரோடு (ஓங்கு (அ) ஒடுங்கு பெற்றோரோடு செய்யும் கலப்பு பிற்கலப்பு எனப்படும் |
| 2 | இதற்கு சோதனைத் தேர்வு கலப்பு என்று பெயர் | இது வெறும் பிற்கலப்பு எனப்படுகிறது |
| 3 | இதன் மூலம் F1 இந்த மரபணுவாக்கம் தெரிய வருகிறது | விரும்பப்பட்ட பண்பை பெறுவதற்கு பிற்கலப்புகள் உதவுகின்றன |
| 4 | இதில் ஓங்கு & ஒடுங்கு பண்பு சம விகிதத்தில் கிடைக்கிறது | ஓங்கு பெற்றோர் பிற்கலப்பு ஓங்கு பண்பினை உருவாக்குகிறது |
26.
| ஹோமோசைகஸ் | ஹெட்டிரோசைகஸ் | |
| 1 | ஒரு பண்புக்குரிய அல்லீல்கள் ஒத்த பண்புடையவைகளாக இருப்பது | ஒரு பண்புக்குரிய அல்லீல்கள் வேறுபட்டு காணப்படுகிறது |
| 2 | அது தூயதாக கால்வழி உடையது | இது கலப்பின வகை |
| 3 | அவை ஒரே ஒரு வகை கேமிட்டுகளை உருவாக்கும். எ.கா நெட்டை TT (ஹோமோசைகஸ் ஓங்குதன்மை) குட்டை tt (ஹோமோசைகஸ் ஒடுங்குதன்மை) |
ஒன்றுக்கு மேற்பட்ட கேமிட்டுகளை உருவாக்கும். எ.கா நெட்டை Tt (ஹெட்டிரோசைகஸ் ஓங்கு தன்மை) |
27.
1. உயிரற்ற பொருட்களிலிருந்து உருவான மூலக்கூறுகள்.
2. இவைகள் தன்னிச்சையான ஒன்று சேர்ந்து நீர்மத் திரவத்தை உள்ளடக்கிய சிறு துளிகளாகத் தாமே வடிவமைத்துக் கொள்கின்றன. 3. இதன் உள் வேதிச் சூழல் புறச் சூழலிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.
இத்தகைய கோள அமைப்புகள் 'முன்னோடி உயிரினங்கள்' ஆகும்.
28.
1. தாமஸ் ஹக்ஸ்லே உயிரின்றி உயிர் தோன்றல் பதத்தை உருவாக்கியவர்.
2. உயிரற்ற பொருட்களிலிருந்து உயிருள்ள அமைப்புகள் தோன்றின.
3. பல மில்லியன் ஆண்டுகளாக வேதிப்பொருட்கள் மற்றும் மூலக்கூறுகளில் படிப்படியாக நடைபெற்ற பரிணாமத்தால் உயிரினங்கள் தோன்றின.
29.
30.
(i) எண்ணிக்கை, நேரம், செலவு:
மில்லியன்கள் எண்ணிக்கையில் / எந்த காலத்திலும் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய இயலும்.
(ii) செய்முறை:
விரும்பிய பண்புகளைக் கொண்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களை இம்முறையில் எளிதாக உருவாக்கலாம்.
(iii) தரம்:
தரமான விரும்பிய பண்புகள், நீண்ட நாட்களுக்கு திறன் மிக்கவையாகச் சேமிக்கலாம்.
(iv) உருவொத்த தாவரங்கள்:
அதிக எண்ணிக்கையில் உருவொத்த தாவரங்களை உருவாக்கலாம்.
(v) விதையுறாக்கலாம்:
பெரிதாகக் குறைக்கப்பட்டுள்ளது.
(vi) வாழ்நாள்:
குறுகிய வாழ்க்கை சுழற்சியுடன் கூட வேகமாக வளர்ச்சியை பெற்றுள்ளது.
31.
1. மீச்சிறப்பு திட்டம் 2014 ல் 20,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.
2. இது கங்கை நதியின் மாசுபாட்டினை தீவிரமாக குறைக்கவும் பாதுகாக்கவும் புத்துயிரூட்டும் நோக்கங்களை நிறைவேற்றவும் தொடங்கப்பட்டதாகும்.
3. இது "கங்கா திட்டம்" தூய்மைப்படுத்துவதற்கான தேசிய திட்டம்.
32.
பசுமை இல்ல வாயுக்களின் வெப்பத்தை உறிஞ்சி தக்கவைத்துக் கொள்வதனால் புவி சராசரி வெப்பநிலை அதிகரிக்கிறது. இதனால் உலகம் வெப்பமடைகிறது. இந்நிகழ்வு பசுமைவீடு விளைவு எனப்படும்.
33.
1. மார்பக வளர்ச்சி பூப்பெய்தலில் தொடங்குகிறது.
2. ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியிலும் முன்னேற்றமடைகிறது.
3. கருவுறாத பெண்களில் பால் சுரப்பிகள், சரியாக வளர்ச்சியடைவதில்லை.
4. மார்பக அளவு, படிந்துள்ள கொழுப்பைப் பொறுத்துள்ளது. மார்பக அளவுக்கும், பால் சுரப்புத் திறனுக்கும் தொடர்பில்லை.
34.
1. இணைப்புத்திசு
2. எலும்பு, குருத்தெலும்பு
3. தசைகள்
4. சிறுநீரகம், சிறுநீர் நாளம், இனப்பெருக்க உறுப்புக்கள்
35.
ஒரு செல்லில் உள்ள குரோமோசோம் தொகுதியை முழுமையாகப் பிரித்தெடுத்து அவற்றை இணைகளாக வரிசைப்படுத்தும் தொழில் நுட்பமே குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எனப்படும்.
36.
1. டவுன் சின்ட்ரோம்
2. க்ளைன் பெல்ட்டர் சின்ட்ரோம்
3. பட்டாவ் சின்ட்ரோம்
4. டர்னர் சின்ட்ரோம்
37.
1. விந்துத் திரவம் பெண் இனப்பெருக்கப் பாதையில் நுழைவது தடுக்கப்படும்.
2. கருத்தடை உறைகள் ஒருமுறை மட்டுமே பயன்படும்.
3. AIDS போன்ற பால்வினை நோய்களிலிருந்து பாதுகாப்புத் தரும்.
4. பாலியூரிதேன், இரப்பர், ஆட்டுத்தோலால் செய்யப்படும்.
38.
1. அர்ரீனோடோகி -ஆண் உயிரிகள் மட்டும் உருவாகின்றது. (எ.கா) தேனீக்கள்
2. தெலிடோகி - பெண் உயிரிகள் மட்டும் உருவாக்கப்படுகின்றன. (எ.கா) சொலினோபியா
3. ஆம்ஃபிடோகி - ஆண் அல்லது பெண் உயிரி உருவாகின்றது. (எ.கா) எஃபிஸ்
39.
1. இதில் பிளவுமட்டம் உயிரியின் நீள அச்சில் ஏற்படுகின்றது.
2. நீளிழை உயிரியல் பிரிவின்போது நீளிழையானது ஒரு சேய் செல்லில் தக்க வைக்கப்படுகின்றது.
3. அடுத்த சேயில் அடிப்படைத்துகள்கள் நீளிழையைத் தோற்றுவிக்கின்றது.(எ.கா)யூக்ளினா
40.
41.
| DNA | RNA | |
| 1. | மரபுப்பொருளில் முக்கியப் பண்பான நிலைப்புத் தன்மை DNA வில் அதிகமாக உள்ளது. | எளிதில் சிதைகிறது - ஏனெனில் 2' - OH குழு - ஒவ்வொரு நியூக்ளியோடைடுகளிலும் காணப்படுகிறது. |
| 2. | இரு இழைகளைக் கொண்டிருப்பதால் வெப்பத்தினால் தன்மை மாற்றம் நடந்தாலும், தனிமைப்படுத்தப்பட்ட இரு இழைகளும் இயல்பு சூழல் அமையும் போது டி.என்.ஏவின் நிரப்பு கூறுகள் மீண்டும் உருவாகின்றன. | வெப்பப்படுத்தப்படும் போது தன்மை மாற்றம் நடைபெறும். |
| 3. | தைமின் - காணப்படுவதால் அதிகபட்ச நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது. | யுராசில் காணப்படுவதால் நிலைப்புத் தன்மை குறைவு. |
42.
சூரியனிலிருந்து வெளியேறும் மின்காந்த பட்டையில் காணப்படும் புறஊதாக் கதிர்கள், பெரும்பாலும் உயிரினங்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும். இதற்கு காரணம் இவை DNA வை சேதப்படுத்துவது தான்.
பூமிக்கு மேலே காணப்படும் ஸ்ட்ரேட்டோஸ்பியர் அடுக்கில் ஓசோன் அளவு 1% குறைந்தாலும், பூமியை அடையும் புற ஊதாக்கதிர்களின் அளவு மிகவும் அதிகரித்து விடும்.
ஓசோன் இல்லையென்றால் பூமியை வந்தடையும் புறஊதா கதிர்களின் அளவு உயிர்கள் யாவும் அழிந்து விடும் அளவுக்கு அதிகமாக இருக்கும்.
அனைத்து உயிரிகளும் தரைக்கு அடியிலோ அல்லது கடலிலோ பதுங்க வேண்டியது வரும்.
43.
1. நன்மையளிக்கும் பாக்டீரியங்கள் கொல்லப்படும்.
2. நீர் நிலைகளில் மிகை உணவூட்டத்தை ஏற்படுத்தும்.
3. நீர் வாழ் விலங்குகளையும் அவற்றின் உற்பத்தித்திறனையும் பாதிக்கிறது.
44.
45.
(i) மனித உதவியுடன் விதை பரவுதல் முறையே விதைப்பந்து எனப்படும்.
(ii) களிமண் மற்றும் இலைமட்கு (பசுமாட்டின் சாணம் உட்பட) விதைகளைக் கலந்து உருவாக்கப்படுவது விதைப்பந்துகள்.
(iii) இது ஜப்பானியர்களின் பழமையான நுட்பமாகும்.
(iv) இம்முறையில் தாவரங்களைத் தக்க சூழலில் வளர பொருத்தமான இடங்களுக்கு கொண்டு சேர்க்க வேற்று இடங்களில் தாவரங்களை மீள் உருவாக்கவும் உதவுகிறது.
46.
(i) கனிக்குள் விதை முளைத்தல் என்பது சிறப்பு வகை விதை முளைத்தல் இது சதுப்புநில தாவரங்களில் காணப்படுகிறது.
(ii) விதை முளைத்தலானது தாய் தாவரத்தில் இருக்கும் போதே நடைபெறுகின்றது.
(iii) இளஞ்செடியானது தாய் தாவரத்திலிருந்தே உணவினை பெற்றுக் கொள்கிறது.
(iv) சதுப்பு நில தாவரங்கள் நடுத்தர அளவு வளரக்கூடிய மரங்களாகும்.
(v) இவை கடற்கரை ஓரங்களிலும், முகத்துவாரங்களிலும் மிகையான உப்புகள் காணப்படும் நிலப்பகுதியிலும் வளரும் சிறப்பு வகை தாவரங்களாகும்.
47.
1. முழு ஆக்குத்திறன்
மரபியல் திறன்களைக் கொண்டுள்ள உயிருள்ள தாவரச் செல்களை ஊட்ட (கரைசல்) ஊடகத்தில் வளர்க்கும் போது - அது முழுத் தனித் தாவரமாக வளர்ச்சியடையும் பண்பு.
2. வேறுபாடுதல்
செல்களில் உயிரிய, வேதிய மற்றும் அமைப்பிய மாற்றங்களை ஏற்படுத்தி அவற்றைச் சிறப்பாக அமைப்பு மற்றும் பணியினை மேற்கொள்ளச் செய்தல்.
3. மறுவேறுபாடுறுதல்
(i) வேறுபாடுற்ற ஒரு செல் ⟶ மேலும் வேறுபாடுற்று மற்றொரு செல்லாக மாற்றமடைதல்.
(ii) ஊட்டச்சத்து ஊடகத்தில் கேலஸ் திசு ⟶ முழுத் தாவரமாதல்
4. வேறுபாடிழத்தல்
முதிர்ச்சியடைந்த செல்கள் ⟶ மீண்டும் ஆக்குத்திசுவாக மாறி ⟶ கேலஸ் போன்ற திசுவை உருவாக்கும் நிகழ்ச்சி (அவ்வாறு உயிருள்ள தாவர செல்களின் திசுக்களின் வேறுபாடுறுதலும், வேறுபாடிழத்தலும் உள்ளார்ந்து ஒரு சேரக் காணப்பட்டால் அவை முழுஆக்குத்திறன் பெற்றுள்ளதாக கருதப்படும்)
48.
49.
நம் கோளத்தின் நல்வாழ்விற்கும், உயிரிகள் நிலைத்திருப்பதற்கும், உயிரியப் பல்வகைத் தன்மை அவசியமானதாகும்.
உயிரிய பல்வகைத் தன்மையின் முக்கியத்துவம்
இதை கீழ்கண்ட கோணத்தில் நோக்கி அதனை அளவீடு செய்யலாம்.
1. சூழ்நிலை மண்டல சேவைகள்
2. உயிரிய வளங்கள்
3. உயிரிய பல்வகைத் தன்மையின் சமூகப்பயன்கள்
முக்கிய செயல்பாடுகள்:
(i) ஊட்டச்சத்து சுழற்சி அல்லது உயிரிய புவி (N2, C, H2O, P, S) சுழற்சிகளின் தொடர்ச்சி.
(ii) மண் நுண்ணியிரிகள் வெவ்வேறு ஊட்ட நிலை உறுப்பினர்களோடு சேர்ந்து மண் உருவாக்கம், சீரமைப்பு அல்லது மண் வள பராமரிப்பு ஆகியவை நடைபெறுதல்.
(iii) சூழ்நிலை மண்டலத்தின் உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் உணவு வளங்களை வழங்குதல்.
(iv) நீர் பிடிப்பு பகுதிகளாக, வடிகட்டிகளாக நீரோட்ட நெறி படுத்திகளாக மற்றும் நீர் சுத்திகரிப்பாளர்களாக செயல்படுதல்.
(v) தட்ப வெப்ப நிலையின் நிலைத்தன்மை, மழைப்பொழிவு, வெப்பநிலை நெறிப்படுத்துதல், Co2 உறிஞ்சப்படுதல், ஆகியவற்றிற்கு காடுகள் அவசியம். பதிலாக காடுகள் அங்குள்ள தாவரங்களின் வகைகளாகவும், அடர்த்தியையும் ஒழுங்குப்படுத்துகிறது.
(vi) காட்டு வளங்களின் மேலாண்மை மற்றும் நிலையான வளர்ச்சி.
(vii) உயிரியல் கூறுகளிடையே சமநிலையை பராமரித்தல்.
(viii) மனிதர்கள் உற்பத்தி செய்கின்ற குப்பைகள், கழிவு நீர், சாக்கடை மற்றும் வேளாண் கழிவுகள் ஆகியவற்றை சிதைப்பதில் நுண்ணுயிரிகள் மிகப்பெரிய பங்காற்றுகின்றன.
(ix) உணவு வளங்கள், மரபியல் வளங்கள், மருந்து வளங்கள் மற்றும் எதிர்கால உயிரிய வளங்கள் போன்றவற்றிற்கான சேமிப்பு இடமாக உயிரிய பல்வகைத் தன்மை மண்டலங்கள் உள்ளன.
(x) தனித்துவமான அழகு உணர்வு, சுற்றுச்சூழல் சுற்றுலா தலங்களைத் தருகிறது. சுற்றுலாவிற்கென வணிக முக்கியத்துவமும் உண்டு.
50.
(i) மனித சமுதாயத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாத ஒன்று.
(ii) குடியிருப்புகள், விவசாயம், சுரங்கம் அமைத்தல், தொழிற்சாலைகள், மற்றும் நெடுஞ்சாலைகள் அமைத்தல் போன்ற காரணங்களுக்காக உயிரினங்களின் இயற்கையான வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன.
(iii) இதன் விளைவாக உயிரினங்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள அல்லது வேறு இடங்களுக்கு நகர கட்டாயமாக்கப்படுகின்றன.
(iv) அதிக மக்கள் தொகை நெருக்கம், நகர மயமாக்கம், தொழில்மயமாக்கம், மற்றும் வேளாண்மை முன்னேற்றத்திற்கான நிலங்களின் தேவை, நீர் மற்றும் மூலப்பொருட்களின் தேவை ஒவ்வொரு ஆண்டுக்கும் அதிகரிக்கிறது.
(v) இதனால் சதுப்பு நிலங்களை நிரப்புதல், புல்வெளிகளை விளை நிலமாக்குதல், மரங்களை வெட்டுதல், ஆறுகளில் மணல் அள்ளுதல், மலைகளை குடைந்து சாலைகள் அமைத்தல் போன்ற பல செயல்கள் மூலம் இது சாத்தியமாகிறது.
(vi) வெப்ப மண்டல மழைக்காடுகள் இத்தகைய வாழிட அழிவிற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டாகும்.
(vii) புவிக் கோளின் நுரையீரல் என அழைக்கப்பட்ட அமேசான் மழைக் காடுகளின் பல பகுதிகள் வேளாண்மை மற்றும் மனித குடியிருப்புகளுக்காக அழிக்கப்பட்டுள்ளன.
(viii) நியூசிலாந்தின் 90% சதுப்பு நிலங்கள் அழிக்கப்பட்டு சோயாபீன்ஸ் பயிரிடவும், இறைச்சி தரும் கால்நடைகளுக்கு புல் வளர்ப்பிடமாகவும் மாற்றப்பட்டுள்ளன.
(ix) தமிழ்நாட்டில் கொடைக்கானல் மற்றும் நீலகிரி மலைகள் மனித ஆக்கிரமிப்புகளால் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன.
(x) இதன் விளைவாக தாவரங்கள், நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகின்றன. மற்றும் விலங்குகள் தம் வாழிடங்களை விட்டு வெளியேற வேண்டியுள்ளது.
51.
1. அனைத்து விலங்கினக் கூட்டத்தின் உள்ளார்ந்த நோக்கம் எண்ணிக்கை அதிகரிப்பதே ஆகும். ஆனால் எண்ணிக்கை எல்லையில்லாமல் அதிகரிப்பதில்லை.
2. சுற்றுச்சூழல் தாங்குதிறன் எல்லையை எட்டியவுடன், இனக்கூட்டத்தின் எண்ணிக்கை நிலையாகவோ, சுற்றுச்சூழல் நிலைகளுக்கேற்ப ஏற்ற இறக்கமாகவோ காணப்படும்.
3. இனக்கூட்டத் தொகையை பல காரணிகள் நெறிப்படுத்திக்கின்றன. அவை:
i) அடர்த்தி சாராதது - புறக் காரணிகள்
ii) அடர்த்தி சார்ந்தது - அகக் காரணிகள்
(i) உயிரினத்திற்கு கிடைக்கும் இடப்பரப்பு, வசிப்பிடம், தட்பவெப்பம், உணவு ஆகியன புறக் காரணிகள் ஆகும்.
(ii) போட்டி, கொன்றுண்ணுதல், வெளியேற்றம், உள்ளேற்றம் மற்றும் நோய்கள் ஆகியவை அகக் காரணிகள் ஆகும்.
52.
சிறு தானியங்கள் (Millets) - ஆப்ரிக்கா, ஆசியாவில், பழங்கால மக்களால் பயிரிடப்படும் சிறிய விதைகள், சிறுதானியங்கள் எனப்படும். தரசப் பரச பசையற்ற (குளூட்டன்) குறைவான சர்க்கரை கொண்ட தானியம்.
கேழ்வரகு (Finger Millet) (எல்லூசின் கோரகானா) கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து, இந்தியாவுக்கு வந்த கால்சியம் நிறைந்த பயிர்.
பயன்கள்:
(i) இந்தியத் தெற்கு மலைப்பகுதியில் முக்கிய உணவு.
(ii) கஞ்சி, கூழாகப் பயன்படும்.
(iii) ராகி மால்ட், ஊட்டச் சத்துப் பானம்.
(iv) கேழ்வரகு நொதிப்பானத் தயாரிப்பில் மூலப்பொருள்.
சோளம் (Sorghum) (சொர்கம் வல்கேர்)
உலகின் முக்கிய சிறுதானியங்களின் ஒன்று. கால்சியம். இரும்புச் சத்து உள்ளது.
பயன்கள் :
(i) கோழி, பறவை, பன்றி, கால்நடைத் தீவனம்.
(ii) சாராய பானங்கள் மூலப்பொருள்
மிகச் சிறு தானியங்கள் (Minor Millet)
தினை (Foxtail Millet) (சசெட்டேரியா இட்டாலிக்ஸ்)
(i) இந்தியாவின் பாரம்பரிய தினை வகைகளின் ஒன்று.
(ii) 6000 வருடங்களுக்கு முன் சீனாவில் வளர்க்கப்படுகிறது.
(iii) புரதம், கார்போஹைட்ரேட், விட்டமின் B, C, பொட்டாசியம், கால்சியம் நிறைந்தது.
பயன்கள்
இதய பலம், கண் பார்வை மேம்பாடு, பாலூட்டும் அன்னையர்க்குக் கொடுக்கப்படும்.
வரகு (பாஸ்பாலம் ஸ்குரோபிகுலேட்டம்)
மேற்கு ஆப்ரிக்காவில் பிறந்தது, நார்ச்சத்து, புரதம், கனிமம் நிறைந்தது.
பயன்கள்
வரகு மாவுக் களி, சிறுநீர் பெருக்கி, மலச்சிக்கல் குணமாகும். உடல் பருமனைக் குறைக்கும். இரத்தச் சர்க்கரை இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
53.
1. துவரை (Red gram) தோற்றம், விளையுமிடம்
தென்னிந்தியாவில் தோன்றிய ஒரே பருப்பு வகை மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகம், குஜராத்தில் பயிரிடப்படும்.
2. பாசிப்பயறு (Green gram) தோற்றம், விளையுமிடம்
இந்தியாவில் தோன்றியதற்கான தொல்லியல் சான்றுகள் மகாராஷ்டிராவில் கிடைத்தன. மத்தியப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாட்டில் அதிகப் பயிரிடப்படும்.
54.
தண்டு செல்கள்:
(i) பெரும்பாலான பல செல் உயிரிகளில் காணப்படும் வேறுபாடு அடையாத செல்கள் ‘மூலச் செல்கள்/குருத்தணுக்கள்/ஆதார செல்கள்/'தண்டு செல்கள்' ஆகும். இவை பல மறைமுகப் பிரிவுகளுக்கு உட்பட்டாலும் தங்களது வேறுபாடு அடையாத் தன்மையைத் தொடர்ந்து பராமரித்து வருகின்றன.
மருத்துவத் துறையில் அதன் பங்கு:
(i) சேதமுற்ற மற்றும் நோயுள்ள உறுப்புகளை மீண்டும் உருவாக்கி எதிர்கால மருத்துவத்துறையில் புரட்சி படைக்க தேவையான திறனுடன் மூலச் செல் ஆராய்ச்சிகள் விளங்குகின்றன.
(ii) தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இயல்புடைய மூலச் செல்கள் 'செல் திறனை' வெளிப்படுத்துகின்றன.
(iii) மூன்று வகை வளர்ச்சி அடுக்குகளான புற அடுக்கு, அக அடுக்கு மற்றும் நடு அடுக்கு ஆகிய அடுக்குகளிலிருந்து உருவாகும் அனைத்து வகை செல்களாகவும் மாறும் திறன் படைத்தவை மூலச் செல்களாகும்.
(iv) பாலூட்டிகளில் இரு முக்கிய மூலச் செல் வகைகள் காணப்படுகின்றன. அவை 'கருநிலை மூலச் செல்கள்' மற்றும் 'முதிர் மூலச் செல்கள்'. கருநிலை மூலச் செல்கள் பகுதித் திறன் கொண்டவை. அவற்றிற்கு புற அடுக்கு, நடு அடுக்கு மற்றும் அக அடுக்கு என்னும் மூன்று அடிப்படை வளர்ச்சி அடுக்குகளையும் உருவாக்கும் திறன் உள்ளது.
(v) கருநிலை செல்கள் பல்திறன் கொண்டவையாகவும் விளங்குகின்றன. அவை, பல்வகையான செல்களாக மாற்றமுறும் திறன் படைத்தவை. கருக்கோளத்தினுள் காணப்படும் செல்திரளின் மேற்பகுதி திசுக்களில் இருந்து கருநிலை மூலச் செல்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
(vi) கருநிலை மூலச் செல்கள் தூண்டப்படும்போது 200க்கும் மேற்பட்ட முதிர்ந்த உடலின் செல் வகைகளாக மாற்றமடையக்கூடும்.
(vii) கருநிலை மூலச் செல்கள் அழிவற்றவை. அதாவது கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊடகத்தில் அவை நன்கு வளர்ந்து தங்களது வேறுபடா நிலையைத் தொடர்ந்து பராமரிக்கவும் செய்கின்றன.
(viii) குழந்தைகள் மற்றும் முதிர்ந்த மனிதர்களின் பல்வேறு திசுக்களில் முதிர் மூலச் செல்கள் காணப்படுகின்றன. முதிர் மூலச் செல் அல்லது உடல் மூலச் செல் பிரிதலடைந்து தன்னைப் போன்றே மற்றொரு செல்லை உருவாக்க இயலும். பெரும்பாலான முதிர் மூலச் செல்கள் பல்திறன் கொண்டவை. இவை உடலின் சேதமுற்ற பாகங்களைச் சரி செய்யும் அமைப்பாகவும் முதிர் உயிரி திசுக்களைப் புதுப்பிக்கும் அமைப்பாகவும் திகழ்கின்றன. முதிர் மூலச் செல்களின் அதிகப்படியான உற்பத்திக்கு மூலாதாரமாக சிவப்பு மஜ்ஜை விளங்குகிறது.
(ix) மனித மூலச் செல்களின் மிக முக்கியமான திறன் வாய்ந்த பயன்பாடு என்னவெனில் செல் அடிப்படையிலான சிகிச்சைகளுக்குப் பயன்படும் செல்களையும் திசுக்களையும் உற்பத்தி செய்தல் ஆகும். மனித தண்டு செல்கள் புதிய மருந்துகளைச் சோதனை செய்து பார்க்க உதவுகின்றன.
55.
(i) ஆம், ஏனெனில் ELISA என்பது HIV நோய் வைரஸினைக் கண்டறிய உதவும் முதல் படிநிலை முறையாகும்.
(ii) நோயூக்கிக்கான HIV தொற்று கொண்ட நபரின் உடலில் உற்பத்தியாகும் எதிர்ப்பொருளின் அளவை வைத்து கண்டறியப்படுகிறது.
56.
டி.விரீஸின் திடீர் மாற்றக் கோட்பாடு:
1. திடீர் மாற்றம் என்பது உயிரினங்களில் ஏற்படும் உடனடியான சீரற்ற மற்றும் மரபுக்கடத்தலில் பங்கேற்காத மாற்றங்கள் ஆகும்.
எ.கா: அந்திமந்தாரை (ஈனோதீரா லாமார்க்கியானா) தாவரத்தில் ஆய்வு மேற்கொண்டு அதில் திடீர் மாற்றம் காரணமாக ஏற்பட்ட மாறுபாடுகளை கண்டறிந்தார்.
2. பெரிய மற்றும் உடனடியாக ஏற்படும் மாறுபாடுகள் மட்டுமே புதிய சிற்றினம் தோன்றுவதற்குக் காரணம்.
3. ஆனால் லாமார்க் மற்றும் டார்வின் ஆகியோர் உயிரினங்களில் ஏற்படும் படிப்படியான மாறுபாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து புதிய சிற்றினம் உருவாகக் காரணமாகிறது என்று விளக்கினார்.
திடீர் மாற்றக் கோட்பாட்டின் காரணமாக சிறப்புப் பண்புகள்:
1. திடீர் மாற்றம் அல்லது தொடர்ச்சியற்ற வேறுபாடுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும்.
2. இயற்கையாக இனப்பெருக்கம் செய்யும் இனக்கூட்டத்தில் அவ்வப்போது திடீர் மாற்றங்கள் ஏற்படும்.
3. திடீர் மாற்றம் முழுமையான நிகழ்வு இடைப்பட்ட உயிரினங்கள் காணப்படாது.
4. திடீர் மாற்றம் இயற்கை தேர்வுக்கு உட்பட்டது ஆகும்.
57.
தகவமைப்பு பரவல்:
1. இது ஒரு பரிணாம முறை.
2. ஒரு மூதாதை இனத்திலிருந்து புதிய சிற்றினங்கள் புதிய வாழிடங்கள் வாழ்வதற்கேற்ற தகவமைப்புகளுடன் தோன்றும் பரிணாம நிகழ்வு தகவமைப்பு பரவல் எனப்படும்.
டார்வின் குருவிகள்:
1. இப்பறவைகளின் மூதாதையர் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு காலபாகஸ் பகுதிக்கு வந்து சேர்ந்தவை
2. டார்வின் குருவிகள் 14 சிற்றினங்களாக பரிணமித்திருந்தன.
3. உடல் அளவு அலகின் வடிவம் மற்றும் உணவுப்பழக்கம் ஆகிய பண்புகள் வேறுபட்டிருந்தன.
4. உடல் அளவு மற்றும் அலகின் வடிவம் ஆகியவற்றால் ஏற்பட்ட மாறுபாடுகளால் அவை வெவ்வேறு வகை உணவுகளான பூச்சிகள் விதைகள் கள்ளித் தாவரத்தின் மகரந்தத் தேன் மற்றும் உடும்பின் இரத்தம் ஆகியவற்றை உண்ண முடிகிறது.
5. ALX, மரபணுக்களால் ஏற்பட்ட மரபணு மாற்றங்களே வெவ்வேறு வகை அலகு வடிவங்களுக்கு காரணமாகும்.
ஆஸ்திரேலியாவின் பைப்பாலூட்டிகள்:
1. இவைகள் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பொது மூதாதையரிடம் இருந்து தனியாக தோன்றின.
2. ஆஸ்திரேலிய பைப்பாலூட்டிகள் தகவமைப்பு பரவல் மூலம் ஆஸ்திரேலியாவின் வெவ்வேறு வாழிடங்களில் பரவலாக வாழ்கின்றன.
58.
(i) சடுதி மாற்றப் பயிர்பெருக்கம் தான் தற்போது பயன்படுத்தப்படும் மிகச்சிறந்த வழிமுறையாகும்.
(ii) முல்லர் மற்றும் ஸ்டேட்லர் தான் சடுதிமாற்ற பயிர் பெருக்கம் என்ற சொல்லை உருவாக்கினார்கள்.
(iii) இது மரபுவழிப் பயிர்பெருக்க உத்திகளில் மேற்கொள்ளப்படும் புதிய வழிமுறையைக் குறிக்கிறது.
(iv) இது மரபுவழிமுறைகளிலுள்ள குறைபாடுகளை உழவியல் மற்றும் பயிரின் தரப்பண்புகளை மேம்படுத்தும் முறையாகும்.
(v) இது விதையிலாப் பயிர்களை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் ஒரே வழிமுறையாகும்.
(vi) இயற்கை காரணிகள் - புறஊதாக்கதிர்கள், எக்ஸ்ரே, ஆல்பா, பீட்டா, காமா, போன்ற கதிர்வீச்சுகள்.
(vii) வேதியியல் காரணிகள் - சீசியம், இதைல் மீத்தேன், சல்போனேட் மற்றும் யூரியா போன்றவை.
(viii) இதுபோன்ற காரணிகள் புதிய இரகப் பயிரை உருவாக்க சடுதிமாற்றத்தை தூண்டுகின்றன.
(x) சடுதி மாற்றம் மூலம் மரபணு கொண்ட குறு இரகக் கோதுமை
(xi) உவர்தன்மை மற்றும் பூச்சி எதிர்ப்பு தன்மை கொண்ட அடோமிகா 2 அரிசி ரகம்.
59.
60.
1. உயிரிய உரங்கள் என்பது மண்ணின் ஊட்டச்சத்து தரத்தை வளப்படுத்தக் கூடிய உயிருள்ள நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்டதாகும்.
2. இவை பல ஊட்டச்சத்துகள் மற்றும் போதுமான அளவு கரிமப் பொருட்களை வழங்கி மண்ணின் அமைப்பு முறை, கட்டமைப்பு, நீர் சேமிப்புத் திறன், நேர்மின் அயனி பரிமாற்றத் திறன் மற்றும் கார அமிலத் தன்மை (pH) போன்ற இயற்பிய வேதிய பண்புகளை அதிகரிக்கச் செய்கிறது.
3. உயிர் உரங்களின் முக்கிய மூலாதாரங்கள் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் சயனோபாக்டீரியா ஆகும்.
பாக்டீரியா:
1. ரைசோபியம் இணைந்து வாழக்கூடிய நைட்ரஜனை நிலை நிறுத்தும் பாக்டீரியா ஆகும்.
2. இந்த பாக்டீரியா பயறு வகை தாவரங்களின் வேர், முடிச்சுகளில் தொற்றி வளிமண்டல நைட்ரஜனை கரிம வடிவில் நிலைப்படுத்துகின்றன.
3. அசோஸ்பைரில்லம் மற்றும் அசோட்டோபாக்டர் போன்றவை தனித்து வாழும் பாக்டீரியாக்கள்.
4. இவை வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தி மண்ணின் நைட்ரஜன் அளவை அதிகப்படுத்துகின்றன.
மைக்கோரைசா:
பூஞ்சைகளும் தாவரங்களின் வேர்களும் இணைந்து வாழும் அமைப்பு ஆகும்.
1. இணை வாழ் உயிரியான பூஞ்சை மண்ணிலிருந்து பாஸ்பரஸை உறிஞ்சி தாவரங்களுக்கு அளிக்கின்றது
2. மேலும் இந்த தாவரங்கள் வேரிலுள்ள நோயூக்கிகளுக்கு எதிரான எதிர்ப்பு திறன், உப்புத் தன்மை மற்றும் வறட்சி தாங்கு திறன், தாவர வளர்ச்சியை மேம்படுத்துதல் போன்ற பிற நன்மைகளையும் பெறுகின்றன.
3. எடுத்துக்காட்டாக, குளோமஸ் என்ற பேரினத்தின் பல உறுப்பு இனங்கள் இத்தகைய மைக்கோரைசாவை ஏற்படுத்துகின்றன.
சயனோ பாக்டீரியா (அ) நீலப் பசும்பாசிகள்:
1. இவை தனித்து வாழ்ந்து நைட்ரஜனை நிலைப்படுத்தும் புரோகேரியாட்டிக் உயிரிகள் ஆகும். எ.கா. ஆசிலாக்டோரியா, நாஸ்டாக், அனபீனா, டோலிபோத்ரிக்ஸ்.
2. இங்கு அவை பெருக்கமடைந்து மூலக்கூறு நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றன.
3. இவை இன்டோல் - 3 - அசிட்டிக் அமிலம், இண்டோல் - 3 - பியூட்டைரிக் அமிலம், நாப்தலீன் அசிட்டிக் அமிலம், அமினோ அமிலங்கள், புரதங்கள், வைட்டமின்கள் போன்ற தாவர வளர்ச்சி மற்றும் உற்பத்தியை தூண்டும் பொருட்களை சுரக்கின்றன.
இவ்வாறு உயிரிய உரங்கள் பொதுவாக இயற்கை வேளாண்மை முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கையான வழிகளில் தாவரங்களை பயிர் செய்தல் மற்றும் விலங்குகளை வளர்த்தல் இயற்கை வேளாண்மை ஆகும்.
61.
இயற்கை வேளாண்மையின் முக்கியப் பண்புகள்:
1. கரிமப் பொருட்களை பயன்படுத்தி மண்ணின் தரம் பாதுகாத்தல் மற்றும் உயிரிய செயல்பாடுகளை ஊக்குவித்தல்.
2. மண்வாழ் உயிரிகளை பயன்படுத்தி பயிர்களுக்கு ஊட்டச் சத்துகளை மறைமுகமாக அளித்தல்
3. பயறு வகை தாவரங்களை பயன்படுத்தி மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்துதல்
4. பயிர் சுழற்சி, உயிரியப் பல்வகைத்த தன்மை, இயற்கையான கொன்றுண்ணிகள், இயற்கை உரங்கள் மற்றும் பொருத்தமான வேதிய, வெப்ப மற்றும் உயிரிய தலையீடுகள் போன்ற முறைகளால் களை மற்றும் தீங்குயிர்கள் கட்டுப்படுத்துதல்.
62.
1. இம்யூனோகுளோபுலின் நான்கு பாலிபெப்டைடு சங்கிலிகளை கொண்டதாகும்.
2. அவற்றில் ஒத்த அமைப்புடைய நீளம் குறைவான சங்கிலிகளும் மற்றும் நீளம் அதிகமான இரண்டு கனமான சங்கிலிகளும் உண்டு.
3. இலகுவான சங்கிலிகளின் மூலக்கூறு எடை ஏறத்தாழ 25,000 டால்டன் மற்றும் ஏறத்தாழ 214 அமினோ அமிலம் கொண்டது.
4. கனமான சங்கிலிகளின் மூலக்கூறு எடை ஏறத்தாழ 50,000 டால்டன் மற்றும் ஏறத்தாழ 450 அமினோ அமிலம் கொண்டதாகும்.
5. ஒவ்வொரு இலகுவான சங்கிலி ஒரு கனமான சங்கிலியுடனும் அதே நேரத்தில் இரண்டு கனமான சங்கிலியும் ஒன்றுடன் ஒன்று டை-சல்பைடு பிணைப்பால் இணைக்கப்பட்டுள்ளன
6. ஏறத்தாழ நடுப்பகுதியில், அசையும் கீல் அமைப்பினை கன சங்கிலிகள் பெற்றுள்ளன
7.ஒவ்வொரு சங்கிலியும் இரு முனைகள் கொண்டுள்ளன அவை C - முனை மற்றும் N - முனை
8. ஒரு இம்யூனோகுளோபுலினில் இரண்டு பகுதிகள் உண்டு N - முனையில் - மாறுபடும் பகுதி (V - region) C - முனையில் - நிலையான பகுதி (C - region ) காணப்படுகிறது.
63.
64.
| பண்பு | RNA | DNA | |
| 1 | இழைகள் | ஓரிழையானது | இரண்டு இழைகளால் ஆனது விதிவிலக்கு - சில DNA வைரஸ்கள் |
| 2 | சர்க்கரை | ரிபோஸ் சர்க்கரை | டி - ஆக்சிரைபோஸ் சர்க்கரை |
| 3 | நைட்ரஜன் காரங்கள் | அடினைன், குவானைன் யூராசில் மற்றும் சைட்டோசின் | அடினைன், குவானைன் தயமின் மற்றும் யூராசில் |
65.
1. இணைப்பு மூலக்கூறு - என்ற சொற்களை உருவாக்கியவர் ஃபிரான்சிஸ் கிரிக்.
2. கிராம்பு இலை வடிவத்தை ஒத்திருக்கும் இரண்டாம் நிலை கட்டமைப்புடைய கடத்து RNA(tRNA) அமைப்பானது அதன் பணிகளுக்கு ஏற்றதாக உள்ளது.
3. தூது RNA மூலக்கூறிலுள்ள அமினோ அமிலங்களுக்கான குறிப்பிட்ட குறியீடுகளை படிப்பதும் கூடவே செல்லின் சைட்டோபிளாசத்தில் சிதறிக் கிடைக்கும் அமினோ அமிலங்களை புரதம் தயாரிக்கும் இடத்திற்கு எடுத்து வரும் கடத்தியதாக செயல்படுதலும் ஆகிய இரு பணிகளை செய்வதால் கடத்து RNA இணைப்பு மூலக்கூறுகள் என வழங்கப்படுகின்றன.
66.
| நோய்கள் | நோய்க்காரணி | அறிகுறிகள் |
| அஸ்காரியாசிஸ் | அஸ்காரிஸ் | |
| டிரைகோஃபைட்டான் | உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட, செதில் புண்கள் காணப்படுதல். |
|
| டைபாய்டு | சால்மோனெல்லா | அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல். |
| நிமோனியா | ஸ்ட்ரெப்டோகாக்கஸ் | காய்ச்சல், இருமல் வலியுடன் கூடிய சுவாசம் மற்றும் பழுப்பு நிற சளி. |
67.
68.
1. கோவில் காடுகள் சமூகங்களால் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட மரங்களின் தொகுப்புகளாகும் (or) தோட்டங்களாகும்.
2. சமூகத்தின் பாதுகாப்பிற்காக ஒரு குறிப்பிட்ட சமயச் சித்தாங்களைக் கொண்டிருக்கும் வலுவான மத நம்பிக்கையை கொண்டவை.
3. இவை நீர்ப்பாசனம், தீவனம், மருத்துவத் தாவரங்கள் மற்றும் நுண் காலநிலை கட்டுப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதன் மூலம் ஏராளமான சுற்றுச்சூழல் அமைப்புச் சேவைகளை அண்டை பகுதிகளுக்கு வழங்கும்.
4. கோவில் காடுகள் நிலத்தடி நீரை பாதுகாத்தல் மண்ணரிப்பை தடுத்தல், மண்ணின் வளத்தை பாதுகாக்கிறது.
5. கோவில் காடுகளில் ஆயுர்வேத மருத்துவ தாவரங்கள். மேலும் அச்சுறுத்தப்படும் சிற்றினங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
6. அச்சுறுத்தலுக்குண்டான சிற்றினங்களுக்கு உறைவிடம் மற்றும் பராமரிப்பு வழங்குவதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கான கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களையும் பெற்றுத் தருகின்றன.
7. ஒவ்வொரு கிராமத்துக் கோயில் காடுகளும் ஐய்யனார் அல்லது அம்மன் போன்ற கிராம ஆண், பெண் தெய்வங்களின் உறைவிடமாகவே கருதப்படுகின்றன.
8. தமிழ்நாடு முழுவதும் 448 கோயில் காடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன
69.
1. காடுகள் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவை மட்டுப்படுத்துகிறது.
2. காடுகள் அதிகமானால் வளிமண்டல கார்பன்-டை -ஆக்ஸைடை நீக்குவதுடன் உலகளாவிய கால நிலை மாற்றம் குறைக்கப்படும்.
3. காலநிலையை உறுதிப்படுத்துவதில் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
4. காடுகள் சூழியல் மண்டலம் மற்றும் பல்லுயிரி (Bio-diversity) களை பாதுகாப்பதுடன் கார்பன் சுழற்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது.
5. வெப்பமண்டல காடுகளில் உள்ள மரங்களின் இலைகளின் வழியாக வெளியேற்றப்படும் நீராவியானது முகில் சூழ் வானத்தை உருவாக்குவதுடன், வெப்பத்தை குறைக்கவும் செய்கின்றது.
6. காடுகள் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரித்து காற்றின் தரத்தை உயர்த்துகிறது.
70.
மட்குப்பொருள் (சிதைவுக்கூளம்) உணவுச்சங்கிலி அனைத்து சூழல் மண்டலத்திற்கும் பொதுவானது.
மட்குப்பொருள் உணவுச்சங்கிலி:
1. இந்த உணவுச்சங்கிலி இறந்த கரிமபொருட்களிலிருந்து தொடங்குகிறது. இது முக்கிய ஆற்றல் மூலமாக உள்ளது.
2. அதிகப்படியான கரிமப்பொருள்கள் இறந்த தாவரங்கள் விலங்குகள் மற்றும் அவற்றின் கழிவு பொருட்களிலிருந்து பெறப்படுகிறது.
3. இறந்த உயிரிகளின் கரிமப்பொருட்கள் மறுசுழற்சி மற்றும் அதன் சமநிலையை தக்கவைக்கவும் சூழ்நிலை மண்டலத்தில் இது முக்கியமான உணவு சங்கிலியாகும்.
71.
1. உற்பத்தியாளர்களிடமிருந்து ஆற்றல் இறுதி உண்ணிகள் வரை கடத்தப்படுவது உணவுச் சங்கிலி என்று அழைக்கப்படுகிறது.
2. இந்த உணவுச் சங்கிலியில் ஆற்றல் உற்பத்தியாளர்களிடமிருந்து (தாவரங்கள்) ➝ முதல்நிலை நுகர்வோர்கள் (வெட்டுக்கிளி) ➝ இரண்டாம் நிலை நுகர்வோர்கள் (தவளை) ➝ மூன்றாம் நிலை நுகர்வோர் (பாம்பு) ➝ கொன்று தின்பவை (பருந்து) முதலியவற்றிற்கு கடத்தப்படுகிறது.
3. இது நேர்க்கோட்டில் அமைந்த பின்னல் இணைப்பை வெளிப்படுத்துகிறது.

72.
ஃபீஷர் மற்றும் ரேஸ் கருதுகோள்:
(i) Rh காரணியின் மூன்று வெவ்வேறு அல்லீல் இணைகள் குரோமோசோம் இணைகளின் நெருக்கமான மூன்று வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளன.(Cc,Dd Ee)
(ii) இது பொதுவாக cde என்ற பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது.
(iii) ஒவ்வொரு குரோமோசோம் C அல்லது c ஒரு D அல்லது d, ஒரு E அல்லது e வாய்ப்புகளை மரபு வகையைப் பெற்றிருக்கும்.
(iv) எ.கா /cde
CdE/eDe
Cde/cde
CDe
CDe/CdE

(v) அனைத்து மரபு வகைகளிலும் உள்ள ஓங்கிய D அல்லீல்கள் Rh+ புறத்தோற்ற வகையை உருவாக்குகின்றன.
(vi) இரண்டு ஓங்கிய பண்பு கொண்ட மரபு வகையில் dd அல்லீல்கள் Rh- புறத்தோற்ற வகையை உற்பத்தி செய்கின்றன.
வெய்னரின் கருதுகோள் :
(i) ஒரு Rh னுடைய இருப்பிடத்தில் எட்டு அல்லீல்கள் (R1R2R0RZr 1r11r1) இருக்கின்றன.
(ii) ஓங்கிய அல்லீல்களைக் கொண்ட அனைத்து மரபு வகைகளும்(R1R2R0RZ) Rh (+) புறத்தோற்ற வகையை உற்பத்தி செய்கின்றன.
(iii) ஒடுங்கிய பண்பு கொண்ட அனைத்து மரபு வகைகளும் (rr rr1rr11ry) Rh-புறத்தோற்றத்தையும் உற்பத்தி செய்கின்றன.
73.
பாலினப்பெருக்க உயிரிகளில் முதல்நிலை பாலுறுப்புகளிலிருந்து விந்துக்களும் அண்ட செல்களும் உருவாகும் நிகழ்ச்சி இனச்செல் உருவாக்கம் எனப்படும். இச்செயல்பாட்டில் குன்றல் பகுப்பு முக்கியப்பங்கு வகிக்கிறது.
74.
(i) hCG - மனித கோரியானிக் கொனடோடிராபின்
(ii) hCS - மனித கோரியானிக் சோமட்டோமாம்மோட்ரோபின்
(iii) hPL - மனித பிளாசன்டல் லாக்டோஜன்
(iv) ஈஸ்ட்ரோஜன்
(v) புரோஜெஸ்டிரான்
(vi) ரிலாக்ஸின்
75.
(i) தீவிர மூளை வளர்ச்சி குறைபாடு
(ii) மைய நரம்பு மண்டல வளர்ச்சி பாதிக்கப்படுதல்
(iii) தட்டையான மூக்கு
(iv) செவி குறைபாடு
(v) வாய் எப்போதும் திறந்திருத்தல்
(vi) நாக்கு வெளியே நீட்டியவாறு இருத்தல்
76.
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறுக்கேற்றத்தின்போது உருவாகும் DNA மறு கூட்டிணைவு மாதிரி ஹாலிடேவின் கலப்பு மாதிரியாகும்.
1964ல் ராபின் ஹாலிடே என்பவரால் முன்மொழியப்பட்டது
படிநிலைகள்:
1. ஒத்திசைவு DNA மூலக்கூறுகள் அதன் இரட்டிப்படைந்த DNA பிரதிகளுடன் அருகமைந்து இணை சேர்கிறது.
2. DNA வின் ஒரு இழை எண்டோநியூக்ளியேஸ் நொதி மூலம் துண்டிக்கப்படுகிறது.
3. துண்டான இழைகள் குறுக்கமைந்து ஒத்திசைந்த இழையுடன் இணைந்து ஹாலிடே சந்திப்பு உருவாகிறது.
4. இது தோன்றிய இடத்திலிருந்து இடம் பெயர்கிறது. இது கிளை இடப்பெயர்வு - எனப்படுகிறது.
5. வேற்றமைந்த ஈரிழைபகுதி உருவாகிறது
6. DNA இழைகள் துண்டிக்கப்படுத்தல் V வழியாக கிடைமட்ட மாதிரி (H வழியாக) செங்குத்தான துண்டிப்பு நிகழ்ந்தால் மறுகூட்டிணைவுடன் கூடிய வேற்றமைந்த ஈரிழை உருவாகும்.
7. கிடைமட்டத்துண்டிப்பு -நிகழ்ந்தால் மறு கூட்டிணைவு அற்ற வேற்றமைந்த ஈரிழை உருவாகும்.
77.
ஒத்திசைவு குரோமோசோம் இணைகளின் சகோதரி அல்லாத குரோமோடிட்களுக்கிடையே இணையான துண்டுகள் பரிமாற்றப்பட்டு புதிய மரபணு சேர்க்கை தோன்றும் உயிரிய நிகழ்விற்குக் குறுக்கேற்றம் என்று பெயர்.
இதில் பல நிலைகளை உடையது
1) இணை சேர்தல்
2) நான்கமை உருவாதல்
3) குறுக்கேற்றம் மற்றும் முடிவுறுதல்
i) இணை சேர்தல்:
புரோபேஸ் 1 இன் சைக்கோட்டின் நிலையில் இரண்டு ஒத்திசைவு குரோமோசோம்களுக்கிடையே நெருங்கிய இணை உருவாகிறது.
இது இரட்டை இணை (அ) பைவாலண்ட், இது இணைசேர்தல் (அ) சினாப்சிஸ் என்று பெயர் இணைதல் தொடங்குவதைப் பெருத்து 3 வகைப்படும்.
1. மையம் தொடங்கி இணைசேர்தல்
2. நுனி தொடங்கி இணைசேர்தல்
3. இடையிலா இணை சேர்தல்
ii) நான்கமை உருவாதல்:
இரட்டை இலையில் -இரண்டு ஒத்த அமைப்புடைய சகோதரி குரோமாடிட்களை உருவாகத் தொடங்குகிறது - இதில் நான்கு குரோமோடிடுகளைப் பெற்றிருக்கிறது -நான்கமை நிலை என்று
iii) குறுக்கேற்றம்:
பாக்கிடீன் நிலையில் குறுக்கேற்றம் நிகழ்கிறது-
ஒத்திசைவு குரோமோசோம்களின் சகோதரி அல்லாத குரோமோடிடுகளுக்கிடையேே இணைவுப்புள்ளிகள் (கயாஸ்மாக்கள்)- எனும் (X) வடிவ அமைப்பு உருவாகிறது. இவற்றில் குரோமோடிடுகள் உடைந்து துண்டுகள் பரஸ்பரம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
1) அண்மைக்கால ஆய்வு: மேம்படுத்தப்பட்ட இழை அமைப்பு கொண்ட இணை பிணைப்புக் கூட்டமைப்பு -இணைசேர்தல் (அ) கயாஸ்மா தோன்றுதலுக்கு வழி வகுக்கிறது. (விதி விலக்கு - சில ஆண் டுரோசோஃபிலா வில் இணைப்பிணைப்புக் கூட்டமைப்பு உருவாவதில்லை)
iv) முடிவுறுதல்:
குறுக்கேற்றத்தின் பின் கயாஸ்மாவானது குரோமாடிட்களின் நுனிப்பகுதியை நோக்கி நகர்கிறது இது முடிவுறுத்தல் எனப்படுகிறது. ஒத்திசைவு குரோமோசோம்கள் முழுமையாகப் பிரிகிறது.
78.
(i) குட்டி ஈனும் உயிரிகளின் இளம் உயிர் தாயின் கருப்பையில் வளர்கிறது.
(ii) முட்டையிடும் உயிரிகள் முட்டையை வெளியே இடுகிறது.
(iii) அந்த முட்டையின் வளர்ச்சியை, வெளிப்புறச் சுற்று சூழலை கட்டுப்படுத்துகிறது.
(iv) எனவே முட்டையிடும் விலங்குகளின் சேய்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
79.
(i) பாலிலா இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் பெற்றோர்களின் பண்புகளையே கொண்டிருக்கும்.
(ii) இதையே பிரதி எனவும் சொல்லலாம்.
(iii) பிரதி என்பது பெற்றோரின் சாயலை கொண்ட சேய்களாகும்.
80.
| பண்புகள் | செயல்/பணி | |
| அ | தன்னிச்சையாகப் பெருக்கமடைய திறன் | ஓம்புயிரி செல்களுக்குள் அவற்றுடைய DNA செருகலுடன் தன்னிச்சையாக பெருக்கமடைந்து பல மடங்கு நகல்களை உற்பத்தி செய்கிறது. |
| ஆ. | சிறிய அளவு -குறைந்த மூலக்கூறு எடை கொண்டிருக்க வேண்டும் (10kb க்கும் குறைவு) | இதனால் ஓம்புயிரி செல்லுக்குள் நுழைத்தால், மாறுதல் எளிதாகிறது. |
| இ. | பெருக்கமடைதல் தோற்றுவிக்க காணப்பட வேண்டும்.(Ori) | காணப்பட்டால் மட்டுமே ஓம்புயிரி செல்லுக்குள் தன்னிச்சையாகப் பெருக்கமடைய இயலும். |
| ஈ. | அடையாளக் குறி (உயிரி எதிர்ப்பொருள் தடுப்பு) கொண்டிருக்க வேண்டும். | இதனால் மரபணு மாற்றமடைந்த ஓம்புயிரி செல்லுக்குள் அதனை அடையாளம் கண்டறிய முடியும். |
| உ. | DNA செருகலோடு ஒருங்கிணைவதற்கு தனிப்பட்ட இலக்குக் கலங்களைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தாங்கியிருக்கும் DNA செருகலுடன் சேர்ந்து ஓம்புயிரி செல்லின் மரபணு தொகுப்புடன் ஒருங்கிணையும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். | இதனால் ஓம்புயிரியின் மரபணு தொகுப்புக்குள் எடுத்துச் செல்லப்பட இயலும். |
| ஊ. | ஒன்று (அ) ஒன்றுக்கு மேற்பட்ட நகலாக்க களங்கள் (MCS) கொண்டிருப்பது சிறப்பானது. | MCS இருப்பதால் தேவைப்படும் தடைக்கட்டு நொதிகளின் பயன்பாட்டிற்கு வழிவகை செய்கிறது. |
81.
1. 21 ஆம் நூற்றாண்டின் மிகவும் முக்கியமான பயன்பாட்டு அறிவியல்களில் முக்கியமானது.
2. வாழ்வை பயனுள்ள முறையில் செலவிட நமக்குள்ள ஒரு நம்பத்தகுந்த துறையாகும்.
3. பரந்துபட்ட பயன்பாடு வேளாண்மை, மருத்துவம், சூழல், வணிக தொழில்கள் போன்றவை
4. மரபணு மற்றும் தாவரவகைகள் போன்ற அதிக மதிப்புள்ள விளைவுகள்
Bt. பருத்தி, அரிசி, தக்காளி, புகையிலை, காலிஃபிளவர், உருளை, வாழை போன்றவை
5. மரபணு மாற்ற வேளாண் தாவர வகைகள் நோயெதிர்ப்பு திறன், களைக்கொல்லி எதிர்ப்புத்தன்மை, இறுக்க எதிர்ப்பு தன்மை
6. உயிர்தொழில் நுட்ப தொழிற்சாலையின் மிகப்பெரிய சாதனை (மருத்துவம்) இன்சுலின், இரத்தப்புரத உற்பத்தி, தடுப்பூசி மருந்து, நொதிகள், உயிரி எதிர்ப்புப் பொருட்கள், பால் சார்ந்த தயாரிப்புகள், பானங்கள் போன்றவை.
7. உயிரி சில்லுகள் அடிப்படையாகக் கொண்ட உயிரிய கணினி உருவாக்குதல்.
8. மரபணுப் பொறியியல் மரபணு கையாளுதல், திட்ட வளர்ப்பு (முழு ஆக்குத்திறன்)
9. SCP - ஸ்பைருலினா - (உணவு தொழிற்சாலை)
10 இரண்டாம் நிலை வளர்ச்சிதைப் பொருட்கள் உயிரி உரங்கள், உயிரி பூச்சிக் கொல்லிகள் மற்றும் நொதிகள் போன்றன.
11. சூழல் சார் உயிரி தொழில் நுட்பம் உயிரித்திரள் ஆற்றல், உயிரி எரிபொருள், உயிரி சீரமைப்பாக்கம், தாவர சீரமைப்பதால்
82.
ஓங்குத் தன்மை விதி: பண்புகள் - காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. எதிரிப் பண்புகளுக்கான இணைக் காரணிகளில் ஒன்று ஓங்கு தன்மையுடனும் மற்றொன்று ஒடுங்கு தன்மையுடனும் காணப்படும்.
ஒரு பண்பு கலப்பு:
F1 - ஐப் பொறுத்தவரை வெளிப்படாத ஒடுங்கு பண்பு மறைவாயிலிருந்து F2 - வில் மீண்டும் வெளிப்பட்டது.
83.
(i) கணித மற்றும் புள்ளியியல் மற்றும் நிகழ்வு விரைவு முறை அணுகு முறை
(ii) கையாண்ட முறைகளின் துல்லியமான புள்ளியியல் நிகழ்வுகள்
(iii) பட்டாணித் தாவரத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட எதிரிடைப் பண்புகள் - தனிப்பட்ட குரோமோசோம்களில் உள்ள காரணிகளால் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது.
(iv) தூயகால்வழி பெற்றோர்கள் - தேர்ந்தெடுப்பது பல தலைமுறைகளில் தற்கலப்பு மேற்கொண்டது.
(v) அனைத்துக்கும் மேல் தோட்டப்பட்டாணியைத் (Pisum sativum) தெரிவு செய்தது - அதன் சாதகமான பண்புகள்
(vi) ஒரு பருவ தாவரம் பல தலைமுறைகளை ஆய்வு செய்ய இயலும்.
(vii) ஒற்றை மரபணுவால் கட்டுப்படுத்தப்பட எதிரிடைப் பண்புகள் தெளிவானவை.
(viii) இயல்பான தற்கருவுருதல்
(x) பெரிய மலர்களாதலால், ஆண் மடலாக்கம், மகரந்தச் சேர்க்கை மற்றும் கலப்புறுதல் எளிதானது.
84.
ஒரு சில சிற்றினங்களில் (ஒரு சூலறையுடைய மென் சூல்திசு கொண்ட) சூலுறையின் உள்ளடுக்கு சிறப்பு பெற்று, கருப்பையின் ஊட்டத்திற்கு உதவுகின்றது. இந்த அடுக்கு எண்டோதீசியம் அல்லது சூலுறை டபீட்டம் (Integumentary tapetum) எனப்படும். (எ.கா) ஆஸ்டரேசி
85.
i) இருகால முதிர்வு (Dichogamy)
மகரந்தப்பையும், சூலக முடியும் வெவ்வேறு காலங்களில் முதிர்ச்சி அடையும்.
அ) ஆண் முன் முதிர்வு (Proandry)
மகரந்த தாள்கள், சூலக முடிக்கு முன்னரே முதிர்ச்சி அடையும் (எ.கா) ஹீலியாந்தஸ்.
ஆ) பெண்முன் முதிர்வு (Protogyny) (புரோடோகைனி)
சூலக முடி மகரந்ததாளுக்கு முன்னரே முதிர்ச்சியடையும் (எ.கா) அரிஸ்டலோகியா.
ii) பாலுறுப்பு தனிப்படுத்தல் (Herkogamy)
மகரந்தத்தாளும், சூலக முடியும் அமைந்திருக்கும் விதம், மகரந்தச் சேர்க்கையைத் தடுக்கும்.
(எ.கா) குளோரியோசா சூபர்பா
86.
ஒவ்வொரு உயிரினமும் அதன் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப வினைபுரிகின்றன. உயிரினங்கள் பல்வேறு வகைகளில் உயிரற்ற காரணிகளுக்கேற்ப துலங்கல்களை வெளிப்படுத்துகின்றன. சில உயிரினங்கள் மாறாத உடல் செயலியில் மற்றும் புறத்தோற்ற நிலைகளைப் பராமரிக்கின்றன. சில உயிரினங்கள் சுற்றுச்சூழல் மாற்றங்களைத் தாங்கிக் கொள்வதற்கான செயல்களைச் செய்கின்றன. இதுவும் ஒரு துலங்கல் வினையாகக் கருதப்படும்.
விலங்குகளில் உள்ள துலங்கல்களின் வகைகள்:
i) ஒழுங்கமைவு:
சில விலங்கினங்கள் உடற்செயலியல் செயல்கள் மூலம் சீரான தன்நிலை காத்தலைப் பராமரிக்கின்றன அச்செயல்பாடுகள் வழியாக உடலின் வெப்பநிலை, அயனிகள், ஊடுகலப்பு சமன் ஆகியவை உறுதி செய்யப்படுகின்றன.
எ.கா: பறவைகள், பாலூட்டிகள் மற்றும் சில எளிய முதுகுநாணிகள், மற்றும் முதுகு நாணற்ற சிற்றினங்கள்.
ii) ஒத்தமைவு:
பெரும்பாலான விலங்குகளால் உள்சூழ்நிலைகளை நிலையாகப் பராமரிக்க முடிவதில்லை. அவற்றின் உடல் வெப்பநிலை சுற்றுசூழல் வெப்பநிலைக்கேற்ப மாறுகிறது. மீன்கள் போன்ற நீர்வாழ் உயிரிகளில், உடல் திரவத்தின் ஊடுகலப்புச் செறிவு சுற்றுச்சூழலில் உள்ள நீரின் ஊடுகலப்புச் செறிவிற்கேற்ப மாற்றமடைகிறது.
இத்தகைய விலங்குகள் ஒத்தமைவான்கள் எனப்படும். அதீத சூழல்களில் விலங்கினங்கள் வலசை போவதன் மூலம் தங்களின் வாழிடங்களை இடம் மாற்றிக் கொள்கின்றன.
iii) வலசை போதல்:
ஒரு வாழிடத்தில் வாழும் விலங்குகள் அங்கு வாழும் அதிக சூழல் அழுத்தத்திலிருந்து தப்பிக்க, இடம்பெயர்ந்து அதன் வாழிடத்தில் சூழல் அழுத்தம் நீங்கும்போது அவை மீண்டும் தனது பழைய இடத்திற்கு வருகின்றன.
சைபீரியாவில் வாழும் பறவைகள் கடுங்குளிர் பருவத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வலசை போதல் முறையில் இடம்பெயர்ந்து தமிழ்நாட்டின் வேடந்தாங்கல் பகுதிக்கு வருகின்றன.
iv) செயலற்ற நிலை:
சில சமயம், விலங்கினங்கள் இடம்பெயர்ந்து செல்ல இயலாத சூழலில் சூழல் அழுத்தத்திலிருந்து விடுபட செயலற்ற நிலைத்தன்மையை மேற்கொள்கின்றன. சில கரடிகள் குளிர்காலங்களில் குளிர் உறக்கத்தையும், சில நத்தைகள் மற்றும் மீன்கள் போன்றவை வெப்பம் மற்றும் வறட்சி போன்ற வெப்பம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து விடுபட கோடைகால உறக்கத்தையும். மேற்கொள்கின்றன. சில எளிய வகை உயிரினங்கள் அதன் வாழ்க்கை சுழற்சியின் சில நிலைகளை இடைநிறுத்தம் செய்து கொள்கின்றன. இது "வளர்ச்சித் தடை நிலை" எனப்படும்.
87.
1).குடும்ப நலத்திட்டம்(1951)
2) இனப்பெருக்க, குழந்தை நலம் பாதுகாப்பு (RCH) இதன் பெரும்பணிகள்
(i) உடல்நலம், மிக்க சமுதாயம் அமைக்க விழிப்புணர்வு
(ii) விடலைப் பருவ பாலியல் கல்வி
(iii) தம்பதியருக்கான,குடும்ப கட்டுப்பாட்டு விதிகள், பிறப்புக் கட்டுப்பாட்டு முறை
(iv) கர்ப்பமடைந்த பெண்கள் பாதுகாப்பு, தாய் சேய் பாதுகாப்பு
(v) அரசு,அரசு சாரா அமைப்புகளால் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஊக்கமளித்தல்.
2)-1994 - பாலினத்தை முன்கூட்டியே அறியும் தொழில் நுட்பத்தைத் தடைசெய்யும் சட்டம் (PCPNDT).
3) பணிபுரியும் இடத்தில், பாலியல் தாக்குதல் விதி
4) நீதியரசர் வெர்மா குழு (2013) ஆண்,பெண் இரு பாலருக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கும்.
88.
1973ல் தொடங்கியது
89.
771 பாதுகாக்கப்பட்ட பகுதிகள்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards