12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 08/03/2020
12ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Biology All Chapter Two Marks Important Questions 2020 )
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
மரபுல்வெளி என்றால் என்ன? (அல்லது) நிலையிழந்த வனங்கள் மற்றும் பொழுதுபோக்குக் காடுகளைப் புனரமைத்தல் என்றால் என்ன?
2.
நீல கார்பன் மற்றும் கருமை கார்பன் இவை எந்த மூலங்களில் சேமிக்கப்படுகிறது?
3.
ஓசோனில் துளைகள் காணப்படுகின்றனவா?
4.
நிலைத்த உயிரித்தொகுப்பு என்றால் என்ன?
5.
உயிரி வழித் திருத்தத்தின் வரம்புகள் யாவை?
6.
முதலை பண்ணை அறக்கட்டளை பற்றி நீவிர் அறிவது என்ன?
7.
அமேசான் மழைக்காடுகளில் உயிரினங்கள் குறைவதற்கான மனித செயல்பாடுகள் இரண்டினைக் கூறு.
8.
எக்ஸோநியுக்ளியேஸ் மற்றும் எண்டோநியுக்ளியேஸ் நொதி வேறுபடுத்துக.
9.
ஜோர்டானின் விதியை வரையறு.
10.
பெர்க்மானின் விதியை வரையறு.
11.
தென்னிந்தியக் கலாசாரத்தில் ஆரோக்கியமான எண்ணையாக சமையிலும், மருத்துவத்துறையிலும் குறிப்பிடப்படுவது எது?
12.
சோளத்தின் பயன்கள் கூறு.
13.
பிணைதலின் பலம் & பலமற்ற தன்மை யாது?
14.
இணை சடுதி மாற்றிகள் (Co-mutagens) என்றால் என்ன?
15.
பூஞ்சையிலிருந்து உருவாகும் ஏதேனும் இரு கரிம அமிலங்களை குறிப்பிடுக.
16.
எலைசா உயிர் வேதி முறையின் பல்வேறு வகைகள் யாவை?
17.
'டயாபடிஸ் மெலிடஸ்' என்றால் என்ன? எப்படி அது உருவாகிறது?
18.
பயிர்பெருக்கத்தின் மூலம் பூச்சி எதிர்க்கும் திறன் கொண்ட தாவரங்களை எவ்வாறு உருவாக்கலாம்?
19.
பாக்டீரியாக்களால் உருவாக்கப்படும் நோய்களுக்கு எதிராக எவ்வகை நுண்ணுயிரிகள் செயல்படுகின்றன என்பதை தகுந்த எடுத்துக்காட்டுடன் கூறு.
20.
இயற்கை வேளாண்மை என்றால் என்ன?
21.
எதிர்ப்பொருள் தூண்டியின் திறன் என்ன?
22.
எக்சைன், இன்டைன் வேறுபடுத்துக?
23.
நுண் வித்துருவாக்கம் என்றால் என்ன?
24.
எவ்வாறு நாம் பாக்டீரியாவின் எதிர்ப்புத்திறனை குறைக்க முடியும்?
25.
சில வாழிடங்களில் தேவைக்கு அதிகமான நீர் கொண்டிருந்தாலும் நீரை வேர்கள் உறிஞ்ச முடிவதில்லை. ஏன்? இதை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
26.
விரிவகல தாவரக்கூட்டம் மற்றும் குத்துயர தாவரக் கூட்ட மண்டலம் யாவை?
27.
மூலக்கூறு பாரம்பரியவியல் என்றால் என்ன?
28.
பெருவெடிப்புக் கோட்பாடு என்றால் என்ன?
29.
வார்ப்புகள் என்றால் என்ன?
30.
புறத்தோற்ற வகையம் என்றால் என்ன?
31.
இயற்கை வேளாண்மையின் பயன்கள் யாவை?
32.
பிரிகூறு என்றால் என்ன?
33.
நாஃப்ஸ் உப்புக் கரைசலின் கூறுகள் யாவை?
34.
மாசுபடுதல் என்றால் என்ன?
35.
அண்டகத்தின் முதன்மைப் பணிகள் எப்போது நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது?
36.
ஏரியோலார் சுரப்பிகள் எங்குள்ளன? அவற்றின் முக்கியத்துவம் கூறு.
37.
Zw - Zz வகை பால்நிர்ணய உயிரிகளில் பெண்கள் வேறுபட்ட இனச்செல் பண்பினை உடையவர்கள் உதாரணம் தருக.
38.
ஒரு பண்பானது இரண்டுக்கும் மேற்பட்ட அல்லீல்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது?விவாதி?
39.
கருவின் இயல்புக்கு மாறான இதயத்துடிப்பு வீதம் எதைக் காட்டும்?
40.
பாக்டீரிய பால்வினை நோய்களுக்கு எடுத்துக்காட்டு தருக.
41.
குட்டி ஈனும் உயிரிகள் என்றால் என்ன?
42.
இருபெரும் இனப்பெருக்க முறைகள் எவை?
43.
TATA பெட்டி & பிரிப்னோ பெட்டி வேறுபடுத்துக.
44.
1810 முதல் 2010 வரையிலான மரபணு முக்கியத்துவ காலண்டரைத் தருக.
45.
குறிப்பு வரைக.
அ) மிகை உணவூட்டம்
ஆ) பாசிப் பெருக்கம்
46.
பனிப்புகை என்றால் என்ன? அது நமக்கு எந்த வகையில் தீங்கிழைக்கின்றது?
47.
புவி வாழிடம் மற்றும் செயல் வாழிடம் வேறுபடுத்துக.
48.
சூழ்நிலையியல் படிநிலைகள் என்றால் என்ன? பல்வேறு சூழ்நிலையியல் படிநிலைகளை எழுதுக.
49.
வளர்ப்பு செயல்முறையின் போது, வளர்ப்பு ஊடகத்தில் நுண்ணுயிர்களின் வளர்ச்சியினை நீர் எவ்வாறு தவிர்ப்பாய்? நுண்ணுயிர்களை நீக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமுறைகள் யாவை?
50.
கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையின் பெயர் என்ன? அதன் 4 வகைகள் யாவை?

51.
"அமேசான்காடுகள் பூமிக்கோளின் நுரையீரலாக கருதப்படுகிறது”-இந்த சொற்றொடரை நியாயப்படுத்து.
52.
ராவோல்ஃபியா வோமிட்டேரியா எனும் மருத்துவ தாவரத்தில் உள்ள செயல்படு வேதிப்பொருளின் பெயர் என்ன? இது எந்த வகை பல்வகைத்தன்மையை சார்ந்துள்ளது?
53.
54.
வரையறு – சூழலியல் ஒதுக்கிடம்/சிறுவாழிடம்
55.
இயற்கை வேளாண்மையின் வரையறையைத் தருக.
56.
57.
rDNA தொழில்நுட்ப வருகைக்கு முன் இன்சுலின் எவ்வாறு பெறப்பட்டது? எத்தகைய பிரச்சனைகள் எதிர்கொள்ளப்பட்டன?
58.
மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட இன்சுலின் என்பது யாது?
59.
மண்வளத்தை மேம்படுத்துவதில் நுண்ணுயிரி உட்செலுத்திகள் எவ்வாறு பயன்படுகின்றன?
60.
முதல்நிலை அறிமுகப்படுத்துதலையும் இரண்டாம்நிலை அறிமுகப்படுத்துதலையும் வேறுபடுத்துக.
61.
உயிரினங்கள் தகுதிநிலையை டார்வின் எவ்வாறு விளக்குகிறார்?
62.
63.
64.
பால் எவ்வாறு தயிராக மாற்றப்படுகிறது? தயிர் உருவாகும் முறையினை விளக்குக.
65.
மேக்ரோஃபேஜ்கள் சார்ந்த தடை வகையை கூறி அதனை விளக்கு.
66.
தாவரத்திசு வளர்ப்பின் பயன்பாடுகளை எழுதுக
67.
வேறுபடுத்துக – வார்ப்புரு இழை மற்றும் குறியீட்டு இழை
68.
மரபணு குறியீடு ‘உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளத் தக்கது’. – காரணங்கள் கூறு.
69.
கீழ்க்காணும் அட்டவணையை நிறைவு செய்.
| நோய்கள் | நோய்க்காரணி | நோய்த்தொற்று இடம் |
| புட்டாளம்மை | ||
| சின்னம்மை | ||
| டெங்கு காய்ச்சல் |
70.
குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்?
71.
கீழ்வரும் கூற்றுகளின் பிழைகளைத் திருத்துக
அ) கொடையாளியிடமிருந்து பெறப்பட்ட அண்டத்தை கருப்பை நாளத்திற்கு இடமாற்றம் செய்யும் முறை ZIFT ஆகும்.
ஆ) 8 கருக்கோளச் செல்களுக்கு மேல் உள்ள கருவை கருப்பைக்குள் பொருத்தும் முறை GIFT எனப்படும்.
இ) மல்டிலோட் 375 என்பது ஒரு ஹார்மோன் வெளிவிடும் IUD ஆகும்.
72.
கார்பன் கவரப்படுதல் மற்றும் சேகரித்தல் (CCS) என்றால் என்ன?
73.
ஓசோன் துளை என்றால் என்ன?
74.
சூழல்மண்டலத்திலிருந்து அனைத்து உற்பத்தியாளர்களையும் நீக்கிவிட்டால் என்ன நடைபெறும்?
75.
நிகர முதல்நிலை உற்பத்தி திறனை விட மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன் மிகவும் திறன் வாய்ந்தது. விவாதி
76.
தாய்சேய் இணைப்புத்திசு ஒரு நாளமில்லாச் சுரப்பித் திசு – நியாயப்படுத்து
77.
புதிதாய் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் கருவளர்ச்சியின் எந்நிலையில் இனச்செல் உருவாக்கம் நிகழ்கிறது?
78.
79.
லையோனைசேஷன் என்றால் என்ன?
80.
| வ.எண் | கேமீட்டுகளின் வகைகள் |
வழித்தோன்றல்களின் எண்ணிக்கை |
| 1. | ABC | 349 |
| 2. | Abc | 114 |
| 3. | abC | 124 |
| 4. | AbC | 5 |
| 5. | aBc | 4 |
| 6. | aBC | 116 |
| 7. | ABc | 128 |
| 8. | abc | 360 |
i) இந்தச் சோதனைக் கலப்பின் பெயர் என்ன?
ii) மேலே கொடுக்கப்பட்டுள்ள தரவுகளைக் கொண்டு மரபணு வரைபடத்தை எவ்வாறு
உருவாக்குவாய் ?
iii) மரபணுக்களின் சரியான வரிசையைக் கண்டுபிடி.
81.
ஒரே பெற்றோரிடமிருந்து பெறப்படும் வேறுபட்ட மரபணுக்கள் ஒன்றாகவே காணப்படும் பொழுது,
i) நிகழ்வின் பெயர் என்ன?
ii) தகுந்த எடுத்துக்காட்டுடன் கலப்பினை வரைக .
iii) புறத்தோற்ற விகிதத்தை எழுதுக.
i) எந்த வகையான பிணைப்பை காணமுடியும்
ii) சரியான மரபணு வகைய கலப்பினை வரைக .
iii) F2 சந்ததியின் சாத்தியமான மரபணு வகையம் என்ன?
82.
கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன? விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.
83.
எவ்வுயிரினத்தில் செல் பிரிதலே இனப்பெருக்க முறையாகச் செயல்புரிகிறது?
84.
நியுக்ளியோடைடு தொடர்வரிசையின் முனை மற்றும் உள்ளாக அமைந்த பாஸ்போ டை எஸ்டர் பிணைப்பை துண்டிக்க என்ன நொதிகளைப் பயன்படுத்துவாய்?
85.
உயிரிதொழில்நுட்பவியல் ஆய்வகத்தில் ஈகோலை பாக்டீரியத்தைப் பயன்படுத்தி ஆய்வு செய்கிறாய். நியுக்ளியோடைடு தொடர்வரிசையை நீ எவ்வாறு துண்டிப்பாய்?
86.
மரபியல் - வரையறு.
87.
மெண்டலின் ஏழு வேறுபட்ட பண்புகளைக் கூறுக.
88.
தாவர கருவியலின் மைல்கற்களை வெளிக்கொணர்க.
89.
இனப்பெருக்கம் என்றால் என்ன?
90.
பேசில்லரி சீதபேதி மற்றும் அமீபிக் சீதபேதி - ஒப்பிட்டு வேறுபடுத்துக.
1.
1. புற்களுடன் கட்டைத் தன்மையுடைய தாவரங்களை வளர்க்கும் முறை மரபுல்வெளி எனக் குறிப்பிடப்படுகிறது.
2. மரங்கள் மற்றும் புதர் செடிகள் கால்நடைகளுக்குத் தீவனங்கள் தயாரிப்பதில் முதலில் பயன்படுத்தலாம். அல்லது வெட்டுமரம், எரிகட்டை மற்றும் பழம் (அல்லது) மண்ணின் தரத்தை மேம்படுத்த வளர்க்கப்படலாம்.
2.
நீல கார்பன்:
வளிமண்டலம் மற்றும் கடல்களில் சேமிக்கப்படும் கார்பன்.
கருமை கார்பன்:
வாயு, டீசல் என்ஜின் நிலக்கரியைப் பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன்.
3.
1. ஓசோனில் துளைகள் காணப்படுவதில்லை. ஆனால் சில வகையான வேதிப்பொருட்கள் வளிமண்டலத்தில் வெளியிடும்போது ஓசோன் படலம் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகிறது.
2. குளிர்சாதனப் பெட்டிகளிலிருந்து வெளியேறும் குளோரோஃப்ளூரோகார்பன், ஏரோசால் தொழிற்சாலைகளில் அழுக்கு நீக்கும் வேதிப்பொருட்கள் போன்றவை பாதிப்பை ஏற்படுத்துகிறது.
3. எனவே ஓசோனின் அடர்வு குறைந்து காணப்படும் பகுதிகள் ஓசோன் துளை என அழைக்கப்படுகின்றன.
4.
ஒரு உயிரினக் கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் காணப்படும் உயிரிகளின் அளவிற்கு நிலைத்த உயிரித்தொகுப்பு.
5.
1. உயிரி வழித்திருத்த முறையில் உயிரிய சிதைவிற்குள்ளாகும் மாசுறுத்திகளை மட்டுமே மாற்ற இயலும்.
2. மாசுத்தப்பட்ட இடங்களில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப மட்டுமே உயிரி வழித் திருத்த செயல்முறைகளைக் குறிப்பாக செய்ய முடியும்.
3. மாசுறுத்தப்பட்ட இடத்தில் பெரிய அளவிலான முன் சோதனைகள் செய்த பின்னரே பின்பற்ற வேண்டும்.
4. உயிரி வழித்திருத்தம் செயலுக்காக மரபணுப் பொறியியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மரபணு மாற்றமடைந்தா நுண்ணுயிரிகளை உருவாக்க (அ) நுண்ணுயிரிக் கூட்டமைப்புகளை உருவாக்க மிகவும் அதிக திறன் வேண்டியிருத்தல்.
6.
1. இந்தியாவில் குறைந்து வரும் முதலை இனத்தின் எண்ணிக்கையை உயர்த்துவது இதன் இலக்காகும்.
2. கல்வி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சிறைப்பட்ட நிலை இனப்பெருக்கத்தின் மூலம் தவளை மட்டும் ஊர்வன இனத்தை பாதுகாத்தல் மற்றும் அதன் வாழிடங்களை பராமரித்தல் ஆகிய பணிகளை இந்த அறக்கட்டளை மேற்கொள்கிறது.
7.
1. வேளாண்மை மற்றும் மனித குடியிருப்புக்கான பல பகுதிகள் அழிக்கப்படுகின்றன.
2. காடுகள் அழிக்கப்பட்டு இறைச்சி தரும் கால்நடைகளுக்கு புல் வளர்ப்பிடமாக மாற்றப்படுகின்றன.
8.
| எக்ஸோநியுக்ளியேஸ் | எண்டோநியுக்ளியேஸ் |
| DNA மூலக்கூறின் ஒரு முனையில் இருந்து நியுக்ளியோடைடுகளை நீக்குகிறது. | DNA மூலக்கூறின் உட்புறமுள்ள ஃபாஸ்போடை எஸ்டர் பிணைப்பை நீக்குகிறது |
| எ.கா. Bal.31, எக்ஸோநியுக்ளியேஸ் III | எ.கா. Hind II, EcoRI, Pvul, Bam H1, Taq1 |
9.
10.
குளிரான பகுதிகளில் வசிக்கும் பறவைகள் மற்றும் பாலூட்டிகள் வெப்பமான பகுதியில் வசிக்கும் உயிரினங்களை விட அதிகமான எடையை எட்டுகின்றன.
11.
எள் எண்ணெய் (நல்லெண்ணெய்)
12.
1. நொதி, சாராய பான மூலப்பொருள்
2. கோழி, பறவை, பன்றி, கால்நடை தீவனம்
13.
1. பிணைதலில் மரபணுக்களுக்கிடையேயான தூரம் குறைய குறைய பிணைதலின் பண்பு அதிகரிக்கும்
2 பிணைதலின் தன்மை - மரபணுக்களுக்கிடையேயான தூரம் அதிகரிக்க அதிகரிக்க பிணைதலின் பலம் அதிகரிக்கும்
14.
சில வேதியியல் சேர்மங்கள் அதற்குரிய சடுதிமாற்றம் பண்புகளைப் பெற்றிருக்காமல் மற்ற சடுதி மாற்றிகளோடு சேர்ந்து அதன் திறனை அதிகரித்தால் அவை இணை சடுதி மாற்றிகள் என்று அழைக்கப்படுகிறது.
எ.கா. அஸ்கார்பிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைடு மூலம் ஏற்படும் பாதிப்பை அதிகப்படுத்துகிறது. காஃபின், மெத்தோட்ரெக்ஸேட்டின் நச்சுத்தன்மையை அதிகமாக்குகிறது.
15.
1. சிட்ரிக் அமிலம் ⟶ ஆஸ்பர்ஜில்லஸ் நைஜர்
2. ஃபியூமரிக் அமிலம் ⟶ ரைசோபஸ் ஒரைசே.
16.
நான்கு வகையான எலைசா சோதனைகள் உள்ளன அவை,
(i) நேரடி எலைசா
(ii) மறைமுக எலைசா
(iii) இடையடுக்கு எலைசா மற்றும்
(iv) போட்டியிடும் எலைசா ஆகும்.
17.
இன்சுலின் பற்றாக்குறையால் 'டயாபடிஸ் மெலிடஸ்' எனும் சர்க்கரை நோய் உண்டாகிறது. சிகிச்சை அளிக்காவிட்டால் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய நோயான இது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரித்தல் மற்றும் சிக்கலான அறிகுறிகளையும் கொண்டு காணப்படுகிறது.
18.
(i) ஓம்புயிரித் தாவரங்களின் பூச்சி எதிர்க்கும் திறனானது புறத்தோற்றம். உயிரிவேதியியல், உடற்செயலியல் போன்ற பண்புகளை கொண்டு அமையலாம்.
(ii) பல தாவரங்களின் தூவிகளுக்கிடையே இலைகள் பூச்சி எதிர்க்கும் திறனுடைய தொடர்புடையதாக உள்ளன. (எ.கா) பருத்தியின் இலைத்துப்போக்கி எதிர்ப்பு திறன்
19.
ஸ்ட்ரெப்டோமைசின்:
1. இது பரந்த செயலாற்றலுள்ள உயிர் எதிர்ப்பொருள்.
2. ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிரைசியஸ் என்ற ஆக்டினோமைசெஸ் வகையைச் சேர்ந்த பாக்டீரியாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
3. இந்த மருந்து பொதுவாக கிராம் பாசிடிவ் மற்றும் கிராம் நெகடிவ் பாக்டீரியாக்களை அழிக்கவல்லது.
4. குறிப்பாக மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸை அழிக்கின்றது. இது காசநோய்க்கு காரணமானது.
20.
(i) பழைய பாரம்பரிய விவசாய முறையே இயற்கை வேளாண்மையாகும்
(ii) 20ம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் மிக வேகமாக மாறிவரும் விவசாய முறைகளுக்கு எதிராக மீட்டுக் கொண்டு வரப்பட்டது
(iii) இது மீள்நிலைத்த மண்வளம், சுழல்வளம், மற்றும் மக்கள் வளத்திற்கான வேளாண் முறையாகும்
21.
1. எதிர்ப்பொருள் உருவாக்குவது ஒரு திறன்.
2. மேலும் ஒரு குறிப்பிட்ட தடைக்காப்புத் துலங்கல்களால் உருவான எதிர்ப்பொருளுடன் வினைபுரிய அனுமதிப்பது.
22.
| எக்சைன் | இன்டைன் | |
| 1 | இது மகரந்ததுகளின் வெளிப்புற அடுக்கு | இது மகரந்ததுகளின் உட்புற அடுக்கு |
| 2 | தடித்தது | மெல்லியது |
| 3 | சீரற்ற தடிப்பு | சீரான தடிப்பு |
| 4 | செல்லுலோஸ், ஸ்போரோபொலினின் | பெக்டின், ஹெமிசெல்லுலோஸ், காலோஸ், புரதங்கள் கொண்டது. |
23.
இருமடிய நுண்வித்து தாய் செல் குன்றல் பகுப்படைந்து ஒரு மடிய நுண் வித்துக்கள் உருவாகும் படிநிலைக்கு, நுண் வித்துருவாக்கம் என்று பெயர்.
24.
1. சிறிய தொற்றினை குணப்படுத்த உயிர் எதிர்பொருளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
2. மருந்து எடுத்துக் கொள்ள அவ்வப்போது தவறுதல் அல்லது மருந்தினை முழுமையான எடுத்துக்கொள்ளாமிருந்தல் உயிர் எதிர்பொருள் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.
25.
(i) இதனை செயல்நிலை வறட்சி என அழைக்கின்றோம். இங்கு மண்ணில் தேவைக்கு அதிகமான நீர் கொண்டிருந்தாலும் மண்ணில் புழைவெளிகள் காணப்படுவதில்லை. எனவே நீரை வேர்கள் உறிஞ்சிக்கொள்ள முடிவதில்லை.
(ii) (எ.கா) உவர் மற்றும் அமில மண்ணில் வாழும் தாவரங்கள்.
26.
1. வெப்ப மண்டல மழைக்காடுகள்
2. புல்வெளி அல்லது பாலைவனம்
3. இலையுதிர் காடுகள்
4. ஊசியிலைக்காடுகள்
5. துந்தரா பகுதி
6. வெண்பனி
27.
மரபணுக்கள், புற அமைப்பு, மற்றும் உயிர்ச் செயல்களை எவ்வாறு மூலக்கூறு நிலையில் மேற்கொள்கிறது என்பதை விளக்கும் பிரிவு.
28.
இந்த பேரண்டம் ஒற்றைப் பெரு வெடிப்பினால் எவ்வாறு தோன்றியது என்பதை விளக்குகிறது.
29.
அச்சுகளின் உட்புறம் உள்ள குழிகள் தாது உப்புகளால் நிரப்பப்பட்டு படிவமாக மாறுகின்றன. இவை வார்ப்புகள் எனப்படும்.
30.
ஒரு உயிரியல் வெளிப்படக்கூடிய பண்புகள் புறத்தோற்ற வகையம் எனப்படும்
31.
1. சூழ்நிலை சார்ந்தது
2. மாசற்றது
3. நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை உருவாக்கும்.
4. நிலையான உற்பத்தியை அளிக்கிறது.
32.
தேர்ந்தெடுக்கப்பட்ட தாவரத்தை அதிக அளவில் வளர் ஊடகத்தில் உருவாக்குவதற்குத் தேவைப்படும் தாவரத் திசுவின் கூறு பிரிகூறு எனப்படும்.
33.
இது சுக்ரோஸ் கரைசலில் கரைந்துள்ள பல்வேறு உப்புகள் யாவை?
(i) கால்சியம் குளோரைடு: 3.0 கிராம்
(ii) பொட்டாசியம் நைட்ரேட்: 1.0 கிராம்
(iii) மெக்னீசியம் சல்பேட்: 1.0 கிராம்
(iv) டைபேசிக் பொட்டாசியம் பாஸ்பேட்: 1.0 கிராம்
II. சுக்ரோஸ்: 50 கிராம்
அயனிகள் நீக்கப்பட்ட நீர்: 1000 மிலி
34.
மாசுபாடு என்பது இயற்கை மற்றும் மனித செயல்பாடுகளால் சுற்றுச்சூழலின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றமாகும்.
35.
மாதவிடாய் நிறைவில் இது நிகழ்கிறது. பெண்களின் வாழ்வில் அண்டம் விடுபடுதல், மாதவிடாய் போன்றவை முற்றிலும் நிற்கின்றன. சராசரியாக 45 முதல் 50 வயதிற்குள் இது நிகழ்கிறது.
36.
1. பால் காம்பைச் சுற்றியுள்ள, நிறமிகளாலான வட்ட வடிவப் பரப்பு.
2. இதிலுள்ள எண்ணெய்ச் சுரப்பிகள், இங்கு தோலில் வெடிப்பு ஏற்படாமல் தடுக்கின்றன.
37.
ஜிப்சி அந்திப் பூச்சி, மீன்கள், ஊர்வன, பறவைகள்
38.
1. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அல்லீல்கள் ஒரு பண்பினை நிர்ணயிக்கும்.
2. இந்த அல்லீல்கள் ஒத்த குரோமோசோம்களில் ஒரே அமைவிடத்தில் காணப்படுகின்றன.
3. இவைகள் பல்கூட்டு அல்லீல்கள் எனப்படும் இவைகளில் பாரம்பரியம் பல்கூட்டு பாரம்பரியம் எனப்படும்.
39.
கருவுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை அல்லது பிற பிரச்சனைகளை இக்கருவி காட்டும்.
40.
1. கோனேரியா (வெட்டை நோய் )
2. கிரந்தி (மேகப் புண்)
3. கிளாமிடியாசிஸ்
4. லிம்போகிரானுலோமா வெனிரியம்
41.
1. தாய் சேய் இணைப்புத்திசு மூலம் உணவூட்டம் பெற்று கருப்பையினுள் வளர்ச்சியடைந்து முழு உயிரியாக உயிருடன் பிறக்கும்.
2. பெரும்பாலான பாலூட்டிகள்
42.
1. பாலிலி இனப்பெருக்கம்
2. பாலினப் பெருக்கம்
43.
| TATA பெட்டி | பிரிப்னோ பெட்டி |
| யுகேரியாட்டுகளில் ஊக்குவிப்பான் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான (A) அடினைன் மற்றும் (T) தைமின் ஆகியவை உள்ள பகுதி TATA பெட்டி எனப்படுகிறது | புரோகேரியாட்டுகளில் (A) அடினைன் மற்றும் (T) தைமின் அதிக எண்ணிக்கையில் உள்ள ஊக்குவிப்பான் பகுதி பிரிப்னோ - பெட்டி என அழைக்கப்படுகிறது. |
| இது கோல்ட்பெர்க் - ஹோக்னெஸ் பெட்டி எனவும் அழைக்கப்படுகிறது |
44.
1. 1810 - மரபணுக்கு காரணிகள் எனப்பட்டன
2. 1885 - மரபணுக்கள் குரோமோசோமில் காணப்படுகின்றன
3. 1944 - DNA மரபணுப்பொருள்
4. 1953 - DNA இரட்டை சுருள் அமைப்பு உடையது
5. 1958 - பழைய காத்தல் முறை DNA இரட்டிப்பு
6. 1977 - DNA மரபணு தொகுதி வரிசைப் படுத்தப்படல்
7. 1995 - பாக்டீரியா DNA மரபணு தொகுதி வரிசைப் படுத்தப்படல்
8. 2001 - மனித ஜீனோம் வரிசைப்படுத்தப்படல்.
45.
அ) மிகை உணவூட்டம் :
ஊட்டச்சத்துக்களை கொண்ட நீர், நிலப்பகுதியிலிருந்து வழிந்தோடி ஏரி போன்ற நீர் நிலைகளை சென்றடையும் பொழுது, அடர்ந்த தாவர வளர்ச்சியினை உண்டாக்குகிறது. இந்நிகழ்வு மிகை உணவூட்டம் எனப்படுகிறது.
ஆ) பாசிப்பெருக்கம் :
நீர் நிலைகளில் நீரின் ஊட்டச்சத்து செறிவு அதிகரிக்கும்போது, பாசிகள் மற்றும் ஆகாயத் தாமரை போன்றவற்றின் வளர்ச்சியை ஊட்டச்சத்துக்கள் தூண்டுகின்றன.
இதனால் கால்வாய்கள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் அடைப்புகளை ஏற்படுத்துவதுடன் உள்ளூர் தாவரங்களையும் பதிலீடு செய்கிறது.
இது பார்க்க விரும்பாத நுரை மற்றும் விரும்பத்தகாத துர்நாற்றம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
இது நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனை குறைக்கிறது.
46.
1. புகைப்பனி என்பது காற்றில் காணப்படும் சிறிய துகள்களினால் ஏற்படும் ஒரு வகையான காற்று மாசுபாடு ஆகும்.
2. இவை காற்றின் ஊடே பார்வை திறனை குறைக்கிறது.
3. புகைப்பனியானது ஆஸ்துமா நோயுடைய மக்களின் சுவாசத்தை கடினமாக்குகிறது.
4. புகைப்பனியானது தாவரங்கள் மற்றும் விலங்குகளையும் பாதிக்கின்றது.
5. இது பயிர்களை பாதிப்பதோடு செல்லப் பிராணிகள், பண்ணை விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு உடல் நலக் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது.
6. கட்டடங்கள் மற்றும் வாகனங்களை அரித்து (அரித்து கரைக்கும்) சேதத்தினை ஏற்படுத்துகிறது.
47.
| புவி வாழிடம் | செயல் வாழிடம் | |
|---|---|---|
| 1 | உயிரினம் அமைந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட புவி இடமாகும். | ஒரே சூழ்நிலை தொகுப்பில் உள்ள ஒரு உயிரினம் பெற்றிருக்கும் செயலிடமாகும். |
| 2 | ஒத்த வாழிடம், ஒன்றிற்கு மேற்பட்ட உயிரினங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. | ஒரு செயல் வாழிடத்தில் ஒரேயொரு சிற்றினம் அமைந்திருக்கும். |
| 3 | உயிரினம் புவி வாழிடத்தன்மையை வெளிப்படுத்துகிறது. | உயிரினங்கள் காலம் மற்றும் பருவநிலைக்கு ஏற்ப செயல் வாழிடங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும். |
48.
(i) சூழலோடு உயிரினங்கள் செயல்படுவதால் ஏற்படும் உயிரினத் தொகுதிகள் சூழ்நிலையியல் படிகள்.
49.
நுண்ணுயிரி நீக்கம் என்பது வளர்ப்பு ஊடகத்திலிருந்து, நுண்ணுயிரிகளான பாக்டீரியாக்களையும், பூஞ்சைகளையும் நீக்கும் தொழில்நுட்பமாகும்.
50.
இது திசு வளர்ப்பின் அடிப்படைத் தொழில்நுட்ப முறை
2) ஊடகம் தயாரித்தல்
3) வளர்ப்புச் சூழல்
4) கேலஸ் தூண்டப்படுதல்
5) கருவுருவாக்கம்
6) வன்மையாக்குதல்
51.
(i) பூமியின் நிலப்பரப்பில் 14% கொண்டிருந்த வெப்ப மண்டல காடுகளின் பரப்பு தற்போது 6% கூட இல்லை.
(ii) புவிக் கோளின் நுரையீரல் என அழைக்கப்பட்ட பரந்து விரிந்த அமேசான் மழைக் காடுகள் பத்து லட்சத்திற்கும் அதிகமான உயிரினங்களின் அடைக்கலமாக திகழ்ந்தது.
(iii) இங்குள்ள மழைக் காடுகளின் அதிக மரங்கள் இருந்ததால் ஒளிச் சேர்க்கையின் போது அதிக அளவிலான ஆக்சிஜனை வெளிவிடுவதால் அமேசான் பூமிக்கோளின் நுரையீரலாகக் கருதப்பட்டது.
52.
இமயமலையின் பல்வேறு பகுதிகளில் வளரும் ராவோல்ஃபியா வோமிட்டேரியா எனும் மூலிகைத் தாவரத்திலுள்ள ரிசர்பைன் எனும் செயல்படு வேதிப்பொருள் உள்ளது.
இது மரபியல் பல்வகைத்தன்மையை சார்ந்தது.
53.
54.
(i) ஒவ்வொரு உயிரினமும் தனித்துவமிக்க வாழிடத்தைப் பெற்றிருப்பது போல் சுற்றுச் சூழலில் சிறு வாழிடத்தையும் பெற்றுள்ளது.
(ii) ஒரு உயிரினத்தின் சுற்றுச் சூழல் சிறுவாழிடம் என்பது அவ்வுயிரினம் வாழும் சிறு இடத்தைச் சார்ந்து மட்டுமல்லாமல் அதன் சுற்றுச் சூழல் தேவைகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
55.
(i) மாற்று வேளாண்மை முறை
(ii) உயிரியல் இடுபொருள்களைப் பயன்படுத்தி, இயற்கையாகத் தாவரங்கள் பயிரப்படும்.
(iii) இதனால் மனவளமும், சுற்றுச்சூழலும் பராமரிக்கப்படும்.
(iv) மாசு, இழப்பு குறைக்கப்படும்.
56.
57.
(i) முற்காலத்தில் பன்றிகள் மற்றும் பசுக்களின் கணையங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பெறப்பட்டது.
(ii) விலங்கு இன்சுலினுக்கு மனித இன்சுலினுக்கும் சிறிய அளவில் வேறுபாடுகள் இருந்தால், சில நோயாளிகளில் இது ஒவ்வாமையை ஏற்படுத்தியது.
58.
(i) டி.என்.ஏ மறுசேர்க்கை தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டு மனிதனுள் செலுத்தப்பட்ட முதல் மருந்துப்பொருள் இன்சுலின் ஆகும்.
(ii) 1982 ம் ஆண்டு சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதற்காக இந்த இன்சுலினைப் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது.
(iii) 1986 ல் ஹியுமுலின் என்னும் வணிகப் பெயரோடு சந்தையில் மனித இன்சுலின் விற்பனை செய்யப்பட்டது.
59.
(i) ரைசோபிய உயிரி வளர்ப்பு உரம் வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துகின்றன.
(ii) நெல் பயிரிடும் உழவு நிலங்களில் அசோலா மிக விரைவாகச் சிதைவடைந்து நெற்பயிர்களை விளைச்சலை அதிகரிக்கச் செய்கிறது.
(iii) ஆர்பஸ்குலார் வேர்பூஞ்சை மண்ணில் உள்ள பாஸ்பேட்டுகளை கரைக்கும் திறனுடையவை.
(iv) கடற்பாசி திரவ உரம் பயிர்களுக்கு மாவுச்சத்தை அளிக்கப் பயன்படுகிறது.
(v) இவ்வாறு மண்வளத்தை மேம்படுத்த நுண்ணுயிரி உட்செலுத்திகள் பயன்படுகின்றன.
60.
| முதல் நிலை அறிமுகப்படுத்துதல் | இரண்டாம் நிலை அறிமுகப்படுத்துதல் | |
| அ | புதிய சூழ்நிலைக்கு தன்னை தகவமைத்து கொள்ளும் | இந்த இரகமானது தேர்ந்தெடுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறது. |
| ஆ | மரபணு வகை விகிதத்தில் எந்த மாறுபாடும் ஏற்படாது. | மேம்பட்ட இரகத்தை தனித்து பிரித்தல், இந்த இரகத்தை உள்ளூர் இரகத்துடன் கலப்பது. |
61.
1. டார்வினின் கோட்பாடுபடி சூழ்நிலைக்கேற்ப வாழ ஏற்படும் மாறுபாடுகள் வாழத்தகுதி வாய்ந்தவை.
2. இத்தகைய உயிரிகள் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்த்து வாழ தகுதி வாய்ந்தவை.
3. அத்தகைய மாறுபாடுகள் அடுத்த சந்ததிகளுக்கு மரபு கடத்தப்படுகின்றன.
4. அவ்வாறு தகுதி பெற்ற உயிரினங்கள் தகுதி பெறாத உயிரினங்களை விட நன்கு வாழும் என்றும் அவை அதிக வாரிசு உயிரிகளை உருவாக்கும் இதற்கு இயற்கை தேர்ந்தெடுத்தல் ஒரு காரணம் ஆகும்.
5. வாழ்க்கை வாழ்வதற்கான போராட்டம் வாழத் தகுதியுடைய உயிரினங்களை உருவாக்கும். அத்தகைய உயிரிகள் தகவமைப்புகளோடு சூழ்நிலையில் வாழத் தகுதி அடைகின்றன.
62.
63.
64.
1. பாலில் வளரும் லாக்டிக் அமில பாக்டீரியாக்கள் பாலில் உள்ள பால் புரதத்தை செரித்து கேசின் எனும் தயிராக மாற்றுகிறது.
2. தூய பாலில் உறை (அ) மூல நுண்ணுயிரிகள் சேர்க்கப்பட்டு சிறிதளவு தயிரில் மில்லியன் கணக்கில் லாக்டோபேசில்லஸ் இன பாக்டீரியாக்கள் உள்ளன.
3. அனுகூலமான வெப்பநிலையில் (≤40o C) இவை எண்ணிக்கையில் பெருகி பாலை தயிராக மாற்றுகிறது.
4. பாலை விட தயிரில் அதிக சத்தான கரிம அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
65.
1. மேக்ரோஃபேஜ்கள் செல் விழுங்குதல் சார்ந்த இயல்பு நோய்த்தடைக்காப்பில் காணப்படுகிறது.
2. இவை நுண்ணுயிரிகளை முழுமையாக விழுங்கி அவற்றை செரிக்கிறது.
3. இவை பெரியதாகவும் ஒழுங்கற்ற முறையில் காணப்படும்.
4. மோனோசைட்டுகள் தான் மேக்ரோஃபேஜ்களாக காணப்படுகிறது.
5. இந்த மேக்ரோஃபேஜ்களில் - பாக்டீரியாலைட்டிக் நொதிகள் மற்றும் தனிச்சையான ரேடிக்கல்ஸ் காணப்படுகிறது. இவை நுண்கிருமிகளை அழிக்கும் திறன் உடையது.
66.
தாவரத் திசு வளர்ப்பு பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
i. உடல் கலப்பினமாதல் மூலம் மேம்பட்ட கலப்புயிரிகள் உற்பத்தி செய்யப்படுதலுக்கு உடல் கலப்புயிரியாக்கம் என்று பெயர்.
ii. உறை சூழப்பட்ட கருக்கள் அல்லது செயற்கை விதைகள் தாவரங்களின் உயிரிப்பன்மத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
iii. ஆக்குத் திசு மற்றும் தண்டு நுனி வளர்ப்பின் மூலம் நோய் எதிர்ப்பு தாவரங்களை உற்பத்தி செய்தல்.
iv. களைக்கொல்லி சகிப்புத்தன்மை, வெப்பச் சகிப்புத்தன்மை கொண்ட தாவரங்கள் போன்ற அழுத்தத்தை (இறுக்கத்தை) எதிர்க்கக் கூடிய தாவரங்களின் உற்பத்தி.
67.
| வார்ப்புரு இழை | குறியீட்டு இழை | |
| 1 | இவ்விழை mRNA உருவாக்கத்திற்கு வார்ப்பாக செயல்படுகிறது. | இது வார்ப்புரு பணியைச் செய்வதில்லை |
| 2 | இதன் நைட்ரஜன் காரங்கள் mRNA இழைக்கு ஈடான இழைகளை உருவாக்குகிறது. | இதன் நைட்ரஜன் காரங்கள் அப்படியே mRNA இழையில் காணப்படுவதேயாகும். |
| 3 | இது 3' ⟶ 5' திசையில் கொண்டது | இது 5' ⟶ 3' திசையில் கொண்டது |
68.
1. மரபணுக்குறியீடுகள் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளத்தக்கது.
2. இது பொதுவான எல்லா உயிரின மண்டலங்களுக்கு உட்கரு அமிலங்களையும் அதே முக்குரியங்களையும் பயன்படுத்தியே அமினோ அமிலங்களிலிருந்து புரதத்தை உற்பத்தி செய்கின்றன.
3. தூது ஆர்.என்.ஏவில் உள்ள UUU எல்லா உயிரினங்களிலும் பினைல் அலனைன் என்னும் அமினோ அமிலத்திற்கானது.
4. விதிவிலக்குகள் (மிகச் சில)
i. எ.கா. புரோகேரியோட்டுகள், மைட்டோகாண்டிரியா, குளோரோபிளாஸ்ட் ஆகியவற்றின் மரபுத் தொகுதி
ii. பொதுவாக வேறுபாடுகள் மிகக் குறைவு ஒற்றுமைகளே அதிகம் உள்ளன.
iii. இது போன்ற மரபணுக்குறியீடுகளின் எல்லா சிறப்புப் பண்புகள் பொதுவாக எல்லா உயிரினங்களிலும் பொதுவானது.
5. எனவே மரபணு குறியீடு உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும்.
69.
| நோய்கள் | நோய்க்காரணி | நோய்த்தொற்று இடம் |
| புட்டாளம்மை | மம்பஸ் வைரஸ் (ஆர்.என்.ஏ வைரஸ்) பாராமிக்ஸோ வைரஸ் (Paramyxo virus) | உமிழ்நீர்ச் சுரப்பி |
| சின்னம்மை | வேரிசெல்லா ஸோஸ்டர் வைரஸ் (vericella - zoster virus) (டி.என்.ஏ வைரஸ்) | சுவாசப் பாதை தோல் மற்றும் நரம்பு மண்டலம் |
| டெங்கு காய்ச்சல் | டெங்கு வைரஸ் (அ) ஃபிளேவி வைரஸ் DENV அல்லது 1-4 வைரஸ் | தோல் மற்றும் இரத்தம் |
70.
(i) கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்தும் முறை (IUI) பயன்படுத்தப்படும்.
(ii) கணவர், உடல்நலம் மிக்க விந்து கொடையாளிடம் இருந்து விந்துத்திரவம் சேகரிக்கப்படுகிறது.
(iii) அண்டகத்தைத் தூண்டி, அதிக அண்ட செல்கள் உற்பத்தி செய்யப்படும்.
(iv) சேகரிக்கப்பட்ட விந்து செல்கள், நுண்குழல் மூலம் கல்விக் கலவிக்கால்வாய் வழியாகக் கருப்பையினுள் செலுத்தப்படும்.
(v) விந்து செல்கள் அண்டநாளம் நோக்கி நீந்திச் சென்று, இயல்பான கர்ப்பம் ஏற்படும்.
71.
அ) கொடையாளியிடமிருந்து பெறப்பட்ட அண்டத்தை கருப்பை நாளத்திற்கு இடமாற்றும் முறை -GIFT
ஆ) 8 கருக் கோளச் செல்களுக்கு மேல் உள்ள கருவை கருப்பைக்குள் பொருத்தும் முறை ZIFT
இ) மல்டிலோட் 375 என்பது தாமிரம் வெளிவிடும் உள் கருப்பைச் சாதனம்.
72.
1. கார்பன் கவரப்படுதல் மற்றும் சேமிப்பு என்பது வளிமண்டலத்தின் கார்பன் -டை-ஆக்ஸைடை உயிரித்தொழில்நுட்பம் மூலமாக கைப்பற்றி ஒரு கிலோமீட்டர் அல்லது அதற்குக் கீழான ஆழத்தில் நிலத்தடிப் பாறைகளுக்கிடையே உட்செலுத்திச் சேமிக்கும் முறையாகும்.
2. இது புவி வெப்பமாதலை மட்டுப்படுத்தும் ஓர் அணுகு முறையாகும்.
3. கார்பன், பெருங்கடல்களில் திரவச் சேமிப்பாகவும் உலோக ஆக்ஸைடைப் பயன்படுத்தி கார்பன்-டை-ஆக்ஸைடை குறைத்தல் மூலம் திடமான கார்பனேட்டாக மாற்றி உலர் (or) திடச் சேமிப்பாகவும் சேமித்து வைக்கப்படுகிறது.
73.
1. சில வகையான வேதிப் பொருட்கள் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் போது ஓசோன் படலம் தொடர்ந்து பாதிப்பிற்குள்ளாகிறது.
2. குறிப்பாக குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியேறும் குளோரோஃபுளோரோ கார்பன், ஏரோசால், தொழிற்சாலையில் அழுக்கு நீக்கும் வேதிப்பொருட்கள் போன்றவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
3. ஓசோனின் அடர்வு குறைந்த பகுதிகள் அபாயகரமான ஓசோன் துளை என அழைக்கப்படுகின்றன.
74.
1. சூழல் மண்டலத்திலிருந்து அனைத்து உற்பத்தியாளர்களையும் நீக்கும் போது மொத்த உணவு வலையும் (Food Web) பாதிக்கப்படுகிறது.
2. முதல் நிலை நுகர்வோர் (அ) தாவர உண்ணிகள் தங்களின் உணவாக உற்பத்தியாளர்கள் இல்லாமையால் இறந்து போக நேரிடும்.
3. அதனால் உணவு வலையில் உள்ள மற்ற விலங்குகளும் தங்களுக்கு உணவு இல்லாமல் இறக்க நேரிடும்.
4. சூழ்நிலை மண்டலத்தின் அழிந்து போன நுகர்வோர் எண்ணிக்கை அழிந்துபோன உற்பத்தியாளர்களுக்கு நேர்விகிதத்தில் இருக்கும்.
5. வளிமண்டலத்தின் CO2 மற்றும் O2 சுழற்சி இருக்க உற்பத்தியாளர்களே காரணம்.
6. இந்த உற்பத்தியாளர்களை நீக்கிவிட்டால் CO2 மற்றும் O2 சுழற்சி சமநிலை அற்றதாக மாறிவிடும்.
7. இதனால் மூச்சுக் காற்றான ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
75.
1. மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன் எனப்படுவது சூழல் மண்டலத்திலுள்ள தற்சார்பு ஊட்ட உயிரிகளால் ஒளிச்சேர்க்கையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவு ஆற்றல் அல்லது கரிமப்பொருட்கள் அல்லது உயிர்த்திரள் மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன் எனப்படுகிறது.
2. ஆனால் நிகர முதல்நிலை உற்பத்தித்திறன் எனப்படுவது தாவரத்தின் சுவாசச் செயலால் ஏற்படும் இழப்பிற்குப் பிறகு எஞ்சியுள்ள ஆற்றல் விகிதமே நிகர முதல்நிலை உற்பத்தித்திறன் எனப்படுகிறது. (NPP)
NPP=GPP -சுவாச இழப்பு
3. எனவே நிகர முதல்நிலை உற்பத்தித்திறனை விட மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன் மிகவும் திறன் வாய்ந்தது ஆகும்.
76.
கர்ப்ப காலத்தில், தாய்சேய் இணைப்புத்திசு, தற்காலிக நாளமில்லாச் சுரப்பியாக செயல்பட்டு கீழ்கண்ட ஹார்மோன்களைச் சுரக்கிறது.
(i) hCG - மனித கோரியானிக் கொனடோடிராபின்
(ii) hcL - மனித கோரியானிக் சோமட்டோமாமோட்ரோபின்
(iii) hPL - மனித பிளாசன்டல் லாக்டோஜன்
(iv) ஈஸ்ட்ரோஜன்
(v) புரோஜெஸ்டிரான்
(vi) ரிலாக்ஸின் ஹார்மோன் இடுப்பு எலும்பிணைப்பு நார்களைத் தளர்வடையச் செய்து, குழந்தை பிறத்தலை எளிதாக்குகிறது.
hCG , hPL ,ரிலாக்ஸின் போன்றவற்றை கர்ப்ப காலத்தில் மட்டுமே உற்பத்தியாகின்றன.
77.
ஆண் குழந்தைகளில் இனச்செல் உருவாக்கம் :
பூப்பெய்தும் வயதில், ஹைபோதலாமஸ் சுரக்கும் கொனடோடிராபின் வெளிவிடு ஹார்மோனின் (GnRH) அளவு அதிகரிக்கும்போது விந்து செல் உருவாக்க நிகழ்ச்சி தொடங்குகிறது.
பெண் குழந்தைகளில் இனச்செல் உருவாக்கம் :
சிசுவின் அண்டகங்களில் இனச்செல் எபிதீலியம் உள்ளது. இது கருவளர்ச்சியின்போது, மறைமுகப் பிரிவினால் ஊகோனியா எனும் அண்ட தாய் செல்களை உற்பத்தி செய்யும். அண்ட தாய் செல்கள், குன்றல் பிரிவு 1 ன் முதற்பிரிவு நிலையில் முதல் நிலை அண்ட செல்களைத் தோற்றுவிக்கின்றன. இந்நிலையில் இச்செல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். பூப்பெய்தலின் போது,முதல்நிலை அண்ட செல்கள் குன்றல் பகுப்பு 1 ஐ நிறைவு செய்து இரண்டாம் நிலை அண்ட செல்லை உருவாக்கும். கருவுறுதலின் போது இரண்டாம் நிலை அண்ட செல் குன்றல் பகுப்பு-II க்கு உட்பட்டு, அண்ட செல்லை உருவாக்கும்.
78.

79.
லியோன் கொள்கை -ஒரு X குரோமோசோம் செயல்படாமல் இருப்பது.
(i) XY குரோமோசோம் வகை பால் நிர்ணயித்தலில் ஆண் உயிரிகள் ஒரு X குரோமோசோம் கொண்டுள்ளது.
(ii) பெண் உயிரிகள் இரண்டு X குரோமோசோம்கள் கொண்டுள்ளன.
(iii) பாலினத்திற்கு இடையேயான இந்த அளவீட்டு வேறுபாடு ஈடு செய்யப்படுகிறது.
(iv) ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலின உயிரிகளிலும் ஒரு செல்லுக்கு ஒரு X குரோமோசோம் மட்டுமே செயல்திறன் பெற்றுள்ளது.
(v) மேரி லியோன் கருதுகோளின்படி பார் உறுப்புகள் செயல்படாமல் உள்ளது.
(vi) பெண் உயிரிகளில் இவை மிக நெருக்கமாக சுருண்டு குரோமோட்டினை காணத்தக்க வடிவமான ஹைட்ரோ குரோமேட்டின் ஆக மாறுகிறது.
(vii) ஹெட்டிரோகுரோமேட்டின் என்பது எங்கு புரத உற்பத்தியில் பிரித்தெடுத்தல் நடக்கவில்லையா ஆகும்.
80.
இது 3 புள்ளி சோதனைக் கலப்பு - இதில் மூன்று புள்ளி கலப்பு 8 வேறுபட்ட 27-8 கேமிட்டுகளின் வகைகளை உருவாக்குகிறது. 3 அல்லீல்களின் அமைவிடம் அவற்றிற்கிடையேயான தூரம் -வரிசை ஆகியவற்றை மறு கூட்டிணைவு நிகழ்விரைவு மூலம் கணக்கிடலாம்.

For A&B -அடைவிடம்
RF =\(\frac {114+5+116+4\times100}{1200}\)
=19.9
For A & B -அடைவிடம்
RF =\(\frac {114+128+116+4\times100}{1200}\)
= 40.16
For B & C -அடைவிடம்
RF =\(\frac {5+128+124+4\times100}{1200}\)
= 21.75
அனைத்து அமைவிடங்களும் பிணைப்புற்றவை அனைத்து மறுகூட்டிணைவு மதிப்புகளும் 50%க்கும் குறைவானவை.
AC=அமைவிடம் அதிக RF மதிப்பு
இவையிரண்டும் இரட்டை குறுக்கேற்றத்திலிருந்து பெறப்பட்ட இரட்டை மறு கூட்டிணைவு வகைகளாகும் எனவே ஒவ்வொன்றையும் ஒருமுறை அல்ல இருமுறை கணக்கிட வேண்டும் ஏனெனில் இவை இரட்டை மறு கூட்டிணைவு வழித்தோற்றல்களைக் குறிக்கிறது இதனைச் சரிசெய்ய
114+125+116+128+5+14+4=500
மொத்த எண்ணிக்கை 1200 இல் இது 500=41.65% (துல்லியமாக) இது இருகூறு மதிப்புகளின் கூடுதலுக்கு ஒத்திருக்கிறது, இதை மாற்றி எழுதும்போது கொண்டிருப்பதால் அதிக தொலைவில் அமைந்து உள்ளதாக கருத இயலும்.
ஆனால் B இரண்டுக்கும் இடையில் காணப்பட -மரபணுக்களின் வரிசை abc

19.9+21.75 கூட்டுத்தொகை =41.95மு இது 40.16ஐ விட அதிகம். இரண்டு குறைந்த எண்ணிக்கை கொண்ட வழித்தோன்றல்கள் (மொத்த 8ல்) கண்டறிய வேண்டும்.

81.
இந்த நிகழ்வின் பெயர் பிணைதல் இது பட்டாணி (லாத்திரஸ் ஒடோரேடஸ்) தாவரத்தில் வில்லியம் பேட்சன் மற்றும் ரெஜினால்ட் சி-புன்னெட் ஆகியோர்களால் 1906-இல் கண்டறியப்பட்டது, ஒரே ஒத்திசைவு குரோமோசோம்களில் காணப்படும் இரு ஓங்குதன்மை அல்லீல்கள் (அ) ஒடுங்குதன்மை அல்லீல்கள் ஒரே கேமிட் மூலம் ஒன்றாகவே மரபு வழி அடைந்தால் இணைப்பு (அ) சிஸ்வகை எனப்படும்.
அதே நேரம் இதே தன்மையுடைய அல்லீல்கள் குலல்வேறு குரோமோசோம்களில் அமைந்து வேறுபட்ட கேமிட்கள் மூலம் தனியாகவே மரபுவழி அடைந்தால் அதற்கு விலகல் (அ) டிரான்ஸ்வகை என்று பெயர்.
இவையிரண்டும் பிணைப்பின் இரு கூறுகளாகும்.

82.
(i) முட்டையானது கருவுறாமல் ஒரு உயிராக வளர்வது கன்னி இனப்பெருக்கம் எனப்படும்.
(ii) (எ.கா) ரோட்டிபர், தேனீக்கள், மற்றும் வான்கோழி.
83.
(i) அமீபா பிளவுறுத்தல் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
(ii) பிளவுறுதல் என்பது செல் பிரிதல்.
84.
இவை DNA மூலக்கூறுக்குள், குறிப்பிட்ட அடையாளம் காணக்கூடிய பகுதிக்கு அருகில் (அ) இடத்தில் DNA ஐத் துண்டிக்கின்றன. இதற்கு தடைகட்டு களம் (Restriction sites)
அ) எக்சோநியுக்ளியேஸ்
Options நொதி
இவை DNA மூலக்கூறின் ஒரு முனையில் இருந்து நியுக்ளியோடைடுகளை நீக்குகிறது.
(எ.கா) Bal 31, எக்சோ நியுக்ளியேஸ்
ஆ) எண்டோநியுக்ளியேஸ் நொதி
இவை DNA மூலக்கூறுகளின் உட்புறம் உள்ள பாஸ்ஃபோ-டை-எஸ்டர் பிணைப்பை நீக்குகிறது.
(எ.கா) Hind II, EcoRI, Pvul, Bam H1, Taq 1 போன்றவை
85.
ஒரு மரபணு நகலாக்க சோதனையின் வடிவமைப்பில் ஒரு தடைக்கட்டு நொதியினால் உண்டாக்கப்படும் சரியான வகை பிளவு முக்கியமானதாகும். குறிப்பாக இரண்டு வகை காணப்படுகிறது.
| அ) | சமச்சீர் துண்டிப்புகள், | சமச்சீரற்ற துண்டிப்புகள் |
சில தடைகட்டு நொதிகள் இரண்டு DNA இழைகளின் மையப் பகுதியின் ஊடே பிளவு ஏற்படுத்துவதன் விளைவாக மழுங்கிய (அ) பறிக்கப்பட்ட முனை உண்டாகிறது.![]() |
சில நொதிகள் DNA வை வெட்டும் போது நீட்டிக் கொண்டு காணப்படும் முனைகள் உண்டாகின்றன. இவை ஒட்டும் (அ) ஒட்டிணைவான முனைகள் என அழைக்கப்படுகின்றன.![]() |
86.
பண்புகள் எவ்வாறு பெற்றோர்களிடம் சந்ததிகளுக்குக் கடத்தப்படுகின்றன என்பதை விளக்கும் ஒரு பிரிவு- மரபியல் எனப்படும். இதற்கு பாரம்பரியத்தின் அறிவியல் என்று பெயர்.
87.
88.
1682 நெகமியா குரூ - மலரின் ஆண் உறுப்பை மகரந்தத்தாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
1694 R.J. கேமராரியல் - மலர், மகரந்தப்பை, மகரந்தத்துகள் மற்றும் சூல் அமைப்பு பற்றி விவரித்துள்ளார்.
1761 J.G கோல்ரூட்டர் - மகரந்தச் சேர்க்கையில் பூச்சிகளின் முக்கியத்துவம் பற்றி விரிவாக தொகுப்பு தந்துள்ளார்.
1824 G.B அமிசி - மகரந்தக் குழாயைக் கண்டறிந்தார்.
1848 ஹாப்மீஸ்டர் - நான்மய மகரந்தத்துகள் (pollen tetrad) அமைப்பு பற்றி விளக்கியுள்ளார்.
1870 ஹான்ஸ்டீன் - கேப்செல்லா மற்றும் அலிஸ்மா தாவரங்களில் கரு வளர்ச்சி பற்றி விவரித்துள்ளார்.
1878 E. ஸ்ட்ராஸ்பர்கர் - பல்கரு நிலையை பதிவு செய்துள்ளார்.
1884 E. ஸ்ட்ராஸ்பர்கர் - கேமீட்களின் இணைவைக் கண்டறிந்தார்.
1898 & 1899 S.G. நவாஷின் மற்றும் L. கினார்டு இருவரும் தனித்தனியாக இரட்டைக் கருவுறுதலைக் கண்டுபிடித்தனர்.
1904 E. ஹேன்னிங் - செயற்கை முறையில் கரு வளர்ச்சியை தொடங்கினார்.
89.
1. உயிரிகளின் அத்தியாவசியப் பண்பு இனப்பெருக்கம்.
2. உலகில் சிற்றினங்கள் நிலைத்திருக்க, வேறுபாட்டின் மூலம் தகுந்த மாற்றங்களுடன் சந்ததிகள் தொடர்ந்து வாழ உதவும்.
3. தாவர இனப்பெருக்கம், நேரடியாகவோ மறைமுகமாகவோ தாவரங்களைச் சார்ந்து வாழும் உயிரினங்களுக்கு முக்கியமானது.
90.
பேசில்லரி சீதபேதி மற்றும் அமீபிக் சீதபேதி ஒப்பிட்டு வேறுபடுத்துதல்
பேசில்லரி சீதபேதி
ஷிஜெல்லா சிற்றினத்தினை சார்ந்த பாக்டீரியாவினால் பேசில்லரி சீதபேதி ஏற்படுகிறது. பேசில்லரி சீதபேதியின் காரணமாக வயிற்று வலி, நீரிழப்பு, மலக்கழிவில் இரத்தம் மற்றும் கோழை காணப்படுதல் முதலியன ஏற்படும்.
அமீபிக் சீதபேதி
எண்டமீபா ஹிஸ்டோலைடிகா என்ற புரோட்டோசோவினால் அமீபிக் சீதபேதி ஏற்படுகிறது. அமீபிக் சீதபேதியின் காரணமாக குடற்புண், இரத்தக்கசிவு, வயிற்றுவலி மற்றும் அதிக கோழையுடன் கூடிய மலக்கழிவு முதலியன ஏற்படுகிறது
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards