12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 09/03/2020
12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Business Mathematics All Chapter Five Marks Important Questions 2020 )
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
உற்பத்தி செய்முறையிலிருந்து வழக்கமான இடைவெளியில் 5 அளவுகொண்ட 10 மாதிரிகளின் அளவீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் மாதிரி சராசரி ( X ) மற்றும் வீச்சு (R) ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| மாதிரி | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| \(\bar { X } \) | 49 | 45 | 48 | 53 | 39 | 47 | 46 | 39 | 51 | 45 |
| R | 7 | 5 | 7 | 9 | 5 | 8 | 8 | 6 | 7 | 6 |
சராசரி கட்டுப்பாடு வரம்புகளைக் கண்டுபிடிக்க, மேலும் கட்டுப்பாட்டின் நிலை குறித்து கருத்து தருக. (கொடுக்கப்பட்ட தகவல் A2=0.58,D3=0 மற்றும் D4 = 2.115)
2.
ஒரு சமவாய்ப்பு மாறி X - இன் நிகழ்தகவு சார்பு கீழே கொ டுக்கப்பட்டுள்ள

P(X<0)
3.
அவசர மருத்துவ சிகிச்சை வாகன சேவை வழங்கும் ஒரு நிறுவனம், தங்களுக்கு கிடைக்கப்பெறும் அவசர அழைப்பின் போது சராசரியாக 8.9 நிமிடங்களில் அழைப்பிடத்தை சென்றடைவதாக கூறுகிறது. அவர்களின் கூற்றை சோதிக்க, எடுக்கப்பட்ட 50 அவசர அழைப்பின் மாதிரி தேர்வுகளில் அதன் சராசரி 9.3 நிமிடங்கள், திட்டவிலக்கம் 1.6 நிமிடங்கள் என அறியப்படுகிறது. 5% மிகைகாண் நிலையில் நிறுவனத்தின் கூற்று சரியானதா?
4.
A,B,C,D,E மற்றும் F என்ற திறந்தவெளி இடங்களுக்கு 1,2,3, மற்றும் 4 ஆகிய நான்கு வண்டிகள் சென்று நிறுத்த இடங்களை ஒதுக்க வேண்டும். நான்கு வண்டிகள் கொண்டு சென்று நிறுத்த ஆகும் பயண செய்த தூரம் குறைக்குமாறு ஒதுக்கீடு செய்க. கீழே கொடுக்கப்பட்டுள்ள அணியானது தூரத்தை குறிக்கிறது.
5.
கீழே கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களுக்கு பொருத்தமான நேர்க்கோட்டின் சமன்பாட்டைத் தீர்மானிக்க. மேலும், 2000-இலிருந்து 2004 வரை உள்ள எல்லா ஆண்டுகளுக்கும் போக்கு மதிப்பை கணக்கிடுக
| வருடம் | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 |
| விற்பனை (.’000 ) | 35 | 36 | 79 | 80 | 40 |
6.
வோகலின் தோராய முறையை பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை சாத்தியமானத் தீர்வை காண்க.
7.
தயாரிக்கப்படும் பொருள்களில் 5 சதவிகிதம் குறைபாடுள்ளவை. சமவாய்ப்பு முறையில் 20 பொருள்கள் தேர்ந்தெடுக்கும் பொழுது
(i) மூன்று மட்டும் குறைபாடுள்ளதாக
(ii) குறைந்தபட்சம் இரண்டு பொருள் குறைபாடுள்ளதாக
(iii) நான்கு மட்டும் குறைபாடுள்ளதாக இருப்பதற்கான நிகழ்தகவினை காண்க.
(iv) சராசரி மற்றும் மாறுபாட்டினைக் கண்டுபிடி.
8.
படுகை கூறெடுப்பை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
9.
ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட தொடர்வண்டி நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நேரம் நிமிடங்களில் கண்டறியப்பட்டு அதை ஒரு சமவாய்ப்பு நிகழ்வாக வைத்துக் கொள்வோம். அதன் நிகழ்தகவுச் சார்பின் பரவல் சார்பால் குறிப்பிடப்பட்டுள்ளது.

a) பரவல் சார்பு தொடர்ச்சியாக இருக்குமா? அப்படியானால், அதன் நிகழ்தகவு அடர்த்திச் சார்பை எழுதுக.
(b) ஒரு நபர் (i) 3 நிமிடங்களுக்கு மேல் (ii) 3 நிமிடங்களுக்குக் குறைவாக (iii) 1 மற்றும் 3 நிமிடங்களுக்கு இடையில் காத்திருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
10.
A என்ற விளையாட்டு வீரரும் B எனும் மற்றொரு விளையாட்டு வீரரும் கலந்து கொள்ளும் விளையாட்டில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு விகிதம் 3:2 ஆகும். ஐந்து முறை விளையாடும் விளையாட்டில் A எனும் விளையாட்டு வீரர் குறைந்த பட்சம் 3 முறை வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவினைக் காண்க.
11.
நியூட்டனின் முன்நோக்கு இடைச்செருகலின் சூத்திரத்தை பயன்படுத்தி முப்படி பல்லுறுப்பு கோவையைக் காண்க.
| x | 0 | 1 | 2 | 3 |
| f(x) | 1 | 2 | 1 | 10 |
12.
பின்வரும் விவரங்களைக் கொண்டு விடுபட்ட உறுப்புகளைக் காண்க.
| x | 0 | 1 | 2 | 3 | 4 | 5 |
| y = f(x) | 0 | - | 8 | 15 | - | 35 |
13.
Qd=30-5p+2\(\frac { dp }{ dt } +\frac { { d }^{ 2 }p }{ dt^{ 2 } } \) மற்றும் Qs=6+3p என்பன முறையே ஒரு பொருளின் தேவை அளவு மற்றும் அளிப்பு அளவு ஆகியவற்றைக் குறிக்கின்றன. இங்கு p விலையைக் குறிக்கிறது. சந்தை பரிமாற்றத்தில் சமன்நிலை விலையைக் காண்க.
14.
தீர்க்க: \(\frac { dy }{ dx } \)-3ycotx=sin2x, இங்கு x=\(\frac { \pi }{ 2 } \) எனில், y=2.
15.
ஒரு பொருளின் விலை p -ஐ பொறுத்து தேவை நெகிழ்ச்சி \(\eta _{ d }=\frac { p+2{ p }^{ 2 } }{ 100-p-{ p }^{ 2 } } \) எனில் விலை 5 மற்றும் தேவை 70 எனும் பொழுது அதன் தேவை சார்பு மற்றும் வருவாய்ச் சார்பைக் காண்க.
16.
கொடுக்கப்பட்ட இறுதிநிலைச் செலவு மற்றும் வருவாய் சார்புகள் முறையே C'(x)=50+\(\frac{x}{50}\) மற்றும் R'(x)=60. மாறாச்செலவு செலவு ரூ.200 எனில், மீப்பெரு இலாபத்தைக் காண்க.
17.
பின்வருவனவற்றை வரையறுத்த தொகையீடுகளின் பண்புகளைக் பயன்படுத்தி மதிப்பிடுக.
\(\int _{ 0 }^{ 1 }{ \log\left( \frac { 1 }{ x } -1 \right) } dx\)
18.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\frac { 1 }{ x({ x }^{ 2 }+1) } \)
19.
தரப்பட்ட சமன்பாடுகள் ஒருங்கமைவு அற்றவை எனில் k-ன் மதிப்பைக் காண்க.
x+y+z=1, 3x-y-z=4, x+5y+5z=k
20.
x + 2y + z = 7, 2x − y + 2z = 4, x + y − 2z = −1 என்ற சமன்பாடுகளை கிரேமரின் விதியைப் பயன்படுத்தி தீர்க்க.
1.
\( \overline{\bar{X}}=\frac{\Sigma \bar{X}}{n}=\frac{462}{10}=46.2 \)
\( \bar{R}=\frac{\Sigma R}{n}=\frac{68}{10}=6.8\)
\(\bar{X}\) வரைபடத்தின் கட்டுப்பாட்டு வரம்புகள்
\(\mathrm{UCL} =\overline{\bar{X}}+A_2 \bar{R} \)
=46.2+(0.58)(6.8)
=46.2+3.944=50.14
\(\mathrm{CL} =\bar{X}=46.2\)
\( L C L=\overline{\bar{X}}-A_2 \bar{R}\)
= 46.2 -3.944 = 42.26
இரண்டு புள்ளிகள் (53 மற்றும் 51) ஆனது கட்டுப்பாட்டு வரம்பிலிருந்து வெளியேறுவதால் செயல்முறையானது கட்டுப்பாட்டில் இல்லை எனலாம்.
2.
\(P(X<0) =P(X=-2)=\frac{1}{4} \)
3.
கூறு அளவு n = 50
கூறு சராசரி \(\bar { x } \)=9.3 நிமிடங்கள்
கூறு திட்டவிலக்கம் s = 1.6 நிமிடங்கள்
முழுமைத் தொகுதி சராசரி μ=8.9 நிமிடங்கள்
இன்மை கருதுகோள் H0:μ=8.9
மாற்று கருதுகோள் H1:μ≠8.9(Two tail)
மிகைகாண் நிலை = α=0.05
கூறுபண்பளவை சோதனைக்கு \(Z=\frac { x-\mu }{ \frac { \sigma }{ \sqrt { n } } } \sim N(0,1)\)
\(Z=\frac { 9.3-8.9 }{ \frac { 1.6 }{ \sqrt { 50 } } } =\frac { 0.4 }{ 0.2263 } =1.7676\)
கணக்கிடப்பட்ட மதிப்பு Z=1.7676
5% மிகைகாண் நிலையில் தீர்மானமதிப்பு \({ Z }_{ \frac { \alpha }{ 2 } }\)=1.96
முடிவு: கணக்கிடப்பட்ட மதிப்பானது அட்டவணை மதிப்பை விட குறைவாக உள்ளது. அதாவது, Z <\({ Z }_{ \frac { \alpha }{ 2 } }\) 5% மிகைகாண் நிலையில் இன்மை கருதுகோள் ஏற்கப்படுகிறது எனவே நோயுற்றோரை ஏற்றிச் செல்லும் வண்டி சேவை சராசரி 8.9 நிமிடங்களில் அவசர அழைப்பிடத்தை சேரும் என்ற கூற்று உண்மையாகிறது.
4.
நிரைகளின் எண்ணிக்கையை விட நிரல்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், கொடுக்கப்பட்ட கணக்கானது சமச்சீரற்ற ஒதுக்கீடு கணக்காகும். இதனை சமச்சீராக மாற்ற எல்லா மதிப்புகளும் பூஜ்ஜியமுள்ள ஒப்புக்கான நிரலை உருவாக்கவும். மாற்றியமைக்கப்பட்ட ஒதுக்கீடு கணக்கானது
படி 1: எல்லா நிரையிலும் பூஜ்ஜியம் இருப்பதால் படி 1 தேவையில்லை,
படி 2: ஒவ்வொரு நிரலிலும் உள்ள மீச்சிறு மதிப்பை அந்த நிரலில் உள்ள எல்லா மதிப்பிலும் கழிக்க வேண்டும்.
ஒவ்வொரு நிரை மற்றும் நிரலிலும் சரியாக ஒரு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. நான்கு வண்டிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளன.
D மற்றும் E என்ற வண்டிக்கு எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை.
5.
| வருடம் | விற்பனை | X=x- 2002 | X2 | XY |
| 2000 | 35 | -2 | 4 | -70 |
| 2001 | 36 | -1 | 1 | -36 |
| 2002 | 79 | 0 | 0 | 0 |
| 2003 | 80 | 1 | 1 | 80 |
| 2004 | 40 | 2 | 4 | 80 |
| 270 | 0 | 10 | 54 |
\(\sum X = 0, a = \frac{\sum Y}{n}\) = \(\frac {270}{5}\) = 54
b = \(\frac {\sum XY}{\sum X^2} = \frac {54}{10}\) = 5.4
∴ தேவையான நேர்க்கோட்டுப் போக்கின் சமன்பாடு Y = a +bX
\(\Rightarrow \) Y = 54 + 5.4 (x - 2002)
X = 2000 எனில், Ŷ = 54 + 5.4 (2000-2002) = 43.2
X = 2001 எனில், Ŷ = 54 + 5.4 (2001-2002) = 48.6
X = 2002 எனில், Ŷ = 54 + 5.4 (2002-2002) = 54
X = 2003 எனில், Ŷ = 54 + 5.4 (2003-2002) = 59.4
X = 2004 எனில், Ŷ = 54 + 5.4 (2004-2002) = 64.8
6.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
மொத்த தேவைகள் = மொத்த இருப்புகள் = 100
எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
முதல் ஒதுக்கீடு :
இரண்டாம் ஒதுக்கீடு :
மூன்றாம் ஒதுக்கீடு :
அனைத்து ஒதுக்கீடுகளும் ஒரே அட்டவணையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விவரம்:
O1 → D1, O1 → D3, O2 → D1, O2 → D2, O3 → D2, and O2 → D4
மொத்த போக்குவரத்து செலவு
= 10(5) + 20(3) + 20(4) + 20 (5) + 10(4) + 20(2)
= 50 + 60 + 80 + 100 + 40 + 40 = Rs. 370
7.
X என்ற சமவாய்ப்பு மாறியானது குறைபாடுள்ள பொருட்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. p = குறைபாடு உள்ள பொருட்களின் நிகழ்தகவு
\( \mathrm{p}=\frac{5}{100}=0.05 \)
\( \mathrm{q}=1-\mathrm{p}=1-0.05=0.95 \)
\( \mathrm{n}=20 \)
\( \mathrm{P}(\mathrm{X}=x)=\mathrm{nC}_x \mathrm{p}^x \mathrm{q}^{\mathrm{n}-x}\)
(i) \(P(X=3) =20 C_3(0.05)^3(0.95)^{17} \)
\(=\frac{20 \times 19 \times 18}{3 \times 2 \times 1}(0.000125)(0.4181)\)
=0.059
(ii) \(P(X \geq 2)=1-\mathrm{P}(\mathrm{X}<2) \)
\(=1-[\mathrm{P}(\mathrm{X}=0)+\mathrm{P}(\mathrm{X}=1)] \)
\(=1-\left[20 \mathrm{C}_0(0.05)^0(0.95)^{20}+\right. \left.20 \mathrm{C}_1(0.05)^1(0.95)^{19}\right] \)
\( =1-(0.95)^{19}[0.95+20(0.05)]\)
=1-(0.37735)(1.95)=1-0.7358
=0.2642
(iii) \(P(X=4)=20 C_4(0.05)^4(0.95)^{16} \)
\(=\frac{20 \times 19 \times 18 \times 17}{4 \times 3 \times 2 \times 1} \times(0.00000625)(0.4401) =0.0133\)
(iv) சராசரி \(= n p=20 \times\left(\frac{5}{100}\right)=1 \)
மாறுபாடு \( =n p q=20 \times \frac{5}{100} \times \frac{95}{100}=0.95
\)
8.
படுகை சமவாய்ப்பு கூறெடுப்பு முறையில் முழுமைத்தொகுதி பல துணை முழுமைத் தொகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. இவற்றை படுகை (Strata) என அழைக்கிறோம். பிறகு ஒவ்வொரு படுகையிலிருந்தும் சமவாய்ப்பு முறையில் கூறுகள் (மாதிரிகள்) தெரிவு செய்யப்படுகிறது. எல்லா படுகைகளிலிருந்தும் பெறப்பட்ட கூறுகளின் தொகுப்பே படுகை கூறெடுப்பாகும்.
முழுமைத்தொகுதியானது அதன் பண்புகளைப் பொறுத்து அதாவது ஒத்த பண்பற்றவையாகவோ (heterogeneous), அல்லது வெவ்வேறு பகுதிகளாகவோ (துண்டுகளாகவோ) அல்லது பிரிவுகளாகவோ இருக்கும் போது படுகை கூறெடுப்பு முறை பயன்படுகிறது. படுகை கூறெடுப்பு முறையின் மூலம் கூறுகளை தெரிவு செய்வதற்கு முன், முழுமைத்தொகுதியை ஒத்த பண்புகள் (homogeneous) உடைய துணைப் பிரிவுகளாக அல்லது படுகைகளாக (Strata) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு படுகையிலிருந்தும் கூறுகள் தெரிவு செய்யப்படவேண்டும். படுகை கூறெடுப்பு முறையில் சமவாய்ப்பு மாதிரிகளை தெரிவுசெய்யும் போது பின்பற்ற வேண்டிய படிநிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
(a) முழுமைத்தொகுதியானது ஏறத்தாழ ஒத்த பண்புகளைக் கொண்ட உறுப்புகளாலான வெவ்வேறு படுகைகளாகப் பிரிக்கப்பட வேண்டும். படுகைகள் ஒன்றோடொன்று சேராதவாறு வடிவமைக்கப்படவேண்டும்.
(b) முழுமைத்தொகுதி, படுகைகளாகப் பிரிக்கப்பட்டப் பின் ஒவ்வொரு படுகையிலிருந்தும் குறிப்பிட்ட அளவு கொண்ட கூறுகளைச் சமவாய்ப்பு முறையில், குலுக்கல் முறையில் அல்லது சமவாய்ப்பு எண் அட்டவணையிலிருந்து பெறலாம்.
ஒரு மாநிலத்தில் தேர்தலுக்காக, வெவ்வேறு சட்டமன்றப் பகுதிகளை பிரிப்பது மாநிலத்திலிருந்து மாவட்டங்களை பிரிப்பது படுகைகளுக்கான எடுத்துக்காட்டுகள், இதுபோன்ற மற்ற நிகழ்வுகளிலும் படுகை கூறெடுப்பு முறை பயன்படுத்தப்படுகிறது.
9.
(a) ஆம், பரவல் சார்பு தொடர்ச்சியாக இருக்கும்.
\(\mathrm{f}(x)=F^{\prime}(x)= \begin{cases}0, & x<0 \\ \frac{1}{2}, & 0 \leq x<1 \\ 0, & 1 \leq x<2 \\ \frac{1}{4}, & 2 \leq x<4 \\ 0, & x \geq 4\end{cases}\)
(b) (i) 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிகழ்தகவு
\(\mathrm{P}(\mathrm{X}>3)=1-P(X \leq 3)=1-\frac{3}{4}=\frac{1}{4}\)
(ii) 3 நிமிடங்களுக்கு குறைவாக காத்திருக்க வேண்டிய நிகழ்தகவு
\(P(X<3)=F(3)=\frac{3}{4}\)
(iii) 1 முதல் 3 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிகழ்தகவு
\(P(1 \leq X \leq 3) =\mathrm{F}(3)-\mathrm{F}(1) =\frac{3}{4}-\frac{1}{2}=\frac{3-2}{4}=\frac{1}{4}\)
10.
p என்பது A என்பவர் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு ஆகும். ஈருறுப்பு பரவலின் பண்பளவைகள் n மற்றும் p என்பனவாகும். இங்கு முயற்சிகளின் எண்ணிக்கை n = 5, p = 3/5, q =1-\(\frac { 3 }{ 5 } =\frac { 2 }{ 5 } \) என்பதாகும். (∵ q = 1-p)
5 முறை விளையாடும் விளையாட்டில் A எனும் வீரர் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு
P(X=x) = p(x) =5Cx\(\left( \frac { 3 }{ 5 } \right) ^{ x }\left( \frac { 2 }{ 5 } \right) ^{ 5-x }\)
A என்பவர் குறைந்தபட்சம் 3 முறை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பின் நிகழ்தகவு
P(x≥3) = P(X=3)+P(X=4)+P(X=5)
=5C3\(\left( \frac { 3 }{ 5 } \right) ^{ 3 }\left( \frac { 2 }{ 5 } \right) ^{ 2 }+5C4\left( \frac { 3 }{ 5 } \right) ^{ 4 }\left( \frac { 2 }{ 5 } \right) ^{ 1 }+5C5\left( \frac { 3 }{ 5 } \right) ^{ 5 }\left( \frac { 2 }{ 5 } \right) ^{ 0 }\)
=0.6826.
11.
| x | y = f(x) | Δy | Δ2y | Δ3y |
|---|---|---|---|---|
| 0 | 1 | |||
| 1 | ||||
| 1 | 2 | -2 | ||
| -1 | 12 | |||
| 2 | 1 | 10 | ||
| 9 | ||||
| 3 | 10 |
x0 + nh = x ⇒ x0 = 0, h = 1
\({ y }_{ (n=x) }={ y }_{ 0 }+\frac { n }{ 1! } =\triangle { y }_{ 0 }+\frac { n(n-1) }{ 2! } { \triangle }^{ 2 }{ y }_{ 0 }+\frac { n(n-1)(n-2) }{ 3! } { \triangle }^{ 3 }{ y }_{ 0 }+...\)
\(f (x)=1+\frac { n }{ 1! } (1)+\frac { n(n-1) }{ 2! } (-2)+\frac { n(n-1)(n-2) }{ 6 } (12)\)
⇒ 1 + x + (x2 - x)(-1) + x(x2 - 3x + 2) (2)
⇒ 1 + x - x2 + x + 2x3 - 6x2 + 4x
⇒ 1+ 6x - 7x2 + 2x3
= 2x3 - 7x2+ 6x + 1.
12.
f(x) -ல் நான்கு மதிப்புகள் கொடுக்கப்பட்டிருப்பதால், f(x) ஒரு மூன்றாம்படி பல்லுறுப்புக்கோவை என எடுத்துக் கொள்வோம்.
∴ Δ4yk = 0 ⇒ (E - 1)4yk = 0
(E4 - 4E3 + 6E2- 4E + 1) yk = 0
(E4yk - 4E3yk + 6E2yk- 4Eyk + yk = 0 ...(1)
k = 0 என (1) -ல் பிரதியிட
(E4 - 4E3 + 6E2 - 4E + 1)y0 = 0
⇒ y4 - 4y3 + 5y2 - 4y1 + y0 = 0
⇒ y4 - 4(15) + 6(8) - 4(y1) + 0 = 0
⇒ y4 - 60 + 48 - 4y1 = 0
⇒ y4 - 4y1 = 12 ... (2)
k = 1 என (1) -ல் பிரதியிட
(E4- 4E3 + 6E2 - 4E + 1) y1 = 0
(E4y1 - 4E3y1 + 6E2y1 - 4Ey1 + y1 = 0
⇒ y5 - 4y4 + 6y3 - 4y2 + y1 = 0
⇒ 35 - 4y4 + 6 (15) - 4 (8) +y1 = 0
⇒ 35 - 4y4 + 90 - 32 +y1 = 0
⇒ 4y4 +y1 = -93 (3)
சமன்பாடுகள் (2) மற்றும் (3) ஆகியவற்றைத் தீர்க்க,
| (2) x 4 ➝ | 4y4 - 16y1 | = 48 |
| (3) ➝ | -4y4 + y1 | = -93 |
| Adding | -15y1 | = -45 |
⇒ y1 = \(\frac{-45}{-15}\) = 3
⇒ y1 = 3.
y1 = 3 என (2) -ல் பிரதியிட
y4 = 12 + 12 = 24
13.
சமான நிலையில் \(Q_d=Q_s\)
\(30-5 p+2 \frac{d p}{d t}+\frac{d^2 p}{d t^2} =6+3 p \)
\(\frac{d^2 p}{d t^2}+2 \frac{d p}{d t}-8 p =-24 \)
\(\left(D^2+2 D-8\right) p =-24\)
துணைச் சமன்பாடு
\(\mathrm{m}^2+2 \mathrm{~m}-8 =0 \)
\((\mathrm{~m}+4)(\mathrm{m}-2) =0 \)
\(\mathrm{~m} =-4,2 \)
\(\text { C. } \mathrm{F}=A e^{m_1 t }+B e^{m_2 t} =A e^{-4 t}+\mathrm{Be}^{2 t} \)
\(\text { P.I } =\frac{1}{D^2+2 D-8}\left(-24 e^{e t}\right)\)
(D - க்கு பதிலாக 0 -ஐ பதிலிட)
\(\text { P.I }=\frac{-24}{-8}=3\)
p=Ae-4t+Be2t+3
14.
\(\frac { dy }{ dx } \)-(3cotx).y=sin2x
இது \(\frac { dy }{ dx } \)+Py=Q என்ற வடிவில் உள்ளது.
இங்கு P=-3cotx, Q=sin2x
\(\int { P } dx=\int { -3 \cot x } dx=-3\log \sin x=-\log \sin^{ 3 }x=\log\frac { 1 }{ \sin^{ 3 }x } \)
I.F.=\(e^{ log\frac { 1 }{ sin^{ 3 }x } }=\frac { 1 }{ sin^{ 3 }x } \)
தேவையான தீர்வு: y(I.F)=\(\int { Q(I.F) } dx\)+c
\(y\frac { 1 }{ sin^{ 3 }x } =\int { sin2x } \frac { 1 }{ sin^{ 3 }x } dx+c\)
\(y\frac { 1 }{ sin^{ 3 }x } =\int { 2sinxcosx } \times \frac { 1 }{ sin^{ 3 }x } dx+c\)
=\(2\int { \frac { 1 }{ sinx } \times \frac { cosx }{ sinx } } dx+c\)
= 2∫cosec x cot x xdx+c
\(y\frac { 1 }{ sin^{ 3 }x } \)=-2cosecx+c .....(1)
x=\(\frac { \pi }{ 2 } \) மற்றும் y=2 எனில்,
(i) ⇒ 2\(\left( \frac { 1 }{ 1 } \right) \)=-2 x 1 + c ⇒ c=4
∴ (1) ⇒ \(y\frac { 1 }{ sin^{ 3 }x } \)=-2cosecx+4
15.
\(\eta _{ d }=\frac { p+2{ p }^{ 2 } }{ 100-p-{ p }^{ 2 } } \)
\(\frac { -p }{ x } \frac { dx }{ dp } =\frac { p(2p+1) }{ 100-p-{ p }^{ 2 } } \)
\(\frac { -dx }{ x } =\frac { -(2p+1) }{ { p }^{ 2 }+p-100 } dp\)
\(\int { \frac { dx }{ x } } =\int { \frac { 2p+1 }{ { p }^{ 2 }+p-100 } } dp\)
logx (p2+p-100)+logk
∴ x=k(p2+p-100)
இங்கு x=70, p=5,
70=k(25+5-100)
⇒ k=-1
எனவே, x=100-p-p2
R=px
வருவாய் சார்பு: R=p(100-p-p2)
16.
கணக்கின்படி, C(x)=\(\int { C' } (x)dx+{ k }_{ 1 }\)
=\(\int { \left( 50+\frac { x }{ 50 } \right) dx } +{ k }_{ 1 }\)
C(x)=\(50x +\frac { x^ 2 }{ 100 } +{ k }_{ 1 }\)
மாறாச் செலவு: k1=200 (கணக்கின்படி)
செலவுச்சார்பு : C(x)=50x+\(\frac { { x }^{ 2 } }{ 100 } \)+200 .....(1)
இறுதிநிலை வருவாய்ச்சார்பு : =R'(x)=60
R(x) =\(\int { R'(x) } dx+{ k }_{ 2 }\)
=\(\int { 60 } dx+{ k }_{ 2 }\)
=60x+k2
உற்பத்தி அளவு =0 எனில் வருவாய் = 0 ஆகும்.
அதாவது, x = 0 எனும்பொழுது R = 0 ⇒ k2=0
∴ வருவாய் : R(x)=60x
இலாபம் : P = மொத்த வருவாய் – மொத்தச் செலவு
=60x-50x-\(\frac { { x }^{ 2 } }{ 100 } \)-200
=10x-\(\frac { { x }^{ 2 } }{ 100 } \)-200
\(\frac { dp }{ dx } \)=10-\(\frac { x }{ 50 } \)
மீப்பெரு இலாபத்திற்கு, \(\frac { dp }{ dx } \)=0 ⇒ x=500
\(\frac { { d }^{ 2 }P }{ dx^{ 2 } } =\frac { -1 }{ 50 } \)<0
∴ x=500 இல், மீப்பெரு இலாபம்: P=10(500)-\(\frac { (500)^{ 2 } }{ 100 } \)-200
=5000-2500-200
=2300
மீப்பெரு இலாபம் =ரூ.2,300.
17.
I = \(\int _{ 0 }^{ 1 }{ \log { \left( \frac { 1 }{ x } -1 \right) } } dx\) என்க.
\(I=\int _{ 0 }^{ 1 }{ \log { \left( \frac { 1-x }{ x } \right) } } dx\) ---(1)
\(I=\int _{ 0 }^{ 1 }{ \log { \left( \frac { 1-(1-x) }{ 1-x } \right) } } dx\)
\(I=\int _{ 0 }^{ 1 }{ \log { \left( \frac { 1-1+x }{ 1-x } \right) } } dx\)
\([\int _{ 0 }^{ a }{ f\left( x \right) dx=\int _{ 0 }^{ a }{ f\left( a-x \right) } } dx]\)
\(=\int _{ 0 }^{ 1 }{ \log { \left( \frac { x }{ 1-x } \right) } } dx\) ---(2)
(1) + (2) ,
\(2I=\int _{ 0 }^{ 1 }{ \left[ \log { \left( \frac { 1-x }{ x } \right) } +\log { \left( \frac { x }{ 1-x } \right) } \right] } dx\)
[∵ log m + log n= log mn]
\(=\int _{ 0 }^{ 1 }{ \log { 1 } } dx=0\) [∵ log 1 = 0]
2I = 0
⇒ I = 0
18.
\(\int { \frac { 1 }{ x\left( { x }^{ 2 }+1 \right) } } dx\)
\(=\log { \left| x \right| } -\frac { 1 }{ 2 } \log { \left| { x }^{ 2 }+1 \right| } +c\quad \)
\(\left[ \because t={ x }^{ 2 }+1\Rightarrow dt=2x\quad dx\ \therefore \int { \frac { 2x\ dx }{ { x }^{ 2 }+1 } } =\int { \frac { dt }{ t } =\log { \left| t \right| =\log { \left| { x }^{ 2 }+1 \right| } } } \right] \)
\(\frac { 1 }{ x\left( { x }^{ 2 }+1 \right) } =\frac { A }{ x } +\frac { Bx+C }{ { x }^{ 2 }+1 } \)
\(\Rightarrow 1=A\left( { x }^{ 2 }+1 \right) +\left( Bx+C \right) (x)\)
\(x=0\Rightarrow 1=A\)
(1) ல் x2 ன் கெழுக்களைச் சமப்படுத்த
0 = A + B ⇒ B = -1
(1) ல் x ன் கெழுக்களைச் சமப்படுத்த
0 = C ⇒ C = 0
\(=\int { \left( \frac { A }{ x } +\frac { Bx+C }{ { x }^{ 2 }+1 } \right) } dx\)
\(=\int { \left( \frac { 1 }{ x } +\frac { -x+0 }{ { x }^{ 2 }+1 } \right) } dx\)
\(=\int { \frac { 1 }{ x } } dx-\int { \frac { x }{ { x }^{ 2 }+1 } } dx\)
\(\int \frac {dx }{x (x^2+1}=\int \frac {dt }{x} -\frac { 1 }{ 2 } \int { \frac { 2x }{ { x }^{ 2 }+1 } }dx \)
= log|x|-\(\frac{1}{2}\)log|x2+1|+c
19.
சமன்பாடுகள்
x+y+z=1
3x-y-z=4
x+5y+5z=k
அணிச் சமன்பாடு ,
\(\left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 3 & -1 & -1 \\ 1 & 5 & 5 \end{matrix} \right) \left( \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right) =\left( \begin{matrix} 1 \\ 4 \\ k \end{matrix} \right) \)
AX =B
விரிவுபடுத்தப்பட்ட அணி
(A ,B ) =\(\begin{pmatrix} 1 & 1 & 1 & 1 \\ 3 & -1 & -1 & 4 \\ 1 & 5 & 5 & k \end{pmatrix}\quad \)
~\(\begin{pmatrix} 1 & 1 & 1 & 1 \\ 0 & -4 & -4 & 1 \\ 0 & 4 & 4 & k-1 \end{pmatrix}\quad { R }_{ 2 }\rightarrow { R }_{ 3 }-3{ R }_{ 1 }\\ \quad \quad \quad \quad \quad \quad \quad \quad \quad \quad { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-\quad { R }_{ 1 }\quad \)
~\(\begin{pmatrix} 1 & 1 & 1 & 1 \\ 0 & -4 & -4 & 1 \\ 0 & 0 & 0 & k \end{pmatrix}\)\(\quad { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }+{ R }_{ 2 }\quad \)
சமன்பாடுகள் ஒருங்கமையற்றதாக இருக்க ,
\(\rho \)(A ,B ) \(\neq \) 2
ஃ k \(\neq \) 0
20.
சமன்பாடுகள்
x + 2y + z = 7,
2x − y + 2z = 4,
x + y − 2z = −1
\(\Delta =\begin{vmatrix} 1 & 2 & 1 \\ 2 & -1 & 2 \\ 1 & 1 & -2 \end{vmatrix}\)
=1(2-2)-2(-4-2)+1(2+1)
=12+3 =15 \(\neq \) 0
∴ கிரேமரின் விதியைப் பயன்படுத்தலாம் .
\({ \Delta }_{ x }=\begin{vmatrix} 7 & 2 & 1 \\ 4 & -1 & 2 \\ -1 & 1 & -2 \end{vmatrix}\)
= 7(2-2)-2(-8+2)+1(4-1)
= 12+3 =15
\({ \Delta }_{ y }=\begin{vmatrix} 1 & 7 & 1 \\ 2 & 4 & 2 \\ 1 & -1 & -2 \end{vmatrix}\)
= 1 (-8+2)-7(-4-2)+1(-2-4)
= -6+42-6 =30
\({ \Delta }_{ z }=\begin{vmatrix} 1 & 2 & 7 \\ 2 & -1 & 4 \\ 1 & 1 & -1 \end{vmatrix}\)
= 1(1- 4) - 2 (- 2 - 4) + 7 (2 + 1)
= - 3 + 12 + 21 = 30
\(x=\frac { { \Delta }_{ x } }{ { \Delta } } =\frac { 15 }{ 15 } =1\\ y=\frac { { \Delta }_{ y } }{ { \Delta } } =\frac { 30 }{ 15 } =2\\ z=\frac { { \Delta }_{ z } }{ { \Delta } } =\frac { 30 }{ 15 } =2\)
ஃ தீர்வு x =1,y =2,z =2.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards