12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 09/03/2020
12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Business Mathematics All Chapter Two Marks Important Questions 2020 )
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
குறியீட்டு எண்ணின் போதுமான தன்மையை சோதிக்கும் சோதனைகளை எழுதுக
2.
குறியீட்டு எண் வகைப்படுத்தலைக் குறிப்பிடவும்.
3.
கூறெடுப்புப் பரவல் மற்றும் திட்டப்பிழை சிறுகுறிப்பு வரைக.
4.
மதிப்பீட்டுப் பண்பளவை என்றால் என்ன?
5.
பாய்சான் பரவலானது ஈருறுப்புப் பரவலின் எல்லையாக அமைவதற்கான கட்டுப்பாடுகளை எழுதுக.
6.
சமநிலை போக்குவரத்து கணக்கு என்பதன் பொருள் யாது?
7.
போக்குவரத்து கணக்குகள் என்றால் என்ன?
8.
ஈருறுப்பு பரவலின் பண்புகளைப் குறிப்பிடுக.
9.
தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி பற்றி நீங்கள் என்ன புரிந்து கொள்கிறீர்கள்?
10.
கொடுக்கப்பட்டுள்ள நிகழ்தகவுப் பரவலுக்கான திரள் பரவல் சார்பை அமைக்க
| X | 0 | 1 | 2 | 3 |
| P(X=x) | 0.3 | 0.2 | 0.4 | 0.1 |
11.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் வரிசை மற்றும் படி காண்க.
\(\frac { d^{ 2 }y }{ dx^{ 2 } } +y+\left( \frac { dy }{ dx } -\frac { { d }^{ 3 }y }{ dx^{ 3 } } \right) ^{ 3/2 }\)
12.
D’ -ஐ விட்டமாகவும் A -ஐ பரப்பாகவும் கொண்ட வட்டத்தின் மதிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| D | 80 | 85 | 90 | 95 | 100 |
| A | 5026 | 5674 | 6362 | 7088 | 7854 |
82 மற்றும் 91 என்பனவற்றை விட்டமாகக் கொண்ட வட்டங்களின் பரப்புகளைக் காண்க.
13.
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து x = 43 மற்றும் x = 84 எனும் புள்ளிகளில் y-ன் மதிப்பு காண்க.
| x | 40 | 50 | 60 | 70 | 80 | 90 |
| y | 184 | 204 | 226 | 250 | 276 | 304 |
14.
கீழ்க்காணும் வகைக்கெழு சமன்பாடுகளை தீர்க்க:
\(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \)+16y=0
15.
உற்பத்தி பொருள்களின் இறுதிநிலைச் செலவு சார்பு MC=\(\frac { 14000 }{ \sqrt { 7x+4 } } \) மற்றும் மாறாச் செலவு ரூ.18,000 எனில், மொத்தச் செலவு மற்றும் சராசரி செலவைக் காண்க
16.
y = x எனும் கோடு, x-அச்சு, x=1 மற்றும் x=2 எனும் எல்லைக்குள் ஏற்படுத்தும் பரப்பைக் காண்க.
17.
மதிப்பிடுக: \(\int { \sqrt { 1+\sin2x dx } } \)
18.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\frac { { x }^{ 3 } }{ x+2 } \)dx
19.
3 அலகுகள் தொழிலாளரின் சம்பளம் மற்றும் 2 அலகுகள் மூலதனம் கொண்டு தயாரிக்கப்படும் உற்பத்தி பொருள்களுக்கான செலவு ரூ.62 ஆகும். 4 அலகுகள் தொழிலாளரின் சம்பளம் மற்றும் 1 அலகு மூலதனம் கொண்டு பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தால் அதன் மொத்த செலவு ரூ.56 எனில், அணிக்கோவை முறையில் தொழிலாளர் மற்றும் மூலதனத்தின் ஒரு அலகுக்கு ஆகும் செலவினைக் காண்க.
20.
\(\left( \begin{matrix} -5 & -7 \\ 5 & 7 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.
1.
குறியீட்டு எண்களானது ஏதேனும் இரண்டு ஆண்டுகளை ஒப்பிடும் போது, விலை மற்றும் அளவு ஆகியவற்றில் காணப்படும் மாற்றங்களை அறிந்து கொள்வதற்கு பயன்படுகின்றன. ஒரு குறியீட்டு எண்ணின் போதுமான தன்மையை சோதிப்பதற்கு இரண்டு சோதனைகள் உள்ளன.
அவை பின்வருமாறு:
(i) காலமாற்றுச் சோதனை (Time Reversal Test)
(ii) காரணி மாற்றுச் சோதனை (Factor Reversal Test)
ஒரு சிறந்த குறியீட்டு எண்ணின் அளவுகோல் என்பது மேலே உள்ள இரண்டு சோதனைகளை நிறைவு செய்வது என்பதாகும்.
2.
குறியீட்டு எண்களை பின்வருமாறு வகைப்படுத்த முடியும்,
(i) விலைக் குறியீட்டு எண் (Price Index Number) சில்லறை அல்லது மொத்த விலையில் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட மாற்றத்தை அல்லது தொகுப்பு பொருள்களின் விலை குறியீட்டு எண்ணின் பொதுவான மாற்றங்களை அளவிடுவதற்கான குறியீடு ஆகும்.
(ii) எண்ணளவு குறியீட்டு எண் (Quantity Index Number) ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருள்களின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களை அளவிடுவதற்கான குறியீடு ஆகும்.
(iii) வாழ்க்கைத்தர குறியீட்டு எண் (Cost of living Index Number) வெவ்வேறு வர்க்க மக்களின் வாழ்க்கைத் தர செலவில் விலை சார்ந்த மாற்றத்தின் விளைவுகளை அறிவதற்காக இவை உருவாக்கப்பட்டுள்ளன.
3.
ஒரே முழுமைத் தொகுதியிலிருந்து பெறப்பட்ட ஒரே அளவு கொண்ட அனைத்து மாதிரிகளின் புள்ளியியல் அளவைகள் கணக்கிடப்பட்டு, ஒரு நிகழ்வெண் (அலைவெண்) பரவல் அமைப்பதே கூறெடுப்பு பரவல் அல்லது மாதிரிப் பரவல் (Sampling distribution) என அழைக்கப்படுகிறது.
\({ }^N C_n=\frac{N !}{n !(N-n) !}=k\)
இவ்வாறாக பெறப்பட்ட k மாதிரிகள் ஒவ்வொன்றிற்கும், t = t ( x1,x2 ,x3 ,... xk ), 1 2 3 என்ற புள்ளியியல் அளவைகளான சராசரி x , பரவற்படி s2 , முதலானவற்றைக் குறிப்பிடலாம்.
ஒவ்வொரு கூறிலிருந்தும் புள்ளியியல் அளவைகள் கணக்கிடப்பட்டு அவை கூறெடுப்புப் பரவலாக அமைக்கப்படுகிறது.
ஒரு புள்ளியியல் அளவையின் கூறெடுப்பு பரவலின் திட்டவிலக்கமே திட்டப்பிழை எனப்படும். இதனை S.E. எனச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம்.
4.
மதிப்பு தெரியாத ஒரு தொகுதிப் பண்பளவையினை அளவிட பயன்படுத்தப்படும் மாதிரிப் பண்பளவையே மதிப்பீட்டு பண்பளவை (Estimator) எனப்படும். அதாவது மதிப்பீட்டு பண்பளவை என்பது ஒரு மாதிரிப் பண்பளவையே, இது முழுமைத்தொகுதிப் பண்பளவையை மதிப்பிடப் பயன்படுகிறது.
5.
(i) முயற்சிகளின் எண்ணிக்கை வரையறுக்க இயலாத நிலையில் அதிகமாக இருக்கும். அதாவது n → ∞ .
(ii) ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றிக்கான நிகழ்தகவு மிகவும் சிறியதாக இருக்கும். அதாவது p → 0
(iii) np = λ இது ஒரு முடிவுறு எண்
6.
மொத்த அளிப்புகள் = மொத்த தேவைகள் கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
7.
மொத்த போக்குவரத்துச் செலவை குறைக்கும் வகையில் ஒவ்வொரு ஆதியிலிருந்து ஒவ்வொரு சேரும் இடத்திற்கு அனுப்பக் கூடிய பொருள்களின் அளவை தீர்மானிப்பது போக்குவரத்து கணக்காகும்.
8.
ஈருறுப்புப் பரவலின் பண்புகள் :
1. p = q = 0.5 என இருக்கும்பொழுது ஈருறுப்புப் பரவலானது சமச்சீரானது.
2. p ≠ q எனும்பொழுது சமச்சீர் அற்றதாக இருக்கும்.
3. p < 0.5 எனில், ஈருறுப்புப் பரவல் மிகை கோட்ட அளவையாக இருக்கும்.
4. p > 0.5 எனில், ஈருறுப்புப் பரவல் குறை கோட்ட அளவையாக இருக்கும்.
5. ஈருறுப்புப் பரவலில் மாறுபாட்டளவையின் மதிப்பு, சராசரியின் மதிப்பைவிடக் குறைவானதாக இருக்கும். அதாவது குறியீட்டின்படி
6. மாறுபாட்டளவை npq = (np)q < np
9.
ஓர் இடைவெளியில் உள்ள அனைத்து மெய் மதிப்புகளையும் (முழுக்களாகவோ, பின்னங்களாகவோ) ஏற்கும் ஒரு சமவாய்ப்பு மாறி. X ஆனது தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி என்று அழைக்கப்படுகிறது.
10.
X -இன் திரள் பரவல் சார்பு
\(\begin{array}{|c|c|c|}
\hline \mathbf{X}=\boldsymbol{x} & \mathbf{p}(\boldsymbol{x}) & \mathbf{F}_{\boldsymbol{x}}(\boldsymbol{x})=\mathbf{P}(\mathbf{X} \leq \boldsymbol{x}) \\
\hline 0 & 0.3 & 0.3 \\
\hline 1 & 0.2 & 0.3+0.2=0.5 \\
\hline 2 & 0.4 & 0.5+0.4=0.9 \\
\hline 3 & 0.1 & 0.9+0.1=1 \\
\hline
\end{array}\)
11.
\(\frac{d^2 y}{d x^2}+y+\left(\frac{d y}{d x}-\frac{d^3 y}{d x^3}\right)^{3 / 2}=0\)
\(\frac{d^2 y}{d x^2}+y=-\left(\frac{d y}{d x}-\frac{d^3 y}{d x^3}\right)^{3 / 2}\)
இருபறமும் வர்க்கப்படுத்த
\(\left(\frac{d^2 y}{d x^2}+y\right)^2 =\left(\frac{d y}{d x}-\frac{d^3 y}{d x^3}\right)^3 \)
வரிசை =3 ; படி =3
12.
\(\begin{array}{|c|c|c|c|c|c|} \hline x & y & \Delta y & \Delta^2 y & \Delta^3 y & \Delta^4 y \\ \hline 80 & 5026 & & & & \\ \hline & & 648 & & & \\ \hline 85 & 5674 & & 40 & & \\ \hline & & 688 & & -2 & \\ \hline 90 & 6362 & & 38 & & 4 \\ \hline & & 726 & & 2 & \\ \hline 95 & 7088 & & 40 & & \\ \hline & & 766 & & & \\ \hline 100 & 7854 & & & & \\ \hline \end{array}\)
\( x_0=80, \mathrm{~h}=5, \quad x_0+\mathrm{nh}=82 \)
\(5 \mathrm{n}=2 \Rightarrow \mathrm{n}=\frac{2}{5}=0.4 \)
\( \mathrm{y}=y_0+\frac{n}{1 !} \Delta y_0+\frac{n(\mathrm{n}-1)}{2 !} \Delta^2 y_0 +\frac{n(\mathrm{n}-1)(\mathrm{n}-2)}{3 !} \Delta^3 y_0 +\frac{n(\mathrm{n}-1)(\mathrm{n}-2)(\mathrm{n}-3)}{4 !} \Delta^4 y_0 \)
\(y=5026+\frac{0.4}{1 !}(648)+\frac{(0.4)(-0.6)}{2 !}(40) +\frac{(0.4)(-0.6)(-1.6)}{3 !}(-2) +\frac{(0.4)(-0.6)(-1.6)(-2.6)}{4 !}(4) \)
\(=5026+259.2-4.8-0.128-0.1664 =5280.1056 \)
\( x_{\mathrm{n}}=100, \mathrm{~h}=5, x_{\mathrm{n}}+\mathrm{nh}=91 \)
\( \Rightarrow 5 \mathrm{n}=-9 \Rightarrow \mathrm{n}=-1.8 \)
\( \mathrm{y}=y_n+\frac{n}{1 !} \nabla y_n+\frac{n(\mathrm{n}+1)}{2 !} \nabla^2 y_n +\frac{n(\mathrm{n}+1)(\mathrm{n}+2)}{3 !} \nabla^3 y_n +\frac{n(\mathrm{n}+1)(\mathrm{n}+2)(\mathrm{n}+3)}{4 !} \nabla^4 y_n \)
\( y=7854+\frac{(-1.8)}{1 !}(766)+\frac{(-1.8)(-0.8)}{2 !} 40 +\frac{(-1.8)(-0.8)(0.2)}{3 !}(2) +\frac{(-1.8)(-0.8)(0.2)(1.2)}{4 !}(4) \)
\(=7854-1378.8+28.8+0.096+0.0576 \)
\( =6504.1536=6504 \)
13.
\(\begin{array}{|c|c|c|c|c|} \hline x & y & \Delta y & \Delta^2 y & \Delta^3 y \\ \hline 240 & 484 & & & \\ \hline & & 20 & & \\ \hline 50 & 204 & & 2 & \\ \hline & & 22 & & 0 \\ \hline 60 & 226 & & 2 & \\ \hline & & 24 & & 0 \\ \hline 70 & 250 & & 2 & \\ \hline & & 26 & & 0 \\ \hline 80 & 276 & & 2 & \\ \hline & & 28 & & \\ \hline 90 & 304 & & & \\ \hline \end{array}\)
\(x_0 =40, \mathrm{~h}=10, x_0+\mathrm{nh}=43 \)
\(10 \mathrm{n} =3 \Rightarrow \mathrm{n}=0.3 \)
\(\mathrm{y} =y_0+\frac{n}{1 !} \Delta y_0+\frac{n(\mathrm{n}-1)}{2 !} \Delta^2 y_0 \)
\( =184+0.3(20)+\frac{(0.3)(-0.7)}{2}(2) \)
\( =184+6-0.21=189.79 \)
\(x_{\mathrm{n}} =90, \mathrm{~h}=10, x_{\mathrm{n}}+\mathrm{nh}=84 \)
\(10 \mathrm{n} =-6 \Rightarrow \mathrm{n}=-0.6 \)
\(\mathrm{y} =y_n +\frac{n}{1 !} \Delta y_n +\frac{n(\mathrm{n}-1)}{2 !} \Delta^2 y_n + ....\)
\( =304+\frac{(-0.6)}{1 !}(28)+\frac{(-0.6)(+0.4)}{2 !}(2) \)
\(=304-16.8-0.24=286.96 \)
14.
\(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \)+16y=0
துணைச் சமன்பாடு
m² + 16=0
\(\mathrm{m}^2 =-16 \Rightarrow \mathrm{m}= \pm 4 i \)
\(\alpha =0, \beta=4\)
நிரப்புச் சார்பு : \(e^{\alpha x} \cdot(A \cos \beta x+B \sin \beta x)\)
தீர்வு : y=Acos 4x+Bsin 4x
15.
இறுதிநிலைச் செலவு சார்பு
\(\mathrm{MC} =\frac{14000}{\sqrt{7 x+4}} \)
\(\frac{d C}{d x} =\frac{14000}{\sqrt{7 x+4}} \)
\(\int d C =14000 \int(7 x+4)^{-1 / 2} d x \)
\(C =14000\left[\frac{(7 x+4)^{1 / 2}}{7(1 / 2)}\right]+k\)
செலவுச் சார்பு:\(\mathrm{C}=4000(7 x+4)^{1 / 2}+\mathrm{k}\)
x=0 மற்றும் C=18,000 எனில்,k =10000
செலவுச் சார்பு : C =\(4000\sqrt { 7x+4 } +10000\)
சராசரி செலவு: AC =\(\frac { 4000 }{ x } \sqrt { 7x+4 } +\frac { 10000 }{ x } \)
16.
y = x
| x | 1 | 2 |
| y | 1 | 2 |

பரப்பு \(=\int _{ 1 }^{ 2 }{ y\quad dx } \)
\( ={ \left( \frac { { x }^{ 2 } }{ 2 } \right) }_{ 1 }^{ 2 }\)
\(=\frac{1}{2}[4-1]\) \(\frac{3}{2}\) ச.அலகுகள்
17.
\(\int { \sqrt { 1+\sin2x dx } } =\int { \sqrt { { \left( \sin x+\cos x \right) }^{ 2 }dx } } \)
\(=\int { \left( \sin x+\cos x \right) dx } \)
=−cos x + sin x + c
எளியச் சார்புகளாக பிரித்தெழுத
1+ sin2x = sin2 x + cos2 x + 2sin x cos x
= (sin x + cos x)2
18.
\(\int \frac { { x }^{ 3 } }{ x+2 } dx\)
\(x^{ 3 }=(x+2)\left( x^{ 2 }-2x+4 \right) -8\)
\(\int \frac { x^{ 3 } }{ x+2 } dx=\int \left( x^{ 2 }-2x+4 \right) dx-8\int \frac { dx }{ x+2 }\)
\(=\frac { x^{ 3 } }{ 3 } -\frac { 2x^{ 2 } }{ 2 } +4x-8\log |x+2|+c\)
\(=\frac { x^{ 3 } }{ 3 } -x^{ 2 }+4x-8\log |x+2|+c\)
19.
x,y அலகுகள் தொழிலாளர் அலகு, மூலதனம் அலகு ஆகியவற்றின் விலையைக் குறிக்கட்டும்.
3x + 2y = 62
4x +y = 56
\(\Delta =\left| \begin{matrix} 3 & 2 \\ 4 & 1 \end{matrix} \right| =3(1)-4(2)=3-8=-5\not =0\)
∴ கிரேமரின் விதியைப் பயன்படுத்தலாம்
\(\Delta x=\left| \begin{matrix} 62 & 2 \\ 56 & 1 \end{matrix} \right| =62(1)-56(2)=62-112=-50\)
\({ \Delta }_{ y }=\left| \begin{matrix} 3 & 62 \\ 4 & 56 \end{matrix} \right| =3(56)-4(62)\)
= 168 - 248 = -80

\(\therefore\) தொழிலாளருக்கான ஒரு அலகு செலவு ரூ.10 மற்றும் முதலீட்டிற்கான ஒரு அலகு செலவு ரூ.16
20.
A=\(\left( \begin{matrix} -5 & -7 \\ 5 & 7 \end{matrix} \right) \) என்க.
A-ன் வரிசை 2 x 2 ∴ ρ(A) ≤2
இரண்டாம் வரிசை சிற்றணிக்கோவையை கருத, நாம் பெறுவது \(\left| \begin{matrix} -5 & -7 \\ 5 & 7 \end{matrix} \right| \)=0 ஆகும்.
இரண்டாம் வரிசை சிற்றணிக்கோவை பூச்சியமாவதால், ρ(A)≠2
ஒன்றாம் வரிசை கொண்ட ஒரு சிற்றணிக்கோவையை கருத, நாம் பெறுவது |-5| ≠ 0 ஆகும்.
⇒ பூச்சியமற்ற சிற்றணிக்கோவையின் வரிசை 1 ஆகும். ∴ ρ(A) =1
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards