12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 07/03/2020
12ஆம் வகுப்பு வேதியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Chemistry All Chapter Two Marks Important Questions 2020 )
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
HCl முன்னிலையில், அசிட்டால்டிஹைடை , இரண்டு சமானங்கள் மெத்தனால் உடன் வினைப்படுத்தும்போது 1,1, - டைமீத்தாக்ஸி ஈத்தேன் எவ்வாறு உருவாகிறது?
2.
ஹெக்ஸ் -4- ஈனால் தயாரிக்க?
3.
\(2 \times 10^{-3}\) M, H3O+ அயனிச் செறிவைக் கொண்டுள்ள ஒரு பழரசத்தில் OH– அயனிச் செறிவை கணக்கிடுக. கரைசலின் தன்மையை கண்டறிக.
4.
CuCl2 முன்னிலையில் காற்றைக் கொண்டு HCl ஐ ஆக்சிஜனேற்றம் அடையச் செய்தல்.
5.
t – பியூட்டைல் ஆல்கஹாலை அமிலம் கலந்த டைகுரோமேட்டை பயன்படுத்தி கார்பனைல் சேர்மமாக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்ய இயலுமா?
6.
ஒத்த தொகுதிகளைக் கொண்டுள்ள ஈரிணைய ஆல்கஹால்களைத் தயாரிக்க ஒரு தகுந்த வினை பொருளைத் தருக.
7.
வலிநிவாரணியாகவும், காய்ச்சல் மருந்தாகவும் பயன்படும் ஒரு சேர்மத்தின் பெயரைக் குறிப்பிடுக.
8.
இயற்புறப்பரப்பு கவர்தலின் சிறப்புப் பண்புகள் இரண்டை தருக.
9.
அலனினின் சுவிட்டர் அயனி அமைப்பை எழுதுக
10.
பின்வரும் குறைபாட்டு நோய்களை உருவாக்கும் வைட்டமின்களின் பெயர்களை எழுதுக.
i) ரிக்கட்ஸ்
ii) ஸ்கர்வி
11.
நீர்த்தல் அதிகரிக்கும் போது கரைசலின் கடத்துத்திறன் குறைகிறது ஏன்?
12.
நைட்ரோ பென்சீனை பின்வரும் சேர்மங்களாக எவ்வாறு மாற்றுவாய்
i. 1,3,5 - ட்ரை நைட்ரோபென்சீன்
ii. ஆர்த்தோ மற்றும் பாரா நைட்ரோ பீனால்
iii. m – நைட்ரோ அனிலீன்
iv. அசாக்சி பென்சீன்
v. ஹைட்ரசோ பென்சீன்
vi. N – பினைல்ஹைட்ராக்சிலமீன்
vii. அனிலீன்
13.
அழுத்த மின்சாரம் என்றால் என்ன?
14.
முதல்நிலை அலகுக்கூடுகள் என்றால் என்ன?
15.
ஆக்டினைடு அயனிகள் நிறமுள்ளவை. ஏன்?
16.
Pt(II) சேர்மங்களை காட்டிலும் Ni(II) சேர்மங்கள் அதிக வெப்ப இயக்கவியல் நிலைப்புத் தன்மை உடையவை ஏன்?
17.
ஆய்வகத்தில் ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
18.
சேமிக்கப்பட்ட நைட்ரிக் அமிலம் மஞ்சள் நிறமாக மாறுகிறது. ஏன்?
19.
படிகாரம் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.
20.
அலுமினியம் குளோரைடுடன் NaOH ன் வினை யாது?
21.
பல முனை ஈனிகள் என்றால் என்ன?
22.
முதன்மை இணைதிறன் என்றால் என்ன?
23.
N3+3H2 ⟶ 2NH3 என்ற வினையின் வினைவேக சமன்பாட்டை எழுதுக.
24.
வினை வேகம் -வரையறு.
25.
உலோகத்தைத் தூய்மையாக்கும் உருக்கிப்பிரித்தல் முறை பற்றி எழுது.
26.
வறுத்தல் செயல்முறை பற்றி எழுது.
27.
வினைவேகத்தை தீர்மானிக்கும் படி என்பதனை உதாரணத்துடன் விளக்குக.
28.
பின்வரும் வினைகளில், ஒவ்வொரு வினைபடு பொருள்களைப் பொருத்து வினை வேகங்களைக் குறிப்பிடுக. வினையின் ஒட்டுமொத்த வினைவகையைக் கண்டறிக.
அ) \(\\ 5{ Br }^{ - }(aq)+Br{ O }_{ 3 }^{ - }(aq)+{ 6H }^{ + }(aq)\longrightarrow 3{ Br }_{ 2 }(l)+3{ H }_{ 2 }O(l)\)
சோதனை மூலம் கண்டறியப்பட்ட வேகவிதி
வினைவேகம் = K[Br-][BrO3-][H+]2
ஆ) CH3CHO(g)\(\overset { \Delta }{ \longrightarrow } \)CH4(g)+CO(g) சோதனை மூலம் கண்டறியப்பட்ட வேகவிதி
வினைவேகம் = K[CH3CHO]\(\frac {3}{2}\)
29.
அயனிப்படிகங்களின் ஏதேனும் மூன்று பண்புகளைக் கூறுக.
30.
டைமீத்தைல் கிளையாக்ஸைமின் ஆல்கஹால் கலந்த கரைசலைப் பயன்படுத்தி Ni2+ கண்டறியப்படுகிறது இவ்வினையில் உருவாகும் ரோஜா சிவப்பு நிற அணைவுச் சேர்மத்தின் வாய்ப்பாட்டினை எழுதுக.
31.
லாந்தனாய்டுகள் மற்றும் ஆக்டினாய்டுகள் தனிம வரிசை அட்டவணையில் பெற்றுள்ள இடத்தினை நிறுவுக.
32.
ஏன் ஃபுளுரின் எப்போதும் -1 ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்றுள்ளது? விளக்குக.
33.
ஃபிஷ்ஷர்-ட்ரோப்ஷ் முறை பற்றி சிறுகுறிப்பு வரைக.
34.
போராக்ஸின் பயன்களைத் தருக.
35.
கரி மற்றும் CO ஆகிய இரண்டினுள் ZnO வை ஒடுக்க, சிறந்த ஒடுக்கும் காரணி எது? ஏன்?
36.
தூய உலோகங்களை அவைகளின் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கும் பல்வேறு படிநிலைகள் யாவை?
37.
தொகுப்பு டிடர்ஜெண்ட்கள் பற்றி குறிப்பு வரைக .
38.
பின்வரும் வினைவரிசையில் உள்ள A,B மற்றும் C ஆகிய சேர்மங்களை கண்டறிக
i) \(C_6H_5NO_2\overset{Fe/HCl}\longrightarrow A\overset{HNO_2}{\underset{273K}\longrightarrow} B\overset{C_6H_5OH}\longrightarrow C\)
ii) \(C_6H_5N_2Cl\overset{CuCN}\longrightarrow A\overset{H_2O/H^+}\longrightarrow B\overset{NH_3}\longrightarrow C\)
iii) 
iv) \(CH_3NH_2\overset{CH_3Br}\longrightarrow A\overset{CH_3COCl}\longrightarrow B\overset{B_2H_6}\longrightarrow C\)
v) 
vi) 
vii) \(CH_3CH_2NC\overset{HgO}\longrightarrow A\overset{H_2O}\longrightarrow B\overset{i) NaNO_2/HCl}{\underset{ii) H_2O}\longrightarrow}\)
39.
பின்வரும் வினைகளைப் பூர்த்தி செய்க.
அ) MnO42-+H+\(\rightarrow\)?
ஆ) C6H5CH3 \(\overset { actdified }{ \underset { KMn{ O }_{ 4 } }{ \longrightarrow } } \)?
இ) MnO4-+Fe2+\(\rightarrow\)?
ஈ) KMnO4 \(\overset { \Delta }{ \underset { Red\quad hot }{ \longrightarrow } } \)?
உ) Cr2O72-+I-+H+\(\rightarrow\)?
ஊ) Na2Cr2O7+KCl \(\rightarrow\)?
40.
பிற ஹாலஜன்களைக் காட்டிலும் ஃபுளுரின் அதிக வினைத் திறனுடையது ஏன்?
41.
வலிமை மிகு அமிலம் மற்றும் வலிமை குறைந்த காரத்திலிருந்து உருவாகும் உப்பின் நீராற்பகுத்தல் மாறிலி மற்றும் நீராற்பகுத்தல் வீதம் ஆகியவற்றிற்கான சமன்பாடுகளை தருவி.
42.
எண்முகி மற்றும் நான்முகி வெற்றிடங்களை வேறுபடுத்துக.
43.
பின்வரும் அணைவுச் சேர்மங்களுக்கு IUPAC பெயர் தருக.
i) Na2[Ni(EDTA)]
II) [Ag(CN)2]
iii) [Co(en)3]2(SO4)3
iv) [Co(ONO)(NH3)5]2+
v) [Pt(NH3)2Cl(NO2)]
1.

2.

3.
கொடுக்கப்பட்டது H3O+ = \(2 \times 10^{-3}\)M
\(K_{w}=[H_{3}O^{+}][OH^{-}]\)
\(\therefore [OH^{-}]=\frac{K_{w}}{[H_{3}O^{+}]}=\frac{1\times10^{-14}}{2\times10^{-3}}=5\times10^{-12}M\)
\(2\times10^{-3}>>5\times10^{-12}\)
அதாவது [H3O+]>>[OH-], எனவே பழச்சாறு அமிலத்தன்மை கொண்டது
4.
2CuCl2 → Cl2 + Cu2Cl2
2Cu2Cl2 + O2 → 2Cu2OCL2
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
2Cu2OCl2 + 4 HCl → 2H2O + 4CuCl2
5.
சாதாரண வெப்பநிலையில் t-பியூட்டைல் ஆல்கஹால் ஆக்சிஜனேற்றம் அடைவதில்லை ஆனால் உயரிய வெப்பநிலையில் மற்றும் வலிமை மிகு ஆக்சிஜனேற்றம் முன்னிலையில் C - C பிணைப்பில் பிளவு ஏற்பட்டு கலப்பின கார்பாக்ஸிலிக் அமிலங்களை தருகிறது.
6.

7.
ஆஸ்பிரின்
8.
1. இது கணப்பொழுதில் நிகழ்கிறது
2. இது தேர்ந்த செயல்முறை அல்ல
3. எலக்ட்ரான்கள் இட மாற்றம் நிகழ்வதில்லை
4. பரப்பின் மீது பல அடுக்குகள் உருவாகின்றன
9.
10.
| நோய் | குறைபாடு வைட்டமின் |
| ரிக்கட்ஸ் | வைட்டமின் -D (கோலேகால்சிஃபெரால் D3 எர்கோகால்சிஃபெரால்-D2) |
| ஸ்கர்வி | வைட்டமின்-C (அஸ்கார்பிக் அமிலம்) |
11.
நீர்த்தலின் போது செறிவு குறைகிறது. செறிவு குறையும்போது கடத்துதிறன் (அல்லது நீர்த்தலின் போது) குறைகிறது. ஏனெனில் நீர்த்தலின்போது ஒரு கரைசலில் மின்னோட்டம் எடுத்துச் செல்லும் ஓரலகு பருமனில் உள்ள அயனிகளின் எண்ணிக்கை குறைகிறது.
12.
i. 1,3,5 - ட்ரை நைட்ரோபென்சீன்
ii. ஆர்த்தோ மற்றும் பாரா நைட்ரோ பீனால்
iii. m – நைட்ரோ அனிலீன்
iv. அசாக்சி பென்சீன்
v. ஹைட்ரசோ பென்சீன்
vi. N – பினைல்ஹைட்ராக்சிலமீன்
vii. அனிலீன்
13.
அழுத்த மின்சாரம் என்பது ஒரு படிகத்தை எந்திரவியல் அழுத்தத்திற்கு உட்படுத்தும் போது, அதன் பக்கங்களுக்கிடையே உண்டாக்கப்படும் மின்னழுத்தமாகும்.
14.
1. ஒரே ஒரு வகை அணிக்கோவை புள்ளியை மட்டும் கொண்டுள்ள அலகுக்கூடுகள் முதல்நிலை அலகுக் கூடுகள் எனப்படும்.
2. அலகுக்கூட்டின் மூலைகளில் மட்டும் அதன் உட்கூறுகள் (அணுக்கள், அயனிகள் அல்லது மூலக்கூறுகள்) காணப்பட்டால் அவை முதல்நிலை அலகுக்கூடுகள் எனப்படும்.
15.
(i) இணையாகாத f எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளன
(ii) இவை ஒளியை உறிஞ்சி f - f எலக்ட்ரான் பரிமாற்றத்திற்கு உட்படுத்தப்படுகின்றன
(iii) எனவே பொதுவாக ஆக்டினைடு அயனிகள் நிறமுள்ளவை
16.
Pt2+ உடன் ஒப்பிடும் போது Ni2+ உருவாக்க குறைவான அயனியாக்கும் ஆற்றல் தேவைப்படுவதால். Pt(II) சேர்மங்களை விட Ni(II) சேர்மங்கள் அதிக வெப்ப இயக்கவியல் நிலைப்புத் தன்மை உடையது.
17.
படிக அயோடின் வினைவேக மாற்றி முன்னிலையில் பாஸ்பரஸ் அடர் நைட்ரிக் அமிலத்தால் ஆக்சிஜனேற்றமடைந்து ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.
P4O10 + 6H2O → 4H3PO4
18.
(i) தூய நைட்ரிக் அமிலம் நிறமற்றது
(ii) புகையும் நைட்ரிக் அமிலம் நைட்ரஜனின் ஆக்சைடுகளை கொண்டுள்ளது.
(iii) இது சூரிய ஒளிபடும் போதோ அல்லது வெப்பப்படுத்தும் போதோ சிதைவடைந்து நைட்ரஜன் டை ஆக்சைடு, நீர் மற்றும் ஆக்சிஜனாக மாற்றுகிறது.
4HNO3 ⟶ 4NO2 + 2H2O + O2
இவ்வினையின் காரணமாக நைட்ரிக் அமிலம் அல்லது அதன் அடர்க்கரைசல் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
19.
1. பொட்டாசியம், அலுமினியம் சல்பேட்டின் இரட்டை உப்பானது படிகாரம் எனப்படுகிறது.
2. தற்போது M'SO4 M''2 (SO4)24H2O என்ற வாய்பாடு கொண்ட அனைத்து இரட்டை உப்புகளுக்கும் இப்பெயர் பயன்படுத்தப்படுகிறது.
இங்கு M' என்பது ஒன்றை நேர்மின் சுமையுடைய உலோக அயனி அல்லது NH+4
M" என்பது மூன்று நேர்மின் சுமையுடைய உலோக அயனி.
எ.கா:
K2SO4.AI2(SO2)3.24H2O பொட்டாஷ் படிகாரம்
K2SO4.Cr2(SO4)3.24H2O குரோம் படிகாரம்
20.
அதிகளவு சோடியம் ஹைட்ராக்சைடுடன் AICl3 வினைபட்டு சோடியம் அலுமினேட்டை உருவாக்குகிறது.
AICl3 + 4NaOH ⟶ NaAIO2 + 2H2O + 3NaC1
21.
ஒரு ஈனி ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்கள் மூலம் மைய உலோக அயனியுடன் பிணைக்கப்பட்டிருந்தால் அந்த ஈனி பல முனை ஈனி எனப்படும்.
22.
மைய உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற எண் அதன் முதன்மை இணைதிறன் எனப்படும்.
23.
வினை வேகம் \(\\ =-\frac { d[{ N }_{ 2 }] }{ dt } =-\frac { 1 }{ 3 } \frac { d\left[ { H }_{ 2 } \right] }{ dt } =+\frac { 1 }{ 2 } \frac { d[{ NH }_{ 3 }] }{ dt } \)
24.
ஓரலகு காலத்தில் ஒரு வேதி வினையில் இடம்பெற்றுள்ள பொருட்களின் செறிவில் ஏற்படும் மாற்றம் அவ்வினையின் வினை வேகம் எனப்படுகிறது.
25.
1. குறைந்த உருகுநிலைகளைக் கொண்ட உலோகங்களை அதிகக் உருகுநிலைகளைக் கொண்ட மாசுக்களிலிருந்து நீக்க இம்முறை பயன்படுகிறது.
2. (எ.கா.) டின், காரீயம், மெர்க்குரி, பிஸ்மத்
3. பண்படா உலோகம் வெப்பத்தினால் உருக்கி நீர்மமாக்கப்பட்டு ஒரு சாய்தள பரப்பின் வழியே ஓடுமாறு செய்து தூய்மைப்படுத்தப்படுகிறது.
4. பண்படா உலோகம் ஒரு எதிர் அனல் உலையின் சாய்வான அடிப்புறத்தில் வைக்கப்படுகிறது.
5. காற்றில்லாச் சூழலில் உலோகம் அதன் உருகு நிலையை விட அதிகமான வெப்பநிலையில் வெப்பப்படுத்தப்படுகிறது.
6. தூய உருகிய உலோகம் வழிந்தோடுகிறது.
7. மாசுக்கள் அப்படியே தங்கி விடுகின்றன.
8. உருகிய உலோகம் சேகரிக்கப்பட்டு திண்மமாக்கப்படுகிறது.
26.
1. வறுத்தல் செயல்முறை சல்பைடு தாதுக்களை ஆக்சைடுகளாக மாற்ற பயன்படும் ஒரு செயல்முறை ஆகும்.
2. அடர்ப்பிக்கப்பட்ட தாதுவானது தகுந்த உலையில் எடுக்கப்பட்டு உலோகத்தின் உருகுநிலையை விட குறைவான வெப்பநிலையில் அதிக அளவு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு ஆக்சிஜனேற்றமடையச் செய்யப்படுகிறது.
2PbS + 3O2 ⟶ 2PbO + 2SO2 ↑
3. ஆர்சனிக், சல்பர், பாஸ்பரஸ் போன்றவை அவைகளின் எளிதில் ஆவியாகும் ஆக்சைடுகளாக வெளியேற்றப்படுகின்றன.
4As + 3O2 ⟶ 2AS2O3
27.
ஒரு வினையின் பல படிகளினுள், குறைந்த வேக மதிப்பை கொண்ட படி வினையின் வேகத்தை தீர்மானிக்கும் படி அல்லது வேகத்தை குறைக்கும் படி எனப்படும். (அல்லது) ஒரு வினையின் ஒட்டுமொத்த வினைவேகத்தை கட்டுப்படுத்தும் மெதுவான படி வினையின் வேகத்தை தீர்மானிக்கும் படி எனப்படும்.

வினையின் வேகத்தை தீர்மானிக்கும் படியாகும்.
படி 1 :
\(\mathrm{H}_2 \mathrm{O}_{2(\mathrm{aq})}+\mathrm{I}_{(\mathrm{qq})}^{-1} \longrightarrow \mathrm{H}_2 \mathrm{O}_{(t)}+\mathrm{OI}_{(x q)}^{-1}\)
படி 2 :
\(\mathrm{H}_2 \mathrm{O}_{2(\mathrm{aq})}+\mathrm{OI}^{-1}(\mathrm{aq}) \longrightarrow \mathrm{H}_2 \mathrm{O}+\mathrm{I}_{(\mathrm{aq})}^{-}+\mathrm{O}_{(\mathrm{g})}\)
\(2 \mathrm{H}_2 \mathrm{O}_{2(x q)} \longrightarrow 2 \mathrm{H}_2 \mathrm{O}_{(t)}+\mathrm{O}_{2(g)}\)
மேற்கண்டுள்ள இரு வினைகளும் அடிப்படை வினைகளாகும். படிநிலை (1) மற்றும் படிநிலை (2) ல் உள்ள வினைகளுக்கான சமன்பாட்டினை ஒன்று சேர்ப்பதன் மூலம் ஒட்டு மொத்த வினைக்கான சமன்பாட்டினைப் பெறலாம். படிநிலை 1 ல் H₂O₂ மற்றும் I ஆகிய இரண்டு வினைபடு பொருட்களும் இடம் பெறுவதால் அப்படிநிலையே வினைவேகத்தினை தீர்மானிக்கும் படிநிலையாகும். மேலும் ஒட்டு மொத்த வினை, ஒரு இருமூலக்கூறு வினையாகும்.
28.
Br- ஐப் பொருத்து முதல் வகை மேலும் BrO3- ஐப் பொருத்து இரண்டாம் வகை எனவே, வினையின் ஒட்டுமொத்த வினைவகை 1 + 1 + 2 = 4
ஆ) அசிட்டால்ஹைடைப் பொருத்த வரையில் வினைவகை \(\frac{3}{2}\). ஒட்டு மொத்த வினை வகையின் மதிப்பும் \(\frac{3}{2}\)ஆகும்.
29.
1. அயனிப் படிகங்கள் அதிக உருகுநிலையைப் பெற்றுள்ளன.
2. இவைகள் மின்சாரத்தை கடத்துவதில்லை. ஏனெனில் அயனிகள் குறிப்பிட்ட அணிக்கோவைப் புள்ளிகளில் நிலையான இடத்தினைப் பெற்றுள்ளன.
3. இவைகள் உருகிய அல்லது கரைசல் நிலையில் மின்கடத்தும் தன்மையைப் பெற்றுள்ளன. ஏனெனில் இந்நிலைகளில், எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அயனிகள் தன்னிச்சையாக இயங்கும் தன்மையினைப் பெற்றுள்ளன.
4. இப்படிகங்களில் காணப்படும் உட்கூறு அயனிகளின் இட அமைவை மாற்றியமைக்க மிக வலிமையான புறவிசை தேவைப்படுவதிலிருந்து, இவைகள் கடினமானவை என அறியலாம்
30.
(i) Ni2+ அயனி டைமீத்தைல் கிளையாக்ஸைம் என்ற ஈனியுடன் இணைந்து பிஸ் (டைமீத்தைல் கிளையாக்ஸைம்) நிக்கல் (II) என்ற அணைவுச் சேர்மத்தை உருவாக்குகிறது.
(ii) இது ஒரு சிவப்பு நிற நடுநிலை அணைவுச் சேர்மம் ஆகும்.
(iii) இவ்வினை பண்பறி பகுப்பாய்வில் நிக்கலின் உறுதிச் சோதனையாகவும் பருமனறி பகுப்பாய்வில் நிக்கலை அளந்தறியவும் பயன்படுகிறது.
31.
1. நவீன தனிம வரிசை அட்டவணையில் தொகுதி 3 வரிசை 6 யில் லாந்தனைடுகள் இடம் பெற்றிருக்க வேண்டும். எனினும் ஆறாவது தொடரில் லாந்தனத்திற்கு பிறகு எலக்ட்ரான்கள் 4f உட்கூட்டில் சேர்கின்றன. மேலும், லாந்தனத்தைத் தொடர்ந்து வரும் 14 தனிமங்களும் ஒத்த வேதிப் பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே இத்தனிமங்கள் அனைத்தும் ஒருங்கே ஒரே தொகுதியாக தனிம வரிசை அட்டவணையில் கீழ்புறம் தனியே இடம் பெற்றுள்ளன.
2. இதைப் போலவே ஆக்டினியத்தை தொடர்ந்து வரும் 14 தனிமங்களும் அவைகளில் இயற் மற்றும் வேதிப் பண்புகளில் ஒத்துக் காணப்படுகின்றன. இதனால் தனிமவரிசை அட்டவணையில் கீழே தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
32.
1. ஃபுளுரின் அதிக எலக்ட்ரான் கவர்திறன் கொண்ட தனிமமாகும். எனவே இது நேர் ஆக்ஸிஜனேற்ற நிலையை பெற்றிருப்பதில்லை.
2. ஃபுளுரினில் ஒரு தனித்த இணையுறாத எலக்ட்ரான் உள்ளதால் இது 1 ஆக்ஸிஜனேற்ற நிலையைப் பெற்றுள்ளது.
33.
கார்பன் மோனாக்சைடை , ஹைட்ரஜனுடன் சேர்த்து 50 atm க்கு குறைவான அழுத்தத்தில் உலோக வினைவேக மாற்றி முன்னிலையில் 500-700K வெப்ப நிலையில் வினைப்படுத்தும்போது
nCO + (2n + 1) H2 ⟶ CnH2n+2 + nH2O
nCO + 2n H2 ⟶ CnH2n + nH2O
34.
1. நிறமுள்ள உலோக அயனிகளைக் கண்டறிவதில் போராக்ஸ் பயன்படுகிறது. (போராக்ஸ் மணி சோதனை)
2. இது கண் கண்ணாடி, போரோசிலிகேட் கண்ணாடி, எனாமல் மற்றும் பளபளப்பான மண் பாண்டங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
3. இது உலோகவியலில் இலக்கியாக பயன்படுகிறது.
4. உணவு பதப்படுத்தியாக செயலாற்றும் தன்மையுடையது.
35.
1. கரி மற்றும் CO ஆகிய இரண்டினுள் ZnO வை ஒடுக்க சிறந்த ஒடுக்கும் காரணி கரி (கார்பன்) ஆகும்.
2. ஒடுக்க வெப்பநிலையில் ஜிங்க், கார்பனுடன் சேர்ந்து உலோக கார்பைடினை உருவாக்காது. எனவே கார்பன் ஒடுக்கும் காரணியாக பயன்படுகிறது.
ZnO(S) + C ➝ Zn(S) + CO(g) ↑
3. எலிங்கம் வரைபடத்தில், ஜிங்க் ஆக்சைடு உருவாதலுக்கான வரைகோடு கார்பனுக்கு மேல் இடம் பெற்றுள்ளது. எனவே CO ஆனது ZnO ஐ விட அதிக நிலைப்புத் தன்மை உடையது. எனவே ZnO வை ஒடுக்கமடையச் செய்வதற்கு கார்பனை ஒடுக்கும் காரணியாக பயன்படுத்த இயலும். ஒடுக்க வினையின்போது ZnO விலிருந்து ஆக்ஸிஜன் ஒடுக்கும் காரணி கார்பனுடன் இணைந்து CO வை உருவாக்குகிறது.
36.
தூய உலோகங்களை அவைகளின் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கும் பல்வேறு படிநிலைகள்:
i. தாதுக்களை அடர்ப்பித்தல்
ii. பண்படா உலோகத்தைப் பிரித்தெடுத்தல்
iii. பண்படா உலோகத்தைத் தூய்மையாக்கல்
37.
தொகுப்பு டிடர்ஜெண்ட்கள் என்பவை ஆல்கைல் ஹைட்ரஜன் சல்பேட்டுகளின் சோடியம் உப்புகள் அல்லது நீண்ட சங்கிலி ஆல்கைல் பென்சீன் சல்ஃபானிக் அமிலங்களின் சோடியம் உப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட விளைபொருட்களாகும். மூன்று வகையான டிடர்ஜெண்ட்கள் உள்ளன.
சோப்புகள்:
அ) எதிரயனி டிடர்ஜெண்ட்கள் :
இவை சல்போனேற்றப்பட்ட நீண்ட சங்கிலி ஆல்கஹால் அல்லது ஹைட்ரோகார்பன்களின் சோடியம் உப்புகள் ஆகும். இவற்றின் மூலக்கூறின் எதிரயனி பகுதி சுத்தப்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளது. எ.கா. சோடியம் லாரைல் சல்பேட் (SDS)
பயன்: வீட்டு உபயோகத்திலும் மற்றும் பல்பொடியிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஆ) நேரயனி டிடர்ஜெண்ட்கள் :
இவை அசிட்டேட்டுகள், குளோரைடுகள் அல்லது புரோமைடுகள் அயனிகளாகக் கொண்ட அமீன்களான நான்கு (4o) அமோனியம் உப்புகள். இவற்றின் மூலக்கூறின் நேரயனி பகுதி சுத்தப்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளது.
எ.கா.: N- ஹெக்சாடெக்கைல்ட்ரைமெத்தில் அமோனியம் குளோரைடு
இ) அயனித் தன்மையற்ற டிடர்ஜெண்ட்கள் :
இவற்றில் எந்த அயனியும் இல்லை. இவை உயிர் மூலக்கூறு நிறை ஆல்கஹாலின் எஸ்டர்களாகும்.
எ.கா. பென்டாஎரித்ரிட்டால் ஸ்டியரேட்
பயன்: பாத்திரம் கழுவுவதிலும் பயன்படுகிறது.
38.
39.
40.
1. ஃபுளுரின் மற்ற ஹாலஜனை விட அதிக எலக்ட்ரான் கவர் தன்மையைப் பெற்றுள்ளது.
2. ஃபுளுரினைத் தவிர மற்ற ஹாலஜன்கள் நேர் ஆக்ஸிஜனேற்றம் உடையது.
3. இது அதிக எலக்ட்ரான் நாட்ட பண்பு உடையது.
உதாரணம் :
Cl2 O → +1
OF2 → -1
41.
ஒரு வலிமை மிகு அமிலம் HCI மற்றும் ஒரு வலிமை குறைந்த காரம் NH4OH ஆகியவை வினைபுரிந்து NH4Cl உப்பு மற்றும் நீர் ஆகியவை உருவாகும் வினையை கருதுவோம்.
\(\begin{array}{r}
\mathrm{HCl}(\mathrm{aq})+\mathrm{NH}_4 \mathrm{OH}(\mathrm{aq}) \rightleftharpoons \mathrm{NH}_4 \mathrm{Cl}(\mathrm{aq})+\mathrm{H}_2 \mathrm{O}(1) \mathrm{NH}_4 \mathrm{Cl}(\mathrm{aq}) \rightarrow \mathrm{NH}_4^{+}+\mathrm{Cl}^{-}(\mathrm{aq})
\end{array}\)
NH4+ அயனியானது, NH4OH எனும் வலிமை குறைந்த காரத்தின் இணைஅமிலமாகும். மேலும், இது நீரிலிருந்து உருவாக்கப்பட்ட OH- அயனியுடன் வினைபுரிந்து அயனியுறா NH4OH காரத்தை உருவாக்கும் திறனைப் பெற்றுள்ளது.
\(\mathrm{NH}_{4(\mathrm{aq})}^{+}+\mathrm{H}_2 \mathrm{O}_{(\mathrm{l})} \rightleftharpoons \mathrm{NH}_4 \mathrm{OH}_{(\mathrm{aq})}+\mathrm{H}_{(\mathrm{aq})}^{+}\)
இத்தகைய திறனை CI அயனி பெறவில்லை, எனவே [H+] > [OH-]; கரைசலானது அமிலத்தன்மையை பெற்றுள்ளது, மேலும் அதன் pH மதிப்பு 7 ஐவிட குறைவாக உள்ளது.
வலிமைமிகு காரம் மற்றும் வலிமை குறைந்த அமிலத்தின் உப்பு நீராற்பகுத்தலில் விவாதிக்கப்பட்டதைப் போன்றே, இந்த நேர்விலும், kh மற்றும் Kb க்கு இடையேயுள்ள தொடர்பை நம்மால் நிறுவ முடியும்.
Kh.Kb = Kw
(அல்லது)
\(\begin{aligned}
\mathrm{k}_{\mathrm{h}}=\frac{\mathrm{K}_{\mathrm{w}}}{\mathrm{k}_{\mathrm{b}}}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{NH}_4^{+}(\mathrm{aq})+\mathrm{H}_2 \mathrm{O} \rightleftharpoons \mathrm{NH}_4 \mathrm{OH}(\mathrm{aq})+\mathrm{H}^{+}(\mathrm{aq})
\end{aligned}\)
(1-h) (h) (h)
\(\begin{aligned}
\mathrm{K}_{\mathrm{h}} & =\frac{\left[\mathrm{NH}_4 \mathrm{OH}\right]\left[\mathrm{H}^{+}\right]}{\left[\mathrm{NH}_4^{+}\right]} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{\mathrm{hc} \times \mathrm{hc}}{(1-\mathrm{h}) \mathrm{c}}
\end{aligned}\)
\(\begin{aligned}
K_h=\frac{h^2 \mathrm{c}}{1-\mathrm{h}}
\end{aligned}\)
h<< 1 எனில் Kh \( \simeq\) h2c
\(h^2=\frac{K_h}{C}\) (அல்லது) \(h=\sqrt{\frac{K_h}{C}}\) (அல்லது) \(\mathrm{h}=\sqrt{\frac{\mathrm{K}_{\mathrm{w}}}{\mathrm{K}_{\mathrm{b}} \cdot c}}\)
மேலும்
\(\left[\mathrm{H}^{+}\right]=\sqrt{\mathrm{Kh} . c}\) (அல்லது)\( \left[\mathrm{H}^{+}\right]=\sqrt{\frac{\mathrm{K}_{\mathrm{w}} \cdot \mathrm{c}}{\mathrm{K}_{\mathrm{b}}}}\)
42.
| நான்முகி வெற்றிடம் | எண்முகி வெற்றிடம் | |
| 1 | அறுங்கோணங்களின் மையங்களையும் இணைத்து எண்முகி அமைப்பு உருவாகும் போது அவற்றிற்கு இடையே தோன்றும் வெற்றிடம். | நான்கு கோளங்களின் மையங்களையும் இணைத்து நான்முகி அமைப்பு உருவாகும்போது அவற்றிற்கு இடையே தோன்றும் வெற்றிடம். |
| 2 | முதல் அடுக்கில் உள்ள வெற்றிடத்தில் மீது கோளங்கள் அமையும் போது வெற்றிடம் உருவாகும். | முதல் அடுக்கில் உள்ள வெற்றிடம் இரண்டாவது அடுக்கில் உள்ள கோளங்களால் பகுதியளவு மறைக்கும் போது வெற்றிடம் உருவாகும். |
| 3 | அணைவு எண்: 4 | அணைவு எண்: 6 |
| 4 | நான்முகி வெற்றிடங்களின் எண்ணிக்கை (n) | எண்முகி வெற்றிடங்களின் எண்ணிக்கை (2n) |
43.
1. சோடியம் 2, 21, 211, 2111 (ஈத்தேன் 1, 2 டைஐல்டைநைட்ரிலோ) டெட்ரா அசிட்டேட்டோ நிக்கலேட் II
2. அயோடேட் டை சயனிடோ K-C- அர்ஜென்டேட் (I) அயனி
3. ட்ரிஸ் ஈத்தேன் (1, 2 - டைஅமீன்) கோபால்ட் (III) சல்பேட்
4. பென்டா அம்மைன்நைட்ரிட்டோ K-O- கோபால்ட் (III) அயனி
5. டைஅம்மைன்குளோரிடோநைட்ரோ -k-N பிளாட்டினம் (II)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards