12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 09/03/2020
12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Computer Application All Chapter Three Marks Important Questions 2020 )
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
களப்பெயருக்கான விதிமுறைகளைப் பட்டியலிடுக.
2.
3.
பல்லூடக உருவாக்க குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் பற்றி விரிவாக எழுதவும்.
4.
சுட்டெண்கள் கொண்ட அணி மற்றும் தொடர்புருக்கு அணியை விவரி.
5.
PHP உள்ள செயற்கூறின் கருத்துருக்களை விவரி.
6.
PHP தொடரியல் வகைகளை விவரி.
7.
மாறி என்றால் என்ன? மாறி அறிவிப்பின் அடிப்படை விதிகள் யாவை?
8.
தரவு கையாளுதல் மொழியின் கட்டளைகளின் பயன் யாது?
9.
IANA என்றால் என்ன?
10.
உருப்பொருளின் வகைகளை விவரி.
11.
HTTPS - ன் பயன் யாது?
12.
TCP ன் செயல்பாட்டை விவரி
13.
இணையத்தின் குறைபாடுகளைப் பட்டியலிடுக.
14.
மின் அரசாண்மை குறிப்பு வரைக
15.
PHP ஸ்கிரிபிடிங் மற்றும் தரவுத்தள சேவையகத்திற்கு இடையேயான நடப்பிலுள்ள திறந்த தரவுத்தள இணைப்பை எவ்வாறு மூடுவாய்?
16.
வலைக்கட்டமைப்பு மென்பொருள் என்றால் என்ன? கட்டமைப்பு மென்பொருள்கள் சிலவற்றைப் பட்டியலிடு.
17.
படிவ ( < Form > ) ஒட்டின் பண்புகளை விவரி.
18.
HTML னுடைய INPUT பண்புக் கூறுக்கான செல்லுபடியாக்கல் விதிமுறைகளைப் பட்டியலிடு.
19.
ஒப்படைப்பின் பொது பணம் செலுத்தல் - குறிப்பு வரைக.
20.
ECS வரவு பற்றி விவரி
21.
பேஜ்மேக்கர் ஸ்டோரி என்றால் என்ன?
22.
மின் - வணிகத்தில் G2B மாதிரியாய் விளக்குக.
23.
மின் - வணிகத்தில் C2C மாதிரியை விளக்குக.
24.
பேஜ்மேக்கரில் டெக்ஸ்ட் டூலைக் கொண்டு எவ்வாறு உரைத் தொகுதியை உருவாக்குவாய்?
25.
Open NMS ன் குறிக்கோள் யாது?
26.
Network Simulator களின் பயன் யாது?
27.
ஈத்தர்நெட் வடத்தின் வகையைத் தீர்மானிப்பது எப்படி?
28.
டாங்கிள் என்றால் என்ன?
29.
பல்லூடாகக் கலந்துரையாடல் அல்லது ஒளிக்காட்சி கலந்துரையாடல் என்றால் (Multimedia or Video conferncing) என்ன?
30.
PNG படிவம் பற்றி எழுதுக.
31.
சான்றளிப்பு அதிகாரிகள் பற்றிக் குறிப்பு வரைக.
32.
வரையறு: மறுதலிக்கப்படாதிருத்தல் (Non-repudiation).
33.
EDI தரப்பாடு - குறிப்பு வரைக.
34.
மதிப்பு கூட்டப்பட்ட வலையமைப்பு (VAN) என்றால் என்ன?
35.
படிவத்தை கையாளும் செயற்கூறுகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
36.
படிவத்தை கையாள்வதில் உள்ள சிறப்பம்சங்களை எழுது.
37.
mysqli_affected_rows() மற்றும் mysqli_fetch_assoc() செயற்கூறு இவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டை எழுதுக
38.
MySQLi இல் உள்ள செயற்கூறுகளின் பயன்களை எழுதவும்.
39.
இணையத்தின் குறைபாடுகள் யாவை?
40.
ARPANET ஐ வரையறுக்கவும்.
41.
RFID செயல்படுத்தப்பட்ட கணினியின் கூறுகளை பட்டியலிடுக?
42.
இணையம், அக இணையம், புற இணையம் ஒன்பிடுக?
43.
முழுமையான URL சார்பு URL இவற்றிற்கு இடையில் உள்ள வேறுபாடுகள் யாவை?
44.
IPv4 மற்றும் IPv6 வேறுபடுத்துக
45.
'Do while' மடக்கினை பற்றி சிறுகுறிப்பு வரைக
46.
மடக்கு அமைப்பின் பயன்களை எழுதுக.
47.
ஈத்தர்நெட் கேபிளிங்கில் தொடர்புடைய கூறுகள் என்ன?
48.
சீரியல் மற்றும் இணையான துறைமுகங்கள் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன ?
49.
if statement மற்றும் if elseif else கூற்றினை வேறுபடுத்துக
50.
Switch கூற்றினை பற்றி சிறு குறிப்பு எழுதுக
51.
தொடர்புருத்த அணிகள் மற்றும் பல பரிமாண அணிகளை வேறுபடுத்துக
52.
அளபுருக்களை கொண்ட செயற்கூறுகளின் பயன்களை எழுதுக.
53.
திறந்த மூல கருத்துடன் தொடர்புடைய பல்வேறு அமைப்புகளை விவரி
54.
Open NMSல் உள்ள வசதிகளை விவரி.
55.
மின்-வணிகத்தின் இயல் பொருள் சர்ச்சை பற்றிய குறிப்பு எழுதுக.
56.
மின்-வணிகத்தின் மூன்றாவது அலை பற்றி சிறுகுறிப்பு வரைக.
57.
வலை சேவையகத்தின் பயன்களை எழுதுக
58.
சேவையக பக்க ஸ்கிரிப்டிங் மொழிகளின் (Server scripting languages) சிறப்பியல்புகளை எழுதுக.
59.
சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டையையும் அதன் வகைகளையும் சுருக்கமாக விளக்கவும்.
60.
கடன் அட்டை மற்றும் பற்று அட்டை ஒப்பிட்டு, வேறுபடுத்தவும்.
61.
தரவுதள மேலாண்மை அமைப்பில் உள்ள கார்டினாலிட்டி பற்றி விவரி.
62.
தரவுதள மேலாண்மை அமைப்பின் (DBMS) பரிணாம வளர்ச்சியை பற்றி விளக்குக.
63.
சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் பற்றி எழுதுக.
64.
ஏதேனும் இரண்டு மின்-வணிக பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பட்டியலிடுக.
65.
மாஸ்டர் பக்கத்தில் பக்க எண்களை எவ்வாறு சேர்ப்பாய் ?
66.
பேஜ்மேக்கர் என்றால் என்ன? அதன் பயன்களை கூறு?
67.
EDIFACT செய்தி வகைகளை குறிப்பு வரைக.
68.
EDI அடுக்குகளைப் பட்டியலிடுக.
1.
(i) களப்பெயரானது a-z, A-Z வரையிலான ஆங்கில எழுத்துக்களையும் 0 - 9 வரையிலான எண்களையும் கொண்டிருக்க முடியும்
(ii) இடைக்கோடு (hyphen -) அனுமதிக்கப்படலாம். ஆனால் அது களப் பெயரின் முதல் உருவாக்க இயக்க முடியாது
(iii) இடைவெளிகள் அனுமதிக்கப்படுவதில்லை.
(iv) சிறப்பு குறியீடுகள் (!, $, &, மற்றும் பல) அனுமத்திக்கப்படுவதில்லை
(v) களப்பெயர்கள் குறைந்தபட்சம் 2 மற்றும் அதிகபட்சம் 63 எழுத்துக்களை கொண்டிருக்கலாம். ஒரு முழுமையான களப்பெயரில் அதிகபட்சமாக 253 எழுத்துக்கள் இடம் பெறலாம்
(vi) களப்பெயர்கள் எழுத்து வடிவ உணர் திறன் அற்றவை.
2.
3.
(i) தயாரிப்பு மேலாளர் :
பல்லூடக உருவாக்குதலில், குறித்த நேரத்தில் முழு தரத்துடன் பல்லூடக திட்ட உருவாக்கத்தை வரையறுப்பது மற்றும் ஒருங்கிணைப்பது தயாரிப்பு மேலாளரின் பங்கு ஆகும். தயாரிப்பு மேலாளர் என்பவர் தொழில்நுட்ப திறன்கள், நன்கு திட்டம் வரைதல், கலந்துரையாடல் திறன்கள் மற்றும் வரவு - செலவு மேலாண்மை திறன்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
(ii) பொருளடக்க வல்லுநர் :
பொருளடக்க வல்லுநர் என்பவர் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பயன்பாட்டின் பொருளடக்கத்தைப் பற்றிய அனைத்து ஆராய்ச்சி செயல்பாடுகளையும் செய்வதற்கு பொறுப்பானவர் ஆவார்.
(iii) ஸ்கிரிப்ட் எழுத்தாளர் :
ஸ்கிரிப்ட் எழுத்தாளர் கருத்துருக்களை முப்பரிமாண சூழல்களில் காட்சிப்படுத்துகிறார். தேவை ஏற்படின், நிரல் மீது மெய்நிகர் உண்மை ஒருங்கிணைப்பைப் பயன்படுத்தலாம்.
(iv) உரை பதிப்பாளர் (Text Editor):
பல்லூடக உருவாக்குதலின் பொருளடக்கம் எப்பொழுதும் தருக்கரீதியான ஓட்டமாக இருத்தல் வேண்டும். உரை எப்பொழுதும் கட்டமைப்பாகவும் சரியான இலக்கணத்தோடும் இருக்க வேண்டும். உரை மற்றும் விவரித்தல் பயன்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
(v) பல்லூடக வடிவமைப்பாளர் :
பல்லூடக வடிவமைப்பாளர் பல்லூடகத்தின் அனைத்து அடிப்படைத் தொகுதிகளான வரைகலை, உரை, ஒலி, இசை, ஒளிக்காட்சி, புகைப்படம் மற்றும் படைப்பாக்க மென்பொருளைப் பயன்படுத்தி அசைவூட்டல் போன்றவற்றை ஒருங்கிணைப்பார்.
(vi) கணினி வரைகலைக் கலைஞர் :
நிரலின் வரைகலை கூறுகளான பின்னணி, புல்லட்கள், பொத்தான்கள், பாடப்பதிப்பாய்வு, 3-D பொருள்கள், அசைவூட்டல் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றைக் கையாளும் பங்கினை கணினி வரைகலை கலைஞர் வகிக்கிறார்.
(vii) ஒலி மற்றும் ஒளிக்காட்சி வல்லுநர்:
எடுத்துரைத்தல் மற்றும் சேமிக்கப்பட்ட ஒளிக்காட்சிகளைப் பல்லூடக நிகழ்த்துதலில் கையாளத் தேவைப்படுபவரே ஒலி மற்றும் ஒளிக்காட்சி வல்லுநர் ஆவார். பதிவு செய்தல், ஒலி விளைவுகளை பதிப்பாய்வு செய்தல் மற்றும் இலக்கமாக்கல் ஆகியவற்றுக்கு இவரே பொறுப்பானவர் ஆவர்.
4.
சுட்டு எண்கள் கொண்ட அணிகள் :
அணி மாறியியல் உள்ள மதிப்புகள் எண்களைச் சுட்டெண்களாகக் கொண்ட அணிகளாக இருப்பின் திறவிற்கு இணை மதிப்புகள் இருத்தப்படும். பயனர் இந்த திறவுகளைப் பயன்படுத்தி மதிப்புகளை எடுத்துக்கொள்வர்.
தொடர்புருத்த அணிகள் :
(i) பெயரிடப்பட்ட திறவுகளை இருத்தி வைக்கப்பயன்படுத்தப்படும்.
(ii) திறவும், மதிப்பும் இணைந்த தரவுக் கட்டமைப்பாகும்.
(i) PHP செயற்கூறுகளின் நன்மைகளைப் பட்டியிலிடு.
1. போலிக் குறிமுறைகள் வருவதை குறைக்கும்.
2. சிக்கலான கணக்கீடுகளை (அ) தீர்வுகளை எளிய பகுதிகளாக மாற்றுகிறது.
3. குறிமுறையை மேம்படுத்த உதவுகிறது.
4. குறிமுறையை மறுபயனாக்கம் செய்ய உதவுகிறது.
5. குறிமுறையை மேம்படுத்த உதவுகிறது.
(ii) PHP உள்ள செயற்கூறுகளின் வகைகளைக் பட்டியிலிடு.
1. பயனர் வரையறுத்த செயற்கூறுகள்.
2. முன் வரையறுக்கப்பட்ட (அ) அமைப்பு (அ) உள்ளிணைந்த செயற்கூறுகள்.
3. அளபுருக்களை கொண்ட செயற்கூறுகள்.
5.
PHP உள்ள செயற்கூறுகள்:
1. குறிப்பிட்ட செயல்பாட்டு பணிகளான சேர்த்தல், செயற்படுத்துதல், நீக்குதல் கணக்கீடுதல் போன்றவற்றை செய்யும் நிரலில் உள்ள ஒரு தொகுதியின் ஒரு பகுதி செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது.
2. ஒரு செயற்கூறு என்பது ஒரு வகை துணை நிரல் (அ) ஒரு நிரலில் உள்ள செயல்முறை ஆகும்.
3. ஒரு செயற்கூறானது செயற்கூறு அழைப்பின் மூலம் செயற்படுத்துகிறது, மற்றும் அச்செயற்கூறானது எந்த தரவு வகை மதிப்புகளையும் திருப்பி அனுப்பும், (அ) அந்த நிரலைச் சார்ந்த பகுதியில் உள்ள அழைக்கப்படும் செயற்கூற்றிற்கு வெற்று மதிப்பை அனுப்பும்.
(ii) செயற்கூறு வகைகள் :
1. பயனர் வரையறுத்த செயற்கூறுகள்.
2. முன் வரையறுக்கப்பட்ட (அ) அமைப்பு (அ) உள்ளிணைந்த செயற்கூறுகள்.
3. அளபுருக்களை கொண்ட செயற்கூறுகள்.
6.
1.தானமைவு தொடரியல் :
தானமைவு தொடரியல் ""< ?"-ல் முடியும்.
2. குறுகிய திறந்த ஓட்டுகள் : இந்த ஓட்டுகள் " < ?"_ ல் தொடங்கி "? > " ல் முடியும். ஆனால் சேவையகத்தில் குறுகிய பாணி ஒட்டுகளின் அமைப்பை php,ini கோப்பில் நிர்வாக பயனர் செயல்படுத்த வேண்டும்.
3. HTML ஸ்கிரிப்ட் உட்பொறிந்த ஒட்டுகள் :
இந்த ஒட்டுகள் ஸ்கிரிப்ட் ஒட்டுகள் போன்றே தோற்றம் அளிக்கும்.
தொடரியல் :
< script language="php" >
echo"This is HTMLscript tags.";
< /script >
மேற்கண்ட தொடரியல் உருவாக்கப்பட்டு.php நீட்டிப்புடன் கோப்பில் சேமிக்கப்படும்.
7.
மாறிகள்: நிரலில் பின்னர் கையாளுவதற்காக மதிப்புகளை சேமிக்கும் இடம்.
மாறி அறிவிப்பின் அடிப்படை விதிகள் :
1. மாறியின் பெயர் எப்பொழுதும் '$'என்ற குறியுடன் தொடங்க வேண்டும்.
2. மாறியின் பெயர் ஒருபோதும் எண்ணில் தொடங்க கூடாது.
3. மாறியின் பெயர்கள் எழுத்து வடிவுணர்வு உடையதாகும்.
எ.கா"
$a=5;$b=10;
$a_ 1="Computer Application"
$c=$a+$c;
8.
| கட்டளைகள் | விளக்கம் |
| INSERT | தரவுத்தள அட்டவணையில் புதிய வரிசைகளைச் சேர்க்கிறது. |
| UPDATE | தரவுத்தள அட்டவணையில் புதிய வரிசைகளைச் சேர்க்கிறது. |
| DELETE | அட்டவணையில் இருந்து பதிவுகளை நீக்குகிறது. |
9.
(i) IANA (Internet Assigned Numbers Authority) என்பது ICANN இந்த இணைப்பு அமைப்பு ஆகும்.
(ii) DNS ரூட் IP முகவரி மற்றும் பிற இணைய நெறிமுறைகளை கையாளுதல் போன்றவற்றை மேலாண்மை செய்கிறது.
(iii) IANA அமைப்பு DNS ன் முக்கிய அம்சங்களான மூல மண்டலம் (root zone) மற்றும் .int.arpa போன்ற களங்களை நிர்வகிக்கிறது.
முகவரி: https://www.iana.org/
10.
1. உறுதியான உரிப்பொருள் (Strong Enity)
2. உறுதியற்ற உருப்பொருள் (Week Entity)
3. உருப்பொருள் உதாரணங்கள் (Entity Instances)
உறுதியான உருப்பொருள் :
(i) உறுதியான உருப்பொருள், தரவுத்தளம் அல்லது திட்டத்தின் எந்தவொரு உருப்பொருளையும் சார்ந்திருக்கவில்லை.
(ii) முதன்மைத் திறவுகோலைத் தன்னுடன் கொண்டிருக்கும்.
எ.கா: roll no
உறுதியற்ற உருப்பொருள் :
(i) உறுதியற்ற உருப்பொருள் மற்ற உருப்பொருள்களைச் சார்ந்துள்ளது.
(ii) இரண்டு செவ்வகப் பெட்டியால் குறிக்கப்படுகிறது.
எ.கா :
3. உருப்பொருள் உதாரணங்கள் :
கொடுக்கப்பட்ட உருப்பொருளுடைய மதிப்புகளின் வகையைக் குறிக்கிறது.
எ.கா :
| உருப்பொருள் | உதாரணம் |
| Jobs | Engineer, Doctor, Layer |
11.
(i) HTTPS என்பது Hyper Text Transfer Protocol Secure என்பதாகும்
(ii) குறிக்கப்பட்ட தரவை பாதுகாப்பான இணைப்பில் பரிமாற்றம் செய்வதற்கான நெறிமுறை ஆகும்.
(iii) HTTPS தரவை அதிகப்படுத்துகிறது மற்றும் Wi - Fi போன்ற பொது வலையமைப்புகளில் தரவுப் பாதுகாப்பை வழங்குகிறது.
12.
TCP செயல்பாடு: இரண்டு நெறிமுறைகளின் கலவையாகும்.
1. Transmission Control Protocol (TCP)
2. Internet Protocol (IP)
(i) இணைய நெறிமுறை (IP) பொதுவாக வலைப்பின்னல்களில் அனுப்பப்படும் பாக்கெட்டுகளில் தளவமைப்புகளை குறிக்கிறது
(ii) இது பாக்கெட்டுகள் எங்கே போவது, எப்படிப் போவது மற்றும் இலக்கை எவ்வாறு அடைவது போன்றவற்றைக் குறிக்கிறது
(iii) பரிமாற்றக் கட்டுப்பாட்டு நெறிமுறை (TCP) என்பது தரவுப் பரிமாற்றத்தை உறுதி செய்கிறது.
(iv) பொட்டலங்கள் பிழைகளை சரிபார்த்து தேவைப்படின் மறு பரிமாற்றம் செய்வதற்கான கோரிக்கை வைக்கிறது
13.
1. இணையத்தில் தேவையற்ற தகவல்களை தேடுவதன் மூலம் விலைமதிப்பற்ற நேரத்தை வீணாக்குகிறோம்.
2. எவர் ஒருவரும் தங்கள் வலைப்பக்கத்தில் வலைப்பதிவுகள் எதையும் வெளியிட முடியும் என்பதால் தேவையற்ற தகவல்கள் நிறைய உள்ளன.
3. இணையத்தில் உள்ள ஹேக்கர்கள் மற்றும் வைரஸ்கள் மூலம் மற்றவர்களின் மதிப்புமிக்க தகவல்களை எளிதில் திருடிவிட முடியும். மின் வங்கி சேவையிலும் நிறைய பாதுகாப்பு சிக்கல்கள் உள்ளன.
14.
மின் அரசாண்மை: அரசாங்க சேவைகள் அணுகுவதற்கான பயன்பாடாகும், தகவல் பரிமாற்றங்கள், பல்வேறு தரநிலை அமைப்புகளில் குடிமகனுக்கு அரசாங்கத்திற்கும், இடையேயான வர்த்தகம். மின் அரசாண்மை மூலம் சான்றிதழ்களை எளிதாகப் பெறமுடியும்.
15.
mysqll_close( ) செயற்கூறு PHP ஸ்கிரிப்ட்டிங் மற்றும் MySQL தரவுத்தள சேவையகத்திற்கு இடையேயான நடப்பிலுள்ள திறந்த தரவுத்தள இணைப்பை மூடுவதற்குப் பயன்படுகிறது.
கட்டண அமைப்பு:
mysquli_close("Connection Object");
எ.கா:
< ? php
$con = mysqli_connect ("localhost", " $user", "$password", "SCHOOL_DB");
mysqli_close($con);
? >
16.
கட்டமைப்பு மென்பொருள்: விரைவான பயன்பாடு உருவாக்கத்தை (RAD = Rapid Application Development) ஊக்குவிப்பதற்கான வடிவமைப்பையும், கட்டுமானத் தொகுதிகளையும் வழங்கும் மென்பொருள்.
எ.கா: PRADO, Cable PHP, Symforny, CodeIgniter, laravel, Yii framework மற்றும் Zend framework.
17.
(i) படிவ ஒட்டின "action = back - end script" என்ற பண்புக்கூறானது பெறப்பட்ட தரவினை செயல்படுத்த தயார் நிலையில் இருக்கும்.
(ii) Method என்ற பண்புக் கூறினைத் தரவினை பதிவேற்றம் செய்யப் பயன்படுத்த வேண்டும். GET மற்றும் POST ஆகியவை அடிக்கடி பயன்படுத்தப் படும் வழிமுறைகள் ஆகும்.
(iii) Target என்னும் பண்புக்கூறு எங்கு ஸ்கிரீப்டின் முடிவு தெரிய வேண்டிய இலக்கு சன்னல் திரை (அ) சட்டத்தினை குறிப்பிடுகின்றது.
(iv) இது blank, Self, parent போன்ற மதிப்புகளை ஏற்கின்றது.
(v) enctype பண்புக்கூறாது தரவில்லை சேவையகத்திற்கு அனுப்பும் முன் உளவியானது எவ்வாறு குறிமுறைப் படுத்த வேண்டும் என்பதனைக் குறிப்பிட பயன்படுகின்றது.
எ.கா:
< form action = "Welcome.php" method = "post" Taget = "-Self" enctype = "multipart/from - data >
18.
| Name (Text Input) |
எழுத்துக்கள் மற்றும் வெற்றிடங்களை ஏற்கும். |
| Email (Text Input) | @ மற்றும் சரங்களை ஏற்கும். |
| Website (Text Input) | சரியான URL ஐ ஏற்கும். |
| Radio | குறைந்தபட்சம் ஒரு மதிப்பினைத் தேர்ந்தெடுக்க |
| Check box | குறைந்தபட்சம் ஒரு மதிப்பினைத் தேர்ந்தெடுக்க |
| Drop Down menu | குறைந்தபட்சம் ஒரு மதிப்பினைத் தேர்ந்தெடுக்க |
19.
(i) ஒப்படைப்பின் பொது பணம் செலுத்தல் (Cash On Delivery - COD) என்பது Collection On Delivery என்றும் அழைக்கப்படுகிறது.
(ii) இது பொருட்களை பெற்றுக் கொண்ட பின் பணம் செலுத்தும் முறையைப் பற்றி விவரிக்கிறது.
(iii) தொடக்கத்தில், இந்த சொல் ரொக்க பணத்திற்கு மட்டுமே பொருந்தும், ஆனால் மற்ற வகையான பணம் செலுத்தும் முறைகள் பொதுவானதாகிவிட்டதால், பணம் என்ற சொல், காசோலைகள். கடன் (அ) பற்று அட்டைகள் கொண்டு பரிவர்த்தனைகள் செய்வதை குறிக்கும் "சேகரிக்கும்" என்ற சொல்லாக சில நேரங்களில் மாற்றப்பட்டுள்ளன.
(iv) COD பெரும்பாலும் மின்-வணிகத்தில் கூடுதல் கட்டணம் செலுத்தல் விருப்பமாக பயன்படுத்தப்படுகிறது.
(v) பொருள் ஒப்படைக்கப்படும் போது மட்டுமே பணம் செலுத்தும் நன்மையை இது பெறுபவருக்கு வழங்குகிறது, அது மரபுசார் அமைப்பை ஒத்ததாக உள்ளது.
20.
(i) ECS வரவு மொத்தமாகத் தொகை செலுத்துவதற்கு பயன்படுகிறது.
(ii) இந்த முறையில் ஒரு கணக்கில் பற்று வைக்கப்பட்டு, பல கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
(iii) இந்த வகையான பணபரிவர்தனைகள் தள்ளுப் பரிவர்த்தனை எனப்படும்.
எ.கா: ஒரு நிறுவனம் தனது 100 ஊழியர்களுக்குச் ஊதியம் வழங்க வேண்டும் என்றால், ECS வரவு முறையைபபயன்படுத்தி ஒரே நேரத்தில் அனைத்து ஊழியர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்க முடியும்.
21.
1. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்புள்ள உரைத் தொகுதிகள் வழியாக பாயும் உரை ஸ்டோரி எனப்படும்.
2. பேஜ்மேக்கர் ஸ்டோரி என்பது செய்தித்தானில் வரும் கட்டுரையை ஒத்தாகும்.
3. பேஜ்மேக்கர் ஆவணத்தில் பல ஸ்டோரிகள் ஒரே பக்கத்தில் இருக்கலாம். அதன் தொடர்ச்சி வேறு பக்கங்களில் இருக்கலாம்.
22.
1. G2B மாதிரி B2B உடன் நெருக்கமாகத் தொடர்புடையது.
2. இது அரசு அதன் இனையதளம் மூலம் வணிக நிறுவனங்களுக்கு சேவை (அ) தகவலை வழங்கும் வணிக மாதிரியைக் குறிக்கும்.
3. ஒரு சாலைத் திட்ட ஒப்பந்தம் பெறுவது போன்ற முறையான அறிவிப்பாக இருக்கலாம்.
4. G2B என்பது மின்-அரசாண்மையின் ஒரு பகுதியாகும். புதிய தொழில் தொடங்குவதற்குத் தேவையான தொழில் விதிமுறைகள். தகுதி மற்றும் அனுமதி போன்ற பல குறிப்புகளை அரசாங்கம் அதன் வலைப்பக்கத்தில் கொண்டிருக்கும்.
5. G2B ன் நோக்கம் அரசாங்கமானது வணிகம் பற்றிய தகவலை ஓரிடத்தில் வழங்குவதன் மூலம், இடர்பாடுகளை குறைப்பதும் அதன் மூலம் பொருளாதாரத்தை ஏற்றமடையச் செய்வதும் ஆகும்.
23.
1. C2C மின் - இணையம் மூலம் இணைக்கப்பட்ட நுகர்வோர்களுக்கிடையே பொருள்கள் அல்லது சேவைகளை வர்த்தகம் செய்ய வாய்ப்பளிக்கிறது.
2. இணையத்தைப் பயன்படுத்தி இரு நுகர்வோர்கள் அவர்களுக்குள் எதாவது ஒன்றை வாங்குவதோ விற்பனை செய்வதோ C2C மின் - வணிகம் எனக் குறிப்பிடப்படுகிறது.
3. இந்த வகை மின்-வணிகம், நுகர்வோர் - வணிகம் நுகர்வோர் (C2B2C) என்ற அமைப்பில் வேலை செய்கிறது.
4. பெரும்பாலான ஏல இணையதளங்கள் மற்றும் திருமண தகவல் இணையதளங்கள் இந்த முறையில் வேலை செய்கின்றன.
எ.கா: தனது சொத்துக்களை விற்க விரும்பும் ஒரு வாடிக்கையாளர் இணையத்தில் ஒரு விளைபரத்தை பதிவு செய்யலாம். ஒரு சொத்தை வாங்குவதில் ஆர்வமுள்ள மற்றோரு நபர், இந்த தலத்தில் பதிவிட்ட சொத்து விளம்பரங்களை பார்வையிட முடியும்.
24.
1. கருவிப்பெட்டியிலிருந்து டெக்ஸ்ட் டூலைத் தேர்ந்தெடுக்கவும்,சுட்டெலியன் சுட்டுக்குறியானது I-beam ஆக மாறும்.
2. ஒரு காலியான ஆவணப் பக்கத்திலோ (அ) பகுதியிலோ கிளிக் செய்யவும். இப்பொழுது அந்த ஆவணப் பக்கம் (அ) பத்தியின் அகலத்திற்கு ஒரு உரைத் தொகுதி உருவாகிறது. தொடாநிலையாக செருகும் புள்ளி உரைத் தொகுதியின் இடது ஓரத்தில் இருக்கும்.
3. இப்பொழுது தேவையான உரையைத் தட்டச்சு செய்யவும்.
25.
(i) Open NMS இந்த குறிக்கோள் FCAPS இன் (Fault, Configuration, Accounting, Performance and Security) அனைத்து வசதிகளையும் வழங்குவதாகும்.
(ii) தற்போது Fault and Performance க்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
(iii) பல ஆயிரக்கணக்கான கணினி இணைந்த சேவையாகமாயினும் எண்ணிலடங்கா கணினிகள் இணைந்த பல சேவையாகமாயினும் சமாளிக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.
26.
(i) சிமுலேட்டரில் வலையமைப்பானது அதில் உள்ள சாதனைகள், தகவல் பாய்வு போன்றவற்றால் விளக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் ஆராயப்படுகிறது.
(ii) பொதுவாக பயனர் இந்த மாதிரியை வலையமைப்பின் செயல்பாட்டை ஆராய்வதற்கு பயன்படுகின்றனர்.
(iii) வலையமைப்பில் இருந்து வரும் மதிப்புகள் வலையின் நிலை மற்றும் செயல்பாட்டை தீர்மானிக்கின்றன
(iv) சிமுலேசனின் முக்கிய வெளியீடான டிரேஸ் கோப்புகள் சிமுலேஷனின் ஒவ்வொரு செயல்பாட்டையும் ஆவணமாக்குகிறது.
(v) இதன் மூலம் வலையமைப்பு செயல்பாட்டை சோதிக்கலாம்.
27.
(i) Straight - Through: வடத்தின் வண்ணக் கம்பிகள் இரு முனைகளிலும் ஒரே வரிசையில் இருக்கும்.
(ii) Cross-over Wiring: ஒரு முனையின் முதல் வண்ணக் கம்பி அடுத்த முனையில் மூன்றாவது வண்ணக் கம்பியாக இருக்கும்.
(iii) Roll-over Wiring: வண்ணக் கம்பிகள் இரண்டு முனைகளிலும் எதிரெதிர் வரிசையில் இருக்கும்.
28.
1. டங்கில் ஒரு சிறிய புறச் சாதனம் ஆகும்.
2. இது இணையும் ஒரு SIM Slot ஐக் கொண்டிருக்கும்.
3. மேலும் இது கணினியை இணையத்துடன் இணைக்க மோடம் போல் செயல்படுகிறது
29.
1. பல்லூடாகக் கலந்துரையாடல் அல்லது ஒளிக்காட்சி கலந்துரையாடல் என்பது ஒரு அமைப்பாகும்.
2. ஒளிக்காட்சி கலந்துரையாடல் என்பது வெவ்வேறு இடங்களில் உள்ள இரண்டிற்கும் மேற்பட்ட பங்காளர்களுக்கிடையே கலந்துரையாடலை நடத்தி அதனை ஒலி மற்றும் ஒளி தரவுகளை கணினி வலையமைப்பு மூலம் அனுப்பும் ஒரு செயலாகும்.
3. இதில் பங்கேற்கும் பயனர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்தாலும், ஒரே அறையில் அமர்ந்து ஆலோசிப்பதை போன்று நேருக்கு நேராக கலந்துரையாட முடியும்.
30.
PNG (Portable Network Graphics)
1. குறைந்த இழப்பு, சிறியது மற்றும் நன்கு குறுக்கப்பட்டு செவ்வக நிழற்படங்களாக சேமிக்கப்படும் ஒரு நீட்டிப்பு கோப்பு வடிவமாகும்.
2. GIF-க்கு மாற்றாகச் செயல்படுகிறது மற்றும் Tiff-ன் பல பொதுவான பயன்களையும் மாற்றுகிறது.
3. நிகழ்நிலை பார்வையிடு பயன்பாடான உலகாளாவிய வலையில் PNG நன்றாக வேலை செய்யும்.
4. சிறந்த திரையிடும் தேர்வுகளுடன் முழுவதுமாக ஒழுங்குபடுத்தப்[பட்டுள்ளது.
31.
1. எண்முறை சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்ட சான்றளிப்பு அதிகாரிகளால் (Certification Authorities - CA)
2. ஒருவர் எண்முறை சான்றிதழைக் கோறுகையில் சான்றிதளிப்பு அதிகாரி விண்ணப்பதாரின் அடையாளத்தை சரிபார்ப்பார்.
3. மேலும் விண்ணப்பதாரர் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தால் மட்டுமே, சான்றளிப்பு அலுவலர் அவரின் எண்முறைச் சான்றிதழை வழங்குவார்.
4. NIC, Safescript, TCS, MTNL, e-Mudhra ஆகியவை இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றளிக்கும் நிறுவனங்கள் ஆகும்.
32.
1. மறுதலிக்கப்படாதிருத்தல் (Non-repudiation) உடன்படிக்கை மீறாதிருத்தல்.
2. ஆவணத்தில் எண்முறை கையொப்பமிட்டவர் அதை நிராகரிக்க முடியாததை உறுதிசெய்கிறது.
3. எண்முறை கையொப்பமிட்ட ஆவணங்கள் அதன் பெருநருக்கு ஆதாரத்தை வலுப்படுத்துகிறது.
4. எனவே, பின் ஒரு நேரத்தில் எளிதில் மறுக்க முடியாது என்பதால் எண்முறை கையொப்பத்தை, பெறுநர் வலுவாக வலியுறுத்த முடியும்.
33.
1. தரநிலை என்பது ஒட்டுமொத்த EDIல் மிக முக்கியமான பகுதியாகும்.
2. EDI தரவு பரிமாற்றம் என்பது ஒரு ஒப்புக்கொண்ட செய்தி வடிவமைப்பின் வடிவத்தில் இருப்பதால், ஒரு ஒருங்கிணைந்த EDI தரத்தை உருவாக்குவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
3. மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் EDI தரப்பாடுகள், ஐக்கிய நாடுகள் சபையின் UN/EDIFACT மற்றும் ANSI X12.
34.
1. ஒரு நிறுவனம் அதன் சொந்த வலையமைப்பை அடிப்டையாகக் கொண்டு மற்ற நிறுவனங்களுக்கு EDI சேவைகளை வழங்குவதை குறிக்கிறது.
2. இது வணிகர்களுக்கிடையே ஒரு இடைத்தரகர் போல் செயல்படுகிறது.
3. மதிப்பு கூட்டப்பட்ட வலையமைப்புகளின் கோட்பாடுகள் அணுகல் உரிமைகளை பயனர்களுக்கு ஒதுக்கீடு மற்றும் உயர் தரவுப்பாதுகாப்பு வழங்குதல் ஆகும்.
35.
(i) fopen() என்பது PHP கோப்பினை திறக்கப்பட உள்ள ஒரு அமைப்பு செயற்கூறாகும்.
(ii) fread() செயற்கூறானது திறக்கப்பட்ட ஒரு கோப்பினை படிப்பதற்கு உதவுகின்றது.
(iii) fclose() செயற்கூறானது திறக்கப்பட்ட ஒரு கோப்பினை மூடுவதற்கு உதவுகின்றது.
(iv) fwrite() செயற்கூறானது கோப்பில் எழுத உதவுகிறது.
(v) file_put_contents() செயற்கூறானது ஒரு கோப்பினை சேர்க்க உதவுகிறது.
36.
1. HTML படிவ உறுப்புகளின் முக்கிய நோக்கம் பயனரிடமிருந்து தரவுகளைச் சேகரிப்பதாகும்.
2. HTML படிவ உறுப்புகளில் பயனர் உள்ளீடுகளை வழங்கி submit பொத்தானைக் கிளிக் செய்யும் பொழுது, கோரிக்கை (Request) ஒன்று உருவாக்கப்பட்டு படிவ ஓட்டில் Action பண்புக் கூறில் உள்ள PHP கோப்பினை அடைகின்றது.
3. அனைத்து உள்ளீட்டு மதிப்புகளும் தொகுக்கப்பட்டு Post வழிமுறை (அ) GET வழிமுறை மூலம் சேவையகத்திற்கு அனுப்பப்படுகிறது.
4. Method என்பது HTML -ல் உள்ள படிவ உறுப்பின் ஒரு பண்புக்கூறாகும்.
5. தரவானது சேவையகத்தை அடையும் பொழுது $_Post மற்றும் $_GET என்ற இரண்டு PHP மாறிகள் தரவினை சேகரித்து அதற்கான பதிலையும் (Response) தயார் செய்கின்றன.
37.
| mysqli_affected_rows () | mysqli_fetch_assoc () | |
| 1 | முந்தைய MySQL செயல்பாட்டின் பாதிக்கப்பட்ட வரிசைகளின் எண்ணிக்கையைத் திருப்பித் தரும். | வினவல் வெளியீட்டின் வரிசையைத் தொடர்புறுத்த அணியாகப் பெறப் பயன்படுகிறது. |
| 2 | ஒரு முழு எண் மதிப்பைத் திருப்பித் தரும். | சரங்களைக் கொண்ட தொடர்புறுத்த அணியைத் திருப்பித் தரும். |
38.
(i) MySQLi என்பது PHP மொழியின் நீட்டிப்பு ஆகும்.
(ii) இது MySQLi தரவுத்தளத்தை அணுகப் பயன்படுகிறது.
(iii) MySQLi தரவுத்தளத்தை தொடர்பு கொள்ளவே MySQLi செயற்கூறுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
(iv) இந்த செயற்கூறுகள் MySQLi தரவுத்தள சேவையகத்தை அணுக அனுமதிக்கிறது.
39.
1. இணையத்தில் தேவையற்ற தகவல்களை தேடுவதன் (Surfing) மூலம் விலைமதிப்பற்ற நேரத்தை வீணாக்கும்.
2. இணையப்பக்கங்கள், வலைப்பதிவுகள் போன்றவற்றில் ஏராளமான தேவையற்ற தகவல்களை சில நேரங்களில் சிலர் பதிவிடுகின்றனர்.
3. பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களுடன் தொடர்புடைய பல்வேறு வகையான களவுகள் ஹேக்கர்கள் மற்றும் நச்சுநிரல்கள் மூலம் இணையத்தில் எப்போதும் நடைபெற்றுக் கொண்டிருகிறது.
40.
1. ARPANET (Advanced Research Projects Agency Network) என்பது இணையத்திற்கு அடிப்படையாக விளங்கிய வலையமைப்பு ஆகும்.
2. பொட்டல் பரிமாற்ற முறையில் இயங்கிய வலையமைப்பாகும்.
3. அமெரிக்காவின் ARPA வின் வழிகாட்டுதலின் படி உருவாக்கப்பட்டது.
4. 1969 ல் நான்கு பல்கலைக்கழகங்களின் கணிப்பொறியை இணைத்ததன் மூலம் இந்த உத்தியானது சாதாரண நடைமுறைக்கு வந்தது.
41.
1. ஒரு RFID குறிச்சொல்: இது ஒரு சிறிய ஆண்டெனாவுடன் இணைக்கப்பட்ட மற்றும் மூலக்கூறு மீது வைக்கப்பட்டுள்ள சிலிக்கன் மைக்ரோசிப் -ஐ கொண்டுள்ளது.
2. ஒரு படிப்பான் : தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் சிக்னல்களை பரிமாறவும் பெறுவதற்குமான ஆண்டெனாவுடன் கூடிய வருடியைக் கொண்டுள்ளது.
3. ஒரு கட்டுப்பாட்டாளர்: இது நுண்செயலியுடன் கூடிய புரவலன் கணினியாகும். இது படிப்பானின் உள்ளீட்டைப் பெற்று தரவுகளைச் செயலாக்குகிறது.
42.
| வகை | வரையறை | எடுத்துக்காட்டு |
| இணையம் | ஒரு உலகளாவிய வலையமைப்பு, உலகெங்கிலும் பில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் பொதுவான TCP/IP வலையமைப்பை கொண்டதாகும். | நண்பருக்கு மின்னஞ்சல் அனுப்புதல் |
| அகஇணையம் | ஒரு நிறுவனத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கு அணுகல் அனுமதி தடை செய்யப்பட்ட TCP/IP வலையமைப்பைக் கொண்டதாகும். | பணியாளர்களின் தனிப்பட்ட கோப்பில் ஒருவருடைய பதிவை அணுகுதல். |
| புறஇணையம் | உறுப்பினர்களுக்கு அணுகல் அனுமதி மறுக்கப்பட்ட TCP/IP வலையமைப்பைக் கொண்டதாகும். | புற வணிகர்களிடமிருந்து பொருளின் இருப்பு நிலையைச் சோதனை செய்தல். |
43.
| முழுமையான URL | சார்பு URL | |
| 1 | இது இணையத்தில் உள்ள ஒரு கோப்பின் முழுமையான முகவரி. | இது இணையத்தில் உள்ள கோப்பின் முழுமையற்ற முகவரி. |
| 2 | இது இணையத்தில் கோப்பினைத் தேடித் கண்டுபிடிக்கத் தேவையான அனைத்து தகவல்களையும் கொண்டுள்ளது. | இது கோப்புப் பெயர் அல்லது கோப்புறையுடன் கூடிய கோப்புப் பெயரைக் கொண்டது. |
44.
| IPv4 | IPv6 | |
| 1 | IPv4 முகவரி என்பது வலையமைப்பில் உள்ள ஒரு கணினிக்கு வழங்கப்படும் 32 பிட் தனித்த முகவரி ஆகும். | IPv6 முகவரி என்பது வலையமைப்பில் உள்ள ஒரு கணினிக்கு வழங்கப்படும் 128 பிட் தனிப்பட்ட முகவரி ஆகும். |
| 2 | IPv4 முகவரியில் 232 முகவரிகளை உருவாக்க முடியும். | IPv6 ஐ பயன்படுத்தி 2128 முகவரிகளை உருவாக்க முடியும். |
| 3 | (எ.கா) : 0011100110001001 0011100000000111 |
(எ.கா) : 2001:0000:32313: DFE1 :0063:0000:0000: FEFB |
45.
do while மடக்கு எப்பொழுதும் மடக்கினை முதல் முறை செயல்படுத்தும் போதே மடக்கின் உடற்பகுதியில் உள்ள கூற்றுகளை ஒரு முறை செயல்படுத்தும். ஆனால், கொடுக்கப்பட்ட நிரல் தொகுதியை நிபந்தனை சோதிப்பதற்கு முன்னர் ஒரே ஒரு முறையேனும் செயல்படுத்தும். அதாவது, இங்கே நிபந்தனை , மடக்கின் இறுதியில் மட்டுமே சோதிக்கப்படுகிறது.
கட்டளை அமைப்பு:
do {
code to executed;
} while (condition is true);
46.
1. நாம் நிரல் எழுதும் போது ஒரே குறிமுறைத் தொகுதியை நிரலின் பல இடங்களில் அடிக்கடி பயன்படுத்த வேண்டுமெனில் மடக்கினை பயன்படுத்தலாம்.
2. பண்முறைச் செயல்பாடுகளை எழுதுவதற்குப் பயன்படுகிறது.
47.
ஈத்தர்நெட் வடமிடலில் நான்கு முக்கிய பகுதிகள் உள்ளன
(i) இணைப்பு வடம்
(ii) RJ - 45 இணைப்பி
(iii) ஈத்தர் நெட் தொடர்பி
(iv) கிரிம்பிங் கருவி
48.
| தொடர் தொடர்பி (serial port) | இணையான தொடர்பி (parallel port) |
| 1. ஒரு நேரத்தில் 1 பிட் மட்டுமே அனுப்பும் | ஒரு நேரத்தில் 8 பிட்டுகள் அனுப்பும் |
| 2. தரவுப் பரிமாற்றம் மெதுவாக இருக்கும் | தரவுப் பரிமாற்றம் வேகமாக இருக்கும் |
| 3. இரு வழிகளிலும் தரவுத் தொடர்பு இருக்கும் | ஒரு வழியில் மட்டுமே தரவுத் தொடர்பு இருக்கும் |
49.
| if கூற்று | if elseif else கூற்று |
|---|---|
| 1. ஒரு குறிப்பிட்ட நிபந்தனை சரி என்றால் ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட கூற்றுகளை செயல்படுத்தும். | இரண்டுக்கு மேற்பட்ட நிபந்தனைகளுக்கு பல்வேறு குறிமுறைகளை செயல்படுத்தும். |
| 2. if-ல் கொடுக்கப்பட்ட நிபந்தனை தவறு எனில், if-தொகுதியைத் தொடர்ந்து வரும் கூற்றுகள் செயல்படுத்தப்படும். | 'else'ற்குப் பிறகு மற்றொரு நிபந்தனை சோதிக்கப்பட வேண்டுமெனில். else கூற்றைத் தொடர்ந்து if கூற்று இருக்கும்.இதுவே elseif எனப்படும். |
50.
1. switch கூற்று பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் பல்வேறு செயல்களைச் செய்ய பயன்படுகிறது.
switch(n) {
case label 1:
code to be executed if n=label1;
break;
case label2:
code to be executed if n= label 2; .
break;
case label3:
code to be executed if n=label3;
break;
default:
code to be executed if n is different
from all labels;
}
2. break கூற்றை ஒவ்வொரு case கூற்றின் இறுதியில் கொடுக்க வேண்டும். இல்லையெனில் அந்த case தொகுதியைத் தொடர்ந்து வரும் கூற்றுகள் செயல்படுத்தப்படும்.
51.
| தொடர்புருத்த அணிகள் | பல பரிமாண அணிகள் |
| 1. திறவும் (key) மதிப்பும் (Value) இணைந்த தரவுக் கட்டமைப்பு | ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணிகளைக் கொண்ட ஒரு அணி. |
| 2. பெயரிடப்படத் திறவுகளை இருத்தி வைக்கப் பயன்படுத்தலாம். | தொடர்புடைய தரவுகளை குழுவாக்க அனுமதிக்கின்றது. |
| 3. சரத்தை சுட்டெண்ணாகப் பயன்படுத்தி அணியின் மதிப்புகளை அணுகலாம். | ஒன்றுக்கு மேற்பட்ட சுட்டெண்கள் மூலம் அணி மாறியில் உள்ள மதிப்புகளை அணுகலாம். |
| எ.கா :- < ?php $marks=array("sud" =>"70","stud"=>"95"); echo"Student1 mark is",$marks[stud1]; echo "Student2 mark is :,$marks ['stud2']; ? > |
எ.கா :- < ?php // A two-dimensional array $student = array ( array ("Iniiyan",100,96), array("Kavin",60,59), ): ? > |
52.
மதிப்புக்களை அளபுருக்களின் மூலம் ஒரு அளபுருவிலிருந்து அளபுருவுக்கு அனுப்ப முடியும்.
அளபுருக்களை செயலுருபுகள் என்றும் அழைக்கலாம். இது மாறிகளை போன்று இருக்கும். செயலுருபுகள் செயற்கூறின் பெயருக்கு பின்னால் அடைப்பு குறிகளுக்குள் குறிப்பிட வேண்டும். செயலுருபுகளை அனுப்புவதற்கு எந்த விதமான வரம்பும் இல்லை. அவற்றை காற்புள்ளிகளால் பிரிக்க வேண்டும்.
Return கூற்றினை பயன்படுத்தி ஒரு செயற்கூறு ஒரு மதிப்பினை திருப்பி அனுப்புகிறது.
function sum($x, $y) {
$z = $x + $y;
return $z;
}
echo “5 + 10 = “ . sum(5, 10) . “
”;
echo “7 + 13 = “ . sum(7, 13) . “
”;
echo “2 + 4 = “ . sum(2, 4);
?>
53.
1. Organizations related to Open Source
2. Apache Software Foundation
4. The Eclipse Foundation
5. Free Software Foundation
6. Linux Foundation
7. OpenCourseWare Consortium
8. Open Source Initiative
54.
1. Open NMS ல் உள்ள கண்டறியும் சாதனம் தொடர்ந்து பயனர் குறுக்கீட்டு ஏதும் இன்றி தானாக வலையமைப்பை கட்டுப்படுத்துகிறது
2. ஓப்பன் NMS அதன் மேம்பட்ட தன்மைக்காக ஏற்றுக் கொள்ளப்படுகிறது
3. சிறிய SNMP வலையமைப்பை மேலாண்மை செய்யக் கூடியது
4. மேலும் பெரிய HP Open View, IBM Micromuse Or IBM Tivoli வகை நிறுவனம் சார்ந்த மேலாண்மை வலையிலும் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது.
நிகழ்வு மேலாண்மை அறிவிப்பு (Event management notification), கண்டுபிடித்து வழங்குதல் (discovery & provisioning, சேவைக் கண்காணிப்பு (service monitoring) மற்றும் தரவு சேகரிப்பு (data collection) வசதி அளிக்கிறது.
55.
(i) இயல் பொருள் சார்ந்த சர்ச்சைகள் மின் வணிகத்தின் ஒரு பெரும் குறைபாடு ஆகும்.
(ii) மின்- வணிக கொள்முதல்கள் பெரும்பாலும் நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்குக் காரணம், மின் - வணிகத்தில் பொருட்களை நாம் நேரடியாக அணுக முடியாது.
(iii) இணையம் என்பது காட்சி சார்ந்த மற்றும் ஒலித் தகவலுக்கு ஒரு சிறந்த ஊடகம் என்றாலும், அது நமது புலன்களுக்கு முழு வாய்ப்பையும் அனுமதிக்காது.
(iv) நாம் ஏதாவது ஒரு பொருளை நேரில் வாங்கும் பொழுது, அதனை ஆய்வு செய்ய விரும்பினால், அதை எப்படிச் சோதிக்க வேண்டும் என்பதை நாம் தேர்ந்தெடுக்கிறோம்.
(v) மின்- வணிகத்தில் விற்பனையாளர் தேர்வு செய்த படத்தை மட்டுமே நாம் பார்க்க முடியும்.
(vi) பெரும்பாலும் நுகர்வோர் இணையம் வழியாகத் தனித்துவமான அல்லது சிக்கலான பொருட்களை காட்டிலும் ஒரு சிறிய குழப்பமற்ற (அவர்கள் ஏற்கனவே பார்த்த அல்லது முன் அனுபவம் பெற்ற பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர்.
56.
மின் வணிகத்தின் மூன்றாம் அலை 2012 - நிகழ்காலம் வரை
1. மூன்றாவது அலை கைபேசி தொழில்நுட்பங்களால் கொண்டு வரப்பட்டது
2. இது நிகழ் நேரம் மற்றும் தேவை அடிப்படையில் (on-demand) கைபேசி சாதனங்கள் மூலம் பயனர்களை இணைக்கப்படுகிறது
3. குறிப்பிட்ட இருப்பிடம் சார்ந்த தொகுக்கப்பட்ட தகவல்கள், நேர அடிப்படையில் மட்டுமல்லாமல் புவியியல் ஆயத் தொலைவுகள் மூலம் வடிகட்டப்படுகிறது
4. வலை 3.0 என்ற பதம், செயற்கை நுண்ணறிவு, Semantic Web, Generic Database போன்றவை அடங்கிய எதிர்கால இணையத்தின் பல்வேறு பண்புகளைச் சுருக்கமாகத் தொகுத்தளிக்கிறது
57.
1. சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழிகளின் தொகுத்தல் மற்றும் இயக்குவதற்கானப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்கின்றது.
2. சேவையகப் கணிப்பொறியில் இயங்கும் வலை சேவையக மென்பொருள் சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் தொகுத்தலை இடைநிலை பைட் குறிமுறைகளாக மாற்றுவதை நிர்வகிக்கின்றது. இந்த குறிமுறையானது இயக்க நேர இயந்திரம் மூலம் மொழி பெயர்க்கப்படுகின்றது.
3. இது வலைப்பக்கங்களை உருவாக்கும் கோப்புகளை வழங்கப் பயன்படுகிறது
58.
(i) குறிமுறைகள் முழுவதுமாக தொலைதூர கணிப்பொறியில் நிறுவப்பட்டுள்ள வலைசேவையகத்தில் இயக்கப்படுகின்றது.
(ii) நிகழ்நேர வலை உருவாக்கத்திட்டங்களில் இயங்கு மற்றும் ஊடாடு வலைப் பக்கங்களை உருவாக்குகின்றது.
(iii) பயனர் குறிமுறையைப் பெறுகிறார் மற்றும் வலைதள உள்ளடக்கத்தை இணைய உலவி மூலம் கணிப்பொறியில் பார்க்கிறார்.
(iv) மிகவும் பாதுகாப்பானது.
59.
(i) சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டை (Stored Value Card/Prepaid Card) என்பது ஒரு குறிப்பிட்ட தொகை (மதிப்பு) முன்னதாகவே செலுத்தப்பட்ட பற்று அட்டையின் ஒரு வகை ஆகும். இது பண மதிப்பை உருவகமாக கொண்டிருக்கும் ஒரு அட்டை ஆகும்.
(ii) அட்டையின் மதிப்பை முழுவதும் பயன்படுத்திய பிறகு அதை மீண்டும் பயன்படுத்த மறு ஊட்டம் செய்யலாம். சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டையின் முக்கிய நன்மை, இவ்வகை அட்டையைப் பெற வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கை பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.
சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டையில் இரண்டு வகைகள் உள்ளன.
1. மூடிய வளையம் (ஒற்றை நோக்கு). எடுத்துக்காட்டு சென்னை மெட்ரோ இரயில் பயண அட்டை
2. திறந்த வளையம் (பல்நோக்கு). எடுத்துக்காட்டு விசா பரிசு அட்டைகள்.
60.
ஒற்றுமை:
(i) பயன்படுத்தும் முறை ஒன்று போல் இருக்கும்
(ii) தோற்றப் பண்புகளில் ஒன்று போல் இருக்கும்
வேறுபாடு:
| கடன் அட்டை | பற்று அட்டை |
| கடன் அட்டை என்பது பொதுவாக சில்லறை பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்னணு செலுத்தல் அமைப்பாகும். | பற்று அட்டை என்பது வாடிக்கையாளரின் அங்கீகாரத்தின் பெயரில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பரிவர்த்தனை தொகையைப் பிடித்தம் செய்யும் ஒரு மின் செலுத்தல் அட்டை ஆகும். |
| பிறகு பணம் செலுத்தும் முறை | உடனே பணம் செலுத்தும் முறை |
| கடன் அட்டை வைத்திருப்பவர் ஒவ்வொரு மாதமும் 30 நாட்களுக்குள் கடன் அட்டை கட்டணத்தை செலுத்த வேண்டும். | அத்தகைய பில் எதுவும் வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து நேரடியாக கண்டறியப் படவில்லை. |
61.
எண் அளவை (Cardinality):
(i) இது உறவுநிலையில் சேர்க்கப்பட வேண்டிய உருப்பொருள்களின் எண்ணிக்கையாக வரையறுக்கப்படுகிறது.
(ii) அதாவது, உறவு நிலை வழியாக மற்றொரு தொகுப்பில் உள்ள உருப்பொருள்களின் எண்ணிக்கையுடன் இணைக்கப்பட்ட ஒரு தொகுப்பில் உள்ள உருப்பொருள்களின் எண்ணிக்கை, ஒன்றுடன் ஒன்று, ஒன்றுடன் பல, பலவற்றுடன் பல என்பன எண் அளவையின் மூன்று வகைப்பாடுகள் ஆகும்.

iii) மேலே உள்ள படம் எண் அளவை எடுத்துக்காட்டில், person மற்றும் Vehicle என்ற இரண்டு உருப்பொருள்கள் உள்ளன.
(iv) இயங்கிக் கொண்டிருக்கும் வாகனம் (Vehicle), இயங்குகின்ற ஓட்டுநர் (person) என எடுத்துக்கொண்டால் வாகனம் மற்றும் ஓட்டுநருக்கு இடையே ஒன்றுடன் ஒன்று உறவுநிலை உருவாக்கப்படும்.

(v) எண் அளவை உறவுநிலை 1 to n மேலே உள்ள எடுத்துக்காட்டில், வாடிக்கையாளர் (Customer) தன் தேவைகளை (Orders) முன்வைப்பது. ஒன்றுடன் பல உறவுநிலையாகும்.
(vi) இங்கு வாடிக்கையாளர், பல தேவைகளை முன்வைக்கலாம் மற்றும் தேவைகள் ஒரே ஒரு வாடிக்கையாளரை மட்டுமே சார்ந்து இருக்கும்.

(vii) எண் அளவை உறவுநிலை n to n மாணவர்கள் (Students), பாடப்பிரிவுகளில் (Courses) பதிவு செய்வது பலவற்றுடன் பல உறவுநிலைக்கான எடுத்துக்காட்டாகும்.
(viii) ஒரு மாணவன், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளில் பதிவு செய்ய முடியும். மற்றும் ஒரு பாடப்பிரிவு. பல மாணவர்களால் பதிவு செய்யப்படமுடியும். எனவே இது பலவற்றுடன் பல வகையாகும்.
62.
(i) தரவுகளை சேமித்தல் என்ற கருத்துரு பல்வேறு வடிவமைப்பில் 40 வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது.
(ii) முந்தைய நாட்களில், தரவுகளை சேமிக்க துளை அட்டை (Punched Card) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. பிறகு கோப்புகள் (Files) பயன்படுத்தப்பட்டன.
(iii) கோப்பு அமைப்புகளே தரவுதள அமைப்பின் முன்னோடி என்றழைக்கப்படுகின்றன.
(iv) கோப்பு அமைப்பில், குறியீட்டு, சீரற்ற மற்றும் தொடர் அணுகல் போன்ற பல்வேறு அணுகல் முறைகள் உள்ளன. கோப்பு அமைப்பில் பின்வரும் பல வரம்புகள் இருந்தன.
தரவு நகல்கள் : ஒரே தரவானது, செயலாக்கதிற்கான பல வளங்களால் பயன்படுத்தப்பட்டது.
அதிக பராமரிப்பு: அணுகல் கட்டுப்பாடு மற்றும் தரவு நிலைத்தன்மையை சரிபார்க்க அதிக பராமரிப்பு தொகை தேவைப்பட்டது.
பாதுகாப்பு : தரவுக்கு குறைந்த பாதுகாப்பே வழங்கப்பட்டது. எனவே, கோப்பு அமைப்பின் மேற்கூறிய வரம்புகளை சமாளிக்க தரவுதள அமைப்புகள் பிரபலமானது.
63.
(i) சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் (Asymmetric Key Encryption) பொதுக் குறியீடு குறியாக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
(ii) இது பொது குறியீடு மற்றும் எண்முறைச் சான்றிதழ்களை பயன்படுத்துகிறது.
(iii) RSA, ECC, DSA போன்ற நெறிமுறைகள் சமச்சீரற்ற குறியீடு குறியாக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன.
64.
1. தரவு சிதைப்பு (Tampering)
2. பண மோசடிகள் (Payment frauds)
3. தகவல் கசிவு (Information Leakage)
4. தீங்கிழைக்கும் நிரல் அச்சுறுத்தல்கள் (Malicious code threats)
5. பரவல் சேவை மறுக்கப்படல் தாக்குதல்கள் (Distributed Denial of Service - DDoS)
6. சைபர் Squatting (Cyber Squatting)
7. டைபோபைரஸி (Typopiracy)
65.
1. Master Pages பணிக்குறியில் கிளிக் செய்ய வேண்டும்.
2. இப்பொழுது டெக்ஸ்ட் டூலைக் கிளிக் செய்தால் செருகும் புள்ளி I-beam ஆக மாறும்.
3. பக்க எண் இட வேண்டிய இடது மாஸ்டர் பக்கத்தை கிளிக் செய்ய வேண்டும்.
4. Ctrl+Alt+P என்பதை அழுத்த வேண்டும்.
5. இடது மாஸ்டர் பக்கத்தில் பக்க எண் 'LM' எனத் தோன்றும்.
6. இதே போன்று பக்க எண் இட வேண்டிய வலது மாஸ்டர் பக்கத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
7. Ctrl+Alt+P என்பதை அழுத்த வேண்டும்.
8. வலது மாஸ்டர் பக்கத்தில் பக்க எண் 'RM' எனத் தோன்றும் மற்ற பக்கங்களில் சரியான பக்க எண்கள் தெரியும்.
66.
அடோப் பேஜ்மேக்கர் என்பது ஒரு பக்க வடிவமைப்பு மென்பொருளாகும்.
பயன்கள்:
(i) இது அச்சிடுவதற்கு ஏற்ற வகையில் ஆவணங்களை வடிவமைக்கப் பயன்படுகிறது.
(ii) இதைப் பயன்படுத்தி சிறிய வணிக அட்டை முதல் பெரிய புத்தகம் வரை அனைத்தையும் வடிவமைக்கலாம்.
(iii) பக்க வடிவமைப்பு, மென்பொருளில் உள்ள கருவிகள், ஆவணத்தில் எளிதாக உரை மற்றும் வரைகலை வடிவங்களை சேர்க்க உதவுகின்றன.
(iv) உதாரணமாக, பேஜ்மேக்கரைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பக்கத்திலும் கட்டுரைகள் மற்றும் படங்களை வைத்து ஒரு செய்தி மடலை உருவாக்க முடியும்.
67.
EDIFACT தகவல் கூறுகளை சேவைத் தகவல்கள் மற்றும் தரவுப் பரிமாற்றம் என பிரிக்கலாம்.
சேவைத் தகவல்கள்:
ஒரு தகவலை உறுதிப்படுத்த நிராகரிக்க, சேவைத் தகவல்கள் அனுப்பப்படும்.
எ.கா.:
1. CONTROL:
சொற்றொடரியல் சரிபார்ப்பு மற்றும் தகவலின் வருகையை உறுதிப்படுத்தல்.
2. APERAK:
தொழில்நுட்ப பிழை செய்திகள் மற்றும் ஒப்புகை.
பரிமாற்றத் தரவு:
சேவைத் தகவல் தவிர பிற தகவல் கூறுகள்.
எ.கா.:
1. CREMUL:
Multiple Credit Advice
2. DELFOR:
விநியோகத்திற்கு முந்தைய முன்னறிவிப்பு
3. IFTMBC:
முன்பதிவு உறுதிப்படுத்துதல்.
68.
மின்னணு தரவு பரிமாற்றக் கட்டமைப்பு நான்கு வெவ்வேறு அடுக்குகளைக் குறிப்பிடுகிறது
1. பயன்பாட்டு அடுக்கு
2. தரப்பாடுகள் அடுக்கு
3. இடமாற்று அடுக்கு
4. பரும அடுக்கு
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards