12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 09/03/2020
12ஆம் வகுப்பு கணினி அறிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் வினாக்கள் 2020 (12th Standard Computer Science All Chapter Three Marks Important Questions 2020 )
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
List அல்லது Tupleஐ பயன்படுத்தி setஐ எவ்வாறு உருவாக்கலாம்? எடுத்துக்காட்டு தருக.
2.
Tuplesக்கு மதிப்பிருத்துதல் பற்றி குறிப்பு வரைக.
3.
குறிப்பு வரைக:
(i) ஸ்கேட்டர் வரைவிடம்
(ii) பெட்டி வரைவிடம்
4.
தரவு அருவமாக்கத்தின் அடிப்படை நோக்கம் என்ன?
5.
ADT -யை எந்த வகையில் செயல்படுத்தலாம் என்பதற்கு உதாரணம் தருக.
6.
இரண்டு நேர்முழு எண்களின் மீப்பெரு வகு எண்ணை கண்டுபிடிக்கும் pure செயற்கூற்றின் நெறிமுறையை எழுது.
7.
செயற்கூறு வகைகளின் தொடரியலை விளக்கமாக எழுதுக.
8.
COUNT ( ) - சார்பு குறிப்பு வரைக.
9.
fetchone ( ) - னைப் பயன்படுத்தி ஒரு பதிவை எவ்வாறு காண்பிப்பாய்? எடுத்துக்காட்டுடன் எழுதுக.
10.
பெற்றோர் - குழந்தை உறவு நிலை உடைய தரவு மாதிரி பற்றி எழுதுக.
11.
DBMS-ன் நிறைகளை எழுதுக.
12.
center ( ) செயற்கூறு பற்றி எழுதுக.
13.
சரவடிவமைப்பிற்கான தொடரியல் மற்றும் எ.கா. தருக.
14.
அட்டவணைகளிலிருந்து எவ்வாறு வினவல்களை உருவாக்குவாய் மற்றும் தரவை மீட்டெடுப்பது என்பதை பற்றி விளக்கவும்
15.
பைத்தான் குறிப்புரை - சிறுகுறிப்பு வரைக.
16.
input( ) செயற்கூறு - சிறுகுறிப்பு வரைக.
17.
தரவு கையாளுதல் மொழி பற்றி எழுதுக
18.
குறிப்பு வரைக.
1) min ( )
2) max ( )
3) sum ( )
19.
அளபுருக்களின் பெயரை அடையாளம் கண்ட பின்பு செயற்கூறினை அழைக்கும் செயலுருபுகள் யாவை? எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.
20.
இனக்குழுவைப் பயன்படுத்தி மொத்தம் மற்றும் சராசரி மதிப்பெண்ணைக் கணக்கிடும் நிரல்.
21.
பின்வரும் நிரலின் வெளிப்பாடு கிடைக்க நிரலில் உள்ள விடுபட்ட இடங்களை நிரப்புக.
வெளியீடு
Value of x = 10
Value of y = 20
Sum of x and y = 30
Class sample:
x, ____= 10, 20 -------------------- (i)
s = _____----------------------------- (ii)
print ( " value of x = ", ______) ---------- (iii)
print ( " value of y = ", ______) ---------- (iv)
print ( " sum of x and y = ", ____) ------- (v)
22.
simple if கூற்று சிறுகுறிப்பு வரைக.
23.
வரிசை முறை கூற்றுகள் -எடுத்துக்காட்டுடன் சிறுகுறிப்பு வரைக.
24.
வரிசைமுறைத் தேடலுக்கான போலி குறிமுறையை எழுதுக
25.
இடம் நேரம் பரிமாற்றம் அல்லது நேரம் நினைவகம் பரிமாற்றம் என்பது என்ன?
26.
C++ நிரலைத் தருவித்துக் கொள்ளல் பற்றி சிறு குறிப்பு வரைக.
27.
C++ நிரலை பைத்தான் மூலம் இயக்கும் வழிமுறைகளை எழுதுக.
28.
மாறிகளின் வரையெல்லை பற்றி குறிப்பு வரைக
29.
உள்ளிணைந்த வரையெல்லை என்பது என்ன?
30.
ஒரு புதிய CSV கோப்பினை உருவாக்கவும் [அல்லது] ஏற்கனவே உள்ள கோப்பில் மாற்றங்கள் செய்யும் வழிமுறைகளை எழுதுக.
31.
CSV கோப்புகளை reader ( ) செயற்கூறுவின் மூலம் படிக்கும் வழிமுறைகளை எழுதுக.
32.
தரவு காட்சிப்படுத்தலின் மூன்று பயன்பாட்டை எழுதவும்.
33.
பின்வரும் தரவு காட்சிப்படுத்துதல் வரைவியின் வெளியீட்டை வரையவும்.
import matplotlib.pyplot as plt
plt.bar([1,3,5,7,9],[5,2,7,8,2], label = "Example one")
plt.bar([2,4,6,8,10],[8,6,2,5,6], label = "Example two", color = 'g')
plt.legend( )
plt.xlabel('bar number')
plt.ylabel('bar height')
plt.title('Epic Graph\nAnother Line! Whoa')
plt.show( )
34.
பின்வரும் விவரங்களை படிக்கவும் அதன் அடிப்படையில் பதிவுகளை Eno இறங்குவரிசையில் திரையிட பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.
தரவுத்தள பெயர் : organization.db
அட்டவணை பெயர் : Employee
புலங்கள் : Eno, EmpName, Esal, Dept
35.
பின்வரும் விவரங்களை படிக்கவும். அதன் அடிப்படையில் துறைவாரியாக பதிவுகளை திரையிட பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.
தரவுத்தள பெயர் : organization.db
அட்டவணை பெயர் : Employee
புலங்கள் : Eno, EmpName, Esal, Dept
36.
கீழ்காணும் கூற்றில் கூறுநிலை, செயற்குறி, வரையறையின் பெயர் ஆகியவற்றை அடையாளம் காண்க.
welcome.display( )
37.
Scripting மொழியின் பயன்பாடுகள் யாவை?
38.
reader( ) மற்றும் DictReader( ) இடையேயான வேறுபாடு யாது?
39.
write மற்றும் append mode முறைமைகளின் வேறுபாடு என்ன?
40.
Savepoint கட்டளையின் பயன்பாட்டை ஒரு எடுத்துக்காட்டுகளுடன் எழுதுக.
41.
கட்டுப்பாடு என்றால் என்ன? Primary Key கட்டுப்பாடு பற்றி சிறுகுறிப்பு வரைக.
42.
கார்டீசியன் பெருக்கலை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.
43.
Select மற்றும் Project செயற்பாடுகளின் வேறுபாடுகள் யாவை?
44.
இரண்டு private இனக்குழு மாறிகளுடன், வழிமுறையை பயன்படுத்தி கூட்டுத்தொகை sum அச்சிடும் இனக்குழுவை வரையறுக்கவும்.
45.
இனக்குழு உறுப்புகள் என்றால் என்ன? அதனை எவ்வாறு வரையறுப்பாய்?
46.
பைத்தானின் set செயல்பாடுகளை பட்டியலிடுக.
47.
Sort( ) பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
48.
பின்வருவனவற்றை பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் குறிப்பு வரைக.
(அ) capitalize( )
(ஆ) swapcase( )
49.
கொடுக்கப்பட்ட வடிவத்தை அச்சிடும் பைத்தான் நிரலை எழுதுக.
C O M P U T E R
C O M P U T E
C O M P U T
C O M P U
C O M P
C O M
C O
C
50.
பைத்தானிலுள்ள global சிறப்புச் சொல்லுக்கான அடிப்படை விதிமுறைகளை எழுதுக.
51.
உள்ளமை மாறிகளுக்கான விதிமுறைகளை எழுதுக.
52.
if..else..elif கூற்றைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட மூன்று எண்களில் பெரிய எண்ணைக் கண்டுபிடிப்பதற்கான பொருத்தமான நிரலை எழுதுக.
53.
if..else அமைப்பைப் பற்றி குறிப்பு வரைக.
54.
சரநிலையுரு என்றால் என்ன?
55.
பைத்தானில் மதிப்பிடுதல் செயற்குறிகள் என்றால் என்ன?
56.
Asymptotic குறியீடு - குறிப்பு வரைக.
57.
இடம் மற்றும் இடச்சிக்கலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?
58.
59.
உள்ளமை வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?
60.
List உள்ள உருப்புகளை அணுகும் பல்வேறு வழிமுறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.
61.
நிரல் வடிவமைப்பில் பின்பற்றப்படும் யுக்தி எது? யுக்தியை வரையறுக்க.
62.
pure மற்றும் impure செயற்கூற்றை வேறுபடுத்துக.
63.
strlen ஏன் pure செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது?
1.
ஒரு List அல்லது Tuple ஐ Set() செயற்கூற்றைப் பயன்படுத்தி Set ஆக மாற்ற முடியும். இது மிகவும் எளிய முறையாகும். List அல்லது Tuple ஐ உருவாக்கிய பின் அதன் மாறியை Set( ) செயற்கூறினுள் அளபுருவாக கொடுக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு :
MyList= [2,4,6,8,10]
MySet=set(MyList)
print(MySet)
வெளியீடு : {2,4,6,8,10}
2.
Tuples மதிப்பிருத்தல் என்பது பைத்தானில் ஆற்றல் மிக்க சிறப்பியல்பாகும். இது, மதிப்பிருத்து செயற்குறியின் இடது பக்கத்தில் உள்ள மாறிகளில் மதிப்பிருத்த செயற்குறியின் வலது பக்கத்தில் உள்ள மதிப்புகளை இருத்த அனுமதிக்கிறது. ஒவ்வொரு மதிப்பும் அதற்குரிய மாறியில் இருத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு :
> > > (a,b,c) = (34,90,76)
> > > print (a,b,c)
34 90 76
3.
(i) ஸ்கேட்டர் வரைவிடம்: ஸ்கேட்டர் வரைவு என்பது தரவுகளை புள்ளிகளின் தொகுப்பாக காட்டுகிறது. ஒரு புள்ளிகளின் நிலை அதன் இரு பரிமாண மதிப்பைப் பொறுத்தது, ஒவ்வொரு மதிப்பும் கிடைமட்ட அல்லது செங்குத்து பரிமாணத்தின் நிலையை குறிக்கும்.
(ii) பெட்டி வரைவிடம்: பெட்டி வரைவிடம் என்பது சிறிய முதல் கால்மானம், சராசரி, மூன்றாம் கால்மானம் மற்றும் பெரிய (minimum, first quartile, median, third quartile அண்ட் maximum) ஆகிய ஐந்து எண்கள் திரட்டைக் கொண்டு தரவுகளின் பகிர்வை காட்டுகிறது.
4.
(i) தரவு அருவமாக்கத்தின் அடிப்படை நோக்கம், நிரலினை அருவமாக்க தரவில் இயக்கும்படி கட்டமைப்பதாகும்.
(ii) அதாவது, நிரலில் தரவுகளை பயன்படுத்திக் கொள்ளும் போது அதைப்பற்றி சில ஊகங்களை செய்து கொள்ள வாய்ப்புள்ளது. அதே வேளையில் கான்கீரிட் தரவு உருவமைக்கும் போது நிரலின் தனிப்பகுதியாக வரையறை செய்ய வேண்டும்.
5.
(i) ADT யை பல்வேறு வகையில் செயல்படுத்தலாம், உதாரணமாக List ADT ஒற்றை இணைக்கப்பட்ட பட்டியல் அல்லது இரட்டை இணைக்கப்பட்ட பட்டியல் கொண்டு செயல்படுத்தப்படலாம்.
(ii) இதுபோன்ற அடுக்கு (Stack) ADT மற்றும் வரிசை ADT, List பயன்படுத்தி செயல்படுத்தப்படலாம்.
6.
let rec gcd a b :=
if b < > 0 then ged b (a mod b) else return
a;;
வெளியீடு:
ged 13 27;;
- : int = 1
ged 20536 7826;;
- : int = 2
7.
செயற்கூறு வகைகளின் தொடரியல்
x⇾y
x1⇾x2⇾y
x1⇾...⇾xn⇾y
'x' மற்றும் 'y'மாறிகள் செயற்கூறு வகைகளைக் குறிக்கும்.x ⇾ y என்ற செயற்கூறு வகையானவை 'x' வகையின் உள்ளீட்டைப் பெற்று 'y' வகையின் வெளியீட்டைத் திருப்பி அனுப்பும். அதே சமயம் x1⇾x2⇾y என்ற செயற்கூறு வகையானது இரண்டு உள்ளீட்டின் வகை 'x1' ஆகும். இரண்டாவது உள்ளீட்டின் வகை 'x2' ஆகும். x1 ⇾...⇾xn ⇾y யில் n அளபுருக்களின் உள்ளீட்டு வகை x ஆகும். வெளியீட்டின் வகை 'y' ஆகும்.
8.
WHERE துணை நிலை கூற்றில் குறிப்பிட்டுள்ள நிபந்தனையை நிறைவேற்றும், அட்டவணையில் உள்ள வரிசைகளில் எண்ணிக்கையை SQL COUNT ( ) சார்பு விடையாகக் கொடுக்கும்
எடுத்துக்காட்டு:
import sqlite3
connection = sqlite3.connect('Academy.db'')
cursor = connection.cursor( )
cursor.execute("SELECT COUNT(*) FROM student ")
result = cursor.fetchall ( )
print(result)
வெளியீடு:
[(7,)]
9.
fetchone ( ) செயற்கூறு வினவல் முடிவுத் தொகுதியின் உள்ளே உள்ள அடுத்த வரிசையைக் கொடுக்கும் (அல்லது) எந்த வரிசையும் இல்லை என்றால் None என்ற மதிப்பை கொடுக்கும்.
எடுத்துக்காட்டு:
import sqlite3
connection = sqlite3.connect("Academy.db")
cursor = connection.cursor( )
cursor.execute("SELECT * FROM student")
print("\nfetch one:")
res = cursor.fetchone( )
வெளியீடு:
fetch one:
(1, 'Akshay', 'B', 'M', 87.8, '2001-12-12')
10.
(i) இது IBM -ஆல் தகவல் மேலாண்மை அமைப்பு Information Management System போல உருவாக்கப்படுகிறது.
(ii) இந்த மாதிரியில் தரவு எளிமையான மரக்கிளை அமைப்பில் குறிப்பிடப்படுகிறது.
(iii) இது ஒன்றிலிருந்து பல (one to many) உறவு நிலையை குறிக்கிறது. (Parent - child) அதாவது பெற்றோர் -குழந்தை உறவுநிலை.
(iv) ஒரு குழந்தைக்கு ஒரு பெற்றோர் இருப்பர். ஆனால், ஒரு பெற்றோருக்கு பல குழந்தைகள் இருக்கலாம்.
(v) இது முக்கியமாக IBM தலைமைக் கணிப்பொறியில் பயன்படுகிறது.
11.
(i) பயன்பாட்டு நிரல்களைப் பிரித்தல்
(ii) தரவுப்பிரதிகளை (Duplication) அல்லது தரவு மிகைமைக் குறைத்தல்
(iii) வினவல் மொழியைப் பயன்படுத்தி தரவை எளிமையாக திரும்பப் பெறுதல்.
(iv) தரவை உருவாக்கும் நேரம் மற்றும் பராமரித்தலைக் குறைத்தல்
12.
| தொடரியல் | விளக்கம் | எடுத்துக்காட்டு |
| center (width, fillchar) | அறிவிக்கப்பட்டுள்ள சரத்தின் மொத்த நீளத்தில் கொடுக்கப்பட்ட சரத்தினை மையத்தில் வெளிப்படும் மேலும் குறியுருக்களை பெற்றிருக்காத நெடுவரிசைகள் fillchar குறியுருவை கொண்டு நிரப்பப்படும். |
> > >str1="Welcome" > > >print(str1.center (15,'*')) ****Welcome**** |
13.
தொடரியல்:
("String to be display with %val1 and %val2" %(val1, val2))
எடுத்துக்காட்டு:
name = "Rajarajan"
mark = 98
print ("Name: %s and Marks: %d" %(name,mark))
வெளியீடு:
Name: Rajarajan and Marks: 98
14.
SQL - செயலாற்றும் போது, வினவல்களை உருவாக்குவதும், தரவை மீட்டெடுப்பதும் மிக முக்கியமான பணிகளில் ஒன்றாகும். ஒரு வினவல் என்பது தரவுத்தள அட்டவணையிலிருந்து நாம் விரும்பும் தீர்வை பெற கொடுக்கப்படும் கட்டளையாகும். SQL SELECT கட்டளை, தரவுத்தள அட்டவணையில் உள்ள தரவினை வினாவலாகவோ அல்லது மீட்டெடுக்கவோ பயன்படும் கட்டளையாகும். இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அட்டவணைகளிலிருந்து பதிவுகளின் துணைக் கூறுகளை மீட்டெடுக்கப் பயன்படுகிறது. SELECT கட்டளையை பல வடிவங்களில் பயன்படுத்தலாம்.
SELECT கட்டளையின் தொடரியல்:
SELECT < column-list > FROM < table-name >;
(i) table-name என்பது தகவல் பெறப்பட்ட அட்டவணையின் பெயர்.
(ii) Column-list என்பது தரவு பெறப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நெடுவரிசைகளை உள்ளடக்கியது
15.
(i) பைத்தானில் குறிப்புரை ஹாஷ் (#) குறியுடன் தொடங்கும். # குறியுடன் தொடங்கும் வரிகள் குறிப்புரையாக கருதப்பட்டு, பைத்தான் மொழிபெயர்ப்பி இவற்றை குறிமுறையின் பகுதியாக கருதாது.
(ii) குறிப்புரைகள், ஒரு வரி அல்லது பல வரியாக இருக்கலாம். பல வரி குறிப்புரை கீழே காண்பதைப் போல் இரட்டை # குறிக்குள் ஒரு தொகுதியாக கொடுக்கப்பட வேண்டும்.
# It is single line comment
# It is multiline comment
which contains more than one line #
16.
(i) பைத்தானில், input() செயற்கூறு நிரலை இயக்கும் பொழுது தரவுகளை உள்ளீடாக பெற்றுக் கொள்ள பயன்படுகிறது. input() செயற்கூறின் தொடரியல்,
Variable = input ("prompt string")
(ii) இந்த தொடரியலில் உள்ள "prompt string" பயனர் கொடுக்கப்பட வேண்டிய உள்ளீடு எதுவென்பதை உணர்த்தும் கூற்று அல்லது செய்தியை கொண்டிருக்கும்.
(iii) input() கட்டளை அமைப்பில் உள்ள "prompt string" திரையில் தோன்றும், பயனர் இதை படித்து உள்ளீடு சாதனத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் தரவுகளை கொடுக்கலாம்.
(iv) input() செயற்கூறு, விசைப்பலகையின் மூலம் தட்டச்சு செய்தவற்றை மாறியில் சேமித்து வைக்கும்.
(v) "prompt string" கொடுக்கப்படவில்லை எனில் திரையில் எந்த தகவலும் தோன்றாது. இதனால் பயனர் எவற்றை உள்ளீடு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள முடியாது.
17.
தரவு கையாளுதல் மொழி (DML) என்பது ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவுகளை சேர்த்தல், அழித்தல் மற்றும் மாற்றியமைப்பதற்காக பயன்படும் ஒரு கணிப்பொறி நிரலாக்க மொழியாகும். SQL - ல் தரவு கையாளுதல் மொழி தரவுத்தள அட்டவணையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளை மாற்றியமைக்க பயன்படும் SQL தரவு மாற்றுக் கூற்றுகளை கொண்டிருக்கும்.
தரவுத்தள திட்ட வடிவமைப்பின்படி, தரவுத்தளம் உருவாக்கிய பின்னர், DML ல் குறிப்பிடப்பட்டுள்ள செயல் முறைகளின் தொகுப்பை பயன்படுத்தி தரவுகளை கையாளலாம்
18.
| செயற்கூறு | விளக்கம் | பொது வடிவம் | எடுத்துக்காட்டு | |
| 1 | min ( ) | கொடுக்கப்பட்ட பட்டியலில் இருந்து மிகச்சிறிய மதிப்பைத் திருப்பி அனுப்பும் |
min (list) | MyList=[21,76,98,23] print ('Minimum of MyList :', min(MyList)) வெளியீடு Minimum of MyList : 21 |
| 2 | max ( ) | கொடுக்கப்பட்ட பட்டியலில் இருந்து மிகப்பெரிய மதிப்பைத் திருப்பி அனுப்பும் |
max (list) | MyList = [21,76,98,23] print ('Maximum of My List :', max(MyList)) வெளியீடு Maximum of MyList : 98 |
| 3 | sum ( ) | கொடுக்கப்பட்ட பட்டியலில் உள்ள மதிப்புகளின் கூட்டுத் தொகையை திருப்பி அனுப்பும் |
sum (list) | MyList = [21,76,98,23] print ('Sum of MyList :', sum(MyList)) வெளியீடு Sum of My List : 218 |
19.
1) அளபுருக்களின் பெயரை அடையாளம் கண்ட பின்பு சிறப்புச் சொல் செயலுருபானது செயற்கூறினை அழைக்கிறது.
2) சிறப்புச் சொல் செயலுருபின் மதிப்பு அளபுரு பெயருடன் பொருந்த வேண்டும். எனவே, முறையற்ற வரிசையிலும் செயலுருபுகளைக் கொடுக்கலாம்.
எடுத்துக்காட்டு:
defprintdata (name):
print ("Example-1 Keyword arguments")
print ('Name :",name)
return
# Now you can call printdatat) function
printdata(name = "Gshan")
வெளியீடு:
Example-1 Keyword arguments
Name :Gshan
20.
class Student:
mark1, mark2, mark3, = 45, 91, 71
# class variable
def process ( self ): # class method
sum = Student. mark1 + Student. mark2 + Student.mark3
avg = sum/3
print ( " Total Marks = ", sum )
print ( " Average Marks = ", avg )
return
S = Student ( )
S. process ( )
21.
(i) y
(ii) sample ( )
(iii) s.x
(iv) s.y
(v) s.x + s.y
22.
simple if கூற்று என்பது அனைத்து தீர்மானிப்பு கூற்றுகளிலும் மிக எளிதான கூற்றாகும். நிபந்தனையானது ஒப்பீட்டு கோவையாகவோ இருத்தல் வேண்டும்.
பொதுவடிவம்.
if < condition >:
statements-block1
மேலே உள்ள கூற்றில் நிபந்தனை சரி என்றால் statements-block 1 நிறைவேற்றப்படும்.
எடுத்துக்காட்டு:
# வயதை சரி பார்த்து வாக்களிக்க தகுதியா என அச்சிடும் நிரல்
x=int (input(''Enter your age :"))
if x >=18:
print ("You are; eligible for voting")
வெளியீடு1:
Enter your age :34
You are eligible for voting
வெளியீடு2:
Enter your age; 16
> > >
23.
ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும் கூற்றுகளின் வரிசையைக் கொண்டது வரிசை முறை கூற்று ஆகும். உன்னுடைய பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை அச்சிடும் குறிமுறை, வரிசைமுறை கூற்றுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
எடுத்துக்காட்டு:
#உன்னுடைய பெயர் மற்றும் முகவரியை அச்சிடும் நிரல் - வரிசைமுறை கூற்றுக்கு எடுத்துக்காட்டு
print ("Hello! This is Shyam")
print ("43, Second Lane, North Car Street, TN")
வெளியீடு:
Hello! This is Shyam
43, Second Lane, North Car Street, TN
24.
போலி குறிமுறை:
(i) for மடக்கினைப் பயன்படுத்தி அணியில் பயணித்தல்
(ii) ஒவ்வொரு சுழற்சியில், இலக்கு மதிப்பை தற்போதைய மதிப்புடன் ஒப்பிடவும்
1. மதிப்புகள் பொருத்தமாக இருந்தால் அணுவின் தற்போதைய சுட்டெண்ணைத் திருப்பி அனுப்பும்
2. மதிப்புகள் பொருந்தாவிட்டால் அணியின் அடுத்துள்ள உறுப்புக்கு சென்றுவிடும்
(iii) பொருத்தம் எதுவும் இல்லையென்றால் -1 மதிப்பைத் திருப்பி அனுப்பும்
25.
(i) இடம் நேரம் பரிமாற்றம் அல்லது நேரம் நினைவகம் பரிமாற்றம் என்பது குறைந்த நேரத்தில் அதிகமான சேமிக்கும் இடத்தைப் பயன்படுத்தி நெறிமுறையை தீர்க்கும் வழியாகும் (ii) கொடுக்கப்பட்ட நிரலாக்கத்தின் சிக்கலைத் தீர்ப்பதற்கு பல விதமான நெறிமுறைகளைப் பயன்படுத்தலாம்
(iii) அதில் சில நெறிமுறைகள் மிகவும் நேர செயல்திறன் உடையதாகவும் மற்றும் சில நெறிமுறைகள் மிகவும் இட செயல்திறன் உடையதாகவும் இருக்கும்
(iv) நேரம் / இடம் பரிமாற்றம் என்பது மெதுவான நிரல் இயங்கு நேரத்தில் நினைவகப் பயன்பாட்டைக் குறைக்கும் நிலைமையை அல்லது அதிகமான நினைவக பயன்பாட்டில் இயங்கு நேரத்தைக் குறைக்கும் நிலைமையைக் குறிப்பதாகும்
26.
(i) பைத்தான் பல கூறுநிலைகளைக் கொண்டுள்ளது . ஒரு சிக்கலுக்கு நிரலர்கள் பல தரப்பட்ட கூறுநிலைகளைத் தங்கள் வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள பைத்தான் அனுமதிக்கிறது.
(ii) இப்பொழுது நாம் கற்றுக் கொள்ளவிருக்கும் பைத்தான் நிரல் அடிப்படை பைத்தான் நிரலில் நீங்கள் அறிந்திராத சில புதிய கட்டளைகளைக் கொண்டுள்ளது.
(iii) இந்த அதிகாரத்தில், நிரல்கள் இரண்டு வெவ்வேறு மொழிகளின் ஒருங்கிணைப்பைப் பெற்றுள்ளதால் os,sys மற்றும் getopt போன்ற கூறுநிலைகளைத் தருவித்துக் கொள்ள வேண்டும்.
27.
(i) MinGW run -ன் முனையத்தை இரட்டைக் கிளிக் செய்யவும்.
(ii) பைத்தான் மென்பொருள் அமைந்திருக்கும் (python.exe) கோப்புறைக்கு செல்லவும்.
இந்த உதாரணத்தில், பைத்தான் கோப்புறை C:\Program Files\OpenOffiice 4\Python என்ற அமைவிடத்தில் காணலாம்.
c: \ > கோப்புறையிலிருந்து பைத்தான் அமைந்திருக்கும் கோப்புறைக்கு மாறுவதற்கான தொடரியல்.
cd < absolute path >
இதில் "cd" கட்டளை change directory என்பதையும் absolute path என்பது பைத்தான் நிறுவப்பட்டிருக்கும் முழுமையான பாதையையும் குறிக்கும்.
28.
(i) உள்ளமை வரையெல்லை நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்பட்ட மாறிகளைக் குறிக்கும்
(ii) நிரலின் அனைத்து செயற்கூறுகளுக்கும் வெளியே அறிவிக்கப்பட்ட மாறிகள் முழுதளாவிய மாறிகள் எனப்படும்
(iii) ஒரு செயற்கூறின் உள்ளே மற்றொரு செயற்கூறு அடைக்கப்பட்டிருந்தால் அது பின்னலான செயற்கூறு எனப்படும்
(iv) மற்றொரு செயற்கூறு வரையறையை, தன்னுள் கொண்ட ஒரு வெளி செயற்கூறினுள் ஒரு மாறி அறிவிக்கப்பட்டால் உள்செயற்கூறானது, வெளி செயற்கூறினுள் உள்ள மாறிகளை அணுக முடியும். இதுவே, இணைக்கப்பட்ட வரையெல்லை (Enclosed Scope) எனப்படும்
29.
(i) நிரல்பெயர்ப்பி அல்லது தொகுப்பானை தொடங்கும்பொழுது உள்ளிணைந்த வரையெல்லையானது நிரல் வரையெல்லையில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட அனைத்து பெயர்களையும் கொண்டிருக்கும்
(ii) நிரலாக்க மொழியின் நூலக செயற்கூறின் வரையறுக்கப்பட்ட மாறி அல்லது தொகுதி உள்ளிணைந்த வரையெல்லையைக் கொண்டுள்ளது.
(iii) இவைகள், நூலக கோப்புகள் நிரலில் செயல்பட தொடங்கியவுடன் இறக்கப்படும்
30.
(i) சாதாரணமான ஒரு புதிய CSV கோப்பினை உருவாக்குதல்.
(ii) ஏற்கனவே உள்ள கோப்பினை திருத்துதல்.
(iii) தனிப்பயன் பிரிப்பான்களுடன் CSV கோப்பினில் எழுதுதல்.
(iv) Lineterminator உடன் CSV கோப்பினில் எழுதுதல்.
(v) Quotechars உடன் CSV கோப்பினில் எழுதுதல்.
(vi) CSV கோப்பினை Dictionaryயில் எழுதுதல்.
(vii) இயக்க நேரத்தில் தரவினை பெற்று கோப்பில் எழுதுதல்.
31.
(i) CSV கோப்பு : கொடாநிலை பிரிப்பானான காற்புள்ளியை கொண்ட தரவு.
(ii) CSV கோப்பு : தொடக்கத்தில் இடம் கொண்ட தரவுகள்.
(iii) CSV கோப்பு : மேற்கோளுடன் கூடிய தரவுகள்
(iv) CSV கோப்பு : தனிப்பயன் பிரிப்பான கொண்ட தரவு.
32.
(i) தரவு காட்சிப்படுத்தல் பயனர்கள் தரவுகளை எளிதாக கூர்ந்து ஆய்வு செய்யவும், உட்பொருளை வெளிப்படுத்த உதவுகிறது
(ii) இது சிக்கலான தரவுகளை புரிந்துகொண்டு அவற்றை பயன்படுத்திக் கொள்ள வழி செய்கிறது.
(iii) தரவு காட்சிப்படுத்தல் பல்வேறு வரைபடங்களைக் கொண்டு தரவு மாறிகளுக்கு இடையே உள்ள உறவு நிலையை வெளிப்படுத்துகிறது.
33.

34.
import sqlite3
connection = sqlite3 . connect ("organization. db")
cursor = connection. cursor ( )
cursor. execute ("SELECT * FROM Employee ORDER BY Eno DESC")
result = cursor. fetchall ( )
print (*result, sep = "in")
வெளியீடு:
(1002, 'Priya,' 18000, 'Accounts')
(1003, 'Karthick,' 25000, 'IT')
(1005, 'Kirthika,' 45000, 'IT')
35.
import sqlite3
connection = sqlite3. connect ("organization. db")
cursor = connection. cursor ()
cursor. execute ("SELECT * FROM Employee GROUP BY Dept")
for row in c:
print(row)
conn.close()
வெளியீடு:
(1002, 'Angel,' 18000, 'Accounts')
(1003, 'Kumar,' 25000, 'IT')
(1005,'Kavitha,'45000, 'IT')
36.

37.
(i) ஒரு நிரலில் சில செயல்பாடுகளை தானியங்குபடுத்துதல்.
(ii) தரவு தொகுப்பிலிருந்து தகவலைப் பிரித்தெடுத்தல்.
(iii) பழைமையான நிரலாக்க மொழிகளுடன் ஒப்பிடும் போது, குறைந்த நிரல் குறிமுறையைக் கொண்டது.
(iv) பயன்பாடுகளுக்கு புதிய செயல்பாடுகளை கொண்டு வர முடியும் மேலும், சிக்கலான அமைப்புகளை ஒருங்கமைக்க முடியும்.
38.
reader() செயற்கூறு :
(i) CSV கோப்பின் உள்ளடக்கத்தை படிக்க csv.reader() என்ற செயற்கூறானது பயன்படுத்தப்படுகிறது.
(ii) reader() செயற்கூறானது கோப்பின் ஒவ்வொரு வரியையும் படித்து அவற்றை நெடுவரிசைகளின் பட்டியலாக (List) அமைக்கும்,
(iii) இச்செயற்கூறை பயன்படுத்தி பயனர் கோப்பின் தரவுகளில் உள்ள இரட்டை மேற்கோள் குறி (" ") ( | ) மற்றும் ( , ) போன்ற பல்வேறு வடிவமைப்புகளை பயன்படுத்தி படிக்கலாம்.
DictReader() செயற்கூறு:
(i) DictReader() CSV கோப்பில் உள்ள முதல் வரியை காற்புள்ளியை இந்த வரியின் Dictionary திறவுகோல் பயன்படுத்தி படிக்கும்.
(ii)csv.DictReader மற்றும் csv.DictWriter இரண்டும் கூடுதல் அளபுருவாக புலப்பெயரினை பெற்று Dictionary திறவுகோலாக பயன்படுத்தும்.
39.
(i) 'w' write முறைமை புதிய கோப்பினை உருவாக்க உதவுகிறது. ஏற்கனவே அக்கோப்பானது உருவாக்கப்பட்டிருந்தால் அக்கோப்பின் பெயரில் புதிய கோப்பினை உருவாக்கும்.
(ii) 'a' append முறைமையானது கோப்பானது ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்தால் அதன் இறுதியில் தரவினை சேர்க்கும். இல்லையெனில் புதிய கோப்பினை உருவாக்கும்.
40.
SAVEPOINT கட்டளை ஒரு நடவடிக்கையை தற்காலிகமாக சேமித்து வைப்பதால், நாம் தேவைப்படும் சமயங்களில் திரும்பவும் அந்த நிலைக்கு செல்லலாம். நம்முடைய அட்டவணையின் மாறுபட்ட நிலைகளை வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தி எந்த சமயத்திலும் சேமித்துக் கொள்ளலாம். மேலும், ROLLBACK கட்டளையைப் பயன்படுத்தி, மீண்டும் அந்த நிலையை சென்றடையலாம்.
தொடரியல்: SAVEPOINT savepoint _name;
எ.கா. UPDATE Student SET Name = 'Mini' WHERE Admno=105;
SAVEPOINT A;
INSERT INTO Student VALUES(106, 'Jisha', 'F', 19, 'Delhi');
SAVEPOINT B;
41.
கட்டுப்பாடுகள் என்பது ஒரு புலம் அல்லது புலங்களின் தொகுதிக்கு பயன்படுத்தக்கூடிய நிபந்தனையை குறிக்கும்.
(i) Primary Key கட்டுப்பாடு:
தரவுத்தளத்திலுள்ள ஒரு பதிவை தனித்தன்மையோடு அடையாளம் காட்ட ஒரு புலத்தினை primary key என்ற கட்டுப்பாட்டுடன் அறிவிக்க வேண்டும்.
(ii) இது unique கட்டுப்பாட்டினை போன்றே காணப்பட்டாலும் அட்டவணையின் ஒரு புலத்தை மட்டுமே primary key ஆக குறிப்பிட முடியும்.
(iii) primary key கட்டுப்பாடு வெற்று (NULL) மதிப்புகளை அனுமதிக்காது என்பதால், primary key என்ற கட்டுப்பாட்டுடன் அறிவிக்கப்படும் புலம், NOT NULL என்ற கட்டுப்பாட்டையும் கொண்டிருக்க வேண்டும்.
42.
i) இரண்டு தொடர்புகளை சேர்க்க குறுக்குப் பெருக்கல் வழிவகுக்கிறது. இதன் விடை இரண்டு தொடர்புகளின் இணைப்பைக் கொண்டுள்ளது.
2) A x B என்பது A times B, இங்கு A தொடர்புகள் மற்றும் B தொடர்புகள் என்பன வேறுபட்ட பண்புக்கூறுகளாகும். இந்த வகை செயற்பாடுகள் இரண்டு தொடர்புகளிலிருந்து நெடுக்கைகளை ஒன்று சேர்க்க பயன்படுகிறது.

43.
| Select | Project | |
| 1 | select-ன் symbol : \(\sigma \) | Project -ன் symbol :π |
| 2 | இந்த select செயற்பாடு ஒரு நிபந்தனையின் அடிப்படையில் துணைத் தொகுதியை tuples களுடன் தேர்ந்தெடுக்க உதவுகிறது. | இந்த project செயற்பாடு குறிப்பிடப்பட்டுள்ள உள்ளீட்டு தொடர்புகளின் பண்புக் கூறுகளை நீக்குகிறது. |
| 3 | நிபந்தனைகளை நிறைவேற்ற tuples களை select வடிகட்டுகிறது. | இந்த செயற்பாடு கிடைமட்ட துணைத் தொகுதியின் ஒப்பீடுகளை வரையறுக்கிறது. |
44.
Code:
class Sample :
def __init__(self, n1, n2):
self._n1=n1
self._n2=n2
def sum(self):
print ("Class Variable 1:",self._n1)
print ("Class Variable 2:", self._n2)
S=Sample (5,10)
S.sum()
வெளியீடு :
>>>
Class Variable 1 : 5
Class Variable 2 : 10
Sum : 15
>>>
45.
(i) இனக்குழுக்குள்ளே வரையறுக்கப்படும் மாறிகள் இனக்குழு மாறிகள் (Class variables) என்றும் செயற்கூறுகள் வழிமுறைகள் (methods) என்றும் அழைக்கப்படும்.
(ii) இனக்குழு மாறிகள் மற்றும் வழிமுறைகள் சேர்ந்து இனக்குழுவின் உறுப்புகள் (members) எனப்படும்.
(iii) இனக்குழுவின் உறுப்புகளை இனக்குழுவின் பொருள்கள் அல்லது சான்றுருக்கள் மூலமாகவே அணுகுதல் வேண்டும்.
(iv) பைத்தானில், இனக்குழுவை வரையறுக்க class என்னும் சிறப்புச் சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு இனக்குழுவும் தனித்த பெயருடன் முக்காற்புள்ளி(:) யைக் கொண்டு முடியும்.
தொடரியல்
class class_name:
statement_1
statement_2
....................
....................
statement_n
46.
கணிதத்தில் கற்ற Set செயற்பாடுகள் ஆகிய ஒட்டு (Union), வெட்டு (intersection) வேறுபாடு (difference) சமச்சீரான வேறுபாடு (Symmetric difference), போன்றவற்றை பைத்தானிலும் பயன்படுத்தலாம்.
47.
sort() - List-ல் உள்ள உறுப்புகளை வரிசையாக்கம் செய்கிறது. reverse, key இரண்டு செயலுருபுகளும் கட்டாயமில்லாதவை
(i) reverse ஐ True என பொருத்தினால் இறங்கு வரிசையில் லிஸ்ட் வரிசையாக்கமாகும்.
(ii) ஏறுவரிசை தானமைவு வரிசையாக்கமாகும்.
(iii) Key=myFunc; "myFunc" வரிசையாக்க வரண்முறையைக் குறிப்பிடும் பயனர் வரையறுத்த செயற்கூறின் பெயர்.
தொடரியல் :
List.sort(reverse=True|False, key=myFunc)
எடுத்துக்காட்டு :
MyList=["Thilothamma', 'Tharani', 'Anitha', 'SaiSree', 'Lavanya']
MyList.sort()
print(MyList)
MyList.sort(reverse=True)
print(MyList)
வெளியீடு:
['Anitha', 'Lavanya', 'SaiSree', "Tharani', "Thilothamma']
['Thilothamma', 'Tharani', 'SaiSree', 'Lavanya', 'Anitha']
48.
| தொடரியல் | விளக்கம் | எடுத்துக்காட்டு |
| capitalize( ) | சரத்தின் முதல் குறியுருவை பெரிய எழுத்தாக மாற்றப் பயன்படுகிறது. | > > > city="chennai" > > > print(city. capitalize( )) Chennai |
| swapcase( ) | சரத்தில் உள்ள ஒரு எழுத்து பெரிய எழுத்தாக இருந்தால் அது சிறிய எழுத்தாகவும் நேர் மாறாகவும் திருப்பும் | > > > str 1="tAmiL NaDu" > > > print(str1.swapcase ( )) TaMIl nAdU |
49.
str1 = "COMPUTER"
index = len(str1)
for i in str1:
print (str1 [: index])
index -= 1
50.
பைத்தானின் ‘Global சிறப்புச் சொல்லின் அடிப்படை விதிகள்:
(i) செயற்கூறுக்கு வெளியே மாறியை அறிவிக்கும் போது அது தானமைவாக முழுதளாவிய வரையெல்லை ஆகும். 'global' என்ற சிறப்புச் சொல்லை பயன்படுத்த வேண்டியதில்லை.
(ii) செயற்கூறினுள் முழுதளாவிய மாறியின் மதிப்பை மாற்றியமைக்க `global' என்ற சிறப்புச்சொல் பயன்படுத்த வேண்டும்.
(iii) செயற்கூறுவிற்கு வெளியே 'global'' என்ற சிறப்புச் சொல் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
51.
உள்ளமை மாறியின் விதிமுறைகள் :
(i) உள்ளமை மாறியின் வரையெல்லை அது வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
(ii) செயற்கூறினுள் மாறி உருவாக்கப்படும் போது அது உள்ளமைவாக அமையும்.
(iii) செயற்கூறு இயக்கப்படும் போது மட்டுமே உள்ளமை மாறிகள் உயிர்பெறும்.
(iv) முறையான அளபுருக்கள் அதன் செயற்கூறுக்கு உள்ளமையானது ஆகும்.
52.
Code:
n1=int(input(:Enter the first number:"))
n2=int(input("Enter the second number:"))
n3=int(input(:Enter the third number:"))
if(n1?=n2)and(n1>=n3):
biggest=n1;
elif(n2>=n1)and (n2>=n3):
biggest=n2
else:
biggest=n3
print("The biggest number between",n1,",",n2,"and", n3,"is", biggest)
வெளியீடு :
Enter the first number:1
Enter the second number:3
Enter the third number:5
The biggest number between 1,3 and 5 is 5
53.
if ...else கூற்றானது சரி தொகுதி மற்றும் தவறு தொகுதி இரண்டையுமே சரிபார்ப்பதற்கான கட்டுப்பாட்டை வழங்குகிறது. 'if..else' கூற்றின் தொடரியல்.
தொடரியல்:
if <condition>:
statements-block 1
else:
statements-block 2

54.
பைத்தானில், சர நிலையுருக்கள், என்பது மேற்கோள் குறிக்குள் அடைக்கப்பட்ட குறியுருக்களின் தொடராகும். பைத்தானில், சரங்களை ஒற்றை, இரட்டை மற்றும் மூன்று மேற்கோள் குறிகளில் அடைக்கலாம். குறியுரு மதிப்பிருக்கள் ஒற்றை அல்லது இரட்டை மேற்கோள்குறியை கொண்டிருக்கும். பல வரி சர நிலையுருவை மூன்று மேற்கோள் "' '" குறிக்குள் கொடுக்கப்பட வேண்டும். பைத்தானில் ஒரு குறியுருவானது சர நிலையுருவாகவும் கருதப்படும்.
சர நிலையுரு செயல் விளக்கம் :
# Demo Program to test String Literals
strings = "This is Python"
char = "C"
multiline_str = ""This is a multiline
string with more than one line code."'
print (strings)
print (char)
print (multiline_str)
# End of the Program
வெளியீடு :
This is Python
C
This is a multiline string with more than one line code.
55.
பைத்தானில், = என்பது ஒரு மதிப்பிருத்தல் செயற்குறியாகும். இது மாறிகளுக்கு மதிப்பிருத்த பயன்படுகிறது. a = 5 மற்றும் b = 10 என்று கூற்று a யின் மதிப்பு 5 என்றும் b - ன் மதிப்பு 10 என்று மதிப்பிருந்தும், இவ்விரு மதிப்பிருத்தல் கூற்றினை a,b = 5, 10 என்றும் கொடுக்கலாம். இதுவும் வலது பக்கம் இருக்கு 5 மற்றும் 10 என்ற மதிப்பினை a, b என்ற மாறிகளில் முறையே மதிப்பிருத்தும். பைதான், +=, -=, *=, / =, %2 =, ** = மற்றும் // = போன்ற கூட்டு செயற்குறிகளையும் ஏற்கும்.
56.
Asymptotic குறியீடுகள் நேரம் மற்றும் இடச்சிக்கல்களைப் பற்றிய அர்த்தமுள்ள கூற்றுகளைப் பயன்படுத்தும் ஒரு மொழியாகும். பின்வரும் மூன்று Asymptotic குறியீடுகள் நெறிமுறையில் நேரச் சிக்கலைக் குறிக்க மிகவும் பயன்படுகிறது.
(i) Big O : நெறிமுறையின் மிக மோசமான நிலையை விவரிக்க Big O பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
(ii) Big \(\Omega\): Big Omega, Big O-வின் தலைகீழ் ஆகும். Big O-asymptotic (மோசமான நிலையில்) செயற்கூறின் உச்ச வரம்பையும், Big Omega அதன் கீழ்வரையை குறிக்கும் (சிறந்த நிலையில்).
(iii) Big : \(Θ\) = நெறிமுறையானது கீழ் எல்லை = மேல் எல்லை என்னும் சிக்கலைக் கொண்டிருந்தால், உதாரணத்திற்கு O (n log n) மற்றும் \(\Omega\)(n log n), ஆகிய சிக்கல்களைக் கொண்டுள்ளது என வைத்துக் கொள்வோம். உண்மையில் அதனுடைய சிக்கல் \(Θ\) (n log n), என்பது ஆகும். இதனுடைய அர்த்தம் என்னவென்றால் நெறிமுறையின் இயங்கு நேரம் மிகச் சிறந்த நிலை மற்றும் மிக மோசமான நிலை ஆகிய இரண்டு நிலையிலுமே எப்பொழுதும் n log n ஆக இருக்கும்.
57.
நேரம் காரணி: நெறிமுறைக்கு பொருத்தக் கூடிய முக்கிய செயல்பாடுகளின் எண்ணிக்கையை எண்ணுவதன் மூலம் நேரம் அளவிடப்படுகிறது, வரிசையாக்கம் நெறி முறையிலுள்ள பொருத்தங்களின் எண்ணிக்கை
இட காரணி: நெறிமுறைக்கு தேவைப்படும் மிக அதிகபட்ச நினைவக இடத்தை கணக்கிடுவதன் மூலம் இது அளவிடப்படுகிறது.
58.

59.
உள்ளமை வரையெல்லை (Local Scope)
உள்ளமை வரையெல்லை, நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்பட்ட மாறிகளைக் குறிக்கும். செயற்கூறு, எப்பொழுதும் மாறியின் பெயரை முதலில் அதன் உள்ளமை வரையெல்லையில் பார்வையிடும் அந்த வரையெல்லையில் இல்லையென்றால் மட்டுமே வெளி வரையெல்லையில் சோதிக்கும், இந்த எடுத்துக்காட்டை காண்போம்.

மேலே உள்ள குறிமுறையை இயக்கும்போது, மாறி a என்பது 7 என்ற மதிப்பை வெளியிடுகிறது. ஏனெனில், இது உள்ளமை வரையெல்லையில் வரையறுக்கப்பட்டு, அங்கேயே அச்சிடப்படுகிறது.
60.
(i) list -ன் உறுப்புகளை இரு வழியில் அணுகலாம். முதல் வழி, அதிகம் பயன்படுத்தப்படும் பன்மடங்கு மதிப்பிருத்தல். இம்முறையில், list-ன் உறுப்புகள் பிரிக்கப்பட்டு, அனைத்து உறுப்புகளும் வேறு பெயர்களுடன் இணைக்கப்படுகிறது.
1st := [10, 20]
x,y := 1st
(ii) மேலே காணும் எடுத்துக்காட்டில், xயின் மதிப்பு 10 என்றும், Yயின் மதிப்பு 20 என மதிப்பிருத்தப்படும்.
(iii) இரண்டாம் முறையில் லிஸ்டின் உறுப்புகள், உறுப்புகள் தேர்வு செயற்குறிகள் மூலம் அணுகப்படுகிறது.
(iv) லிஸ்ட் லிட்டரல்ஸ் போல் அல்லாது கோவையில் ஒரு சதுர அடைப்புக்குறியை தொடர்ந்து வரும் மற்றொரு சதுர அடைப்புக்குறி லிஸ்டின் மதிப்புகளாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால் முந்தைய கோவையின் உறுப்பை மதிப்பாக தேர்வு செய்யும்.
1st [0]
10
1st[1]
20
61.
(i) விருப்பார்வ எண்ணம் என்ற சக்தி வாய்ந்த செயல் யுக்தியை பயன்படுத்தி நிரல் வடிவமைக்கப்படுகின்றது.
(ii) விருப்பார்வ எண்ணம் என்பது யதார்த்தத்திற்கு பதிலாக நம்பிக்கையின் அடிப்படையில் விருப்பத்திற்கு ஏற்ப முடிவெடுப்பதாகும்.
62.
| pure செயற்கூறு | impure செயற்கூறு | |
| 1. | pure செயற்கூறுவின் திருப்பி அனுப்பும் மதிப்பு முற்றிலும் செயலுருபுகளை பொறுத்தே அமையும். | impure செயற்கூறுவின் திருப்பி அனுப்பும் மதிப்பு முற்றிலும் செயலுருபுகளை பொறுத்து அமையாது, |
| 2. | செயற்கூறினை அதே செயலுருபுகளை கொண்டு அழைத்தால் எப்பொழுதும் அதே திருப்பி அனுப்பும் மதிப்பே கிடைக்கும். | Impure செயற்கூறினை அதே செயலுருபுகளை கொண்டு அழைத்தால் வெவ்வேறான திருப்பி அனுப்பும் மதிப்பு கிடைக்கும். |
| 3. | இது எந்த பக்கவிளைவுகளையும் கொண்டிருக்காது. | (எ.கா) random () date () |
| 4. | இந்த செயற்கூறு செயலுருபுகளை மாற்றம் செய்யாது. | இந்த செயற்கூறு செயலுருபுகளை மாற்றம் செய்யலாம். |
63.
(i) strlen என்பது pure செயற்கூறாகும். ஏனென்றால், செயற்கூறு அளபுருவாக ஒரே ஒரு மாறியை எடுத்துக் கொண்டு அதனுடைய நீளத்தை கணக்கிடுகிறது. இந்த செயற்கூறு வெளி நினைவகத்தில் இருந்து உள்ளீட்டை எடுத்துக் கொள்கிறது.
(ii) ஆனால் மதிப்புகளை மாற்றுவதில்லை திருப்பி அனுப்பும் மதிப்புகள் வெளி நினைவகத்தில் இருந்து பெறப்பட்டதாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards