12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 09/03/2020
12ஆம் வகுப்பு கணினி அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென்வினாக்கள் 2020 ( 12th Standard Computer Science All Chapter Two Marks Important Questions 2020 )
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
List-ல் பயன்படும் மூன்று செயற்கூறு பற்றி எழுதுக.
2.
Tuple ( ) செயற்கூறின் பயன் யாது?எ.கா.தருக.
3.
பட்டை வரைபடம் என்றால் என்ன?
4.
வரி விளக்கப்படம் என்றால் என்ன?
5.
இனக்குழு தொடர்புடைய தரவுகளைக் கொண்டு தரவு அருவமாக்கத்தை எவ்வாறு வரையறுக்கிறது என்பதை பற்றி சிறுகுறிப்பு வரைக.
6.
பின்வரும் கூற்றுகளில் எது ஆக்கி மற்றும் செலக்டார் என்று கண்டறியவும்.
(i) தகவல்களை தரவு வகையிலிருந்து பெறுவதற்கு பயன்படும் செயற்கூறு
(ii) அருவமாக்கம் தரவு வகையை கட்டமைக்க பயன்படும் செயற்கூறு
7.
உள்ளிடப்பட்ட எண் ஒற்றைப்படை எண்ணா அல்லது இரட்டைப்படை எண்ணா என சோதிக்கும் நெறிமுறையை எழுதுக.
8.
Pure செயற்கூறு - ஒரு எடுத்துக்காட்டை எழுதுக.
9.
அட்டவணைகள் பட்டியல்களை காண்பிப்பதற்கு தேவையான நிரலை எழுதுக
10.
மதிப்பீட்டு சார்புகள் யாவை?
11.
பின்வருவனவற்றிற்கான செயற்குறி யாது?
(i) SELECT
(ii) PROJECT
(iii) ஒட்டுதல்
(iv) வெட்டுதல்
(v) வேறுபாடு
(vi) கார்டிசியன் பெருக்கல்
12.
பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
1) "Python 2.3" isalpha ( )
2) "Python Program". isalnum ( )
3) "Python" .isupper ( )
13.
தரவு மாதிரியின் பல்வேறு வகைகளை எழுதுக.
14.
சரத்தில் உள்ள குறியுருக்களை எவ்வாறு அணுகுவாய்?
15.
a = 50, b = 50 என்றால் கீழேகாணும் கூற்றுகளின் வெளியீடு என்ன?
print ("A = ",a," and b =",b)
print ("The a>b or a==b = ",a>b or a==b)
print ("The a>b and a==b =",a>b and a==b)
print ("The not a a>b = ",not a>b)
16.
விரிவாக்கம் தருக
(i) DDL
(ii) DML
(iii) WAMP
17.
RDBMS தொகுப்பிற்கு எ.கா தருக
18.
கீழ்க்காணும் வெளியீட்டை பெற நிரலில் உள்ள கோடிட்ட இடத்தை நிரப்புக.
வெளியீடு:
Enter Number 1 : 34
Enter Number 2 : 70
The sum = 104
நிரல்
x = __(1)___ (input ("Enter Number 1: "))
y = ___(2)___ __(3)____ ("Enter Number 2 : "))
___(4)___ ("The sum = ", ___(5)____)
19.
உள்ளமை வரையெல்லை என்றால் என்ன?
20.
மாறி நீள செயலுருபுகளில், செயலுருபுகளை அனுப்பும் வழிகளை எழுதுக.
21.
பின்வருவனவற்றிற்கான தொடரியலை எழுதுக.
(i) பொருள்களை உருவாக்குதல்
(ii) இனக்குழு உறுப்புகளை அணுகுதல்
22.
பைத்தானில் இனக்குழுவை எவ்வாறு வரையறுப்பாய்.
23.
while மடக்கின் செயல்பாட்டை விளக்கும் பாய்வு படத்தை வரைக.
24.
பைத்தானில் மடக்கு அமைப்புகளை எழுதுக.
25.
நெறிமுறையின் செயல்திறனை தீர்மானிக்கும் இரண்டு காரணிகள் யாவை?
26.
தரவு கட்டமைப்பின் சில எடுத்துக்காட்டுகளை எழுதுக
27.
கீழே உள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக
28.
தொகுதி நிரலாக்கம் என்பது என்ன?
29.
தேவையற்ற மதிப்புகளை சேகரித்தல் என்றால் என்ன?
30.
Scripting மொழி என்றால் என்ன? அவற்றில் பயன்படுத்தப்படும் மொழிகள் யாவை?
31.
CSV கோப்பை dictionary மூலம் எவ்வாறு படிப்பாய்?
32.
CSV கோப்புகளை flat file எனவும் அழைக்கலாம்? ஏன்?
33.
Matplotlib உள்ள காட்சிப்படுத்துதல் வகைகளை பட்டியலிடுக.
34.
தரவு காட்சிப்படுத்துதல் என்றால் என்ன?
35.
அட்டவணையில் பதிவுகளை விரிவுபடுத்துவதற்கான கட்டளையை எழுதுக. எடுத்துக்காட்டு தருக.
36.
தரவுத்தளத்தைப் பயன்படுத்தும் பயனர்களை குறிப்பிடவும்.
37.
விரிவாக்கம் தருக
(i) SWIG
(ii) MinGW
38.
தொகுப்பான் மற்றும் வரிமொழி மாற்றியை வேறுபடுத்துக.
39.
next( ) செயற்கூறின் பயன்பாடு என்ன?
40.
கோப்பின் கொடாநிரல் முறைமைகளை குறிப்பிடுக.
41.
அட்டவணை கட்டுப்பாட்டிற்கும், நெடுவரிசை கட்டுப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
42.
Unique மற்றும் Primary Key கட்டுப்பாடுகளை வேறுபடுத்துக.
43.
தரவு நிலைத் தன்மை என்றால் என்ன?
44.
தரவுத்தள மேலாண்மை அமைப்பிற்கு சில எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிடுக
45.
46.
பைத்தானில் ஆக்கியை எவ்வாறு உருவாக்குவாய்?
47.
பைத்தானில் set என்றால் என்ன?
48.
பின்வரும் பைத்தான் குறிமுறையில் x ன் மதிப்பு என்ன?
List1 = [2,4,6,[1,3,5]]
x = len(List1)
49.
பைத்தானில் சரங்களை மாற்றம் செய்ய முடியுமா?
50.
சரம் என்றால் என்ன?
51.
தன்னைத்தானே அழைக்கும் செயற்கூறில் அடிப்படை நிபந்தனை என்றால் என்ன?
52.
செயற்கூறின் வகைகளை எழுதுக
53.
கட்டுப்பாட்டு கட்டமைப்பு என்றால் என்ன?
54.
பைத்தானில் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்புகளைப் பட்டியலிடுக.
55.
குறிப்பெயர்கள் என்றால் என்ன? குறிப்பெயர்கள் வகைகள் யாவை?
56.
பைத்தான் நிரலினை சோதிக்க எத்தனை வகை முறைமைகள் உள்ளன?
57.
தேடல் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.
58.
59.
Namespaces சிறுகுறிப்பு வரைக?
60.
மேப்பிங் என்றால் என்ன?
61.
ஆக்கிகள் மற்றும் செலக்டர்கள் வேறுபாடு தருக.
62.
தரவு அருவமாக்கம் வகை என்றால் என்ன?
63.
பின்வருவனவற்றுள் எது சாதாரண செயற்கூறு வரையறை மற்றும் எது தற்சுழற்சி செயற்கூறு வரையறை.
i) let sum x y:
return x + y
ii) let disp:
print 'welcome'
iii) let rec sum num:
if (num!=0) then return num + sum (num-1)
else
return num
64.
இடைமுகத்தையும், செயல்படுத்தலையும் வேறுபடுத்துக.
1.
| max ( ) | ஒரு List-ன் மதிப்புகளில் உச்ச மதிப்பை தரும். | max (List) | MyList = [21,76,98,23] print(max(MyList)) வெளியீடு 98 |
| min ( ) | ஒரு List-ல் உள்ள மதிப்புகளில், மிகக் குறைந்த மதிப்பைத் தரும். | min(List) | MyList = [21,76,98,23] print (min(MyList)) வெளியீடு 21 |
| sum ( ) | ஒரு List-ல் உள்ள மதிப்புகளின், கூட்டுத் தொகையை தரும். | sum (List) | MyList = [21,76,98,23] print (sum(MyList)) வெளியீடு 218 |
2.
Tuple ( ) செயற்கூறின் லிஸ்ட்டிலிருந்து Tuples-ஐ உருவாக்கவும் பயன்படுகிறது. லிஸ்ட்-ல் இருந்து Tuples-ஐ உருவாக்கும் போது, உறுப்புகள் சதுர அடைப்புக்குறிக்குள் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.
Tuples_Name = Tuples ([List elements])
3.
பட்டை வரைவிடம் (அல்லது பட்டை வரைபடம்) என்பது மிகவும் பொதுவான வரைவிடம் வகையாகும். இது எண் மாறிக்கும், வகை மாறிகளுக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்துகிறது. பட்டை விளக்கப்படம் வகைப்படுத்தப்பட்ட தரவுகளை செவ்வக பட்டையாக காட்டும். இப்பட்டைகள் செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ தொகுப்பப்படலாம். இம்முறை கொடுக்கப்பட்ட எண் மதிப்புகளை பல்வேறு வகையுடன் ஒப்பிட்டு பார்க்க உதவும்.
4.
வரி வரைப்படம் அல்லது வரி விளக்கப்படம் என்பது தகவல்களை, "குறிப்பான்கள்" (Marker) என்று அழைக்கப்படும் தரவு புள்ளிகளின் தொடரை நேர் கோட்டின் இணைப்பதன் மூலம் காட்டுகிறது. வரி வரைபடம் தரவுகளின் மாற்றத்தை குறிப்பிட்ட காலத்தில் நிகழக்கூடியதை காட்டும். எனவே, கால வரிசைப்படி இக்கோடுகள் அமைக்கப்படும்.
5.
ஓர் இனக்குழு என்பது தரவுகளை மட்டுமில்லாது செயற்கூற்றினையும் தன்னுடன் கொண்டிருக்கும், இவ்வகை செயற்கூறுகள், இனக்குழுவிற்கு கீழ்ப்படந்தவை, ஏனெனில் இவை இனக்குழுவின் தரவுகளை வைத்து செயல்படுகிறது.
6.
(i) செலக்டர்
(ii) ஆக்கி
7.
(requires: x > = 0)
let rec even x:=
x = 0 || odd (x - 1)
return 'even'
(requires: x > = 0)
let odd x:=
x < > 0 && even (x - 1)
return 'odd'
8.
let i := 0;
if i < strlen (s) then
-- Do something which doesn't affect s
++ i
9.
தரவுத்தளத்தில் உருவாக்கப்பட்ட அட்டவணைகளின் பட்டியல்களை காண்பிப்பதற்கு, பின்வரும் நிரலை பயன்படுத்தலாம்
எடுத்துக்காட்டு:
import sqlite3
con = sqlite3.connect('Academy.db')
cursor = con.cursor( )
cursor.execute("SELECT name FROM sqlite_master WHERE type='table';")
print(cursor.fetchall( ))
10.
இந்த சார்புகள் நெடுவரிசையில் உள்ள மதிப்புகளைக் கொண்டு செயல்பாடுகளைச் செய்து ஒரே ஒரு மதிப்பை விடையாகக் கொடுக்கும்
(i) COUNT ( )
(ii) AVG ( )
(iii) SUM ( )
(iv) MAX ( )
(v) MIN ( )
11.
(i) \(\sigma \)
(ii) \(\Pi \)
(iii) \(\cup \)
(iv) \(\cap \)
(v) \(-\)
(vi) x
12.
1) False
2) False
3) False
13.
தரவு மாதிரியின் பல்வேறு வகைகள்:
(i) படிநிலை தரவுத்தள மாதிரி (Hierarchical Model)
(ii) உறவுநிலை தரவுத்தள மாதிரி (Relational Model)
(iii) வலையமைப்பு தரவுத்தள மாதிரி (Network Model)
(iv) ER தரவுத்தள மாதிரி (Entity Relationship Model)
(v) பொருள்நோக்கு தரவுத்தள மாதிரி (Object Model)
14.
1. சரம் ஒருமுறை வரையறுக்கப்பட்டு விட்டால், பைத்தான் சரத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துருவிற்கு ஒரு சுட்டெண்ணை (Index) ஒதுக்கீடு செய்யும்.
2. சரத்தின் உறுப்புகளை அணுகுவதற்கு, கையாளுவதற்கும் பயன்படும் சுட்டெண் கீழ்ஒட்டு (Subscript) எனவும் அழைக்கப்படுகிறது. கீழ் ஒட்டானது நேர்மறை அல்லது எதிர்மறை முழு எண்ணாக இருக்கலாம்.
15.
The a>b or a == b = True
The a>b and a == b = False
The not a>b = False
16.
(i) DDL - Data Definition Language.
(ii) DML - Data Manipulation Language
(iii) WAMP - Windows, Apple, MySQL, PHP
17.
Oracle, MySQL, MS SQL Server, IBM DB2 மற்றும் மைக்ரோசாப்ட் Access போன்றவை உறவுநிலை தரவுத்தள மேலாண்மை அமைப்பதற்கான RDBMS மென்பொருள் தொகுப்புகளாகும்
18.
(1) int
(2) int
(3) input
(4) print
(5) x + y
19.
ஒரு செயற்கூறின் உடற்பகுதியின் உள்ளே அல்லது உள்ளமை வரையெல்லையில் மாறியை அறிவிப்பது உள்ளமை மாறி எனப்படும்.
20.
மாறி நீள செயலுருபுகளில், செயலுருபுகளை இரண்டு வழிகளில் அனுப்பலாம்.
1) சிறப்புச் சொற்களற்ற மாறி செயலுருபுகள்
2) சிறப்புச் சொல் மாறி செயலுருபுகள்
21.
(i) Object_name = Classname ( )
(ii) Object_name. Class member.
22.
பைத்தானில், இனக்குழுவை வரையறுக்க "class" என்னும் சிறப்புச் சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு இனக்குழுவும் தனித்த பெயருடன் முக்காற்புள்ளி (:)யைக் கொண்டு முடியும்.
தொடரியல்:
class class_name:
statement_1
statement_2
....................
....................
statement_n
23.
24.
பைத்தான் இரண்டு வகையான மடக்கு அமைப்புகளை
கொண்டுள்ளது:
1. while மடக்கு
2. for மடக்கு
25.
(i) நேரம் காரணி
(ii) இடம் காரணி
26.
தரவு கட்டமைப்புக்கு எடுத்துக்காட்டு : அணிகள் கட்டுருக்கள், List, tuples, dictionary
27.
நிரலின் வெளியீடு
7
10
28.
ஒரு கணிப்பொறி நிரலை பல துணை நிரல்களாக பிரிக்கும் செயல்முறையே தொகுதி நிரலாக்கம் எனப்படும்
29.
பைத்தான், நினைவக இடத்தை விடுவிக்க தேவையற்ற பொருட்களை (உள்ளமைக்கப்பட்ட வகைகள் அல்லது இனக்குழு சான்றுருக்கள்) தானமைவாக நீக்குகிறது. அவ்வப்போது பைத்தான், நினைவகப் பகுதிகளை விடுவித்து பயன்பாட்டில் இல்லாதவைகளை மீட்டெடுக்கும் செயல்முறை தேவையற்ற மதிப்புகளை சேகரித்தல் (Garbage collection) என்றழைக்கப்படுகிறது.
30.
ஒரு Scripting மொழி என்பது பிற நிரலாக்க மொழிகளுடன் ஒருங்கிணைப்பதற்கும், தொடர்பு கொள்வதற்கும் வடிவமைக்கப்பட்ட ஒரு நிரலாக்க மொழியாகும். ஜாவாஸ்கிரிப்ட் ஒரு நிரலாக்க மொழியாகும். ஜாவாஸ்கிரிப்ட், VB ஸ்கிரிப்ட், PHP, பெர்ல், பைத்தான், ரூபி, ASP மற்றும் Tcl ஆகியவை மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் Scripting மொழியாகும்.
31.
CSV செயற்கூறிலுள்ள DictReader இனக்குழுவை பயன்படுத்தி CSV கோப்பை படித்தல். இதன் செயல்பாடு reader( ) இனக்குழு செயல்பாட்டை ஒத்திருக்கும், ஆனால் இது ஒரு பொருளை உருவாக்கி அதை Dictionaryயில் இணைக்கும்.
32.
தரவுகளை அட்டவணையாக சேமிக்கும் நிரல்களான மைக்ரோசாஃப்ட் எக்ஸெஸ் அல்லது ஓபன் ஆஃபீஸ் கால்க் போன்றவற்றில் CSV வடிவ கோப்புகளை இறக்கம் (import) மற்றும் ஏற்றம் (export) செய்து கொள்ள முடியும்.
33.
Matplotlib ல் பல்வேறு வகையான காட்சிப்படுத்தல் உள்ளன.
அவை:
(i) கோட்டு வரைவு (Line plot)
(ii) ஸ்கேட்டர் வரைவு (Scatter plot)
(iii) ஹிஸ்டோகிராம் (Histogram)
(iv) பெட்டி வரைவு (Box plot)
(v) பட்டை விளக்கப்படம் (Bar chart)
(vi) வட்ட விளக்கப்படம் (Pie chart)
34.
தரவு காட்சிப்படுத்துதல் என்பது தரவு மற்றும் தகவல்களை வரைகலையாக உருவாக்குகின்றது. தரவு காட்சிப்படுத்தலின் முக்கிய நோக்கம் பயனாளர்களுக்கு தகவல்களை படக்காட்சி முறையில் காண்பிப்பது. இதற்கு, தரவை காட்சிப்படுத்துதல், புள்ளியியல் வரைகலை முறையைப் பயன்படுத்துகிறது. இம்முறையில் எண்வகை தரவு, புள்ளி, கோடு அல்லது பட்டையைக் கொண்டு, குறியாக்கப்பட்டு, தகவல்களை காட்சிப்படுத்துகிறது.
35.
அட்டவணையுடன் கூடிய ஒரு தரவுத்தளம் எந்த தரவுகளும் இல்லாமல் உள்ளது. "INSERT" கட்டளையை SQLiteல் அனுப்புவதன் மூலம் அட்டவணையில் தரவுகளை உள்ளிடலாம் execute( ) செயற்கூறு கொடுக்கப்பட்ட SQL கட்டளையை செயல்படுத்தும்.
எடுத்துக்காட்டு:
sql_command = ""INSERT INTO Student (Rollno, sname, Grade, gender, Average, birth_date)
VALUES(NULL, "Akshay", "B", "M" "87.8", "2001-12-12");""
cursor.execute(sql_command)
36.
தரவுத்தளத்தின் பயனர்களாக மனிதர்கள், பிற நிரல்கள் அல்லது பயன்பாடுகள் இருக்கலாம்.
37.
(i) SWIG - Simplified Wrapper Interface Generator
(ii) MinGW - Minimalist GNU for Windows (விண்டோஸ்-க்கான குறைந்த பட்ச GNU)
38.
| தொகுப்பான் | வரிமொழி மாற்றி | ||
|---|---|---|---|
| 1 | முழுநிரலையும் ஸ்கேன் செய்து அதை ஒட்டு மொத்தமாக இயந்திர குறியீடாக மொழிபெயர்க்கிறது | நிரல் ஒரு நேரத்தில் ஒரு அறிக்கையை மொழிபெயர்க்கிறது | |
| 2. | மூலக்குறியீட்டைப் பகுப்பாய்வு செய்ய அதிக நேரம் எடுக்கும். | மூலக்குறியீட்டைப் பகுப்பாய்வு செய்ய குறைந்த நேரம் எடுக்கும். | |
| 3. | சி, சி++ போன்ற புரோகிராமிங் மொழி தொகுப்பான்களைப் பயன்படுகிறது. | பைத்தான், ரூபி போன்ற புரோகிராமிங் மொழி பெயர்ப்பாளர்களைப் பயன்படுத்துகிறது. | |
39.
next() செயற்கூறு சுழற்சியில் உள்ள அடுத்த உறுப்பினை திருப்பி அனுப்பும். மேலும் CSV கோப்பில் ஒரு வரிசையைத் தவிர்க்கவும் பயன்படும்.
40.
எழுதுதல் மற்றும் படித்தல் செயல்பாடுகளில் CSV கோப்பின் கொடாநிலை உரை முறையாகும்.
41.
| நெடுவரிசை கட்டுப்பாடு | அட்டவணை கட்டுப்பாடு |
| தனிப்பட்ட நெடுவரிசைக்கு மட்டுமே நெடுவரிசை கட்டுப்பாட்டை பயன்படுத்த முடியும். | அட்டவணை கட்டுப்பாடு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நெடுவரிசைகளுக்கு பயன்படுத்த முடியும். |
42.
| Unique | Primary Key | |
| (i) | இந்த கட்டுப்பாடு குறிப்பிட்ட நெடுவரிசைகளில் எந்த இரு வரிசைகளும் ஒரே மதிப்பை கொண்டிருக்காது என்பதை உறுதி செய்கிறது. | தரவுத்தளத்திலுள்ள ஒரு பதிவை தனித்தன்மையோடு அடையாளம் காட்ட ஒரு புலத்தினை Primary Key என்ற கட்டுப்பாட்டுடன் அறிவிக்க வேண்டும். |
| (ii) | UNIQUE கட்டுப்பாட்டை Not NULL என்று அறிவிக்கப்பட்ட புலங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். | Primary Key கட்டுப்பாடு வெற்று (NULL) மதிப்புகளை அனுமதிக்காது. |
43.
தரவு நிலைத்தன்மை என்பது தரவுத்தளத்தில் அனைத்து இடங்களிலும் ஒத்த மதிப்புடைய தரவுகளாகும்.
44.
(i) DBase
(ii) Foxpro
45.
46.
ஓர் இனக்குழுவின் சான்றுரு பயன்பாட்டிற்கு வரும்பொழுது ஆக்கி என்னும் சிறப்புச் செயற்கூறு தானாகவே இயக்கப்படுகிறது. பைத்தானில், “init” என்னும் சிறப்பு செயற்கூறு ஆக்கியாக செயல்படுகிறது. இது இரட்டை அடிக்கீறில் (UnderScore) தொடங்கி இரட்டை அடிக்கீறலுடன் முடிய வேண்டும்.
___ init ___ வழிமுறையின் (ஆக்கி) பொதுவடிவம்
def__init__(self, [args .........]):
< statements >
47.
(i) பைத்தானில், set என்பது தரவின தொகுப்பின் மற்றொரு வகையாகும். Set என்பது மாறக்கூடிய மற்றும் நகல்கள் இல்லாத வரிசைப்படுத்தப்படாத உறுப்புகளின் தொகுப்பாகும்.
(ii) அதாவது , Set -ல் உள்ள உறுப்புகள் மீண்டும் இடம்பெற முடியாது. இந்த சிறப்பியல்பு உறுப்பு சோதனையை சேர்க்கவும் மற்றும் நகல் உறுப்புகளை நீக்கவும் பயன்படுகிறது.
48.
x = 4
49.
பைத்தானில் சரங்களை மாற்றியமைக்க முடியாது. அதாவது சரத்தை ஒருமுறை வரையறுத்த பின்பு அதை திருத்துதல் அல்லது நீக்குதல் போன்ற செயல்பாடுகள் அனுமதிக்கப்பட மாட்டாது. எனினும், முந்தைய சரம் முழுவதும் புதிய சரத்தால் மாற்றப்படலாம்.
50.
குறியுருக்களின் அணியைக் கையாளுவதற்கான ஒரு தரவு இனம் சரம் (string) ஆகும். சரங்கள் என்பன, ஒற்றை, இரட்டை, அல்லது மூன்று மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்படும், எழுத்து, எண்கள் அல்லது சிறப்பு குறியீடுகளின் சேர்க்கையை கொண்டிருக்கும் ஒருங்கமைவு (Unicode) குறியுருக்களின் வரிசை ஆகும்.
51.
(i) தற்சுழற்சி செயற்கூறு தன்னைத்தானே அழைக்கும். ஒரு நிபந்தனையில் நிறுத்தப்படாவிட்டால், ஒரு செயல்முறை காலவரையின்றி செயல்படும்.
(ii) இந்த செயற்பாடு முடிவிலா சுழற்சி எனப்படும். தற்சுழற்சி செயற்கூறில் கொடுக்கப்படும் நிபந்தனை அடிப்படை நிபந்தனை எனப்படும்.
(iii) ஒவ்வொரு தற்சுழற்சி செயற்கூற்றிற்கும் அடிப்படை நிபந்தனை கொடுக்கப்பட வேண்டும் இல்லையென்றால் மடக்கு முடிவில்லாமல் இயங்கும்.
52.
1) பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள்
2) உள்ளிணைந்த செயற்கூறுகள்
3) லாம்டா செயற்கூறுகள்
4) தற்சுழற்சி செயற்கூறுகள்
53.
கட்டுப்பாட்டு நிரலின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு தாவுவதற்கு காரணமான நிரல் கூற்றுகள் கட்டுப்பாட்டு கட்டமைப்பு அல்லது கட்டுப்பாட்டு கூற்றுகள் எனப்படும்.
54.
(i) வரிசை முறை - Sequential
(ii) மாற்று அல்லது கிளைப் பிரிப்பு - Alternative or Branching.
(iii) சுழற்சி அல்லது மடக்கு - Iterative or Looping
55.
மாறி, செயற்கூறு, இனக்குழு, தொகுதி அல்லது பொருள்களை அடையாளம் காணப்பயன்படும் பெயர்கள் குறிப்பெயர் என்று அழைக்கப்படுகிறது.
வகைகள் :
(i) int மாறிலிகள்
(ii) முழு எண் அல்லது வரிசையெண் சார்ந்த மாறிலிக் குறிப்பெயர்கள்
(iii) char மாறிலிகள்
(iv) num 1 குறிப்பெயர்கள்
56.
பைத்தான் நிரலினை சோதிக்க ஊடாடும் முறைமை, ஸ்கிரிப்ட் முறைமை என்று இரு வகை முறைமைகள் உள்ளன
57.
தரவு கட்டமைப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட தேவைப்பட்ட தரவை தேடிக் கண்டுபிடித்து எடுக்கும் செயற்பாட்டிற்குத் தேடல் என்று பெயர். அதன் வகைகள்
(i) வரிசைமுறை தேடல் அல்லது தொடர் தேடல்
(ii) இரும தேடல்
58.
59.
namespaces என்பது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்வதற்கான கொள்கலனாகும்.
60.
மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையே மேப்பிங் (Mapping) எனப்படும். : = (சமக்குறி) என்ற குறியீடு செயல்குறி நிரலாக்க மொழியில் மாறி மற்றும் பொருளை பிணைக்கிறது.
61.
| ஆக்கிகள் | செலக்டர்கள் | |
| (i) | ஆக்கிசெயற்கூறுகள் அருவமாக்கம் தரவு வகையை கட்டமைக்க பயன்படுகிறது. | செலக்டர் செயற்கூறுகள் தகவல்களை தரவு வகையிலிருந்து பெறுவதற்கு பயன்படுகிறது. |
| (ii) | பல்வேறு தகவல் துணுக்குகளைக் கொண்டு பொருள்கள் உருவாக்கும். | ஒவ்வொரு சிறு தகவல்களை பொருளிலிருந்து பெற உதவுகிறது. |
62.
(i) அருவமாக்க தரவு வகை (Abstract Data type (ADT)) என்பது பொருள்களுக்கான வகை (அல்லது இனக்குழு) ஆகும்.
(ii) ADT-யின் வரையறுப்பு என்ன வகையான செயல்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றது, அவை எப்படி செயல்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுவதில்லை.
(iii) இவை தரவுகள் நினைவகத்தில் எவ்வாறு சேமிக்கப்படுகின்றது என்றோ அல்லது எந்த நெறிமுறைகள் செய்யப்படவேண்டும் என்ற வழிமுறையோ குறிப்பிடப்படுவதில்லை.
(iv) சுயமாக இவை செயல்படுத்தப்படுவதில்லை எனவே, இதை அருவமாக்கம் என்று அழைக்கிறோம்.
63.
(i) தற்சுழற்சி செயற்கூறு
(ii) சாதாரண செயற்கூறு
(iii) தற்சுழற்சி செயற்கூறு
64.
| இடைமுகம் | செயல்படுத்துதல் |
| ஒரு பொருள் செய்யக்கூடிய நடவடிக்கையை வரையறுக்கிறது, ஆனால் அவற்றை உண்மையில் செய்யக் கூடியது இல்லை. | இடைமுகத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கட்டளைகளை நிறைவேற்றுகிறது. |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards