12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 09/03/2020
12ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Economics All Chapter Three Marks Important Questions 2020 )
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
நீடித்த நிலையான மேம்பாடு என்றால் என்ன?
2.
நில மாசுவின் விளைவுகளைக் கூறுக.
3.
ரொக்க இருப்பு வீதத்தை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?
4.
தொகு தேவை என்றால் என்ன?
5.
இந்தியாவில் வெளிநாட்டு மூலதனம் தடைசெய்யப்பட்ட துறைகள் யாவை?
6.
வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் தீமைகள் யாவை?
7.
நாட்டு வருமானம் கணக்கீட்டில் வருமான முறையின் கணக்கீடுதலின் நிலைகள் யாவை?
8.
NEFT -க்கும் RTGS-க்கும் உள்ள வேறுபாடு தருக?
9.
புள்ளிவிவர சிக்கல் எப்போது ஏற்படும்?
10.
வட்டார ஊரக வங்கி பற்றி எழுது?
11.
ஆசியானின் பணிகள் யாவை?
12.
பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளின் வகைகள் யாவை?
13.
வருவாயின் வட்ட ஓட்டம் என்றால் என்ன?
14.
கலப்பு பொருளாதாரத்தின் சிறப்பு பண்புகள் யாவை?
15.
பண அளவு கோட்பாட்டை வரைந்த இர்விங் ஃபிஷரை குறிப்பு எழுதுக?
16.
பண அளிப்பின் 4 வகைகளை விவரி?
17.
பெருக்கியின் பயன்கள் யாவை?
18.
முதலீட்டுச் சார்பின் காரணிகள் யாவை?
19.
பின்வரும் விவரங்களுக்கு திட்டவிலக்கத்தினை காண்க: 25, 15, 23, 42, 27, 25, 23, 25, 20.
20.
பொருளாதார அளவையியல் ஆய்வு முறையின் கூறுகள் யாவை?
21.
முதலாளித்துவத்தின் தோழமை பொருளாதார அமைப்பு என்றால் என்ன?
22.
பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் பொருளாதாரம் சாராத காரணிகளாக தாமஸ் பிக்கெட்டி கூறுவனவற்றை விளக்குக
(அல்லது)
குறிப்பு வரைக:
1) சூதாட்ட முதலாளித்துவம்
2) பரம்பரை சொத்துரிமை முதலாளித்துவம்
23.
பொருளாதார மாதிரியிலிருந்து பொருளாதார அளவையியல் மாதிரியினை வேறுபடுத்துக.
24.
ஒட்டுறவுப் பகுப்பாய்வின் பயன்களை கூறுக.
25.
செயல்பாட்டுத் திட்டமிடலுக்கும் அமைப்புமுறைத் திட்டமிடலுக்குமிடையேயான வேறுபாடுகளை எழுதுக.
26.
பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் பொருளாதாரம் சாராத காரணிகள் யாவை?
27.
இ-கழிவுகள் என்பதன் பொருள் தருக.
28.
நீர்மாசுக்கான காரணங்கள் யாவை?
29.
தனியார் நிதிக்கும் பொது நிதிக்கும் உள்ள மூன்று ஒற்றுமைகளை எழுதுக.
30.
வரி விதிப்பு விதிகளை விவரிக்க.
31.
பொருளாதார ஒருங்கிணைப்பின் பல்வேறு வடிவங்களைக் குறிப்பிடுக.
32.
சார்க்கின் பணிகளைச் சுருக்கமாகக் கூறுக.
33.
பன்னாட்டு வாணிகத் தொன்மைக் கோட்பாட்டிற்கும் புதிய கோட்பாட்டிற்குமிடையிலான வேறுபாடுகளை எழுது.
34.
பன்னாட்டுப் பொருளியலின் உள்ளடக்கத்தைப் பட்டியலிடுக.
35.
பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்களைக் குறிப்பிடுக.
36.
கடன் கட்டுப்பாட்டு முறைகளைக் கூறுக.
37.
மீள் பணவீக்கம் பற்றி விளக்குக?
38.
பண அளிப்பு என்றால் என்ன?
39.
40.
தன்னிச்சையான முதலீடு, தூண்டப்படுகிற முதலீடு ஆகியவற்றை வேறுபடுத்துக.
41.
தொன்மையியத்தையும் கீன்சியத்தையும் ஒப்பிடுக.(ஏதேனும் ஐந்து)
42.
43.
நாட்டு வருமானம் கணக்கிடுதலில் " இருமுறை கணக்கீட்டுச் சிக்கலுக்கு என்ன தீர்வு?
44.
45.
முதலாளித்துவத்தையும் சமதருமத்தையும் வேறுபடுத்துக.
46.
கலப்புப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்புகளை எடுத்தெழுதுக
1.
வருங்காலத் தலைமுறையினர் தங்கள் தேவைகளை நிறைவேற்ற எந்த ஒரு தடையும் இல்லாத நிலையில் தற்பொழுது உள்ள மக்களின் தேவையை நிறைவேற்றுதலே நீடித்த நிலையான மேம்பாடு எனப்படும்.
2.
1. மண் மாசுபடுகிறது.
2. உடல் ஆரோக்கிய கேடு.
3. காற்று மாசுபாடு.
4. விலங்குகள் மீதான பாதிப்பு.
3.
1. பேர நோக்கம்
2. முன்னெச்சரிக்கை நோக்கம்
3. ஊக நோக்கம்
4.
ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் மேல் குடும்பங்களும், நிறுவனங்களும், அரசு மற்றும் வெளிநாட்டவரும் செய்கின்ற மொத்த செலவு தொகையே தொகு தேவை எனப்படும்.
5.
1. போர்க் கருவிகள் மற்றும் ஆயுத உற்பத்தி
2. அணு ஆற்றல்
3. தொடர் வண்டி போக்குவரத்து
4. நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி
5. இரும்புத்தாது, தங்கம், வைரம் போன்ற தாது சுரங்கத்துறை
6.
1. அதிக லாப வாய்ப்புள்ள துறைகளில் முதலீடு அதிகம்
2. நாட்டுக்கு பொருத்தமற்ற தொழில்நுட்பத்தை புகுத்துகிறது
3. முதலீடு திரும்பப் பெறும்போது அயல்நாட்டு செலுத்து சமமின்மை உண்டாகும்.
4. அரசியல் தலையீடு
5. அறமற்ற வணிகம்
6. சிறு மற்றும் குறு தொழில்கள் நசிவு
7. முற்றுரிமை சூழல்
8. வாணிக வீதம் பாதகமாதல்
7.
1. மொத்த நிறுவனங்களுக்கு பல்வேறு தொழில் குழுவாக பிரிக்கப்படுகின்றன.
2. உழைப்பாளர் வருமானம் - கூலி சம்பளம் சமூக பாதுகாப்புக்கு முதலாளியின் பங்கு உற்பத்தித் திறன் ஊக்க ஊதியம் போன்றவை.
3. மூலதன வருமானம் - லாபம் ஈட்டி லாப ஈவு மற்றும் ராயல்டி போன்றவை.
4. கலப்பு வருமானம் - விவசாயம் மற்றும் பண்ணை சிறு தொழில் செய்வோர் மற்றும் பிற வேலைகளிலிருந்து கிடைக்கும் வருமானம்.
5. உள்நாட்டு காரணி வருவாய்களுடன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் நிகர வருவாயை கூட்டுவதன் மூலம் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது.
Y = W+r+i+II+(R-P)
W = கூலி
r = வாடகை
i = வட்டி
II = இலாபம்
R = ஏற்றுமதி
P = இறக்குமதி
8.
| NEFT | RTGS | |
| 1 | தேசிய மின்னணு வழி பண பரிவர்த்தனை | நிகழ்நேர பெருந்திரள் தீர்வுகள் |
| 2 | தொகுப்பாக பரிமாற்றம் செய்யப்படுகிறது எனவே தாமதமாகும். | நிகழ் நேரத்தில் பரிமாற்றம் எனவே, விரைவாகச் செயல்படும் |
| 3 | நேரம் காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை (சனிக்கிழமை மதியம் 12.30 வரை மட்டுமே) | நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை (மாலை 1.30 வரை சனிக்கிழமைகளில்) |
| 4 | குறைந்தபட்ச அளவு கிடையாது | குறைந்தபட்ச அனுப்பும் தொகை 2 லட்சம் |
9.
புள்ளிவிவரம் என்பது பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்காட்டும் கண்ணாடி போன்றது. இதனை சேகரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. நாட்டின் வளர்ச்சி நிலையை அறிய புள்ளிவிவரம் அவசியமான ஒன்று.
பிரச்சினைகள்:
1. நம்பகத்தன்மையின்மை
2. சேகரிப்பவரின் திறமை குறைவு
3. அர்ப்பணிப்பு இன்மை
போன்றவை புள்ளிவிவரம் சேகரிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் ஆகும்.
10.
1. இது 1975-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கம் கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகளை தொடர் கடன் சூழலில் இருந்து மீட்பதாகும். சிறு, குறு விவசாயிகள் நிலமற்ற விவசாயிகள், கைவினைஞர்கள் மற்றும் சிறு தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் ஊரக பகுதியில் விவசாயம், வர்த்தகம் மற்றும் இதர உற்பத்தி நடவடிக்கைகளை மேம்படுத்துவதாகும்.
2. மேலும், இந்த வங்கிக்கு, வணிக வங்கிகள் கடன் தொகை, மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சியும் வழங்குகிறது.
3. இந்திய ரிசர்வ் வங்கியும், வட்டார ஊரக வங்கிக்கு நபார்டு வங்கி மூலம் மறுகடன்களையும் வழங்கி அதன் வளர்ச்சிக்கு உதவுகிறது.
11.
1. உறுப்பு நாட்டு விற்பனையாளர் மற்ற உறுப்பு நாடுகளில் விற்க தடையற்ற அனுமதி.
2. உறுப்பு நாடுகளின் வணிக நிறுவனங்களின் போட்டித் திறனை மேம்படுத்துவது.
3. ஐரோப்பிய ஒன்றியம் போன்று ஒரே சந்தையாக செயல்படுத்தல்.
4. உறுப்பு நாடுகளுக்கு சந்தை மற்றும் முதலீட்டு வாய்ப்புகளைப் பெற்றுள்ளது.
5. தொழில் மற்றும் வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு.
12.
1. நிதி சார்ந்த பணிகள் :
உறுப்பு நாடுகளின் அயல் நாட்டு செலுத்த நிலை பற்றாக்குறையை சரிக்கட்ட வழங்கப்படும் நிதி உதவிப் பணிகள்.
2. ஒழுங்காற்றுப் பணிகள் :
உறுப்பு நாடுகள் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிகள்
3. ஆலோசனைப் பணிகள் :
பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குதல்.
13.
ஒரு பொருளாதார அமைப்பின் வருவாயின் ஓட்ட மாதிரியானது அந்த பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கிடையே உள்ள தொடர்பினை விளக்குவதாகும். இது பொருளாதார முகவர்களாகிய நிறுவனம், குடியிருப்பு, அரசாங்கம், நாடுகளிடையே வருவாய், பொருட்கள் மற்றும் பணிகள், மேலும் உற்பத்தி காரணிகளின் ஓட்டத்தை (காண்பிப்பதாகும்) விளக்குவதாகும்
1. இரண்டு துறை மாதிரி:
1. இல்லத்துறை
2. நிறுவனத்துறை
இது ஒரு எளிய பொருளாதார அமைப்பு
2. மூன்று துறை மாதிரி:
1. இல்லத்துறை
2. நிறுவனத்துறை
3. அரசுத்துறை
இது ஒரு மூடிய பொருளாதார அமைப்பு
3. நான்கு துறை மாதிரி
1. இல்லத்துறை
2. நிறுவனத்துறை
3. அரசுத்துறை
4. வெளியுறவுத்துறை
இது ஒரு திறந்தவெளி பொருளாதார அமைப்பு
14.
1. சொத்து, உற்பத்தி சாதனங்களின் உரிமை, தனியார் மற்றும் பொதுத்துறைக்கு சொந்தமாக இருப்பதால் தனியார் துறையும், பொதுத்துறையும் வளங்களை பயன்படுத்த உரிமை பெற்றிருக்கும்.
2. தனியார் துறை, பொதுத்துறை இணைந்து செயல்படுவதால் தனியார் துறை இலாபத்திற்கும், பொதுத்துறை சமூக நலனுக்கும் உற்பத்தி செய்யும்
3. பொருளாதார திட்டமிடல் தேசிய திட்டமாக இருப்பதால் தனியார் துறையும், பொதுத்துறையும் மதித்து பின்பற்றும்
4. பொருளாதார அடிப்படை பிரச்சனைகளை விலை இயக்க முறை, ஆற்றும் அரசின் தலையீட்டின் மூலம் தீர்க்கப்படும்.
5. வளங்களின் உரிமை தனியாருக்கு சுதந்திரமாக இருந்தாலும், அனைத்து பொருளாதார நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் அரசிடமே காணப்படும்
15.
பண அளவுக் கோட்பாடு, பணத்தின் மதிப்பிற்கும், பணத்தின் அளவிற்கும் இடையேயான தொடர்பினை எடுத்துரைப்பதாகும். இது ஒரு பழமையான கோட்பாடு. 1588-ம் ஆண்டு டாவன்ஷட்டி என்ற இத்தாலிய பொருளியலறிஞரால் முன்மொழியப்பட்டது. ஆனால், நவீன வடிவிலான இக்கோட்பாட்டினை உருவாக்கிய புகழ் "பணத்தின் வாங்கும் சக்தி" என்ற நூலை எழுதிய இர்விங் ஃபிஷரையே சாரும். இவரது கோட்பாடு பரிவர்த்தனைச் சமன்பாடு ஆகும்.
16.
இந்திய ரிசர்வ் வங்கி பண அளிப்பில் M1 M2 M3 மற்றும் M4 என 4 வகையிலான அளவீடுகளை செய்கின்றது.
M1 = காகிதப்பணம், நாணயங்கள் மற்றும் கேட்பு வைப்புகள்
M2 = M1 + அஞ்சலக சேமிப்பு வங்கியின் சேமிப்பு வைப்புகள்
M3 = M2 + அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளிலுள்ள கால வைப்புகள்.
M4 = M3 + அஞ்சலகத்திலுள்ள அனைத்து வைப்புகள். இதில் M1 மற்றும் M2 'குறுகிய பணம்' என்றழைக்கப்படுகிறது.
17.
1. வருமானம் மற்றும் வேலைவாய்ப்புக் கோட்பாட்டில் முதலீட்டின் முக்கியத்துவத்தை பெருக்கி சுட்டிக் காட்டுகிறது.
2. வாணிப சுழற்சியின் பல்வேறு நிலைகளுக்கான காரணங்களை விளக்குகின்றது.
3. சேமிப்பு மற்றும் முதலீடு இவற்றிற்கிடையே சமநிலை ஏற்பட உதவுகிறது.
4. அரசாங்க கொள்கைகளை வழிவகுக்க உதவிபுரிகிறது.
5. வேலையில்லா நிலையை போக்கவும், முழு வேலை வாய்ப்பு நிலையை அடையவும் உதவுகின்றது.
18.
1. வட்டி விகிதம்
2. நிலையற்ற தன்மை
3. அரசியல் சூழல்
4. மக்கள் தொகை வளர்ச்சி
5. மூலதனப் பொருட்களின் இருப்பு
6. புதிய பொருட்களின் தேவை
7. முதலீட்டாளர்களின் வருமான அளவு
8. கண்டுபிடிப்புகளும், புதிதாக்கலும்
9. நுகர்வுத் தேவை
10. அரசுக் கொள்கை
19.
உண்மையான சராசரியிலிருந்து திட்டவிலக்கத்தினைக் காணும் முறை
| ப.எண் | மதிப்பு (X) | X-\(\bar { X }\) | \({ (X-\bar { X } ) }^{ 2 }\) |
| 1 | 25 | 25-25=0 | 0 |
| 2 | 15 | 15-25=10 | 100 |
| 3 | 23 | 23-25=-2 | 4 |
| 4 | 42 | 42-25=17 | 289 |
| 5 | 27 | 27-25=2 | 4 |
| 6 | 25 | 25-25=0 | 0 |
| 7 | 23 | 23-25=-2 | 4 |
| 8 | 25 | 25-25=0 | 0 |
| 9 | 20 | 20-25=-5 | 25 |
| N=9 | 225 | 0 | 426 |
\(\begin{aligned}
& \overline{\mathrm{X}}=\frac{225}{9}=25
\end{aligned}\)
\(\begin{aligned}
\sigma=\sqrt{\left(\frac{\sum(\mathrm{x}-\overline{\mathrm{x}})^2}{n}\right)}=\sqrt{\frac{426}{9}}=\sqrt{47.33}=\mathbf{6 . 8 8}
\end{aligned}\)
20.
1. பொருளியல் கோட்பாடுகள்
2. பொருளியல் கோட்பாட்டுக்கான கணித மாதிரி
3. பொருளாதார அளவையில் மாதிரி
4. புள்ளி விவரங்கள்
5. மாதிரியினை நிறுவுதல்
6. எடுகோள் சோதனை
7. முன் கணித்தல் மற்றும் மதிப்பிடுதல்
8. மாதிரியை நெறிப்படுத்துதலுக்கும், கொள்கை வகுப்பிற்கு பயன்படுத்துதல்
21.
(i) பொருளாதார முன்னேற்றம் துரிதமாக நடைபெற மக்களின் பங்கெடுப்பு மிகவும் அவசியமாகும்
(ii) குறைபாடுள்ள சமூக அமைப்பு முறையில் ஒரு சில பிரிவினர் மட்டும் முன்னேற்றத்தின் பலன்களை கூடுதலாக பெறுவதை அனுமதித்தால் பெரும்பான்மையான மக்கள் பொருளாதார முன்னேற்ற முன்னேற்ற செயல்பாடுகளில் கலந்து கொள்ள மாட்டார்கள்
(iii) முன்னேற்றத்தின் பலன் ஒரு சிலர் கொண்டு செல்வதை முதலாளித்துவத்தின் தோழமை பொருளாதார அமைப்பு என்கிறார்
22.
1) சூதாட்ட முதலாளித்துவம்
மக்கள் தங்கள் வருமானம் மற்றும் நேரத்தின் பெரும்பகுதியை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில், மது அருந்துவதில், சூதாடுவதில் செலவழித்தால் உற்பத்தி நடவடிக்கை பாதிக்கப்பட்டு பொருளாதார முன்னேற்றம் தடைபடும் என தாமஸ் பிக்கெட்டி எடுத்துரைக்கிறார்
2) பரம்பரை சொத்துரிமை முதலாளித்துவம்:
நிலம் உள்ளிட்ட சொத்து பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு பரம்பரையாக வந்து சேர்ந்தால் குழந்தைகள் கடின உழைப்பை விரும்பமாட்டர்கள். இது உற்பத்தித்திறனை குறைத்துவிடும் என தாமஸ் பிக்கெட்டி கூறுகிறார்
23.
| பொருளாதார மாதிரி | பொருளாதார அளவையியல் மாதிரி | |
| 1. | கணித பொருளியலில் மாதிரிகள் பொருளாதார கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. | பொருளாதார அளவையியல் மாதிரிகள் கோட்பாடுகளின் நம்பகத் தன்மையை அறிய புள்ளி விவரங்களின் அடிப்படையில் சோதனை செய்யப்படுகிறது. |
| 2. | புள்ளியியலில் இருக்கும் ஒட்டுறவு மாதிரியில் பிழைக் கருத்து இல்லை. | பொருளாதார அளவையியல் மாதிரியில் பிழைக்கருத்து உள்ளடக்கி இருக்கிறது. |
24.
1. இரு மாறிகளுக்கிடையே உள்ள உறவை விளக்க ஒட்டுறவுப் பகுப்பாய்வு பயன்படுகிறது.
2. இரு மாறிகளுக்கிடையே காரண விளைவை ஆராய்ந்து அவைகளுக்கு இடையே சார்புத் தொடர்பை ஏற்படுத்த பயன்படுகிறது.
3. தனித்த மாறியின் குறிப்பிட்ட மதிப்பிற்கு சார்பு மாறியின் மதிப்பு எவ்வளவு என்பதை ஊகம் செய்ய உதவுகிறது.
4. நேர்கோடு அல்லாத தொடர்புகளையும் ஆய்வு செய்ய பயன்படுகிறது.
25.
| செயல்பாட்டுத் திட்டம் | அமைப்பு முறைத்திட்டம் | |
| 1. | ஒரு நாடு பெற்றுள்ள பொருளாதார சமூக அமைப்பு முறையை மாற்றாமல் பொருளாதாரச் சீர்கேடுகளை நீக்குவதற்கு ஏற்படுத்தப்பட்ட திட்டம். | பொருளாதார அமைப்பு முறையில் பொருத்தமான மாற்றங்களைச் செய்து இலக்குகளை அடையும் திட்டமிடலே கட்டமைப்புத் திட்டமிடலாகும். |
| 2. | வழிகாட்டுதல்கள் மட்டுமே செய்யும் திட்டமிடல் பணிகள் திட்டமிடலாகும். | இவ்வகையான திட்டமிடல் பெரும்பாலும் பின்தங்கிய நாடுகளில் இது காணப்படுகிறது. |
26.
பொருளாதாரம் சாராத காரணிகள்:
1. மனித வளம்
2. தொழில்நுட்ப அறிவு
3. அரசியல் சுதந்திரம்
4. சமூக அமைப்பு
5. ஊழலற்ற நிர்வாகம்
6. முன்னேற்றம் அடைவதற்கான விருப்பம்
7. நீதி போதனை, அறநெறியும் சமூக விழுமியங்களும்
சூதாட்ட முதலாளித்துவம்
8. பரம்பரைச் சொத்துரிமை முதலாளித்துவம்
27.
செய்தி, தொழில்நுட்ப வளர்ச்சியில் E-கழிவுகள் என்று பொதுவாக அழைக்கப்படும் மின்னணுக் கழிவுகள் ஏற்படுகின்றன.
இவை குளிர்சாதனப் பெட்டிகள், காற்றுச் சீரமைப்பிகள், (Air conditioners), கைபேசிகள், கணினிகள் முதலான பெருமளவில் வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தும் மின்னணுச் சாதனங்களை உள்ளடக்கியவையாகும்.
தொலைக்காட்சி, கணினிகள், கேட்கும் கருவிகள், தொலைபேசி, VCR, DVD, தொலைநகல், நகலெடுக்கும் இயந்திரங்கள், கம்பியில்லா கருவிகள் முதலான வீட்டு பயன்பாட்டு பொருட்களை கழிக்கும் போதோ அல்லது மறுசுழற்சி செய்யும் போதோ E-கழிவுகள் தோன்றும்.
28.
கழிவு நீரும் தேவையற்ற நீரும் வெளியேற்றப்படுதல்:
பல இடங்களில் இருந்து வருகின்ற சாக்கடைத் தண்ணீர், கழிவு நீர் குப்பைகள், வேளாண்மைக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், நீர் நிலைகளில் கொட்டப்படுகின்றன.
இத்தகைய கழிவுகளில் உள்ள நச்சுப் பண்டங்கள் தண்ணீரை மாசுபடுத்தி நச்சுத்தன்மை உள்ளதாக மாற்றுகின்றன.
திடக் கழிவுகள் குவித்தல் : திடப்பொருள் கழிவுகளை நீர் நிலையில் கொட்டுதல், நீர் நிலையுடன் கலந்துவிடுமாறு விட்டுவிடுதல்.
எண்ணெய் சிந்துதல் : கப்பல்களில் குறிப்பாக எண்ணெய்க் கப்பல்களின் எண்ணெய் கடல்நீரை மாசுபடுத்துகின்றது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
அமில மழை : காற்று மாசுவால் அமில மழை ஏற்பட்டு நீர் மாசு ஏற்படுத்துகின்றது. காற்று மாசுவில் உள்ள அமிலத் துகள்கள் தண்ணீர் ஆவியுடன் கலந்து அமில மழையை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
புவி வெப்பமடைதல் : புவி வெப்பமடைதல் காரணமாக நீரின் வெப்பநிலை அதிகரித்து நீர்வாழ் உயிரினங்களைப் பாதிக்கின்றது.
29.
தனியார் நிதி மற்றும் பொது நிதியின் ஒற்றுமைகள்:
பகுத்தறியும் தன்மை: பொது நிதியும் தனி நிதியும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டவை. இரண்டும் குறைந்த செலவில் அதிக நலத்தைப் பெறுவதையே முக்கியமான நோக்கமாகக் கொண்டுள்ளன.
கடனுக்கான வரையறை: இரண்டுக்குமான கடன்கள் வரையறை கொண்டுள்ளது. அரசின் பற்றாக்குறை வரவு, செலவு, திட்டத்திற்கும் எல்லை இருக்கிறது.
வளங்களின் பயன்பாடு: தனியார் துறையும் பொது துறையும் வரையறுக்கப்பட்ட வளங்களையே கொண்டுள்ளன. இவ்விரண்டும் உத்தம அளவில் வளங்களைப் பயன்படுத்த முனைகின்றன.
30.
ஆடம் ஸ்மித்தின் கருத்துப்படி நான்கு புனித வரி விதிப்புகள் உள்ளன. அவையாவன:
1. செலுத்தும் திறன் பற்றிய விதி:
மக்களின் வரி செலுத்தும் திறனுக்கு ஏற்ப அரசானது வரி விதிக்க வேண்டும்.
ஏழை அல்லது நடுத்தரப்பிரிவினரை ஒப்பிடும் போது செல்வந்தர்கள் அதிக வரி செலுத்த வேண்டும்.
2. நிச்சயத்தன்மை விதி:
வரி வீதம் அல்லது செலுத்தும் காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை இல்லாத வகையில் அரசு வரியினை விதிக்க வேண்டும்.
அரசு தன்போக்கிற்கு வரிகளை விதித்தால் அது மக்களின் செலுத்தும் திறன் மற்றும் வேலை செய்யும் திறனையும் பாதிக்கும்.
3. வசதி விதி: வரி செலுத்துவோர்கள் வரியை எளிதாகச் செலுத்தும் வண்ணம் வசதியான ஏற்பாட்டை செய்ய வேண்டும்.
4. சிக்கன விதி :
அரசு வரிகளை வசூலிப்பதற்கு பணம் செலவிடுகிறது.
எடுத்துக்காட்டாக, வரிகளை வசூலிப்பவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. வசூலிப்பதற்கான செலவு வரிகளை விட அதிகமாக இருந்தால் அவை மோசமான வரிகளாகும்.
31.
தடையற்ற வாணிகப் பகுதி, சுங்கத்தீர்வை ஒன்றியம் பொது அங்காடி, பொருளாதார ஒன்றியம் ஆகிய வடிவங்களில் பொருளாதார ஒருங்கிணைப்பு நிகழ்கிறது.
தடையற்ற வாணிகப் பகுதி :
ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட உறுப்பினர் நாடுகள் அனைத்தும் ஒரே மண்டலமாகக் கருதி வாணிகத்தடைகளைக் குறைக்க ஒத்துழைக்கும்.
(எ.கா): SAFTA, EFTA
சுங்கவரி ஒன்றியம் :
உறுப்பினர்களுக்கு இடையிலான வாணிகத்தில் வரி விதிக்காமலும் உறுப்பினர் அல்லாதவர்களுடனான வாணிகத்தில் பொது வரிவிதித்தும் ஒத்துழைக்கும் அமைப்பே சுங்கவரி ஒன்றியம் எனப்படுகிறது.
(எ.கா): BENELUX
பொது அங்காடி :
புவியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அமைந்துள்ள நாடுகள் தடையற்ற வாணிகம் மற்றும் உற்பத்திக் காரணிகள் இடப்பெயர்வுக்காகவும் அமைக்கும் அமைப்பே பொது அங்காடி.
(எ.கா): ஐரோப்பிய பொது அங்காடி.
பொருளாதார ஒன்றியம் :
பொது அங்காடியையும் சுங்கவரி ஒன்றியத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்படும் அமைப்பே பொருளாதார ஒன்றியம்.
பண்டங்கள் உற்பத்தி, பணிகள் உற்பத்தி, பண்டங்கள், பணிகள், காரணிகள் இடம்பெயர்வு பொதுவான உறுப்பினரல்லாத நாடுகள் வாணிகத்தின் மீது வரி ஆகிய அனைத்தும் பொருளாதார ஒன்றியத்தில் இடம்பெறும்.
(எ.கா) -ஐரோப்பிய பொருளாதார ஒன்றியம்.
32.
சார்க்கின் பணிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. தெற்காசிய நாடுகளின் ஒத்துழைப்பை பராமரித்தல்.
2. உறுப்பினர் நாடுகளின் பொதுவான சிக்கல்களுக்கு தீர்வு காணுதல்.
3. உறுப்பினர் நாடுகளிடையிலான உறவை மேம்படுத்துதல்.
4. வறுமை ஒழிப்புத்திட்டங்கள் மூலம் ஏழ்மையை ஒழிப்பது.
5. பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பது.
33.
| தொன்மைப் பன்னாட்டு வாணிபக் கோட்பாடு | புதிய பன்னாட்டு வாணிபக் கோட்பாடு | |
| 1 | பன்னாட்டு வணிகத்தை விளக்குவதற்கு உழைப்பைச் சார்ந்த மதிப்புக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது | பன்னாட்டு வாணிகத்தை விளக்குவதற்கு பொது மதிப்புக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. |
| 2 | இது ஒரு காரணி (உழைப்பு) மாதிரியாகும். | இது இரு காரணி (உழைப்பு, மூலதனம்) மாதிரியாகும். |
| 3 | ஒப்புமைச் செலவு வேறுபாட்டிற்கு உழைப்பாளர்களின் உற்பத்தித்திறன் வேறுபாடுகள் காரணம் என்கிறது. | ஒப்புமைச் செலவு வேறுபாட்டிற்கு உற்பத்தி காரணிகளின் கிடைப்பளவு வேறுபாடே காரணம் என நம்புகிறது. |
34.
பன்னாட்டுப் பொருளியலின் பொருளடக்கம்:
பன்னாட்டுப் பொருளியலின் பொருளடக்கம் பல பாகங்களை உள்ளடக்கியது. அவை கீழ்க்காணுமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தூய வணிகக் கோட்பாடு : நாடுகள் ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கான காரணங்கள், எந்த வகையான பண்டங்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை விவரிக்கும் பிரிவை தூய வாணிபக் கோட்பாடாகும்.
கொள்கைச் சச்சரவுகள் : நாடுகளுக்கிடையேயான வாணிக உறவுகளைக் கட்டுப்படுத்துவதா, தடைகளற்ற வணிகத்தை அனுமதிப்பதா போன்றவற்றை இப்பிரிவு விவாதிக்கிறது.
பன்னாட்டு வாணிகக் கூட்டமைப்பும் ஒன்றியங்களும் : இந்தப் பிரிவு பன்னாட்டுக் கூட்டமைப்பு, சுங்கவரி ஒன்றியங்கள், நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, அமைப்புகளின் மூலமாக நாடுகளின் பொருளாதாரம் இணைக்கப்பட்டுள்ளதை விவாதிக்கிறது.
பன்னாட்டு நிதியும் வணிக ஒழுங்குபடுத்தும் நிறுவனங்களும்: பன்னாட்டுப் பண நிதியம், மறு கட்டமைப்பு, பொருளாதார மேம்பாட்டுக்கான பன்னாட்டு வங்கி (உலக வங்கி, உலக வாணிக நிறுவனம், வாணிகம், பொருளாதார மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டு அமைப்பு முதலான பன்னாட்டு அமைப்புகள் நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவுகளை விவரிக்கிறது
35.
பணமதிப்பு நீக்கம் : பணமதிப்பு நீக்கம் என்பது அரசின் சட்டப்படியான பணத்தொகுப்பிலிருந்து குறிப்பிட்ட அலகிலான பணத்தின் மதிப்பைச் செல்லாது என அறிவிக்கும் செயலாகும்.
பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்கள் :
1. கருப்புப் பணத்தை ஒழிப்பது.
2. இலஞ்சத்தைத் தடுப்பது.
3. தீவிரவாதத்திற்குப் பணம் செல்வதை தடுப்பது
4. கள்ளப் பணத்தைத் தடுப்பது ஆகியன.
36.
கடன் கட்டுப்பாட்டு முறை என்பது மைய வங்கியின் பணவியல் மேலாண்மையின் முக்கிய நோக்கம் ஆகும்.
37.
1. வேலை வாய்ப்பினைப் பாதிக்காத வகையில் கடன்களை (வங்கிக் கடன், தவணைமுறை கொள்முதல் முறைகளை) கட்டுப்படுத்துவதன் மூலமும் பணவீக்கத்தினைக் குறைத்து வருவது மீள்பணவீக்கம் ஆகும்.
2. மீள் பணவீக்கம் என்பதனைப் பின்வருமாறு வரையறுக்கலாம்:
3. “வேலை வாய்ப்பின்மையை ஏற்படுத்தாமலும், உற்பத்தி அளவுகள் குறையாமலும் பணவீக்கத்தைத் திருப்பும் செயல்முறையே மீள்பணவீக்கம் ஆகும்”.
38.
1. ஒரு பொருளாதாரத்தில் உள்ள மொத்த பண அளவே பண அளிப்பு ஆகும்.
2. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாட்டில் புழக்கத்தில் உள்ள பண அளவைக் குறிப்பதே பண அளிப்பதாகும்.
3. வட்டி விகிதம், விலைவாசி போன்றவற்றை நிர்ணயிப்பதில் பண அளிப்பு முக்கியப் பங்காற்றுகிறது.
4. குறிப்பிட்ட காலத்தில் பண அளிப்பு நிலைக் (stock) கருத்தாகவும் ஒரு கால இடைவெளியில் தடையிலா ஓட்டக் (flow) கருத்தாகவும் உள்ளது.
39.
40.
| தன்னிச்சையான முதலீடு | தூண்டப்படுகிற முதலீடு | |
| 1 | தன்னிச்சையானது | திட்டமிடப்பட்டது. |
| 2 | வருவாயைப் பொறுத்து நெகிழாது. | வருவாயைப் பொறுத்து நெகிழ்வது. |
| 3 | நல நோக்கமுடையது | இலாப நோக்கமுடையது |
41.
| வ. எண் | கீன்ஸியம் | தொன்மையியம் |
| 1. | குறுகிய காலச் சமநிலை | நீண்ட காலச் சமநிலை |
| 2. | சேமிப்பு கெடுதல் | சேமிப்பு நல்லது |
| 3. | பணத்தின் பணி என்பது பரிமாற்றத்திற்கும், சேமிப்பிற்கும் உதவும் | பரிவர்த்தனைக்கு மட்டுமே பணம் உதவும் |
| 4. |
நாட்டின் சிக்கல்களைத் தீர்க்க பேரியல் அணுகுமுறை தேவை. |
நுண்ணியல் அடிப்படையில் பெரிய சிக்கல்களுக்கு தீர்வு காணுதல். |
| 5. | அரசின் தலையீடு உண்டு | தலையிடாக் கொள்கை வலியுறுத்தப்படுகிறது |
| 6. | வட்டி வீதம் மாறிக் கொண்டே உள்ளது. | வட்டி வீதம் மாறாதது. |
42.
43.
1. ஒரே பண்டம் பல இடங்களில் மதிப்பிடப்படும் வாய்ப்பு இம்முறையில் இருக்கிறது.
2. இறுதி உற்பத்திக்கு எந்த ஒரு பண்டம் மூலப் பொருளாகவோ அல்லது இடைநிலைப் பொருளாகவோ இருந்தால் அப்பொருளின் உற்பத்தியை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
3. சொந்த நுகர்வுக்குப் பயன்படுத்தப்பட்ட பண்டங்களின் மதிப்பையும் நாட்டு வருமானம் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
4. இரண்டாம் முறையாக கைமாற்றப்பட்ட நீடித்த பொருள்களை வாங்குதல், விற்றல் நடவடிக்கைகளின் பணமதிப்பை நாட்டு வருமானத்தில் சேர்க்கக் கூடாது.
44.

45.
| முதலாளித்துவம் | சமத்துவம் | |
| 1. | தனியார் உரிமை | பொது (அரசு) உரிமை |
| 2. | இலாபம் | சமூக நலன் |
| 3. | தடையில்லா சந்தை முறை | ஒன்றிய அரசின் திட்டமுறை |
| 4. | மூலப் பொருள்கள் கட்டுப்பாடு மட்டும் | முழு ஈடுபாடு |
| 5. | சமனற்ற நிலை | சமநிலை |
46.
சொத்து, உற்பத்திச் சாதனங்களின் உரிமம்:
உற்பத்திச் சாதனங்களும், சொத்துகளும் தனியாருக்கும், பொதுத்துறைக்கும் சொந்தமாக இருக்கும்.
பொதுத்துறையும், தனியார் துறையும் இணைந்திருக்கும்:
கலப்புப் பொருளாதாரங்களில் தனியார்துறைகள், பொதுத்துறைகள் ஆகிய இரண்டும் இணைந்திருக்கும்.
பொருளாதாரத் திட்டமிடல் :
மையத் திட்டக்குழு பொருளாதாரத் திட்டங்களைத் தயாரிக்கும். அரசினால் தயாரிக்கப்படும் தேசியத் திட்டங்களை தனியார் துறையும் பொதுத்துறையும் மதித்து பின்பற்றும்.
பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வு:
எதனை உற்பத்தி செய்வது? எப்படி உற்பத்தி செய்வது? யாருக்காக உற்பத்தி செய்வது? எப்படிப் பகிர்ந்தளிப்பது எனும் அடிப்படைச் சிக்கல்களை விலை இயக்க முறை, அரசின் தலையீடு ஆகியவை மூலம் தீர்க்கப்படும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards