12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 11/03/2020
12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter Three Marks Important Questions 2020 )
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
தேசியத்தின் எழுச்சியில் கற்றறிந்த மத்தியதர வகுப்பினரின் பங்கு யாது?
2.
நேரு அறிமுகப்படுத்திய குறிக்கோள் தீர்மானத்தின் நோக்கம் யாது?
3.
இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம், மற்றும் அதன் கோரிக்கைகள் யாவை?
4.
இந்திய, பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட மதக் கலவரத்தை விவரி?
5.
கான்பூர் சதிவழக்கு பற்றி சுருக்கமாக எழுதுக?
6.
அச்சு நாடுகள் உடன் இந்திய இராணுவத்தின் பங்கு யாது?
7.
சுபாஷ் மற்றும் இந்திய தேசிய இராணுவமும் பற்றி கூறுக?
8.
பகத்சிங் பற்றி எழுதுக?
9.
கிலாபத் இயக்கத்தைப் பற்றி எழுதுக?
10.
சரோஜினி நாயுடுவை பற்றி சுருக்கமாக எழுதுக.
11.
சுயராஜ்ஜிய கட்சி மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி எழுதுக?
12.
சைமன் குழு - நேரு அறிக்கை பற்றி எழுதுக?
13.
சுயராஜ்ஜியம் அல்லது அரசியல் சுதந்திரம் என்றால் என்ன?
14.
ரிஸ்லி அறிக்கை (Risley Papers) என்றால் என்ன? அதன் நோக்கம் யாது?
15.
சீன தேசிய அரசியலில் கோமின்டாங் கட்சியின் பங்கை விவாதத்திற்கு உட்படுத்துக.
16.
இரண்டாம் உலகப்போரின் முக்கிய விளைவுகளை முன்னிலைப்படுத்துக.
17.
18.
பிரான்ஸ் தும்மினால், ஐரோப்பாவிற்கு ஜலதோஷம் – தெளிவுபடுத்துக.
19.
20.
தென்அமெரிக்காவில் முதன்முதலாகப் பிரேசிலில் அரசியலமைப்பு சார்ந்த முடியாட்சி அரசு அமைந்ததற்கான சூழ்நிலைகளை எடுத்துரைக்கவும்.
21.
22.
அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்பட்ட நேட்டோவுக்கான பதில் நடவடிக்கையே சோவியத் ரஷ்யாவின் வார்சா உடன்படிக்கை விளக்குக.
23.
ஜெனீவாவில் பிராட்டஸ்டன்ட் இயக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஜான் கால்வின் பற்றிய பங்கை ஆராய்க.
24.
மறுமலர்ச்சி காலத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்ட இலக்கிய சாதனைகளை குறிப்பிடவும்.
25.
பொதுத்துறை நிறுவனங்களின் குறைந்த செயல்பாட்டிற்கான காரணிகள் யாவை?
26.
மத்திய அரசு 1980களில் கொண்டுவந்த ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தை விளக்குக.
27.
இந்திய காமன்வெல்த் லீக் இயக்கம் பற்றி விவரி?
28.
திலகரின் தன்னாட்சி இயக்கம் பற்றி சிறுகுறிப்பு வரைக?
29.
பஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகளை விளக்குக.
30.
காஷ்மீர் அரசர் எவ்வாறு இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டார்?
31.
1946 இல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெற்ற முஸ்லீம் லீக் பிரதிநிதிகள் யாவர்?
32.
இந்திய தேசிய காங்கிரசிலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் நீக்கப்பட்டதற்கானக் காரணங்களை விளக்குக
33.
மூன்று வட்டமேசை மாநாடுகளின் முடிவின் தோல்விக்குப் பிறகு ஏன் காங்கிரஸ் தடை செய்யப்பட்டது?
34.
பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது?
35.
வகுப்புவாதம் ஒரு கருத்தியலாக எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
36.
37.
38.
1920 மார்ச்சில் நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாட்டில் கிலாஃபத் இயக்கத்தின் சார்பாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன?
39.
டாடா இரும்பு எஃகு நிறுவனம் (TISCO) பற்றி குறிப்பு எழுதுக.
40.
41.
வ.உ. சிதம்பரத்தின் சுதேசி இயக்க முயற்சிகள் குறித்து எழுதுக.
42.
அலிப்பூர் வெடிகுண்டு வழக்கின் முக்கியத்துவம் குறித்து எழுதுக.
43.
44.
மே 1884இல் நடைபெற்ற சென்னை மகாஜன சங்கத்தின் தொடக்கவிழாவில் பங்கேற்ற முக்கியத் தலைவர்களின் பெயர்களை எழுதுக.
45.
பால்கன் சிக்கலின் விளைவுகள் உள்ளடக்கிய சிறப்புக்கூறுகளை எழுதுக.
1.
1. நவீன இந்தியக் கற்றறிந்தோர் பிரிவைச் சேர்ந்த ராஜாராம் மோகன் ராய், ஈஸ்வரசந்திர வித்யாசாகர், சுவாமி விவேகானந்தர், அரவிந்த கோஷ், கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோரும் இந்திய அரசியல், சமுதாய, மத இயக்கங்களுக்குத் தலைமையேற்றனர்.
2. மேல் நாட்டு அறிஞர்களான ஜான் லாக், ஜேம்ஸ் ஸ்டூவர்ட் மில், மாஜினி, கரிபால்டி, ரூஸோ, தாமஸ்பெயின், மார்க்ஸ் ஆகியோராலும் கூறப்பட்ட தேசியம், மக்களாட்சி, சோசலிசம் போன்ற தத்துவக் கருத்துக்களை கற்றறிந்த இந்தியர்கள் அறிந்து கொண்டனர்.
2.
1. நேரு அறிமுகப்படுத்திய குறிக்கோள் தீர்மானம் இந்திய அரசமைப்பின் உணர்வு மற்றும் உள்ளடக்கத்திற்கான மிகச் சுருக்கமான அறிமுகமாக அமைந்தது.
2. சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த தீர்மானத்தின் முக்கியத்துவத்தை இந்திய அரசமைப்பின் முகவுரை அடிப்படை உரிமைகள் மற்றும் அரசின் நெறிமுறைக் கோட்பாடுகளின் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
3. 1946, டிசம்பர் 13 அன்று ஜவஹர்லால் நேரு இந்திய அரசமைப்புக்கான குறிக்கோள் தீர்மானத்தை அரசமைப்பு நிர்ணயசபையில் அறிமுகப்படுத்தினார்.
3.
1. இந்திய தேசிய காங்கிரஸ் 1885 டிசம்பர் 28 இல் பம்பாயில் A.O ஹீயூம் என்பவரால் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பை உருவாக்கிய முக்கிய உறுப்பினராக W.C பானர்ஜி இவ்வமைப்பின் முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
2. இந்தியரை ஒரே நாடாக ஒருங்கிணைப்பதே இந்திய தேசிய காங்கிரசின் இன்றியமையா நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
3. இந்தியர்கள் தாங்கள் அனைவரும் ஒரு நாட்டின் குடிமக்கள் என உணர்ந்தால் மட்டுமே காலனியாட்சிக்கு எதிரானப் போராட்டங்கள் வெற்றி பெறுமென்பதை அவர்கள் நன்குணர்ந்தனர்.
4. இந்திய தேசியக் காங்கிரஸ் முக்கிய நோக்கங்களும் கோரிக்கைகளாக அரசியல் அமைப்பு, பொருளாதாரம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய நான்கும் கருதப்பட்டது.
4.
1. பிரிவினைக்குப் பின் இந்தியாவில் 42 மில்லியன் முஸ்லிம்களும், பாக்கிஸ்தானில் 20 மில்லியன் முஸ்லிம் அல்லாத இந்துக்கள், சிந்தியர்கள் மற்றும் சீக்கியர்கள் இருந்தனர்.
2. இந்து - முஸ்லிம் வன்முறைகளுக்கு இடையே ஏற்பட்ட உயிர்க் கொலைகள், அதிகாரப் பரிமாற்றம் மென்மையாக நடைபெறவில்லை.
3. இந்திய ராயல் கப்பற்படை கலகம், ஐ.என்.ஏ வழக்குகள் ஆகியவற்றின் போது நிலவிய இந்து முஸ்லிம் ஒற்றுமை தற்போது குலைந்து வெடிக்கும் எரிமலை போல் மாறியிருந்தது.
4. வகுப்பு வாதக் கலவரங்கள் இந்தியா எங்கும், குறிப்பாக வங்காளம், மற்றும் பஞ்சாப்பில் அதிகமாக நடைபெற்றன.
5.
(i) கான்பூர் சதிவழக்கு நடைபெற்ற ஆண்டு - 1924 ஆம் ஆண்டு ஆகும்.
(ii) கம்யூனிஸ்ட் கொள்கைகள் பரவுவதை காலனி ஆட்சியாளர்களால் மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
(iii) பம்பாய் கல்கத்தா மதராஸ் ஆகிய பிரிட்டிஷ் பிரதேசங்களிலும் ஒன்றுபட்ட பிரதேசத்தில் கான்பூர் போன்ற தொழில்மையங்களிலும் பல காலத்திற்கு முன்பே தொழிற்சாலைகள் வந்துவிட்ட லாகூர் போன்ற நகரங்களிலும் புரட்சிகர தேசியவாதம் பரவியது.
(iv) இந்தியத் தண்டனைச் சட்டம் 121 'ஏ' பிரிவின் கீழ் அவர்களுள் எட்டுபேர் வன்முறையான புரட்சி ஒன்றின் மூலம் ஏகபோக பிரிட்டனிலிருந்து இந்தியாவை முழுமையாக பிரித்தது.
6.
1. இம்பாலை நோக்கிய ஜப்பான் படைகளின் நகர்வில் ஷா நவாஸால் வழிநடத்தப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தின் ஒரு பிரிவும் பங்கெடுத்தது.
2. இம்பாலைக் கைப்பற்றும் முயற்சியில் ஜப்பான் வெற்றிபெற முடியவில்லை.
3. 1945-இல் நடுவில் அது பிரிட்டிஷ் படையிடம் சரணடைந்தது ஷா நவாஸ் கைது செய்யப்பட்டார்.
4. வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
7.
1. போஸ் இராணுவம் சாராத சாதாரண மக்களையும் இந்திய இராணுவத்தில் இணைத்தார்.
2. இராணுவத்தில் பெண்களுக்கு ஒரு படைப் பிரிவை ஏற்படுத்தினார்.
3. டாக்டர் லட்சுமி, ராணி ஜான்சி என்ற படைப்பிரிவிற்கு தலைமையேற்றார்.
4. சுபாஷ் 1944 ஜூலை 6-அன்று தனது ஆசாத் ஹிந்த் ரேடியோவின் மூலம் ரங்கூனிலிருந்து காந்தியை நோக்கி ஒரு உரையை ஆற்றினார்.
8.
(i) கிஷன்சிங் மற்றும் வித்தியாவதி கவுர் தாயார் மகனாகப் பகத்சிங் தற்போதைய பாகிஸ்தானின் ஒரு பகுதியான பஞ்சாப் மாநிலத்திலுள்ள லயல்பூர் மாவட்டம் ஜார்ஜ் வாலா இடத்தில் பிறந்தார்.
(ii) நவ்ஜவான் பாரத் சபா - ஹிந்துஸ்தான் ரிப்பளிகன் அசோசியேஷன் ஆகிய அமைப்புகளில் தன்னை பகத்சிங் இணைத்துக் கொண்டார்.
(iii) வெகுஜன இயக்கங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு கொள்கையாக அஹிம்சை இருக்கும்.
(iv) பகத்சிங்கின் "நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்"? என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
9.
1. முதல் உலகப் போருக்கு பின் பிரிட்டிஷ் உடன் துருக்கிக்கு எதிராக ஏற்படுத்திய ஒப்பந்தத்தை (செவெரஸ் உடன்படிக்கை 1920) முஸ்லீம்கள் எதிர்த்தனர்.
2. மெளலானா அபுல் கலாம் ஆசாத், எம்.ஏ, அன்சாரி, சைபூதீன் கிச்லு, அலி சகோதரர்கள் இந்த இயக்கத்தை தலைமையேற்று நடத்தினார்கள். கிலாபத் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1919 அக்டோபர் 19 ஆம் நாள் கிலாபத் தினம் அனுசரிக்கப்பட்டது.
10.
1. முஸ்லிம் பெரும்பான்மையை பாதுகாக்கும் ஒரு உத்தியாக விகிதாச்சாரம் பிரதிநிதித்துவம் குறித்து ஆய்வு மேற்கொள்ள மற்றொரு குழு என இரு குழுக்கள் அமைக்கப்பெற்றன.
2. 1928 ல் கல்கத்தாவில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்து மகா சபையின் உறுப்பினர்கள் திருத்தங்கள் அனைத்தையும் ஒப்புக் கொள்ளமறுத்து ஜின்னா நாட்டை விட்டு வெளியேறினார்.
3. இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர் என ஜின்னாவை சரோஜினி நாயுடு புகழ்ந்தார்.
11.
1. ஒத்துழையாமை இயக்கத்தைத் திருப்பிப் பெற்ற பிறகு அடுத்து என்ன என்ற கேள்வி எழுந்தது. சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு ஆகியோர் புதிய வழியில் செயல்பாட்டை அறிவித்தனர்.
2. சுயராஜ்ஜியம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் (Pro - changers) என்று இந்தக் குழு அழைக்கப்பட்டது.
3. தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி இந்தக் குழுவில் இணைந்தார். தீவிர அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அதில் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது அடக்கம் என்றும் அவர்கள் விரும்பினார்கள்.
12.
1. 1929 - 30 ஆம் ஆண்டில் அரசியல்சாசன சீர்திருத்தங்களின் முதல் தவணையை பிரிட்டிஷார் பரிசீலித்து அறிவிக்க வேண்டியிருந்தது.
2. சட்ட உருவாக்கக் குழுவான சைமன் குழு நிறுவப்பட்டது. அதன் தலைவரான சைமனின் பெயரில் இந்தக் குழு அமைந்தது.
3. வெள்ளையர்கள் மட்டுமே இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர்.
4. 1927 - இல் மதராஸில் நடந்த காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் இந்தக் குழுவை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது. இதன் முடிவாக மோதிலால் நேரு அறிக்கை வெளியானது.
13.
1. தீவிர தேசியவாதத் தலைவர்களின் பொதுவான குறிக்கோள்களில் ஒன்று சுயராஜ்ஜியம் அல்லது சுயாட்சி என்பதாகும்.
2. சுயராஜ்ஜியத்தின் பொருள் குறித்து தலைவர்கள் வேறுபட்டனர்.
3. சுயராஜ்ஜியம் என்பது அந்நியர் ஆட்சியிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைதல் என்பதாகும்.
4. வங்காளம், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகியப் பகுதிகளில் வளர்ந்து வந்த புரட்சிகர தேசியவாதம் குறித்து தீவிர தேசியவாதிகள் அரசியல் சுதந்திரத்தை விடுதலையடைதல் என்றும் கூறினார்.
14.
1. கர்சன் பிரபு தன்னுடைய இந்தியாவின் பிரதேச மறுவிநியோகம் தொடர்பான குறிப்புகளில் (1903) ஒரு திட்டத்தை தீட்டியிருந்தார்.
2. அதுவே பின்னர் திருத்தம் செய்யப்பட்டு ரிஸ்லி அறிக்கை (Risley Papers) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
3. பிரிவினைக்கு ஆதரவாக இரண்டு காரணங்களை இவ்வறிக்கை முன்வைத்தது.
4. அவை, வங்காளத்திற்கு சுமை குறைவு, அஸ்ஸாமின் முன்னேற்றம் ஆகியனவாகும்.
15.
1.சன் யாட் சென்னால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியே கோமின்டாங் ஆகும்.
2.சன் யாட் சென் ஒரு குடியரசை அமைக்க விரும்பினார்.
3.சன் யாட் சென் மறைவுக்குப் பின் இக்கட்சியில் பொதுவுடைமை மறைந்தது.
4.கோமின்டாங் பெரும் நிலக்கிழார்கள் மற்றும் முதலாளிகளின் ஆர்வங்களை பிரதிநிதித்துவப்படுத்தியது.
16.
1.பெரும் நகரங்கள்,துறைமுகங்களும் தரைமட்டமாக்கப்பட்டன.
2.பெரும் சக்தி எனும் நிலையில் இருந்த ஜெர்மனி வீழ்ந்தது.
3.உலக பொருளாதாரம் சரிந்து நொறுங்கியது.
4.உலகின் இரு ஆதிக்க சக்திகளாக அமெரிக்க ஐக்கிய நாடுகளும் சோவியத் ரஷ்யாவும் உருவாயின.
5.ஐரோப்பாவில் பல நாடுகளில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது.
6.உலக அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய பாசிச சிந்தனையை வீழ்த்த உலக நாடுகள் யாவும் ஒன்று கூடின.
17.
18.
1.19 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் நடந்த பல முன்னேற்ற நிகழ்வுகள் ஐரோப்பிய கண்டம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
2.ஆஸ்திரியா, ரஷ்யா, பிரஷ்யா பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையே புனிதக் கூட்டணி உருவாகியது.
3.மக்களாட்சி உணர்வும்,தேசியவாத போக்கும் வளர்ந்தது.
4.பிரான்ஸில் ஏற்பட்ட மூன்று முறை புரட்சிகள் 1789, 1830 மற்றும் 1848 பிரான்ஸ் தும்மியதாகவே கருத்தில் கொள்ளப்படுகிறது.
5.மெட்டர்னிக்கின் கூற்று "பிரான்ஸ் தும்மினால் ஐரோப்பாவிற்கு ஜலதோஷம் பிடிக்கும்"என்பது உண்மையானது.
19.
20.
1.நெப்போலியன் போர்த்துகலின் மீது படையெடுத்த போது போர்த்துகலின் அரசர் டாம் ஜோவா பிரேசிலுக்கு தப்பி ஓடினார்.
2.பிரேசில் முன்னேற்றமடைய அவர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
3.தனது மகன் டாம் பெட்ரோவிடம் பிரேசிலை ஒப்படைத்து விட்டு போர்த்துகல் திரும்ப முடிவு செய்தார்.
4.பிரேசிலின் மேட்டுக்குடி மக்கள் ஆப்பிரிக்க அடிமைகளைச் சார்ந்திருந்தனர்.
5.டாம் பெட்ரோ பிரேசிலின் சுதந்திரத்தை அறிவித்து விட்டு அங்கேயே தங்கிவிட்டார்.1822 ல் பிரேசில் போர்த்துகல்லிடமிருந்து விடுதலை பெற்றது.
21.
22.
1.மேற்கு ஜெர்மனி நேட்டோ அமைப்பில் உறுப்பினரானதை ஒரு நேரடி அச்சுறுத்தலாகப் பார்த்த ரஷ்யா எதிர் நடவடிக்கைகளை கொண்டது.
2.1955 மே மாதத்தில் சோவியத் ரஷ்யாவும் அதன் ஏழு ஐரோப்பிய நட்பு நாடுகளும் பரஸ்பர நட்பு.ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி ஒப்பந்தம் எனும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
3.போலந்தின் தலைநகரான வார்சாவில் கையெழுத்தானதால் வார்சா ஒப்பந்தம் எனப் பெயரிடப்பட்டது.
4.இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் சோவியத் யூனியன் ,அல்பேனியா போலந்து,ருமேனியா,ஹங்கேரி,கிழக்கு ஜெர்மனி,செக்கோஸ்லோவாக்கியா மற்றும் பல்கேரியா ஆகும்.
23.
1.பிராட்டஸ்டன்ட் இயக்கத்தின் பிற்கால தலைவர்களில் ஜான் கால்வின் ஒருவர்.
2.கால்வின் ஒரு மிகப்பெரிய ஒருங்கிணைப்பாளர்.
3.குறிப்பிட்ட காலத்துக்கு அவர் ஜெனீவா நகரையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.
4.கால்வினியம் என்ற சமயப்பிரிவு அவரது வாழ்நாளிலேயே பிரபலம் அடைந்தது.
24.
1.ஆங்கில மறுமலர்ச்சியில் முதலாம் எலிசபெத் பல அறிஞர்களை ஆதரித்ததை குறிப்பிடலாம்.
2.வில்லியம் ஷேக்ஸ்பியர், கிறிஸ்டோபர் மார்லோவ், பிரான்சிஸ் பேகன் குறிப்பிடத்தக்கவர்கள்.
3.ஆங்கில இலக்கியத்தின் முடிசூடா மன்னர் வில்லியம் ஷேக்ஸ்பியர் 38 நாடகங்களையும் பல கவிதைகளையும் எழுதியுள்ளார்.
25.
1.நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து மாறுபட்ட கருத்துகள் எழுந்தன.
2.நிர்வாகச் செலவுகள் அனைத்து நேரங்களிலும் கட்டுக்கடங்கி இருப்பதில்லை.
3.பொதுத்துறை நிறுவனங்களில் தேவைக்கு அதிகமானோர் பணியமர்த்தப்பட்டனர்.
4.பொதுத்துறை நிறுவனங்களின் இடைநிலை பொருட்கள் தனியார் துறையின் உள்ளீடுகளாகப் பயன்படுத்தப்படும் போது அர்த்தமற்றதாகிறது.
26.
1.1980ல் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் ஓர் ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
2.கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அவர்களுக்கு சில சொத்துக்களை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
3.இதன் மூலம் அவர்கள் வறுமையிலிருந்து வெளியே வர இயலும்.
27.
1. பிரிட்டிஷ் அரசின் கீழ் இந்தியா தன்னாட்சி பெறுவது அல்லது கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றின் வழியில் தன்னாட்சிப் பகுதித் (டொமினியன்) தகுதியைப் பெறுவது ஆகியவற்றுக்காகப் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கோருவதற்காக இந்திய காமன்வெல்த் லீக் என்று தன்னாட்சி இயக்கம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
2. பின்னர் 1929 - இல் இந்திய லீக் என்று வி.கே. க்ரிஷ்ணமேனன் மாற்றம் செய்தார்.
28.
1. 1916 - இல் ஏப்ரலில் பெல்காமில் நடந்த பம்பாய் மாகாண மாநாட்டில் இது நிறுவப்பட்டது.
2. பம்பாய் நகரம் உட்பட மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய மாகாணங்கள், பேரார் ஆகிய பகுதிகளில் திலகரின் தன்னாட்சி இயக்கம் நடைபெற்றது.
3. தன்னாட்சி குறித்து கோரிக்கைகளை தமது உரைகள் மூலம் திலகர் பிரபலப்படுத்தினார்.
29.
(i) இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அவற்றின் நில எல்லை மற்றும் இறையாண்மையை மதித்து நடத்தல்.
(ii) இரு நாடுகளும் ஒன்றையொன்று ஆக்கிரமிக்காமல் இருத்தல்.
(iii) ஒரு நாடு, மற்றொரு நாட்டின் உள்நிகழ்வுகளில் தலையிடாமல் இருக்கும்.
(iv) இரு நாடுகளுக்கு இடையேயான சமத்துவம் மற்றும் ஒன்றுக்கொன்று பயனடைவதற்கான கூட்டுறவு.
(v) சமாதான வாழ்வாகும்.
30.
(i) இந்திய விடுதலைக்குச் சில மாதங்களுக்குப் பின் (அக்டோபர் 1947) பாகிஸ்தானியர்கள் சிலர் காஷ்மீரைச் சூறையாடினர்
(ii) காஷ்மீர் மகாராஜா ஹரிசிங்கால் அந்த நடவடிக்கையை தடுக்க முடியவில்லை.
(iii) காஷ்மீர் அரசருக்கு உதவுவதற்காக, இந்திய இராணுவம் அனுப்பப்படுவதற்கு முன் காஷ்மீர் அரசர் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதில் படேல் உறுதியாக இருந்தார்.
(iv) இதன் விளைவாக, காஷ்மீர் சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியானது.
31.
(i) முஸ்லீம் லீக் சார்பாக முகம்மது அலி ஜின்னா, லியாகத் அலி கான் முகம்மது இஸ்மாயில் கான், குவாஜா சர் நிஜாமுதீன் மற்றும் அப்துல் ரப் நிஷ்தர் ஆகியோர் இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெற்ற முஸ்லீம் லீக் பிரதிநிதிகள் ஆவார்.
32.
(i) ஆகஸ்ட் கொடை மிகத் தாமதமாக அறிவிக்கப்பட்டதால் அது குறித்து பேச்சுவார்த்தை நடந்துகூட காங்கிரஸ்க்கு நேரமில்லை. இக்காலகட்டத்தில் காங்கிரசும் தனது ஆதரவாளர் பின்புலத்தை வெகுவாக இழந்திருந்தது.
(ii) சுபாஷ் சந்திரபோஸ் அச்சு நாடுகளோடு கைகோர்த்து சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இந்திய தேசிய காங்கிரசுக்கு நெருக்கடியை கொடுத்தார்.
(iii) எனவே காங்கிரசிற்குள் சுபாஷ் சந்திர போஸ் ஓரங்கட்டப்பட்டதால் அவ்வமைப்பின் முக்கிய மேல்மட்டத் தலைவர்கள் அவரோடு ஒத்துழைக்க மறுத்தனர். அதனால் கல்கத்தாவில் கூடிய அனைத்து இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் போஸ் பதவித் துறப்பு செய்யவே, இராஜேந்திரப் பிரசாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
(iv) போஸ் காங்கிரசிற்குள் செயலாற்ற விரும்பி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியை உருவாக்கினாலும், ஆகஸ்ட் 1939 இல் அவர் வங்காள காங்கிரசின் கமிட்டித் தலைவர் உட்பட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.
33.
1. சட்ட மறுப்பு இயக்கத்தை மீண்டும் கையில் எடுப்பது என்று காங்கிரஸ் தீர்மானித்தது பொருளாதார வீழ்ச்சி காரணமாகக் குறிப்பாக விவசாயிகள் உட்பட பொதுவாகவே நாட்டு மக்களின் பொருளாதார நிலைமை மோசமடைந்தது.
2. தேசியவாதம் தொடர்பான பிரசுரங்கள் அனைத்தும் சட்டத்துக்குப் புறம்பானவை என அறிவிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
3. இந்த இயக்கம் பொதுவாக மந்த நிலையை அடைந்து 1933 மே மாதம் அதிகாரப்பூர்வமாக
நிறுத்தப்பட்டது.
4. பின்னர் மே 1934-இல் முற்றிலும் முடிவுக்கு வந்தது.
34.
1. தீண்டத்தகாதோருக்குத் தனித் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதைத் தனது வாழ்நாள் முழுவதும் காந்தி அறிவித்தார்.
2. காந்தியின் உயிரைக் காப்பாற்றும் அழுத்தம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது, ஆலோசனை கூட்டம் பிரார்த்தனை நடந்தது.
3. அம்பேத்கர் மற்றும் காந்தி இடையே ஏற்பட்ட புதிய ஒப்பந்தம் 1932-இல் பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
35.
(i) பிறமதத்தாரோடு பொருள்சார்ந்த பிரச்சனைகளில் கூட விரோதப்போக்கோடு சண்டையிடும் வகையில் ஒரு மதத்தினரை உருவாக்குவது, வகுப்புவாதம் எனப்படும்.
(ii) வகுப்புவாதம் என்ற கருத்தாக்கம் அல்லது இயக்கத்தை பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விதமாக வரையறுத்துள்ளனர்.
(iii) நேருவின் கூற்றுப்படி வகுப்புவாதம் என்பது பிற்போக்குவாதிகளின் செயல் ஆகும்.
(iv) வகுப்புவாதம் என்பது ஒரு குழு குறுகிய நோக்கில் மற்ற குழுக்கள் அல்லது அரசாங்கத்திடமிருந்து வரும் எதிர்ப்பை மடைமாற்றம் செய்யும் செயல் ஆகும்.
36.
37.
38.
1. 1920 மார்ச் மாதம் பாரீசில் முகமது அலி கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகளைத் தூதாண்மை அதிகாரிகளிடையே சமர்ப்பித்தார்
2. அதில் துருக்கியின் சுல்தான் கலீபாவாக இடையூறின்றித் தொடர வேண்டும் என்றும்,
3. சுல்தானிடம் புனிதமான பகுதிகள் தரப்பட்டு இஸ்லாமிய மதத்தைப் பாதுகாக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
4. ஜாசிரத்-உல்-அரப் (அராபியா, சிரியா, ஈராக், பாலஸ்தீனம்) ஆகியன இவரின் இறையாண்மையின் கீழிருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தது.
39.
(i) 1907 இல் பீகாரிலுள்ள சாகி நகரில் டாடா குழுமத்தால் டாடா இரும்பு மற்றும் எ∴கு நிறுவனம் ( TISCO ) முதன்முதலில் சுதேசி இயக்கத்தின் ஒரு நிகழ்வாக அமைக்கப்பட்டது.
(ii) ஜே. என். டாடா எனப் பிரபலமாய் அறியப்பட்ட "ஜாம்ஷெட்ஜீ " நுஸர்வஞ்சி டாடா- ( 1839 - 1904 ) பரோடாவில் உள்ள நவ்சாரி என்ற இடத்தில் ஒரு பார்சி ஜொராஸ்ட்ரியன் வணிகக் குடும்பத்தில் இருந்து வந்தார்.
(iii) இந்தியாவின் முதல் வெற்றிகரமான தொழிலதிபர் ஆவார்.
(iv) இந்திய நவீன தொழிலகங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
(v) 1910 இல் மிகப் பெருமளவில் டாடா நீர்மின் சக்தி நிறுவனம் உதயமானது.
(vi) டாடா இரும்பு மற்றும் எ∴கு உற்பத்தி 1912 - 13- ல் 31, 000 டன்னிலிருந்து 1971 - 78 இல் 1, 81, 000 டன்னாக அதிகரித்துள்ளது.
40.
41.
(i) 1906 இல் வ.உ.சிதம்பரம் ஆங்கிலேயரின் கடற்பயண முற்றுரிமைக்கு எதிராகச் சுதேசி கப்பல் கம்பெனி ஒன்றை ஏற்படுத்தும் கருத்தை வெளிப்படுத்திய போது தமிழ்நாட்டின் சுதேசி இயக்கம் தேசத்தின் கவனத்தைப் பெற்றது.
(ii) 1906 ல் வ.உ.சி சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி SSNC எனும் கூட்டுப்பங்கு நிறுவனத்தைப் பதிவு செய்தார்.
(iii) வ.உ.சி. S. S. கலியா, S. S. லாவோ எனும் இரண்டு நீராவிக் கப்பல்களை வாங்கினார்.
(iv) சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றி பற்றி திலகர் தன்னுடைய கேசரி, மராட்டா பத்திரிகைகளில் எழுதினார். அரவிந்தர் கோஷும், வ.உ.சியின் சுதேச முயற்சிகளை பாராட்டி கம்பெனியின் பங்குகள் விற்பனையாவதற்கு உதவினார்.
42.
1. புரட்சிகர பயங்கரவாதியாகிய அனுசீலன் சமிதியைச் சேர்ந்த ஹேமச்சந்திர கனுங்கோ பாரிஸ் சென்று இராணுவப் பயிற்சிப் பெற்று நாடு திரும்பி மணிக்தலா எனுமிடத்திலிருந்த ஒரு பண்ணை வீட்டில் குண்டுகள் தயாரிப்பதற்கான ஒரு தொழில்கூடத்தை நிறுவினார்.
2. சுதேசி போராட்டக்காரர்களை கொடூரமாக நடத்திய டக்ளஸ் கிங்ஸ்போர்டு எனும் ஆங்கில அதிகாரியை குண்டு வீசி கொல்ல திட்டம் தீட்டப்பட்டது.
3. கொலை செய்யும் பொறுப்பு புரட்சிவாதிகளான குதிரம் போஸ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
4. 1908 ஏப்ரல் 30 இல் அவர்கள் தவறுதலாக ஒரு சாரட் வண்டியின் மீது குண்டை வீச கிங்ஸ்போர்டுக்குப் பதிலாக வேறு இரண்டு ஆங்கில பெண்கள் அதில் கொல்லப்பட்டனர்.
இதனால் பிரஃபுல்லா சாக்கி தற்கொலை செய்து கொல்ல, குதிரம் போஸ் ஆங்கில அரசால் தூக்கிலிடப்பட்டார்.
43.
44.
1. ஓர் அரசியல் சார்ந்த அமைப்பின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவாக மே 16,1884-இல் சென்னை மகாஜன சங்கம் நிறுவப்பட்டது.
2. தொடக்கவிழாவில் பங்குபெற்ற முக்கிய தலைவர்கள் ஜி. சுப்பிரமணியம், விஜயராகவாச்சாரி, அனந்தா சார்லு, ரங்கையா, பாலாஜிராவ், சேலம் ராமசாமி ஆகியவர்கள் ஆவார்கள்.
45.
1.பல்கேரியர்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்து அதற்காக செர்பியர்களை பழிவாங்க துடித்தனர்.
2.செர்பியர்கள் மிதமிஞ்சிய வெற்றிக் களிப்பில் திளைத்தார்கள்.
3.ஆஸ்திரியர்களுக்கு எதிரான போராட்டங்கள் செர்பியாவிலும் போஸ்னியாவிலும் தீவிரவாதத் தன்மை கொண்டதாய் மாறியது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards