12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/03/2020
12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Physics All Chapter Two Marks Important Questions 2020 )
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
முழு அக எதிரொளிப்பு பண்பின் அடிப்படையில் முப்பட்டகங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதைப் பற்றி குறிப்பு வரைக.
2.
ஆல்பா சிதைவில் நிலைத்தன்மையற்ற ஒரு அணுக்கரு ஏன் \(_{ 2 }^{ 4 }{ He }\) அணுக்கருவை உமிழ்கிறது? நான்கு தனித்தனி நியூக்ளியான்களை அது ஏன் உமிழ்வதில்லை?
3.
சரிவு முறிவு மற்றும் செனார் முறிவு ஆகியவற்றை வேறுபடுத்துக.
4.
சுழல் மின்னோட்டம் எவ்வாறு உருவாகிறது? அவை எவ்வாறு ஒரு கடத்தியில் பாய்கிறது?
5.
பிளெமிங் வலக்கை விதியைக் கூறுக
6.
பிரான்ஹோபர் வரிகள் என்றால் என்ன? சூரியனிலுள்ள தனிமங்களைக் கண்டறிவதில் அவை எவ்வாறு உதவுகின்றன?
7.
மின்காந்த அலையின் செறிவு என்ற கருத்தை விவரி.
8.
சீபெக் விளைவின் பயன்கள் யாவை?
9.
வெப்பநிலை மின்தடை எண் வரையறு.
10.
சம மின்னழுத்தப்பரப்பின் பண்புகள் யாவை?
11.
டயா, பாரா மற்றும் ஃபெர்ரோ காந்தவியலை ஒப்பிடு?
12.
மின்புலக் கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது நிறுவுக.
13.
ஒளியின் மின்காந்த அலைக்கொள்கை என்றால் என்ன?
14.
படுகதிரின் ஒளிச்செறிவைப் பொருத்து ஒளிமின்னோட்டம் எவ்வாறு மாறுபடுகிறது?
15.
ஒரு உலோகத்தின் ஒளிமின் வெளியேற்று ஆற்றல் என்பதை வரையறு. அதன் அலகைத் தருக.
16.
நானோ பொருட்கள் மற்றும் பேரளவு பொருட்கள் இடையே உள்ள வேறுபாடு யாது?
17.
நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் வேறுபடுத்துக.
18.
தனிமத்தின் அணுக்கருவின் குறியீட்டு முறையை எழுதுக. அதில் ஒவ்வொரு உறுப்பும் எதைக் குறிக்கின்றன?
19.
இணையத்தின் வழியே பொருட்களைப் பயன்படுத்துதல் (Internet of Things, IoT) என்றால் என்ன?
20.
RADAR என்பது எதனைக் குறிக்கிறது?
21.
ஒரு முழு அலைதிருத்தியின் உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு அலை வடிவங்களை வரைக.
22.
மின்காந்த அலை ஒன்றின் மின்புலச் சமன்பாடு \({ E }_{ y }=30sin[2\times { 10 }^{ 11 }t+300\pi x]{ Vm }^{ -1 }\)
(a) அலைநீளம்
(b) காந்தப்புலச் சமன்பாடு ஆகியவற்றை கூறு
23.
UV - கதிரின் பயன்கள் யாவை?
24.
மின்னியக்கு விசையைப் பொறுத்து தன்மின்தூண்டல் எண்ணின் அலகை வரையறு.
25.
காந்தப்பாயத்தைப் பொறுத்து தன் மின்தூண்டல் எண்ணை வரையறு?
26.
ஒரு இணைத்தட்டு மின்தேக்கியானது, குறிப்பிட்ட மின்னழுத்தத்தில் வைக்கப்படுகிறது. தகடுகளுக்கிடையே 3 mm தடிமன் கொண்ட ஒரு பாளம் புகுத்தப்படுகிறது. தகடுகளுக்கு இடையே உள்ள மின்னழுத்தத்தை மாற்றாமல் வைக்க, தகடுகளின் இடைத்தொலைவு 2.4 mm அதிகமாக்கப்படுகிறது. பாளத்தின் மின்காப்பு மாறிலியைக் கணக்கிடுக
27.
மின்தேக்கிகளின் பயன்பாடுகளை எழுதுக
28.
வெப்ப மின்னிரட்டையில் தோன்றும் மின்னியக்கு விசையானது எந்த காரணிகளைச் சார்ந்திருக்கும்?
29.
ஒரு ஆம்பியரை வரையறு.
30.
நிறை நிறமாலைமானியின் பயன்களை தருக.
31.
மின்னோட்ட வளையத்தின் காந்த இருமுனை திருப்புத் திறன் வரையறு.
32.
காந்தத் தயக்கம் என்றால் என்ன ?
1.
முழு அக எதிரொளிப்பைப் பயன்படுத்தி ஒளியை 90° அல்லது 180° எதிரொளிக்கும்படி முப்பட்டகங்களை வடிவமைக்கலாம். இது படம் (அ) மற்றும் (ஆ) இல் காட்டப்பட்டுள்ளது. முதல் இரண்டு நிகழ்வுகளில் முப்பட்டகப்பொருளின் மாறுநிலைக் கோணத்தின் மதிப்பானது 45° ஐ விடக் குறைவு.
முப்பட்டகங்களைக் கொண்டு, பிம்பத்தின் அளவினை மாற்றாமல் பிம்பங்களைத் தலைகீழாக மாற்றலாம். இது படம் (இ) இல் காட்டப்பட்டுள்ளது.

2.
\(_{ 92 }^{ 238 }{ U }\) அணுக்கரு \( _{ 90 }^{ 234 }{ Th }\) அணுக்கருவாக சிதைவடையும் பொழுது நான்கு தனித்தனியான அணுக்கருத்துகள்கள் (2 புரோட்டான்கள் மற்றும் 2 நியூட்ரான்கள்) வெளியேற்றினால், சிதைவு ஆற்றல் Q எதிர்குறி அடையும். அதாவது விளைவுப் பொருளின் நிறை தாய் அணுக்கருவின் \(_{ 92 }^{ 238 }{ U }\) நிறையை விட அதிகம், இது ஆற்றல் மாறா விதிக்கு எதிரானது எந்த ஒரு சிதையும் ஆற்றல் மாறா விதி, உந்த மாறா விதி, கோண உந்த மாறா விதிப்படியே நடக்க வேண்டும். எனவே நான்கு தனித்தனியான அணுக்கருத்துகள்கள் வெளியாவதில்லை.
3.
| வ.எண் | செனார் முறிவு | சரிவு முறிவு |
| 1. | மிக அதிக அளவு மாசூட்டப்பட்ட p-n சந்திகளில் < 10-6 மீ க்கு குறைவான அளவுகளில் மெல்லிய இயக்கமில்லாப் பகுதி இருக்கும். | சரிவு முறிவானது குறைந்த அளவு மாசூட்டப்பட்டு அகலமான இயக்கமில்லாப் பகுதிகளைக் கொண்ட சந்திகளில் நடைபெறுகிறது. |
| 2. | மின்புலம் இயற்கையாகவே வலிமையாக உருவாகிறது. | இங்கு, மின்புலமானது முறிவினை ஏற்படுத்தும் அளவுக்கு வலிமையானதாக அமையாது. |
| 3. | சந்திகளின் குறுக்கே முறிவு எல்லை வரை பின்னோக்கு மின்னழுத்தத்தை அதிகரிக்கும் போது வலிமையான மின்புலம் மெல்லிய இயக்கமில்லாப் பகுதியின் குறுக்கே உருவாக்கப்படுகிறது. இந்த மின்புலம் படிக தளத்தில் உள்ள சகப்பிணைப்பை முறித்து அதன் மூலம் எலக்ட்ரான் துளை ஜோடியை உருவாக்கும். இந்த விளைவு செனார் முறிவு எனப்படும். | வெப்பத்தினால் உருவாக்கப்பட்ட சிறுபான்மை ஊர்திகள் இந்த மின்புலத்தினால் முடுக்கப்பட்ட போதுமான அளவு இயக்க ஆற்றலைப் பெறுகின்றன. இவை இயக்கமில்லாப் பகுதியில் செல்லும்போது குறைக்கடத்தி அணுக்களுடன் மோதி சகப்பிணைப்பை முறித்து எலக்ட்ரான் துளை ஜோடிகளை உருவாக்குகின்றன. |
| 4. | மிகச் சிறிய அளவில் பின்னோக்கு மின்னழுத்தத்தை அதிகரித்தாலும் கூட அது மிக அதிக அளவு மின்னூட்ட ஊர்திகளை உருவாக்கும். எனவே, சந்தியானது முறிவுப் பகுதியில் மிகக்குறைந்த மின்தடையைக் கொண்டிருக்கும். | புதியதாக உருவாக்கப்பட்ட மின்னூட்ட ஊர்திகளும் மின்புலத்தினால் முடுக்கப்பட்டு மோதல்களினால் மேலும் மின்னூட்ட ஊர்திகளை உருவாக்குகின்றன. |
| 5. | அணிக்கோவை தளத்தில் உள்ள பிணைப்புகளை முறித்து அதன் மூலம் எலக்ட்ரான் உமிழப்படுகின்றன. இச்செயல்முறை அக புல உமிழ்வு அல்லது புல அயனியாக்கம் என்று பெயர். இச்செயல்முறைக்குத் தேவைப்படும் மின்புலம் 106 V m-1 என்ற அளவில் அமையும். | இந்த ஒட்டுமொத்த செயல்முறை பெருமளவு மின்னூட்ட ஊர்திகளைச் சந்தியின் குறுக்கே ஏற்படுத்தி பின்னோக்கு மின்தடையைக் குறைக்கும். இதனால், டையோடு மின்னோட்டம் திடீரென உயரும். |
4.
கடத்தியானது தகடாகவோ அல்லது தட்டாகவோ இருந்தாலும் அதனுடன் தொடர்புடைய காந்தப்பாயம் மாறும்போது ஒரு மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. ஆனால், வேறுபாடு என்னவெனில் தூண்டப்பட்ட மின்னோட்டம் பாய்வதற்கு குறிப்பிட்ட சுற்றோ அல்லது பாதையோ இருப்பதில்லை. அதன் விளைவாக, தூண்டப்பட்ட மின்னோட்டங்கள் ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு வட்டப்பாதைகளில் செல்கின்றன. இந்த மின்னோட்டங்கள் நீர்ச்சுழலைப் போன்று இருப்பதால் இவை சுழல் மின்னோட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
5.
வலது கையின் பெருவிரல், சுட்டுவிரல் மற்றும் நடுவிரல் ஆகியவை ஒன்றுக்கொன்று செங்குத்தான திசைகளில் நீட்டப்படுகின்றன. காந்தப்புலத்தின் திசையை சுட்டுவிரலும், கடத்தி இயங்கும் திசையை பெருவிரலும் குறித்தால், தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசையை நடுவிரல் குறிக்கும். பிளமிங் வலக்கை விதியை மின்னியற்றி விதி எனவும் அழைக்கலாம்.
6.
சூரியனிடமிருந்து கிடைக்கும் நிறமாலையில், அதிக எண்ணிக்கையில் கருங்கோடுகள் (வரி உட்கவர் நிறமாலை) காணப்படும். சூரிய நிறமாலையில் காணப்படும் இக்கருங்கோடுகளுக்கு பிரான்ஹோபர் வரிகள் என்று பெயர்.
பல்வேறு பொருட்களின் உட்கவர் நிறமாலைகளை சூரியன் நிறமாலையில் உள்ள பிரான்ஹோபர் வரிகளுடன் ஒப்பிட்டு சூரிய வளிமண்டலத்தில் காணப்படும் தனிமங்களைக் கண்டறியலாம்.
7.
மின்காந்த அலை பரவும் திசைக்கு செங்குத்தாக ஓரலகு நேரத்தில் ஓரலகு பரப்பு வழியே கடந்து செல்லும் ஆற்றலே மின்காந்த அலையின் செறிவு எனப்படும்.
I = ( u ) c
8.
1) சீபெக் விளைவானது வெப்ப மின்னியற்றிகளில் பயன்படுகிறது. (சீபெக் மின்னியற்றி) இந்த வெப்ப மின்னியற்றிகள், மின் உற்பத்தி நிலையங்களில் வீணாகும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகின்றன.
2) தானியங்கி வாகனங்களில் எரிபொருள் பயனுறு திறனை அதிகரிக்க பயன்படும் தானியங்கி வெப்ப மின்னியற்றிகளில் பயன்படுத்தப்படுகிறது.
3) வெப்ப மின்னிரட்டை மற்றும் வெப்ப மின்னிரட்டை அடுக்குகளில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கிடையே உள்ள வெப்பநிலை வேறுபாட்டை அளவிட சீபெக் விளைவு பயன்படுகிறது.
9.
ஒரு பொருளின் ஒரு டிகிரி வெப்பநிலை உயர்வில் ஏற்படும் மின்தடை எண் உயர்விற்கும், To வெப்பநிலையில் உள்ள மின்தடை எண்ணுக்கும் இடையே உள்ள விகிதம் வெப்பநிலை மின்தடை எண் ஆகும்.
\(\alpha=\frac{\rho_T-\rho_0}{\rho_0\left(T-T_0\right)} = \frac{\triangle \rho}{\rho_{0} \triangle T}\)
10.
(i) A மற்றும் B புள்ளிகளுக்கு இடையே q மின்னூட்டம் கொண்ட மின்துகளை நகர்த்த செய்யப்படும் வேலை W = q(VB- VA). A,B இரு புள்ளிகளும் ஒரே சம மின்னழுத்தப் பரப்பில் இருந்தால் செய்யப்படும் வேலை சுழியாகும். ஏனெனில் VB = VA
(ii) சம மின்னழுத்தப் பரப்புக்கு செங்குத்தாக மின்புலம் இருக்கும்.
11.
| வரிசை எண் | டயாக்காந்தம் | பாராகாந்தம் | ஃபெர்ரோகாந்தம் |
| 1. | ஒவ்வொரு எலக்ட்ரானும் ஒரு குறிப்பிட்ட அளவு சுற்றுப்பாதை காந்த இருமுனை திருப்புத்திறனை பெற்றிருக்கும். | ஒவ்வொரு அணுவும் அல்லது மூலக்கூறும் நிகர காந்த இருமுனை திருப்புத்திறன்களைப் பெற்றுள்ளன. | ஒரு அணு அல்லது மூலக்கூறு நிகர காந்த இருமுனை திருப்புத்திறன்களைப் பெற்றுள்ளன. |
| 2. | சுற்றுப்பாதை தளங்கள் தற்போக்காக ஒழுங்கற்ற முறையில் எல்லா திசைகளிலும் அமைந்துள்ளது. | காந்த இருமுனை திருப்புத்திறன்களின் வெக்டர் ஒழுங்கற்ற முறையில் எல்லா திசைகளிலும் அமைந்துள்ளது. | பெருங்கூறின் உள்ளே உள்ள காந்தத்திருப்புத் திறன்களும் ஒரு குறிப்பிட்ட திசையில் ஒருங்கமைந்துள்ளன. |
| 3. | நிகர காந்த இருமுனை திருப்புத் திறன்களின் வெக்டர் கூடுதல் சுழியாகும். | எந்தவொரு அணுவும் தொகுபயன் காந்த இருமுனை திருப்புத்திறனை பெற்றிருக்காது. | பொருளின் நிகர காந்தமாக்கல் சுழியாகும் |
12.
மின்புலக் கோடுகள் ஒன்றையொன்று வெட்டாது. அவை வெட்டினால் ஒரே புள்ளியில் இரு மின்புல வெக்டர்கள் அமையும். எனவே அவை வெட்டும் புள்ளியில் ஒரே நேரத்தில், வேறுபட்ட திசைகளில் செல்லும். இந்நிகழ்வு நிகழ வாய்ப்பில்லை. எனவே, மின்புலக் கோடுகள் ஒன்றையொன்று வெட்டாது.
13.
ஒளி, குறுக்கலை வடிவில் பரவும் மின்காந்த ஆற்றலை சுமந்து செல்லும் மின்காந்த அலை, மின்காந்த அலை பரவுவதற்கு எவ்வித ஊடகமும் தேவையில்லை என்பதே மாக்ஸ்வெல்லின் மின்காந்த அலைக்கொள்கையின் கருத்தாகும்
14.
ஒளிமின்னோட்டமானது, அதாவது ஒரு வினாடியில் உமிழப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை படுகதிரின் செறிவிற்கு நேர்த்தகவில் அமையும்.
15.
உலோகத்தின் பரப்பிலிருந்து எலக்ட்ரானை வெளியேற்றத் தேவைப்படும் சிறும ஆற்றல் உலோகத்தின் வெளியேற்று ஆற்றல் எனப்படும். இதன் அலகு எலக்ட்ரான் வோல்ட் (eV ஆகும்)
16.
i) 1 - 100nm அளவுகள் வரை கொண்ட பொருட்கள் நானோ பொருட்கள் எனப்படும். 100nm அளவிற்கு மேல் உள்ள பொருட்கள் பேரளவு பொருட்கள் எனப்படும்.
ii) இரு பொருட்களின் வேதிப் பண்புகள் ஒன்று போல் உள்ளது. ஆனால் பருப்பொருளானது நானோ பொருட்களாக பிரிக்கப்பட்டால் இயந்திரவியல், மின்னியல், ஒளியியல், காந்தவியல் மற்றும் பிற பண்புகள் மாறுபடுகிறது.
17.
நானோ அறிவியல் என்பது 1- 100 nm (1nm = 10-9 m) அளவுகள், வரை கொண்ட பொருள்களின் அறிவியல் ஆகும். பருப்பொருளானது நானோ பொருள்களாக பிரிக்கப்பட்டால் அவற்றின் இயற்பியல் பண்புகளில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதை அறிவது ஆகும்.
நானோ தொழில்நுட்பம் என்பது நானோ அளவில் கட்டமைக்கப்பட்ட பொருள்களின் வடிவமைப்பு, உற்பத்தி, பண்புக்கூறுகள் மற்றும் பயன்பாடுகள் உள்ளடக்கியது ஆகும்.
18.
\(_{Z}^{A}\textrm{X}\)
A-நிறை எண் அணுக்கருவிலுள்ள மொத்த புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை
Z- அணு எண் அணுக்கருவிலுள்ள மொத்த புரோட்டான்களின் எண்ணிக்கை
X- தனிமத்தின் வேதியியல் குறியீடு
19.
ஒரு சாதனத்தின் மூலம் பல்வேறு சாதனங்களை இணையத்தின் வழியே கட்டுப்படுத்துவது Internet of Things (IoT) எனப்படும். எ.கா, செல்பேசியைப் பயன்படுத்தி வீட்டு உபயோகப் பொருட்கள் மோட்டார், TV, குளிர்சாதனப் பெட்டி போன்ற அனைத்தையும் இயக்க முடியும்.
20.
ரேடார் (RADAR) என்பது RAdio Detection And Ranging என்ற சொற்றொடரின் சுருக்கமாகும்.
21.

22.
(i) \(\lambda =\frac { 2\pi }{ 300\pi } =\frac { 1 }{ 150 } m=0.67cm\)
\((ii){ B }_{ o }=\frac { { E }_{ o } }{ c } =\frac { 30 }{ 3\times { 10 }^{ 8 } } ={ 10 }^{ -7 }T\)
\((iii){ B }_{ z }={ 10 }^{ -7 }sin\)\([2\times { 10 }^{ 11 }t+300\pi x]T \)
23.
(i) சூரிய மின் கலன் வடிவில் செயற்கைக் கோளுக்கு ஆற்றல் அளிக்கிறது
(ii) உலர் பலஸ்களை உருகாக்க
(iii) பசுமை இல்லங்களில் வெப்பக் காப்பானாக
(iv) தசையில் ஏற்படும் வலியினை சரிசெய்ய
(v) தொலைக்காட்சி பெட்டியின் தொலைக்கட்டுப்பாட்டு உணர்வியலில்
(vi) இரவு நேரங்களில் புகைப்படம் எடுக்க
24.
கம்பிச்சுருளில் மின்னோட்டம் மாறும் வீதம் 1 As-1 எனும் போது கம்பிச்சுருளில் தூண்டப்படும் எதிர்மின்னியக்கு விசை 1V எனில் அக்கம்பிச்சுருளின் தன்மின்தூண்டல் எண் ஒரு ஹென்றி ஆகும்.
25.
சுருளின் மின்தூண்டல் எண் என்பது 1A மின்னோட்டம் பாயும் போது அக்கம்பிச்சுருளில் ஏற்படும் பாயத்தொடர்பு ஆகும்.
\(L=\frac { N{ \Phi }_{ B } }{ i } \)
26.
t = 3 mm; x = 2.4 mm
இணைத்தட்டு மின்தேக்கியின் மின்தேக்கு திறன்
\(\frac { \sigma d }{ { \varepsilon }_{ o } } =\frac { \sigma }{ { \varepsilon }_{ o } } \left( d+2.4-t+\frac { t }{ { \varepsilon }_{ r } } \right) \)
\(d=d+2.4-3+\frac { 3 }{ { \varepsilon }_{ r } } \)
\(\frac { 3 }{ { \varepsilon }_{ r } } =0.6,{ \varepsilon }_{ r }=\frac { 3 }{ 0.6 } =5\)
27.
(i) தானியங்கு எந்திரங்களின் எரிபொருள் எரியூட்டும் அமைப்புகளில் தீப்பொறி ஏற்படுவதைத் தவிர்க்க பயன்படுகிறது
(ii) மின்திறன் வழங்கிகளில் மின்னழுத்த ஏற்ற இறக்கத்தைக் குறைப்பதற்கும், மின்திறன் அனுப்பீட்டில் அதன் பயனுறு திறனை அதிகரிக்கச் செய்யவும், மின்தேக்கிகள் பயன்படுகின்றன
(iii) மின்தேக்கிகள் மின்காந்த அலைவுகளைத் தோற்றுவிக்கவும், ரேடியோ சுற்றுகளை ஒத்திசைவு செய்யவும் பயன்படுகின்றன.
28.
வெப்ப மின்னிரட்டையில் தோன்றும் மின்னியக்கு விசையின் எண் மதிப்பு
i) மின்னிரட்டையில் இடம்பெறும் உலோகங்களின் தன்மை மற்றும்
ii) சந்திகளின் வெப்பநிலை வேறுபாடு ஆகியவற்றை பொறுத்ததாகும்.
29.
ஒரு கூலும் மின்னூட்டம் கொண்ட மின்துகள்கள் ஒரு வினாடி நேரத்தில் செங்குத்தான குறுக்குவெட்டுப் பரப்பைக் கடந்தால் ஏற்படும் மின்னோட்டமே ஒரு ஆம்பியர் மின்னோட்டம் ஆகும்.
30.
1. நிறை நிறமாலைமானி பல்வேறு பகுதிகளில் பயன்படுகிறது. அவை.
2. அறிவியலில் குறிப்பாக மருத்துவம், விண்வெளி அறிவியல், மண்ணியல் போன்றவற்றில் பயன்படுகிறது.
3. மருத்துவத்தில் கழிவாயுக்களின் அளவை அளந்தறிய பயன்படுகிறது.
4. உயிரியலில் ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சியில் ஏற்படும் எதிர்வினை இயக்கத்தைக் கண்டறிய பயன்படுகிறது.
31.
மின்னோட்டம் மற்றும் மின்னோட்ட வளையத்தின் பரப்பு இவற்றிற்கிடையேயான பெருக்கல் பலனுக்குச் சமமாகும்.
32.
காந்தப்புலம், காந்தமாக்கும் புலத்திற்குப் பின்தங்கும் நிகழ்ச்சிக்கு காந்தத் தயக்கம் என்று பொருள்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards