12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
நிதிநிலை அறிக்கைகளின் முக்கியத்துவத்தினை எழுதுக (ஏதேனும் மூன்று).
2.
கூட்டு சராசரி முறையில் நற்பெயர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
3.
நற்பெயர் சரிக்கட்டுதல் பற்றி சிறு குறிப்பு வரைக
4.
குறிப்பு வரைக
1) சந்தா
2) நன்கொடைகள்
5.
சொத்துகள் மற்றும் பொறுப்புகள் மறுமதிப்பீடு செய்வதற்கான குறிப்பேட்டுப் பதிவுகள் யாவை?
6.
7.
சிபி மற்றும் மனோஜ் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். சிபி எந்தவொரு கழிவுக்கு முன் உள்ள நிகர இலாபத்தில் 20% கழிவாகப் பெற வேண்டும். மனோஜ், அனைத்து கழிவுக்குப் பின் உள்ள நிகர இலாபத்தில் 20% கழிவாகப் பெற வேண்டும். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய கழிவு கணக்கிடுவதற்கு முன்னர் உள்ள நிகர இலாபம் ரூ.60,000. சிபி மற்றும் மனோஜின் கழிவினைக் கண்டுபிடிக்கவும். மேலும் இலாபப் பகிர்வினையும் கணக்கிடவும்.
8.
2017, ஏப்ரல் 1 அன்று கணேஷ் ரூ. 75,000 முதலுடன் தன்னுடைய தொழிலைத் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளை பராமரிக்கவில்லை. 31.03.2018 ஆம் நாளைய அவருடைய ஏடுகளின் விவரங்கள் பின்வருமாறு.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்கம் | 5,000 | கடனாளிகள் | 16,000 |
| சரக்கிருப்பு | 18,000 | கடனீந்தோர் | 9,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 7,000 | வங்கி ரொக்கம் | 24,000 |
| அறைகலன் | 3,000 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 6,000 |
| நிலம் மற்றும் கட்டடங்கள் | 30,000 |
அவ்வாண்டில் தன்னுடைய சொந்தப் பயனுக்காக அவர் ரூ. 15,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 20,000. அவருடைய இலாபம் அல்லது நட்டத்தைக் கண்டறியவும்.
9.
முனைமத்தில் வெளியிடுதல் என்றால் என்ன?
10.
மதிப்பூதியம் என்றால் என்ன?
11.
செயல்பாட்டின் அடிப்படையில் விகிதங்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
12.
கூட்டாளி சேர்ப்பு என்றால் என்ன? அவர் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகிறார்?
13.
கூட்டாண்மை பொருள் தருக.
14.
பின்வரும் தகவல்களிலிருந்து கலா நிறுமத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடுக.
| விவரம் | ரூ. (ஆயிரத்தில்) | ||
|---|---|---|---|
| 2015-16 | 2016-17 | 2017-18 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 400 | 500 | 600 |
| இதர வருமானம் | 100 | 150 | 200 |
| செலவுகள் | 200 | 290 | 350 |
15.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் கருவிகளைப் பட்டியலிடவும்.
16.
கீழ்க்காணும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| ஆண்டின் தொடக்க முதல் (ஏப்ரல் 1, 2018) | 5,00,000 |
| ஆண்டின் இறுதி முதல் (மார்ச் 31, 2019) | 8,50,000 |
| அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | 1,20,000 |
| அவ்வாண்டில் எடுப்புகள் | 70,000 |
17.
18.
நற்பெயர் என்றால் என்ன?
19.
விவின், ஹரி மற்றும் ஜாய் என்ற கூட்டாளிகள் 3:2:1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வருகின்றனர்.
31-3-2017 அன்று ஹரி விலகினார். அவர் விலகிய நாளில், நிறுவனத்தின் ஏடுகளில் பொதுக்காப்பு
ரூ.60,000 காட்டியது. பொதுக்காப்பு மாற்றுவதற்கான குறிப்பேட்டுப் பதிவைத் தரவும்.
20.
பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31, 2016 மற்றும் மார்ச் 31, 2017 க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.
| விவரம் | 2015-16 ரூ. |
2016-17 ரூ. |
|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,00,000 | 6,00,000 |
| இதர வருமானங்கள் | 50,000 | 1,50,000 |
| செலவுகள் | 5,00,000 | 3,00,000 |
| வருமான வரி % | 40 | 40 |
21.
சுந்தர், விவேக், மற்றும் பாண்டியன் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3 : 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் 2016, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | நிலம் | 80,000 | ||
| சுந்தர் | 50,000 | சரக்கிருப்பு | 20,000 | |
| விவேக் | 40,000 | கடனாளிகள் | 30,000 | |
| பாண்டியன் | 10,000 | 1,00,000 | வங்கி ரொக்கம் | 14,000 |
| பொதுக்காப்பு | 36,000 | இலாப நட்டக் க/கு (நட்டம்) | 6,000 | |
| பற்பல கடனீந்தோர் | 14,000 | |||
| 1,50,000 | 1,50,000 |
1.1.2019 அன்று பாண்டியன் இறந்துவிட்டார் மற்றும் அவரின் இறப்பின் போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டன
(i) சரக்கிருப்பின் மதிப்பு 10% தேய்மானம் குறைக்கப்பட வேண்டும்
(ii) நிலத்தின் மதிப்பு ரூ.11,000 அதிகரிக்கப்பட வேண்டும்
(iii) கடனாளிகள் மதிப்பு ரூ.3,000 குறைக்க வேண்டும்
(iv) பாண்டியனுக்கு செலுத்த வேண்டிய இறுதித் தொகை செலுத்தப்படவில்லை
கூட்டாளியின் இறப்பிற்கு பின் நிறுமத்தின் மறுமதிப்பீட்டுக் கணக்கு, கூட்டாளிகள் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
22.
ஒரு சங்கத்தின் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் பின்வரும் விவரங்கள் எவ்வாறு தோன்றும்? 2016-17 ல் சங்கம் பெற்ற சந்தா ரூ. 50,000. இதில் 2015-16 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ. 6,000 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ. 3,500 சேர்ந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டிற்கான சந்தா ரூ. 1,500 இன்னும் பெற வேண்டியுள்ளது.
23.
மாலு மற்றும் நீது, 2018, ஜனவரி 1 அன்று முறையே ரூ.3,00,000 மற்றும் ரூ.2,00,000 முதலாகக் கொண்டு தொழில் தொடங்கினார்.
கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி,
(அ) முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% தரப்பட வேண்டும்
(ஆ) நீது ஆண்டுக்கு 50,000 ஊதியம் பெற வேண்டும்
(இ) முதல் மீது வட்டி மற்றும் நீது ஊதியத்தை கழித்த பின், கழிவுக்குப் பின் உள்ள இலாபத்தில் 10% மாலு கழிவாகப் பெற வேண்டும்.
(ஈ) இரு கூட்டாளிகளுக்கு இடையே இலாபப் பகிர்வு விகிதம் 3:2
அவ்வாண்டில் நிறுவனம் ஈட்டிய இலாபம் ரூ.3,00,000
நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் - 31 இல் கணக்கு முடிக்கிறது எனக் கொண்டு இலாபநட்டப் பகிர்வு கணக்கை தயாரிக்கவும்.
24.
அருண் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து
(i) புற அக பொறுப்புகள் விகிதம்
(ii) உரிமையாளர் விகிதம் மற்றும்
(iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்.
| விவரம் | ரூ | |
| I | பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. | பங்குதாரர் நிதி | |
| (அ) பங்குமுதல் | ||
| நேர்மைப் பங்குமுதல் | 1,50,000 | |
| 8% முன்னுரிமைப் பங்குமுதல் | 2,00,000 | |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 1,50,000 | |
| 2. | நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்டகால கடன்கள் (9% கடனீட்டுப் பாத்திரங்கள்) | 4,00,000 | |
| 3. | நடப்பு பொறுப்புகள் | |
| (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள் | 25,000 | |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 75,000 | |
| மொத்தம் | 10,00,000 | |
| II | சொத்துகள் | |
| 1. | நீண்ட காலச் சொத்துகள் | |
| நிலைச் சொத்துகள் | 7,50,000 | |
| 2. | நடப்புச் சொத்துகள் | 1,20,000 |
| (அ) சரக்கிருப்பு | 1,20,000 | |
| (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 1,000,000 | |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவர்கள் | 27,500 | |
| (ஈ) இதர நடப்புச் சொத்துகள் | ||
| செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது | 2,500 | |
| மொத்தம் | 10,00,000 | |
25.
அன்பு மற்றும் சங்கர் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3:2 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கணிப்பொறி | 40,000 | ||
| அன்பு | 4,00,000 | வாகனம் | 1,60,000 | |
| சங்கர் | 3,00,000 | 7,00,000 | சரக்கிருப்பு | 4,00,000 |
| இலாப நட்ட க/கு | 1,20,000 | கடனாளிகள் | 3,60,000 | |
| கடனீந்தோர் | 1,20,000 | வங்கி ரொக்கம் | 40,000 | |
| தொழிலாளர் ஈட்டு நிதி | 60,000 | |||
| 10,00,000 | 1,40,000 |
பின்வரும் விவரங்கள் அடிப்படையில் இராஜேஷ் என்பவர் 1/5 பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார்.
(i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.75,000 என மதிப்பிடப்பட்டது. இராஜேஷ் நற்பெயரில் தன்னுடைய பங்கினை ரொக்கமாகக் கொண்டு வந்தார்.
(ii) இராஜேஷ் ரூ.1,50,000 முதலாகக் கொண்டு வந்தார்.
(iii) வாகனம் ரூ.2,00,000, சரக்கிருப்பு ரூ.3,80,000, கடனாளிகள் ரூ.3,50,000 என மதிப்பிடப்பட்டது.
(iv) எதிர்பார்க்கப்படும் தொழிலாளர் ஈட்டு நிதி மீதான கோரிக்கை ரூ.10,000.
(v) பதிவுறா முதலீடு ரூ.5,000 கணக்கில் கொண்டுவரப்பட்டது.
மறுமதிப்பீடு கணக்கு, முதல் கணக்கு மற்றும் இராஜேஷின் சேர்ப்பிற்கு பின்வரும் இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.
26.
செல்வம் என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
| விவரம் | 1-1-2018 ரூ. |
31.12.2018 ரூ. |
|---|---|---|
| இயந்திரம் | 60,000 | 60,000 |
| வங்கி ரொக்கம் | 25,000 | 33,000 |
| பற்பல கடனாளிகள் | 70,000 | 1,00,000 |
| சரக்கிருப்பு | 45,000 | 22,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 20,000 | 38,000 |
| வங்கிக் கடன் | 45,000 | 45,000 |
| பற்பல கடனீந்தோர் | 25,000 | 21,000 |
கூடுதல் தகவல்கள்:
| ரூ. | ரூ. | ||
|---|---|---|---|
| ரொக்க விற்பனை | 20,000 | கடன் விற்பனை | 1,80,000 |
| ரொக்கக் கொள்முதல் | 8,000 | கடன் கொள்முதல் | 52,000 |
| கூலி | 6,000 | சம்பளம் | 23,500 |
| விளம்பரம் | 7,000 | வங்கிக் கடன்மீது வட்டி | 4,500 |
| எடுப்புகள் | 60,000 | கூடுதல் முதல் | 21,000 |
சரிக்கட்டுதல்கள்:
இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.
27.
அருணா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து
(i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
(ii) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம்
(iii) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகளின் சுழற்சி விகிதம் மற்றும்
(iv) நிலைச்சொத்துகள் சுழற்சி விகிதம் கணக்கிடவும்.
| விவரம் | 2018, மார்ச் 31 ரூ. |
2019, மார்ச் 31 ரூ. |
|---|---|---|
| சரக்கிருப்பு | 3,60,000 | 4,40,000 |
| கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 7,40,000 | 6,60,000 |
| கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 1,90,000 | 2,30,000 |
| நிலைச் சொத்துகள் | 6,00,000 | 8,00,000 |
கூடுதல் தகவல்கள்:
(i) அவ்வாண்டில் விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.35,00,000
(ii) அவ்வாண்டில் கொள்முதல் ரூ.21,00,000
(iii) விற்பனையிலிருந்து பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.16,00,000.
விற்பனை மற்றும் கொள்முதலை கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் எனக் கொள்ளவும்.
28.
பின்வரும் இருப்பு நிலைக்குறிப்பு பியர்ல் என்பவரின் ஏடுகளிலிருந்து 1-4-2018-ம் நாளன்று தயார் செய்யப்பட்டது.
அவ்வாண்டில் நடைபெற்ற நடவடிக்கைகள் பின்வருமாறு
| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|
| முதல் பற்பல கடனீந்தோர்: | 1,60,000 | கட்டடம் | 40,000 |
| மாயா க/கு | 20,000 | அறைகலன் | 20,000 |
| சரக்கிருப்பு | 10,000 | ||
| பற்பல கடனாளிகள்: | |||
| பீட்டர் | 20,000 | ||
| கை ரொக்கம் | 30,000 | ||
| வாங்கி ரொக்கம் | 60,000 | ||
| 1,80,000 | 1,80,000 |
(அ) கூலி ரொக்கமாக வாங்கியது ரூ. 4,000
(ஆ) சம்பளம் காசோலை மூலம் வழங்கியது ரூ. 10,000
(இ) ரொக்கக் கொள்முதல் மேற்கொண்டது ரூ. 4,000
(ஈ) யாழினியிடம் கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ. 30,000
(உ) ஜோதிக்கு கடனுக்கு சரக்கு விற்றது ரூ. 40,000
(ஊ) யாழினிக்கு NEFT மூலம் செலுத்தியது ரூ. 6,000
(எ) பீட்டரிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ. 10,000
(ஏ) ரொக்க விற்பனை மேற்கொண்டது ரூ. 4,000
(ஐ) கட்டடம் மீதான தேய்மானம் 20%
(ஒ) 31-3-2019 அன்றைய இறுதி சரக்கிருப்பு ரூ. 9,000
31-3-2019 நாளேடு முடிவடையும் ஆண்டிற்கான வியாபார மற்றும் இலாப நட்டக் கணக்கையும், இருப்புநிலைக் குறிப்பையும் Tally உதவியுடன் தயார் செய்யவும்.
29.
பின்வரும் தகவல்களிலிருந்து, உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
(அ) சாதாரண இலாப விகிதம் 10%
(ஆ) கடந்த 4 ஆண்டுகளின் இலாபங்கள் ரூ.30,000, ரூ.40,000, ரூ.50,000 மற்றும் ரூ.45,000.
(இ) மேற்குறிப்பிட்ட இலாபம் ரூ.30,000 ல் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.3,000 சேர்ந்துள்ளது.
(ஈ) சராசரி பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.3,00,000.
30.
அருணன் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து
(i) புற அக பொறுப்புகள் விகிதம்
(ii) உரிமையாளர் விகிதம் மற்றும்
(iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்
| விவரம் | ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| அ) பங்கு முதல் | |
| நேர்மைப் பங்குமுதல் | 1,50,000 |
| 8% முன்னுரிமைப் பங்குமுதல் | 2,00,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 1,50,000 |
| 2. நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்டகாலக் கடன்கள் (9% கடனீட்டுப் பத்திரங்கள்) | 4,00,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள் | 25,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 75,000 |
| மொத்தம் | 10,00,000 |
| II. சொத்துகள் | |
| 1. நீண்டகாலச் சொத்துகள் | |
| நிலைச் சொத்துகள் | 7,50,000 |
| 2. நடப்புச் சொத்துகள் | |
| (அ) சரக்கிருப்பு | 1,20,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 1,00,000 |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் | 27,500 |
| (ஈ) இதர நடப்புச் சொத்துகள் செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது | 2,500 |
| மொத்தம் | 10,00,000 |
31.
புராகிரஸ் வரையறு நிறுமம் 50,000 சாதாரணப் பங்குகளை, பங்கொன்று ரூ.10 வீதம் வெளியிட்டது. விண்ணப்பத்தின் போது ரூ.2, ஒதுக்கீட்டின் போது ரூ.4 முதலாவது அழைப்பின் போது ரூ.2 மற்றும் இரண்டாவது அழைப்பின் போது ரூ.2 செலுத்தப்பட வேண்டும். அனைத்து பங்குகளும் ஒப்பப்பட்டன மற்றும் அனைத்து தொகைகளும் முறையாக பெறப்பட்டன. குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.
32.
சார்லஸ், முத்து மற்றும் சேகர் என்ற கூட்டாளிகள் முறையே 3:4:2 என்ற விகிதத்தில் இலாபங்களைப் பகிர்ந்து கொண்டனர். 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | அறைகலன் | 20,000 | ||
| சார்லஸ் | 30,000 | சரக்கிருப்பு | 40,000 | |
| முத்து | 40,000 | கடனாளிகள் | 30,000 | |
| சேகர் | 20,000 | 90,000 | வங்கி ரொக்கம் | 42,000 |
| தொழிலாளர் ஈட்டு நிதி | 27,000 | இலாபநட்ட க/கு | 18,000 | |
| பற்பல கடனீந்தோர் க/கு | 33,000 | |||
| 1,50,000 | 1,50,000 |
1.1.2019 அன்று பின்வரும் ஏற்பாடுகளின்படி சார்லஸ் கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
(i) சரக்கிருப்பின் மதிப்பு 10% அதிகரிக்கப்பட வேண்டும்
(ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
(iii) வாராக்கடன் மீது ரூ. 1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்
(iv) கொடுபடா பழுதுபார்ப்புச் செலவு ரூ.10,000 இன்னமும் பதியப்படவில்லை
(v) சார்லஸிற்கு உரியத்தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது
மறுமதிப்பீட்டுக் கணக்கு, விலகலுக்குப் பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்
33.
ஜெனிபர் நிறுமம் பங்கொன்று ரூ.10 முகமதிப்புள்ள 10,000 பங்குகளை வெளியிட்டது. பங்கொன்றுக்கு விண்ணப்பத்தின் மீது ரூ.3, ஒதுக்கீட்டின் மீது ரூ.3, முதல் அழைப்பின் மீது ரூ.2 மற்றும் இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பின் மீது ரூ.2 செலுத்த வேண்டி இருந்தது. சுப்பு என்பவர் 100 பங்குகளுக்கான இரண்டாவது மற்றும் இறுதி அழைப்பினைக் கட்ட தவறினார். எஞ்சிய தொகைகள் அனைத்தும் பெறப்பட்டன. சுப்புவின் பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன மற்றும் அவைகள் ஹேமா என்பவருக்கு பங்கு ஒன்று ரூ.7 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.
34.
சென்னை விளையாட்டு மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்
| விவரம் | ரூ | விவரம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|
| தொடக்க இருப்பு (1.4.2017) | 10,000 | சந்தா பெற்றது | ||
| தொடக்க வங்கி இருப்பு (1.4.2017) | 15,000 | 2016 – 2017 | 4,500 | |
| வட்டி செலுத்தியது | 5,000 | 2017 – 2018 | 65,000 | |
| தொலைபேசி செலவுகள் | 7,000 | 2018 – 2019 | 5,000 | 74,500 |
| மைதானம் பராமரித்தது | 22,500 | தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் | 12,500 | |
| ஆயுள் உறுப்பினர் கட்டணம் பெற்றது | 5,500 | தொடர் விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள் | 15,000 | |
| மட்டைகள் மற்றும் பந்துகள் வாங்கியது | 13,000 | இறுதி ரொக்க இருப்பு (31.3.2018) | 5,000 |
35.
ஒரு நிறுமத்தின் குறும ஒப்பமாக வெளியிடப்பட்ட முதலில் ______ பெற்று இருக்க வேண்டும்.
30 சதவிகிதம்
60 சதவிகிதம்
90 சதவிகிதம்
100 சதவிகிதம்
36.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு செய்வதற்கு பல்வேறு ______ பயன்படுத்தப்படுகின்றன.
கருவிகள்
தன்மைகள்
இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
37.
கூட்டாளியின் விலகலின் பொழுது இருப்புநிலைக் குறிப்பில் தோன்றக்கூடிய இனங்களாகிய இலாப நட்டக் கணக்கு மற்றும் பொதுக்காப்பு ஆகியவை மாற்றப்படுவது.
மறுமதிப்பீட்டுக் கணக்கில்
கூட்டாளிகளின் முதல் கணக்குகளில்
நடப்பு கணக்குகளில்
மேற்கண்ட எதுவுமில்லை
38.
வாங்கப்பட்ட நற்பெயரானது இருப்புநிலைக் குறிப்பில் எங்கு காட்டப்பட வேண்டும்?
பொறுப்புகள்
சொத்துகள்
பற்று
இவற்றில் எதுவுமில்லை
39.
______ கலை, பண்பாடு, கல்வி மற்றும் விளையாட்டு போன்றவற்றை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்படுகின்றன.
வியாபார நிறுவனங்கள்
நிதி நிறுவனங்கள்
இலாப நோக்கமற்ற அமைப்புகள்
இவற்றில் எதுவுமில்லை
40.
கூட்டாளி சேர்க்கையின் பொழுது, பழைய இலாபப் பகிர்வு விகிதத்திற்கும் இடையேயான வேறுபாடு ________ விகிதம் ஆகும்
புதிய இலாபப் பகிர்வு
பழைய இலாபப் பகிர்வு
தியாக
ஆதாய
41.
ஒரு தொழில் உரிமையாளரின் மொத்தச் சொத்துக்கள் ரூ.5,00,000; அவருடைய பொறுப்புகள் ரூ.3,50,000; அவருடைய முதல் _____ ஆகும்.
ரூ.1,50,000
ரூ.8,50,000
ரூ.3,50,000
ரூ.2,50,000
42.
வணிக நிறுவனங்களின் நிதிநிலை மற்றும் இயக்க செயல்பாட்டை _____ பகுப்பாய்வின் மூலம் அறிய முடியும்.
நிதிநிலை
போக்கு
ரொக்க ஓட்டம்
இவற்றில் எதுவுமில்லை
43.
கூட்டாண்மையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை
25
50
10
20
44.
ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கிய பின்பும் ஒவ்வொரு முறை Tallyஐ துவக்கும் போதும் _______ தோன்றும்.
Tally யின் திரை
Tally option button
Image
இவற்றில் எதுவுமில்லை
45.
நிதிநிலை அறிக்கைகள் வெளிக்காட்டாதது.
பணம்சாரா தகவல்கள்
கடந்தகால தகவல்கள்
குறுகிய கால தகவல்கள்
நீண்டகால தகவல்கள்
46.
ஒரு கூட்டாளி விலகலின்போது, ஆதாய விகிதத்தின் நிர்ணயம் எதற்கு தேவைப்படுகிறது?
மறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நட்டம் மாற்றப்படுவதற்கு
பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்தளிப்பதற்கு
நற்பெயரை சரிக்கட்டுவதற்கு
மேற்கண்ட எதுவுமில்லை
47.
கூட்டாளி சேர்ப்பு தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானதல்ல?
பொதுவாக கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகள் மாறும்
முந்தைய ஆண்டுகளின் இலாபம் மற்றும் நட்டங்கள் பழைய கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
கூட்டாண்மை நிறுவனமானது புதிய ஒப்பந்தத்தின் கீழ் மறு கட்டமைக்கப்படும்
ஏற்கனவே உள்ள ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டு வரப்படாது
48.
49.
புற அகப் பொறுப்புகள் அளவிடுவது ______.
குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்
நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்
இலாபம் ஈட்டும் திறன்
செயல்திறன்
50.
அறைகலன் கடனுக்கு வாங்கியதை Tally-இல் எந்த வகை சான்றாவணத்தில் பதியப்படும்?
பெறுதல்கள் சான்றாவணம்
உரிய குறிப்பேடு சான்றாவணம்
கொள்முதல் சான்றாவணம்
பெறுதல்கள் சான்றாவணம்
51.
வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது ______.
இலாபம் அல்லது நட்டம்
ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு
உபரி அல்லது பற்றாக்குறை
நிதிநிலை
52.
53.
54.
முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு _____.
பத்திர முனைமக் கணக்கு
அழைப்பு முன்பணக் கணக்கு
பங்குமுதல் கணக்கு
பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு
1.
நிதிநிலை அறிக்கைகள் வியாபார நிறுவனத்தின் இயக்க முடிவுகள் மற்றும் நிதிநிலையை வெளிப்படுத்துகின்றன. பல்வேறு பயனீட்டாளர்களுக்கான நிதிநிலை அறிக்கைகளின் முக்கியத்துவம் பின்வருமாறு:
1) மேலாண்மைக்கு : நிதி நிலை அறிக்கைகளானது முடிவுகளை எடுப்பதற்கும் மற்றும் பல்வேறு துறைகளில் வணிக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் தேவையானத் தகவல்களை மேலாண்மைக்குத் தருகிறது.
2) பங்குதாரர்களுக்கு: வணிக நிறுவனம் வளர்ச்சிக்கு தேவையான ஆதாரங்களைக் கொண்டுள்ளதா மற்றும் தொடர்ந்து பங்குதாரராக நீடிப்பதா என்பதை முடிவு செய்யவும் பங்குதாரர்களுக்கு நிதிநிலை அறிக்கைகள் உதவியாக இருக்கின்றன.
3) எதிர்கால முதலீட்டாளர்களுக்கு: பத்திரங்களை மதிப்பீடு செய்து அவற்றை பிற தொழிலமைப்புகளின் பத்திரங்களோடு ஒப்பீடு செய்து அதனடிப்படையில் தங்கள் முதலீடுகள் மீதான முடிவினை எடுப்பதற்கு நிதிநிலை அறிக்கைகள் பயனுள்ளதாக இருக்கின்றன.
2.
இம்முறையில், நற்பெயரானது கூட்டு சராசரி இலாபத்தினைக் கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கையால் பெருக்குவதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
நற்பெயர் = கூட்டு சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
இம்முறையில், ஒவ்வொரு ஆண்டு இலாபத்தை மீதும் நிறைகள் ஒதுக்கப்படுகின்றன. ஒதுக்கப்பட்ட நிறைகளை அந்தந்த ஆண்டின் இலாபத்தோடு பெருக்கி கூட்டு இலாபம் கண்டறியப்படுகிறது. கூட்டு சராசரி இலாபம் கணக்கிட, கூட்டு இலாபத்தின் மொத்தத்தை ஒதுக்கப்பட்ட நிறைகளின் மொத்தத்தால் வகுக்க வேண்டும்.
இம்முறையானது, இலாபத்தின் போக்கு படிப்படியாக அதிகரித்துக் கொண்டு அல்லது குறைந்து கொண்டு போகும்போது பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, சமீபத்திய ஆண்டுகளின் இலாபத்திற்கு அதிக நிறை ஒதுக்கப்படுகிறது.
3.
(i) நிறுவனம் பெற்றுள்ள நல்ல பெயர், நிறுவனத்தின் தற்போதைய அல்லது எதிர்காலத்தில் ஈட்டப் போகும் இலாபத்தில் பாதிப்பை உண்டாக்கும்.
(ii) கூட்டாளி விலகும்போது, விலகும் கூட்டாளியின் இலாபத்திலிருந்து ஒரு பகுதியை தொடரும் கூட்டாளிகள் ஆதாயமாகப் பெறுகின்றனர்.
(iii) எனவே, விலகும் கூட்டாளியின் நற்பெயர் மதிப்பிடப்பட்டு அவருடைய பங்கு ஆதாயம் பெறும் கூட்டாளிகளின் முதல் கணக்கில் சரி செய்யப்பட வேண்டும். அதற்கான குறிப்பேட்டுப் பதிவு பின்வருமாறு.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|---|---|---|---|---|
| தொடரும் கூட்டாளிகளின் முதல் / நடப்பு க/கு | XXX | |||
| (ஆதாய விகிதத்தில்) | ||||
| விலகும் கூட்டாளி முதல் / நடப்பு க/கு | XXX |
4.
1) சந்தா
இலாப நோக்கற்ற அமைப்புகள் பொதுவாக சந்தா தொகையை உறுப்பினர்களிடமிருந்து பருவந்தோறும் வசூலிக்கின்றன.
2) இவை மாதம் தோறும், காலாண்டு தோறும், அரையாண்டு தோறும் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை வசூலிக்கப்படலாம்.
3) உதாரணமாக டென்னிஸ் சந்தா, பில்லியார்ட்ஸ் விளையாடும் குறிப்பிட்ட உறுப்பினர்களிடமிருந்து மட்டுமே வசூலிக்கப்படுகின்றன.
1) நன்கொடைகள்
1) இலாப நோக்கற்ற அமைப்புகளால் பெறப்படும் பரிசுத்தொகை நன்கொடை எனப்படும்.
2) இது பொது நன்கொடையாக அல்லது குறிப்பிட்ட நன்கொடையாக இருக்கலாம்.
பொது நன்கொடை: எந்தவொரு குறிப்பிட்ட நிபந்தனையும் இல்லாமல் பெறப்படும் நன்கொடை, பொது நன்கொடையாகும். இது ஒரு வருவாயின வரவாகும்.
5.
சொத்துகளையும், பொறுப்புகளையும் மறுமதிப்பீடு செய்யும் போது பின்வரும் குறிப்பேட்டு பதிவுகள் செய்யப்படுகின்றன.
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 1.சொத்துக்களின் மதிப்பு அதிகரிக்கும் போது குறிப்பிட்ட சொத்து க/கு | ப | XXX | |||
| மறுமதிப்பீட்டு க/கு | XXX | ||||
| 2.சொத்துக்களின் மதிப்பு குறையும் போது மறுமதிப்பீட்டு சொத்து க/கு |
ப | XXX | |||
| குறிப்பிட்ட சொத்து க/கு | XXX | ||||
| 3. பொறுப்புகளின் மதிப்பு குறையும் போது மறுமதிப்பீட்டு க/கு |
ப | XXX | |||
| குறிப்பிட்ட பொறுப்பு க/கு | XXX | ||||
| 4. பொறுப்புகளின் மதிப்பு குறையும் போது குறிப்பிட்ட பதிவு க/கு |
ப | XXX | |||
| மறுமதிப்பீட்டு க/கு | XXX | ||||
| 5. ஏட்டில் பதிவு செய்யாத பொறுப்புகளை பதிவு செய்யும் போது குறிப்பிட்ட சொத்து க/கு | ப | XXX | |||
| மறுமதிப்பீட்டு க/கு | XXX | ||||
| 6. ஏட்டில் பதிவு செய்யாத பொறுப்புகளை பதிவு செய்யும் போது மறுமதிப்பீடு க/கு | ப | XXX | |||
| குறிப்பிட்ட பொறுப்பு க/கு | XXX | ||||
| 7. மறுமதிப்பீட்டு கணக்கின் இருப்பினை மாற்ற (அ) மறுமதிப்பீட்டு இலாபமாக இருந்தால் மறுமதிப்பீடு க/கு |
ப | XXX | |||
| பழைய கூட்டாளிகளின் முதல் க/கு (பழைய விகிதத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக) |
XXX | ||||
| (ஆ) மறுமதிப்பீட்டு நட்டமாக இருந்தால் பழைய கூட்டாளிகளின் முதல் க/கு (பழைய விகிதத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக) |
ப | XXX | |||
| மறுமதிப்பீட்டு க/கு | XXX |
6.
7.
கழிவு கணக்கிடுதல்
= ரூ. 60,000 x \(\frac { 20 }{ 100 } \) = ரூ.12,000
மனோஜ் = சிபியின் கழிவுக்குப் பின் உள்ள நிகர இலாபம்
= 60,000 - 12,000 = ரூ.48,000
= ரூ.48,000 x \(\frac { 20 }{ (100+20) } \) = ரூ.48,000 x \(\frac { 20 }{ 100 } \)
= ரூ.8,000
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| இலாபநட்டப் பகிர்வு க/கு | ப | 20,000 | |||
| சிபி கழிவு க/கு | 12,000 | ||||
| மனோஜ் கழிவு க/கு | 8,000 | ||||
| (இலாபநட்டப் பகிர்வு கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
8.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| கடனீந்தோர் | 9,000 | ரொக்கம் | 5,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 6,000 | வங்கி ரொக்கம் | 24,000 |
| முதல் (இருப்புக் கட்டும் தொகை) | 88,000 | சரக்கிருப்பு | 18,000 |
| கடனாளிகள் | 16,000 | ||
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 7,000 | ||
| நிலம் மற்றும் கட்டடங்கள் | 30,000 | ||
| அறைகலன் | 3,000 | ||
| 1,03,000 | 1,03,000 |
9.
ஒரு நிறுமம் தனது பங்குகளை முகமதிப்பினை விட (பெயரளவு மதிப்பு) அதிக விலைக்கு வெளியிடும் போது அந்தப் பங்குகள் முனைமத்தில் வெளியிடுதல் என்று அழைக்கப்படுகிறது.
10.
ஒரு நிறுவனத்தில் வழக்கமான ஊழியராக இல்லாத ஒருவருக்கு வழங்கப்படும் ஊதியமே மதிப்பூதியம் எனப்படும். இது ஒரு வருவாயினச் செலவாகும்.
11.
செயல்பாட்டின் அடிப்படையில் விகிதங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.
(i) நீர்மைத் தன்மை விகிதங்கள்.
(ii) நீண்டகால கடன்தீர்க்கும் விகிதங்கள்
(iii) சுழற்சி விகிதங்கள்
(iv) இலாபத் தன்மை விகிதங்கள்
12.
ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் ஒரு நபரை புதிய கூட்டாளியாக சேர்க்கலாம். இதுவே கூட்டாளி சேர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான கூடுதல் முதல் பெறுவதற்காகவும் அல்லது புதிய கூட்டாளி சேர்க்கப்படலாம்
13.
கூட்டாண்மை நிறுவனம் என்பது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நபர்களோ, அவர்களுக்கிடையே ஏற்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு தொழிலை ஏற்று நடத்தும் தொழில் வடிவமைப்பு ஆகும். கூட்டாண்மைத் தொழிலை ஏற்று நடத்த ஒப்புக் கொள்ளும் நபர்களை தனித்தனியாக கூட்டாளிகள் எனவும், ஒட்டுமொத்தமாக நிறுவனம் என்றும் அழைக்கிறோம்.
14.
| விவரம் | ரூ. (ஆயிரத்தில்) | போக்கு சதவீதங்கள் | ||||
|---|---|---|---|---|---|---|
| 2015-16 | 2016-17 | 2017-18 | 2015-16 | 2016-17 | 2016-17 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 400 | 500 | 600 | 100 | 125 | 150 |
| கூட்டுக:இதர வருமானம் | 100 | 150 | 200 | 100 | 150 | 200 |
| மொத்தம் | 500 | 650 | 800 | 100 | 130 | 160 |
| கழிக்க: செலவுகள் | 200 | 290 | 350 | 100 | 145 | 175 |
| வரிக்கு பின்னர் உள்ள இலாபம் | 300 | 360 | 450 | 100 | 120 | 150 |
குறிப்பு :
| 2016-17 | 2017-18 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாயின் சதவீதம் | \(=\frac{500}{400}\times 100=125\%\) | \(=\frac{600}{400}\times 100=150\%\) |
| இதர வருமானத்தின் சதவீதம் | \(=\frac{150}{100}\times 100=150\%\) | \(=\frac{200}{100}\times 100=200\%\) |
| மொத்த வருமானங்களின் சதவீதம் | \(=\frac{650}{500}\times 100=130\%\) | \(=\frac{800}{500}\times 100=160\%\) |
| செலவுகளின் சதவீதம் | \(=\frac{290}{200}\times 100=145\%\) | \(=\frac{350}{200}\times 100=175\%\) |
| வரிக்கு பின்னர் உள்ள இலாபம் | \(=\frac{360}{300}\times 100=120\%\) | \(=\frac{450}{300}\times 100=150\%\) |
15.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்விற்கு பயன்படுத்தப்படும் கருவிகளில் பொதுவானவை
பின்வருமாறு:
1) ஒப்பீட்டு அறிக்கை
2) பொது அளவு அறிக்கைகள்
3) போக்குப் பகுப்பாய்வு
4) நிதி ஓட்டப் பகுப்பாய்வு
5) ரொக்க ஓட்டப் பகுப்பாய்வு
16.
| விவரம் | ரூ. |
|---|---|
| இறுதி முதல் (மார்ச் 31, 2019) | 8,50,000 |
| கூட்டுக: அவ்வாண்டில் எடுப்புகள் | 70,000 |
| 9,20,000 | |
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் | 1,20,000 |
| சரிகட்டப்பட்ட இறுதி முதல் | 8,00,000 |
| கழிக்க: தொடக்க முதல் (ஏப்ரல் 1, 2018) | 5,00,000 |
| அவ்வாண்டின் இலாபம் | 3,00,000 |
17.
18.
(i) ஒரு தொழிலுக்கு நன்மையை தரக்கூடிய அத்தொழிலின் புகழ் அல்லது நன்மதிப்பு நற்பெயர் ஆகும். இது அத்தொழிலுக்கு அதிக இலாபம் ஈட்ட உதவுகிறது
(ii) இது எதிர்காலத்தில் நிறுவனம் மிகுதியாக ஈட்டக்கூடிய வருமானங்களில் தற்போதைய மதிப்பு ஆகும்
19.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. |
வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 2017 மார்ச் 31 | பொதுக்காப்பு க/கு ப | 60,000 | ||
| விவின் முதல் க/கு (60000 x 3/6) | 30,000 | |||
| ஹரி முதல் க/கு (60000 x 2/6) | 20,000 | |||
| ஜாய் முதல் க/கு (60000 x 1/6) | 10,000 | |||
| (பொதுக்காப்பு அனைத்துக் கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்பட்டது) |
20.
| விவரம் | 2016-17 ரூ. |
2016-17 விற்பனை மூலம் பெற்ற வருவாயில் சதவீதம் |
2016-17 தொகை |
2016 விற்பனை மூலம் பெற்ற வருவாயில் சதவீதம் |
|---|---|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,00,000 | 100 | 6,00,000 | 100 |
| கூட்டுக: இதர வருமானங்கள் | 50,000 | 12.50 | 1,50,000 | 25 |
| மொத்த வருவாய் | 4,50,000 | 112.50 | 7,50,000 | 125 |
| கழிக்க: செலவுகள் | 5,00,000 | 125 | 3,00,000 | 50 |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம்/நட்டம் | -50,000 | -12.50 | 10,50,000 | 125 |
| கழிக்க: வருமான வரி (40%) | - | - | 4,20,000 | 70 |
| வரிக்கு பின்னர் உள்ள இலாபம் | -50,000 | -12.50 | 6,30,000 | 55 |
21.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 2,000 | நிலம் க/கு | 11,000 | |
| கடனாளிகள் க/கு | 3,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| சுந்தர் முதல் க/கு (3/6) | 3,000 | |||
| விவேக் முதல் க/கு (2/6) | 2,000 | |||
| பாண்டியன் முதல் க/கு (1/6) | 1,000 | 6,000 | ||
| 11,000 | 11,000 |
| விவரம் | சுந்தர் ரூ. |
விவேக் ரூ. |
பாண்டியன் ரூ. |
விவரம் | சுந்தர் ரூ. |
விவேக் ரூ. |
பாண்டியன் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இலாபநட்டக் க/கு | 3,000 | 2,000 | 1,000 | இருப்பு கீ/கொ | 50,000 | 40,000 | 10,000 |
| பாண்டியனின் | பொதுக்காப்பு க/கு | 18,000 | 12,000 | 6,000 | |||
| நிறைவேற்றாளர் க/கு | 16,000 | ||||||
| இருப்பு கீ/இ | 68,000 | 52,000 | மறுமதிப்பீட்டு க/கு | 3,000 | 2,000 | 1,000 | |
| (இலாபம்) | |||||||
| 71,000 | 54,000 | 17,000 | 71,000 | 54,000 | 17,000 | ||
| இருப்பு கீ/கொ | 68,000 | 52,000 | - |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | நிலம் | 80,000 | |||
| சுந்தர் | 68,000 | கூட்டுக: | |||
| விவேக் | 52,000 | 1,20,000 | மதிப்பேற்றம் | 11,000 | 91,000 |
| பாண்டியனின் | |||||
| நிறைவேற்றாளர் க/கு | 16,000 | சரக்கிருப்பு | 20,000 | ||
| பற்பல கடனீந்தோர் | 14,000 | கழிக்க: | |||
| மதிப்பு குறைவு | 2,000 | 18,000 | |||
| கடனாளிகள் | 30,000 | ||||
| கழிக்க: மதிப்பு குறைப்பு | 3,000 | 27,000 | |||
| வங்கி ரொக்கம் | 14,000 | ||||
| 1,50,000 | 1,50,000 |
22.
| செலவுகள் | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| சந்தா | 50,000 | |||
| கழிக்க: 2015-16 ஆம் ஆண்டுக்கான சந்தா | 6,000 | |||
| 44,000 | ||||
| கழிக்க: 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா | 3,500 | |||
| 40,500 | ||||
| கூட்டுக: 2016-17 ஆம் ஆண்டிற்கான சந்தா பெற வேண்டியது. | 1,500 | 42,000 |
23.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் மீதான வட்டி க/கு | இலாபநட்ட க/கு | 3,00,000 | ||
| மாலு (3,00,000 x 6%) | 18,000 | |||
| நீது (2,00,000 x 6%) | 12,000 | 30,000 | ||
| நீது ஊதிய க/கு | 50,000 | |||
| மாலு கழிவு க/கு | 20,000 | |||
| கூட்டாளிகளின் முதல் க/கு: | ||||
| (இலாபம்) | ||||
| மாலு (3/5) | 1,20,000 | |||
| நீது (2/5) | 80,000 | 2,00,000 | ||
| 3,00,000 | 3,00,000 |
குறிப்பு:
கழிவு கணக்கிடுதல்:
கழிவுக்கு முன் உள்ள இலாபம் = 3,00,000 - (50,000 + 30,000) = ரூ.2,20,000
கழிவு =
கழிவு = 2,20,000 x \(\frac { 10 }{ 110 } \) = ரூ.20,000
24.

நீண்டகாலக் கடன் = 9% கடனீட்டுப் பத்திரங்கள் = ரூ.4,00,000
பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + முன்னுரிமைப் பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி
= 1,50,000+2,00,000+1,50,000=ரூ.5,00,000
\(\therefore \) புற அக பொறுப்புகள் விகிதம் =
\(\cfrac { 4,00,000 }{ 5,00,000 } =0.8:1\)
(ii)

(iii)

= 8%முன்னுரிமைப் பங்குமுதல் +9% கடனீட்டுப் பத்திரங்கள்
= 2,00,000+4,00,000=ரூ 6,00,000
நேர்மைப் பங்குதாரர் நிதி = 1,50,000+1,50,000=ரூ.3,00,000
\(\therefore \) முதல் உந்து திறன் விகிதம் = \(\cfrac { 6,00,000 }{ 3,00,00 } =2:1\)
25.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 20,000 | வாகனம் க/கு | 40,000 | |
| கடனாளிகள் க/கு | 10,000 | பதிவுறா முதலீடு க/கு | 5,000 | |
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| அன்பு முதல் க/கு (3/5) | 9,000 | |||
| சங்கர் முதல் க/கு (2/5) | 6,000 | 15,000 | 45,000 |
| விவரம் | அன்பு ரூ. |
சங்கர் ரூ. |
ராஜேஷ் ரூ. |
விவரம் | அன்பு ரூ. |
சங்கர் ரூ. |
ராஜேஷ் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/கு | 5,20,000 | 3,80,000 | 1,50,000 | இருப்பு கீ/கொ | 4,00,000 | 3,00,000 | - |
| வங்கி க/கு | - | - | 1,50,000 | ||||
| இலாபநட்ட க/கு | 72,000 | 48,000 | 1,50,000 | ||||
| தொழிலாளர் ஈட்டு | - | ||||||
| நிதி க/கு (60,000-10,000) |
30,000 | 20,000 | - | ||||
| வங்கி க/கு (நற்பெயர் பங்கு) |
9,000 | 6,0000 | - | ||||
| 5,20,000 | 3,80,000 | 1,50,000 | 5,20,000 | 3,80,000 | 1,50,000 | ||
| 5,20,000 | 3,80,000 | 1,50,000 |
நிறுவனத்தின் நற்பெயர் = 75,5000
நற்பெயரில் இராஜேஷின் பங்கு = 75,000 x \(\frac { 1 }{ 5 } \)
இத்தொகை அன்பு மற்றும் சங்கர் அவர்கள் அவர்களின் தியாக விகிதம் 3 : 2 இல் பகிர்ந்து கொள்ளப்படவேண்டும்
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 40,000 | இருப்பு கீ/இ | 2,05,000 |
| இராஜேஷ் முதல் க/கு | 1,50,000 | ||
| அன்பு முதல் க/கு | 9,000 | ||
| சங்கர் முதல் | 6,000 | ||
| 2,05,000 | 2,05,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துக்கள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கணிப்பொறி | 40,000 | |||
| அன்பு | 5,20,000 | வாகனம் | 1,60,000 | ||
| சங்கர் | 3,80,000 | கூட்டுக: மதிப்பேற்றம் | 40,000 | 2,00,000 | |
| ராஜேஷ் | 1,50,000 | 10,50,000 | சரக்கிருப்பு | 4,00,000 | |
| கடனீந்தார் | 1,20,000 | கழிக்க: தேய்மானம் | 20,000 | 3,80,000 | |
| தொழிலாளர் ஈட்டுநிதி | 10,000 | கடனாளிகள் | 3,60,000 | ||
| (60,000 - 50,000) | கழிக்க: மதிப்பு குறைவு | 10,000 | 3,50,000 | ||
| வங்கி | 2,05,000 | ||||
| பதிவுறா முதலீடு | 5,000 | ||||
| 11,80,000 | 11,80,000 |
26.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| வங்கிக்கடன் | 45,000 | இயந்திரம் | 60,000 |
| பற்பல கடனீந்தோர் | 25,000 | வங்கி ரொக்கம் | 25,000 |
| தொடக்க முதல் | 1,50,000 | பற்பல கடனாளிகள் | 70,000 |
| (இருப்புக்கட்டும் தொகை) | சரக்கிருப்பு | 45,000 | |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 20,000 | ||
| 2,20,000 | 2,20,000 |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 45,000 | விற்பனை | |||
| கொள்முதல் | ரொக்கம் | 20,000 | |||
| ரொக்கம் | 8,000 | கடன் | 1,80,000 | 2,00,000 | |
| கடன் | 52,000 | 60,000 | இறுதிச் சரக்கிருப்பு | 22,000 | |
| கூலி | 6,000 | ||||
| மொத்த இலாபம் கீ/இ | 1,11,000 | ||||
| 2,22,000 | 2,22,000 | ||||
| விளம்பரம் | 7,000 | மொத்த இலாபம் கீ/கொ | 1,11,000 | ||
| சம்பளம் | 23,500 | ||||
| இயந்திரம் மீது தேய்மானம் 10% | 6,000 | ||||
| ஐயக்கடன் ஒதுக்கு 1% | 1,000 | ||||
| வங்கிக்கடன் மீது வட்டி | 4,500 | ||||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 69,000 | ||||
| 2,46,000 | 2,46,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் | 1,50,000 | நிலம் மற்றும் கட்டடம் | 60,000 | ||
| கூட்டுக: நிகர இலாபம் | 69,000 | கழிக்க:தேய்மானம் 10% | 6,000 | 54,000 | |
| 2,19,000 | வங்கி ரொக்கம் | 33,000 | |||
| கூட்டுக: கூடுதல் முதல் | 21,000 | பற்பல கடனாளிகள் | 1,00,000 | ||
| 2,40,000 | |||||
| கழிக்க:எடுப்புகள் | 60,000 | 1,80,000 | கழிக்க: ஐயக்கடன் ஒதுக்கு 1% | 1,000 | 99,000 |
| வங்கி கடன் | 45,000 | இறுதிச் சரக்கிருப்பு | 22,000 | ||
| பற்பல கடனாளிகள் | 21,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 38,000 | ||
| 5,01,000 | 2,46,000 |
27.

விற்பனை மூலம் பெற்ற வருவாயின் அடக்க விலை = ரூ.16,00,000

= \(\cfrac { 3,60,000+4,40,000 }{ 2 } =\cfrac { 80,000 }{ 2 } \)
= ரூ 4,00,000
சரக்கிருப்பு சுழற்சி விகிதம் = \(\cfrac { 16,00,000 }{ 4,00,000 } =4\) மடங்கு
(ii)

கடன் விற்பனை மூலம் பெற்ற வேண்டியவைகளின் சராசரி = 35,00,000

= \(\cfrac { 7,40,000+6,60,000 }{ 2 } =\cfrac { 14,00,000 }{ 2 } \)
= ரூ.7,00,000
கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம் = \(\cfrac { 35.00.000 }{ 7.00.000 } =5\) மடங்கு

நிகர கடன் கொள்முதல் = ரூ.21,00,000

= \(\cfrac { 1,90,000+2,30,000 }{ 2 } =\cfrac { 4,20,000 }{ 2 } \) = 21,00,000
கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகளின் சராசரி \(=\cfrac { 21,00,000 }{ 2,10,000 } \) = 10 மடங்கு
(iv)

விற்பனை மூலம் பெற்ற வருவாய் = ரூ.35,00,000

= \(\cfrac { 6,00,000+8,00,000 }{ 2 } =\cfrac { 14,00,000 }{ 2 } \) = ரூ.7,00,000
\(\therefore \) நிலை சொத்துகள் சுழற்சி விகிதம் = \(\cfrac { 35,00,000 }{ 7,00,000 } =5\) மடங்கு
28.
பின்வரும் படிநிலைகளை பின்பற்றி Tally.ERP,9-ல் நடவடிக்கைகளை பதிவு செய்யவும்.
(i) நிறுவனத்தை உருவாக்க (To create Company) :
Company Info > Create Company பியர்ல் என பெயரை குறிப்பிட்டு மற்ற அனைத்து விவரங்களையும் மாற்றம் செய்யலாம் 'ஆம்' (Yes) என ஏற்கவும்.
(ii) கணக்குகள் மட்டும் பராமரிக்க (Maintain accounts only) :
Gateway of Tally > F11 Accounting features > General > Maintain accounts only: Yes > Accept yes.
(iii) ஆரம்ப இருப்புகளுடன் பேரேட்டு கணக்குகளை உருவாக்க :
Gateway of Tally > Masters > Accounts Info > Ledger > (Create) :
| Creation of | Name | Under | Opening balance | Accept |
| Pearl's Capital A /c | Pearl's Capital A/c | Capital Account | 1,60,000 | Yes |
| Maya A/c(Sundry creditors) | Maya A/c | Sundry Creditors | 20,000 | Yes |
| Buildings A/c | Buildings A/c | Fixed Assets | 40,000 | Yes |
| Furniture A/c | Furniture A/c | Fixed Assets | 20000 | Yes |
| Opening stock | Opening stock | Stock-in-Hand | 10,000 | Yes |
| Peter A/c (Sundry debtors) | Peter A/c | Sundry Debtors | 20000 | Yes |
| Cash in hand | Cash | Cash-in-Hand | 30,000 | Yes |
| Cash at bank | Bank | Bank Accounts | 60,000 | Yes |

குறிப்பு : ரொக்கக் கணக்கு ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள பேரேடானதால் இதை உருவாக்க வேண்டியதில்லை. ரொக்க கணக்கை மாற்றம் செய்து ஆரம்ப இருப்பை மட்டும் பதிய வேண்டும்.
Gateway of Tally > Masters >Accounts Info> Ledgers> Single Ledger> Alter
29.
= \(\frac { 30,000+40,000+50,000+45,000 }{ 4 } \)
= \(\frac { 1,62,000 }{ 4 } \) = ரூ.40,500
சாதாரண இலாபம் = பயன்படுத்தப்பட்ட முதல் x சாதாரண இலாப விகிதம்
= 3,00,000 x 10%
= ரூ.30,000
உயர் இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம்
= 40,500 - 30,000
= 10,500
= \(\frac { 10,500 }{ 10 } \times 100\)
நற்பெயர் = ரூ.1,05,000
30.
(i) புற அக பொறுப்புகள் விகிதம் = =\(\frac {4,00,000}{5,00,000}\) = 0.8:1
நீண்டகாலக் கடன் = 9% கடனீட்டுப் பத்திரங்கள் = ரூ.4,00,000
பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + முன்னுரிமைப் பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி
= 1,50,000 + 2,00,000 + 1,50,000 = ரூ.5,00,000
(ii) உரிமையாளர் விகிதம் = =\(\frac {5,00,000}{10,00,000}\) = 0.5:1
(iii) முதல் உந்துதிறன் விகிதம் = =\(\frac {6,00,000}{3,00,000}\) = 2.1
நிலையான வட்டி மற்றும் நிலையான பங்காதாயம் ஈட்டுகின்ற நிதிகள்
= 8% முன்னுரிமைப் பங்கு முதல் + 9% கடனீட்டுப் ப த்திரங்கள்
= 2,00,000 + 4,00,000 = ரூ. 6,00,000
நேர்மைப் பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + பொதுக் காப்பு + மிகுதி
= 1,50,000 + 1,50,000 = ரூ. 3,00,000
31.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு | ப | 1,00,000 | |||
| பங்கு விண்ணப்பக் க/கு | 1,00,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெற்றது) | |||||
| பங்கு விண்ணப்பக் க/கு | ப | 1,00,000 | |||
| பங்கு முதல் க/கு | 1,00,000 | ||||
| (பங்கு விண்ணப்பத் தொகையை பங்கு முதல் கணக்கிற்கு மாற்றியது) | |||||
| பங்கு ஒதுக்கீட்டுக் க/கு | ப | 2,00,000 | |||
| பங்கு முதல் க/கு | 2,00,000 | ||||
| (பங்கு ஒதுக்கீட்டுக் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 2,00,000 | |||
| பங்கு ஒதுக்கீட்டுக் க/கு | 2,00,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| பங்கு முதல் அழைப்பு க/கு | ப | 1,00,000 | |||
| பங்கு முதல் க/கு | 1,00,000 | ||||
| (பங்கு முதல் அழைப்புத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 1,00,000 | |||
| பங்கு முதல் அழைப்பு க/கு | 1,00,000 | ||||
| (பங்கு முதல் அழைப்புத் தொகை பெற்றது) | |||||
| பங்கு இரண்டாவது அழைப்பு க/கு | ப | 1,00,000 | |||
| பங்கு முதல் க/கு | 1,00,000 | ||||
| (பங்கு மீதமான இரண்டாம் அழைப்புத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 1,00,000 | |||
| பங்கு இரண்டாவது அழைப்பு க/கு | 1,00,000 | ||||
| (இரண்டாவது அழைப்புத் தொகை பெற்றது) |
32.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| அறைகலன் க/கு | 1,000 | சரக்கிருப்பு க/கு | 4,000 | |
| வாராக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | மறுமதிப்பீட்டு நட்டம்: | ||
| கொடுபடா வேண்டிய பழுதுபரப்புச் செலவு | 11,000 | சார்லஸ் முதல் க/கு (3/9) | 3,000 | |
| முத்து முதல் க/கு (4/9) | 4,000 | |||
| சேகர் முதல் க/கு (2/9) | 2,000 | 9,000 | ||
| 13,000 | 13,000 |
| விவரம் | சார்லஸ் ரூ. |
முத்து ரூ. |
சேகர் ரூ. |
விவரம் | சார்லஸ் ரூ. |
முத்து ரூ. |
சேகர் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இலாபநட்ட க/கு | 6,000 | 8,000 | 4,000 | இருப்பு கீ/கொ | 30,000 | 40,000 | 20,000 |
| மறுமதிப்பீட்டுக் க/கு நட்டம் | 3,000 | 4,000 | 2,000 | தொழிலாளர் ஈட்டு நிதி | 9,000 | 12,000 | 6,000 |
| வங்கி க/கு | 30,000 | - | - | ||||
| இருப்பு கீ/இ | 40,000 | 20,000 | |||||
| 39,000 | 52,000 | 26,000 | 39,000 | 52,000 | 26,000 | ||
| - | 40,000 | 20,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | அறைகலன் | 20,000 | |||
| முத்து | 40,000 | கழிக்க : தேய்மானம் | 1,000 | 19,000 | |
| சேகர் | 20,000 | 60,000 | சரக்கிருப்பு | 40,000 | |
| பற்பல கடனீந்தோர் | 33,000 | கூட்டுக: மதிப்பேற்றம் | 4,000 | 44,000 | |
| கொடுபட வேண்டிய பழுதுபார்ப்புச் செலவு | 11,000 | கடனாளிகள் | 30,000 | ||
| கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு | 1,000 | 29,000 | |||
| வங்கி ரொக்கம் | 42,000 | ||||
| கழிக்க: சார்லஸிற்கு செலுத்தியது | 30,000 | 12,000 | |||
| 1,04,000 | 1,04,000 |
33.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (10,000 x 3) | ப | 30,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 30,000 | ||||
| (பங்கு விண்ணப்பப் பணம் பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | ப | 30,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 30,000 | ||||
| (பங்கு விண்ணப்பப் பணம் பங்குமுதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| நேர்மைப்பங்கு ஒதுக்கீட்டு க/கு (10,000 x 3) | 30,000 | ||||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 30,000 | ||||
| வங்கி க/கு (10,000 x 3) | ப | 30,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 30,000 | ||||
| (ஒதுக்கீட்டுப் பணம் பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு | ப | 20,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 20,000 | ||||
| (முதல் அழைப்பு பணம் பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (10,000 x 2) | ப | 20,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு | 20,000 | ||||
| (முதல் அழைப்பு பணம் பெற்றது | |||||
| நேர்மைப் பங்கு இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பு க/கு (10,000 x 2) | ப | 20,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 20,000 | ||||
| (இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பு பணம் பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (9,900 x 2) | ப | 19,800 | |||
| நேர்மைப் பங்கு இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பு க/கு | 19,800 | ||||
| (இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பு பணம் பெற்றது) | |||||
| நேர்மைப் பங்குமுதல் க/கு (100 x 10) | ப | 1,000 | |||
| நேர்மைப் பங்கு இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பு க/கு | 200 | ||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு | 800 | ||||
| (100 பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டது) | |||||
| வங்கி க/கு (100 x 7) | ப | 700 | |||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு | ப | 300 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு (100 x 10) | 1,000 | ||||
| (ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகள் மறுவெளியீடு செய்யப்பட்டது) | |||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (800-300) | ப | 500 | |||
| முதலினக் காப்பு க/கு | 500 | ||||
| (மறுவெளியீட்டு இலாபம் முதலினக்காப்பு கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
34.
| பெறுதல்கள் | ரூ | ரூ | செலுத்தல்கள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | வட்டி செலுத்தியது | 5,000 | |||
| ரொக்கம் | 10,000 | தொலைபேசிக் கட்டணம் | 7,000 | ||
| வங்கி | 15,000 | 25,000 | மைதானம் பராமரிப்புச் செலவுகள் | 22,500 | |
| ஆயுள் உறுப்பினர் கட்டணம் | 5,500 | மட்டைகள் மற்றும் பந்துகள் வாங்கியது | 13,000 | ||
| தொடர் விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள் | 15,000 | போட்டிச் செலவுகள் | 12,500 | ||
| சந்தா பெற்றது | இருப்பு கீ/இ | ||||
| 2016 – 2017 | 4,500 | ரொக்கம் | 5,000 | ||
| 2017 – 2018 | 65,000 | வங்கி (இருப்புக் கட்டும் தொகை) | 55,000 | 60,000 | |
| 2018 – 2019 | 5,000 | 74,500 | |||
| 1,20,000 | 1,20,000 |
35.
(c)
90 சதவிகிதம்
36.
(a)
கருவிகள்
37.
(b)
கூட்டாளிகளின் முதல் கணக்குகளில்
38.
(b)
சொத்துகள்
39.
(c)
இலாப நோக்கமற்ற அமைப்புகள்
40.
(c)
தியாக
41.
(a)
ரூ.1,50,000
42.
(a)
நிதிநிலை
43.
(b)
50
44.
(a)
Tally யின் திரை
45.
(a)
பணம்சாரா தகவல்கள்
46.
(c)
நற்பெயரை சரிக்கட்டுவதற்கு
47.
(d)
ஏற்கனவே உள்ள ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டு வரப்படாது
48.
(d)
49.
(b)
நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்
50.
(b)
உரிய குறிப்பேடு சான்றாவணம்
51.
(c)
உபரி அல்லது பற்றாக்குறை
52.
(b)
53.
(d)
54.
(a)
பத்திர முனைமக் கணக்கு
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards