12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Creative Three mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
ஜனனி, ஜானகி, மற்றும் ஜமுனா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்கள் மற்றும் நட்டங்களை முறையே 3:3:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2017, டிசம்பர் 31 அன்று ஜானகி இறந்து விட்டார். அவருக்குச் செலுத்த வேண்டிய தொகை ரூ.1,40,000 என வரவிருப்பைக் காட்டியது. கீழ்க்கண்ட நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
(i) செலுத்த வேண்டியதொகை காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பட்டது.
(ii) செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
(iv) உடனடியாக ரூ.75,000 காசோலை மூலம் செலுத்தப்பட்டது,மீதித்தொகை இன்னும் செலுத்தப்பட வேண்டி உள்ளது.
2.
ரொக்க ஓட்ட பகுப்பாய்வு குறித்து சிறு குறிப்பு வரைக.
3.
கூட்டாளி சேர்ப்பின் போது மேற்கொள்ள வேண்டிய சரிகட்டுதல்கள் யாவை?
4.
5.
பின்வரும் விவரங்கள் தூத்துக்குடி இளம் முன்னோடிகள் சங்கத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
சங்கத்தில் 100 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ரூ.25 ஆண்டுச் சந்தாவாக செலுத்துகின்றனர். ஆண்டிறுதியில் 10 உறுப்பினர்கள் சந்தா செலுத்தாமல் இருந்தனர். ஆனால் நான்கு உறுப்பினர்கள் அடுத்த ஆண்டிற்கான சந்தா தொகையை முன்கூட்டிச் செலுத்தி இருந்தனர்
6.
2018, ஏப்ரல் 1 அன்று சுபா தன்னுடைய தொழிலை ரூ. 1,20,000 முதலுடன் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. 2019, மார்ச் 31 அன்று அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| வங்கி மேல்வரைப்பற்று | 50,000 | சரக்கிருப்பு | 1,60,000 |
| கடனாளிகள் | 1,80,000 | கடனீந்தோர் | 90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 70,000 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 2,40,000 |
| கணினி | 30,000 | கைரொக்கம் | 60,000 |
| இயந்திரம் | 3,00,000 |
அவ்வாண்டில் அவர் தன்னுடைய சொந்த பயனுக்காக ரூ. 30,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ.40,000. அவருடைய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.
7.
இராஜேஷ் மற்றும் இரமேஷ் எனும் கூட்டாளிகள் 3:2 என இலாபநட்டம் பகிர்ந்து வந்தனர். இராமன் என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். அவர்களது புதிய இலாப விகிதம் 5:3:2. பின்வரும் மறுமதிப்பீடுகள் செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.
(அ) கட்டடத்தின் மதிப்பு ரூ.15,000 உயர்த்தப்பட்டது
(ஆ) இயந்திரத்தின் மதிப்பு ரூ.4,000 குறைக்கப்பட்டது
(இ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.1,000 உருவாக்கப்பட்டது.
8.
கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு:
(i) ஈட்டிய இலாபங்கள்: 2016: ரூ.25,000; 2017: ரூ.23,000 மற்றும் 2018: ரூ.26,000.
(ii) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.2,500 சேர்ந்துள்ளது.
(iii) சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்ததால் 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் ரூ.3,500 குறைக்கப்பட்டது.
(iv) சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான காப்பீட்டுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.250 என மதிப்பிடப்பட்டது.
3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
9.
அருள் வணிக நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
(அ) டிசம்பர் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுகளான 2016, 2017 மற்றும் 2018 ன் இலாபங்கள் முறையே ரூ.46,000, ரூ.44,000, மற்றும் ரூ.50,000.
(ஆ) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.5,000 சேர்ந்துள்ளது.
(இ) 2017ஆம் ஆண்டின் இறுதிச் சரக்கிருப்பு ரூ.10,000 அதிகமாக மதிப்பிடப்பட்டது.
10.
சந்தோஷ் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடப்பட வேண்டும். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:
| நாள் | ரூ. |
|---|---|
| பிப்ரவரி 1 | 2,000 |
| மே 1 | 10,000 |
| ஜுலை 1 | 4,000 |
| அக்டோபர் 1 | 6,000 |
பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.
11.
பிரகாஷ் மற்றும் சுப்ரியா என்ற இரு கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3 என்ற இலாப விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று அவர்களின் முதல் கணக்குகளின் இருப்புகள் பிரகாஷ் ரூ.3,00,000 மற்றும் சுப்ரியா ரூ.2,00,000 ஆகும். 2018, ஜுலை 1 அன்று பிரகாஷ் கூடுதல் முதலாக ரூ.60,000 கொண்டு வந்தார். அவ்வாண்டில் சுப்ரியா ரூ.30,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% எனக் கணக்கிட்டு, அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
12.
கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கங்கள் ஏதேனும் ஆறினைத் தரவும்.
13.
அழைப்பு முன்பணம் குறித்து சுருக்கமாக எழுதவும்.
14.
சையது, சாமுவேல் மற்றும் சுதாகர் மூவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் நிறுவனத்தின் தொழிலுக்கு அளித்த பங்களிப்புக்காக, கூட்டாண்மை ஒப்பாவணத்தின் விதிமுறைகளின் படி சாமுவேலிற்கு மாத ஊதியம் ரூ.2,000 அனுமதிக்கப்பட்டது மற்றும் சுதாகருக்கு கழிவு ஆண்டுக்கு ரூ. 6,000 அனுமதிக்கப்பட்டது. கூட்டாளிகளுடைய முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
15.
கவிதா, குமுதா மற்றும் லலிதா ஆகிய கூட்டாளிகள் தங்கள் இலாப நட்டங்களை முறையே 5:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று குமுதா நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் விலகும் நாளில் அவருடைய முதல் கணக்கு ரூ.2,00,000 வரவு இருப்பினைக் காட்டியது.
(i) அவருடைய தொகை காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பட்டால்
(ii) அவருடைய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லையெனில்
(iii) ரூ.70,000 உடனடியாக காசோலை மூலம் செலுத்தப்பட்டது
என்ற சூழ்நிலைகளுக்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
16.
A மற்றும் B வழங்கிய முதல் முறையே ரூ.4,00,000 மற்றும் ரூ.2,00,000. அவர்களின் இலாபப் பகிர்வு விகிதம் 3:2. அவ்வாண்டின் முதல் மீது வட்டி கணக்கிடுவதற்கு முன்னர் இலாபம் ரூ.27,000. பின்வரும் நிலைகளில் முதல் மீதான வட்டித் தொகையைக் கணக்கிடவும்.
(i) முதல் மீது வட்டி குறித்து கூட்டாண்மை ஒப்பாவணத்தில் ஏதும் குறிப்பிடாத போது
(ii) கூட்டாண்மை ஒப்பாவணத்தின் படி முதல் மீது வட்டி ஆண்டுக்கு 3 % அனுமதிக்கப்படும் போது
(iii) கூட்டாண்மை ஒப்பாவணத்தின் படி முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5 % அனுமதிக்கும் போது
17.
பிரின்ஸ், தேவ், சசிரேகா எனும் கூட்டாளிகள் ஒரு நிறுவனத்தின் இலாப நட்டங்களை 2:4:1 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 ஆம் நாளைய அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் |
ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 40,000 | ||
| பிரின்ஸ் | 30,000 | பொறித்தொகுதி | 50,000 | |
| தேவ் | 50,000 | அறைகலன் | 10,000 | |
| சசிரேகா | 20,000 | 1,00,000 | சரக்கிருப்பு | 15,000 |
| இலாப நட்டப் பகிர்வு க/கு | 10,000 | கடனாளிகள் | 20,000 | |
| பொதுக்காப்பு | 15,000 | வங்கி ரொக்கம் | 15,000 | |
| தொழிலாளர் ஈட்டு நிதி | 17,000 | |||
| பற்பல கடனீந்தோர் | 8,000 | |||
| 1,50,000 | 1,50,000 |
1-4-2019 அன்று சசிரேகா கூட்டாண்மையிலிருந்து விலகினார். பகிர்ந்து தரா இலாபத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்
18.
பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கொள்முதலைக் கணக்கிடவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| 2017, ஏப்ரல் 1 அன்று பற்பல கடனீந்தோர் | 75,000 |
| 2017, ஏப்ரல் 1 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 60,000 |
| கடனீந்தோருக்குச் செலுத்திய ரொக்கம் | 3,70,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்கு செலுத்தியது | 1,00,000 |
| கொள்முதல் திருப்பம் | 15,000 |
| ரொக்கக் கொள்முதல் | 3,20,000 |
| 2018, மார்ச் 31 அன்று கடனீந்தோர் | 50,000 |
| 2018, மார்ச் 31 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 80,000 |
19.
பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31ஆம் நாளைய முதல் கண்டறியவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| 2018, ஜனவரி 1 அன்று முதல் | 27,500 |
| உரிமையாளர் தன் சொந்த பயனுக்கு சரக்கு எடுத்தது | 5,000 |
| அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | 2,500 |
| அவ்வாண்டின் இலாபம் | 10,000 |
20.
சீனு மற்றும் சிவா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். சுப்பு என்பவரை புதிய கூட்டாளியாக சேர்க்கும்போது அவர்கள் பின்வரும் முடிவுகள் எடுத்தனர்.
(i) கட்டடம் மதிப்பினை ரூ.40,000 ஆக உயர்த்த வேண்டும்.
(ii) கணக்கேடுகளில் இதுவரை பதியப்படாத ரூ.10,000 மதிப்புள்ள முதலீடுகளை கணக்கில் கொண்டுவர வேண்டும்.
(iii) இயந்திரம் மதிப்பு ரூ.14,000 மற்றும் அறைகலன் மதிப்பு ரூ.12,000 குறைக்க வேண்டும்.
(iv) பற்பல கடனீந்தோரில் ரூ.16,000 போக்கெழுத வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் மற்றும் மறு மதிப்பீட்டுக் கணக்கினைத் தயார் செய்யவும்.
21.
நிலை அறிக்கை மற்றும் இருப்புநிலைக் குறிப்புக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தரவும்.
22.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிற்கும், வருவாய் மற்றும் செலவினக் கணக்கிற்கும் உள்ள வேறுபாடுகளைத் தரவும்.
23.
நற்பெயரைத் தீர்மானிக்கும் ஏதேனும் ஆறு காரணிகளைத் தரவும்.
24.
கீழ்க்காணும் திருச்சி மனமகிழ் மன்றத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கினைத் தயாரிக்கவும்
| பெறுதல்கள் | ரூ | செலுத்தல்கள் | ரூ |
|---|---|---|---|
| தொடக்க இருப்பு | அறைகலன் வாங்கியது | 10,000 | |
| கைரொக்கம் | 11,000 | வாடகை | 2,800 |
| பங்காதாயம் பெற்றது | 27,600 | செயலர் மதிப்பூதியம் | 15,000 |
| பழைய செய்தித்தாள் விற்றது | 3,000 | தபால் செலவுகள் | 1,700 |
| உறுப்பினர் சந்தா | 31,000 | பொதுச் செலவுகள் | 4,350 |
| பாதுகாப்பு பெட்டக வாடகை | 8,000 | அச்சு மற்றும் எழுதுபொருள்கள் | 45,000 |
| முதலீடுகள் மீதான வட்டி | 1,250 | தணிக்கைக் கட்டணம் | 5,000 |
| அறைகலன் விற்றது | 5,000 | இறுதி இருப்பு | |
| (ஏட்டு மதிப்பு ரூ4,400) | கைரொக்கம் | 3,000 | |
| 86,850 | 86,850 |
25.
A, B, C மற்றும் D ஆகியோர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். நிறுவனத்தில் கூட்டாண்மை ஒப்பாவணம் ஏதுமில்லை. பின்வருவனவற்றை எவ்வாறு மேற்கொள்வீர்கள்?
(i) A அதிக முதல் வழங்கியுள்ளார். அவர் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 12% கோருகிறார்.
(ii) B ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 எடுத்துக் கொள்கிறார். ஏனைய கூட்டாளிகள் B-யிடம் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 10% எடுப்புகள் மீது வட்டி அளிக்குமாறு கேட்கிறார்கள். ஆனால், B அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
(iii) C யிடமிருந்து நிறுவனத்திற்கு பெறப்பட்ட கடன் ரூ.10,000. அவர் கடன் மீது வட்டி ஆண்டுக்கு 9% வேண்டுமென்று கோருகிறார். A மற்றும் B அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
(iv) D தனது முழு நேரத்தையும் தொழிலில் செலவிடுவதால் அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 ஊதியம் வேண்டுமென்று கோருகிறார். B மற்றும் C அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
(v) A, இலாபத்தினை முதல் விகிதத்தில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிறார். ஆனால் B, C மற்றும் D அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
1.
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2017 | (i) ஜானகியின் நிறைவேற்றாளர் க/கு | ப | 1,40,000 | ||
| டிசம்பர் 31 | வங்கி க/கு | 1,40,000 | |||
| (சேர வேண்டியத் தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது) | |||||
| " | (ii) ஜானகியின் நிறைவேற்றாளார் க/கு | ப | 1,40,000 | ||
| ஜானகியின் நிறைவேற்றாளார் கடன் க/கு | 1,40,000 | ||||
| (சேர வேண்டியத் தொகை கடன் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| " | (iii) ஜானகியின் நிறைவேற்றாளார் க/கு | ப | 1,40,000 | ||
| வங்கி க/கு | 75,000 | ||||
| ஜானகியின் நிறைவேற்றாளார் கடன் க/கு | 65,000 | ||||
| (ரூ75,000 செலுத்தப்பட்டு, மீதித் தொகை கடன் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
2.
1) ரொக்க ஓட்ட பகுப்பாய்வு என்பது ரொக்க ஓட்ட அறிக்கை தயாரிப்பதைக் குறிக்கும். இது ஒரு குறிப்பிட்ட காலத்தில் உள்வரும் மற்றும் வெளிச் செல்லும் ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகளை வெளிப்படுத்தும்.
2) ரொக்கம் என்பது கை ரொக்கம் மற்றும் வங்கியில் உள்ள கேட்பு வைப்புகளை உள்ளடக்கியது.
3) ரொக்கத்திற்கு சமமானவைகள் என்பது குறுகிய காலத்தில் அதிக நட்டமில்லாமல் ரொக்கமாக மாற்றக்கூடிய குறுகிய கால முதலீடுகளைக் குறிக்கும்.
4) ரொக்க ஓட்டப் பகுப்பாய்வு வணிக நிறுவனத்தின் நீர்மைத்தன்மை மற்றும் கடன் தீர்க்கும் திறன் விகிதங்கள் கணக்கிடுவதற்கு உதவிகரமானதாக இருக்கிறது.
3.
ஒரு புதிய கூட்டாளியை சேர்க்கும் போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்ய வேண்டும்.
(i) பகிர்ந்து தரா இலாபம், காப்பு மற்றும் நட்டம் ஆகியவற்றை பகிர்ந்தளித்தல்
(ii) சொத்துக்களையும் பொறுப்புகளையும் மறுமதிப்பீடு செய்தல்.
(iii) புதிய இலாபவிகிதம் மற்றும் தியாகவிகிதத்தை நிர்ணயித்தல்.
(iv) நற்பெயர் சரிக்கட்டுதல்
(v) முதல் கணக்கை புதிய இலாபவிகிதத்தின் அடிப்படையில் சரிக்கட்டுதல் (ஒப்புக்கொண்டால்)
4.
5.
| செலவுகள் | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| சந்தா | 2,250 | |||
| கூட்டுக: பெறவேண்டிய சந்தா | 250 | 2,500 |
2017-18 ஆம் ஆண்டுக்கான மொத்த சந்தா = 2,500
(100 உறுப்பினர்கள் ரூ.25 வீதம்)
கழிக்க: 10 உறுப்பினர்களிடம் பெறவேண்டியது = 250
( 100 x 25) ________
பெற்ற சந்தா 2,250
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| முன்கூட்டிப்பெற்ற சந்தா (ரூ.25x4) |
100 | பெறவேண்டிய சந்தா (ரூ.25x10) |
250 |
6.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| வங்கி மேல்வரைப்பற்று | 50,000 | கடனாளிகள் | 1,80,000 |
| கடனீந்தோர் | 90,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 70,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 2,40,000 | கணினி | 30,000 |
| முதல் (இருப்புக்கட்டும் தொகை) | 4,20,000 | இயந்திரம் | 3,00,000 |
| சரக்கிருப்பு | 1,60,000 | ||
| கைரொக்கம் | 60,000 | ||
| 8,00,000 | 8,00,000 |
| விவரம் | ரூ. |
| 2019, மார்ச் 31 அன்று இறுதிமுதல் | 4,20,000 |
| கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள் | 30,000 |
| 4,50,000 | |
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | 40,000 |
| சரிகட்டப்பட்ட இறுதிமுதல் | 4,10,000 |
| கழிக்க:2018, ஏப்ரல் 1 அன்று தொடக்க முதல் | 1,20,000 |
| 31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் இலாபம் | 2,90,000 |
7.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| கட்டடம் க/கு | ப | 15,000 | |||
| மறுமதிப்பீட்டு க/கு | 15,000 | ||||
| (கட்டடத்தின் மதிப்பு உயர்த்துவது பதிவு செய்யப்பட்டது) | |||||
| மறுமதிப்பீட்டு க/கு | ப | 5,000 | |||
| இயந்திரம் க/கு | 4,000 | ||||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | ||||
| (இயந்திரத்தின் மதிப்பு குறைப்பது மற்றும் ஒதுக்கு பதிவு செய்யப்பட்டது) | |||||
| மறுமதிப்பீட்டு | ப | 10,000 | |||
| இராஜேஷ் முதல் க/கு | 6,000 | ||||
| இரமேஷ் முதல் க/கு | 4,000 | ||||
| (மறுமதிப்பீட்டு இலாபம் பகிர்ந்தளித்தது) |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| இயந்திரம் க/கு | 4,000 | 15,000 | ||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| இராஜேஷ் முதல் க/கு (3/5) | 6,000 | |||
| இரமேஷ் முதல் க/கு (2/5) | 4,000 | 10,000 | ||
| 15,000 | 15,000 |
8.
| விவரம் | 2016 ரூ. |
2017 ரூ. |
2018 ரூ. |
|---|---|---|---|
| இலாபம் | 25,000 | 23,000 | 26,000 |
| கழிக்க: திரும்பத் திரும்ப நிகழா வருமானம் | 2,500 | - | - |
| 22,500 | 23,000 | 26,000 | |
| கூட்டுக: சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்து (அசாதாரண நட்டம்) | - | 3,500 | - |
| சரிக்கப்பட்டபின் இலாபம் | 22,500 | 26,500 | 26,000 |
= \(\frac { 22,500+26,500+26,000 }{ 3 } \)
=\(\frac { 75,000 }{ 3 } \) = ரூ.25,000
| விவரம் | ரூ |
|---|---|
| எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய காப்பீட்டு முனைமத்தினை சரிக்கட்டுவதற்கு முன் சராசரி இலாபம் | 25,000 |
| கழிக்க: எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய காப்பீட்டு முனைமம் | 250 |
| சராசரி இலாபம் | 24,750 |
நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
= 24,750 x 2
நற்பெயர் = ரூ.49,500
9.
| விவரம் | 2016 ரூ. | 2017 ரூ. | 2018 ரூ. |
|---|---|---|---|
| இலாபம் | 46,000 | 44,000 | 50,000 |
| கழிக்க: திரும்பத் திரும்ப நிகழா வருமானம் | 5,000 | - | - |
| 41,000 | 44,000 | 50,000 | |
| கழிக்க: இறுதிச் சரக்கிருப்பு அதிகமாக மதிப்பிடப்பட்டது | - | 10,000 | - |
| 41,000 | 34,000 | 50,000 | |
| கூட்டுக: தொடக்கச் சரக்கிருப்பு அதிகமாக மதிப்பிடப்பட்டது | - | - | 10,000 |
| சரிக்கட்டப்பட்ட பின் இலாபம் | 41,000 | 34,000 | 60,000 |

=\(\\ \frac { 41,000+34,000+60,000 }{ 3 } \)
=\(\frac { 1,35,000 }{ 3 } \)=ரூ.45,000
நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
= 45,000 × 2 = ரூ.90,000
10.
| எடுப்பு நாள் | எடுப்புத் தொகை ரூ. |
வட்டிக்குரிய காலம் டிசம்பர் 31 வரை (மாதங்களில்) | பெருக்குத் தொகை |
|---|---|---|---|
| பிப்ரவரி 1 | 2,000 | 11 | 22,000 |
| மே 1 | 10,000 | 8 | 80,000 |
| ஜூலை 1 | 4,000 | 6 | 24,000 |
| அக்டோபர் 1 | 6,000 | 3 | 18,000 |
| மொத்த பெருக்குத் தொகை | 1,44,000 | ||
எடுப்புகள் மீதான வட்டி = மொத்த பெருக்குத் தொகை x ஆண்டு வட்டி வீதம் x \(\frac {1}{12}\)
= ரூ.1,44,000 x \(\frac { 6 }{ 100 } \times \frac { 1 }{ 12 } \) = ரூ.720
11.
முதல் மீதான வட்டி கணக்கிடுதல்:
பிரகாஷ் முதல் மீது வட்டி:
முதல் மீது வட்டி = முதல் தொகை x வட்டி வீதம் x வட்டிக்குரிய காலம்
தொடக்க முதல் (ஓராண்டு) = 3,00,000 x \(\frac {6}{100}\) = ரூ.18,000
கூடுதல் முதல் (9 மாதங்கள்) = 60,000 x \(\frac {6}{100}\times \frac {6}{12}\) = ரூ. 2,700
________
முதல் மீது வட்டி = ரூ. 20,700
________
சுப்ரியா முதல் மீது வட்டி:
தொடக்க முதல் (ஓராண்டு) = 2,00,000 x \(\frac {6}{100}\) = ரூ. 12,000
கூடுதல் முதல் (6 மாதங்கள்) = 30, 000 x \(\frac {6}{100}\times \frac {6}{12}\) = ரூ. 900
________
முதல் மீது வட்டி = ரூ. 12,900
________
குறிப்பு:
சுப்ரியா கொண்டுவந்த கூடுதல் முதல் எந்த நாள் என்று கொடுக்காததால் முதல் மீது வட்டி சராசரி காலமாக 6 மாதங்களுக்கு கணக்கிட வேண்டும்.
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு. ரூ. |
|---|---|---|---|---|
| 2019 மார்ச் 31 | முதல் மீது வட்டி க/கு | 33,600 | ||
| பிரகாஷ் நடப்பு க/கு | 20,700 | |||
| சுப்ரியா நடப்பு க/கு (முதல் மீது வட்டி வழங்கியது) |
12,900 | |||
| " | இலாபநட்டப் பகிர்வு க/கு | 33,600 | ||
| முதல் மீதான வட்டி க/கு (முதல் மீது வட்டி கணக்கு முடிக்கப்பட்டது) |
33,600 |
12.
(i) நிறுவனத்தின் பெயர், தன்மை மற்றும் தொழில் செய்யும் இடம்
(ii) தொழில் தொடங்கிய நாள் மற்றும் தொழிலின் கால அளவு
(iii) அனைத்துக் கூட்டாளிகளின் பெயர் மற்றும் முகவரி
(iv) ஒவ்வொரு கூட்டாளியும் அளித்த முதல்
(v) இலாபப் பகிர்வு விகிதம்
(vi) முதல் மீது அனுமதிக்கப்படும் வட்டி வீதம்
13.
1) பங்கின் அழைக்கப்பட்ட மதிப்பை விட அதிகமாகப் பெறப்பட்ட தொகை அழைப்பு முன்பணம் எனப்படும். இது பங்கு விண்ணப்பம் அல்லது பங்கு ஒதுக்கீடு அல்லது பங்கு அழைப்புக் கணக்கில் அதிகமாக பெறப்பட்ட தொகையாகும்.
2) அவ்வாறு அதிகமாகப் பெறப்பட்ட தொகையை திருப்பி அளிக்க வேண்டும் அல்லது எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய தொகைகளில் சரிக்கட்ட வேண்டும்.
3) அவ்வாறு எதிர்காலத்தில் செலுத்தப்பட வேண்டிய தொகைகளில் சரிக்கட்ட தீர்மானித்தால், அந்த அதிகமாகப் பெறப்பட்ட தொகையை அழைப்பு முன்பணம் என்ற தனிக் கணக்கிற்கு மாற்றலாம்.
4) அழைப்பு முன்பணம் நிறுமத்தின் பங்கு முதலில் ஒரு பகுதி அல்ல மற்றும் அதற்கு பங்காதாயம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
5) இது இருப்புநிலைக் குறிப்பில் இதர நடப்புப்பொறுப்புகளின் கீழ் காட்டப்படும்.
14.
சாமுவேலின் ஊதியம் = 2,000 × 12 = ரூ.24,000
சுதாகரின் கழிவு = ரூ. 6,000
| நாள் | விவரம் | பே.ப.எ. | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| சாமுவேலின் ஊதியம் க/கு | ப | 24,000 | |||
| சாமுவேலின் முதல் க/கு | 24,000 | ||||
| (சாமுவேலின் ஊதியம் முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| சுதாகரின் கழிவு க/கு | ப | 6,000 | |||
| சுதாகரின் முதல் க/கு | 6,000 | ||||
| (சுதாகரின் கழிவு முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| இலாப நட்டப் பகிர்வு க/கு | ப | 30,000 | |||
| சாமுவேலின் ஊதியம் க/கு | 24,000 | ||||
| சுதாகரின் கழிவு க/கு | 6,000 | ||||
| (ஊதியம் மற்றும் கழிவு கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
15.
| நாள் | விவரம் | பே.ப.எ. | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 டிசம்பர் 31 | (i) குமுதா முதல் க/கு | ப | 2,00,000 | ||
| வங்கி க/கு | 2,00,000 | ||||
| (தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது) | |||||
| " | (ii) குமுதா முதல் க/கு | ப | 2,00,000 | ||
| குமுதா கடன் க/கு | 2,00,000 | ||||
| (தொகை கடன் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| " | (iii) குமுதா முதல் க/கு | ப | 2,00,000 | ||
| வங்கி க/கு | 70,000 | ||||
| குமுதா கடன் க/கு | 1,30,000 | ||||
| (ரூ.70,000 உடனடியாகச் செலுத்தப்பட்டு, மீதித் தொகை கடன் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
16.
i) கூட்டாண்மை ஒப்பாவணத்தில் முதல் மீது வட்டி குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. எனவே, முதல் மீது வட்டி அனுமதிக்கப்படுவதில்லை.
(ii) முதல் மீது வட்டி வழங்குவதற்கு முன் இலாபம் ரூ.27,000.
முதல் மீது வட்டி கணக்கிடுதல்:
A: 4,00,000 x \(\frac { 3 }{ 100 } \) =ரூ.12,000
B: 2,00,000 x \(\frac { 3 }{ 100 } \) =ரூ.6,000
போதிய இலாபம் இருப்பதால் முதல் மீது வட்டி வழங்கப்படும்.
(iii) முதல் மீது வட்டி வழங்குவதற்கு முன் இலாபம் ரூ.27,000.
முதல் மீது வட்டி கணக்கிடுதல்:
A: 4,00,000 x \(\frac { 5 }{ 100 } \) =ரூ.20,000
B: 2,00,000 x \(\frac { 5 }{ 100 } \) =ரூ.10,000
போதிய இலாபம் இல்லாததால், முதல் மீது வட்டி வழங்கப்பட இயலாது. இலாபம் ரூ.27,000 கூட்டாளிகளின் முதல் விகிதமாகிய 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
17.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2019 மார்ச் 1 | இலாப நட்டப் பகிர்வு க/கு | ப | 10,000 | ||
| பொதுக்காப்பு க/கு | ப | 15,000 | |||
| தொழிலாளர் ஈட்டு நிதி க/கு | ப | 17,000 | |||
| பிரின்ஸ் முதல் க/கு (42000 x 2/7) | 12,000 | ||||
| தேவ் முதல் க/கு (42000 x 4/7) | 24,000 | ||||
| சசிரேகா முதல் க/கு (42000 x 1/7) | 6,000 | ||||
| (பகிர்ந்து தரா இலாபம் மற்றும் காப்புகள் அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்பட்டது) |
18.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்கக் க/கு (மாற்றுச்சீட்டுக்கு செலுத்தியது) | 1,00,000 | இருப்பு கீ/கொ | 60,000 |
| இருப்பு கீ/இ | 80,000 | பற்பல கடனீந்தோர் (மாற்றுச்சீட்டு ஏற்கப்பட்டது) (இருப்புக் கட்டும் தொகை) | 1,20,000 |
| 1,80,000 | 1,80,000 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்கக் க/கு (செலுத்தியது) | 3,70,000 | இருப்பு கீ/கொ | 75,000 |
| கொள்முதல் திருப்பம் க/கு | 15,000 | கொள்முதல் க/கு (கடன்) (இருப்புக் கட்டும் தொகை) | 4,80,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு க/கு | 1,20,000 | ||
| இருப்பு கீ/இ | 50,000 | ||
| 5,55,000 | 5,55,000 |
மொத்தக் கொள்முதல் = ரொக்கக் கொள்முதல் + கடன் கொள்முதல்
= ரூ. 3,20,000 + ரூ. 4,80,000
= ரூ. 8,00,000
19.
| விவரம் | ரூ. |
|---|---|
| 31.12.2018 அன்று இறுதி முதல் (இருப்புக் கட்டும் தொகை) | 35,000 |
| கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள் (சொந்த பயனுக்கு சரக்கு எடுத்தது) | 5,000 |
| 40,000 2,500 |
|
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | |
| சரிக்கட்டப்பட்ட இறுதி முதல் | 37,500 27,500 |
| கழிக்க : 1.1.2018 அன்று தொடக்க முதல் | |
| அவ்வாண்டின் இலாபம் | 10,000 |
20.
| நாள் | விவரம் |
|
பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு |
|---|---|---|---|---|---|
| கட்டடம் க/கு | ப | 40,000 | |||
| முதலீடுகள் க/கு | ப | 10,000 | |||
| பற்பல கடனீந்தோர் க/கு | ப | 16,000 | |||
| மறுமதிப்பீட்டுக் க/கு (சரக்கிருப்பின் மதிப்பு அதிகரிப்பு, பதிவு பெறாமலுள்ள முதலீடுகள் பதிவு செய்யப்பட்டது மற்றும் பற்பல கடனீந்தோர் போக்கெழுதியது) |
66,000 | ||||
| மறுமதிப்பீட்டு க/கு | ப | 26,000 | |||
| இயந்திரம் க/கு | 14,000 | ||||
| அறைகலன் க/கு (இயந்திரம் மற்றும் அறைகலனின் மதிப்பு குறைப்பது) |
12,000 | ||||
| மறுமதிப்பீடு க/கு | ப | 40,000 | |||
| சீனு முதல் க/கு (5/8) | 25,000 | ||||
| சிவா முதல் க/கு (3/8) (மறுமதிப்பீட்டு இலாபம் முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
15,000 |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| இயந்திரம் க/கு | 14,000 | கட்டடம் க/கு | 40,000 | |
| அறைகலன் | 12,000 | முதலீடுகள் க/கு | 10,000 | |
| மறுமதிப்பீட்டு இலாபம்: | பற்பல கடனீந்தோர் க/கு | 16,000 | ||
| சீனு முதல் க/கு (40,000 x 5/8) |
25,000 | |||
| சிவா முதல் க/கு (40,000 x 3/8) |
15,000 | |||
| 40,000 | ||||
| 66,000 | 66,000 |
21.
| வ.எண் | வேறுபாட்டிற்கான அடிப்படை | நிலை அறிக்கை | இருப்புநிலைக் குறிப்பு |
| 1 | நோக்கம் | நிலை அறிக்கை பொதுவாக வியாபாரத்தின் முதலை கண்டறிய தயாரிக்கப்படுகிறது. | இருப்புநிலைக் குறிப்பு வியாபாரத்தின் நிதிநிலையைக் கண்டறிய தயாரிக்கப்படுகிறது. |
| 2 | கணக்கியல் முறை | இரட்டைப்பதிவு முறையை பின்பற்றவது கட்டாயமானதாக இல்லாத போது நிலை அறிக்கை தயாரிக்கப்படுகிறது. | கணக்குகள் இரட்டைப்பதிவு முறையில் பராமரிக்கப்படும் போது இருப்புநிலைக்குறிப்பு தயாரிக்கப்படுகிது. |
| 3 | தயாரிப்பின் அடிப்படை | இது முழுமையாக பேரேட்டுக் கணக்குகளை அடிப்டையாகக் கொண்டதல்ல. பேரேட்டுக் கணக்குகளின் இருப்புகள் முடிந்த இடங்களில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. | இது முழுமையாக பேரேட்டுக் கணக்குகளின் அடிப்படையிலேயே தயாரிக்கப்படுகிறது. |
| 4 | நம்பகத்தன்மை | இது முழுமை பெறா பதிவேடுகளை அடிப்டையாகக் கொண்டுள்ளதால் நம்பகத்தன்மை உடையது அல்ல. | இது இரட்டைப்பதிவு முறையில் தயாரிக்கப்படுவதால் நம்பகத்தன்மை உடையது. |
| 5 | விடுபட்ட விவரங்கள் | ஏடுகள் முழுமையாக பராமரிக்கப்படாததால் விடுபட்ட விவரங்களைக் கண்டறிவது கடினம். | அனைத்து நடவடிக்கைகளின் இரண்டு தன்மைகளும் பதியப்படுவதால் விடுபட்ட விவரங்களை எளிதில் கண்டறிய முடியும். |
22.
| வ.எண் | அடிப்படை | பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு | வருவாய் மற்றும் செலவினக் கணக்கு |
|---|---|---|---|
| 1 | நோக்கம் | இது ரொக்கப் பெறுதல்கள் மற்றும் ரொக்கச் செலுத்தல்களை அறிவதற்கு தயாரிக்கப்படுகிறது. | இது நடப்பு ஆண்டின் செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம் (உபரி) அல்லது வருமானத்தைக் காட்டிலும் மிகுதியான செலவுகள் (பற்றாக்குறை)குறித்து அறிந்துகொள்ள தயாரிக்கப்படுகிறது. |
| 2 | கணக்கின் தன்மை | இது ஒரு சொத்துக் கணக்காகும். இது ரொக்கக் கணக்கின் தொகுப்பாகும். அனைத்து ரொக்கப் பெறுதல்கள் பற்றுப் பக்கத்திலும், ரொக்கச் செலுத்தல்கள் வரவுப் பக்கத்திலும் பதியப்படுகின்றன. | இது ஒரு பெயரளவுக் கணக்காகும். இது இலாப நட்டக் கணக்கைப் போன்றது. செலவுகள் பற்றுப்பக்கத்திலும் மற்றும் வருமானங்கள் வரவுப் பக்கத்திலும் பதியப்படுகின்றன. |
| 3 | கணக்கியலின் அடிப்படை | இது ரொக்க அடிப்படையிலான கணக்கியலை அடிப்படையாகக் கொண்டது. ரொக்கம் சார்பற்ற விவரங்கள் பதியப்படுவதில்லை. | இது நிகழ்வு அடிப்படையிலான கணக்கியலை அடிப்படையாகக் கொண்டது. ரொக்கம் சாரா விவரங்களான கொடுபட வேண்டிய செலவுகள், தேய்மானம் போன்றவைகளும் இங்கு பதியப்படும். |
| 4 | தொடக்க இறுதி இருப்பு | இது ரொக்கம் வங்கிக் கணக்கின் தொடக்க இருப்புடன் தொடங்கி, ரொக்கம் மற்றும் வங்கிக் கணக்கின் இறுதி இருப்புடன் முடிவடைகிறது. | இங்கு தொடக்க இருப்பு என்பது கிடையாது. இது உபரி அல்லது பற்றாக்குறையுடன் முடிவடைகிறது. |
| 5 | நடவடிக்கையின் தன்மைகள் | இது வருவாயினம் அல்லது முதலினம் என்ற வேறுபாடில்லாமல் அனைத்துப் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்களைக் கொண்டிருக்கும். | இது வருவாயின நடவடிக்கைகளை மட்டுமே, அதாவது வருவாயினச் செலவுகள் மற்றும் வருவாயின வரவுகளை மட்டுமே கொண்டிருக்கும். |
23.
(i) நிறுவனத்தின் இலாபம் ஈட்டும் திறன்:
அதிக இலாபம் ஈட்டும் ஒரு நிறுவனம் அல்லது எதிர்காலத்தில் அதிக இலாபம் ஈட்டும் திறனைக் கொண்டுள்ள ஒரு நிறுவனம் அதிகமான நற்பெயர் மதிப்பினைக் கொண்டிருக்கும்
(ii) வியாபார நிறுவனத்தின் சாதகமான அமைவிடம்:
வியாபார நிறுவனமானது வாடிக்கையாளர்களால் எளிதில் சென்றடையக் கூடிய முக்கிய இடத்திலோ அமைந்திருந்தால், அது அதிக வாடிக்கையாளர்களைக் கவரும். எனவே, அந்நிறுவனம் அதிக மதிப்பிலான நற்பெயரைக் கொண்டிருக்கும்
(iii) நல்ல தரமான பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்குதல்:
நல்ல தரமான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதால் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கும் நிறுவனத்தின் பெயர் அதிகமாக இருக்கும்
(iv) வியாபார நிறுவனத்தின் கால அளவு:
நீண்ட ஆண்டுகள் வணிகத்தை நடத்திவரும் நிறுவனத்தை வாடிக்கையாளர் நன்கு அறிந்திருப்பதால் அந்த நிறுவனம் அதிக நன்மதிப்பைக் கொண்டிருக்கும்.
(v) போட்டியின் அளவு:
போட்டியே இல்லாத அல்லது குறைவான போட்டியைக் கொண்டுள்ள நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு அதிகமானதாக இருக்கும்
(vi) பிறகாரணிகள்:
உரிமையாளரின் பிரபலம், ஈர்க்கக்கூடிய விளம்பரம், வாடிக்கையாளரிடம் நெருங்கிய தொடர்பு போன்ற பிற காரணிகளும் தொழிலின் நற்பெயரின் மதிப்பை உயர்த்தக்கூடியதாகும்
24.
| செலவுகள் | ரூ | வருமானம் | ரூ |
|---|---|---|---|
| வாடகை | 2,800 | பங்காதாயம் பெற்றது | 27,600 |
| செயலர் மதிப்பூதியம் | 15,000 | பழைய செய்தித்தாள் விற்றது | 3,000 |
| தபால் செலவுகள் | 1,700 | உறுப்பினர் சந்தா | 31,000 |
| பொதுச் செலவுகள் | 4,350 | பாதுகாப்பு பெட்டக வாடகை | 8,000 |
| அச்சு மற்றும் எழுதுபொருள்கள் | 45,000 | முதலீடுகள் மீதான வட்டி | 1,250 |
| தணிக்கைக் கட்டணம் | 5,000 | அறைகலன் விற்பனை மீதான இலாபம்(5,000 - 4,400) | 600 |
| பற்றாக்குறை | 2,400 | ||
| (வருமானத்தைக் காட்டிலும் மிகுதியான செலவுகள்) | |||
| 73,850 | 73,850 |
25.
நிறுவனத்தில் கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாததால், இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932-ன் நிபந்தனைகள் பொருந்தும்.
(i) எந்த ஒரு கூட்டாளிக்கும் முதல் மீது வட்டி செலுத்த வேண்டியதில்லை. எனவே, A முதல் மீது வட்டி பெற உரிமை உடையவரல்ல.
(ii) கூட்டாளியின் எடுப்புகளுக்கு வட்டி விதிக்கக் கூடாது. ஆகையால், B எடுப்புகள் மீது வட்டி செலுத்த வேண்டியதில்லை.
(iii) கடன் மீது வட்டி ஆண்டுக்கு 6% செலுத்தப்பட வேண்டும். ஆகையால், C, தான் வழங்கிய ரூ.10,000 கடனுக்கு ஆண்டுக்கு 6% வட்டி பெறலாம்.
(iv) எந்தக் கூட்டாளிக்கும் ஊதியம் வழங்க வேண்டியதில்லை. ஆகையால், D ஊதியம் பெற தகுதி உடையவரல்ல.
(v) இலாபங்கள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards