12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
பின்வரும் விவரங்களிலிருந்து அப்துல் வரையறு நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.
| விவரம் | 2015-16 ரூ. |
2016-17 ரூ. |
|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 3,00,000 | 3,60,000 |
| இதர வருமானம் | 1,00,000 | 60,000 |
| செலவுகள் | 2,00,000 | 1,80,000 |
| வருமான வரி | 30% | 30% |
2.
சேலம் விளையாட்டு மன்றத்தின் 2019, ஏப்ரல் 1 அன்றைய முதல் நிதியைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| விளையாட்டு உபகரணங்கள் | 30,000 | பரிசு நிதி | 10,000 |
| கணிப்பொறி | 25,000 | பரிசுநிதி முதலீடுகள் | 10,000 |
| 2018-2019 ஆம் ஆண்டில் சந்தா பெறவேண்டியது | 5,000 | கைரொக்கம் | 7,000 |
| 2019-20 ஆம் ஆண்டிற்காக முன்கூட்டிப் பெற்ற சந்தா | 8,000 | வங்கி ரொக்கம் | 21,000 |
3.
பயோனியர் நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து உரிமையாளர் விகிதத்தைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| (அ) பங்குமுதல் | |
| (i) நேர்மைப் பங்குமுதல் | 1,00,000 |
| (ii) முன்னுரிமைப் பங்குமுதல் | 75,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 25,000 |
| 2. நீண்டகால பொறுப்புகள் | |
| நீண்டகாலக் கடன்கள் | - |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 2,00,000 |
| மொத்தம் | 4,00,000 |
| II. சொத்துகள் | |
| 1. நீண்டகாலச் சொத்துகள் | |
| (அ) நிலைச் சொத்துகள் | 2,75,000 |
| (ஆ) நீண்டகால முதலீடுகள் | 50,000 |
| 2. நடப்புச் சொத்துகள் | |
| ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் | 75,000 |
| மொத்தம் | 4,00,000 |
4.
குமார் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடப்பட வேண்டும். டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் 2018 ஆம் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:
| நாள் | ரூ. |
|---|---|
| மார்ச் 1 | 4,000 |
| ஜூன் 1 | 4,000 |
| செப்டம்பர் 1 | 4,000 |
| டிசம்பர் 1 | 4,000 |
எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.
5.
பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் சந்தா எவ்வாறு தோன்றும் என்பதைக் காட்டவும்.
2018-ல் பெற்ற சந்தா ரூ16,000-ல் 2017 ஆம் ஆண்டுக்கான ரூ.3,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான ரூ.5,000 அடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ. 4,000. 2017 ஆம் ஆண்டில் 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது ரூ.2,000.
6.
சாந்தி என்பவரின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புகள் பின்வருமாறு:
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 6,000 | பற்பல கடனீந்தோர் | 25,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 4,000 | சரக்கிருப்பு | 45,000 |
| இயந்திரம் | 60,000 | கடனாளிகள் | 70,000 |
| அறைகலன் | 10,000 | ரொக்கம் | 4,000 |
2018, டிசம்பர் 31ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரித்து அந்நாளைய முதலை கணக்கிடவும்.
7.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் பொருள் எழுதுக.
8.
குறை ஒப்பம் என்றால் என்ன?
9.
அரசு மற்றும் இதர அமைப்புகளிடமிருந்து பெறப்படும் மானியம் பற்றி குறிப்பு வரைக.
10.
நடப்பு விகிதம் என்றால் என்ன?
11.
கூட்டாளி சேர்ப்பு என்றால் என்ன? அவர் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகிறார்?
12.
கணக்கியல் அறிக்கைகளை வடிவமைத்தலின் படிநிலைகள் யாவை?
13.
கூட்டாண்மை பொருள் தருக.
14.
ராமு, சோமு மற்றும் கோபு என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 3:5:7 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். கோபு என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார் மற்றும் அவருடைய பங்கை 3:1 எனும் விகிதத்தில் ராமுவும் சோமுவும் எடுத்துக்கொள்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.
15.
கயல், மாலா மற்றும் நீலா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 2:2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். கயல் என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். மாலா மற்றும் நீலாவுக்கும் இடையே உள்ள புதிய இலாபப் பகிர்வு விகிதம் 3:2. ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.
16.
நடைமுறை முதல் என்றால் என்ன?
17.
ஆதாய விகிதம் கணக்கிடுவதன் நோக்கம் என்ன?
18.
அம்பிகா, தரணி மற்றும் பத்மா மூவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அம்மூவரும் 5:3:2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்கள் இரம்யா என்பவரை 25% இலாபம் தருவதாக கூட்டாண்மையில் அனுமதித்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கண்டறியவும்.
19.
செல்வம் மற்றும் செந்தில் இருவரும் 2:3 என்ற விகிதத்தில் இலாபம் பகிரும் கூட்டாளிகள். இதில், சிவா என்பவர் 1/5 பங்கு விகிதத்தில் கூட்டாளியாக சேருகிறார். சிவா, இப்பங்கினை செல்வம் மற்றும் செந்தில் இருவரிடமும் சமமாக பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கண்டறியவும்.
20.
இராஜா மற்றும் இரவி என்ற இரு கூட்டாளிகள் 3:2 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் இராம் என்பவரை ¼ இலாபப் பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். இராம், 1/20 பங்கினை இராஜாவிடமும், 4/20 பங்கினை இரவியிடமும் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
21.
புதிய கூட்டாளி சேர்க்கையின்போது, பகிர்ந்துதரா இலாபங்கள் மற்றும் நட்டங்கள் எவ்வாறு கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது?
22.
பின்வரும் விவரங்களிலிருந்து கடன் கொள்முதலை கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| தொடக்க கடனீந்தோர் | 1,70,000 |
| கொள்முதல் திருப்பம் | 20,000 |
| கடனீந்தோருக்குச் செலுத்தியது | 4,50,000 |
| இறுதிக் கடனீந்தோர் | 1,90,000 |
23.
அசோக் மற்றும் மும்தாஜ் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 5:1 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் தருண் என்பவரை 2/9 இலாப விகிதத்தில் நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்கின்றனர். சேர்க்கையின் போது நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு ரூ.27,000 என்று மதிப்பிடப்படுகிறது. தருணால் தன்னுடைய பங்கிற்கான நற்பெயர் மதிப்பிற்கான தொகையைக் கொண்டுவர முடியவில்லை. நிறுவனம் மாறுபடும் முதல் முறையில் கணக்கினைப் பராமரிக்கிறதெனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
24.
மகேஷ் மற்றும் தனுஷ் என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் அருண் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அருண் தன்னுடைய பங்கை மகேஷ் மற்றும் தனுஷ் ஆகிய இரு கூட்டாளிகளிடமிருந்தும் சம விகிதத்தில் வாங்கினார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
25.
பின்வரும் விவரங்கள் 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
2018 ஆம் ஆண்டில் சந்தா பெற்றது ரூ50,000. இதில் 2017 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ 5,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ 7,000 உள்ளடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ. 6,000. 2017 ஆம் ஆண்டில் முன்கூட்டிப்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ.4,000
26.
கீழ்க்காணும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| ஆண்டின் தொடக்க முதல் (ஏப்ரல் 1, 2018) | 5,00,000 |
| ஆண்டின் இறுதி முதல் (மார்ச் 31, 2019) | 8,50,000 |
| அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | 1,20,000 |
| அவ்வாண்டில் எடுப்புகள் | 70,000 |
27.
சுரேஷ் மற்றும் தினேஷ் என்ற இரு கூட்டாளிகள் 3:2 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் இரமேஷ் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். சுரேஷ் என்பவர் தன் பங்கில் 1/5 பங்கும், தினேஷ் என்பவர் தன் பங்கில் 2/5 பங்கும் தியாகம் செய்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
28.
ஹரி மற்றும் சலீம் என்ற இரு கூட்டாளிகள் 5:3 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜோயல் என்பவரை \(\frac{1}{8}\) பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அவர் அப்பங்கு முழுவதையும் ஹரி என்பவரிடம் பெற்றுக் கொண்டார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
29.
முதலீடுகள் மீதான வருவாய் விகிதம் எதைக் குறிப்பிடுகிறது?
30.
புற அக பொறுப்பு விகிதம் என்றால் என்ன?
31.
கணக்கியல் தகவல் அமைப்பு என்றால் என்ன?
32.
33.
ஆயுள் உறுப்பினர் கட்டணம் – சிறு குறிப்பு தரவும்
34.
கவிதா மற்றும் இராதா எனும் கூட்டாளிகள் முறையே 4:3 எனும் விகிதத்தில் இலாபநட்டம் பகிர்ந்து வந்தனர். 1.1.2019 அன்று அவர்கள் தீபா என்பவரை கூட்டாளியாக சேர்த்தனர். அந்நாளில் அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பில் இலாப நட்டக் கணக்கு பற்று இருப்பாக ரூ.70,000 பகிர்ந்து தரா நட்டமாக சொத்துகள் பக்கத்தில் காட்டியது. கூட்டாளி சேர்ப்பின் போது பகிர்ந்து தரா நட்டத்தை மாற்றுவதற்கு குறிப்பேட்டுப் பதிவு தரவும்.
35.
ஒரு நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டுகளின் இலாபங்கள் பின்வருமாறு:
2014: ரூ.10,000; 2015: ரூ.11,000; 2016: ரூ.12,000; 2017: ரூ.13,000 மற்றும் 2018: ரூ.14,000; 5 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
36.
உயர் இலாபம் என்றால் என்ன?
37.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆனந்த் கட்டுமான நிறுமத்தின் தகவல்களிலிருந்து, விரைவு விகிதத்தைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ |
|---|---|
| மொத்த நடப்புப் பொறுப்புகள் | 1,00,000 |
| மொத்த நடப்புச் சொத்துகள் | 2,50,000 |
| சரக்கிருப்பு | 50,000 |
| முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் | 15,000 |
38.
இலாபநட்டப் பகிர்வு கணக்கு ஏன் தயாரிக்கப்பட வேண்டும்?
39.
பிரியா மற்றும் கவிதா இருவரும் கூட்டாளிகள். பிரியா ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் ரூ.4,000 எடுத்துக் கொண்டார். கணக்கிடப்பட வேண்டிய எடுப்புகள் மீதான வட்டி ஆண்டுக்கு 6% 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி, சராசரி கால முறையைப் பயன்படுத்தி கணக்கிடவும்.
40.
பின்வரும் விவரங்கள் ஒரு சங்கத்தின் 2017-2018 ஆம் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும்?
| விவரம் | ரூ |
|---|---|
| 1.4.2017 அன்று பரிசு நிதி | 60,000 |
| 1.4.2017 அன்று பரிசு நிதிக்கான முதலீடு | 60,000 |
| பரிசு நிதி முதலீடு மீதான வட்டிப் பெற்றது | 6,000 |
| பரிசுகள் வழங்கியது | 8,000 |
| பரிசு நிதிக்காக நன்கொடைப் பெற்றது | 12,000 |
41.
நரேஷ், மணி மற்றும் முத்து ஆகிய கூட்டாளிகள் 2:2:1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். 2019 மார்ச் 31ஆம் நாள் நிறுவனத்திலிருந்து முத்து விலகினார். முத்து விலகிய நாளன்று, ஏடுகளில் நற்பெயர் ரூ.40,000 எனக் காட்டியது. அவர்கள் முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு, தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
அ) நற்பெயர் முழுவதையும் போக்கெழுத கூட்டாளிகள் முடிவெடுத்தால்
ஆ) நற்பெயரில் பாதித்தொகையை போக்கெழுத கூட்டாளிகள் முடிவெடுத்தால்
42.
குமார், கேசவன் மற்றும் மனோகர் எனும் கூட்டாளிகள் முறையே \(\frac {1}{2},\frac {1}{3}\) மற்றும் \(\frac {1}{6}\) எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். மனோகர் விலகினார். அவருடைய பங்கினை குமார் மற்றும் கேசவன் இருவரும் சமமாக எடுத்துக் கொண்டனர். புதிய இலாப விகிதத்தையும் மற்றும் ஆதாய விகிதத்தையும் கணக்கிடவும்
43.
2017, ஜனவரி 1 அன்று அறிவழகன் மற்றும் சீனிவாசன் என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகள் முறையே ரூ.15,000 மற்றும் ரூ.10,000 இருப்பினைக் காட்டியது. 2017, ஜூலை 1 அன்று அறிவழகன் கூடுதல் முதலாக ரூ.5,000 கொண்டு வந்தார் மற்றும் 2017, செப்டம்பர் 1 அன்று சீனிவாசன் கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.10,000.
2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடவும்.
44.
பின்வரும் விவரங்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட வேண்டிய சந்தா தொகையினை கணக்கிடவும்.
| சந்தா பெற்றது | ரூ |
|---|---|
| 2015 - 16 - க்காக | 7,500 |
| 2016 –17 - க்காக | 60,000 |
| 2017 – 18 - க்காக | 1,500 |
| 69,000 |
2016-17 ஆம் ஆண்டில் பெற வேண்டிய சந்தா ரூ 2,400. 2016-2017 ஆம் ஆண்டிற்கான சந்தா 2015-2016 ஆம் ஆண்டில் பெற்றது ரூ 1,000
45.
கிரண், வினோத் மற்றும் விமல் எனும் கூட்டாளிகள் 5:3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். கிரண் விலகினார். வினோத் மற்றும் விமல் ஆகியோரின் புதிய இலாப விகிதம் 2:1 ஆகும். ஆதாய விகிதத்தை கணக்கிடவும்
46.
சுதா நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 பங்குகளை விண்ணப்பத்தின் போது ரூ.3, ஒதுக்கீட்டின் போது ரூ.4, மீதமுள்ள தொகை தேவையான பொழுது என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. 1,40,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை இயக்குனர்கள் பின்வருமாறு ஒதுக்கீடு செய்தனர்
60,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு - முழுமையாக
75,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு - 40,000 பங்குகள் (மிகுதியான விண்ணப்ப பணம் ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தப்படும்)
5,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு - எதுவுமில்லை
அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. ஒதுக்கீட்டுத் தொகை பெறுவது வரையிலான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
47.
மேரி, மீனா மற்றும் மரியம் எனும் கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் இலாபநட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1-1-2019 அன்று மேரி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளில், அந்நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு சொத்துகள் பக்கத்தில் ரூ. 75,000 பகிர்ந்து தரா நட்டம் எனக் காட்டியது. பகிர்ந்து தரா நட்டத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
48.
சந்திரா நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக்குறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்புநிலைக்குறிப்பினைத் தயார் செய்யவும்.
| விவரம் | 2016, மார்ச் 31 | 2017, மார்ச் 31 |
|---|---|---|
| ரூ. | ரூ. | |
| I.பங்குமூலதனம் மற்றும்பொறுப்புகள் | ||
| பங்குதாரர் நிதி | 1,00,000 | 2,60,000 |
| நீண்ட காலப் பொறுப்புகள் | 50,000 | 60,000 |
| நடப்புப் பொறுப்புகள் | 25,000 | 30,000 |
| மொத்தம் | 1,75,000 | 3,50,000 |
| II. சொத்துகள் | ||
| நிலைச் சொத்துகள் | 1,00,000 | 2,00,000 |
| நடப்புச் சொத்துகள் | 75,000 | 1,50,000 |
| மொத்தம் | 1,75,000 | 3,50,000 |
49.
கான் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 50,000 பங்குகளை விண்ணப்பத்தின் போது ரூ.4, ஒதுக்கீட்டின் போது ரூ.4 மற்றும் முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.2 என செலுத்தும் வகையில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. 65,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இயக்குனர்கள் 50,000 பங்குகளை விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யவும், மிகுதியாகப் பெற்ற விண்ணப்பத் தொகையை ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தி கொள்ளவும் முடிவு செய்தனர். அனைத்துத் தொகைகளும் பெறப்பட்டன எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
50.
பாரத் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:
| விண்ணப்பத்தின் போது பங்கொன்றிற்கு | ரூ.5 |
| ஒதுக்கீட்டின் போது பங்கொன்றிற்கு | ரூ.3 |
| முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது பங்கொன்றிற்கு | ரூ.2 |
1,20,000 பங்குகளுக்கு விண்ணப்பத் தொகை பெறப்பட்டது. கூடுதல் விண்ணப்பத் தொகை உடனடியாக திருப்பிச் செலுத்தப்பட்டது. மேற்கண்டவற்றை பதிவு செய்ய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்
1.
| விவரம் | 2015-16 | 2016-17 | தொகையின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
சதவீதத்தின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
|---|---|---|---|---|
| ரூ. | ரூ. | ரூ. | ||
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 3,00,000 | 3,60,000 | +60,000 | +20 |
| கூட்டுக: இதர வருமானங்கள் | 1,00,000 | 60,000 | –40,000 | –40 |
| மொத்த வருமானங்கள் | 4,00,000 | 4,20,000 | +20,000 | +5 |
| கழிக்க: செலவுகள் | 2,00,000 | 1,80,000 | –20,000 | –10 |
| வரிக்கு முன் இலாபம் | 2,00,000 | 2,40,000 | +40,000 | +20 |
| கழிக்க: வருமானவரி 30% | 60,000 | 72,000 | +12,000 | +20 |
| வரிக்கு பின்னர் உள்ள இலாபம் | 1,40,000 | 1,68,000 | +28,000 | +20 |
2.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| முதல் நிதி (இருப்புக்கட்டும் தொகை) | 80,000 | விளையாட்டு உபகரணங்கள் | 30,000 |
| சந்தா முன்கூட்டிப் பெற்றது | 8,000 | கணிப்பொறி | 25,000 |
| பரிசு நிதி | 10,000 | சந்தா பெற வேண்டியது | 5,000 |
| பரிசு நிதி முதலீடுகள் | 10,000 | ||
| கைரொக்கம் | 7,000 | ||
| வங்கி ரொக்கம் | 21,000 | ||
| 98,000 | 98,000 |
3.
உரிமையாளர் விகிதம் = =0.5:1
பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + முன்னுரிமை பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி
= 1,00,000 + 75,000 + 25,000
= ரூ.2,00,000
4.
எடுப்புகள் மீதான வட்டி = எடுப்புத் தொகை x வட்டி வீதம் x வட்டிக்குரிய காலம்
5.
| செலவுகள் | ரூ | வருமானம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|
| நடப்பாண்டில் பெற்ற சந்தா | 16,000 | |||
| கழிக்க: 2017 ஆம் ஆண்டுக்கான சந்தா பெற்றது | 3,000 | |||
| 13,000 | ||||
| கழிக்க: 2019 ஆம் ஆண்டுக்கான சந்தா பெற்றது | 5,000 | |||
| 8,000 | ||||
| கூட்டுக: 2018 ஆம் ஆண்டு பெற வேண்டிய சந்தா | 4,000 | |||
| 12,000 | ||||
| கூட்டுக: 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா 2017-ஆம் ஆண்டில் முன்கூட்டிப் பெற்றது | 2,000 | 14,000 | ||
6.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| பற்பல கடனீந்தோர் | 25,000 | ரொக்கம் | 4,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 4,000 | சரக்கிருப்பு | 45,000 |
| முதல் (இருப்புக் கட்டும் தொகை) | 1,66,000 | கடனாளிகள் | 70,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 6,000 | ||
| இயந்திரம் | 60,000 | ||
| அறைகலன் | 10,000 | ||
| 1,95,000 | 1,95,000 |
7.
நிதிநிலை அறிக்கையில் காணப்படும் பல்வேறு விவரங்களுக்கிடையேயான தொடர்புகளை கண்டறிந்து, மதிப்பிட்டு ஒப்பீடு செய்வதே நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு ஆகும். இது வணிக நிறுவனத்தின் செயல்பாடுகளையும், நிதி நிலையையும் புரிந்து கொள்வதற்கு வழி செய்கிறது.
8.
1) பொது மக்களுக்கு வெளியிடப்படும் அனைத்துப் பங்குகளும் முழுவதும் ஒப்பப்படாமல் போகலாம்.
2) வெளியிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையை விட ஒப்பப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அது குறை ஒப்பம் எனப்படும்.
9.
இலாப நோக்கற்ற அமைப்புகள் அரசு மற்றும் இதர அமைப்புகளிடமிருந்து பல்வேறு வகையான மானியங்களைப் பெறுகின்றன. அவையாவன: கட்டடங்கள் கட்டுவதற்காகப் பெறப்படும் மானியமானது திரும்பத் திரும்ப நிகழாத் தன்மையுடையதால் முதலின வரவாகக் கருதப்படுகிறது.
சொத்துகளைப் பராமரிக்கவும் மற்றும் சம்பளம் கொடுக்கவும் பெறப்படும் மானியமானது திரும்பத் திரும்ப நிகழும் தன்மையுடையதால் வருவாயின வரவாகக் கருதப்படுகிறது.
10.
(i) நடப்பு விகிதம், ஒரு வணிக நிறுவனத்தின் நடப்புச் சொத்துகளுக்கும் மற்றும் நடப்புப் பொறுப்புகளுக்கும் உள்ள விகிதச்சாரத்தைத் தருகிறது.
(ii) இரு நடப்புச் சொத்துகளை நடப்புப் பொறுப்புகளால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
(iii) நடப்பு விகிதம், ஒரு வணிக நிறுவனம் தனது நடப்புப் பொறுப்புகளை எப்போது செலுத்த வேண்டுமோ அப்போது, அதை எதிர்கொள்ளும் திறனைக் குறிக்கிறது. அது பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.
11.
ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் ஒரு நபரை புதிய கூட்டாளியாக சேர்க்கலாம். இதுவே கூட்டாளி சேர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான கூடுதல் முதல் பெறுவதற்காகவும் அல்லது புதிய கூட்டாளி சேர்க்கப்படலாம்
12.
கணக்கியல் அறிக்கைகளை வடிவமைத்தலின் படிநிலைகள் பின்வருமாறு:
(i) அறிக்கை உருவாக்குதலின் நோக்கத்தை வரையறுக்கவும்.
(ii) அறிக்கையின் கட்டமைப்பை குறிப்பிடவும்.
(iii) தரவுத்தளத்துடன் தொடர்புகொண்டு ஏடுகளில் இருந்து தரவுகளை எடுக்க, மாற்றம் செய்ய, சேர்க்க அல்லது அழிக்க தரவுத்தள கேள்விகளை உருவாக்கவும்.
13.
கூட்டாண்மை நிறுவனம் என்பது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நபர்களோ, அவர்களுக்கிடையே ஏற்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு தொழிலை ஏற்று நடத்தும் தொழில் வடிவமைப்பு ஆகும். கூட்டாண்மைத் தொழிலை ஏற்று நடத்த ஒப்புக் கொள்ளும் நபர்களை தனித்தனியாக கூட்டாளிகள் எனவும், ஒட்டுமொத்தமாக நிறுவனம் என்றும் அழைக்கிறோம்.
14.
கோபு பங்கு = \(\frac { 7 }{ 15 } \)
ஆதாயப் பங்கு = விலகும் கூட்டாளியின் பங்கு x ஆதாயப் பங்கின் விகிதாச்சாரம்
ராமு = \(\frac { 7 }{ 15 } \times \frac { 3 }{ 4 } =\frac { 21 }{ 60 } \)
சோமு = \(\frac { 7 }{ 15 } \times \frac { 3 }{ 4 } =\frac { 21 }{ 60 } \)
ஆதாய விகிதம் = \(\frac { 21 }{ 60 } :\frac { 7 }{ 60 } \) அதாவது 3 : 1
தொடரும் கூட்டாளிகளின் புதிய பங்கு + ஆதாயப் பங்கு
ராமு = \(\frac { 3 }{ 15 } +\frac { 21 }{ 60 } =\frac { 12+21 }{ 60 } =\frac { 33 }{ 60 } =\frac { 11 }{ 20 } \)
சோமு = \(\frac { 5 }{ 15 } +\frac { 7 }{ 60 } =\frac { 20+7 }{ 60 } =\frac { 27 }{ 60 } =\frac { 9 }{ 20 } \)
ஆகையால், ராமு மற்றும் சோமு ஆகியோரின் புதிய விகிதம் = \(\frac { 11 }{ 20 } :\frac { 9 }{ 20 } \) அதாவது 11 : 9
15.
ஆதாயப் பங்கு = புதிய பங்கு - பழைய பங்கு
மாலா = \(\frac { 3 }{ 3 } -\frac { 2 }{ 5 } =\frac { 1 }{ 5 } \)
நீலா = \(\frac { 2 }{ 5 } -\frac { 1 }{ 5 } =\frac { 1 }{ 5 } \)
ஆகையால், மாலா மற்றும் நீலா ஆகியோரின் ஆதாய விகிதம் = 1 : 1
16.
"நிதி" என்பது நடைமுறை முதலைக் குறிப்பதாகும். நடைமுறை முதல் என்பது நடப்புப் பொறுப்புகளை விட அதிகமாக உள்ள நடப்புச் சொத்துகளைக் குறிப்பதாகும். ஓட்டம் என்பது இயக்கம் என்பதைக் குறிக்கும்.
17.
(i) ஆதாய விகிதம் கணக்கிடுவதன் நோக்கம் விலகும் கூட்டாளிக்கு கொடுக்கப்படும் நற்பெயரை ஏற்றுக் கொள்வதாகும். ஆதாயப் பங்கு பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.
(ii) ஆதாயப்பங்கு = புதிய பங்கு - பழைய பங்கு
(iii) ஆதாய விகிதம் = தொடரும் கூட்டாளிகளுக்கு கிடைக்க பெற்ற ஆதாயத்தின் விகிதமாகும்.
18.
தியாக விகிதம் மற்றும் புதிய இலாபப்பகிர்வு விகிதம் கணக்கிடுதல்:
அம்பிகா, தாரணி மற்றும் பத்மாவின் பழைய இலாப விகிதம் = 5 : 3 : 2 அல்லது \(\frac { 5 }{ 10 } :\frac { 3 }{ 10 } :\frac { 2 }{ 10 } \)
இலாபத்தில் இரம்யாவின் பங்கு 25% அல்லது \(\frac { 25 }{ 100 } \) அல்லது \(\frac { 1 }{ 4 } \)
மொத்த பங்கு 1 என எடுத்துக் கொள்ளவும்.
மீதப்பங்கு = \(1-\frac { 1 }{ 4 } =\frac { 4-1 }{ 4 } =\frac { 3 }{ 4 } \)
பழைய கூட்டாளியின் புதிய பங்கு = மீதப் பங்கு x பழையப் பங்கு
அம்பிகா = \(\frac { 3 }{ 4 } \times \frac { 5 }{ 10 } =\frac { 15 }{ 40 } \)
தரணி = \(\frac { 3 }{ 4 } \times \frac { 3 }{ 10 } =\frac { 9 }{ 40 } \)
பத்மா = \(\frac { 3 }{ 4 } \times \frac { 2 }{ 10 } =\frac { 6 }{ 40 } \)
புதிய கூட்டாளியின் பங்கு
இரம்யா = \(\frac { 1 }{ 4 } \)
இரம்யா பங்கிற்குரிய பகுதியை சமன் செய்யும் பொருட்டு, 10 ஆல் பெருக்கி மற்றும் வகுக்க வேண்டும்.
இரம்யாவின் பங்கு = \(\frac { 1 }{ 4 } \times \frac { 10 }{ 10 } =\frac { 10 }{ 40 } \)
அம்பிகா, தாரணி, பத்மா மற்றும் இரம்யாவின் இலாபப் பகிர்வு விகிதம் = \(\frac { 15 }{ 40 } :\frac { 9 }{ 40 } :\frac { 6 }{ 40 } :\frac { 10 }{ 40 } \)
அதாவது, 15 : 9 : 6 : 10
19.
தியாக விகிதம் மற்றும் புதிய இலாபப் பகிர்வு விகிதம் கணக்கிடுதல்:
சிவாவின் பங்கு = \(\frac { 1 }{ 5 } \)
தியாகப்பங்கின் விகிதம் = 1 : 1 (சமமாக) அதாவது, \(\frac { 1 }{ 2 } :\frac { 1 }{ 2 } \)
தியாகப்பங்கு = புதிய கூட்டாளியின் பங்கு x தியாகப் பங்கின் விகிதம்
செல்வம் = \(\frac { 1 }{ 5 } \times \frac { 1 }{ 2 } =\frac { 1 }{ 10 } \)
செந்தில் = \(\frac { 1 }{ 5 } \times \frac { 1 }{ 2 } =\frac { 1 }{ 10 } \)
செல்வம் மற்றும் செந்திலின் தியாக பங்கு = \(\frac { 1 }{ 10 } :\frac { 1 }{ 10 } \) அதாவது, 1 : 1
பழைய கூட்டாளியின் புதிய பங்கு = பழைய பங்கு - தியாகப் பங்கு
செல்வம் = \(\frac { 2 }{ 5 } -\frac { 1 }{ 10 } =\frac { 4-1 }{ 10 } =\frac { 3 }{ 10 } \)
செந்தில் = \(\frac { 3 }{ 5 } -\frac { 1 }{ 10 } =\frac { 6-1 }{ 10 } =\frac { 5 }{ 10 } \)
புதிய கூட்டாளியின் பங்கு
சிவா = \(\frac { 1 }{ 5 } \)
சிவாவின் பங்கிற்குரிய பகுதியை சமன் செய்யும் பொருட்டு, 2 ஆல் பெருக்கி மற்றும் வகுக்க வேண்டும்.
= \(\frac { 1 }{ 5 } \times \frac { 2 }{ 2 } =\frac { 2 }{ 10 } \)
எனவே, புதிய இலாபப் பகிர்வு விகிதம் = \(\frac { 3 }{ 10 } :\frac { 5 }{ 10 } :\frac { 2 }{ 10 } \) அதாவது 3 : 5 : 2
20.
தியாக விகிதம் மற்றும் புதிய இலாபப்பகிர்வு விகிதம் கணக்கிடுதல்:
தியாகப் பங்கு = \(\frac { 1 }{ 20 } ,\frac { 4 }{ 20 } \)
இராஜா மற்றும் இரவி அவர்களின் தியாக விகிதம் 1 : 4
பழைய இலாபப் பகிர்வு விகிதம் = 3 : 2 அல்லது \(\frac { 3 }{ 5 } :\frac { 2 }{ 5 } \)
பழைய கூட்டாளிகளின் புதிய பங்கு = பழைய பங்கு - தியாகப் பங்கு
இராஜா = \(\frac { 3 }{ 5 } -\frac { 1 }{ 20 } =\frac { 12-1 }{ 20 } =\frac { 11 }{ 20 } \)
இரவி = \(\frac { 2 }{ 5 } -\frac { 4 }{ 20 } =\frac { 8-4 }{ 20 } =\frac { 4 }{ 20 } \)
புதிய கூட்டாளியின் பங்கு
இராம் = \(\frac { 1 }{ 4 } \)
இராமின் பங்கிற்குரிய பகுதியை சுமன் செய்யும் பொருட்டு 5 ஆல் பெருக்கி மற்றும் வகுக்க வேண்டும்
= \(\frac { 1 }{ 4 } \times \frac { 5 }{ 5 } = \frac { 5 }{ 20 }\)
இராஜா,இரவி மற்றும் இராம் அவர்களின் புதிய இலாபப் பகிர்வு விகிதம்
= \(\frac { 11 }{ 20 } :\frac { 4 }{ 20 } :\frac { 5 }{ 20 } \)
= 11 : 4 : 5
21.
(i) கடந்த ஆண்டுகளின் இலாபங்கள் மற்றும் நட்டங்கள் கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் இருந்தால் அது பகிர்ந்துதர இலாபம் எனப்படும்
(ii) அவ்வாறான பகிர்ந்து தரா காப்புகள், இலாபங்கள் அல்லது நட்டங்கள் பழைய கூட்டாளிகளுக்கு உரியன. எனவே, அவை பழைய கூட்டாளிகளுக்கு பழைய இலாப விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
22.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்கக் க/கு (அளித்தது) | 4,50,000 | இருப்பு கீ/கொ | 1,70,000 |
| கொள்முதல் திருப்பம் க/கு | 20,000 | கொள்முதல் க/கு (கடன்) | 4,90,000 |
| இருப்பு கீ/இ | 1,90,000 | (இருப்புக்கட்டும் தொகை) | |
| 6,60,000 | 6,60,000 |
23.
பழைய கூட்டாளிகளின் தியாகம் குறிப்பிடப்படவில்லை. பழைய கூட்டாளிகளின் இலாப விகிதமான 5:1 தியாக விகிதமாக கருத வேண்டும். எனவே, தியாகவிகிதம் 5:1.
தருணின் நற்பெயர் =27,000 x \(\frac { 2 }{ 9 } \) =ரூ.6,000
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| தருணின் முதல் க/கு | ப | 6,000 | |||
| அசோக் முதல் க/கு (5/6) | 5,000 | ||||
| மும்தாஜ் முதல் க/கு (1/6) | 1,000 | ||||
| (தருணின் நற்பெயர் பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கில் பழைய இலாப விகிதத்தில் சரிக்கட்டப்பட்டது) |
24.
தியாக விகிதம் மற்றும் புதிய இலாபப் பகிர்வு விகிதம் கணக்கிடுதல்
அருணின் பங்கு = \(\frac { 1 }{ 4 } \)
தியாகப் பங்கின் விகிதம் = 1:1(சமமாக) அதாவது, \(\frac { 1 }{ 2 } :\frac { 1 }{ 2 } \)
தியாகப் பங்கு = புதிய கூட்டாளியின் பங்கு x தியாகப் பங்கின் விகிதம்
மகேஷ் = \(\frac { 1 }{ 4 } \times \frac { 1 }{ 2 } =\frac { 1 }{ 8 } \)
தனுஷ் =\(\frac { 1 }{ 4 } \times \frac { 1 }{ 2 } =\frac { 1 }{ 8 } \)
மகேஷ் மற்றும் தனுஷ்–ன் தியாகப் பங்கு \(\frac { 1 }{ 8 } :\frac { 1 }{ 8 } \) அதாவது, 1:1
பழைய கூட்டாளியின் புதிய பங்கு = பழைய பங்கு - தியாகப் பங்கு
மகேஷ் =\(\frac { 2 }{ 3 } -\frac { 1 }{ 8 } =\frac { 16-3 }{ 24 } =\frac { 13 }{ 24 } \)
தனுஷ் =\(\frac { 1 }{ 3 } -\frac { 1 }{ 8 } =\frac { 8-3 }{ 24 } =\frac { 5 }{ 24 } \)
புதிய கூட்டாளியின் பங்கு அருண் = \(\frac { 1 }{ 4 } \)
அருணின் பங்கிற்குரிய பகுதியை சமன் செய்யும் பொருட்டு, 6 ஆல் பெருக்கி மற்றும் வகுக்க வேண்டும்
=\(\frac { 1 }{ 4 } \times \frac { 6 }{ 6 } =\frac { 6 }{ 24 } \)
புதிய இலாபப் பகிர்வு விகிதம்=\(\frac { 13 }{ 24 } :\frac { 5 }{ 24 } :\frac { 6 }{ 24 } \) அதாவது, 13:5:6.
25.
| செலவுகள் | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| நடப்பாண்டில் பெற்ற சந்தா | 50,000 | |||
| கழிக்க:2017 ஆம் ஆண்டுக்கான சந்தா பெற்றது | 5,000 | |||
| 45,000 | ||||
| கழிக்க:2019 ஆம் ஆண்டுக்கான சந்தா பெற்றது | 7,000 | |||
| 38,000 | ||||
| கூட்டுக: 2018 ஆம் ஆண்டு பெற வேண்டிய சந்தா: | 6,000 | |||
| 44,000 | ||||
| கூட்டுக: 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா 2017 ஆம் ஆண்டில் முன்கூட்டிப் பெற்றது | 4,000 | 48,000 |
26.
| விவரம் | ரூ. |
|---|---|
| இறுதி முதல் (மார்ச் 31, 2019) | 8,50,000 |
| கூட்டுக: அவ்வாண்டில் எடுப்புகள் | 70,000 |
| 9,20,000 | |
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் | 1,20,000 |
| சரிகட்டப்பட்ட இறுதி முதல் | 8,00,000 |
| கழிக்க: தொடக்க முதல் (ஏப்ரல் 1, 2018) | 5,00,000 |
| அவ்வாண்டின் இலாபம் | 3,00,000 |
27.
தியாக விகிதம் மற்றும் புதிய இலாபப் பகிர்வு விகிதம் கணக்கிடுதல்
பழைய பங்கு = 3:2 அதாவது, சுரேஷ் \(\frac { 3 }{ 5 } \) மற்றும் தினேஷ் \(\frac { 2 }{ 5 } \)
தியாகப் பங்கு = பழைய பங்கு x தியாகப் பங்கின் விகிதம்
சுரேஷ் =\(\frac { 3 }{ 5 } \times \frac { 1 }{ 5 } =\frac { 3 }{ 25 } \)
தினேஷ் =\(\frac { 2 }{ 5 } \times \frac { 2 }{ 5 } =\frac { 4 }{ 25 } \)
சுரேஷ் மற்றும் தினேஷ் அவர்களின் தியாக விகிதம் \(\frac { 3 }{ 25 } \) மற்றும் \(\frac { 4 }{ 25 } \) அதாவது, 3:4
புதிய பங்கு = பழைய பங்கு - தியாகப் பங்கு
சுரேஷ் =\(\frac { 3 }{ 5 } -\frac { 3 }{ 25 } =\frac { 15-3 }{ 25 } =\frac { 12 }{ 25 } \)
தினேஷ் =\(\frac { 2 }{ 5 } -\frac { 4 }{ 25 } =\frac { 10-4 }{ 25 } =\frac { 6 }{ 25 } \)
புதிய கூட்டாளியின் பங்கு = சுரேஷ் மற்றும் தினேஷ் அவர்களின் தியாகப் பங்கின் கூட்டுத்தொகை
ரமேஷ் =\(\frac { 3 }{ 25 } +\frac { 4 }{ 25 } =\frac { 3+4 }{ 25 } =\frac { 7 }{ 25 } \)
சுரேஷ், தினேஷ் மற்றும் இரமேஷ் அவர்களின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் \(\frac { 12 }{ 25 } :\frac { 6 }{ 25 } :\frac { 7 }{ 25 } \) அதாவது, 12:6:7
28.
தியாக விகிதம் மற்றும் புதிய இலாபப் பகிர்வு விகிதம் கணக்கிடுதல்
பழைய கூட்டாளிகளின் தியாகப் பங்கு
ஹரி =\(\frac{1}{8}\)
சலீம் =0
தியாக விகிதம் = 1:0
ஹரி மற்றும் சலீம் அவர்களின் பழைய பங்கு 5:3 அதாவது, \(\frac { 5 }{ 8 } :\frac { 3 }{ 8 } \)
பழைய கூட்டாளியின் புதிய பங்கு = பழைய பங்கு – தியாகப் பங்கு
ஹரி =\(\frac { 5 }{ 8 } -\frac { 1 }{ 8 } =\frac { 5-1 }{ 8 } =\frac { 4 }{ 8 } \)
சலீம் =\(\frac { 3 }{ 8 } \)
புதிய கூட்டாளி ஜோயல் பங்கு =\(\frac{1}{8}\)
ஹரி, சலீம் மற்றும் ஜோயல் அவர்களின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் \(\frac { 4 }{ 8 } :\frac { 3 }{ 8 } :\frac { 1 }{ 8 } \) அதாவது 4:3:1
29.
(i) முதலீடு மீதான வருவாய், வட்டி மற்றும் வரிக்கு முன்னர் உள்ள நிகர இலாபத்திற்கும் பயன்படுத்தப்பட்ட முதலுக்கும் உள்ள விகிதத்தைக் காட்டுகிறது. (பங்குதாரர் நிதி மற்றும் நீண்டகாலக் கடன்கள்).
(ii) இந்த விகிதமானது பயன்படுத்தப்பட்ட முதல், வணிகத்தில் எவ்வாறு திறமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அளவிடுகின்றது.
(iii) இது வணிக நிறுவனத்தின் ஒட்டுமொத்த இலாபத் தன்மையை அளவிடுகிறது.
(iv) முதலீடு மீதான வருவாய் = வட்டி மற்றும் வரிக்கு முன்னர் உள்ள நிகர இலாபம் / பயன்படுத்தப்பட்ட முதல் x 100
30.
(i) புற அக பொறுப்புகள் விகிதம் ஒரு வணிக நிறுவனத்தின் நீண்டகால கடன் தீர்க்கும் திறனை மதிப்பிடுவதற்கு கணக்கிடப்படுகிறது.
(ii) புற அக பொறுப்புகள் விகிதம் நீண்டகால கடன் மற்றும் பங்குதாரர் நிதிக்கும் உள்ள தொடர்பினை வெளிப்படுத்துகிறது.
(iii) இது கீழ்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.
புற அக பொறுப்புகள் விகிதம்

31.
(i) கணக்கியல் தகவல் அமைப்பு என்பது மேலாண்மையின் அனைத்து நிலைகளிலும் முடிவெடுப்பதற்கு தேவையான தகவலை அளிக்கும் ஒரு முறையாகும்.
(ii) கணக்கியல் தகவல் அமைப்பு, நிதியியல் தரவுகளை சேகரித்து அதை செயலாக்கப் பெறச் செய்து பல்வேறு பயனர்களுக்கு தகவலாக அளிக்கிறது.
32.
33.
உறுப்பினர்களிடமிருந்து பெறப்படும் ஆயுள் உறுப்பினர் கட்டணம் ஒரு முதலின வரவாகும். ஏனெனில், இது திரும்பத் திரும்ப நிகழாத் தன்மை கொண்டது.
34.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2019 | கவிதா முதல் க/கு (4/7) | ப | 40,000 | ||
| ஜனவரி 1 | இராதா முதல் க/கு (3/7) | ப | 30,000 | ||
| இலாப நட்ட க/கு | 70,000 | ||||
| (பகிர்ந்து தரா நட்டம் பழைய கூட்டாளிகளின் முதல் கணக்குக்கு பழைய இலாபவிகிதத்தில் மாற்றப்பட்டது) |
35.
நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
\(=\frac { 10,000+11,000+12,000+13,000+14,000 }{ 5 } \)
= \(\frac { 60,000 }{ 5 } \) = ரூ.12,000
சராசரி இலாபம் = ரூ.12,000
நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
= 12,000 x 2 = 24,000
நற்பெயர் = ரூ.24,000
36.
ஒரு வியாபாரத்தின் உயர் இலாபம் என்பது சாதாரண இலாபத்தை விட கூடுதலாக உள்ள சராசரி இலாபம் ஆகும்.
உள்ள இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம்
37.
விரைவு விகிதம் = = \(\frac {1,85,000}{1,00,000}\) = 1.85:1
நீர்மைச் சொத்துகள் = நடப்புச் சொத்துகள் – சரக்கிருப்பு – முன்கூட்டிச் செலுத்திய செலவுகள்
= 2,50,000 – 50,000 – 15,000
= ரூ.1,85,000
38.
இலாபநட்டப் பகிர்வு கணக்கு இலாப நட்டக் கணக்கின் நீட்டிப்பாகும். இது கூட்டாளிகளிடமிருந்து பெற வேண்டிய தொகை மற்றும் கூட்டாளிகளுக்குச் செலுத்த வேண்டியது தொடர்பான நடவடிக்கைகளைச் சரிக்கட்டும் நோக்கத்திற்காக தயாரிக்கப்படுகிறது.
39.
பிரியாவின் எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடுதல் (சராசரி கால முறையை பயன்படுத்தி)
மொத்த எடுப்புத் தொகை = 4,000 × 4 =ரூ.16,000
எடுப்புகள் ஒவ்வொரு காலாண்டு இறுதியிலும் எடுத்திருந்தால், சராசரி காலம் = 4.5

=ரூ.16,000 x \(\\ \frac { 6 }{ 100 } \times \frac { 4.5 }{ 12 } \) =ரூ.360
40.
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|---|
| பரிசு நிதி | 60,000 | பரிசு நிதி முதலீடுகள் | 60,000 | |
| கூட்டுக : பரிசு நிதிக்கான முதலீடு மீதான வட்டிப் பெற்றது. | 6,000 | |||
| கூட்டுக: பரிசு நிதிக்கான நன்கொடை | 12,000 | |||
| 78,000 | ||||
| கழிக்க: பரிசுகள் வழங்கியது | 8,000 | 70,000 |
41.
அ) நற்பெயர் முழுவதையும் போக்கெழுத கூட்டாளிகள் முடிவெடுத்தால்:
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2019 மார்ச் 31 | நரேஷ் முதல் க/கு (40,000 x 2/5) | ப | 16,000 | ||
| மணி முதல் க/கு (40,000 x 2/5) | ப | 16,000 | |||
| முத்து முதல் க/கு (40,000 x 1/5) | ப | 8,000 | |||
| நற்பெயர் க/கு | 40,000 | ||||
| (நற்பெயர் போக்கெழுதியது) |
ஆ) நற்பெயரில் பாதித்தொகையை போக்கெழுதினால் (அதாவது ரூ.20,000)
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2019 மார்ச் 31 | நரேஷ் முதல் க/கு (20,000 x 2/5) | ப | 8,000 | ||
| மணி முதல் க/கு (20,000 x 2/5) | ப | 8,000 | |||
| முத்து முதல் க/கு (20,000 x 2/5) | ப | 4,000 | |||
| நற்பெயர் க/கு | 20,000 | ||||
| (நற்பெயர் பாதித் தொகையை போக்கெழுதியது) |
42.
ஆதாய விகிதம் = 1:1
மனோகர் பங்கினை குமார் மற்றும் கேசவன் ஆகியோர் சமமாக எடுத்துக் கொள்கின்றனர்.
மனோகரின் பங்கு \(=\frac {1}{6}\)
ஆதாயப்பங்கு = விலகும் கூட்டாளியின் பங்கு x ஆதாயப் பங்கின் விகிதாச்சாரம்
குமார் \(=\frac { 1 }{ 6 } \times \frac { 1 }{ 2 } =\frac { 1 }{ 12 } \)
கேசவன் \(=\frac { 1 }{ 6 } \times \frac { 1 }{ 2 } =\frac { 1 }{ 12 } \)
எனவே, குமார் மற்றும் கேசவன் ஆகியோரின் ஆதாய விகிதம் \(=\frac { 1 }{ 12 } :\frac { 1 }{ 12 } \) அதாவது 1:1
தொடரும் கூட்டாளியின் புதிய பங்கு =பழைய பங்கு +ஆதாயப்பங்கு
குமார் \(=\frac { 1 }{ 2 } +\frac { 1 }{ 12 } =\frac { 6+1 }{ 12 } =\frac { 7 }{ 12 } \)
கேசவன் \(=\frac { 1 }{ 3 } +\frac { 1 }{ 12 } =\frac { 4+1 }{ 12 } =\frac { 5 }{ 12 } \)
எனவே, குமார் மற்றும் கேசவன் ஆகியோரின் புதிய இலாப விகிதம் \(\frac { 7 }{ 12 } :\frac { 5 }{ 12 } \) அதாவது 7:5
43.
முதல் மீதான வட்டி கணக்கிடுதல்
அறிவழகன்:

44.
ப 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கு வ
| செலவுகள் | ரூ | வருமானம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|
| சந்தா பெற்றது | 60,000 | |||
| கூட்டுக: பெறவேண்டிய சந்தா (2016-17) | 2,400 | |||
| கூட்டுக: 2016-2017 ஆம் ஆண்டிற்குரிய சந்தா | ||||
| 2015-16 –ல் முன்கூட்டிப் பெற்றது | 1,000 | 63,400 |
மாணவர் குறிப்பு
(i) 2015-16 ஆம் ஆண்டிற்கான சந்தா ரூ. 7,500 மற்றும் 2017-18 ஆம் ஆண்டிற்கான சந்தா ரூ1,500 நடப்பாண்டிற்கு தொடர்புடையது அல்ல. எனவே, அவை வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பதியப்படுவதில்லை.
(ii) நடப்பு ஆண்டு 2016-17-ல் பெறவேண்டிய சந்தா ரூ.2,400. இது 2016-17 ல் பெறப்பட்ட சந்தாவுடன் கூட்டப்பட வேண்டும்.
45.
ஆதாய பங்கு =புதிய பங்கு – பழைய பங்கு
வினோத் \(=\frac { 2 }{ 3 } =\frac { 3 }{ 10 } =\frac { 20-9 }{ 30 } =\frac { 11 }{ 30 } \)
விமல் \(\\ =\frac { 1 }{ 3 } -\frac { 2 }{ 10 } =\frac { 10-6 }{ 30 } =\frac { 4 }{ 30 } \)
ஆகையால், வினோத் மற்றும் விமல் ஆகியோரின் ஆதாய விகிதம் = 11 : 4
46.
| நாள் | விவரம் | பே. ப.எ. |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (1,40,000 × 3) | ப | 4,20,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 4,20,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு (1,00,000 × 3) | ப | 3,00,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 3,00,000 | ||||
| (விண்ணப்பத் தொகையை பங்கு முதலுக்கு மாற்றியது) | |||||
| நேர்மைப்பங்கு விண்ணப்பக் க/கு (5,000 × 3) | ப | 15,000 | |||
| வங்கி க/கு | 15,000 | ||||
| (மிகுதியான விண்ணப்பத் தொகை திருப்பியளிக்கப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு (35,000 × 3) | ப | 1,05,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 1,05,000 | ||||
| (மிகுதியான விண்ணப்பத்தொகை ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு (1,00,000 × 4) | ப | 4,00,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 4,00,000 | ||||
| (பங்கு ஒதுக்கீட்டுத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 2,95,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 2,95,000 | ||||
| (பங்கு ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) |
குறிப்பு
| விண்ணப்பித்த பங்குகள் |
ஒதுக்கப்பட்ட பங்குகள் |
விண்ணப்பத் தொகை பெற்றது |
விண்ணப்பத் தொகை | ஒதுக்கீட்டு தொகையில் பகிரப்பட்டது | திருப்பி அனுப்பியது |
|---|---|---|---|---|---|
| 60,000 | 60,000 | 1,80,000 | 1,80,000 | - | - |
| 75,000 | 40,000 | 2,25,000 | 1,20,000 | 1,05,000 | |
| 5,000 | - | 15,000 | - | - | 15,000 |
47.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. |
வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 2019 ஜன 1 | மேரி முதல் க/கு ப | 25,000 | ||
| மீனா முதல் க/கு ப | 25,000 | |||
| மரியம் முதல் க/கு ப | 25,000 | |||
| இலாப நட்ட க/கு | 75,000 | |||
| (பகிர்ந்து தரா நட்டம் அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்பட்டது.) |
48.
| விவரம் | 2015-16 | 2016-17 | தொகையின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
சதவீதத்தின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
|---|---|---|---|---|
| ரூ. | ரூ. | ரூ. | ||
| I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||||
| பங்குதாரர் நிதி | 1,00,000 | 2,60,000 | +1,60,000 | +160 |
| நீண்ட காலப் பொறுப்புகள் | 50,000 | 60,000 | +10,000 | +20 |
| நடப்புப் பொறுப்புகள் | 25,000 | 30,000 | +5,000 | +20 |
| மொத்தம் | 1,75,000 | 3,50,000 | +1,75,000 | +100 |
| II. சொத்துகள் | ||||
| நிலைச் சொத்துகள் | 1,00,000 | 2,00,000 | +1,00,000 | +100 |
| நடப்புச் சொத்துகள் | 75,000 | 1,50,000 | +75,000 | +100 |
| மொத்தம் | 1,75,000 | 3,50,000 | +1,75,000 | +100 |
49.
| நாள் | விவரம் | பே. ப.எ. |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (65,000 × 4) | ப | 2,60,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 2,60,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு (50,000 × 4) | ப | 2,00,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 2,00,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பங்கு முதல் கணக்கிற்கு மாற்றியது) | |||||
| நேர்மைப் பங்குமுதல் க/கு (15,000 × 4) | ப | 60,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 60,000 | ||||
| (மிகுதியாகப் பெற்ற விண்ணப்பத் தொகை ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | ப | 2,00,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 2,00,000 | ||||
| (பங்கு ஒதுக்கீட்டு தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (2,00,000 – 60,000) | ப | 1,40,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 1,40,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு (50,000 × 2) | ப | 1,00,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 1,00,000 | ||||
| (பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு பணம் பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 1,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | 1,00,000 | ||||
| (வங்கி முதல் மற்றும் இறுதி அழைப்பு பணம் பெற்றது) |
50.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (1,20,000 × 5) | ப | 6,00,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 6,00,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு (1,00,000 × 5) | ப | 5,00,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 5,00,000 | ||||
| (நேர்மைப் பங்கு விண்ணப்பத் தொகையை பங்கு முதலுக்கு மாற்றியது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு (20,000 × 5) | ப | 1,00,000 | |||
| வங்கி க/கு | 1,00,000 | ||||
| (மிகுதியான பங்கு விண்ணப்பத்தொகை திருப்பிச் செலுத்தியது) | |||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | ப | 3,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 3,00,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 3,00,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 3,00,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | ப | 2,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 2,00,000 | ||||
| (பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 2,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | 2,00,000 | ||||
| (பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற்றது) |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards