12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Five mark Important Questions - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
யாஸ்மின் மற்றும் சக்தி நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து பொது அளவு நிதிநிலை அறிக்கையினைத் தயார் செய்யவும்
| விவரம் | யாஸ்மின் நிறுமம் | சக்தி நிறுமம் |
|---|---|---|
| ரூ. | ரூ. | |
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||
| 1. பங்குதாரர் நிதி | ||
| (அ) பங்கு முதல் | 2,00,000 | 3,00,000 |
| (ஆ) காப்பும் மிகுதியும் | 50,000 | 60,000 |
| 2.நீண்டகாலப் பொறுப்புகள் | ||
| நீண்ட காலக் கடன்கள் | 1,50,000 | 1,80,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | ||
| கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 1,00,000 | 60,000 |
| மொத்தம் | 5,00,000 | 6,00,000 |
| II. சொத்துகள் | ||
| 1.நீண்டகாலச் சொத்துகள் | ||
| (அ) நிலைச் சொத்துகள் | 2,00,000 | 3,00,000 |
| (ஆ) நீண்டகால முதலீடுகள் | 50,000 | 1,20,000 |
| 2. நடப்புச் சொத்துகள் | ||
| சரக்கிருப்பு | 2,00,000 | 90,000 |
| ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் | 50,000 | 90,000 |
| மொத்தம் | 5,00,000 | 6,00,000 |
2.
ஒரு கூட்டண்மை நிறுவனத்தில் மஞ்சு, சாரு மற்றும் லாவண்யா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, மார்ச் 31 ஆம் நாளைய அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 1,00,000 | ||
| மஞ்சு | 70,000 | அறைகலன் | 80,000 | |
| சாரு | 70,000 | சரக்கிருப்பு | 60,000 | |
| லாவண்யா | 70,000 | 2,10,000 | கடனாளிகள் | 40,000 |
| பற்பல கடனீந்தோர் | 40,000 | கைரொக்கம் | 20,000 | |
| இலாப நட்டக் கணக்கு | 50,000 | |||
| 3,00,000 | 3,00,000 |
பின்வரும் சரிக்கட்டுதல்களுக்கு உட்பட்டு மஞ்சு என்பவர் 31.03.2018 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
(i) சரக்கிருப்பின் மதிப்பில் ரூ.10,000 குறைக்க வேண்டும்.
(i) ஐயக்கடன் ஒதுக்கு ரூ .3,000 உருவாக்க வேண்டும்.
(i) கட்டடத்தில் ரூ. 28,000 மதிப்பேற்றம் செய்ய வேண்டும்.
(ii) மஞ்சுவுக்கு செலுத்த வேண்டிய இறுதித் தொகை இன்னும்செலுத்தப்படவில்லை.மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் விலகலுக்குப் பின் கூட்டாளிகளின் முதல் கணக்கினைத் தயார் செய்யவும்.
3.
முத்து நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கவு
| விவரம் | 2017, மார்ச் 31 | 2018, மார்ச் 31 |
|---|---|---|
| ரூ. | ரூ. | |
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||
| பங்குதாரர் நிதி | 4,00,000 | 4,40,000 |
| நீண்ட காலப் பொறுப்புகள் | 1,50,000 | 1,65,000 |
| நடப்புப் பொறுப்புகள் | 75,000 | 82,500 |
| மொத்தம் | 6,25,000 | 6,87,500 |
| II. சொத்துகள் | ||
| நீண்டகாலச் சொத்துகள் | 5,00,000 | 6,00,000 |
| நடப்புச் சொத்துகள் | 1,25,000 | 87,500 |
| மொத்தம் | 6,25,000 | 6,87,500 |
4.
அமல் மற்றும் விமல் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 7:5 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 அன்றைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 80,000 | ||
| அமல் | 70,000 | அறைகலன் | 20,000 | |
| விமல் | 50,000 | 1,20,000 | சரக்கிருப்பு | 25,000 |
| பற்பல கடனீந்தோர் | 30,000 | கடனாளிகள் | 30,000 | |
| இலாப நட்ட க/கு | 24,000 | வங்கி | 19,000 | |
| 1,74,000 | 1,74,000 |
1.4.2019 இல் நிர்மல் புதிய கூட்டாளியாக சேருகிறார். அவர் ரூ.30,000 முதலுடன் எதிர்கால இலாபப்பங்கில் 1/3 விகிதத்தில், பின்வரும் சரிக்கட்டலுடன் கூட்டாளியாகிறார்.
அ) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.5,000 குறைக்கப்பட வேண்டும்.
(ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.3,000 உருவாக்கப்பட வேண்டும்.
(இ) கட்டடம் ரூ.20,000 மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்.
மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்கு பின்பான கூட்டாளி முதல் கணக்கு தயார் செய்யவும்.
5.
செல்வம் என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
| விவரம் | 1-1-2018 ரூ. |
31.12.2018 ரூ. |
|---|---|---|
| இயந்திரம் | 60,000 | 60,000 |
| வங்கி ரொக்கம் | 25,000 | 33,000 |
| பற்பல கடனாளிகள் | 70,000 | 1,00,000 |
| சரக்கிருப்பு | 45,000 | 22,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 20,000 | 38,000 |
| வங்கிக் கடன் | 45,000 | 45,000 |
| பற்பல கடனீந்தோர் | 25,000 | 21,000 |
கூடுதல் தகவல்கள்:
| ரூ. | ரூ. | ||
|---|---|---|---|
| ரொக்க விற்பனை | 20,000 | கடன் விற்பனை | 1,80,000 |
| ரொக்கக் கொள்முதல் | 8,000 | கடன் கொள்முதல் | 52,000 |
| கூலி | 6,000 | சம்பளம் | 23,500 |
| விளம்பரம் | 7,000 | வங்கிக் கடன்மீது வட்டி | 4,500 |
| எடுப்புகள் | 60,000 | கூடுதல் முதல் | 21,000 |
சரிக்கட்டுதல்கள்:
இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.
6.
பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கடனாளிகள் கணக்கு, மொத்தக் கடனீந்தோர் கணக்கு, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு மற்றும் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரித்து கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| 2018, ஏப்ரல் 1 அன்று இருப்புகள் | 2019, மார்ச் 31 அன்று இருப்புகள் | ||
| பற்பல கடனாளிகள் | 2,40,000 | பற்பல கடனாளிகள் | 2,20,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 30,000 | பற்பல கடனீந்தோர் | 1,50,000 |
| பற்பல கடனீந்தோர் | 1,20,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 8,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 10,000 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 20,000 |
| பிற தகவல்கள்: | ரூ. | ரூ. | |
| கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் | 6,00,000 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்குச் செலுத்தியது | 30,000 |
| வாடிக்கையாளருக்கு அளித்த தள்ளுபடி | 25,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது | 60,000 |
| கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் | 3,20,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது | 4,000 |
| சரக்களித்தோரால் அளிக்கப்பட்ட தள்ளுபடி | 10,000 | வாராக்கடன் | 16,000 |
7.
2018, மார்ச் 31 ஆம் நாளைய ரேகா மற்றும் மேரியின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 50,000 | ||
| ரேகா | 50,000 | சரக்கிருப்பு | 8,000 | |
| மேரி | 30,000 | 80,000 | பற்பல கடனாளிகள் | 60,000 |
| பொதுக் காப்பு | 40,000 | வங்கி ரொக்கம் | 32,000 | |
| தொழிலாளர் ஈட்டு நிதி | 10,000 | |||
| பற்பல கடனாளிகள் | 20,000 | |||
| 1,50,000 | 1,50,000 |
ரேகா, மேரி இருவரும் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்கின்றனர். அவர்கள் கவிதாவை 1/4 பங்கு விகிதத்தில் கூட்டாண்மையில் சேர்த்துக்கொண்டு, இப்பங்கு முழுவதையும் ரேகாவிடமிருந்து பெற ஒப்புகின்றனர்.
பின்வரும் சரிக்கட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன:
(i) கவிதா ரூ.20,000 முதலாக கொண்டு வர வேண்டும். அவருடைய பங்கான நற்பெயர் ரூ.4,000 என மதிப்பிடப்படுகிறது. அவர் நற்பெயருக்கென ரொக்கம் கொண்டுவரவில்லை.
(ii) கட்டடத்தின் மீது 10% தேய்மானம் உருவாக்கவும்.
(iii) சரக்கிருப்பு ரூ.6,000 என மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.
(iv) வாரா ஐயக்கடன் ஒதுக்கு 5% உருவாக்கவும்.
கூட்டாளி சேர்க்கைக்கு பின் பேரேட்டு கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினை தயார் செய்யவும்.
8.
சிவகாசி ஓய்வூதியர் மனமகிழ் மன்றத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.
| பெறுதல்கள் | ரூ | ரூ | செலுத்தல்கள் | ரூ |
|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | வாடகையும், வரியும் | 18,000 | ||
| கைரொக்கம் | 10,000 | மின் கட்டணம் | 17,000 | |
| வங்கி ரொக்கம் | 20,000 | 30,000 | அறைகலன் வாங்கியது | 12,000 |
| சந்தா | பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது | 70,000 | ||
| 2016 – 2017 | 5,000 | பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் | 16,000 | |
| 2017 – 2018 | 25,000 | சிறப்பு விருந்து செலவுகள் | 4,000 | |
| 2018 – 2019 | 6,000 | 36,000 | பற்பலச் செலவுகள் | 2,000 |
| உயில்கொடை | 40,000 | இருப்பு கீ/இ | ||
| அரங்க வாடகை | 14,000 | கைரொக்கம் | 1,000 | |
| பாதுகாப்பு பெட்டக வாடகை | 5,000 | |||
| சிறப்பு விருந்திற்கான வசூல் | 12,000 | |||
| இருப்பு கீ/இ | ||||
| வங்கி மேல்வரைப்பற்று | 3,000 | |||
| 1,40,000 | 1,40,000 |
கூடுதல் தகவல்கள்:
(i) சங்கத்தின் 300 உறுப்பினர்கள் தலா ரூ100 வீதம் ஆண்டுச்சந்தா செலுத்துகின்றனர்.
(ii) 1.4.2017 அன்று சங்கத்தின் அறைகலன் இருப்பு ரூ10,000
(iii) 2016-2017 ஆம் ஆண்டிற்கான கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ரூ.1,000.
9.
ஏற்காடு இளைஞர் சங்கத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2019, மார்ச் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.
| பெறுதல்கள் | ரூ | செலுத்தல்கள் | ரூ |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | சம்பளம் | 14,000 | |
| கைரொக்கம் | 9,600 | அலுவலகச் செலவுகள் | 7,200 |
| புத்தகம் வாங்குவதற்காக பெற்ற | புத்தகங்கள் வாங்கியது | 15,000 | |
| அரசு மானியம் | 10,000 | எழுதுபொருள்கள் வாங்கியது | 1,800 |
| சந்தா | 24,800 | செய்தித்தாள் வாங்கியது | 2,100 |
| சேர்க்கைக் கட்டணம் | 2,000 | பரிசுகள் வழங்கியது | 5,000 |
| பரிசுநிதி வரவுகள் | 6,000 | இருப்பு கீ/இ | |
| வங்கி வட்டி | 1,500 | கைரொக்கம் | 9,900 |
| பழைய செய்தித்தாள்கள் விற்றது | 1,100 | ||
| 55,000 | 55,000 |
கூடுதல் தகவல்கள்:
(i) தொடக்க முதல் நிதி ரூ.20,000
(ii) புத்தகங்கள் இருப்பு (1.4.2018) ரூ.9,200
(iii) கூடியுள்ள சந்தா பெறப்படாதது ரூ1,700
(iv) 1.4. 2018 அன்று எழுதுபொருள்கள் இருப்பு ரூ.1,200 மற்றும் 31.3.2019 அன்று எழுதுபொருள்கள் இருப்பு ரூ.2,000.
10.
11.
கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து கோயம்புத்தூர் கிரிக்கெட் மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|---|
| வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) | 6,000 | மதிப்பூதியம் செலுத்தியது | 2,800 | |
| கைரொக்கம் | 1,000 | நீர் மற்றும் மின்சாரக் கட்டணம் | 700 | |
| மைதான பராமரிப்பிற்காக | விளையாட்டுப் போட்டிச் செலவுகள் | 2,600 | ||
| கூலி செலுத்தியது | 2,000 | விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது | 1,900 | |
| சந்தா பெற்றது: முந்தைய ஆண்டு | 500 | விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள் | 5,200 | |
| நடப்பு ஆண்டு | 9,600 | உயில்கொடைப் பெற்றது | 2,000 | |
| எதிர்வரும் ஆண்டு | 400 | 10,500 | ரொக்க இருப்பு (31.3.2019) | 300 |
| கூலி கொடுபட வேண்டியது | 2,200 | அரங்கம் அமைப்பதற்காக பெற்ற நன்கொடை | 2,000 | |
| கடன்மீதான வட்டி செலுத்தியது | 2,000 | |||
12.
ஆனந்த் மற்றும் பாலு என்ற கூட்டாளிகள் முறையே 7 : 3 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 31 மார்ச், 2018 ஆம் நாளைய அவர்களது இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | நிலம் | 60,000 | ||
| ஆனந்த் | 50,000 | சரக்கிருப்பு | 40,000 | |
| பாலு | 30,000 | 80,000 | கடனாளிகள் | 20,000 |
| பற்பல கடனீந்தோர் | 20,000 | கைரொக்கம் | 10,000 | |
| இலாப நட்ட க/கு | 30,000 | |||
| 1,30,000 | 1,30,000 |
2018 ஏப்ரல் 1 ஆம் நாளன்று அவர்கள் சந்துரு என்பவரை கீழ்க்காணும் சரிக்கட்டுதல்களுக்கு ஒப்புக்கொண்டு 1/4 பங்குக்கு கூட்டான்மையில் சேர்த்துக் கொண்டனர்
(அ) சரக்கிருப்பு மதிப்பை ரூ.3,000 குறைப்பது
(ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.2,000 உருவாக்குவது
(இ) நிலத்தின் மதிப்பை ரூ.10,000 மதிப்பேற்றம் செய்வது
மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் முதல் கணக்கினை கூட்டாளி சேர்ப்பிற்குப் பின் தயாரிக்கவும்.
13.
பின்வரும் தகவல்களிலிருந்து, உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
(அ) பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.4,00,000
(ஆ) சாதாரண இலாப விகிதம் 10%
(இ) இலாபம் 2016: ரூ.62,000; 2017: ரூ.61,000 மற்றும் 2018: ரூ.63,000
14.
வைரம் வரையறு நிறுமம் ஒன்று ரூ.10 வீதம் 60,000 பங்குகளை ரூ.2 முனைமத்தில் பின்வரும் செலுத்துதலுக்கேற்ப வெளியிட்டது.
| விண்ணப்பத்தின் போது | ரூ.6 |
| ஒதுக்கீட்டின் போது | ரூ.4 (முனைமம் உள்பட) |
| முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் போது | ரூ.2 |
அனைத்துப் பங்குகளும் ஏற்கப்பட்டன. சரிதாவின் 100 பங்குகளுக்கான ஒதுக்கீடு, முதலாவது அழைப்பு மற்றும் இறுதி அழைப்பிற்கான தொகை தவிர, ஏனைய அனைத்தும் பெறப்பட்டன. அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட அனைத்து பங்குகளும் பரிமளா என்பவருக்கு பங்கு ஒன்று ரூ.7 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.
15.
பின்வரும் தகவல்களிலிருந்து, பத்மினி, மற்றும் பத்மா என்ற கூட்டாளிகளின் முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு அவர்களின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.
| விவரம் | பத்மினி ரூ. | பத்மா ரூ. |
|---|---|---|
| 2018, ஜனவரி 1 அன்று முதல் (வரவிருப்பு) | 5,00,000 | 4,00,000 |
| 2018 ஆம் ஆண்டில் எடுப்புகள் | 70,000 | 40,000 |
| எடுப்புகள் மீது வட்டி | 2,000 | 1,000 |
| 2018 – ல் இலாபப் பங்கு | 52,000 | 40,000 |
| முதல் மீது வட்டி | 30,000 | 24,000 |
| ஊதியம் | 45,000 | - |
| கழிவு | - | 21,000 |
16.
பின்வரும் தகவல்களிலிருந்து ரூபன் மற்றும் டெரி அவர்களின் முதல், நிலை முதல் எனக்கொண்டு, அவர்களின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.
| விவரம் | ரூபன் ரூ. | டெரி ரூ. |
|---|---|---|
| 2018, ஏப்ரல் 1 அன்று முதல் | 70,000 | 50,000 |
| 2018, ஏப்ரல் 1 அன்று நடப்புக் கணக்கு (வ) | 25,000 | 15,000 |
| கூடுதல் முதல் கொண்டு வந்தது | 18,000 | 16,000 |
| 2018 – 2019 – ல் எடுப்புகள் | 10,000 | 6,000 |
| எடுப்புகள் மீது வட்டி | 500 | 300 |
| இலாபப் பங்கு (2018 – 2019) | 35,000 | 25,800 |
| முதல் மீது வட்டி | 3,500 | 2,500 |
| சம்பளம் | - | 18,000 |
| கழிவு | 12,000 | - |
17.
சம்பத் நிறுமம் 25,000 பங்குகளை, பங்கு ஒன்று ரூ.10 என பொதுமக்களுக்கு வெளியிட்டது. விண்ணப்பத்தின் போது ரூ.3, ஒதுக்கீட்டின் போது ரூ.4, முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.3 செலுத்தப்பட வேண்டும். பொதுமக்களால் 24,000 பங்குகள் ஒப்பப்பட்டன. இயக்குனர்கள் அனைத்து பங்குகளையும் ஒதுக்கீடு செய்தனர். அதற்காக தொகை முழுவதும் முறையாகப் பெறப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
18.
கோயம்புத்தூர் கிரிக்கெட் மன்றத்தின் 2016, மார்ச் 31-ல் முடிவடையும் ஆண்டிற்கான பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து, 2016, மார்ச் 31-ல் முடிவடையும் ஆண்டிற்கான வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.
| பெறுதல்கள் | ரூ | செலுத்தல்கள் | ரூ |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | பராமரிப்புச் செலவுகள் | 5,000 | |
| வங்கி ரொக்கம் | 8,000 | அறைகலன் | 15,000 |
| சந்தா | 11,000 | தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் | 1,400 |
| பழைய மட்டைகள் மற்றும் பந்துகள் | செயலாளர் மதிப்பூதியம் | 4,500 | |
| விற்றது | 100 | மட்டை கள் மற்றும் பந்துகள் | 7,400 |
| தொடர் விளையாட்டுப் போட்டிக்கான சந்தா | 2,000 | இருப்பு கீ/இ | |
| உயில்கொடை | 20,000 | வங்கி ரொக்கம் | 7,800 |
| 41,100 | 41,100 |
கூடுதல் தகவல்கள்:
2015, ஏப்ரல் 1 அன்று மன்றத்தில் பந்துகள் மற்றும் மட்டைகள் இருப்பு ரூ3,000; முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.500. தொடர் விளையாட்டுப் போட்டியின் உபரித்தொகைத் நிரந்தர அரங்கத்திற்கான ஒதுக்காக உருவாக்கப்பட வேண்டும். 31.3.2016 அன்று பெறவேண்டிய சந்தாரூ 2,000. 31.3.2016-ல் மட்டைகள் மற்றும் பந்துகள் இருப்பு ரூ1,000.
19.
மணி, ரமா மற்றும் தேவன் ஆகியோர் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள். தங்கள் இலாப நட்டங்களை முறையே 5:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 80,000 | ||
| மணி | 50,000 | சரக்கிருப்பு | 20,000 | |
| ரமா | 50,000 | அறைகலன் | 70,000 | |
| தேவன் | 50,000 | 1,50,000 | கடனாளிகள் | 20,000 |
| பற்பல கடனீந்தோர் | 20,000 | கைரொக்கம் | 10,000 | |
| இலாபநட்டக் க/கு | 30,000 | |||
| 2,00,000 | 2,00,000 |
பின்வரும் சரிகட்டுதல்களுக்குட்பட்டு மணி 31.03.2019 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகுகிறார்
(i) சரக்கிருப்பில் ரூ.5,000 மதிப்பு குறைக்கப்பட வேண்டும்
(ii) வாரா ஐயக்கடனுக்கு ரூ.1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்
(iii) கட்டடத்தின் மதிப்பு ரூ. 16,000 அதிகரிக்கப்பட வேண்டும்
(iv) மணிக்குச் சேரவேண்டியத் தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை
மறுமதிப்பீட்டு கணக்கு மற்றும் கூட்டாளி விலகலுக்குப் பின் உள்ள முதல் கணக்கினைத் தயாரிக்கவும்.
20.
பின்வரும் தகவல்களிலிருந்து, மன்னன் மற்றும் சேவகன் எனும் கூட்டாளிகளின் முதல் கணக்குகளை அவர்களின் முதல் மாறுபடும் முதலாக இருக்கும்போது தயாரிக்கவும்.
| விவரம் | மன்னன் ரூ. | சேவகன் ரூ. |
|---|---|---|
| 2018, ஜனவரி 1 அன்று முதல் (வரவிருப்பு) | 2,00,000 | 1,75,000 |
| 2018 ஆம் ஆண்டின் எடுப்புகள் | 40,000 | 35,000 |
| எடுப்புகள் மீதான வட்டி | 1,000 | 500 |
| 2018 ஆம் ஆண்டின் இலாபப் பங்கு | 21,000 | 16,500 |
| முதல் மீது வட்டி | 12,000 | 10,500 |
| ஊதியம் | 18,000 | - |
| கழிவு | - | 2,500 |
21.
பாரதி தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிக்கவில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
| பெறுதல்கள் | ரூ. | செலுத்தல்கள் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 32,000 | கொள்முதல் க/கு | 56,000 |
| விற்பனை க/கு | 1,60,000 | கடனீந்தோர் க/கு | 80,000 |
| கடனாளிகள் க/கு | 1,20,000 | பொதுச் செலவுகள் க/கு | 24,000 |
| கூலி க/கு | 10,000 | ||
| இருப்பு கீ/இ | 1,42,000 | ||
| 3,12,000 | 3,12,000 |
பிற தகவல்கள்:
| விவரம் | 1.4.2018 ரூ. | 31.3.2019 ரூ. |
|---|---|---|
| சரக்கிருப்பு | 40,000 | 60,000 |
| கடனாளிகள் | 38,000 | ? |
| கடனீந்தோர் | 58,000 | 52,000 |
| இயந்திரம் | 1,70,000 | 1,70,000 |
கூடுதல் தகவல்கள்:
(i) கடன் கொள்முதல் 74,000
(ii) கடன் விற்பனை 1,40,000
(iii) தொடக்க முதல் 2,22,000
(iv) இயந்திரம் மீது ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கவும்.
22.
பின்வரும் தகவல்களிலிருந்து சாந்தி மற்றும் சுமதி என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகளை அவர்களின் முதல், நிலை முதலாக இருக்கும் போது தயாரிக்கவும்.
| விவரம் | சாந்தி ரூ. | சுமதி ரூ. |
|---|---|---|
| 2018, ஜனவரி 1 அன்று முதல் | 1,00,000 | 80,000 |
| 2018, ஜனவரி 1 அன்று நடப்புக் கணக்கு (வ) | 5,000 | 3,000 |
| 2018, ஜூன் 1 கூடுதல் முதல் கொண்டு வந்தது | 10,000 | 20,000 |
| 2018 ஆம் ஆண்டில் எடுப்புகள் | 20,000 | 13,000 |
| எடுப்புகள் மீது வட்டி | 500 | 300 |
| 2018 – ல் இலாபப் பங்கு | 10,000 | 8,000 |
| முதல் மீது வட்டி | 6,300 | 5,400 |
| ஊதியம் | 9,000 | - |
| கழிவு | - | 1,200 |
23.
பூம்புகார் இலக்கிய மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| தொடக்க இருப்பு (1.4.2018) | 5,000 | சந்தா பெற்றது | 20,000 |
| வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) | 4,000 | பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் | 2,500 |
| அச்சு மற்றும் எழுதுபொருள் | 1,500 | போக்குவரத்துச் செலவுகள் | 2,750 |
| வட்டி செலுத்தியது | 3,250 | புத்தகங்கள் வாங்கியது | 10,000 |
| முதலீடுகள் விற்றது | 1,000 | காப்பீட்டு முனைமம் செலுத்தியது | 4,000 |
| சிற்றுண்டி வாங்கியது | 1,500 | பல்வகை வரவுகள் | 750 |
| கொடுபட வேண்டிய சம்பளம் | 2,000 | அரசிடமிருந்து பெற்ற மானி | 6,000 |
| அறக்கொடை நிதி பெற்றது | 2,000 | சிற்றுண்டி விற்றது. | 1,500 |
| ஒளியூட்டுக் கட்டணம் | 1,300 | கட்டடம் மீதான தேய்மானம் | 2,000 |
| வங்கி ரொக்கம் (31.3.2019) | 2,000 |
24.
முகேஷ் நிறுமத்தின் பின்வரும் இலாபம் நட்ட அறிக்கையிலிருந்து
(I) மொத்த இலாப விகிதம்
(ii) நிகர இலாப விகிதம் கணக்கிடவும்.
| விவரம் | தொகை ரூ. |
|---|---|
| I. விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 5,00,000 |
| II. இதர வருமானம் | |
| முதலீடு மூலம் வருவாய் | 40,000 |
| III. மொத்த வருவாய் (I + II) | 5,40,000 |
| IV. செலவுகள் | |
| கொள்முதல் செய்த சரக்குகள் | 1,80,000 |
| சரக்கிருப்பு மாற்றம் | 20,000 |
| பணியாளர் நலன்களுக்கான செலவுகள் | 30,000 |
| இதர செலவுகள் | 1,10,000 |
| வரி ஒதுக்கு | 50,000 |
| மொத்த செலவுகள் | 3,90,000 |
| V. அவ்வாண்டிற்கான இலாபம் | 1,50,000 |
25.
பின்வரும் தகவல்களிலிருந்து மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் காணவும்.
(அ) சராசரி இலாபம் ரூ.20,000
(ஆ) சாதாரண இலாப விகிதம் 10%
(இ) பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.1,50,000
1.
| விவரம் | யாஸ்மின் நிறுமம் | சக்தி நிறுமம் | ||
|---|---|---|---|---|
| தொகை ரூ. |
மொத்த சொத்துகளில் சதவீதம் |
தொகை ரூ. |
மொத்த சொத்துகளில் சதவீதம் |
|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||||
| 1. பங்குதாரர் நிதி | ||||
| (அ) பங்கு முதல் | 2,00,000 | 40 | 3,00,000 | 50 |
| (ஆ) காப்பும் மிகுதியும் | 50,000 | 10 | 60,000 | 10 |
| 2.நீண்டகாலப் பொறுப்புகள் | ||||
| நீண்ட காலக் கடன்கள் | 1,50,000 | 30 | 1,80,000 | 30 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | ||||
| கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 1,00,000 | 20 | 60,000 | 10 |
| மொத்தம் | 5,00,000 | 100 | 6,00,000 | 100 |
| II. சொத்துகள் | ||||
| 1.நீண்டகாலச் சொத்துகள் | ||||
| (அ) நிலைச் சொத்துகள் | 2,00,000 | 40 | 3,00,000 | 50 |
| (ஆ) நீண்டகால முதலீடுகள் | 50,000 | 10 | 1,20,000 | 20 |
| 2. நடப்புச் சொத்துகள் | ||||
| சரக்கிருப்பு | 2,00,000 | 40 | 90,000 | 15 |
| ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் | 50,000 | 10 | 90,000 | 15 |
| மொத்தம் | 5,00,000 | 100 | 6,00,000 | 100 |
குறிப்பு:
| யாஸ்மின் நிறுமம் | சக்தி நிறுமம் | |
|---|---|---|
| பங்கு முதலின் சதவீதம் | \(=\frac {2,00,000}{5,00,000}\times100 =40\%\) | \(=\frac {3,00,000}{6,00,000}\times100 =50\%\) |
| காப்பு மிகுதியின் சதவீதம் | \(=\frac {50,000}{5,00,000}\times100 =10\%\) | \(=\frac {60,000}{6,00,000}\times100 =10\%\) |
| நீண்டகாலக் கடன்களின் சதவீதம் | \(=\frac {1,50,000}{5,00,000}\times100 =30\%\) | \(=\frac {1,80,000}{6,00,000}\times100 =30\%\) |
| கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகளின் சதவீதம் | \(=\frac {1,00,000}{5,00,000}\times100 =20\%\) | \(=\frac {60,000}{6,00,000}\times100 =10\%\) |
| நிலைச் சொத்துகளின் சதவீதம் | \(=\frac {2,00,000}{5,00,000}\times100 =40\%\) | \(=\frac {3,00,000}{6,00,000}\times100 =50\%\) |
| நீண்டகால முதலீடுகளின் சதவீதம் | \(=\frac {50,000}{5,00,000}\times100 =10\%\) | \(=\frac {1,20,000}{6,00,000}\times100 =20\%\) |
| சரக்கிருப்பின் சதவீதம் | \(=\frac {2,00,000}{5,00,000}\times100 =40\%\) | \(=\frac {90,000}{6,00,000}\times100 =15\%\) |
| ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் | \(=\frac {50,000}{5,00,000}\times100 =10\%\) | \(=\frac {90,000}{6,00,000}\times100 =15\%\) |
2.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 10,000 | கட்டடம் க/கு | 28,000 | |
| ஐயக்கடன் ஒதுக்கீட்டு க/கு | 3,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| மஞ்சு முதல் க/கு \(\left( 15,000\times \frac { 5 }{ 10 } \right) \) | 7,500 | |||
| சாறு முதல க/கு \(\left( 15,000\times \frac { 3 }{ 10 } \right) \) | 4,500 | |||
| லாவண்யா முதல் க/கு \(\left( 15,000\times \frac { 2 }{ 10 } \right) \) | 3,000 | 15,000 | ||
| 28,000 | 28,000 |
| விவரம் | மஞ்சு ரூ. |
சாரு ரூ. |
லாவண்யா ரூ. |
விவரம் | மஞ்சு ரூ. |
சாரு ரூ. |
லாவண்யா ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| மஞ்சு கடன் க/கு | 1,02,500 | - | - | இருப்பு கீ/கொ | 70,000 | 70,000 | 70,000 |
| இருப்பு கீ/இ | 89,500 | 83,000 | மறுமதிப்பீட்டுக் க/கு | 7,500 | 4,500 | 3,000 | |
| இலாப நட்ட க/கு | 25,000 | 15,000 | 10,000 | ||||
| 1,02,500 | 89,500 | 83,000 | 1,02,500 | 89,500 | 83,000 | ||
| இருப்பு கீ/கொ | - | 89,500 | 83,000 |
3.
| விவரம் | 2016-17 ரூ. |
2017-18 ரூ. |
தொகையின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
சதவீதத்தின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
|
|---|---|---|---|---|---|
| I | பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||||
| பங்குதாரர் நிதி | 4,00,000 | 4,00,000 | +40,000 | +10 | |
| நீண்டகாலப் பொறுப்புகள் | 1,50,000 | 1,65,000 | +15,000 | +10 | |
| நடப்புப் பொறுப்புகள் | 75,000 | 82,500 | +7,500 | +10 | |
| மொத்தம் | 6,25,000 | 6,87,500 | +62,500 | +10 | |
| II | சொத்துகள் | ||||
| நீண்டகாலச் சொத்துகள் | 5,00,000 | 6,00,000 | +1,00,000 | +20 | |
| நடப்புச் சொத்துகள் | 1,25,000 | 87,500 | +1,00,000 | +20 | |
| மொத்தம் | 6,25,000 | 6,87,500 | +62,500 | +10 |
4.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 5,000 | கட்டடம் க/கு | 20,000 | |
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 3,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| அமல் முதல் க/கு (12,000 x 7/12) |
7,000 | |||
| விமல் முதல் க/கு (12,000 x 5/12) |
5,000 | 12,000 | ||
| 20,000 | 20,000 |
| விவரம் | அமல் ரூ. |
விமல் ரூ. |
நிர்மல் ரூ. |
விவரம் | அமல் ரூ. |
விமல் ரூ. |
நிர்மல் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/இ | 91,000 | 65,000 | 30,000 | இருப்பு கீ/கொ | 70,000 | 50,000 | - |
| வங்கி க/கு | - | - | 30,000 | ||||
| மறுமதிப்பீட்டுக் க/கு | 7,000 | 5,000 | - | ||||
| இலாபநட்டக் க/கு | 14,000 | 10,000 | - | ||||
| 91,000 | 65,000 | 30,000 | 91,000 | 65,000 | 30,000 | ||
| இருப்பு கீ/கொ | 91,000 | 65,000 | 30,000 |
5.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| வங்கிக்கடன் | 45,000 | இயந்திரம் | 60,000 |
| பற்பல கடனீந்தோர் | 25,000 | வங்கி ரொக்கம் | 25,000 |
| தொடக்க முதல் | 1,50,000 | பற்பல கடனாளிகள் | 70,000 |
| (இருப்புக்கட்டும் தொகை) | சரக்கிருப்பு | 45,000 | |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 20,000 | ||
| 2,20,000 | 2,20,000 |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 45,000 | விற்பனை | |||
| கொள்முதல் | ரொக்கம் | 20,000 | |||
| ரொக்கம் | 8,000 | கடன் | 1,80,000 | 2,00,000 | |
| கடன் | 52,000 | 60,000 | இறுதிச் சரக்கிருப்பு | 22,000 | |
| கூலி | 6,000 | ||||
| மொத்த இலாபம் கீ/இ | 1,11,000 | ||||
| 2,22,000 | 2,22,000 | ||||
| விளம்பரம் | 7,000 | மொத்த இலாபம் கீ/கொ | 1,11,000 | ||
| சம்பளம் | 23,500 | ||||
| இயந்திரம் மீது தேய்மானம் 10% | 6,000 | ||||
| ஐயக்கடன் ஒதுக்கு 1% | 1,000 | ||||
| வங்கிக்கடன் மீது வட்டி | 4,500 | ||||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 69,000 | ||||
| 2,46,000 | 2,46,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் | 1,50,000 | நிலம் மற்றும் கட்டடம் | 60,000 | ||
| கூட்டுக: நிகர இலாபம் | 69,000 | கழிக்க:தேய்மானம் 10% | 6,000 | 54,000 | |
| 2,19,000 | வங்கி ரொக்கம் | 33,000 | |||
| கூட்டுக: கூடுதல் முதல் | 21,000 | பற்பல கடனாளிகள் | 1,00,000 | ||
| 2,40,000 | |||||
| கழிக்க:எடுப்புகள் | 60,000 | 1,80,000 | கழிக்க: ஐயக்கடன் ஒதுக்கு 1% | 1,000 | 99,000 |
| வங்கி கடன் | 45,000 | இறுதிச் சரக்கிருப்பு | 22,000 | ||
| பற்பல கடனாளிகள் | 21,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 38,000 | ||
| 5,01,000 | 2,46,000 |
6.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 30,000 | ரொக்கக் க/கு | 60,000 |
| கடனாளிகள் க/கு | 42,000 | கடனாளிகள் க/கு | 4,000 |
| (மாற்றுச்சீட்டு பெற்றது - (இருப்புக்கட்டும் தொகை) | (பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது) | ||
| இருப்பு கீ/இ | 8,000 | ||
| 72,000 | 72,000 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 2,40,000 | ரொக்கக் க/கு (பெற்றது) | 6,00,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு | 4,000 | அளித்த தள்ளுபடி க/கு | 25,000 |
| (மறுக்கப்பட்டது) | |||
| விற்பனை க/கு (கடன் | 6,59,000 | வாராக்கடன் க/கு | 16,000 |
| (இருப்புக்கட்டும் தொகை) | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு | 42,000 | |
| (மாற்றுச்சீட்டு பெற்றது) | |||
| இருப்பு கீ/இ | 2,20,000 | ||
| 9,03,000 | 9,03,000 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
| ரொக்கக் க/கு | 30,000 | இருப்பு கீ/கொ | 10,000 |
| (மாற்றுச்சீட்டுக்குச் செலுத்தியது) | பற்பல கடனீந்தோர் க/கு | 40,000 | |
| இருப்பு கீ/இ | 20,000 | (மாற்றுச்சீட்டு ஏற்கப்பட்டது - (இருப்புக்கட்டும் தொகை) | |
| 50,000 | 50,000 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்கக் க/கு (செலுத்தியது) | 3,20,000 | இருப்பு கீ/கொ | 1,20,000 |
| பெற்ற தள்ளுபடி க/கு | 10,000 | கொள்முதல் க/கு (கடன்) | 4,00,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு க/கு | 40,000 | இருப்புக்கட்டும் தொகை) | |
| (மாற்றுச்சீட்டு ஏற்கப்பட்டது) | |||
| இருப்பு கீ/இ | 1,50,000 | ||
| 5,20,000 | 5,20,000 |
7.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| கட்டடம் க/கு | 5,000 | மறுமதிப்பீட்டு நட்டம் | ||
| சரக்கிருப்பு க/கு | 2,000 | ரேகா முதல் க/கு (3/4) | 7,500 | |
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 3,000 | மேரி முதல் க/கு (1/4) | 2,500 | 10,000 |
| 10,000 | 10,000 |
| விவரம் | ரேகா ரூ. | மேரி ரூ. | கவிதா ரூ. | விவரம் | ரேகா ரூ. | மேரி ரூ | கவிதா ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| மறுமதிப்பீடு க/கு | 7,500 | 2,500 | - | இருப்பு கீ/கொ | 50,000 | 30,000 | - |
| ரேகா | வங்கி க/கு | - | - | 20,000 | |||
| முதல் க/கு | - | - | 4,000 | பொதுக்காப்பு க/கு | 30,000 | 10,000 | - |
| (நற்பெயர் பங்கு) | தொழிலாளர் | ||||||
| ஈட்டுநிதி க/கு | 7,500 | 2,500 | - | ||||
| இருப்பு கீ/இ | 84,000 | 40,000 | 16,000 | கவிதா முதல் க/கு | 4,000 | ||
| (நற்பெயர் பங்கு) | - | - | |||||
| 91,500 | 42,500 | 20,000 | 91,500 | 42,500 | 20,000 | ||
| இருப்பு கீ/கொ | 84,000 | 40,000 | 16,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 50,000 | |||
| ரேகா | 84,000 | கழிக்க: தேய்மானம் | 5,000 | 45,000 | |
| மேரி | 40,000 | சரக்கிருப்பு | 8,000 | ||
| கவிதா | 16,000 | 1,40,000 | கழிக்க: மதிப்பு குறைப்பு | 2,000 | 6,000 |
| பற்பல கடனீந்தோர் | 20,000 | பற்பல கடனாளிகள் | 60,000 | ||
| கழிக்க: வாரா | |||||
| ஐயக்கடன் ஒதுக்கு | 3,000 | 57,000 | |||
| வங்கி (32,000+20,000) | 52,000 | ||||
| 1,60,000 | 1,60,000 |
8.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் நிதி (இருப்புக்கட்டும் தொகை) | 46,000 | அறைகலன் | 10,000 | |
| பெறவேண்டிய சந்தா | 6,000 | |||
| கைரொக்கம் | 10,000 | |||
| வங்கி ரொக்கம் | 20,000 | 30,000 | ||
| 46,000 | 46,000 |
| செலவுகள் | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| வாடகையும், வரியும் | 18,000 | சந்தா | 25,000 | |
| மின்கட்டணம் | 17,000 | கூட்டுக: கொடுபட வேண்டியது | 5,000 | 30,000 |
| (2016-2017) | ||||
| பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் | 16,000 | அரங்க வாடகை | 14,000 | |
| சிறப்பு விருந்து செலவுகள் | 4,000 | பாதுகாப்பு பெட்டக வாடகை | 5,000 | |
| பற்பலச் செலவுகள் | 2,000 | சிறப்பு விருந்திற்கான வசூல் | 12,000 | |
| செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம் (உபரி) | 4,000 | |||
| 61,000 | 61,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் நிதி | 46,000 | அறைகலன் வாங்கியது | 12,000 | ||
| கூட்டுக: செலவுகளைக்காட்டிலும் மிகுதியான வருமானம் (உபரி) | 4,000 | 50,000 | கூட்டுக: தொடக்க இருப்பு | 10,000 | 22,000 |
| உயில்கொடை | 40,000 | பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது | 70,000 | ||
| வங்கிமேல்வரைப் பற்று | 3,000 | கைரொக்கம் | 1,000 | ||
| கொடுபட வேண்டியது (2018-19) |
6,000 | முன்கூட்டிச் செலுத்திய சந்தா 2016-2017(1,000+5,000) |
6,000 | ||
| 99,000 | 99,000 |
9.
| செலவுகள் | ரூ. | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| சம்பளம் | 14,000 | ||||
| அலுவலகச் செலவுகள் | 7,200 | சந்தா | 24,800 | ||
| எழுதுபொருள்கள் வாங்கியது | 1,800 | கூட்டுக: சந்தா பெற வேண்டியது | 1,700 | 26,500 | |
| கூட்டுக: தொடக்க இருப்பு | 1,200 | சேர்க்கைக் கட்டணம் | 2,000 | ||
| 3,000 | வங்கி வட்டி | 1,500 | |||
| கழிக்க: இறுதி இருப்பு | 2,000 | 1,000 | பழைய செய்தித்தாள்கள் விற்றது | 1,100 | |
| செய்தித்தாள் வாங்கியது | 2,100 | ||||
| உபரி (செலவுகளைக்காட்டிலும் மிகுதியான வருமானம்) | 6,800 | ||||
| 31,100 | 31,100 |
குறிப்பு : புத்தகம் வாங்குவதற்காக பெற்ற அரசு மானியம், புத்தகம் நீண்ட காலச் சொத்து (முதலின செலவு) புத்தகம் வாங்க பெற்ற மானியம் முதலின வரவாக கருத வேண்டும். எனவே வருவாய் செலவின கணக்கில் காட்டக் கூடாது
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் நிதி | 20,000 | புத்தகங்கள் வாங்கியது | 15,000 | ||
| கூட்டுக: | கூட்டுக: தொடக்க இருப்பு | 9,200 | 24,200 | ||
| செலவுகளைக்காட்டிலும் மிகுதியான வருமானம் (உபரி) | 6,800 | 26,800 | கைரொக்கம் | 9,900 | |
| பரிசு நிதி வரவுகள் | 6000 | 1,000 | எழுதுபொருள்கள் இருப்பு | 2,000 | |
| பரிசு நிதி வரவுகள் | 5000 | சந்தா பெறப்படாதது | 1,700 | ||
| புத்தகம் வாங்குவதற்காக பெற்ற அரசு மானியம் | 10,000 | ||||
| 37,800 | 37,800 |
10.
11.
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | செலுத்தல்கள் | ரூ. |
|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | இருப்பு கீ/கொ | |||
| கைரொக்கம் | 1,000 | வங்கி மேல்வரைப்பற்று | 6,000 | |
| சந்தா பெற்றது: | கூலி செலுத்தியது | 2,000 | ||
| முந்தைய ஆண்டு | 500 | கடன் மீது வட்டி செலுத்தியது | 2,000 | |
| நடப்பு ஆண்டு | 9,600 | மதிப்பூதியம் செலுத்தியது | 2,800 | |
| எதிர்வரும் ஆண்டு | 400 | 10,500 | நீர் மற்றும் மின்சாரக் கட்டணம் | 700 |
| விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள் | 5,200 | விளையாட்டுப் போட்டிச் செலவுகள் | 2,600 | |
| உயில் கொடைப் பெற்றது | 2,000 | விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது | 1,900 | |
| அரங்கம் அமைப்பதற்காக பெற்ற நன்கொடை | 2,000 | இருப்பு கீ/இ | ||
| ரொக்க இருப்பு | 300 | |||
| வங்கி இருப்பு | 2,400 | |||
| 20,700 | 20,700 |
12.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 3,000 | நிலம் க/கு | 10,000 | |
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 2,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| ஆனந்த் முதல் க/கு (7/10) | 3,500 | |||
| பாலு முதல் க/கு (3/10) | 1,500 | 5,000 | ||
| 10,000 | 10,000 |
| விவரம் | ஆனந்த் ரூ. | பாலு ரூ. | சந்துரு ரூ. | விவரம் | ஆனந்த் ரூ. | பாலு ரூ | சந்துரு ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/இ | 74,500 | 40,500 | 20,000 | இருப்பு கீ/கொ | 50,000 | 30,000 | |
| வங்கி க/கு | - | - | 20,000 | ||||
| மறுமதிப்பீட்டு க/கு | 3,500 | 1,500 | - | ||||
| இலாப நட்ட க/கு | 21,000 | 9,000 | - | ||||
| 74,500 | 40,500 | 20,000 | 74,500 | 40,500 | 20,000 | ||
| இருப்பு கீ/கொ | 74,500 | 40,500 | 20,000 |
13.

=\(\frac { 62,000+61,000+63,000 }{ 3 } \)
=\(\frac { 1,86,000 }{ 3 } \)
=ரூ.62,000
சாதாரண இலாபம் = பயன்படுத்தப்பட்ட முதல் × சாதாரண இலாப விகிதம்
= 4,00,000 × 10%
= ரூ.40,000
உயர் இலாபம் = சராசரி இலாபம் – சாதாரண இலாபம்
= 62,000 – 40,000
= ரூ.22,000

\(=\frac { 22,000 }{ 10 } \) x 100
=ரூ.2,20,000
14.
வைரம் வரையறு நிறுமத்தின் ஏடுகளில் குறிப்பேட்டுப்பதிவுகள்
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (60,000x6) | ப | 3,60,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 3,60,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | ப | 3,60,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 3,60,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பங்கு, முதலுக்கு மாற்றப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு (60,000x4) | ப | 2,40,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு (60,000x3) | 1,80,000 | ||||
| பத்திர முனைமக் க/கு (60,000x1) | 60,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (59,000x4) | ப | 2,36,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 2,36,000 | ||||
| (1,000 பங்குகள் தவிர ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு (60,000x2) | ப | 1,20,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 1,20,000 | ||||
| (முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (59,000x2) | ப | 1,18,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு | 1,18,000 | ||||
| (முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் க/கு (1,000x10) | ப | 10,000 | |||
| பத்திர முனைமக் க/கு(1,000x2) | ப | 2,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டுக் க/கு (1,000x4) | 4,000 | ||||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு (1,000x2) | 2,000 | ||||
| நேர்மைப் பங்கு ஒறுப்பிழப்பு க/கு (1,000x6) | 6,000 | ||||
| (1000 பங்குகள் மீதான ஒதுக்கீட்டுக் தொகை, முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை செலுத்தாததால் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன) | |||||
| வங்கி க/கு (1000x7) | ப | 7,000 | |||
| நேர்மைப் பங்கு ஒறுப்பிழப்பு க/கு (1000x3) | ப | 3,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு (1000x10) | 10,000 | ||||
| (ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட 1000 பங்குகள் மறுவெளியீடு செய்யப்பட்டன) | |||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு(6000-3000) | ப | 3,000 | |||
| முதலினக் காப்பு க/கு | 3,000 | ||||
| (ஒறுப்பிழப்பு செய்த பங்குகளை மறுவெளியீடு செய்ததில் கிடைத்த இலாபம் முதலினக் காப்பிற்கு மாற்றப்பட்டது) |
15.
| நாள் | விவரம் | பத்மினி ரூ. |
பத்மா ரூ |
நாள் | விவரம் | பத்மினி ரூ |
பத்மா ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| எடுப்புகள் க/கு | 70,000 | 40,000 | இருப்பு கீ/கொ | 5,00,000 | 4,00,000 | ||
| எடுப்புகள் மீது வட்டி க/கு | 2,000 | 1,000 | இலாபநட்டப் பகிர்வு க/கு | 52,000 | 40,000 | ||
| இருப்பு கீ/கு | 5,55,000 | 4,44,000 | முதல் மீது வட்டி க/கு | 30,000 | 24,000 | ||
| ஊதியம் க/கு | 45,000 | - | |||||
| கழிவு க/கு | - | 21,000 | |||||
| 6,27,000 | 4,58,000 | 6,27,000 | 4,85,000 | ||||
| இருப்பு கீ/கொ | 5,55,000 | 4,44,000 |
16.
| நாள் | விவரம் | ரூபன் ரூ. |
டெரி ரூ. |
நாள் | விவரம் | ரூபன் ரூ. |
டெரி ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018, மார்ச் 31 |
இருப்பு கீ/இ | 88,000 | 66,000 | 2018 ஏப்ரல் 1 |
இருப்பு கீ/கொ | 70,000 | 50,000 |
| ஏப்ரல் 1 | வங்கி (கூடுதல் முதல்) | 18,000 | 16,000 | ||||
| 88,000 | 66,000 | 88,000 | 66,000 | ||||
| 2019 ஏப்ரல் 1 |
இருப்பு கீ/கொ | 88,000 | 66,000 |
| நாள் | விவரம் | ரூபன் ரூ. |
டெரி ரூ. |
நாள் | விவரம் | ரூபன் ரூ. |
டெரி ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| எடுப்புகள் | 10,000 | 6,000 | இருப்பு கீ/கொ | 25,000 | 15,000 | ||
| எடுப்புகள் மீது வட்டி | 5000 | 3000 |
இலாப நட்ட பகிர்வு கணக்கு |
35,000 | 25,800 | ||
| இருப்பு கீ/இ | 65,000 | 55,000 | முதல் மீது வட்டி | 3,500 | 2,500 | ||
| சம்பளம் | - | 18,000 | |||||
| கழிவு | 12,000 | - | |||||
| 75,500 | 61,300 | 75,500 | 61,300 | ||||
| இருப்பு கீ/கொ | 65,000 | 55,000 |
17.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு | ப | 72,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 72,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | ப | 72,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 72,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பங்கு முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | ப | 96,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 96,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 96,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 96,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | ப | 72,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 72,000 | ||||
| (அழைப்புத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 72,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | 72,000 | ||||
| (அழைப்புத் தொகை பெற்றது) |
18.
மாணவர் குறிப்பு
தொடக்க முதல் நிதியினைக் கண்டறியதொடக்க இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்ய வேண்டும்.
| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|
| முதல்நிதி | 10,500 | பந்து மற்றும் மட்டைகள் இருப்பு | 3,000 |
| (இருப்புக் கட்டும் தொகை) | வங்கி ரொக்கம் | 8,000 | |
| முன்கூட்டிப் பெற்ற சந்தா | 500 | ||
| 11,000 | 11,000 |
| செலவுகள் | ரூ | ரூ | வருமானம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| பராமரிப்புச் செலவுகள் | 5,000 | சந்தா | 11,000 | ||
| செயலாளர் மதிப்பூதியம் | 4,500 | கூட்டுக: 2015 -16 ஆம் ஆண்டிற்குரிய | |||
| மட்டை கள் மற்றும் பந்துகள் | 7,400 | சந்தா 2014-15 ல் முன்கூட்டிப் பெற்றது | 500 | ||
| கூட்டுக: தொடக்க இருப்பு | 3,000 | 11,500 | |||
| 10,400 | கூட்டுக: நிலுவையில் உள்ள சந்தா (2015-16) | 2,000 | 13,500 | ||
| கழிக்க: இறுதி இருப்பு | 1,000 | 9,400 | பழைய மட்டைகள், பந்துகள் விற்றது | 100 | |
| வருமானத்தைக் காட்டிலும் மிகுதியானச் செலவுகள் (பற்றாக்குறை) | 5,300 | ||||
| 18,900 | 18,900 |
| பொ றுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|---|
| முதல்நிதி | 10,500 | அறைகலன் | 15,000 | |
| கழிக்க: வருமானத்தைக் காட்டிலும் | பந்துகள் மற்றும் மட்டைகள் இருப்பு | 1,000 | ||
| மிகுதியானச் செலவுகள் (பற்றாக்குறை) | 5,300 | 5,200 | பெறவேண்டிய சந்தா | 2,000 |
| விளையாட்டு அரங்க நிதிக்கான ஒதுக்கு | வங்கி ரொக்கம் | 7,800 | ||
| தொடர் விளையாட்டுப் போட்டிக்கான சந்தா | 2,000 | |||
| கழிக்க:தொ டர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் |
1,400 | 600 | ||
| உயில்கொடை | 20,000 | |||
| 25,800 | 25,800 |
19.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 5,000 | கட்டடக் க/கு | 16,000 | |
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| மணி முதல் க/கு (4/10) | 4,000 | |||
| ரமா முதல் க/கு (3/10) | 3,000 | |||
| தேவன் முதல் க/கு (3/10) | 3,000 | 10,000 | ||
| 16,000 | 16,000 |
| விவரம் | மணி ரூ. |
ரமா ரூ. |
தேவன் ரூ. |
விவரம் | மணி ரூ. |
ரமா ரூ. |
தேவன் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| மணி கடன் க/கு | 66,000 | இருப்பு கீ/கொ | 50,000 | 50,000 | 50,000 | ||
| இருப்பு கீ/இ | - | 62,000 | 62,000 | மறுமதிப்பீட்டுக் க/கு | 4,000 | 3,000 | 3,000 |
| இலாபநட்ட க/கு | 12,000 | 9,000 | 9,000 | ||||
| 66,000 | 62,000 | 62,000 | 66,000 | 62,000 | 62,000 | ||
| - | 62,000 | 62,000 |
20.
| விவரம் | மன்னன் ரூ. | சேவகன் ரூ. | விவரம் | மன்னன் ரூ | சேவகன் ரூ |
|---|---|---|---|---|---|
| எடுப்புகள் க/கு | 40,000 | 35,000 | இருப்பு கீ/கொ | 2,00,000 | 1,75,000 |
| எடுப்புகள் மீது | இலாப நட்டப் பகிர்வு க/கு | 21,000 | 16,500 | ||
| வட்டி க/கு | 1,000 | 500 | முதல் மீது வட்டி க/கு | 12,000 | 10,500 |
| இருப்பு கீ/இ | 2,10,000 | 1,69,000 | ஊதியம் க/கு | 18,000 | - |
| கழிவு க/கு | - | 2,500 | |||
| 2,51,000 | 2,04,500 | 2,51,000 | 2,04,500 | ||
| இருப்பு கீ/கொ | 2,10,000 | 1,69,000 |
21.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 38,000 | ரொக்கக் க/கு (பெற்றது) | 1,20,000 |
| விற்பனை க/கு (கடன்) | 1,40,000 | இருப்பு கீ/இ (இருப்புக் கட்டும் தொகை) | 58,000 |
| 1,78,000 | 1,78,000 | ||
| இருப்பு கீ/கொ | 58,000 |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 40,000 | விற்பனை | |||
| கொள்முதல் | ரொக்கம் | 1,60,000 | |||
| ரொக்கம் | 56,000 | 1,40,000 | 3,00,000 | ||
| கடன் | 74,000 | 1,30,000 | இறுதிச் சரக்கிருப்பு | 60,000 | |
| கூலி | 10,000 | ||||
| மொத்த இலாபம் கீ/இ | 1,80,000 | ||||
| 3,60,000 | 3,60,000 | ||||
| பொதுச் செலவுகள் | 24,000 | மொத்த இலாபம் கீ/கொ | 1,80,000 | ||
| இயந்திரம் மீதான தேய்மானம் | 17,000 | ||||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 1,39,000 | ||||
| 1,80,000 | 1,80,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் | 2,22,000 | ரொக்கம் | 1,42,000 | ||
| கூட்டுக: நிகர இலாபம் | 1,39,000 | 3,61,000 | சரக்கிருப்பு | 60,000 | |
| கடனீந்தோர் | 52,000 | கடனாளிகள் | 58,000 | ||
| இயந்திரம் | 1,70,000 | ||||
| கழிக்க: தேய்மானம் | 17,000 | 1,53,000 | |||
| 4,13,000 | 4,13,000 |
22.
| நாள் | விவரம் | சாந்தி ரூ. | சுமதி ரூ. | நாள் | விவரம் | சாந்தி ரூ. | சுமதி ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 | |||||||
| 2018 | ஜன 1 | இருப்பு கீ/கொ | 1,00,000 | 80,000 | |||
| டிச 31 | இருப்பு கீ/இ | 1,10,000 | 1,00,000 | ஜூன் 1 | வங்கி | 10,000 | 20,000 |
| 1,10,000 | 1,00,000 | 1,10,000 | 1,00,000 | ||||
| 2019 | |||||||
| ஜன 1 | இருப்பு கீ/கொ | 1,10,000 | 1,00,000 |
| நாள் | விவரம் | சாந்தி ரூ. | சுமதி ரூ. | நாள் | விவரம் | சாந்தி ரூ. | சுமதி ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| எடுப்புகள் | 20,000 | 13,000 | இருப்பு கீ/கொ | 5,000 | 3,000 | ||
| எடுப்புகள் மீது வட்டி | 500 | 300 | இலாபநட்டப் பகிர்வு கணக்கு |
10,000 | 8,000 | ||
| இருப்பு கீ/இ | 9,800 | 4,300 | (இலாபப் பங்கு) | ||||
| முதல் மீது வட்டி | 6,300 | 5,400 | |||||
| சம்பளம் | 9,000 | -` | |||||
| கழிவு | - | 1,200 | |||||
| 30,300 | 17,600 | 30,300 | 17,600 | ||||
| இருப்பு கீ/கொ | 9,800 | 4,300 |
23.
| பெறுதல்கள் | ரூ | செலுத்தல்கள் | ரூ |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | இருப்பு கீ/கொ | ||
| ரொக்க இருப்பு | 5,000 | வங்கி மேல்வரைப்பற்று | 4,000 |
| முதலீடுகள் விற்றது | 1,000 | அச்சு மற்றும் எழுதுபொருள் | 1,500 |
| அறக்கட்டளை நிதி வரவுகள் | 2,000 | வட்டி செலுத்தியது | 3,250 |
| சந்தா பெற்றது | 20,000 | சிற்றுண்டி வாங்கியது | 1,500 |
| இதர வரவுகள் | 750 | ஒளியூட்டுக் கட்டணம் | 1,300 |
| அரசு மானியம் பெற்றது | 6,000 | பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் | 2,500 |
| சிற்றுண்டி விற்றது | 1,500 | போக்குவரத்துச் செலவுகள் | 2,750 |
| புத்தகங்கள் வாங்கியது | 10,000 | ||
| காப்பீட்டு முனைமம் செலுத்தியது | 4,000 | ||
| இருப்பு கீ/இ | |||
| வங்கி ரொக்கம் | 2,000 | ||
| கைரொக்கம் | 3,450 | ||
| 36,250 | 36,250 |
குறிப்பு: கொடுபட வேண்டிய சம்பளம் மற்றும் தேய்மானம் ரொக்கம் சாரா நடவடிக்கைகளாக இருப்பதால் இவை இரண்டும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் இடம் பெறாது.
24.
(i) மொத்த இலாப விகிதம் = x 100 = \(\frac {3,00,000}{5,00,000}\) x 100 = 60%
மொத்த இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் – விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை
= 5,00,000 – 2,00,000 = ரூ.3,00,000
விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை = கொள்முதல் செய்த சரக்குகள் + சரக்கிருப்பு மாற்றம்
= 1,80,000 + 20,000 = ரூ.2,00,000
(ii) நிகர இலாப விகிதம் = x 100 = \(\frac {1,50,000}{5,00,000}\) x 100 = 30%
25.
= \(\frac { 20,000 }{ 10 } \times 100\)
= ரூ.2,00,000
நற்பெயர் = வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு - பயன்படுத்தப்பட்ட முதல்
= 2,00,000 - 1,50,000
நற்பெயர் = ரூ.50,000
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards