12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31, 2016 மற்றும் மார்ச் 31, 2017 க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.
| விவரம் | 2015-16 ரூ. |
2016-17 ரூ. |
|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,00,000 | 6,00,000 |
| இதர வருமானங்கள் | 50,000 | 1,50,000 |
| செலவுகள் | 5,00,000 | 3,00,000 |
| வருமான வரி % | 40 | 40 |
2.
சுந்தர், விவேக், மற்றும் பாண்டியன் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3 : 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் 2016, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | நிலம் | 80,000 | ||
| சுந்தர் | 50,000 | சரக்கிருப்பு | 20,000 | |
| விவேக் | 40,000 | கடனாளிகள் | 30,000 | |
| பாண்டியன் | 10,000 | 1,00,000 | வங்கி ரொக்கம் | 14,000 |
| பொதுக்காப்பு | 36,000 | இலாப நட்டக் க/கு (நட்டம்) | 6,000 | |
| பற்பல கடனீந்தோர் | 14,000 | |||
| 1,50,000 | 1,50,000 |
1.1.2019 அன்று பாண்டியன் இறந்துவிட்டார் மற்றும் அவரின் இறப்பின் போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டன
(i) சரக்கிருப்பின் மதிப்பு 10% தேய்மானம் குறைக்கப்பட வேண்டும்
(ii) நிலத்தின் மதிப்பு ரூ.11,000 அதிகரிக்கப்பட வேண்டும்
(iii) கடனாளிகள் மதிப்பு ரூ.3,000 குறைக்க வேண்டும்
(iv) பாண்டியனுக்கு செலுத்த வேண்டிய இறுதித் தொகை செலுத்தப்படவில்லை
கூட்டாளியின் இறப்பிற்கு பின் நிறுமத்தின் மறுமதிப்பீட்டுக் கணக்கு, கூட்டாளிகள் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
3.
தமிழ் கல்வியில் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| தொடக்க ரொக்க இருப்பு (1.4.2018) | 15,000 | சந்தா பெற்றது | 40,000 |
| வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) | 9,000 | பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் | 7,500 |
| அச்சு மற்றும் எழுதுபொருள் | 2,500 | போக்குவரத்துச் செலவுகள் | 2,750 |
| வட்டி செலுத்தியது | 5,250 | புத்தகங்கள் வாங்கியது | 10,000 |
| முதலீடுகள் விற்றது | 4,000 | காப்பீட்டு முனைமம் செலுத்தியது | 4,000 |
| சிற்றுண்டி வாங்கியது | 2,500 | பல்வகை வரவுகள் | 650 |
| கொடுபட வேண்டிய சம்பளம் | 6,000 | அரசிடமிருந்து பெற்ற மானியம் | 6,000 |
| அறக்கொடை நிதி பெற்றது | 6,000 | சிற்றுண்டி விற்றது | 1,500 |
| ஒளியூட்டுக் கட்டணம் | 3,300 | கட்டடம் மீதான தேய்மானம் | 3,000 |
| வங்கி ரொக்கம் (31.3.2019) | 2,000 |
4.
அருண் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து
(i) புற அக பொறுப்புகள் விகிதம்
(ii) உரிமையாளர் விகிதம் மற்றும்
(iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்.
| விவரம் | ரூ | |
| I | பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. | பங்குதாரர் நிதி | |
| (அ) பங்குமுதல் | ||
| நேர்மைப் பங்குமுதல் | 1,50,000 | |
| 8% முன்னுரிமைப் பங்குமுதல் | 2,00,000 | |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 1,50,000 | |
| 2. | நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்டகால கடன்கள் (9% கடனீட்டுப் பாத்திரங்கள்) | 4,00,000 | |
| 3. | நடப்பு பொறுப்புகள் | |
| (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள் | 25,000 | |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 75,000 | |
| மொத்தம் | 10,00,000 | |
| II | சொத்துகள் | |
| 1. | நீண்ட காலச் சொத்துகள் | |
| நிலைச் சொத்துகள் | 7,50,000 | |
| 2. | நடப்புச் சொத்துகள் | 1,20,000 |
| (அ) சரக்கிருப்பு | 1,20,000 | |
| (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 1,000,000 | |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவர்கள் | 27,500 | |
| (ஈ) இதர நடப்புச் சொத்துகள் | ||
| செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது | 2,500 | |
| மொத்தம் | 10,00,000 | |
5.
அன்பு என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி, கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12% கணக்கிடப்படுகிறது. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:
| நாள் | ரூ. |
|---|---|
| மார்ச் 1 | 8,000 |
| ஜூன் 1 | 6,000 |
| செப்டம்பர் 1 | 4,000 |
| டிசம்பர் 1 | 3,000 |
பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்
6.
இராஜன் மற்றும் செல்வா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:1 விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். அவர்களது 31-03-2017 நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 25,000 | ||
| இராஜன் | 30,000 | அறைகலன் | 1,000 | |
| செல்வா | 16,000 | 46,000 | சரக்கிருப்பு | 20,000 |
| பொதுக் காப்பு | 4,000 | கடனாளிகள் | 16,000 | |
| கடனீந்தோர் | 37,500 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 3,000 | |
| வங்கி ரொக்கம் | 12,500 | |||
| இலாப நட்ட க/கு (நட்டம்) | 10,000 | |||
| 87,500 | 87,500 |
01.04.2017-இல் பின்வரும் நிபந்தனைகளுடன் கணேசன் என்பவர் புதிய கூட்டாளியாக சேருகிறார்.
(i) கணேசன் 1/5 இலாபப்பங்கிற்கென ரூ.10,000 முதல் கொண்டுவருகிறார்.
(ii) சரக்கிருப்பு மற்றும் அறைகலன் மதிப்பில் 10% குறைத்து மதிப்பிடப்படுகிறது. கடனாளிகள் மீது 5% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கப்படுகிறது.
(iii) கட்டடத்தின் மீது 20% மதிப்பேற்றம் செய்யப்படுகிறது.
மறுமதிப்பீட்டுக் கணக்கு புதிய கூட்டாளி சேர்க்கைக்கு பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்பு நிலைக்குறிப்பு தயார் செய்யவும்.
7.
ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் முத்து, முரளி மற்றும் மனோஜ் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபத்தினை 3 : 1 : 2 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | இயந்திரம் | 45,000 | ||
| முத்து | 20,000 | அறைகலன் | 5,000 | |
| முரளி | 25,000 | கடனாளிகள் | 30,000 | |
| மனோஜ் | 20,000 | 65,000 | சரக்கிருப்பு | 20,000 |
| பொதுக்காப்பு | 6,000 | |||
| கடனீந்தோர் | 29,000 | |||
| 1,00,000 | 1,00,000 |
பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு 2018, டிசம்பர் 31 அன்று மனோஜ் விலகுகிறார்:
(i) முத்துவும் முரளியும் இலாப நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
(ii)சொத்துகள் பின்வருமாறு மதிப்பீடு செய்யப்படவேண்டும்.
இயந்திரம் ரூ.43,000, சரக்கிருப்பு ரூ.27,000, கடனாளிகள் ரூ.28,000.
(iii) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது.
(iv) மனோஜ் -க்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை உடனடியாக செலுத்தப்படவில்லை.
மனோஜ் விலகலுக்குப் பின் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டிய தேவையான பேரேட்டுக் கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினைத் தயாரிக்கவும்.
8.
நிலை அறிக்கை மற்றும் இருப்புநிலைக் குறிப்புக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தரவும்.
9.
ஜேம்ஸ் நிறுமத்தின் பின்வரும் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பிலிருந்து கீழ்க்காணும் விகிதங்களைக் கணக்கிடவும்.
(i) புற அக பொறுப்புகள் விகிதம்
(ii) உரிமையாளர் விகிதம்
(iii) முதல் உந்துதிறன் விகிதம்
| விவரம் | தொகை ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| (அ) பங்கு முதல் | |
| நேர்மைப் பங்குமுதல் | 2,50,000 |
| 6% முன்னுரிமைப் பங்கு முதல் | 2,00,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 1,50,000 |
| 2. நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்டகாலக் கடன்கள் (8% கடனீட்டுப் பத்திரங்கள் ) | 3,00,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகியகாலக் கடன்கள் | 2,00,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 1,00,000 |
| மொத்தம் | 12,00,000 |
| II. சொத்துகள் | |
| 1. நீண்டகாலச் சொத்துகள் | |
| நிலைச் சொத்துகள் | 8,00,000 |
| 2. நடப்புச் சொத்துகள் | |
| (அ) சரக்கிருப்பு | 1,20,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 2,65,000 |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் | 10,000 |
| (ஈ) இதர நடப்புச் சொத்துகள் | |
| முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் | 5,000 |
| மொத்தம் | 12,00,000 |
10.
பின்வரும் இருப்பு நிலைக்குறிப்பு பியர்ல் என்பவரின் ஏடுகளிலிருந்து 1-4-2018-ம் நாளன்று தயார் செய்யப்பட்டது.
அவ்வாண்டில் நடைபெற்ற நடவடிக்கைகள் பின்வருமாறு
| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|
| முதல் பற்பல கடனீந்தோர்: | 1,60,000 | கட்டடம் | 40,000 |
| மாயா க/கு | 20,000 | அறைகலன் | 20,000 |
| சரக்கிருப்பு | 10,000 | ||
| பற்பல கடனாளிகள்: | |||
| பீட்டர் | 20,000 | ||
| கை ரொக்கம் | 30,000 | ||
| வாங்கி ரொக்கம் | 60,000 | ||
| 1,80,000 | 1,80,000 |
(அ) கூலி ரொக்கமாக வாங்கியது ரூ. 4,000
(ஆ) சம்பளம் காசோலை மூலம் வழங்கியது ரூ. 10,000
(இ) ரொக்கக் கொள்முதல் மேற்கொண்டது ரூ. 4,000
(ஈ) யாழினியிடம் கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ. 30,000
(உ) ஜோதிக்கு கடனுக்கு சரக்கு விற்றது ரூ. 40,000
(ஊ) யாழினிக்கு NEFT மூலம் செலுத்தியது ரூ. 6,000
(எ) பீட்டரிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ. 10,000
(ஏ) ரொக்க விற்பனை மேற்கொண்டது ரூ. 4,000
(ஐ) கட்டடம் மீதான தேய்மானம் 20%
(ஒ) 31-3-2019 அன்றைய இறுதி சரக்கிருப்பு ரூ. 9,000
31-3-2019 நாளேடு முடிவடையும் ஆண்டிற்கான வியாபார மற்றும் இலாப நட்டக் கணக்கையும், இருப்புநிலைக் குறிப்பையும் Tally உதவியுடன் தயார் செய்யவும்.
11.
கீழ்க்காணும் கும்பகோணம் கூடைப்பந்து சங்கத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கைத் தயார் செய்யவும்
| பெறுதல்கள் | ரூ | ரூ | செலுத்தல்கள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | மைதான வாடகை செலுத்தியது | 12,000 | |||
| கைரொக்கம் | 23,000 | அச்சுக் கட்டணம் | 5,000 | ||
| வங்கி ரொக்கம் | 12,000 | 35,000 | வங்கிக் கட்டணம் | 1,000 | |
| அரங்க வாடகை பெற்றது | 6,000 | கட்டடம் மீதான காப்பீடு | 2,000 | ||
| தொடர் விளையாட்டுப் போட்டிச் | |||||
| சந்தா பெற்றது | 9,000 | செலவுகள் | 16,000 | ||
| ஆயுள் உறுப்பினர் கட்டணம் | 7,000 | தணிக்கைக் கட்டணம் | 3,000 | ||
| பாதுகாப்பு பெட்டக வாடகைப் பெற்றது |
2,000 | விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது | 4,000 | ||
| இருப்பு கீ/இ | |||||
| கைரொக்கம் | 2,000 | ||||
| வங்கி ரொக்கம் | 14,000 | 16,000 | |||
| 59,000 | 59,000 |
12.
பின்வரும் தகவல்களிலிருந்து, உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
(அ) சாதாரண இலாப விகிதம் 10%
(ஆ) கடந்த 4 ஆண்டுகளின் இலாபங்கள் ரூ.30,000, ரூ.40,000, ரூ.50,000 மற்றும் ரூ.45,000.
(இ) மேற்குறிப்பிட்ட இலாபம் ரூ.30,000 ல் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.3,000 சேர்ந்துள்ளது.
(ஈ) சராசரி பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.3,00,000.
13.
கஜா வரையறு நிறுமம் பங்கு ஒன்றின் மதிப்பு ரூ.10 வீதம் 40,000 பங்குகளை பொதுமக்களிடம் வெளியிட்டது. விண்ணப்பத்தின் போது ரூ.2, ஒதுக்கீட்டின் போது ரூ.5 மற்றும் முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.3 என தொகையைச் செலுத்தப்பட வேண்டும். 50,000 பங்குகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 40,000 பங்குகளுக்கு விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கூடுதலாக உள்ள விண்ணப்பத் தொகையை ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தப்பட்டது. அனைத்து தொகையும் முறையாக பெறப்பட்டன எனக் கொண்டு, குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்
14.
பாரதி தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிக்கவில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
| பெறுதல்கள் | ரூ. | செலுத்தல்கள் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 32,000 | கொள்முதல் க/கு | 56,000 |
| விற்பனை க/கு | 1,60,000 | கடனீந்தோர் க/கு | 80,000 |
| கடனாளிகள் க/கு | 1,20,000 | பொதுச் செலவுகள் க/கு | 24,000 |
| கூலி க/கு | 10,000 | ||
| இருப்பு கீ/இ | 1,42,000 | ||
| 3,12,000 | 3,12,000 |
பிற தகவல்கள்:
| விவரம் | 1.4.2018 ரூ. | 31.3.2019 ரூ. |
|---|---|---|
| சரக்கிருப்பு | 40,000 | 60,000 |
| கடனாளிகள் | 38,000 | ? |
| கடனீந்தோர் | 58,000 | 52,000 |
| இயந்திரம் | 1,70,000 | 1,70,000 |
கூடுதல் தகவல்கள்:
(i) கடன் கொள்முதல் 74,000
(ii) கடன் விற்பனை 1,40,000
(iii) தொடக்க முதல் 2,22,000
(iv) இயந்திரம் மீது ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கவும்.
15.
குறை ஒப்பம் என்றால் என்ன?
16.
மதிப்பூதியம் என்றால் என்ன?
17.
நடப்பு விகிதம் என்றால் என்ன?
18.
கூட்டாளி சேர்ப்பு என்றால் என்ன? அவர் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகிறார்?
19.
கூட்டாண்மை பொருள் தருக.
20.
21.
பின்வரும் விவரங்களிலிருந்து பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரிக்கவும் மற்றும் கடனாளிகளிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டுத் தொகையினைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| ஆண்டு தொடக்கத்தில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 1,40,000 |
| ஆண்டு முடிவில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 2,00,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது | 3,90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது | 30,000 |
22.
Tally.ERP 9-ல் குழு என்றால் என்ன?
23.
ஆஷிகா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதத்தைக் கணக்கிடவும்.
அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.60,00,000.
அவ்வாண்டின் இறுதியில் நிலைச்சொத்துகள் ரூ.6,00,000.
24.
சாதாரண இலாப விகிதம் என்றால் என்ன?
25.
இராஜா, ரோஜா மற்றும் பூஜா எனும் கூட்டாளிகள் 4:5:3 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். நிறுவனத்திலிருந்து ரோஜா என்பவர் விலகினார். புதிய இலாப விகிதத்தையும் மற்றும் ஆதாய விகிதத்தையும் கணக்கிடவும்.
26.
முதலினக் காப்பு என்பது _______ இலாபத்தைக் குறிக்கின்றது.
வருவாயின
முதலின
செலவின
இவற்றில் எதுவுமில்லை
27.
_____ நடப்புப் பொறுப்புகளை விட அதிகமாக உள்ள நடப்புச் சொத்துகளைக் குறிப்பதாகும்.
மாறுபடும் முதல்
நிலை முதல்
நடைமுறை முதல்
இவற்றில் எதுவுமில்லை
28.
________ என்பது தொடரும் கூட்டாளிகளுக்கு கிடைக்கப் பெற்ற இலாபத்தின் விகிதாச்சாரம் ஆகும்.
ஆதாய விகிதம்
தியாக விகிதம்
பிள்ளையா இலாப விகிதம்
ஆதாய விகிதம்
29.
______ முறையில் நற்பெயரானது, கடந்த சில ஆண்டுகளின் சராசரி இலாபத்தைக் கொள்முதல் செய்வதன் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது.
சராசரி இலாப அடிப்படையில்
கூட்டு சராசரி இலாபமுறை
உயர் இலாப முறை
ஆண்டுத் தொகை முறை
30.
இலாப நோக்கற்ற அமைப்புகளால் பெறப்படும் பரிசுத்தொகை ______ எனப்படும்.
முதலீடு மீதான வட்டி
சந்தா
நன்கொடைகள்
ஆயுள் உறுப்பினர் கட்டணம்
31.
புதிய இலாபப் பகிர்வு விகித நிர்ணயம், புதிய கூட்டாளி பழைய கூட்டாளிகளிடம் பெறக்கூடிய ________ சார்ந்தது.
பொறுப்பினை
இலாபப் பங்கினை
சொத்தினை
இவற்றில் எதுவுமில்லை
32.
கூட்டாண்மை உடன்பாடு இல்லாத நிலையில் ________ மீதான வட்டி விதிக்கக் கூடாது.
முதல்
எடுப்புகள்
கடன்
இவற்றில் எதுவுமில்லை
33.
விற்பனை மூலம் பெற்ற வருவாய் என்பது ______ ஆகும்.
நிகர கொள்முதல்
நிகர விற்பனை
நிகர இலாபம்
மொத்த இலாபம்
34.
இரட்டைப்பதிவு முறையில் தயாரிக்கப்படுவதால் நம்பகத்தன்மை உடையது எது?
நிலையறிக்கை
இருப்புநிலைக் குறிப்பு
இருப்பாய்வு
இலாபநட்ட அறிக்கை
35.
ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கிய பின்பும் ஒவ்வொரு முறை Tallyஐ துவக்கும் போதும் _______ தோன்றும்.
Tally யின் திரை
Tally option button
Image
இவற்றில் எதுவுமில்லை
36.
இருப்புநிலைக் குறிப்பு, வணிக நிறுவனத்தின் நிதிநிலை பற்றிய ________ தகவல்களை வழங்குகிறது.
ஒரு காலக்கட்டத்திற்கு மேலான
ஒரு குறிப்பிட்ட நாளுக்குரிய
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான
குறிப்பிட்ட கணக்காண்டிற்குரிய
37.
கூட்டாளி ஒருவர் ஜூன் 30 அன்று கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாவது_____.
நடப்பு கணக்காண்டின் இறுதி வரைக்கும்
முந்தைய கணக்காண்டின் இறுதி வரைக்கும்
கூட்டாளி விலகும் நாள் வரைக்கும்
கூட்டாளியின் கணக்கைத் தீர்வு செய்யும் வரைக்கும்
38.
கூட்டாளி சேர்ப்பு தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானதல்ல?
பொதுவாக கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகள் மாறும்
முந்தைய ஆண்டுகளின் இலாபம் மற்றும் நட்டங்கள் பழைய கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
கூட்டாண்மை நிறுவனமானது புதிய ஒப்பந்தத்தின் கீழ் மறு கட்டமைக்கப்படும்
ஏற்கனவே உள்ள ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டு வரப்படாது
39.
பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள் ______.
நட்டம்
ரொக்கம்
முதல்
இலாபம்
40.
புற அகப் பொறுப்புகள் அளவிடுவது ______.
குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்
நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்
இலாபம் ஈட்டும் திறன்
செயல்திறன்
41.
42.
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை_____.
வருவாயின வரவு
முதலின வரவு
வருவாயினச் செலவு
முதலினச் செலவு
43.
44.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
கூட்டாளிகள் இலாபம் மற்றும் நட்டத்தை சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்
கூட்டாளிகள் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 7% அனுமதிக்க வேண்டும்.
கூட்டாளிகளுக்கு சம்பளம் அல்லது ஊதியம் அனுமதிக்கப்பட மாட்டாது.
கூட்டாளிகளிடமிருந்து பெற்ற கடன் மீதான வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும்.
45.
நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக் கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட முதல்
அழைக்கப்பட்ட முதல்
முதலினக் காப்பு
காப்பு முதல்
46.
நிதி அறிக்கைகளின் இயல்புகள் யாவை?
47.
நற்பெயரின் வகைகளை எழுத விளக்குக.
48.
விலகும் கூட்டாளிக்குரிய தொகையை எவ்வகையில் தீர்க்கப்படலாம்?
49.
இலாப நோக்கமற்ற அமைப்புகளின் இயல்புகள் யாவை?
50.
மாலதி மற்றும் ஷோபனா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 5:4 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் ஜெயஸ்ரீ என்பவரை 1/3 இலாபப் பங்கிற்கு கூட்டாண்மையில் சேர்க்கின்றனர். ஜெயஸ்ரீ தன்னுடைய பங்காக ரூ.6,000 நற்பெயருக்கென செலுத்துகிறார். அவர்களின் புதிய இலாபப்பகிர்வு விகிதம் 3:2:1. நிலைமுதல் முறையில் கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன எனக்கொண்டு, நற்பெயர் சரிக்கட்டுதலுக்கான தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
51.
பின்வரும் விவரங்களைக் கொண்டு குறிஞ்சி வரையறு நிறுவனத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. ஆயிரங்களில் | ||
|---|---|---|---|
| 2015-16 | 2016-17 | 2017-18 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 120 | 132 | 156 |
| இதர வருமானம் | 50 | 38 | 65 |
| செலவுகள் | 100 | 135 | 123 |
52.
53.
கூட்டாண்மையின் சிறப்பியல்புகளைத் தரவும்.
54.
ஒறுப்பிழப்பு செய்த பங்குகளின் மறுவெளியீடு என்றால் என்ன?
1.
| விவரம் | 2016-17 ரூ. |
2016-17 விற்பனை மூலம் பெற்ற வருவாயில் சதவீதம் |
2016-17 தொகை |
2016 விற்பனை மூலம் பெற்ற வருவாயில் சதவீதம் |
|---|---|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,00,000 | 100 | 6,00,000 | 100 |
| கூட்டுக: இதர வருமானங்கள் | 50,000 | 12.50 | 1,50,000 | 25 |
| மொத்த வருவாய் | 4,50,000 | 112.50 | 7,50,000 | 125 |
| கழிக்க: செலவுகள் | 5,00,000 | 125 | 3,00,000 | 50 |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம்/நட்டம் | -50,000 | -12.50 | 10,50,000 | 125 |
| கழிக்க: வருமான வரி (40%) | - | - | 4,20,000 | 70 |
| வரிக்கு பின்னர் உள்ள இலாபம் | -50,000 | -12.50 | 6,30,000 | 55 |
2.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 2,000 | நிலம் க/கு | 11,000 | |
| கடனாளிகள் க/கு | 3,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| சுந்தர் முதல் க/கு (3/6) | 3,000 | |||
| விவேக் முதல் க/கு (2/6) | 2,000 | |||
| பாண்டியன் முதல் க/கு (1/6) | 1,000 | 6,000 | ||
| 11,000 | 11,000 |
| விவரம் | சுந்தர் ரூ. |
விவேக் ரூ. |
பாண்டியன் ரூ. |
விவரம் | சுந்தர் ரூ. |
விவேக் ரூ. |
பாண்டியன் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இலாபநட்டக் க/கு | 3,000 | 2,000 | 1,000 | இருப்பு கீ/கொ | 50,000 | 40,000 | 10,000 |
| பாண்டியனின் | பொதுக்காப்பு க/கு | 18,000 | 12,000 | 6,000 | |||
| நிறைவேற்றாளர் க/கு | 16,000 | ||||||
| இருப்பு கீ/இ | 68,000 | 52,000 | மறுமதிப்பீட்டு க/கு | 3,000 | 2,000 | 1,000 | |
| (இலாபம்) | |||||||
| 71,000 | 54,000 | 17,000 | 71,000 | 54,000 | 17,000 | ||
| இருப்பு கீ/கொ | 68,000 | 52,000 | - |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | நிலம் | 80,000 | |||
| சுந்தர் | 68,000 | கூட்டுக: | |||
| விவேக் | 52,000 | 1,20,000 | மதிப்பேற்றம் | 11,000 | 91,000 |
| பாண்டியனின் | |||||
| நிறைவேற்றாளர் க/கு | 16,000 | சரக்கிருப்பு | 20,000 | ||
| பற்பல கடனீந்தோர் | 14,000 | கழிக்க: | |||
| மதிப்பு குறைவு | 2,000 | 18,000 | |||
| கடனாளிகள் | 30,000 | ||||
| கழிக்க: மதிப்பு குறைப்பு | 3,000 | 27,000 | |||
| வங்கி ரொக்கம் | 14,000 | ||||
| 1,50,000 | 1,50,000 |
3.
| பெறுதல்கள் | ரூ. | செலுத்தல்கள் | ரூ. |
| இருப்பு கீ/கொ | இருப்பு கீ/கொ | ||
| ரொக்க இருப்பு | 15,000 | வங்கி மேல்வரைப்பற்று | 9,000 |
| முதலீடுகள் விற்றது | 4,000 | அச்சு மற்றும் எழுதுபொருள் | 2,500 |
| அறக்கட்டளை நிதி வரவுகள் | 6,000 | வட்டி செலுத்தியது | 5,250 |
| சந்தா பெற்றது | 40,000 | சிற்றுண்டி வாங்கியது | 2,500 |
| இதர வரவுகள் | 650 | ஒளியூட்டுக் கட்டணம் | 3,300 |
| அரசு மானியம் பெற்றது | 6,000 | பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் | 7,500 |
| சிற்றுண்டி விற்றது | 1,500 | போக்குவரத்துச் செலவுகள் | 2,750 |
| புத்தகங்கள் வாங்கியது | 10,000 | ||
| காப்பீட்டு முனைமம் செலுத்தியது | 4,000 | ||
| இருப்பு கீ/இ | |||
| வங்கி ரொக்கம் | 2,000 | ||
| கைரொக்கம் | 24,350 | ||
| 73,150 | 73,150 |
குறிப்பு கொடுக்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் தேய்மானம் ரொக்கம் சாரா நடவடிக்கைகளாக இருப்பதால் இவை இரண்டும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் இடம் பெறாது.
4.

நீண்டகாலக் கடன் = 9% கடனீட்டுப் பத்திரங்கள் = ரூ.4,00,000
பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + முன்னுரிமைப் பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி
= 1,50,000+2,00,000+1,50,000=ரூ.5,00,000
\(\therefore \) புற அக பொறுப்புகள் விகிதம் =
\(\cfrac { 4,00,000 }{ 5,00,000 } =0.8:1\)
(ii)

(iii)

= 8%முன்னுரிமைப் பங்குமுதல் +9% கடனீட்டுப் பத்திரங்கள்
= 2,00,000+4,00,000=ரூ 6,00,000
நேர்மைப் பங்குதாரர் நிதி = 1,50,000+1,50,000=ரூ.3,00,000
\(\therefore \) முதல் உந்து திறன் விகிதம் = \(\cfrac { 6,00,000 }{ 3,00,00 } =2:1\)
5.
| எடுப்பு நாள் | எடுப்புத் தொகை ரூ. |
வட்டிக்குரிய காலம் டிசம்பர் 31 வரை (மாதங்களில்) | பெருக்குத் தொகை (ரூ) |
|---|---|---|---|
| மார்ச் 1 | 8,000 | 10 | 80,000 |
| ஜூன் 1 | 6,000 | 7 | 42,000 |
| செப்டம்பர் 1 | 4,000 | 4 | 16,000 |
| டிசம்பர் 1 | 3,000 | 1 | 3,000 |
| மொத்த பெருக்குத் தொகை | 1,14,000 | ||
எடுப்புகள் மீதான வட்டி = மொத்த பெருக்குத் தொகை x ஆண்டு வட்டி வீதம் x \(\frac { 1 }{ 12 } \)
= \(1,14,000\times \frac { 12 }{ 100 } \times \frac { 1 }{ 12 } \)
6.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு (20,000 x 10/00) | 2,000 | கட்டடம் க/கு | 5,000 | |
| அறைகலன் க/கு (1,000 x 10/100) | 100 | (25,000 x 20/00) | ||
| ஐயக்கடன் க/கு (16,000 x 5//100) | 800 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| இராஜன் முதல் க/கு (3/5) | 1,575 | |||
| செல்வா முதல் க/கு (2/5) | 525 | 2,100 | ||
| 5,000 | 5,000 |
| விவரம் | இராஜன் ரூ. |
செல்வா ரூ. |
கணேசன் ரூ. |
விவரம் | இராஜன் ரூ. |
செல்வா ரூ. |
கணேசன் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இலாப நட்ட க/கு | 7,500 | 2,500 | - | இருப்பு கீ/கொ | 30,000 | 16,000 | - |
| இருப்பு கீ/இ | 27,075 | 15,025 | 10,000 | பொதுக்காப்பு க/கு | 3,000 | 1,000 | - |
| மறுமதிப்பீடு க/கு | 1,575 | 525 | - | ||||
| 34,575 | 17,525 | 10,000 | 34,575 | 17,525 | 10,000 | ||
| இருப்பு கீ/கொ | 27,075 | 10,025 | 10,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துக்கள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 25,000 | |||
| இராஜன் | 27,075 | கூட்டுக: மதிப்பேற்றம் 20% | 5,000 | 30,000 | |
| செல்வா | 15,025 | அறைக்கலன் | 1,000 | ||
| கணேசன் | 10,000 | 52,100 | கழிக்க: தேய்மானம் 10% | 100 | 900 |
| கடனீந்தோர் | 37,500 | சரக்கிருப்பு | 20,000 | ||
| கழிக்க தேய்மானம் 10% | 2,000 | 18,000 | |||
| கடனாளிகள் | 16,000 | ||||
| கழிக்க: ஐயக் கடன் ஒதுக்கு | 800 | 15,200 | |||
| பெறுவதற்குரிய மாற்றுச்சீட்டு | 3,000 | ||||
| வங்கி ரொக்கம் | 12,500 | ||||
| கூட்டுக: கணேசனின் முதல் | 10,000 | 22,500 | |||
| 86,600 | 89,600 |
7.
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|---|
| இயந்திரம் க/கு | 2,000 | சரக்கிருப்பு க/கு | 7,000 | |
| கடனாளிகள் க/கு | 2,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம் | ||||
| முத்து முதல் க/கு | 1,500 | |||
| முரளி முதல் க/கு | 500 | |||
| மனோஜ் முதல் க/கு | 1,000 | 3,000 | ||
| 7,000 | 7,000 |
| விவரம் | முத்து ரூ |
முரளி ரூ |
மனோஜ் ரூ |
விவரம் | முத்து ரூ |
முரளி ரூ |
மனோஜ் ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| மனோ ஜ் முதல் க/கு | 3,000 | 7,000 | - | இருப்பு கீ/கொ | 20,000 | 25,000 | 20,000 |
| மனோஜ் கடன் க/கு | 33,000 | பொதுக்காப்பு க/கு | 3,000 | 1,000 | 2,000 | ||
| இருப்பு கீ/இ | 21,500 | 19,500 | - | மறுமதிப்பீட்டுக் க/கு | 1,500 | 500 | 1,000 |
| (இலாபம்) | |||||||
| முத்து முதல் க/கு | - | - | 3,000 | ||||
| மனோஜ் முதல் க/கு | - | - | 7,000 | ||||
| 24,500 | 26,500 | 33,000 | 24,500 | 26,500 | 33,000 | ||
| இருப்பு கீ/கொ | 21,500 | 19,500 | - |
குறிப்பு:
(i) ஆதாய விகிதம் கணக்கிடுதல்
ஆதாய பங்கு = புதிய பங்கு – பழைய பங்கு
முத்து = \(\cfrac { 3 }{ 5 } -\cfrac { 3 }{ 6 } =\cfrac { 18-15 }{ 30 } =\cfrac { 3 }{ 30 } \)
முரளி = \(\cfrac { 2 }{ 5 } -\cfrac { 1 }{ 6 } =\cfrac { 12-5 }{ 30 } =\cfrac { 7 }{ 30 } \)
எனவே, முத்து மற்றும் முரளியின் ஆதாய விகிதம் = 3:7
(ii) நற்பெயருக்கான சரிக்கட்டுதல்
நிறுவனத்தின் நற்பெயர் = ரூ.30,000
நற்பெயரில் மனோஜின் பங்கு = \(30,000\times \cfrac { 2 }{ 6 } \) = ரூ 10,000
இது முத்து மற்றும் முரளியின் முதல் கணக்கில் 3:7 என்ற ஆதாய விகிதத்தில் சரிக்கட்டப்பட வேண்டும்.அதாவது,
முத்து \(10,000\times \cfrac { 3 }{ 10 } \)= ரூ3,000
முரளி \(10,000\times \cfrac { 7 }{ 10 } \) = ரூ 7,000
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | இயந்திரம் | 45,000 | |||
| முத்து | 21,500 | கழிக்க: தேய்மானம் | 2,000 | 43,000 | |
| முரளி | 19,500 | 41,000 | அறைகலன் | 5,000 | |
| மனோஜ் கடன் க/கு | 33,000 | கடனாளிகள் | 30,000 | ||
| கடனீந்தோர் | 29,000 | கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு | 2,000 | 28,000 | |
| சரக்கிருப்பு | 20,000 | ||||
| கூட்டுக: மதிப்பேற்றம் | 7,000 | 27,000 | |||
| 1,03,000 | 1,03,000 |
8.
| வ.எண் | வேறுபாட்டிற்கான அடிப்படை | நிலை அறிக்கை | இருப்புநிலைக் குறிப்பு |
| 1 | நோக்கம் | நிலை அறிக்கை பொதுவாக வியாபாரத்தின் முதலை கண்டறிய தயாரிக்கப்படுகிறது. | இருப்புநிலைக் குறிப்பு வியாபாரத்தின் நிதிநிலையைக் கண்டறிய தயாரிக்கப்படுகிறது. |
| 2 | கணக்கியல் முறை | இரட்டைப்பதிவு முறையை பின்பற்றவது கட்டாயமானதாக இல்லாத போது நிலை அறிக்கை தயாரிக்கப்படுகிறது. | கணக்குகள் இரட்டைப்பதிவு முறையில் பராமரிக்கப்படும் போது இருப்புநிலைக்குறிப்பு தயாரிக்கப்படுகிது. |
| 3 | தயாரிப்பின் அடிப்படை | இது முழுமையாக பேரேட்டுக் கணக்குகளை அடிப்டையாகக் கொண்டதல்ல. பேரேட்டுக் கணக்குகளின் இருப்புகள் முடிந்த இடங்களில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. | இது முழுமையாக பேரேட்டுக் கணக்குகளின் அடிப்படையிலேயே தயாரிக்கப்படுகிறது. |
| 4 | நம்பகத்தன்மை | இது முழுமை பெறா பதிவேடுகளை அடிப்டையாகக் கொண்டுள்ளதால் நம்பகத்தன்மை உடையது அல்ல. | இது இரட்டைப்பதிவு முறையில் தயாரிக்கப்படுவதால் நம்பகத்தன்மை உடையது. |
| 5 | விடுபட்ட விவரங்கள் | ஏடுகள் முழுமையாக பராமரிக்கப்படாததால் விடுபட்ட விவரங்களைக் கண்டறிவது கடினம். | அனைத்து நடவடிக்கைகளின் இரண்டு தன்மைகளும் பதியப்படுவதால் விடுபட்ட விவரங்களை எளிதில் கண்டறிய முடியும். |
9.
(i) புற அக பொறுப்புகள் விகிதம்

நீண்டகாலக் கடன் = 8% கடனீட்டுப் பத்திரங்கள்
பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்கு முதல் + முன்னுரிமைப் பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி
= 2,50,000+2,00,000+1,50,000
= ரூ.6,00,000
\(\therefore \) புற அக பொறுப்புகள் விகிதம் = \(\cfrac { 3,00,000 }{ 6,00,000 } =0.5:1\)
(ii)

உரிமையாளர் நிதி = ரூ.6,00,000
மொத்த சொத்துகள் = ரூ.12,00,000
\(\therefore \) உரிமையாளர் விகிதம் = \(\cfrac { 6,00,000 }{ 12,00,000 } =0.5:1\)
(iii)

நிலையான வட்டி மற்றும் நிலையான பங்காதாயம் ஈட்டுகின்ற நிதிகள் = 6% முன்னுரிமைப் பங்கு முதல் + 8% கடனீட்டுப் பத்திரங்கள்
நேர்மைப் பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + பொதுக்காப்பு +மிகுதி
= 2,50,000+1,50,000
= ரூ.4,00,000
\(\therefore \) முதல் உந்துதிறன் விகிதம் = \(\cfrac { 5,00,000 }{ 4,00,000 } =1.25:1\)
10.
பின்வரும் படிநிலைகளை பின்பற்றி Tally.ERP,9-ல் நடவடிக்கைகளை பதிவு செய்யவும்.
(i) நிறுவனத்தை உருவாக்க (To create Company) :
Company Info > Create Company பியர்ல் என பெயரை குறிப்பிட்டு மற்ற அனைத்து விவரங்களையும் மாற்றம் செய்யலாம் 'ஆம்' (Yes) என ஏற்கவும்.
(ii) கணக்குகள் மட்டும் பராமரிக்க (Maintain accounts only) :
Gateway of Tally > F11 Accounting features > General > Maintain accounts only: Yes > Accept yes.
(iii) ஆரம்ப இருப்புகளுடன் பேரேட்டு கணக்குகளை உருவாக்க :
Gateway of Tally > Masters > Accounts Info > Ledger > (Create) :
| Creation of | Name | Under | Opening balance | Accept |
| Pearl's Capital A /c | Pearl's Capital A/c | Capital Account | 1,60,000 | Yes |
| Maya A/c(Sundry creditors) | Maya A/c | Sundry Creditors | 20,000 | Yes |
| Buildings A/c | Buildings A/c | Fixed Assets | 40,000 | Yes |
| Furniture A/c | Furniture A/c | Fixed Assets | 20000 | Yes |
| Opening stock | Opening stock | Stock-in-Hand | 10,000 | Yes |
| Peter A/c (Sundry debtors) | Peter A/c | Sundry Debtors | 20000 | Yes |
| Cash in hand | Cash | Cash-in-Hand | 30,000 | Yes |
| Cash at bank | Bank | Bank Accounts | 60,000 | Yes |

குறிப்பு : ரொக்கக் கணக்கு ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள பேரேடானதால் இதை உருவாக்க வேண்டியதில்லை. ரொக்க கணக்கை மாற்றம் செய்து ஆரம்ப இருப்பை மட்டும் பதிய வேண்டும்.
Gateway of Tally > Masters >Accounts Info> Ledgers> Single Ledger> Alter
11.
| செலவுகள் | ரூ. | வருமானம் | ரூ. |
|---|---|---|---|
| மைதான வாடகை செலுத்தியது | 12,000 | அரங்க வாடகை பெற்றது | 6,000 |
| அச்சுக்கட்டணம் | 5,000 | சந்தா பெற்றது | 9,000 |
| வங்கிக் கட்டணம் | 1,000 | பாதுகாப்பு பெட்டக வாடகைப் பெற்றது | 2,000 |
| கட்டடம் மீதான காப்பீடு | 2,000 | பற்றாக்குறை (வருமானத்தைக்காட்டிலும் மிகுதியான செலவுகள்) | 26,000 |
| தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் | 16,000 | ||
| தணிக்கைக் கட்டணம் | 3,000 | ||
| விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது | 4,000 | ||
| 43,000 | 43,000 |
12.
= \(\frac { 30,000+40,000+50,000+45,000 }{ 4 } \)
= \(\frac { 1,62,000 }{ 4 } \) = ரூ.40,500
சாதாரண இலாபம் = பயன்படுத்தப்பட்ட முதல் x சாதாரண இலாப விகிதம்
= 3,00,000 x 10%
= ரூ.30,000
உயர் இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம்
= 40,500 - 30,000
= 10,500
= \(\frac { 10,500 }{ 10 } \times 100\)
நற்பெயர் = ரூ.1,05,000
13.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (50,000x2) | ப | 1,00,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 1,00,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | ப | 80,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 80,000 | ||||
| (பங்கு விண்ணப்பத் தொகை பங்கு முதல் கணக்கிற்கு மாற்றியது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் க/கு (10,000x2) | ப | 20,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 20,000 | ||||
| (மிகுதியாகப் பெற்ற விண்ணப்பத் தொகை ஒதுக்கீட்டிற்குப் பயன்படுத்தப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | ப | 2,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 2,00,000 | ||||
| (பங்கு ஒதுக்கீட்டுத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (2,00,000-20,000) | ப | 1,80,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 1,80,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு (40,000x3) | ப | 1,20,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 1,20,000 | ||||
| (பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு பணம் பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு |
ப |
1,20,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | 1,20,000 | ||||
| (வங்கி முதல் மற்றும் இறுதி அழைப்பு பணம் பெற்றது) |
14.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 38,000 | ரொக்கக் க/கு (பெற்றது) | 1,20,000 |
| விற்பனை க/கு (கடன்) | 1,40,000 | இருப்பு கீ/இ (இருப்புக் கட்டும் தொகை) | 58,000 |
| 1,78,000 | 1,78,000 | ||
| இருப்பு கீ/கொ | 58,000 |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 40,000 | விற்பனை | |||
| கொள்முதல் | ரொக்கம் | 1,60,000 | |||
| ரொக்கம் | 56,000 | 1,40,000 | 3,00,000 | ||
| கடன் | 74,000 | 1,30,000 | இறுதிச் சரக்கிருப்பு | 60,000 | |
| கூலி | 10,000 | ||||
| மொத்த இலாபம் கீ/இ | 1,80,000 | ||||
| 3,60,000 | 3,60,000 | ||||
| பொதுச் செலவுகள் | 24,000 | மொத்த இலாபம் கீ/கொ | 1,80,000 | ||
| இயந்திரம் மீதான தேய்மானம் | 17,000 | ||||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 1,39,000 | ||||
| 1,80,000 | 1,80,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் | 2,22,000 | ரொக்கம் | 1,42,000 | ||
| கூட்டுக: நிகர இலாபம் | 1,39,000 | 3,61,000 | சரக்கிருப்பு | 60,000 | |
| கடனீந்தோர் | 52,000 | கடனாளிகள் | 58,000 | ||
| இயந்திரம் | 1,70,000 | ||||
| கழிக்க: தேய்மானம் | 17,000 | 1,53,000 | |||
| 4,13,000 | 4,13,000 |
15.
1) பொது மக்களுக்கு வெளியிடப்படும் அனைத்துப் பங்குகளும் முழுவதும் ஒப்பப்படாமல் போகலாம்.
2) வெளியிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையை விட ஒப்பப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அது குறை ஒப்பம் எனப்படும்.
16.
ஒரு நிறுவனத்தில் வழக்கமான ஊழியராக இல்லாத ஒருவருக்கு வழங்கப்படும் ஊதியமே மதிப்பூதியம் எனப்படும். இது ஒரு வருவாயினச் செலவாகும்.
17.
(i) நடப்பு விகிதம், ஒரு வணிக நிறுவனத்தின் நடப்புச் சொத்துகளுக்கும் மற்றும் நடப்புப் பொறுப்புகளுக்கும் உள்ள விகிதச்சாரத்தைத் தருகிறது.
(ii) இரு நடப்புச் சொத்துகளை நடப்புப் பொறுப்புகளால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
(iii) நடப்பு விகிதம், ஒரு வணிக நிறுவனம் தனது நடப்புப் பொறுப்புகளை எப்போது செலுத்த வேண்டுமோ அப்போது, அதை எதிர்கொள்ளும் திறனைக் குறிக்கிறது. அது பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.
18.
ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் ஒரு நபரை புதிய கூட்டாளியாக சேர்க்கலாம். இதுவே கூட்டாளி சேர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான கூடுதல் முதல் பெறுவதற்காகவும் அல்லது புதிய கூட்டாளி சேர்க்கப்படலாம்
19.
கூட்டாண்மை நிறுவனம் என்பது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நபர்களோ, அவர்களுக்கிடையே ஏற்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு தொழிலை ஏற்று நடத்தும் தொழில் வடிவமைப்பு ஆகும். கூட்டாண்மைத் தொழிலை ஏற்று நடத்த ஒப்புக் கொள்ளும் நபர்களை தனித்தனியாக கூட்டாளிகள் எனவும், ஒட்டுமொத்தமாக நிறுவனம் என்றும் அழைக்கிறோம்.
20.
21.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
| இருப்பு கீ/கொ | 1,40,000 | ரொக்கக் க/கு | 3,90,000 |
| கடனாளிகள் க/கு | 4,80,000 | கடனாளிகள் க/கு | 30,000 |
| (அவ்வாண்டில் மாற்றுச்சீட்டு பெற்றது-இருப்புக்கட்டும் தொகை) | (பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது) | ||
| இருப்பு கீ/இ | 2,00,000 | ||
| 6,20,000 | 6,20,000 |
22.
(i) 2009-ம் ஆண்டு Tally solutions, ERP9 எனும் மென்பொருளை அறிமுகம் செய்தது. இந்த மென்பொருள் விரிவான வணிக மேலாண்மைக்கு தீர்வு அளிக்கிறது.
(ii) இது அனைத்து கணக்கேடுகளையும் பராமரிக்கும் பெறுதல், செலுத்தல், விற்பனை, கொள்முதல் போன்ற பல்வேறு வகையான சான்றாவணங்களை பயன்படுத்தி நடவடிக்கைகளை பதிவு செய்யலாம்.
23.
நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் =
= \(\frac {60,00,000}{6,00,000}\) = 10 மடங்கு
தொடக்க நிலைச் சொத்துகள் தரப்படாததால், சராசரி நிலைச் சொத்துகளுக்குப் பதிலாக இறுதி நிலைச் சொத்துகள் எடுத்துக்கொள்ளப்பட்டது.
24.
சாதாரண இலாப விகிதம் என்பது ஒரு தொழிலில் ஒரே தன்மையுடைய வியாபார நிறுவனங்கள் சாதாரண சூழ்நிலைகளில் ஈட்டும் இலாப விகிதம் எனப்படும்.
25.
புதிய இலாப விகிதம், ஆதாயப்பங்கு மற்றும் ஆதாயப்பங்கு விகிதாச்சாரம் ஆகியவை கொடுக்கப்படாததால், புதிய பங்கினைக் கணக்கிடுவதற்கு அவர்களுடைய ஆதாயப் பங்கை பழைய பங்கின் விகிதாச்சாரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, தொடரும் கூட்டாளிகளான இராஜா மற்றும் பூஜா ஆகியோரின் பழைய இலாபப் பகிர்வு விகிதம், புதிய இலாபப்பகிர்வு விகிதமாகவும் மற்றும் ஆதாய விகிதமாகவும் இருக்கும். அதாவது, 4:3.
26.
(b)
முதலின
27.
(a)
மாறுபடும் முதல்
28.
(a)
ஆதாய விகிதம்
29.
(a)
சராசரி இலாப அடிப்படையில்
30.
(c)
நன்கொடைகள்
31.
(b)
இலாபப் பங்கினை
32.
(b)
எடுப்புகள்
33.
(b)
நிகர விற்பனை
34.
(b)
இருப்புநிலைக் குறிப்பு
35.
(a)
Tally யின் திரை
36.
(b)
ஒரு குறிப்பிட்ட நாளுக்குரிய
37.
(c)
கூட்டாளி விலகும் நாள் வரைக்கும்
38.
(d)
ஏற்கனவே உள்ள ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டு வரப்படாது
39.
(d)
இலாபம்
40.
(b)
நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்
41.
(b)
42.
(b)
முதலின வரவு
43.
(b)
44.
(b)
கூட்டாளிகள் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 7% அனுமதிக்க வேண்டும்.
45.
(d)
காப்பு முதல்
46.
நிதி நிலை அறிக்கைகளின் இயல்புகள் பின்வருமாறு:
1) நிதிநிலை அறிக்கைகள், ஒரு கணக்காண்டின் இறுதியில் கணக்கேடுகளில் பதிவு செய்யப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன.
2) இவ்வறிக்கைகள், ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் தயாரிக்கப்படுகின்றன.
3) ஒரே தன்மையுடைய தகவல்களை அதாவது நிலைச்சொத்துகள் மற்றும் நடப்புச் சொத்துகள் போன்று குழுமப்படுத்துதல் மூலமாக அர்த்தமுள்ள தகவல்களைத் தருகிறது.
4) புராதன அடக்கவிலை அடிப்படையில் நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன.
5) நிதிநிலை அறிக்கையானது சில நிகழ்வுகளில் தனிப்பட்ட முடிவுகளை உள்ளடக்கியதாகும். எடுத்துக்காட்டாக தேய்மானம் நீக்கும் முறை மற்றும் காப்பு சதவீதம் முடிவு செய்தல்.
47.
நற்பெயரை, வாங்கப்பட்ட நற்பெயர் மற்றும் தன்னுருவாக நற்பெயர் என வகைப்படுத்தலாம்.
(i) வாங்கப்பட்ட அல்லது பெறப்பட்ட நற்பெயர்:
நற்பெயரானது, ரொக்கம் அல்லது பொருளைச் செலுத்தி பெறப்பட்டிருந்தால் அது வாங்கப்பட்ட அல்லது பெறப்பட்ட நற்பெயர் என்றழைக்கப்படுகிறது. ஒரு நிறுவனம் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனத்தை வாங்கும்போது அதற்காகச் செலுத்தப்படும் தொகையானது வாங்கப்பெறும் நிறுவனத்தின் நிகரச் சொத்துகளை (சொத்துகள் பொறுப்புகள்) விட கூடுதலாக இருக்கலாம்
(ii) தன்னுருவாக்க நற்பெயர்:
தொழிலின் சிறப்பம்சங்களான சாதகமான இடவமைவு, நம்பகமான வாடிக்கையாளர்கள் போன்ற சிறப்பியல்புகளை அடிப்படையாகக் கொண்டு, நிறுவனமே தானாக உருவாக்கிக் கொள்ளும் நற்பெயர் தன்னுருவாக்க நற்பெயர் ஆகும். இவ்வகை தன்னுருவாக்க நற்பெயர் கணக்கேடுகளில் பதிவு செய்யப்படக்கூடாது
48.
(i) கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி ஒருவர் விலகும் போது, நற்பெயர், பகிர்ந்து தரா இலாபம் அல்லது நட்டம், மறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நட்டம், கூட்டாளியின் ஊதியம் ஆகியவற்றை சரிகட்டிய பிறகு கிடைக்கக்கூடிய முதல் கணக்கின் இருப்பு அக்கூட்டாளிக்கு செலுத்தப்பட வேண்டும்
(ii) கூட்டாண்மை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அவருக்கு சேர வேண்டிய தொகையைத் தீர்வு செய்ய வேண்டும். பின்வரும் வழிகளில் விலகும் கூட்டாளிக்கு செலுத்த வேண்டிய தொகை தீர்க்கப்படலாம்
1. அவருக்கு சேரவேண்டிய முழுத் தொகையையும் ரொக்கமாக உடனடியாக செலுத்தலாம்
2. மொத்தத் தொகையும் கூட்டாளியின் கடன் கணக்கிற்கு மாற்றி விடலாம்
3. பாதித் தொகையை உடனடியாக ரொக்கமாகவும் மீதித் தொகையை கடன் கணக்கிற்கு மாற்றி விடலாம்
49.
1) இலாப நோக்கம் இல்லாமல் செயல்படும் அமைப்புகளே இலாப நோக்கற்ற அமைப்புகள் எனப்படும்.
2) அவற்றின் முக்கிய நோக்கம் ஒரு குறிப்பிட்ட குழுவிற்கோ அல்லது பெரும்பாலான பொதுமக்களுக்கோ சேவை செய்வதாகும்.
3) பொதுவாக அவை வணிகம் மற்றும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.
4) இவைகளின் முக்கிய வருமான ஆதாரம் உறுப்பினர் சந்தா, நன்கொடைகள், மானியம் மற்றும் உயில்கொடை போன்றவைகளை உள்ளடக்கியதாகும்.
50.
தியாக விகிதம் கணக்கிடுதல்:
தியாக விகிதம் = பழைய பங்கு - புதிய பங்கு
மாலதி = \(\frac { 5 }{ 9 } -\frac { 3 }{ 6 } =\frac { 30-27 }{ 54 } \) = \(\frac { 3 }{ 54 } =\frac { 1 }{ 18 } \)
ஷோபனா = \(\frac { 4 }{ 9 } -\frac { 2 }{ 6 } =\frac { 24-18 }{ 54 } \) = \(\frac { 6 }{ 54 } =\frac { 2 }{ 18 } \)
எனவே, தியாக விகிதம் = \(\frac { 1 }{ 18 } :\frac { 2 }{ 18 } \) (அல்லது) 1 : 2
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு | ப | 6,000 | |||
| மாலதி நடப்பு க/கு (1/3) | 2,000 | ||||
| ஷோபனா நடப்பு க/கு (2/3) (நற்பெயருக்கென கொண்டு வரப்பட்ட ரொக்கம் பழைய கூட்டாளிகளின் தியாக விகிதப்படி வரவு செய்யப்பட்டது) |
4,000 |
51.
| விவரம் | ஆயிரங்களில் | போக்கு சதவீதங்கள் | ||||
|---|---|---|---|---|---|---|
| 2015-16 | 2016-17 | 2017-18 | 2015-16 | 2016-17 | 2017-18 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 120 | 132 | 156 | 100 | 110 | 130 |
| கூட்டுக: இதர வருமானம் | 50 | 38 | 65 | 100 | 76 | 130 |
| மொத்தம் | 170 | 170 | 221 | 100 | 100 | 130 |
| கழிக்க: செலவுகள் | 100 | 135 | 123 | 100 | 135 | 123 |
| இலாபம் | 70 | 35 | 98 | 100 | 50 | 140 |
குறிப்பு: விற்பனை மூலம் பெற்ற வருவாயின் போக்கு சதவீதங்கள் கணக்கிடுதல்
2016-17: \(\frac {132}{120}\) x 100 = 110%
2017-18: \(\frac {156}{120}\) x 100 = 130%
52.
53.
கூட்டாண்மையின் சிறப்பியல்புகள் பின்வருமாறு:
(i) கூட்டாண்மை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களால் உருவாக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும். அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 என வரையறை செய்யப்பட்டுள்ளது.
(ii) தொழில் நிறுவனத்தின் இலாபம் அல்லது நட்டத்தைப் பகிர்ந்துகொள்ள கூட்டாளிகளுக்கிடையே உடன்பாடு இருக்க வேண்டும். உடன்பாடு எழுத்து வடிவிலோ அல்லது பேச்சு வடிவிலோ அல்லது உட்கிடையாகவோ இருக்கலாம்
(iii) கூட்டாண்மை உடன்பாடு ஒரு தொழில் நிறுவனத்தை நடத்தி அதிலிருந்து கிடைக்கும் இலாபத்தைப் பகிர்வதாக இருக்க வேண்டும்.
(iv) கூட்டாண்மை நிறுவனத்தை கூட்டாளிகள் அனைவருமோ அல்லது அனைவரின் சார்பில் அவர்களில் ஒருவரோ நடத்தலாம்.
54.
1) ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகள் நிறுமத்தால் மறுவெளியீடு செய்யப்படலாம். அப்பங்குகள் எந்த விலையிலும் மறுவெளியீடு செய்யலாம்.
2) ஆனால், வெளியீட்டு விலை ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகளின் செலுத்தப் பெறாத தொகையைக் காட்டிலும் குறைவாக இருக்கக் கூடாது.
3) உதாரணமாக, ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட ஒரு பங்கின் மதிப்பு ரூ.10 அதற்கு ரூ.4 விண்ணப்பப் பணமாக செலுத்தப்பட்டிருந்தது.
4) அப்பங்குகள் முழுவதும் செலுத்தப்பட்டவைகளாக மறுவெளியீடு செய்யப்பட்டன. அதன் புதிய விலை குறைந்தபட்சமாக ரூ.6(10-4) என நிர்ணயிக்கப்பட வேண்டும்.
5) ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகள் நட்டத்தில் மறுவெளியீடு செய்யப்படும் போது, அந்த நட்டம் ஒறுப்பிழப்பு கணக்கில் பற்று செய்யப்படுகிறது.
6) ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகள் முனைமத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டால், அந்த முனைமத்தொகை பத்திர முனைமக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards