12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Public Exam Model Question Paper with Answer key - 2021
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
நிதிநிலை அறிக்கைகளின் முக்கியத்துவத்தினை எழுதுக (ஏதேனும் மூன்று).
2.
நற்பெயரின் வகைகளை எழுத விளக்குக.
3.
விலகும் கூட்டாளிக்குரிய தொகையை எவ்வகையில் தீர்க்கப்படலாம்?
4.
இலாப நோக்கமற்ற அமைப்புகளின் இயல்புகள் யாவை?
5.
பின்வரும் விவரங்களைக் கொண்டு குறிஞ்சி வரையறு நிறுவனத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. ஆயிரங்களில் | ||
|---|---|---|---|
| 2015-16 | 2016-17 | 2017-18 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 120 | 132 | 156 |
| இதர வருமானம் | 50 | 38 | 65 |
| செலவுகள் | 100 | 135 | 123 |
6.
நற்பெயருக்கான கணக்கியல் செயல்முறை குறித்து சிறு குறிப்பு தரவும்.
7.
8.
ஒரு கூட்டாண்மை நிறுவனம் கடந்த மூன்று வருடங்களாக ஈட்டிய நிகர இலாபங்கள் பின்வருமாறு:
2016: ரூ.20,000; 2017: ரூ.17,000 மற்றும் 2018: ரூ.23,000.
மேற்குறிப்பிட்ட காலம் முழுவதும் நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.80,000. நிறுவனம் கொண்டுள்ள இடரினைக் கருத்தில் கொண்டு, பயன்படுத்தப்பட்ட முதல் மீதான சாதாரண இலாப வீதம் 15% என கருதப்பட்டது. உயர் இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
9.
இராஜன் மற்றும் தேவன் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவர்களின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடவும்.
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
| முதல் கணக்குகள்: | பல்வகைச் சொத்துகள் | 2,20,000 | ||
| இராஜன் | 1,00,000 | |||
| தேவன் | 80,000 | 1,80,000 | ||
| இலாபநட்டப் பகிர்வு கணக்கு | 40,000 | |||
| 2,20,000 | 2,20,000 |
2018, ஏப்ரல் 1 அன்று இராஜன் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ.40,000 மற்றும் 2018, செப்டம்பர் 1 அன்று தேவன் கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.30,000. அவ்வாண்டின் எடுப்புகள் முறையே இராஜன் ரூ.20,000, தேவன் ரூ.10,000 ஆகும். அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.70,000.
10.
ஒறுப்பிழப்பு செய்த பங்குகளின் மறுவெளியீடு என்றால் என்ன?
11.
பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| 31.3.2019 அன்று இறுதி முதல் | 1,90,000 |
| அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | 50,000 |
| அவ்வாண்டின் எடுப்புகள் | 30,000 |
| 1.4.2018 அன்று தொடக்க முதல் | ? |
| 31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் | 40,000 |
12.
______ என்பது தன்னார்வமாக செயல்படும் நபர்களின் சங்கம்.
தனியாள் வணிகம்
கூட்டாண்மை
கூட்டுறவுச் சங்கம்
நிறுமம்
13.
கூட்டாளி விலகளின்பொழுது, நற்பெயர் மதிபெற்றம் அனைத்துக் கூட்டாளிகளின் முதல் கணக்குகளில் _______ பக்கம் மாற்றப்படும்
பற்று
வரவு
இரண்டு பக்கங்களிலும்
இவை எதுவுமில்லை
14.
ஒப்புநோக்கு அறிக்கை எத்தனை பத்திகளைக் கொண்டது?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
15.
______ என்பது தொடர்ச்சியான இடைவெளிகளில் தொடர்ந்து சீராக பெறப்படும் ரொக்க ஓட்டத்தைக் குறிக்கும்
ஆண்டுத்தொகை
கூட்டுத் தொகை
சராசரி தொகை
இவற்றில் எதுவுமில்லை
16.
கட்டடங்கள் கட்டுவதற்காகவும், சொத்துகளை வாங்குவதற்காகவும் பெறப்படும் மானியமானது எவ்வாறு கருதப்படுகிறது?
முதலின வரவு
வருவாயின வரவு
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
17.
எதிர்கால இலாபங்களில் பங்கெடுக்கும் உரிமை பெற புதிய கூட்டாளி பழைய கூட்டாளிகளுக்கு வழங்கும் தொகை _____ என்று அழைக்கப்படுகிறது
நற்பெயர்
மறுமதிப்பீடு
இவை இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
18.
இரட்டைப்பதிவு முறையை கட்டாயமாகப் பின்பற்றாத நிறுவனங்களின் கணக்கேடுகள் அந்நிறுவனத்தின் ________ மற்றும் _______ களின் தேவை மற்றும் விருப்பத்திற்கேற்ப பராமரிக்கப்படுகின்றன.
உரிமையாளர்கள், தொழிலாளர்கள்
உரிமையாளர்கள், வங்கியர்
தொழிலாளர்கள், கணக்காளர்கள்
உரிமையாளர்கள், கணக்காளர்
19.
________ என்பது ஒரு வணிக நிறுவனம் தனது நடப்புப் பொறுப்புகளை எப்போது செலுத்த வேண்டுமோ அப்போது, அதை எதிர்கொள்ளும் திறனைக் குறிக்கிறது.
நடப்பு விகிதம்
விரைவு விகிதம்
உரிமையாளர் விகிதம்
முதல் உந்துதிறன் விகிதம்
20.
கூட்டாண்மையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை
25
50
10
20
21.
_________ விரைவாகவும் துல்லியமாகவும் எடுக்க கணக்கியல் முறை வழிவகை செய்கிறது.
தரவுநிலை மற்றும் தகவல்களை
அறிக்கைகளை
ஊதியப் பட்டியலை
இவற்றில் எதுவுமில்லை
22.
பின்வருவனவற்றில் எது நிதிநிலைப் பகுப்பாய்வின் ஒரு கருவி அல்ல?
போக்குப் பகுப்பாய்வு
பொது அளவு அறிக்கை
ஒப்பீட்டு அறிக்கை
நிர்ணயிக்கப்பட்ட அடக்கவிலையியல்
23.
X, Y மற்றும் Z என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2019, ஏப்ரல் 1 அன்று X இறந்து விட்டார். 2018 இல் இலாபம் ரூ.36,000 என்ற அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்குரிய இலாபத்தில் X ன் பங்கினைக் கண்டறியவும்.
ரூ. 1,000
ரூ. 3,000
ரூ.12,000
ரூ.36,000
24.
முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது______.
நிறுமம்
அரசு
சிறிய அளவிலான தனிஆள் வணிகம்
பன்னாட்டு நிறுவனங்கள்
25.
கூட்டாளி சேர்ப்பின் போது சொத்துகள் மற்றும் பொறுப்புகளை மறுமதிப்பீடு செய்யும் போது ஏற்படும் இலாபம் அல்லது நட்டம் யாருடைய முதல் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?
பழைய கூட்டாளிகள்
புதிய கூட்டாளி
அனைத்து கூட்டாளிகள்
தியாகம் செய்த கூட்டாளிகள்
26.
ஒரு இனம் மற்றொரு இனத்தோடு பெற்றிருக்கும் தொடர்பினை கணிதவியல் முறையில் கூறுவது______.
முடிவு
விகிதம்
மாதிரி
தீர்மானம்
27.
சம்பளக் கணக்கு பின்வரும் எந்த தலைப்பின் கீழ் வரும்?
நேரடி வருமானங்கள்
நேரடி செலவினங்கள்
மறைமுக வருமானங்கள்
மறைமுக செலவினங்கள்
28.
உயில்கொடை ஒரு_____.
வருவாயினச் செலவு
முதலினச் செலவு
வருவாயின வரவு
முதலின வரவு
29.
சராசரி இலாபம் ரூ.25,000 மற்றும் சாதாரண இலாபம் ரூ.15,000 ஆக இருக்கும் போது, உயர் இலாபம் _____.
ரூ.25,000
ரூ.5,000
ரூ.10,000
ரூ.15,000
30.
கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது முதல் மீது வட்டி______.
வழங்கப்படுவதில்லை
வங்கி வீதத்தில் வழங்கப்படும்
ஆண்டுக்கு 5 % வழங்கப்படும்
ஆண்டுக்கு 6% வழங்கப்படும்
31.
32.
பின்வரும் விவரங்களிலிருந்து சிவசாமி & கோ நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கை தயார் செய்யவும்.
| விவரம் | 2016-17 | 2017-18 |
| ரூ. | ரூ. | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,00,000 | 5,00,000 |
| இதர வருமானங்கள் | 1,00,000 | 80,000 |
| செலவுகள் | 3,00,000 | 2,40,000 |
33.
மோகன்ராஜ், நாகராஜ், பாக்கியராஜ் என்ற கூட்டாளிகள் 5 : 3 : 2 எனும் விகிதத்தில் இலாப நட்டங்கள் பகிர்ந்து வந்தனர். 31.12.2014 அன்று நிறுவன ஏடுகளில் காப்பு நிதி ரூ.30,000 மற்றும் பகிர்ந்து தரா நட்டம் ரூ.20,000 உள்ளன. பாக்கியராஜ் 1.1.2015 அன்று விலக்கினார். காப்பு நிதி, பகிர்ந்து தரா நாட்டம் ஆகியவற்றை பழைய கூட்டாளிகளின் கணக்குகளுக்கு மாற்றுவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.
34.
தமிழ் கல்வியில் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| தொடக்க ரொக்க இருப்பு (1.4.2018) | 15,000 | சந்தா பெற்றது | 40,000 |
| வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) | 9,000 | பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் | 7,500 |
| அச்சு மற்றும் எழுதுபொருள் | 2,500 | போக்குவரத்துச் செலவுகள் | 2,750 |
| வட்டி செலுத்தியது | 5,250 | புத்தகங்கள் வாங்கியது | 10,000 |
| முதலீடுகள் விற்றது | 4,000 | காப்பீட்டு முனைமம் செலுத்தியது | 4,000 |
| சிற்றுண்டி வாங்கியது | 2,500 | பல்வகை வரவுகள் | 650 |
| கொடுபட வேண்டிய சம்பளம் | 6,000 | அரசிடமிருந்து பெற்ற மானியம் | 6,000 |
| அறக்கொடை நிதி பெற்றது | 6,000 | சிற்றுண்டி விற்றது | 1,500 |
| ஒளியூட்டுக் கட்டணம் | 3,300 | கட்டடம் மீதான தேய்மானம் | 3,000 |
| வங்கி ரொக்கம் (31.3.2019) | 2,000 |
35.
அருண் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து
(i) புற அக பொறுப்புகள் விகிதம்
(ii) உரிமையாளர் விகிதம் மற்றும்
(iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்.
| விவரம் | ரூ | |
| I | பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. | பங்குதாரர் நிதி | |
| (அ) பங்குமுதல் | ||
| நேர்மைப் பங்குமுதல் | 1,50,000 | |
| 8% முன்னுரிமைப் பங்குமுதல் | 2,00,000 | |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 1,50,000 | |
| 2. | நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்டகால கடன்கள் (9% கடனீட்டுப் பாத்திரங்கள்) | 4,00,000 | |
| 3. | நடப்பு பொறுப்புகள் | |
| (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள் | 25,000 | |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 75,000 | |
| மொத்தம் | 10,00,000 | |
| II | சொத்துகள் | |
| 1. | நீண்ட காலச் சொத்துகள் | |
| நிலைச் சொத்துகள் | 7,50,000 | |
| 2. | நடப்புச் சொத்துகள் | 1,20,000 |
| (அ) சரக்கிருப்பு | 1,20,000 | |
| (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 1,000,000 | |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவர்கள் | 27,500 | |
| (ஈ) இதர நடப்புச் சொத்துகள் | ||
| செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது | 2,500 | |
| மொத்தம் | 10,00,000 | |
36.
ஜான் மற்றும் சுரேஷ் என்ற இரு கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, ஜனவரி 1 அன்று அவர்களின் முதல் கணக்குகளின் இருப்புகள் ஜான் ரூ.60,000 மற்றும் சுரேஷ் 40,000 ஆகும். 2018, ஏப்ரல் 1 அன்று ஜான் கூடுதல் முதலாக ரூ.10.000 கொண்டு வந்தார். அவ்வாண்டில் சுரேஷ் ரூ.50,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். 2018 டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% எனக் கணக்கிடவும்.
37.
அன்பு மற்றும் சங்கர் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3:2 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கணிப்பொறி | 40,000 | ||
| அன்பு | 4,00,000 | வாகனம் | 1,60,000 | |
| சங்கர் | 3,00,000 | 7,00,000 | சரக்கிருப்பு | 4,00,000 |
| இலாப நட்ட க/கு | 1,20,000 | கடனாளிகள் | 3,60,000 | |
| கடனீந்தோர் | 1,20,000 | வங்கி ரொக்கம் | 40,000 | |
| தொழிலாளர் ஈட்டு நிதி | 60,000 | |||
| 10,00,000 | 1,40,000 |
பின்வரும் விவரங்கள் அடிப்படையில் இராஜேஷ் என்பவர் 1/5 பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார்.
(i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.75,000 என மதிப்பிடப்பட்டது. இராஜேஷ் நற்பெயரில் தன்னுடைய பங்கினை ரொக்கமாகக் கொண்டு வந்தார்.
(ii) இராஜேஷ் ரூ.1,50,000 முதலாகக் கொண்டு வந்தார்.
(iii) வாகனம் ரூ.2,00,000, சரக்கிருப்பு ரூ.3,80,000, கடனாளிகள் ரூ.3,50,000 என மதிப்பிடப்பட்டது.
(iv) எதிர்பார்க்கப்படும் தொழிலாளர் ஈட்டு நிதி மீதான கோரிக்கை ரூ.10,000.
(v) பதிவுறா முதலீடு ரூ.5,000 கணக்கில் கொண்டுவரப்பட்டது.
மறுமதிப்பீடு கணக்கு, முதல் கணக்கு மற்றும் இராஜேஷின் சேர்ப்பிற்கு பின்வரும் இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.
38.
ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் முத்து, முரளி மற்றும் மனோஜ் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபத்தினை 3 : 1 : 2 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | இயந்திரம் | 45,000 | ||
| முத்து | 20,000 | அறைகலன் | 5,000 | |
| முரளி | 25,000 | கடனாளிகள் | 30,000 | |
| மனோஜ் | 20,000 | 65,000 | சரக்கிருப்பு | 20,000 |
| பொதுக்காப்பு | 6,000 | |||
| கடனீந்தோர் | 29,000 | |||
| 1,00,000 | 1,00,000 |
பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு 2018, டிசம்பர் 31 அன்று மனோஜ் விலகுகிறார்:
(i) முத்துவும் முரளியும் இலாப நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
(ii)சொத்துகள் பின்வருமாறு மதிப்பீடு செய்யப்படவேண்டும்.
இயந்திரம் ரூ.43,000, சரக்கிருப்பு ரூ.27,000, கடனாளிகள் ரூ.28,000.
(iii) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது.
(iv) மனோஜ் -க்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை உடனடியாக செலுத்தப்படவில்லை.
மனோஜ் விலகலுக்குப் பின் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டிய தேவையான பேரேட்டுக் கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினைத் தயாரிக்கவும்.
39.
செல்வம் என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
| விவரம் | 1-1-2018 ரூ. |
31.12.2018 ரூ. |
|---|---|---|
| இயந்திரம் | 60,000 | 60,000 |
| வங்கி ரொக்கம் | 25,000 | 33,000 |
| பற்பல கடனாளிகள் | 70,000 | 1,00,000 |
| சரக்கிருப்பு | 45,000 | 22,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 20,000 | 38,000 |
| வங்கிக் கடன் | 45,000 | 45,000 |
| பற்பல கடனீந்தோர் | 25,000 | 21,000 |
கூடுதல் தகவல்கள்:
| ரூ. | ரூ. | ||
|---|---|---|---|
| ரொக்க விற்பனை | 20,000 | கடன் விற்பனை | 1,80,000 |
| ரொக்கக் கொள்முதல் | 8,000 | கடன் கொள்முதல் | 52,000 |
| கூலி | 6,000 | சம்பளம் | 23,500 |
| விளம்பரம் | 7,000 | வங்கிக் கடன்மீது வட்டி | 4,500 |
| எடுப்புகள் | 60,000 | கூடுதல் முதல் | 21,000 |
சரிக்கட்டுதல்கள்:
இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.
40.
பின்வரும் இருப்பு நிலைக்குறிப்பு பியர்ல் என்பவரின் ஏடுகளிலிருந்து 1-4-2018-ம் நாளன்று தயார் செய்யப்பட்டது.
அவ்வாண்டில் நடைபெற்ற நடவடிக்கைகள் பின்வருமாறு
| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|
| முதல் பற்பல கடனீந்தோர்: | 1,60,000 | கட்டடம் | 40,000 |
| மாயா க/கு | 20,000 | அறைகலன் | 20,000 |
| சரக்கிருப்பு | 10,000 | ||
| பற்பல கடனாளிகள்: | |||
| பீட்டர் | 20,000 | ||
| கை ரொக்கம் | 30,000 | ||
| வாங்கி ரொக்கம் | 60,000 | ||
| 1,80,000 | 1,80,000 |
(அ) கூலி ரொக்கமாக வாங்கியது ரூ. 4,000
(ஆ) சம்பளம் காசோலை மூலம் வழங்கியது ரூ. 10,000
(இ) ரொக்கக் கொள்முதல் மேற்கொண்டது ரூ. 4,000
(ஈ) யாழினியிடம் கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ. 30,000
(உ) ஜோதிக்கு கடனுக்கு சரக்கு விற்றது ரூ. 40,000
(ஊ) யாழினிக்கு NEFT மூலம் செலுத்தியது ரூ. 6,000
(எ) பீட்டரிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ. 10,000
(ஏ) ரொக்க விற்பனை மேற்கொண்டது ரூ. 4,000
(ஐ) கட்டடம் மீதான தேய்மானம் 20%
(ஒ) 31-3-2019 அன்றைய இறுதி சரக்கிருப்பு ரூ. 9,000
31-3-2019 நாளேடு முடிவடையும் ஆண்டிற்கான வியாபார மற்றும் இலாப நட்டக் கணக்கையும், இருப்புநிலைக் குறிப்பையும் Tally உதவியுடன் தயார் செய்யவும்.
41.
மயிலாடுதுறை மனமகிழ் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| தொடக்க ரொக்க இருப்பு | 15,000 | காவலாளிக்குச் சம்பளம் கொடுத்தது | 12,000 |
| தொடக்க வங்கி இருப்பு | 25,000 | மன்ற ஆண்டு விழாச் செலவுகள் | 15,000 |
| நன்கொடைகள் பெற்றது | 48,000 | ஒளியூட்டுச் செலவுகள் | 16,500 |
| பழைய உபகரணங்கள் விற்றது | 26,000 | பொழுதுபோக்குச் செலவுகள் | 13,500 |
| சிற்றுண்டிச் செலவுகள் | 13,000 | பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது | 5,000 |
| மன்ற ஆண்டு விழா வசூல் | 18,000 | அறக்கொடை நாடகக்காட்சி செலவுகள் | 3,000 |
| டென்னிஸ் மைதான கட்டுமானச் செலவுகள் | 7,000 | முதலீடுகள் விற்றது | 12,000 |
| அறக்கொடை நாடகக்காட்சி வசூல் | 4,000 | இறுதி ரொக்க இருப்பு | 12,000 |
| வாடகை செலுத்தியது | 1,000 |
42.
43.
பொது வெளியீடு என்றால் என்ன?
44.
இலாபநோக்கமற்ற அமைப்புகள் எந்த கணக்குகளையெல்லாம் தயாரிக்கின்றன?
45.
கடன் வசூலிப்பு காலம் என்றால் என்ன?
46.
கூட்டாளி சேர்ப்பு என்றால் என்ன? அவர் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகிறார்?
47.
வட்டிக்குரிய காலம் என்றால் என்ன?
48.
நவீன், ரவி மற்றும் குமார் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை முறையே 1/2, 1/4 மற்றும் 1/4 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். குமார் என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார் மற்றும் அவருடைய பங்கை நவீன் மற்றும் ரவி சமமாக எடுத்துக் கொண்டார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.
49.
நடைமுறை முதல் என்றால் என்ன?
50.
கீழ்க்காணும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| ஆண்டின் தொடக்க முதல் (ஏப்ரல் 1, 2018) | 5,00,000 |
| ஆண்டின் இறுதி முதல் (மார்ச் 31, 2019) | 8,50,000 |
| அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | 1,20,000 |
| அவ்வாண்டில் எடுப்புகள் | 70,000 |
51.
கணக்கியல் தகவல் அமைப்பு என்றால் என்ன?
52.
பின்வரும் தகவல்களிலிருந்து மொத்த இலாபம் கணக்கிடவும்:
விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.1,00,000, விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.80,000 மற்றும் கொள்முதல் ரூ.62,500.
53.
கூட்டாண்மை நிறுவனத்தில் நற்பெயரை மதிப்பிடும் ஏதேனும் இரண்டு சூழ்நிலைகளைத் தரவும்.
54.
ஹரிணி நிறுமத்தின் கடன் விற்பனை மூலம் பெற்ற வருவாய் தொகை ரூ.9,60,000. அந்த கணக்காண்டின் இறுதியில் இதன் வியாபார கடனாளிகள் மற்றும் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு தொகை முறையே ரூ.1,00,000 மற்றும் ரூ.60,000. கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகளின் சுழற்சி விகிதம் மற்றும் கடன் வசூலிப்புக் காலம் (மாதங்களில்) கணக்கிடவும்.
1.
நிதிநிலை அறிக்கைகள் வியாபார நிறுவனத்தின் இயக்க முடிவுகள் மற்றும் நிதிநிலையை வெளிப்படுத்துகின்றன. பல்வேறு பயனீட்டாளர்களுக்கான நிதிநிலை அறிக்கைகளின் முக்கியத்துவம் பின்வருமாறு:
1) மேலாண்மைக்கு : நிதி நிலை அறிக்கைகளானது முடிவுகளை எடுப்பதற்கும் மற்றும் பல்வேறு துறைகளில் வணிக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் தேவையானத் தகவல்களை மேலாண்மைக்குத் தருகிறது.
2) பங்குதாரர்களுக்கு: வணிக நிறுவனம் வளர்ச்சிக்கு தேவையான ஆதாரங்களைக் கொண்டுள்ளதா மற்றும் தொடர்ந்து பங்குதாரராக நீடிப்பதா என்பதை முடிவு செய்யவும் பங்குதாரர்களுக்கு நிதிநிலை அறிக்கைகள் உதவியாக இருக்கின்றன.
3) எதிர்கால முதலீட்டாளர்களுக்கு: பத்திரங்களை மதிப்பீடு செய்து அவற்றை பிற தொழிலமைப்புகளின் பத்திரங்களோடு ஒப்பீடு செய்து அதனடிப்படையில் தங்கள் முதலீடுகள் மீதான முடிவினை எடுப்பதற்கு நிதிநிலை அறிக்கைகள் பயனுள்ளதாக இருக்கின்றன.
2.
நற்பெயரை, வாங்கப்பட்ட நற்பெயர் மற்றும் தன்னுருவாக நற்பெயர் என வகைப்படுத்தலாம்.
(i) வாங்கப்பட்ட அல்லது பெறப்பட்ட நற்பெயர்:
நற்பெயரானது, ரொக்கம் அல்லது பொருளைச் செலுத்தி பெறப்பட்டிருந்தால் அது வாங்கப்பட்ட அல்லது பெறப்பட்ட நற்பெயர் என்றழைக்கப்படுகிறது. ஒரு நிறுவனம் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனத்தை வாங்கும்போது அதற்காகச் செலுத்தப்படும் தொகையானது வங்கப்பெறும் நிறுவனத்தின் நிகரச் சொத்துகளை (சொத்துகள் பொறுப்புகள்) விட கூடுதலாக இருக்கலாம்
(ii) தன்னுருவாக்க நற்பெயர்:
தொழிலின் சிறப்பம்சங்களான சாதகமான இடவமைவு, நம்பகமான வாடிக்கையாளர்கள் போன்ற சிறப்பியல்புகளை அடிப்படையாகக் கொண்டு, நிறுவனமே தானாக உருவாக்கிக் கொள்ளும் நற்பெயர் தன்னுருவாக்க நற்பெயர் ஆகும். இவ்வகை தன்னுருவாக்க நற்பெயர் கணக்கேடுகளில் பதிவு செய்யப்படக்கூடாது
3.
(i) கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி ஒருவர் விலகும் போது, நற்பெயர், பகிர்ந்து தரா இலாபம் அல்லது நாட்டம், மறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நாட்டம், கூட்டாளியின் ஊதியம் ஆகியவற்றை சரிகட்டிய பிறகு கிடைக்கக்கூடிய முதல் கணக்கின் இருப்பு அக்கூட்டாளிக்கு செலுத்தப்பட வேண்டும்
(ii) கூட்டாண்மை ஒப்பாவனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அவருக்கு சேர வேண்டிய தொகையைத் தீர்வுச் செய்ய வேண்டும். பின்வரும் வழிகளில் விலகும் கூட்டாளிக்கு செலுத்த வேண்டிய தொகை தீர்க்கப்படலாம்
1. அவருக்கு சேரவேண்டிய முழுத் தொகையையும் ரொக்கமாக உடனடியாக செலுத்தலாம்
2. மொத்தத் தொகையும் கூட்டாளியின் கடன் கணக்கிற்கு மாற்றி விடலாம்
3. பாதித் தொகையை உடனடியாக ரொக்கமாகவும் மீதித் தொகையை கடன் கணக்கிற்கு மாற்றி விடலாம்
4.
1) இலாப நோக்கம் இல்லாமல் செயல்படும் அமைப்புகளே இலாப நோக்கற்ற அமைப்புகள் எனப்படும்.
2) அவற்றின் முக்கிய நோக்கம் ஒரு குறிப்பிட்ட குழுவிற்கோ அல்லது பெரும்பாலான பொதுமக்களுக்கோ சேவை செய்வதாகும்.
3) பொதுவாக அவை வணிகம் மற்றும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளவதில்லை.
4) இவைகளின் முக்கிய வருமான ஆதாரம் உறுப்பினர் சந்தா, நன்கொடைகள், மானியம் மற்றும் உயில்கொடை போன்றவைகளை உள்ளடக்கியதாகும்.
5.
| விவரம் | ஆயிரங்களில் | போக்கு சதவீதங்கள் | ||||
|---|---|---|---|---|---|---|
| 2015-16 | 2016-17 | 2017-18 | 2015-16 | 2016-17 | 2017-18 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 120 | 132 | 156 | 100 | 110 | 130 |
| கூட்டுக: இதர வருமானம் | 50 | 38 | 65 | 100 | 76 | 130 |
| மொத்தம் | 170 | 170 | 221 | 100 | 100 | 130 |
| கழிக்க: செலவுகள் | 100 | 135 | 123 | 100 | 135 | 123 |
| இலாபம் | 70 | 35 | 98 | 100 | 50 | 140 |
குறிப்பு: விற்பனை மூலம் பெற்ற வருவாயின் போக்கு சதவீதங்கள் கணக்கிடுதல்
2016-17: \(\frac {132}{120}\) x 100 = 110%
2017-18: \(\frac {156}{120}\) x 100 = 130%
6.
கூட்டாளி சேர்க்கையின்போது நற்பெயருக்கான கணக்கியல் செயல்முறைகள் கீழே விவாதிக்கப்பட்டுள்ளது
(i) புதிய கூட்டாளி நற்பெயருக்கான ரொக்கம் அல்லது சொத்து கொண்டு வரும் போது
(ii) புதிய கூட்டாளி நற்பெயருக்கான ரொக்கம் அல்லது சொத்து ஏதும் கொண்டு வராத போது
(iii) புதிய கூட்டாளி நற்பெயருக்கான ஒரு பகுதியை மட்டும் ரொக்கம் அல்லது சொத்துக்களாக கொண்டு வரும் போது
(iv) பழைய நற்பெயர்
(i) புதிய கூட்டாளி நற்பெயருக்கான ரொக்கம் அல்லது சொத்து கொண்டு வரும் போது:
புதிய கூட்டாளி முதல் தொகையோடு, கூடுதலாக நற்பெயருக்காகவும் பணம் கொண்டுவரும் போது, அது பழைய கூட்டாளிகளின் தியாக விகிதத்தின்படி அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
(ii) புதிய கூட்டாளி நற்பெயருக்கான ரொக்கம் அல்லது சொத்து ஏதும் கொண்டு வராத போது:
புதிய கூட்டாளி நற்பெயருக்காக பணம் அல்லது சொத்துக்கள் ஏதும் கொண்டு வராத போது, அவருடைய நற்பெயருக்கான பங்கினை கூட்டாளிகளின் முதல் கணக்கில் சரிக்கட்ட வேண்டும்
(iii) புதிய கூட்டாளி நற்பெயருக்கான ஒரு பகுதியை மட்டும் ரொக்கம் அல்லது சொத்துக்களாக கொண்டு வரும் போது:
சில நேரங்களில் புதிய கூட்டாளி நற்பெயருக்கென ஒரு பகுதியை மட்டும் ரொக்கம் அல்லது சொத்துக்களாகக் கொண்டு வருவதுண்டு, அந்நிலைகளில், ரொக்கம் அல்லது சொத்துக்கள் குறிப்பிட்ட கணக்கில் பற்று வைக்கப்படுகிறது. கொண்டு வராத தொகை புதிய கூட்டாளியின் முதல் கணக்கில் பற்று செய்யப்படுகிறது. இத்தொகையானது பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது
(iv) பழைய நற்பெயர்:
நற்பெயர் ஏற்கனவே கணக்கேடுகளில் இருந்தால், கூட்டாளி சேர்க்கையின் போது கூட்டாளிகள் முடிவெடுத்தால் அதனை போக்கெழுத பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கில் அல்லது நடப்புக் கணக்கில் பழைய இலாப விகிதத்தில் மாற்றிட வேண்டும்.
7.
8.
= \(\frac { 20,000+17,000+23,000 }{ 3 } = \frac { 60,000 }{ 3 }\)
= ரூ.20,000
சாதாரண இலாபம் = பயன்படுத்தப்பட்ட முதல் x சாதாரண இலாப விகிதம்
= 80,000 x 15%
= ரூ.12,000
உயர் இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம்
= 20,000 - 12,000
= ரூ.8,000
நற்பெயர் = உயர் இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
= ரூ.8,000 x 2 = ரூ.16,000
நற்பெயர் = ரூ.16,000
9.
| விவரம் | இராஜன் ரூ. | தேவன் ரூ. | ||
|---|---|---|---|---|
| 2018, டிசம்பர் 31 அன்று முதல் | 1,00,000 | 80,000 | ||
| கூட்டுக: எடுப்புகள் | 20,000 | 10,000 | ||
| 1,20,000 | 90,000 | |||
| கழிக்க: கூடுதல் முதல் | 40,000 | 30,000 | ||
| இலாபம் ஏற்கனவே வரவு வைத்தது | 20,000 | 60,000 | 10,000 | 40,000 |
| 2018 ஜனவரி 1 அன்று முதல் | 60,000 | 50,000 | ||
குறிப்பு: இலாபம் வரவு வைத்து = ஈட்டிய இலாபம் ரூ.70,000 - இருப்புநிலைக் குறிப்பின் படியான இலாப இருப்பு = ரூ.40,000
இந்தத் தொகை 2:1 என்ற இலாபப் பகிர்வு விகிதத்தில் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கிறது.
இராஜன் 30,000 x \(\frac 23\) = ரூ.20,000
தேவன் 30,000 x \(\frac 13\) = ரூ. 10,000
முதல் மீது வட்டி கணக்கிடுதல்:
இராஜன்:
தொடக்க முதல் (ஓராண்டு) = 60,000 x \(\frac {6}{100}\) = ரூ.3,600
கூடுதல் முதல் (9 மாதங்கள்) = 40,000 x \(\frac {6}{100}\) x \(\frac {9}{12}\) = ரூ.1,800
முதல் மீது வட்டி ________
(ஏப்ரல் - டிசம்பர்) = ரூ. 5,400
________
தேவன்:
தொடக்க முதல் (ஓராண்டு) = 50,000 x \(\frac {6}{100}\) = ரூ.3,000
கூடுதல் முதல் (4 மாதங்கள்) = 30,000 x \(\frac {6}{100}\) x \(\frac {4}{12}\) = ரூ.600
________
முதல் மீது வட்டி = ரூ.3,600
(செப்டம்பர் - டிசம்பர்) ________
10.
1) ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகள் நிறுமத்தால் மறுவெளியீடு செய்யப்படலாம். அப்பங்குகள் எந்த விலையிலும் மறுவெளியீடு செய்யலாம்.
2) ஆனால், வெளியீட்டு விலை ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகளின் செலுத்தப் பெறாத தொகையைக் காட்டிலும் குறைவாக இருக்கக் கூடாது.
3) உதாரணமாக, ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட ஒரு பங்கின் மதிப்பு ரூ.10 அதற்கு ரூ.4 விண்ணப்பப் பணமாக செலுத்தப்பட்டிருந்தது.
4) அப்பங்குகள் முழுவதும் செலுத்தப்பட்டவைகளாக மறுவெளியீடு செய்யப்பட்டன. அதன் புதிய விலை குறைந்தபட்சமாக ரூ.6(10-4) என நிர்ணயிக்கப்பட வேண்டும்.
5) ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகள் நட்டத்தில் மறுவெளியீடு செய்யப்படும் போது, அந்த நட்டம் ஒறுப்பிழப்பு கணக்கில் பற்று செய்யப்படுகிறது.
6) ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகள் முனைமத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டால், அந்த முனைமத்தொகை பத்திர முனைமக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
11.
| விவரம் | ரூ. |
|---|---|
| இறுதி முதல் (31.3.2019) | 1,90,000 |
| கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள் | 30,000 |
| 2,20,000 50,000 |
|
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | |
| சரிக்கட்டப்பட்ட இறுதி முதல் | 1,70,000 2,10,000 |
| கழிக்க: தொடக்க முதல் (1.4.2018) (இருப்புக் கட்டும் தொகை) | |
| 31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் | (-) 40,000 |
12.
(d)
நிறுமம்
13.
(b)
வரவு
14.
(d)
ஐந்து
15.
(a)
ஆண்டுத்தொகை
16.
(a)
முதலின வரவு
17.
(a)
நற்பெயர்
18.
(d)
உரிமையாளர்கள், கணக்காளர்
19.
(a)
நடப்பு விகிதம்
20.
(b)
50
21.
(a)
தரவுநிலை மற்றும் தகவல்களை
22.
(d)
நிர்ணயிக்கப்பட்ட அடக்கவிலையியல்
23.
(b)
ரூ. 3,000
24.
(c)
சிறிய அளவிலான தனிஆள் வணிகம்
25.
(a)
பழைய கூட்டாளிகள்
26.
(b)
விகிதம்
27.
(d)
மறைமுக செலவினங்கள்
28.
(d)
முதலின வரவு
29.
(c)
ரூ.10,000
30.
(a)
வழங்கப்படுவதில்லை
31.
(c)
32.
| விவரம் | 2016-17 | 2017-18 | தொகையின் கூடுதல் (+)அல்லது குறைவு (-) | சதவீதத்தின் கூடுதல் (+)அல்லது குறைவு (-) |
| ரூ. | ரூ. | |||
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,00,000 | 5,00,000 | +1,00,000 | +25 |
| கூட்டுக:இதர வருமானங்கள் | 1,00,000 | 80,000 | -20,000 | -20 |
| மொத்த வருமானங்கள் | 5,00,000 | 5,80,000 | 80,000 | +16 |
| கழிக்க:செலவுகள் | 3,00,000 | 2,40,000 | -60,000 | -20 |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம் | 2,00,000 | 3,40,000 | 1,40,000 | 70% |
33.
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 1.1.2015 | காப்பு நிதி க/கு | ப | 30,000 | ||
| மோகன்ராஜ் முதல் க/கு | 15,000 | ||||
| நாகராஜ் முதல் க/கு | 9,000 | ||||
| பாக்கியராஜ் முதல் க/கு | 6,000 | ||||
| (காப்பு நிதி பழைய கூட்டாளிகளின் முதல் கணக்குகளுக்கு பழைய விகிதத்தில் மாற்றப்பட்டது) | |||||
| 1.1.2015 | மோகன்ராஜ் முதல் க/கு | ப | 10,000 | ||
| நாகராஜ் முதல் க/கு | ப | 6,000 | |||
| பாக்யராஜ் முதல் க/கு | ப | 4,000 | |||
| இலாப நட்டக் க/கு | 20,000 | ||||
| (பகிர்ந்து தரா நட்டம் பழைய கூட்டாளிகளின் முதல் கணக்குக்கு மாற்றப்பட்டது) |
34.
| பெறுதல்கள் | ரூ. | செலுத்தல்கள் | ரூ. |
| இருப்பு கீ/கொ | இருப்பு கீ/கொ | ||
| ரொக்க இருப்பு | 15,000 | வங்கி மேல்வரைப்பற்று | 9,000 |
| முதலீடுகள் விற்றது | 4,000 | அச்சு மற்றும் எழுதுபொருள் | 2,500 |
| அறக்கட்டளை நிதி வரவுகள் | 6,000 | வட்டி செலுத்தியது | 5,250 |
| சந்தா பெற்றது | 40,000 | சிற்றுண்டி வாங்கியது | 2,500 |
| இதர வரவுகள் | 650 | ஒளியூட்டுக் கட்டணம் | 3,300 |
| அரசு மானியம் பெற்றது | 6,000 | பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் | 7,500 |
| சிற்றுண்டி விற்றது | 1,500 | போக்குவரத்துச் செலவுகள் | 2,750 |
| புத்தகங்கள் வாங்கியது | 10,000 | ||
| காப்பீட்டு முனைமம் செலுத்தியது | 4,000 | ||
| இருப்பு கீ/இ | |||
| வங்கி ரொக்கம் | 2,000 | ||
| கைரொக்கம் | 24,350 | ||
| 73,150 | 73,150 |
குறிப்பு கொடுப்பட வேண்டிய சம்பளம் மற்றும் தேய்மானம் ரொக்கம் சாரா நடவடிக்கைகளாக இருப்பதால் இவை இரண்டும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் இடம் பெறாது.
35.

நீண்டகாலக் கடன் = 9% கடனீட்டுப் பத்திரங்கள் = ரூ.4,00,000
பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + முன்னுரிமைப் பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி
= 1,50,000+2,00,000+1,50,000=ரூ.5,00,000
\(\therefore \) புற அக பொறுப்புகள் விகிதம் =
\(\cfrac { 4,00,000 }{ 5,00,000 } =0.8:1\)
(ii)

(iii)

= 8%முன்னுரிமைப் பங்குமுதல் +9% கடனீட்டுப் பத்திரங்கள்
= 2,00,000+4,00,000=ரூ 6,00,000
நேர்மைப் பங்குதாரர் நிதி = 1,50,000+,50,000=ரூ.3,00,000
\(\therefore \) முதல் உந்து திறன் விகிதம் = \(\cfrac { 6,00,000 }{ 3,00,00 } =2:1\)
36.
முதல் மீதான வட்டி கணக்கிடுதல்:
ஜான் முதல் மீது வட்டி:
முதல் மீது வட்டி = முதல் தொகை x வட்டிக்குரிய காலம்
முதல் மீது வட்டி
சுரேஷ் முதல் மீது வட்டி:
குறிப்பு: சுரேஷ் கொண்டு வந்த முதல் எந்த நாள் கொடுக்காததால் முதல் மீது வட்டி சராசரி காலமாக 6 மாதங்களுக்கு கணக்கிட வேண்டும்
37.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 20,000 | வாகனம் க/கு | 40,000 | |
| கடனாளிகள் க/கு | 10,000 | பதிவுறா முதலீடு க/கு | 5,000 | |
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| அன்பு முதல் க/கு (3/5) | 9,000 | |||
| சங்கர் முதல் க/கு (2/5) | 6,000 | 15,000 | 45,000 |
| விவரம் | அன்பு ரூ. |
சங்கர் ரூ. |
ராஜேஷ் ரூ. |
விவரம் | அன்பு ரூ. |
சங்கர் ரூ. |
ராஜேஷ் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/கு | 5,20,000 | 3,80,000 | 1,50,000 | இருப்பு கீ/கொ | 4,00,000 | 3,00,000 | - |
| வங்கி க/கு | - | - | 1,50,000 | ||||
| இலாபநட்ட க/கு | 72,000 | 48,000 | 1,50,000 | ||||
| தொழிலாளர் ஈட்டு | - | ||||||
| நிதி க/கு (60,000-10,000) |
30,000 | 20,000 | - | ||||
| வங்கி க/கு (நற்பெயர் பங்கு) |
9,000 | 6,0000 | - | ||||
| 5,20,000 | 3,80,000 | 1,50,000 | 5,20,000 | 3,80,000 | 1,50,000 | ||
| 5,20,000 | 3,80,000 | 1,50,000 |
நிறுவனத்தின் நற்பெயர் = 75,5000
நற்பெயரில் இராஜேஷின் பங்கு = 75,000 x \(\frac { 1 }{ 5 } \)
இத்தொகை அன்பு மற்றும் சங்கர் அவர்கள் அவர்களின் தியாக விகிதம் 3 : 2 இல் பகிர்ந்து கொள்ளப்படவேண்டும்
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 40,000 | இருப்பு கீ/இ | 2,05,000 |
| இராஜேஷ் முதல் க/கு | 1,50,000 | ||
| அன்பு முதல் க/கு | 9,000 | ||
| சங்கர் முதல் | 6,000 | ||
| 2,05,000 | 2,05,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துக்கள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கணிப்பொறி | 40,000 | |||
| அன்பு | 5,20,000 | வாகனம் | 1,60,000 | ||
| சங்கர் | 3,80,000 | கூட்டுக: மதிப்பேற்றம் | 40,000 | 2,00,000 | |
| ராஜேஷ் | 1,50,000 | 10,50,000 | சரக்கிருப்பு | 4,00,000 | |
| கடனீந்தார் | 1,20,000 | கழிக்க: தேய்மானம் | 20,000 | 3,80,000 | |
| தொழிலாளர் ஈட்டுநிதி | 10,000 | கடனாளிகள் | 3,60,000 | ||
| (60,000 - 50,000) | கழிக்க: மதிப்பு குறைவு | 10,000 | 3,50,000 | ||
| வங்கி | 2,05,000 | ||||
| பதிவுறா முதலீடு | 5,000 | ||||
| 11,80,000 | 11,80,000 |
38.
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|---|
| இயந்திரம் க/கு | 2,000 | சரக்கிருப்பு க/கு | 7,000 | |
| கடனாளிகள் க/கு | 2,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம் | ||||
| முத்து முதல் க/கு | 1,500 | |||
| முரளி முதல் க/கு | 500 | |||
| மனோஜ் முதல் க/கு | 1,000 | 3,000 | ||
| 7,000 | 7,000 |
| விவரம் | முத்து ரூ |
முரளி ரூ |
மனோஜ் ரூ |
விவரம் | முத்து ரூ |
முரளி ரூ |
மனோஜ் ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| மனோ ஜ் முதல் க/கு | 3,000 | 7,000 | - | இருப்பு கீ/கொ | 20,000 | 25,000 | 20,000 |
| மனோஜ் கடன் க/கு | 33,000 | பொதுக்காப்பு க/கு | 3,000 | 1,000 | 2,000 | ||
| இருப்பு கீ/இ | 21,500 | 19,500 | - | மறுமதிப்பீட்டுக் க/கு | 1,500 | 500 | 1,000 |
| (இலாபம்) | |||||||
| முத்து முதல் க/கு | - | - | 3,000 | ||||
| மனோஜ் முதல் க/கு | - | - | 7,000 | ||||
| 24,500 | 26,500 | 33,000 | 24,500 | 26,500 | 33,000 | ||
| இருப்பு கீ/கொ | 21,500 | 19,500 | - |
குறிப்பு:
(i) ஆதாய விகிதம் கணக்கிடுதல்
ஆதாய பங்கு = புதிய பங்கு – பழைய பங்கு
முத்து = \(\cfrac { 3 }{ 5 } -\cfrac { 3 }{ 6 } =\cfrac { 18-15 }{ 30 } =\cfrac { 3 }{ 30 } \)
முரளி = \(\cfrac { 2 }{ 5 } -\cfrac { 1 }{ 6 } =\cfrac { 12-5 }{ 30 } =\cfrac { 7 }{ 30 } \)
எனவே, முத்து மற்றும் முரளியின் ஆதாய விகிதம் = 3:7
(ii) நற்பெயருக்கான சரிக்கட்டுதல்
நிறுவனத்தின் நற்பெயர் = ரூ.30,000
நற்பெயரில் மனோஜின் பங்கு = \(30,000\times \cfrac { 2 }{ 6 } \) = ரூ 10,000
இது முத்து மற்றும் முரளியின் முதல் கணக்கில் 3:7 என்ற ஆதாய விகிதத்தில் சரிக்கட்டப்பட வேண்டும்.அதாவது,
முத்து \(10,000\times \cfrac { 3 }{ 10 } \)= ரூ3,000
முரளி \(10,000\times \cfrac { 7 }{ 10 } \) = ரூ 7,000
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | இயந்திரம் | 45,000 | |||
| முத்து | 21,500 | கழிக்க: தேய்மானம் | 2,000 | 43,000 | |
| முரளி | 19,500 | 41,000 | அறைகலன் | 5,000 | |
| மனோஜ் கடன் க/கு | 33,000 | கடனாளிகள் | 30,000 | ||
| கடனீந்தோர் | 29,000 | கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு | 2,000 | 28,000 | |
| சரக்கிருப்பு | 20,000 | ||||
| கூட்டுக: மதிப்பேற்றம் | 7,000 | 27,000 | |||
| 1,03,000 | 1,03,000 |
39.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| வங்கிக்கடன் | 45,000 | இயந்திரம் | 60,000 |
| பற்பல கடனீந்தோர் | 25,000 | வங்கி ரொக்கம் | 25,000 |
| தொடக்க முதல் | 1,50,000 | பற்பல கடனாளிகள் | 70,000 |
| (இருப்புக்கட்டும் தொகை) | சரக்கிருப்பு | 45,000 | |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 20,000 | ||
| 2,20,000 | 2,20,000 |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 45,000 | விற்பனை | |||
| கொள்முதல் | ரொக்கம் | 20,000 | |||
| ரொக்கம் | 8,000 | கடன் | 1,80,000 | 2,00,000 | |
| கடன் | 52,000 | 60,000 | இறுதிச் சரக்கிருப்பு | 22,000 | |
| கூலி | 6,000 | ||||
| மொத்த இலாபம் கீ/இ | 1,11,000 | ||||
| 2,22,000 | 2,22,000 | ||||
| விளம்பரம் | 7,000 | மொத்த இலாபம் கீ/கொ | 1,11,000 | ||
| சம்பளம் | 23,500 | ||||
| இயந்திரம் மீது தேய்மானம் 10% | 6,000 | ||||
| ஐயக்கடன் ஒதுக்கு 1% | 1,000 | ||||
| வங்கிக்கடன் மீது வட்டி | 4,500 | ||||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 69,000 | ||||
| 2,46,000 | 2,46,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் | 1,50,000 | நிலம் மற்றும் கட்டடம் | 60,000 | ||
| கூட்டுக: நிகர இலாபம் | 69,000 | கழிக்க:தேய்மானம் 10% | 6,000 | 54,000 | |
| 2,19,000 | வங்கி ரொக்கம் | 33,000 | |||
| கூட்டுக: கூடுதல் முதல் | 21,000 | பற்பல கடனாளிகள் | 1,00,000 | ||
| 2,40,000 | |||||
| கழிக்க:எடுப்புகள் | 60,000 | 1,80,000 | கழிக்க: ஐயக்கடன் ஒதுக்கு 1% | 1,000 | 99,000 |
| வங்கி கடன் | 45,000 | இறுதிச் சரக்கிருப்பு | 22,000 | ||
| பற்பல கடனாளிகள் | 21,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 38,000 | ||
| 5,01,000 | 2,46,000 |
40.
பின்வரும் படிநிலைகளை பின்பற்றி Tally.ERP,9-ல் நடவடிக்கைகளை பதிவு செய்யவும்.
(i) நிறுவனத்தை உருவாக்க (To create Company) :
Company Info > Create Company பியர்ல் என பெயரை குறிப்பிட்டு மற்ற அனைத்து விவரங்களையும் மாற்றம் செய்யலாம் 'ஆம்' (Yes) என ஏற்கவும்.
(ii) கணக்குகள் மட்டும் பராமரிக்க (Maintain accounts only) :
Gateway of Tally > F11 Accounting features > General > Maintain accounts only: Yes > Accept yes.
(iii) ஆரம்ப இருப்புகளுடன் பேரேட்டு கணக்குகளை உருவாக்க :
Gateway of Tally > Masters > Accounts Info > Ledger > (Create) :
| Creation of | Name | Under | Opening balance | Accept |
| Pearl's Capital A /c | Pearl's Capital A/c | Capital Account | 1,60,000 | Yes |
| Maya A/c(Sundry creditors) | Maya A/c | Sundry Creditors | 20,000 | Yes |
| Buildings A/c | Buildings A/c | Fixed Assets | 40,000 | Yes |
| Furniture A/c | Furniture A/c | Fixed Assets | 20000 | Yes |
| Opening stock | Opening stock | Stock-in-Hand | 10,000 | Yes |
| Peter A/c (Sundry debtors) | Peter A/c | Sundry Debtors | 20000 | Yes |
| Cash in hand | Cash | Cash-in-Hand | 30,000 | Yes |
| Cash at bank | Bank | Bank Accounts | 60,000 | Yes |

குறிப்பு : ரொக்கக் கணக்கு ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள பேரேடானதால் இதை உருவாக்க வேண்டியதில்லை. ரொக்க கணக்கை மாற்றம் செய்து ஆரம்ப இருப்பை மட்டும் பதிய வேண்டும்.
Gateway of Tally > Masters >Accounts Info> Ledgers> Single Ledger> Alter
41.
| பெறுதல்கள் | ரூ. | ரூ. | செலுத்தல்கள் | ரூ. |
|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | சிற்றுண்டிச் செலவுகள் | 13,000 | ||
| ரொக்க இருப்பு | 15,000 | கட்டுமானச் செலவுகள் | 7,000 | |
| வங்கி இருப்பு | 25,000 | 40,000 | வாடகைச் செலுத்தியது | 1,000 |
| நன்கொடைகள் பெற்றது | 48,000 | காவலாளிக்குச் சம்பளம் கொடுத்தது | 12,000 | |
| பழைய உபகரணங்கள் விற்றது | 26,000 | மன்ற ஆண்டுவிழாச் செலவுகள் | 15,000 | |
| மன்ற ஆண்டு விழா வசூல் | 18,000 | ஒளியூட்டுச் செலவுகள் | 16,500 | |
| அறக்கொடை நாடகக்காட்சி வசூல் | 4,000 | பொழுதுபோக்குச் செலவுகள் | 13,500 | |
| முதலீடுகள் விற்றது | 12,000 | பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது | 5,000 | |
| அறக்கொடை நாடகக்காட்சி செலவுகள் | 3,000 | |||
| இருப்பு கீ/இ | ||||
| ரொக்க இருப்பு | 12,000 | |||
| வங்கி இருப்பு | 50,000 | |||
| 1,48,000 | 1,48,000 |
42.
43.
ஒரு பொதுநிறுமம் தகவலறிக்கை மூலம் பொது மக்களுக்கு வெளியிடும் நேர்மைப் பங்கு வெளியீட்டினை பொது வெளியீடு என்று அழைப்பர். இது தொடக்க பொது முனைவு மற்றும் கூடுதல் முனைவுகளையும் உள்ளடக்கியது.
44.
கணக்காண்டின் இறுதியில், இலாப நோக்கற்ற அமைப்புகள் பின்வரும் இறுதிக் கணக்குகளைத் தயாரிக்கின்றன:
1) பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு
2) வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும்
3) இருப்புநிலைக் குறிப்பு
45.
(i) கடன் வசூலிப்புக் காலம் என்பது கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகளின் வசூலிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் சராசரி காலம் ஆகும்.
(ii) கடன் வசூலிக்கும் காலம் குறைவாக இருக்கும்போது கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளிலிருந்து பணம் வசூலிக்கும் மேலாண்மை செலயல்திறன் அதிகமான இருக்கிறது என்று பொருள்.
கடன் வசூலிப்புக் காலம் கீழ்கண்டவாறு கணக்கிடப்படுகிறது
.
46.
ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் ஒரு நபரை புதிய கூட்டாளியாக சேர்க்கலாம். இதுவே கூட்டாளி சேர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான கூடுதல் முதல் பெறுவதற்காகவும் அல்லது புதிய கூட்டாளி சேர்க்கப்படலாம்
47.
வட்டிக்குரிய காலம் என்பது எடுப்புகள் எடுத்த நாள் முதல் கணக்காண்டின் இறுதி நாள் வரையிலான காலமாகும். வெவ்வேறு தொகைகள் வெவ்வேறு கால இடைவெளிகளில் எடுக்கும் போது இம்முறை பொருந்துகிறது.
48.
ஆதாய விகிதம் = 1 : 1
குமாரின் பங்கினை நவீன் மற்றும் ரவி ஆகியோர் சமமாக எடுத்துக் கொள்கின்றனர்.
குமாரின் பங்கு = \(\frac { 1 }{ 4 } \)
ஆதாயப் பங்கு = விலகும் கூட்டாளியின் பங்கு x ஆதாயப் பங்கின் விகிதாச்சாரம்
நவீன் = \(\frac { 1 }{ 4 } \times \frac { 1 }{ 2 } =\frac { 1 }{ 8 } \)
ரவி = \(\frac { 1 }{ 4 } \times \frac { 1 }{ 2 } =\frac { 1 }{ 8 } \)
எனவே நவீன் மற்றும் ரவி ஆகியோரின் ஆதாய விகிதம் = \(\frac { 1 }{ 8 } :\frac { 1 }{ 8 } \) அதாவது 1 : 1
தொடரும் கூட்டாளியின் புதிய பங்கு = பழைய பங்கு + ஆதாயப்பங்கு
நவீன் = \(\frac { 1 }{ 2 } +\frac { 1 }{ 8 } =\frac { 4+1 }{ 8 } =\frac { 5 }{ 8 } \)
ரவி = \(\frac { 1 }{ 4 } +\frac { 1 }{ 8 } =\frac { 2+1 }{ 8 } =\frac { 3 }{ 8 } \)
எனவே நவீன் மற்றும் ரவி ஆகியோரின் புதிய இலாப விகிதம் = \(\frac { 5 }{ 8 } :\frac { 3 }{ 8 } \) அதாவது 5 : 3
49.
"நிதி" என்பது நடைமுறை முதலைக் குறிப்பதாகும். நடைமுறை முதல் என்பது நடப்புப் பொறுப்புகளை விட அதிகமாக உள்ள நடப்புச் சொத்துகளைக் குறிப்பதாகும். ஓட்டம் என்பது இயக்கம் என்பதைக் குறிக்கும்.
50.
| விவரம் | ரூ. |
|---|---|
| இறுதி முதல் (மார்ச் 31, 2019) | 8,50,000 |
| கூட்டுக: அவ்வாண்டில் எடுப்புகள் | 70,000 |
| 9,20,000 | |
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் | 1,20,000 |
| சரிகட்டப்பட்ட இறுதி முதல் | 8,00,000 |
| கழிக்க: தொடக்க முதல் (ஏப்ரல் 1, 2018) | 5,00,000 |
| அவ்வாண்டின் இலாபம் | 3,00,000 |
51.
(i) கணக்கியல் தகவல் அமைப்பு என்பது மேலாண்மையின் அனைத்து நிலைகளிலும் முடிவெடுப்பதற்கு தேவையான தகவலை அளிக்கும் ஒரு முறையாகும்.
(ii) கணக்கியல் தகவல் அமைப்பு, நிதியியல் தரவுகளை சேகரித்து அதை செயலாக்கப் பெறச் செய்து பல்வேறு பயனர்களுக்கு தகவலாக அளிக்கிறது.
52.
மொத்த இலாப விகிதம் = x 100 = \(\frac {20,000}{1,00,000}\) × 100 = 20%
மொத்த இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் – விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை
= 1,00,000 – 80,000 = ரூ.20,000
53.
(i) இலாபப்பகிர்வு விகிதத்தில் மாற்றம் ஏற்படும்போது
(ii) கூட்டாண்மை நிறுவனத்தில் புதிய கூட்டாளி சேர்க்கப்படும் போது
(iii) கூட்டாண்மை நிறுவனத்தில் இருக்கும் கூட்டாளி ஒருவர் நிறுவனத்தை விட்டு விலகும் போது அல்லது கூட்டாளி ஒருவர் இறக்கும் போது
(iv) ஒரு கூட்டாண்மை நிறுவனத்தைக் கலைக்கும் போது
54.
கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம் =
= \(\frac {9,60,000}{1,60,000}\) = 6 மடங்குகள்
கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் = கடனாளிகள் + பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுகள்
= 1,00,000 + 60,000 = ரூ.1,60,000
கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகளின் தொடக்க இருப்பு கொடுக்கப்படாததால், கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகளின் சராசரிக்குப் பதிலாக, கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் இறுதி இருப்பு எடுத்துக்கொள்ளப்பட்டது
கடன் வசூலிப்புக் காலம் (மாதங்களில்) =
= \(\frac {12}{6}\) = 2 மாதங்கள்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards