12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Two mark Important Questions - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
கிடைமட்ட பகுப்பாய்வு என்றால் என்ன?
2.
பொது வெளியீடு என்றால் என்ன?
3.
இருப்புநிலைக் குறிப்பு என்றால் என்ன?
4.
இலாபநோக்கமற்ற அமைப்புகள் எந்த கணக்குகளையெல்லாம் தயாரிக்கின்றன?
5.
நடப்பு விகிதம் என்றால் என்ன?
6.
கணக்கியல் விகிதங்களின் வடிவங்களை எழுதுக.
7.
கூட்டாளி சேர்ப்பு என்றால் என்ன? அவர் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகிறார்?
8.
மேலாண்மை தகவல் அமைப்பு என்றால் என்ன?
9.
முதல் மீதான வட்டி என்றால் என்ன?
10.
நவீன், ரவி மற்றும் குமார் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை முறையே 1/2, 1/4 மற்றும் 1/4 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். குமார் என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார் மற்றும் அவருடைய பங்கை நவீன் மற்றும் ரவி சமமாக எடுத்துக் கொண்டார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.
11.
கயல், மாலா மற்றும் நீலா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 2:2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். கயல் என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். மாலா மற்றும் நீலாவுக்கும் இடையே உள்ள புதிய இலாபப் பகிர்வு விகிதம் 3:2. ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.
12.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் கருவிகளைப் பட்டியலிடவும்.
13.
ஆதாய விகிதம் கணக்கிடுவதன் நோக்கம் என்ன?
14.
மாலா மற்றும் அனிதா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:2 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். மெர்சி என்பவர் 1/5 இலாப விகிதத்தில் கூட்டாண்மையில் கூட்டாளியாக சேருகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
15.
கோவிந்த் மற்றும் கோபால் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் 5:4 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் இரஹீம் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். கோவிந்த் தன் பங்கில் 2/9 பாகத்தினையும், கோபால் தன் பங்கில் 1/9 பாகத்தினையும் இரஹீமிற்காக தியாகம் செய்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதத்தையும் மற்றும் தியாக விகிதத்தையும் கணக்கிடவும்.
16.
பிரவீணா மற்றும் தான்யா என்ற இரு கூட்டாளிகள் 7:3 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் மாலினி என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பிரவீணா, தான்யா மற்றும் மாலினி அவர்களின் புதிய இலாப விகிதம் 5:2:3. தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.
17.
புதிய கூட்டாளி சேர்க்கப்படும் போது, ஏற்கனவே உள்ள நற்பெயரை பழைய கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
18.
பின்வரும் விவரங்களிலிருந்து பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரிக்கவும் மற்றும் கடனாளிகளிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டுத் தொகையினைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| ஆண்டு தொடக்கத்தில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 1,40,000 |
| ஆண்டு முடிவில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 2,00,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது | 3,90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது | 30,000 |
19.
பிரசாந்த் மற்றும் நிஷா என்ற இரு கூட்டாளிகள் 3:2 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ரம்யா என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். பிரசாந்த் தன்பங்கில் 2/5 பங்கும், நிஷா தன் பங்கில் 2/5 பங்கும் தியாகம் செய்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
20.
சுரேஷ் மற்றும் தினேஷ் என்ற இரு கூட்டாளிகள் 3:2 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் இரமேஷ் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். சுரேஷ் என்பவர் தன் பங்கில் 1/5 பங்கும், தினேஷ் என்பவர் தன் பங்கில் 2/5 பங்கும் தியாகம் செய்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
21.
ஹரி மற்றும் சலீம் என்ற இரு கூட்டாளிகள் 5:3 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜோயல் என்பவரை \(\frac{1}{8}\) பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அவர் அப்பங்கு முழுவதையும் ஹரி என்பவரிடம் பெற்றுக் கொண்டார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
22.
முதலீடுகள் மீதான வருவாய் விகிதம் எதைக் குறிப்பிடுகிறது?
23.
கணக்கியல் விகிதங்கள் என்றால் என்ன?
24.
ஏதேனும் ஐந்து கணக்கியல் அறிக்கைகள் கூறுக.
25.
இலாப நோக்கற்ற அமைப்பின் முதலின வரவுகளில் ஏதேனும் நான்கினைத் தரவும்.
26.
கூட்டாண்மை நிறுவனத்தில் நற்பெயரை மதிப்பிடும் ஏதேனும் இரண்டு சூழ்நிலைகளைத் தரவும்.
27.
கீழ்வரும் தகவல்களிலிருந்து முதல் உந்து திறன் விகிதத்தைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| (அ) பங்குமுதல் | |
| நேர்மைப் பங்குமுதல் | 2,00,000 |
| 6% முன்னுரிமைப் பங்குமுதல் | 1,00,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | |
| பொதுக் காப்பு | 1,25,000 |
| மிகுதி | 75,000 |
| 2. நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்டகாலக் கடன்கள் (8% கடனீட்டுப் பத்திரங்கள்) | 2,00,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| கணக்குகள் மூலம் செலுத்த வேண்யவை | 1,50,000 |
| வரி ஒதுக்கு | 50,000 |
| மொத்தம் | 9,00,000 |
28.
2018 ஆம் ஆண்டில் மேத்யூ என்ற கூட்டாளி எடுத்த எடுப்புகள் ரூ.20,000. எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என கணக்கிடப்பட்டது. 2018, டிசம்பர் 31 அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.
29.
மணி என்ற கூட்டாளி 2018, செப்டம்பர் 1 அன்று ரூ.30,000 எடுத்துக்கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% என கணக்கிடப்பட வேண்டும். 2018, டிசம்பர் 31 அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிட்டு அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
30.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆனந்த் கட்டுமான நிறுமத்தின் தகவல்களிலிருந்து, விரைவு விகிதத்தைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ |
|---|---|
| மொத்த நடப்புப் பொறுப்புகள் | 1,00,000 |
| மொத்த நடப்புச் சொத்துகள் | 2,50,000 |
| சரக்கிருப்பு | 50,000 |
| முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் | 15,000 |
31.
கூட்டாண்மை ஒப்பாவணம் என்றால் என்ன?
32.
33.
வேலன் என்ற கூட்டாளி 2018, ஏப்ரல் 1 அன்று ரூ.20,000 எடுத்துக்கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என கணக்கிடப்பட வேண்டும். மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு 2018, டிசம்பர் 31 அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிட்டு அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளையும் தரவும்.
34.
குமார், கேசவன் மற்றும் மனோகர் எனும் கூட்டாளிகள் முறையே \(\frac {1}{2},\frac {1}{3}\) மற்றும் \(\frac {1}{6}\) எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். மனோகர் விலகினார். அவருடைய பங்கினை குமார் மற்றும் கேசவன் இருவரும் சமமாக எடுத்துக் கொண்டனர். புதிய இலாப விகிதத்தையும் மற்றும் ஆதாய விகிதத்தையும் கணக்கிடவும்
35.
பின்வரும் விவரங்கள் ஒரு சங்கத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும்?
| பெறுதல்கள் | ரூ | ரூ | செலுத்தல்கள் | ரூ |
|---|---|---|---|---|
| சந்தா | ||||
| 2017-2018 | 5,000 | |||
| 2018-2019 | 48,000 | |||
| 2019-2020 | 3,000 | 56,000 | ||
இச்சங்கத்தில் 300 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ஆண்டுச் சந்தாவாக ரூ. 200 செலுத்துகின்றனர். இன்னும் பெறவேண்டிய 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.1,000.
36.
அந்தோணி மற்றும் அக்பர் என்ற இரு கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, ஜனவரி 1 அன்று அவர்களின் முதல் கணக்குகளின் இருப்புகள் அந்தோணி ரூ.60,000 மற்றும் அக்பர் ரூ.40,000 ஆகும். 2018, ஏப்ரல் 1 அன்று அந்தோணி கூடுதல் முதலாக ரூ.10,000 கொண்டு வந்தார். அவ்வாண்டில் அக்பர் ரூ.5,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 % எனக் கணக்கிடவும்.
37.
கிரண், வினோத் மற்றும் விமல் எனும் கூட்டாளிகள் 5:3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். கிரண் விலகினார். வினோத் மற்றும் விமல் ஆகியோரின் புதிய இலாப விகிதம் 2:1 ஆகும். ஆதாய விகிதத்தை கணக்கிடவும்
38.
மேரி, மீனா மற்றும் மரியம் எனும் கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் இலாபநட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1-1-2019 அன்று மேரி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளில், அந்நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு சொத்துகள் பக்கத்தில் ரூ. 75,000 பகிர்ந்து தரா நட்டம் எனக் காட்டியது. பகிர்ந்து தரா நட்டத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
39.
பின்வரும் விவரங்களிலிருந்து கடன் கொள்முதலைக் கணக்கிடவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| 2018, ஏப்ரல் 1 அன்று கடனீந்தோர் | 50,000 |
| வெளித் திருப்பம் | 6,000 |
| கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் | 1,60,000 |
| 2019, மார்ச் 31 அன்று கடனீந்தோர் | 70,000 |
40.
பின்வரும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கணக்கிடவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| ஆண்டு தொடக்கத்தில் முதல் (1 ஏப்ரல், 2016) | 2,00,000 |
| ஆண்டு இறுதியில் முதல் (31 மார்ச், 2017) | 3,50,000 |
| அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் | 70,000 |
| அவ்வாண்டின் எடுப்புகள் | 40,000 |
41.
பின்வரும் விவரங்களிலிருந்து அப்துல் வரையறு நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.
| விவரம் | 2015-16 ரூ. |
2016-17 ரூ. |
|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 3,00,000 | 3,60,000 |
| இதர வருமானம் | 1,00,000 | 60,000 |
| செலவுகள் | 2,00,000 | 1,80,000 |
| வருமான வரி | 30% | 30% |
42.
பின்வரும் விவரங்கள் ஒரு மன்றத்தின் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும். அந்த மன்றம் 2016-2017 ஆம் ஆண்டில் பெற்ற சந்தா : ரூ.40,000. இதில் 2015-2016 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ.5,000 மற்றும் 2017-2018 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ.3,000 உள்ளடங்கியுள்ளது. 2016-2017 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ.1,000 இன்னும் பெற வேண்டியுள்ளது
43.
பயோனியர் நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து உரிமையாளர் விகிதத்தைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| (அ) பங்குமுதல் | |
| (i) நேர்மைப் பங்குமுதல் | 1,00,000 |
| (ii) முன்னுரிமைப் பங்குமுதல் | 75,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 25,000 |
| 2. நீண்டகால பொறுப்புகள் | |
| நீண்டகாலக் கடன்கள் | - |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 2,00,000 |
| மொத்தம் | 4,00,000 |
| II. சொத்துகள் | |
| 1. நீண்டகாலச் சொத்துகள் | |
| (அ) நிலைச் சொத்துகள் | 2,75,000 |
| (ஆ) நீண்டகால முதலீடுகள் | 50,000 |
| 2. நடப்புச் சொத்துகள் | |
| ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் | 75,000 |
| மொத்தம் | 4,00,000 |
44.
மகேஷ் நிறுமத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| விவரம் | ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| நேர்மைப் பங்குமுதல் | 2,00,000 |
| 2. நீண்டகால பொறுப்புகள் | |
| நீண்டகாலக் கடன்கள் | 50,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) குறுகிய காலக் கடன்கள் | 17,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 25,000 |
| (இ) இதர நடப்புப் பொறுப்புகள் | |
| கொடுபட வேண்டிய செலவுகள் | 3,000 |
| (ஈ) குறுகியகால ஒதுக்குகள் | 5,000 |
| மொத்தம் | 3,00,000 |
| சொத்துகள் | |
| 1. நீண்டகால சொத்துகள் | |
| (அ) நிலைச் சொத்துகள் | |
| புலனாகும் சொத்துகள் | 1,50,000 |
| 2. நடப்புச் சொத்துகள் | |
| (அ) சரக்கிருப்பு | 45,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகள் | 70,000 |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் | 30,000 |
| (ஈ) இதர நடப்புச் சொத்துகள் | |
| முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் | 5,000 |
| மொத்தம் | 3,00,000 |
(i) நடப்பு விகிதம்
(ii) நீர்மை விகிதம் கணக்கிடவும்.
45.
ஒரு சங்கத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018 ஆம் ஆண்டு சந்தா மூலம் பெற்ற வருமானத்தைக் கணக்கிடவும்.
| விவரம் | 1.1.2018 ரூ |
31.12.2018 ரூ |
|---|---|---|
| பெறவேண்டிய சந்தா | 10,000 | 7,000 |
| முன்கூட்டிப் பெற்ற சந்தா | 3,000 | 5,000 |
2018 ஆம் ஆண்டில் பெற்ற சந்தா ரூ.1,50,000.
46.
பின்வரும் விவரங்களைக் கொண்டு அவ்வாண்டின் மொத்த விற்பனையைக் கண்டறியவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| 2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் | 50,000 |
| அவ்வாண்டில் கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் | 1,50,000 |
| உள்திருப்பம் | 15,000 |
| வாராக்கடன் | 5,000 |
| 2019, மார்ச் 31 அன்று கடனாளிகள் | 70,000 |
| ரொக்க விற்பனை | 1,40,000 |
47.
48.
சந்திரா நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக்குறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்புநிலைக்குறிப்பினைத் தயார் செய்யவும்.
| விவரம் | 2016, மார்ச் 31 | 2017, மார்ச் 31 |
|---|---|---|
| ரூ. | ரூ. | |
| I.பங்குமூலதனம் மற்றும்பொறுப்புகள் | ||
| பங்குதாரர் நிதி | 1,00,000 | 2,60,000 |
| நீண்ட காலப் பொறுப்புகள் | 50,000 | 60,000 |
| நடப்புப் பொறுப்புகள் | 25,000 | 30,000 |
| மொத்தம் | 1,75,000 | 3,50,000 |
| II. சொத்துகள் | ||
| நிலைச் சொத்துகள் | 1,00,000 | 2,00,000 |
| நடப்புச் சொத்துகள் | 75,000 | 1,50,000 |
| மொத்தம் | 1,75,000 | 3,50,000 |
49.
அருணா ஆலைகள் வரையறு நிறுமத்தின் பதிவு செய்யப்பட்ட பங்கு முதல் ரூ.5,00,000. அதில் 20,000 பங்குகளை ரூ.10 வீதம் பின்வருமாறு செலுத்தத்தக்க வகையில் வெளியிட்டது. விண்ணப்பத்தின் மீது
ரூ.4; ஒதுக்கீட்டின் மீது ரூ.4; முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் மீது ரூ.2. வெளியிட்ட பங்குகள் அனைத்தும் ஒப்பப்பட்டன. அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. ஆனால், ஒரு பங்குதாரர் தான் வைத்துள்ள 300 பங்குகளுக்கான அனைத்து தொகைகளையும் ஒதுக்கீட்டின்போதே முழுவதுமாக செலுத்தி விட்டார்.
குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
50.
பாரத் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:
| விண்ணப்பத்தின் போது பங்கொன்றிற்கு | ரூ.5 |
| ஒதுக்கீட்டின் போது பங்கொன்றிற்கு | ரூ.3 |
| முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது பங்கொன்றிற்கு | ரூ.2 |
1,20,000 பங்குகளுக்கு விண்ணப்பத் தொகை பெறப்பட்டது. கூடுதல் விண்ணப்பத் தொகை உடனடியாக திருப்பிச் செலுத்தப்பட்டது. மேற்கண்டவற்றை பதிவு செய்ய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்
1.
1) பல ஆண்டுகளுக்கான தொகைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு எடுத்துக் கொண்டால், அப்பகுப்பாய்வு கிடைமட்ட பகுப்பாய்வு என்றழைக்கப்படும்.
2) பொதுவாக, ஒரு ஆண்டானது அடிப்படை ஆண்டாக எடுத்துக் கொள்ளப்பட்டு பிற ஆண்டுகளுடனான தொகை அடிப்படை ஆண்டுடன் ஒப்பீடு செய்யப்படுகிறது.
3) ஒப்பீடு அறிக்கைகள், மற்றும் போக்கு சதவீதங்கள் போன்றவை கிடைமட்ட பகுப்பாய்விற்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.
2.
ஒரு பொதுநிறுமம் தகவலறிக்கை மூலம் பொது மக்களுக்கு வெளியிடும் நேர்மைப் பங்கு வெளியீட்டினை பொது வெளியீடு என்று அழைப்பர். இது தொடக்க பொது முனைவு மற்றும் கூடுதல் முனைவுகளையும் உள்ளடக்கியது.
3.
இருப்புநிலைக் குறிப்பு ஒரு அமைப்பின் நிதிநிலையை வெளிப்படுத்தும் அறிக்கை ஆகும். இலாப நோக்கற்ற அமைப்புகளுக்கான இருப்புநிலைக் குறிப்பு தயாரிப்பது பெரும்பாலும் வியாபார அமைப்புகளுக்கு தயாரிப்பது போன்றதாகும். கணக்காண்டின் இறுதிநாளில் உள்ள சொத்துகள் மற்றும் பொறுப்புகள் இருப்புநிலைக் குறிப்பில் பதியப்படுகின்றன.
4.
கணக்காண்டின் இறுதியில், இலாப நோக்கற்ற அமைப்புகள் பின்வரும் இறுதிக் கணக்குகளைத் தயாரிக்கின்றன:
1) பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு
2) வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும்
3) இருப்புநிலைக் குறிப்பு
5.
(i) நடப்பு விகிதம், ஒரு வணிக நிறுவனத்தின் நடப்புச் சொத்துகளுக்கும் மற்றும் நடப்புப் பொறுப்புகளுக்கும் உள்ள விகிதச்சாரத்தைத் தருகிறது.
(ii) இரு நடப்புச் சொத்துகளை நடப்புப் பொறுப்புகளால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
(iii) நடப்பு விகிதம், ஒரு வணிக நிறுவனம் தனது நடப்புப் பொறுப்புகளை எப்போது செலுத்த வேண்டுமோ அப்போது, அதை எதிர்கொள்ளும் திறனைக் குறிக்கிறது. அது பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.
6.
கணக்கியல் விகிதங்கள் பின்வரும் ஏதேனும் ஒரு வடிவத்தில் வெளிப்படுத்தலாம். விகிதம்
(i) விகிதாச்சாரம் : இதில் ஒரு ஈவாக குறிப்பிடப்படுகிறது. எடுத்துக்காட்டு, 2 அல்லது 2:1.
(ii) சதவிகிதம் : இதில், விகிதம் சதவிகிதத்தில் குறிப்பிடப்படுகிறது. எடுத்துக்காட்டு, 25%
(iii) மடங்கு : இதில், ஒரு குறிப்பிட்ட தொகை எத்தனை மடங்கு உள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது. எடுத்துக்காட்டு 4 மடங்கு.
7.
ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் ஒரு நபரை புதிய கூட்டாளியாக சேர்க்கலாம். இதுவே கூட்டாளி சேர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான கூடுதல் முதல் பெறுவதற்காகவும் அல்லது புதிய கூட்டாளி சேர்க்கப்படலாம்
8.
(i) மேலாண்மை தகவல் அமைப்பு என்பது மேலாண்மையின் அனைத்து நிலைகளிலும் முடிவெடுப்பதற்கு தேவையான தகவலை அளிக்கும் ஒரு முறையாகும்.
(ii) உற்பத்தி தகவல் அமைப்பு, சந்தையிடுதல் தகவல் அமைப்பு, மனிதவள தகவல் அமைப்பு மற்றும் கணக்கியல் தகவல் அமைப்பு ஆகியவை இதில் அடங்கும்.
9.
(i) முதல் மீது வட்டி என்பது கூட்டாளிகளின் முதல் மீது அனுமதிக்கப்படும் வட்டி ஆகும்.
(ii) பொதுவாக, கூட்டாளிகளின் முதல் அவர்களின் இலாபப் பகிர்வு விகிதத்திற்கு சமனற்றவையாக இருந்தால் முதல் மீது வட்டி அனுமதிக்க கூட்டாளிகள் ஒப்புக் கொள்ளலாம்.
(iii) முதல் மீதான வட்டி வீதம் பொதுவாக கூட்டாளிகள் ஒப்புக் கொண்ட விகிதம் ஆகும்
10.
ஆதாய விகிதம் = 1 : 1
குமாரின் பங்கினை நவீன் மற்றும் ரவி ஆகியோர் சமமாக எடுத்துக் கொள்கின்றனர்.
குமாரின் பங்கு = \(\frac { 1 }{ 4 } \)
ஆதாயப் பங்கு = விலகும் கூட்டாளியின் பங்கு x ஆதாயப் பங்கின் விகிதாச்சாரம்
நவீன் = \(\frac { 1 }{ 4 } \times \frac { 1 }{ 2 } =\frac { 1 }{ 8 } \)
ரவி = \(\frac { 1 }{ 4 } \times \frac { 1 }{ 2 } =\frac { 1 }{ 8 } \)
எனவே நவீன் மற்றும் ரவி ஆகியோரின் ஆதாய விகிதம் = \(\frac { 1 }{ 8 } :\frac { 1 }{ 8 } \) அதாவது 1 : 1
தொடரும் கூட்டாளியின் புதிய பங்கு = பழைய பங்கு + ஆதாயப்பங்கு
நவீன் = \(\frac { 1 }{ 2 } +\frac { 1 }{ 8 } =\frac { 4+1 }{ 8 } =\frac { 5 }{ 8 } \)
ரவி = \(\frac { 1 }{ 4 } +\frac { 1 }{ 8 } =\frac { 2+1 }{ 8 } =\frac { 3 }{ 8 } \)
எனவே நவீன் மற்றும் ரவி ஆகியோரின் புதிய இலாப விகிதம் = \(\frac { 5 }{ 8 } :\frac { 3 }{ 8 } \) அதாவது 5 : 3
11.
ஆதாயப் பங்கு = புதிய பங்கு - பழைய பங்கு
மாலா = \(\frac { 3 }{ 3 } -\frac { 2 }{ 5 } =\frac { 1 }{ 5 } \)
நீலா = \(\frac { 2 }{ 5 } -\frac { 1 }{ 5 } =\frac { 1 }{ 5 } \)
ஆகையால், மாலா மற்றும் நீலா ஆகியோரின் ஆதாய விகிதம் = 1 : 1
12.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்விற்கு பயன்படுத்தப்படும் கருவிகளில் பொதுவானவை
பின்வருமாறு:
1) ஒப்பீட்டு அறிக்கை
2) பொது அளவு அறிக்கைகள்
3) போக்குப் பகுப்பாய்வு
4) நிதி ஓட்டப் பகுப்பாய்வு
5) ரொக்க ஓட்டப் பகுப்பாய்வு
13.
(i) ஆதாய விகிதம் கணக்கிடுவதன் நோக்கம் விலகும் கூட்டாளிக்கு கொடுக்கப்படும் நற்பெயரை ஏற்றுக் கொள்வதாகும். ஆதாயப் பங்கு பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.
(ii) ஆதாயப்பங்கு = புதிய பங்கு - பழைய பங்கு
(iii) ஆதாய விகிதம் = தொடரும் கூட்டாளிகளுக்கு கிடைக்க பெற்ற ஆதாயத்தின் விகிதமாகும்.
14.
தியாக விகிதம் மற்றும் தியாகப் பங்கின் விகிதம் மற்றும் புதிய இலாபப்பங்கு விகிதம் குறிப்பிடாத போது பழைய இலாபப் பகிர்வு விகிதத்தை இருக்கும் கூட்டாளிகளின் தியாகப் பங்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதாவது 3 : 2
மாலா மற்றும் அனிதாவின் தியாக விகிதம் 3 : 2
மொத்த பங்கு 1 என எடுத்துக் கொள்ளவும்.
மெர்சி பங்கு = \(\frac { 1 }{ 5 } \)
மீதமுள்ள பங்கு = 1 - \(\frac { 1 }{ 5 } \) = \(\frac { 5-1 }{ 5 } =\frac { 4 }{ 5 } \)
பழைய கூட்டாளியின் புதிய பங்கு = மீதப்பங்கு x பழையப் பங்கு
மாலா = \(\frac { 4 }{ 5 } \times \frac { 3 }{ 5 } =\frac { 12 }{ 25 } \)
அனிதா = \(\frac { 4 }{ 5 } \times \frac { 2 }{ 5 } =\frac { 8 }{ 25 } \)
புதிய கூட்டாளியின் பங்கு
மெர்சி = \(\frac { 1 }{ 5 } \)
மெர்சி பங்கிற்குரிய பகுதியை சமன் செய்யும் பொருட்டு, 5 ஆல் பெருக்கி மற்றும் வகுக்க வேண்டும்.
மெர்சி பங்கு = \(\frac { 1 }{ 5 } \times \frac { 5 }{ 5 } \) = \(\frac { 5}{2 5 } \)
மாலா, அனிதா மற்றும் மெர்சி அவர்களின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் \(\frac { 12 }{ 25 } :\frac { 8 }{ 25 } :\frac { 5 }{ 25 } \) அதாவது 12:8:5
15.
தியாக விகிதம் மற்றும் புதிய இலாபப்பகிர்வு விகிதம் கணக்கிடுதல்:
பழைய பங்கு = 5 : 4 அதாவது, கோவிந்த் \(\frac { 5 }{ 9 } \) மற்றும் கோபால் \(\frac { 4 }{ 9 } \)
தியாக பங்கு = பழைய பங்கு x தியாகப் பங்கின் விகிதம்
கோவிந்த் = \(\frac { 5 }{ 9 } \times \frac { 2 }{ 9 } =\frac { 10 }{ 81 } \)
கோபால் = \(\frac { 4 }{ 9 } \times \frac { 1 }{ 9 } =\frac { 4 }{ 81 } \)
கோவிந்த் மற்றும் கோபால் அவர்களின் தியாக விகிதம் \(\frac { 10 }{ 81 } \) மற்றும் \(\frac { 4 }{ 81 } \) அதாவது 10 : 4 அல்லது 5 : 2
புதிய பங்கு = பழைய பங்கு - தியாக பங்கு
கோவிந்த் = \(\frac { 5 }{ 9 } -\frac { 10 }{ 81 } =\frac { 45-10 }{ 81 } =\frac { 35 }{ 81 } \)
கோபால் = \(\frac { 4 }{ 9 } -\frac { 4 }{ 81 } =\frac { 36-4 }{ 81 } =\frac { 32 }{ 81 } \)
புதிய கூட்டாளியின் பங்கு = கோவிந்த் மற்றும் அவர்களின் தியாகப் பங்கின் கூட்டுத்தொகை
இரஹீம் = \(\frac { 10 }{ 81 } +\frac { 4 }{ 81 } =\frac { 10+4 }{ 81 } =\frac { 14 }{ 81 } \)
கோவிந்த், கோபால் மற்றும் இரஹீம் அவர்களின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் = \(\frac { 35 }{ 81 } :\frac { 32 }{ 81 } :\frac { 14 }{ 81 } \)
அதாவது 35:32:14
16.
பிரவீணா மற்றும் தான்யா அவர்களின் பழைய பங்கு = 7 : 3 அதாவது,\(\frac { 7 }{ 10 } :\frac { 3 }{ 10 } \)
பிரவீணா, தான்யா மற்றும் மாலினியின் புதிய இலாபப் பங்கு = 5 : 2 : 3
அதாவது = \(\frac { 5 }{ 10 } :\frac { 2 }{ 10 } :\frac { 3 }{ 10 } \)
தியாகப்பங்கு = பழைய - புதிய பங்கு
பிரவீணா = \(\frac { 7 }{ 10 } -\frac { 5 }{ 10 } =\frac { 7-5 }{ 10 } =\frac { 2 }{ 10 } \)
தான்யா = \(\frac { 3 }{ 10 } -\frac { 2 }{ 10 } =\frac { 3-2 }{ 10 } =\frac { 1 }{ 10 } \)
பிரவீணா மற்றும் தான்யாவின் தியாகப்பங்கு \(\frac { 2 }{ 10 } :\frac { 1 }{ 10 } \) அதாவது 2 : 1
17.
| நாள் | விவரம் | பே.ப. எண்: |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| கூட்டாளிகள் முதல் / நடப்பு க/கு (பழைய விகிதம்) |
ப | XXX | |||
| நற்பெயர் க/கு (பழைய நற்பெயர் போக்கெழுதியது) |
XXX |
18.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
| இருப்பு கீ/கொ | 1,40,000 | ரொக்கக் க/கு | 3,90,000 |
| கடனாளிகள் க/கு | 4,80,000 | கடனாளிகள் க/கு | 30,000 |
| (அவ்வாண்டில் மாற்றுச்சீட்டு பெற்றது-இருப்புக்கட்டும் தொகை) | (பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது) | ||
| இருப்பு கீ/இ | 2,00,000 | ||
| 6,20,000 | 6,20,000 |
19.
தியாக விகிதம் மற்றும் புதிய இலாபப் பகிர்வு விகிதம் கணக்கிடுதல்
பழைய பங்கு = 3:2 அதாவது, பிரசாந்த் \(\frac { 3 }{ 5 } \) மற்றும் நிஷா \(\frac { 2 }{ 5 } \)
தியாகப் பங்கு = பழைய பங்கு x தியாகப் பங்கின் விகிதம்
பிரசாந்த் =\(\frac { 3 }{ 5 } \times \frac { 2 }{ 5 } =\frac { 6 }{ 25 } \)
நிஷா = \(\frac { 2 }{ 5 } \times \frac { 2 }{ 5 } =\frac { 4 }{ 25 } \)
பிரசாந்த் மற்றும் நிஷாவின் தியாகப் பங்கு \(\frac { 6 }{ 25 } \) மற்றும் \(\frac { 4 }{ 25 } \), அதாவது, 3:2
புதிய பங்கு = பழைய பங்கு - தியாகப் பங்கு
பிரசாந்த் =\(\frac { 3 }{ 5 } -\frac { 6 }{ 25 } =\frac { 15-6 }{ 25 } =\frac { 9 }{ 25 } \)
நிஷா =\(\frac { 2 }{ 5 } -\frac { 4 }{ 25 } =\frac { 10-4 }{ 25 } =\frac { 6 }{ 25 } \)
புதிய கூட்டாளியின் பங்கு = பிரசாந்த் மற்றும் நிஷா தியாகப் பங்கின் கூட்டுத்தொகை
ரம்யா =\(\frac { 6 }{ 25 } +\frac { 4 }{ 25 } =\frac { 6+4 }{ 25 } =\frac { 10 }{ 25 } \)
பிரசாந்த், நிஷா மற்றும் ரம்யா அவர்களின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் =\(\frac { 9 }{ 25 } :\frac { 6 }{ 25 } :\frac { 10 }{ 25 } \) அதாவது, 9:6:10
20.
தியாக விகிதம் மற்றும் புதிய இலாபப் பகிர்வு விகிதம் கணக்கிடுதல்
பழைய பங்கு = 3:2 அதாவது, சுரேஷ் \(\frac { 3 }{ 5 } \) மற்றும் தினேஷ் \(\frac { 2 }{ 5 } \)
தியாகப் பங்கு = பழைய பங்கு x தியாகப் பங்கின் விகிதம்
சுரேஷ் =\(\frac { 3 }{ 5 } \times \frac { 1 }{ 5 } =\frac { 3 }{ 25 } \)
தினேஷ் =\(\frac { 2 }{ 5 } \times \frac { 2 }{ 5 } =\frac { 4 }{ 25 } \)
சுரேஷ் மற்றும் தினேஷ் அவர்களின் தியாக விகிதம் \(\frac { 3 }{ 25 } \) மற்றும் \(\frac { 4 }{ 25 } \) அதாவது, 3:4
புதிய பங்கு = பழைய பங்கு - தியாகப் பங்கு
சுரேஷ் =\(\frac { 3 }{ 5 } -\frac { 3 }{ 25 } =\frac { 15-3 }{ 25 } =\frac { 12 }{ 25 } \)
தினேஷ் =\(\frac { 2 }{ 5 } -\frac { 4 }{ 25 } =\frac { 10-4 }{ 25 } =\frac { 6 }{ 25 } \)
புதிய கூட்டாளியின் பங்கு = சுரேஷ் மற்றும் தினேஷ் அவர்களின் தியாகப் பங்கின் கூட்டுத்தொகை
ரமேஷ் =\(\frac { 3 }{ 25 } +\frac { 4 }{ 25 } =\frac { 3+4 }{ 25 } =\frac { 7 }{ 25 } \)
சுரேஷ், தினேஷ் மற்றும் இரமேஷ் அவர்களின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் \(\frac { 12 }{ 25 } :\frac { 6 }{ 25 } :\frac { 7 }{ 25 } \) அதாவது, 12:6:7
21.
தியாக விகிதம் மற்றும் புதிய இலாபப் பகிர்வு விகிதம் கணக்கிடுதல்
பழைய கூட்டாளிகளின் தியாகப் பங்கு
ஹரி =\(\frac{1}{8}\)
சலீம் =0
தியாக விகிதம் = 1:0
ஹரி மற்றும் சலீம் அவர்களின் பழைய பங்கு 5:3 அதாவது, \(\frac { 5 }{ 8 } :\frac { 3 }{ 8 } \)
பழைய கூட்டாளியின் புதிய பங்கு = பழைய பங்கு – தியாகப் பங்கு
ஹரி =\(\frac { 5 }{ 8 } -\frac { 1 }{ 8 } =\frac { 5-1 }{ 8 } =\frac { 4 }{ 8 } \)
சலீம் =\(\frac { 3 }{ 8 } \)
புதிய கூட்டாளி ஜோயல் பங்கு =\(\frac{1}{8}\)
ஹரி, சலீம் மற்றும் ஜோயல் அவர்களின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் \(\frac { 4 }{ 8 } :\frac { 3 }{ 8 } :\frac { 1 }{ 8 } \) அதாவது 4:3:1
22.
(i) முதலீடு மீதான வருவாய், வட்டி மற்றும் வரிக்கு முன்னர் உள்ள நிகர இலாபத்திற்கும் பயன்படுத்தப்பட்ட முதலுக்கும் உள்ள விகிதத்தைக் காட்டுகிறது. (பங்குதாரர் நிதி மற்றும் நீண்டகாலக் கடன்கள்).
(ii) இந்த விகிதமானது பயன்படுத்தப்பட்ட முதல், வணிகத்தில் எவ்வாறு திறமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அளவிடுகின்றது.
(iii) இது வணிக நிறுவனத்தின் ஒட்டுமொத்த இலாபத் தன்மையை அளவிடுகிறது.
(iv) முதலீடு மீதான வருவாய் = வட்டி மற்றும் வரிக்கு முன்னர் உள்ள நிகர இலாபம் / பயன்படுத்தப்பட்ட முதல் x 100
23.
(i) விகிதம் என்பது இரண்டு தொடர்புடைய அல்லது ஒன்றை ஒன்று சார்ந்த இனங்களுக்கு இடையே உள்ள தொடர்பைக் கணிதவியல் அடிப்படையில் வெளிப்படுத்துவதாகும்.
(ii) இது, இரு இனங்களுக்கு இடையே உள்ள தொடர்பினை எண்ணியல் அல்லது எண்ணிக்கையில் குறிக்கும் இது ஒரு இனத்தை அது தொடர்பான மற்றொரு இனத்தால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
(iii) விகிதங்கள் கணக்கியல் தகவல்களின் அடிப்படையில் கணக்கிடப்படும்போது அவை கணக்கியல் விகிதங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
24.
(i) நாளோடு/குறிப்பேடு
(ii) பேரேடு
(iii) இருப்பாய்வு
(iv) இலாப அறிக்கை
(v) இருப்பு நிலைக்குறிப்பு
25.
1) ஆயுள் உறுப்பினர் கட்டணம்
2) உயில்கொடை
3) அறக்கட்டளை நிதி
4) முதலீடுகள் விற்ற தொகை
26.
(i) இலாபப்பகிர்வு விகிதத்தில் மாற்றம் ஏற்படும்போது
(ii) கூட்டாண்மை நிறுவனத்தில் புதிய கூட்டாளி சேர்க்கப்படும் போது
(iii) கூட்டாண்மை நிறுவனத்தில் இருக்கும் கூட்டாளி ஒருவர் நிறுவனத்தை விட்டு விலகும் போது அல்லது கூட்டாளி ஒருவர் இறக்கும் போது
(iv) ஒரு கூட்டாண்மை நிறுவனத்தைக் கலைக்கும் போது
27.
முதல் உந்துதிறன் விகிதம் =
= \(\frac {3,00,000}{4,00,000}\) = 0.75:1
நிலையான வட்டி மற்றும் நிலையான பங்காதாயம் ஈட்டுகின்ற நிதிகள் = 6% முன்னுரிமைப் பங்குமுதல் + 8% கடனீட்டுப் பத்திரங்கள்
= 1,00,000 + 2,00,000 = ரூ.3,00,000
நேர்மைப் பங்குதாரர் நிதி = = நேர்மைப் பங்குமுதல் + பொதுக் காப்பு + மிகுதி
= 2,00,000 + 1,25,000 + 75,000 = ரூ.4,00,000
28.
எடுப்புகள் மீதான வட்டி = எடுப்புத் தொகை x வட்டி வீதம் x வட்டிக்குரிய காலம்
= ரூ.20,000 x \(\frac { 10 }{ 100 } \times \frac { 6 }{ 12 } \) = ரூ.1,000
குறிப்பு: எடுப்புக்குரிய நாள் கொடுக்கப்படாத போது எடுப்புகள் மீதான, வட்டி, சராசரி காலமாகிய 6 மாதங்களுக்கு கணக்கிட்டல் வேண்டும்.
29.
எடுப்புகள் மீதான வட்டி = எடுப்புத்தொகை x வட்டி விகிதம் x வட்டிக்குரிய காலம்
= ரூ.30,000 x \(\frac {6}{100}\times\frac {4}{12}\)
= ரூ.600
| நாள் | விவரம் | பே.ப எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 டிசம்பர் 31 |
மணி முதல் க/கு | ப | 600 | ||
| எடுப்புகள் மீது வட்டி க/கு (எடுப்புகள் மீது வட்டி விதித்தது) |
600 | ||||
| ' | எடுப்புகள் மீது வட்டி க/கு | ப | 600 | ||
| இலாப நட்டப் பகிர்வு க/கு (எடுப்புகள் மீது வட்டி கணக்கை |
600 |
30.
விரைவு விகிதம் = = \(\frac {1,85,000}{1,00,000}\) = 1.85:1
நீர்மைச் சொத்துகள் = நடப்புச் சொத்துகள் – சரக்கிருப்பு – முன்கூட்டிச் செலுத்திய செலவுகள்
= 2,50,000 – 50,000 – 15,000
= ரூ.1,85,000
31.
கூட்டாண்மை ஒப்பாவணம் என்பது கூட்டாளிகளுக்கிடையேயான உடன்படிக்கையின் விதிகளை உள்ளடக்கிய எழுத்து வடிவிலான ஒரு ஆவணம் ஆகும்
32.
33.
எடுப்புகள் மீதான வட்டி = எடுப்புத் தொகை × வட்டி வீதம் × வட்டிக்குரிய காலம்
=ரூ.20,000 x \(\frac { 10 }{ 100 } \times \frac { 9 }{ 12 } \) =ரூ.1,500
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2018 | வேலன் வேலன் முதல் க/கு |
ப | 1,500 | ||
| டிசம்பர் 31 | எடுப்புகள் மீது வட்டி க/கு | 1,500 | |||
| (எடுப்புகள் மீது வட்டி விதித்தது) | |||||
| " | எடுப்புகள் மீது வட்டி க/கு | ப | 1,500 | ||
| இலாப நட்டப் பகிர்வு க/கு | 1,500 | ||||
| (எடுப்புகள் மீது வட்டி கணக்கை முடித்தது) |
34.
ஆதாய விகிதம் = 1:1
மனோகர் பங்கினை குமார் மற்றும் கேசவன் ஆகியோர் சமமாக எடுத்துக் கொள்கின்றனர்.
மனோகரின் பங்கு \(=\frac {1}{6}\)
ஆதாயப்பங்கு = விலகும் கூட்டாளியின் பங்கு x ஆதாயப் பங்கின் விகிதாச்சாரம்
குமார் \(=\frac { 1 }{ 6 } \times \frac { 1 }{ 2 } =\frac { 1 }{ 12 } \)
கேசவன் \(=\frac { 1 }{ 6 } \times \frac { 1 }{ 2 } =\frac { 1 }{ 12 } \)
எனவே, குமார் மற்றும் கேசவன் ஆகியோரின் ஆதாய விகிதம் \(=\frac { 1 }{ 12 } :\frac { 1 }{ 12 } \) அதாவது 1:1
தொடரும் கூட்டாளியின் புதிய பங்கு =பழைய பங்கு +ஆதாயப்பங்கு
குமார் \(=\frac { 1 }{ 2 } +\frac { 1 }{ 12 } =\frac { 6+1 }{ 12 } =\frac { 7 }{ 12 } \)
கேசவன் \(=\frac { 1 }{ 3 } +\frac { 1 }{ 12 } =\frac { 4+1 }{ 12 } =\frac { 5 }{ 12 } \)
எனவே, குமார் மற்றும் கேசவன் ஆகியோரின் புதிய இலாப விகிதம் \(\frac { 7 }{ 12 } :\frac { 5 }{ 12 } \) அதாவது 7:5
35.
| செலவுகள் | ரூ | வருமானம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|
| சந்தா | 48,000 | |||
| கூட்டுக: பெறவேண்டிய சந்தா (2018-2019) | 12,000 | 60,000 | ||
| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|
| முன்கூட்டிப் பெற்ற 2019-20 ஆம் ஆண்டிற்கான சந்தா | 3,000 | பெறவேண்டிய சந்தா | ||
| 2017 – 2018 | 1,000 | |||
| 2018 – 2019 | 12,000 | 13,000 |
மாணவர் குறிப்பு

36.
முதல் மீதான வட்டி கணக்கிடுதல்:
அந்தோணி முதல் மீது வட்டி:
முதல் மீது வட்டி = முதல் தொகை x வட்டி வீதம் x வட்டிக்குரிய காலம்

குறிப்பு: அக்பர் கொண்டு வந்த கூடுதல் முதல் எந்த நாள் என்று கொடுக்காததால் முதல் மீது வட்டி சராசரி காலமாக 6 மாதங்களுக்கு கணக்கிட வேண்டும்.
37.
ஆதாய பங்கு =புதிய பங்கு – பழைய பங்கு
வினோத் \(=\frac { 2 }{ 3 } =\frac { 3 }{ 10 } =\frac { 20-9 }{ 30 } =\frac { 11 }{ 30 } \)
விமல் \(\\ =\frac { 1 }{ 3 } -\frac { 2 }{ 10 } =\frac { 10-6 }{ 30 } =\frac { 4 }{ 30 } \)
ஆகையால், வினோத் மற்றும் விமல் ஆகியோரின் ஆதாய விகிதம் = 11 : 4
38.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. |
வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 2019 ஜன 1 | மேரி முதல் க/கு ப | 25,000 | ||
| மீனா முதல் க/கு ப | 25,000 | |||
| மரியம் முதல் க/கு ப | 25,000 | |||
| இலாப நட்ட க/கு | 75,000 | |||
| (பகிர்ந்து தரா நட்டம் அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்பட்டது.) |
39.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்கக் க/கு (அளித்தது) | 1,60,000 | இருப்பு கீ/கொ | 50,000 |
| வெளித்திருப்பம் க/கு | 6,000 | கொள்முதல் க/கு (கடன்) (இருப்புக் கட்டும் தொகை) | 1,86,000 |
| இருப்பு கீ/இ | 70,000 | ||
| 2,36,000 | 2,36,000 |
40.
| விவரம் | ரூ. |
|---|---|
| இறுதி முதல் (31.3.2017) | 3,50,000 40,000 |
| கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள் | |
| 3,90,000 70,000 |
|
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் | |
| சரிக்கட்டப்பட்ட இறுதி முதல் | 3,20,000 2,00,000 |
| கழிக்க: தொடக்க முதல் (1.4.2016) | |
| அவ்வாண்டின் இலாபம் | 1,20,000 |
41.
| விவரம் | 2015-16 | 2016-17 | தொகையின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
சதவீதத்தின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
|---|---|---|---|---|
| ரூ. | ரூ. | ரூ. | ||
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 3,00,000 | 3,60,000 | +60,000 | +20 |
| கூட்டுக: இதர வருமானங்கள் | 1,00,000 | 60,000 | –40,000 | –40 |
| மொத்த வருமானங்கள் | 4,00,000 | 4,20,000 | +20,000 | +5 |
| கழிக்க: செலவுகள் | 2,00,000 | 1,80,000 | –20,000 | –10 |
| வரிக்கு முன் இலாபம் | 2,00,000 | 2,40,000 | +40,000 | +20 |
| கழிக்க: வருமானவரி 30% | 60,000 | 72,000 | +12,000 | +20 |
| வரிக்கு பின்னர் உள்ள இலாபம் | 1,40,000 | 1,68,000 | +28,000 | +20 |
42.
| செலவுகள் | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| சந்தா | 40,000 | |||
| கழிக்க:2015-2016 ஆம் ஆண்டுக்கான சந்தா | 5,000 | |||
| 35,000 | ||||
| கழிக்க:2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா | 3,000 | |||
| 32,000 | ||||
| கூட்டுக:2016-17 ஆம் ஆண்டிற்கான சந்தா பெற வேண்டியது | 1,000 | 33,000 |
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| 2017-2018 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது | 3,000 | 2016-2017 ஆம் ஆண்டிற்கான சந்தா பெற வேண்டியது | 1,000 |
43.
உரிமையாளர் விகிதம் = =0.5:1
பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + முன்னுரிமை பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி
= 1,00,000 + 75,000 + 25,000
= ரூ.2,00,000
44.
(i) நடப்பு விகிதம் = = \(\frac{1,50,000}{50,000}\) = 3.1
நடப்புச் சொத்துகள் = சரக்கிருப்பு + கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் + ரொக்க ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் + முன்கூட்டிச் செலுத்தியச் செலவுகள்
= 45,000 + 70,000 + 30,000 + 5,000 = ரூ.1,50,000
நடப்புப் பொறுப்புகள் = குறுகியகாலக் கடன்கள் + கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் + கொடுபட வேண்டிய செலவுகள் + குறுகிய கால ஒதுக்குகள்
= 17,000 + 25,000 + 3,000 + 5,000 = ரூ.50,000
(ii) விரைவு விகிதம் = =\(\frac {1,00,000}{50,000}\) = 2:1
நீர்மைச் சொத்துகள் = மொத்த நடப்புச் சொத்துகள் – சரக்கிருப்பு – முன்கூட்டிச் செலுத்திய செலவுகள்
= 1,50,000 – 45,000 – 5,000 = ரூ.1,00,000
45.
2018 ஆம் ஆண்டுக்குரிய சந்தா மூலம் பெற்ற வருமானம் கணக்கிடுதல்
| விவரம் | ரூ | ரூ |
|---|---|---|
| 2018 ஆம் ஆண்டில் பெற்ற சந்தா | 1,50,000 | |
| கூட்டுக: 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா 2017-ல் பெற்றது | 3,000 | |
| 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா பெற வேண்டியது | 7,000 | 10,000 |
| 1,60,000 | ||
| கழிக்க: 2017-ல் பெற வேண்டிய சந்தா | 10,000 | |
| 2018-ல் முன்கூட்டிப் பெற்ற சந்தா | 5,000 | 15,000 |
| 2018 ஆம் ஆண்டில் சந்தா மூலம் பெற்ற வருமானம் | 1,45,000 |
46.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/இ | 50,000 | ரொக்கக் க/கு | 1,50,000 |
| விற்பனை க/கு (கடன்) (இருப்புக் கட்டும் தொகை) | 1,90,000 | உள் திருப்பம் க/கு | 15,000 |
| வாராக்கடன் க/கு | 5,000 | ||
| இருப்பு கீ/இ | 70,000 | ||
| 2,40,000 | 2,40,000 |
மொத்த விற்பனை = ரொக்க விற்பனை + கடன் விற்பனை
= ரூ. 1,40,000 + ரூ. 1,90,000
= ரூ. 3,30,000
47.
48.
| விவரம் | 2015-16 | 2016-17 | தொகையின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
சதவீதத்தின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
|---|---|---|---|---|
| ரூ. | ரூ. | ரூ. | ||
| I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||||
| பங்குதாரர் நிதி | 1,00,000 | 2,60,000 | +1,60,000 | +160 |
| நீண்ட காலப் பொறுப்புகள் | 50,000 | 60,000 | +10,000 | +20 |
| நடப்புப் பொறுப்புகள் | 25,000 | 30,000 | +5,000 | +20 |
| மொத்தம் | 1,75,000 | 3,50,000 | +1,75,000 | +100 |
| II. சொத்துகள் | ||||
| நிலைச் சொத்துகள் | 1,00,000 | 2,00,000 | +1,00,000 | +100 |
| நடப்புச் சொத்துகள் | 75,000 | 1,50,000 | +75,000 | +100 |
| மொத்தம் | 1,75,000 | 3,50,000 | +1,75,000 | +100 |
49.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (20,000 × 4) | ப | 80,000 | |||
| பங்கு விண்ணப்பக் க/கு | 80,000 | ||||
| (பங்கு விண்ணப்பப் பணம் பெறப்பட்டது) | |||||
| பங்கு விண்ணப்பக் க/கு | ப | 80,000 | |||
| பங்குமுதல் க/கு | 80,000 | ||||
| (விண்ணப்ப பணம் பங்கு முதலுக்கு மாற்றப்பட்டது) | |||||
| பங்கு ஒதுக்கீடு க/கு (20,000 × 4) | ப | 80,000 | |||
| பங்குமுதல் க/கு | 80,000 | ||||
| (பங்கு ஒதுக்கீடு பணம் பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (20,000 × 4) + (300 x 2) | ப | 80,600 | |||
| பங்கு ஒதுக்கீடு க/கு | 80,000 | ||||
| அழைப்பு முன்பணம் க/கு (300 × 2) | 600 | ||||
| (பங்கு ஒதுக்கீடு பணம் மற்றும் அழைப்பு முன்பணம் பெறப்பட்டது) | |||||
| பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு (20,000 × 2) | ப | 40,000 | |||
| பங்குமுதல் க/கு | 40,000 | ||||
| (பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற வேண்டியது | |||||
| வங்கி க/கு (19,700 × 2) | ப | 39,400 | |||
| அழைப்பு முன்பணம் க/கு | 600 | ||||
| பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | 40,000 | ||||
| (பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெறப்பட்டு, அழைப்பு முன்பணம் சரிக்கட்டப்பட்டது). |
50.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (1,20,000 × 5) | ப | 6,00,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 6,00,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு (1,00,000 × 5) | ப | 5,00,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 5,00,000 | ||||
| (நேர்மைப் பங்கு விண்ணப்பத் தொகையை பங்கு முதலுக்கு மாற்றியது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு (20,000 × 5) | ப | 1,00,000 | |||
| வங்கி க/கு | 1,00,000 | ||||
| (மிகுதியான பங்கு விண்ணப்பத்தொகை திருப்பிச் செலுத்தியது) | |||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | ப | 3,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 3,00,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 3,00,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 3,00,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | ப | 2,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 2,00,000 | ||||
| (பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 2,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | 2,00,000 | ||||
| (பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற்றது) |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards