12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Annual Exam Model Question Paper with Answer key - 2021
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
இயற்கையில் சர்க்கரை எவற்றில் உள்ளது?
2.
முதல் சிற்றினங்களுக்கிடையேயான உடல் கலப்பினங்களை உருவாக்கியவர் யார்? குறிப்பு வரைக.
3.
கடல் சாமந்தியின் பாலிலி இனப்பெருக்க முறையை விவரி.
4.
உடல் வெளிக் கருவுறுதல் எவ்வகைப் பெண்களுக்கு பயன் அளிக்கும்?
5.
சூழ்நிலையியல் படிநிலைகள் என்றால் என்ன? பல்வேறு சூழ்நிலையியல் படிநிலைகளை எழுதுக.
6.
செந்தரவுப் புத்தகம் என்றால் என்ன? அதனுடைய நோக்கத்தைக் குறிப்பிடவும்.
7.
பாலிமரேஸ் சங்கிலி வினையைப் பயன்படுத்தி விரும்பிய மாதிரியில் எவ்வாறு மரபணு பெருக்கம் செய்யப்படுகின்றது?
8.
முதன்மை இழை மற்றும் பின்தங்கும் இழை – வேறுபடுத்துக.
9.
தாவர கருவியலின் மைல்கற்களை வெளிக்கொணர்க.
10.
சூழல்வெளி பாதுகாப்பின் முக்கிய கருத்துகளை தொகுத்து எழுதுக.
11.
இரு ஒடுங்கு தன்மையுள்ள ஆட்டோசோம் மரபணுக்கள் a மற்றும் b உடைய வேறுபட்ட காரணி நிலை -ஒரு இரு இணை ஒடுங்கு பெற்றோரோடு கலப்பு செய்யப்படுகிறது அவற்றிற்கான புறத்தோற்ற விகிதத்தை பின் வரும் சூழலில் கண்டறி.
12.
நீர் மாசுபாட்டினை தடுக்கும் முறைகளை வரிசைப்படுத்துக.
13.
கடல் சாமந்தி மற்றும் நாடாப்புழுவில் நடைபெறும் பாலிலி இனப்பெருக்க முறையான துண்டாதல் பற்றி விரிவாக விடையளி.
14.
நீயறிந்த ஏதாவது இரு தாவரங்களின் செயலாக்க மூலமருந்து மற்றும் மருத்துவ முக்கியத்துவத்தை தருக.
15.
பயிர் பெருக்கத்தில் புதிய பண்புக்கூறுகளை உருவாக்கும் புதிய பயிர்பெருக்க தொழில்நுட்ப முறைகளைப் பட்டியலிடுக.
16.
வழிமுறை வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முறைப்படி வரிசைப்படுத்தி, வழிமுறை வளர்ச்சியின் வகையைக் கண்டறிந்து விளக்குக.
நாணற் சதுப்பு நிலை, தாவரமிதவை உயிரிநிலை, புதர்செடி நிலை, நீருள் மூழ்கிய தாவரநிலை, காடுநிலை, நீருள் மூழ்கி மிதக்கும் நிலை, சதுப்பு புல்வெளி நிலை.
17.
களைக்கொல்லியைத் தாங்கிக்கூடிய பயிர்களின் நன்மைகள் யாவை?
18.
பல்கூட்டு பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
19.
நுண்வித்துருவாக்கத்திலுள்ள படிநிலைகளை விவாதி.
20.
பொதுவாக முதல்நிலை வழிமுறை வளர்ச்சியில் தொடர்புடைய சிற்றினம்?
லைக்கன்
மாஸ்கள்
நுண்ணுயிரிகள்
இவை அனைத்தும்
21.
முதன் முதல் மரபணுத் தொகுப்பு வரிசைப்படுத்தப்பட்ட தாவரம்
ஸொலனம் டியுபரோசம்
ஜியோ மெய்ஸ்
ஒரைசா சாட்டைவா
ட்ரிட்டிகம் ஏஜிப்டியாக்கா
22.
எலைசா என்ற உயிர் வேதி செய்முறையை கண்டறிந்தவர்கள் யார்?
கேரி முல்லிஸ்
அலிக் ஐசக்ஸ் மற்றும் ஜீன் லிண்ட்மேன்
கேம்பெல் மற்றும் வில்மட்
எவா எங்வால் மற்றும் பீட்டர் பெர்ல்மான்
23.
குறுகிய காலம் வாழும் ஒரு பருவத்தாவரம், சதைப்பற்றுடைய மற்றும் சதைப்பற்றற்ற தாவரங்கள் இதற்கு எடுத்துக்காட்டு _____________
வறண்ட நிலத்தாவரம்
சதைப்பற்றற்ற தாவரம்
செயல்நிலை வறட்சி
இயல்நிலை வறட்சி
24.
கருவின் இதயம் ________ வாரம் உருவாகின்றது.
முதல்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
25.
தாய் சேய் இணைப்புத் திசுவில் குரோமோசோம் பிறழ்ச்சிக்கான ஆய்வு
உடல்வெளிக்கருவுறுதல்
GIFT
ZIFT
கோரியான் நுண்நீட்சி ஆய்வு
26.
பின்வருவனவற்றில் எது உணவுச் சங்கிலிகளின் ஊட்ட நிலைகளை கடக்கும்போது எப்போதும் குறைகின்றது?
எண்ணிக்கை
வேதிப்பொருள்
ஆற்றல்
விசை
27.
உயிரினங்களின் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம் ____.
WWF
IUCN
ZSI
UNEP
28.
பயிர் பெருக்கத்தில் வேகமான முறை _____.
அறிமுகப்படுத்துதல்
தேர்ந்தெடுத்தல்
கலப்பினமாதல்
சடுதிமாற்றப்பயிர்பெருக்கம்
29.
தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன?
டி.என்.ஏ மூலக்கூறின் 5 முனையில் மட்டுமே இரட்டிப்படைதல் தோன்றும்.
டி.என்.ஏ லைகேஸ் நொதி 3'➝ 5' திசையிலேயே செயல்படும்.
டி.என்.ஏ பாலிமரேஸ் நொதி, வளர்ந்து வரும் இழையின் 3' முனைப் பகுதியில் மட்டுமே புதிய நியூக்ளியோடைடுகளை இணைக்கும்.
ஹெலிகேஸ் நொதிகள் மற்றும் ஒற்றை இழை இணைப்புப் புரதம் ஆகியவை 5' முனையிலேயே செயல்படும்.
30.
மறுகூட்டிணைவு நிகழ்விரைவு 0.09 என இருந்தால், A மற்றும் B என்ற இரு அல்லீல்களை பிரிக்கும் வரைபட அலகு எதுவாக இருக்கும்?
900 cM
90 cM
9 cM
0.9 cM
31.
புள்ளி சடுதிமாற்றத்தால் DNA வின் வரிசையில் ஏற்படும் ஒத்த பதிலீடு, ஒத்த பதிலீடு வேறுபட்ட பதிலீடு, வேறுபட்ட பதிலீடு முறையே _______.
A ⟶ T, T ⟶ A, C ⟶ G மற்றும் G ⟶ C
A ⟶ G, C ⟶ T, C ⟶ G மற்றும் T ⟶ A → W
C ⟶ G, A ⟶ G, T ⟶ A மற்றும் G ⟶ A
G ⟶ C, A ⟶ T, T ⟶ A மற்றும் C ⟶ G
32.
ஒரே குரோமோசோமில் G S L H என்ற மரபணுக்கள் அமைந்துள்ளன. மறுகூட்டிணைவு விழுக்காடு L க்கும் G க்கும் இடையே 12 %, S க்கும் L க்கும் இடையே 50%, H க்கும் S க்கும் இடையே 20 % எனில் மரபணுக்களின் சரியான
வரிசையை எழுதுக.
G H S L
S H G L
S G H L
H S L G
33.
முப்புள்ளி சோதனைக் கலப்பின் மூலம் துல்லியமான மரபணு வரைபடம் வரைய முடியும் ஏனெனில் இதன் அதிகரிப்பால்
ஒற்றைக் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது
இரட்டைக் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது
பல் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது
மறுகூட்டிணைவு நிகழ்விரைவு சாத்தியமாகிறது
34.
A மற்றும் B என்ற மரபணுக்கள் குரோமோசோமின் மீது 10 cM தொலைவில் அமைந்துள்ளது. ஒரு மாற்றுப்பண்பு கருமுட்டை AB/ab என்பதோடு ab/ ab யை சோதனைக் கலப்பு செய்தால் மொத்த 100 வழித்தோன்றல்களில் ஒவ்வொரு வழித்தோன்றலிலும் எத்தனை இனங்களை எதிர்பார்க்கலாம்
25 AB, 25 ab, 25 Ab, 25 aB
10 AB, 10 ab
45 AB, 45 ab
45 AB, 45 ab, 5 Ab, 5 aB
35.
புவி வெப்பமடைதலை நாம் ஏன் தடுக்க வேண்டும்?
36.
உயர்மலைச் சாரல் உயிர்த்தொகை பற்றி சிறுகுறிப்பு தருக.
37.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை வரைந்து A, B, C பாகங்களை குறிப்பிட்டு, எந்த வகையான ஒட்டுண்ணி என எழுதி எ.கா தருக.
38.
உடலக்கரு உருவாக்கத்தின் பயன்பாடு எது?
39.
பொய்யான பிரசவ வலியை ஏற்படுத்துவது எது?
40.
லாமார்க்கின் பெறப்பட்ட பண்புக்கோட்பாட்டினை தவறென நிரூபித்தவர் யார்? எவ்வாறு நிரூபித்தார்?
41.
இயற்கை வேளாண்மையின் முக்கியப் பண்புகளை எழுதுக.
42.
கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக.
| நோய்கள் | நோய்க்காரணி | அறிகுறிகள் |
| அஸ்காரியாசிஸ் | அஸ்காரிஸ் | |
| டிரைகோஃபைட்டான் | உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட, செதில் புண்கள் காணப்படுதல். |
|
| டைபாய்டு | அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல். | |
| நிமோனியா |
43.
1.
கரும்புத் துண்டு, பீட்ரூட், ஆப்பிள்
2.
கார்ல்சனும், அவருடைய சகாக்களும் நிகோட்டியானா குளாக்கா, நிகோட்டியானா லாங்ஸ்டோர்ஃபி தாவரங்களுக்கிடையேயான சிற்றினங்களுக்கிடையிலான முதல் உடல் கலப்பினங்களை 1971இல் உருவாக்கினார்.
3.
1. துண்டாதல் முறையில் சாமந்தியின் பல பேரினங்களில் நடைபெறுகிறது.
2. பாதத்தட்டுகளின் அடிப்பகுதியில் ஏற்படும் சுருக்கங்களால் அவை பிரியும்.
3. பிரிந்த கதுப்புகள் ஒவ்வொன்றிலும் குடல் தாங்கிகளும், உணர்கொம்புகளும் வளர்ந்து புதிய கடற்சாமந்திகள் உருவாகின்றன.
4.
5.
(i) சூழலோடு உயிரினங்கள் செயல்படுவதால் ஏற்படும் உயிரினத் தொகுதிகள் சூழ்நிலையியல் படிகள்.
6.
(i) சொந்தரவுப் புத்தகம் என்பது அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் ஆகும்.
(ii) உலக பாதுகாப்பு கூட்டமைப்பு சொந்தரவுப் புத்தகத்தை பராமரிக்கிறது.
நோக்கங்கள்:
(i) உயிரின பல்வகைத் தன்மைக்கு எதிரான அச்சுறுத்தல்களின் அளவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
(ii) மரப்பற்றுப் போகும் நிலையில் உள்ள உயிரினங்களை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தல்.
(iii) குறைந்து வரும் உயிரின பல்வகைத் தன்மைக்கு உலகளாவிய குறியீட்டெண்ணை வழங்குதல்.
(iv) பாதுகாப்பு தேவைப்படும் உயிரினங்களின் பட்டியலை முன்னுரிமை அடிப்படையில் தயார் செய்தல் மற்றும் பாதுகாப்பு செயல்பாடுகளில் உதவுதல்.
(v) பல்வகைத் தன்மை பாதுகாப்பு தொடர்புடைய பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகள் பற்றிய தகவல்கள் அளித்தல்.
(vi) சிவப்பு பட்டியலில் உள்ள சிற்றினங்கள் 8 வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1. மரபற்றுப் போனவை
2. மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவை
3. எளிதில் பாதிக்கப்படக் கூடியவை
4. முழுமையான தகவல் இல்லாதவை
5. வனத்தில் மரபற்றுப் போனவை.
6. அழியும் நிலையில் உள்ளவை
7. குறித்த ஆபத்துடையவை
8. மதிப்பீடு செய்யப்படாதவை.
7.
(i) இது இயல்புதிரிபு உற்பத்தி நீட்சி ஆகிய மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.
(ii) அதிக வெப்பநிலையை பயன்படுத்தி நமக்கு தேவைப்படும் இரட்டைச் சுருள் டி.என்.ஏ வின் இயல்பைத் திரித்து இரண்டு தனித்தனியான இழைகளாகப் பிரிக்கப்படுகிறது. இவை 95o C வெப்ப நிலையில் நடைபெறுகிறது.
(iii) முதன்மை இணைப்பு இழையின் நீட்சி அல்லது உருவாக்கத்தின் போது கலவையின் வெப்ப நிலை 75o C-க்கு உயர்த்தப்பட்டு போதுமான கால அளவிற்கு நிலை நிறுத்தப்படுகிறது.
(iv) இதனால் Tag டி.என்.ஏ பாலிமரேஸ் தனித்த அச்சு வார்ப்பு டி.என்.ஏ விலிருந்து நகலெடுக்கப்பட்டு முதன்மை இணைப்பு இழை நீட்சியடையச் செய்கிறது.
(v) அடைகாப்புக் காலத்தின் இறுதியில் இரு அச்சு வார்ப்பு இழைகளும் பகுதியளவு இரட்டைச் சுருள் இழைகளாக மாற்றப்படும்.
(vi) இவ்வாறு உருவாகும் இரட்டைச் சுருள்களிலுள்ள ஒவ்வொரு புது இழையும் கீழ் நோக்கிய வேறுபட்ட தொலைவுகளில் நீண்டு காணப்படும்.
8.
| முதன்மை இழை | பின்தங்கும் இழை | |
| 1 | இது தொடர் இழை (அ) வழிகாட்டு இழை எனப்படும். இது 3' ⟶ 5' திசை கொண்ட வார்ப்புரு இழையில் இரட்டிப்பதால் - தொடர்ச்சியாக நடைபெறும். | மற்றொரு 5' ⟶ 3' திசை கொண்ட இழையின் இரட்டிப்பதால் தொடர்ச்சியற்றதாகும். இது பின்தங்கும் இழை எனப்படும். |
| 2 | DNA லிகேஸ் நொதி தேவைப்படுவதில்லை | தொடர்ச்சியற்ற புதிய துண்டங்களை DNA - லிகேஸ் நொதி ஒன்றிணைக்கின்றது. |
| 3 | உருவாக்கம் 5' ⟶ 3' திசையில் நடைபெறுகிறது. வார்ப்புரு இழையின் திசை 3' ⟶ 5' ஆகும் | இதன் திசை 5' ⟶ 3' ஆயினும் ஒட்டு மொத்த வார்ப்புரு இழையின் திசை 3' ⟶ 5' ஆகும். |
9.
1682 நெகமியா குரூ - மலரின் ஆண் உறுப்பை மகரந்தத்தாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
1694 R.J. கேமராரியல் - மலர், மகரந்தப்பை, மகரந்தத்துகள் மற்றும் சூல் அமைப்பு பற்றி விவரித்துள்ளார்.
1761 J.G கோல்ரூட்டர் - மகரந்தச் சேர்க்கையில் பூச்சிகளின் முக்கியத்துவம் பற்றி விரிவாக தொகுப்பு தந்துள்ளார்.
1824 G.B அமிசி - மகரந்தக் குழாயைக் கண்டறிந்தார்.
1848 ஹாப்மீஸ்டர் - நான்மய மகரந்தத்துகள் (pollen tetrad) அமைப்பு பற்றி விளக்கியுள்ளார்.
1870 ஹான்ஸ்டீன் - கேப்செல்லா மற்றும் அலிஸ்மா தாவரங்களில் கரு வளர்ச்சி பற்றி விவரித்துள்ளார்.
1878 E. ஸ்ட்ராஸ்பர்கர் - பல்கரு நிலையை பதிவு செய்துள்ளார்.
1884 E. ஸ்ட்ராஸ்பர்கர் - கேமீட்களின் இணைவைக் கண்டறிந்தார்.
1898 & 1899 S.G. நவாஷின் மற்றும் L. கினார்டு இருவரும் தனித்தனியாக இரட்டைக் கருவுறுதலைக் கண்டுபிடித்தனர்.
1904 E. ஹேன்னிங் - செயற்கை முறையில் கரு வளர்ச்சியை தொடங்கினார்.
10.
1. சூழல்வெளி பாதுகாப்பு என்பது அரிய தாவரங்கள் விலங்குகளை அவற்றின் இயற்கை வாழிடங்களுக்கு வெளியே பாதுகாத்தல் ஆகும்.
2. இது வெளிப்புற சேகரிப்பு மற்றும் மரபணு வங்கிகளை உள்ளடக்கியது.
வெளிப்புற சேகரிப்பு:
1. தாவரவியல் பூங்கா, விலங்கியல் பூங்கா, வனவிலங்கு சுற்றுலா பூங்கா, ஆர்போரிட்டா ஆகியவற்றில் வளர்க்கப்படும் உயிரினங்களைச் சேகரித்தல் வெளிப்புற சேகரிப்பு எனப்படும்.
2. உயிரினங்கள் சிறைப்பட்ட நிலையில் இனப்பெருக்கம் செய்வதன் மூலம் வனங்களில் மரபற்றுப் போன பல விலங்குகள் விலங்கியல் பூங்காக்களில் தொடர்ந்து பராமரிக்கப்படுகின்றன.
3. இம்முறையில் முதலை மற்றும் கங்கை டால்பின் ஆகிய இனங்கள் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டன.
மரபணு வங்கிகள்:
1. மரபணு வங்கி என்பது மரபணு பொருட்களை பாதுகாக்கும் ஒரு உயிர் களஞ்சியமாகும்.
2. வணிக ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு ரக தாவர விதைகளை விதை வங்கிகளில் நீண்ட காலங்களுக்கு சேமிக்கலாம்.
3. அழியும் நிலையில் உள்ள இனங்களின் இனச்செல்களை வளமாகவும் மற்றும் வீரியமாகவும் உறைநிலை பாதுகாப்பு முறையில் மூலமாக நீண்ட நாட்கள் பாதுகாக்கலாம்.
4. இருப்பினும் அனைத்து சூழ்நிலை மண்டலங்களையும் பொருளாதார ரீதியாக காப்பாற்ற இயலாது.
5. அழிவில் இருந்து உயிரிகளின் எண்ணிக்கை பாதுகாப்பு முயற்சிகளை விட அதிகமாகவே உள்ளது.
11.
அ) a மற்றும் b வெவ்வேறு ஆட்டோசோம்களில் காணப்படுகிறது.
ஆ) a மற்றும் b ஒரே ஆட்டோசோமில் பிணைந்து காணப்பட்டாலும் அவை குறுக்கேற்றம் நிகழ ஏதுவாக உள்ளது.
இ) a மற்றும் b ஒரே ஆட்டோசோமில் நெருங்கி பிணைந்து காணப்படுவதால் - அவற்றிற்கிடையே குறுக்கேற்றம் நடைபெறும் வாய்ப்பு இல்லை.
இதைப் புரிந்து கொள்ள பிணைப்பு, குறுக்கேற்றம் மற்றும் சார்பின்றி ஒதுங்குதல் காணப்படுகிறது.
a) F2 ஜீனாக்கம் மற்றும் புறத்தோற்ற விகிதம்
AaBb : Aabb : aaBb : aabb
1 : 1 : 1 : 1
b) குறுக்கேற்றம் நடத்தாலும் அதே முடிவுகளே கிடைக்கின்றன.
F2 ஜீனாக்கம் மற்றும் புறத்தோற்ற விகிதம்
AaBb : Aabb : aaBb : aabb
1 : 1 : 1 : 1
c) a மற்றும் b பிணைப்பு -குறுக்கேற்றம் இன்றி நடைபெறும் போது - வேறுபட்ட காரணி நிலை பெற்றோர் AB/ab -(அ) Ab/aB (டிரான்ஸ்)
மறுசேர்க்கை கேமிட்கள் உருவாகவில்லை - குறுக்கேற்றம் நடைபெறவில்லை
அது Ab &aB (50% ஒவ்வொன்றும்)
சோதனைக் கலப்பு
12.
1. மாசுபடுத்திகளை அவை உற்பத்தியாகும் இடத்திலேயே முறைப்படுத்துதல் அல்லது தடுத்தல்
2. நகராட்சி கழிவுநீர் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் சுத்திகரிக்கப்பட வேண்டும்.
3. கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள், மற்றும் தொழிற்சாலை நீர்மக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகள் நிறுவ வேண்டும்.
4. செயற்கை உரங்கள் மற்றும் தீங்குயிர்க்கொல்லிகளின் பயன்பாட்டினை முறைப்படுத்த வேண்டும்.
5. பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் ஈடுபாடு அவசியமாகும்.
13.
1. இதில் பெற்றோர் உடலானது பல துண்டுகளாகப் பிரிந்து ஒவ்வொரு துண்டும் புதிய உயிரியாக வளரும்.
2. கடல் சாமந்தியில் பாதத்தட்டுகளின் அடிப்பகுதியில் ஏற்படும் சுருக்கங்களால் பிரிந்து கதுப்புகள் உருவாகும்.
3. ஒவ்வொரு கதுப்பும் ஒரு புதிய கடற்சாமந்தியாக வளரும்.
4. நாடாப்புழுவில் வயதான பழுத்த கண்டங்கள் பின்பகுதியில் உள்ளன.
5. இவை பகுதியாகவோ அல்லது தனியாகவோ பிரியும் செயலுக்கு அபோலைசிஸ் என்று பெயர்.
6. பிரிந்த கண்டங்கள் இரண்டாம் நிலை விருந்தோம்பியை அடைந்து அதன் வாழ்க்கைச் சுழற்சியை முழுமையாக்குகிறது.

14.
I) கீழாநெல்லி (பில்லாந்தஸ் அமாரஸ்)
(செயலாக்க மூல மருந்து)
ஃபிலாந்தின் மருத்துவ முக்கியத்துவம்
(i) மஞ்சள் காமாலை, கல்லீரல் பாதுகாப்பு மருந்து
(ii) டாக்டர் நியாகராஜன், ஃபிலாந்தஸ் அமாரஸ் ஹெபடைட்டிஸ் வைரஸ் தாக்குதலை எதிர்க்கிறது என நிரூபித்தார்.
II) நில வேம்பு (ஆண்ட்ரோகிராபிஸ் பானிகுலேட்டா)
(செயலாக்க மூல மருந்து)
ஆண்ட்ரோகிராபைடுகள் மருத்துவ முக்கியத்துவம்
(i) கல்லீரல் நோய்களுக்கு மருந்து
(ii) எட்டு மூலிகைகளுடன் சேர்ந்து தயாரிக்கப்படும். நிலவேம்புக் குடிநீர், மலேரியா, டெங்கு சிகிச்சைக்குப் பயன்படும்.
15.
புதிய பயிர்பெருக்க தொழில் நுட்ப முறைகள் தேர்வு செய்தல், அறிமுகப்படுத்துதல், கலப்புறுத்தம், பன்மயம், சடுதிமாற்றம், திசு உற்பத்தி மற்றும் உயிரியல் தொழில்நுட்ப முறைகள்.
1. மரபணு தொகையத்தை வெட்டுதல் மற்றும் மாற்றியமைத்தலை CRISPR / Cas போன்ற முறைகள் செய்கின்றன.
2. மரபணு தொகைய திருத்தம் – ஆலிகோ நியூக்ளியோடைடு இயக்கத் திடீர் மாற்றக் காரணி (ODM) என்ற நுட்பத்தின் மூலம் சில இணை காரங்களில் மாற்றங்களைச் செய்தல்.
3. ஒரே சிற்றினம் அல்லது நெருங்கிய தொடர்புடைய சிற்றினத்திற்குள் மரபணுக்கள் மாற்றப்படுவது. (cisgenesis)
4. DNA வை மாற்றம் செய்யாமல் அதற்குள் இருக்கும் மரபணுவின் செயல்பாடுகளை ஒருங்கமைக்கும் முறை (epigenetic methods)
16.
1. தாவர மிதவை உயிரிநிலை (Phytoplankton state) -நீலப்பசும்பாலிகள், பாக்டீரியங்கள், சயனோ பாக்டீரியங்கள், பசும்பாசிகள், டயட்டம் போன்ற முன்னோடி குழுமங்களைக் கொண்ட வழிமுறை வளர்ச்சியின் முதல்நிலை இதுவாகும்.
2. இந்த உயிரினங்களின் குடிபெயர்பு, வாழ்க்கை செயல்முறைகள், இறப்பின் மூலமாக குளத்தின் கரிம பொருளின் அளவு மற்றும் ஊட்டச்சத்து செறிவடைகிறது. இது வளர்ச்சியின் அடுத்த படிநிலை வளர்ச்சிக்கு உதவுகிறது.
3. நீருள் மூழ்கிய தாவர நிலை (Submerged plant stage)- மிதவை உயிரிகளின் இறப்பு மற்றும் மட்குதலின் விளைவாலும், மழைநீர் மூலம் நிலத்திலிருந்து மண் துகள்கள் அடித்து வரப்படுவதாலும், குளத்தின் அடிப்பகுதியில் ஒரு தளர்வான மண் உருவாக்க வழி வகுக்கிறது. எனவே வேரூன்றி நீருள் மூழ்கி வாழும் நிர்வாழ்த்தாவரங்கள் புதிய வாழ்தளத்தில் தோன்ற ஆரம்பிக்கிறது. எ.காட்டுகள்: கேரா, யூட்ரிகுலேரியா,
4. தாவரங்களின் இறப்பு மற்றும் சிதைவு குளத்தின் அடித்தளத்தை உயர்த்துவதால் குளம் ஆழற்றதாக மாறுகிறது. எனவே இந்த வாழிடம் நீருள் மூழ்கி மிதக்கும் நிலையிலுள்ள வேறுவகையான தாவரங்கள் குடியேறுவதற்கு ஏதுவாக அமைகிறது.
5. நீருள் மூழ்கி மிதக்கும் நிலை (Submerged free floating stage)- இந்த நிலையில் குளத்தின் ஆழம் கிட்டத்தட்ட 2-5 அடியாக இருக்கும். எனவே, வேரூன்றிய நிர்வாழ்த் தாவரங்கள் மாற்றும் பெரிய இலைகளுடன் கூடிய மிதக்கும் தாவரங்கள் குளத்தில் குடியேற ஆரம்பிக்கின்றன.
எடுத்துக்காட்டாக, வேரூன்றிய மிதக்கும் தாவரங்களான தாமரை, அல்லி மற்றும் ட்ராபா.
6. இந்த தாவரங்களின் இறப்பு மற்றும் சிதைத்தல் மூலம் குளத்தின் ஆழம் மேலும் குறைகிறது. இதன் காரணமாக மிதக்கும் தாவரங்கள் படிப்படியாக பிற இனங்களால் மாற்றி அமைக்கப்படுவதால் புதிய நிலை ஒன்று உருவாகிறது.
7. நாணற் சதுப்பு நிலை (Reed -swamp stage) - இது நீர்-நில வாழ்நிலை எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த நிலையில் வேரூன்றிய மிதக்கும் தாவரங்கள் பிற தாவரங்களால் மாற்றியமைக்கப்படுகிறது. இது நீர் சூழ்நிலையிலும், நில சூழ்நிலையிலும், நில சூழ்நிலையிலும் வெற்றிகரமாக வாழக்கூடியது. எடுத்துக்காட்டு: பைஃபா.
8. சதுப்பு புல்வெளி நிலை (Marsh meadow stage)-நீரின் அளவு குறைவதால், குளத்தின் ஆழம் குறையும்பொழுது சைப்பரேசி மற்றும் போயேசி இவற்றின் அதிகம் கிளைத்த வேர்களின் உதவியால் பாய் விரித்தது போன்ற தாவரத்தொகுப்பு ஒன்று உருவாகிறது.
9. இது அதிக அளவு நீர் உறிஞ்சுவதற்கும், நீர் இழப்பிற்கு வழிவகுக்கிறது. இந்த நிலையின் முடிவில் மண் வறண்டு சதுப்புநிலத் தாவரங்கள் படிப்படியாக மறைந்து புதர்ச்செடிகள் குடிபுக வழிவகுக்கிறது.
10. புதர்ச்செடி நிலை (shrub stage)-சதுப்பு நிலத் தாவரங்கள் தொடர்ந்து மறைவதாக, மண் வறண்டு போகிறது. எனவே இந்த பகுதிகளில் நிலவாழ்த் தாவரங்களான புதர்ச்செடிகள் (சாலிக்ஸ் மற்றும் கர்னஸ்) ஆகியவை படையெடுக்கின்றன. இந்த தாவரங்கள் அதிக அளவிலான நீரை உறிஞ்சி வறண்ட வாழிடத்தை உருவாக்குகின்றன. அத்துடன் செழுமையான நுண்ணுயிரிகளுடன் கூடிய கரிம மட்கு சேகரமடைவதால் மண்ணில் கனிமவளம் அதிகரிக்கிறது. இறுதியில் அப்பகுதி புதிய மர இனங்களின் வருகைக்கு சாதகமாகிறது.
11. காடுநிலை (Forest stage)-நீர் வழிமுறை வளர்ச்சியின் உச்சநிலை குழுமம் இதுவாகும். இந்த நிலையின்போது பல்வேறு வகையான மரங்கள் படையெடுப்பதோடு ஏதாவது ஒருவகையான தாவரத்தொகுப்பு உருவாகிறது.
17.
| பண்பு | விளைவு | |
| 1 | களைகள் குறைக்கப்படுகிறது; | விளைச்சல் அதிகரிக்கிறது. |
| 2 | களைக்கொல்லி தெளிப்பு (அ) பயன்பாடு குறைகிறது. | செலவு குறைகிறது. சூழலுக்குகந்தது. |
| 3 | தாவரங்கள் களைகளின் போட்டி இன்றி வளர்கிறது. | ஆரோக்கியமான வளர்ச்சியடைய தாவரங்கள் |
| 4 | நச்சுப்பொருட்களின் பயன்பாடு குறைகிறது. | பாதிப்பு மண்ணில் குறைவாகவோ, செயல்திறன் குறைவாகவோ உள்ளது. மண்ணின் தன்மையையும் நுண்ணுயிரிகளையும் இதன் மூலம் பாதுகாக்கலாம். |
18.
வரையறை:
(i) ஒரு உயிரினத்தின் பல மரபணுக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பண்பைத் தீர்மானிக்கும் முறைக்கு பல் மரபணு பாரம்பரியம் ஏற்படுகிறது.
(ii) ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணுக்கள் ஒரு பாரம்பரியத்தை தீர்மானிக்கும் போது பல் மரபணு பாரம்பரியம் ஏற்படுகிறது.
(iii) H - நில்சன் ஹீல் (1909) கோதுமையின் விதையுறைகளில் இவ்வாய்வை நிகழ்த்தி இப்பாரம்பரியத்தை விளக்கினார்.
(iv) சிவப்பு விதையுறை நிறம் (ஓங்கு பண்பு) தாவரத்தை வெள்ளை விதையுறை (ஒடுங்கு பண்பு) தாவரத்துடன் கலப்பு செய்தார்.
(v) அடர் சிவப்பு R1R2R2R2 x வெள்ளை நிறம் r1r1r2r2 இக்கலப்பில்
(vi) 4 - R மரபணுக்கள் மிகுந்த அடர்சிவப்பு நிறம் - 1
(vii) 3 - R மரபணுக்கள் மிதமான அடர் சிவப்பு நிறம் - 1
(viii) 2 - R மரபணுக்கள் சிவப்பு நிறம் - 6
(ix) 1 - R மரபணுக்கள் வெளிர் சிவப்பு நிறம் - 4
(x) R ஓங்கு மரபணு இல்லாமை வெள்ளை நிறம் - 1
(xi) இந்த சிவப்பு நிற செறிவை வரைபடமாக்கினால் ஒரு மணி வடிவ வரைபடம் - கிடைத்தது
(xii) பிற எடுத்துக்காட்டுகள் - மனிதனில் உயரம் & தோல் நிறம்
முடிவுகள்:
நில்சன் ஹீல் ஆய்வு முடிவுகள்:
(i) பிணைதல் இல்லை.
(ii) விதையுறை நிறத்தை மூன்றாவது மரபணுவும் தீர்மானிக்கிறது என்பர் பின்னர் கண்டறியப்படுகிறது.
(iii) மூன்று தனித்த இணை அல்லீல்கள் - இந்த விதையுறை நிறத்தில் பங்கு கொள்கின்றன.
(iv) நிலசன் - ஷீல் F2 சந்ததி விகிதம் 63 : 1
புறத்தோல் விகிதம்
| சிவப்பு | வெள்ளை |
| 63 | 1 |
மரபணு வகையும்
| 1 : 6 : 15 : 20 : 15 : 6 : 1 |
(i) இதன்படி கோதுமை விதையுரையில் கலப்புப் பாரம்பரியம் தென்படவில்லை.
(ii) F2 சந்ததியில் அதிக அளவில் நிற வேறுபாடுகள் காணப்பட்டது.(மரபணுக்களில் தனிதொங்குதல்)
(iii) இதில் பெற்றோர் புறத் தோற்றங்களான அடர் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் இல்லாமல் போனது.
(iv) மரபணுக்களில் கலப்பு இல்லை.
(v) பல மரபணு இலைகளின் ஒட்டு மொத்த விளைவால் - பல்வேறு நிறச் சாயல்கள் தோன்றியது.
(vi) நிலசன் - ஷீல் கருதுகோளின் படி இரு அமைவிடங்களும் கூட்டாக இணைந்து கோதுமை விதையுறை நிறத்தைத் தோற்றுவித்தன.
19.
1. முதல் நிலை வித்து செல்கள் பகுப்புக்கு உட்பட்டு வித்துருவாக்கத் திசுவைத் தோற்றுவிக்கின்றன.
2. வித்துருவாக்க திசுவின் கடைசி செல்கள் நுண் வித்து தாய் செல்களாகச் செயல்படும்.
3. நுண் வித்து தாய் செல்கள், குன்றல் பகுப்பால் நான்கு இருமடிய நுண்வித்துக்களைத் தோற்றுவிக்கும்.
4. நுண் வித்துக்கள் விரைவில், ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிந்து, தனித்தனியாக மகரந்தப்பை அறையில் காணப்படும்.
5. சில தாவரங்களில் நுண் வித்துக்கள் இணைந்து பாலினியம் (Pollinium) என்ற அமைப்பாகும்.
20.
(d)
இவை அனைத்தும்
21.
(c)
ஒரைசா சாட்டைவா
22.
(d)
எவா எங்வால் மற்றும் பீட்டர் பெர்ல்மான்
23.
(c)
செயல்நிலை வறட்சி
24.
(d)
நான்காம்
25.
(d)
கோரியான் நுண்நீட்சி ஆய்வு
26.
(c)
ஆற்றல்
27.
(b)
IUCN
28.
(d)
சடுதிமாற்றப்பயிர்பெருக்கம்
29.
(c)
டி.என்.ஏ பாலிமரேஸ் நொதி, வளர்ந்து வரும் இழையின் 3' முனைப் பகுதியில் மட்டுமே புதிய நியூக்ளியோடைடுகளை இணைக்கும்.
30.
(c)
9 cM
31.
(b)
A ⟶ G, C ⟶ T, C ⟶ G மற்றும் T ⟶ A → W
32.
(b)
S H G L
33.
(d)
மறுகூட்டிணைவு நிகழ்விரைவு சாத்தியமாகிறது
34.
(d)
45 AB, 45 ab, 5 Ab, 5 aB
35.
1. புவியின் வெப்பம் அதிகரிக்கும் போது துருவப் பகுதியில் பனிக்குன்றுகள் மற்றும் பனிக்கட்டிகள் உருகத் தொடங்குகின்றன. இதன் காரணமாக கடல்நீர் மட்டம் உயர்ந்து உலகின் பல பகுதிகளிலுள்ள கடலோர நகரங்கள் மூழ்கும் நிலை ஏற்படும்.
2. காலநிலையில் தீவிர மாற்றங்கள் ஏற்பட்டு அதன் மூலம் கடும் வெள்ளப்பெருக்கு, அதிக வறட்சி போன்றவை நிலவும்.
3. உயிர்ப்பன்மயத் தன்மை குறைந்து வருவதோடு சில சிற்றினங்கள் அழியும் நிலை ஏற்படும்.
36.
1. இமயமலையில் உள்ள உயர்மலைச் சாரல் பகுதியில் விலங்கினங்கள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றன.
2. இங்கு வாழும் முதுகு நாணற்ற விலங்குகள் பெரும்பாலும் கொன்றுண்ணிகளாகவும், ஏரிகள், ஓடைகள் மற்றும் குளங்களில் வாழ்வதாகவும் உள்ளன.
3. முதுகு நாணுள்ளவைகளில் மீன்கள் மற்றும் இருவாழ்விகள் ஆகியவை இங்கு காணப்படவில்லை.
37.
A - ஒட்டுண்ணி உறிஞ்சு வேர்கள்,
B - ஓம்புயிரி
C - ஒட்டுண்ணி
a) முழு ஒட்டுண்ணிகள் - கஸ்குட்டா
38.
(i) இவை திறன் மிக்க நாற்றுருக்களை வழங்கி, பின்னர் வன்மையாக்கத்திற்குப் பின் முழுத் தாவரங்களைக் கொடுக்கிறது.
(ii) செயற்கை விதைகள் உற்பத்திக்கு பயன்படுகிறது.
(iii) எ.கா: அல்லியம் சட்டைவம், ஹோர்டியம் வல்கேர், ஒரைசா சட்டைவா, சியா மெய்ஸ்
39.
1. கர்ப்பகாலம் முழுவதும், அவ்வப்போது இலேசான வலிமையான சுருக்கங்களை கருப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
2. பொய்யான பிரசவ வலியை ஏற்படுத்தும் இந்த சுருக்கங்கள் பிராக்ஸ்டர் ஹிக்ஸ் சுருக்கங்கள் எனப்படும்.
40.
1. ஆகஸ்ட் வீஸ்மான் லாமார்க்கின் பெற்ற பண்புகள் கடத்தப்படுதல் கோட்பாட்டினைத் தவறென்று நிரூபித்தார்.
2. தனது சோதனையில் தொடர்ந்து 20 தலைமுறைகளாக சுண்டெலிகள் வாலினை துண்டித்து பின்னர் இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தினார்.
3. அனைத்து சுண்டெலிகளும் முழுமையான வாலுடனே பிறந்தன.
4. உடல் செல்களில் ஏற்படும் மாற்றம் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாது.
5. இனப்பெருக்க செல்களில் ஏற்படும் மாற்றங்கள் மட்டுமே மரபுக் கடத்தலுக்கு உரியன என்றும் வீஸ்மான் நிரூபித்தார்.
41.
இயற்கை வேளாண்மையின் முக்கியப் பண்புகள்:
1. கரிமப் பொருட்களை பயன்படுத்தி மண்ணின் தரம் பாதுகாத்தல் மற்றும் உயிரிய செயல்பாடுகளை ஊக்குவித்தல்.
2. மண்வாழ் உயிரிகளை பயன்படுத்தி பயிர்களுக்கு ஊட்டச் சத்துகளை மறைமுகமாக அளித்தல்
3. பயறு வகை தாவரங்களை பயன்படுத்தி மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்துதல்
4. பயிர் சுழற்சி, உயிரியப் பல்வகைத்த தன்மை, இயற்கையான கொன்றுண்ணிகள், இயற்கை உரங்கள் மற்றும் பொருத்தமான வேதிய, வெப்ப மற்றும் உயிரிய தலையீடுகள் போன்ற முறைகளால் களை மற்றும் தீங்குயிர்கள் கட்டுப்படுத்துதல்.
42.
| நோய்கள் | நோய்க்காரணி | அறிகுறிகள் |
| அஸ்காரியாசிஸ் | அஸ்காரிஸ் | |
| டிரைகோஃபைட்டான் | உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட, செதில் புண்கள் காணப்படுதல். |
|
| டைபாய்டு | சால்மோனெல்லா | அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல். |
| நிமோனியா | ஸ்ட்ரெப்டோகாக்கஸ் | காய்ச்சல், இருமல் வலியுடன் கூடிய சுவாசம் மற்றும் பழுப்பு நிற சளி. |
43.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards