12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Creative Five mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மற்றும் இதனால் சமூகத்திற்கு ஏற்படும் பயன்கள் பற்றி எழுதுக.
2.
இடதுவரை மையங்கள் மற்றும் இடதுவரை தாவரங்கள் பற்றி எழுதுக.
3.
உயிரித் திரள் பிரமிட் வரையறு. பிரமிடின் வடிவத்தை பொருத்து உயிரித்திரள் பிரமிட் எத்தனை வகைப்படும்?
4.
சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு பற்றி சில குறிப்பு வரைக.
5.
விலங்குகளில் காணப்படும் பல்வேறு நடத்தை சார்ந்த தகவமைப்புகளை வரிசைப்படுத்துக.
6.
மரபணு மாற்றமடைந்த தாவரங்களையும் அவற்றின் பயன்களையும் தொகுத்தெழுதுக.
7.
பல்வேறு வகையான உயரிய விளைபொருட்கள் யாவை? அவற்றின் பயன்களை விளக்குக.
8.
உயிரிய வாயு நிலையத்தில் உயிர் வாயு அலகின் அடிப்படை அமைப்பு மற்றும் உயிரிய வாயு உற்பத்தி முறையை விவரி.
9.
கரும்பின் பயன்கள் கூறு?
10.
இரட்டிப்பாதல் (அ) மீளுறுவாதல்
11.
கலப்புறுத்தலின் படிநிலைகளைப் பற்றி விரிவாக்கவும்
12.
மன அழுத்தம் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் யாது?
13.
உள்ளமைப்பு மற்றும் வாழ்வியல் தக அமைவுகள் தொற்றுத் தாவரங்களில் எவ்வாறு உள்ளன என்று எழுதுக.
14.
15.
மரபியலில் பல்வேறு துணைப்பிரிவுகள் யாவை?
16.
இயற்கை தேர்வு கோட்பாடு டார்வினுக்கு பின் வந்தவர்களின் கண்டுபிடிப்புகள் எவ்வாறு விளக்கப்பட்டது. விவாதி.
17.
திசு வளர்ப்பிற்கான அடிப்படை ஆய்வக வசதிகள் யாவை?
18.
கதிரியக்கக் கழிவுகள் அகற்றும் முறைகளை விவரி?
19.
நீர் மாசுறுதலின் மூல ஆதாரங்கள் யாவை?
20.
பெண் பாலுறுப்புகளுக்குள் முதன்மையானது எது? விளக்குக.
21.
எந்த மெண்டலின் குறைபாட்டு நோய் கொல்லி ஆகும்? விவரி.
22.
தொடக்க நிலை சுயபரிசோதனையால் மார்பகக் புற்றுநோயைத் தடுக்கலாம் -விவரி.
23.
உயிரிகளில் காணப்படும் பல்வேறு வகையான ஒருங்கிணைவு முறைகளை விவரி.
24.
ஹார்ஷே மற்றும் சேஸ் தங்கள் பரிசோதனையான DNA மற்றும் புரதத்தில் DNA தான் மரபணு என்பதை எவ்வாறு நிரூபித்தனர்.
25.
புரதம் தயாரித்தலில் செல் தொழிற்சாலையைப் பற்றி விவரி.
1.
1. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்பது சுற்றுச்சூழல் மேலாண்மையின் ஒரு கருவியாகும்.
2. சூழல் மண்டலம் மற்றும் உயிரியல் சமுதாயங்கள் மீது ஏற்படுத்தப்படும் தாக்கத்தை வெகுவாகக் குறைக்கவும், இயற்கை வளங்களை உகந்த அளவு பயன்படுத்தவும், கட்டுப்படுத்தவும் பரிந்துரைக்க உதவி புரிகிறது.
3. வருங்கால நிதிசார் வளர்ச்சித் திட்டங்கள், அணைக்கட்டுகள், நெடுஞ்சாலைத் திட்டங்கள் முன்மொழியப்பட்ட வளர்ச்சித் திட்டங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் விளைவுகளை முன்னரே கணிக்கப் பயன்படுகிறது.
4. பிராந்தியச் சூழ்நிலைகளுக்கேற்றவாறு சுற்றுச்சூழல் தாக்கத்தினைக் குறைக்கவும், உறுதியான சுற்றுச்சூழல் சீரழிவினைத் தவிர்க்கவும், கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கும் இயற்கை ஆதாரங்களை உகந்த அளவு பயன்படுத்தவும் வழிவகுக்கின்றது.
5. சமூகத்திற்குச் சுற்றுச்சூழல் மதிப்பீட்டினால் ஏற்படும் பயன்கள்:
(I) ஓர் ஆரோக்கியமான சுற்றுச்சூழல்
(ii) உயிரிப்பன்மத் தொகுப்பினைப் பராமரித்தல்
(iii) குறைந்தளவு வளங்கள் பயன்பாடு
(iv) குறைந்த அளவு வாயு வெளியேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சேதம், ஆகிய பயன்கள் ஏற்படுகின்றன.
2.
1. ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் மட்டும் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் இடதுவரை சிற்றினங்களுக்கு இடையேயான இடைச்செயல்கள், விதை பரவுதலில் சிக்கல்கள், ஒரு குறிப்பிட்ட இடம் தள விசேடத்துவம் மற்றும் பல சுற்றுச்சூழல் மற்றும் சூழ்நிலையில் பிரச்சனைகள் போன்ற பல்வேறு காரணங்களாக இருக்கலாம்.
3.மூன்று பெரிய இடவரை மையங்கள் மற்றும் 27 நுண்ணிய இடவரை மையங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. இந்தியாவில் சுமார் மூன்றில் ஒரு பங்கு இடவரை மையங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. இந்தியாவில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ஐடாவரைத் தாவர இனங்ளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
4. இந்திய இமயமலை , தீபகற்ப இந்தியா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பரவிக் காணப்படுகின்றன.
5. ஃபோயேசி, ஏப்பியேஸி,ஆஸ்ட்ரேஸி மற்றும் ஆர்க்கிடேஸி குடும்பத்தைச் சார்ந்த சிறு செடிகளே அதிகச் சதவீதத்தில் காணப்படும் இடவரை தாவரங்களாகும்.
| இடவரைத் தாவரங்கள் | வளரியல்பு | இடவரை மையம் | |
| 6. | பக்காரியா குற்றாலன் சிஸ் | மரம் | மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதி |
| 7. | அகஸ்தியமலையய்யா பாசிப்ஃப்ளோரோ | மரம் | தீபகற்ப வளர்ச்சி |
| 8. | ஹார்ட்விக்கியா பைனேட்டா | மரம் | தீபகற்பம் மற்றும் வட இந்தியா பகுதி |
| 9. | பென்டிக்கியா கொண்டப்னா | மரம் | தமிழ்நாடு மற்றும் கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் |
| 10 | நெப்பந்தஸ் காசியானா | வன்கொடி | காசி மலைகள் மற்றும் மேகாலயா |
3.
1. உயிரித்திரள் பிரமிட் (Pyramid of biomass): ஒரு சூழல்மண்டலத்தின் அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் காணப்படும் கரிமப்பொருட்களின் (உயிரித்திரள்) அளவை குறிக்கும் திட்ட வரைபடம் உயிரித்திரள் பிரமிட் என்று அழைக்கப்படுகிறது.
2. புல்வெளி மற்றும் வனச் சூழல்மண்டலத்தில் உயிரிதிரளின் அளவு அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் உற்பத்தியாளர்களில் தொடங்கி இறுதி உண்ணிகள் (மூன்றாம் நிலை நுகர்வோர்) வரை படிப்படியாகக் குறைகிறது. எனவே இந்த இரண்டு சூழல்மண்டலங்களிலும் உயிரித்திரள் பிரமிட் நேரான பிரமிட்டாக உள்ளது.
3. எனினும், குளச் சூழல்மண்டலத்தின் பிரமிட்டின் அடிப்பகுதியில் உள்ள உற்பத்தியாளர்கள் நுண்ணுயிரிகளாக குறைவான உயிரித்திரளைக் கொண்டுள்ளது. மேலும் உயிரித்திரள் மதிப்பு பிரமிட்டின் இறுதிவரை படிப்படியாக அதிகரிக்கிறது. எனவே இந்த உயிரித்திரள் பிரமிட் எப்பொழுதும் தலைகீழ் வடிவத்தில் காணப்படும்.
4.
1. இயற்கை வளங்களை பாதுகாத்தல் மற்றும் இயற்கை வளங்களை தொடர்ந்து பயன்படுத்துதல் ஆகியவற்றை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் நிறுவனமே சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆகும்.
2. இது 1948 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் உள்ள கிளாண்ட் விடியில் நிறுவப்பட்டது.
முக்கிய பணிகள்:
1. தகவல் சேகரிப்பு, பகுப்பாய்வு ஆராய்ச்சிகள், களத்திட்டங்கள், பாதுகாப்பு தொடர்பான கல்வி, நிலையான வளர்ச்சி மற்றும் உயிரின பல்வகைத் தன்மை ஆகியவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.
2. இயற்கை பாதுகாப்பு, இயற்கை வளங்களின் சமமான பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழலின் நிலைப்புத் தன்மை ஆகியவற்றிற்காக உலகெங்கும் உள்ள சேவை நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஊக்கப்படுத்துவதே இந்நிறுவனத்தின் இலக்கு ஆகும்.
3. அரசு மற்றும் தொழிற்சாலைகளுடன் தங்களை இணைத்துக் கொண்டு அவற்றிற்கு தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் அவற்றை தூண்டுகிறது.
4. அழியும் ஆபத்தில் உள்ள உயிரினங்களின் தகவல்களை சேகரித்து தொகுத்து சிவப்பு பட்டியலாக வெளியிடுகிறது.
5. இயற்கை பாதுகாப்பிற்காக உள்ள பல சர்வதேச நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
5.
1. விலங்குகளின் செயல்கள் மற்றும் நடத்தைகள் ஆகியவை உள்ளார்ந்த அல்லது கற்றுக்கொண்ட பண்புகள் ஆகும்.
2. தங்களின் உயிர் வாழ்க்கைக்காக விலங்கினங்கள் நடத்தை சார்ந்த பண்புகள் அல்லது தகவமைப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன.
3. கொன்றுண்ணிகளிடமிருந்து தப்பித்தல், மறைவான இடங்களில் உறங்குதல், காலநிலை மாறும் போது அடைக்கலம் தேடுதல் மற்றும் உணவு வளங்களைத் தேடித் திரிதல் ஆகியவை நடத்தை சார்ந்த சில பண்புகளாகும்.
4. வலசை போதல் மற்றும் கலவி ஆகிய இரண்டும் முக்கியமான நடத்தை சார்ந்த தகவமைப்பு வகைகள் ஆகும்.
5. வலச போதல் நிகழ்ச்சி, விலங்கினங்கள் புதிய வளங்களைக் கண்டறியவும், அச்சுறுத்தலிலிருந்து தப்பிக்க உதவும்.
6. கலவி என்பது இனப்பெருக்கத்திற்கான துணையை கண்டறிவதற்கான பல நடத்தை செயல்களின் தொகுப்பு ஆகும்.
7. இரவு வாழ் விலங்குகள் பகல் நேரங்களில் பூமிக்கு அடியில் வாழ்கின்றன அல்லது செயலற்று இருக்கின்றன.
8. இது அவ்விலங்கின் உணவூட்டம் மற்றும் செயல்முறை அல்லது வாழ்க்கை முறை அல்லது நடத்தையின் மாறுபாடு ஆகும்.
6.
| மரபணு மாற்றமடைந்த தாவரங்கள் | அவற்றின் பயன்கள் | |
| 1 | Bt-பருத்தி | காய்புழுக்களின் தாக்குதல் மற்றும் காய் ஈக்களின் தாக்குதலையும் கட்டுப்படுத்துகிறது. பூச்சிக்கொல்லியின் பயன்பாட்டையும் பயிர் வளர்ப்பு செலவும் குறைகிறது. |
| 2 | Bt-கத்திரி | லெபிடோப்டெரா வகை பூச்சிகளுக்கு தண்டு துளைப்பானுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ளது. |
| 3 | பொன்னிற அரிசி | உயிரி ஊட்டத்தரம் ஏற்றப்பட்டது. (Bio -fortification) பீட்டா கரோட்டீன் அரிசியில் உண்ணும் பகுதியில் நுழைக்கப்படுவதால் வைட்டமின் A குறைபாட்டை நீக்குகிறது. |
| 4 | தாரா கடுகு கலப்பினம் (DMH II) | பார், பர்னேஸ், ஃபார்ஸ்டார் எனும் மரபணுக்கள் சேர்த்து உருவாக்கப்பட்டது. ஃபாஸ்டா-களைக்கொல்லிக்கு எதிர்ப்பு தன்மை உடையது. |
| 5 | வைரஸ் எதிர்ப்பு தாவரங்கள் | வைரஸ் எதிரான மரபணுக்கள் ஓம்புயிரியில் செலுத்தப்படுகின்றன. வைரஸ் எதிர்ப்புத் தன்மை வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படாமல் காக்கிறது. |
7.
1. உயிரிகளிடமிருந்து பெறப்பட்டு நோய்கள் வருமுன் தடுக்கவும், நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படும் பொருட்கள் "உயிரிய விளைப்பொருட்கள்" எனப்படும்.
2. எதிர் நச்சுகள், பாக்டீரியா மற்றும் வைரஸ் தடுப்பூசிகள், இரத்த விளைபொருட்கள் மற்றும் ஹார்மோன் வடிசாறு போன்றவை சில உயிரிய விளைபொருட்கள் ஆகும்.
3. இத்தகு பொருட்கள் நுண்ணுயிரிகள், தாவர செல்கள் அல்லது விலங்கு செல்கள் போன்ற உயிரிகளைக் கொண்டு உயிரிய தொழில்நுட்ப முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
4. இவற்றை பண்பாக்கம் செய்வது சிறுமூலக்கூறு மருந்துகளின் பண்பாக்கத்தைவிட கடினமாகும்.
5. இத்தகைய உயிரிய விளைபொருட்களை மரபணு சேர்க்கை தொழில்நுட்பத்தின் மூலம் தேவையான போது உற்பத்தி செய்து கொள்ள முடியும். சிகிச்சை, புரதங்கள், ஒற்றைப் படியாக்க எதிரிப்பொருட்கள் மற்றும் தடுப்பூசிகள் போன்ற பல உயிரிய விளைபொருட்கள் பயன்பாட்டிற்கான ஒப்புதலைப் பெற்றுள்ளன.
6. புரதங்கள் நலப்பாதுகாப்பு மற்றும் மருந்தாக்கத் தொழிற்சாலைகளில் உயிரிய தொழில்நுட்பவியல் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
7. வணிக முறையில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்களும் எதிர்ப்பொருட்களும் மருத்துவ தொழிற்சாலைக்கு முதன்மையானவை ஆகும்.
8. மறுசேர்க்கை ஹார்மோன்களான இன்சுலின், மனித வளர்ச்சி ஹார்மோன்கள், மறுசேர்க்கை தடுப்பூசிகள் மற்றும் மனித ஆல்ஃபாலாக்ட்டால்புமின் போன்ற மறுசேர்க்கைப் புரதங்கள் தற்போது கிடைக்கின்றன.
8.
1. மீத்தேன், கார்பன்-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன் மற்றும் மிகச் சிறிய அளவில் வேறு வாயுக்களும் உள்ளன.
2. கால்நடை சாணத்தை (கோபர்) காற்றற்ற சூழலில் மக்கச் செய்வதன் மூலம் சாண எரிவாயு உற்பத்தி செய்யப்படுகின்றது.
3. மீத்தேனை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள் மெத்தனோஜென்கள் எனப்படும்.
4. உயிரிய வாயு நிலையத்தில் செரிப்புக்கலன் என்று அழைக்கப்படும் காற்று புகாத உருளை வடிவத் தொட்டியில் காற்றற்ற முறையில் செரித்தல் நடைபெறுகிறது.
5. இந்த தொட்டியானது கான்கிரீட், சிமெண்ட் (அ) எஃகுவால் அமைக்கப்பட்டுள்ளது.
6. சேகரிக்கப்பட்ட உயிரிய கழிவுகள் மற்றும் சாணக்கூழ் ஆகியவை செரிப்புக் கலனுள் பக்கவாட்டில் காணப்படும் துளை வழியாக செலுத்தப்படுகிறது.
7. கரைத்தல், அசிடோஜெனிசிஸ் மற்றும் மீத்தேன் உருவாக்கம் என்ற மூன்று நிலைகளில் காற்றற்ற முறையில் செரித்தல் நிகழ்கிறது.
8. தொட்டியில் காணப்படும் புறத்துளையுடன் இணைக்கப்பட்ட குழாய் வழியே உயிரிய வாயு வெளியே அனுப்பப்படுகிறது.
9. மற்றொரு புறத்துளையின் வழியாக வடிந்து வெளியேறும் சாண கரைசல் உரமாக பயன்படுத்தப்படுகிறது.
10 ஒளியூட்டலுக்கும் சமைப்பதற்கும் உயிர்வாயு பயன்படுகிறது.
11. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் (IARI) மற்றும் கதர் கிராம தொழிற்சாலை ஆணையம் (KVIC) ஆகியவற்றின் முயற்சியால் இந்தியாவில் இத்தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.
9.
போயேசி குடும்பத்தை சேர்ந்த சாக்கரம் அஃபிசினாரம்
தோற்றம், விளையுமிடம்
நியூ கினியா காட்டு ரகமான, சாக்கரம் ஆஃபிசினாரம். இந்தியாவின் சாக்கரம் ஸ்பான்டேனியத்துடன், பிற்கலப்பு செய்து உருவானது. கன்னியாகுமரி, நீலகிரி தவிர எல்லா தமிழ்நாட்டு இடங்களிலும் விளைகிறது.
பயன்கள் :
1. வெள்ளைச் சர்க்கரை உற்பத்தி மூலப்பொருள்
2. சுத்திகரிக்கப்பட்டு சர்க்கரை, மதுபானம், வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகளில் பயன்படும்.
3. கரும்புச் சாறு புத்துணர்ச்சி தரும் பானம்.
4. வெல்லக் கழிவு பாகு (Molasses) எத்தில் ஆல்கஹால் உற்பத்திக்கு மூலப்பொருள்.
10.
ஒரே வரிசையிலான மரபணுக்கள் ஒரு குரோமோசோமில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் இடம் பெறுவதற்கு இரட்டிப்பாதல் என்று பெயர்.
பிரிட்ஜஸ் - டிரோசோஃபிலாவில் முதலில் கண்டறிந்தார்.
எ.கா.: மக்காச்சோளம் மற்றும் பட்டாணி
வகைகள்:
1. தொடரிணைந்த இரட்டிப்பதால்: (Tandem duplication)
இரட்டிப்பான பகுதி குரோமோசோம்களின் இயல்பான பகுதிக்குப் பின் அதே வரிசையில் அமைவதாகும்.
2. தலைகீழ் தொடரிணைந்த இரட்டிப்பாதல்: (Reverse tandem duplication)
இரட்டிப்பான பகுதி அதன் இயல்பான பகுதிக்குப், பின் மரபணு தொடர்வரிசை தலைகீழாக அமைவதாகும்.
3. இடம் மாறிய இரட்டிப்பாதல்: (Displaced duplication)
இரட்டிப்படைந்த பகுதி அதன் இயல்பான பகுதிக்கு சற்று தொலைவில் அதே வரிசையில் அமைவதாகும்.
11.
அ) பெற்றோரைத் தேர்ந்தெடுத்தல்:
(i) தெரிவு செய்யப்பட்ட பண்புடைய ஆண் மற்றும் பெண் தாவரங்களைத் தேர்ந்தெடுத்தல்.
(ii) இத்தாவரங்களின் ஒத்த பண்பிணைவுத் தன்மையைச் சோதனை செய்தல் மிக முக்கியமாகும்
ஆ) ஆண் மலடாக்குதல்:
(i) தன் மகரந்தச்சேர்க்கையை தடுப்பதற்காக ஆணகச் சிதைவுறச் செய்தல்
(ii) அதை ஆண் மடலாக்குதல் என்றழைக்கப்படுகின்றன
இ) பையிடுதல்:
(i) சூலக முடியை உறையிட்டுப் பாதுகாக்கும் முறை பயிரிடுதல் ஆகும்
(ii) இது தேவையற்ற மகரந்தத்துகள்கள் சூலக முடியில் கலந்துவிடாமல் தடுக்கும்
ஈ) கலப்பு செய்தல்:
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண் மலரின் மகரந்தங்களை ஆண் மலடாக்கப்பட்ட பெண் மலரின் சூலக முடிக்கு மாற்றம் செய்வது
உ) விதைகளை அறுவடை செய்து புதிய தாவரங்களை உண்டாக்குதல்:
(i) மகரந்த சேர்க்கை மூலம் கருவுறுதல் ஏற்பட்டு விதைகள் உருவாகின்றன
(ii) இவ்விதைகளிலிருந்து உருவாகும் புதிய சந்ததிக்கு கலப்புயிரி எனப்படும்
12.
1. இது ஒரு பொதுவான மனநலக் குறைபாடு ஆகும்.
2. இது மக்களிடையே சோர்ந்த மனநிலை, மகிழ்ச்சி குறைவு, குற்ற உணர்வு, தூக்கமின்மை, பசியின்மை போன்றவை ஏற்படுத்துகிறது.
மன அழுத்தத்தின் அறிகுறிகள் :
1. தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையை இழத்தல்.
2. கவலை
3. பொதுவாக ஆர்வமிக்கவற்றை அனுபவிக்க இயலாத நிலை.
தடுப்பு முறைகள்
1. உடற்பயிற்சி, தியானம், யோகா
2. ஆரோக்கியமான உணவு பழக்கம் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள்.
3. உடற்பயிற்சி - செரட்டோனின் மற்றும் எண்டார்ஃபின்கள் சுரக்க உதவுகிறது.
4. சுய மரியாதை அதிகரிக்கும்.
5. தன்னம்பிக்கையை மேம்படுத்தும்.
13.
(i) பல்லடுக்கு புறத்தோல் காணப்படுகிறது. வெலாமன் திசுவினை அடுத்துச் சிறப்பாக அமைந்த எக்சோடெர்மிஸ் (Exodermis) அடுக்கு ஒன்று காணப்படுகிறது.
(ii) நீராவிப் போக்கினை வெகுவாகக் குறைப்பதற்காகத் தடித்த கியூட்டிக்கள் மற்றும் உட்குழிந்த இலைத்துளைகள் ஆகியன காணப்படுகின்றன.
(iii) சதைப்பற்றுள்ள தொற்றுத் தாவரங்களில் நீரினைச் சேமிக்க நன்கு வளர்ச்சி அடைந்த பாரன்கைமா திசுக்கள் காணப்படுகின்றன.
வாழ்வியல் தக அமைவுகள்:
நீரைச் சிறப்பாக உறிஞ்ச வெலாமன் திசு உதவுகிறது.
14.
15.
W பேட்சன் (1906 இல் ஜெனிடிக்ஸ் (மரபியல்) என்ற சொல்லை உருவாக்கினார்). அதன் பிரிவுகளாவன
1. ஊடுகடத்தல் மரபியல் (அ) பாரம்பரிய மரபியல்
இதில் மரபணுக்கள் எவ்வாறு பெற்றோர்களிடம் இருந்து சந்ததிகளுக்குக் கடத்தப்படுகின்றன என்பதை விளக்கும் பிரிவாகும்
2. மூலக்கூறு மரபியல்:
மரபணுக்கள் புற அமைப்பு மற்றும் உயிர்ச் செயல்களை எவ்வாறு மூலக்கூறு நிலையில் மேற்கொள்கிறது என்பதை விளக்கும் பிரிவாகும்
3. உயிரித்தொகை மரபியல்:
தனி உயிரிகளின் தொகுப்பில் தனிப்பட்ட பண்புக்கூறு எவ்வாறு குறிப்பிட்ட மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை விளக்கும் பிரிவு
16.
1. சீவால் ரைட் பிஷ்ஷர், மேயர் ஹாக்ஸ்லே, டோப்ஷான்ஸ்கி சிம்ஸன் மற்றும் ஹேக்கல் போன்றோர் டார்வினுக்குப் பிந்தைய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் இயற்கை தேர்வுக் கோட்பாட்டை விளக்கினர்.
2. ஐந்து அடிப்படை காரணிகள் கரிமப்பரிணாம நிகழ்வுக்குக் காரணமாகின்றன.
(i) மரபணு திடீர் மாற்றம் (புள்ளி திடீர் மாற்றம்)
1. மரபணுக்களின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.
2. புறத்தோற்றங்களை மாற்றியமைக்கிறது.
3. சேய் உயிரிகளில் மாறுபாடுகளை உருவாக்குகிறது.
(ii) குரோமோசோம் பிறழ்ச்சி
1. குரோமோசோம் அமைப்பில் ஏற்படும் மாற்றம் ஆகும்.
2. நீக்கம், சேர்த்தல், இரட்டிப்பாக்கம், தலைகீழாக்கம் மற்றும் இடமாற்றம் காரணமாக குரோமோசோம் அமைப்பில் ஏற்படும் மாற்றமாகும்.
3. புறத்தோற்றங்களை மாற்றியமைக்கிறது.
4. சேய் உயிரிகளில் மாறுபாடுகளை உருவாக்குகின்றன.
(iii) மரபணு சேர்க்கை
1. குன்றல் பிரிவின்போது ஏற்படும் குறுக்கெதிர் மாற்றத்தால் நிகழ்கிறது.
2. மரபணு மாற்றங்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன.
(iv) இயற்கை தேர்வு
(i) எந்தவித மரபணு மாறுபாடுகளையும் தோற்றுவிப்பதில்லை.
(ii) தேர்வு சக்தி சில மரபணு மாற்றங்களை மட்டுமே உயிரினங்களில் அனுமதிக்கிறது. மற்றவை நிராகரிக்கப்படுகின்றன.
(v) இனப்பெருக்க ரீதியான தனிமைப்படுத்துதல் முறைகள்
தொடர்புடைய உயிரினங்களுக்கிடையே இனப்பெருக்கம் நடைபெறுவதைத் தடுக்கிறது.
17.
(i) கழுவும் & உலர்த்தும் வசதி
கண்ணாடிக் கலங்களைக் கழுவும் & உலர்த்தும் நுண்ணலை அடுப்பு
(ii) ஊடகம் தயாரிக்கும் அறை
(i) தன்னழுத்தக்கலன்
(ii) எலக்ட்ரானிக் தராசு
(iii) pH மீட்டர்
(iii) நுண்ணுயிர் நீக்கப்பட்ட அறை
(i) சீரடுக்கு காற்று பாய்வு அமைப்பு
(ii) உயர்திறன் துகள் காற்று வடிப்பான் (HEPA)
(iv) பிற வளர்ப்பு வசதிகள்
பிரிகூறு - வளர்ப்புக் குழாயில் பொதிக்கப்பட்டு 22 - 28°C வெப்பநிலையில், 2400 லக்ஸ் ஒளிச்செறிவில் 8 - 16 மணி நேர ஒளிக்காலத்துவதிலும் 60% ஈரப்பதத்திலும் வளர்க்கப்படுகிறது.
18.
கழிவுப்பொருட்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துதலே முக்கியமாகும்.
நீர்த்துப் பரவுதல்:
குறைந்த அளவு கதிரியக்கத் தன்மையுள்ள கழிவுகளுக்கு நீர்த்தல் மற்றும் பரவுதல் முறை பயன்படுகின்றது.
தாமதம் மற்றும் சிதைவு:
அணுக்கரு உலை மற்றும் துரிதப்படுத்திகளில் பயன்படுத்தப்படும் கதிரியக்கங்கள் குறைவான வாழ்நாள் கொண்டவையாதலால் இக்கழிவுகளைக் கையாள இவை நல்ல முறையாகும்.
செறிவூட்டல் மற்றும் உள்ளடக்கி வைத்தல்:
இக்கழிவுகள் அரிப்பைத் தாங்கக்கூடிய கொள்கலன்களில் அடைக்கப்பட்டு வெளியேற்று இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
19.
மனித செயல்பாடுகளால் நீர் மாசுபடுகிறது.
மூலாதாரங்கள்
1. மைய மூலாதாரங்கள்
நீர் நிலைகளில் குறிப்பிட்ட இடத்தில் குழாய்கள் அல்லது கழிவுநீர்க் குழாய் மூலம் மாசுபடுத்திகளை வெளியிடுதல் மைய மூலாதாரங்கள் ஆகும்.
2. மையமற்ற மூலாதாரங்கள் :
ஒரு இடத்தில் வெளியேற்றப்படும் மாசின் மூலாதாரங்கள் கண்டறிய இயலாது.
எ.கா. அமிலமழை, நீர்நிலைகளில் கொட்டப்படும் நெகிழிப்பொருட்கள்.
3. கசிவுகள் மற்றும் சிந்துதல் கப்பல் விபத்து எண்ணெய் கசிவுகள்.
4. நகராட்சி கழிவுகள்:- வீடுகள் மற்றும் வணிக நிறுவன கழிவுநீர்.
5. தொழிற்சாலைக் கழிவுகள் - காட்மியம் குரோமியம் அடங்கிய கழிவுநீர்.
6. வேளாண் கழிவுகள்
7. நீர் மாசுபடுத்திகள் ஊடுருவல் மூலம் நிலத்தடி நீரினை அடைகின்றன.
20.
1. அடி வயிற்றின் இரண்டு பக்கங்களிலும், அண்டகங்கள் அமைந்துள்ளன.
2. மீசோவோரியம் என்ற தசை நாரினால் அவை இடுப்புச் சுவர்ப்பகுதியுடனும், கருப்பையுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
3. நீள்வட்ட வடிவ அண்டகம் 2 முதல் 4 செ.மீ நீளமுள்ளது.
4. கனசதுர வடிவ எபிதீலியத்தால் சூழப்பட்டுள்ளது.
5. உள்ளே அண்டக இழைய வலை (ஓவரின் Stroma) உள்ளது.
6. இதில் வெளிப்புற கார்டெக்ஸ் உட்புற மெடுல்லா உள்ளது.
7. எபிதீலியத்தின் அடியில் 'டியுனிகா அல்புஜினியா' எனும் இணைப்புத் திசு உள்ளது.
8. மெடுல்லாவில் உள்ள இணைப்புத் திசு, இரத்தக் குழாய், நிணநீர் நாளம், நரம்பிழை போன்றவற்றைக் கொண்டுள்ளது.
21.
ஹன்டிஸ்டன் கோரியா :
1. மனிதனில் உடற் குரோமோசோமின் ஓங்கு தன்மை கொண்ட கொல்லி மரபணுவால் ஏற்படுகிறது.
2. இவற்றின் பண்புகள் :
(i) தன்னியல்பான உடல் நடுக்கம்
(ii) நரம்பு மண்டல சிதைவு
(iii) மனநிலை பாதிப்பு
(iv) உடல் பலம் குன்றல்
22.
1. மார்பை 4 கல்வட்டப் பகுதிகளாகப் பிரிக்கலாம்.
2. காம்புடன் கூடிய மையப்பகுதி 5 வது கல்வட்டப் பகுதி
3. வலது மார்பை இடது உள்ளங்கையால், இடது மார்பை வலது உள்ளங்கையால் அழுத்திப் பார்க்க வேண்டும்.
4. மாதம் ஒரு முறை, மாத விடாய் முடிந்த பின் படுத்து ,நின்று இவ்வாறு செய்ய வேண்டும்.
5. 40 வயதுக்கு மேல் மம்மோகிராம் 40 வயதுக்குள் மீயொலிப் பரிசோதனை செய்ய வேண்டும்.
23.
இரண்டு ஒற்றை மய இனச்செல்கள் இணைவதே ஒருங்கிணைவாகும்
ஒருங்கிணைவு முறையின் பல்வேறு வகைகள்:
i) தன் கருவுறுதல்:-
ஒரு செல்லிலிருந்தோ அல்லது ஒரே உயிரியிலிருந்தோ உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைந்து கரு முட்டையை உருவாக்குகின்றன.
2. எ.கா: ஆக்டினோஸ்பேரியம் மற்றும் பாரமீசியம்.
ii) அயல் கருவுறுதல்:
1.ஆண் மற்றும் பெண் என்னும் இரு தனித்தனி பெற்றோர்களிலிருந்து உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் ஒன்றிணைந்து கருமுட்டை உருவாகிறது.
2. எ.கா: மனிதன்.
iii) முழு சேர்க்கை:
1. கீழ் நிலை உயிரிகளில் சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல், அவ்வுயிரிகளே இனச்செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கின்றன.
2. எ.கா: டிரைக்கோநிஃம்பா.
iv) இளம் சேர்க்கை:
முதிர்ந்த பெற்றோர் செல்லிலிருந்து மறைமுகப்பிரிவு மூலம் உருவாகும் இரு இளம் சேய் செல்கள் இனச்செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கின்றன.
v) மாறுபட்ட செல் சேர்க்கை:
அமைப்பில் மாறுபட்ட இரு சிறிய இனச்செல்கள் ஒன்றிணையும் முறை புதிய மாறுபட்ட செல் சேர்க்கை எனப்படும்.
vi) ஒத்த செல் சேர்க்கை:
1. அமைப்பிலும் செயலிலும் ஒரே மாதிரியான இரு இனச்செல்கள் ஒன்றிணைதல் ஒத்த செல் சேர்க்கை எனப்படும்.
2. எ.கா: மோனோசிஸ்டிஸ்.
vii) வேறுபட்ட செல் சேர்க்கை:
முற்றிலும் வேறுபட்ட இரு இனச்செல்கள் ஒன்றிணையும் முறை வேறுபட்ட செல் சேர்க்கை எனப்படும்.
24.
ஆய்வுக்கான உயிரினங்கள்:
(i) T2 பாக்டீரியோஃபேஜ் ஈ.கோலையை தாக்கும் வைரஸ்)
கோட்பாடு:
(i) DNA இல் பாஸ்பரஸ் காணப்படுகிறது. புரதத்தில் காணப்படுவதில்லை.
(ii) புரதத்தில் கந்தகம் காணப்படுகிறது. ஆனால் DNA இல் கந்தகம் காணப்படுவதில்லை.
செய்முறை:
I. பாக்டீரியங்களோடு பாக்டீரியோஃபேஜ் (வைரஸ்) கலந்து - பாக்டீரியப் பரப்பின் மீது மெல்லிய படலமாக பின் அவற்றிலிருந்து சில பொருட்கள் பாக்டீரியாவிலுள்ள செல்கின்றன, படர்கின்றன. இவை A மற்றும் B என இரண்டு மாதிரிகள் தனித்தனியாக மேற்கொள்ளப்படுகின்றன.
மாதிரி (A) - வளர்தளத்தில் கதிரியக்கதன்மையுடைய கந்தக ஐசோடோப்பு 35S சேர்க்கப்படுகிறது.
மாதிரி (B) - வளர்தளத்தில் கதிரியக்கத் தன்மையுடைய பாஸ்பரஸ் ஐசோடோப்பு 35P சேர்க்கப்படுகிறது.
மாதிரி (A) - வளர்தளத்தில் பாக்டீரியோஃபேஜ்களின் புரதங்களின் 35S அடையாளமிடப்பட்டிருந்தது.
மாதிரி (B) - வளர்தளத்தில் பாக்டீரியோஃபேஜ்களின் DNA 35P அடையாளமிடப்பட்டிருந்தது.
II. இவ்வாறு அடையாளமிடப்பட்ட (பாக்டீரிய சிதைவுக்கு முன்) மிதமான குலுக்கலுக்கு ஆட்படுத்தி அதிலுள்ள பொருள்களை விடுவித்தனர்.
காண்பவை:
32P மட்டுமே ஈ.கோலை பாக்டீரிய செல்களில் காணப்பட்டது. 35S காணப்படவில்லை.
முடிவு
எனவே வைரஸ் (பாக்டீரியோஃபேஜ்களிலிருந்து) பாக்டீரியாவுக்குப் பாரம்பரிய செய்தியை கொண்டு சென்றது புரதங்கள் அல்ல DNA மட்டுமே என இறுதியில் நிரூபித்தனர்.
25.
ரிபோசோம் - இதுவே புரதம் தயாரிக்கும் தொழிற்சாலை.
1. இதில் - அமைப்பு RNA க்கள் மற்றும் 80 பலதரப்பட்ட புரதங்கள் உள்ளன.
2. செயலற்ற நிலையில் (புரதம் தயாரிக்காத நிலையில்) இரு துணை அலகுகளாகக் காணப்படுகிறது.
| யூகேரியாட்டு | புரோகேரியாட்டு | |
|---|---|---|
| 1 | பெரிய அலகு 60S ரிபோசோம் |
பெரிய அலகு 50S ரிபோசோம் |
| 2 | துணை அலகுகள் |
துணை அலகுகள் ![]() |
| 3 | ![]() இதில் 31 ரிபோசோம் புரதங்கள் காணப்படுகிறது |
![]() இதிலும் 31 ரிபோசோம் புரதங்கள் காணப்படுகிறது |
| 4 | 30S ➝16S | 40S+18S + 33 புரதங்கள் |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards