12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Maths Applications of Matrices and Determinants Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
ஆக்கிரமிப்புத் தாவரங்கள் என்றால் என்ன?
2.
புவி வெப்பமடைதல் என்றால் என்ன?
3.
முதல்நிலை உற்பத்தித்திறனை பாதிக்கும் காரணிகள் யாவை?
4.
பெரும்பாலான சூழல்மண்டலத்தில் எவை தற்சார்பு ஊட்ட உயிரிகளாக உள்ளது?
5.
அக்ரோபாக்டீரியம் டியூமிபேசியன்ஸ் ஒரு இயற்கை மரபணுப் பொறியாளராக செயல்படுகிறது. இக்கூற்றிற்கு சாதகமான காரணங்கள் தருக.
6.
இந்திய பாலைவனம் - மேற்கு தொடர்ச்சி மலை வேறுபடுத்துக.
7.
ஹைபர்னேசன் மற்றும் ஈஸ்டிவேசனை வேறுபடுத்துக.
8.
எவ்வாறு DNA லிகேஸ் DNA துண்டுகளை இணைகிறது?
9.
சிற்றினம் - நிலப்பரப்பு இரண்டின் தொடர்புக்கான சமன்பாட்டினை விவரி.
10.
பூமியில் உள்ள முக்கிய உயிர்த்தொகைகள் யாவை?
11.
தென்னிந்தியக் கலாசாரத்தில் ஆரோக்கியமான எண்ணையாக சமையிலும், மருத்துவத்துறையிலும் குறிப்பிடப்படுவது எது?
12.
வணிக முக்கியத்துவம் வாய்ந்த சர்க்கரை எதிலிருந்து தயாரிக்கப்படும்?
13.
திணையின் மருத்தவ பயன்கள் கூறு.
14.
இணை சடுதி மாற்றிகள் (Co-mutagens) என்றால் என்ன?
15.
வணிக ரீதியிலான நொதிகளின் உற்பத்திக்கு ஈஸ்ட் (சக்காரோமைசீஸ் செரிவிசியே) எவ்வாறு பயன்படுகிறது?
16.
பாலிமரேஸ் சங்கிலி வினையின் படிநிலைகளின் பெயர்களைத் தருக.
17.
நமது உடலின் இன்சுலின் ஹார்மோனின் பங்கு யாது?
18.
இன்டர்ஃபெரான்கள் என்றால் என்ன?
19.
பயிர்பெருக்கத்தின் மூலம் பூச்சி எதிர்க்கும் திறன் கொண்ட தாவரங்களை எவ்வாறு உருவாக்கலாம்?
20.
இயற்கை வேளாண்மை எவ்வாறு வேதியியல் உரங்கள் பயன்படுத்தும் வேளாண்மை முறையை விட மேலானது?
21.
இயற்கை வேளாண்மை என்றால் என்ன?
22.
தூயவரிசைத் தேர்வு மற்றும் நகல் தேர்வு
23.
ஒவ்வாமை என்றால் என்ன?
24.
பெறப்பட்ட நோய்த்தடைக்காப்பு என்றால் என்ன?
25.
முன்வித்து (Archesporium) என்றால் என்ன?
26.
பாலினப் பெருக்கத்தில் கேமிட்களின் 3 வகை இணைவு முறைகள் எவை?
27.
WHO வின் வரையறையின்படி உடல்நலம் என்பது என்ன?
28.
ஜீகுலோன் என்றால் என்ன?
29.
விரிவகல தாவரக்கூட்டம் மற்றும் குத்துயர தாவரக் கூட்ட மண்டலம் யாவை?
30.
மெண்டல் தாவர ஆய்வுகளில் வெற்றியாளராக இருக்க என்ன காரணம்?
31.
புதிய லாமார்க்கியத்தின் முக்கிய ஆய்வாளர்கள் யார்?
32.
யூரே-மில்லர் சோதனையில் உருவான கரிமக் கூட்டுப் பொருட்கள் யாவை?
33.
செக்கர் போர்டு (அ) புன்னட் கட்டம் என்றால் என்ன?
34.
ஒரு பண்பு கலப்பு பாரம்பரியம் என்றால் என்ன?
35.
நம்மாழ்வார் என்பவர் யார்?
36.
செயற்கை விதைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன?
37.
ஒலி மாசுபாட்டின் மூலங்கள் யாவை?
38.
மறுவேறுபாடுறுதல் (Redifferentiation) மற்றும் வேறுபாடிழத்தல் (Dedifferentiation) வேறுபடுத்துக.
39.
மெதுவாக சிதையக்கூடிய அல்லது நிலைத்திருக்கும் மாசுபடுத்திகள் என்றால் என்ன?
40.
மனித செல்களில் மிகச்சிறியவை, மிகப்பெரியவை எவை?
41.
மாதவிடாய் சுகாதாரத்தைச் சரியாகப் பேணாத பெண்கள் எவ்வகையில் பாதிக்கப்படுகிறார்கள்?
42.
எபிடிடிமிஸின் பணிகள் கூறு.
43.
நிறக்குருடு நோய்க்கான காரணம் என்ன?
44.
சுரப்பாளர்கள் என்பவர்கள் யார்?
45.
கருவின் இயல்புக்கு மாறான இதயத்துடிப்பு வீதம் எதைக் காட்டும்?
46.
இயற்கையான சீரியக்க, கால இடைவெளி முறை குடும்பக்கட்டுப்பாடு - விளக்குக.
47.
கருவுறுதலை ஏன் ஒருங்கிணைவு என்கின்றோம்?
48.
இருபெரும் இனப்பெருக்க முறைகள் எவை?
49.
காப்புறையாக்கம் மற்றும் வாலாக்கம் வேறுபடுத்துக
50.
ஜீனோஃபோர் என்றால் என்ன?
1.
உள்ளூர் அல்லாத ஒரு சிற்றினம் இயற்கையாகவே சூழல் தொகுப்பில் அல்லது குறிப்பிட்ட நாட்டில் பரவி, உள்ளூர் சிற்றினங்களின் உயிரியல் மற்றும் வாழ்நிலையில் குறுக்கீடு செய்வது மற்றும் சூழ்த்தொகுப்பிற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதாகும்.
2.
பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது புவியின் சராசரி வெப்பநிலையும் உயர்கின்றது. (அதிகபட்சம் 4000 வருடங்கள்) இது புவி வெப்பமடைதல் என அழைக்கப்படுகிறது.
3.
1. ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் தாவரச் சிற்றினங்கள்
2. அவற்றின் ஒளிச்சேர்க்கைத்திறன்
3. கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் தன்மை
4. சூரிய ஒளி, மழையளவு
5. மழையளவு மண் வகை, நிலப்பரப்பு காரணிகள்
6. சுற்றுச்சூழல் காரணிகள்.
4.
தற்சார்பு ஊட்ட உயிரிகள் ஒளிச்சேர்க்கை என்ற நிகழ்வின் மூலம் எளிய கனிமக்கூறுகளிலிருந்து கரிமக் கூறுகளை உற்பத்தி செய்கின்றன. (எ.கா) தாவரங்கள்.
5.
1. இந்த பாக்டீரியம் Ti பிளாஸ்மிட் (கழலை உண்டாக்கும்) மற்றும் பெரிய பரிமாற்ற DNA வின் (T-DNA) ஒரு பகுதியையும் கொண்டுள்ளது.
2. இதன் T-DNA தொற்றுகளுக்குள்ளாகும் தாவர செல்களின் மரபணு தொகையத்திற்குள் இயல்பாகவே இடமாற்றம் ஆகக்கூடிய திறன் இருப்பதால் இதனை தாவரங்களின் இயற்கை மரபணு பொறியாளர் என கருதப்படுகிறது.
6.
| இந்திய பாலைவனம் | மேற்கு தொடர்ச்சி மலை | |
| 1 | இந்திய பஸ்டர்டு பறவை, ஒட்டகம், நரிகள் மற்றும் பாம்புகள் காணப்படுகின்றன. | நீலகிரி வரையாடு, புலி, சிறுத்தை, நீலகிரி நெடுவால் குரங்கு ஆகியவை உள்ளன. |
| 2 | இம்மண்டலத்தில் காட்டுக் கழுதை உள்ளூர் இனமாகக் கருதப்படுகிறது. | இங்கு பெரிய மர அணில் மற்றும் சிங்கவால் குரங்கு ஒரிட சிற்றினங்களாகும். |
7.
| ஹைபர்னேசன் | ஈஸ்டிவேசன் | ||
| 1. | சில விலங்கினங்கள் குளிர்கால சூழல் அழுத்தத்திலிருந்து விடுபட செயலற்ற நிலைத் தன்மையை மேற்கொள்கின்றன. | 1. | சில விலங்கினங்கள் வெப்பம் மற்றும் வறட்சி சூழல் அழுத்தத்திலிருந்து விடுபட செயலற்ற நிலைத் தன்மையை மேற்கொள்கின்றன. |
| 2. | இது குளிர்கால உறக்கம் எனப்படும். | 2. | இது கோடைகால உறக்கம் எனப்படும். |
| 3. | எ.கா : கரடிகள் | 3. | எ.கா : நத்தைகள் மற்றும் மீன்கள் |
8.
DNA லிகேஸ் இரட்டை இழை DNA வின் (ds-DNA) சர்க்கரை மற்றும் பாஸ்பேட் மூலக்கூறுகளை அதன் 5' PO4 மற்றும் 3'-OH-முனைகளில் இணைக்கிறது. இது ATP சார்ந்த வினையாகும்.
9.
10.
1. பனிச்சமவெளி உயிர்த் தொகை
2. பசுமை மாறா ஊசியிலைக்காடு உயிர்த்தொகை
3. புல்வெளி உயிர்த்தொகை
4. உயர்மலைச் சாரல் உயிர்த்தொகை
5. வன உயிர்த்தொகை மற்றும்
6. பாலைவன உயிர்த் தொகை
11.
எள் எண்ணெய் (நல்லெண்ணெய்)
12.
கரும்பு, பனை
13.
1.இதயத்தை பலப்படுத்தும்.
2. கண் பார்வை மேம்படுத்தும்
3. தினைக்கஞ்சி பாலூட்டும் அன்னையர்க்கு நல்லது.
14.
சில வேதியியல் சேர்மங்கள் அதற்குரிய சடுதிமாற்றம் பண்புகளைப் பெற்றிருக்காமல் மற்ற சடுதி மாற்றிகளோடு சேர்ந்து அதன் திறனை அதிகரித்தால் அவை இணை சடுதி மாற்றிகள் என்று அழைக்கப்படுகிறது.
எ.கா. அஸ்கார்பிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைடு மூலம் ஏற்படும் பாதிப்பை அதிகப்படுத்துகிறது. காஃபின், மெத்தோட்ரெக்ஸேட்டின் நச்சுத்தன்மையை அதிகமாக்குகிறது.
15.
1. துணிகளில் படிந்த எண்ணெய் கறைகளை நீக்க லைபேஸ் நொதி சலவைப் பொருட்களில் பயன்படுகிறது.
2. பெக்டினேஸ், புரோட்டியேஸ் மற்றும் செல்லுலோஸ் நொதிகள் புட்டியில் அடைக்கப்பட்ட சாறுகளை தெளிவடைய செய்ய பயன்படுத்தப்படுகின்றன.
16.
(i) இயல்பு திரிதல்
(ii) தூண்டுதல்
(iii) நீட்சியுறுதல்
17.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை இன்சுலின் கட்டுப்படுத்துகிறது. செல்கள் குளுக்கோஸை எடுத்துக்கொண்டு அதை ஆற்றலாக மாற்றி வெளியிடுவதற்கு இன்சுலின் உதவுகிறது.
18.
பாலூட்டிகளின் செல்கள் வைரஸ்களால் பாதிக்கப்படும் போது அச்செல்களால் உற்பத்தி செய்யப்படும் சிற்றினக்குறிப்பீடு தன்மையுடைய, புரதத்தாலான வைரஸ் எதிர்ப்பு பொருட்களே 'இன்டர்ஃபெரான்கள்' ஆகும்.
19.
(i) ஓம்புயிரித் தாவரங்களின் பூச்சி எதிர்க்கும் திறனானது புறத்தோற்றம். உயிரிவேதியியல், உடற்செயலியல் போன்ற பண்புகளை கொண்டு அமையலாம்.
(ii) பல தாவரங்களின் தூவிகளுக்கிடையே இலைகள் பூச்சி எதிர்க்கும் திறனுடைய தொடர்புடையதாக உள்ளன. (எ.கா) பருத்தியின் இலைத்துப்போக்கி எதிர்ப்பு திறன்
20.
1. இயற்கை வேளாண்மை என்பது இயற்கையான வழிகளில் தாவரங்களை பயிர் செய்தல் மற்றும் விலங்குகளை வளர்த்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.
2. கரிமப் பொருட்களை பயன்படுத்தி மண்ணின் தரத்தைப் பாதுகாத்தல் மற்றும் உயிரியல் செயல்பாடுகளை ஊக்குவித்தல்.
3. மண் வாழ் நுண்ணுயிரிகளை பயன்படுத்தி பயிர்களுக்கு ஊட்டச்சத்துக்களை அளித்தல்.
4. சூழியல் சமநிலை பராமரிக்கப்படுகிறது.
5. இதன்மூலம் மாசடைதலும் கழிவுகளும் குறைகின்றது.
6. இயற்கை முறையில் களை மற்றும் தீங்குயிரிகளை கட்டுப்படுத்துதல்.
21.
(i) பழைய பாரம்பரிய விவசாய முறையே இயற்கை வேளாண்மையாகும்
(ii) 20ம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் மிக வேகமாக மாறிவரும் விவசாய முறைகளுக்கு எதிராக மீட்டுக் கொண்டு வரப்பட்டது
(iii) இது மீள்நிலைத்த மண்வளம், சுழல்வளம், மற்றும் மக்கள் வளத்திற்கான வேளாண் முறையாகும்
22.
| தூயவரிசைத் தேர்வு | நகல் தேர்வு | |
| 1 | இது ஒத்த மரபுக்கூறுடைய தாவரத்தை மீண்டும் தன் மகரந்தச்சேர்க்கை செய்து பெறப்பட்ட தாவரங்களாகும் | உடல இனப்பெருக்கம் செய்யும் தாவரங்களில் மைட்டாடிக் செல்பிரிதல் மூலம் உண்டான தாய் தாவரத்திலிருந்து ஒத்த பண்புகள் கொண்ட வழித்தோன்றல்கள் பெறப்படுகின்றன |
| 2 | எல்லா மரபுக்கூறுகளிலும் இவ்வாறு பெறப்பட்ட இரகமானது ஒரே சீர்தன்மையைக் கொண்டிருக்கிறது | கலப்பினத் தாவரத் தொகையிலிருந்து புறத்தோற்ற விகிதத்தின் அடிப்படையில் மிகச்சிறந்த இரகத்தைத் தெரிவு செய்ய நகல் தேர்வு உட்படுத்தப்படுகிறது |
23.
சுற்றுப்புறத்தில் காணப்படும் சில நேரம் எதிர்ப்பு தூண்டிகளை நமது உடல் எதிர்கொள்ளும்போது நமது தடைக்காப்பு மண்டலம் மிகை துலங்கல்களை ஏற்படுத்துவது ஒவ்வாமை எனப்படும்.
24.
ஒரு உயிரினம், பிறந்த பிறகு, தன் வாழ்நாளில் பெறும் நோய்த்தடைகாப்பே பெறப்பட்ட நோய்த் தடைகாப்பு எனப்படும்.
25.
சூல் வளர்ச்சியடையும்போது, சூழ்திசுவின் புறத்தோல் கீழே உள்ள ஒரு சூல் திசு செல், பெரியதாகி முன்வித்தாகச் செயல்படும், புற தாவரங்களில் இது பகுப்படையும்.
26.
ஒத்த கேமிட்டுகளின் இணைவு, சமமற்ற கேமிட்டுகளின் இணைவு, முட்டைக் கருவுறுதல்.
27.
உடல்நலம் என்பது வெறுமனே நோய்கள் இல்லா நிலையன்று உடல், மனம் மற்றும் சமூக அளவிலான முழுமையான நலவாழ்வுக்கான நிலையே உடல்நலம் என்பதாகும்.
28.
ஜக்லான்ஸ் நிக்ரா என்ற கருப்பு வால்நெட் தாவரத்தின் கனிகள் மேல் ஊடு மற்றும் வேர்களில் ஜூக்லோன் என்ற அல்கலாய்டைச் சுரந்து அருகில் வளரும் ஆப்பிள், தக்காளி, ஆல்ஃபால்ஃபா போன்ற தாவரங்களின் நாற்றுகள் வளர்ச்சியை தடுக்கிறது. இது அமன்சாலிசம் எனப்படும் எதிர்மறை இடைச்செயலாகும்.
29.
1. வெப்ப மண்டல மழைக்காடுகள்
2. புல்வெளி அல்லது பாலைவனம்
3. இலையுதிர் காடுகள்
4. ஊசியிலைக்காடுகள்
5. துந்தரா பகுதி
6. வெண்பனி
30.
(i) மெண்டலின் பகுப்பாய்வு, அனுபவ அறிவு.
(ii) கணித மற்றும் புள்ளியியல் அறிவின் பயன்பாடு நிகழ்விரைவு முறைகளைக் கையாண்டது.
(iii) எண்ணிக்கைகள் விவரங்கள் துல்லியமான விரிவான பதிவுகள்.
(iv) கவனமாக திட்டமிட்ட சோதனைகள்
(v) எடுத்துக் கொண்ட ஆய்வுத் தாவரம் தோட்டப் பட்டாணி (தனிப்பட்ட குரோமோசோம்களில் உள்ள ஏழு எதிரிடைப்பண்புகள்) இவையனைத்துமே மெண்டலின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
31.
அ) கோப்
ஆ) ஆஸ்பர்ன்
இ) பக்கார்ட்
ஈ) ஸ்பென்சர்
32.
1. கிளைசீன்
2. அலனைன்
3. பீட்டா அலனைன்
4. அஸ்பார்டிக் அமிலம்
33.
ஆண் பெண் கேமீட்டுகளைக் கொண்டு குறுக்குப் பெருக்கு முறையில் ஒரு மரபுப்பண்புகளின் கலப்பின வெளிப்பாட்டு பண்புகளை முன் தீர்மானிப்பதற்கு உதவும் முறையே புன்னட் என்பவர் கண்டறிந்தார்.
34.
ஒரு பண்பு கலப்பு என்று தூய கால்வழி கொண்ட பெற்றோர் தாவரங்களிடையே வேறுபட்ட ஒரு பண்பினை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் பாரம்பரியம் ஒரு பண்பு கலப்பு எனப் பெயர்
35.
தோ. நம்மாழ்வார் இயற்கை வேளாண்மையின் ஆதரவாளர் மற்றும் வல்லுநர் ஆவார். சுற்றுச்சூழல் வேளாண்மை மற்றும் இயற்கை வேளாண்மையினைப் பரப்பிய வேளாண் அறிவியலாளர் ஆவார்.
36.
தாவரத்தின் எந்த ஒரு பகுதியிலிருந்து பெறப்பட்ட தனிச் செல்களை ஆய்வுக் கூட சோதனை வளர்ப்பு கருவுருக்களைக் கொண்டு சில உயிர்த்தொழில்நுட்ப முறையில் உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை விதைகளைப் போன்றவை செயற்கை விதைகளாகும். இவற்றின் மேல் சுக்ரோஸ் மற்றும் சோடியம் ஆல்ஜினேட் போன்ற மந்தமான பொருட்கள் கருவுருக்களின் மீது பூசப்படுகின்றன.
37.
1. வாகன எஞ்சின்கள்
2. அபாயச் சங்குகள்
3. தொடர் வண்டிகள்
4. காற்று ஒலிப்பான்கள்
5. அழுத்த இயந்திரங்கள்
6. துளைப்பான்கள்
7. வெடி பொருட்கள்
38.
| மறுவேறுபாடுறுதல் | வேறுபாடிழத்தல் |
|---|---|
| ஏற்கனவே வேறுபாடற்ற ஒரு செல் மேலும் வேறுபாடுற்று மற்றொரு செல்லாக மாற்றமடைதல் ஆகும். | முதிர்ச்சி அடைந்த செல்கள் மீண்டும் ஆக்குத்திசுவாக மாறிக் கேலஸ் திசுவை உருவாக்கும் நிகழ்ச்சி. |
39.
இவை பல ஆண்டுகளுக்கு எவ்வித மாற்றமும் அடையாமல் சுற்றுச்சூழலில் அப்படியே இருக்கும் மாசுபடுத்திகளாகும்.
40.
1. விந்து - மிகச்சிறிய மனித செல்
2. அண்டம் - மிகப்பெரிய மனித செல்
41.
1. மன அழுத்தம், பயம், சங்கடத்திற்குள்ளாகிறார்கள்.
2. மாதவிடாயின்போது செயல்பாடுகள் குறைகிறது.
3. பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே தங்கி விடுகிறார்கள்.
42.
1. தற்காலிகமாக விந்து செல்களைச் சேமிக்கின்றன.
2. இங்கு விந்து செல்கள் செயல்பாட்டு ரீதியாக முதிர்ச்சி அடைகின்றன.
3. விந்துக்கள் இயங்கு திறனையும், கருவுறச் செய்யும் திறனையும் பெறுகின்றன.
43.
1. ஓங்கு தன்மை X சார்ந்த மரபணுக்களோ நிறங்களை பார்ப்பதற்கு உதவும் கூம்பு செல்களின் உற்பத்திக்கு காரணமாக இருக்கின்றன.
2. ஒடுங்குநிலை ஜீன்கள் கூம்பு செல்களை உருவாக்க முடிவதில்லை.
3. எனவே இவர்களால் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களை வேறுபடுத்தி அறிய முடிவதில்லை.
44.
சிலரின் கண்ணீர் மற்றும் உமிழ்நீர் போன்ற உடல் திரவத்தில் எதிர்ப்பொருள் தூண்டிகள் காணப்படும் அவர்கள் சுரப்பாளர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
45.
கருவுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை அல்லது பிற பிரச்சனைகளை இக்கருவி காட்டும்.
46.
1. மாதவிடாயின் 14 ஆம் நாளில் அண்ட செல் வெளியேறும்.
2. வெளியேறிய அண்ட செல் 2 நாட்கள் உயிருடன் இருக்கும்.
3. விந்தணுக்கள்,பெண் இனப்பெருக்கப்பாதையில் 12 மணிநேரம் உயிருடன் இருக்கும்.
4. இக்காலத்தில், கலவியை தவிர்த்தல், கருத்தரிப்பதைத் தவிர்க்கலாம்.
47.
கருவுறுதலை ஒருங்கிணைவு என்று அழைப்பதற்கு காரணம் இரு ஒற்றை மய இனச்செல்களில் இணைந்து, இரட்டை மய கருவாக மாறுகிறது.
48.
1. பாலிலி இனப்பெருக்கம்
2. பாலினப் பெருக்கம்
49.
| காப்புறையாக்கம் | வாலாக்கம் |
| 7-மெத்தில் குவானோசின் ட்ரைபாஸ்பேட் - தூது RNA வின் முன்னோடியான hnRNA இந்த 5' முனையில் இணைக்கப்படுகிறது. | hnRNA வின் 3' முனையில் அடினைலைட் எச்சங்கள் (300 - 200 Poly-A) இணைக்கப்படுகின்றன. இந்நிகழ்வு வாலாக்கம் எனப்படும். |
| இச்செயல்முறை காப்புறையாக்கம் எனப்படும். இதனால் hnRNA முதிர்ந்த தூது RNA வாகிறது. | இச்செயல்முறைகளால் hnRNA முதிர்ந்து தூது RNA வாக தயாராகிறது. |
50.
1. புரோகேரியோட்டுகள் - எ.கா. ஈகோலையில் தெளிவான உட்கரு கிடையாது எனினும் வட்ட வடிவ DNA, குரோமேட்டின் அமைப்பு உட்கரு உறை, நியூக்ளியோஸ் இல்லாததால் மையத்தில் புரதங்களோடு இனைந்து நியூக்ளியாய்டு எனும் பகுதியாக உள்ளது.
2. இதற்கு ஜீனோஃபோர் என்று பெயர்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards