12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Five mark Important Questions with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
கடலில் கொட்டப்படும் நச்சுக்கழிவுகளை தவிர்க்க சில தீர்வுகளைக் கூறு.
2.
கியோட்டோ உடன்படிக்கையின் முதன்மையான நோக்கம் என்ன?
3.
வறண்ட நில தாவரங்களின் உள்ளமைப்பு தகவமைப்புகளை எழுதுக.
4.
தீயினால் ஏற்படும் ஏதேனும் ஐந்து விளைவுகளைப் பட்டியலிடுக.
5.
செயற்கை விதை தயாரிப்பிற்கான நெறிமுறையை எழுதுக.
6.
ஒரு சமூகத்தின் நிலைப்புத்தன்மை அதன் சிற்றினங்களின் பல்வகைத்தன்மையைச் சார்ந்துள்ளது-நியாயப்படுத்துக.
7.
மனித செயல்பாடுகளால் உயிரியப் பல்வகைத்தன்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் யாவை - விளக்கு.
8.
பனிச் சமவெளி உயிரினத் தொகை மற்றும் பசுமை மாறா ஊசியிலைக் காடுகள் உயிரினக்குழுமங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கூறுக.
9.
மறுசேர்க்கை இன்சுலின் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது என்பதை விளக்குக.
10.
மறுசேர்க்கை தடுப்பூசிகள் என்பன யாவை? வகைகளை விளக்குக.
11.
எ.இ.எமர்சன் சிற்றினமாக்கலை எவ்வாறு வரையறை செய்துள்ளார்? இதன் வகைகளைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
12.
முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் யாவை?
13.
இரண்டு படிநிலை புரதச்சேர்க்கை நிகழ்ச்சியின் அனுகூலங்கள் யாவை?
14.
தொண்டை அடைப்பான் மற்றும் டைஃபாய்டு ஆகியவற்றின் நோய்க்காரணிகள், பரவும் முறை மற்றும் அறிகுறிகளைக் குறிப்பிடுக.
15.
கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கண்டறிந்து ‘அ’, ‘ஆ’ ‘இ’ மற்றும் ‘ஈ’ எனக் குறியிடப்பட்டுள்ள பாகங்களின் பெயர்களைக் குறிக்க.

16.
குரோமோசோம் சாரா மரபு கடத்தல் என்றால் என்ன?
17.
நிக்கோட்டியானா தாவரம் சுயப் பொருந்தாத் தன்மையை எவ்வாறு வெளிப்படுத்துகிறது? அதன் செயல்முறையை விளக்குக.
18.
கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக.
அ) அமீபாவின் இரு சமப்பிளவுமுறை, மற்றும் பிளாஸ்மோடியத்தின் பல பிளவுமுறை
ஆ) பல்லி மற்றும் பிளனேரியாவில் காணப்படும் இழப்பு மீட்டல்
19.
உயிரிவழித் திருத்தம் என்றால் என்ன? உயிரிவழித் திருத்தத்திற்கு எடுத்துக்காட்டு தருக.
20.
21.
கருவூண்திசு என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
22.
பூச்சி மகரந்தச்சேர்க்கை மலர்களில் காணப்படும் சிறப்பியல்புகளைக் குறிப்பிடுக.
23.
மென் சூல்திசு மற்றும் தடி சூல்திசு வேறுபடுத்துக.
24.
பால்வினைத் தொற்று நோய்களைத் தடுக்கும் முறைகளை எழுதுக
1.
1. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு கடலில் கொட்டப்படும் கழிவுகளை தவிர்க்கப் பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளது.
2. தொழிற்சாலை கழிவுகளை குறைக்கவும் அவைகள் கடலில் கொட்டப்படுதல் தவிர்க்கப்பட வேண்டும்.
3. வேதி தீங்குயிரி கொல்லி மருந்துகள் கடலில் கொட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
4. பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
5. வீட்டுக் கழிவுகள் நகராட்சி கழிவுகள் கடலில் கொட்டக் கூடாது.
6. விவசாய கழிவுகள் கடலில் சேர்வது செய்யப்பட வேண்டும்.
2.
புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணமான CO2 வெளியிடும் அளவை குறைப்பதே கியோட்டோ உடன்படிக்கையின் முதன்மை நோக்கம் ஆகும்.
இது 1999 டிசம்பர் 11 போடப்பட்டது.
3.
உள்ளமைப்பில் தக அமைவுகள்:
(i) நீராவிப் போக்கின் நீர் இழப்பினைத் தடுப்பதற்காகப் பல்லடுக்கு புறத்தோலுடன் தடித்த கியூட்டிகளும் காணப்படுகின்றன.
(ii) ஸ்கிலிரங்கைமாவினாலான புறத்தோலடித்தோல் (Hypodermis) நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
(iii) உட்குழிந்த குமிழிகளில், தூவிகளுடன் கூடிய உட்குழிந்தமைந்த இலைத்துளைகள் (Sunken stomata) கீழ்புறத் தோலில் மட்டுமே காணப்படுகின்றன.
(iv) இரவில் திறக்கும் (Scotoactive stomata) வகையான இலைத்துளைகள் சதைப்பற்றுள்ள தாவரங்களில் காணப்படுகின்றன.
(v) பல்லடுக்கு கற்றைஉறை கொண்ட வாஸ்குலத் தொகுப்புகள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
(vi) இலையிடைத் திசுவானது பாலிசேடு மற்றும் பஞ்சு திசுவாக நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
(vii) சதைப்பற்றுள்ளவற்றில் தண்டுப்பகுதியில் நீர்சேமிக்கும் திசுக்களைப் பெற்ற பகுதியாக விளங்குகிறது.
4.
(i) தீயானது தாவரங்களுக்கு நேரடியான அழிவுக்காரணியாக விளங்குகிறது.
(ii) எரிகாயம் அல்லது எரிதலால் ஏற்படும் வடுக்கள் ஒட்டுண்ணி பூஞ்சைகள் மற்றும் பூச்சிகள் நுழைவதற்கான இடமாக உள்ளது.
(iii) ஒளி, மழை, ஊட்டச்சத்து சுழற்சி, மண்ணின் வளம் ஹைட்ரஜன் அயனிச் செறிவு (அ) pH, மண், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றில் மாறுபாடுகளை உண்டாக்குகிறது.
(iv) எரிந்த பகுதியிலுள்ள மண்ணில் வளரும் சில வகையான பூஞ்சைகள் எரிந்த மண்ணில் வளரும் பைரோஃபில்லஸ் (pyrophilous) எனப்படும். (எ.கா) பைரோனிமா கன்ஃப்புளுயென்ஸ்
5.
செயற்கை விதைகள்: தாவரத்தின் எந்த ஒரு செல் பகுதியிலிருந்து பெறப்பட்ட தனிச் செல்களை ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பு கருவுருக்களைக் கொண்டு சில உயிர்தொழில்நுட்ப முறையில் செய்யப்பட்ட இயற்கை விதைகளைப் போன்ற செயற்கை விதைகள்.
6.
(i) உயிரிய பல்வகைத் தன்மை என்பது இந்த பூமியில் வாழும் பலவகையான உயிரினங்களைக் குறிக்கிறது.
(ii) மழைக் காடுகள், பவளப்பாறைகள், புல்வெளிகள், பாலைவனங்கள், பனிச்சமவெளிகள் மற்றும் துருவ பகுதியின் பனிப்பாறைகள் போன்ற வெவ்வேறு சூழ்நிலை மண்டலங்களில் உயிர்கள் வாழ்கின்றன.
(iii) நம் கோளத்தின் நல்வாழ்விற்கும், உயிரிகள் நிலைத்து இருப்பதற்கும் இவ்வாறான உயிரியப் பல்வகைத் தன்மை அவசியமானதாகும்.
(iv) மேலும் உயிரிய பல்வகைத் தன்மை சுற்றுச்சூழல் செயல்முறைகளை பராமரிக்கவும், மண் உற்பத்தி ஊட்டச்சத்துகளின் மறுசுழற்சி, தட்பவெப்பநிலை பாதிப்பு, கழிவுகளை சிதைத்தல் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
(v) சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தின் தன்மையை குறிக்கும் குறியீடாகவும் விளங்குகிறது.
(vi) மனித இனம் உயிர் வாழ்தல் என்பது தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட பூமிக் கோளத்தின் அனைத்து உயிரிகளின் நலமான உயிர் வாழ்தலைச் சார்ந்துள்ளது.
7.
(i) இயற்கையால் ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தவிர நேரடியாகவும், மறைமுகமாகவும், வாழிடம் மற்றும் உயிரியப் பல்வகைத் தன்மை ஆகியவற்றின் இழப்பிற்கு மனித செயல்பாடுகளே காரணம்.
(ii) வேளாண்மை செயல்பாடுகளால் நிலப்பரப்பு தூண்டாடப்படுதல் மற்றும் அழிக்கப்படுதல், பிரித்தெடுத்தல் (சுரங்கம், மீன் பிடித்தல், தேங்கிடங்கள், அறுவடை) மற்றும் வளர்ச்சி (குடியிருப்புகள், தொழிற்சாலைகள்) ஆகியவை வாழிட இழப்பு மற்றும் துண்டாடப்படுதலுக்கு காரணமாகின்றன.
(iii) இதன் விளைவாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் சிறிய மற்றும் ஆங்காங்கே உருவான உயிரின கூட்டங்கள் உருவாக வழி ஏற்படுத்துகிறது.
(iv) அவ்வாறு உருவான சிறு கூட்டம் அழியும் நிலை இனங்களாக மாறுகின்றன.
(v) சிறப்பு வகையான உணவுப் பழக்கம், சிறப்பு வகை வாழிடத் தேவை, பெரிய உடல், சிறிய இனக் கூட்டம், குறைவான புவியியல் பரவல் மற்றும் பொருளாதார அல்லது வணிக உயர் மதிப்பு ஆகியவை உயிரியப் பல்வகைத் தன்மைக்கான வேறு சில அச்சுறுத்தல்கள் ஆகும்.
8.
| பனிச் சமவெளி உயிரினத் தொகை | பசுமை மாறா ஊசியிலைக் காடுகளின் உயிரினத்தொகை | ||
|---|---|---|---|
| 1 | குறுகிய பகல் பொழுதைக் கொண்ட குளிர்காலம் நீண்டதாகவும், நீண்ட பகல் பொழுதைக் கொண்ட கோடைக்காலம் குறுகியதாகவும் உள்ளது. | 1 | இப்பகுதி அதிகக் குளிர்மிக்க, நீடித்த குளிர்காலம் கொண்டது. |
| 2 | மழையளவு ஆண்டுக்கு 250 மி.மீக்கும் குறைவாக உள்ளது. | 2 | இங்கு ஆண்டு மழையளவு 380-1000 மி.மீ ஆகும். |
| 3 | குட்டையான வில்லோ மரங்கள், பூச்ச மரங்கள், பாசிகள், புற்கள், கோரைகள் ஆகியவை இங்கு காணப்படக் கூடிய தாவர இனங்கள் ஆகும். | 3 | ஸ்ப்ரூஸ், ஃபிர் மற்றும் பைன் போன்ற ஊசியிலை மரங்கள் இங்கு பொதுவாகக் காணப்படுகிற தாவர இனங்களாகும். |
| 4 | கலைமான்கள், ஆர்டிக் முயல்கள், கஸ்தூரி எருது மற்றும் லெம்மிங்குகள் ஆகியவை இங்கு காணப்படக் கூடிய தாவர உண்ணிகளாகும். | 4 | அணில்கள் மற்றும் வெண்பனி முயல்கள் இங்கு காணப்படக் கூடிய தாவர உண்ணிகளாகும். |
| 5 | ஆர்டிக் நரி, ஆர்டிக் ஓநாய், சிவிங்கி பூனை மற்றும் பனி ஆந்தை இங்கு வாழும் விலங்குண்ணிகளாகும். | 5 | பைன் மார்டென்கள், மர ஓநாய்கள், பழுப்பு நிறக் கரடிகள், சிவிங்கி பூனை மற்றும் ஓநாய்கள் இங்கு வாழும் விலங்குண்ணிகளாகும். |
9.
டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில்நுட்பத்தால் இன்சுலினை உற்பத்தி செய்யும் முறை 1970 களின் பிற்பகுதியில் துவங்கப்பட்டது.
இத்தொழில் நுட்பத்தில், மனித இன்சுலினுக்கான மரபணு, எ.கோலையின் பிளாஸ்மிட்டினுள் நுழைக்கப்படுகிறது. ஒரு தலைமை வரிசையை முன்புறம் கொண்டு அதைத் தொடர்ந்த A மற்றும் B துண்டங்கள் மற்றும் அவற்றை இணைக்கும் 'C' என்னும் மூன்றாவது சங்கிலி ஆகியவற்றால் ஆன முன்னோடி பாலிபெப்டைடு சங்கிலியாக முதன்மை முன்னோடி இன்சுலின் உருவாகிறது.
மொழி பெயர்ப்புக்குப் பின் C சங்கிலியும் வெட்டப்பட்டு நீக்கப்படுவதால், A மற்றும் B சங்கிலிகள் மட்டும் எஞ்சுகின்றன.
டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டு மனிதனுள் செலுத்தப்பட்ட முதல் மருந்துப்பொருள் இன்சுலின் ஆகும்.
10.
மறுசேர்க்கை தடுப்பூசிகள்:
வழக்கமான நடைமுறைகளில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது, மறுசேர்க்கைத் தடுப்பூசிகள் சீரான தரத்துடன் குறைவான பக்க விளைவுகளைக் கொண்டுள்ளன. மறுசேர்க்கைத் தடுப்பூசிகளின் பல்வேறு வகைகளாவன.
(i) துணை அலகு தடுப்பூசிகள்
(ii) வலு குறைக்கப்பட்ட மறுசேர்க்கைத் தடுப்பூசிகள்
துணை அலகு தடுப்பூசிகள்:
(i) நோயுண்டாக்கும் உயிரியை, முழு உயிரியாகப் பயன்படுத்தாமல், அவ்வுயிரியின் பகுதிகளை மட்டும் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு 'துணை அலகு தடுப்பூசிகள்' என்று பெயர்.
(ii) புதிய வகை துணை அலகு தடுப்பூசிகள் தயாரிக்க டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில் நுட்பம் ஏற்றதாகும்.
(iii) இம்முறையில் நோயுண்டாக்கும் உயிரியிலுள்ள புரதங்கள், பெப்டைடுகள் மற்றும் அவற்றின் டி.என்.ஏக்கள் ஆகிய கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன.
(iv) தயாரிப்பில் தூய்மை, நிலைப்புத்தன்மை மற்றும் பாதுகாப்பான பயன்பாடு ஆகியவை இவ்வகைத் தடுப்பூசிகளின் நன்மைகளாகும்.
வலு குறைக்கப்பட்ட மறுசேர்க்கை தடுப்பூசிகள்:
(i) மரபியல்பு மாற்றப்பட்ட நோயுண்டாக்கி உயிரிகளில் அவற்றின் நோயுண்டாகும் தன்மை நீக்கப்பட்டு தடுப்பூசிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பாக்டீரியா அல்லது வைரஸ்களை மரபுப் பொறியியல் மாற்றம் மூலம் உயிருள்ள தடுப்பூசிகளாகப் பயன்படுத்தலாம். இத்தகைய தடுப்பூசிகள் 'வலு குறைக்கப்பட்ட மறுசேர்க்கைத் தடுப்பூசிகள்' எனப்படும்.
11.
சிற்றினமாக்கம்
மரபு ரீதியாக தனித்துவம் வாய்ந்த, இனப்பெருக்கத் தன்மை உடைய இயற்கையான இனக்கூட்டத்திற்கு சிற்றினம் என்று பெயர். சிற்றினமாக்கம் என்பது ஒரு சிற்றினம் பரிணாம மாற்றம் பெற்று ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வேறுபட்ட சிற்றினங்களாக மாறுவது ஆகும்.
வகைகள்
ஓரிடச் சிற்றினமாக்கம் அல்லது இனப்பெருக்கம் சார்ந்த சிற்றினமாக்கம்
ஒரிடச் சிற்றினமாக்கம் முறையில் ஒற்றை மூதாதை இடமிருந்து இரண்டு புதிய சிற்றினங்கள் பரிணாமம் பெற்றுத் தோன்றுகின்றன. ஒரே புவிப் பகுதியில் அவை இரண்டும் வாழ்கின்றன.
வேற்றிடச் சிற்றினமாக்கம் அல்லது புவி சார்ந்த சிற்றினமாக்கம்
வேற்றிடச் சிற்றினமாக்கல் முறையில் மரபணு ஓட்டம் ஆனது, ஒரு உயிரியல் இனக் கூட்டத்தினைச் சேர்ந்த ஒத்த சிற்றினங்கள் தனிமைப்படுத்தப்படும் போது தடுக்கப்படுகிறது. ஒரே சிற்றினத்தினை சேர்ந்த இனக்கூட்டம் ஆனது புவியியல் தடையின் காணமாக பிரிந்து இரண்டு சிற்றினங்களாக மாறுகின்றன.
12.
| முதல்நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு | இரண்டாம் நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு | |
| 1. | வடிகட்டுதல் மற்றும் படிய வைத்தல் முறைகள் மூலம் கழிவு நீரிலிருந்து திட, கரிம துகள்கள் மற்றும் கனிம பொருட்களை பிரித்தெடுப்பது முதல் நிலை சுத்திகரிப்பில் அடங்கும். | முதல்நிலையில் உருவான கலங்கள் நீரில் சுவாச நுண்ணுயிரிகள் வளர்ச்சியினால் கரிம பொருட்கள் சிதைக்கப்படுகின்றன. |
| 2. | மிதக்கும் குப்பைகள் தொடர் வடிகட்டல் முறையிலும் மண் மற்றும் சிறு கற்கள் படிய வைத்தல் முறை மூலம் நீக்கப்படுகிறது. | முதல்நிலையில் உருவான கலங்கள் நீரில் உள்ள கரிமப் பொருட்கள் சுவாச நுண்ணுயிரிகள் மற்றும் காற்றற்ற சுவாசம் மேற்கொள்ளும் பாக்டீரியாக்கள் மூலம் அழிக்கப்படுகின்றன. |
| 3. | உயிரிய ஆக்ஸிஜன் தேவை (BOD) அதிகமாகவே காணப்படும். | இதில் பெருமளவில் உயிரிய ஆக்ஸிஜன் தேவையை (BOD) குறைக்கின்றது. |
| 4. | முதல்நிலை படியும் தொட்டி, வடிகட்டல் தொட்டி பயன்படுத்தப்படுகிறது. | இங்கு காற்றூட்டல் தொட்டி மற்றும் காற்றில்லா சுவாச கசடு சிதைப்பான் போன்ற தொட்டிகள் பயன்படுகின்றன. |
| 5. | இதில் உயிரிய வாயு உருவாவதில்லை. | கசடிலுள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் செரிமானம் அடையும் போது உயிரிய வாயுவை (மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு) உற்பத்தி செய்கின்றன. இது ஆற்றல் மூலாதாரமாக பயன்படுகிறது. |
| 6. | இது குறுகிய காலத்தில் நடைபெறுகிறது. | இது நீண்ட காலம் நடைபெறுகிறது. |
13.
I - படியெடுத்தல்:
டி.என்.ஏவில் காணப்படும் செய்திகள் நகலெடுக்கப்படும் செயல்முறை:
DNA வின் ஒரு இழையில் காணப்படும் புரதத்திற்கான தகவல்களை குறியீடாக செல்லுக்கு கொண்டுசெல்வது தூது RNA (அ) mRNA
II - மொழிபெயர்த்தல்:
1. தூதுவிலுள்ள தகவல் குறியீடுகள் செல்லின் உட்கருவிலிருந்து சைட்டோபிளாசத்தை அடைகிறது.
2. இங்கு ரிபோசோம் RNA, கடத்தி RNA மற்றும் தூது RNA இவற்றுடன் பல்வேறு நொதிகளும் ஒரு அமைப்பாக சேர்ந்து மொழி பெயர்த்தல் படி நிலை நடைபெறும்.
3. இவ்வாறு ஒரு படிநிலைகளும் செல்லில் உட்கரு மற்றும் சைட்டோபிளாசம் நடைபெறுகிறது.
4. எனவே புரதச் சேர்க்கை இரண்டு படிநிலைகளில் நடைபெறுவதன் அனுகூலமாகும்.
14.
தொண்டை அடைப்பான்:
1. நோய்க்காரணி: சையனோ பாக்டீரியம் டிப்தீரியா
2. பரவும் முறை: கேழைத்துளிகள் மூலம்.
3. அறிகுறி: காய்ச்சல், தொண்டையில் புண் மூச்சுவிட சிரமபடல்
டைஃபாய்டு:
1. நோய்க்காரணி - சால்மோனெல்லா டைஃபி
2. பரவும் முறை - மலக்கழிவு கலந்த உணவு மற்றும் நீர் வழியாக
3. அறிகுறி - அசௌகாரியமான வயிறு, காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு.
15.
அ) விட்டலின் சவ்வு
ஆ) உட்கரு
இ) சோனா பெலூசிடா
ஈ) கொரோனா ரேடியேட்டா
16.
குரோமோசோம் சாரா மரபு கடத்தல்:
குரோமோசோம் சாராத மரபுக் கடத்தல் என்பது சைட்டோபிளாசத்தில் உள்ள மரபு சாரா மரபணுக்களினால் ஏற்படும் மரபுக் கடத்தல் என அழைக்கப்படுகிறது.
(எ.கா) லிம்னேயே நத்தை ஓட்டின் சுருள் தன்மை
பாரமீசியத்தின் கப்பா துகள்கள்
17.
1. நிக்கோட்டியானா - தன் மலடாதல் (அ) சுயப்பொருந்தாத் தன்மைக்கு பல்கூட்டு அல்லீல்கள் காரணமாக உள்ளன.
2. தன்மலடாதல் - ஒரு தாவரத்தின் மகரந்தங்கள் அதே தாவரத்தின் சூலக மடியில் முளைக்க இயலாத தன்மையினால் கருவுறுதல் நடைபெறுகிறது
3. ஈஸ்ட் என்பவர் பல்கூட்டு அல்லீல்களைக் கண்டறிந்தார்.
4. சுய பொருந்தாத்தன்மை பண்புகளுக்கான மரபணுக்கள் - S1, S2, S3, S4 எனக்கொள்வோம்
5. அயல் கருவுறுதல் மூலம் உருவாகும் புகையிலை தாவரங்கள் S1, S2 (அ) S2, S2 போன்ற ஒத்த பண்பு கொண்டவைகளாக இருப்பதில்லை வேறுபட்டவைகளாக காணப்படும்.
6. வேறுபட்ட S1, S2 தாவரங்களுக்கிடையே கலப்பு செய்யப்பட்டால் மகரந்தக்குழாய் இயல்பாக வளர்வதில்லை ஆனால் S1, S2 வைத் தவிர S3, S4 தாவரங்களைக் கலப்பு செய்தால் அவை வளர்கிறது செங்குத்தான துண்டிப்பு
| பெண் பெற்றோர் (சூலகமுடி பகுதி) |
ஆண் பெற்றோர் (மகரந்த மூலம்) |
||
| S1S2 | S2S3 | S3S4 | |
| S1S2 | தன் மலடு | S3S2 S3S1 |
S3S1 S3S2 S4S1 S4S2 |
| S2S3 | S1S2 S1S3 |
தன் மலடு | S4S2 S4S3 |
| S3S4 | S1S3 S1S4 S2S3 S2S4 |
S2S3 S2S4 |
தன் மலடு |
18.
ஆ)
| இரு சமப்பிளவு முறை அமீபாவில் | பல பிளவுமுறை பிளாஸ்மோடியத்தில் |
|---|---|
| இது ஒரு எளிய முறை | பிளாஸ்மோடியத்தில் சைசான்ட் மற்றும் ஊசைட் நிலையில் பல பிளவுமுறை நடைபெறுகிறது. |
| சுருங்கும் நுண்குமிழ் செயலிழந்து மறைந்து விடும். | சைசான்ட் நிலையில் பலபிளவு முறை நடைபெறுதலுக்கு சைசோகனி என்று பெயர். |
| உட்கரு மணி மறைந்துவிடும். | இதன் சேய் உயிரிகள் மெரோசோயிட்டுகள் ஆகும். |
| உட்கருவானது மறைமுகப் பிரிவு முறையில் பிளவுபடும். | ஊசைட் நிலையில் நடைபெறும் பல பிளவு முறை ஸ்போரோகனி என்றும் சேய் உயிரிகள் ஸ்போரோசோயிட்டுகள் ஆகும். |
| செல்லின் நடுவில் சுருக்கம் ஏற்பட்டு சைட்டோபிளாசம் பிரியும். |
ஆ)
| பல்லி இழப்பு மீட்டல் | பிளனேரியாவில் இழப்பு மீட்டல் | ||
|---|---|---|---|
| 1. | இது மீண்டும் உருவாக்குதல் முறையாகும் | 1. | இது சீராக்கல் முறையாகும். |
| 2. | வெட்டுண்ட வாலை மீண்டும் பெறுதல். | 2. | உடலில் சேதமுற்ற சில வகையான திசுக்கள் மட்டும் சரி செய்யப்படுகின்றன. |
19.
நுண்ணுயிரிகள் (அ) தாவரங்களைக் கொண்டு சூழல் மாசுறுதலை சுத்திகரிக்கும் அணுகுமுறைக்கு உயிரிவழித் திருத்தம் என்று பெயர்.
அணுகுமுறை:
1. கழிவுநீர் சுத்திகரிப்பு
2. தொழிற்சாலை கழிவு
3. திடக்கழிவுகள் போன்றவை
சுத்திகரிப்பது:
1. மண் மற்றும் நிலத்தடி நீர், கடலில் எண்ணெய் கசிவு ஆகியவற்றில் இருக்கும் எண்ணெய் கசிவு
2. பெட்ரோலிய வேதிய எச்சங்கள்
3. வன் உலோகங்கள்
4. பூச்சிக்கொல்லிகள் போன்றவை
சாதகமான பண்புகள்:
1. மலிவானது -அதிக நன்மையுடையது.
2. சூழல் மாசுறாத ஒரு அணுகுமுறை (eco friendly)
3. தொடர் பயன்தருவது (sustainable)
4. குறைந்த செறிவில் காணப்படும் மாசுறுத்திகளை அதிக திறனுடன் இது நீக்கிவிடும்.
5. (எ.கா) சூடோமோனாஸ் பியுடிடா எனும் மரபணுமாற்றம் செய்யப்பட்ட பாக்டீரியாவை கொண்டு கடலிலுள்ள (அ) நீரிலுள்ள கச்சா எண்ணெய் கசிவுகளை நீக்குதல்.
20.
21.
கருவுறுதலுக்கு பின், கரு பகுப்படைவதற்கு முன் முதல் நிலை கருவூண் உட்கரு பகுப்படைந்து உருவாக்கும் திசு கருவூண் திசு.
1. உட்கருசார் கருவூண் திசு
முதல் நிலை கருவூண் உட்கரு (PEN) குன்றலில்லா பகுப்படையும். சுவர் உருவாகாமல் தனித்த உட்கருக்களைக் கொண்டுள்ளன. (எ.க) அராக்கிஸ்
2. செல்சார் கருவூண் திசு
முதல்நிலை கருவூண் உட்கரு பகுப்படையும். இரண்டு உட்கருக்கள் உருவாகும். சுவர் உருவாக்கம் நடைபெறும். (எ.டு) ஹீலியான்தஸ்
3. ஹெலோபிய கருவூண் உட்கரு பகுப்படையும், இரண்டு உட்கருக்கள் உருவாகும். உட்கருக்களுக்கிடையே சுவர் உருவாகும். பெரிய சூல்துளை அறை, சிறிய சலாசா அறை உருவாகும். (எ.டு) ஹைட்ரில்லா.
22.
1. பெரிதான மலர்கள், சிறிய மலர்கள் நெருக்கமான மஞ்சரியாகும். (எ.டு. ஆஸ்ட்ரேசி)
2. பிரகாசமான வண்ணம் (எ.டு பாய்ன்செட்டியா)
3. மணம், பூந்தேனும் மலரை நாடி வரும் விருந்தாளிகளுக்கு வெகுமதி.
4. ஈக்கள், வண்டுகளால் மகரந்தச் சேர்க்கையுறும் மலர்கள் ஈர்க்க, துர்நாற்றம் பரப்பும்
5. சாறு செல்களைக் கொண்ட மலர்களின் சாற்றை பூச்சிகள் ஓட்டையிட்டு உறிஞ்சும்.
23.
| மென் சூல் திசு | தடி சூல் திசு | |
| 1 | வித்துருவாக்க செல்கள் புறத்தோலடியின் கீழ் உள்ளது. | வித்துருவாக்க செல்கள், புறத்தோலடியின் கீழ்ப்பகுதியிலிருந்து தோன்றும் |
| 2 | ஒரு அடுக்கு சூல் திசுவால் சூழப்பட்டுள்ளது | அதிக சூல் திசு கொண்டவை. |
| 3. | மிகச் சிறிய சூல்திசுவைக் கொண்டிருக்கும். | பல அடுக்கு செல்கள் சூல்திசுவில் உள்ளது. |
24.
(i) முன்பின் தெரியாதவர், பலருடன் பாலுறவைத் தவிர்த்தல்.
(ii) கருத்தடை உறைகளைப் பயன்படுத்துதல்
(iii) மருத்துவ ஆலோசனை, முழுமையான சிகிச்சை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards