12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
தானியங்களினின்று கிடைக்கும் ஊட்டசத்துக்கள் எவை?
2.
ஹார்மோன் வெளிவிடும் உள்கருப்பை சாதனங்கள் எவ்வாறு செயலாற்றுகின்றன.
3.
விலங்குகளில் காணப்படும் பிளவுறுதலின் வகைகள் யாவை?
4.
அத்தி மற்றும் குளவி இடையில் நடைபெறும் இடைச்செயல்களை விளக்குக.
5.
6.
7.
ஈ.கோலையில் உள்ள மூன்று நொதிகளான β- கேலக்டோசிடேஸ், பெர்மியேஸ் மற்றும் டிரான்ஸ் அசிட்டைலேஸ் ஆகியவை லாக்டோஸ் முன்னிலையில் உற்பத்தியாகின்றன. இந்நொதிகள் லாக்டோஸ் இல்லாத நிலையில் உற்பத்தியாவதில்லை – விளக்குக.
8.
இனப்பெருக்கம் என்றால் என்ன?
9.
மரபற்றுப் போதல் என்றால் என்ன?
10.
வேதிய சடுதி மாற்றிகள் - விவரி
11.
மின்னணுக் கழிவு என்பது எதைக் குறிக்கிறது?
12.
உயிரிகளில் காணப்படும் பல்வேறு வகையான ஒருங்கிணைவு முறைகளை விவரி.
13.
14.
கலப்பின வீரியம் - குறிப்பு வரைக
15.
பொதுவாக கோடைக்காலங்களில் இயற்கையில் ஏற்படும் தீயினால் காடுகள் பாதிக்கப்படுகிறது. இப்பகுதி வழிமுறை வளர்ச்சி என்ற நிகழ்வின் மூலம் ஒரு காலத்தில் படிப்படியாக தானே புதுப்பித்துக் கொள்கிறது. அந்த வழிமுறை வளர்ச்சியின் வகையைக் கண்டறிந்து விளக்குக.
16.
பல்வேறு வகை ஒற்றியெடுப்பு தொழில்நுட்பத்தை ஒப்பிடுக.
17.
பசுங்கணிக மரபணு சார்ந்த பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் வெளிக்கொணர்க.
18.
மூடுவிதைத் தாவரத்தில் நடைபெறும் கருவுறுதல் நிகழ்விலுள்ள படிநிலைகளின் சுருக்கமான தொகுப்பைத் தருக.
19.
எந்தவொரு உயிரின சமுதாயமும் இல்லாத வெற்றுப் பரப்பில் முதலில் குடியேறும் தாவரங்கள் __________ என்று அழைக்கப்படுகின்றன.
முன்னோடி சிற்றினங்கள்
படிநிலை
சுய வழிமுறை வளர்ச்சி
வேற்று வழிமுறை வளர்ச்சி
20.
பயோ டெக்னாலஜி என்ற வார்த்தைகளை உருவாக்கியவர்
வெய்ஸ்னர்
கார்ல் பிரான்டில்
சாங்கர்
கார்ல் எரிக்கி
21.
வில்வம் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தது?
லேமியேசி
ரூட்டேசி
வைட்டேசி
யுகார்பியேசி
22.
எதிர்கால சிகிச்சைத் தேவைகளுக்காக தண்டு செல்களைப் பிரித்தெடுத்துப், பதப்படுத்தல் மற்றும் சேமித்து வைத்தல் ஆகிய பணிகளை உள்ளடக்கியது _______________ ஆகும்.
தொப்புள் கொடி இரத்த வங்கி
தண்டு செல் வங்கி
இரத்த வங்கி
ஜீன் வங்கி
23.
தொற்றுத் தாவர வேர்களில் காணப்படும் சிறப்பு வகை திசுக்கள் _____________
சைலம்
புளோயம்
பாரன்கைமா
வெலாமன்
24.
பறவைகள் தோன்றிய காலம்
டிரையாசிக்
ஜூராசிக்
கிரிடேஷியஸ்
பெர்மியன்
25.
வளர்கருவின் சராசரி இதயத்துடிப்பு
120-160 துடிப்பு/நிமிடம்
130-150 துடிப்பு/நிமிடம்
120-150 துடிப்பு/நிமிடம்
130-160 துடிப்பு/நிமிடம்
26.
கைபேசிகளின் மூலம் உருவாகும் மின்னணுக் கழிவுகளில் எந்த உலோகம் அதிகமாகக் காணப்படுகிறது?
தாமிரம்
வெள்ளி
பலேடியம்
தங்கம்
27.
பின்வரும் பகுதிகளில் எது பூமிக்கோளின் நுரையீரல் என அறியப்படுகிறது.
இலையுதிர் காடுகள்
வடகிழக்கு இந்தியாவின் மழைக்காடுகள்
ஊசியிலைக் காடுகள்
அமேசான் காடுகள்
28.
கீழ்கண்ட எந்த இரண்டு சிற்றினங்களைக் கலப்பு செய்து அதிக இனிப்புத்தன்மை, அதிக விளைச்சல், தடித்த தண்டு மற்றும் வட இந்தியாவில் கரும்பு பயிரிடப்படும் இடங்களில் வளரும் தன்மையுடைய இரகங்கள் பெறப்பட்டன.
சக்காரம் ரோபோஸ்டம் மற்றும் சக்காரம் அஃபிசினாரம்
சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் அஃபிசினாரம்
சக்காரம் சைனென்ஸ் மற்றும் சக்காரம் அஃபிசினாரம்
சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் ரோபோஸ்டம்
29.
தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன?
டி.என்.ஏ மூலக்கூறின் 5 முனையில் மட்டுமே இரட்டிப்படைதல் தோன்றும்.
டி.என்.ஏ லைகேஸ் நொதி 3'➝ 5' திசையிலேயே செயல்படும்.
டி.என்.ஏ பாலிமரேஸ் நொதி, வளர்ந்து வரும் இழையின் 3' முனைப் பகுதியில் மட்டுமே புதிய நியூக்ளியோடைடுகளை இணைக்கும்.
ஹெலிகேஸ் நொதிகள் மற்றும் ஒற்றை இழை இணைப்புப் புரதம் ஆகியவை 5' முனையிலேயே செயல்படும்.
30.
20% மற்றும் 60% பசுமை இல்ல வாயுக்கள் புவி வெப்பமயமாதலுக்குக் காரணமானவை முறையே_______.
N2O மற்றும் CO2
CFCs மற்றும் N2O
CH4 மற்றும் CO2
CH4 மற்றும் CFCs
31.
புள்ளி சடுதிமாற்றத்தால் DNA வின் வரிசையில் ஏற்படும் ஒத்த பதிலீடு, ஒத்த பதிலீடு வேறுபட்ட பதிலீடு, வேறுபட்ட பதிலீடு முறையே _______.
A ⟶ T, T ⟶ A, C ⟶ G மற்றும் G ⟶ C
A ⟶ G, C ⟶ T, C ⟶ G மற்றும் T ⟶ A → W
C ⟶ G, A ⟶ G, T ⟶ A மற்றும் G ⟶ A
G ⟶ C, A ⟶ T, T ⟶ A மற்றும் C ⟶ G
32.
ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் இருக்கும் பொழுது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு?
25%
50%
100%
75%
33.
கூற்று மற்றும் காரண வினாக்கள் :
கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று கூற்று (கூ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக:
கூற்று: தேனீக்களின் சமூகத்தில் ஆண் தேனீக்களைத் தவிர மற்ற அனைத்தும் இருமயம் கொண்டவை
காரணம் : ஆண் தேனீக்கள் கன்னி இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் ஆகும்.
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் இல்லை.
'கூ’ சரியானது ஆனால் ‘கா’ தவறானது.
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறானவை.
34.
மான்ட்ரியல் ஒப்பந்தம் என்றால் என்ன? அதன் நோக்கம் யாது?
35.
பாலைவனத்தில் உள்ள விலங்கினங்கள் அதிக வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக காணப்படக்கூடிய தகவமைப்புகள் பற்றி எழுதுக.
36.
முன்னோடி கூட்டுறவு என்றால் என்ன?
37.
அறிவுசார் சொத்துரிமை என்றால் என்ன? அதன் கூறுகள் யாவை?
38.
பொய்யான பிரசவ வலியை ஏற்படுத்துவது எது?
39.
லாமார்க்கின் பெறப்பட்ட பண்புக்கோட்பாட்டினை தவறென நிரூபித்தவர் யார்? எவ்வாறு நிரூபித்தார்?
40.
மரபு மாற்றப்பட்ட பயிர்களில் கிரை ஜீன்களின் (cry genes) பங்கினை விவரி.
41.
மனித உடலில் நுழைந்த பிறகு, ரெட்ரோவைரஸ் இரட்டிப்படையும் செயல்முறையை விளக்குக
42.
பேசில்லரி சீதபேதி மற்றும் அமீபிக் சீதபேதி - ஒப்பிட்டு வேறுபடுத்துக.
43.
அனைத்து சூழல்மண்டலங்களிலும் பொதுவாக காணப்படும் உணவுச்சங்கிலியின் பெயரை கண்டறிந்து விளக்குக. அதன் முக்கியத்துவத்தை எழுதுக.
1.
கார்போஹைடிரேட், புரதம், நார்கள், விட்டமின்கள், கனிமங்கள்.
2.
இவற்றிலிருந்து வெளிவரும் ஹார்மோன், கருப்பை வாய் கோழைப்பொருளின் வழவழப்புத்தன்மையை உயர்த்தி, விந்து செல்கள் கருப்பை வாயினுள் நுழைவதைத் தடை செய்கின்றன.
3.
1. இருசமப்பிளவு முறை
2. ஸ்போர்கள் உருவாக்கம்
3.பல பிளவு முறை
4. ஸ்ட்ரோபிலா ஆக்கம்.
4.
(i) நேர்மறை இடைச்செயலான - ஒருங்குயிரி நிலை அத்தி மற்றும் குளவி இடையில் நடைபெறும் இடைச்செயலாகும்.
(ii) அத்திப்பழங்களுள் காணப்படும் மலர்களை மகரந்தச்சேர்க்கை அடைய செய்ய குளவிகளால் மட்டுமே முடியும் என்பதால் அத்திப்பழங்களுக்கும் குளவிகளுக்கும் இடையே நேரடியான தொடர்பு உள்ளது.
(iii) அத்திப்பழங்களினுள் காணப்படும் மலர்களை குளவிகள் (தங்கள் கருமுட்டைகளை இடும் இடமாக தேர்வு செய்யும் போது) மகரந்தச்சேர்க்கை அடைய செய்கிறது. அதற்கு பதிலாக அத்திப்பழங்களில் உருவாகும் இளம் விதைகளை உணவாக குளவிகளின் இளம்புழுக்களுக்கு (லார்வாக்கள்) உணவாக பயன்படுகிறது.
5.
6.
7.
8.
1. உயிரிகளின் அத்தியாவசியப் பண்பு இனப்பெருக்கம்.
2. உலகில் சிற்றினங்கள் நிலைத்திருக்க, வேறுபாட்டின் மூலம் தகுந்த மாற்றங்களுடன் சந்ததிகள் தொடர்ந்து வாழ உதவும்.
3. தாவர இனப்பெருக்கம், நேரடியாகவோ மறைமுகமாகவோ தாவரங்களைச் சார்ந்து வாழும் உயிரினங்களுக்கு முக்கியமானது.
9.
(i) உலகின் எந்த பகுதியிலும் ஒரு இனத்தின் ஒரு உறுப்பினர் கூட உயிருடன் இல்லை என்ற நிலையை அடைந்த இனம் மரபற்றுப் போனதாகக் கருதப்படுகிறது.
(ii) ஒரு இனம் சொந்த வாழிடத்தில் இல்லாமல் மற்றொரு இடத்தில் அடைக்கலம் பெற்று உயிருடன் இருக்குமானால் அது உள்ளூர் மரபற்றுப் போனதாக கருதப்படும்.
(iii) மரபற்றுப் போதல் மூன்று வகைப்படும்.
இயற்கை வழி மரபற்று போதல்:
(i) சுற்றுச்சூழல் மற்றும் பரிணாமத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், கொன்றுண்ணிகள் நோய்கள் போன்ற காரணங்களால் இயற்கை வழி மரபற்றுப் போதல் உருவாகிறது.
(ii) இது மந்தமாக நடைபெறும் செயலாகும்.
(iii) அகக்கலப்பின் வீரியக் குறைவு காரணமாக சிறு இனக்கூட்டங்கள் பெரிய இனக் கூட்டங்களை விட விரைவில் மரபற்று போகின்றன.
பெருந்திரள் மரபற்று போதல்:
(i) சுற்றுச்சூழல் பேரழிவுகளால் பூமி சில பெருந்திரள் அழிவுகளை சந்தித்துள்ளது.
(ii) 225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெர்மியன் காலத்தில் பேரழிவு ஏற்பட்டு ஆழமற்ற கடல்நீரில் வாழ்ந்த 90% முதுகு நாணற்ற உயிரினங்கள் மரபற்று போயின.
மானுட செயல்களால் மரபற்றுப் போதல்:
(i) வேட்டையாடுதல், வாழிடச் சீரழிவு, மிகை பயன்பாடு, நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் போன்ற மனித நடவடிக்கைகள் இவ்வகை அழிவினைத் தூண்டுகின்றன.
(ii) மொரிஷியஸ் தீவுகளில் வாழ்ந்த டோடோ, ரஷ்யாவில் வாழ்ந்த ஸ்டெல்லரின் கடல் பசு இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
(iii) பல்வகைத் தன்மையின் இழப்பிற்கு மிக முக்கிய காரணம் உயிரினங்கள் மரபற்றுப் போவதாகும்.
10.
வரலாற்றுச் சான்றுகள்:
1. முதல் உலகப்போரில் கடுகுவாயு இரசாயன ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.
2. X-கதிர்களால் H. J முல்லா (1928) முதன் முதலாக சடுதிமாற்றத்தைத் தூண்டினார்.
3. X- மற்றும் காமா கதிர்கள் மூலம் சடுதிமாற்றத்தை தாவரங்களில் தூண்ட முடியும் என்றவர்
4. L.J.Stadler
5. வேதிய சடுதிமாற்ற செயல் முறையை C. ஆயர்பாக் (1944) முதன் முதலில் வெளியிட்டார்
வரையறை:
வேதிப்பொருட்களின் மூலம் சடுதிமாற்றம் தூண்டப்படுகிறது. வேதிய சடுதி மாற்றிகள்
நைட்ரஸ் அமிலம்
எத்தில் மற்றும் மெத்தில் மீத்தேன் சல்போனேட்
(EMS & MMS)
எத்தைல் யூரித்தேன்
மாக்னஸ் உப்பு
ஃபார்மால்டிஹைடு
இயோசின் - எந்த்ரோசின்
6. நைட்ரஸ் ஆக்ஸைடு DNA -நைட்ரஜன் கார இணைகள் இரட்டித்தல் மற்றும் படியெடுத்தலில் இடையூறு செய்து முழுமையற்ற குறையுடைய பாலிபெப்டைடுகள் உருவாகக் காரணமாகின்றன.
11.
மின்னணுக் கழிவுகள் என்பது நிராகரிக்கப்பட்ட மின்சார மின்னணு கருவிகளைக் குறிக்கிறது. அவற்றை உற்பத்தி செய்யும் போது அல்லது பயன்படுத்தும் போது உருவாக்கப்படும் பயனற்ற பொருட்கள் மின்னணுக் கழிவுகள் ஆகும்.
12.
இரண்டு ஒற்றை மய இனச்செல்கள் இணைவதே ஒருங்கிணைவாகும்
ஒருங்கிணைவு முறையின் பல்வேறு வகைகள்:
i) தன் கருவுறுதல்:-
ஒரு செல்லிலிருந்தோ அல்லது ஒரே உயிரியிலிருந்தோ உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைந்து கரு முட்டையை உருவாக்குகின்றன.
2. எ.கா: ஆக்டினோஸ்பேரியம் மற்றும் பாரமீசியம்.
ii) அயல் கருவுறுதல்:
1.ஆண் மற்றும் பெண் என்னும் இரு தனித்தனி பெற்றோர்களிலிருந்து உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் ஒன்றிணைந்து கருமுட்டை உருவாகிறது.
2. எ.கா: மனிதன்.
iii) முழு சேர்க்கை:
1. கீழ் நிலை உயிரிகளில் சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல், அவ்வுயிரிகளே இனச்செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கின்றன.
2. எ.கா: டிரைக்கோநிஃம்பா.
iv) இளம் சேர்க்கை:
முதிர்ந்த பெற்றோர் செல்லிலிருந்து மறைமுகப்பிரிவு மூலம் உருவாகும் இரு இளம் சேய் செல்கள் இனச்செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கின்றன.
v) மாறுபட்ட செல் சேர்க்கை:
அமைப்பில் மாறுபட்ட இரு சிறிய இனச்செல்கள் ஒன்றிணையும் முறை புதிய மாறுபட்ட செல் சேர்க்கை எனப்படும்.
vi) ஒத்த செல் சேர்க்கை:
1. அமைப்பிலும் செயலிலும் ஒரே மாதிரியான இரு இனச்செல்கள் ஒன்றிணைதல் ஒத்த செல் சேர்க்கை எனப்படும்.
2. எ.கா: மோனோசிஸ்டிஸ்.
vii) வேறுபட்ட செல் சேர்க்கை:
முற்றிலும் வேறுபட்ட இரு இனச்செல்கள் ஒன்றிணையும் முறை வேறுபட்ட செல் சேர்க்கை எனப்படும்.
13.
14.
(i) பெற்றோரை விடக் கலப்புயிரி முதல் மகவுசந்ததியில் செயல்திறன் மேம்பட்டிருப்பதால் ஈர்ப்பு கலப்புயிரி வீரியம் என்றழைக்கப்படுகிறது.
(ii) G.H ஷல் என்பவர் தான் முதன்முதலில் ஹெட்டிரோசிஸ் என்ற சொல்லை பயன்படுத்தினார்.
(iii) கலப்பின வீரியத்தின் வகைகள் மெய்கலப்பின வீரியம், சடுதிமாற்ற வீரியம், சமநிலை மெய்கலப்பின வீரியம் மற்றும் பொய்கலப்பின வீரியம்.
1) மெய்கலப்பினவீரியம் (Euheterosis): மெய்கலப்பினவீரியம் என்பது மரபு வழியாகப் பெறப்படும் கலப்பு வீரியமாகும். மேலும் இது கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.
அ. சடுதிமாற்ற மெய்கலப்பின வீரியம் (Mutational Euheterosis) - இது மெய்கலப்பினவீரிய வகைகளில் மிக எளிமையானது. அயல்-மகரந்தச்சேர்க்கை நடைபெறக்கூடிய பயிர்களில் மேம்பட்ட ஓங்கிய அல்லீல்கள் மூலம் தேவையற்ற, கேடுவிளைவிக்கக்கூடிய, கொல்லும் ஒடுங்குப்பண்புடைய அல்லது சடுதிமாற்றம் பெற்ற மரபணுக்களை நீக்குவதன் மூலம் ஏற்படுகிறது.
ஆ. சமநிலை மெய்கலப்பினவீரியம் (Balanced Euheterosis) : இவை வேளாண்மைக்கு உதவும் வகையில் பல சூழ்நிலைக் காரணிகளுக்கேற்பத் தகவமைத்துக் கொள்ளும் சமநிலை பெற்ற மரபணு இணைப்பு, சமநிலை மெய்கலப்பினவீரியமாகும்.
ii) பொய்கலப்பினவீரியம் (Pseudoheterosis): சந்ததி தாவரமானது உடல் வளர்ச்சியில் பெற்றோர் தாவரங்களை விட மேம்பட்டும் ஆனால் விளைச்சலிலும், தகவமைப்பிலும், மலட்டுத்தன்மையுடனோ அல்லது குறைந்தளவு வளமானதாகவோ காணப்படுகிறது. இது உடலவளவீரியம் என்றும் அழைக்கப்படும்.
15.
ஒரு இடத்திலுள்ள ஏற்கனவே வளர்ந்த குழுமம் சில இயற்கை இடையூறுகளால் (தீ, வெள்ளம், மனித செயல்கள்) அழிக்கப்பட்டு அதே இடத்தில் ஒரு தாவர குழுமம் வளர்ச்சி அடைவதற்கு இரண்டாம் நிலை வழிமுறை வளர்ச்சி என்று பெயர்.
(எ.கா) அழிக்கப்பட்ட காடுகள் காலப்போக்கில் சிறு செடிகளால் ஆக்கிரமிக்கப்படலாம்.
1. பாதிக்கப்பட்ட நிலங்களில் ஆக்கடைதல்.
2. புறக்காரணிகளால் மட்டுமே தொடங்கி வைக்கப்படுகிறது.
3. ஏற்கனவே மண் உள்ள இடங்களில் மட்டுமே இது நிகழும்.
4. முன்னோடி தாவரங்களின் உட்சூழலிருந்து உருவாக்கப்படுகின்றன.
5. இது முடிவடைய குறைந்த காலத்தையே (முதல்நிலை வழிமுறை வளர்ச்சியை விட) எடுத்துக்கொள்ளும்.

16.
| சதர்ன் ஒற்றியெடுப்பு | நார்தெர்ன் ஒற்றியெடுப்பு | வெஸ்டர்ன் ஒற்றியெடுப்பு | ||
| 1 | பெயர் | கண்டுபிடிப்பாளரின் பெயர் சதர்ன் ஆகும். | நார்தெர்ன் என்பது ஒரு தவறான பெயராகும். | வெஸ்டர்ன் என்பது ஒரு தவறான பெயராகும். |
| 2 | பிரிக்கப்படுவது | DNA | RNA | புரதங்கள் |
| 3 | இயல்பிழத்தல் (Denaturation) |
தேவைப்படுகிறது | தேவையில்லை | தேவைப்படுகிறது |
| 4 | சவ்வு | நைட்ரோசெல்லுலோஸ்/ நைலான் | அமினோபென்சைலாக்சி மெத்தில் | நைட்ரோசெல்லுலோஸ் |
| 5 | கலப்புற்றம் | DNA - DNA | RNA -DNA | புரதம் - எதிர்ப்புரதம் (antibody) |
| 6 | காட்சிபடுத்துதல் (visualizing) |
கதிரியக்க படம் (autoradiogram) |
கதிரியக்க படம் | இருள் அறை |
17.
(i) இரு வேறுபட்ட நிறமுடைய இலைகள் காணப்படுகின்றன.
(ii) இவற்றில் அடர்பச்சை நிறமுடைய (இலை) தாவரங்களை (ஆண்) வெளிறிய பச்சை நிற இலையுடைய தாவரங்களுடன் (பெண்) கலப்பு செய்த போதும் - (அ) அடர்பச்சை நிற இலையையுடைய தாவரங்கள் (பெண்) வெளிறிய நிற பச்சை நிற இலைகளையுடைய தாவரங்கள் (ஆண்) கலப்பு செய்தபோதும் மெண்டலின் மரபியல் தத்துவத்தின் படி ஒரே விதமான F1 தாவரங்கள் கிடைக்க வேண்டும். ஆனால் இப்பாரம்பரியத்தில் முதல் மகவுச் சந்ததி F1 வேறுபட்ட பண்புகளை வெளிப்படுத்தின.
(iii) இரு வகை கலப்பிலும் பெண் தாவரத்தின் பண்புகள் வெளிப்படக் காரணம், பெண் தாவரத்தின் பசுங்கணிக மரபணு சார்ந்து இப்பாரம்பரியம் நிகழ்வதே இவ்வேறுபாட்டிற்கு காரணம்.
18.
மகரந்தத்துகள் சூலகமுடி மீது படிந்து மகரந்தக்குழாய் சூலினுள் நுழையும் வரையுள்ள நிகழ்வுகள் மகரந்தத்துகள் சூலக அலகு இடைவினை (Pollen Pistil Interaction) எனப்படும்.
அ. சூலக முடியில் மகரந்தக் குழல் உருவாதல்
1. சூலக முடியுடன் இணக்கமான மகரந்தத்துகள், முளைத்து மகரந்தக்குழாயை உருவாக்கும்.
2. இதற்கு ஈர சூலக முடியில், சூலக முடி பாய்மமும், வறண்ட சூலக முடியின் மெல்லிய உறையும் காரணமாக உள்ளன.
3. இவை சூலக முடிக்கும், மகரந்தத்துகள்களுக்கு இடையே உள்ள புரத வினைகளைக் கொண்டு இதை முடிவு செய்யும்.
4. சூலக முடியில் மகரந்தத்துகள் நீரேற்றமடையும், மகரந்தச்சுவரப் புரதங்கள் வெளியேறும்.
5. மகரந்தக்குழாயின் சைட்டோபிளாசப் பொருட்கள் நுனி நோக்கி நகர்கின்றன.
6. மகரந்தக்குழாயின் இதர பகுதி நுண் குமிழ்ப்பையால் ஆக்ரமிக்கப்படும்.
7. நுண்குமிழ்ப்பை, குழாய் நுனியிலிருந்து, கேலோஸ் அடைப்பால் பிரிக்கப்படும்.
8. மகரந்தக்குழாயின் நுனிப்பகுதி அரைவட்ட வடிவில், ஒளி ஊடுருவும் பகுதியாக உள்ளது. இது கேப் பிளாக் எனப்படும். இது மறைந்தவுடன் மகரந்தக்குழாயின் வளர்ச்சி நின்று விடும்.
ஆ. சூலக தண்டில் மகரந்தக்குழல்
மகரந்தத் துகளின் வளர்ச்சி, சூலகத்தண்டின் வகையைப் பொறுத்து
i) உள்ளீடற்ற சூலகத்தண்டு
சூலகத்தண்டின் உள்ளீடற்ற கால்வாயில் சுரப்பு செல்கள் உள்ளன. இவை மியூசிலேஜ் பொருட்களைச் சுரக்கின்றன. இவை வளரும் மகரந்தக்குழாய்க்கு உணவு மற்றும் சூலகத்தண்டுக்கும், மகரந்தக் குழாய்க்கு உணவாக பயன்படுகின்றன சூலகத்தண்டுக்கும், மகரந்தக்குழாய்க்கும் இடையே ஒவ்வாமை வினைகளைக் கட்டுப்படுத்தும்.
ii) திட அல்லது மூடிய திட சூலகத் தண்டுகளில், ஊடு கடத்தும் திசு (Transmitting Tissue) செல்களின் இடைவெளி வழியே வளர்கிறது.
இ. மகரந்தக் குழாய் சூலினுள் நுழைதல் 3 வழிகளில் நுழைகிறது
i) சூல் துளை வழியாக
ii) சலாசா வழியாக
iii) சூலுறை வழியாக
ஈ. மகரந்தக்குழாய் கருப்பையினுள் நுழைதல்
சூலுறை வழியாக நுழைய அமைப்பு வழி நடத்தி (obturator) வழிக்காட்டுகிறது. சினர்ஜிட் வழியாக மகரந்தக்குழாயில் நுழைந்து, அதன் உள்ளடக்கப் பொருட்கள் வெளியேற்றப்படும்.
உ. இரட்டைக் கருவுறுதல், மூவினைதல்
2 ஆண் கேமிட்டுகள் கருவுறுதலில் ஈடுபடுவதால் இரட்டைக் கருவுறுதல் எனப்படும். ஒரு ஆண் கேமீட் முட்டை உட்கருவுடன் இணைந்து கருமுட்டையை உருவாக்கும். மற்றொரு ஆண் கேமீட், இரண்டாம் நிலை உட்கருவுடன் இணைந்து முதல் நிலை கருவூண் உட்கருவாகும். இது மூவினைதல் ஆகும்.
19.
(a)
முன்னோடி சிற்றினங்கள்
20.
(d)
கார்ல் எரிக்கி
21.
(b)
ரூட்டேசி
22.
(b)
தண்டு செல் வங்கி
23.
(d)
வெலாமன்
24.
(c)
கிரிடேஷியஸ்
25.
(a)
120-160 துடிப்பு/நிமிடம்
26.
(a)
தாமிரம்
27.
(d)
அமேசான் காடுகள்
28.
(b)
சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் அஃபிசினாரம்
29.
(c)
டி.என்.ஏ பாலிமரேஸ் நொதி, வளர்ந்து வரும் இழையின் 3' முனைப் பகுதியில் மட்டுமே புதிய நியூக்ளியோடைடுகளை இணைக்கும்.
30.
(d)
CH4 மற்றும் CFCs
31.
(b)
A ⟶ G, C ⟶ T, C ⟶ G மற்றும் T ⟶ A → W
32.
(b)
50%
33.
(a)
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் ஆகும்.
34.
1987-ல் கனடாவில் நடைபெற்ற சர்வதேசப் பிரதிநிதிகள் குழு கூட்டத்தில் வளிமண்டலத்தில்,
(i) ஓசோன் படலத்தைச் சேதப்படுத்தும் பொருட்களை களைவது குறித்தும்.
(ii) படிப்படியாக அத்தகைய பொருட்கள் உற்பத்தியை நிறுத்தி பயன்பாட்டைக் குறைக்கவும் குறிக்கோளாகக் கொண்டு விவாதிக்கப்பட்டது.
35.
1. பாலைவனங்களில் அதிக வெப்பநிலையைத் தாங்கக்கூடிய, அங்கிருக்கும் குறைவான நீரை சேமிக்கவும், பயன்படுத்தவும் தெரிந்த விலங்குகள் மட்டுமே உயிர் பிழைக்க இயலும்.
2. பெரும்பான்மை விலங்குகள் வளைகளில். அவை ஓடக்கூடியதாகவும், வளைவாழ் உயிரிகளாகவும் மற்றும் தாவிச் செல்லும் உயிரிகளாகவும் அதற்கேற்ற தகவமைப்புகளையும் கொண்டுள்ளன.
3. விலங்குகள் வெப்பமான பகல் பொழுதில் பதுங்குமிடங்களில் செயலற்று இருக்கும். வெப்பநிலை குறைவாக இருக்கும் காலை, மாலை அல்லது இரவு நேரங்களில் மேய்ச்சலுக்காக வெளியே வருகின்றன.
36.
(i) இரண்டு வெவ்வேறு சிற்றினங்களுக்கிடையேயான இடைச்செயல்களில் இரண்டும் பயனடைகிறது.
(ii) ஆனால் ஒன்றை ஒன்று சார்ந்திராத உறவு முறை கொண்ட நிகழ்வாகும்.
(iii) (எ.கா) மண்வாழ் பாக்டீரியங்கள் / பூஞ்சைகள் மற்றும் தாவரங்களுக்கு இடையேயான கூட்டுறவு.
37.
முதல் கட்டம் உள்ளடக்குவது
1) படைப்புகள்
2) காப்புரிமை
3) வணிக முத்திரை
(i) உயிரித் தொழில்நுட்பவியல் - வணிக உற்பத்திக்கான மாற்றப்பட்ட நுண்ணுயிரிகள், தாவரங்கள் - கண்டுபிடிப்பாளர்களுக்கே உரிய சொத்தாகும்.
இரண்டாம் கட்டம் உள்ளடக்குவது
1) வணிக ரகசியங்கள்
2) விளம்பர உரிமைகள்
3) தார்மீக உரிமைகள் மற்றும்
(i) நேர்மையற்ற போட்டிகளுக்கு எதிரான உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இவையனைத்தும் ஒரு நாட்டின் சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன.
38.
1. கர்ப்பகாலம் முழுவதும், அவ்வப்போது இலேசான வலிமையான சுருக்கங்களை கருப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
2. பொய்யான பிரசவ வலியை ஏற்படுத்தும் இந்த சுருக்கங்கள் பிராக்ஸ்டர் ஹிக்ஸ் சுருக்கங்கள் எனப்படும்.
39.
1. ஆகஸ்ட் வீஸ்மான் லாமார்க்கின் பெற்ற பண்புகள் கடத்தப்படுதல் கோட்பாட்டினைத் தவறென்று நிரூபித்தார்.
2. தனது சோதனையில் தொடர்ந்து 20 தலைமுறைகளாக சுண்டெலிகள் வாலினை துண்டித்து பின்னர் இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தினார்.
3. அனைத்து சுண்டெலிகளும் முழுமையான வாலுடனே பிறந்தன.
4. உடல் செல்களில் ஏற்படும் மாற்றம் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாது.
5. இனப்பெருக்க செல்களில் ஏற்படும் மாற்றங்கள் மட்டுமே மரபுக் கடத்தலுக்கு உரியன என்றும் வீஸ்மான் நிரூபித்தார்.
40.
1. பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்பது மண்ணில் வாழும் பாக்டீரியா ஆகும்.
2. இது கிரை டாக்சின் என்ற நச்சினை பெற்றிருப்பதால் உயிரியத் தீங்குயிர் கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இந்த நச்சினை தோற்றுவிக்கும் குறிப்பிட்ட ஜீனை பாக்டீரியாவிலிருந்து பிரித்தெடுத்து மரபு பொறியியலில் துணையோடு தாவரத்திற்குள் செலுத்தி பூச்சி எதிர்ப்பு திறன் கொண்ட தாவரத்தினை எ.கா. Bt - பருத்தியை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
4. ஸ்போர்கள் உற்பத்தியின் போது டெல்டா என்டோடாக்சின் என்ற படிக புரதத்தினை, பாக்டீரியா உருவாக்குகிறது. இது கிரை ஜீன் மூலம் குறியீடு செய்யப்பட்டுள்ளது.
5. குறிப்பிட்ட வரிசைப் பூக்களான லெபிடாப்டீரா, டிப்டீரா, கோலியாப்டீரா மற்றும் ஹைமனாப்டீரா பூச்சியினங்களுக்கு எதிராக டெல்டா எண்டோடாக்சின் வினைபுரிய வல்லது
6. இவ்வகை பூச்சிகள் இந்த நச்சுகளை உட்கொள்ளும் போது காரத் தன்மையுள்ள செரிமான மண்டலம் கரையாத படிகப் புரதத்தினை கரையும் புரதமாக மாற்றுகிறது.
7. இந்த நச்சு குடல் செல்லுக்குள் புகுந்து குடலியக்கத்தை செயலிழக்கச் செய்கிறது.
8. இதனால் பூச்சிகள் உண்ணுவதை நிறுத்தி பட்டினியால் இறக்கின்றன.
41.
1. ஒரு மனிதனின் உடலில் நுழைந்த பிறகு எச்.ஐ.வி மேக்ரோபேஜ் செல்களில் நுழைகிறது.
2. தன்னுடைய ஆர்.என்.ஏ மரபணுத் தொகுதியை ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் நொதியின் உதவியால் வைரஸின் டி.என்.ஏ வாக மாற்றி கொள்கிறது
3. இந்த வைரஸ் டி.என்.ஏ விருந்தோம்பி செல்களில் டி.என்.ஏ வுடன் இணைந்து வைரஸ் துகள்களை உற்பத்தி செய்கிறது.
4. இவ்வாறு மேக்ரோஃபேஜ்கள் தொடர்ச்சியாக வைரஸ்களை உற்பத்தி செய்வதன் மூலம் அவை எச்.ஐ.வி தொழிற்சாலையாக செயல்படுகின்றன.
5. அதே நேரத்தில் உதவி T - லிம்போசைட்டுகளினுள் நுழைந்த எச்.ஐ.வி பெருகி சந்ததி வைரஸ்களை உற்பத்தி செய்து கொள்கின்றன.
6. இவ்வாறாக வெளி வந்த சந்ததி வைரஸ்கள் இரத்தத்தின் மற்ற உதவி T - செல்களையும் தாக்குகின்றன.
42.
பேசில்லரி சீதபேதி மற்றும் அமீபிக் சீதபேதி ஒப்பிட்டு வேறுபடுத்துதல்
பேசில்லரி சீதபேதி
ஷிஜெல்லா சிற்றினத்தினை சார்ந்த பாக்டீரியாவினால் பேசில்லரி சீதபேதி ஏற்படுகிறது. பேசில்லரி சீதபேதியின் காரணமாக வயிற்று வலி, நீரிழப்பு, மலக்கழிவில் இரத்தம் மற்றும் கோழை காணப்படுதல் முதலியன ஏற்படும்.
அமீபிக் சீதபேதி
எண்டமீபா ஹிஸ்டோலைடிகா என்ற புரோட்டோசோவினால் அமீபிக் சீதபேதி ஏற்படுகிறது. அமீபிக் சீதபேதியின் காரணமாக குடற்புண், இரத்தக்கசிவு, வயிற்றுவலி மற்றும் அதிக கோழையுடன் கூடிய மலக்கழிவு முதலியன ஏற்படுகிறது
43.
மட்குப்பொருள் (சிதைவுக்கூளம்) உணவுச்சங்கிலி அனைத்து சூழல் மண்டலத்திற்கும் பொதுவானது.
மட்குப்பொருள் உணவுச்சங்கிலி:
1. இந்த உணவுச்சங்கிலி இறந்த கரிமபொருட்களிலிருந்து தொடங்குகிறது. இது முக்கிய ஆற்றல் மூலமாக உள்ளது.
2. அதிகப்படியான கரிமப்பொருள்கள் இறந்த தாவரங்கள் விலங்குகள் மற்றும் அவற்றின் கழிவு பொருட்களிலிருந்து பெறப்படுகிறது.
3. இறந்த உயிரிகளின் கரிமப்பொருட்கள் மறுசுழற்சி மற்றும் அதன் சமநிலையை தக்கவைக்கவும் சூழ்நிலை மண்டலத்தில் இது முக்கியமான உணவு சங்கிலியாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards