12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Public Exam Model Question Paper with Answer key - 2021
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
எந்த உணவில் அதிக எதிர் ஆக்சிஜனேற்றிகள் (antioxidants) உள்ளன?
2.
கருவின் இயல்புக்கு மாறான இதயத்துடிப்பு வீதம் எதைக் காட்டும்?
3.
பிளவு மட்டத்தைப் பொறுத்து இரு சமபிளவின் வகைகள் யாவை?
4.
அத்தி மற்றும் குளவி இடையில் நடைபெறும் இடைச்செயல்களை விளக்குக.
5.
கீழ்க்கண்டவற்றை வரையறு.
அ) ஓரிடத் தன்மை (endemism)
ஆ) சிற்றினச் செழுமை (Species richness)
6.
மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட இன்சுலின் என்பது யாது?
7.
8.
ஒற்றைமய – இரட்டைமய நிலை என்றால் என்ன?
9.
இனப்பெருக்கம் என்றால் என்ன?
10.
வாழிடங்கள் துண்டாடப்படுவதினால் உயிரினங்கள் பாதிக்கப்படுவதை விவரி. உயிரினங்கள் வாழும் ஒரு பெரிய நிலப்பரப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு பகுதிகளாகப் பிரித்தல் வாழிடம் துண்டாடப்படுதல் ஆகும்.
11.
குரோமோசோம் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?
12.
திடக்கழிவு மேலாண்மை பற்றி விவரி?
13.
கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன?
14.
நீயறிந்த ஏதாவது இரு தாவரங்களின் செயலாக்க மூலமருந்து மற்றும் மருத்துவ முக்கியத்துவத்தை தருக.
15.
பயிர் பெருக்கத்தில் புதிய பண்புக்கூறுகளை உருவாக்கும் புதிய பயிர்பெருக்க தொழில்நுட்ப முறைகளைப் பட்டியலிடுக.
16.
பொதுவாக கோடைக்காலங்களில் இயற்கையில் ஏற்படும் தீயினால் காடுகள் பாதிக்கப்படுகிறது. இப்பகுதி வழிமுறை வளர்ச்சி என்ற நிகழ்வின் மூலம் ஒரு காலத்தில் படிப்படியாக தானே புதுப்பித்துக் கொள்கிறது. அந்த வழிமுறை வளர்ச்சியின் வகையைக் கண்டறிந்து விளக்குக.
17.
18.
பல்கூட்டு பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
19.
கருவூண்திசு என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
20.
தவறான இணையை தேர்ந்தெடு
| தொகுதி I | தொகுதி II | |
| அ | புற்கள், புதர்ச்செடிகள் | 5-150 வருடங்கள் |
| ஆ | புற்கள், பல்லாண்டுத் தாவரங்கள் | 3-4 வருடங்கள் |
| இ | ஓராண்டுத் தாவரங்கள் | 1-7 வருடங்கள் |
| ஈ | புதர்ச்செடிகள், மரங்கள் | 150+ வருடங்கள் |
B மற்றும் C
A மற்றும் C
B, C மற்றும் D
A, B மற்றும் D
21.
மருந்துகளையும் மருத்துவ சிகிச்சைக்கான மருந்துகளை பற்றிய படிப்பு.
பார்மகோசூட்டிகல்
உயிர் மருந்து பொறியியல்
வேதி பொறியியல்
திசு பொறியியல்
22.
தமிழ்நாட்டின் தோவாளை ________ வளர்ப்பு மையம்
சோற்றுக் கற்றாழை
புளி
மஞ்சள்
மல்லிகை
23.
_________________ எனப்படும் திறனில் தண்டு செல்கள் ஒரேயொரு செல் வகையாக மட்டும் வேறுபாட்டையும்
பல்திறன்
குறுதிறன்
பகுதித்திறன்
ஒற்றைத்திறன்
24.
தொற்றுத் தாவர வேர்களில் காணப்படும் சிறப்பு வகை திசுக்கள் _____________
சைலம்
புளோயம்
பாரன்கைமா
வெலாமன்
25.
NH4+O2
O2
H2O
CO2
N2
26.
பாக்டீரியாவினால் உண்டாகும் நோயல்ல
டிரைகோமோனியாசிஸ்
மேகப்புண்
வெட்டை நோய்
கிளாமிடியாசிஸ்
27.
2017ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி உலக அளவில் கார்பன்-டை-ஆக்சைடை மிக அதிகமாக வெளியிடும் நாடு எது?
அமெரிக்கா
சீனா
கத்தார்
சவுதி அரேபியா
28.
இயற்கையான வாழிடங்களினுள் உயிரிய பல்வகைத்தன்மை பாதுகாப்பு என்பது _____.
சூழலுள் பாதுகாப்பு
சூழல்வெளி பாதுகாப்பு
உடலுள் பாதுகாப்பு
உடல்வெளி பாதுகாப்பு
29.
வரிசை ஒன்றை (I) வரிசை இரண்டுடன் (II) பொருத்து
| வரிசை I | வரிசை II | ||
| i | வில்லியம் S. காட் | I | கலப்பின வீரியம் |
| ii | ஷல் | II | சடுதிமாற்ற பயிர்ப்பெருக்கம் |
| iii | காட்டன் மேதர் | III | பசுமைப் புரட்சி |
| iv | முல்லர் மற்றும் ஸ்டேட்லர் | IV | இயற்கை கலப்பினமாதல் |
| i | ii | iii | iv |
| I | II | III | IV |
| i | ii | iii | iv |
| III | I | IV | II |
| i | ii | iii | iv |
| IV | II | I | III |
| i | ii | iii | iv |
| II | IV | III | I |
30.
தூது RNA மூலக்கூறு எம்முறையில் உருவாக்கப்படுகிறது?
இரட்டிப்பாதல்
படியெடுத்தல்
நகலாக்கம்
மொழிபெயர்த்தல்
31.
பசுமை இல்ல விளைவினை அதிக அளவிலே குறைப்பது கீழ்கண்டவற்றுள் எது எனக் குறிப்பிடுக.
வெப்பமண்டலக் காடுகளைக் கால்நடைக்கான மேய்ச்சல் நிலங்களாக மாற்றுதல்
அதிகப்படியான பொதிக்கும் தாள்களை எரித்துச் சாம்பலாக்கிப் புதைத்தலை உறுதிப்படுத்துவது
மறுவடிவமைப்பு மூலம் நில நிரப்பு அடைதல் மீத்தேன் சேமிக்க அனுமதித்தல்
பொது போக்குவரத்தினை விடத் தனியார் போக்குவரத்தினைப் பயன்படுத்துதல் ஊக்குவித்தல்
32.
கூற்று மற்றும் காரண வினாக்கள்:
கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று கூற்று (கூ) ஆகும். மற்றொன்று காரணம் (கா). சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.
A - ஆணில் விந்தகங்கள் வயிற்றுக்கு வெளியே விதைப்பையினுள் காணப்படுகின்றன.
R - விதைப்பை வெப்ப நெறிப்படுத்தியாகச் செயல்பட்டு விந்தகத்தின் வெப்பநிலையை 20°C குறைத்து இயல்பான விந்தணு உற்பத்திக்கு உதவுகிறது.
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் ஆகும்.
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் இல்லை.
‘கூ’ சரியானது ஆனால் ‘கா’ தவறானது.
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறானவை.
33.
ஒரு அயல் அறுமடியம் கொண்டிருப்பது ____.
ஆறு வேறுபட்ட மரபணுத்தொகையம்
மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையம் ஆறு நகல்கள்
மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையத்தின் இரண்டு நகல்கள்
ஒரு மரபணுத்தொகையத்தின் ஆறு நகல்கள்
34.
35.
புவிவெப்பமடைதலுக்கான முக்கிய காரணம் யாது?
36.
பனிச்சமவெளியின் பண்புகள் பற்றி எழுதுக.
37.
உவர் சதுப்புநிலக்காடுகள் எவ்வாறு இயற்கை அழிவிலிருந்து பாதுகாக்கிறது?
38.
தாவர மீளுருவாக்க வழித்தடத்தை விளக்குக.
39.
அக அடுக்கிலிருந்து உருவாகும் உடல் உறுப்புகள் எவை?
40.
புதிய சிற்றினத் தோற்றத்தை விளக்கும் டி.விரீஸின் திடீர் மாற்றக் கோட்பாடு, எவ்வாறு லாமார்க் மற்றும் டார்வினியக் கோட்பாடுகளிலிருந்து வேறுபடுகிறது?
41.
மரபு மாற்றப்பட்ட பயிர்களில் கிரை ஜீன்களின் (cry genes) பங்கினை விவரி.
42.
கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக.
| நோய்கள் | நோய்க்காரணி | அறிகுறிகள் |
| அஸ்காரியாசிஸ் | அஸ்காரிஸ் | |
| டிரைகோஃபைட்டான் | உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட, செதில் புண்கள் காணப்படுதல். |
|
| டைபாய்டு | அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல். | |
| நிமோனியா |
43.
44.
Rh காரணியின் மரபுக் கட்டுப்பாட்டை பற்றி விளக்கு
1.
கொட்டைகளின் கடினமான ஒட்டுக்குள் உண்ணக்கூடிய பருப்பைக் கொண்ட எளிய உலர் கனிகள், கொழுப்பு, நார்ச்சத்து, புரதம், விட்டமின்கள், தாது, எதிர் ஆக்சிஜனேற்றிகள் உள்ளன.
2.
கருவுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை அல்லது பிற பிரச்சனைகளை இக்கருவி காட்டும்.
3.
1. எளிய ஒழுங்கற்ற இரு சம பிளவு முறை
2. கிடைமட்ட இரு சம பிளவு முறை
3. நீள்மட்ட இரு சம பிளவு முறை
4. சாய்வு மட்ட இரு சம பிளவு முறை
4.
(i) நேர்மறை இடைச்செயலான - ஒருங்குயிரி நிலை அத்தி மற்றும் குளவி இடையில் நடைபெறும் இடைச்செயலாகும்.
(ii) அத்திப்பழங்களுள் காணப்படும் மலர்களை மகரந்தச்சேர்க்கை அடைய செய்ய குளவிகளால் மட்டுமே முடியும் என்பதால் அத்திப்பழங்களுக்கும் குளவிகளுக்கும் இடையே நேரடியான தொடர்பு உள்ளது.
(iii) அத்திப்பழங்களினுள் காணப்படும் மலர்களை குளவிகள் (தங்கள் கருமுட்டைகளை இடும் இடமாக தேர்வு செய்யும் போது) மகரந்தச்சேர்க்கை அடைய செய்கிறது. அதற்கு பதிலாக அத்திப்பழங்களில் உருவாகும் இளம் விதைகளை உணவாக குளவிகளின் இளம்புழுக்களுக்கு (லார்வாக்கள்) உணவாக பயன்படுகிறது.
5.
அ) ஓரிடத் தன்மை என்பது ஒரு தாவரமோ அல்லது ஒரு விலங்கோ குறிப்பிட்ட பகுதியிலோ அல்லது குறிப்பிட்ட தீவிலோ காணப்படக் கூடிய தன்மை உடையது.
எ.கா. காட்டு கழுதை, இந்தியப் பாலைவனத்தில் மட்டும் காணப்படும் விலங்காகும்.
ஆ) ஒரு அலகு பரப்பளவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை சிற்றினச்செழுமை எனப்படும்.
6.
(i) டி.என்.ஏ மறுசேர்க்கை தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டு மனிதனுள் செலுத்தப்பட்ட முதல் மருந்துப்பொருள் இன்சுலின் ஆகும்.
(ii) 1982 ம் ஆண்டு சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதற்காக இந்த இன்சுலினைப் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது.
(iii) 1986 ல் ஹியுமுலின் என்னும் வணிகப் பெயரோடு சந்தையில் மனித இன்சுலின் விற்பனை செய்யப்பட்டது.
7.
8.
ஒற்றை மய -இரட்டைமய நிலை (எ.கா) தேனீ, எறும்பு மற்றும் குளவி
(i) சேய் உயிரிகளின் பாலினம் அவை பெறுகிற குரோமோசோம் தொகுதியின் எண்ணிக்கையை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.
(ii) கருவுற்ற முட்டைகள் பெண் உயிரிகளால் உருவாகின்றது ராணி,வேலைகாரத்தேனீ.
(iii ) கருவுறாத முட்டைகள் ஆண் தேனீக்களாக கன்னி இனப்பெருக்க முறையில் மூலம் வளர்ச்சியடைகின்றன.
(iv) எனவே ஆண் தேனீக்கள் ஒற்றைமய குரோமோசோம்களைக் கொண்டுள்ளன.
(v) பெண் தேனீக்கள் இரட்டைமய குரோமோசோம்களைக் கொண்டுள்ளன. இம்முறை ஒற்றைமய -இரட்டைமய பால்நிர்ணயம் என அழைக்கப்படுகிறது.
9.
1. உயிரிகளின் அத்தியாவசியப் பண்பு இனப்பெருக்கம்.
2. உலகில் சிற்றினங்கள் நிலைத்திருக்க, வேறுபாட்டின் மூலம் தகுந்த மாற்றங்களுடன் சந்ததிகள் தொடர்ந்து வாழ உதவும்.
3. தாவர இனப்பெருக்கம், நேரடியாகவோ மறைமுகமாகவோ தாவரங்களைச் சார்ந்து வாழும் உயிரினங்களுக்கு முக்கியமானது.
10.
1. உயிரினங்கள் வாழும் ஒரு பெரிய நிலப்பரப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு பகுதிகளாகப் பிரித்தல் வாழிடம் துண்டாடப்படுதல் எனப்படும்.
2. காட்டு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல் பழத்தோட்டங்கள், மலைத் தோட்டங்கள், நகர்ப்புற குடியிருப்புகள் அமைத்தல், தொழிற்பேட்டைகள், விளைபொருட்களை எடுத்துச்செல்ல வழித்தடங்கள் அமைத்தல் ஆகிய நிகழ்வுகளால் வாழிடம் துண்டாடப்படுகிறது.
3. இதன் விளைவாக உணவுச்சங்கிலி, உணவு வலை அழிக்கப்படுதல், அழிக்கப்பட்ட பகுதியில் உள்ள உயிரினங்கள் அழிதல், துண்டாடப்பட்ட வாழிடத்தில் உள்ள பல்வகைத் தன்மை குறைதல் ஆகியவை ஏற்படுகின்றன.
4. அதிக நிலப்பரப்பை தேவையாகக் கொண்ட பாலூட்டிகள், பறவை போன்ற பாதிக்கப்படுகின்றன.
5. யானை வழித்தடங்கள், வலசை போகும் பறவைகள் பாதிக்கப்படுகின்றன.
6. சிட்டுக் குருவிகள் குறைய இதுவும் ஒரு காரணமாகும்.
11.
குரோமோசோம் அமைப்பு பிறழ்ச்சி
1. நீக்கம் (அ) குறைபாடு
2. இரட்டிப்பாதல் (அ) மீளுறுவாதல்
1. நீக்கம் (அ) குறைபாடு
குரோமோசோமின் ஒரு பகுதி இழப்பு
2. வேதிப்பொருட்கள் மற்றும் கதிர்வீச்சால் ஏற்படுகிறது.
எ.கா: டிரோசோஃபில்லா மற்றும் மக்காச்சோளம்
3. பாலிடீன் மற்றும் பாலிடீன் குரோமோசோமில் இவ்விரு நீக்கங்களும் காணப்படுகிறது. அதிகப்படியான நீக்கங்கள் இறப்பு விளைவதற்கு வழி வகுக்கும்.
12.
1. ஒவ்வொரு நாளும் டன் கணக்கிலான திடக்கழிவுகள் நிலப்பரப்புகளில் கொட்டப்படுகின்றன.
2. இந்தக் கழிவுகள் வீடுகள் அலுவலகங்கள் தொழிற்சாலைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன.
மேலாண்மை:
1. கழிவுப் பொருட்களைப் பெறுவது முதல் இறுதியாக வெளியேற்றுவது வரை உள்ளடக்கியது.
2. சுத்திகரித்தல், வெளியேற்றுதல் மற்றும் கழிவு மேலாண்மை செயல்முறைகளை கண்காணித்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இதில் அடங்கும்.
13.
1. அண்ட செல்லானது, கருவுறாமலேயே முழு உயிரியாக வளர்ச்சி அடையும் செயலுக்கு கன்னி இனப்பெருக்கம் என்று பெயர்.
2. சார்லஸ் போனெட் என்பவரால் முதன்முதலில் கண்டறியப்பட்டது.
3. அவை இரு வகைப்படும்.
4. இயற்கையான கன்னி இனப்பெருக்கம்.
5. செயற்கையான இனப்பெருக்கம்.
இயற்கையான கன்னி இனப்பெருக்கம் :
1. சில விலங்குகளில் வாழ்க்கைச் சுழற்சியில் கன்னி இனப்பெருக்கம் நிலையாக மற்றும் இயற்கையாக நடைபெறுகிறது.
2. முழுமையான இனப்பெருக்கம் - இவை முழுமையான கன்னி இனப்பெருக்கம் மூலம் மட்டுமே இனப்பெருக்கம் செய்கின்றன.
3. முழுமையற்ற இனப்பெருக்கம் - இவை பாலினப்பெருக்கம் மற்றும் கன்னி இனப்பெருக்கம் இரண்டுமே நடைபெறும்.
4. சில இளவுயிரியே கன்னி இனப்பெருக்கத்தின் மூலம் புதிய தலைமுறை இளவுயிரிகளை உருவாக்கும் இவை இளம் உயிரி கன்னி இனப்பெருக்கம் எனப்படும்.
5. அர்ரீனோடோகி - ஆண் உயிரிகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன.
6. ஆம்ஃபிடோகி - ஆண் அல்லது பெண் உயிரிகள் உருவாக்கப்படுகின்றது.
14.
I) கீழாநெல்லி (பில்லாந்தஸ் அமாரஸ்)
(செயலாக்க மூல மருந்து)
ஃபிலாந்தின் மருத்துவ முக்கியத்துவம்
(i) மஞ்சள் காமாலை, கல்லீரல் பாதுகாப்பு மருந்து
(ii) டாக்டர் நியாகராஜன், ஃபிலாந்தஸ் அமாரஸ் ஹெபடைட்டிஸ் வைரஸ் தாக்குதலை எதிர்க்கிறது என நிரூபித்தார்.
II) நில வேம்பு (ஆண்ட்ரோகிராபிஸ் பானிகுலேட்டா)
(செயலாக்க மூல மருந்து)
ஆண்ட்ரோகிராபைடுகள் மருத்துவ முக்கியத்துவம்
(i) கல்லீரல் நோய்களுக்கு மருந்து
(ii) எட்டு மூலிகைகளுடன் சேர்ந்து தயாரிக்கப்படும். நிலவேம்புக் குடிநீர், மலேரியா, டெங்கு சிகிச்சைக்குப் பயன்படும்.
15.
புதிய பயிர்பெருக்க தொழில் நுட்ப முறைகள் தேர்வு செய்தல், அறிமுகப்படுத்துதல், கலப்புறுத்தம், பன்மயம், சடுதிமாற்றம், திசு உற்பத்தி மற்றும் உயிரியல் தொழில்நுட்ப முறைகள்.
1. மரபணு தொகையத்தை வெட்டுதல் மற்றும் மாற்றியமைத்தலை CRISPR / Cas போன்ற முறைகள் செய்கின்றன.
2. மரபணு தொகைய திருத்தம் – ஆலிகோ நியூக்ளியோடைடு இயக்கத் திடீர் மாற்றக் காரணி (ODM) என்ற நுட்பத்தின் மூலம் சில இணை காரங்களில் மாற்றங்களைச் செய்தல்.
3. ஒரே சிற்றினம் அல்லது நெருங்கிய தொடர்புடைய சிற்றினத்திற்குள் மரபணுக்கள் மாற்றப்படுவது. (cisgenesis)
4. DNA வை மாற்றம் செய்யாமல் அதற்குள் இருக்கும் மரபணுவின் செயல்பாடுகளை ஒருங்கமைக்கும் முறை (epigenetic methods)
16.
ஒரு இடத்திலுள்ள ஏற்கனவே வளர்ந்த குழுமம் சில இயற்கை இடையூறுகளால் (தீ, வெள்ளம், மனித செயல்கள்) அழிக்கப்பட்டு அதே இடத்தில் ஒரு தாவர குழுமம் வளர்ச்சி அடைவதற்கு இரண்டாம் நிலை வழிமுறை வளர்ச்சி என்று பெயர்.
(எ.கா) அழிக்கப்பட்ட காடுகள் காலப்போக்கில் சிறு செடிகளால் ஆக்கிரமிக்கப்படலாம்.
1. பாதிக்கப்பட்ட நிலங்களில் ஆக்கடைதல்.
2. புறக்காரணிகளால் மட்டுமே தொடங்கி வைக்கப்படுகிறது.
3. ஏற்கனவே மண் உள்ள இடங்களில் மட்டுமே இது நிகழும்.
4. முன்னோடி தாவரங்களின் உட்சூழலிருந்து உருவாக்கப்படுகின்றன.
5. இது முடிவடைய குறைந்த காலத்தையே (முதல்நிலை வழிமுறை வளர்ச்சியை விட) எடுத்துக்கொள்ளும்.

17.
18.
வரையறை:
(i) ஒரு உயிரினத்தின் பல மரபணுக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பண்பைத் தீர்மானிக்கும் முறைக்கு பல் மரபணு பாரம்பரியம் ஏற்படுகிறது.
(ii) ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணுக்கள் ஒரு பாரம்பரியத்தை தீர்மானிக்கும் போது பல் மரபணு பாரம்பரியம் ஏற்படுகிறது.
(iii) H - நில்சன் ஹீல் (1909) கோதுமையின் விதையுறைகளில் இவ்வாய்வை நிகழ்த்தி இப்பாரம்பரியத்தை விளக்கினார்.
(iv) சிவப்பு விதையுறை நிறம் (ஓங்கு பண்பு) தாவரத்தை வெள்ளை விதையுறை (ஒடுங்கு பண்பு) தாவரத்துடன் கலப்பு செய்தார்.
(v) அடர் சிவப்பு R1R2R2R2 x வெள்ளை நிறம் r1r1r2r2 இக்கலப்பில்
(vi) 4 - R மரபணுக்கள் மிகுந்த அடர்சிவப்பு நிறம் - 1
(vii) 3 - R மரபணுக்கள் மிதமான அடர் சிவப்பு நிறம் - 1
(viii) 2 - R மரபணுக்கள் சிவப்பு நிறம் - 6
(ix) 1 - R மரபணுக்கள் வெளிர் சிவப்பு நிறம் - 4
(x) R ஓங்கு மரபணு இல்லாமை வெள்ளை நிறம் - 1
(xi) இந்த சிவப்பு நிற செறிவை வரைபடமாக்கினால் ஒரு மணி வடிவ வரைபடம் - கிடைத்தது
(xii) பிற எடுத்துக்காட்டுகள் - மனிதனில் உயரம் & தோல் நிறம்
முடிவுகள்:
நில்சன் ஹீல் ஆய்வு முடிவுகள்:
(i) பிணைதல் இல்லை.
(ii) விதையுறை நிறத்தை மூன்றாவது மரபணுவும் தீர்மானிக்கிறது என்பர் பின்னர் கண்டறியப்படுகிறது.
(iii) மூன்று தனித்த இணை அல்லீல்கள் - இந்த விதையுறை நிறத்தில் பங்கு கொள்கின்றன.
(iv) நிலசன் - ஷீல் F2 சந்ததி விகிதம் 63 : 1
புறத்தோல் விகிதம்
| சிவப்பு | வெள்ளை |
| 63 | 1 |
மரபணு வகையும்
| 1 : 6 : 15 : 20 : 15 : 6 : 1 |
(i) இதன்படி கோதுமை விதையுரையில் கலப்புப் பாரம்பரியம் தென்படவில்லை.
(ii) F2 சந்ததியில் அதிக அளவில் நிற வேறுபாடுகள் காணப்பட்டது.(மரபணுக்களில் தனிதொங்குதல்)
(iii) இதில் பெற்றோர் புறத் தோற்றங்களான அடர் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் இல்லாமல் போனது.
(iv) மரபணுக்களில் கலப்பு இல்லை.
(v) பல மரபணு இலைகளின் ஒட்டு மொத்த விளைவால் - பல்வேறு நிறச் சாயல்கள் தோன்றியது.
(vi) நிலசன் - ஷீல் கருதுகோளின் படி இரு அமைவிடங்களும் கூட்டாக இணைந்து கோதுமை விதையுறை நிறத்தைத் தோற்றுவித்தன.
19.
கருவுறுதலுக்கு பின், கரு பகுப்படைவதற்கு முன் முதல் நிலை கருவூண் உட்கரு பகுப்படைந்து உருவாக்கும் திசு கருவூண் திசு.
1. உட்கருசார் கருவூண் திசு
முதல் நிலை கருவூண் உட்கரு (PEN) குன்றலில்லா பகுப்படையும். சுவர் உருவாகாமல் தனித்த உட்கருக்களைக் கொண்டுள்ளன. (எ.க) அராக்கிஸ்
2. செல்சார் கருவூண் திசு
முதல்நிலை கருவூண் உட்கரு பகுப்படையும். இரண்டு உட்கருக்கள் உருவாகும். சுவர் உருவாக்கம் நடைபெறும். (எ.டு) ஹீலியான்தஸ்
3. ஹெலோபிய கருவூண் உட்கரு பகுப்படையும், இரண்டு உட்கருக்கள் உருவாகும். உட்கருக்களுக்கிடையே சுவர் உருவாகும். பெரிய சூல்துளை அறை, சிறிய சலாசா அறை உருவாகும். (எ.டு) ஹைட்ரில்லா.
20.
(d)
A, B மற்றும் D
21.
(a)
பார்மகோசூட்டிகல்
22.
(d)
மல்லிகை
23.
(d)
ஒற்றைத்திறன்
24.
(d)
வெலாமன்
25.
(d)
N2
26.
(a)
டிரைகோமோனியாசிஸ்
27.
(b)
சீனா
28.
(a)
சூழலுள் பாதுகாப்பு
29.
(b)
| i | ii | iii | iv |
| III | I | IV | II |
30.
(b)
படியெடுத்தல்
31.
(b)
அதிகப்படியான பொதிக்கும் தாள்களை எரித்துச் சாம்பலாக்கிப் புதைத்தலை உறுதிப்படுத்துவது
32.
(a)
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் ஆகும்.
33.
(c)
மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையத்தின் இரண்டு நகல்கள்
34.
(c)
35.
பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவுப் பொருட்களின் உற்பத்தி நார் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் தேவையும் அதிகரிக்கப்பட்ட வேண்டியுள்ளது. இதுவே புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
36.
1. கடுமையான குளிர்ந்த காலநிலை
2. குறைவான உயிரினப் பரவல்
3. எளிமையான அமைப்பு
4. வடிகால் வசதி குறைவு
5. குறைந்த வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க காலம்
6. இறந்த கரிமப் பொருட்களாலான ஆற்றல் மற்றும் ஊட்ட வளங்கள்
7. பெரிய அளவிலான நிலையற்ற தன்மை.
37.
(i) உவர் சதுப்பு நிலக்காடுகள் கடற்கரை பகுதிகளில் தங்களின் வேர்களால் கடல்கரைகள், மண் அரிப்பை தடுக்கின்றது.
(ii) தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் (நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்) இவ்வகை காடுகள் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மட்டும் காணப்படுகிறது.
(iii) இங்கு மட்டுமே கஜா புயலால் குறைந்த அளவு சேதமே ஏற்பட்டது. இதற்கு அலையாத்தி காடுகளே (உவர் சதுப்புநிலக்காடுகளே) காரணம்.
38.
பிரிகூறிலிருந்து உடல் கருவுருவாக்கம் அல்லது உறுப்புகளாக்கம் மூலம் தாவரங்கள் மீளுருவாக்கம் செய்யப்படுகிறது.
39.
1. இணைப்புத் திசு
2. எலும்பு, குருத்தெலும்பு
3. தசைகள்
4. சிறுநீரகம், சிறுநீர் நாளம், இனப்பெருக்க உறுப்புக்கள்
40.
டி.விரீஸின் திடீர் மாற்றக் கோட்பாடு:
1. திடீர் மாற்றம் என்பது உயிரினங்களில் ஏற்படும் உடனடியான சீரற்ற மற்றும் மரபுக்கடத்தலில் பங்கேற்காத மாற்றங்கள் ஆகும்.
எ.கா: அந்திமந்தாரை (ஈனோதீரா லாமார்க்கியானா) தாவரத்தில் ஆய்வு மேற்கொண்டு அதில் திடீர் மாற்றம் காரணமாக ஏற்பட்ட மாறுபாடுகளை கண்டறிந்தார்.
2. பெரிய மற்றும் உடனடியாக ஏற்படும் மாறுபாடுகள் மட்டுமே புதிய சிற்றினம் தோன்றுவதற்குக் காரணம்.
3. ஆனால் லாமார்க் மற்றும் டார்வின் ஆகியோர் உயிரினங்களில் ஏற்படும் படிப்படியான மாறுபாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து புதிய சிற்றினம் உருவாகக் காரணமாகிறது என்று விளக்கினார்.
திடீர் மாற்றக் கோட்பாட்டின் காரணமாக சிறப்புப் பண்புகள்:
1. திடீர் மாற்றம் அல்லது தொடர்ச்சியற்ற வேறுபாடுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும்.
2. இயற்கையாக இனப்பெருக்கம் செய்யும் இனக்கூட்டத்தில் அவ்வப்போது திடீர் மாற்றங்கள் ஏற்படும்.
3. திடீர் மாற்றம் முழுமையான நிகழ்வு இடைப்பட்ட உயிரினங்கள் காணப்படாது.
4. திடீர் மாற்றம் இயற்கை தேர்வுக்கு உட்பட்டது ஆகும்.
41.
1. பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்பது மண்ணில் வாழும் பாக்டீரியா ஆகும்.
2. இது கிரை டாக்சின் என்ற நச்சினை பெற்றிருப்பதால் உயிரியத் தீங்குயிர் கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இந்த நச்சினை தோற்றுவிக்கும் குறிப்பிட்ட ஜீனை பாக்டீரியாவிலிருந்து பிரித்தெடுத்து மரபு பொறியியலில் துணையோடு தாவரத்திற்குள் செலுத்தி பூச்சி எதிர்ப்பு திறன் கொண்ட தாவரத்தினை எ.கா. Bt - பருத்தியை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
4. ஸ்போர்கள் உற்பத்தியின் போது டெல்டா என்டோடாக்சின் என்ற படிக புரதத்தினை, பாக்டீரியா உருவாக்குகிறது. இது கிரை ஜீன் மூலம் குறியீடு செய்யப்பட்டுள்ளது.
5. குறிப்பிட்ட வரிசைப் பூக்களான லெபிடாப்டீரா, டிப்டீரா, கோலியாப்டீரா மற்றும் ஹைமனாப்டீரா பூச்சியினங்களுக்கு எதிராக டெல்டா எண்டோடாக்சின் வினைபுரிய வல்லது
6. இவ்வகை பூச்சிகள் இந்த நச்சுகளை உட்கொள்ளும் போது காரத் தன்மையுள்ள செரிமான மண்டலம் கரையாத படிகப் புரதத்தினை கரையும் புரதமாக மாற்றுகிறது.
7. இந்த நச்சு குடல் செல்லுக்குள் புகுந்து குடலியக்கத்தை செயலிழக்கச் செய்கிறது.
8. இதனால் பூச்சிகள் உண்ணுவதை நிறுத்தி பட்டினியால் இறக்கின்றன.
42.
| நோய்கள் | நோய்க்காரணி | அறிகுறிகள் |
| அஸ்காரியாசிஸ் | அஸ்காரிஸ் | |
| டிரைகோஃபைட்டான் | உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட, செதில் புண்கள் காணப்படுதல். |
|
| டைபாய்டு | சால்மோனெல்லா | அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல். |
| நிமோனியா | ஸ்ட்ரெப்டோகாக்கஸ் | காய்ச்சல், இருமல் வலியுடன் கூடிய சுவாசம் மற்றும் பழுப்பு நிற சளி. |
43.
44.
ஃபீஷர் மற்றும் ரேஸ் கருதுகோள்:
(i) Rh காரணியின் மூன்று வெவ்வேறு அல்லீல் இணைகள் குரோமோசோம் இணைகளின் நெருக்கமான மூன்று வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளன.(Cc,Dd Ee)
(ii) இது பொதுவாக cde என்ற பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது.
(iii) ஒவ்வொரு குரோமோசோம் C அல்லது c ஒரு D அல்லது d, ஒரு E அல்லது e வாய்ப்புகளை மரபு வகையைப் பெற்றிருக்கும்.
(iv) எ.கா /cde
CdE/eDe
Cde/cde
CDe
CDe/CdE

(v) அனைத்து மரபு வகைகளிலும் உள்ள ஓங்கிய D அல்லீல்கள் Rh+ புறத்தோற்ற வகையை உருவாக்குகின்றன.
(vi) இரண்டு ஓங்கிய பண்பு கொண்ட மரபு வகையில் dd அல்லீல்கள் Rh- புறத்தோற்ற வகையை உற்பத்தி செய்கின்றன.
வெய்னரின் கருதுகோள் :
(i) ஒரு Rh னுடைய இருப்பிடத்தில் எட்டு அல்லீல்கள் (R1R2R0RZr 1r11r1) இருக்கின்றன.
(ii) ஓங்கிய அல்லீல்களைக் கொண்ட அனைத்து மரபு வகைகளும்(R1R2R0RZ) Rh (+) புறத்தோற்ற வகையை உற்பத்தி செய்கின்றன.
(iii) ஒடுங்கிய பண்பு கொண்ட அனைத்து மரபு வகைகளும் (rr rr1rr11ry) Rh-புறத்தோற்றத்தையும் உற்பத்தி செய்கின்றன.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards