12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Three mark Important Questions with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
காடுகளை பாதுகாப்பதில் பெண்களின் பங்கினை விவாதி.
2.
நாம் மிகை உணவூட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
3.
மிர்மிகோஃபில்லி என்றால் என்ன?
4.
ஓபிரிஸ் ஆர்கிட் தேனீக்களின் மூலம் எவ்வாறு மகரந்தச்சேர்க்கை நிகழ்த்துகிறது.
5.
வளர்ப்பு தொழில்நுட்பத்தை, பயன்படுத்தப்படும் பொருள்களின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்துவாய்? அதனை விளக்குக.
6.
உயிரியப் பல்வகைத்தன்மை முக்கியமானது ஏன்? பாதுகாக்கத் தகுதியானதா?
7.
உயிரினங்களில் காணப்படும் தகவமைப்புப் பண்புகளை வகைப்படுத்துக.
8.
மஞ்சளின் பயன்களை பட்டியலிடுக.
9.
பாசிப்பயறு மற்றும் துவரம் பருப்பின் தோற்றம் மற்றும் விளையுமிடத்தை எழுதுக.
10.
உடல்செல் மரபணு சிகிச்சை, மற்றும் இனச்செல் மரபணு சிகிச்சை வேறுபடுத்துக
11.
நிலைப்படுத்துதல் தேர்வு, இலக்கு நோக்கிய தேர்வு மற்றும் உடைத்தல் முறைத் தேர்வுமுறைகளை உதாரணங்களுடன் விளக்குக
12.
13.
இம்யூனோகுளோபுலினின் அமைப்பை தகுந்த படத்துடன் விளக்கு.
14.
ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ ஆகியவற்றுக்கிடையே உள்ள அமைப்பு சார்ந்த வேறுபாடுகள் மூன்றினைக் குறிப்பிடுக.
15.
பன்ம பாதுகாப்பில் கோவில் காடுகள் எவ்வாறு உதவிபுரிகின்றன?
16.
அனைத்து சூழல்மண்டலங்களிலும் பொதுவாக காணப்படும் உணவுச்சங்கிலியின் பெயரை கண்டறிந்து விளக்குக. அதன் முக்கியத்துவத்தை எழுதுக.
17.
மனிதனில் பால் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
18.
குறுக்கேற்ற செயல்முறையை விளக்குக.
19.
இரு பிளவுறுதல் முறைப்படி இனப்பெருக்கம் செய்யும் ஒரு செல் உயிரிகள் அழிவற்றவை. நியாயப்படுத்து.
20.
தடைகட்டு (ரெஸ்ட்ரிக்க்ஷன்) நொதி என்றால் என்ன? அவற்றின் வகைகளைக் கூறி, உயிரிதொழில்நுட்பவியலில் அதன் பங்கைக் குறிப்பிடுக?
21.
முழுமைபெறா ஓங்குத்தன்மை மற்றும் இணை ஓங்குத்தன்மையை வேறுபடுத்துக.
22.
மெண்டலின் பெருக்கச் சோதனை வெற்றிக்கான காரணங்கள் யாவை?
23.
‘எண்டோதீசியம் மகரந்தப்பை வெடித்தலுடன் தொடர்புடையது’. இக்கூற்றை நியாயப்படுத்துக.
24.
எண்டோதீலியம் என்றால் என்ன ?
25.
முக்கிய பால்வினை நோய்களையும் அவற்றின் அறிகுறிகளையும் விளக்குக.
1.
1. 1730 ல் இராஜஸ்தானை ஆண்ட அப்யசிங் மன்னர் அரண்மனையைக் கட்டுவதற்காக கெஜ்ரி மரங்களை வெட்ட ஆணையிட்டார்.
2. இதை அமிர்தாதேவி எனப்படும் தைரியமான பெண் அறிந்தார்.
3. மன்னரின் படையினரால் மரங்கள் வெட்டப்படுவதை அறிந்த அமிர்தா தேவியும் மற்றும் பலரும் மரங்கள் வெட்டப்படுவதிலிருந்து காக்க கெஜ்ரி மரங்களை கட்டியணைத்துக் கொண்டனர்.
4. மன்னரின் படையினர் 363 பிற பிஷ்னாய்களுடன் அம்ரிதா தேவியையும் கொன்றனர்.
5. அவரது வீரத்தைப் பறைசாற்றும் வகையில் இராஜஸ்தான் அரசு இவரது பெயரில் அமிர்தாதேவி பிஷ்னாய் ஸ்மிருதி விருது' என்ற மாநில அளவிலான கௌரவ விருதினை வழங்குகிறது,
சிப்கோ இயக்கம்:
i) இந்த இயக்கத்திலிருந்த மக்கள் மரங்களை கட்டியணைத்து ஒப்பந்தக் காரர்களிடமிருந்து மரங்களைக் காத்தனர்.
ii) இவ்வியக்கங்களின் முக்கிய நோக்கம் மரங்கள் வெட்டப்படுவதை தடுத்தல்.
2.
கழிவு நீர் மேலாண்மை மிகை உணவூட்டத்தை கட்டுப்படுத்தும்
1. இயற்பியல் முறை:
கழிவு நீர் மிதத்தல், படிதல், வடிகட்டுதல் மற்றும் மைய விலக்கிப் பிரித்தல் மூலம் நீர்நிலைகளில் விடுவதற்கு முன் சுத்திகரிக்கப்படுகின்றன.
2. வேதிய முறை கழிவு நீர் சுத்திகரிப்பு :
1. கரையா திடப்பொருட்களை உருவாக்குதல்.
2. உயிர் வழி சிதையா பொருட்களிலிருந்து உயிர்வழி சிதையக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்தல்.
3. தீமை செய்யாத பொருட்களை உற்பத்தி செய்வதற்கு ஆக்சிஜனேற்றம் செய்தல் அல்லது ஒடுக்க வினையை மேற்கொள்ளுதல்.
3. உயிரிய முறை:
1. காற்றுள்ள நிலையில் சுத்திகரித்தல்(ஆக்சிஜனேற்ற குளங்கள் காற்றூட்ட உப்பு நீர் ஏரிகள்)
2. காற்றுள்ள நிலையில் சுத்திகரித்தல் (காற்றற்ற உயிர்வினை கலன்கள் காற்றற்ற உப்பு நீர் ஏரிகள்)
3.
(i) எறும்புகள் சில நேரங்களில் மா, லிட்சி, ஜாமுன், அக்கேஷியா போன்ற சில தாவரங்களைத் தங்குமிடமாக எடுத்துக் கொள்கின்றன.
(ii) இந்த எறும்புகள் தாவரத்திற்கு தொந்தரவு அளிக்கும் உயிரினங்களிடமிருந்து காக்கும் காப்பாளராகவும் இதற்குப் பதிலாக தாவரங்கள் எறும்புகளுக்கு உணவு மற்றும் தங்குமிடத்தையும் அளிக்கின்றன.
(iii) இது மிர்மிகோஃபில்லி என அழைக்கப்படுகிறது. (எ.கா) அக்கேஷியா மற்றும் அக்கேஷியா எறும்பு.
4.
(i) ஒரு உயிரி தனது அமைப்பு, வடிவம், தோற்றம், நடத்தை ஆகியவற்றை மாற்றிக் கொள்வதன் மூலம் வாழும் வாய்ப்பைப் பெருக்கவும் தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் நிகழ்த்தப்படும் ஒரு செயலாகும்.
(ii) பூக்களில் காணப்படும் பாவனை செயல்கள் மகரந்தச் சேர்க்கையாளர்களை கவர உதவுகிறது.
எடுத்துக்காட்டு:
ஒபிரிஸ் என்ற ஆர்கிட் தாவரத்தின் மலரானது பெண் பூச்சியினை ஒத்து காணப்பட்டு ஆண் பூச்சிகளைக் கவர்ந்து மகரந்தச் சேர்க்கையை நிகழ்த்துகின்றன. இது மலர் பாவனை செயல்கள் என அழைக்கப்படுகின்றன.
5.
பிரிகூறு அடிப்படையில் தாவரத்தில் வளர்ப்பின் வகைகளாவன
1. உறுப்பு வளர்ப்பு
2. ஆக்குத்திசு வளர்ப்பு
3. புரோட்டோ பிளாஸ்ட் வளர்ப்பு
4. செல் மிதவை வளர்ப்பு
1. உறுப்பு வளர்ப்பு
2. ஆக்குத்திசு வளர்ப்பு
வளர்ஊடகத்தில் ஆக்குத்திசுவை வளர்த்தல்
3. புரோட்டோ பிளாஸ்ட் வளர்ப்பு
(செல்சுவரற்ற, ஆனால் செல்சவ்வு (அ) பிளாஸ்மா சவ்வினால் சூழப்பட்ட செல் அமைப்பாகும்) புரோட்டாபிளாஸ்ட்டை பயன்படுத்தி ஒற்றைச் செல்லிலிருந்து முழுத் தாவரத்தை மீளுருவாக்கம் செய்து இரு புரோட்டோபிளாஸ்டுகளை இணைத்து (உடலக் கலப்பினம்) உடல கலப்பின செல்களை உருவாக்க இயலும்.
4. செல் மிதவை வளர்ப்பு
கேலஸிலிருந்து செல்கள் தனிமைப்படுத்தப்பட்டு திரவ ஊடகத்தில் செல்மிதவை வளர்ப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.
இரண்டாம் நிலை வளர்சிதை பொருட்கள் உற்பத்தி
செல் மிதவை வளர்ப்பின் மூலமாக இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் சில உத்திகள் (உயிரிசார் நிலை மாற்றம், வளர்சிதை மாற்றப் பொருள் தூண்டல் மற்றும் முடக்க வளர்ப்பு முறை) பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்படுகின்றன.
6.
நம் கோளத்தின் நல்வாழ்விற்கும், உயிரிகள் நிலைத்திருப்பதற்கும், உயிரியப் பல்வகைத் தன்மை அவசியமானதாகும்.
உயிரிய பல்வகைத் தன்மையின் முக்கியத்துவம்
இதை கீழ்கண்ட கோணத்தில் நோக்கி அதனை அளவீடு செய்யலாம்.
1. சூழ்நிலை மண்டல சேவைகள்
2. உயிரிய வளங்கள்
3. உயிரிய பல்வகைத் தன்மையின் சமூகப்பயன்கள்
முக்கிய செயல்பாடுகள்:
(i) ஊட்டச்சத்து சுழற்சி அல்லது உயிரிய புவி (N2, C, H2O, P, S) சுழற்சிகளின் தொடர்ச்சி.
(ii) மண் நுண்ணியிரிகள் வெவ்வேறு ஊட்ட நிலை உறுப்பினர்களோடு சேர்ந்து மண் உருவாக்கம், சீரமைப்பு அல்லது மண் வள பராமரிப்பு ஆகியவை நடைபெறுதல்.
(iii) சூழ்நிலை மண்டலத்தின் உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் உணவு வளங்களை வழங்குதல்.
(iv) நீர் பிடிப்பு பகுதிகளாக, வடிகட்டிகளாக நீரோட்ட நெறி படுத்திகளாக மற்றும் நீர் சுத்திகரிப்பாளர்களாக செயல்படுதல்.
(v) தட்ப வெப்ப நிலையின் நிலைத்தன்மை, மழைப்பொழிவு, வெப்பநிலை நெறிப்படுத்துதல், Co2 உறிஞ்சப்படுதல், ஆகியவற்றிற்கு காடுகள் அவசியம். பதிலாக காடுகள் அங்குள்ள தாவரங்களின் வகைகளாகவும், அடர்த்தியையும் ஒழுங்குப்படுத்துகிறது.
(vi) காட்டு வளங்களின் மேலாண்மை மற்றும் நிலையான வளர்ச்சி.
(vii) உயிரியல் கூறுகளிடையே சமநிலையை பராமரித்தல்.
(viii) மனிதர்கள் உற்பத்தி செய்கின்ற குப்பைகள், கழிவு நீர், சாக்கடை மற்றும் வேளாண் கழிவுகள் ஆகியவற்றை சிதைப்பதில் நுண்ணுயிரிகள் மிகப்பெரிய பங்காற்றுகின்றன.
(ix) உணவு வளங்கள், மரபியல் வளங்கள், மருந்து வளங்கள் மற்றும் எதிர்கால உயிரிய வளங்கள் போன்றவற்றிற்கான சேமிப்பு இடமாக உயிரிய பல்வகைத் தன்மை மண்டலங்கள் உள்ளன.
(x) தனித்துவமான அழகு உணர்வு, சுற்றுச்சூழல் சுற்றுலா தலங்களைத் தருகிறது. சுற்றுலாவிற்கென வணிக முக்கியத்துவமும் உண்டு.
7.
தகவமைப்புப் பண்புகளின் வகைகள் மூன்று வகைப்படும்.
(i) உடல் அமைப்பு சார்ந்தவை.
(ii) நடத்தை சார்ந்தவை
(iii) உடற்செயலியல் சார்ந்தவை.
8.
மஞ்சளின் பயன்கள்:
(i) குழம்பு பொடியின் கலவைப் பொருள்
(ii) மருந்தாக, இனிப்பு பண்ட, உணவுத் தொழிற்சாலைகளில் நிறமூட்டி.
(iii) விழாக்களில் மஞ்சள் தடவிய புனித அரிசி பயனாகிறது.
(iv) தோல், நூல், பேப்பர், விளையாட்டுப் பொருள்களை நிறமூட்டப் பயன்படும்.
(v) மஞ்சள் நிறத்துக்குக் காரணமான 'குர்குமின்' என்ற வேதிப்பொருள் ஆண்டி - ஆக்சிடெண்ட்
(vi) புற்றுநோய், வீக்கம், சர்க்கரை நோய், பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் எதிர்ப்புப் பொருள்.
(vii) இரத்தக்குழாய்களில் தட்டை செல்கள் உறைதலைத் தடுத்து, மாரடப்பைத் தடுக்கும்.
9.
1. துவரை (Red gram) தோற்றம், விளையுமிடம்
தென்னிந்தியாவில் தோன்றிய ஒரே பருப்பு வகை மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகம், குஜராத்தில் பயிரிடப்படும்.
2. பாசிப்பயறு (Green gram) தோற்றம், விளையுமிடம்
இந்தியாவில் தோன்றியதற்கான தொல்லியல் சான்றுகள் மகாராஷ்டிராவில் கிடைத்தன. மத்தியப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாட்டில் அதிகப் பயிரிடப்படும்.
10.
| உடற்செல் மரபணு சிகிச்சை | இனச்செல் மரபணு சிகிச்சை | |
|---|---|---|
| 1 | சிகிச்சையளிக்கும் மரபணுக்கள் உடற்செல்களுக்குள் மாற்றப்படுகின்றன. | சிகிச்சையளிக்கும் மரபணுக்கள் இனச்செல்களுக்குள் மாற்றப்படுகின்றன. |
| 2 | எலும்பு மஜ்ஜை செல்கள் இரத்த செல்கள், தோல் செல்கள் போன்ற செல்களுக்குள் மரபணுக்கள் செலுத்தப்படுகிறது. | அண்ட செல்கள் மற்றும் விந்து செல்களுக்குள் மரபணுக்கள் செலுத்தப்படுகின்றன. |
| 3 | பிந்தைய தலைமுறைக்கு பண்புகள் கடத்தப்படுவதில்லை. | பிந்தைய தலைமுறைக்கு பண்புகள் கடத்தப்படுகின்றன. |
11.
நிலைப்படுத்துதல் தேர்வு:
1. நிலையான சுற்றுச்சூழல் இருக்கும் போது செயல்படுகிறது.
2. சராசரி புறத்தோற்றப் பண்புகள் உடைய உயிரிகள் தப்பிப் பிழைக்கும்.
3. இரு பக்கங்களிலும் உள்ள மிகை பண்புகள் உயிரினங்கள் உயிரினத் தொகையிலிருந்து நீக்கப்படும்.
4. புதிய சிறப்பினைமாக்கல் நிகழாது.
5. புறத்தோற்ற பண்புகளின் நிலைத்தன்மை தலைமுறைகளிலும் மாறாமல் பேணப்படும்.
6. உதாரணம் புயலின் போது தப்பி வாழ்ந்த சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை சராசரி அளவை ஒட்டி இருக்கும்.
7. புயலுக்குத் தாக்குப்பிடிக்க இயலாத சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை மாறுபாடுகளின் விளிம்புகளில் சேகரமாகி விடுகிறது. இப்போக்கு நிலைப்படுத்துதல் தேர்வினைக் குறிக்கும்.
இலக்கு நோக்கி முறை:
1. படிப்படியாக மாற்றம் பெறும் சுற்றுச்சூழல் இலக்கு நோக்கிய தேர்வு முறைக்கு உட்படுத்தப்படுகிறது.
2. புறத்தோற்றப் பண்புகள் பரவலின் ஒரு முனையிலிருந்து மறுமுனையை நோக்கி படிப்படியாக உயிரினங்கள் நீக்கப்படுகின்றன.
3. எடுத்துக்காட்டாக ஆண் மற்றும் பெண் சிட்டுக்குருவிகளின் உடல் அளவில் உள்ள வேறுபாடுகளைக் கூறலாம்.
4 ஆண் மற்றும் பெண் சிட்டுக்குருவிகளின் புறத்தோற்றத்தில் ஒன்று போல தோன்றினாலும் அவற்றின் உடல் எடை வேறுபாடுகள் காணப்படும்.
5. பெண் குருவிகள் அதன் உடல் எடையோடு தொடர்புடைய இலக்கு நோக்கிய தேர்வு முறையை வெளிப்படுத்துகிறது.
உடைத்தல் முறைத் தேர்வு:
1. ஒரே விதமான சுற்றுசூழல் நிலை மாற்றம் பெற்று பல்வகை சுற்றுசூழல் நிலைகளைக் கொண்டதாக மாறும் போது இவ்வகைத் தேர்வு முறை செயல்படுகிறது.
2. இரு முனைகளிலும் காணப்படும் புறத்தோற்ற பண்புகளை உடைய உயிரினங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
3. சராசரி புறத்தோற்ற பண்புகளை உடைய உயிரினங்கள் இனக்கூட்டத்திலிருந்து நீக்கப்படுகின்றன.
4. இனக்கூட்டம் துணை இனக்கூட்டங்களாகப் பிரிகின்றன.
5. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறுபட்ட சிற்றினங்கள் தோன்றுகின்றன.
6. எடுத்துக்காட்டு: காலபாகஸ் தீவுகளில் வாழும் டார்வீனின் குருவிகளில் உணவாகப் பயன்படும் விதையின் அளவுக்கேற்ப அவற்றின் அலகுகளின் நீளம் மாறுபடுகிறது.
12.
13.
1. இம்யூனோகுளோபுலின் நான்கு பாலிபெப்டைடு சங்கிலிகளை கொண்டதாகும்.
2. அவற்றில் ஒத்த அமைப்புடைய நீளம் குறைவான சங்கிலிகளும் மற்றும் நீளம் அதிகமான இரண்டு கனமான சங்கிலிகளும் உண்டு.
3. இலகுவான சங்கிலிகளின் மூலக்கூறு எடை ஏறத்தாழ 25,000 டால்டன் மற்றும் ஏறத்தாழ 214 அமினோ அமிலம் கொண்டது.
4. கனமான சங்கிலிகளின் மூலக்கூறு எடை ஏறத்தாழ 50,000 டால்டன் மற்றும் ஏறத்தாழ 450 அமினோ அமிலம் கொண்டதாகும்.
5. ஒவ்வொரு இலகுவான சங்கிலி ஒரு கனமான சங்கிலியுடனும் அதே நேரத்தில் இரண்டு கனமான சங்கிலியும் ஒன்றுடன் ஒன்று டை-சல்பைடு பிணைப்பால் இணைக்கப்பட்டுள்ளன
6. ஏறத்தாழ நடுப்பகுதியில், அசையும் கீல் அமைப்பினை கன சங்கிலிகள் பெற்றுள்ளன
7.ஒவ்வொரு சங்கிலியும் இரு முனைகள் கொண்டுள்ளன அவை C - முனை மற்றும் N - முனை
8. ஒரு இம்யூனோகுளோபுலினில் இரண்டு பகுதிகள் உண்டு N - முனையில் - மாறுபடும் பகுதி (V - region) C - முனையில் - நிலையான பகுதி (C - region ) காணப்படுகிறது.
14.
| பண்பு | RNA | DNA | |
| 1 | இழைகள் | ஓரிழையானது | இரண்டு இழைகளால் ஆனது விதிவிலக்கு - சில DNA வைரஸ்கள் |
| 2 | சர்க்கரை | ரிபோஸ் சர்க்கரை | டி - ஆக்சிரைபோஸ் சர்க்கரை |
| 3 | நைட்ரஜன் காரங்கள் | அடினைன், குவானைன் யூராசில் மற்றும் சைட்டோசின் | அடினைன், குவானைன் தயமின் மற்றும் யூராசில் |
15.
1. கோவில் காடுகள் சமூகங்களால் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட மரங்களின் தொகுப்புகளாகும் (or) தோட்டங்களாகும்.
2. சமூகத்தின் பாதுகாப்பிற்காக ஒரு குறிப்பிட்ட சமயச் சித்தாங்களைக் கொண்டிருக்கும் வலுவான மத நம்பிக்கையை கொண்டவை.
3. இவை நீர்ப்பாசனம், தீவனம், மருத்துவத் தாவரங்கள் மற்றும் நுண் காலநிலை கட்டுப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதன் மூலம் ஏராளமான சுற்றுச்சூழல் அமைப்புச் சேவைகளை அண்டை பகுதிகளுக்கு வழங்கும்.
4. கோவில் காடுகள் நிலத்தடி நீரை பாதுகாத்தல் மண்ணரிப்பை தடுத்தல், மண்ணின் வளத்தை பாதுகாக்கிறது.
5. கோவில் காடுகளில் ஆயுர்வேத மருத்துவ தாவரங்கள். மேலும் அச்சுறுத்தப்படும் சிற்றினங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
6. அச்சுறுத்தலுக்குண்டான சிற்றினங்களுக்கு உறைவிடம் மற்றும் பராமரிப்பு வழங்குவதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கான கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களையும் பெற்றுத் தருகின்றன.
7. ஒவ்வொரு கிராமத்துக் கோயில் காடுகளும் ஐய்யனார் அல்லது அம்மன் போன்ற கிராம ஆண், பெண் தெய்வங்களின் உறைவிடமாகவே கருதப்படுகின்றன.
8. தமிழ்நாடு முழுவதும் 448 கோயில் காடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன
16.
மட்குப்பொருள் (சிதைவுக்கூளம்) உணவுச்சங்கிலி அனைத்து சூழல் மண்டலத்திற்கும் பொதுவானது.
மட்குப்பொருள் உணவுச்சங்கிலி:
1. இந்த உணவுச்சங்கிலி இறந்த கரிமபொருட்களிலிருந்து தொடங்குகிறது. இது முக்கிய ஆற்றல் மூலமாக உள்ளது.
2. அதிகப்படியான கரிமப்பொருள்கள் இறந்த தாவரங்கள் விலங்குகள் மற்றும் அவற்றின் கழிவு பொருட்களிலிருந்து பெறப்படுகிறது.
3. இறந்த உயிரிகளின் கரிமப்பொருட்கள் மறுசுழற்சி மற்றும் அதன் சமநிலையை தக்கவைக்கவும் சூழ்நிலை மண்டலத்தில் இது முக்கியமான உணவு சங்கிலியாகும்.
17.

(i) பால் நிர்ணயம் செய்யும் ஜீன்கள் பால் குரோமோசோம்களில் அமைந்துள்ளன.
(ii) ஆண் பெண் பால் நிர்ணயம் குரோமோசோம்களின் வேறுபாடுகளில் நடைபெறுகிறது.
(iii) பெண் உயிரிகள் XX குரோமோசோம்களையும் ஆண்கள் XY குரோமோசோம்களையும் ஆண்கள் XY குரோமோசோம்களை உடையவர்.
(iv) பெண்கள் ஒத்த இனச்செல்களை கொண்டு ஒரே வகையான முட்டையை உற்பத்தி செய்கின்றனர்.
(v) ஆண்கள் வேறுபட்ட இனச்செல்களை கொண்டு இரண்டு வகை விந்து செல்களை உற்பத்தி செய்கின்றனர்.
(vi) XY-XX வகை பால் நிர்ணயம் பழம் பூச்சியில் நடைபெறுகிறது.
(vii) கருவுறச் செய்யக்கூடிய விந்து செல்லின் வகையை கருக்களின் பாலினத்தை நிர்ணயம் செய்கின்றன.
(viii) X குரோமோசோமை கொண்ட விந்து செல்லால் கருவுற்றால் அவை பெண் உயிரியாகிறது.
(viii) Y குரோமோசோமை கொண்ட விந்து செல்லால் கருவுற்றால் அவை ஆண் உயிரியாகவும் மாறுகின்றன.
18.
ஒத்திசைவு குரோமோசோம் இணைகளின் சகோதரி அல்லாத குரோமோடிட்களுக்கிடையே இணையான துண்டுகள் பரிமாற்றப்பட்டு புதிய மரபணு சேர்க்கை தோன்றும் உயிரிய நிகழ்விற்குக் குறுக்கேற்றம் என்று பெயர்.
இதில் பல நிலைகளை உடையது
1) இணை சேர்தல்
2) நான்கமை உருவாதல்
3) குறுக்கேற்றம் மற்றும் முடிவுறுதல்
i) இணை சேர்தல்:
புரோபேஸ் 1 இன் சைக்கோட்டின் நிலையில் இரண்டு ஒத்திசைவு குரோமோசோம்களுக்கிடையே நெருங்கிய இணை உருவாகிறது.
இது இரட்டை இணை (அ) பைவாலண்ட், இது இணைசேர்தல் (அ) சினாப்சிஸ் என்று பெயர் இணைதல் தொடங்குவதைப் பெருத்து 3 வகைப்படும்.
1. மையம் தொடங்கி இணைசேர்தல்
2. நுனி தொடங்கி இணைசேர்தல்
3. இடையிலா இணை சேர்தல்
ii) நான்கமை உருவாதல்:
இரட்டை இலையில் -இரண்டு ஒத்த அமைப்புடைய சகோதரி குரோமாடிட்களை உருவாகத் தொடங்குகிறது - இதில் நான்கு குரோமோடிடுகளைப் பெற்றிருக்கிறது -நான்கமை நிலை என்று
iii) குறுக்கேற்றம்:
பாக்கிடீன் நிலையில் குறுக்கேற்றம் நிகழ்கிறது-
ஒத்திசைவு குரோமோசோம்களின் சகோதரி அல்லாத குரோமோடிடுகளுக்கிடையேே இணைவுப்புள்ளிகள் (கயாஸ்மாக்கள்)- எனும் (X) வடிவ அமைப்பு உருவாகிறது. இவற்றில் குரோமோடிடுகள் உடைந்து துண்டுகள் பரஸ்பரம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
1) அண்மைக்கால ஆய்வு: மேம்படுத்தப்பட்ட இழை அமைப்பு கொண்ட இணை பிணைப்புக் கூட்டமைப்பு -இணைசேர்தல் (அ) கயாஸ்மா தோன்றுதலுக்கு வழி வகுக்கிறது. (விதி விலக்கு - சில ஆண் டுரோசோஃபிலா வில் இணைப்பிணைப்புக் கூட்டமைப்பு உருவாவதில்லை)
iv) முடிவுறுதல்:
குறுக்கேற்றத்தின் பின் கயாஸ்மாவானது குரோமாடிட்களின் நுனிப்பகுதியை நோக்கி நகர்கிறது இது முடிவுறுத்தல் எனப்படுகிறது. ஒத்திசைவு குரோமோசோம்கள் முழுமையாகப் பிரிகிறது.
19.
(i) அமீபா ஒரு செல் உயிரியாகும். இவை அழிவற்றவை எனப்படும்.
(ii) ஒரு முதிர்ந்த அமீபா மைட்டாசிஸ் மூலம் இரண்டு இளம் அமீபாகவே உருவாகிறது.
20.
1. இது மூலக்கூறு கத்தரிக்கோல் எனப்படுகிறது.
2. 1963 ஆம் ஆண்டு எ.கோலை பாக்டீரியாவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டது.
3. இது DNA மூலக்கூறுக்குள் குறிப்பிட்ட அடையாளம் காணக்கூடிய பகுதிக்கு அருகில் (அ) இடத்தில் DNA ஐ துண்டிக்கின்றன. இது தடைகட்டு களம் எனப்படும்.
4. செயல்படும் விதம் அடிப்படையில் பிரிப்பது
அ. எக்சோ நியூக்ளியேஸ்
DNA மூலக்கூறின் உட்புறம் ஒரு முனையில் இருந்து நியுக்ளியோடைடுகளை நீக்குகிறது.
(எ.கா) Bal 31, எக்சோ நியுக்ளியேஸ் III
ஆ. எண்டோ நியூக்ளியேஸ்
இது நொதி மூலக்கூறின் உட்புறம் உள்ள ஃபாஸ்ஃபோடை - எஸ்டர் பிணைப்பை நீக்குகிறது.
(எ.கா) Hind II, EcoR 1, Pvul, Bam H1, Taq போன்றவை
எண்டோ நியூக்ளியேஸ் 3 வகுப்புகளைக் கொண்டது.
வகை I, II மற்றும் இவை செயல்படும் விதத்தில் சிறிய வேறுபாடுகளைக் கொண்டது.
வகை - II : இது மறுகூட்டிணைவு தொழில் நுட்பத்தில் அதிகம் பயன்படுகிறது. இது 4-8bp கொண்டுள்ள வரிசைக்குள்ளே DNA வை அடையாளம் கண்டறிந்து Hind II
குறிப்பிட்ட வரிசையிலுள்ள 6 கார இணைகளை அடையாளம் கண்டறிந்து அங்கு DNA மூலக்கூறுகளைத் துண்டிக்கிறது (Recognition sequences). இது வரை வேறுபட்ட அடையாள தொடர்வரிசை உடைய ஏறத்தாழ 900 தடைகட்டு நொதிகள் பாக்டீரியங்களிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டுள்ளன.
21.
| முழுமைபெறா ஓங்குத்தன்மை | இணை ஒடுங்குத்தன்மை | |
| 1. | ஓங்கு அல்லீல்கள் பிறிதொரு ஓங்கு அல்லீலைத் கட்டுப்படுத்தவில்லை - இருவகை அல்லீல்களும் கூட்டாகச் செயல்பட்டு இடைப்பட்ட நிறம் தோன்றியுள்ளது. | ஒரு உயிரியல் மாற்றுப் பண்புடைய இரு அல்லீல்களும் ஒரே சமயத்தில் பண்பை வெளிப்படுத்தும் நிகழ்விற்கு இணை ஓங்குத்தன்மை என்று பெயர். |
| 2. | அல்லீல்கள் கலப்புற்றதாக வெளிப்பட்டது. | அல்லீல்கள் கலப்புற வில்லை. |
| 3. | ஹைபிரிட் - இரு அல்லீல்களுக்கும் இடைப்பட்ட வெளிப்பாட்டை கொண்டிருக்கிறது. | ஒவ்வொரு அல்லீல்களும் தனித்தனியாக வெளிப்படுத்திக் கொண்டன. |
| 4. | புதிய புறத்தோற்றப் பண்பு உருவானது | புதிய புறத்தோற்றப் பண்பு உருவாகவில்லை |
| 5. | எ.கா ஸ்நேப்டிராகன் மலரின் நிறம் (சிவப்பு x வெள்ளை) | மனித இரத்த வகை(ABO) |
22.
(i) கணித மற்றும் புள்ளியியல் மற்றும் நிகழ்வு விரைவு முறை அணுகு முறை
(ii) கையாண்ட முறைகளின் துல்லியமான புள்ளியியல் நிகழ்வுகள்
(iii) பட்டாணித் தாவரத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட எதிரிடைப் பண்புகள் - தனிப்பட்ட குரோமோசோம்களில் உள்ள காரணிகளால் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது.
(iv) தூயகால்வழி பெற்றோர்கள் - தேர்ந்தெடுப்பது பல தலைமுறைகளில் தற்கலப்பு மேற்கொண்டது.
(v) அனைத்துக்கும் மேல் தோட்டப்பட்டாணியைத் (Pisum sativum) தெரிவு செய்தது - அதன் சாதகமான பண்புகள்
(vi) ஒரு பருவ தாவரம் பல தலைமுறைகளை ஆய்வு செய்ய இயலும்.
(vii) ஒற்றை மரபணுவால் கட்டுப்படுத்தப்பட எதிரிடைப் பண்புகள் தெளிவானவை.
(viii) இயல்பான தற்கருவுருதல்
(x) பெரிய மலர்களாதலால், ஆண் மடலாக்கம், மகரந்தச் சேர்க்கை மற்றும் கலப்புறுதல் எளிதானது.
23.
1. இது மகரந்தப்பைச் சுவரின் ஒரு அடுக்கு.
2. இவற்றில் செல்லுலோஸ், லிக்னினால் ஆன பட்டைகள் உள்ளன.
3. இச்செல்கள் நீர் உறிஞ்சும் தன்மை கொண்டவை.
4. எண்டோதீசியத்தின் நீர் உறிஞ்சும் தன்மை வெடிப்பிற்கு உதவும்
24.
ஒரு சில சிற்றினங்களில் (ஒரு சூலறையுடைய மென் சூல்திசு கொண்ட) சூலுறையின் உள்ளடுக்கு சிறப்பு பெற்று, கருப்பையின் ஊட்டத்திற்கு உதவுகின்றது. இந்த அடுக்கு எண்டோதீசியம் அல்லது சூலுறை டபீட்டம் (Integumentary tapetum) எனப்படும். (எ.கா) ஆஸ்டரேசி
25.
| நோயின் பெயர் | நோய்க்காரணி | அறிகுறிகள் | நோய் வெளிப்படும் காலம் |
| பாக்டீரிய பால்வினைத் தொற்று (Bacterial STI) | |||
| கொனோரியா அல்லது வெட்டை நோய் (Gonorrhoea) |
நைசீரியா கொனோரியா (Neisseria gonorrhoeae) |
(i) சிறுநீர் வடிகுழாய், மலக்குடல், தொண்டை, பெண்களின் கருப்பைவாய் ஆகிய பகுதிகளில் பாதிப்பு (ii) பிறப்புப் பாதையில் வலி, சீழ் வடிதல் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு |
2-5 நாட்கள் |
| கிரந்தி அல்லது மேகப்புண் (Syphilis) | டிரிபோனிமா பாலிடம் (Treponema pallidum) |
(i) முதல்-நிலை - பாலுறுப்புகளின் புறப்பகுதியில் வலியற்ற புண்கள். (ii) இரண்டாம் நிலை - தோல் புண்கள், சொறி, தோல் தடிப்பு, மூட்டுகளில் வீக்கம் காய்ச்சல் மற்றும் முடி உதிர்வு |
10-90 நாட்கள் |
| (iii)மூன்றாம் நிலை - பாலுறுப்புகளின் மூக்கு, கீழ்க்கால் பகுதி மற்றும் அண்ணப்பகுதியில் நாள்பட்ட புண்கள், இயக்கமின்மை மனநல பாதிப்பு, பார்வைகோளாறு இதயப்பிரச்சனை, மென்மையான பரவும் தன்மையற்ற கட்டிகள் போன்றன. | |||
| கிளாமிடியாசிஸ் (Chalmy diasis) |
கிளாமிடியா ட்ரோகோமேடிஸ் (Chlamydia trachomatis) |
கண் இமை அரிப்பு, சிறுநீரக இனப்பெருக்கப் பாதை, சுவாசப்பாதை மற்றும் கண்ணின் கன்ஜங்க்டிவா ஆகியவற்றில் தூண் எப்பிதீலிய செல்கள் பாதிப்பு | 2-3 வாரங்கள் அல்லது 6 வாரங்கள் வரை |
| லிம்போகிரானுலோமா வெனரியம் (Lymphogranuloma venereum) | கிளாமிடியா ட்ராகோமேடிஸ் | பிறப்புறுப்பின் தோல் அல்லது கோழைப்படல பாதிப்பு, சிறுநீர் வடிகுழாய் அழற்சி, உள்கருப்பை வாய் அழற்சி, வாய் அழற்சி, ஆங்காங்கே கேடு தரும் புண்கள், இனப்பெருக்க உறுப்பு யானைக்கால் நோய். | |
| வைரஸ் பால்வினைத் தொற்று(Viral STI) | |||
| பிறப்புறுப்பு அக்கி (Genital herpes) |
ஹெர்பஸ் சிம்ப்லெக்ஸ்(Herpes simplex virus) | (i) பெண்களின் பெண் கிரிவெளியிதழ், கலவிக்கால்வாய், சிறுநீர் வடிகுழாய் ஆகியனவற்றைச் சுற்றி புண்கள் ஆண்களில் ஆண்குறியைச் சுற்றி புண்கள். (ii) சிறுநீர் கழிக்கும் போது வலி (iii)மாதவிடாய் சுழற்சிகளுக்கிடையே இரத்தப்போக்கு (iv) தொடை இடக்குகளின் நிணநீர் முடிச்சுகளில் வீக்கம். |
2-21 நாட்கள் (சராசரி 6 நாட்கள்) |
| பிறப்புறுப்பு மருக்கள் (Genital warts) |
மனித பாபிலோமோ வைரஸ் (HPV)(Human papilloma virus) | (i) இன உறுப்புகளின் வெளிப்பகுதி, கருப்பைவாய், மலவாயைச் சுற்றிய பகுதிகளில் கடினமான புடைப்புகள் (கட்டிகள்) | 1-8 மாதங்கள் |
| கல்லீரல் அழற்சி (Genital warts) | ஹிபாடிடிஸ் வைரஸ்(HBV) (Hepatitis-B virus) | (i) சோர்வு, மஞ்சள் காமாலை, காய்ச்சல் தோல் தடிப்பு,வயிற்றுவலி. (ii) கல்லீரல் இறுக்கம், இறுதி நிலையில் கல்லீரல் செயலிழப்பு |
30-80 மாதங்கள் |
| எய்ட்ஸ்(AIDS) | மனித நோய் எதிர்ப்பு குறைபாடு வைரஸ்(HIV) | (i) நிணநீர், முடிச்சுகள் பெரிதாதல்,நீண்டநாள், காய்ச்சல்,நீண்டநாள் வயிற்றுப்போக்கு, உடல் எடை குறைதல், இரவில் வியர்த்தல். | 2-6 வாரங்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேலும் |
| பூஞ்சை பால்வினைத் தொற்று(Fungal STI) | |||
| கேன்டிடியாசிஸ் (Candidiasis) |
கேன்டிடா அல்பிகன்ஸ்(Candida albicans) | (i) வாய், தொண்டை, குடற்பாதை மற்றும் கலவிக்கால்வாய் ஆகிய பகுதிகளில் தாக்கம் (ii) கலவிக்கால்வாயில் அரிப்பு (அ) புண்கள் (iii) கலவிக்கால்வாய் திரவம் மிகைப்போக்கு (iv) வலியுடன் சிறுநீர் கழித்தல் |
|
| புரோட்டோசோவா பால்வினைத் தொற்று (Protozoan STI): | |||
| டிரைக்கோமணியாசிஸ் (Trichomoniasis) |
டிரைகோமோனாஸ் வாஜினாலிஸ் (Trichomonas vaginalis) | (i) கலவிக்கால்வாய் அழற்சி, பச்சை மஞ்சள் கலந்த கலவிக் கால்வாய் திரவ வெளிப்பாடு, அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு, சிறுநீர் வடிகுழல் அழற்சி, விந்தக மேல் சுருள் நள அழற்சி, புரோஸ்டேட் சுரப்பி அழற்சி | 4-28 நாட்கள் |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards