12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Two mark Important Questions with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
பசுமை இல்ல விளைவு இல்லாவிட்டால் பூமி எவ்வாறு இருக்கும்?
2.
வீடுகள், பள்ளி அல்லது சுற்றுலாத் தலங்களில் உன்னால் உருவாக்கப்படும் கழிவுகளைப் பட்டியலிடுக. அவற்றை மிக எளிதாகக் குறைக்க முடியுமா? எந்த வகைக் கழிவுகளை குறைப்பது மிகக் கடினம் அல்லது இயலாது?
3.
பனிப்புகை என்றால் என்ன? அது நமக்கு எந்த வகையில் தீங்கிழைக்கின்றது?
4.
மணற்பாங்கான மண் சாகுபடிக்கு உகந்ததல்ல - ஏன் என விளக்குக.
5.
கடலின் ஆழமான அடுக்குகளில் பசும்பாசிகள் பொதுவாகக் காணப்படுவதில்லை. ஏதேனும் ஒரு காரணம் தருக.
6.
புவி வாழிடம் மற்றும் செயல் வாழிடம் வேறுபடுத்துக.
7.
சூழ்நிலையியல் படிநிலைகள் என்றால் என்ன? பல்வேறு சூழ்நிலையியல் படிநிலைகளை எழுதுக.
8.
செல் வளர்ப்பு நிலையில் உள்ள பல்வேறு படிநிலைகளை எழுதுக.
9.
"அமேசான்காடுகள் பூமிக்கோளின் நுரையீரலாக கருதப்படுகிறது”-இந்த சொற்றொடரை நியாயப்படுத்து.
10.
11.
குளிர் உறக்கம் மற்றும் கோடை உறக்கம் ஆகிய நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டுகளுடன் விவரி
12.
அழுத்தமற்ற நிலை என்றால் என்ன?
13.
14.
வாழிடம் என்றால் என்ன?
15.
இயற்கை வேளாண்மையின் வரையறையைத் தருக.
16.
வேதிச் சாயத்தை போடும் ஒருவருக்கு எரிச்சல் வருகிறது. நீங்கள் அதற்கு மாறாக எதை சிபாரிசு செய்வீர்கள்.
17.
18.
எலைசா தொழில் நுட்பம் எதிர்பொருள் தூண்டி – எதிர்பொருள் வினை அடிப்படையிலானது. இதே தொழில் நுட்பத்தைக் கொண்டு மரபுக்குறைபாடான ஃபினைல் கீட்டோனூரியாவை மூலக்கூறு நோய்க் கண்டறிதலால் செய்ய இயலுமா?
19.
rDNA தொழில்நுட்ப வருகைக்கு முன் இன்சுலின் எவ்வாறு பெறப்பட்டது? எத்தகைய பிரச்சனைகள் எதிர்கொள்ளப்பட்டன?
20.
மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட இன்சுலின் என்பது யாது?
21.
பாலிமரேஸ் சங்கிலி வினையைப் பயன்படுத்தி விரும்பிய மாதிரியில் எவ்வாறு மரபணு பெருக்கம் செய்யப்படுகின்றது?
22.
டார்வினியக் கோட்பாடுகளுக்கான முக்கிய எதிர் கருத்துக்கள் யாவை?
23.
குவி பரிணாமம் மற்றும் விரிபரிணாம நிகழ்ச்சிகளை ஒவ்வொரு எடுத்துக்காட்டுடன் வேறுபடுத்துக
24.
உயிரிய ஆக்சிஜன் தேவை(BOD) என்றால் என்ன?
25.
பால் எவ்வாறு தயிராக மாற்றப்படுகிறது? தயிர் உருவாகும் முறையினை விளக்குக.
26.
ஈ.கோலையில் உள்ள மூன்று நொதிகளான β- கேலக்டோசிடேஸ், பெர்மியேஸ் மற்றும் டிரான்ஸ் அசிட்டைலேஸ் ஆகியவை லாக்டோஸ் முன்னிலையில் உற்பத்தியாகின்றன. இந்நொதிகள் லாக்டோஸ் இல்லாத நிலையில் உற்பத்தியாவதில்லை – விளக்குக.
27.
மேக்ரோஃபேஜ்கள் சார்ந்த தடை வகையை கூறி அதனை விளக்கு.
28.
கீழ்க்கண்ட படியெடுத்தல் அலகில் A மற்றும் B எனக் குறிக்கப்பட்டுள்ளவற்றை எழுதுக.
29.
கீழ்க்காணும் அட்டவணையை நிறைவு செய்.
| நோய்கள் | நோய்க்காரணி | நோய்த்தொற்று இடம் |
| புட்டாளம்மை | ||
| சின்னம்மை | ||
| டெங்கு காய்ச்சல் |
30.
குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்?
31.
அடைப்புக்குள் இருந்து சரியான பதங்களை தேர்வு செய்து கிளைத்த மரத்திலுள்ள வெற்றிடங்களை நிரப்புக

(தடுப்புகள், பாலூட்டும் கால மாதவிடாயின்மை, CuT. கருக்குழல் தடை)
32.
கார்பன் கவரப்படுதல் மற்றும் சேகரித்தல் (CCS) என்றால் என்ன?
33.
ஓசோன் துளை என்றால் என்ன?
34.
நிகர முதல்நிலை உற்பத்தி திறனை விட மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன் மிகவும் திறன் வாய்ந்தது. விவாதி
35.
புதிதாய் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் கருவளர்ச்சியின் எந்நிலையில் இனச்செல் உருவாக்கம் நிகழ்கிறது?
36.
பால்சார்ந்த ஒடுங்கு பண்பு மரபு கடத்தல் ஆண்களில் ஏன் அதிகமாகக் காணப்படுகிறது?
37.
| வ.எண் | கேமீட்டுகளின் வகைகள் |
வழித்தோன்றல்களின் எண்ணிக்கை |
| 1. | ABC | 349 |
| 2. | Abc | 114 |
| 3. | abC | 124 |
| 4. | AbC | 5 |
| 5. | aBc | 4 |
| 6. | aBC | 116 |
| 7. | ABc | 128 |
| 8. | abc | 360 |
i) இந்தச் சோதனைக் கலப்பின் பெயர் என்ன?
ii) மேலே கொடுக்கப்பட்டுள்ள தரவுகளைக் கொண்டு மரபணு வரைபடத்தை எவ்வாறு
உருவாக்குவாய் ?
iii) மரபணுக்களின் சரியான வரிசையைக் கண்டுபிடி.
38.
PV/PV என்ற ஓங்கு மரபணு கொண்ட ஆண் டுரோசோஃபிலாவை இரட்டை ஒடுங்கு மரபணு கொண்ட பெண் டுரோசோஃபிலாவுடன் கலப்பு செய்து F1 ஐ பெறுக. பின்பு F1 ஆண் பழப் பூச்சியை இரட்டை ஒடுங்கு பெண் பழப் பூச்சியுடன் கலப்பு செய்க.
i) எந்த வகையான பிணைப்பை காணமுடியும்
ii) சரியான மரபணு வகையை கலப்பினை வரைக .
iii) F2 சந்ததியின் சாத்தியமான மரபணு வகையம் என்ன?
39.
வேறுபட்ட இனச்செல் மற்றும் ஒத்தயினசெல் பால் நிர்ணயத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
40.
கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன? விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.
41.
எவ்வுயிரினத்தில் செல் பிரிதலே இனப்பெருக்க முறையாகச் செயல்புரிகிறது?
42.
நியுக்ளியோடைடு தொடர்வரிசையின் முனை மற்றும் உள்ளாக அமைந்த பாஸ்போ டை எஸ்டர் பிணைப்பை துண்டிக்க என்ன நொதிகளைப் பயன்படுத்துவாய்?
43.
தற்காலப் பயிற்சியில் உயிரி தொழில்நுட்பவியலை எவ்வாறு பயன்படுத்துவாய்?
44.
மரபியல் - வரையறு.
45.
மெண்டலியத்தை மறு ஆய்வு செய்து கண்டறிந்த அறிவியல் அறிஞர்களின் பெயர்களை எழுதுக.
46.
உயர் தாவரங்களில் தழைவழி இனப்பெருக்கத்திற்கு கையாளப்படும் பாரம்பரிய முறைகளை விவரி.
47.
ஒட்டுதல் மற்றும் பதியமிடல் வேறுபடுத்துக.
48.
பதியமிடல் என்றால் என்ன?
49.
கருவியலுக்கு ஹாப்மீஸ்டரின் பங்களிப்பை குறிப்பிடுக.
50.
திடீர்மாற்றம், இயற்கைத் தேர்வு மற்றும் மரபியல் நகர்வு ஆகிய நிகழ்வுகள் ஹார்டி– வீன்பெர்க் சமநிலையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விளக்குக.
1.
CO2, மீத்தேன், NO2, CFCs மற்றும் ஓசோன் போன்ற பசுமை இல்ல வாயுக்கள், ஒரு கண்ணாடி வீட்டில் கண்ணாடிகள் எவ்வாறு வெப்பத்தை தக்கவைத்துக் கொள்கின்றனவோ, அவ்வாறே வெப்பத்தைத் தக்கவைத்துப் பூமியின் வெப்பத்தை கூட்டுகிறது.
பொதுவாக பூமியில் உள்ள அனைத்து உயிரிகளின் வாழ்வும், இந்தப் பசுமை இல்ல வீடு விளைவைச் சார்ந்துள்ளது.
இவ்விளைவு இல்லாவிட்டால் பூமி குளிர்ந்து, வட துருவத்திலிருந்து தென்துருவம் வரை பூமியைப் பனிக்கட்டிகள் மூடிவிடும்.
ஆகவே பசுமை இல்ல விளைவு பூமியின் வாழ்வுக்கு அவசியமே.
ஆனால் பசுமை இல்ல விளைவு அதிகமானால் வழக்கத்தை விடப் பூமி அதிகமாக வெப்பமடையத் துவங்கும். சிறிதளவு வெப்ப உயர்வு கூட மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
2.
1. நெகிழிப்பேப்பர். காய்கறி மற்றும் பழங்களின் தோல்கள், ஒருமுறை பயன்படக்கூடிய சோப்பு தட்டு, கரண்டி.
2. இவைகளை சரியான அளவில் பயன்படுத்தி அவைகளின் பயன்பாட்டினை குறைக்கலாம்.
3. பேப்பரின் இரண்டு பக்கங்களிலும் எழுதுவதன் மூலமும், மறுசுழற்சி செய்த பேப்பர்களை பயன்படுத்துவதால் அதன் பயன்பாட்டை குறைக்கலாம்.
4. நெகிழி மற்றும் கண்ணாடி போன்ற பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதால் அதன் பயன்பாட்டை குறைக்கலாம்.
5. நெகிழிப்பைகளுக்கு பதிலாக உயிரிச்சிதைவடையக்கூடிய சணல் பைகளை பயன்படுத்துவதால் பள்ளி மற்றும் சுற்றுலாக்களில் போது ஏற்படும் கழிவுகளை கட்டுப்படுத்தலாம்.
6. வீடுகளில் குளிப்பதற்கு சமைப்பதற்கு பயன்படும் தண்ணீரை குறைப்பதன் மூலம் வீட்டுக்கழிவுகளின் அளவை குறைக்கலாம்.
7. உயிரியச் சிதைவடையாத நெகிழி, உலோகம் உடைந்த கண்ணாடி போன்றவைகளை குறைப்பது கடினம் ஏனெனில் அவைகளை நுண்ணுயிரிகள் முழுவதும் சிதைக்க முடிவதில்லை.
3.
1. புகைப்பனி என்பது காற்றில் காணப்படும் சிறிய துகள்களினால் ஏற்படும் ஒரு வகையான காற்று மாசுபாடு ஆகும்.
2. இவை காற்றின் ஊடே பார்வை திறனை குறைக்கிறது.
3. புகைப்பனியானது ஆஸ்துமா நோயுடைய மக்களின் சுவாசத்தை கடினமாக்குகிறது.
4. புகைப்பனியானது தாவரங்கள் மற்றும் விலங்குகளையும் பாதிக்கின்றது.
5. இது பயிர்களை பாதிப்பதோடு செல்லப் பிராணிகள், பண்ணை விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு உடல் நலக் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது.
6. கட்டடங்கள் மற்றும் வாகனங்களை அரித்து (அரித்து கரைக்கும்) சேதத்தினை ஏற்படுத்துகிறது.
4.
(i) மணல் நீரினை விரைவாக இழந்து விடுகிறது. இதனால் நீரை சேமித்து வைக்க இயலாத காரணத்தினால் இது தாவர வளர்ச்சிக்கு உகந்தது அல்ல.
(ii) மேலும் மணற்பாங்கான மண்ணில் மட்குகள் கனிமப்பொருட்கள், பாக்டீரியா, பூஞ்சைகள், மண்புழுக்கள், பூச்சிகள் போன்ற தாவர வளர்ச்சிக்கு தேவையான பொருட்கள் காணப்படுவது இல்லை.
(iii) மண்ணின் வளம் மற்றும் உற்பத்தித்திறன் இவ்வகை மண்ணில் மிகவும் குறைவு.
(iv) மண்கரைசலில் காணப்படுகிற நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் அயனி செறிவை (pH) பொறுத்தே தாவரங்களுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. இவ்வகை மண்ணின் அயனி செறிவு மிகவும் குறைவு.
(v) எனவே இவ்வகை மண் சாகுபடிக்கு உகந்ததல்ல.
5.
(i) கடலின் ஆழமான அடுக்குகளில் போதுமான சூரிய வெளிச்சம் காணப்படாததால் அப்பகுதி மிகவும் இருண்டு காணப்படும்.
(ii) பசும்பாசிகளின் ஒளிச்சேர்க்கைக்கு சூரியஒளி அவசியமாதலால் இங்கு அவை காணப்படுவதில்லை.
(iii) பசும்பாசிகளின் வளர்ச்சிக்கு உவர்நீர் (சிறிது உப்புநீர்) தேவைப்படுகிறது இதுவும் இங்கே இல்லாத காரணத்தினால் பசும்பாசிகள் காணப்படுவதில்லை.
6.
| புவி வாழிடம் | செயல் வாழிடம் | |
|---|---|---|
| 1 | உயிரினம் அமைந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட புவி இடமாகும். | ஒரே சூழ்நிலை தொகுப்பில் உள்ள ஒரு உயிரினம் பெற்றிருக்கும் செயலிடமாகும். |
| 2 | ஒத்த வாழிடம், ஒன்றிற்கு மேற்பட்ட உயிரினங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. | ஒரு செயல் வாழிடத்தில் ஒரேயொரு சிற்றினம் அமைந்திருக்கும். |
| 3 | உயிரினம் புவி வாழிடத்தன்மையை வெளிப்படுத்துகிறது. | உயிரினங்கள் காலம் மற்றும் பருவநிலைக்கு ஏற்ப செயல் வாழிடங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும். |
7.
(i) சூழலோடு உயிரினங்கள் செயல்படுவதால் ஏற்படும் உயிரினத் தொகுதிகள் சூழ்நிலையியல் படிகள்.
8.
வரையறை:
சில தனிச் செல்களையோ (அ) செல் தொகுப்பையோ நீர்ம ஊடகத்தில் ஆய்வுக் கூட சோதனை முறையில் வளர்க்கும் முறை - செல் மிதவை வளர்ப்பு எனப்படுவது.
9.
(i) பூமியின் நிலப்பரப்பில் 14% கொண்டிருந்த வெப்ப மண்டல காடுகளின் பரப்பு தற்போது 6% கூட இல்லை.
(ii) புவிக் கோளின் நுரையீரல் என அழைக்கப்பட்ட பரந்து விரிந்த அமேசான் மழைக் காடுகள் பத்து லட்சத்திற்கும் அதிகமான உயிரினங்களின் அடைக்கலமாக திகழ்ந்தது.
(iii) இங்குள்ள மழைக் காடுகளின் அதிக மரங்கள் இருந்ததால் ஒளிச் சேர்க்கையின் போது அதிக அளவிலான ஆக்சிஜனை வெளிவிடுவதால் அமேசான் பூமிக்கோளின் நுரையீரலாகக் கருதப்பட்டது.
10.
11.
(i) சில சமயம், விலங்கினங்கள் இடம்பெயர்ந்து செல்ல இயலாத சூழலில், சூழல் அழுத்தத்திலிருந்து விடுபட செயலற்ற நிலைத் தன்மையை மேற்கொள்கின்றன.
(ii) சில கரடிகள், குளிர் காலங்களில் குளிர் உறக்கத்தை மேற்கொள்கின்றன.
(iii) சில நத்தைகள் மற்றும் மீன்கள் போன்றவை வெப்பம் மற்றும் வறட்சி போன்ற வெப்பம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபட கோடைகால உறக்கத்தை மேற்கொள்கின்றன.
12.
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை மண்டலத்தில் உள்ள தாவர இனங்கள் சுற்றுச் சூழல் காரணிகளின் தாக்கத்தினால், காடுகளின் (அ) தாவர உற்பத்தி பாதிப்படையாமலும் அல்லது குறையாமலும் இருப்பின் அது அழுத்தமற்ற நிலை எனப்படும்.
13.
14.
(i) ஒரு உயிரினத்தின் வாழிடம் என்பது அவ்வுயிரினத்தின் 'முகவரி' எனலாம்.
(ii) ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் வாழும் உயிரிகள் தங்களுக்குள் இசைந்து வாழ்வதோடு, ஊட்ட நிலையின் ஒரு பகுதியாக இருந்து உணவுச் சங்கிலி மற்றும் உணவு வலையை உருவாக்குகின்றன.
15.
(i) மாற்று வேளாண்மை முறை
(ii) உயிரியல் இடுபொருள்களைப் பயன்படுத்தி, இயற்கையாகத் தாவரங்கள் பயிரப்படும்.
(iii) இதனால் மனவளமும், சுற்றுச்சூழலும் பராமரிக்கப்படும்.
(iv) மாசு, இழப்பு குறைக்கப்படும்.
16.
(i) லாசோனியா இனெர்மிஸ், தண்டு இலைகளில் இருந்து ஹென்னா என்ற ஆரஞ்சுச் சாயம் பெறப்படும்.
(ii) இலைகளின் முக்கியப்பொருளான 'லாசோனே' தீங்கற்றது.
(iii) தோலில் எரிச்சல் கொடுக்காது.
(iv) தோல், முடி, நகங்களுக்குச் சாயமிடப் பயன்படும்.
(v) குதிரைவால், தலைமுடி சாயமிட உதவும்.
17.
18.
(i) ஆம், எலைசா (ELISA) தொழில் நுட்பத்தைக் கொண்டு மரபுக் குறைபாடான ஃபினைல்கீட்டோனூரியாவை கண்டறியலாம்.
(ii) எலைசா தொழில்நுட்பத்தில் நோயாளிகளின் உடலில் உள்ள சீரத்தில் ஃபினைல்கீட்டோனூரியாவின் எதிர்ப்பொருள் அளவைத் தீர்மானித்து குறிப்பிட்ட எதிர்ப்பொருள் தூண்டிகளை கண்டறிந்து நோயினை கண்டறிய முடிகிறது.
19.
(i) முற்காலத்தில் பன்றிகள் மற்றும் பசுக்களின் கணையங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பெறப்பட்டது.
(ii) விலங்கு இன்சுலினுக்கு மனித இன்சுலினுக்கும் சிறிய அளவில் வேறுபாடுகள் இருந்தால், சில நோயாளிகளில் இது ஒவ்வாமையை ஏற்படுத்தியது.
20.
(i) டி.என்.ஏ மறுசேர்க்கை தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டு மனிதனுள் செலுத்தப்பட்ட முதல் மருந்துப்பொருள் இன்சுலின் ஆகும்.
(ii) 1982 ம் ஆண்டு சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதற்காக இந்த இன்சுலினைப் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது.
(iii) 1986 ல் ஹியுமுலின் என்னும் வணிகப் பெயரோடு சந்தையில் மனித இன்சுலின் விற்பனை செய்யப்பட்டது.
21.
(i) இது இயல்புதிரிபு உற்பத்தி நீட்சி ஆகிய மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.
(ii) அதிக வெப்பநிலையை பயன்படுத்தி நமக்கு தேவைப்படும் இரட்டைச் சுருள் டி.என்.ஏ வின் இயல்பைத் திரித்து இரண்டு தனித்தனியான இழைகளாகப் பிரிக்கப்படுகிறது. இவை 95o C வெப்ப நிலையில் நடைபெறுகிறது.
(iii) முதன்மை இணைப்பு இழையின் நீட்சி அல்லது உருவாக்கத்தின் போது கலவையின் வெப்ப நிலை 75o C-க்கு உயர்த்தப்பட்டு போதுமான கால அளவிற்கு நிலை நிறுத்தப்படுகிறது.
(iv) இதனால் Tag டி.என்.ஏ பாலிமரேஸ் தனித்த அச்சு வார்ப்பு டி.என்.ஏ விலிருந்து நகலெடுக்கப்பட்டு முதன்மை இணைப்பு இழை நீட்சியடையச் செய்கிறது.
(v) அடைகாப்புக் காலத்தின் இறுதியில் இரு அச்சு வார்ப்பு இழைகளும் பகுதியளவு இரட்டைச் சுருள் இழைகளாக மாற்றப்படும்.
(vi) இவ்வாறு உருவாகும் இரட்டைச் சுருள்களிலுள்ள ஒவ்வொரு புது இழையும் கீழ் நோக்கிய வேறுபட்ட தொலைவுகளில் நீண்டு காணப்படும்.
22.
டார்வினியத்திற்கான எதிர் கருத்துக்கள்:
1. மாறுபாடுகள் தோன்றும் முறை குறித்து டார்வின் சரியாக விளக்கவில்லை.
2. தகுதியுடையன பிழைத்தவை மட்டுமே விளக்குகிறது. அத்தகுதியை எவ்வாறு பெறுகின்றன என்பதை விளக்கவில்லை.
3. அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாத சிறு மாறுபாடுகளை மட்டும் டார்வின் கவனத்தில் கொண்டார்.
4. உடல் செல் மற்றும் இனப்பெருக்க செல்களில் ஏற்படும் மாற்றங்களை அவர் வேறுபடுத்தவில்லை.
5. எச்ச உறுப்புகள் அளவுக்கதிகமாக சிறப்பு பெற்றிருத்தலைக் குறித்து டார்வின் விளக்கவில்லை.
23.
| விரி பரிணாமம் | குவி பரிணாமம் | ||
| 1 | அமைப்பொத்த உறுப்புகள் விரி பரிணாமத்தை ஏற்படுத்தும் | செயலொத்த உறுப்புகள் குவி பரிணாமத்தை உருவாக்கும் | |
| 2 | உருவாக்கத்தை ஒரே மாதிரியாக அமைந்து வெவ்வேறு செயல்களை செய்யக் கூடிய உறுப்புகள் அமைப்பொத்த உறுப்புகள் ஆகும். | அமைப்பு அடிப்படையில் வேறுபட்டு ஒரே விதமான செயலைச் செய்யக் கூடிய உறுப்புகள் செயலொத்த உறுப்புகள் ஆகும். | |
| விலங்குகளில் எடுத்துக் காட்டுகள் | விலங்குகளில் எடுத்துக் காட்டுகள் | ||
| வெவ்வேறு முதுகெலும்புகளின் முன்னங்கால்கள் அமைப்பில் ஒற்றுமை காணப்படுகின்றன. | பாலூட்டி மற்றும் ஆக்டோபஸ் ஆகியவற்றின் கண்கள். பெங்குவின் மற்றும் டால்பின்களின் அகலத் துடுப்புகள். |
||
| தாவரங்களில் எடுத்துக் காட்டுகள் | தாவரங்களில் எடுத்துக் காட்டுகள் | ||
| காகிதப்பூக்கள் உள்ள முட்கள் மற்றும் பட்டாணியில் காணப்படும் பற்றுக் கம்பிகள் முள்பாதுகாப்பு பற்றுக்கம்பிகள் | சீனக் கிழங்குகளில் வேர் மாற்றுரு. உருளைக் கிழங்கின் தண்டின் மாற்றுரு. இரண்டு தாவரங்களிலும் இவை உணவு சேமிப்பு என்ற பொதுவான செயலை செய்கின்றன. |
||
24.
1. ஒரு லிட்டர் நீரிலுள்ள அனைத்து கரிம பொருட்களையும் ஆக்சிஜனேற்றம் செய்வதற்கு பாக்டீரியாவால் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் அளவே "உயிரிய ஆக்சிஜன் தேவை" எனப்படும்.
2. கழிவு நீரில் உயிரிய ஆக்சிஜன் தேவை அதிகரிக்க அதிகரிக்க கழிவு நீரின் மாசுபடுத்தும் தன்மையும் அதிகரிக்கிறது.
25.
1. பாலில் வளரும் லாக்டிக் அமில பாக்டீரியாக்கள் பாலில் உள்ள பால் புரதத்தை செரித்து கேசின் எனும் தயிராக மாற்றுகிறது.
2. தூய பாலில் உறை (அ) மூல நுண்ணுயிரிகள் சேர்க்கப்பட்டு சிறிதளவு தயிரில் மில்லியன் கணக்கில் லாக்டோபேசில்லஸ் இன பாக்டீரியாக்கள் உள்ளன.
3. அனுகூலமான வெப்பநிலையில் (≤40o C) இவை எண்ணிக்கையில் பெருகி பாலை தயிராக மாற்றுகிறது.
4. பாலை விட தயிரில் அதிக சத்தான கரிம அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
26.
27.
1. மேக்ரோஃபேஜ்கள் செல் விழுங்குதல் சார்ந்த இயல்பு நோய்த்தடைக்காப்பில் காணப்படுகிறது.
2. இவை நுண்ணுயிரிகளை முழுமையாக விழுங்கி அவற்றை செரிக்கிறது.
3. இவை பெரியதாகவும் ஒழுங்கற்ற முறையில் காணப்படும்.
4. மோனோசைட்டுகள் தான் மேக்ரோஃபேஜ்களாக காணப்படுகிறது.
5. இந்த மேக்ரோஃபேஜ்களில் - பாக்டீரியாலைட்டிக் நொதிகள் மற்றும் தனிச்சையான ரேடிக்கல்ஸ் காணப்படுகிறது. இவை நுண்கிருமிகளை அழிக்கும் திறன் உடையது.
28.
A - ஊக்குவிப்பான்
B - குறியிட்டு இழை
29.
| நோய்கள் | நோய்க்காரணி | நோய்த்தொற்று இடம் |
| புட்டாளம்மை | மம்பஸ் வைரஸ் (ஆர்.என்.ஏ வைரஸ்) பாராமிக்ஸோ வைரஸ் (Paramyxo virus) | உமிழ்நீர்ச் சுரப்பி |
| சின்னம்மை | வேரிசெல்லா ஸோஸ்டர் வைரஸ் (vericella - zoster virus) (டி.என்.ஏ வைரஸ்) | சுவாசப் பாதை தோல் மற்றும் நரம்பு மண்டலம் |
| டெங்கு காய்ச்சல் | டெங்கு வைரஸ் (அ) ஃபிளேவி வைரஸ் DENV அல்லது 1-4 வைரஸ் | தோல் மற்றும் இரத்தம் |
30.
(i) கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்தும் முறை (IUI) பயன்படுத்தப்படும்.
(ii) கணவர், உடல்நலம் மிக்க விந்து கொடையாளிடம் இருந்து விந்துத்திரவம் சேகரிக்கப்படுகிறது.
(iii) அண்டகத்தைத் தூண்டி, அதிக அண்ட செல்கள் உற்பத்தி செய்யப்படும்.
(iv) சேகரிக்கப்பட்ட விந்து செல்கள், நுண்குழல் மூலம் கல்விக் கலவிக்கால்வாய் வழியாகக் கருப்பையினுள் செலுத்தப்படும்.
(v) விந்து செல்கள் அண்டநாளம் நோக்கி நீந்திச் சென்று, இயல்பான கர்ப்பம் ஏற்படும்.
31.
A. தடுப்பு முறை
B. பாலூட்டும் கால மாதவிடாயின்மை
C. கருக்குழல் தடை
D. CuT
32.
1. கார்பன் கவரப்படுதல் மற்றும் சேமிப்பு என்பது வளிமண்டலத்தின் கார்பன் -டை-ஆக்ஸைடை உயிரித்தொழில்நுட்பம் மூலமாக கைப்பற்றி ஒரு கிலோமீட்டர் அல்லது அதற்குக் கீழான ஆழத்தில் நிலத்தடிப் பாறைகளுக்கிடையே உட்செலுத்திச் சேமிக்கும் முறையாகும்.
2. இது புவி வெப்பமாதலை மட்டுப்படுத்தும் ஓர் அணுகு முறையாகும்.
3. கார்பன், பெருங்கடல்களில் திரவச் சேமிப்பாகவும் உலோக ஆக்ஸைடைப் பயன்படுத்தி கார்பன்-டை-ஆக்ஸைடை குறைத்தல் மூலம் திடமான கார்பனேட்டாக மாற்றி உலர் (or) திடச் சேமிப்பாகவும் சேமித்து வைக்கப்படுகிறது.
33.
1. சில வகையான வேதிப் பொருட்கள் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் போது ஓசோன் படலம் தொடர்ந்து பாதிப்பிற்குள்ளாகிறது.
2. குறிப்பாக குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியேறும் குளோரோஃபுளோரோ கார்பன், ஏரோசால், தொழிற்சாலையில் அழுக்கு நீக்கும் வேதிப்பொருட்கள் போன்றவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
3. ஓசோனின் அடர்வு குறைந்த பகுதிகள் அபாயகரமான ஓசோன் துளை என அழைக்கப்படுகின்றன.
34.
1. மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன் எனப்படுவது சூழல் மண்டலத்திலுள்ள தற்சார்பு ஊட்ட உயிரிகளால் ஒளிச்சேர்க்கையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவு ஆற்றல் அல்லது கரிமப்பொருட்கள் அல்லது உயிர்த்திரள் மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன் எனப்படுகிறது.
2. ஆனால் நிகர முதல்நிலை உற்பத்தித்திறன் எனப்படுவது தாவரத்தின் சுவாசச் செயலால் ஏற்படும் இழப்பிற்குப் பிறகு எஞ்சியுள்ள ஆற்றல் விகிதமே நிகர முதல்நிலை உற்பத்தித்திறன் எனப்படுகிறது. (NPP)
NPP=GPP -சுவாச இழப்பு
3. எனவே நிகர முதல்நிலை உற்பத்தித்திறனை விட மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன் மிகவும் திறன் வாய்ந்தது ஆகும்.
35.
ஆண் குழந்தைகளில் இனச்செல் உருவாக்கம் :
பூப்பெய்தும் வயதில், ஹைபோதலாமஸ் சுரக்கும் கொனடோடிராபின் வெளிவிடு ஹார்மோனின் (GnRH) அளவு அதிகரிக்கும்போது விந்து செல் உருவாக்க நிகழ்ச்சி தொடங்குகிறது.
பெண் குழந்தைகளில் இனச்செல் உருவாக்கம் :
சிசுவின் அண்டகங்களில் இனச்செல் எபிதீலியம் உள்ளது. இது கருவளர்ச்சியின்போது, மறைமுகப் பிரிவினால் ஊகோனியா எனும் அண்ட தாய் செல்களை உற்பத்தி செய்யும். அண்ட தாய் செல்கள், குன்றல் பிரிவு 1 ன் முதற்பிரிவு நிலையில் முதல் நிலை அண்ட செல்களைத் தோற்றுவிக்கின்றன. இந்நிலையில் இச்செல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். பூப்பெய்தலின் போது,முதல்நிலை அண்ட செல்கள் குன்றல் பகுப்பு 1 ஐ நிறைவு செய்து இரண்டாம் நிலை அண்ட செல்லை உருவாக்கும். கருவுறுதலின் போது இரண்டாம் நிலை அண்ட செல் குன்றல் பகுப்பு-II க்கு உட்பட்டு, அண்ட செல்லை உருவாக்கும்.
36.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு X குரோமோசோம் பொதுவானது இதில் பல மரபணுக்கள் காணப்படுகின்றன. இந்த மரபணுக்கள் பால் சார்ந்த மரபணுக்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றால் கட்டுப்படுத்தப்படும் பண்புகள் பால் சார்ந்த பண்புகள் எனவும் இவ்வகை மரபுக்கடத்தல் பால் சார்ந்த மரபுக்கடத்தல் எனவும் அழைக்கப்படுகிறது.
பால் சார்ந்த பண்புகள் பெண்களை விட ஆண்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. ஏனெனில் ஆண்களில் வேறுபட்ட குரோமோசோம் நிலை (XY) காணப்படுகின்றது.
ஒரு ஆண் தன் தாயிடமிருந்து X சார்ந்த ஒடுங்கு அல்லீலை பெறும்போது அவரது Y குரோமோசோமில் அதற்கு இணையான அல்லீல் இல்லாததால் அப்பண்பினை வெளிப்படுத்துகிறார்.
X இணைந்த ஒடுங்கு மரபணு ஒரு குறைபாட்டினை தோற்றுவிக்குமானால் அது பெண்களைவிட ஆண்களில் அதிகமாகக் காணப்படும். ஏனெனில் அக்குறைபாடு ஒரு ஒற்றை அல்லீலால் ஏற்படுத்தப்படுகிறது. Y குரோமோசோமில் இணையான அல்லீல் காணப்படுவதில்லை. எனவே பால் சார்ந்த ஒடுங்கு பண்புகள் ஆண்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.
37.
இது 3 புள்ளி சோதனைக் கலப்பு - இதில் மூன்று புள்ளி கலப்பு 8 வேறுபட்ட 27-8 கேமிட்டுகளின் வகைகளை உருவாக்குகிறது. 3 அல்லீல்களின் அமைவிடம் அவற்றிற்கிடையேயான தூரம் -வரிசை ஆகியவற்றை மறு கூட்டிணைவு நிகழ்விரைவு மூலம் கணக்கிடலாம்.

For A&B -அடைவிடம்
RF =\(\frac {114+5+116+4\times100}{1200}\)
=19.9
For A & B -அடைவிடம்
RF =\(\frac {114+128+116+4\times100}{1200}\)
= 40.16
For B & C -அடைவிடம்
RF =\(\frac {5+128+124+4\times100}{1200}\)
= 21.75
அனைத்து அமைவிடங்களும் பிணைப்புற்றவை அனைத்து மறுகூட்டிணைவு மதிப்புகளும் 50%க்கும் குறைவானவை.
AC=அமைவிடம் அதிக RF மதிப்பு
இவையிரண்டும் இரட்டை குறுக்கேற்றத்திலிருந்து பெறப்பட்ட இரட்டை மறு கூட்டிணைவு வகைகளாகும் எனவே ஒவ்வொன்றையும் ஒருமுறை அல்ல இருமுறை கணக்கிட வேண்டும் ஏனெனில் இவை இரட்டை மறு கூட்டிணைவு வழித்தோற்றல்களைக் குறிக்கிறது இதனைச் சரிசெய்ய
114+125+116+128+5+14+4=500
மொத்த எண்ணிக்கை 1200 இல் இது 500=41.65% (துல்லியமாக) இது இருகூறு மதிப்புகளின் கூடுதலுக்கு ஒத்திருக்கிறது, இதை மாற்றி எழுதும்போது கொண்டிருப்பதால் அதிக தொலைவில் அமைந்து உள்ளதாக கருத இயலும்.
ஆனால் B இரண்டுக்கும் இடையில் காணப்பட -மரபணுக்களின் வரிசை abc

19.9+21.75 கூட்டுத்தொகை =41.95மு இது 40.16ஐ விட அதிகம். இரண்டு குறைந்த எண்ணிக்கை கொண்ட வழித்தோன்றல்கள் (மொத்த 8ல்) கண்டறிய வேண்டும்.

38.
i) முழு பிணைப்பு
ii)

39.
| ஒத்தயினச்செல் பால் நிர்ணயம் | வேறுபட்ட இனச்செல் பால் நிர்ணயம் | ||
|---|---|---|---|
| 1. | ஒத்த இனச்செல்களை கொண்ட பெண் உயிரிகள் ஒரே வகையான முட்டையை உற்பத்தி செய்கின்றன. | 1. | வேறுபட்ட இனச்செல்களை கொண்ட ஆண் உயிரிகள் இரண்டு வகையான விந்து செல்களை உற்பத்தி செய்கின்றன. |
| 2. | (உ.ம்) மனிதர்களில் பெண் ஒத்த இனச்செல்களை உருவாக்குபவை X குரோமோசோம் மட்டும் | 2. | மனிதர்களில் ஆண் இரண்டு விதமான இனச் செல்களை உற்பத்தி செய்கின்றன.X மற்றும் Y குரோமோசோம் கொண்ட இனச்செல்கள் |
40.
(i) முட்டையானது கருவுறாமல் ஒரு உயிராக வளர்வது கன்னி இனப்பெருக்கம் எனப்படும்.
(ii) (எ.கா) ரோட்டிபர், தேனீக்கள், மற்றும் வான்கோழி.
41.
(i) அமீபா பிளவுறுத்தல் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
(ii) பிளவுறுதல் என்பது செல் பிரிதல்.
42.
இவை DNA மூலக்கூறுக்குள், குறிப்பிட்ட அடையாளம் காணக்கூடிய பகுதிக்கு அருகில் (அ) இடத்தில் DNA ஐத் துண்டிக்கின்றன. இதற்கு தடைகட்டு களம் (Restriction sites)
அ) எக்சோநியுக்ளியேஸ்
Options நொதி
இவை DNA மூலக்கூறின் ஒரு முனையில் இருந்து நியுக்ளியோடைடுகளை நீக்குகிறது.
(எ.கா) Bal 31, எக்சோ நியுக்ளியேஸ்
ஆ) எண்டோநியுக்ளியேஸ் நொதி
இவை DNA மூலக்கூறுகளின் உட்புறம் உள்ள பாஸ்ஃபோ-டை-எஸ்டர் பிணைப்பை நீக்குகிறது.
(எ.கா) Hind II, EcoRI, Pvul, Bam H1, Taq 1 போன்றவை
43.
இன்று உலகெங்கும் ஒரு பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெறுகிறது.
தற்கால (அ)நவீன உயிரி தொழில்நுட்பவியல் மரபணு மாற்றம் மட்டுமின்றி, செல்லிணைவுத் தொழில்நுட்பத்தையும் உள்ளடக்கியது.
மருந்து நிறுவனங்கள், மதுபானத் தொழிலகங்கள், வேளாண்தொழிற்சாலைகள் மற்றும் பிற சார்ந்த தொழில்கள். அவற்றின் முன்னேற்றத்திற்காக உயிரி தொழில்நுட்பக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
| தொழில் நுட்பம் | பயன்கள் | |
| அ) | நொதித்தல் | அமிலங்கள், நொதிகள், ஆல்கஹால்கள் உயிரி எதிர்ப்பொருட்கள், நுண்வேதியப் பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் நச்சுப் பொருட்களின் உற்பத்தி |
| ஆ) | பெருமளவு உயர்த்திரள் உற்பத்தி | ஒற்றை செல் புரதம், ஆல்கஹால் மற்றும் உயிரி எதிர்ப்பொருள் |
| இ) | நொதிகள் | பதப்படுத்தும், தொழிற்சாலைகளில் உயிரி உணர்வுகளாக செயல்படுவதால் |
| ஈ) | உயிரி எரிபொருள் உற்பத்தி | ஹைட்ரஜன் எரிபொருள், ஆல்கஹால், மீத்தேன் போன்றவை |
| உ) | நுண்ணுயிரி உப்புக்கட்டல்கள் | உயிரி உரங்கள் மற்றும் நைட்ரஜன் நிலைநிறுத்திகள் |
| ஊ) | தாவர மற்றும் விலங்கு செல் வளர்ப்பு | இரண்டாம் நிலை வளர்ச்சிப் பொருட்கள் மற்றும் மோனோகுளோனல் ஆண்டிபாடி உற்பத்தி |
| எ) | மறுகூட்டிணைவு DNA தொழில் நுட்பம் மூலம் பெறுவது | நொதிகள், தடுப்பூசிகள், வளர்ச்சி ஹார்மோன்கள், உயிரி எதிர்பொருட்கள் மற்றும் இண்டர்ஃபெரான்களின் உற்பத்தி |
| ஏ) | செயல்முறை பொறியியல் | நீர் மறுசுழற்சி மற்றும் கழிவுப் பொருட்களின் சுத்தகரிப்பில் பயன்படும் - உயிரி தொழில் நுட்ப கருவியின் பயன்பாடு. |
44.
பண்புகள் எவ்வாறு பெற்றோர்களிடம் சந்ததிகளுக்குக் கடத்தப்படுகின்றன என்பதை விளக்கும் ஒரு பிரிவு- மரபியல் எனப்படும். இதற்கு பாரம்பரியத்தின் அறிவியல் என்று பெயர்.
45.
(i) 1900 இல் டி - விரிஸ் கோரன்ஸ் & வான் செர்மாக் இவர்கள் மூவரும், மெண்டலின் ஆய்வுகளை மறு ஆய்வு செய்தனர்.
(ii) மெண்டலின் ஆய்வுகள் 1865 இல் கண்டறியப்பட்டாலும் அது உலகம் 35 ஆண்டுகள் ஆயிற்று.
46.
அ) போத்துகள் (Cutting)
பெற்றோர் தாவரத்தின் வேர், தண்டு, இலைகளை போத்துக்களாகப் பயன்படுத்தலாம். தகுந்த ஊடகத்தில் வேர்களை உருவாக்கி புதிய தாவரமாகிறது.
i) வேர் போதுகள் (மாலஸ்)
ii) தண்டு போதுகள் (ஹைபிஸ்கஸ்)
iii) இலை போதுகள் (பிகோனியா)
ஆ) ஒட்டுதல்
இரண்டு வெவ்வேறு தாவரங்களின் பாகங்கள் இணைக்கப்பட்டு ஒரே தாவரமாக வளர்கின்றன. தரையுடன் தொடர்புடைய தாவரம் வேர்கட்டை எனப்படும். ஒட்டுதலுக்கு பயன்படுத்தப்படுவது ஒட்டுத்தண்டு எனப்படும்.
i) மொட்டு ஒட்டுதல் (Bud Grafting)
வேர்க்கட்டையில் T கீறல் ஏற்படுத்தப்படும், மரப்பட்டை தூக்கப்படும், ஒட்டுத்தண்டு கீறலில் பட்டைக்கு கீழே வைக்கப்படும்.
ii) அணுகு ஒட்டுதல் (Approach Grafting)
வேர்க்கட்டை, ஒட்டுத்தண்டுமே இரண்டுமே வேர் கொண்டுள்ளன. இரண்டிலும் சிறிய சீவல் வெட்டப்பட்டு, வெட்டப்பட்ட பரப்புகள் நெருக்கமாக டேப்பினால் சுற்றப்படும். 4 வாரங்களுக்கு பின், ஒட்டுத்தண்டின் அடியும், வேர்க்கட்டையின் நுனியும் நீக்கப்படும்.
iii) நா ஒட்டுதல் (Tongue Grafting)
ஒட்டுத்தண்டு, வேர்க்கட்டையை சாய்வாக வெட்டி, டேப் பயன்படுத்தி இரண்டையும் ஒட்ட வேண்டும்.
iv) நுனி ஒட்டுதல் (Crown Grafting)
வேர்க்கட்டை பிளவில், ஆப்பு வடிவ ஒட்டுத்தண்டுகள் செருகப்பட்டு மெழுகு கொண்டு ஒட்டப்படும்.
v) ஆப்பு ஒட்டுதல் (Wedge Grafting)
வேர்க்கட்டை துளையில் ஒட்டுத்தண்டின் குச்சிகளை சொருகப்பட்டு, இரண்டின் கேம்பியமும் இணைக்கப்படும்.
இ) பதியம் போடுதல் (Layering)
பெற்றோர் தாவரத் தண்டில் வேர்கள் தோன்றத் தூண்டப்படும். வேர் தோன்றிய பகுதி வெட்டி, புதிய தாவரமாகிறது (எ.கா. ஜாஸ்மினம்)
i) மண்முட்டு பதியம் (Mound Layering)
அடிக்கிளையின் தண்டு மண்ணில் புதைக்கப்படும். புதைந்த தண்டிலிருந்த வேர்கள் தோன்றிய பின் பெற்றோர் தாவரத்திலிருந்து வெட்டப்படும்.
ii) காற்றுப் பதியம்(Air Layering)
தண்டின் கணு செதுக்கப்பட்டு, ஹார்மோன் சேர்க்கப்படும். வேர் உருவாகிறது, இப்பகுதி ஈரமண்ணால் மூடப்பட்டு பாலீதீன் உரையிடப்படும் 2-4 மாதத்தில் இதிலிருந்து வேர்கள் தோன்றும். பின்பு தரையில் வளர்க்கப்படும்.
47.
| ஒட்டுதல் | பதியமிடல் | |
| 1 | இரண்டு வெவ்வேறு தாவரங்களின் பாகங்கள் இணைக்கப்படும். | பெற்றோர் தாவரத்தின் தண்டு மட்டும் பயன்படும் |
| 2 | இந்த இரண்டு தாவரங்களில் தரையுடன் தொடர்புடையது வேர்கட்டை (stock) ஆகும். ஒட்டுதலுக்கு பயன்படுத்தப்படும் தாவரம் ஒட்டுத்தந்து (Scion) எனப்படும். (எ.கா) எலுமிச்சை, மா, ஆப்பிள் |
பெற்றோர் தாவரத்தண்டு வேர் தோன்ற தூண்டப்படும். வேர் தோன்றிய பகுதி நீக்கப்பட்டு புதிய தாவரமாகும். (எ.கா) ஜாஸ்மினம் |
48.
1. பெற்றோர் தாவரத்தண்டு தாவரத்தோடு ஒட்டியிருக்கும் போது அதிலிருந்து வேர்கள் தோன்ற தூண்டப்படும்.
2. வேர் தோன்றிய பகுதி வெட்டி நீக்கப்பட்டு புதிய தாவரமாகும்.
(எ.கா): ஜாஸ்மினம், இக்ஸோரா
49.
1. நான்மய மகரந்தத்தூள் அமைப்பை விளக்கினான்
2. தலைமுறை மாற்றத்தை தாவரங்களில் கண்டறிந்தார்.
3. பூக்கும் தாவரங்களின் கருவியிலைக் கண்டறிந்தார்.
50.
திடீர் மாற்றம் இயற்கைத் தேர்வு, மரபியல் நகர்வு, மரபணு ஓட்டம் ஆகிய நான்கு காரணிகள் ஹார்டி - வீன்பெர்க் சமநிலையை பாதிக்கின்றன.
அ) திடீர்மாற்றம்:
திடீர் மாற்றம் என்பது மரபியல் மாறுபாடு ஆகும். திடீர் மாற்றம் மரபியல் மாறுபாடுகள் தோன்றுவதற்கான மூலகாரணமாக இருந்தாலும் பெரும்பாலான உயிரினங்களில் திடீர் மாற்ற வீதம் குறைவாகவே இருக்கும். எனவே ஒரு அல்லீல் நிகழ்வெண்ணில் ஏற்படும் புதிய திடீர் மாற்றம் அடுத்தடுத்த தலைமுறைகளில் பெரிய அளவில் இருக்காது.
ஆ) இயற்கைத்தேர்வு:
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு அல்லீல் (அல்லது வேறுபாடுடைய அல்லீல்களின் சேர்க்கை ஒரு உயிரினத்தை வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் தகுதிப்படுத்தும் போது இயற்கைத் தேர்வு நடைபெறுகிறது.
அந்த அல்லீல் தகுதியைப் குறைக்கும்போது அதன் நிகழ்வெண் அடுத்தடுத்த தலைமுறைகளில் குறைகிறது.
ஒரு குறிப்பிட்ட மரபணுவின் பரிணாமப்பாதை என்பது பல்வேறு பரிணாம செயல்முறைகள் ஒரே நேரத்தில் செயல்படுவதன் விளைவாகும். எடுத்துக்காட்டாக ஒரு மரபணுவின் அல்லீல் நிகழ்வெண், மரபணு ஓட்டம் மற்றும் மரபியல் நகர்வு ஆகிய இரண்டு காரணிகளால் மாற்றப்படலாம். அதே நேரத்தில்
மற்றோரு மரபணு திடீர் மாற்றத்தினால் இயற்கைத்தேர்வு ஏற்கத்தக்க புதிய அல்லீலை உருவாக்கலாம்.
இ) மரபியல் நகர்வு:
வாய்ப்புகள் காரணமாக அடுத்தடுத்த தலைமுறைகளில் ஒரு இனக்கூட்டத்தின் அல்லீல் நிகழ்வெண்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் பரிணாம நிகழ்வே மரபியல் நகர்வு ஆகும்.
மரபியல் நகர்வு இனக்கூட்டத்தின் அனைத்து அளவுகளிலும் நடைபெறும் ஆனால் இதன் விளைவுகள் சிறிய இனக்கூட்டத்தில் வலிமை உடையதாக இருக்கும். இதன் விளைவாக சில அல்லீல்கள் நிலை நிறுத்தப்படலாம்.
இயற்கை இடர்பாடு காரணமாக இனக்கூட்டத்தின் அளவு குறைந்திருந்தாலும். (சீசா கழுத்து விளைவு) அல்லது மூல இனக்கூட்டத்திலிருந்து ஒரு சிறுபகுதி பிரிந்து சென்று புதிய கூட்டத்தை உருவாக்கினாலும் (நிறுவனர் விளைவு) மரபியல் நகர்வின் விளைவு அதிகமாக இருக்கும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards