12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Business Maths Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
ஒரு தனித்த சமவாய்ப்பு மாறி X இன் நிகழ்தகவு பரவல் சார்பு

இங்கு k ஒரு மாறிலி எனில், (a) k -ன் மதிப்பு யாது ? மற்றும் (b) P(X> 2) -ஐ காண்க
2.
ஒரு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை என்பது மாநில அளவிலான தேர்வின் மூலமாக தீர்மானிக்கப்படுகிறது. தேர்வின் மதிப்பெண்கள் இயல்நிலைப் பரவலை பின்பற்றி சராசரி 500 மற்றும் மாறுபாடு 100 பெற்றுள்ளது. ராகுல் என்ற மாணவர் இப்பல்கலைக்கழகத்தில் சேர விரும்புகிறார். மேலும் மொத்த தேர்வு எழுதுபவர்களில் குறைந்தபட்சம் 70 சதவீத மாணவர்களின் மதிப்பெண்களுக்கு மேலாக அவர் பெற்றாக வேண்டும் என்பதை அறிகிறார். ராகுல் தேர்வு எழுதி அதில் 585 மதிப்பெண்களைப் பெறுகிறார் எனில், அவர் பல்கலைக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்படுவாரா?
3.
S1, S2, S3, S4 என்ற நான்கு தொழிற்சாலைகளிலிருந்து D1, D2, D3 என்ற கிடங்களுக்கு அனுப்பப்படும் பொருள்களுக்கான செலவு, அளிப்பு மற்றும் தேவை விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆரம்பத் தீர்வினை வடமேற்கு மூலை முறையை பயன்படுத்தி காண்க. இந்த தீர்வுக்கான மொத்த செலவையும் காண்க
4.
எட்டு ஆண்டுகளுக்கான வர்த்தக சம்பந்தமான இலாபங்களுடன் தொடர்புடைய புள்ளிவிவரங்கள் கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
| ஆண்டுகள் | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 |
| இலாபம் (ரூ) | 15,420 | 15,470 | 15,520 | 21,020 | 26,500 | 31,950 | 35,600 | 34,900 |
மூன்று ஆண்டு காலத்தைக் கொண்ட நகரும் சராசரி முறையைப் பயன்படுத்தி போக்கு மதிப்புகளைக் கணக்கிடுக
5.
கீழே கொடுக்கப்பட்டுள்ள, ஒத்த பண்பற்ற 500 அளவு கொண்ட முழுமைத் தொகுதியிலிருந்து 68 கூறு அளவு கொண்ட சமவாய்ப்பு மாதிரியை தெரிவு செய்யவும் படுகைகள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சமவாய்ப்பு மாதிரியை தேர்ந்தெடுக்கவும்
வகை (1) குறைந்த வருமான வகுப்பினர் 39%
வகை (2) நடுத்தர வருமான வகுப்பினர் 38%
வகை (3) உயர் வருமான வகுப்பினர் 23%
6.
U0=1,U1=11, U2=21, U3=28 மற்றும் U4=29 எனில் Δ4U0 காண்க.
7.
கீழ்காணும் வகைக்கெழு சமன்பாடுகளை தீர்க்க:
(4D2+4D-3)y=e2x
8.
காலணிகளின் உற்பத்தியின் எண்ணிக்கை x-ஐ பொறுத்த இறுதிநிலை செலவு 6+10x-6x2 என்க. ஒரு ஜோடி காலணிகள் உற்பத்திக்கான செலவு ரூ.12 எனில், மொத்தச் செலவு மற்றும் சராசரி செலவு ஆகியவற்றைக் காண்க.
9.
மதிப்பிடுக: \(\int { \frac { { x }^{ 3 }dx }{ \sqrt { x^{ 8 }+1 } } } \)
10.
A=\(\left( \begin{matrix} 0 \\ 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 2 \\ 3 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 3 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.
11.
உற்பத்தி செய்முறையிலிருந்து வழக்கமான இடைவெளியில் 5 அளவுகொண்ட 10 மாதிரிகளின் அளவீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் மாதிரி சராசரி ( X ) மற்றும் வீச்சு (R) ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| மாதிரி | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| \(\bar { X } \) | 49 | 45 | 48 | 53 | 39 | 47 | 46 | 39 | 51 | 45 |
| R | 7 | 5 | 7 | 9 | 5 | 8 | 8 | 6 | 7 | 6 |
சராசரி கட்டுப்பாடு வரம்புகளைக் கண்டுபிடிக்க, மேலும் கட்டுப்பாட்டின் நிலை குறித்து கருத்து தருக. (கொடுக்கப்பட்ட தகவல் A2=0.58,D3=0 மற்றும் D4 = 2.115)
12.
கூறெடுத்தலின் வகைகளை விவரி.
13.
இயல்நிலை பரவலில் உள்ள ஒரு தொழிற்சாலை ஊழியர்களின் ஊதியங்களின் சராசரி μ மற்றும் மாறுபாட்டளவை 25 என்க. 50 பணியாளர்கள் கொண்ட ஒரு கூறில் உள்ளவர்களின் மொத்த ஊதியம் ரூ.2,550 என்க. கருதுகோள், μ = 52, என்பதையும் அதற்கு மாறான கருதுகோள் μ = 49 யையும் 1% மிகைகாண் நிலையில் சோதனை செய்க.
14.
வோகலின் தோராய முறையை பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை சாத்தியமானத் தீர்வை காண்க.
15.
தயாரிக்கப்படும் பொருள்களில் 5 சதவிகிதம் குறைபாடுள்ளவை. சமவாய்ப்பு முறையில் 20 பொருள்கள் தேர்ந்தெடுக்கும் பொழுது
(i) மூன்று மட்டும் குறைபாடுள்ளதாக
(ii) குறைந்தபட்சம் இரண்டு பொருள் குறைபாடுள்ளதாக
(iii) நான்கு மட்டும் குறைபாடுள்ளதாக இருப்பதற்கான நிகழ்தகவினை காண்க.
(iv) சராசரி மற்றும் மாறுபாட்டினைக் கண்டுபிடி.
16.
வோகலின் தோராய முறையை கொண்டு கீழ்க்கண்ட போக்குவரத்து கணக்கின் அடிப்படை ஆரம்பத் தீர்வை காண்க.
17.
ஒரு சமவாய்ப்பு மாறி X ஆனது பின்வரும் நிகழ்தகவு சார்பை பெற்றுள்ளது எனில்
| X ன் மதிப்புகள் | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
|---|---|---|---|---|---|---|---|---|
| p(x) | 0 | a | 2a | 2a | 3a | a2 | 2a2 | 7a2 + a |
(i) a வை கண்டுபிடிக்கவும், மேலும்
(ii) P(X< 3),
(iii) P(X> 2) மற்றும்
(iv) P(2 < X ≤ 5) - ஐ மதிப்பிடவும்.
18.
வெவ்வேறு வயதில் முடியும் முதிர்வு காலத்திற்கான செலுத்தப்படும் அரைவருட காப்பீட்டுத்தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 63 வயதில் முதிர்வு காலம் கொண்ட ஒரு பிரிமியத்தின் காப்பீட்டுத் தொகை காண்க.
| வயது | 45 | 50 | 55 | 60 | 65 |
| காப்பீட்டுத் தொகை | 114.84 | 96.16 | 83.32 | 74.48 | 68.48 |
19.
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு 1964 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளுக்கான உற்பத்திகளைக் காண்க.
| வருடம் | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 |
| உற்பத்தி | 200 | 220 | 260 | - | 350 | - | 430 |
20.
தீர்க்க: (x2+1)\(\frac { dy }{ dx } \)+2xy=4x2
21.
22.
\(\int _{ a }^{ b }{ dx } \) மற்றும் \(\int _{ a }^{ b } xdx\) எனில், a மற்றும் b-ன் மதிப்புகளைக் காண்க.
23.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\frac { x }{ 2x^{ 4 }-3x^{ 2 }-2 } \)
24.
ஒரு சந்தை ஆய்விற்காக A,B மற்றும் C ஆகிய பொருட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. குறியீட்டு எண்ணை காண்பதற்காக ஒவ்வொரு பொருளும் மூன்று வித தரங்களாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கு நிலையான எடைகள் ஒதுக்கப்படுகிறது. மூன்று பொருள்களின் நுகர்வு பற்றிய தகவல்கள் மற்றும் பொருள்களின் மொத்த எடைகள் ஆகியவை கீழேயுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
| பொருள்கள் | தரங்களின் நுகர்வுகள் | மொத்த எடைகள் | ||
| I | II | III | ||
| A | 1 | 2 | 3 | 11 |
| B | 2 | 4 | 5 | 21 |
| C | 3 | 5 | 6 | 27 |
25.
லாஸ்பியர் குறியீட்டு எண் = 110, பாசி குறியீட்டு எண் =108 எனில், ஃபிஷர் தனித்த குறியீட்டு எண் = _____.
110
108
100
109
26.
ஒரு காலம்சார் தொடரில் __________ உள்ளன.
ஐந்து கூறுகள்
நான்கு கூறுகள்
மூன்று கூறுகள்
இரண்டு கூறுகள்
27.
P(Z > z) = 0.8508 எனில் z-ன் (z-என்பது திட்ட இயல்நிலை பரவலை கொண்டுள்ளது) மதிப்பானது ______.
-0.48
0.48
-1.04
1.04
28.
Z என்பது திட்ட இயல்நிலை மாறி எனில் Z = -0.5 லிருந்து Z = -3.0 வரை அமையும் உருப்படிகளின் விகிதமானது_____.
0.4987
0.1915
0.3072
0.3098
29.
தீர்மான கோட்பாடு எதனோடு தொடர்புடையது
கிடைக்கக்கூடிய தகவல்களின் அளவு
நம்பகத்தன்மை கொண்ட தீர்மானத்தை அளவீடு செய்வது
வரிசைத் தொடர் பிரச்சினைகளுக்கு உகந்த தீர்மானங்களை தேர்ந்தெடுப்பது
மேற்கூறிய அனைத்தும்
30.
வடமேற்கு மூலை என்பதனைக் குறிப்பது _______.
மேல் இடது மூலை
மேல் வலது மூலை
கீழ் வலது மூலை
கீழ் இடது மூலை
31.
________ என்ற பண்பானது ஒரு மதிப்பீட்டு அளவையானது மற்றொரு மதிப்பீட்டு அளவையை ஒப்பிடும் போது திறன் வாய்ந்தது என வரையறுக்கப்படுகிறது.
திறன்தன்மை
நிறைவுத்தன்மை
பிழையற்றதன்மை
நிலைத்தன்மை
32.
ஒரு முழுமைத் தொகுதியின் _________ கூறு என அழைக்கப்படுகிறது.
முடிவுறா கணம்
முடிவுறு உட்கணம்
முடிவுறு கணம்
முழுமை கணம்
33.
ஒரு தனித்த நிகழ்தகவுப் பரவல் இதன் மூலமும் குறிப்பிடப்படலாம்
அட்டவணை
வரைபடம்
கணிதவியல் சமன்பாடு
இவை அனைத்தும்
34.
நாள் ஒன்றுக்கு பொருள்களின் தேவையானது, மூன்று நாள்களுக்கு முறையே 21, 19, 22 அலகுகள் ஆகும். அவற்றின் நிகழ்தகவுகள் முறையே 0.29, 0.40, 0.35 ஆகும். அலகு ஒன்றுக்கு இலாபம் 0.50 பைசாக்கள் எனில், மூன்று நாள்களுக்கான எதிர்பார்க்கப்பட்ட இலாபம்_____.
21, 19, 22
21.5, 19.5, 22.5
0.29, 0.40, 0.35
3.045, 3.8, 3.85
35.
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து Δ3y0 -ன் மதிப்பு
| x | 5 | 6 | 9 | 11 |
| y | 12 | 13 | 15 | 18 |
1
0
2
-1
36.
(x0,y0), (x1,y1) என்ற புள்ளிகள் கொடுக்கப்பட்டால் இலக்ராஞ்சியின் சூத்திரம் _______.
y(x)=\(\frac { x-{ x }_{ 1 } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 0 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 1 }\)
y(x)=\(\frac { x_{ 1 }-{ x } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 0 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 1 }\)
y(x)=\(\frac { x-{ x }_{ 1 } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 1 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 0 }\)
y(x)=\(\frac { x_{ 1 }-{ x } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 1 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 0 }\)
37.
\(\frac { dy }{ dx } =f\left( \frac { y }{ x } \right) \) என்ற வடிவில் உள்ள சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாடு தீர்க்கப்பட பயன்படுத்தப்படும் பிரதியிடல் ___.
y=v x
v=y x
x=v y
x=v
38.
y=aex+be−x என்ற சமன்பாட்டில் a-யையும் b யையும் நீக்கக் கிடைக்கும் வகைக்கெழுச் சமன்பாடு ____.
\(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } -y\)=0
\(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } -\frac { dy }{ dx } \)=0
\(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \)=0
\(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \)-x =0
39.
40.
ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய்ச் சார்பு MR =\(e^{ \frac { -x }{ 10 } }\) எனில், அதன் வருவாய் ____.
-10\(e^{ \frac { -x }{ 10 } }\)
1-\(e^{ \frac { -x }{ 10 } }\)
10\(\left( 1-e^{ \frac { -x }{ 10 } } \right) \)
\(e^{ \frac { -x }{ 10 } }\)+10
41.
\(\int { \frac { 2x+3 }{ \sqrt { { x }^{ 2 }+3x+2 } } } \)dx-ன் மதிப்புச் சார்பு
\(\sqrt { { x }^{ 2 }+3x+2 } +c\)
\(2\sqrt { { x }^{ 2 }+3x+2 } +c\)
\(log({ x }^{ 2 }+3x+2)+c\)
\(\quad \frac { 2 }{ 3 } { ({ x }^{ 2 }+3x+2) }^{ \frac { 3 }{ 2 } }+c\)
42.
\(\int { \left[ \frac { 9 }{ x-3 } -\frac { 1 }{ x+1 } \right] }\)dx-ன் மதிப்புச் சார்பு _______.
log x-3-log|x+1|+c
log|x-3|+log|x+1|+c
9log|x-3|-log|x+1|+c
9log|x-3|+log|x+1|+c
43.
ρ(A)=ρ(A,B) எனில் தொகுப்பானது______.
ஒருங்கமைவு உடையது மற்றும் எண்ணிக்கையற்ற தீர்வுகள் பெற்றுள்ளது
ஒருங்கமைவு உடையது மற்றும் ஒரே ஒரு தீர்வு பெற்றுள்ளது
ஒருங்கமைவு உடையது
ஒருங்கமைவு அற்றது
44.
வரிசை n உடைய அலகு அணியின் தரம்______.
n−1
n
n+1
n2
45.
குறியீட்டு எண் என்பதை வரையறுக்க.
46.
ஆறு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள், ஒரு சிறிய நிறுவனத்தில் ஒரு நிர்வாக நிலைக்கு விண்ணப்பிக்கின்றனர். இரண்டு விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேர்காணல் குழுவில் உள்ள பெண்களின் எண்ணிக்கை X எனக் குறிக்கப்பட்டு. X இன் நிகழ்தகவு நிறைச் சார்பு பின்வருமாறு கண்டறியப்பட்டுள்ளது.
| X = x | 0 | 1 | 2 |
| P(x) | \(\cfrac { 2 }{ 11 } \) | \(\cfrac { 5 }{ 11 } \) | \(\cfrac { 4 }{ 11 } \) |
நேர்காணல் குழுவில் எத்தனை பெண்களை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
47.
வடமேற்கு மூலை முறையை பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை சாத்தியமானத் தீர்வை காண்க.
48.
எளிய சமவாய்ப்பு கூறெடுப்பின் நன்மைகள் எவையேனும் இரண்டினை எழுதுக.
49.
50.
பின்வரும் அணிகளின் தரம் காண்க.
\(\left( \begin{matrix} 1 & -1 \\ 3 & -6 \end{matrix} \right) \)
51.
f(-1)=202, f(0)=175, f(1)=82 மற்றும் f(2)=55 எனில் f(0.5) காண்க.
52.
கீழ்க்காணும் வகைக்கெழு சமன்பாடுகளை தீர்க்க:
\(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } -6\frac { dy }{ dx } +8y\)=0
53.
54.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\frac { 1 }{ 2{ x }^{ 2 }-9 } \)
1.
(a) \(\sum p_i =1 \)
\(2 \mathrm{k}+3 \mathrm{k}+4 \mathrm{k} =1 \)
\(9 \mathrm{k} =1 \Rightarrow \mathrm{k}=\frac{1}{9}\)
(b) \(P(X>2) =P(X=3)+P(X=5) =3 k+4 k=7 k=\frac{7}{9}\)
2.
பெறும் மதிப்பெண்களை சமவாய்ப்பு மாறி X என்க.
\(\mu=500, \sigma=100\)
\(Z=\frac{X-\mu}{\sigma}=\frac{585-500}{100}=0.85\)
\(\mathrm{P}(\mathrm{X}<585) =\mathrm{P}(\mathrm{Z}<0.85)\)
=0.5+0.3023 =0.8023>0.70
அவர் பல்கலைக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார்.
3.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
மொத்த தேவைகள் = மொத்த இருப்புகள் = 34.
எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
போக்குவரத்து விவரம்
S1⟶ D1, S2⟶ D1, S2⟶ D2, S3⟶ D2, S3⟶ D3, S4⟶ D3
மொத்த போக்குவரத்து செலவு
= (5 x 2) + (2 x 3) + (6 x 3) + (3 x 4) + (4 x 7) + (14 x 2)
= 10+ 6+ 18+ 12 + 28 + 28 = ரூ.102
4.
மூன்று ஆண்டு காலத்தைக் கொண்ட நகரும் சராசரி
| ஆண்டு | இலாபம் | மூன்று ஆண்டு நகரும் கூடுதல் |
மூன்று ஆண்டு நகரும் சராசரி |
| 1986 | 15420 | - | - |
| 1987 | 15470 | 46410 | 15470 |
| 1988 | 15520 | 52010 | 17336.666 |
| 1989 | 21020 | 63040 | 21013.333 |
| 1990 | 26500 | 79470 | 26490 |
| 1991 | 31950 | 94050 | 31350 |
| 1992 | 35600 | 102450 | 34150 |
| 1993 | 34900 | - | - |
5.
| படுகைகள் | ஒத்த தொகுதிகள் | முழுமைத் தொகுதியில் சதவிகிதம் |
ஒவ்வொரு படுகையில் உள்ள மக்கள் எண்ணிக்கை |
சமவாய்ப்பு மாதிரிகள் |
| வகை 1 | குறைந்த வருமான வகுப்பினர் | 39 | \(\frac{39}{100}\)x500=195 | 195x\(\frac{68}{500}\)=26.5~26 |
| வகை 2 | நடுத்தர வருமான வகுப்பினர் | 38 | \(\frac{38}{100}\)x500=190 | 190x\(\frac{68}{500}=26.5\)~26 190x\(\frac{68}{500}\)=26.5~26 |
| வகை 3 | உயர் வருமான வகுப்பினர் | 23 | \(\frac{23}{100}\)x500=115 | 115x\(\frac{68}{500}\)=15.6~16 |
| மொத்தம் | 100 | 500 | 68 |
6.
Δ4U0=(E-1)4U0
=(E4-4E3+6E2-4E+1)U0
=E4U0-4E3U0+6E2U0-4EU0+U0
=U4-4U3+6U2-4U1+U0
=29-4(28)+6(21)-4(11)+1
=156-156=0

7.
(4D2+4D-3)y=e2x
துணைச் சமன்பாடு
\(4 m^2+4 m-3 =0 \)
\(4 m^2+6 m-2 m-3 =0 \)
\(2 m(2 m+3)-1(2 m+3) =0 \)
\((2 m-1)(2 m+3) =0 \)
\(m=1 / 2,-3 / 2 \)
நிரப்புச் சார்பு \(: A e^{m_1 x}+B e^{m_2 x} \)
\(=A e^{(1/ 2) x}+B e^{-3 x / 2}\)
சிறப்புத் தொகை \(=\frac{e^{2 x}}{4 D^2+4 D-3}\)
D - க்கு பதிலாக 2 - ஐ பதிலிட
\(\mathrm{P} . \mathrm{I}=\frac{e^{2 x}}{16+8-3}=\frac{e^{2 x}}{21} \)
தீர்வு : y=C.F+ P.I
y=\(Ae^{ \frac { 1 }{ 2 } x }+Be^{ \frac { 3 }{ 2 } x }+\frac { { e }^{ 2x } }{ 4 } \)
8.
கொடுக்கப்பட்ட இறுதிநிலை செலவு சார்பு: MC =6+10x-6x2
C=\(\int { MC } dx+k\)
=\(\int { (6+10x-6x^{ 2 }) } dx+k\)
=6x+5x2-2x3+k .....(1)
x=2 எனும் போது C=12
∴ 12=12+20-16+k
k=-4
C=6x+5x2-2x3-4
சராசரி செலவு: \(\frac { C }{ x } =\frac { 6x+5x^{ 2 }-2x^{ 3 }-4 }{ x } \)
=6+5x-2x2-\(\frac { 4 }{ x } \).
9.
\(\int { \frac { { x }^{ 3 }dx }{ \sqrt { x^{ 8 }+1 } } } =\frac { 1 }{ 4 } \int { \frac { 4x^{ 3 }dx }{ \sqrt { (x^{ 4 })^{ 2 }+1^{ 2 } } } } \)
=\(\frac { 1 }{ 4 } \log|{ x }^{ 4 }+\sqrt { ({ x }^{ 4 })^{ 2 }+1^{ 2 } } |+c\)
=\(\frac { 1 }{ 4 } \log|{ x }^{ 4 }+\sqrt { { x }^{ 8 }+1 } |+c\).
10.
A-ன் வரிசை 3 x 4 ∴ ρ(A) ≤3.
அணி A -ஐ, ஏறுபடி வடிவத்திற்கு மாற்றியமைக்க
| அணி A | அடிப்படை உருமாற்றங்கள் |
| A=\(\left( \begin{matrix} 0 \\ 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 2 \\ 3 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 3 \end{matrix} \right) \) ~\(\left( \begin{matrix} 1 \\ 0 \\ 3 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 3 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ 3 \end{matrix} \right) \) |
R1 ↔️ R2 |
| ~\(\left( \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ -5 \end{matrix}\begin{matrix} 3 \\ 2 \\ -8 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ -3 \end{matrix} \right) \) | R3 ⟶ R3-3R1 |
| ~\(\left( \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 3 \\ 2 \\ 2 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ 2 \end{matrix} \right) \) | R3 ⟶ R3 + 5R2 |
ஏறுபடிவ அணியில் உள்ள பூச்சியமற்ற நிரைகளின் எண்ணிக்கை 3 ஆகும். ∴ ρ(A) =3.
11.
\( \overline{\bar{X}}=\frac{\Sigma \bar{X}}{n}=\frac{462}{10}=46.2 \)
\( \bar{R}=\frac{\Sigma R}{n}=\frac{68}{10}=6.8\)
\(\bar{X}\) வரைபடத்தின் கட்டுப்பாட்டு வரம்புகள்
\(\mathrm{UCL} =\overline{\bar{X}}+A_2 \bar{R} \)
=46.2+(0.58)(6.8)
=46.2+3.944=50.14
\(\mathrm{CL} =\bar{X}=46.2\)
\( L C L=\overline{\bar{X}}-A_2 \bar{R}\)
= 46.2 -3.944 = 42.26
இரண்டு புள்ளிகள் (53 மற்றும் 51) ஆனது கட்டுப்பாட்டு வரம்பிலிருந்து வெளியேறுவதால் செயல்முறையானது கட்டுப்பாட்டில் இல்லை எனலாம்.
12.
முழுமை தொகுதியிலிருந்து கூறுகளை தேர்ந்தெடுக்கும் உத்தி அல்லது முறையானது, கூறு (மாதிரி) எடுத்தல் கருத்தியலில் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இது பொதுவாக விவரங்களின் தன்மை மற்றும் விசாரணையின் வகை ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.
கூறுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் பரவலாகக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது
1. சமவாய்ப்பு அற்ற கூறெடுப்பு அல்லது நிகழ்தகவு சாரா கூறெடுப்பு
2. சமவாய்ப்பு கூறெடுப்பு அல்லது நிகழ்தகவு சார்ந்த கூறெடுப்பு.
சமவாய்ப்பு கூறெடுப்பு என்பது முழுமைத் தொகுதியிலிருந்து கூறுகளை சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுப்பதைக் குறிக்கிறது. சமவாய்ப்பு மாறி என்பது முழுமை தொகுதியில் உள்ள ஒவ்வோர் உறுப்பும், கூறு அல்லது மாதிரியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு சமமாக உள்ளது என்பதாகும்.
13.
கூறு அளவு n = 50 ஊழியர்கள்
மொத்த ஊதியம் Σx=2250
கூறு சராசரி
முழுமைத் தொகுதி சராசரி μ=52
முழுமைத் தொகுதி மாறுபாட்டளவை σ2=25
முழுமைத் தொகுதி திட்ட விலக்கம் SD =σ=25
இன்மை கருதுகோள் H0:μ=52
மாற்று கருதுகோள் H1:μ≠52 (இரு முனை)
மிகைகாண் நிலை α =0.01
கூறுபண்பளவை சோதனை \(Z=\frac { \bar { x } -\mu }{ \frac { \sigma }{ \sqrt { n } } } \sim N(0,1)\)
\(Z=\frac { 51-52 }{ \frac { 5 }{ \sqrt { 50 } } } =\frac { -1 }{ 0.7071 } =-1.4142\)
மாற்று கருதுகோள் இருமுனை சோதனையாகும், எனவே |Z|= 1.4142 எனப் பெறுகிறோம்.
தீர்மான மதிப்பு 1% மிகைகாண் நிலையில் \({ Z }_{ \frac { \alpha }{ 2 } }\)=2.58
முடிவு: கணக்கிடப்பட்ட மதிப்பானது அட்டவணை மதிப்பைவிட குறைவாக உள்ளது Z>\({ Z }_{ \frac { \alpha }{ 2 } }\), 1% மிகைகாண் நிலையில் இன்மை கருதுகோள் H0 ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
எனவே கூறு சராசரிக்கும் தொகுதி சராசரி μ= 52, திட்ட விலக்கம் σ = 5 -க்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் இல்லை என்பதால் m = 49 என்பது நிராகரிக்கப்படுகிறது.
14.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
அதாவது, மொத்த இருப்புகள் = மொத்த தேவைகள் = 17. எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
முதல் ஒதுக்கீடு :
இரண்டாம் ஒதுக்கீடு :
மூன்றாம் ஒதுக்கீடு :
நான்காம் ஒதுக்கீடு :
இறுதி ஒதுக்கீடு :
அனைத்து ஒதுக்கீடுகளும் ஒரே அட்டவணையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
∴ போக்குவரத்து விவரம் :
O1 → D1, O1 → D2, O2 → D4, O3 → D3 O3 → D1 , O3 → D4
மொத்த போக்குவரத்து செலவு
= 1(2) + 5(3) + 1(1) + 6(5) + 3(15) + 1(9)
= 2 + 15 + 1 + 30 + 45 + 9 = Rs. 102
15.
X என்ற சமவாய்ப்பு மாறியானது குறைபாடுள்ள பொருட்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. p = குறைபாடு உள்ள பொருட்களின் நிகழ்தகவு
\( \mathrm{p}=\frac{5}{100}=0.05 \)
\( \mathrm{q}=1-\mathrm{p}=1-0.05=0.95 \)
\( \mathrm{n}=20 \)
\( \mathrm{P}(\mathrm{X}=x)=\mathrm{nC}_x \mathrm{p}^x \mathrm{q}^{\mathrm{n}-x}\)
(i) \(P(X=3) =20 C_3(0.05)^3(0.95)^{17} \)
\(=\frac{20 \times 19 \times 18}{3 \times 2 \times 1}(0.000125)(0.4181)\)
=0.059
(ii) \(P(X \geq 2)=1-\mathrm{P}(\mathrm{X}<2) \)
\(=1-[\mathrm{P}(\mathrm{X}=0)+\mathrm{P}(\mathrm{X}=1)] \)
\(=1-\left[20 \mathrm{C}_0(0.05)^0(0.95)^{20}+\right. \left.20 \mathrm{C}_1(0.05)^1(0.95)^{19}\right] \)
\( =1-(0.95)^{19}[0.95+20(0.05)]\)
=1-(0.37735)(1.95)=1-0.7358
=0.2642
(iii) \(P(X=4)=20 C_4(0.05)^4(0.95)^{16} \)
\(=\frac{20 \times 19 \times 18 \times 17}{4 \times 3 \times 2 \times 1} \times(0.00000625)(0.4401) =0.0133\)
(iv) சராசரி \(= n p=20 \times\left(\frac{5}{100}\right)=1 \)
மாறுபாடு \( =n p q=20 \times \frac{5}{100} \times \frac{95}{100}=0.95
\)
16.
இங்கு ∑ai=∑bj=80 அதாவது, மொத்த இருப்புகள் = மொத்த தேவைகள். எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
முதல் ஒதுக்கீடு :
இரண்டாவது ஒதுக்கீடு:
மூன்றாவது ஒதுக்கீடு:
நான்காவது ஒதுக்கீடு:
ஐந்தாவது ஒதுக்கீடு:
ஆறாவது ஒதுக்கீடு:
அனைத்து ஒதுக்கீடுகளும் ஒரே அட்டவணையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
போக்குவரத்து விவரம்
A ⟶ I, A ⟶ II, A ⟶ III, A ⟶ IV, B ⟶ I, C ⟶ IV, D⟶ II
மொத்த போக்குவரத்து செலவு
= (6×5) + (6×1) + (17×3) + (5×3) + (15×3) + (12×3) + (19×1)
= 30 + 6 + 51 + 15 + 45 + 36 + 19
= ரூ.202
17.
(i) நிகழ்தகவு நிறைச் சார்பின் நிபந்தனையிலிருந்து
\(\sum _{ i=1 }^{ \infty }{ p({ x }_{ i })=1 } \)
ஃ \(\sum _{ i=1 }^{ \infty }{ p({ x }_{ i })=1 } \)
0+a+2a+2a+3a+a2+2a2+7a2+a = 1
10a2+9a–1 = 0
(10a–1)(a+1) = 0
\(a=\cfrac { 1 }{ 10 } \) அல்லது -1
ஆனால் p(x) ஆனது குறை மதிப்பைக் கொண்டிருக்க முடியாது என்பதால், a = – 1 ஆனது பொருந்தாது எனவே ,\(a=\cfrac { 1 }{ 10 } \) ஆகும்.
(ii) P(X<3)=P(X=0)+P(X=1)+P(X=2)
=0+a+2a = 3a
= \(\cfrac { 3 }{ 10 } \left( \therefore a=\cfrac { 1 }{ 10 } \right) \)
(iii) P(X>2)=1−P(X≤2)
= 1-[P(X=0)+P(X=1)+P(X=2)]
= \(1-\cfrac { 3 }{ 10 } \)
= \(\cfrac { 7 }{ 10 } \)
(iv) P(2 < X ≤ 5) = P (X = 3) + P( X = 4 )+ P (X = 5)
= 2a+3a+a2
= 5a+a2
= \(\cfrac { 5 }{ 10 } +\cfrac { 1 }{ 100 } = \cfrac { 51 }{ 100 }\)
18.
வயது = x , காப்பீட்டுத்தொகை = y என்க.
இங்கு, நியூட்டனின் பின்நோக்கு சூத்திரத்தைப் பயன்படுத்தி y-ன் மதிப்பைக் காண்போம்.
y(x=xn+nh)=\({ y }_{ n }+\frac { n }{ 1! } \triangle y_{ n }+\frac { n(n-1) }{ 2! } { \triangle }^{ 2 }{ y }_{ n }+\frac { n(n-1)(n-2) }{ 3! } { \triangle }^{ 0 }y_{ n }+....\)
x=63, ∴ xn+nh=63, xn=68.48, h=5 ⇒ -\(\frac{2}{5}\)
| x | y | Δy | Δ2y | Δ3y | Δ4y |
| 45 | 114.84 | ||||
| -18.68 | |||||
| 50 | 96.16 | 5.84 | |||
| -12.84 | -1.84 | ||||
| 55 | 83.32 | 4 | 0.68 | ||
| -8.84 | -1.16 | ||||
| 60 | 74.48 | 2.84 | |||
| -6 | |||||
| 65 | 68.48 |
y(x=63)=68.48+\(\frac { \frac { -2 }{ 5 } }{ 1! } (-6)+\frac { \frac { -2 }{ 5 } \left( \frac { -2 }{ 5 } +1 \right) }{ 2! } 2.84+\frac { \frac { -2 }{ 5 } \left( \frac { -2 }{ 5 } +1 \right) \left( \frac { -2 }{ 5 } +2 \right) }{ 3! } (-1.16)+\frac { \frac { -2 }{ 5 } \left( \frac { -2 }{ 5 } +1 \right) \left( \frac { -2 }{ 5 } +2 \right) \left( \frac { -2 }{ 5 } +3 \right) }{ 4! } (0.68)\)
=68.48+2.4-0.3408+0.07424-0.028288
y(63)=70.585
19.
f(x) -ல் ஐந்து மதிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால், f(x) ஒரு நான்காம்படி பல்லுறுப்புக்கோவை என எடுத்துக் கொள்வோம். எனவே ஐந்தாம்நிலை வேறுபாடு பூச்சியமாகும்.
Δ5yk=0 (ie) (E-1)5yk=0
i.e., (E5-5E4+10E3-10E2+5E-1)yk=0
E5yk-5E4yk+10E3yk-10E2yk+5Eyk-yk=0 ....(1)
k = 0 என (1)-ல் பிரதியிட
E5y0-5E4y0-10E2y0+5Ey0-y0=0
y5-5y4+10y3-10y2+5y1-y0=0
y5-5(350)+10y3-10(260)+5(220)-200=0
y5+10y3=3450 .....(2)
k = 1 என (1)-ல் பிரதியிட
E5y1-5E4y1-10E3y1+5Ey3y1-y1=0
y6-5y5+10y4-10y3-y1=0
430+5y5+10(350)-10y3+5(260)-220=0
5y5+10y3=5010 (3)
(3)-(2) ⇒ 4y5=1560
y5=390
(2)-ன் படி 390+10y3=3450
10y3=3450-390
y3=306

20.
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை \(\frac { dy }{ dx } +\frac { 2x }{ { x }^{ 2 }+1 } y=\frac { 4x^{ 2 } }{ { x }^{ 2 }+1 } \) என்றவாறு மாற்றி அமைக்கலாம்.
இது \(\frac { dy }{ dx } \)+Py=Q என்ற வடிவில் உள்ளது.
இங்கு P=\(\frac { 2x }{ { x }^{ 2 }+1 } \), Q=\(\frac { 4x^{ 2 } }{ { x }^{ 2 }+1 } \)
\(\int { P } dx=\int { \frac { 2x }{ { x }^{ 2 }+1 } } dx\)=log(x2+1)
I.F=\({ e }^{ \int { p } dx }=e^{ log({ x }^{ 2 }+1) }\)=x2+1
தேவையான தீர்வு: y(I.F)=\(\int { Q } (I.F)\)dx+c
y(x2+1)=\(\int { \frac { 4x^{ 2 } }{ x^{ 2 }+1 } } \\ \)(x2+1)dx+c
y(x2+1)=\(\frac { 4x^{ 3 } }{ 3 } \)+c
21.
22.
\(\int _{ a }^{ b } xdx\)=1 எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
\(\left[ x \right] _{ a }^{ b }\)=1
b-a=1 .....(1)
மேலும், \(\int _{ a }^{ b } xdx\)=1 எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.
\(\left[ \frac { { x }^{ 2 } }{ 2 } \right] _{ a }^{ b }\)=1
b2-a2=2
(b+a)(b-a)=2
b+a=2 ......(2) [∵ b-a=1]
(1)+(2) ⇒ 2b=3
∴ b=\(\frac { 3 }{ 2 } \)
இப்போது, \(\frac { 3 }{ 2 } \)-a =1 [∵ (1) லிருந்து]
∴ a=\(\frac { 1 }{ 2 } \)
23.
\(\begin{equation} \int\left(\frac{x}{2 x^{4}-3 x^{2}-2}\right) d x \end{equation}\)
2x4-3x2-2=2x4-4x2+x2-2
=2x4- (x2-2) + 1(x2-2)
= (2x2 + 1)(x2 - 2)
\(\int \frac{x d x}{(2 x^{2}+1)( x^{2}-2} )= \frac {1}{2}\frac {dt}{(2t + 1)(t -2)}\)
\(\frac {1}{(2t + 1)(t -2)} = \frac{A}{2t + 1}+ \frac{B }{t -2}\)
| t = x2 dt=2xdx \(\frac{dt}{2}=xdx\) |
1 = A (t - 2) + B (2t + 1) ... (1)
t = 2 எனில்
1 = B ( 5) ⇒ B = \(\frac{1}{5}\)
(1) - ல், 't' - ன் கெழுக்களைக் சமப்படுத்த
0 = A + 2B
\(A =-\frac {2}{5}\)
\(\frac{1}{(2 t+1)(t-2)} =-\frac{2}{5(2 t+1)}+\frac{1}{5(t-2)} \)
\( \int \frac{d t}{(2 t+1)(t-2)} =-\frac{2}{5} \int \frac{d t}{2 t+1}+\frac{1}{5} \int \frac{d t}{t-2}\)
\(=-\frac{1}{5} \int \frac{2 d t}{2 t+1}+\frac{1}{5} \log |t-2|+c \\ \)
\(=-\frac{1}{5} \log |2 t+1|+\frac{1}{5} \log |t-2|+c \\ \)
\(=\frac{1}{5} \log \left|\frac{t-2}{2 t+1}\right|+c \\ \)
\(\int \frac{x d x}{2 x^{4}-3 x^{2}-2} =\frac{1}{2}\left[\frac{1}{5} \log \left|\left(\frac{t-2}{2 t+1}\right)\right|\right]+c \)
\(=\frac{1}{10} \log \left|\frac{x^{2}-2}{2 x^{2}+1}\right|+c\)
24.
x ,y ,z என்பன முறையே வகை I ,II மற்றும் III ஆகியவற்றின் எடைகள் என்க.
எனவே , சமன்பாடுகள்
x + 2y + 3z = 11
2x + 4y + 5z = 21
3x + 5y + 6z = 27
\(\Delta =\begin{vmatrix} 1 & 2 & 3 \\ 2 & 4 & 5 \\ 3 & 5 & 6 \end{vmatrix}\)
= 1(24-25)-2(12-15)+3(10-12)
= -1+6-6
=-1\(\neq \)0
\(\therefore \) கிரேமரின் விதியை பயன்படுத்தலாம் .
\(\Delta _{ x }=\begin{vmatrix} 11 & 2 & 3 \\ 21 & 4 & 5 \\ 27 & 5 & 6 \end{vmatrix}\)
= 11(24-25)-2(126-135) + 3(105-108)
= -11+18-9 = -2
\(\Delta _{ y }=\begin{vmatrix} 1 & 11 & 3 \\ 2 & 21 & 5 \\ 3 & 27 & 6 \end{vmatrix}\)
= 1(126 -135)-11(12-15)+3(54-63)
= -9+33-27 =-3
\(\Delta _{ z }=\begin{vmatrix} 1 & 2 & 11 \\ 2 & 4 & 21 \\ 3 & 5 & 27 \end{vmatrix}\)
= 1(108 -105)-2(54-63)+11(10-12)
= 3+18-22 =-1
\(x=\cfrac { { \Delta }_{ x } }{ \Delta } =\cfrac { -2 }{ -1 } =2\)
\(y=\cfrac { { \Delta }_{ y } }{ \Delta } =\cfrac { -3 }{ -1 } =3\)
\(z=\cfrac { { \Delta }_{ z } }{ \Delta } =\cfrac { -1 }{ -1 } =1\)
தரங்கள் I,II,மற்றும் III ஆகியவற்றின் எடைகள் முறையே 2,3 மற்றும் 1.
25.
ஃபிஷர் தனித்த குறியீட்டு எண் =\(\sqrt{110 \times 108} = \sqrt{11880} = 108.99 - 109\)
26.
(b)
நான்கு கூறுகள்
27.
\(\mathrm{P}(\mathrm{Z}>\mathrm{z}) =0.8508 \)
\(\mathrm{P}(-\mathrm{z}<\mathrm{Z}<0) =0.8508-0.5=0.3508 \)
\(\mathrm{z} =-1.04
\)
28.
\(\mathrm{P}(-3 <\mathrm{Z}<-0.5) \)
\(= \mathrm{P}(0<\mathrm{Z}<3)-\mathrm{P}(0<\mathrm{Z}<0.5)\)
=0.4987-0.1915=0.3072
29.
(d)
மேற்கூறிய அனைத்தும்
30.
(a)
மேல் இடது மூலை
31.
(a)
திறன்தன்மை
32.
(b)
முடிவுறு உட்கணம்
33.
(d)
இவை அனைத்தும்
34.
\(E(X) =\sum x_i p_i \)
\(\therefore(21)(0.29)(0.5) =3.045 \)
(19)(0.4)(0.5) =3.8
(22)(0.35)(0.5) =3.85
35.
\(\begin{array}{|c|c|c|c|} \hline \mathbf{y} & \Delta y & \Delta^2 y & \Delta^{\prime} y \\ \hline 12 & & & \\ \hline & 1 & & \\ \hline 13 & & 1 & \\ \hline & 2 & & 0 \\ \hline 15 & & 1 & \\ \hline & 3 & & \\ \hline 18 & & & \\ \hline \end{array}\)
36.
(a)
y(x)=\(\frac { x-{ x }_{ 1 } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 0 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 1 }\)
37.
(a)
y=v x
38.
\(\mathrm{y} =\mathrm{ae}^x+\mathrm{be}^{-x} \Rightarrow \frac{d y}{d x}=\mathrm{ae}^x-\mathrm{be}^{-x} \)
\(\frac{d^2 y}{d x^2} =\mathrm{ae}^x+\mathrm{be}^{-x}=\mathrm{y} \)
\(\frac{d^2 y}{d x^2}-\mathrm{y} =0
\)
39.
(a)
40.
\(\frac{d R}{d x} =e^{-x / 10} \)
\(\mathrm{R} =\int e^{-x / 10} d x=\frac{e^{-x / 10}}{-1 / 10}+k \)
x =0 மற்றும் R=0 எனில்,k=10
\(\mathrm{R}=-10 e^{-x / 10}+10=10\left(1-e^{-x / 10}\right)\)
41.
t = x2 + 3x + 2 என்க.⇒ dt = (2x+ 3) dx
\(\int { \frac { 2x+3 }{ \sqrt { { x }^{ 2 }+3x+2 } } } \)dx \(=\int \frac {dt }{\sqrt t} = \int t ^{- \frac {1}{2}}dt = \frac {t {\frac {1}{2}}}{\frac {1}{2}}\)
= \(2 \sqrt{t } + c =2\sqrt { { x }^{ 2 }+3x+2 } +c\)
42.
(c)
9log|x-3|-log|x+1|+c
43.
(c)
ஒருங்கமைவு உடையது
44.
(b)
n
45.
“ஒரு குறியீட்டு எண் என்பது துல்லியமான அளவுகளில் அளக்க முடியாத அல்லது வழக்கத்தில் நேரடி மதிப்பீடு செய்ய முடியாத எண் அளவிலான மாறுபாடுகளில் உள்ள வேறுபாடுகளை காண்பிக்கக்கூடிய ஒரு கருவியாகும்”.
46.
நேர்காணல் குழுவில் உள்ள பெண்களின் எதிர்பார்ப்பு எண்ணிக்கை
\(E\left( X \right) =\underset { x }{ \Sigma } x{ P }_{ x }\left( x \right) \)
= \(\left[ \left( 0\times \cfrac { 2 }{ 11 } \right) +\left( 1\times \cfrac { 5 }{ 11 } \right) +\left( 2\times \cfrac { 4 }{ 11 } \right) \right] \)
= \(\cfrac { 13 }{ 11 } \) (தோராயமாக ஒரு பெண்)
47.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
மொத்த தேவைகள் = மொத்த இருப்புகள் = 21
எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
முதல் ஒதுக்கீடு :
இரண்டாம் ஒதுக்கீடு :
மூன்றாம் ஒதுக்கீடு:
நான்காம் ஒதுக்கீடு:
ஐந்தாம் ஒதுக்கீடு :
இறுதி ஒதுக்கீடு :
போக்குவரத்து விவரம்
P → A, P → Q,Q → B, Q → C, Q → D, R → D, R → E
மொத்த போக்குவரத்து செலவு
\( =(3 \times 2)+(1 \times 11)+(2 \times 4)+(4 \times 7)+ (2 \times 2)+(3 \times 8)+(6 \times 12) \)
= 6 + 11 + 8 + 28 + 4 + 24 + 72 = ரூ. 153
48.
நிறைகள் :
1. தனிப்பட்ட நபரின் விருப்பு, வெறுப்பு தவிர்க்கப்படுகிறது
2. இது சிக்கனமான முறையாகும் ஏனெனில், பொருள் விரையம், காலவிரையம் மற்றும் அதிக உழைப்பு விரையமாவதை தவிர்க்கிறது.
49.
50.
A = \(\left( \begin{matrix} 1 & -1 \\ 3 & -6 \end{matrix} \right) \)என்க
A -ன் வரிசை 2 x 2, எனவே ρ(A) \(\le \) 2
\(\sim \)\(\left( \begin{matrix} 1 & -1 \\ 0 & -3 \end{matrix} \right) \) R2 → R2 -3R1
அணியின் தரம் ρ(A) = 2
51.
\(\begin{array}{|c|c|c|c|c|} \hline \boldsymbol{x} & \boldsymbol{y} & \Delta \boldsymbol{y} & \Delta^2 \boldsymbol{y} & \Delta^3 \boldsymbol{y} \\ \hline-1 & 202 & & & \\ \hline & & -27 & & \\ \hline 0 & 175 & & -66 & \\ \hline & & -93 & & 132 \\ \hline 1 & 82 & & 66 & \\ \hline & & -27 & & \\ \hline 2 & 55 & & & \\ \hline \end{array}\)
x0 =-1, h=1,x0 + nh = 0.5
n = 1.5
\(\mathrm{y}=y_0+\frac{n}{1 !} \Delta y_0+\frac{n(\mathrm{n}-1)}{2 !} \Delta^2 y_0 +\frac{\mathrm{n}(\mathrm{n}-1)(\mathrm{n}-2)}{3 !} \Delta^3 y_0 \)
\(=202+\frac{1.5}{1 !}(-27)+\frac{(1.5)(0.5)}{2}(-66) +\frac{(1.5)(0.5)(-0.5)}{6} 132 \)
\(\mathrm{y}=202-40.5-24.75-8.25=128.5
\)
52.
\(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } -6\frac { dy }{ dx } +8y\)=0
துணைச் சமன்பாடு
m2-6 m+8 =0
(m-4)(m-2) =0
m =2,4
மூலங்கள் மெய் மற்றும் வெவ்வேறானவை
\(\therefore \)நிரப்புச் சார்பு: \(A e^{m_1 x}+B e^{m_2 x}\)
\(\therefore \)தீர்வு : y=Ae2x+Be4x
53.
54.
\(\int { \frac { 1 }{ { 2x }^{ 2 }-9 } } dx\)
\(=\frac { 1 }{ 2 } \int { \frac { dx }{ { x }^{ 2 }-\frac { 9 }{ 2 } } } \)
\(=\frac { 1 }{ 2 } \int { \frac { dx }{ { x }^{ 2 }-{ \left( \frac { 3 }{ \sqrt { 2 } } \right) }^{ 2 } } } \)
\(=\frac { 1 }{ 2 } \times \frac { 1 }{ 2\left( \frac { 3 }{ \sqrt { 2 } } \right) } \log { \left| \frac { x-\frac { 3 }{ \sqrt { 2 } } }{ x+\frac { 3 }{ \sqrt { 2 } } } \right| } +c\)
\(\left[ \because \int { \frac { dx }{ { x }^{ 2 }-{ a }^{ 2 } } } =\frac { 1 }{ 2a } \log { \left| \frac { x-a }{ x+a } \right| } \right] +c\)
\(=\frac { 1 }{ \frac { 12 }{ \sqrt { 2 } } } \log { \left| \frac { \sqrt { 2x } -3 }{ \sqrt { 2x } +3 } \right| } +c\)
\(=\frac { 1 }{ 6\times \sqrt { 2 } } \log { \left| \frac { \sqrt { 2x } -3 }{ \sqrt { 2x } +3 } \right| } +c\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards