12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil medium Business Maths Reduced Syllabus Public Exam Model Question Paper With Answer Key - 2021
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
தற்செயல் காரணங்கள் என்பதை வரையறு.
2.
வடமேற்கு மூலை முறையை பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை சாத்தியமானத் தீர்வை காண்க.
3.
மாணவர்கள் A தரநிலையை பெறுவதற்கான எண்ணிக்கையை வரையறுக்கும் சமவாய்ப்பு மாறியாக X இருக்கட்டும். கொடுக்கப்பட்ட அட்டவணையிலிருந்து X இன் எதிர்பார்த்தல் மதிப்பைக் கண்டறியவும்.
| X= x | 0 | 1 | 2 | 3 |
|---|---|---|---|---|
| P(X = x) | 0.2 | 0.1 | 0.4 | 0.3 |
4.
பெர்னோலி முயற்சி: வரையறு.
5.
ஒரு கூறின் அளவு 50 உடைய ஒரு மாதிரியின் திட்டவிலக்கம் 6.3. அதற்குரிய முழுமைத்தொகையின் திட்டவிலக்கம் 6 எனில் மாதிரியின் திட்டப்பிழை காண்க.
6.
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து x = 43 மற்றும் x = 84 எனும் புள்ளிகளில் y-ன் மதிப்பு காண்க.
| x | 40 | 50 | 60 | 70 | 80 | 90 |
| y | 184 | 204 | 226 | 250 | 276 | 304 |
7.
பின்வருவனவற்றை தீர்க்க:
\(\frac { dy }{ dx } +\frac { 3x^{ 2 } }{ 1+{ x }^{ 3 } } y=\frac { 1+{ x }^{ 2 } }{ 1+{ x }^{ 3 } } \)
8.
ஒரு பொருளின் தேவைச் சார்பு y=36-x2 எனில், y0= 11- ல் நுகர்வோர் உபரியை காண்க.
9.
மதிப்பிடுக: \(\int { \frac { 2 }{ 3x+5 }} \)dx
10.
\(\left( \begin{matrix} -5 & -7 \\ 5 & 7 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.
11.
ஒரு வானொலி குழலின் (Valve) வாழ்நாள் (மணி நேரங்களில்) பின்வரும் நிகழ்தகவு அடர்த்திச் சார்பைக் கொண்டிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்

வானொலி குழலின் வாழ்நாளின் சராசரியை கண்டுபிடிக்கவும்.
12.
மாதாந்திர மின்சாரக் கட்டணமாக சென்னையில் வசிக்கும் மக்கள் செலுத்தும் கட்டணம் இயல்நிலைப் பரவலைப் பின்பற்றுகிறது. இதன் சராசரி ரூ.225 மற்றும் திட்டவிலக்கம் 55. 500 நபர் கொண்ட ஒரு குழுவில் ரூ.100 அல்லது அதற்கும் குறைவான கட்டணம் செலுத்துபவர்களின் எதிர்பார்க்கப்படும்
13.
ஒரு நபர் பங்கு, பத்திரங்கள், மற்றும் கடன் பத்திரங்கள் ஆகிய மாற்று முதலீட்டுத் திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் முதலீடு செய்ய விரும்புகிறார். மூன்று சாத்தியமான பொருளாதார நிலைமைகளில் அடிப்படையில் பணம் செலுத்தும் அணி பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
பின்வரும் அளவுகோல்களைப் பயன்படுத்தி சிறந்த முதலீடு திட்டத்தைத் தீர்மானிக்க
(i) சிறுமத்தில் பெருமம் (ii) பெருமத்தில் சிறுமம்.
14.
போக்கினை அளவிடுவதற்கான வெவ்வேறு முறைகளை குறிப்பிடுக.
15.
பருத்தி நூலின் வலிமை (அறுந்தன்மை) அறிய 100 அளவீடுகள் கொண்ட ஒரு தொகுதியினைத் தெரிவு செய்து அவற்றின் சராசரி மற்றும் திட்ட விலக்கம் முறையே 7.4 கிராம் மற்றும் 1.2 கிராம் எனில், பருத்தி நூலின் சராசரி வலிமையின் 95% நம்பிக்கை இடைவெளியை காண்க.
16.
இறுதி நிலை செலவுச் சார்பு MC=2+5ex எனில், சராசரிச் செலவு AC -ஐக் காண்க.
17.
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பயன்படுத்தி விடுபட்ட உறுப்பைக் காண்க.
| x | 0 | 1 | 2 | 3 | 4 |
| y | 1 | 3 | 9 | - | 81 |
18.
ஆதி வழிச்செல்லும் அனைத்து நேர்கோட்டுத் தொகுப்பின் வகைக்கெழுச் சமன்பாட்டை அமைக்க.
19.
பின்வருவனவற்றை இரண்டாம் அடிப்படைத் தேற்றத்தை பயன்படுத்தி மதிப்பிடுக.
\(\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ \sqrt { 1+cos2x } } dx\)
20.
x + y + z = 6, x + 2y + 3z = 14, x + 4y + 7z = 30 என்ற சமன்பாடுகள் ஒருங்கமைவு அற்றவை எனக் காட்டுக.
21.
2010ஆம் ஆண்டிற்கு
(i) லாஸ்பியர்
(ii) பாசி
(iii) ஃபிஷர் விலைக் குறியீட்டு எண்களை பின்வரும் புள்ளி விவரங்களுக்குக் கணக்கிடுக.
| பொருள்கள் | விலை | அளவு | ||
| 2000 | 2010 | 2000 | 2010 | |
| A | 12 | 14 | 18 | 16 |
| B | 15 | 16 | 20 | 15 |
| C | 14 | 15 | 24 | 20 |
| D | 12 | 12 | 29 | 23 |
22.
ஒரு வாடகை மகிழுந்து நிறுவனம் ஒரு மகிழுந்து நிறுத்த a, b, c, d மற்றும் e என்ற பணிமனைகள் உள்ளன. A,B,C,D மற்றும் E என்ற ஐந்து வளாகங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் ஒவ்வொருக்கும் ஒரு மகிழுந்து தேவைப்படுகிறது. கீழே உள்ள தொலைவு அணியானது பணிமனை (ஆரம்பிக்குமிடம்) மற்றும் வளாகங்கள் (சென்றடையுமிடம்) ஆகியவற்றின் தொலைவு கொடுக்கப்பட்டுள்ளது.
பயணத் தூரத்தைக் குறைக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு மகிழுந்துகளை எவ்வாறு ஒதுக்கவேண்டும்.
23.
ஒரு பல் பொருள் அங்காடியில் ஒரு வாரத்தில் விற்பனை செய்யப்பட்ட சோப்பின் சராசரி 146.3 ஆக உள்ளது. விளம்பரத்திற்கு பிறகு 400 கடைகளை மாதிரி எடுத்ததில் வாராந்திர சராசரி விற்பனை 153.7 மற்றும் அதன் திட்ட விலக்கம் 17.2 எனில், விளம்பர பிரச்சாரம் வெற்றியடைந்தாக கருதலாமா?
24.
கொடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படைத் தீர்வை கீழ்க்கண்ட முறைகளில் காண்க:
(i) வடமேற்கு மூலை முறை
25.
X என்பது ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி என்க. அதன் நிகழ்தகவு அடர்த்திச் சார்பானது.

எனில், X -இன் சராசரி மற்றும் மாறுபாட்டை கண்டுபிடிக்கவும்
26.
தயாரிக்கப்படும் பொருள்களில் 5 சதவிகிதம் குறைபாடுள்ளவை. சமவாய்ப்பு முறையில் 20 பொருள்கள் தேர்ந்தெடுக்கும் பொழுது
(i) மூன்று மட்டும் குறைபாடுள்ளதாக
(ii) குறைந்தபட்சம் இரண்டு பொருள் குறைபாடுள்ளதாக
(iii) நான்கு மட்டும் குறைபாடுள்ளதாக இருப்பதற்கான நிகழ்தகவினை காண்க.
(iv) சராசரி மற்றும் மாறுபாட்டினைக் கண்டுபிடி.
27.
படுகை கூறெடுப்பை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
28.
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு 45-க்கு குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை காண்க.
| மதிப்பெண்கள் | 30-40 | 40-50 | 50-60 | 60-70 | 70-80 |
| மாணவர்களின் எண்ணிக்கை | 31 | 42 | 51 | 35 | 31 |
29.
10 வருடங்களுக்கு ஒருமுறை எடுக்கப்படும் ஒரு நகரத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 1955 வருடத்தின் மக்கள் தொகையை மதிப்பிடுக.
| வருடம் | 1951 | 1961 | 1971 | 1981 |
| மக்கள் தொகை (இலட்சத்தில்) | 35 | 42 | 58 | 84 |
30.
தீர்க்க: x-y\(\frac { dx }{ dy } =a\left( { x }^{ 2 }+\frac { dx }{ dy } \right) \)
31.
ஒரு நிறுவனத்தின் உற்பத்தி பொருள்களின் இறுதிநிலை செலவு சார்பு C'(x)=5+0.13x, இறுதிநிலை வருவாய் சார்பு R'(x) =18 மற்றும் மாறாச் செலவு ரூ.120 எனில், இலாபச் சார்பைக் காண்க.
32.
வரையறுத்த தொகையீட்டை ஒரு கூட்டலின் எல்லை எனக் கொண்டு கீழ்க்காணும் தொகையீடுகளை மதிப்பிடுக.
\(\int _{ 0 }^{ 1 }{ { x }^{ 2 } } dx\)
33.
பின்வருவனவற்றை வரையறுத்த தொகையீடுகளின் பண்புகளைக் பயன்படுத்தி மதிப்பிடுக.
\(\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ \frac { sin^{ 7 }x }{ sin^{ 7 }x+cos^{ 7 }x } } dx\)
34.
A=\(\left( \begin{matrix} 1 & 1 & -1 \\ 2 & -3 & 4 \\ 3 & -2 & 3 \end{matrix} \right) \)மற்றும் B=\(\left( \begin{matrix} 1 & -2 & 3 \\ -2 & 4 & -6 \\ 5 & 1 & -1 \end{matrix} \right) \) எனில் AB மற்றும் BA இவற்றின் தரத்தினைக் காண்க.
35.
\(\bar { X } \) - வரைபடத்தின் மேல் கட்டுப்பாடு எல்லையை அளிக்க கூடியது _____.
\(\bar { X } \) + A2\(\bar { R } \)
\(\overset { = }{ X } \) + A2R
\(\overset { = }{ X } \) + A2\(\bar { R } \)
\(\overset { = }{ X } \) + A2\(\overset { = }{ R } \)
36.
ஒழுங்கற்ற இயற்கை ஏற்படுத்தும் மாறுபாடுகள் என்பது _____.
தற்செயல் விளைவு
தற்செயலற்ற விளைவு
மனிதனால் ஏற்படக்கூடிய விளைவு
அனைத்தும்
37.
P(Z > z) = 0.5832 எனில் z-ன் (z-என்பது திட்ட இயல்நிலை பரவலை கொண்டுள்ளது) மதிப்பானது ____.
-0.48
0.48
1.04
-0.21
38.
திட்ட இயல்நிலை அட்டவணையை பயன்படுத்துகையில் z = 2.18-க்கு வலப்புறம் மற்றும் z= -1.75 –க்கு இடதுபுறம் அமையும் மதிப்புகளுக்கான நிகழ்தகவுகளின் கூடுதலானது ______.
0.4854
0.4599
0.0146
0.0547
39.
ஒதுக்கீடு கணக்கில் ஒப்புக்கான நிரை அல்லது ஒப்புக்கான நிரல் உருவாக்குவதற்கான நோக்கம் _____ ஆகும்.
தீர்வை சீர்குலைப்பதிலிருந்து தடுக்கிறது
மொத்த செயல்கள் மற்றும் மொத்த வளங்களை சமப்படுத்த
ஒப்புக்கான பிரச்சினையை பிரதிநிதிப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையை வழங்குகிறது
மேலே கூறிய அனைத்தும்
40.
சீரான தீர்வில் ஒதுக்கீட்டு அறைகளின் எண்ணிக்கை ஆனது
m+n–1-க்கு சமம்
m+n+1 -க்கு சமமற்றது
m+n–1 –ஐ விட சிறியது
m+n+1 -ஐ விட பெரியது
41.
\(P[|\hat { \theta } -\theta |<\varepsilon ]\rightarrow \infty ,\varepsilon >0,\) எனில் \(\hat { \theta } \) என்பது \(\theta \)-ன் ________ உடைய மதிப்பீட்டு அளவையாகும்.
திறன்தன்மை
நிறைவுத்தன்மை
பிழையற்ற தன்மை
நிலைத்தன்மை
42.
43.
c ஒரு மாறிலி எனில், E (c) இன் மதிப்பு ______.
0
1
c f(c)
c
44.
நிகழ்வின் நிகழ்தகவு கொண்ட சமவாய்ப்பு மாறியின் சாத்தியமுள்ள மதிப்புகளைப் பெருக்குவதன் மூலம் பெறப்பட்ட எந்த மதிப்பு எடையிட்ட சராசரிக்கு சமம் என அழைக்கப்படுகிறது.
தனித்த மதிப்பு
எடையிட்ட மதிப்பு
எதிர்பார்த்தல் மதிப்பு
திரள் மதிப்பு
45.
(x0,y0), (x1,y1) என்ற புள்ளிகள் கொடுக்கப்பட்டால் இலக்ராஞ்சியின் சூத்திரம் _______.
y(x)=\(\frac { x-{ x }_{ 1 } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 0 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 1 }\)
y(x)=\(\frac { x_{ 1 }-{ x } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 0 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 1 }\)
y(x)=\(\frac { x-{ x }_{ 1 } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 1 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 0 }\)
y(x)=\(\frac { x_{ 1 }-{ x } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 1 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 0 }\)
46.
h=1 எனில், Δ(x2)= _____.
2x
2x-1
2x+1
1
47.
(D2+4)y=e2x இன் நிரப்புச் சார்பு _____.
(Ax+B)e2x
(Ax+B)e-2x
Acos2x+Bsin2x
Ae-2x+Be2x
48.
\(\frac { { d }^{ 4 }y }{ dx^{ 4 } } -\left( \frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } \right) +\frac { dy }{ dx } \)=3 என்ற வகைக்கெழு சமன்பாட்டின் படி ஆனது ______.
1
2
3
4
49.
50.
y -அச்சு, y=1 மற்றும் y = 2 எனும் எல்லைக்குள் அடைப்படும் y=x - ன் பரப்பு ____.
\(\frac{1}{2}\) ச.அலகுகள்
\(\frac{5}{2}\) ச.அலகுகள்
\(\frac{3}{2}\) ச.அலகுகள்
1 ச.அலகு
51.
n>0 எனில், \(\Gamma \)(n) -க்கு சமமான தொகையீடு _____.
\(\int _{ 0 }^{ 1 }{ { e }^{ -x }x^{ n-1 } } dx\)
\(\int _{ 0 }^{ 1 }{ { e }^{ -x }x^{ n } } dx\)
\(\int _{ 0 }^{ \infty }{ { e }^{ -x }x^{ -n } } dx\)
\(\int _{ 0 }^{ \infty }{ { e }^{ -x }x^{ n-1 } } dx\)
52.
\(\int { \frac { { e }^{ x } }{ { e }^{ x }+1 } } \)dx -ன் மதிப்புச் சார்பு_____.
\(log\left| \frac { { e }^{ x } }{ { e }^{ x }+1 } \right| \)+c
\(log\left| \frac { { e }^{ x }+1 }{ { e }^{ x } } \right| \)+c
log|ex|+c
log|ex+1|+c
53.
ρ(A)=ρ(A,B) எனில் தொகுப்பானது______.
ஒருங்கமைவு உடையது மற்றும் எண்ணிக்கையற்ற தீர்வுகள் பெற்றுள்ளது
ஒருங்கமைவு உடையது மற்றும் ஒரே ஒரு தீர்வு பெற்றுள்ளது
ஒருங்கமைவு உடையது
ஒருங்கமைவு அற்றது
54.
வரிசை n உடைய அலகு அணியின் தரம்______.
n−1
n
n+1
n2
1.
வாய்ப்பு காரணங்கள் என்பது உற்பத்தி செயல் முறைகளில் இயற்கையாகவோ அல்லது இயல்பாகவோ ஏற்படும் சிறிய மாறுபாடுகள் ஆகும். இந்த காரணங்களால் ஏற்படும் மாறுபாடுகள் மனித கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகும் இதைத் தடுக்கவோ, அகற்றவோ எந்த சூழ்நிலைகளிலும் முடியாது. பொருள்களின் தரத்திற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத சிறிய விளைவுகள், வாய்ப்பு காரணங்கள் என அழைக்கப்படுகிறது . உதாரணமாக மழை, வெள்ளம், மின்தடை போன்றவை ஆகும்.
2.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
மொத்த தேவைகள் = மொத்த இருப்புகள் = 21
எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
முதல் ஒதுக்கீடு :
இரண்டாம் ஒதுக்கீடு :
மூன்றாம் ஒதுக்கீடு:
நான்காம் ஒதுக்கீடு:
ஐந்தாம் ஒதுக்கீடு :
இறுதி ஒதுக்கீடு :
போக்குவரத்து விவரம்
P → A, P → Q,Q → B, Q → C, Q → D, R → D, R → E
மொத்த போக்குவரத்து செலவு
\( =(3 \times 2)+(1 \times 11)+(2 \times 4)+(4 \times 7)+ (2 \times 2)+(3 \times 8)+(6 \times 12) \)
= 6 + 11 + 8 + 28 + 4 + 24 + 72 = ரூ. 153
3.
\(\mathrm{E}(\mathrm{X}) =\sum_x x P_x(x) \)
=0+0.1+0.8+0.9=1.8
∴∴ எதிர்பார்க்கப்படும் மதிப்பு 1.8
4.
ஒரு சமவாய்ப்பு சோதனை இரண்டு விளைவுகளை ஏற்படுத்தும். அவ்விளைவானது இரு வகைப்படும் அவை வெற்றி (S) மற்றும் தோல்வி (F) ஆகும். அதனுடைய நிகழ்தகவுகள் முறையே p மற்றும் q எனக் குறிக்கப்படும். அது பெர்னோலி சோதனை (அல்லது முயற்சி) என்று அழைக்கப்படும்
5.
கூறின் அளவு n = 50
மாதிரியின் திட்டவிலக்கம் S.D s = 6.3
முழுமைத் தொகுதியின் திட்டவிலக்கம் S.D σ = 6
மாதிரியின் திட்டப்பிழை
\(S.E=\sqrt { \frac { { \sigma }^{ 2 } }{ 2n } } =\frac { 6 }{ \sqrt { 2(50) } } =\frac { 6 }{ \sqrt { 100 } } =0.6\)
∴ மாதிரியின் திட்டப்பிழை S.D = 6
6.
\(\begin{array}{|c|c|c|c|c|} \hline x & y & \Delta y & \Delta^2 y & \Delta^3 y \\ \hline 240 & 484 & & & \\ \hline & & 20 & & \\ \hline 50 & 204 & & 2 & \\ \hline & & 22 & & 0 \\ \hline 60 & 226 & & 2 & \\ \hline & & 24 & & 0 \\ \hline 70 & 250 & & 2 & \\ \hline & & 26 & & 0 \\ \hline 80 & 276 & & 2 & \\ \hline & & 28 & & \\ \hline 90 & 304 & & & \\ \hline \end{array}\)
\(x_0 =40, \mathrm{~h}=10, x_0+\mathrm{nh}=43 \)
\(10 \mathrm{n} =3 \Rightarrow \mathrm{n}=0.3 \)
\(\mathrm{y} =y_0+\frac{n}{1 !} \Delta y_0+\frac{n(\mathrm{n}-1)}{2 !} \Delta^2 y_0 \)
\( =184+0.3(20)+\frac{(0.3)(-0.7)}{2}(2) \)
\( =184+6-0.21=189.79 \)
\(x_{\mathrm{n}} =90, \mathrm{~h}=10, x_{\mathrm{n}}+\mathrm{nh}=84 \)
\(10 \mathrm{n} =-6 \Rightarrow \mathrm{n}=-0.6 \)
\(\mathrm{y} =y_n +\frac{n}{1 !} \Delta y_n +\frac{n(\mathrm{n}-1)}{2 !} \Delta^2 y_n + ....\)
\( =304+\frac{(-0.6)}{1 !}(28)+\frac{(-0.6)(+0.4)}{2 !}(2) \)
\(=304-16.8-0.24=286.96 \)
7.
கொடுக்கப்பட்ட சமன்பாடு
இது \(\frac{d y}{d x}+P y=\mathrm{Q}\) என்ற அமைப்பில் உள்ளது
இங்கு,\(\mathrm{P}=\frac{3 x^2}{1+x^3} \) மற்றும் \(\mathrm{Q}=\frac{1+x^2}{1+x^3}\)
\(\int P d x=\int \frac{3 x^2}{1+x^3} d x \)
\(=\log \left(1+x^3\right) \)
தொ.கா.\(=e^{\int P d x}=e^{\log \left(1+x^2\right)} \)
\(=1+x^3 \)
\( y e^{\int P d x}=\int Q e^{\int P d x} d x+c \)
\( \mathrm{y}\left(1+x^3\right)=\int \frac{1+x^2}{1+x^3}\left(1+x^3\right) \mathrm{d} x+\mathrm{c} \)
\( =\int\left(1+x^2\right) d x+c \)
\( \mathrm{y}\left(1+x^3\right)=x+\frac{x^3}{3}+c \)
\(y(1+{ x }^{ 3 })=x+\frac { { x }^{ 3 } }{ 3 } \)+c
8.
கொடுக்கப்பட்டவை: y=36-x2 மற்றும் y0=11
11=36-x02
x02=25
x0=5

=\(\int _{ 0 }^{ 5 }{ (36-x^{ 2 }) } dx-5\times 11\)
=\(\left[ 36x-\frac { { x }^{ 3 } }{ 3 } \right] _{ 0 }^{ 5 }-55\)
=\(\left[ 36(5)-\frac { { 5 }^{ 3 } }{ 3 } \right] -55\)
=\(180-\frac { 125 }{ 3 } -55=\frac { 250 }{ 3 }\)
நுகர்வோர் உபரி =\(\frac { 250 }{ 3 } \) அலகுகள்.
9.
\(\int { \frac { 2 }{ 3x+5 } dx } =2\int { \frac { 1 }{ 3x+5 }} \)dx
\(=\frac { { 2 } }{ 3 } \log\left| 3x+5 \right| +c\)
10.
A=\(\left( \begin{matrix} -5 & -7 \\ 5 & 7 \end{matrix} \right) \) என்க.
A-ன் வரிசை 2 x 2 ∴ ρ(A) ≤2
இரண்டாம் வரிசை சிற்றணிக்கோவையை கருத, நாம் பெறுவது \(\left| \begin{matrix} -5 & -7 \\ 5 & 7 \end{matrix} \right| \)=0 ஆகும்.
இரண்டாம் வரிசை சிற்றணிக்கோவை பூச்சியமாவதால், ρ(A)≠2
ஒன்றாம் வரிசை கொண்ட ஒரு சிற்றணிக்கோவையை கருத, நாம் பெறுவது |-5| ≠ 0 ஆகும்.
⇒ பூச்சியமற்ற சிற்றணிக்கோவையின் வரிசை 1 ஆகும். ∴ ρ(A) =1
11.
சமவாய்ப்பு மாறியின் எதிர்பார்த்தல்.
\(E\left( X \right) =\int _{ -\infty }^{ \infty }{ xf(x)dx } \)
= \(\int _{ 100 }^{ \infty }{ { xe }^{ \frac { x }{ 100 } }dx } \)
= \(\left\{ \left[ \left( \frac { { e }^{ \frac { x }{ 100 } } }{ -\frac { 1 }{ 100 } } \right) \right] _{ 100 }^{ \infty }-\int _{ 100 }^{ \infty }{ \left( \frac { { e }^{ \frac { x }{ 100 } } }{ -\frac { 1 }{ 100 } } \right) } dx \right\} \left( \therefore \int { udv=uv-\int { vdu } } \right) \)
= \(\left[ \left( 1000 \right) \left( { e }^{ -1 } \right) +\left( 1000 \right) \left( { e }^{ -1 } \right) \right] \)
= \(\left[ \left( 1000 \right) \left( 0.3679 \right) +\left( 1000 \right) \left( 0.3679 \right) \right] \)
= 7358 மணிகள்
எனவே, வானொலி குழலின் சராசரி வாழ்நாள் 7,358 மணிகள் ஆகும்.
12.
X என்பது சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் மாதாந்திர மின்சாரக் கட்டணம்
\(\mu=225, \sigma=55\)
\(\mathrm{Z}=\frac{X-\mu}{\sigma}=\frac{100-225}{55}=-2.27\)
\(P(X \leq 100) =P(Z \leq-2.27) =0.5-P(-2.27 \leq Z \leq 0) \)
=0.5-0.4884=0.0116
13.
(i) சிறுமத்தில் பெருமம்
(3000, 1000,6000) ன் மீப்பெரு மதிப்புகள் = 6000, எனவே கடன் பத்திரங்கள் மூலம் முதலீடு செய்வதே சிறந்த திட்டமாகும்.
(ii) பெருமத்தில் சிறுமம்.
(10,000, 8000, 6000)-இன் மீச்சிறு மதிப்புகள் = 6000, எனவே கடன் பத்திரங்கள் மூலம் முதலீடு செய்வதே சிறந்த திட்டமாகும்.
14.
கீழ்க்காணும் முறைகளின் மூலம் நாம் போக்கு மதிப்பை அளவிட முடியும்.
(i) வரைபட முறை (Freehand or Graphic Method).
(ii) பகுதி சராசரி முறை (Method of Semi Averages).
(iii) நகரும் சராசரி முறை (Method of Moving Averages).
(iv) மீச்சிறு வர்க்க முறை (Method of Least Squares).
15.
மாதிரியின் அளவு= 100, \(\bar { x } \) = 7.4, σ -ன் மதிப்பு தெரியாத
நிலையில் உள்ளது. ஆனால் \(\hat { \sigma } \) = s = 1.2
\(\breve { \sigma } =s\quad { Z }_{ \frac { \alpha }{ 2 } }=1.96\)
\(S.E=\frac { \breve { \sigma } }{ \sqrt { n } } =\frac { s }{ \sqrt { n } } =\frac { 1.2 }{ \sqrt { 100 } } =0.12\)
95% நம்பிக்கை இடைவெளியில் முழுமைத்தொகுதியின் சராசரியானது
\(\bar { x } -{ Z }_{ \frac { \alpha }{ 2 } }\frac { \sigma }{ \sqrt { n } } <\mu <\bar { x } +{ Z }_{ \frac { \alpha }{ 2 } }\frac { \sigma }{ \sqrt { n } } \)
\(7.4-(1.96\times 0.12)\le \mu \le 7.4+(1.96\times 0.12)\)
\(7.4-0.2352\le \mu \le 7.4+0.2352\)
\(7.165\le \mu \le 7.635\)
முழுமைத்தொகுதியின் சராசரி வலிமைத் திறனாது (7.165,7.635) என்ற 95% நம்பிக்கை இடைவெளிக்குள் உள்ளது.
16.
(ii) கொடுக்கப்பட்ட MC=2+5ex
C=\(\int { MC } dx+k\)
=\(\int { (2+5{ e }^{ x }) } dx+k\)
=2x+5ex+k
சராசரி விலை =\(\frac { C }{ x } =\frac { 2x+{ 5e }^{ x }+95 }{ x } \)
AC=\(2+\frac { 4e^{ x } }{ x } +\frac { 95 }{ x } \).
17.
f(x) -ல் நான்கு மதிப்புகள் கொடுக்கப்பட்டிருப்பதால், f(x) ஒரு மூன்றாம்படி பல்லுறுப்பைக்கோவை என எடுத்துக் கொள்வோம்.
∴ Δ4 (y0) = 0
⇒ (E - 1)4 (y0) = 0
⇒ (E4 - 4E3 + 6E2 - 4E + 1) y0 = 0
⇒ (E4 y0 - 4E3 y0 + 6E2 y0 - 4E y0 + 1+ y0 = 0
⇒ y4 - 4y3 + 6y2 - 4y1 +y0 = 0
⇒ 81 - 4(y3) + 6(9) - 4(3) + 1 = 0
⇒ 124 = 4y3 = 0
⇒ y3 = 31
18.
ஆதி வழிச்செல்லும் நேர்கோட்டுத் தொகுப்பைக் குறிக்கும் சமன்பாடு
y = mx ⇒ \(\frac { dy }{ dx } = m \)
y=x\(\frac { dy }{ dx } \)
19.
\(\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ \sqrt { 1+\cos\ x } dx } \)
cos 2x = 2 cos2 x-1
⇒ 1+cos 2x = 2 cos2x
⇒ 1+cos 2x = 2 cos2 \(\frac { x }{ 2 } \)
\(\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ \sqrt { 1+\cos\ x } dx } =\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ \sqrt { 2{ \cos }^{ 2 }\frac { x }{ 2 } } } dx\)
\(=\sqrt { 2 } \int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ \cos } \frac { x }{ 2 } dx\)
\(=\sqrt { 2 } { { \left( \frac { \sin\frac { x }{ 2 } }{ \frac { 1 }{ 2 } } \right) }_{ 0 }^{ \frac { \pi }{ 2 } } }\)
\(=2\sqrt { 2 } \left( \sin\frac { \pi }{ 2(2) } -\sin \frac { 0 }{ 2 } \right) \)
\(=2\sqrt { 2 } \left( \sin\frac { \pi }{ 4 } -\sin0 \right) \)
\(=2\sqrt { 2 } \left[ \frac { 1 }{ \sqrt { 2 } } -0 \right] \)
20.
அணி சமன்பாடு
\(\left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 2 & 3 \\ 1 & 4 & 7 \end{matrix} \right) \left( \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right) =\left( \begin{matrix} 6 \\ 14 \\ 30 \end{matrix} \right) \)
A X = B
| விரிவுபடுத்தப்பட்ட அணி [A,B] | அடிப்படை உருமாற்றங்கள் |
| \(\left( \begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 4 \end{matrix}\begin{matrix} 1 \\ 3 \\ 7 \end{matrix}\begin{matrix} 6 \\ 14 \\ 30 \end{matrix} \right) \) | |
| ~\(\left( \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 2 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 4 \end{matrix}\begin{matrix} 6 \\ 8 \\ 16 \end{matrix} \right) \) | R2 ⟶ R2 - R1 R3 ⟶ R3 - R1 |
| ~\(\left( \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 0 \end{matrix}\begin{matrix} 6 \\ 8 \\ 00 \end{matrix} \right) \) | R3 ⟶ R3 - 2R2 |
| ρ(A)=2, ρ([A,B])=2 |
கடைசி சமான அணி ஏறுபடி வடிவில் உள்ளது. இதில் இரண்டு பூச்சியமற்ற நிரைகள் உள்ளன.
∴ ρ(A)=ρ([A,B])=2
இங்கு, ρ(A)=ρ([A,B])=2 < மதிப்பிட வேண்டிய மாறிகளின் எண்ணிக்கை
எனவே, கொடுக்கப்பட்ட தொகுப்பு ஒருங்கமைவு உடையது. மேலும் எண்ணிக்கையற்ற தீர்வுகள் உண்டு.
கொடுக்கப்பட்ட தொகுப்பிற்கு சமானமான அணி சமன்பாடு
\(\\ \left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 0 & 1 & 2 \\ 0 & 0 & 0 \end{matrix} \right) \left( \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right) =\left( \begin{matrix} 6 \\ 8 \\ 0 \end{matrix} \right) \)
x+y+z = 6 .....(1)
y+2z=8 .....(2)
(2) ⇒ y=8-2z
(1) ⇒ x=6-y-z=6-(8-2z)-z=z-2
z=k, k\(\in \)R எனக் கொண்டால் வெவ்வேறு தீர்வுகளை நாம் பெறலாம். எனவே கொடுக்கப்பட்ட தொகுப்பு எண்ணிக்கையற்ற தீர்வுகளைப் பெற்றிருக்கும்.
21.
| பொருள்கள் | விலை | அளவு | ||
| 2000 | 2010 | 2000 | 2010 | |
| A | 12 | 14 | 18 | 16 |
| B | 15 | 16 | 20 | 15 |
| C | 14 | 15 | 24 | 20 |
| D | 12 | 12 | 29 | 23 |
| p0q0 | p0q1 | p1q0 | p1q1 |
| 216 | 192 | 252 | 224 |
| 300 | 225 | 320 | 240 |
| 336 | 280 | 360 | 300 |
| 348 | 276 | 348 | 276 |
| 1200 | 973 | 1280 | 1040 |
லாஸ்பியரின் விலைக் குறியீட்டு எண்
\(P^{L}_{01}\) = \({\frac {\sum p_{1}q_{0}}{\sum p_{0}q_{0}}} \times 100\)
= \(\frac {1280}{1200} \times {100}\) = 106.66
பாசியின் விலைக் குறியீட்டு எண்
\(P^{P}_{01}\) = \({\frac {\sum p_{1}q_{1}}{\sum p_{0}q_{1}}} \times 100\)
= \(\frac {1040}{973} \times {100}\) = 106.88
ஃபிஷர் விலைக் குறியீட்டு எண்
\(P_{01}^{F }=\sqrt{P_{01}^{L } \times P_{01}^P}=\sqrt{106.6 \times 106.8}=106.7\)
22.
நிரல்களின் எண்ணிக்கையும் நிரைகளின் எண்ணிக்கையும் சமமாக உள்ளன. எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமச்சீரான ஒதுக்கீடு கணக்காகும்.
ஒவ்வொரு நிரையில் உள்ள மீச்சிறு மதிப்பை அந்த நிரையில் உள்ள அனைத்து மதிப்புகளிலிருந்தும் கழிக்க வேண்டும்.
ஒவ்வொரு நிரலில் உள்ள மீச்சிறு மதிப்பை அந்த நிரலில் உள்ள அனைத்து மதிப்புகளிலிருந்தும் கழிக்க வேண்டும்.
உகந்த ஒதுக்கீடு செய்ய முடியாது என்பதால் அனைத்து பூஜ்ஜியங்களையும் வெட்டுமாறு குறைந்தபட்ச எண்ணிக்கையிலான நேர்கோடுகளை வரையவும்
நேர்க்கோடுகளின் எண்ணிக்கை 3 < நிரைகளின் எண்ணிக்கை, நேர்க்கோடுகள் வெட்டாத மதிப்புகளின் மீச்சிறு மதிப்பு 15.எனவே, அவற்றுடன் 15ஐ கழிக்க மற்றும் இரு கோடுகள் வெட்டும் மதிப்புடன் 15ஐ கூட்டுக.
அனைத்து ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன.
உகந்த ஒதுக்கீடு மற்றும் மொத்த தொலைவு
உகந்த தொலைவு =570 மைல்கள்
23.
கூறின் அளவு n = 400 கடைகள்
கூறு சராசரி \(\bar { x } \) = 153.7 சோதனைகள்
கூறு திட்ட விலக்கம் SD s = 17.2 சோப்புகள்
முழுமைத் தொகுதியின் திட்டவிலக்கம் m = 146.3 சோப்புகள்
முழுமைத் தொகுதியின் திட்டவிலக்கம் கொடுக்கப்படாததால் கூறு திட்ட விலக்கம் s =σ என கொள்வோம்.
இன்மை கருதுகோள் : விளம்பர பிரச்சாரம் வெற்றியாக இல்லை. H0 : μ = 146.3 (விளம்பரத்திற்கு முன்னும் பின்னும் வாராந்திர சோப்பு விற்பனையில் சிறப்பான வித்தியாசம் இல்லை)
மாற்று கருதுகோள் H0 : μ> 146.3 (வலதுமுனை சோதனை) விளம்பர பிரச்சாரம் வெற்றிகரமானதாக உள்ளது)
மிகைகாண் நிலை ∝ = 0.05
கூறுபண்பளவை சோதனைக்கு ஏற்பக் கணக்கிடல்
\(Z=\frac { \bar { x } -\mu }{ \frac { \sigma }{ \sqrt { n } } } \sim N(0,1)\)
\(Z=\frac { 153.7-146.3 }{ \frac { 17.2 }{ \sqrt { 400 } } } \)
\(=\frac { 7.4 }{ 0.86 } =8.605\)
\(\therefore\) Z=8.605
கணக்கிடப்பட்ட மதிப்பு Z = 8.605 மற்றும் எதிர்பார்க்கப்படும் மதிப்பு அல்லது அட்டவணை மதிப்பு Z∝ = 1.645 ஆகியவற்றிலிருந்து 8.605 > 1.645 என பெறுகிறோம்.
கண்டறியப்பட்ட மதிப்பானது அட்டவணை மதிப்பை விட அதிகமாக உள்ளதால் Z>Z∝ , 5% மிகைகாண் நிலையில் இன்மை கருதுகோள் H0 மறுக்கப்படுகிறது. எனவே விளம்பர பிரச்சாரம் சோப்பு விற்பனையை அதிகரித்துள்ளது என கருதலாம்.
24.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
மொத்த தேவைகள் = மொத்த இருப்புகள் = 30
எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
போக்குவரத்து விவரம் :
A → I,B → I, B → II, C → II,C → III
மொத்த போக்குவரத்து செலவு
= (7 ×1) + (3×0) + (9×4) + (1×1) + (10×5)
= 7 + 0 + 36 + 1 + 50 = ரூ.94
25.
X - ன் சராசரி \(=\mathrm{E}(\mathrm{X})=\int_{-\infty}^{\infty} x f(x) d x \)
\( =\int_1^{\infty} x\left(\frac{3}{x^4}\right) d x \)
\(=3 \int_1^{\infty} x^{-3} d x=3\left[\frac{x^{-2}}{-2}\right]_1^{\infty} \)
\(=\frac{-3}{2}\left[\frac{1}{x^2}\right]_1^{\infty}=\frac{-3}{2}\left[\frac{1}{\infty}-1\right]=\frac{3}{2} \)
\(\mathrm{E}(\mathrm{X})^2 =\int_{-\infty}^{\infty} x^2 f(x) d x=\int_1^{\infty} x^2\left(\frac{3}{x^4}\right) d x \)
\( =3 \int_1^{\infty} \frac{1}{x^2} d x=3 \int_1^{\infty} x^{-2} d x \)
\( =3\left[\frac{x^{-1}}{-1}\right]_t^{\infty}=-3\left[\frac{1}{x}\right]_1^{\infty} \)
\(=-3[0-1]=3\)
X - ன் திட்டவிலக்கம் \(=E\left(X^2\right)-[E(X)]^2\)
\(=3-\left(\frac{3}{2}\right)^2=3-\frac{9}{4}=\frac{3}{4}\)
26.
X என்ற சமவாய்ப்பு மாறியானது குறைபாடுள்ள பொருட்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. p = குறைபாடு உள்ள பொருட்களின் நிகழ்தகவு
\( \mathrm{p}=\frac{5}{100}=0.05 \)
\( \mathrm{q}=1-\mathrm{p}=1-0.05=0.95 \)
\( \mathrm{n}=20 \)
\( \mathrm{P}(\mathrm{X}=x)=\mathrm{nC}_x \mathrm{p}^x \mathrm{q}^{\mathrm{n}-x}\)
(i) \(P(X=3) =20 C_3(0.05)^3(0.95)^{17} \)
\(=\frac{20 \times 19 \times 18}{3 \times 2 \times 1}(0.000125)(0.4181)\)
=0.059
(ii) \(P(X \geq 2)=1-\mathrm{P}(\mathrm{X}<2) \)
\(=1-[\mathrm{P}(\mathrm{X}=0)+\mathrm{P}(\mathrm{X}=1)] \)
\(=1-\left[20 \mathrm{C}_0(0.05)^0(0.95)^{20}+\right. \left.20 \mathrm{C}_1(0.05)^1(0.95)^{19}\right] \)
\( =1-(0.95)^{19}[0.95+20(0.05)]\)
=1-(0.37735)(1.95)=1-0.7358
=0.2642
(iii) \(P(X=4)=20 C_4(0.05)^4(0.95)^{16} \)
\(=\frac{20 \times 19 \times 18 \times 17}{4 \times 3 \times 2 \times 1} \times(0.00000625)(0.4401) =0.0133\)
(iv) சராசரி \(= n p=20 \times\left(\frac{5}{100}\right)=1 \)
மாறுபாடு \( =n p q=20 \times \frac{5}{100} \times \frac{95}{100}=0.95
\)
27.
படுகை சமவாய்ப்பு கூறெடுப்பு முறையில் முழுமைத்தொகுதி பல துணை முழுமைத் தொகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. இவற்றை படுகை (Strata) என அழைக்கிறோம். பிறகு ஒவ்வொரு படுகையிலிருந்தும் சமவாய்ப்பு முறையில் கூறுகள் (மாதிரிகள்) தெரிவு செய்யப்படுகிறது. எல்லா படுகைகளிலிருந்தும் பெறப்பட்ட கூறுகளின் தொகுப்பே படுகை கூறெடுப்பாகும்.
முழுமைத்தொகுதியானது அதன் பண்புகளைப் பொறுத்து அதாவது ஒத்த பண்பற்றவையாகவோ (heterogeneous), அல்லது வெவ்வேறு பகுதிகளாகவோ (துண்டுகளாகவோ) அல்லது பிரிவுகளாகவோ இருக்கும் போது படுகை கூறெடுப்பு முறை பயன்படுகிறது. படுகை கூறெடுப்பு முறையின் மூலம் கூறுகளை தெரிவு செய்வதற்கு முன், முழுமைத்தொகுதியை ஒத்த பண்புகள் (homogeneous) உடைய துணைப் பிரிவுகளாக அல்லது படுகைகளாக (Strata) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு படுகையிலிருந்தும் கூறுகள் தெரிவு செய்யப்படவேண்டும். படுகை கூறெடுப்பு முறையில் சமவாய்ப்பு மாதிரிகளை தெரிவுசெய்யும் போது பின்பற்ற வேண்டிய படிநிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
(a) முழுமைத்தொகுதியானது ஏறத்தாழ ஒத்த பண்புகளைக் கொண்ட உறுப்புகளாலான வெவ்வேறு படுகைகளாகப் பிரிக்கப்பட வேண்டும். படுகைகள் ஒன்றோடொன்று சேராதவாறு வடிவமைக்கப்படவேண்டும்.
(b) முழுமைத்தொகுதி, படுகைகளாகப் பிரிக்கப்பட்டப் பின் ஒவ்வொரு படுகையிலிருந்தும் குறிப்பிட்ட அளவு கொண்ட கூறுகளைச் சமவாய்ப்பு முறையில், குலுக்கல் முறையில் அல்லது சமவாய்ப்பு எண் அட்டவணையிலிருந்து பெறலாம்.
ஒரு மாநிலத்தில் தேர்தலுக்காக, வெவ்வேறு சட்டமன்றப் பகுதிகளை பிரிப்பது மாநிலத்திலிருந்து மாவட்டங்களை பிரிப்பது படுகைகளுக்கான எடுத்துக்காட்டுகள், இதுபோன்ற மற்ற நிகழ்வுகளிலும் படுகை கூறெடுப்பு முறை பயன்படுத்தப்படுகிறது.
28.
x என்பது மதிப்பெண் மற்றும் y என்பது மாணவர்களின் எண்ணிக்கை என்க.
கூட்டு நிகழ்வெண் பரவலில் மாற்றம் செய்த பிறகு கிடைக்கும் வேறுபாட்டு அட்டவணை.
| x | y | Δy | Δ2y | Δ3y | Δ4y |
| 40-க்குக் குறைவான | 31 | ||||
| 42 | |||||
| 50 | 73 | 9 | |||
| 51 | -25 | ||||
| 60 | 124 | -16 | 37 | ||
| 35 | 12 | ||||
| 70 | 159 | -4 | |||
| 31 | |||||
| 80 | 190 |
y(x=x0+nh)= \({ y }_{ 0 }+\frac { n }{ 1! } \triangle y_{ 0 }+\frac { n(n-1) }{ 2! } { \triangle }^{ 2 }{ y }_{ 0 }+\frac { n(n-1)(n-2) }{ 3! } { \triangle }^{ 0 }y_{ 0 }+....\)
x = 45 இடத்து y-ஐக் காண் வேண்டும்.
∴ x0+nh=45, x0=40, h=10 ⇒ \(\frac{1}{2}\)
y(x=45)=31+\(\frac { 1 }{ 2 } \times 42+\frac { \frac { 1 }{ 2 } \left( \frac { -1 }{ 2 } \right) }{ 2 } (9)+\frac { \frac { 1 }{ 2 } \left( \frac { -1 }{ 2 } \right) \left( \frac { -3 }{ 2 } \right) }{ 6 } \times 25+\frac { \frac { 1 }{ 2 } \left( \frac { -1 }{ 2 } \right) \left( \frac { -3 }{ 2 } \right) \left( \frac { -5 }{ 2 } \right) }{ 24 } \times (37)\)
= 31+21-\(\frac { 9 }{ 8 } -\frac { 25 }{ 16 } -\frac { 37\times 15 }{ 128 } \)
=47.867 ≅48
29.
| x | y | Δy | Δ2y | Δ3y |
|---|---|---|---|---|
| 1951 | 35 | |||
| 1961 | 42 | 7 | ||
| 1971 | 58 | 16 | 9 | |
| 1981 | 84 | 26 | 10 | 1 |
1955 - ஆம் வருடத்தின் மக்கள்தொகை காண,அதாவது x = 1955 எனில்,
நியூட்டனின் முன்நோக்கு இடைச்செருகல் சூத்திரத்தைப் பயன்படுத்த
\({ y }={ y }_{ 0 }+\frac { n }{ 1! } =\triangle { y }_{ 0 }+\frac { n(n-1) }{ 2! } { \triangle }^{ 2 }{ y }_{ 0 }+\frac { n(n-1)(n-2) }{ 3! } { \triangle }^{ 3 }{ y }_{ 0 }+...\)
இங்கு x0 + nh = 1955 ⇒ 1951 + n(10) = 1955
⇒ 10n = 1955 - 1951 = 4
⇒ 4/10 = 0.4
\({ y }=35+0.4(7)+\frac { (0.4)(0.4-1) }{ 2 } (9)+\frac { (0.4)(0.4-1) }{ 6 } (1)\)
⇒ y = 35 + 2.8 + (0.2)(-0.6)(9) + \(\frac { (0.4)(-0.6)(-1.6) }{ 6 } \)
⇒ y = 37.8 - 1.08 + 0.384/6
⇒ y = 37.8 - 1.08 + 0.064
⇒ y(x=1955) = 36.784
= 36.784 (இலட்சங்கள்)
30.
x-y\(\frac { dx }{ dy } =a\left( { x }^{ 2 }+\frac { dx }{ dy } \right) \)
\(x-y\frac { dx }{ dy } =ax^{ 2 }+a\frac { dx }{ dy } \)
x-ax2=\(a\frac { dx }{ dy } +y\frac { dx }{ dy } \)
x(1-ax)=(a+y)\(\frac { dx }{ dy } \)
மாறிகளை பிரிக்க, நாம் பெறுவது
\(\frac { dx }{ x(1-ax) } =\frac { dy }{ a+y } \)
\(\left( \frac { a }{ 1-ax } +\frac { 1 }{ x } \right) dx=\frac { dy }{ a+y } \)
தொகையிட, \(\int { \left( \frac { a }{ 1-ax } +\frac { 1 }{ x } \right) dx } =\int { \frac { dy }{ a+y } } \)
-log(1-ax)+logx=log(a+y)+logc
\(\log\left( \frac { x }{ 1-ax } \right) \)=log(c(a+y))
\(\left( \frac { x }{ 1-ax } \right) \)=c(a+y)
x = (1-ax)(a+y)c என்பது தேவையான தீர்வாகும்.
31.
இறுதிநிலை செலவு சார்பு C'(x)=5+0.13x
\(C(x) =\int(5+0.13 x) d x \)
\( =5 x+\frac{0.13 x^2}{2}+k_1\)
\( =5 x+0.065 x^2+\mathrm{k}_1\)
x =0, C=120 எனில்,\(\mathrm{k}_1=120\)
செலவுச் சார்பு : \( C(x)=5 x+0.065 x^2+120 \)
\( R^{\prime}(\mathrm{x})=18 \)
வருவாய்ச் சார்பு : \( \mathrm{R}=\int 18 d x=18 x+\mathrm{k}_2 \)
x = 0, R = 0 எனில்
\( \mathrm{k}_2=0 \)
\( \mathrm{R}=18 x \)
இலாபச் சார்பு : \(\text { P(x ) }=\mathrm{R}(x)-\mathrm{C}(x) \)
\(=18 x-5 x-0.065 x^2-120 \)
\(=13 x-0.065 x^2-120 \)
32.
\(\int _{ a }^{ b }{ f(x)dx } =\underset { n\rightarrow \infty \\ h\rightarrow 0 }{ lim } \sum _{ r=1 }^{ n }{ h.f\left( a+rh \right) } \)
இங்கு a = 0, b = 1
\(h=\cfrac { b-a }{ n } =\cfrac { 1-0 }{ n } =\cfrac { 1 }{ n } \)மற்றும் f(x) = x2
\(f(a+rh)=f\left( 0+r.\cfrac { 1 }{ n } \right) =f\left( \cfrac { r }{ n } \right) \)
= \(\left( \cfrac { r }{ n } \right) ^{ 2 }=\cfrac { { r }^{ 2 } }{ { n }^{ 2 } } \)
\(\therefore \int _{ 0 }^{ 1 }{ { x }^{ 2 }dx } =\underset { n\rightarrow \infty }{ lim } \sum _{ r=1 }^{ n }{ \frac { 1 }{ n } } \left( \frac { { r }^{ 2 } }{ { n }^{ 2 } } \right) \)
= \(\underset { n\rightarrow \infty }{ lim } \frac { 1 }{ { n }^{ 3 } } .\frac { n(n+1)(2n+1) }{ 6 } \)
\(=\underset { n\rightarrow \infty }{ \lim }\cfrac { 1 }{ 6n ^ 2 }[n(2 n^2 +3n+1)]\)
\(=\underset { n\rightarrow \infty }{ lim }[ \left( \cfrac { 1 }{ 3 } +\cfrac { 1 }{ 2n }+\cfrac { 1 }{ 6n ^2 } \right) ]\)
= \(\cfrac { 1 }{ 3 } \)
33.
I = \(\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ \frac { { \sin }^{ 7 }x }{ { \sin }^{ 7 }x+{ \cos }^{ 7 }x } dx } \) என்க ---(1)
\(I=\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ \frac { { \sin }^{ 7 }\left( \frac { \pi }{ 2 } -x \right) }{ { \sin }^{ 7 }\left( \frac { \pi }{ 2 } -x \right) +{ \cos }^{ 7 }\left( \frac { \pi }{ 2 } -x \right) } } dx\)
\(\left[ \because \int _{ 0 }^{ a }{ f\left( x \right) } dx=\int _{ 0 }^{ a }{ f(a-x) } dx \right]\)
\(I=\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ \frac { { \cos }^{ 7 }x \ dx }{ { \cos }^{ 7 }x+{ \sin }^{ 7 }x } } \) ---(2)
(1) + (2)
\(2I=\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ \left( \frac { { \sin }^{ 7 }x }{ { \sin }^{ 7 }x+{ \cos }^{ 7 }x } +\frac { \cos^{ 7 }x }{ { \cos }^{ 7 }x+{ \sin }^{ 7 }x } \right) } dx\)
\(=\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ dx } ={ \left[ x \right] }_{ 0 }^{ \frac { \pi }{ 2 } }=\frac { \pi }{ 2 } -0=\frac { \pi }{ 2 } \)
\(\therefore 2I=\frac { \pi }{ 2 } \)
\(\Rightarrow I=\frac { \pi }{ 4 } \)
34.
AB = \(\left( \begin{matrix} 1 & 1 & -1 \\ 2 & -3 & 4 \\ 3 & -2 & 3 \end{matrix} \right) \)\(\left( \begin{matrix} 1 & -2 & 3 \\ -2 & 4 & -6 \\ 5 & 1 & -1 \end{matrix} \right) \)
= \(\left( \begin{matrix} 1-2-5 & -2+4-1 & 3-6+1 \\ 2+6+20 & -4-12+4 & 6+18-4 \\ 3+4+15 &-6-8+3 &9+12-3\end{matrix} \right) \)
= \(\left( \begin{matrix} -6 & 1 & -2 \\ 28 & -12& 20 \\ 22 & -11 & 18 \end{matrix} \right) \)
AB -ன் வரிசை 3 x 3.
எனவே ρ(AB) ≤ 3
AB ∼\(\left( \begin{matrix} 1 & -6 & -2 \\-3& 7& 5 \\ -11 & 22 & 18 \end{matrix} \right) \)C1 ↔️ C2
∼\(\left( \begin{matrix} 1 & -6 & -2 \\0&-11& -1 \\ 0 & -44 & -4 \end{matrix} \right) \)R2 ⟶ R2 + 12R1
R3 ⟶ R3 +11 R1
∼\(\left( \begin{matrix} 1 & -6 & -2 \\0&-11& -1 \\ 0 & 0 & 0 \end{matrix} \right) \)R3 ⟶ R3- R2
ஏறுபடிவ அணியில் உள்ள பூச்சியமற்ற நிரைகளின் எண்ணிக்கை = 2
ρ(AB)=2
BA = \(\left( \begin{matrix} 1 & -2 & 3 \\ -2 & 4 & -6 \\ 5 & 1 & -1 \end{matrix} \right) \)\(\left( \begin{matrix} 1 & 1 & -1 \\ 2 & -3 & 4 \\ 3 & -2 & 3 \end{matrix} \right) \)
=\(\left( \begin{matrix} 1-4+9 & 1+6-6 &-1-8+9 \\ -2+8-18 & -2-12+12 & 2+16-18 \\ 5+2-3 &-5-3+2 &-5+4-3\end{matrix} \right) \)
BA = \(\left( \begin{matrix} 6 & 1 & 0 \\ -12 & -2 & 0\\ 4 & 4 & -1 \end{matrix} \right) \)\({ { R }_{ 2} }\rightarrow \frac { { R }_{ 2 } }{ -2 } \)
BA = -ன் வரிசை 3 x 3.
எனவே ρ(AB) ≤ 3
∼\(\left( \begin{matrix} 6 & 1 & 0 \\ 0 &0& 0\\ 0 & 5 & -6 \end{matrix} \right) \)R2 ⟶ R2 - R1
R3 ⟶ 6R3 - R1
∼ \(\left( \begin{matrix} 6 & 1 & 0 \\ 0 &5&-6\\ 0 & 0 & 0 \end{matrix} \right) \)R2 <--> R3
ஏறுபடிவ அணியில் உள்ள பூச்சியமற்ற நிரைகளின் எண்ணிக்கை = 2
அணியின் தரம் ρ(BA )=2
35.
(c)
\(\overset { = }{ X } \) + A2\(\bar { R } \)
36.
(a)
தற்செயல் விளைவு
37.
\(\mathrm{P}(\mathrm{Z}>\mathrm{z}) =0.5832 \)
\(\mathrm{P}(-\mathrm{z}<\mathrm{Z}<0) =0.5832-0.5=0.0832 \)
\(\mathrm{z} =-0.21
\)
38.
\(\mathrm{P}(\mathrm{Z} >2.18)+\mathrm{P}(\mathrm{Z}<-1.75) \)
\(=0.5-\mathrm{P}(0<\mathrm{Z}<2.18)+0.5-\mathrm{P}(0<\mathrm{Z}<1.75) \)
=0.5-0.4854+0.5-0.4599=0.0547
39.
(b)
மொத்த செயல்கள் மற்றும் மொத்த வளங்களை சமப்படுத்த
40.
(c)
m+n–1 –ஐ விட சிறியது
41.
(d)
நிலைத்தன்மை
42.
(b)
43.
(d)
c
44.
(c)
எதிர்பார்த்தல் மதிப்பு
45.
(a)
y(x)=\(\frac { x-{ x }_{ 1 } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 0 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 1 }\)
46.
\(\Delta \mathrm{f}(x) =\mathrm{f}(x+\mathrm{h})-\mathrm{f}(x) \)
\(\Delta\left(x^2\right) =(x+\mathrm{h})^2-x^2 {\left[\because \mathrm{f}(x)=x^2\right]} \)
\(=(x+1)^2-x^2=2 x+1 {[\because \mathrm{h}=1]}
\)
47.
\(\mathrm{m}^2+4 =0 \Rightarrow \mathrm{m}^2=-4 \Rightarrow \mathrm{m} ± 2i \)
\(\alpha =0, \ \beta=2\)
நிரப்புச் சார்பு : \(\mathrm{A} \cos 2 x+\mathrm{B} \sin 2 x\)
48.
(a)
1
49.
(a)
50.
பரப்பு \( =\int_c^d x d y=\int_1^2 y d y \)
\(=\left[\frac{y^2}{2}\right]_1^2=2-\frac{1}{2}=\frac{3}{2}
\) ச.அலகுகள்
51.
(d)
\(\int _{ 0 }^{ \infty }{ { e }^{ -x }x^{ n-1 } } dx\)
52.
\(∵ \int \frac {f '(x)}{f (x )} dx = \log |f (x )|+c \)
இங்கு f (x ) = ex + 1 ; f'(x ) = ex
∴ \(\int { \frac { { e }^{ x } }{ { e }^{ x }+1 } } \)dx = log|ex+1|+c
53.
(c)
ஒருங்கமைவு உடையது
54.
(b)
n
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards