12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Business Maths Reduced Syllabus Two Mark Important Questions - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
5 மின் விளக்குகள் கொண்ட 12 மாதிரிகளின் சராசரி எரியும் காலம் (நேரங்களில்) மற்றும் வீச்சு ஆகியவற்றின் தரவானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது
| மாதிரி எண் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| மாதிரி சராசரி | 1080 | 1390 | 1460 | 1380 | 1230 | 1370 |
| மாதிரி வீச்சு | 410 | 670 | 180 | 320 | 690 | 450 |
| மாதிரி எண் | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| மாதிரி சராசரி | 1310 | 1630 | 1580 | 1510 | 1270 | 1200 |
| மாதிரி வீச்சு | 380 | 350 | 270 | 660 | 440 | 310 |
சராசரி மற்றும் வீச்சு கட்டுப்பாட்டு வரம்புகளைக் கணக்கிடுக. கட்டுப்பாட்டின் நிலை குறித்துக் கருத்து தெரிவிக்கவும்
2.
பின்வரும் புள்ளி விவரங்களுக்கு, 4 ஆண்டுகாலத்தைக் கொண்ட நகரும் சராசரி முறையைப் பயன்படுத்தி போக்கு மதிப்புகளைக் காண்க.
| ஆண்டுகள் | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 |
| விற்பனை | 506 | 620 | 1036 | 673 | 588 | 696 | 1116 | 738 | 663 |
3.
வீச்சு விளக்கப் படத்திற்கான கட்டுப்பாட்டு வரம்புகளை எழுதுக.
4.
சராசரி விளக்கப் படத்திற்கான கட்டுப்பாடு வரம்புகளை எழுதுக.
5.
புள்ளியியல் தரக் கட்டுப்பாட்டின் பயன்கள் யாவை ?
6.
வீச்சு வரைபடங்கள் வரையறு.
7.
சராசரி வரைபடங்கள் என்பதை வரையறு.
8.
மாறிகளுக்கான கட்டுப்பாட்டு வரைபடங்களைக் குறிப்பிடுக
9.
கட்டுப்பாட்டு வரைபடங்கள் என்பதை வரையறுக்கவும்.
10.
செயல்முறை கட்டுப்பாட்டைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
11.
குறிப்பிட்ட காரணங்கள் என்பதை வரையறு.
12.
தற்செயல் காரணங்கள் என்பதை வரையறு.
13.
உற்பத்தி செயல்முறையில் மாறுபாட்டிற்கான காரணங்களின் வகைகளைக் குறிப்பிடுக.
14.
புள்ளிவிவர தரக்கட்டுப்பாடு என்பதை வரையறு.
15.
வரையறு: திட்ட இயல்நிலை மாறி.
16.
ஒரு விவசாயி தனது 100 ஏக்கர் பண்ணையில் மூன்று வகையான பயிர்களைப் பயிரிடத் திட்டமிட்டுள்ளார். இலாபமானது மழை மற்றும் பருவநிலையைப் சார்ந்திருக்கும். அந்த விவசாயி மழை அளவை அதிகம், சராசரி மற்றும் குறைவு என மூன்று வகையாக வகைப்படுத்துகிறார். ஒவ்வொரு வகையான பயிரிலும் அவர் எதிர்பார்க்கும் இலாபம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
எந்த வகையான பயிரை அவர் பயிரிடுவார் என்பதை முடிவு செய்ய (i) மீச்சிறுவின் மீப்பெரு மற்றும் (ii) மீப்பெருவின் மீச்சிறு ஆகியவற்றை பயன்படுத்தி காண்க.
17.
மதிப்பீட்டு அளவை என்றால் என்ன?
18.
புள்ளியியல் அனுமானத்தின் இரண்டு பகுதிகளை எழுதுக?
19.
ஒரு வியாபாரி மூன்று மாற்று நடவடிக்கைகளைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு மாற்று நடவடிக்கைக்கும் இயலக் கூடிய நான்கு நிகழ்வுகள் உள்ளன. ஒவ்வொரு செயல்-நிகழ்வு சேர்கைக்கான நிபந்தனை பங்களிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வியாபாரி மீச்சிறுவின் மீப்பெரு கோட்பாட்டினை பின்பற்றுகிறார் எனில் அவர் எந்த மாற்று நடவடிக்கையை தேர்ந்தெடுக்கிறார் என்பதை கண்டுபிடிக்கவும்.
20.
21.
ஒரு சமவாய்ப்பு மாறி X ஆக இருக்கட்டும் மற்றும் Y = 2X + 1. சமவாய்ப்பு மாறி X -இன் மாறுபாட்டளவு 5 என்றால் Y -இன் மாறுபாட்டளவு என்ன?
22.
சமநிலை போக்குவரத்து கணக்கு என்பதன் பொருள் யாது?
23.
போக்குவரத்து கணக்கின் ஏற்புடையத் தீர்வு மற்றும் சிதைவற்ற தீர்வு என்றால் என்ன?
24.
போக்குவரத்து கணக்கின் கணித வடிவத்தை எழுதுக.
25.
போக்குவரத்து கணக்குகள் என்றால் என்ன?
26.
தனித்த சமவாய்ப்பு மாறியின் கணக்கியல் எதிர்பார்த்தலை வரையறுக.
27.
கணக்கியல் எதிர்பார்த்தலில் அடிப்படையில் மாறுபாட்டு அளவையை நீங்கள் எவ்வாறு வரையறுக்க வேண்டும்?
28.
காலம்சார் தொடர் வரிசையைக் கற்பதன் அவசியம் என்ன?
29.
காலம்சார் தொடர் வரிசையை வரையறு
30.
ஈருறுப்பு பரவல்: வரையறு.
31.
32.
படுகை கூறெடுப்பின் நிறைகள் எவையேனும் மூன்றினை எழுதுக.
33.
தனித்த மற்றும் தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறிகளை வேறுபடுத்தவும்.
34.
ஒரு சேவையகம் வழங்கும் அலைவரிசை ஒரு மணி நேரம் கண்காணிக்கப்பட்டு, சராசரியாக நிமிடத்திற்கு 20 பரிவர்த்தனைகள் நடத்தப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. அதன் பரவற்படி 4 எனில் திட்டப்பிழையைக் காண்க.
35.
பின்வரும் அணிகளின் தரம் காண்க.
\(\left( \begin{matrix} 1 & -1 \\ 3 & -6 \end{matrix} \right) \)
36.
தீர்க்க:
\(\frac { 1+x^{ 2 } }{ 1+y } =xy\frac { dy }{ dx } \)
37.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் வரிசை மற்றும் படி காண்க.
\(\frac { { d }^{ 3 }y }{ dx^{ 3 } } +3\left( \frac { dy }{ dx } \right) ^{ 3 }+2\frac { dy }{ dx } \)=0
38.
இலக்ராஞ்சியின் இடைமதிப்புத்தேற்றத்தைப் பயன்படுத்தி (0, –12), (1, 0), (3, 6) மற்றும் (4,12) என்ற புள்ளிகள் வழிச்செல்லும் பல்லுறுப்புக் கோவையைக் காண்க.
39.
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து விடுபட்ட உறுப்புகளைக் காண்க.
| x | 0 | 5 | 10 | 15 | 20 | 25 |
| y | 7 | 11 | - | 18 | - | 32 |
40.
லாக்ராஞ்சியின் இடைச்செருகலைப் பயன்படுத்தி f(x)-ன் மதிப்பை x=15-ல் காண்க.
| x | 3 | 7 | 11 | 19 |
| f(x) | 42 | 43 | 47 | 60 |
41.
தீர்க்க: 9y"-12y'+4y=0
42.
தீர்க்க: (x2+x+1)dx+(y2-y+3)dy=0
43.
y=mx+c எனும் நேர்கோட்டுத் தொகுப்பில்
(i) m ஒரு மாறத்தக்க மாறிலி
(ii) c ஒரு மாறத்தக்க மாறிலி
(iii) m, c ஆகிய இரண்டுமே மாறத்தக்க மாறிலிகள் எனில் வகைக்கெழுச் சமன்பாடுகள் அமைக்க.
44.
அளிப்புச் சார்பு p =7+x, x =5 எனும்போது உற்பத்தியாளர் உபரியைக் காண்க.
45.
ஒரு பொருளின் தேவைச் சார்பு y=36-x2 எனில், y0= 11- ல் நுகர்வோர் உபரியை காண்க.
46.
பின்வருவனவற்றை மதிப்பிடுக:
\(\int { \frac { dx }{ 2-{ 3x-2x }^{ 2 } } } \)
47.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\frac { 1 }{ { x }^{ 2 }-x-2 } \)
48.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\frac { { x }^{ 3 } }{ x+2 } \)dx
49.
மதிப்பிடுக: \(\int { \frac { dx }{ { \left( 2x+3 \right) }^{ 2 } } } \).
50.
\(\left( \begin{matrix} -5 & -7 \\ 5 & 7 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.
1.
\(\bar{X} =\frac{\Sigma \bar{X}}{n}=\frac{16410}{12}=1367.5 \)
\(\therefore \bar{R} =\frac{\Sigma R}{n}=\frac{5130}{12}=427.5\)
\(\bar{X}\) வரைபடத்தின் கட்டுப்பாட்டு வரம்புகள்
\(\mathrm{UCL} =\overline{\bar{X}}+A_2 \bar{R} \)
=1367.5+0.577(427.5)
=1367.5+246.67=1614.17
\(\mathrm{CL} =1367.5 \)
\(\mathrm{LCL} =\bar{X}-A_2 \bar{R} \)
=1367.5-246.67=1120.83
வீச்சு வரைபடக் கட்டுப்பாடு வரம்புகள்
\(\mathrm{UCL} =D_4 \bar{R} =2.115(427.5)=904.16 \)
\(\mathrm{CL} =427 .5 \)
\(\mathrm{LCL} =D_3 \bar{R}=0\)
சராசரியின் புள்ளிகள் கட்டுப்பாட்டு வரம்பிற்கு வெளியே அமைகிறது.எனவே செயல்முறை கட்டுப்பாட்டுக்குள் இல்லை
2.
| ஆண்டு | விற்பனை | நான்கு ஆண்டு மைய கூட்டுத் தொகை | நான்கு ஆண்டு நகரும் சராசரி |
| 1990 | 506 | - | - |
| 1991 | 620 | ||
| 2835 | 708.75 | ||
| 1992 | 1036 | ||
| 2917 | 729.25 | ||
| 1993 | 673 | ||
| 2993 | 748.25 | ||
| 1994 | 588 | ||
| 3073 | 768.25 | ||
| 1995 | 696 | ||
| 3138 | 784.5 | ||
| 1996 | 1116 | ||
| 3213 | 803.25 | ||
| 1997 | 738 | ||
| 1998 | 663 |
3.
இரு வேறுபட்ட சூழ்நிலைகளில், வீச்சு வரைபடங்களின் (R) வரம்புகளைக் கணக்கிடுவது.
| வகை (i) X மற்றும் திட்டவிலக்கம் கொடுக்கப்படும்போது | வகை (ii) X மற்றும் திட்டவிலக்கம் கொடுக்கப்படாதபோது |
| \(U C L=\bar{R}+3 \sigma_R \) | \(U C L=D_4 \bar{R} \) |
| \(C L=\bar{R} \) | \(C L=\bar{R} \) |
| \(L C L=\bar{R}-3 \sigma_R \) | \( L C L=D_3 \bar{R}\) |
4.
\(\bar X\) வரைபடங்களின் கட்டுப்பாட்டின் வரம்புகளைக் கீழ்க்கண்ட வகைகளில் கணக்கிடலாம்.
| வகை (i) X மற்றும் திட்டவிலக்கம் கொடுக்கப்படும்போது | வகை (ii) X மற்றும் திட்டவிலக்கம் கொடுக்கப்படாதபோது |
| \(U C L=\overline{\bar{X}}+3 \frac{\sigma}{\sqrt{n}} \) | \( U C L=\overline{\bar{X}}+A_2 \bar{R} \) |
| \(C L=\overline{\bar{X}} \) | \(C L=\overline{\bar{X}} \) |
| \(L C L=\overline{\bar{X}}-3 \frac{\sigma}{\sqrt{n}} \) | \( L C L=\overline{\bar{X}}-A_2 \bar{R} \) |
5.
ஆட்டோமொபைல், ஜவுளி, மின் உபகரணங்கள், பிஸ்கட், குளியல் சோப்புகள், இரசாயனங்கள், பெட்ரோலியப் பொருட்கள் போன்ற அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகளிலும் தரக்கட்டுப்பாட்டை நிர்ணயிக்க உதவுகிறது. புள்ளியியல் தரக்கட்டுப்பாட்டின் நோக்கம் குறிப்பிட்ட காரணங்களை நீக்குவது மற்றும் உற்பத்தி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான புள்ளியியல் உத்திகளை வழங்குவதாகும்.
6.
வீச்சு (R) விளக்கப்படம் கொடுக்கப்பட்ட செயல்முறையில் இருந்து பெறப்பட்ட கூறுகளின் மாறுபாடு அல்லது சிதறலைக் காண்பிக்க இவ்வரைபடம் பயன்படுகிறது.
7.
கொடுக்கப்பட்ட செயல்பாட்டில் இருந்து பெறப்பட்ட கூறுகளின் சராசரி தரத்தைக் காண்பதற்கு இந்த \(\bar X \) விளக்கப்படம் பயன்படுத்தப்படுகிறது.
8.
மாறிகளுக்கான இருவகையான கட்டுப்பாட்டு வரைபடங்கள் :
(i) சராசரி வரைபடங்கள் ( \(\bar X\) )
(ii) வீச்சு வரைபடங்கள்(R)
9.
செயல்முறை கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்படும் புள்ளிவிவர படம் கட்டுப்பாட்டு வரைபடமாகும். தரவுகளில் உள்ள வடிவ மாறுபாடுகளைக் கண்டறிவதற்கு இது ஒரு எளிய உத்தியாகும். கட்டுப்பாட்டு விளக்கப்படங்கள் எளிமையாக வடிவமைக்கக்கூடியது மற்றும் எளிதாக விளக்கக் கூடியது.
10.
உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் நிறைவான தர அளவை கட்டுபடுத்துவது மற்றும் பராமரிப்பது ஆகியவை உற்பத்தி செயல் முறையின் முக்கிய நோக்கம் ஆகும். இது செயல்முறைக் கட்டுப்பாட்டின் மூலமே சாத்தியமாகும். செயல்முறை கட்டுப்பாட்டில், உற்பத்தி செயல்முறை மூலம் குறைபாடுள்ள பொருள்களின் விகிதம் குறைக்கப்படவேண்டும். இது கட்டுப்பாட்டு வரைபடங்களின் உத்தியின் மூலம் பெறப்படுகிறது.
11.
குறிப்பிட்ட காரணங்கள் என்பது எந்தவொரு உற்பத்தி செயல்களிலும் ஏற்படும் இரண்டாவது வகை மாறுபாடாகும். இந்த குறிப்பிட்ட காரணங்கள் மூலப்பொருள்கள் பெறுவதிலிருந்து இறுதியாக உற்பத்தி செய்யப்பட்ட பொருள் நுகர்வோரிடம் அளிக்கும் வரை செயல் முறையின் எந்த கட்டத்திலும் நிகழலாம். உதாரணமாக குறைபாடுள்ள மூலப்பொருள்கள், இயந்திரங்களில் தவறு, திறமையற்ற மனித ஆற்றல், பழுதடைந்த கருவிகள், புதிய செயல்பாடு ஆகியவை குறிப்பிட்ட காரணங்களின் முக்கிய காரணிகள் ஆகும்.
12.
வாய்ப்பு காரணங்கள் என்பது உற்பத்தி செயல் முறைகளில் இயற்கையாகவோ அல்லது இயல்பாகவோ ஏற்படும் சிறிய மாறுபாடுகள் ஆகும். இந்த காரணங்களால் ஏற்படும் மாறுபாடுகள் மனித கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகும் இதைத் தடுக்கவோ, அகற்றவோ எந்த சூழ்நிலைகளிலும் முடியாது. பொருள்களின் தரத்திற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத சிறிய விளைவுகள், வாய்ப்பு காரணங்கள் என அழைக்கப்படுகிறது . உதாரணமாக மழை, வெள்ளம், மின்தடை போன்றவை ஆகும்.
13.
ஒரு பொருளின் தரத்தை நிர்ணயிக்கும் மாறுபாட்டின் காரணங்கள் இரண்டு வகைப்படுகிறது. அவை
1. வாய்ப்பு காரணங்கள்
2. குறிப்பிட்ட காரணங்கள்
14.
தரக்கட்டுப்பாடு என்பது பொருள்கள், செயலாக்கம், இயந்திரங்கள் ஆகியவற்றில் காணப்படும் தரக்குறைபாட்டைக் கண்டுபிடிக்க உதவும் வலிமை வாய்ந்த உத்தியாகும். உற்பத்தி செய்யப்பட்ட இறுதி பொருள்கள் நுகர்வோரிடமிருந்து எதிர்பார்க்கக்கூடிய தரத்தைப் பெற்றிருப்பது அவசியமாகும்.
15.
சமவாய்ப்பு மாறி Z = (X–μ)/σ என்பது திட்ட இயல்நிலை பரவலைப் பின்பற்றுமானால் Z என்பது திட்ட இயல்நிலை மாறி என அழைக்கப்படுகிறது. மேலும் அதனுடைய சராசரி 0 மற்றும் திட்டவிலக்கம் 1 ஆகும் அதாவது Z ~ N(0,1) அதன் நிகழ்தகவு அடர்த்திச் சார்பு :
\((z)=\frac{1}{\sqrt{2 \pi}} e^{-\frac{z^2}{2}} -\infty<\mathrm{z}<\infty\)
16.
(i) மீச்சிறுவின் மீப்பெரு மதிப்பு
(2000, 3500, 4000) ன் மீப்பெரு மதிப்பு = 4000 எனவே பயிர் C மிக சிறந்த பயிர் ஆகும்.
(ii) மீப்பெருவின் மீச்சிறு
(8000, 5000, 5000) ன் மீச்சிறு மதிப்பு = 5000, பயிர் B மற்றும் பயிர் C சிறந்த பயிர் ஆகும்.
17.
மதிப்பீட்டு பண்பளவையின் ஒரு குறிப்பிட்ட மதிப்பு, மதிப்பீட்டு அளவை (Estimate) எனப்படும். மாறாக, கண்டறிந்த புள்ளியியல் அளவையின் மதிப்பே மதிப்பீட்டு அளவை ஆகும்.
18.
புள்ளியியல் அனுமானத்திற்கான செயல்பாட்டில் (i) மதிப்பிடுதல் (ii) கருதுகோள் சோதனை எனும் இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன
19.
(–10,–4, 0) இன் மீப்பெரு மதிப்பு = 0. எனவே Z என்ற மாற்று நடவடிக்கையை வியாபாரி தேர்ந்தெடுப்பார் .
20.
21.
\(\operatorname{Var}(a X+b) =a^2 \operatorname{Var}(X)
\)
\(\operatorname{Var}(X) =5 \)
\(\therefore \operatorname{Var}(Y) =\operatorname{Var}(2 X+1) \)
\( =2^2 \operatorname{Var}(X)=4(5)=20\)
22.
மொத்த அளிப்புகள் = மொத்த தேவைகள் கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
23.
ஏற்புடையத் தீர்வுகள்:
கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்யக்கூடிய குறை குறியற்ற xij(i=1,2,..,m, j=1,2,…n) இன் மதிப்புகள் போக்குவரத்து கணக்குகளின் ஏற்புடையத் தீர்வுகளாகும். xij(i=1,2,..,m, j=1,2,…n) இன் மதிப்புகள் போக்குவரத்து கணக்குகளின் ஏற்புடையத் தீர்வுகளாகும்.
சிதைவற்ற அடிப்படை ஏற்புடையத் தீர்வு:
சிதைவற்ற அடிப்படை தீர்வு என்பது போக்குவரத்து கணக்கின் ஏற்புடையத் தீர்வில் சரியாக m+n-1 ஒதுக்கீடுகள் ஒன்றை ஒன்று சாரா நிலையில் அமைந்ததாகும். இங்கு m, n என்பது முறையே நிரை மற்றும் நிரலைக் குறிக்கிறது.
24.
\(\mathrm{Z}=\sum_{i=1}^m \sum_{j=1}^n \mathcal{C}_{i j} x_{i j}\) என்ற கட்டுப்பாடுகளுக்கிணங்க என்ற குறிக்கோள் சார்பின் சிறுமம் காணுதல்.
\( \sum_{j=1}^n x_{i j}=a_i, \mathrm{i}=1,2, \ldots \ldots . m \) (அளிப்பு கட்டுப்பாடுகள்)
\( \sum_{i=1}^m x_{i j}=b_j, \mathrm{j}=1,2, \ldots \ldots . n \) (தேவை கட்டுப்பாடுகள்)
\(x_{i j} \geq 0 \text { for all } i, j \) (குறை குறியற்ற நிபந்தனைகள்)
இங்கு Cij என்பது ஒரு அலகு பொருளை ஆதி i யிலிருந்து சேருமிடம் j வுக்கு கொண்டு செல்ல ஆகும் போக்குவரத்து செலவு cij என்க மற்றும் இதனுடைய எல்லா சேர்வுகள் (i,j) எனத் தெரியும். ஆதி i யிலிருந்து சேருமிடம் j க்கு கொண்டு செல்லும் பொருள்களின் அளவு xij ஆகும்.
25.
மொத்த போக்குவரத்துச் செலவை குறைக்கும் வகையில் ஒவ்வொரு ஆதியிலிருந்து ஒவ்வொரு சேரும் இடத்திற்கு அனுப்பக் கூடிய பொருள்களின் அளவை தீர்மானிப்பது போக்குவரத்து கணக்காகும்.
26.
ஒரு தனித்த சமவாய்ப்பு மாறி X-இன் நிகழ்தகவு நிறை சார்பு p(x) எனில் அதன் எதிர்பார்க்கும் மதிப்பு
\(\mathrm{E}(\mathrm{X})=\sum_x x p(x)
\)
தனித்த சமவாய்ப்பு மாறி X - இன் நிகழ்தகவு நிறை சார்பு p(x) எனில்
\(\operatorname{Var}(\mathrm{X})=\Sigma[x-\mathrm{E}(\mathrm{X})]^2 \mathrm{p}(x)\)
27.
[X - E(X)]2 இன் எதிர்பார்க்கும் மதிப்பானது சமவாய்ப்பு மாறியின் மாறுபாட்டு அளவை என்று அழைக்கப்படுகிறது.
\(\operatorname{Var}(X)=E[X-E(X)]^2=E\left(X^2\right)-[E(X)]^2\)
இங்கு E(X)2
28.
1. கடந்த கால நடவடிக்கைகளை பகுப்பாய்வு செய்வதற்கு.
2. எதிர்கால அம்சங்களை கணிப்பதற்கும் மற்றும் திட்டமிடுவதற்கும் உதவுகிறது.
3. நிகழ்கால செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கு.
4. காலம்சார் தொடரானது ஒரு குறிப்பிட்ட கால வரைவுகளை மற்ற கால வரைவுகளுடன் ஒப்பிட்டு ஆய்வுகள் செய்ய உதவுகிறது.
29.
அளவிடக் கூடிய புள்ளி விவரங்களை அதன் நிகழ்வுகளின்படி வரிசைப்படுத்துவதின் முடிவில் கிடைக்கக்கூடிய தொடரானது காலம்சார் தொடர் வரிசை ஆகும்.
30.
X என்ற சமவாய்ப்பு மாறி ஈருறுப்புப் பரவலைப் பின்பற்றி அதனுடைய பண்பளவைகளான n மற்றும் p ஆகியவை குறையற்ற மதிப்பினைக் கொண்டிருப்பின், அதன் நிகழ்தகவு நிறை சார்பு
P (X = x) = p(x)
31.
32.
(i) படுகை கூறெடுப்பில், கூறுகளின் எண்ணிக்கை சிறிய அளவுள்ளதாக இருப்பினும் அதன் துல்லியத்தன்மை குறைவதில்லை .
(ii) முழுமைத்தொகுதி பகுக்கப்பட்டிருந்தால் எளிதில் நிர்வகிக்க முடியும்.
(iii) அரசானது புவியியல் அடிப்படையில் நிலப்பகுதிகளை இடம் மற்றும் பரப்பளவைப் பொறுத்து படுகைகளாக பிரித்துள்ளதால் நேரம் மற்றும் செலவைக் குறைக்க முடிகிறது.
33.
சாத்தியமான மதிப்புகளால் வரையறுக்கப்பட்ட எண்களை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு மாறி தனித்த சம வாய்ப்பு மாறியாகும்.
ஓர் இடைவெளியில் உள்ள அனைத்து மதிப்புகளையும் (முழுக்களாகவோ, பின்னங்களாகவோ) ஏற்கும் ஒரு சமவாய்ப்பு மாறி X ஆனது தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறியாகும்.
34.
பரவற்படி \(\sigma\)2 =4, \(\sigma\)=2 n =1 மணிநேரம் = 60 நிமிடங்கள், \(\bar { X } \) =20/நிமிடம்
திட்டப்பிழை \(=\frac { \sigma }{ \sqrt { n } } =\frac { 2 }{ \sqrt { 60 } } =0.2582\)
35.
A = \(\left( \begin{matrix} 1 & -1 \\ 3 & -6 \end{matrix} \right) \)என்க
A -ன் வரிசை 2 x 2, எனவே ρ(A) \(\le \) 2
\(\sim \)\(\left( \begin{matrix} 1 & -1 \\ 0 & -3 \end{matrix} \right) \) R2 → R2 -3R1
அணியின் தரம் ρ(A) = 2
36.
\(\frac{1+x^2}{1+y}=x y \frac{d y}{d x}\)
\( \int \frac{\left(1+x^2\right) \mathrm{dx}}{x}=\int(1+y) y d y \)
\( \int \frac{d x}{x}+\int \frac{x^2 d x}{x}=\int\left(y+y^2\right) d y\)
\( \log x+\int x d x=\int\left(y+y^2\right) d y \)
\( \log x+\frac{x^2}{2}=\frac{y^2}{2}+\frac{y^3}{3}+c
\)
37.
\(\frac { { d }^{ 3 }y }{ dx^{ 3 } } +3\left( \frac { dy }{ dx } \right) ^{ 3 }+2\frac { dy }{ dx } =0\)
வரிசை = 3 படி = 1
38.
\( x_0=0, x_1=1, x_2=3, x_3=4 .\)
\( y_0=-12, y_1=0, y_2=6, y_3=12 \text {. } \)
\( \mathrm{y}=\frac{\left(x-x_1\right)\left(x-x_2\right)\left(x-x_3\right)}{\left(x_0-x_1\right)\left(x_0-x_2\right)\left(x_0-x_3\right)} y_0 +\frac{\left(x-x_0\right)\left(x-x_2\right)\left(x-x_3\right)}{\left(x_1-x_0\right)\left(x_1-x_2\right)\left(x_1-x_3\right)} y_1 +\frac{\left(x-x_0\right)\left(x-x_1\right)\left(x-x_3\right)}{\left(x_2-x_0\right)\left(x_2-x_1\right)\left(x_2-x_3\right)} y_2 +\frac{\left(x-x_0\right)\left(x-x_1\right)\left(x-x_2\right)}{\left(x_3-x_0\right)\left(x_3-x_1\right)\left(x_3-x_2\right)} y_3 \)
\( =\frac{(x-1)(x-3)(x-4)}{(-1)(-3)(-4)}(-12) +\frac{(x-0)(x-3)(x-4)}{(1)(-2)(-3)}(0) +\frac{(x-0)(x-1)(x-4)}{(3)(2)(-1)}(6) +\frac{(x-0)(x-1)(x-3)}{(4)(3)(1)}(12) \)
\( y=(x-1)\left(x^2-7 x+12\right)-(x)\left(x^2-5 x+4\right)+x(x^2 -4 x+3) \)
\(=x^3-7 x^2+12 x-x^2+7 x-12-x^3+5 x^2-4 x +x^3-4 x^2+3 x \)
\( =x^3-7 x^2+18 x-12 \)
39.
நான்கு மதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதால் f(x) ஒரு மூன்றாம் படி பல்லுறுப்புக் கோவை என எடுத்துக் கொள்வோம்.
\(\Delta^4 y_0 =0 \)
\((\mathrm{E}-1)^4 \mathrm{y}_0 =0 \)
\(\left(\mathrm{E}^4-4 \mathrm{E}^3+6 \mathrm{E}^2-4 \mathrm{E}+1\right) \mathrm{y}_0 =0 \)
\(\mathrm{y}_4-4 \mathrm{y}_3+6 \mathrm{y}_2-4 \mathrm{y}_1+\mathrm{y}_0 =0 \)
\(\mathrm{y}_4-4(18)+6 \mathrm{y}_2-4(11)+7 =0 \)
\(\mathrm{y}_4-72+6 \mathrm{y}_2-44+7 =0 \)
\(\mathrm{y}_4+6 \mathrm{y}_2 =109 \) ...(1)
\((\mathrm{E}-1)^4 \mathrm{y}_1 =0 \)
\(\left(\mathrm{E}^4-4 \mathrm{E}^3+6 \mathrm{E}^2-4 \mathrm{E}+1\right) \mathrm{y}_1 =0 \)
\(\mathrm{y}_5-4 \mathrm{y}_4+6 \mathrm{y}_3-4 \mathrm{y}_2+\mathrm{y}_1 =0 \)
\(32-4 \mathrm{y}_4+6(18)-4 \mathrm{y}_2+11 =0 \)
\(32-4 \mathrm{y}_4+108-4 \mathrm{y}_2+11 =0 \)
\(4 \mathrm{y}_2+4 \mathrm{y}_4 =151 \) ...(2)
சமன்பாடு (1) மற்றும் (2) ஆகியவற்றைத் தீர்க்க
y2 = 14.25, y4 = 23.5
40.
x0=3, x1 = 7, x2 = 11, x3 = 19, x = 15
y0 = 42, y1 = 43, y2 = 47, y3 = 60
\(y= \frac{\left(x-x_1\right)\left(x-x_2\right)\left(x-x_3\right)}{\left(x_0-x_1\right)\left(x_0-x_2\right)\left(x_0-x_3\right)} y_0 +\frac{\left(x-x_0\right)\left(x-x_2\right)\left(x-x_3\right)}{\left(x_1-x_0\right)\left(x_1-x_2\right)\left(x_1-x_3\right)} y_1 +\frac{\left(x-x_0\right)\left(x-x_1\right)\left(x-x_3\right)}{\left(x_2-x_0\right)\left(x_2-x_1\right)\left(x_2-x_3\right)} y_2 +\frac{\left(x-x_0\right)\left(x-x_1\right)\left(x-x_2\right)}{\left(x_3-x_0\right)\left(x_3-x_1\right)\left(x_3-x_2\right)} y_3 \)
\(= \frac{(8)(4)(-4)}{(-4)(-8)(-16)}(42)+\frac{(12)(4)(-4)}{(4)(-4)(-12)}(43) +\frac{(12)(8)(-4)}{(8)(4)(-8)}(47)+\frac{(12)(8)(4)}{(16)(12)(8)}(60)\)
\(= \frac{42}{4}-43+\frac{47(3)}{2}+15 = 10.5-43+70.5+15=53
\)
41.
(9D2-12D+4)y=0
துணைச் சமன்பாடு:
(3m-2)2=0
(3m-2)(3m-2)=0 ⇒ m=\(\frac { 2 }{ 3 } ,\frac { 2 }{ 3 } \)
மூலங்கள் மெய் மற்றும் சமம்
நிரப்புச் சார்பு: C.F=(Ax+B)e2/3x
பொதுத் தீர்வு: y=(Ax+B)e2/3x
42.
(x2+x+1)dx+(y2-y+3)dy=0
இது, f(x)dx+g(y)dy=0 என்ற வடிவில் உள்ளது.
தொகையிட நாம் பெறுவது,
\(\int { ({ x }^{ 2 }+x+1) } dx+\int { ({ y }^{ 2 }-y+3) } dy\)=c
\(\left( \frac { { x }^{ 3 } }{ 3 } +\frac { { x }^{ 2 } }{ 2 } +x \right) +\left( \frac { { y }^{ 3 } }{ 3 } -\frac { { y }^{ 2 } }{ 2 } +3y \right) \)=c
43.
(i) y=mx+c .....(1)
m மட்டுமே மாறத்தக்க மாறிலி என்பதால், ஒருமுறை வகைப்படுத்த கிடைப்பது
\(\frac { dy }{ dx } \)=m .....(2)
(1) மற்றும் (2) -லிருந்து m-ஐ நீக்குவதால் கிடைக்கும் வகைக்கெழுச் சமன்பாடு
y =x\(\frac { dy }{ dx } \)+c
x\(\frac { dy }{ dx } \)-y+c=0 இதுவே தேவையான முதல் வரிசை வகைக்கெழுச் சமன்பாடு.

(ii) c மாறத்தக்க மாறிலி
சமன்பாடு (1) -ஐ வகைப்படுத்த கிடைப்பது \(\frac { dy }{ dx } \)=m
இந்த சமன்பாட்டில் c நீக்கப்பட்டிருப்பதால், தேவையான வகைக்கெழுச் சமன்பாடு \(\frac { dy }{ dx } \)=m ஆகும்.

(iii) இங்கு m,c ஆகிய இரண்டுமே மாறத்தக்க மாறிலிகள் என்பதால், சமன்பாடு (1) -ஐ இருமுறை வகைப்படுத்த கிடைப்பது
\(\frac { dy }{ dx } \)=m
\(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \)=0
இந்த சமன்பாட்டில் m, c இரண்டுமே நீக்கப்பட்டிருப்பதால் தேவையான வகைக்கெழுச் சமன்பாடு \(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \)=0 ஆகும்.

44.
\( \mathrm{p}=7+x, x=5 \)
\( \mathrm{p}=7+5=12\)
உற்பத்தியாளர் உபரி
\(\text { PS } =x_0 p_0-\int_0^{x_0} g(x) \mathrm{d} x \)
\(=60-\int_0^5(7+x) \mathrm{d} x \)
\(=60-\left[7 x+\frac{x^2}{2}\right]_0^5=60-\left(35+\frac{25}{2}\right) \)
\(=25-\frac{25}{2}=\frac{25}{2} \)
P.S=\(\frac{25}{2}\) அலகுகள்
45.
கொடுக்கப்பட்டவை: y=36-x2 மற்றும் y0=11
11=36-x02
x02=25
x0=5

=\(\int _{ 0 }^{ 5 }{ (36-x^{ 2 }) } dx-5\times 11\)
=\(\left[ 36x-\frac { { x }^{ 3 } }{ 3 } \right] _{ 0 }^{ 5 }-55\)
=\(\left[ 36(5)-\frac { { 5 }^{ 3 } }{ 3 } \right] -55\)
=\(180-\frac { 125 }{ 3 } -55=\frac { 250 }{ 3 }\)
நுகர்வோர் உபரி =\(\frac { 250 }{ 3 } \) அலகுகள்.
46.
\(I=\int { \cfrac { dx }{ 2-3x-{ 2x }^{ 2 } } } \)= \(-\cfrac { 1 }{ 2 } \int { \cfrac { dx }{ { x }^{ 2 }+\frac { 3 }{ 2 } x-1 } } \)
\(=-\cfrac { 1 }{ 2 } \int { \cfrac { dx }{ \left( x+\frac { 3 }{ 4 } \right) ^{ 2 }-1-\frac { 9 }{ 16 } } } \)
= \(-\cfrac { 1 }{ 2 } \int { \cfrac { dx }{ \left( x+\frac { 3 }{ 4 } \right) ^{ 2 }-\frac { 25 }{ 16 } } } \)
= \(\cfrac { 1 }{ 2 } \int { \cfrac { dx }{ \left( \frac { 5 }{ 4 } \right) ^{ 2 }-\left( x+\frac { 3 }{ 4 } \right) ^{ 2 } } } \)
= \(\left[ \because \int { \cfrac { dx }{ { a }^{ 2 }-{ x }^{ 2 } } =\cfrac { 1 }{ 2a } log\left( \cfrac { a+x }{ a-x } \right) } +c \right] \)
= \(\cfrac { 1 }{ 2 } \left[ \cfrac { 1 }{ 2\times \frac { 5 }{ 4 } } log\left[ \cfrac { \frac { 5 }{ 4 } +x+\frac { 3 }{ 4 } }{ \frac { 5 }{ 4 } -x\frac { 3 }{ 4 } } - \right] \right] +c\)

= \(\cfrac { 1 }{ 5 } log\left[ \cfrac { 2+x }{ 1-2x } \right] +c\)
47.
\(\int { \frac { dx }{ { x }^{ 2 }-x-2 } } \)
\(=\int { \frac { dx }{ { \left( { x }^{ 2 }-\frac { 1 }{ 2 } \right) }^{ 2 }-2-\frac { 1 }{ 4 } } } \)
\(=\int { \frac { dx }{ { \left( x-\frac { 1 }{ 2 } \right) }^{ 2 }-{ \left( \frac { 3 }{ 2 } \right) }^{ 2 } } } \)
\(\left[ \because \int { \frac { dx }{ { x }^{ 2 }-{ a }^{ 2 } } =\frac { 1 }{ 2a } \log { \left| \frac { x-a }{ x+a } \right| } +c } \right] \)
\(=\frac { 1 }{ 2\left( \frac { 3 }{ 2 } \right) } \log { \left| \frac { x-\frac { 1 }{ 2 } -\frac { 3 }{ 2 } }{ x-\frac { 1 }{ 2 } +\frac { 3 }{ 2 } } \right| } +c\)
\(=\frac { 1 }{ 3 } \log { \left| \frac { x-2 }{ x+1 } \right| } +c\)
48.
\(\int \frac { { x }^{ 3 } }{ x+2 } dx\)
\(x^{ 3 }=(x+2)\left( x^{ 2 }-2x+4 \right) -8\)
\(\int \frac { x^{ 3 } }{ x+2 } dx=\int \left( x^{ 2 }-2x+4 \right) dx-8\int \frac { dx }{ x+2 }\)
\(=\frac { x^{ 3 } }{ 3 } -\frac { 2x^{ 2 } }{ 2 } +4x-8\log |x+2|+c\)
\(=\frac { x^{ 3 } }{ 3 } -x^{ 2 }+4x-8\log |x+2|+c\)
49.
\(\int { \frac { dx }{ { \left( 2x+3 \right) }^{ 2 } } } \) =\(\int { { \left( 2x+3 \right) }^{ -2 }dx } \)
= \(-\frac { 1 }{ 2\left( 2x+3 \right) } +c\)
50.
A=\(\left( \begin{matrix} -5 & -7 \\ 5 & 7 \end{matrix} \right) \) என்க.
A-ன் வரிசை 2 x 2 ∴ ρ(A) ≤2
இரண்டாம் வரிசை சிற்றணிக்கோவையை கருத, நாம் பெறுவது \(\left| \begin{matrix} -5 & -7 \\ 5 & 7 \end{matrix} \right| \)=0 ஆகும்.
இரண்டாம் வரிசை சிற்றணிக்கோவை பூச்சியமாவதால், ρ(A)≠2
ஒன்றாம் வரிசை கொண்ட ஒரு சிற்றணிக்கோவையை கருத, நாம் பெறுவது |-5| ≠ 0 ஆகும்.
⇒ பூச்சியமற்ற சிற்றணிக்கோவையின் வரிசை 1 ஆகும். ∴ ρ(A) =1
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards