12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Business Maths Syllabus Five Mark Important Questions with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
பின்வரும் சமன்பாடுகளை தீர்க்க:
\(\begin{equation} \frac{2}{x}+\frac{3}{y}+\frac{4}{z}=14, \frac{3}{x}-\frac{2}{y}+\frac{1}{z}=3, \frac{1}{x}+\frac{1}{y}+\frac{1}{z}=5 \end{equation}\)
2.
ஒரு நகரில் மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதி தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதனை இந்த ஆண்டு பயன்படுத்துபவர்கள் 15% பேர் அடுத்த ஆண்டு பயன்படுத்தாமல் சொந்த வாகனத்திற்கு மாறிவிடுவர். மீதி 85% தொடர்ந்து அப்புதிய போக்குவரத்து வசதியைப் பயன்படுத்துபவர்கள். இந்த ஆண்டு சொந்த வாகனத்தை பயன்படுத்துபவர்கள் 70% பேர் அடுத்த ஆண்டும் தொடர்ந்து அதையே பயன்படுத்துவர் மீதி 30% பேர் மெட்ரோ ரயில் வசதிக்கு மாறிவிடுவர். அந்த நகர மக்கள் தொகை மாறாமலிருக்கிறது என்றால் பயணிகளில் அடுத்த ஆண்டில் 60% பேர் புதிய போக்குவரத்து வசதியையும் 40% பேர் சொந்த வாகனத்தை பயன்படுத்துவார்கள் எனக் கொண்டால்
(i) அதற்கு அடுத்த ஆண்டில் எத்தனை சதவீதம் பயணிகள் மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதியை எதிர்பார்க்கலாம்.
(ii) காலப்போக்கில் எத்தனை சதவீதம் பேர் மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதியைப் பயன்படுத்துவர்?
3.
அணிக்கோவை முறையில் தீர்க்க:
2x + 2y - z - 1 = 0, x +y - z = 0, 3x+ 2y-3z = 1
4.
'k ' ன் எந்த மதிப்புகளுக்கு, சமன்பாட்டுத் தொகுப்பு kx + y + z = 1, x + ky + z = 1, x + y + kz = 1 ஆகியன
(i) ஒரே ஒரு தீர்வு
(ii) ஒன்றிற்கு மேற்பட்ட தீர்வுகள்
(iii) தீர்வுகள் இல்லாமல் இருக்கும்?
5.
ஒரு சமவாய்ப்பு மாறி X - இன் நிகழ்தகவு சார்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

P(0≤X≤10)
6.
ஒரு சமவாய்ப்பு மாறி X க்கான நிகழ்தகவு அடர்த்திச் சார்பானது

எனில், E(X) மற்றும் V(X) கண்டுபிடிக்கவும்
7.
2000 மின்விளக்குகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. சோதனையின் முடிவில் ஒரு குறிப்பிட்ட தயாரிப்புகள் சராசரியாக எரியும் நேரமானது இயல்நிலைப் பரவலில் 2040 மணி நேரமும் திட்டவிலக்கமானது 60 மணி நேரமும் உள்ளதாக கணக்கிடப்படுகிறது.
(i) 2150 மணி நேரத்திற்கு மேலாக
(ii) 1950 மணி நேரத்திற்கும் குறைவாக
(iii) 1920 மற்றும் 2100 மணி நேரத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் எத்தனை மின்விளக்குகள் ஒளிரும் என்பதனை மதிப்பீடு செய்க.
8.
ஒரு கணினி மையத்தில் மூன்று திட்டமிடும் நிபுணர்கள் உள்ளனர். அந்த மையத்தில் மூன்று பயன்பாட்டு திட்டங்கள் ஏற்படுத்தப்படவேண்டும். மையத்தின் தலைவர் திட்டங்களை கவனமாக பரிசீலித்து, மூன்று திட்டமிடல் நிபுணர்கள் எடுத்துக் கொள்ளும் கணினி நேரத்தை மதிப்பீடு செய்கிறார்.
மொத்த கணினி நேரத்தை குறைக்குமாறு திட்டங்களுக்கான திட்ட நிபுணர்களை ஒதுக்கீடு செய்க
9.
இயல்நிலை பரவலில் உள்ள ஒரு தொழிற்சாலை ஊழியர்களின் ஊதியங்களின் சராசரி μ மற்றும் மாறுபாட்டளவை 25 என்க. 50 பணியாளர்கள் கொண்ட ஒரு கூறில் உள்ளவர்களின் மொத்த ஊதியம் ரூ.2,550 என்க. கருதுகோள், μ = 52, என்பதையும் அதற்கு மாறான கருதுகோள் μ = 49 யையும் 1% மிகைகாண் நிலையில் சோதனை செய்க.
10.
ஒரு காப்பீட்டு நிறுவனம், 0.1 சதவீத மக்கள் மட்டுமே ஒவ்வொரு வருடமும் விபத்துக்கு உட்படுகிறார்கள் என்பதைக் கணிக்கின்றனர். காப்பீடு செய்துள்ள 10,000 பாலிசிதாரர்களை சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அடுத்து வரக்கூடிய ஆண்டில் 5-க்கு மிகாமல் வாடிக்கையாளர்கள் விபத்துக்குள்ளாவதற்கான நிகழ்தகவு என்ன? ( e-10 =.000045)
11.
12.
ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி X ஆனது பின்வரும் நிகழ்தகவுச் சார்பைப் பெற்றுள்ளது எனில்
| X=x | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| P(x) | 0 | k | 2k | 2k | 3k | k2 | 2k2 | 7k2+k |
(i) k ன் மதிப்பைக் காண்க .
(ii) p( x < 6), p(x ≥ 6) மற்றும் p(0 < x < 5) ஐக் காண்க .
(iii) P(X≤ x) > \(\frac { 1 }{ 2 } \)க்கான x இன் குறைந்தபட்ச மதிப்பைக் கண்டுபிடிக்கவும்.
13.
ஒரு குறிப்பிட்ட அடுமனையில் ஒரு நாளில் விற்று முடிந்த ரொட்டி X-இன் அளவுகள் (நூறு பவுண்டுகளில்) ஒரு எண் சார்ந்த சமவாய்ப்பு நிகழ்வாகக் கண்டறியப்பட்டது. அதன் நிகழ்தகவானது, f(x) என்ற நிகழ்தகவு அடர்த்தி சார்பின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது எனில்

(a) A -இன் மதிப்பை காண்க .
(b) மறுநாளைக்கு விற்கப்படவிருக்கும் ரொட்டிகளின் எண்ணிக்கைக்கான பவுண்டுகளின் நிகழ்தகவு என்ன?
(i) 10 பவுண்டுகளுக்கு அதிகமாக.
(ii) 10 பவுண்டுகளுக்குக் குறைவாக
(iii) 5 மற்றும் 15 பவுண்டுகளுக்கு இடையில்
14.
வெவ்வேறு வயதில் முடியும் முதிர்வு காலத்திற்கான செலுத்தப்படும் அரைவருட காப்பீட்டுத்தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 63 வயதில் முதிர்வு காலம் கொண்ட ஒரு பிரிமியத்தின் காப்பீட்டுத் தொகை காண்க.
| வயது | 45 | 50 | 55 | 60 | 65 |
| காப்பீட்டுத் தொகை | 114.84 | 96.16 | 83.32 | 74.48 | 68.48 |
15.
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைக் கொண்டு x=32 எனில் f(x) ன் மதிப்பைக் காண்க.
| x | 30 | 35 | 40 | 45 | 50 |
| f(x) | 15.9 | 14.9 | 14.1 | 13.3 | 12.5 |
16.
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு 1964 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளுக்கான உற்பத்திகளைக் காண்க.
| வருடம் | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 |
| உற்பத்தி | 200 | 220 | 260 | - | 350 | - | 430 |
17.
வகைக்கெழு சமன்பாட்டைத் தீர்க்க y2dx+(xy+x2)dy=0
18.
x கையுறைகளை தயாரிப்பு செய்வதற்கான இறுதிநிலைச் செலவுச்சார்பு 6+10x-6x2 ஒரு ஜோடி கையுறைகளை உற்பத்தி செய்ய ஆகும் மொத்த செலவு ரூ.100 எனில், மொத்த செலவுச் சார்பு மற்றும் சராசரி செலவுச்சார்பு ஆகியவற்றை காண்க.
19.
நெகிழ்ச்சி சார்பு \(\frac { { E }_{ y } }{ { E }_{ x } } =\frac { x }{ x-2 } \). x =6 மற்றும் y =16 எனும் போது அதன் தொடக்க நிலைச் சார்பைக் காண்க.
20.
ஒரு நிறுவனத்தின் உற்பத்தி பொருள்களின் இறுதிநிலை செலவு சார்பு C'(x)=5+0.13x, இறுதிநிலை வருவாய் சார்பு R'(x) =18 மற்றும் மாறாச் செலவு ரூ.120 எனில், இலாபச் சார்பைக் காண்க.
21.
வரையறுத்த தொகையீட்டை ஒரு கூட்டலின் எல்லை எனக் கொண்டு கீழ்க்காணும் தொகையீடுகளை மதிப்பிடுக.
\(\int _{ 1 }^{ 3 }{ (2x+3) } dx\)
22.
மதிப்பிடுக: \(\int { { \left( \log x \right) }^{ 2 } } dx\)
23.
ஒரு வாரப் பத்திரிக்கைக்குச் சந்தா கட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படும் கடிதம் அந்த பத்திரிக்கை அலுவலகத்திலிருந்து ஏராளமானவர்களுக்கு அனுப்பப்படுகிறது. கடிதம் பெற்றவர்களில், சந்தாதாரர்களாக இருந்து மீண்டும் சந்தா கட்டுபவர்கள் 60% ஆகும். சந்தாதாரர்களாக இல்லாமலிருந்து புதியதாக சந்தா கட்டுபவர்கள் 25% ஆகும். இதே போல் முன்னர் கடிதம் அனுப்பப்பட்ட போது கடிதம் பெற்றவர்களில் 40% பேர் சந்தாதாரர்களாகச் சேர்ந்தனர் எனத் தெரிகிறது. தற்போது கடிதத்தைப் பெறுபவர்களில் எத்தனை சதவீதம் பேர் சந்தாதாரர்களாவர் என எதிர்பார்க்கலாம்.
24.
3 வணிகக் கணிதப் புத்தகங்கள், 2 கணக்குப்பதிவியல் புத்தகங்கள் மற்றும் ஒரு வணிகவியல் புத்தகம் ஆகியவற்றின் மொத்த விலை ரூ.840. இரண்டு வணிகக் கணித புத்தகங்கள், ஒரு கணக்குபதிவியல் மற்றும் ஒரு வணிகவியல் புத்தகத்தின் மொத்த விலை ரூ.570. ஒரு வணிகக் கணித புத்தகம், ஒரு கணக்குப்பதிவியல் புத்தகம் மற்றும் 2 வணிகவியல் புத்தகங்களின் மொத்த விலை ரூ.630 எனில், ஒவ்வொரு புத்தகத்தின் விலையை கிரேமரின் விதியைக் கொண்டுக் காண்க.
25.
ஒரு சந்தை ஆய்விற்காக A,B மற்றும் C ஆகிய பொருட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. குறியீட்டு எண்ணை காண்பதற்காக ஒவ்வொரு பொருளும் மூன்று வித தரங்களாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கு நிலையான எடைகள் ஒதுக்கப்படுகிறது. மூன்று பொருள்களின் நுகர்வு பற்றிய தகவல்கள் மற்றும் பொருள்களின் மொத்த எடைகள் ஆகியவை கீழேயுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
| பொருள்கள் | தரங்களின் நுகர்வுகள் | மொத்த எடைகள் | ||
| I | II | III | ||
| A | 1 | 2 | 3 | 11 |
| B | 2 | 4 | 5 | 21 |
| C | 3 | 5 | 6 | 27 |
1.
\(\begin{equation} \frac{1}{x}=a, \frac{1}{y}=b, \frac{1}{z}=c \end{equation}\) என்க .
ஃ2a + 3b + 4c = 14 .....(1)
3a - 2b +c= 3 .......(2)
a +b+c=5 .........(3)
ஃ\(\Delta =\left| \begin{array}{lll} 2 & 3 & 4 \\ 3 & -2 & 1 \\ 1 & 1 & 1 \end{array} \right| \) = 8
\(\Delta _{ a }=\left| \begin{array}{lll} 14 & \quad 3 & 4 \\ 3 & -2 & 1 \\ 5 & \quad 1 & 1 \end{array} \right| \)= 16
\(\Delta _{ b }=\left| \begin{array}{lll} 2 & 14 & \quad 4 \\ 3 & \quad 3 & \quad 1 \\ 1 & \quad 5 & \quad 1 \end{array} \right| \) = 16
\(\Delta _{ c }=\left| \begin{array}{lll} 2 & \quad 3 & \quad 4 \\ 3 & \quad -2 & \quad 3 \\ 1 & \quad 1 & \quad 5 \end{array} \right| \) = 16
கிரேமரின் விதிப்படி,
\(a=\frac { \Delta _{ a } }{ \Delta } =\frac { 16 }{ 8 } =2 \therefore x=\frac { 1 }{ 2 } \)
\(b=\frac { \Delta _{ b } }{ \Delta } =\frac { 16 }{ 8 } =2 \ \therefore \ y=\frac { 1 }{ 2 } \)
\(c=\frac { \Delta _{ c } }{ \Delta } =\frac { 8 }{ 8 } =1 \therefore z=1\)
தீர்வு (x, y, z) =(\(\frac { 1 }{ 2 } \),\(\frac { 1 }{ 2 } \),1)
2.
மாறுதல் நிகழ்தகவு அணி
\(T=\underset { L }{ M } \left( \begin{matrix} 0.85 & 0.15 \\ 0.30 & 0.70 \end{matrix} \right) \)
(i) ஓராண்டிற்கு பிறகு
(М L) T = (0.60 0.40) \(\left( \begin{matrix} 0.85 & 0.15 \\ 0.30 & 0.70 \end{matrix} \right) \)
= (0.51 + 0.12 0.09 + 0.28)
= (0.63 0.37)
ஃ M = 0.63 = 63 %
L = 0. 37 = 37 %
ii) காலப்போக்கில் சமநிலை எட்டப்படும்போது
(М L)T = (M L)
(М L) \(\left( \begin{matrix} 0.85 & 0.15 \\ 0.30 & 0.70 \end{matrix} \right) \)=(M L)
0.85M + 0.30L = M
0.85M + 0.30(1-M) = M
0.85M + 0.30 - 0.30M = M
0.30 = M - 0.55M
0,30 = 0.45M
M= \(\frac { 0.30 }{ 0.45 } \)= 0.6667
M= 66.67%
காலப்போக்கில் 66.67% பயணிகள் மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதியை பயன்படுத்துவர்.
3.
\(\Delta =\left| \begin{array}{lll} 2 & 2 & -1 \\ 1 & 1 & -1 \\ 3 & 2 & -3 \end{array} \right| \)
= 2(-3 + 2) - 2(-3 + 3) - 1(2 - 3)
= -2 + 0 + 1 = -1\(\neq \) 0
∴கிரேமரின் விதியை பயன்படுத்தலாம்.
\(\Delta _{ x }=\left| \begin{array}{lll} 1 & 2 & -1 \\ 0 & 1 & -1 \\ 1 & 2 & -3 \end{array} \right| \)
= 1(-3 + 2) - 2(0-+1)- 1(0- 1)
= -1-2+1=-2
\(\Delta _{ y }=\left| \begin{array}{lll} 2 & 1 & -1 \\ 1 & 0 & -1 \\ 3 & 1 & -3 \end{array} \right| \)
= 2 (0 + 1)-1 (-3 + 3)-1 (1-0)
= 2 + 0 -1 = 1
\(\Delta _{ z }=\left| \begin{array}{lll} 2 & 2 & 1 \\ 1 & 1 & 0 \\ 3 & 2 & 1 \end{array} \right| \)
= 2 (1 -0)-2 (1- 0)-1 (2-3)
= 2-2-1 =-1
\(x=\frac { \Delta _{ x } }{ \Delta } =\frac { -2 }{ -1 } =2,\)
\(y=\frac { \Delta _{ y } }{ \Delta } =\frac { 1 }{ -1 } =-1\)
\(z=\frac { \Delta _{ z } }{ \Delta } =\frac { -1 }{ -1 } =1\)
x =2 ,y =-1 ,z =1
4.
அணிச் சமன்பாடு
\(\left(\begin{array}{lll} k & 1 & 1 \\ 1 & k & 1 \\ 1 & 1 & k \end{array}\right)\left(\begin{array}{l} x \\ y \\ z \end{array}\right)=\left(\begin{array}{l} 1 \\ 1 \\ 1 \end{array}\right) \)
விரிவுபடுத்தப்பட்ட அணி
(A ,B ) = \(\left( \begin{array}{llll} k & 1 & 1 & 1 \\ 1 & k & 1 & 1 \\ 1 & 1 & k & 1 \end{array} \right) \)
\(\sim \left( \begin{array}{llll} 1 & 1 & k & 1 \\ 1 & k & 1 & 1 \\ k & 1 & 1 & 1 \end{array} \right) R_{ 1 }\leftrightarrow R{ 3 }\)
\(\sim \left( \begin{array}{cccc} 1 & 1 & k & 1 \\ 0 & k-1 & 1-k & 0 \\ 0 & 1-k & 1-k^{ 2 } & 1-k \end{array} \right) \quad R_{ 2 }\rightarrow R_{ 2 }-R_{ 1 }\)
\(R_{ 3 }\rightarrow R_{ 3 }-kR_{ 1 }\)
~\(\left( \begin{array}{cccc} 1 & 1 & k & 1 \\ 0 & k-1 & 1-k & 0 \\ 0 & 0 & 2-k-k^{ 2 } & 1-k \end{array} \right) \quad \)\(R_{ 3 }\rightarrow R_{ 3 }+ R_{ 2 }\)
= \(\left( \begin{array}{cccc} 1 & 1 & k & 1 \\ 0 & k-1 & 1-k & 0 \\ 0 & 0 & (k +2)(1-k )& 1-k \end{array} \right) \quad \)
நிலை (i ): k \(\neq \) 1 எனில்
\(\rho \)(A. B) = \(\rho \)(A) = 3 (மாறிகளின் எண்ணிக்கை)
சமன்பாட்டுத் தொகுப்பு ஒருங்கமைவு உடையது மற்றும் ஒரே ஒரு தீர்வினைக் கொண்டது .
நிலை (ii ): k = 1 எனில்
\(\rho \)(A. B) = \(\rho \)(A) = 3 ( 1 <3 (மாறிகளின் எண்ணிக்கை)
எனவே, சமன்பாட்டுத் தொகுப்பு ஒருங்கமைவு உடையது மற்றும் எண்ணற்ற தீர்வுகளைக் கொண்டது
நிலை (iii): k =-2 எனில்
\(\rho \)(A, B) = 3, \(\rho \)(A) = 2
\(\rho \)(A,B) \(\neq \) \(\rho \) (A)
எனவே, சமன்பாட்டுத் தொகுப்பு ஒருங்கமை அற்றது மற்றும் தீர்வுகள் கிடையாது.
5.
\(P(0 \leq X \leq 10) \)
\( =P(X=0)+P(X=10) \)
\(=\frac{1}{4}+\frac{1}{2}=\frac{3}{4}\)
6.
\(E(X)=\int _{ -\infty }^{ \infty }{ xf\left( x \right) } dx\) என்பது நமக்குத் தெரியும்
= \(\int _{ 0 }^{ 1 }{ x4{ x }^{ 3 }dx } \)
= \(4\left[ \cfrac { { x }^{ 5 } }{ 5 } \right] _{ 0 }^{ 1 }\)
= \(E(X)=\cfrac { 4 }{ 5 } \)
\(E\left( { X }^{ 2 } \right) \int _{ -\infty }^{ \infty }{ { x }^{ 2 }f(x)dx } \)
= \(\int _{ 0 }^{ 1 }{ { x }^{ 2 }{ 4x }^{ 3 }dx } \)
= \(4\left[ \cfrac { { x }^{ 6 } }{ 6 } \right] _{ 0 }^{ 1 }\)
= \(\frac { 4 }{ 6 } = \frac { 2 }{ 3 } \)
\(V(X)=E\left( { X }^{ 2 } \right) -\left[ E\left( X \right) ^{ 2 } \right] \)
= \(\cfrac { 2 }{ 3 } -\left[ \cfrac { 4 }{ 5 } \right] ^{ 2 }\)
= \(\cfrac { 2 }{ 75 } \)
7.
மின்விளக்குகள் எரியும் நேரத்தைக் குறிக்கும் சமவாய்ப்பு மாறி X என்க
\(\mu=2040, \sigma=60\)
(i) 2150 மணி நேரத்திற்கு மேலாக
\(Z =\frac{X-\mu}{\sigma} =\frac{2150-2040}{60}=\frac{110}{60}=1.83 \)
\(P(X>2150) =P(Z>1.833) \)
2150 மணி நேரத்திற்கு மேலாக ஒளிரும் மின்விளக்குகளின் எண்ணிக்கை = 0.0336 x 2000 = 67
(ii) 1,950 மணி நேரத்திற்கும் குறைவாக
= 0.5 - P (-1.5
1950 மணி நேரத்திற்கும் குறைவாக ஒளிரும் மின்விளக்குகளின் எண்ணிக்கை
= 0.0668 × 2000
= 133.6 - 134
(iii) 1920 மற்றும் 2100 மணி நேரத்திற்கும் இடையே
\( Z=\frac{1920-2040}{60}=-2 \)
\( Z=\frac{2100-2040}{60}=1
\)
= P(-2<Z < 0) + P (0<2< 1)
= 0.4772 + 0.3413 =0.8185
1920 மற்றும் 2100 மணி நேரத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் ஒளிரும் மின்விளக்குகளின் எண்ணிக்கை
= 0.8185 × 2000 = 1637
8.
இங்கு நிரல்களின் எண்ணிக்கையும், நிரைகளின் எண்ணிக்கையும் சமமாக உள்ளன. எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமச்சீரான ஒதுக்கீடு கணக்காகும். தற்போது அதன் தீர்வைக் காணலாம்.
படி 1:
ஒவ்வொரு நிரையில் உள்ள மீச்சிறு மதிப்பை அந்த நிரையில் உள்ள அனைத்து மதிப்புகளிலிருந்தும் கழிக்க வேண்டும்.
படி 2: ஒவ்வொரு நிரலில் உள்ள மீச்சிறு மதிப்பை அந்த நிரலில் உள்ள அனைத்து மதிப்புகளிலிருந்தும் கழிக்க வேண்டும்.
அனைத்து ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன.
உகந்த ஒதுக்கீடு மற்றும் மொத்த நேரம்
9.
கூறு அளவு n = 50 ஊழியர்கள்
மொத்த ஊதியம் Σx=2250
கூறு சராசரி
முழுமைத் தொகுதி சராசரி μ=52
முழுமைத் தொகுதி மாறுபாட்டளவை σ2=25
முழுமைத் தொகுதி திட்ட விலக்கம் SD =σ=25
இன்மை கருதுகோள் H0:μ=52
மாற்று கருதுகோள் H1:μ≠52 (இரு முனை)
மிகைகாண் நிலை α =0.01
கூறுபண்பளவை சோதனை \(Z=\frac { \bar { x } -\mu }{ \frac { \sigma }{ \sqrt { n } } } \sim N(0,1)\)
\(Z=\frac { 51-52 }{ \frac { 5 }{ \sqrt { 50 } } } =\frac { -1 }{ 0.7071 } =-1.4142\)
மாற்று கருதுகோள் இருமுனை சோதனையாகும், எனவே |Z|= 1.4142 எனப் பெறுகிறோம்.
தீர்மான மதிப்பு 1% மிகைகாண் நிலையில் \({ Z }_{ \frac { \alpha }{ 2 } }\)=2.58
முடிவு: கணக்கிடப்பட்ட மதிப்பானது அட்டவணை மதிப்பைவிட குறைவாக உள்ளது Z>\({ Z }_{ \frac { \alpha }{ 2 } }\), 1% மிகைகாண் நிலையில் இன்மை கருதுகோள் H0 ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
எனவே கூறு சராசரிக்கும் தொகுதி சராசரி μ= 52, திட்ட விலக்கம் σ = 5 -க்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் இல்லை என்பதால் m = 49 என்பது நிராகரிக்கப்படுகிறது.
10.
p = வாடிக்கையாளர் ஒருவர் ஒரு வருடத்தில் விபத்துக்குள்ளாவதற்கான நிகழ்தகவு
= 0.1/100 = 1/1000
இங்கு n = 10,000
ஆகையால், λ=np =10000\(\left( \frac { 1 }{ 1000 } \right) \)=10
5-க்கு மிகாமல் வாடிக்கையாளர்கள் விபத்துக்குள்ளாவதற்கான நிகழ்தகவு
P(x≤5) = P(X=0)+P(X=1)+P(X=2)+P(X=3)+P(X=4)+P(X=5)
=e-10\(\left[ 1+\frac { 10 }{ 1! } +\frac { { 1 }0^{ 2 } }{ 2! } +\frac { { 10 }^{ 3 } }{ 3! } +\frac { { 10 }^{ 4 } }{ 4! } +\frac { 10^{ 5 } }{ 5! } \right] \)
=0.06651
11.
12.
இது நிகழ்தகவு நிறை சார்பு என்பதால்
\(\sum_{i=1}^{\infty} p\left(x_i\right) =1 \)
\(\sum_{i=0}^{7} p\left(x_i\right) =1 \)
⇒ 0+k+2k+2k+3k+k2+2k2+7k2+k = 1
⇒ 10k2+9k = 1
⇒10k2+9k-1 = 0
(k+1)(10k-1) = 0 ⇒k = -1
⇒ k = \(\frac{1}{10}\)
\([\because p(x_i) \ge 0 ]\)
ii) \(P(X<6) =1-P(X \geq 6) \)
\( =1-[P(X=6)+P(X=7)] \)
\( =1-\left(2 k^2+7 k^2+k\right) \)
\( =1-\left(9 k^2+k\right) \)
\( =1-\left(\frac{9}{100}+\frac{1}{10}\right)=1-\frac{9}{100}-\frac{1}{10} \)
\( =\frac{100-9-10}{100}=\frac{81}{100} \)
\(P(X \geq 6)=P(X=6)+P(X=7) \)
\( =2 k^2+7 k^2+k=9 k^2+k \)
\( =\frac{9}{100}+\frac{1}{10}=\frac{9+10}{100}=\frac{19}{100} \)
P(0X<5) = P(X = 1)+P(X = 2)+P(X = 3)+P(X = 4)
= k+2k+2k+3k
\(8k=\left( \frac { 8 }{ 10 } \right) =\frac { 4 }{ 5 } \)
iii) சோதனை மற்றும் பிழை முறைப்படி x இன் குறைந்தபட்ச மதிப்பு
\( P(X \leq 0)=0<\frac{1}{2} ; P(X \leq 1)=\frac{1}{10}<\frac{1}{2} \)
\(P(X \leq 2)=\frac{3}{10}<\frac{1}{2} ; P(X \leq 3)=\frac{5}{10}=\frac{1}{2} \)
\(P(X\le 4 ) =\frac { 8 }{ 10 } =\frac { 4 }{ 5 } >\frac { 1 }{ 2 } \)
\(\therefore P(X\le x )\frac { 1 }{ 2 } \) - க்கான x இன் குறைந்தபட்ச மதிப்பு 4 ஆகும்
13.
\(\int _{ -\infty }^{ \infty }{ f(x)dx=1 } \) என்பது நமக்குத் தெரியும்.
\(\int _{ 0 }^{ 10 }{ Axdx+\int _{ 10 }^{ 20 }{ A(20-x)dx=1 } } \)
\(A\left\{ \left[ \frac { { x }^{ 2 } }{ 2 } \right] _{ 0 }^{ 10 }+\left[ 20x-\cfrac { { x }^{ 2 } }{ 2 } \right] _{ 10 }^{ 20 } \right\} =1\)
A[(50−0)+(400−200)−(200 − 50)]=1
\(A=\cfrac { 1 }{ 100 } \)
(b) (i) மறுநாளைக்கு விற்கப்படவிருக்கும் ரொட்டிகளின் எண்ணிக்கை 10 பவுண்டுகளுக்கு அதிகமாக இருப்பதற்கான நிகழ்தகவு:
\(P\left( 10\le X\le 20 \right) =\int _{ 10 }^{ 20 }{ \cfrac { 1 }{ 100 } \left( 20-x \right) dx } \)
= \(\cfrac { 1 }{ 100 } \left[ 20x-\cfrac { { x }^{ 2 } }{ 2 } \right] _{ 10 }^{ 20 }\)
= \(\cfrac { 1 }{ 100 } \left[ \left( 400-200 \right) -\left( 200-50 \right) \right] \)
= 0.5
(ii) மறுநாளைக்கு விற்கப்படவிருக்கும் ரொட்டிகளின் எண்ணிக்கை 10 பவுண்டுகளுக்கு குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவு
\(P\left( 0\le X<10 \right) =\int _{ 0 }^{ 10 }{ \cfrac { 1 }{ 100 } xdx } \)
= \(\cfrac { 1 }{ 100 } \left[ { \cfrac { { x }^{ 2 } }{ 2 } } \right] _{ 0 }^{ 10 }\)
= \(\cfrac { 1 }{ 100 } \left( 50-0 \right) \)
= 0.5
(iii) மறுநாளைக்கு விற்கப்படவிருக்கும் ரொட்டிகளின் எண்ணிக்கை 5 மற்றும் 15 பவுண்டுகளுக்கு இடையில் இருப்பதற்கான நிகழ்தகவு
\(P\left( 5\le X\le 15 \right) =\int _{ 5 }^{ 10 }{ \cfrac { 1 }{ 100 } xdx } +\int _{ 10 }^{ 15 }{ \cfrac { 1 }{ 100 } \left( 20-x \right) } dx\)
= \(\cfrac { 1 }{ 100 } \left[ \cfrac { { x }^{ 2 } }{ 2 } \right] _{ 5 }^{ 10 }+\cfrac { 1 }{ 100 } \left[ 20x-\cfrac { { x }^{ 2 } }{ 2 } \right] _{ 10 }^{ 15 }\)
= 0.75
14.
வயது = x , காப்பீட்டுத்தொகை = y என்க.
இங்கு, நியூட்டனின் பின்நோக்கு சூத்திரத்தைப் பயன்படுத்தி y-ன் மதிப்பைக் காண்போம்.
y(x=xn+nh)=\({ y }_{ n }+\frac { n }{ 1! } \triangle y_{ n }+\frac { n(n-1) }{ 2! } { \triangle }^{ 2 }{ y }_{ n }+\frac { n(n-1)(n-2) }{ 3! } { \triangle }^{ 0 }y_{ n }+....\)
x=63, ∴ xn+nh=63, xn=68.48, h=5 ⇒ -\(\frac{2}{5}\)
| x | y | Δy | Δ2y | Δ3y | Δ4y |
| 45 | 114.84 | ||||
| -18.68 | |||||
| 50 | 96.16 | 5.84 | |||
| -12.84 | -1.84 | ||||
| 55 | 83.32 | 4 | 0.68 | ||
| -8.84 | -1.16 | ||||
| 60 | 74.48 | 2.84 | |||
| -6 | |||||
| 65 | 68.48 |
y(x=63)=68.48+\(\frac { \frac { -2 }{ 5 } }{ 1! } (-6)+\frac { \frac { -2 }{ 5 } \left( \frac { -2 }{ 5 } +1 \right) }{ 2! } 2.84+\frac { \frac { -2 }{ 5 } \left( \frac { -2 }{ 5 } +1 \right) \left( \frac { -2 }{ 5 } +2 \right) }{ 3! } (-1.16)+\frac { \frac { -2 }{ 5 } \left( \frac { -2 }{ 5 } +1 \right) \left( \frac { -2 }{ 5 } +2 \right) \left( \frac { -2 }{ 5 } +3 \right) }{ 4! } (0.68)\)
=68.48+2.4-0.3408+0.07424-0.028288
y(63)=70.585
15.
\(\begin{array}{|c|c|c|c|c|c|} \hline \boldsymbol{x} & \boldsymbol{y} & \Delta \boldsymbol{y} & \Delta^2 y & \Delta^3 y & \Delta^4 y \\ \hline 30 & 15.9 & & & & \\ \hline & & -1 & & & \\ \hline 35 & 14.9 & & 0.2 & & \\ \hline & & -0.8 & & -0.2 & \\ \hline 40 & 14.1 & & 0 & & 0.2 \\ \hline & & -0.8 & & 0 & \\ \hline 45 & 13.3 & & 0 & & \\ \hline & & -0.8 & & & \\ \hline 50 & 12.5 & & & & \\ \hline \end{array}\)
x = 32 எனும்போது நியூட்டனின் பின்நோக்கு இடைச்செருகல் சூத்திரத்தைப் பயன்படுத்த
x0 = 30 h = 5
∴ x0 + nh = 32 ⇒ 30 + n(5) = 32 [∵ h = 5]
⇒ 5n = 2
⇒ n = 2/5 = 0.4
\( \mathrm{y}=y_n+\frac{n}{1 !} \nabla y_n+\frac{n(\mathrm{n}+1)}{2 !} \nabla^2 y_n +\frac{n(n+1)(\mathrm{n}+2)}{3 !} \nabla^3 y_n+\ldots \)
\(y= 15.9+0.4(-1)+\frac{(0.4)(-0.6)}{2 !}(0.2) +\frac{(0.4)(-0.6)(-1.6)}{3 !}(-0.2) +\frac{(0.4)(-0.6)(-1.6)(-2.6)}{4 !}(0.2) \)
= 15.9-0.4-0.024-0.0128-0.00832
\(= 15.45488 \approx 15.45\)
16.
f(x) -ல் ஐந்து மதிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால், f(x) ஒரு நான்காம்படி பல்லுறுப்புக்கோவை என எடுத்துக் கொள்வோம். எனவே ஐந்தாம்நிலை வேறுபாடு பூச்சியமாகும்.
Δ5yk=0 (ie) (E-1)5yk=0
i.e., (E5-5E4+10E3-10E2+5E-1)yk=0
E5yk-5E4yk+10E3yk-10E2yk+5Eyk-yk=0 ....(1)
k = 0 என (1)-ல் பிரதியிட
E5y0-5E4y0-10E2y0+5Ey0-y0=0
y5-5y4+10y3-10y2+5y1-y0=0
y5-5(350)+10y3-10(260)+5(220)-200=0
y5+10y3=3450 .....(2)
k = 1 என (1)-ல் பிரதியிட
E5y1-5E4y1-10E3y1+5Ey3y1-y1=0
y6-5y5+10y4-10y3-y1=0
430+5y5+10(350)-10y3+5(260)-220=0
5y5+10y3=5010 (3)
(3)-(2) ⇒ 4y5=1560
y5=390
(2)-ன் படி 390+10y3=3450
10y3=3450-390
y3=306

17.
y2dx+(xy+x2)dy=0
(xy+x2)dy=-y2dx
\(\frac { dy }{ dx } =\frac { -{ y }^{ 2 } }{ xy+{ x }^{ 2 } } \) .....(1)
இது ஒரே படியுள்ள x, y- இல் அமைந்த சமபடித்தான வகைக்கெழு சமன்பாடாகும்.
y=vx மற்றும் \(\frac { dy }{ dx } =v+x\frac { dv }{ dx } \) என பிரதியிட,
∴ (1) ஆனது
\(v+x\frac { dv }{ dx } =\frac { -{ v }^{ 2 }{ x }^{ 2 } }{ xvx+{ x }^{ 2 } } \)
=\(\frac { -{ v }^{ 2 } }{ v+1 } \)
\(x\frac { dv }{ dx } =\frac { -v^{ 2 } }{ v+1 } -v\)
=\(\frac { -{ v }^{ 2 }-{ v }^{ 2 }-v }{ v+1 } \)
\(x\frac { dv }{ dx } =\frac { -(v+2v^{ 2 }) }{ 1+v } \)
மாறிகளை பிரிக்கக் கிடைப்பது,
\(\frac { 1+v }{ v(1+2v) } dv=\frac { -dx }{ x } \)
\(\frac { (1+2v)-v }{ v(1+2v)dv } dv=\frac { -dx }{ x } \) (∵ 1+v=1+2v-v)
\(\frac { 1 }{ v } -\frac { 1 }{ 1+2v } dv=\frac { -dx }{ x } \)
இருபுறமும் தொகையிட, நாம் பெறுவது
\(\int { \left( \frac { 1 }{ v } -\frac { 1 }{ 1+2v } \right) dv } =-\int { \frac { dx }{ x } } \)
logv-\(\frac{1}{2}\)log(1+2v)=-logx+logc
\(log\left( \frac { v }{ \sqrt { 1+2v } } \right) =log\left( \frac { c }{ x } \right) \)
\(\frac { v }{ \sqrt { 1+2v } } =\frac { c }{ x } \)
v=\(\frac { y }{ x } \) என பிரதியிட,
\(\frac { \frac { y }{ x } }{ \sqrt { 1+\frac { 2y }{ x } } } =\frac { c }{ x } \)
\(\frac { y\sqrt { x } }{ \sqrt { x+2y } } =c\)
\(\frac { { y }^{ 2 }x }{ x+2y } = k \)
இங்கு k=c2
18.
MC =6+10x-6x2
அதாவது, \(\frac { dC }{ dx } \) =6+10x-6x2
dC=(6+10x-6x2)dx
\(\int { dC } =\int { (6+10x-6x^{ 2 } } )dx+k\)
C=\(6x+10\frac { { x }^{ 2 } }{ 2 } -6\frac { { x }^{ 3 } }{ 3 } \)
C=6x+5x2-2x3+k ....(1)
கொடுக்கப்பட்டது : x = 2 எனில் C = 100
∴ (1) ⇒ 100 =12+5(4)-2(8)+k
⇒ k=84
∴ (1) ⇒ C(x)=6x+5x2-2x3+84
சராசரி செலவுச் சார்பு: AC=\(\frac { C }{ x } \)=6+5x-2x2+\(\frac { 84 }{ x } \)
19.
\(\frac { { E }_{ y } }{ { E }_{ x } } =\frac { x }{ x-2 } \)
\(\frac { x }{ y } \frac { dy }{ dx } =\frac { x }{ x-2 } \)
\(\frac { dy }{ y } =\frac { x }{ x-2 } .\frac { dx }{ x } \)
\(\int { \frac { dy }{ y } } =\int { \frac { dx }{ x-2 } } \)
logy =log(x-2)+log k
y =k(x-2)
இங்கு x = 6, எனும்போது y = ⇒ 16=k(6-2)
k =4
y =4(x-2)
20.
இறுதிநிலை செலவு சார்பு C'(x)=5+0.13x
\(C(x) =\int(5+0.13 x) d x \)
\( =5 x+\frac{0.13 x^2}{2}+k_1\)
\( =5 x+0.065 x^2+\mathrm{k}_1\)
x =0, C=120 எனில்,\(\mathrm{k}_1=120\)
செலவுச் சார்பு : \( C(x)=5 x+0.065 x^2+120 \)
\( R^{\prime}(\mathrm{x})=18 \)
வருவாய்ச் சார்பு : \( \mathrm{R}=\int 18 d x=18 x+\mathrm{k}_2 \)
x = 0, R = 0 எனில்
\( \mathrm{k}_2=0 \)
\( \mathrm{R}=18 x \)
இலாபச் சார்பு : \(\text { P(x ) }=\mathrm{R}(x)-\mathrm{C}(x) \)
\(=18 x-5 x-0.065 x^2-120 \)
\(=13 x-0.065 x^2-120 \)
21.
a = 1, b = 3
\(h=\cfrac { b-a }{ n } =\cfrac { 3-1 }{ n } =\cfrac { 2 }{ n } \) மற்றும் f(x) = 2x + 3
\(\therefore f(a+rh)=f\left( 1+r+r.\cfrac { 2 }{ n } \right) =f\left( 1+\cfrac { 2r }{ n } \right) \)
= \(2+\cfrac { 4r }{ n } +3=5+\cfrac { 4r }{ n } \)
\(\int _{ a }^{ b }{ f(x)dx } =\underset { n\rightarrow \infty \\ h\rightarrow 0 }{ lim } \sum _{ r=1 }^{ n }{ h.f\left( a+rh \right) } \)
\(\therefore \int _{ 1 }^{ 3 }{ (2x+3) } dx=\underset { n\rightarrow \infty }{ lim } \sum _{ r=1 }^{ n }{ \frac { 2 }{ n } } \left( 5+\frac { 4r }{ n } \right) \)
= \(\underset { n\rightarrow \infty }{ lim } \sum _{ r=1 }^{ n }{ \left( \frac { 10 }{ n } +\frac { 8r }{ { n }^{ 2 } } \right) } \)
= \(\underset { n\rightarrow \infty }{ lim } \left( \frac { 10 }{ n } .\sum _{ r=1 }^{ n }{ .1+\frac { 8 }{ { n }^{ 2 } } \cdot \sum _{ r=1 }^{ n }{ \cdot r } } \right) \)

\(\left[ \because \Sigma 1=n\& \sum _{ r=1 }^{ n }{ r } =\cfrac { n(n+1) }{ 2 } \right] \)
\(=\underset { n\rightarrow \infty }{ \lim } 10+\frac { 4 }{ n^ 2 } \left( n^2+ n \right) \)
\(=\underset { n\rightarrow \infty }{ \lim } [10+4+\frac { 4 }{ n } ] =14\)
22.
| u = (log x2) வகையிட \(du=(2 \log x )(\frac { 1 }{ x } dx)\) | dv = dx. தொகையிட v = x |
\(\int { { \left( \log x \right) }^{ 2 } } dx= \int { udv } \)
= uv − \(\int { } \)vdu
= x (log x)2 − 2\(\int { } \) logxdx...(*)
\(=x(\log x)^{ 2 }-2\int { udv } \)
\(=x(\log x)^{ 2 }-2[uv-\int { udv } ]\)
\(=x(logx)^{ 2 }-2[xlogx-\int { dx] } \)
\(=x(logx)^{ 2 }-2xlogx+x+c\)
\(=x[(log{ ) }^{ 2 }-log{ x }^{ 2 }+2]+c\)
| (*)-ல் உள்ள \(\int { logx } \)dx -க்கு | |
| u = (log x) வகையிட \(du=\frac { 1 }{ x } dx\) | dv = dx. தொகையிட v = x |
23.
மாறுதல் நிகழ்தகவு அணி
S N
T =\(\underset { N }{ S } \begin{pmatrix} .6 & .4 \\ .25 & .75 \end{pmatrix}\\ \)
தொடக்க நிலை =(0.4 0.6)
(0.4 0.6) \(\begin{pmatrix} .6 & .4 \\ .25 & .75 \end{pmatrix}\) = (.24+.15 .16+0.45) =(.39 .61)
எனவே, தற்போதைய கடிதத்தைப் பெறுபவர்களில் 39% பேர் சந்தாதாரர்களாவர் என எதிர்பார்க்கலாம்.
24.
ஒரு வணிகக் கணித புத்தகத்தின் விலை ரூ.x என்க.
ஒரு கணக்குப்பதிவியல் புத்தகத்தின் விலை ரூ.y என்க.
ஒரு வணிகவியல் புத்தகத்தின் விலை ரூ.z என்க.
கொடுக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு, கீழ்காணும் சமன்பாடுகளை பெறலாம்.
∴ 3x+2y+z=840
2x+y+z=570
x+y+2z=630
இங்கு Δ=\(\left| \begin{matrix} 3 & 2 & 1 \\ 2 & 1 & 1 \\ 1 & 1 & 2 \end{matrix} \right| \)=-2≠0,
Δx=\(\left| \begin{matrix} 840 & 2 & 1 \\ 570 & 1 & 1 \\ 630 & 1 & 2 \end{matrix} \right| \)=-240
Δy=\(\left| \begin{matrix} 3 & 840 & 1 \\ 2 & 570 & 1 \\ 1 & 630 & 2 \end{matrix} \right| \)=-300
Δz=\(\left| \begin{matrix} 3 & 2 & 840 \\ 2 & 1 & 570 \\ 1 & 1 & 630 \end{matrix} \right| \)=-360
∴ கிரேமரின் விதிப்படி
x=\(\frac { \triangle x }{ \triangle } =\frac { -240 }{ -2 } \)=120
y=\(\frac { \triangle y }{ \triangle } =\frac { -300 }{ -2 } \)=150
z=\(\frac { \triangle z }{ \triangle } =\frac { -360 }{ -2 } \)=-180
∴ ஒரு வணிகக் கணித புத்தகத்தின் விலை ரூ.120.
ஒரு கணக்குப்பதிவியல் புத்தகத்தின் விலை ரூ.150 மற்றும் ஒரு வணிகவியல் புத்தகத்தின் விலை ரூ.180.
25.
x ,y ,z என்பன முறையே வகை I ,II மற்றும் III ஆகியவற்றின் எடைகள் என்க.
எனவே , சமன்பாடுகள்
x + 2y + 3z = 11
2x + 4y + 5z = 21
3x + 5y + 6z = 27
\(\Delta =\begin{vmatrix} 1 & 2 & 3 \\ 2 & 4 & 5 \\ 3 & 5 & 6 \end{vmatrix}\)
= 1(24-25)-2(12-15)+3(10-12)
= -1+6-6
=-1\(\neq \)0
\(\therefore \) கிரேமரின் விதியை பயன்படுத்தலாம் .
\(\Delta _{ x }=\begin{vmatrix} 11 & 2 & 3 \\ 21 & 4 & 5 \\ 27 & 5 & 6 \end{vmatrix}\)
= 11(24-25)-2(126-135) + 3(105-108)
= -11+18-9 = -2
\(\Delta _{ y }=\begin{vmatrix} 1 & 11 & 3 \\ 2 & 21 & 5 \\ 3 & 27 & 6 \end{vmatrix}\)
= 1(126 -135)-11(12-15)+3(54-63)
= -9+33-27 =-3
\(\Delta _{ z }=\begin{vmatrix} 1 & 2 & 11 \\ 2 & 4 & 21 \\ 3 & 5 & 27 \end{vmatrix}\)
= 1(108 -105)-2(54-63)+11(10-12)
= 3+18-22 =-1
\(x=\cfrac { { \Delta }_{ x } }{ \Delta } =\cfrac { -2 }{ -1 } =2\)
\(y=\cfrac { { \Delta }_{ y } }{ \Delta } =\cfrac { -3 }{ -1 } =3\)
\(z=\cfrac { { \Delta }_{ z } }{ \Delta } =\cfrac { -1 }{ -1 } =1\)
தரங்கள் I,II,மற்றும் III ஆகியவற்றின் எடைகள் முறையே 2,3 மற்றும் 1.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards