12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/03/2021
12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Annual Exam Model Question Paper with Answer key - 2021
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பின்வருவனவற்றுள் எதை Ea, மதிப்பு நிர்ணயம் செய்கிறது?
மூலக்கூறு எண்
வினைவேகம்
வினைவகை
அரைவாழ்வுகாலம்
2.
வில்லியம்சன் தொகுப்பு முறையில் டைமெத்தில் ஈதரை உருவாக்கும் வினை ஒரு ____________
SN1 வினை
SN2 வினை
எலக்ட்ரான் கவர் பொருள் சேர்க்கை வினை
எலக்ட்ரான் கவர் பொருள் பதிலீட்டு வினை
3.
உணர்வேற்பி மையத்துடன் பிணைந்து அதன் இயல்பான செயல்பாட்டைத் தடுக்கும் மருந்துகள் __________ என்றழைக்கப்படுகின்றன.
எதிர்வினையூக்கி
முதன்மை இயக்கி
நொதிகள்
மூலக்கூறு இலக்குகள்
4.
நீர்த்த கரைசல்களில் அமினோ அமிலங்கள் பெரும்பாலும் ________ அமைப்பில் உள்ளன .
NH2-CH(R)-COOH
NH2-CH(R)-COO-
H3N+-CH(R)-COOH
H3N+-CH(R)-COO-
5.
தலைமுடி கிரீம் என்பது ஒரு _____________
களி
பால்மம்
திண்மக் கூழ்மம்
கூழ்மக் கரைசல்.
6.
ஃ பாரடே மாறிலி _________ என வரையறுக்கப்படுகிறது
1 எலக்ட்ரானால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்
1 மோல் எலக்ட்ரான்களால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்
ஒரு மோல் பொருளை விடுவிக்க தேவைப்படும் மின்னூட்டம்
\(6.22\times10^{10}\) எலக்ட்ரான்களால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்
7.
அனிலீனாது அசிட்டிக் அமில நீரிலியுடன் வினைப்பட்டு கொடுக்கும் விளைபொருள் _______.
o – அமினோ அசிட்டோ பீனோன்
m - அமினோ அசிட்டோ பீனோன்
p - அமினோ அசிட்டோ பீனோன்
அசிட்டனிலைடு
8.
298K ல், நீரில் BaSO4 இன் கரைதிறன் \(2.42\times10^{-3}gL^{-1}\) எனில் அதன் கரைதிறன் பெருக்க (Ksp) மதிப்பு. (BaSO4 இன் மோலார் நிறை = 233 g mol-1)
\(1.08\times10^{-14} mol^{2}L^{-2}\)
\(1.08\times10^{-12} mol^{2}L^{-2}\)
\(1.08\times10^{-10} mol^{2}L^{-2}\)
\(1.08\times10^{-8} mol^{2}L^{-2}\)
9.
இன் IUPAC பெயர் _______.
பியூட் – 3-ஈனாயிக் அமிலம்
பியூட் – 1- ஈன்-4-ஆயிக் அமிலம்
பியூட்– 2- ஈன்-1-ஆயிக் அமிலம்
பியூட்-3-ஈன்-1-ஆயிக் அமிலம்
10.
U3+ அயனியின் நிறம் _________
சிவப்பு
பச்சை
மஞ்சள்
இளஞ்சிவப்பு
11.
p - தொகுதி தனிமங்களில் உள்ள தொகுதிகளின் எண் ______.
1 & 2
3 - 12
13 - 17
13 - 18
12.
ஒரு அணுவின் ஆர மதிப்பு 300pm அது முகப்புமைய கனச்சதுர அமைப்பில் படிகமானால், அலகு கூட்டின் விளிம்பு நீளம் _____________
488.5pm
848.5pm
884.5pm
484.5pm
13.
[Pt(Py)(NH3)(Br)(Cl)] என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான வடிவ மாற்றியங்கள் எத்தனை?
3
4
0
15
14.
ஹாலஜன்களின் பிணைப்பு பிளவு என்தால்பி மதிப்பினைப் பொறுத்து சரியான வரிசை எது?
Br2 > I2 > F2 > Cl2
F2 > Cl2 > Br2 > I2
I2 > Br2 > Cl2 > F2
Cl2 > Br2 > F2 > I2
15.
எலிங்கம் வரைபடத்தில், கார்பன் மோனாக்ஸைடு உருவாதலுக்கான ________.
\(\left( \frac { \Delta { S }^{ 0 } }{ \Delta T } \right) \) எதிர்குறியுடையது
\(\left( \frac { \Delta {G }^{ 0 } }{ \Delta T } \right) \) நேர்குறியுடையது
\(\left( \frac { \Delta {G }^{ 0 } }{ \Delta T } \right) \) எதிர்குறியுடையது
\(\left( \frac { \Delta T }{ \Delta G ^ 0 } \right) \)ஆரம்பத்தில் நேர்குறியுடையது 7000C க்கு மேல் \(\left( \frac { \Delta {G }^{ 0 } }{ \Delta T } \right) \) எதிர்குறியுடையது
16.
கொடுக்கிணைப்புகள்- குறிப்பு வரைக.
17.
மன அமைதிப்படுத்திகள் உடலில் எவ்வாறு செயல்புரிகின்றன?
18.
வைட்டமின்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
19.
50mL கனஅளவுடைய 0.025M KOH கரைசலுடன் 50mL கனஅளவுடைய 0.05M HNO3 கரைசல் சேர்க்கப்படுகிறது. இறுதியில் பெறப்பட்ட கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக.
20.
Sc முதல் Zn வரை உள்ள தனிமங்களின் Zn ன் அணுவாக்கும் என்தால்பி மதிப்பு குறைவு ஏன்?
21.
ஒரு வேதிவினையின் வேகத்தை வினைவேக மாற்றி எவ்வாறு பாதிக்கின்றது என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
22.
23.
நான்முகி புலத்தில் படிகப் புலப் பிளப்பு வரைபடத்தை வரைக.
24.
அம்மோனியாவின் மீதான வெப்பத்தின் விளைவை எழுதுக.
25.
அசிட்டோன் தயாரித்தல் ?
26.
1 – மீத்தாக்சி புரப்பேனை அதிக அளவு HI உடன் வெப்பப்படுத்தும் போது உருவாகும் விளைபொருட்களை கண்டறிக. இவ்வினையின் வினைவழிமுறையினை குறிப்பிடுக.
27.
வினைவேகமாற்ற நச்சுகள் பற்றி குறிப்பு வரைக.
28.
நேர்மின்முனை மற்றும் எதிர்மின்முனைகளை வரையறு.
29.
படிக வடிவமற்ற திடப்பொருட்கள் என்றால் என்ன?
30.
ஒரு பூஜ்ய வகை வினை 20 நிமிடங்களில் 20% நிறைவுறுகிறது. வினை வேக மாறிலியைக் கணக்கிடுக. அவ்வினை 80% நிறைவடைய ஆகும் காலம் எவ்வளவு?
31.
அயனிப்படிகங்கள் ஏன் கடினமாகவும், உடையும் தன்மையினையும் பெற்றுள்ளன?
32.
Gd3+ அயனியானது நிறமற்றது. ஏன்?
33.
பின்வரும் சேர்மங்களில் காணப்படும் இனக்கலப்பாதலைக் கண்டறிக.
அ) BrF5
ஆ) BrF3
34.
பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.
அ. B (OH)3 + NH3 \(\longrightarrow\)
ஆ. Na2B4O7 + H2SO4H2O\(\longrightarrow\)
இ. B2H6 + 2NaOH + 2H2O\(\longrightarrow\)
ஈ. B2H6 + CH3OH\(\longrightarrow\)
உ. BF3 + 9 H2O\(\longrightarrow\)
ஊ. HCOOH + H2SO4\(\longrightarrow\)
எ. SiCl4 + NH3\(\longrightarrow\)
ஏ. SiCl4 + C2H5OH\(\longrightarrow\)
ஐ. B + NaOH\(\longrightarrow\)
ஒ. H2B4O7
35.
டைபோரேனின் வடிவமைப்பினை விவரிக்க.
36.
மூலக்கூறு படிகங்களின் வகைப்பாட்டை விவரி.
37.
பின்வரும் வினையினை நிறைவு செய்க.


38.
0.44 கிராம் மோனோஹைட்ரிக் ஆல்கஹாலை, ஈதரில் உள்ள மெத்தில் மெக்னீசியம் அயோடைடுடன் சேர்க்கும் போது STP ல் 112 cm3 மீத்தேனை வெளியேற்றுகிறது. அதே ஆல்கஹாலானது PCC யுடன் வினைபடுத்தும் போது கார்பனைல் சேர்மத்தைத் தருகிறது. அந்த கார்பனைல் சேர்மம் வெள்ளி ஆடி சோதனைக்கு உட்படுகிறது. சேர்மத்தினைக் கண்டறிக.
39.
வெப்பத்தால் இளகும் மற்றும் வெப்பத்தால் இறுகும் பிளாஸ்டிக்குகள் வேறுபடுத்துக.
40.
இயற்புறப்பரப்பு கவர்தல், வேதிப்புறப்பரப்பு கவர்தல் வேறுபடுத்துக.
41.
C4H9NO2 என மூலக்கூறு வாய்பாட்டில் அமையும் அனைத்து மாற்றியங்களையும் எழுது, IUPAC பெயரிடுக.
42.
i) CO2+ மற்றும் Cu2+ அயனிகளின் எலக்ட்ரான் அமைப்புகள் முறையே 3d7 மற்றும் 3d9 எனில் எது அதிக பாராகாந்தத் தன்மையுடையது?
ii) Mn ன் நிலைப்புத்தன்மை மிக்க ஆக்சிஜனேற்ற நிலை யாது?
iii) Sc3+ மற்றும் Cu+ இரண்டில் எது பாராகாந்தத் தன்மையுடையது
43.
உலோகக் கார்பனைல்களில் காணப்படும் பிணைப்பின் தன்மையினை விளக்குக.
1.
(b)
வினைவேகம்
2.
(b)
SN2 வினை
3.
(a)
எதிர்வினையூக்கி
4.
(d)
H3N+-CH(R)-COO-
5.
பால்மம் (பிரிகை நிலை மற்றும் ஊடகம் திரவம்)
6.
1 மோல் எலக்ட்ரான்களால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்
1 மோல் பொருளை விடுவிக்க தேவைப்படும் மின்னூட்டம்
1F = 96500 C = 1 மோல் எலக்ட்ரான்களின் மின்சுமை
e- = 6.022 \(\times\) 1023 е-
7.
(d)
அசிட்டனிலைடு
8.
\(\begin{aligned}
1.08 \times 10^{-10} \mathrm{~mol}^2 \mathrm{~L}^{-2}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{BaSO}_4 \rightleftharpoons \mathrm{Ba}^{2+}+\mathrm{SO}_4^{2-}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{K}_{\mathrm{sp}}=(\mathrm{s})(\mathrm{s})
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{K}_{\mathrm{sp}}=(\mathrm{s})^2
\end{aligned}\)
\(\begin{aligned}
=\left(2.42 \times 10^{-3} \mathrm{gL}^{-1}\right)^2
\end{aligned}\)
\(\begin{aligned}
=\left(\frac{2.42 \times 10^{-3} \mathrm{gL}^{-1}}{233 \mathrm{~g} \mathrm{~mol}^{-1}}\right)^2
\end{aligned}\)
\(\begin{aligned}
=\left(0.01038 \times 10^{-3}\right)^2
\end{aligned}\)
\(\begin{aligned}
=\left(1.038 \times 10^{-5}\right)^2
\end{aligned}\)
\(\begin{aligned}
=1.077 \times 10^{-10}=1.08 \times 10^{-10} \mathrm{~mol}^2 \mathrm{~L}^{-2}
\end{aligned}\)
9.
(a)
பியூட் – 3-ஈனாயிக் அமிலம்
10.
(a)
சிவப்பு
11.
(d)
13 - 18
12.
விளிம்பு நீளம் = a
\(\sqrt{2} a=4 r \\
a=\frac{4 \times 300}{\sqrt{2}}=600 \times 1.414=848.4 p m
\)
13.
மூன்று மாற்றியங்கள். ஏதேனும் ஒரு ஈனியை குறிப்பாகக் கொண்டால் (உதாரணமாக Py) மற்ற மூன்று ஈனிகள் (NH3, Br- nyAne CI-) ஆகியன (Py) ஐப்பொருத்து அமைவதன் அடிப்படையில் மூன்று வடிவ மாற்றியங்கள் உருவாகின்றன.
14.
(d)
Cl2 > Br2 > F2 > I2
15.
(c)
\(\left( \frac { \Delta {G }^{ 0 } }{ \Delta T } \right) \) எதிர்குறியுடையது
16.
(i ) மைய உலோக அணு அல்லது அயனியுடன் ஓர் ஈனி ஒன்றுக்கு மேற்பட்ட பண்புகளை ஏற்படுத்துமாயின், கிடைக்கும் சேர்மம் வளைய அமைப்பு கொண்டிருக்கும்.
(ii ) இந்த வளைய அமைப்பு கொண்ட சேர்மங்கள் 'கொடுக்கிணைப்புகள்' எனப்படும்.
17.
இவை நரம்பு மண்டலத்தை தாக்கும் மருந்துகளாகும். வேலியம், டையசிபாம் போன்றவை மூளையிலுள்ள டோபமைன் எனும் நரம்புத் தூண்டல் கடத்தியை முடக்குவதன் மூலம் மைய நரம்பு மண்டலத்தின் மீது செயல்புரிகின்றன.
இவை, காமா அமினோ பியூட்ரிக் அமிலம் (GABA) என்ற நரம்புத் தூண்டல் கடத்தியின் செயல்பாட்டை தூண்டுகிறது. இதனால் மூளையில் நரம்பு உந்துதல் பரிமாற்றம் தடுக்கப்பட்டு பதற்றம் குறைகிறது. இவற்றின் பக்க விளைவுகள் பார்பிட்ரேட்டுகளைப் போல் உள்ளன. அதாவது தூக்கம் அயர்வு, நிலையற்ற நடைபோன்றவை.
18.
நீர் அல்லது கொழுப்பில் கரையும் தன்மையின் அடிப்படையில் வைட்டமின்கள் வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இரண்டு
அ) கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்:
இந்த வைட்டமின்கள், கொழுப்பு உணவுடன் எடுத்துக்கொள்ளும்போது சிறப்பாக உறிஞ்சப்பட்டு கொழுப்பு திசுக்கள் மற்றும் கல்லீரலில் சேமிக்கப்படுகின்றன. இந்த வைட்டமின்கள் நீரில் கரைவதில்லை, எனவே இவை கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் என்றழைக்கப்படுகின்றன. வைட்டமின் A,D,E & K ஆகியன கொழுப்பில் கரையும் வைட்டமின்களாகும்.
ஆ) நீரில் கரையும் வைட்டமின்கள்:
வைட்டமின்கள் B(B1, B2, B3, B5, B6, B7, B9 & B₁₂) மற்றும் C ஆகியன நீரில் எளிதாக கரைகின்றன. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் போலல்லாமல் இவற்றை சேமிக்க இயலாது. அதிகப்படியாக உள்ள வைட்டமின்கள் உடலில் சேமிக்கப்படாமல் சிறுநீரின் வழியாக வெளியேற்றப்படுகின்றன. எனவே, இவ்வகை வைட்டமின்கள் தொடர்ந்து உணவின் வழியாக நம் உடலுக்குள் செலுத்தப்பட வேண்டும்.
19.
\(M=\frac{V_1 M_1-V_2 M_2}{V_1+V_2}\)
\(\begin{aligned}
M & =\frac{(50 \times 0.05)-(50 \times 0.025)}{50+50}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{2.5-1.25}{100}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{1.25}{100}=0.0125 \mathrm{M}
\end{aligned}\)
pH = -log10[H+]
= - log 0.0125
= -log(1.25 \(\times\) 10-2)
நார்மாலிட்டி = மோலாரிட்டி \(\times\) காரத்துவம்
= [log 1.25 - 2 log 10]
= 2 - log10 1.25
= 2 - 0.0969
pH = 1.9031.
20.
(i) Zn ஐ தவிர மற்ற தனிமங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனித்த எலக்ட்ரான்கள் உள்ளன.
(ii) தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை குறையும் போது உலோக - உலோக பிணைப்பு வலிமை குறைகிறது
(iii) எனவே Zn ன் அணுவாக்கும் என்தால்பி மதிப்பு குறைவு
21.

1. ஒரு பொருள் எந்த ஒரு நிரந்தரமான வேதி மாற்றத்திற்கும் உட்படாமல் வினையின் வேகத்தினை மட்டும் மாற்றி அமைக்குமானால் அது வினைவேக மாற்றி எனப்படும்.
2. வினைவேக மாற்றிகள் வேதி வினைகளில் பங்கேற்றால், வினையின் இறுதியில் மீளவும் பெறப்படுகின்றன.
3. வினைவேக மாற்றி வினையின் கிளர்வு ஆற்றலைக் குறைக்கிறது. எனவே, ஆற்றல் தடையினை கடந்து சென்று விளைபொருளாக மாறும் வினைபடு மூலக்கூறுகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. இதனால் வினைவேகமும் அதிகரிக்கின்றன.
செயல்பாடு:
1. இரு சோதனைக் குழாய்களை எடுத்துக் கொண்டு A மற்றும் B எனப் பெயரிடுக. 7 ml 0.1 N ஆக்சாலிக் அமிலக் கரைசல் 5 ml 0.1-N KMnO4 5 ml 2N நீர்த்த H₂SO4 கரைசல் ஆகியனவற்றை இரு சோதனைக் குழாய்களிலும் எடுத்துக் கொள்ளவும்.
2. இரு சோதனைக் குழாய்களிலும் உள்ள கரைசல்கள் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்கும்.
3. சிறிதளவு மாங்கனீஸ் சல்பேட் படிகங்களை A சோதனைக் குழாயிலிடவும். இளஞ்சிவப்பு நிறமானது மறையத் துவங்கி இறுதியில் முழுவதும் மறைகிறது.
4. ஏனெனில் இந்நிகழ்வில் MnSO4 வினைவேக மாற்றியாக செயல்பட்டு MnO4 ஆல் \(\mathrm{C}_2 \mathrm{O}_4^{-2}\) ன் ஆக்சிஜனேற்றமடையும் வினையின் வேகத்தினை அதிகரிக்கிறது.
5. எனவே இளஞ்சிவப்பு நிறம் மறைகிறது.
6. சோதனைக் குழாய் B யில் இது நிகழவில்லை
22.
23.
24.
\(500^{ o }C\) க்கு அதிகமான வெப்பநிலைகளில் அம்மோனியாவானது சிதைவடைந்து அதன் தனிமங்களாக மாறுகிறது.
\({ 2NH }_{ 3 }\overset { 7500^{ o }C }{ \longrightarrow } \quad { N }_{ 2 }+{ 3H }_{ 2 }\)
25.

26.
அதிகளவு HI
CH3 - O - CH2 - CH2 - CH3 + HI \(\rightarrow\) CH3I + CH3 - CH2 - CH2 - CH2 OH \(\longrightarrow\) CH3 - CH2 - CH2I + H2O
1- மீத்தாக்ஸி புரோப்பேன் மெத்தில் அயோடைடு (அ) அயோடோ மீத்தேன் 1- அயோடோ புரோப்பேன்
ஏனெனில், 1- மீத்தாக்ஸி புரப்பேனில் ஓரிணைய ஆல்கைல் தொகுதி உள்ளது. அதனால் இது SN² வினைவழிமுறையை பின்பற்றுகிறது.
27.
வினைவேக மாற்ற வினைகளில் சில சேர்மங்களை சேர்க்கும் போது, அவை வினைவேகமாற்றிகளின் செயல்திறனை குறைக்கவோ அல்லது முழுவதுமாக இழக்கவோ செய்கின்றன. அத்தகைய சேர்மங்கள் வினைவேகமாற்ற நச்சுகள் என்றழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டுகள்,
\(2 \mathrm{SO}_2+\mathrm{O}_2 \rightarrow 2 \mathrm{SO}_3\) என்ற வினையில் செயல்படும் Pt வினைவேகமாற்றிக்கு As2 O3 நச்சாக செயல்படுகிறது.
அதாவது, As2 O3 ஆனது Pt வினைவேகமாற்றியின் செயல்திறனை இழக்கச்செய்கிறது. வினைவேகமாற்றியிலுள்ள கிளர்வு மையங்களை As2O3 அடைத்துக்கொள்கிறது. இதனால் அதன் செயல்பாடு இழக்கப்படுகிறது.
28.
நேர் மின்முனை: ஆக்ஸிஜனேற்றம் நடைபெறும் மின்முனை நேர்மின்முனை எனப்படும்.
எதிர் மின்முனை: ஆக்ஸிஜனேற்றம் நடைபெறும் மின்முனை எதிர் மின்முனை எனப்படும்.
29.
குறைந்த ஒழுங்குத் தன்மையின் எல்லை மற்றும் அங்கும், இங்கும் ஒழுங்கின்றி அமைந்த உட்கூறுகளைக் கொண்ட திடப்பொருட்கள் படிக வடிவமற்ற திடப்பொருட்கள் என வரையறுக்கப்படுகிறது.
30.
i) 20% நிறைவடைதல்:
\( A=100 \mathrm{M} \left[A_0\right]-[A]=20 \mathrm{M} \\
\mathrm{k}=\frac{20}{20}=1 \mathrm{~mol} \mathrm{~L}^{-1} \mathrm{~min}^{-1}
\)
ii) 80% நிறைவடைதல்:
\( {\left[\mathrm{A}_0\right]=100 \mathrm{M} ;\left[\mathrm{A}_0\right]-[\mathrm{A}]=80 \mathrm{M} ; \mathrm{t}=?} \\
\mathrm{t}=\frac{\left[\mathrm{A}_0\right]-[\mathrm{A}]}{\mathrm{k}} \\
\mathrm{t}=\frac{80}{1}=80 \mathrm{~min}
\)
31.
இப்படிகங்களில் அடிப்படை அமைப்பு அலகுகளாக நேர் அயனிகள் மற்றும் எதிர் அயனிகள் காணப்படுகின்றன. இவைகள் வலிமையான நிலைமின்னியல் கவர்ச்சி விசையால் ஒன்றோடொன்று இறுக்கமாகப் பிணைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமின்னியல் கவர்ச்சி விசையானது பெருமமாக அமையும் வகையில் நேர் அயனியைச் சுற்றிலும் அதிகபட்சமாக எத்தனை எதிர் அயனிகள் இருக்க வாய்ப்புள்ளதோ அந்த அளவிற்கு அயனிகள் காணப்படுகின்றன. இதன் மறுதலையும் உண்மை.
எனவே அயனிப்படிகங்கள் கடினமாகவும், உடையும் தன்மை உடையதாகவும் உள்ளன.
32.
(i) லாந்தனைடு அயனிகளின் நிறத்திற்கு காரணம் தனித்த 4f - எலக்ட்ரான்களும், ஒளியை உறிஞ்சி அவை f - f ஆர்பிட்டால் பரிமாற்றம் அடைவதும் ஆகும்.
(ii) Gd3+ அயனியின் எலக்ட்ரான் அமைப்பு 4f7 5d0 6s0
(iii) Gd3+ அயனி ஏழு தனித்த எலக்ட்ரான்களைப் பெற்று, நிலைப்புத் தன்மையுடைய சரிபாதி நிரம்பிய 4f - ஆர்பிட்டால்களைக் கொண்டுள்ளது.
(iv) எலக்ட்ரான்களின் சீர்மைத்தன்மை குலைந்து, நிலைப்புத் தன்மை குறைவதால் Gd3+ அயனியில் f - f ஆர்பிட்டல் பரிமாற்றம் நிகழ்வதில்லை. எனவே Gd3+ அயனி நிறமற்றது.
(v) மேலும் f - f எலக்ட்ரான் பரிமாற்றம் நிகழத் தேவையான ஒளி ஆற்றலை அகச்சிவப்புப் பகுதியில் உறிஞ்ச வேண்டி இருப்பதால் கட்புலனாகும் ஒளிப்பகுதியில் Gd3+ அயனியின் நிறம் தெரிவதில்லை.
33.
அ) BrF5

புரோமின் அணுவில் உள்ள பிணைப்பு எலக்ட்ரான் 7 + ஃபுளுரின் அணுவின் எண்ணிக்கை (5) = 12
x = \(\frac{12}{2}\) = 6
இனக்கலப்பு: sp3d2
வடிவமைப்பு: சதுரபிரமீடு
ஆ) BrF3

புரோமின் அணுவில் உள்ள பிணைப்பு எலக்ட்ரான் 7 + ஃபுளுரின் அணுவின் எண்ணிக்கை (5) = 12
x = \(\frac{10}{2}\) = 5
இனக்கலப்பு: sp3d2
வடிவமைப்பு: முக்கோண இருபிரமீடு; (T-வடிவம்)
34.

ஊ) HCOOH + H2SO4 ⟶ CO + H2O + H2SO4
35.
1. இரண்டு BH3 அலகுகள் இரு H-பாலங்களால் இணைந்துள்ளது.
2. 8 B-H பிணைப்புகள். எனினும் 12 இணைதிற எலக்ட்ரான்கள் மட்டும் உள்ளன.
3. 4 B-H இயல்பு சகப்பிணைப்பு. இரு B-H-B பாலங்கள் 3C-2e பிணைப்புகள்.
4. பிணைப்புப் பாலங்களிலுள்ள ஹைட்ரஜன்கள் ஒரே தளத்திலும், போரானின் நான்கு sp3 இனக்கலப்பு ஆர்பிட்டாலில், மூன்றில் ஒற்றை எலக்ட்ரான்கள் மற்றும் ஒன்று காலியான ஆர்பிட்டால் போரானின் பாதி நிரம்பிய இரண்டு எலக்ட்ரான்கள் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் சேர்ந்து நான்கு 2C-2e- பிணைப்புகளை தரும். ஒரு போரானின் பாதி நிரம்பிய ஆர்பிட்டால் மற்றொரு போரானின் காலியான ஆர்பிட்டால் மற்றும் ஹைட்ரஜனின் 1s ஆர்பிட்டால் மேற்பொருந்தி B-H-B உருவாகிறது.
36.
இவை மூன்று வகைப்படும். அவை :
(i) முனைவற்ற மூலக்கூறு படிகங்கள்
(ii) முனைவுற்ற மூலக்கூறு படிகங்கள்
(iii) ஹைட்ரஜன் பிணைப்பு மூலக்கூறு படிகங்கள்
(i) முனைவற்ற மூலக்கூறு படிகங்கள் :
(i) இப்படிகங்கள் உள்ள அணுக்கள் வலிமைக் குறைந்த லண்டன் விசைகளால் பிணைக்கப்பட்டுள்ளன.
(ii) இவை குறைந்த உருகு நிலையை பெற்றுள்ளது.
உதாரணம் :
நாப்தலீன்
(ii) மூலக்கூறு படிகங்கள் :
(i) இப்படிகங்களில் உள்ள அணுக்கள் வலிமையான இருமுனை - இருமுனை விசைகளால் பிணைக்கப்பட்டுள்ளன.
(ii) இவை அதிக உருகு நிலையை பெற்றுள்ளது.
உதாரணம் :
திட அமோனியா
(iii) ஹைட்ரஜன் பிணைப்பு மூலக்கூறு படிகங்கள் :
(i) இப்படிகங்களில் உள்ள அணுக்கள் ஹைட்ரஜன் பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன.
(ii) இவை மென்மையானவை
உதாரணம் :
பனிக்கட்டி
37.
i) 
38.
நிறை = 0.44 g

மோலார் நிறை = \(\frac{0.44}{112} \times 22400=88 \mathrm{~g}\)
CnH2n+1 + OH = 88
12n + (1)(2n+(1)+16+1 = 88
14n + 18 = 88
14n = 88 - 18
n = 70/14 = 5

39.
வெப்பத்தால் இளகும் பலபடி :
1. வெப்பத்தால் நெகிழும் பலபடி
2. இவற்றை வெப்பப்படுத்தும்போது இளகி குளிர்விக்கும் போது இறுகுகின்றது.
3. இவற்றை மறுவடிவமைப்பிற்கு உட்படுத்தலாம்.
எ.கா : பாலித்தீன் ,PVC, பாலிஸ்டைரீன்
வெப்பத்தால் இறுகும் பலபடி :
1.இவை வெப்பப்படுத்தும் போது இளகாமல், உருகும் தன்மையற்ற பொருளாக மாறுகின்றன.
எ.கா: பேக்கலைட் மெலமைன் பார்மால்டிஹைடு
40.
| வ.எண் | வேதிப்புறப்பரப்பு கவர்தல் அல்லது கிளர்வுறுத்தப்பட்ட பரப்பு கவர்தல் | இயற்புறப்பரப்பு கவர்தல் அல்லது வாண்டர்வால்ஸ் பரப்பு கவர்தல் |
| 1. | இது மிக மெதுவாக நிகழ்கிறது. | இது கணப்பொழுதில் நிகழ்கிறது. |
| 2. | இது அதிக தேர்ந்த செயல்முறையாகும். பரப்புப் பொருள் மற்றும் பரப்புகவர் பொருள் ஆகியவற்றின் தன்மையை பொருத்தமைகிறது. | இது தேர்ந்த செயல்முறை அல்ல |
| 3. | அழுத்தம் அதிகரிக்கும்போது வேதிப்புறப்பரப்பு கவர்தல் வேகமாக நிகழ்கிறது. ஆனால், இது பரப்பு கவர்தலின் அளவை மாற்றுவதில்லை. | இயற்புறப்பரப்புக் கவர்ச்சியில் அழுத்தம் அதிகரிக்கும்போது, பரப்பு கவர்தலின் அளவும் அதிகரிக்கிறது. |
| 4. | வெப்பநிலையை அதிகரிக்கும்போது வேதிப்புறப்பரப்பு கவர்தல் முதலில் அதிகரித்து பின்னர் குறைகிறது. | வெப்பநிலை அதிகரிக்கும்போது இயற்பரப்புக் கவர்ச்சி குறைகிறது. |
| 5. | வேதிப்புறப்பரப்பு கவர்தலில் பரப்பு பொருளுக்கும் பரப்புகவர் பொருளுக்கும் இடையே எலக்ட்ரான் இடமாற்றம் நிகழ்கிறது. | எலக்ட்ரான்கள் இடமாற்றம் நிகழ்வதில்லை. |
| 6. | பரப்பு கவர்தல் வெப்பம் அதிகம். அதாவது 40 முதல் 400 kJ / மோல் வரை. | பரப்பு கவர்தல் வெப்பம் குறைவு. 40 kJ/மோல் என்ற அளவிலேயே உள்ளது. |
| 7. | பரப்பின் மீது பரப்புகவர் பொருளின் ஒற்றை அடுக்கு உருவாகிறது. | பரப்பின் மீது பரப்புகவர் பொருளின் பல அடுக்குகள் உருவாகின்றன. |
| 8. | கிளர்வு மையங்கள் என்றழைக்கப்படும் சில குறிப்பிட்ட அமைவிடங்களில் மட்டும் பரப்பு கவர்தல் நிகழ்கிறது. இது புறப்பரப்பின் பரப்பளவைப் பொருத்து அமைகிறது. | இது எல்லா இடங்களிலும் நிகழ்கிறது. |
| 9. | வேதிப்புறப்பரப்பு கவர்தலில், குறிப்பிடத்தகுந்த கிளர்வுகொள் ஆற்றல் கொண்ட கிளர்வு அணைவு உருவாதல் நிகழ்கிறது. |
கிளர்வுகொள் ஆற்றல் முக்கியமற்றது.
|
41.
சங்கிலித் தொடர் மாற்றியம் இவைகளில், கார்பன் சங்கிலியின் நீளத்தில் மாற்றம் காணப்படுகிறது.
(i) CH3-CH2-CH2-CH2-NO2
( 1- நைட்ரோ பியூட்டேன்)
(ii )\({ CH }_{ 3 }-{ \underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ CH } }-{ CH }_{ 2 }-{ NO }_{ 2 }\)
(2-மெத்தில் 1-நைட்ரோ புரப்பேன்)
இட மாற்றியம் இவைகளில், நைட்ரோ தொகுதியின் இடம் மாறுபடுகிறது.
\({ CH }_{ 3 }-{ \underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ \overset { \underset { | }{ { CH }_{ 3 } } }{ C } } }-{ NO }_{ 2 }\) மற்றும் CH3CH2CH2CH2 - NO2,\({ \overset { \underset { | }{ { }_{ NO_ 2 } } }{ CH_ 3 }}\)CHCH2CH3
(2-மெத்தில் -1-நைட்ரோ புரப்பேன்) 1-நைட்ரோ புரப்பேன் 2-நைட்ரோ புரப்பேன்
வினை செயல் தொகுதி மாற்றியம்
\({ CH }_{ 3 }-{ \underset { \overset { | }{ { NO }_{ 2 } } }{ CH- } }{ CH }_{ 2 }-{ CH }_{ 3 }\)
(1-நைட்ரோ பியூட்டேன்)
மற்றும் CH3CH2CH2CH2O -N=O
(பியூட்டைல் நைட்ரேட்)
42.
i) CO2+ ல் 3 தனித்த எலக்ட்ரான்களும் Cu2+ ஒரு தனித்த எலக்ட்ரானும் உள்ளன. எனவே CO2+ அதிக பாரா காந்தத் தன்மையுடையது.
ii) +7
iii) இரண்டிலும் தனித்த எலக்ட்ரான்கள் இல்லை. எனவே இரண்டுமே பாராகாந்தத்தன்மையுடையது அல்ல.
43.
(i) உலோக கார்பனைல்களில் காணப்படும் உலோக அணு மற்றும் கார்பனைல் ஈனி ஆகியவற்றிற்கு இடையே காணப்படும் பிணைப்பு இரு கூறுகளை உள்ளடக்கியது,
(ii) முதல் கூறு கார்பனைல் ஈனியின் கார்பன் அணு, மைய உலோக அயனியின் காலியான d - ஆர்பிட்டாலுக்கு எலக்ட்ரான் இணையினை வழங்கி M ⇽ CO சிக்மா பிணைப்பினை உருவாக்குகிறது.
(iii) இந்த சிக்மா பிணைப்பு உருவாவதால், உலோக ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான் அடர்த்தி அதிகரித்து, மைய உலோக அணுவில் எலக்ட்ரான் செறிந்து காணப்படுகிறது.
(iv) இவ்வாறு அதிகரிக்கப்பட்ட எலக்ட்ரான் அடர்த்தியை ஈடு செய்யும் பொருட்டு உலோகத்தின் நிரப்பப்பட்ட d ஆர்பிட்டால்கள் கார்பனைல் ஈனியின் காலியான π* ஆர்பிட்டாலுடன் இடையீடு செய்து, எலக்ட்ரான் அடர்த்தியை மீண்டும் ஈனிக்கு பரிமாற்றம் செய்கிறது. இந்த இரண்டாவது கூறு π பின் பிணைப்பு (back bonding) எனப்படுகிறது.
(v) எனவே உலோக கார்பனைல்களில் ஈனிகளிலிருந்து உலோக அயனிக்கு சிக்மா பிணைப்பு வழியாகவும் மற்றும் உலோகத்திலிருந்து ஈனிக்கு π பின் பிணைப்பு வழியாகவும் எலக்ட்ரான் அடர்த்தியின் நகர்வு ஏற்படுகிறது.
(vi) உலோக கார்பனைல்களில் வலுவான M ⇽ CO பிணைப்பு காணப்படுவதற்கு மேற்கண்ட கூட்டு விளைவே காரணமாகிறது.
(vii) இந்நிகழ்வு, பின்வரும் வரைபடத்தில் தரப்பட்டுள்ளது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards