12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/03/2021
12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Creative Five mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
ஒரு வினையின் அர்ஹீனியஸ் காரணிகள் பின்வருமாறு. அதிர்வெண் காரணி
A = 1.11 x1011 விநாடி-1
Ea = 164438 J /mol , 300o C -ல் வினைவேக மாறிலி மற்றும் அரைவாழ்வு நேரத்தைக் கணக்கிடுக.
2.
தெளிவான வரைபடத்துடன் 'f ' மையங்களை விளக்குக.
3.
நைட்ரோ ஆல்கேன்களின் பயன்களை எழுதுக.
4.
குறுக்க ஆல்டால் குறுக்க வினையின் வினை வழிமுறையை எழுதுக.
5.
அசிட்டால்டிஹைடின் ஆல்டால் குறுக்க வினையின் வினைவழிமுறையை எழுதுக.
6.
லூகாஸ் சோதனையைப் பற்றி எழுதுக.
7.
பின்வரும் வினைகளில் வினைவிளை பொருட்களைக் கண்டறிக. அவைகளின் IUPAC பெயர்களை எழுதுக. மேலும் வினையின் வினை வழிமுறையினைக் குறிப்பிடுக .
i ) சைக்ளோபென்டனால் \(\overset { _{ H_{ 2 }SO_{ 4 } } }{ \underset { \Delta }{ \longrightarrow } } \) ?
ii ) பியூட்டன் -1-ஆல் \(\overset { _{ NaBr } }{ \underset { _{ H_{ 2 }SO_{ 4 } } }{ \longrightarrow } } \)?
iii ) நியோபென்டைல் ஆல்கஹால் \(\overset { PCI_{ 5 } }{ \longrightarrow } \) ?
8.
நுண் வடிகட்டலை பற்றி குறிப்பு வரைக.
9.
லெக்லாஞ்சே மின்கலம் குறித்து விவரி.
10.
கால்வானிக் மின்கலங்களில் உப்புப்பாலத்தின் பங்கு என்ன?
11.
அமில தாங்கல் வினைகள் மற்றும் கார தாங்கல் வினைகள் நிகழும் விதத்தினை விவரி.
12.
ஹென்டர்சன் -ஹேசல்பாக் சமன்பாடு - தருவி.
13.
குளுக்கோஸின் வளைய அமைப்பை பற்றி எழுதுக
14.
பிரக்டோஸ், சோடியம் - பாதரச கலவை முன்னிலையில் பகுதியளவு ஒடுக்கும் பொழுது என்ன நிகழும்?
15.
பின்வரும் அணைவுச் சேர்மங்களோடு தொடர்புடைய கலைச் சொற்களை வரையறு.
(அ) ஈனிகள்
(ஆ) அணைவுப் பன்முகி
(இ) அணைவு உட்பொருள்
16.
பேக்கலைட் தயாரித்தல் மற்றும் பயன்களை எழுதுக.
17.
அணைவுச் சேர்மங்களின் இணைதிறன் பிணைப்பு கொள்கையின் கோட்பாடுகளை கூறுக.
18.
\(\left[ Fe\left( CN \right) _{ 6 } \right] ^{ 3- }\) பாரா காந்தத் தன்மை என்பதை படிக புலக்கொள்கையைப் பயன்படுத்தி விளக்குக.
19.
20.
ஐனோ சிலிக்கேட்டுகளின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
21.
தங்கத்தாது எவ்வாறு சயனைடு வேதிக் கழுவுதல் முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது என்பதை விவரி .
22.
முகப்பு மைய கனசதுர அலகுக்கூட்டினை (fcc) பற்றி எழுதுக.
23.
ஒரு முதல் வகை வினைக்கு அநேக வெப்பநிலையில் வினைவேக மாறிலி மதிப்புகள் கண்டறியப்பட்டு, ln K Vs 1/T வரைபடம் வரையப்பட்டது. அதன் நேர்கோட்டின் சரிவு மதிப்பு -2.6 x 104K எனில், அவ்வினையின் கிளர்வு ஆற்றல் மதிப்பு என்ன?
24.
பின்வரும் சோதனை முடிவுகளிலிருந்து H2O2 வின் நீரிய கரைசல் சிதைவடைதல் வினை முதல் வகை வினை என நிறுவுக. வினையின் வினைவேக மாறிலி மதிப்பினைக் கண்டறிக.
| நேரம் (நிமிடங்கள்) | 0 | 10 | 20 | 30 | 40 |
| KMnO4 வின் கனஅளவு (மிலி) | 25 | 20 | 15.6 | 12.7 | 9.4 |
25.
வினைவேகத்தை பாதிக்கும் காரணிகளை விளக்குக.
1.
அர்ஹீனியஸ் சமன்பாடு
k = Ae-Ea /RT A =1.11 x 1011 விநாடி-1
E a = 164438 J / mole ;
R = 8. 314 J mol-1 K -1
T = 300 + 273 = 573 K
\(log\ k\ =\ log\ A-\frac { { E }_{ a } }{ 2.303RT } \)
\(log\ k\ =log 1.11\times1011-\frac { 164438 }{ 2.303\times8.314\times573 } \)
= 11.0453 - \(\frac { 164438 }{ 2.303\times8.314\times573 } \)
= 11.0453 - 14.9879
log k = -3.9426
k = Antilog of \(\overline { 4. } 0574\)
வினைவேக மாறிலி = 1.141 x 10-4 விநாடி-1
அரை ஆயுள்காலம் = t 1/2 = \(\frac { 0.693 }{ { k }_{ 1 } } \)
= \(\frac { 0.693 }{ 1.14\times{ 10 }^{ -4 } } =\frac { 6930 }{ 1.14 } \)
அரை ஆயுள்காலம் = t 1/2 = 6073 விநாடி.
2.
(i) சோடியம் குளோரைடு படிகங்களைச் சோடியத்தின் ஆவியுடன் வெப்பப்படுத்தும் போது Na2+ அயனிகள் உருவாகின்றன.
(ii) மேலும் அவை படிகத்தின் புறப்பரப்பில் படிகின்றன.
(iii) இந்நிலையில் குளோரைடு அயனிகள் அணிக்கோவை புள்ளிகளிலிருந்து இடம்பெயர்ந்து படிகத்தின் புறப்பரப்பிற்கு விரவி Na+ அயனிகளுடன் இணைகிறது.
(iv) மேலும் ஆவி நிலையில் உள்ள சோடியத்தால் இழக்கப்பட்ட எலக்ட்ரான்கள் படிக அணிக்கோவைத் தளத்தில் ஊடுருவி Cl- அயனிகளால் ஏற்படுத்தப்பட்ட வெற்றிடத்தில் இடம் கொள்கின்றன.
(v) இத்தகைய இணையாகாத தனித்த எலக்ட்ரான்களால் நிரப்பப்பட்டுள்ள எதிர் அயனி வெற்றிடங்கள் F மையங்கள் என அழைக்கப்படுகின்றன.
(vi) எனவே அதிகப்படியான Na+ அயனிகளை கொண்டுள்ள NaCl -ன் வாய்பாடானது Na1+X Cl எனக் குறிப்பிடப்படுகிறது.
3.
(i) நைட்ரோ மீத்தேன் கார்களின் எரிபொருளாக பயன்படுகிறது.
(ii) குளோரோபிக்ரின் (CCI3NO2) பூச்சிக்கொல்லியாகப் பயன்படுகிறது.
(iii) எரிபொருளுடன் சேர்க்கப்படும் பொருளாக நைட்ரோ ஈத்தேன் பயன்படுகிறது. மேலும் பலபடிகள், செல்லுலோஸ் எஸ்டர், தொகுப்பு இரப்பர் மற்றும் சாயங்களுக்கு கரைப்பானாக பயன்படுகிறது.
(iv) ஆல்கஹாலில் உள்ள 4% ஈத்தைல் நைட்ரைல் கரைசல் ஆனது சிறுநீர் வெளியேற்றியாக பயன்படுகிறது.
4.
இரண்டு வெவ்வேறு ஆல்டிஹைடுகள் அல்லது கீட்டோன்கள் அல்லது ஒரு ஆல்டிஹைடு மற்றும் ஒரு கீட்டோனுக்கு இடையிலும் ஆல்டால் குறுக்க வினை நிகழ முடியும். அத்தகைய ஆல்டால் குறுக்க வினையானது குறுக்க ஆல்டால் குறுக்க வினை அல்லது கலப்பு ஆல்டால் குறுக்க வினை என்றழைக்கப்படுகிறது. சாத்தியமுள்ள அனைத்து குறுக்கவினை விளைபொருட்களும் கலவையாக கிடைப்பதாலும், அவற்றை பிரித்தெடுத்தல் எளிதல்ல என்பதாலும் இந்த வினையானது அதிக பயனற்றது.
HCHO + CH3CHO நீரிய \(\overset { NaOH }{ \longrightarrow } \) HO - CH2-CH2-CHO
பார்மால்டிஹைடு அசிட்டால்டிஹைடு ஹைட்ராக்சி புரப்பனல்
HCHO + \({ CH }_{ 3 }-{ \underset { \overset { || }{ O } }{ C } }-CH\) நீரிய \(\overset { NaOH }{ \longrightarrow } \) \({ HO-CH }_{ 2 }{ -CH }_{ 2 }-{ \underset { \overset { || }{ O } }{ C } }-CH_{ 3 }\)
பார்மால்டிஹைடு அசிட்டோன் 4 ஹைட்ராக்சி பியூட்டன் -2-ஒன்
5.
அசிட்டால்டிஹைடின் ஆல்டால் குறுக்க வினையானது மூன்று படிகளில் நிகழ்கிறது.
படி 1 : காரத்தின் உதவியுடன் \(\alpha \)- ஹைட்ரஜன் அணுவானது புரோட்டானாக நீக்கப்பட்டு கார்பனில் எதிரயனி உருவாகிறது.
படி 2 : இந்த கார்பன் எதிரயனியானது மற்றொரு அயனியுறா ஆல்டிஹைடிலுள்ள கார்பனைல் கார்பனை தாக்கி ஆல்காக்சைடு அயனியை உருவாக்குகிறது.
படி 3 : இவ்வாறு உருவான ஆல்காக்சைடு அயனியானது நீரினால் புரோட்டானேற்றம் பெற்று ஆல்டாலை உருவாக்குகிறது.
வெப்பப்படுத்தும்போது இந்த ஆல்டால் விரைவாக நீர்நீக்கம் அடைந்து \(\alpha -\beta \) நிறைவுறா ஆல்டிஹைடை உருவாக்குகிறது.
6.
லூகாஸ் சோதனை:
ஆல்கஹால்களை லூகாஸ் காரணியுடன் (அடர் HCl மற்றும் நீரற்ற ZnCl2 கலவை) அறை வெப்பநிலையில் வினைப்படுத்தும் போது, மூவிணைய ஆல்கஹால்கள் உடனடியாக ஆல்கைல் ஹாலைடுகளைத் தருகின்றன. இது வினை நிகழ்வு ஊடகத்தில் கரையாத் தன்மையினைப் பெற்றிருப்பதால் உடனடியாகக் கலங்கல் தன்மை உருவாகிறது. ஈரிணைய ஆல்கஹால்கள் 5 முதல் 10 நிமிடங்களில் ஆல்கைல் குளோரைடைத் தருவதால் கலங்கல் தன்மை தாமதமாக ஏற்படுகிறது. ஆனால் அறை வெப்பநிலையில் ஓரிணைய ஆல்கஹால்கள் லூகாஸ் காரணியும் எவ்வித வினையிலும் ஈடுபடாததால் கலங்கல் தன்மையினைத் தருவதில்லை.
7.
i )
8.
(i ) சாதாரண வடிதாளிலுள்ள நுண்துளைகள் கூழ்மத் துகள்களை கடந்து செல்ல அனுமதிக்கின்றன.
(ii ) நுண்வடிகட்டலில் பயன்படுத்தப்படும் சவ்வுகளானவை, கொல்லோடியன், பளிங்குத்தாள் அல்லது விஸ்கிங் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
(iii) இந்த நுண்வடிதாள்களைக் பயன்படுத்தி கூழ்மங்களை வடிகட்டும்போது, கூழ்மத்துகள்கள் வடிதாளிலேயே தங்குகின்றன. மேலும், மாசுக்கள் கழுவப்பட்டு நீக்கப்படுகின்றன.
(iv ) அழுத்தத்தை பயன்படுத்தி இச்செயல்முறை விரைவாக்கப்படுகிறது.
(v ) மின்பகுளிகளிடமிருந்து கூழ்மத் துகள்களை நுண்வடிதாள் வழியாக வடிகட்டி நீக்கும் செயல்முறையானது நுண்வடிகட்டல் என்றழைக்கப்படுகிறது.
9.
லெக்லாஞ்சே மின்கலம் :
நேர்மின்முனை : ஜிங்க் கலன்
எதிர்மின்முனை : MnO2 உடன் தொடர்பிலுள்ள கிராஃபைட் தண்டு
மின்பகுளி : நீரிலுள்ள அம்மோனியம் குளோரைடு மற்றும் ஜிங்க் குளோரைடு மின்கலத்தின் Emf மதிப்பு ஏறத்தாழ 1.5V
கலவினைகள் :
நேர்மின்முனையில் ஆக்ஸிஜனேற்றம்
Zn (s) \(\longrightarrow \) Zn2+(aq ) + 2e - .........(1)
எதிர்மின்முனையில் ஒடுக்கம்
2NH4+(aq) + 2e-\(\longrightarrow \)2NH3(aq)+H2(g) ..........(2)
ஹைட்ரஜன் வாயுவானது MnO2 வினால் நீராக ஆக்ஸிஜனேற்றம் செய்யப்படுகிறது.
H2(g) + 2MnO2(s ) \(\longrightarrow \)Mn2O3(s ) +H2O (l ) .......(3)
சமன்பாடுகள் (1)+(2)+(3) ஐ கூட்ட ஒட்டுமொத்த ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினை
Zn (s) + 2NH4+(aq ) +2 MnO2(s) \(\longrightarrow \) Zn2+(aq) + Mn2O3(s ) + H2+O (l ) + 2NH3 .....(4)
எதிர்மின்முனையில் உருவாக்கப்பட்ட அமோனியாவானது Zn2+ அயனிகளுடன் இணைந்து [Zn(NH3)4 ]2+(aq) எனும் அணைவு அயனியை உருவாக்குகிறது. வினை நிகழ, நிகழ NH4+ அயனிச் செறிவு குறைந்து கொண்டே செல்கிறது, மேலும் நீரிய NH3 அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மின்கலனின் emf குறைகிறது.
10.
(i ) இரண்டு அரை மின்கலன்களிலுள்ள மின்பகுளிக் கரைசல்கள் உப்புப் பாலத்தை பயன்படுத்தி இணைக்கப்படுகின்றன.
(ii ) ஜிங்க் மின்முனையின் நேர்மின்முனை ஆக்ஸிஜனேற்றத்தால் கரைசலில் Zn2+ அயனிச் செறிவு அதிகரிக்கிறது என்பதை நாம் கற்றறிந்தோம் .
(iii ) அதாவது, \({ SO }_{ 4 }^{ 2- }\) அயனிகளுடன் ஒப்பிடும்போது அதிகளவில் Zn2+ அயனிகளை கொண்டிருப்பதால் நேர்மின்முனைப்பகுதியானது அதிக நேர்மின்சுமையை பெறுகிறது.
(iv ) இதேபோல், எதிர்மின்முனைப் பகுதியில் Cu2+ அயனிகள் காப்பராக ஒடுக்கப்படுவதால், அதிக எதிர்மின்சுமையை பெறுகிறது.
(v ) அதாவது Cu2+ அயனிகளுடன் ஒப்பிடும்போது \({ SO }_{ 4 }^{ 2- }\) அயனிகள் அதிகமாக உள்ளன.
(vi ) இரண்டு பகுதிகளிலும் மின்நடு நிலைத்தன்மையை பராமரிக்கும் பொருட்டு , வினையுறா எதிரயனிகள் Cl- (உப்புப் பாலத்தில் வைக்கப்பட்டுள்ள KCl-லிருந்து உப்புப் பாலத்திலிருந்து நேர்மின் முனைப்பகுதிக்குள் நுழைகின்றன.
(vii ) அதே நேரத்தில் K + அயனிகள் உப்புப்பாலத்திலிருந்து எதிர்மின் முனைப்பகுதிக்குள் நகருகின்றன.
11.
\({ CH }_{ 3 }COOH\rightleftharpoons { CH }_{ 3 }COO^{ - }+H^{ + }\). ......(1)
சோடியம் அசிட்டேட் முழுவதுமாக அயனியாக்கப்படுவதால் அதிகளவு \({ CH }_{ 3 }COO^{ - }\) அயனிகள் தாங்கல் கரைசல் உள்ளன .
\(CH_{ 3 }COONa\longrightarrow { CH }_{ 3 }COO^{ - }+Na^{ + }\).....(2)
HCl -சேர்க்கும் போது :
(i) HCl ஐ சேர்க்கும் போது, H + அயனிகளின் செறிவு அதிகரிக்கும்.
(ii) இவை அசிட்டேட் அயனிகளுடன் இணைந்து பிரிகையடையாத,\({ CH }_{ 3 }COOH\) ஐ தருகின்றன.
(iii) எனவே, சேர்க்கப்படும் H+அயனிகள் நடுநிலையாக்கப்படுவதால் தாங்கல் கரைசலின் pH மாறாமல் உள்ளது.
(iv) \({ CH }_{ 3 }COOH\) ன் செறிவு அதிகரிப்பதால் சமன்பாடு சமநிலை (1) ன் வலபக்கம் நகர்ந்து H+ அயனிகளின் செறிவை அதிகரிக்கிறது.
(v) இது HCl ஐ சேர்க்கும்போது தாங்கல் கரைசலின் pH மதிப்பு மிகச் சிறிதளவு குறைவதை விளக்குகிறது.
(vi) NaOH ஐ சேர்க்கும்போது. சேர்க்கும் போது, OH - அயனிகள்\({ CH }_{ 3 }COOH\) உடன் இணைந்து \({ CH }_{ 3 }COO^{ - }\) மற்றும் \(H_{ 2 }O\) வைத் தருகிறது.
(vii) எனவே, தாங்கல் கரைசலின் pH மாறாமல் உள்ளது.
கார தாங்கல் வினைகள் :
(i) \(NH_{ 4 }OH\) /\(NH_{ 4 }Cl\) தாங்கல் கரைசலுடன் HCl ஐ சேர்க்கும் போது, H + அயனிகள்\(NH_{ 4 }OH\) சேர்ந்து \({ NH }_{ 4 }^{ + }\) மற்றும் \(H_{ 2 }O\) வை தருவதால், pH மாறாமல் உள்ளது.
(ii) இதேபோல், NaOH ஐ சேர்க்கும்போது, OH -ஐ அயனிகள் தாங்கல் கரைசலிலுள்ள அயனிகளுடன் இணைந்து, \(NH_{ 4 }OH\) ஐ தருவதால், pH மாறாமல் உள்ளது.
12.
ஒரு அமில தாங்கல் கரைசலில் உள்ள ஹைட்ரோனியம் அயனிச் செறிவானது, கரைசலில் உள்ள வலிமை குறைந்த அமிலத்தின் செறிவு மற்றும் அதன் இணைகாரத்தின் செறிவு ஆகியவற்றிற்கிடையே உள்ள விகிதத்தை சார்ந்திருக்கும் என்பதை நாம் முன்னரே கற்றறிந்தோம்.
வலிமை குறைந்த அமிலமானது மிகக் குறைந்தளவு மட்டுமே பிரிகையடைகிறது. மேலும், பொது அயனி விளைவின் காரணமாக, பிரிகையடைதல் மேலும் குறைகிறது. எனவே, அமிலத்தின் சமநிலை செறிவானது, அயனியுறா அமிலத்தின் துவக்கச் செறிவிற்கு ஏறத்தாழ சமமாக உள்ளது. இதேபோல, இணைக்காரத்தின் செறிவானது, சேர்க்கப்பட்ட உப்பின் துவக்கச் செறிவுக்கு ஏறத்தாழ சமமாக உள்ளது.
இங்கு [அமிலம்] மற்றும் [உப்பு] ஆகியன முறையே தாங்கல் கரைசல்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட அமிலம் மற்றும் உப்பின் துவக்கச் செறிவுகளாகும்.
சமன்பாட்டின் இருபுறமும் மடக்கை எடுக்கும்போது
இருபுறமும் குறியீடு மாற்றம் செய்யும் போது
இதேபோன்று ஒரு காரத் தாங்கல் கரைசலில்
13.
குளுக்கோஸின் வளைய அமைப்பு:
1.தான் முன்மொழிந்த குளுக்கோஸின் திறந்த சங்கிலி பென்டாஹைட்ராக்ஸில் ஆல்டிஹைடூ அமைப்பானது அதன் வேதி இயைபை முழுமையாக விளக்குவதாக அமையவில்லை என பிஷர் கண்டறிந்தார்.
2.சாதாரண ஆல்டிஹைடுகள் போலல்லாமல்,குளுக்கோஸ் ஆனது சோடியம் பைசல்பைட்டுடன்,படிக பைசல்பைட்டுடன் சேர்மத்தை உருவாக்கவில்லை.
3.குளுக்கோஸ் ஷிஃப் சோதனையை தரவில்லை மேலும் குளுக்கோஸின் பென்டா அசிட்டேட் பெறுதியானது டாலன்ஸ் வினைக்காரணி அல்லது பெல்லிங் கரைசல் ஆகியவற்றால் ஆக்சிஜனேற்றம் அடையவில்லை.
4.இந்த பண்புகளை திறந்த சங்கிலி அமைப்பு விளக்கவில்லை மேலும், படிகமாக்கப்படும் நிபந்தனைகளைப் பொருத்து குளுக்கோஸ் ஆனது வெவ்வேறு உருகுநிலைகளைக் (419 மற்றும் 423 K)கொண்ட இரண்டு வெவ்வேறு வடிவங்களில் படிகமாவது கண்டறியப்பட்டுள்ளது.
5.இவற்றை விளக்கும் பொருட்டு, படத்தில் காட்டியுள்ளவாறு ஹைட்ராக்ஸில் தொகுதிகளுள் ஒன்று ஆல்டிஹைடு தொகுதியுடன் வினைப்பட்டு வளைய அமைப்பு ( ஹெமிஅசிட்டால் வடிவம் உருவாகிறது என முன்மொழியப்பட்டது.
6.இதன் காரணமாக சீர்மையுள்ள ஆல்டிஹைடு கார்பனானது சீர்மையற்ற கார்பனாக மாற்றமடைவதால் இரண்டு மாற்றியங்கள் உருவாகின்றன.
7.இந்த இரண்டு மாற்றியங்கள் C1கார்பன் அணுவில் மட்டும் மாறுபட்ட அமைப்பை கொண்டுள்ளன.
8.இந்த மாற்றியங்கள் ஆனோமர்கள்(anomers)என்றழைக்கப்படுகின்றன.
9.குளுக்கோஸின் இரண்டு ஆனோமர் வடிவங்கள் α மற்றும்β-வடிவங்கள் என்றழைக்கப்படுகின்றன.
10. கார்பன் அணுக்கள் மற்றும் ஒரு ஆக்ஸிஜன் அணுவை உள்ளடக்கிய குளுக்கோஸின் இந்த வளைய அமைப்பானது பைரானின் அமைப்பை ஒத்துள்ள காரணத்தால் பைரனோஸ் வடிவம் எனப்படுகிறது.
11. தூய α மற்றும் β-(D) குளுக்கோஸ்ஆகியவற்றின் நியம சுழற்சி மதிப்புகள் முறையே 11.2°, 18.7° ஆகும்.
12. எனினும், தூய நிலையில் உள்ள இந்த சர்க்கரைகளில் ஏதேனும் ஒன்றை, நீரில் கரைக்கும்போது, நியம சுழற்சி மதிப்பு + 53o கொண்ட சமநிலையை அடையும் வரை α-D குளுக்கோஸ் மற்றும் β-D குளுக்கோஸ் ஆகியன, திறந்த சங்கிலி அமைப்பின் வழியாக மெதுவாக ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றமடைகின்றன. இந்நிகழ்வானது மியுட்டா சுழற்சி என்றழைக்கப்படுகிறது.
14.
சோடியம் -பாதரச கலவை உடன் பிரக்டோஸ் பகுதியளவு ஒடுக்கமடைந்து சார்பிட்டால் மற்றும் மானிடால் கலவை உருவாகிறது.இவை இரண்டும் இரண்டாம் கார்பனில் மாறுபட்ட அமைப்பை கொண்ட எபிமர்கள் ஆகும்.அதாவது ஒரு புதிய சீர்மையற்ற கார்பன் C-2 ல் உருவாகியுள்ளது. இது கீட்டோ தொகுதி உள்ளதை உறுதிப்படுத்துகிறது.
15.
ஈனிகள்
(i ) மைய உலோக அணு / அயனியுடன் பிணைந்திருக்கும் அணுக்கள் அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதிகள் ஈனிகள் எனப்படுகின்றன.
(ii ) மைய உலோக அணுவுடன் நேரடியாக பிணைக்கப்பட்டுள்ள ஈனியின் அணுவானது, வழங்கி அணு (donor atom) எனப்படுகிறது.
(iii) எடுத்துக்காட்டாக, \({ K }_{ 4 }\left[ Fe(CN)_{ 6 } \right] \) ல் ஈனி \(CN^{ - }\)ஆனால் வழங்கி அணு கார்பன்.
(iv ) \(\left[ Co\left( { NH }_{ 3 } \right) _{ 6 } \right] { Cl }_{ 3 }\) ல் ஈனி \({ NH }_{ 3 }\) மேலும் வழங்கி அணு நைட்ரஜன் N ஆகும் .
அணைவுப் பன்முகி
(i ) மைய உலோக அயனியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள ஈனிகள் முப்பரிமான வெளியில் குறித்த திசைகளில் அமைவதால் ஏற்படுவது அணைவுப் பன்முகி(Coordination polyhedron) எனப்படுகிறது.
(ii ) எடுத்துக்காட்டாக \({ K }_{ 4 }\left[ Fe(CN)_{ 6 } \right] \) ல் அணைவுப் பன்முகியானது ஒரு எண்முகி ஆகும். \(Ni\left[ (CO)_{ 4 } \right] \) ன் அணைவுப் பன்முகி ஒரு நான்முகி ஆகும்.
அணைவுப் உட்பொருள்
(i ) அணைவு உட்பொருளானது ஒரு அயனி அல்லது நடுநிலைப் பொருளாகும்.
(ii ) இது வழக்கமாக ஒரு உலோகத்தினை மைய அணுவாகவும் அதனுடன் இணைக்கப்பட்ட பிற அணுக்கள் அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதிகளையும் (ஈனிகள்) உள்ளடக்கியது.
(iii ) வாய்பாட்டில், குறிப்பிடப்படும் போது அணைவு உட்பொருளானது ஒரு சதுர அடைப்பிற்குள் குறிக்கப்படுகிறது, எடுத்துக்காட்டாக, பொட்டாசியம் பெர்ரோ சயனைடு, \({ K }_{ 4 }\left[ Fe(CN)_{ 6 } \right] \) ல் அணைவுப் உட்பொருளானது \(\left[ Fe(CN)_{ 6 } \right] ^{ 4- }\) - ஆகும். நிக்கல் டெட்ரா கார்பனைலில், அணைவு உட்பொருள்\(Ni\left[ (CO)_{ 4 } \right] \) ஆகும்.
16.
பேக்கலைட் தயாரித்தல்:
1.பீனால் மற்றும் பார்மால்டிஹைடு ஆகியன இதில் ஒற்றைப்படிகளாக உள்ளன .
2.அமிலம் அல்லது கார வினையூக்கிகள் முன்னிலையில் இந்த ஒற்றைப்படி மூலக்கூறுகளை குறுக்க பலபடியாக்கல் வினைக்கும் உட்படுத்தி இந்த பலபடி பெறப்படுகிறது .
3 .பீனால் மூலக்கூறுகள் பார்மால்டிஹைடுடன் வினைப்பட்டு ஆர்த்தோ மற்றும் பாரா ஹைட்ராக்ஸி மீதில் பீனால்களை உருவாக்குகிறது.
4.இவை பீனாலுடன் தொடர்ச்சியாக வினைப்பட்டு நேவோலேக் என்று அழைக்கப்படும் நேர்கோட்டுப் பலபடிகளை உருவாக்குகின்றன.
5.நேவோலேக் பலபடியை தொடர்ந்து பார்மால்டிஹைடுடன் வெப்பப்படுத்தும் போது குறுக்க பிணைப்புகளை கொண்ட பேக்கலைட் உருவாகிறது.
பயன்கள் :
நேவோலேக் ஆனது பெயிண்டுகளில் பயன்படுகிறது அடுக்கு மரப்பலகைகளை ஒட்டுவதற்கு பயன்படும் பசை மற்றும் வார்னிஷ்களில் மிருதுவாக பேக்கலைட்டுகள் பயன்படுகின்றன .சீப்புகள் ,பேனாக்கள் போன்றவை தயாரிக்க கடினமான பேக்கலைட் பயன்படுகின்றன.
17.
(i) அணைவுச் சேர்மங்களில் காணப்படும் ஈனி\(\longrightarrow \) உலோக பிணைப்பானது சகப்பிணைப்புத் தன்மை உடையது.
(ii) இப்பிணைப்பானது, ஈனிக்கும், மைய உலோக அயனிக்கும் இடையே ஈனி வழங்கும் எலக்ட்ரான்கள் பங்கிடப்படுவதால் ஏற்படுகிறது.
(iii) ஒவ்வொரு ஈனியும் குறைந்தபட்சம் ஒரு (தனித்த இரட்டை எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள நிரப்பப்பட்ட ஆர்பிட்டாலைப் பெற்றிருக்க வேண்டும்.
(iv)ஒரு அணைவு அயனியில் உள்ள மைய உலோக அயனியானது, ஈனிகள் வழங்கும் ஓரிணை எலக்ட்ரான்களை ஏற்றுக் கொள்ள ஏதுவாக தேவையான எண்ணிக்கையில் (அணைவு எண்ணிற்கு சமமான எண்ணிக்கையில்) காலியான ஆர்பிட்டால்களைப் பெற்றிருக்க வேண்டும்.
(v) மைய உலோக அணுவின் இந்த வெற்று ஆர்பிட்டால்கள் இனக்கலப்படைகின்றன. ஒப்பிடத்தக்க ஆற்றலுடைய அணு ஆர்பிட்டால்கள் ஒன்றோடொன்று கலந்து சம எண்ணிக்கையில் சம ஆற்றலுடைய புதிய ஆர்பிட்டால்களை உருவாக்குகின்றன.
(vi) மைய உலோக அணுவின் இனக்கலப்படைந்த வெற்று ஆர்பிட்டால்கள், ஈனிகளின் நிரப்பப்பட்ட ஆர்பிட்டால்களுடன் நேர்கோட்டில் மேற்பொருத்தி உலோகம் மற்றும் ஈனிகளுக்கு இடையே ஈதல் சிக்மா சகப்பிணைப்பினை ஏற்படுத்துகின்றன.
(vii) இனக்கலப்படைந்த ஆர்பிட்டால்கள் திசைப் பண்புடையவை புறவெளியில் இவைகள் குறித்த திசையில் அமைவதால் அணைவு அயனிக்கு குறிப்பிட்ட வடிவம் உருவாகிறது.
(viii) எண்முகி அணைவுகளில், (n -1)d ஆர்பிட்டால்கள் இனக்கலப்பாதலில் ஈடுபட்டிருப்பின், அத்தகைய அணைவுகள் உள் ஆர்பிட்டால் அணைவுகள் அல்லது குறை சுழற்சி அணைவுகள் என அழைக்கப்படுகின்றன.
(ix) nd ஆர்பிட்டால்கள் இனக்கலப்பில் ஈடுபட்டிருப்பின், அத்தகைய அணைவுகள் வெளி ஆர்பிட்டால் அணைவுகள்அல்லது உயர் சுழற்சி அணைவுகள் என அழைக்கப்படுகின்றன.
(x) இங்கு n என்பது வெளிக்கூட்டின் முதன்மைக் குவாண்டம் எண்ணைக் குறிப்பிடுகின்றது.
(xi) ஒரு அணைவுச் சேர்மத்தில் உள்ள மைய உலோக அயனியானது தனித்த இணையாகாத எலக்ட்ரான்களைக் கொண்டிருக்குமாயின் அவை பாராகாந்தத் தன்மையைப் பெற்றிருக்கும்.
(xii) அனைத்து எலக்ட்ரான்களும் இரட்டைகளாகக் காணப்பட்டால் அணைவுச் சேர்மம் டையாகாந்தப் பண்பினைப் பெற்றிருக்கும்.
(Xiii) ஒரு அணைவுச் சேர்மத்தில்,CO ,CN-,en மற்றும் NH3 போன்ற ஈனிகள் காணப்படின், அவைகள் மைய உலோக அணுவில் உள்ள எலக்ட்ரான்களை இணையாக்குகின்றன.
(xiv) அத்தகைய ஈனிகள் வலிமை புல ஈனிகள் என அழைக்கப்படுகின்றன.
(xv) இனக்கலப்படைந்த உலோக ஆர்பிட்டாலுக்கும், ஈனிகளின் ஆர்பிட்டாலுக்கும் இடையேயான மேற்பொருந்துதல் அதிகபட்சமாக இருப்பின், பிணைப்பும் வலிமையாக இருக்கும்.
18.
| உயர் சுழற்சி அணைவு | தற்சுழற்சி அணைவு | |||||
சமச்சீர் புலத்தில் எலக்ட்ரான் அமைப்பு : d5
எலக்ட்ரான் இணைகளின் எண்ணிக்கை (n 'p ) =0 ; எனவே , \(E_{ iso }=0\) |
||||||
| ஈனிப் புலம் : எலக்ட்ரான் அமைப்பு (உயர்வு சுழற்சி அணைவு ): \(t^{ 3 }\) \(e^{ 2 }\) CFSE = \(\left\{ \left[ 3(-0.4)+2(0.6) \right] \overset { 2g }{ \Delta _{ o } } +0*P \right\} -\{ 0\} \) = 0 |
எலக்ட்ரான் அமைப்பு = \(-2\Delta o +2P\) |
|||||
| அணைவின் இயல்பு | தற்சுழற்சி | |||||
| மைய உலோக அயனியின் எலக்ட்ரான் அமைப்பு | \({ t^{ 5 }_{ 2g } }{ \quad e^{ 0 }_{ g } }\) | |||||
| காந்தப் பண்பு | இணையாகாத தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை =1. எனவே பாராகாந்தத்தன்மை உடையது. | |||||
| காந்த திருப்புத் திறன் (சுழற்சி மட்டும் பொருத்தமைவது ) | \(\mu _{ s }=\sqrt { n(n+2) } =\sqrt { 1(1+2) } =1.732\quad BM\) | |||||
19.
20.
ஐனோ சிலிக்கேட்டுகள் சங்கிலி சிலிக்கேட்டுகள் என இரு வகைப்படும் .
சங்கிலி சிலிக்கேட்டுகள்:
இவ்வகை சிலிக்கேட்டுகள் ' n ' எண்ணிக்கையிலான \(\left[ SiO_{ 4 } \right] ^{ 4- }\) நான்முகி அலகுகள் நேர்க்கோட்டு அமைப்பில் இணைந்து உருவான \(\left[ \left( SiO_{ 3 } \right) _{ n } \right] ^{ 2n- }\)அயனிகளைக் கொண்டுள்ளன.
ஒவ்வொரு சிலிக்கேட் அலகும் அதன் இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களை மற்ற அலகுகளுடன் பங்கிட்டுக் கொள்கிறது.
எடுத்துக்காட்டு :
ஸ்பொடுமின் - \(LiAl\left( SiO_{ 3 } \right) _{ 2 }\)
இரட்டை சங்கிலி சிலிக்கேட்கள் (அல்லது ஆம்ஃபிபோல்கள் ):
இவ்வகை சிலிக்கேட்டுகள் \(\left[ Si_{ 4 }O_{ 11 } \right] _{ n }^{ 6n- }\) அயனிகளைக் கொண்டுள்ளன. இவற்றில் இரண்டு வெவ்வேறு விதமான நான்முகி அமைப்புகள் காணப்படுகின்றன.
(i) மூன்று முனைகளை பங்கிட்டுக்கொண்டவை
(ii) இரண்டு முனைகளை பங்கிட்டுக்கொண்டவை .
எடுத்துக்காட்டு :
கல்நார் (ஆஸ்பெஸ்டாஸ் ): இவை நார் தன்மையுள்ள எளிதில் தீப்பற்றாத சிலிக்கேட்டுகள் ஆகும். எனவே, இவை வெப்பக் காப்பு பொருளாகவும், வேகத்தடை பட்டைகள், கட்டுமானப் பொருள் மற்றும் வடிகட்டிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன .
21.
சயனைடு வேதிக் கழுவுதல் : தங்கத் தாதுவை அடர்ப்பித்தலை எடுத்துக்காட்டாகக் கருதுவோம். தங்கத்தின் நன்கு தூள் செய்யப்பட்டத் தாதுவானது நீர்த்த சோடியம் சயனைடு கரைசலுடன் சேர்த்து காற்றினைச் செலுத்தி கழுவப்படுகிறது. தங்கமானது கரையக்கூடிய சயனைடு அணைவாக மாறுகிறது. அலுமினோ சிலிக்கேட் கனிமக் கழிவு கரையாமல் அப்படியே தங்குகிறது.
\(4Au_{ (s) }+8C{ N }^{ - }_{ (aq) }+O_{ 2(g) }+2H_{ 2 }{ O }(1)\rightarrow 4\left[ Au(CN)_{ 2 } \right] ^{ - }_{ (aq) }+4OH_{ (aq) }^{ - }\)
22.
1. முகப்பு மைய கனசதுர அலகுக்கூட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒத்த அணுக்கள், அயனிகள் அல்லது மூலக்கூறுகள் காணப்படுகின்றன.
2. மேலும் ஒவ்வொரு முகப்பின் மையத்திலும் ஒரு அணுவும் காணப்படுகிறது.
3. மூலைகளில் காணப்படும் அணுக்கள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருப்பதில்லை.
4. எனினும் மூலையில் காணப்படும் அணுக்கள் முகப்பு மையத்தில் காணப்படும் அணுவைத் தொட்டுக் கொண்டுள்ளன.
5.இந்த அமைப்பின் அணைவு எண் 12 ஆகும்.
6. ஒரு முகப்பு மைய கனசதுர அலகுக்கூட்டில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கை
\(=\frac { { N }_{ C } }{ 8 } +\frac { { N }_{ f } }{ 2 } \)
\(\\ =\frac { 8 }{ 8 } +\frac { 6 }{ 2 } \)
= 1 + 3
= 4
23.
சரிவு = -2.6x104K; Ea = ? R = 8.314 JK-1 mol-1
சரிவு = -\(\frac{Ea}{R}\)
ஃ Ea = -சரிவு xR
= -(-2.6 x 104) x 8.314
= 21.61 x 104 J mol-1
Ea = 216.KJ mol-1
24.
\({ H }_{ 2 }{ O }_{ 2 }\overset { pt }{ \longrightarrow } { H }_{ 2 }O+\frac { 1 }{ 2 } { O }_{ 2 }\)
\(\\ K=\frac { 2.303 }{ t } log\frac { V_{ o } }{ { V }_{ t } } \)
| நேரம் (நிமிடங்கள்) |
Vt | \(\frac { V_{ o } }{ { V }_{ t } } \) | \(\\ K=\frac { 2.303 }{ t } log\frac { V_{ o } }{ { V }_{ t } } \) |
| 10 | 20 | \(\frac{25}{20}\) | \(K=\frac { 2.303 }{ 10 } log\frac { 25 }{ 20 } =0.0223\)நிமி-1 |
| 20 | 15.6 | \(\frac{25}{15.6}\) | \(K=\frac { 2.303 }{ 20 } log\frac { 25 }{ 15.6 } =0.0236\)நிமி-1 |
| 30 | 12.7 | \(\frac{25}{12.7}\) | \(K=\frac { 2.303 }{ 30 } log\frac { 25 }{ 12.7 } =0.0226\)நிமி-1 |
| 40 | 9.4 | \(\frac{25}{9.4}\) | \(K=\frac { 2.303 }{ 40 } log\frac { 25 }{ 9.4 } =0.0245\)நிமி-1 |
அனைத்து k மதிப்புகளும் ஏறக்குறைய சமம், எனவே இவ்வினை ஒரு முதல் வகை வினையாகும்.
சராசரி k மதிப்பு = 0.0233 நிமி-1
25.
i) வினைபடு பொருட்களின் நிலைமை மற்றும் இயைபு:
1. ஒரு வேதி வினையில், வினைபடு பொருட்களில் உள்ள சில பிணைப்புகள் பிளவுறுத்தல் மற்றும் சில புதிய பிணைப்புகள் உருவாதல் ஆகியவற்றின் காரணமாக வினைவிளை பொருட்கள் உருவாகின்றன.
இச்செயல்முறையோடு தொடர்புடைய நிகர ஆற்றல் மாற்றமானது, வினைபடு பொருட்களின் தன்மையைப் பெற்றுள்ளன.
எ.கா: பெர்ரஸ் அம்மோனியம் சல்பேட் மற்றும் KMnO4 ஆகியவற்றிற்கு இடையே நிகழும் வினை விரைவாக நடைபெற்று, குளிர்ந்த நிலையிலேயே KMnO4 ன் இளஞ்சிவப்பு நிறம் மறைகிறது.
2. ஆனால் ஆக்சாலிக் அமிலம் மற்றும் KMnO4 ஆகியவற்றிற்கு இடையே நிகழும் வினை மெதுவாக நடைபெறுவதால், வெப்பப்படுத்தும் போதே வினை நிகழ்ந்து KMnO4 ன் இளஞ்சிவப்பு நிறம் மறைகிறது.
3. வினைபடு பொருட்களின் இயற்பியல் நிலைமை வினைவேகத்தை பாதிக்கிறது.
4. வாயு நிலை வினைகள், திட மற்றும் திரவ நிலைமை வினைபடு பொருட்களின் வினைகளை விட விரைவாக நடைபெறும்.
எ.கா: திட சோடியம் மற்றும் திட அயோடினுக்கு இடையேயான வினையோடு ஒப்பிடும் போது அயோடின் ஆவியுடன் உலோக சோடியத்தின் வினைவேகமாக நடைபெறும். திண்ம காரீய நைட்ரேட் மற்றும் திண்ம பொட்டாசியம் அயோடைடு ஆகியவற்றை கலக்கும் போது மஞ்சள் நிறம் மெதுவாக உருவாகிறது. ஆனால் இவ்விரண்டின் நீர்க்கரைசல்களை சேர்க்கும் போது வினைவேகமாக நடைபெற்று மஞ்சள் நிறம் உடனடியாகத் தோன்றுகிறது.
ii) வினைபடு பொருட்களின் செறிவு:
1. வினைபடு பொருட்களின் செறிவு அதிகரிக்கும் போது வினையின் வேகமும் அதிகரிக்கின்றது.
2. இதனை மோதல் கொள்கையைப் பயன்படுத்தி விளக்கலாம்.
3. வினைவேகமானது மூலக்கூறுகளுக்கிடையே நடைபெறும் மோதல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அமைகிறது.
4. செறிவு அதிகரிக்கும் போது, மோதல் அதிகரிப்பதால், வினைவேகமும் அதிகரிக்கின்றது.
iii) வினை பொருளின் புறப்பரப்பளவினால் ஏற்படும் விளைவு:
1. வினை பொருளின் உருவளவு குறையும் போது அதன் புறப்பரப்பளவு அதிகரிக்கின்றது.
2. வினைபடு பொருட்களின் புறப்பரப்பளவு அதிகரிப்பதால் ஒரு லிட்டர் கன அளவில் ஒரு வினாடியில் அதிக மோதல்கள் நடைபெற வாய்ப்பு ஏற்படுகிறது.
3. எனவே வினைவேகம் அதிகரிக்கின்றது.
எ.கா: தூளாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட், அதே அளவுடைய பளிங்குக் கல்லுடன் (CaCO3) ஒப்பிடும் போது நீர்த்த HCl அமிலத்துடன் வேகமாக வினைபுரிகின்றது.
iv) வெப்பத்தின் விளைவு:
1. பொதுவாக வெப்பநிலை அதிகரிக்கும் போது வேதிவினை வேகம் அதிகரிக்கிறது.
2. பெரும்பாலான வினைகளுக்கு 10oC வெப்பநிலை அதிகரிப்பிற்கு வினைவேகம் தோராயமாக இரு மடங்கு அதிகரிக்கும்.
எ.கா: மெக்னீசியம் குளிர்ந்த நீரை விட, சுடு நீரில் வேகமாக வினைபுரிந்து காரக் கரைசலை உருவாக்குவதை, சுடு நீரில் ஃபீனால்ப்தலின் இளஞ்சிவப்பு நிறமாக மாறுவதிலிருந்து அறியலாம்.
v) வினைவேக மாற்றியின் விளைவு:
1. எந்த ஒரு நிரந்தரமான வேதி மாற்றத்திற்கும் உட்படாமல் வினையின் வேகத்தினை மாற்றியமைக்கும் பொருள் வினைவேக மாற்றி எனப்படும்.
2. வினைவேக மாற்றிகள் வினைகளில் பங்கேற்றால், வினையின் இறுதியில் அவை மீளவும் பெறப்படுகின்றன.
3. வினைவேக மாற்றி வினையின் கிளர்வு ஆற்றலை குறைக்கிறது.
4. எனவே, ஆற்றல் தடையினை கடந்து சென்று விளைபொருளாக மாறும் வினைபடு மூலக்கூறுகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இதனால் வினைவேகமும் அதிகரிக்கின்றது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards