12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/03/2021
12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Creative Three mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பின்வரும் சேர்மங்களுக்கு சாத்தியமான அனைத்து மாற்றியங்களையும் எழுதுக.
(i ) C2H5 - NO2
(ii ) C3H7 - NO2
2.
டையசோ தொகுதி நீங்காதிருக்கும் ஏதேனும் ஒரு வினையை எழுதுக.
3.
நவநகல் வினை குறிப்பு வரைக.
4.
எத்திலீன் டையமீனை கிளைக்கால் ஆக எவ்வாறு மாற்றுவாய்?
5.
ஆல்கஹால் மற்றும் பீனால்களை வேறுபடுத்தி அறியும் சோதனைகளை எழுதுக.
6.
டிண்டால் விளைவு பற்றி எழுதுக.
7.
பிரெளனியன் இயக்கத்தின் முக்கியத்துவம் யாது?
8.
அரை மின்கலம் என்றால் என்ன ? உதாரணம் தருக.
9.
0.15 M செறிவுடைய மின்பகுளி கரைசலின் மின்தடை 50 \(\Omega \). அக்கரைசலின் நியம கடத்துத்திறன் 2.4 Sm-1. அதே மின்கடத்துக் கலனை கொண்டு அளவிடப்பட்ட, 0.5N செறிவுடைய அதே மின்பகுளிக் கரைசலின் மின்தடை 480\(\Omega \)ஆகும்.0.5N செறிவுடைய மின்பகுளி கரைசலின் சமான கடத்துத்திறனை கணக்கிடுக .
10.
தாங்கல் கரைசலின் இருவகைகள் எவை? ஒவ்வொரு வகைக்கும் உதாரணம் தருக.
11.
பார்லி சர்க்கரை என்பதன் பொருளென்ன?
12.
ஓரின மற்றும் பல் இன ஈனி அணைவுச் சேர்மங்கள் பற்றி சிறு குறிப்பு வரைக.
13.
சுரநிவாரணி எவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை.
14.
பின்வருவனவற்றுள் போரான் எவ்வாறு வினைபுரிகிறது ?
(i ) ஹேலஜனுடன்
(ii ) நைட்ரஜனுடன்
(iii ) சோடியம் ஹைட்ராக்சைடுடன்
15.
உலோகவியலில் வறுத்தல் தாதுவின் உருகுநிலைக்கு குறைவான வெப்ப நிலையிலும் உருக்கி பிரித்தல் உருகு நிலையைவிட அதிக வெப்பநிலையில் நிகழ்த்துவது ஏன்?
16.
நையோபியம் என்ற தனிமம் பொருள் மைய கனசதுர அமைப்பில் படிகமாகிறது. அதன் அடர்த்தி 8.55gcm-3 மற்றும் அணுநிறை 93u எனில் அதன் அணு ஆரம் யாது?
17.
ஒரு பொருளின் காந்ததிருப்புத் திறன் மதிப்பு 3.9 BM எனில் அதிலுள்ள தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை கணக்கிடுக
18.
லாந்தனைடுகளில் ஆக்சிஜனேற்ற நிலை பற்றி எழுதுக
19.
HF அமிலம் கண்ணாடி பாட்டில்களில் சேமிக்கப்படுவதில்லை. ஏன்?
20.
ஒரு முதல் வகை வினைக்கு 99% வினை முடிவடைய ஆகும் காலம் 90% வினை முடிவடையும் காலத்தைப் போல் இரு மடங்கு என நிரூபி.
21.
போரிக் அமிலத்தின் அமைப்பினை விளக்கு.
22.
N2O5(g) சிதைவடைந்து NO2(g) மற்றும் O2(g) ஆகியனவற்றைத் தரும் வினைகளைக் கருதுக. ஒரு குறிப்பிட்ட நிலையில் N2O5(g)ன் மறைத்தல் வேகம் 2.5x10-2 mol dm-3 s-1 எனில், NO2 மற்றும் O2 ஆகியனவற்றின் உருவாதல் வேகத்தின் மதிப்புகளைக் காண்க. வினையின் வினைவேகம் என்ன?
23.
நான்முகி படிக புலத்தில், d - ஆர்பிட்டாலின் படிக புலப் பிளப்பினை குறிப்பிடும் வரைபடம் காண்க.
24.
கார வேதிக் கழுவுதல் பற்றி எழுது.
1.
(i ) C2H5 - NO2
அ ) CH3 CH2 - NO - நைட்ரோ ஈத்தேன்
ஆ) CH3-CH2-O-N=O - ஈத்தைல் நைட்ரைட்
(ii ) C3H7 - NO2
அ) CH3 - CH2 - CH2 - NO2 - 1 நைட்ரோ புரோப்பேன்
ஆ) \({ \underset { \quad \quad \quad \quad \quad \overset { | }{ NO_{ 2 } } }{ { CH }_{ 3 }-CH } }-CH_{ 2 }\) - 2 நைட்ரோ புரோப்பேன்
CH3- CH2- CH2- O - N = O - புரோப்பேன் நைட்ரேட்
2.
டையசோ தொகுதி நீங்காதிருக்கும் வினை:
C6H5 - N2- Cl \(\overset { { SnCl }_{ 2 } }{ \underset { HCl\\ { Na }_{ 2 }{ SO }_{ 3 } }{ \longrightarrow } } \)(அ) C6H5 -\(\ddot { N } H\ddot { N{ H }_{ 2 } } \)
3.
பிரிடின் முன்னிலையில் பென்சால்டிஹைடு ஆனது மலோனிக் அமில மூலக்கூறுடன் குறுக்க வினைக்கு உட்பட்டு சின்னமிக் அமிலத்தை தருகிறது. இவ்வினையில் பிரிடின், கார வினைவேக மாற்றியாக செயல்படுகிறது.
4.
5.
| வினை | பீனால் | ஆல்கஹால் |
| C6H5N2Cl உடன் | ஆரஞ்சு சிவப்பு நிறசாயம் தருகிறது | தருவதில்லை |
| நடுநிலை FeCl3 | கருஊதா நிறத்தை தருகிறது | தருவதில்லை |
| NaOH உடன் | C6H5ONa - ஐ தருகிறது | வினை இல்லை |
6.
(i ) கூழ்மக் கரைசல் வழியே ஒளி பயனிக்கும்போது, அது எல்லா திசைகளிலும் சிதறடிக்கப்படுகிறது.
(ii ) இவ்விளைவானது ஃ பாரடேவால் முதன்முதலில் கண்டறியப்பட்டது.
(iii) ஆனால், டிண்டால் இதை தெளிவாக ஆராய்ந்தார், எனவே இது டிண்டால் விளைவு என்றழைக்கப்படுகிறது.
(iv ) கூழ்மத் துகள்கள் ஒளியின் ஒரு பகுதியை உறிஞ்சிக் கொள்கின்றன, ஒளியின் மீதமுள்ள பகுதியானது கூழ்மத்தின் புறப்பரப்பிலிருந்து எல்லா திசைகளிலும் சிதறடிக்கப்படுகிறது . எனவே ஒளியின் தடம் தெளிவாக புலப்படுகிறது.
7.
(i ) அவகேட்ரோ எண்ணை கணக்கிடலாம்.
(ii ) வெப்பநிலை அதிகரிக்கும்போது துகள்களின் ஓயாத, அதிவேக இயக்கமும் அதிகரிப்பதாக கருதும் இயக்கவியல் கொள்கையை உறுதிப்படுத்தலாம்.
(iii ) கூழ்மங்களின் நிலைப்புத்தன்மையை புரிந்து கொள்ளலாம்: துகள்கள் தொடர்ந்து, அதிவேக இயக்கத்தில் இருப்பதால் ஒன்றுக் கொன்று நெருங்கி
வந்து ஒன்றிணைவதில்லை. அதாவது, துகள்களின் மீது புவிஈர்ப்பு விசை செயல்படுவதை பிரெளனியன் இயக்கம் அனுமதிப்பதில்லை.
8.
(i ) ஒரு மின்வேதிக் கலத்தின் ஓர் அரைப்பகுதியில் ஆக்சிஜனேற்றமும் மற்றொரு அரைப்பகுதியில் ஒடுக்கமும் நிகழ்வது அரைமின்கலங்கள் எனப்படும்.
(ii ) எனவே, ஒரு மின்கலத்தைத் குறிப்பிடும்போது இரண்டு அரைமின்கலங்கள் கொண்டதாகக் குறிப்பிடுகிறோம்.
உதாரணம்:
டேனியல் மின்கலம்
Zn |Zn2+||Cu2+|Cu
நேர்மின் அரைகலம் எதிர்மின் அரைகலம்
9.
கொடுக்கப்பட்டது
R 1 = 50\(\Omega \) R2 = 480\(\Omega \)
\(\kappa _{ 1 }\) = 2.4Sm-1 \(\kappa _{ 2 }\)=?
N1 = 0.15 N \(N_{ 2 }\)=0.5N
என அறிவோம்
\(\therefore \frac { { \kappa }_{ 2 } }{ { \kappa }_{ 1 } } =\frac { { R }_{ 1 } }{ { R }_{ 2 } } \)
\({ \kappa }_{ 2 }=\kappa _{ 1 }\times \frac { { R }_{ 1 } }{ { R }_{ 2 } } \)
= 2.4 Sm-1 x \(\frac { 50\Omega }{ 48\Omega } \)
= 0.25Sm-1.
10.
(i ) அமில தாங்கல் கரைசல் : ஒரு வலிமை குறைந்த அமிலம் மற்றும் அதன் உப்பு கரைந்துள்ள கரைசல்.
எடுத்துக்காட்டு : அசிட்டிக் அமிலம் மற்றும் சோடியம் அசிட்டேட் ஆகியவை கரைந்துள்ள கரைசல்
(ii ) காரக் தாங்கல் கரைசல் : ஒரு வலிமை குறைந்த காரம் மற்றும் அதன் உப்பு கரைந்துள்ள கரைசல்.
எடுத்துக்காட்டு : NH4OH மற்றும் NH4Cl ஆகியவை கரைந்துள்ள கரைசல்.
11.
1. சுக்ரோசை கவனமாக, மெதுவாக வெப்பப்படுத்தினால் இளகும்.
2. குளிர்வித்தால் வெளிர் மஞ்சள் நிற கண்ணாடி போன்ற பொருள் கிடைக்கிறது.
3. இதுவே, பார்லி சர்க்கரை எனப்படுகிறது.
12.
(i) ஓரின ஈனி அணைவுச் சேர்மம் : மைய உலோக அணுவுடன் ஒரே ஒரு வகையான ஈனிகள் மட்டும் பிணைக்கப்பட்டிருந்தால், அவை ஓரின ஈனி அணைவுச் சேர்மம் எனப்படும்.
உதாரணம் :
\({ K }_{ 4 }\left[ Fe(CN)_{ 6 } \right] \)
(ii) பல் இன ஈனி அணைவுச் சேர்மம் : மைய உலோக அணுவுடன் ஒன்றிற்கு மேற்பட்ட வகையான ஈனிகள் பிணைக்கப்பட்டிருந்தால் அவை, பல் இன ஈனி அணைவுச் சேர்மம் எனப்படும்.
உதாரணம் :
\(\left[ Pt\left( { NH }_{ 3 } \right) ({ NO }_{ 2 })(Br)(Cl) \right] \)
13.
1. சுர நிவாரணிகள் சுரத்தை குறைக்க பயன்படுத்தப்படுகின்றன.
2.அதாவது உடலின் வெப்பநிலையை சாதாரண உடல் வெப்பநிலைக்கு குறைக்கப் பயன்படுகிறது,
எ.கா.:
1. ஆஸ்பிரின்
2. பாராசிட்டமால்
14.
(i) ஹேலஜனுடன் : போரான், உயர் வெப்பநிலைகளில் ஹேலஜன்களுடன் இணைந்து போரான் ட்ரை ஹேலைடுகளை உருவாக்குகிறது.
\(2B+3X_{ 2 }\overset { \Delta }{ \rightarrow } 2BX_{ 3 }\)
(ii) நைட்ரஜனுடன் : போரான், உயர் வெப்பநிலைகளில் நைட்ரஜனுடன் எரிந்து போரான் நைட்ரைடை உருவாக்குகிறது.
\(2B+N_{ 2 }\rightarrow 2BN\)
(iii) சோடியம் ஹைட்ராக்சைடுடன் : போரான், உருகிய சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபட்டு சோடியம் போரேட்டைத் தருகிறது.
\(2B+6NaOH \rightarrow { 2NA }_{ 3 }{ BO }_{ 3 }+3H_{ 2 }\)
15.
வறுத்தல் : அடர்ப்பிக்கப்பட்ட தாதுவானது தகுந்த உலையில் எடுத்துக் கொள்ளப்பட்டு உலோகத்தின் உருகுநிலையை விட குறைவான வெப்பநிலையில் அதிக அளவு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு ஆக்சிஜனேற்றம் அடையச் செய்யப்படுகிறது.
உருக்குதல் : கனிமக் கழிவுடன் சேர்ந்து எளிதில் உருகும் கசடினை உருவாக்கக்கூடிய வேதிச் சேர்மமான இளக்கி மற்றும் கார்பன், கார்பன் மோனாக்ஸைடு (அல்லது ) அலுமினியம் போன்ற தகுந்த ஒடுக்கும் காரணிகள் அடர்ப்பிக்கப்பட்ட தாதுவுடன் சேர்த்து உருக்கப்படுகிறது.
16.
bcc படிக அமைப்பிற்கு n = 2 ρ = 8.55 g cm-3
M = 93 gmol-1 NA = 6.023 x 1023
a = ?
\(\rho =\frac { nM }{ { a }^{ 3 }{ N }_{ A } } \)
\(\\ \\ \\ \\ \\ { a }^{ 3 }=\frac { nM }{ { \rho N }_{ A } } \)
\(\frac { 2\times 93 }{ { ({ 8.55\times 10 }^{ -8 }) }^{ 3 }\times { 6.023\times 10 }^{ 23 } } \)
= 3.612 x 10-23
a3 = 36.12 x 10-24
\(a=\sqrt [ 3 ]{ 36.12\times { 10 }^{ -24 } } \)
\(a=3.31\times { 10 }^{ -8 }cm\)
bcc படிக அலகுக்கூட்டில்\(r=\frac { \sqrt { 3 } }{ 4 } a\)
\(=\frac { \sqrt { 3 } \times 3.31\times { 10 }^{ -8 } }{ 4 } \)
\(=\frac { 1.732\times 3.31\times { 10 }^{ -8 } }{ 4 } \)
ஆரம் r = 1.433 x 10-8 cm
17.
காந்த திருப்புத் திறன் \({ \mu }_{ s }=3.9BM\)
\({ \mu }_{ s }=\sqrt { n(n+2) } =3.9\)
\({ (\sqrt { n(n+2) } }^{ 2 })={ (3.9) }^{ 2 }=15\)
n(n + 2) = 15 = 3(3+2)
∴ n = 3
தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 3
18.
(i) பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை +3
(ii) சில லாந்தனைடுகள் +2 மற்றும் +4 ஆகிய ஆக்சிஜனேற்ற நிலைகளையும் கொண்டுள்ளன
19.
HF அமிலம் கண்ணாடியில் உள்ள சிலிக்கா மற்றும் சிலிகேட்டுகளுடன் வினைபுரிந்து, கண்ணாடியை அரிக்கிறது. எனவே HF அமிலம் கண்ணாடி பாட்டில்களில் சேமிக்கப்படுவதில்லை
SiO2 + 4HF ⟶ SiF4 + 2H2O
Na2SiO3 + 6HF ⟶ Na2SiF3 + 3H2O
20.
t99%⇒[Ao] = 100%; [A] = 100 - 99 = 1%
t90%⇒[Ao] = 100%; [A] = 100-90 = 10%
\(t=\frac { 2.303 }{ K } log\frac { [{ A }_{ o }] }{ [A] } \)
\({ t }_{ 99\% }=\frac { 2.303 }{ K } log\frac { 100 }{ 1 } \)
\({ t }_{ 99\% }=\frac { 2.303 }{ K } log{ 10 }^{ 2 }\)
\({ t }_{ 99\% }=\frac { 2.303 }{ K } \times 2\quad \quad ----(1)\)
\({ t }_{ 90\% }=\frac { 2.303 }{ K } log10\)
\({ t }_{ 90\% }=\frac { 2.303 }{ K } \times 1\quad \quad ---(2)\)
(1)ஐ (2) ஆல் வகுக்க.
\(\frac { { t }_{ 99\% } }{ { t }_{ 90\% } } =\frac { \frac { 2.303 }{ K } \times 2 }{ \frac { 2.303 }{ K } \times 1 } \)
\(\frac { { t }_{ 99\% } }{ { t }_{ 90\% } } =\frac { 2 }{ 1 } \)
\(\therefore \quad { t }_{ 90\% }=2{ t }_{ 90\% }\)
21.
(i) போரிக் அமிலம் இருபரிமாண அடுக்கு அமைப்பைக் கொண்டுள்ளது.
(ii) இது [BO3]3- அலகை கொண்டுள்ளது.
(iii) இந்த அலகுகள் ஹைட்ரஜன் பிணைப்புகளால் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளன
22.
2N2O5 ➝ 4NO2+O2
வினைவேகம் \(=-\frac { 1 }{ 2 } \frac { d[{ N }_{ 2 }{ O }_{ 5 }] }{ dt } =\frac { 1 }{ 4 } \frac { d[{ NO }_{ 2 }] }{ dt } =\frac { d[{ O }_{ 2 }] }{ dt } \)
\(\frac { 1 }{ 4 } \frac { d[{ NO }_{ 2 }] }{ dt } =\frac { 1 }{ 2 } \left( -\frac { d[{ N }_{ 2 }{ O }_{ 5 }] }{ dt } \right) \)
\(\therefore \quad \frac { d[{ NO }_{ 2 }] }{ dt } =\frac { 1 }{ 4 } \left( -\frac { d[{ N }_{ 2 }{ O }_{ 5 }] }{ dt } \right) =2\left( -\frac { d[{ N }_{ 2 }{ O }_{ 5 }] }{ dt } \right) \)
\(=2\times 2.5\times { 10 }^{ -2 }\)
\(\\ =5\times { 10 }^{ -2 }{ moldm }^{ -3 }{ s }^{ -1 }\)
\(\frac { d[{ O }_{ 2 }] }{ dt } =\frac { 1 }{ 2 } \left( -\frac { d[{ N }_{ 2 }{ O }_{ 5 }] }{ dt } \right) =\frac { 1 }{ 2 } \times 2.5\times { 10 }^{ -2 }\)
\(\\ =1.5\times { 10 }^{ -2 }{ moldm }^{ -3 }{ s }^{ -1 }\)
வினைவேகம் \(=-\frac { 1 }{ 2 } \frac { d[{ N }_{ 2 }{ O }_{ 5 }] }{ dt } =\frac { 1 }{ 4 } \frac { d[{ NO }_{ 2 }] }{ dt } =\frac { d[{ O }_{ 2 }] }{ dt } \)
வினைவேகம் \(=\frac { 1 }{ 2 } \times 2.5\times { 10 }^{ -2 }=\frac { 1 }{ 4 } \times 5\times { 10 }^{ -2 }=1.25\times { 10 }^{ -2 }\)
வினைவேகம் \(=1.25\times { 10 }^{ 2 }{ moldm }^{ -3 }{ s }^{ -1 }\)
23.
24.
1. தாது நீர்ம காரங்களுடன் வினைபட்டு கரையும் அணைவுச் சேர்மம் உருவாகிறது.
2. பாக்சைட் தாது சோடியம் ஹைட்ராக்சைடு அல்லது சோடியம் கார்பனேட் கரைசலுடன் 35 atm அழுத்தம் மற்றும் 470 - 520 K வெப்பநிலையில் வினைபுரிந்து கரையும் தன்மையுடைய சோடியம் மெட்டா அலுமினேட்டைத் தருகிறது.
3. இரும்பு ஆக்சைடு மற்றும் டைட்டேனியம் ஆக்சைடு போன்ற மாசுக்கள் கரையாமல் தங்கி விடுகின்றன.
Al2O3(S) + 2NaOH(aq) + 3H2O(l) ⟶ 2Na [Al(OH)4](aq)
4. சூடான கரைசல் வடிகட்டப்பட்டு, குளிர்விக்கப்பட்டு, நீர்க்கப்படுகிறது.
5. இக்கரைசல் வழியே CO2 வாயு செலுத்தப்பட்டு நடுநிலையாக்கப்படுவதால் நீரேற்றமடைந்த Al2O3 வீழ்ப்படிவாகிறது.
2Na[Al(OH)4](aq) + CO2(g) ⟶ Al2O3.XH2O(S) + 2NaHCO3(aq)
6. வீழ்படிவு வடிகட்டப்பட்டு சுமார் 1670K வெப்பநிலையில் வெப்பப்படுத்தும் போது தூய அலுமினா Al2O3 பெறப்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards