12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/03/2021
12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
திடப்பொருட்களை அவைகளில் காணப்படும் உட்கூறுகளின் அமைப்பினை பொறுத்து எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது? அவை யாவை?
2.
நைட்ரஸ் அமிலத்துடனான எத்தில் அமீனின் வினையை எழுதுக.
3.
நைட்ரோ மீத்தேனை குளோரோ பிக்ரின் ஆக மாற்றுக.
4.
HVZ வினை குறிப்பு வரைக.
5.
பின்வரும் சேர்மங்களுக்கு IUPAC பெயர்களை எழுதுக.
i) \(C_{ 6 }H_{ 5 }-O-\underset { CH_{ 3 } }{ \underset { | }{ CH_{ 2 } } } -CH-CH_{ 3 }\)
ii) \(\mathrm{CH}_{2}=\mathrm{CH}-\mathrm{CH}_{2}-\mathrm{CH}_{2} \mathrm{OH}\)
iii) நியோ பென்டைல் ஆல்கஹால்
iv) கிளிசரால்
6.
2-மெத்தில் புரப்பன் -2-ஈன் \(\overset { H_{ 2 }SO_{ 4 }/H_{ 2 }O }{ \longrightarrow } \) ?
7.
ஊக்க வினைவேக மாற்றி என்றால் என்ன? உதாரணம் தருக.
8.
தனிமின்வாய் மின்னழுத்தம் என்றால் என்ன ?
9.
பாரடேவின் மின்னாற்பகுத்தலின் இரண்டாம் விதியைக் கூறுக.
10.
அரீனியஸ் கொள்கையை பயன்படுத்தி பின்வருவனவற்றை அமிலம் [அல்லது ] காரம் என வகைப்படுத்துக.
i) HNO3
ii) Ba (OH )2
iii) H3PO4
iv) CH3COOH
11.
தாங்கல் கரைசல் என்பது யாது ?
12.
அரீனியஸ் கொள்கையின் வரம்புகள் பற்றி எழுதுக.
13.
குளுக்கோஸ் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
14.
\(\left[ PtCl_{ 2 }\left( { { NH }_{ 3 } } \right) _{ 2 } \right] \) சேர்மத்தின் சிஸ் டிரான்ஸ் ஐசோமர்களின் வடிவங்களை வரைக
15.
வெர்னர் கொள்கையின் வரம்புகள் யாவை ?
16.
அயனியாதல் மாற்றியங்கள் என்றால் என்ன? ஒரு உதாரணத்துடன் விளக்குக
17.
ஓரின,பல்லின பலபடிகளுக்கு சான்று தருக .
18.
\(\left[ Fe\left( CN \right) _{ 6 } \right] ^{ 4- }\) மற்றும் \(\left[ Fe\left( { H }_{ 2 }O \right) _{ 6 } \right] ^{ 2+ }\)ஆகியவற்றின் நீர்க்கரைசல்கள் வெவ்வேறு நிறமுடையது ஏன்?
19.
பேயரின் காரணி என அழைக்கப்படுவது எது ?அதன் பயன் என்ன ?
20.
உலோகக் கலவையை உருவாக்க ஹியூம்-ரோத்தரி விதியை கூறு.
21.
அம்மோனியாவின் மீதான வெப்பத்தின் விளைவை எழுதுக.
22.
கண்ணாடி அரித்தல் என்றால் என்ன?
23.
பின்வரும் சேர்மங்களில் எவ்வகை இனக்கலப்பு நடைபெறுகிறது
அ ) \({ BrF }_{ 5 }\)
ஆ ) \({ IF }_{ 7 }\)
24.
ஓசோன் ஒரு (\(O_{ 3 }\)) வலிமையான ஆக்சிஜனேற்றம் காரணியாகும் ஏன்?
25.
p -தொகுதியில் முதல் தனிமங்களின் முரண்பட்ட பண்புகளுக்கு காரணமாக அமையும், காரணிகள் யாவை ?
26.
பண்படா உலோகத்தை பிரித்தெடுத்தலில் உள்ள படிநிலைகள் யாவை?
27.
நுரை மிதப்பு முறையில் பயன்படும் குறைக்கும் காரணி மற்றும் சேகரிப்பானின் பெயரினை எழுதுக.
28.
முனைவுற்ற மூலக்கூறு படிகங்கள் என்றால் என்ன?
29.
படிக திடப்பொருள் என்றால் என்ன?
30.
Mn2+ அயனியில் எத்தனை தனித்த எலக்ட்ரான்கள் உள்ளன? அவை எவ்வாறு அதன் காந்தத் தன்மையை பாதிக்கின்றன?
31.
லாந்தனைடு குறுக்கம் என்றால் என்ன?
32.
ஒரு உலோகத்தின் அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலைகள் அதன் ஆக்சைடு மற்றும் ஃபுளுரைடுகளில் காணப்படுவது ஏன்?
33.
Zn, Cd, Hg ஆகியவற்றின் உருகுநிலை மற்றும் கொதிநிலை குறைவு. ஏன்?
34.
கந்தக டை ஆக்சைடின் பயன்களை எழுதுக
35.
ஆய்வகத்தில் ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
36.
நைட்ரிக் அமிலம் ஒரு ஆக்சிஜனேற்றி என நிறுவுக
37.
அறைவெப்பநிலையில் நைட்ரஜன் உலோகங்களுடன் வினைபுரியுமா?
38.
அம்மோனியாவுடன் சிலிக்கன் டெட்ரா குளோரைடின் வினை யாது?
39.
அலுமினியம் குளோரைடின் பயன்கள் யாது?
40.
உலோக ஹைட்ரஜன்களுடன் டைபோரேனின் வினை யாது?
41.
போராக்ஸிலிருந்து போரிக் அமிலம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
42.
p - தொகுதி தனிமங்கள் என்றால் என்ன? அவற்றின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பினைத் தருக
43.
உலோக கார்பனைல்கள் என்றால் என்ன?
44.
இரண்டாம் நிலை இணைதிறன் என்றால் என்ன?
45.
N3+3H2 ⟶ 2NH3 என்ற வினையின் வினைவேக சமன்பாட்டை எழுதுக.
46.
தாமிரத்தின் பயன்களை எழுது.
47.
உலோகத்தைப் பயன்படுத்தி ஒடுக்குதல் மூலம் ஒரு உலோகம் பிரித்தெடுத்தல் பற்றி எழுது.
48.
தாது என்றால் என்ன?
1.
திடப்பொருட்களை அவைகளில் காணப்படும் உட்கூறுகளின் அமைப்பினை பொறுத்து பின்வரும் இருபெரும் பிரிவுகளாகப் பார்க்கலாம். அவை:
(i) படிக வடிவமுடைய திடப்பொருட்கள்
(ii) படிவ வடிவமற்ற திடப்பொருட்கள்
2.
3.
4.
5.
(i) புரப்பாக்சி பென்சீன்
(ii) பியூட் - 3- ஈன் -1-ஆல்
(iii) 2,2 - டைமெத்தில் புரப்பன் -1-ஆல்
(iv) புரப்பன் -1,2,3- டிரை ஆல்
6.
\(\begin{matrix} CH_{ 3 }- & \underset { \underset { CH_{ 3 } }{ | } }{ C= } & CH_{ 2 }\quad +{ H }_{ 2 }O\quad \overset { H_{ 2 }SO_{ 4 } }{ \longrightarrow } \quad \end{matrix}\begin{matrix} CH_{ 3 }-\overset { \underset { | }{ OH } }{ \underset { \overset { | }{ CH_{ 3 } } }{ C } } - & CH_{ 3 } & \end{matrix}\)
(2-மீத்தைல் புரப்பேன் -1-ஈன் ) ((2-மீத்தைல் புரப்பேன் -1-ஆல் )
7.
ஒரு வினைவேக மாற்றி வினையின் வேகத்தை அதிகப்படுத்தினால் அதற்கு ஊக்க வினைவேக மாற்றி என்று பெயர்.
எ.கா.:
2KClO3 \(\overset { MnO_{ 2 } }{ \underset { \Delta }{ \longrightarrow } } \) 2KCl +3O2
இங்கு,
MnO2 ஊக்க வினை வேகமாற்றி.
8.
(i) ஒரு உலோக மின்வாய் அதன் அயனிக் கரைசலோடு தொடர்பு கொண்டிருக்கும் போது ,மின்வாயில் கரைசலைப் பொறுத்து மின்னழுத்தம் தோன்றுகிறது.
(ii) இவ்வாறு ஒரு அரைமின்கலத்திலுள்ள தனிமின்வாயின் மின்னழுத்தம் தனிமின்வாய் மின்னழுத்தம் எனப்படும்.
9.
வெவ்வேறு மின்பகுளிக் கரைசல்களின் வழியே செலுத்தும் போது, மின்முனைகளில் விடுவிக்கப்படும் பொருளின் அளவானது அவற்றின் மின்வேதிச் சமானங்களுக்கு நேர்விகிதத்திலிருக்கும்.
10.
அமிலம் :
i) HNO3
iii) H3PO4
iv) CH3COOH
காரம் :
ii) Ba (OH)2
11.
(i ) தாங்கல் கரைசல் என்பது, ஒரு வலிமை குறைந்த அமிலம் மற்றும் அதன் இணைகாரம் (அல்லது ) ஒரு வலிமை குறைந்த காரம் மற்றும் அதன் இணை அமிலம் ஆகியவற்றைக் கொண்டுள்ள கரைசல் கலவையாகும்.
(ii ) இந்த தாங்கல் கரைசலானது, சிறிதளவு அமிலம் அல்லது காரம் சேர்ப்பதினால் உருவாகும் தீவிர pH மாற்றத்தை தடுக்கிறது.
12.
(i) அசிட்டோன், டெட்ராஹைட்ரோ ஃப்யுரான் போன்ற கரிம கரைப்பான்களில் அமில மற்றும் காரங்களின் பண்பினை அரீனியஸ் கொள்கை விளக்கவில்லை.
(ii) ஹைட்ராக்ஸில் தொகுதியை கொண்டிராத அம்மோனியா (NH3) போன்ற சேர்மங்களின் காரத்தன்மையினை இக்கொள்கை விளக்கவில்லை.
13.
ஆல்கஹால் கரைசலில் நீர்த்த H2SO4 உடன் சேர்த்து சுக்ரோஸை வெப்பப்படுத்தும்போது அது நீராற்பகுப்படைந்து குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தருகிறது.
14.
15.
அணைவுச் சேர்மங்களின் சில பண்புகளை வெர்னர் கொள்கை விளக்கினாலும் அவைகளின் நிறம் மற்றும் காந்தப் பண்புகளை இக்கொள்கையால் விளக்க இயலவில்லை.
16.
அயனியுறும் எதிர்மாறு அயனியானது எளிய அயனி ஈனிகளாக செயல்படும் தன்மையினைப் பெற்றிருப்பின் அத்தகைய நேர்வுகளில் இம்மாற்றியம் ஏற்படுகிறது. இத்தகைய எதிர்மாறு அயனிகள், அணைவு உட்பொருளில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஈனிகளுடன் பரிமாற்றம் அடையும் போது அயனியாதல் மாற்றியங்கள் உருவாகின்றன.
உதாரணங்கள்:
(i) \(\left[ Cr\left( { NH }_{ 3 } \right) _{ 4 }ClBr \right] { NO }_{ 2 }\) மற்றும் \(\left[ Cr\left( { NH }_{ 3 } \right) _{ 4 }{ Cl\quad NO }_{ 2 } \right] Br\)
(ii) \(\left[ Cr\left( { NH }_{ 3 } \right) _{ 4 }{ Br }_{ 2 } \right] Cl\) மற்றும் \(\left[ Cr\left( { NH }_{ 3 } \right) _{ 4 }Cl\quad Br \right] Br\)
17.
ஓரின பலபடி:
1.பாலிதீன்
2.PVC
பல்லின பலபடி:
1.நைலான் -66
2.டெரிலீன்
18.
(i) \(\left[ Fe\left( CN \right) _{ 6 } \right] ^{ 4- }\)மற்றும் \(\left[ Fe\left( { H }_{ 2 }O \right) _{ 6 } \right] ^{ 2+ }\) ஆகிய அணைவுச் சேர்மங்களில் நிறமாலை வேதிவரிசையின் படி, \({ CN }^{ - }\)ஈனியானது \({ H }_{ 2 }O\) ஈனியை அதிக படிக புலப்பிளப்பை ஏற்படுத்தும் தன்மையினைப் பெற்றுள்ளது.
(ii) அவற்றின் அலைநீளங்களுக்கு ஏற்ப உட்கவரப்படும் ஒளியின் நிறம் பிரதிபலிப்பதால் அவை வெவ்வேறு நிறமுடையது.
19.
(i) குளிர்ந்த, நீர்த்த, காரம் கலந்த K2MnO4 ஆனது பேயரின் காரணி என அழைக்கப்படுகிறது.
(ii) இது ஆல்கீன்களை டையால்களாக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்கிறது.
20.
(i) அணு ஆரங்களுக்கிடையேயான வேறுபாடு 15% விட குறைவாக இருக்க வேண்டும்.
(ii) ஒரே இணைத்திறன் மற்றும் படிக அமைப்பினைப் பெற்றிருக்க வேண்டும்.
(iii) எலக்ட்ரான் கவர்திறன் மதிப்பின் வேறுபாடு பூஜ்ஜியமாக இருக்க வேண்டும்.
21.
\(500^{ o }C\) க்கு அதிகமான வெப்பநிலைகளில் அம்மோனியாவானது சிதைவடைந்து அதன் தனிமங்களாக மாறுகிறது.
\({ 2NH }_{ 3 }\overset { 7500^{ o }C }{ \longrightarrow } \quad { N }_{ 2 }+{ 3H }_{ 2 }\)
22.
(i) HF அமிலமானது கண்ணாடி மற்றும் சிலிகா உடன் வினைபுரியும் தன்மையுடையது.
(ii) எனவே, அதனை கண்ணாடி கலனில் சேமித்து வைக்க முடியாது.
\({ Na }_{ 2 }{ SiO }_{ 3 }+6HF\longrightarrow { Na }_{ 2 }{ SiF }_{ 6 }+{ 3H }_{ 2 }O\\ { SiO }_{ 2 }+4HF\longrightarrow { SiF }_{ 4 }+{ 2H }_{ 2 }O\)
23.
அ ) \({ BrF }_{ 5 }\) : \({ SP }^{ 3 }{ d }^{ 2 }\)
ஆ) \({ IF }_{ 7 }\) : \({ SP }^{ 3 }{ d }^{ 3 }\)
24.
ஓசோனானது ஒரு வலிமையான ஆக்சிஜனேற்றும் காரணியாகும். மேலும் , ஆக்சிஜன் வினைபுரியாத பல சேர்மங்களுடன் ஓசோன் அதே நிபந்தனைகளில் வினைபுரிகிறது. எடுத்துக்காட்டாக, இது பொட்டாசியம் அயோடைடை அயோடினாக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்கிறது. இவ்வினை ஓசோனை அளந்தறியப் பயன்படுகிறது.
\({ O }_{ 3 }+2KI+{ H }_{ 2 }O\rightarrow 2KOH+{ O }_{ 2 }+{ I }_{ 2 }\)
25.
(i ) முதல் தனிமத்தின் சிறிய உருவளவு
(ii ) அதிக அயனியாக்கும் என்தால்பி மற்றும் எலக்ட்ரான் கவர் திறன்
(iii ) இணைதிறன் கூட்டில் d ஆர்பிட்டால்கள் இல்லாதிருத்தல்
26.
(i) தாதுவை தேவைப்படும் உலோகத்தின் ஆக்சைடாக மாற்றுதல்
(ii) உலோக ஆக்சைடை தனிம உலோகமாக ஒடுக்குதல் .
27.
(i) நுரை மிதப்பு முறையில் சோடியம் சயனைடு (NaCN) குறைக்கும் காரணியாகப் பயன்படுகிறது.
(ii) இது மற்ற பிற உலோக சல்பைடுகள் எண்ணெயில் நனைந்து நுரைத்து வருவதைத் தடுக்கின்றன.
உதாரணம் :
ZnS போன்ற மாசுகள் கலீனாவில் (PbS ) காணப்படின் குறைக்கும் காரணியான சோடியம் சயனைடு சேர்க்கப்படும் போது அது \(N{ a }_{ 2 }\left[ Zn(CN)_{ 4 } \right] \) என்ற அணைவுச் சேர்மத்தை ஜிங்க் சல்பைடின் புறப்பரப்பில் ஏற்படுத்துவதால் அதன் நுரைக்கும் தன்மை குறைக்கப்படுகிறது .
28.
1. மூலக்கூறு படிகங்களில் உட்கூறுகளாக உள்ள மூலக்கூறுகள் முனைவுற்ற சகப்பிணைப்புகளாக ஒன்றொடொன்று பிணைத்து வைக்கப்பட்டால் அவை முனைவுற்ற மூலக்கூறு படிகங்கள் எனப்படும்.
2. இவை ஒப்பீட்டு அளவில் வலிமையான இருமுனை -இருமுனை இடை விசைகளால் ஒன்றொடொன்று பிணைக்கப்பட்டுள்ளன.
3. முனைவற்ற மூலக்கூறு படிகங்களைக் காட்டிலும் இவற்றின் உருகுநிலை அதிகம்.
4. (எ.கா) பனிக்கட்டி, குளுக்கோஸ், யூரியா
29.
நீண்ட எல்லை வரையில் ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்டுள்ள உட்கூறுகளைக்கொண்ட திடப்பொருட்கள் என வரையறுக்கப்படுகிறது.
30.
(i) Mn2+ ன் எலக்ட்ரான் அமைப்பு 3d5; தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை n = 5;
(ii) எனவே Mn2+ அயனி பாராகாந்தத் தன்மையுடையது
(iii) புற காந்தப் புலத்தினால் ஈர்க்கப்படுகின்றன
31.
சீசியம் முதல் லுட்டீசியம் வரை செல்லும் போது அணு எண் அதிகரிக்க, அதிகரிக்க லாந்தனைடுகளின் அணு மற்றும் அயனி ஆரங்கள் சீராகக் குறைவது லாந்தனைடு குறுக்கம் எனப்படும்.
32.
ஆக்சிஜன் மற்றும் ஃபுளுரினின் சிறிய உருவளவும், அதிக எலக்ட்ரான் கவர் திறனும், உலோகத்தில் உள்ள அனைத்து எலக்ட்ரான்களை பிணைப்பில் ஈடுபடத் தூண்டி, உலோகத்தினை அதன் அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலைக்கு ஆக்சிஜனேற்றமடையச் செய்கிறது.
33.
Zn, Cd, Hg ஆகியவற்றில் இணையாகாத தனித்த எலக்ட்ரான்கள் இல்லை. இதனால் வலுவான உலோக பிணைப்பினை ஏற்படுத்த இயலவில்லை. எனவே இவற்றின் உருகுநிலை மற்றும் கொதிநிலை குறைவு
34.
(i) முடி, பட்டு, கம்பளி போன்றவற்றை வெளுக்க SO2 பயன்படுகிறது.
(ii) விவசாயத்தில் தாவரங்கள் மற்றும் பயிர்களில் காணப்படும் தொற்றுக்களை நீக்க SO2 பயன்படுகிறது.
35.
படிக அயோடின் வினைவேக மாற்றி முன்னிலையில் பாஸ்பரஸ் அடர் நைட்ரிக் அமிலத்தால் ஆக்சிஜனேற்றமடைந்து ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.
P4O10 + 6H2O → 4H3PO4
36.
கார்பன், சல்பர் போன்ற அலோகங்கள் நைட்ரிக் அமிலத்தால் ஆக்சிஜனேற்றம் அடைகின்றன.
C + 4HNO3 ⟶ CO2 + 4NO2 + 2H2O
S + 2HNO3 ⟶ H2SO4 + 2NO
37.
ஆம், அறைவெப்பநிலையில் நைட்ரஜன் லித்தியம் உலோகத்துடன் மட்டும் வினைபுரிந்து லித்தியம் நைட்ரைடை உருவாக்குகிறது.
6Li + N2 ⟶ 2Li3N
38.
சிலிக்கன் டெட்ரா குளோரைடு அம்மோனியாவால் பகுக்கப்பட்டு குளோரோ சிலோக்சேன்கள் உருவாகின்றன.
39.
1. நீரற்ற AlCl3 பிரீடல் கிராஃப்ட் வினைகளில் வினைவேக மாற்றியாக பயன்படுகிறது.
2. கனிம எண்ணெய்களை சிதைத்து பெட்ரோல் தயாரிக்க பயன்படுகிறது.
3. சாயங்கள், மருந்துகள் மற்றும் வாசனைத் திரவியங்கள் தயாரிப்பில் வினைவேக மாற்றியாக பயன்படுகிறது.
40.
டைபோரேன், உலோக ஹைட்ரஜன்களுடன் வினை புரிந்து உலோக போரோ ஹைட்ரைடுகளைத் தருகிறது
41.
போராக்ஸ், HCl, H2SO4 அமிலங்களுடன் வினைபுரிந்து போரிக் அமிலத்தை உருவாக்குகிறது.
Na2B4O7 + 2HCl + 5H2O ⟶ 4H3BO3 + 2NaCl
Na2B4O7 + H2SO4 + 5H2O ⟶ 4H3BO3 + 2Na2SO4
42.
i) ஒரு தனிமத்தின் கடைசி எலக்ட்ரான் p - ஆர்பிட்டாலில் சென்று நிரம்பும் தனிமங்கள் அடங்கிய தொகுதி p - தொகுதி என்றும், அத்தனிமங்கள் p - தொகுதி தனிமங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
ii) தனிம வரிசை அட்டவணையில் 13 முதல் 18 தொகுதி வரை இடம் பெற்றுள்ளன.
iii) பொதுவான எலக்ட்ரான் அமைப்பு ns2np1-6
43.
உலோக - கார்பன் பிணைப்பினைக் கொண்ட கார்பன் மோனாக்சைடின் இடைநிலை உலோக அணைவுச் சேர்மங்கள் உலோக கார்பனைல்கள் எனப்படும்.
44.
மைய உலோக அயனியின் அணைவு எண் அதன் இரண்டாம் நிலை இணைதிறன் எனப்படும்.
45.
வினை வேகம் \(\\ =-\frac { d[{ N }_{ 2 }] }{ dt } =-\frac { 1 }{ 3 } \frac { d\left[ { H }_{ 2 } \right] }{ dt } =+\frac { 1 }{ 2 } \frac { d[{ NH }_{ 3 }] }{ dt } \)
46.
1. மனிதர்களால் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட உலோகம் தாமிரம் ஆகும்.
2. இதன் உலோகக் கலவையான வெண்கலத்தின் பயன்பாட்டினால் வெண்கலக் காலம் என்ற சகாப்தம் உருவானது.
3. தங்கம் மற்றும் பிற உலோகங்களோடு இணைந்து நாணயங்கள், நகை பொருட்கள் தயாரிக்க தாமிரம் பயன்படுகிறது.
4. தாமிரம் மற்றும் அதன் உலோக கலவைகள் ஆகியன மின்கம்பிகள், நீர் செல்லும் குழாய்கள் மற்றும் பல மின் பொருளின் பாகங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
47.
1. சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற வினைத்திறன் மிக்க உலோகங்கள், உலோக ஆக்சைடுகளை உலோகமாக ஒடுக்க பயன்படுகின்றன.
Rb2O3 + 3Mg ⟶ 2Rb + 3MgO
TiO2 + 2Mg ⟶ Ti + 2MgO
ThO2 + 2Ca \(\underrightarrow { 1250K }\) Th + 2CaO
2. இம்முறைக்கு அலுமினோ வெப்ப ஒடுக்க முறையும் ஓர் எடுத்துக்காட்டாகும்.
48.
எக்கனிமம் அதிக சதவீதத்தில் உலோகத்தினை பெற்று, அதிலிருந்து எளிதாகவும், பொருளாதார ரீதியாக சிக்கனமாகவும் உலோகத்தினை பிரிக்க இயலுமோ, அக்கனிமமே தாது எனப்படும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards