12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 01/03/2021
12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Five mark Important Questions - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பொதிவுத் திறன் என்றால் என்ன?
2.
நுண் வடிகட்டலை பற்றி குறிப்பு வரைக.
3.
VBT ன் வரம்புகள் யாவை?
4.
\(\left[ Fe\left( CN \right) _{ 6 } \right] ^{ 3- }\) பாரா காந்தத் தன்மை என்பதை படிக புலக்கொள்கையைப் பயன்படுத்தி விளக்குக.
5.
P -தொகுதி தனிமங்களின் முதல் தனிமங்களின் முரண்பட்ட பண்புகளை எழுதுக.
6.
சில்வரை மின்னாற்பகுதல் முறையில் தூய்மையாக்கலை விவரி.
7.
1 mL 0.1M லெட் நைட்ரேட் கரைசல் மற்றும் 0.5 mL 0.2 M NaCl கரைசல் ஆகியவற்றை ஒன்றாக கலக்கும் போது லெட் குளோரைடு வீழ்படிவாகுமா? வீழ்படிவாகாதா? என கண்டறிக. PbCl2 இன் Ksp மதிப்பு \(1.2\times10^{-5}\).
8.

A,B,C,D ஆகியனவற்றைக் கண்டறிக. மேலும் வினையினை பூர்த்தி செய்க.
9.
10.
அறுங்கோண நெருங்கிப் பொதிந்த அமைப்பினை கனச்சதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பிலிருந்து வேறுபடுத்துக.
11.
ஒடுக்கும் காரணியைத் தெரிவு செய்தல் என்பது வெப்ப இயக்கவியல் காரணியைப் பொறுத்தது தகுந்த உதாரணத்துடன் இக்கூற்றை விளக்குக.
12.
எத்தனால் மற்றும் 2 – மெத்தில் பென்டன் -2- ஆல் ஆகியனவற்றிலிருந்து 2 – ஈத்தாக்ஸி – 2 – மெத்தில் பென்டேனைத் தயாரிக்கும் வில்லியம்களின் தொகுப்பு முறைக்கான வேதிச் சமன்பாட்டினைத் தருக.
13.
பல்லின பலபடிகள் குறித்து குறிப்பு வரைக.
14.
பின்வரும் வினைவரிசையில் உள்ள A,B மற்றும் C ஆகிய சேர்மங்களை கண்டறிக
i) \(C_6H_5NO_2\overset{Fe/HCl}\longrightarrow A\overset{HNO_2}{\underset{273K}\longrightarrow} B\overset{C_6H_5OH}\longrightarrow C\)
ii) \(C_6H_5N_2Cl\overset{CuCN}\longrightarrow A\overset{H_2O/H^+}\longrightarrow B\overset{NH_3}\longrightarrow C\)
iii) 
iv) \(CH_3NH_2\overset{CH_3Br}\longrightarrow A\overset{CH_3COCl}\longrightarrow B\overset{B_2H_6}\longrightarrow C\)
v) 
vi) 
vii) \(CH_3CH_2NC\overset{HgO}\longrightarrow A\overset{H_2O}\longrightarrow B\overset{i) NaNO_2/HCl}{\underset{ii) H_2O}\longrightarrow}\)
15.
ஆஸ்வால்ட் நீர்த்தல் விதிக்கான சமன்பாட்டைத் தருவி.
16.
ஒரு அணு fcc அமைப்பில் படிகமாகிறது. மேலும் அதன் அடர்த்தி 10 gcm-3 மற்றும் அதன் அலகுக்கூட்டின் விளிம்பு நீளம் 100pm. 1g படிகத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையினைக் கண்டறிக.
17.
சதுர நெருங்கிப் பொதிந்த இரு பரிமாண அடுக்கில் ஒரு மூலக்கூறின் அணைவு எண் என்ன?
18.
[Co(C2O4)3]3- ல் காணப்படும் பிணைப்பின் தன்மையை VB கொள்கையைப் பயன்படுத்தி விளக்குக.
19.
படிகப்புல பிளப்பு ஆற்றல் என்றால் என்ன? விளக்குக.
20.
3d வரிசை தனிமங்களின் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளை விளக்குக.
21.
இரண்டாம் வரிசை கார உலோகம் (A) ஆனது (B) என்ற போரானின் சேர்மத்துடன் வினை புரிந்து (C) என்ற ஒடுக்கும் காரணியினைத் தருகிறது. A, B மற்றும் C ஐக் கண்டறிக.
22.
அளவிலா நீர்த்தலில் Al3+ மற்றும் SO42- ஆகிய அயனிகளின் அயனிக் கடத்துத்திறன் மதிப்புகள் முறையே 189 மற்றும் 160 மோ செ.மீ2 சமானம்-1. அளவிலா நீர்த்தலில் Al2 (SO4)3 மின்பகுளியின் சமான மற்றும் மோலார் கடத்துத்திறனை கணக்கிடுக.
23.
பென்சால்டிஹைடை பின்வரும் சேர்மங்களாக எவ்வாறு மாற்றுவாய்?
(i) பென்சோபீனோன்
(ii) பென்சாயிக் அமிலம்
(iii) α-ஹைட்ராக்ஸி பீனைல் அசிட்டிக் அமிலம்.
24.
சீரியம் (II) ஐக் காட்டிலும் யூரோப்பியம் (II) அதிக நிலைப்புத் தன்மை உடையது. ஏன்?
25.
PCl5 ஐ வெப்பப்படுத்தும் போது நிகழ்வது யாது?
1.
பொதிவுத் திறன்:
(i) ஒவ்வொரு வரிசையிலும் கோளங்களுக்கு இடையே இடைவெளிகள் காணப்படுகின்றன.
(ii) மேலும், பல அடுக்குகள் அமையும் போது, அடுத்தடுத்த அடுக்குகளுக்கு இடையேயும் இடைவெளிகள் ஏற்படுகின்றன.
(iii) ஒரு அமைப்பில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கோளங்களின் ஒட்டு மொத்த கன அளவானது அவ்வமைப்பின் பொதிவுத் திறனைத் (Packing efficiency) தருகிறது.
(iv) முதலில் நாம் ஒரு எளிய கனச்சதுர அமைப்பின் பொதிவுத் திறனைக் கணக்கிடுவோம்.
(v) பொதிவுத் திறன் அல்லது பொதிவு பின்னம்
In ABC AC2 = AC2 +AB2 +BC2
AG = \(\sqrt { 3 } a\)
r = \(\frac { \sqrt { 3 } }{ 4 } a\ =\frac { \sqrt { 13 } }{ 16 } \pi { a }^{ 3 }\)
= \(\frac { \left( \frac { \sqrt { 13 } }{ 16 } \pi { a }^{ 3 } \right) }{ { a }^{ 3 } } \times\ 100\)
= 68%
2.
(i ) சாதாரண வடிதாளிலுள்ள நுண்துளைகள் கூழ்மத் துகள்களை கடந்து செல்ல அனுமதிக்கின்றன.
(ii ) நுண்வடிகட்டலில் பயன்படுத்தப்படும் சவ்வுகளானவை, கொல்லோடியன், பளிங்குத்தாள் அல்லது விஸ்கிங் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
(iii) இந்த நுண்வடிதாள்களைக் பயன்படுத்தி கூழ்மங்களை வடிகட்டும்போது, கூழ்மத்துகள்கள் வடிதாளிலேயே தங்குகின்றன. மேலும், மாசுக்கள் கழுவப்பட்டு நீக்கப்படுகின்றன.
(iv ) அழுத்தத்தை பயன்படுத்தி இச்செயல்முறை விரைவாக்கப்படுகிறது.
(v ) மின்பகுளிகளிடமிருந்து கூழ்மத் துகள்களை நுண்வடிதாள் வழியாக வடிகட்டி நீக்கும் செயல்முறையானது நுண்வடிகட்டல் என்றழைக்கப்படுகிறது.
3.
அணைவுச் சேர்மங்களின் பல்வேறு கண்டுணரப்பட்ட பண்புகளை VBT விளங்கினாலும் இக்கொள்கை பின்வரும் வரம்புகளை உடையது.
(i) அணைவுச் சேர்மங்களின் நிறங்களை இக்கொள்கை விளக்கவில்லை.
(ii) இது சுழற்சியால் ஏற்படும் காந்த திருப்பு திறனை மட்டுமே கருத்திற் கொண்டது. காந்தத் திருப்புத் திறனின் பிற கூறுகளை கருத்திற்கொள்ளவில்லை.
(iii) ஒரே உலோகத்தின் அணைவுச் சேர்மங்களில் சில, உள் ஆர்பிட்டால் அணைவுகளாகவும் மற்ற சில சேர்மங்கள், வெளி ஆர்பிட்டால் அணைவுகளாகவும் காணப்படுகின்றன.
(iv) ஏன் இவ்வாறு மாறுபட்ட அணைவுகள் உருவாகின்றன என்பதற்கு உரிய விளக்கத்தினை இக்கொள்கை தரவில்லை.
எடுத்துக்காட்டு : \(\left[ Fe\left( CN \right) _{ 6 } \right] ^{ 4- }\) ஆனது டையாகாந்தப்பண்புடையது (குறை சுழற்சி அணைவு) ஆனால் \(\left[ FeF_{ 6 } \right] ^{ 4- }\) ஆனது பாராகாந்தத் தன்மையுடையது (உயர் சுழற்சி அணைவு )
4.
| உயர் சுழற்சி அணைவு | தற்சுழற்சி அணைவு | |||||
சமச்சீர் புலத்தில் எலக்ட்ரான் அமைப்பு : d5
எலக்ட்ரான் இணைகளின் எண்ணிக்கை (n 'p ) =0 ; எனவே , \(E_{ iso }=0\) |
||||||
| ஈனிப் புலம் : எலக்ட்ரான் அமைப்பு (உயர்வு சுழற்சி அணைவு ): \(t^{ 3 }\) \(e^{ 2 }\) CFSE = \(\left\{ \left[ 3(-0.4)+2(0.6) \right] \overset { 2g }{ \Delta _{ o } } +0*P \right\} -\{ 0\} \) = 0 |
எலக்ட்ரான் அமைப்பு = \(-2\Delta o +2P\) |
|||||
| அணைவின் இயல்பு | தற்சுழற்சி | |||||
| மைய உலோக அயனியின் எலக்ட்ரான் அமைப்பு | \({ t^{ 5 }_{ 2g } }{ \quad e^{ 0 }_{ g } }\) | |||||
| காந்தப் பண்பு | இணையாகாத தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை =1. எனவே பாராகாந்தத்தன்மை உடையது. | |||||
| காந்த திருப்புத் திறன் (சுழற்சி மட்டும் பொருத்தமைவது ) | \(\mu _{ s }=\sqrt { n(n+2) } =\sqrt { 1(1+2) } =1.732\quad BM\) | |||||
5.
p -தொகுதி தனிமங்களில், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முதல் தனிமமானது, அத்தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களிலிருந்து வேறுபடுகின்றன. இத்தகைய முரண்பட்ட பண்புகளுக்கு பின்வரும் காரணிகள் காரணமாக அமைகின்றன.
(i) முதல் தனிமத்தின் சிறிய உருவளவு
(ii) அதிக அயனியாக்கும் என்தால்பி மற்றும் எலக்ட்ரான் கவர் திறன்
(iii) இணைதிறன் கூட்டில் d ஆர்பிட்டால்கள் இல்லாதிருத்தல்
13 ஆம் தொகுதியின் முதல் தனிமமான போரான் ஒரு உலோகப்போலியாகும் . ஆனால் மற்ற தனிமங்கள் வினைத்திறன் மிக்க உலோகங்களாகும். மேலும் போரான் ஆனது 14 ஆம் தொகுதியைச் சார்ந்த சிலிக்கானுடன் மூலைவிட்ட தொடர்பை பெற்றுள்ளது. போரான் மற்றும் சிலிக்கானின் ஆக்சைடுகள் அவற்றின் அமிலப்பண்பில் ஒத்துள்ளன. இவை இரண்டும் எளிதில் நீராற்பகுப்படையும் சகப்பிணைப்பு ஹைட்ரைடுகளை உருவாக்குகின்றன. இதே போல் போரான் ட்ரைபுளுரைடைத் தவிர, இவ்விரு தனிமங்களின் ஹேலைடுகளும் எளிதில் நீராற்பகுப்படைகின்றன.
14 ஆம் தொகுதியில், முதல் தனிமமான கார்பன் ஒரு அலோகமாகும். அதேசமயம், மற்ற தனிமங்கள் உலோக போலிகளாகவோ (சிலிக்கான் & ஜெர்மானியம் ) அல்லது உலோகங்களாகவோ (டின் &லெட் ) உள்ளன. கார்பன் அணுவானது அது இடம்பெற்றுள்ள தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களைப் போலல்லாமல், C =C , C =O .. போன்ற பல்பிணைப்புகளை உருவாக்கும் தன்மையைப் பெற்றுள்ளது.
கார்பன் அணுவானது மற்றொரு கார்பன் அணுவுடனோ அல்லது மற்ற அணுக்களுடனோ நீண்ட சங்கிலித் தொடர் சேர்மங்களை உருவாக்கும் திறனைப் பெற்றுள்ளது. இப்பண்பு சங்கிலித்தொடராக்கம் என அறியப்படுகிறது. தொகுதியில் கீழாக செல்லும் போது சங்கிலித் தொடராக்கத்திறன் குறிப்பிடத்தகுந்த அளவில் குறைகிறது.(C >>Si >>Ge ~ Sn>Pb ).
15 ஆம் தொகுதியிலும், முதல் தனிமமான நைட்ரஜனானது அத்தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களிலிருந்து வேறுபடுகிறது. கார்பனைப் போன்றே நைட்ரஜன் அணுவும் பல்பிணைப்புகளை உருவாக்கும் தன்மையைப் பெற்றுள்ளது (N = N,C = N, N = O போன்றவை ...). தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களைப் போல அல்லாமல் நைட்ரஜன் ஒரு டையாகாந்தத்தன்மை கொண்ட வாயுவாகும்.
16 ஆம் தொகுதியிலும், முதல் தனிமமான ஆக்ஸிஜனும் ஈரணு மூலக்கூறாக வாயு நிலையில் காணப்படுகிறது. அது அதிக எலக்ட்ரான் கவர்திறன் தன்மையைக் கொண்டிருப்பதால் ஹைட்ரஜன் பிணைப்புகளை உருவாக்குகிறது.
17 ஆம் தொகுதியின், முதல் தனிமமான புளூரின் அதிகபட்ச எலக்ட்ரான் கவர்திறன் கொண்ட தனிமமாகும். தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களுடன் ஒப்பிடும்போது இது முற்றிலும் வேறுபட்ட பண்புகளைப் பெற்றுள்ளது
ஆக்ஸிஜனைப் போலவே புளூரினும் ஹைட்ரஜன் பிணைப்புகளை உருவாக்குகிறது. புளூரின் -1 ஆக்ஸிஜனேற்ற நிலையை மட்டுமே காட்டுகிறது, ஆனால் மற்ற ஹேலஜன்கள் -1 நிலையுடன் +1, +3,+5 மற்றும் +7 ஆக்ஸிஜனேற்ற நிலைகளையும் காட்டுகின்றன. புளூரின் வலிமை மிக்க ஒரு ஆக்ஸிஜனேற்றக் காரணியாகும், மேலும் ஹேலஜன்களில் புளூரின் மிக அதிக வினைத்திறன் கொண்ட தனிமமாகும் .
6.
(i) சில்வரை மின்னாற்பகுதல் முறையில் தூய்மையாக்கலை உதாரணமாகக் கொண்டு இச்செயல் முறையினைப் புரிந்து கொள்ளலாம்.
எதிர்மின்வாய்: தூய சில்வர்
நேர்மின்வாய் : தூய்மையற்ற சில்வர்
மின்பகுளி : அமிலத்தன்மையுடைய நைட்ரேட் கரைசல் சில்வர்
(ii) மின்வாய்களின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும் போது சில்வர் அணு எலக்ட்ரான்களை இழந்து கரைசலுக்குள் செல்கிறது.
(iii) நேர்மின்தன்மையுடைய சில்வர் அயனிகள் எதிர்மின்வாயில் சென்று மின்னிறக்கம் அடைந்து மின்வாயில் படிகிறது.
(iv) காப்பர், ஜிங்க் போன்ற பிற உலோகங்களும் இதே முறையினைப் பின்பற்றி தூய்மையாக்கப்படுகின்றன.
நேர்மின்வாய் வினை
\(A{ g }_{ (s) }\longrightarrow { A{ { g }^{ + }_{ (aq) } } }+1{ e }^{ - }\)
எதிர்மின்வாய் வினை
\({ A{ { g }^{ + }_{ (aq) } } }+1{ e }^{ - }\rightarrow A{ g }_{ (s) }\)
7.
\(PbCl_{2}^{(s)}\overset{H_{2}O}{\rightleftharpoons }Pb^{2+}(aq)+2Cl^{-}(aq)\)
அயனிப்பெருக்கம் = [Pb2+] [Cl-]2
மொத்த கனஅளவு = 1.5 mL
\(\underset{0.1M}{Pb(NO_{3})_2}\rightleftharpoons \underset{0.1M}{Pb^{2+}}+2NO_{3}^{-}\)
Pb2+ ன் மோல் எண்ணிக்கை = மோலாரிட்டி \(\times\) கரைசலின் கனஅளவு லிட்டரில்
= \(0.1\times1\times10^{-3}=10^{-4}\)

\(\underset{0.2M}{NaCl}\rightarrow \underset{0.2M}{Na^{+}}+\underset{0.2M}{Cl^{-}}\)
Cl– ன் மோல் எண்ணிக்கை = \(0.2\times 0.5\times10^{-3}=10^{-4}\)
\([Cl^{-}]=\frac{10^{-4}moles}{1.5\times10^{-3}L}=6.7\times10^{-2}M\)
அயனிப்பெருக்க மதிப்பு = \((6.7\times10^{-2})(6.7\times10^{-2})^{2}=3.01\times10^{-4}\)
அயனிப்பெருக்க மதிப்பு \(3.01\times10^{-4}\) ஆனது கரைதிறன் பெருக்க மதிப்பை \((1.2\times10^{-5})\) விட அதிகமாக இருப்பதால் PbCl2 வீழ்படிவாகிறது.
8.

9.
10.
| வ.எண் | hcp அமைப்பு | ccp அமைப்பு |
| 1 | aba அமைப்பானது, அறுங்கோண நெருங்கிப் பொதிந்த அமைப்பு (hcp) என அழைக்கப்படுகின்றது. | abc...... என்ற அமைப்பில் அடுத்தடுத்த அடுக்குகளால் உருவாக்கப்படும் கனச்சதுர நெருங்கிப்பொதிந்த அமைப்பு (ccp) என அழைக்கப்படுகிறது. |
| 2 | இரண்டாவது அடுக்கில் காணப்படும் இடைவெளிகளின் மீது முதல் அடுக்கான 'a' வை ஒத்திருக்கும். | இரண்டாவது அடுக்கின் மேல், எண்முகித்துளைகளில் பொருந்துமாறு மூன்றாவது அடுக்கின் கோளங்களை அடுக்கலாம். |
| 3 | மூன்றாவது அடுக்கில் உள்ள கோளங்கள் இரண்டாவது அடுக்கில் காணப்படும் நான்முகித் துளைகளை மறைக்கும் வகையில் அமைந்துள்ளன | மூன்றாவது அடுக்கானது முதல் இரண்டு அடுக்குகளான (a) மற்றும் (b) ஆகியவற்றிலிருந்து மாறுபட்டிருக்கும். |
11.
1. உலோக ஆக்ஸைடுகளிலிருந்து வெவ்வோறு ஒடுக்கும் காரணிகளைப் பயன்படுத்தி உலோகங்களை பிரித்தெடுக்கலாம். எடுத்துக்காட்டாக Mx Oy உலோக ஆக்சைடின் ஒடுக்கும் வினையைக் கருதுக.
2/y Mx Oy (S) → 2x/yM(S) + O2(g) ............... (1)
2. மேற்கண்டுள்ள ஒடுக்க வினையை கார்பனைக் கொண்டு நிகழ்த்தலாம். இந்நேர்வில் ஒடுக்கும் காரணியான கார்பன் CO அல்லது CO2 ஆக ஆக்சிஜனேற்றம் அடையலாம்.
C + O2 → CO2(g) ......................... (2)
2C + O2 → 2CO(g) ...............................(3)
3. கார்பன் மோனாக்சைடை ஆக்சிஜன் ஒடுக்கியாகப் பயன்படுத்தினால் அது பின்வரும் வினைப்படி, CO2 ஆக ஆக்சிஜனேற்றமடைகிறது.
2CO + O2 → 2CO2(g) .....................(4)
4. வெப்பஇயக்கவியல் கொள்கைகளின் அடிப்படையில் தகுந்த ஒடுக்கும் காரணியினைத் தெரிவு செய்யலாம்.
ஒரு தன்னிச்சையான வினைக்கு, கட்டிலா ஆற்றலில் ஏற்படும் மாற்றம் (\(\Delta\)G) ஆனது கண்டிப்பாக எதிர்குறி மதிப்பினைப் பெற்றிருக்க வேண்டும் என நாம் அறிவோம். எனவே சமன்பாடு (1) ல் கண்டுள்ள உலோக ஆக்சைடை கொடுக்கப்பட்ட ஒரு ஒடுக்கும் காரணியுடன் (சமன்பாடு (2), (3) அல்லது (4) ல் கொடுக்கப்பட்டுள்ளவை) சேர்த்து ஒடுக்க வேண்டுமெனில், இணைக்கப்பட்ட வினைகளின் சமன்பாடு (1) மற்றும் (2), சமன்பாடு (1) மற்றும் (3), சமன்பாடு (1) மற்றும் (4) கட்டிலா ஆற்றல் மாற்றம் எதிர்குறி மதிப்பினைப் பெற்றிருக்க வேண்டும்.
5. எனவே இணைக்கப்பட்ட வினையில், கட்டிலா ஆற்றல் மாற்றம் அதிக எதிர்குறி மதிப்பினைப் பெறும் வகையில், ஒடுக்கும் காரணி தெரிவு செய்யப்படுகிறது.
12.
2-எத்தாக்ஸி -2 மெத்தில் பென்டேன்

13.
அ) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு வகை ஒற்றைப்படி மூலக்கூறுகளைக் கொண்டுள்ள பலபடியானது, பல்லின பலபடி என்றழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, SBR இரப்பர் (Buna-S) எனும் பலபடியானது ஸ்டைரீன் மற்றும் பியுட்டாடையீன் ஆகிய ஒற்றைப்படி மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது பல்லின பலபடிகள், ஒற்றைப்பலபடிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளன.
ஆ) பியூனா S இது ஒரு பல்லின் பலபடியாகும். இது, சோடியம் முன்னிலையில் பியட்டா 13 டையின் மற்றும் ஸ்டைரீன் ஆகியவற்றை 3:1 என்ற விகிதத்தில் சுவந்து படியாக்கலுக்கு உட்படுத்துவதன் மூலம் பெறப்படுகிறது.
14.
15.
(i) ஆஸ்வால்ட் நீர்த்தல் விதியானது, ஒரு வலிமை குறைந்த அமிலத்தின் பிரிகை மாறிலியை (Ka ) அதன் பிரிகை வீதம் (\(\alpha \)) மற்றும் செறியுடன் (c ) தொடர்புபடுத்துகிறது. ஒரு சேர்மத்தின் மொத்த மோல் எண்ணிக்கையில், சமநிலையில் பிரிகையடைந்த மோல்களின் பின்னம், பிரிகை விதம் (\(\alpha \)) என்றழைக்கப்படுகிறது.

ஒரு வலிமை குறைந்த அமிலம் , அதாவது அசிட்டிக் அமிலத்தை (CH3COOH), எடுத்துக்காட்டாக கொண்டு ஆஸ்வால்ட் நீர்த்தல் விதிக்கான சமன்பாட்டை நாம் வருவிப்போம். அசிட்டிக் அமிலத்தின் பிரிகையடைதலை பின்வருமாறு குறிப்பிடலாம்.
\(\mathrm{CH}_3 \mathrm{COOH} \rightleftharpoons \mathrm{H}^{+}+\mathrm{CH}_3 \mathrm{COO}^{-}\)
அசிட்டிக் அமிலத்தின் பிரிகை மாறிலி,
\(\mathrm{K}_{\mathrm{a}}=\frac{\left[\mathrm{H}^{+}\right]\left[\mathrm{CH}_3 \mathrm{COO}^{-}\right]}{\left[\mathrm{CH}_3 \mathrm{COOH}\right]}\) ......(1)
| CH3COOH | H+ | CH3COO- | |
| ஆரம்ப நிலை மோல்களின் எண்ணிக்கை | 1 | - | - |
| CH3COOH ன் பிரிகைவீதம் | \(\alpha \) | - | - |
| சமநிலையில் மோல்களின் எண்ணிக்கை | 1-\(\alpha \) | \(\alpha \) | \(\alpha \) |
| சமநிலைச் செறிவு | (1 - \(\alpha \)) C | \(\alpha \)C | \(\alpha \)C |
சமன்பாடு (1) இல் சமநிலைச் செறிவை பிரதியிட
\(\begin{aligned}
\mathrm{K}_{\mathrm{a}}=\frac{(\alpha \mathrm{C})(\alpha \mathrm{C})}{(1-\alpha) \mathrm{C}}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{K}_{\mathrm{a}}=\frac{\alpha^2 \mathrm{C}}{1-\alpha}
\end{aligned}\) .....(2)
வலிமை குறைந்த அமிலமானது மிகக் குறைந்தளவே பிரிகையடைகிறது என்பதை நாம் அறிவோம். எண் ஒன்றுடன் ஒப்பிடும்போது \(\alpha\) மதிப்பு மிகச்சிறியது. எனவே, சமன்பாட்டின் விகுதியிலுள்ள (1 - \(\alpha\)) \(\simeq\) 1. இப்போது சமன்பாடு (2) பின்வருமாறு எழுதலாம்.
\(\mathrm{K}_{\mathrm{a}}=\left(\alpha^2 \mathrm{C}\right)\)
\(\alpha^2=\mathrm{Ka} / \mathrm{C} ; \alpha=\sqrt{\frac{\mathrm{Ka}}{\mathrm{C}}}\)
"நீர்த்தல் அதிகரிக்கும் போது ஒரு வலிமை குறைந்த மின்பகுளியின் பிரிகை விதமும் அதிகரிக்கிறது”
இது ஆஸ்வால்ட் நீர்த்தல் விதி எனப்படும்.
மேலும்: [H+) = \(\alpha\)C மற்றும்
\(\begin{aligned}
{\left[\mathrm{H}^{+}\right]=\left[\frac{\sqrt{\mathrm{Ka}}}{\mathrm{C}}\right] \mathrm{C}=\sqrt{\frac{\mathrm{KaC}^2}{\mathrm{C}}}=\sqrt{\mathrm{Ka} \cdot \mathrm{C}}}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{Kb}=\alpha^2 \mathrm{C}, \quad \because \alpha=\sqrt{\frac{\mathrm{Kb}}{\mathrm{C}}} \text {, }
\end{aligned}\)
\(\begin{aligned}
{\left[\mathrm{OH}^{-}\right] \alpha \mathrm{C}=\sqrt{\frac{\mathrm{Kb}}{\mathrm{C}} \times \mathrm{C}}=\sqrt{\frac{\mathrm{KbC}^2}{\mathrm{C}}}}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\sqrt{\mathrm{KbC}}
\end{aligned}\)
16.
\( (\rho)=\frac{\mathrm{nM}}{\mathrm{a}^3 \mathrm{~N}_1}
\rho =10 \mathrm{gcm}^{-3} ; \\
\mathrm{a} =100 \rho \mathrm{m}=1 \times 10^{-8} \mathrm{~cm} ; \\
\mathrm{N}_{\mathrm{A}} =6.023 \times 10^{23} ; \\
\mathrm{n} =4 ; \mathrm{M}=? \\
\mathrm{M} =\frac{\rho \mathrm{a}^3 \mathrm{~N}_{\mathrm{A}}}{\mathrm{n}}=\frac{10 \times\left(1 \times 10^{-8}\right)^3 \times 6.023 \times 10^{23}}{4} \\
=\frac{6.023}{4}=1.505 \mathrm{~g} / \mathrm{mole}
\)
மோல்களின் எண்ணிக்கை \(n=\frac { W }{ M } =\frac { 1 }{ 1.505 } \) = 0.664 மோல்கள்
n மோல்களில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை = n x NA
அணுக்களின் எண்ணிக்கை = 0.6623 x 6.023 x 1023
= 3.99 x 1023 அணுக்கள்
17.
(i) ஒரு திசையில் நேர்க்கோட்டில் அடுக்கியதைப் போல் இரு பரிமாணத்தில் அதே வரிசை மீண்டும், மீண்டும் தோன்றும் வகையில் அடுக்கினால் ஒரு பரிமாண அமைப்பினைப் போன்று வெவ்வேறு வரிசைகளில் அடுக்கப்பட்ட அனைத்துக் கோளங்களும் செங்குத்து மற்றும் கிடைமட்ட வாக்கில் ஒரே திசையில் அமைந்திருக்குமாறு பல வரிசைகளை உருவாக்குகின்றன.
(ii) முதலாவது வரிசையினை A எனக் குறிப்பிட்டால், மேற்கண்டவாறு பொதிந்து வைக்கப்பட்ட அமைப்பு AAA வகை என அழைக்கப்படுகிறது.
(iii) ஏனெனில், அனைத்து வரிசைகளும் முதல் வரிசையினை ஒத்து அமைகின்றன.
(iv) இவ்வகை அமைப்பில், ஒவ்வொரு கோளமும் தனக்கு அருகாமையில் சூழ்ந்துள்ள நான்கு கோளங்களைத் தொட்டு கொண்டிருக்கும்.
(v) எனவே கோளத்தின் அணைவு எண் 4 ஆகும்.
18.
\(\left[\mathrm{Co}\left(\mathrm{C}_2 \mathrm{O}_4\right)_3\right]^{3-}\) ல் கோபால்ட் +3 ஆக்ஸிஜனேற்ற நிலையில் உள்ளது (C * o ^ 31)
\({ }_{27} \mathrm{Co}_{-18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^7 4 \mathrm{~s}^2 ;{ }_{24} \mathrm{Co}^{3+}-{ }_{18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^6 4 \mathrm{~s}^0\)

n = 0 டடையாகாந்தத் தன்மையுடையது இனக்கலப்பு: \(d ^ 2 s p ^ 3\)
\(\mu_{s} = 0\)
19.
1. ஆய அச்சுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் மடல்களைப் பெற்றிருக்கும் (dxy, dyz மற்றும் dzx) ஆர்பிட்டால்களைக் காட்டிலும் dx²-y2மற்றும் dz² ஆர்பிட்டால்கள் அச்சுகளின் வழியே அமைந்திருப்பதால் அதிக விலக்கு விசைக்கு உட்படுகின்றன.
2. மேலும் அவைகளின் ஆற்றலும் அதிகரிக்கின்றன. இவ்வாறாக சம ஆற்றலுடைய d- ஆர்பிட்டால்கள் இந்நிலையில் இருவகைகளாக பிரிக்கின்றன. இச்செயல்முறை படிகபுலப்பிளப்பு எனப்படும். இவ்விருவகை ஆர்பிட்டால்களுக்கிடையே உள்ள ஆற்றல் வேறுபாடு படிகப்புலபிளப்பு ஆற்றல் எனப்படும்.
20.
1. முதலாவது இடைநிலை உலோகமான ஸ்காண்டியம் +3 ஆக்ஸிஜனேற்ற நிலையை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், மற்ற இடைநிலை தனிமங்கள் மாறுபடும் ஆக்ஸிஜனேற்ற நிலைகளைப் பெற்றுள்ளன. ஏனெனில், இவைகளின், (n-1) d மற்றும் ns ஆர்பிட்டால்களுக்கிடையே காணப்படும் ஆற்றல் வேறுபாடு மிகக் குறைவாக இருப்பதால் அவற்றில் இடம் பெற்றுள்ள எலக்ட்ரான்களை இழந்து அவைகள் மாறுபடும் ஆக்ஸிஜனேற்ற நிலைகளைப் பெறுகின்றன.
2. d வரிசைத் தொடரின் துவக்கத்தில் +3 ஆக்ஸிஜனேற்ற நிலையானது நிலைப்புத் தன்மையுடையதாக உள்ளது. ஆனால் தொடரின் இறுதியில் +2 ஆக்ஸிஜனேற்ற நிலைமையானது நிலைப்புத் தன்மையைப் பெற்றதாக உள்ளது. எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ஆக்ஸிஜனேற்ற நிலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. மேலும் இணையாகும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ஆக்ஸிஜனேற்ற நிலைகளின் எண்ணிக்கை குறைகிறது. எனவே முதல் மற்றும் கடைசி தனிமங்கள் குறைவான ஆக்ஸிஜனேற்ற நிலைகளையும் மையப்பகுதியினை ஒட்டி அமைந்துள்ள தனிமங்கள் அதிக எண்ணிக்கையிலான ஆக்ஸிஜனேற்ற நிலைகளையும் பெற்றுள்ளன.
3. எடுத்துக்காட்டாக, முதல் தனிமமான ஸ்காண்டியம் +3 ஆக்ஸிஜனேற்ற நிலையை மட்டும் கொண்டுள்ளது. மையத்தில் அமைந்துள்ள தனிமமான மாங்கனீஸ் +2 முதல் +7 வரையிலான ஆறு ஆக்ஸிஜனேற்ற நிலைகளைக் கொண்டுள்ளது. கடைசி தனிமமான தாமிரம் +1 மற்றும் +2 ஆகிய இரு ஆக்ஸிஜனேற்ற நிலைகளை மட்டும் கொண்டுள்ளது.
21.
(i) இரண்டாம் வரிசை கார உலோகத்தின் ஹைட்ரைடு (A) என்பது LiH ஆகும். போரானின் சேர்மம் (B) ஆனது B2H6
(ii) (A) லித்தியம் ஹைட்ரைடு, போரானின் சேர்மம் டைபோரேனுடன் (B) வினைபுரிந்து ஒடுக்கும் காரணி லித்தியம் போரா ஹைட்ரைதைத் தருகிறது.
எனவே சேர்மம் (B) ஆனது டைபோரேன் மற்றும் சேர்மம் (C) ஆனது லித்தியம் போரோ ஹைட்ரைடு ஆகும்.
\(\underset { (B) }{ { B }_{ 2 }{ H }_{ 6 } } \) + 2LiH \(\underrightarrow { Ether } \underset { (C) }{ { 2LiBH }_{ 4 } } \)
| சேர்மம் | வாய்ப்பாடு | பெயர் |
| A | LiH | லித்தியம் ஹைட்ரைடு |
| B | B2H6 | டைபோரேன் |
| C | LiBH4 | லித்தியம் போரோ ஹைட்ரைடு |
22.
அ) சமான கடத்துத்திறன்
\(\begin{aligned}
\lambda_{\infty} \mathrm{Al}_2\left(\mathrm{SO}_4\right)_3 & =\frac{1}{3} \lambda_{\infty} \mathrm{Al}^{3+}+\frac{1}{2} \lambda_{\infty} \mathrm{SO}_4^{2-}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\left(\frac{1}{3} \times 189\right)+\frac{1}{2}(160)
\end{aligned}\)
= 63 + 80
= 143 மோ.செ.மீ2 சமானம்-1
ஆ) மோலார் கடத்துத்திறன்
\(\mu_{\infty} \mathrm{Al}_2\left(\mathrm{SO}_4\right)_3=2 \mu_{\infty} \mathrm{Al}^{3+}+3 \mu_{\infty} \mathrm{SO}_4{ }^{2-}\)
= 2(189) + 3 (160)
= 378 + 480
= 858 மோ.செ.மீ2 சமானம்-1
23.
24.
\( \mathrm{Eu}(63)-[\mathrm{Xe}] 4 \mathrm{f}^7 5 \mathrm{~d}^{\circ} 6 \mathrm{~s}^2 ; \mathrm{Eu}^{2+}-[\mathrm{Xe}] 4 \mathrm{f}^7 \\
\mathrm{Ce}(58)-[\mathrm{Xe}] 4 \mathrm{f}^1 5 \mathrm{~d}^1 6 \mathrm{~s}^2 ; \mathrm{Ce}^{2+}-[\mathrm{Xe}] 4 \mathrm{f}^1 5 \mathrm{~d}^1
\)
Eu2+ சரிபாதி நிரம்பிய நிலையான எலக்ட்ரான் அமைப்பை பெற்றுள்ளது. ஆகையால் Eu2+ ஆனது Ce2+ விட அதிக நிலைப்புத் தன்மை உடையதாக உள்ளது.
25.
PCl5 (g) \(\underrightarrow { \Delta } \) PCl3 (g) + Cl(2)(g)
PCl5 சிதைவடைந்து PCl3 மற்றும் Cl2 ஐ கொடுக்கிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards