12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/03/2021
12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
மூலக்கூறு கிளர்வுறுவதற்குத் தேவைப்படும் அதிகபட்ச ஆற்றல் _____________
இயக்க ஆற்றல்
குறைந்தபட்ச ஆற்றல்
நிலை ஆற்றல்
கிளர்வுறு ஆற்றல்
2.
லாந்தனைடுகள் பின்வரும் எந்த ஆக்சிஜனேற்ற நிலைகளையும் பெற்றிருக்கும் ?
+2,+4
+6,+1
+3,+5
+2,+3
3.
.jpg)
என்ற வினையானது எதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
உர்ட்ஸ் வினை
வளையமாதல் வினை
வில்லியம்சன் தொகுப்பு முறை
கோல்ப் வினை
4.
ஆஸ்பிரின் என்பது _______.
அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்
பென்சாயில் சாலிசிலிக் அமிலம்
குளோரோபென்சாயிக் அமிலம்
ஆந்த்ரனிலிக் அமிலம்
5.
பின்வருவனவற்றை பொருத்துக:
| A) V2O5 | i) உயர் அடர்த்தி பாலிஎத்திலீன் |
| B) சீக்லர் - நட்டா | ii) PAN |
| C) பெராக்சைடு | iii) NH3 |
| D) தூளாக்கப்பட்ட Fe | iv) H2SO4 |
| A | B | C | D |
| (iv) | (i) | (ii) | (iii) |
| A | B | C | D |
| (i) | (ii) | (iv) | (iii) |
| A | B | C | D |
| (ii) | (iii) | (iv) | (i) |
| A | B | C | D |
| (iii) | (iv) | (ii) | (i) |
6.
பின்வருவனவற்றுள் சீர்மை தன்மையுடைய அமினோ அமிலம் _______.
2-எத்திலலனின்
2-மெத்தில் கிளைசீன்
2-ஹைட்ராக்ஸிமெத்தில்செரீன்
ட்ரிப்டோஃபேன்
7.
\(M/36\) செறிவு கொண்ட வலிமை குறைந்த ஒற்றைக்கார அமிலத்தின் சமமான கடத்துத்திறன் மதிப்பு 6 mho cm2 equivalent-1 மற்றும் அளவிலா நீர்த்தலில் அதன் சமமான கடத்துத்திறன் மதிப்பு 400 mho cm2 equivalent-1 எனில், அந்த அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பு _____________
\(1.25\times10^{-6}\)
\(6.25\times10^{-6}\)
\(1.25\times10^{-4}\)
\(6.25\times10^{-5}\)
8.
பின்வரும் நைட்ரோ சேர்மங்களில் எது நைட்ரஸ் அமிலத்துடன் வினைபுரியாது
CH3 -CH2 -CH2 -NO2
(CH3)2 CH - CH2 NO2
(CH3)3C NO2

9.
\(\Delta G^{0}\)=57.34 kJ mol-1, எனும் கிபஸ் கட்டிலா ஆற்றல் மதிப்பை பயன்படுத்தி \(X_{2}Y(s)\rightleftharpoons 2X^{+}\) நீர்க்கரைசல் + Y2- (aq) என்ற வினைக்கு, 300 K வெப்ப நிலையில், நீரில் X2Y இன் கரைதிறன் பெருக்க மதிப்பை கணக்கிடுக. 300 K (R = 8.3 J K-1 Mol-1)
10-10
10-12
10-14
கொடுக்கப்பட்ட தகவலிலிருந்து கணக்கிட முடியாது
10.
பென்சாயிக் அமிலம் \(\overset{i)NH_3}{\underset{ii)\Delta}\longrightarrow} A \overset{NaOBr}\longrightarrow B \overset{NaNO_2/HCl}\longrightarrow C\), C என்பது ______.
அனிலீனியம் குளோரைடு
O – நைட்ரோ அனிலீன்
பென்சீன் டையசோனியம் குளோரைடு
m – நைட்ரோ பென்சாயிக் அமிலம்
11.
உலோக கார்பனைல்களில், உலோகங்களின் ஆக்சிஜனேற்ற நிலை ________.
0
+1
+2
+3
12.
CsCl ஆனது bcc வடிவமைப்பினை உடையது. அதன் அலகுக் கூட்டின் விளிம்பு நீளம் 400 pm, அணுக்களுக்கு இடையேயான தொலைவு ______________
400 pm
800pm
\(\sqrt{3}\times 100pm \)
\(\left( \frac { \sqrt { 3 } }{ 2 } \right) \times 400pm\)
13.
பின்வருவனவற்றுள் இனான்சியோமர் இணைகளை தர வல்லது எது?
[Cr(NH3)6][Co(CN)6]
[Co(en)2Cl2]Cl
[pt(NH3)4][ptcl4]
[Co(NH3)4Cl2]NO2
14.
ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி ______.
6N
4N
2N
இவை எதுவுமல்ல
15.
ஒடுக்க வினைக்கு உட்படுத்தும் முன்னர், சல்பைடு தாதுக்களை வறுத்தலில் ஏற்படும் நன்மையினைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
CS2 மற்றும் H2S ஆகியவற்றைக் காட்டிலும் சல்பைடின் \(\Delta \)Gf0 மதிப்பு அதிகம்
சல்பைடை வறுத்து ஆக்ஸைடாக மாற்றும் வினைக்கு \(\Delta \)Gr0 மதிப்பு எதிர்க்குறியுடையது.
சல்பைடை அதன் ஆக்ஸைடாக வறுத்தல் என்பது ஒரு சாதகமான வெப்ப இயக்கவியல் செயல்முறையாகும்.
உலோக சல்பைடுகளுக்கு, கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியன தகுந்த பொருத்தமான ஒடுக்கும் காரணிகளாகும்.
16.
திடப்பொருட்களை அவைகளில் காணப்படும் உட்கூறுகளின் அமைப்பினை பொறுத்து எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது? அவை யாவை?
17.
அணைவுக் கோளம் வரையறு.
18.
ஹெக்ஸ் -4- ஈனால் தயாரிக்க?
19.
t – பியூட்டைல் ஆல்கஹாலை அமிலம் கலந்த டைகுரோமேட்டை பயன்படுத்தி கார்பனைல் சேர்மமாக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்ய இயலுமா?
20.
1 – மீத்தாக்சி புரப்பேனை அதிக அளவு HI உடன் வெப்பப்படுத்தும் போது உருவாகும் விளைபொருட்களை கண்டறிக. இவ்வினையின் வினைவழிமுறையினை குறிப்பிடுக.
21.
பின்வருவனவற்றை வரிசைபடுத்துக.
i. நீரில் கரைதிறனின் ஏறுவரிசை, C6H5NH2, (C2H5)2 NH, C2H5NH2
ii. கார வலிமையின் ஏறுவரிசை
a) அனிலீன், p- டொலுடின் மற்றும் p – நைட்ரோ அனிலீன்
b) C6H5NH2, C6H5NHCH3, மற்றும், p-Cl-C6H4-NH2
iii. வாயுநிலைமைகளில் காரவலிமையின் இறங்கு வரிசை
C2H5NH2, (C2H5)NH, (C2H5)3N மற்றும் NH3
iv. கொதிநிலையின் ஏறுவரிசை C6H5OH, (CH3)2NH, C2H5NH2
v. pKb மதிப்புகளின் இறங்கு வரிசை C2H5NH2, C6H5NHCH3,(C2H5)2NH மற்றும் CH3 NH2
vi. கார வலிமையின் ஏறுவரிசை C6H5NH2, C6H5N(CH3)2, (C2H5)2 NH மற்றும் CH3 NH2
vii. கார வலிமையின் இறங்கு வரிசை 
22.
HClO4 மூலக்கூறின் அமிலத்தன்மைக்கான காரணம் கூறு. ப்ரான்ஸ்டட் – லெளரி கொள்கையின் அடிப்படையில், அதன் இணை காரத்தை கண்டறிக.
23.
ஆய்வகத்தில் குளோரின் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
24.
பின்வரும் வினைகளில், ஒவ்வொரு வினைபடு பொருள்களைப் பொருத்து வினை வேகங்களைக் குறிப்பிடுக. வினையின் ஒட்டுமொத்த வினைவகையைக் கண்டறிக.
அ) \(\\ 5{ Br }^{ - }(aq)+Br{ O }_{ 3 }^{ - }(aq)+{ 6H }^{ + }(aq)\longrightarrow 3{ Br }_{ 2 }(l)+3{ H }_{ 2 }O(l)\)
சோதனை மூலம் கண்டறியப்பட்ட வேகவிதி
வினைவேகம் = K[Br-][BrO3-][H+]2
ஆ) CH3CHO(g)\(\overset { \Delta }{ \longrightarrow } \)CH4(g)+CO(g) சோதனை மூலம் கண்டறியப்பட்ட வேகவிதி
வினைவேகம் = K[CH3CHO]\(\frac {3}{2}\)
25.
அயனிப்படிகங்கள் ஏன் கடினமாகவும், உடையும் தன்மையினையும் பெற்றுள்ளன?
26.
லாந்தனாய்டுகள் மற்றும் ஆக்டினாய்டுகள் தனிம வரிசை அட்டவணையில் பெற்றுள்ள இடத்தினை நிறுவுக.
27.
28.
டெரிலீன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
29.
சோப்புகள் ஏன் கடின நீரில் செயல்புரிவதில்லை ?
30.
ஒருபடித்தான மற்றும் பலபடித்தான வினைவேக மாற்றங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?
31.
32.
பொட்டாசியம் பெர்மாங்கனேட் பயன்களை எழுதுக.
33.
நான்முகி படிக புலத்தில், d - ஆர்பிட்டாலின் படிக புலப் பிளப்பினை குறிப்பிடும் வரைபடம் காண்க.
34.
ஒரு வினையின் கிளர்வு ஆற்றல் 22.5 k Cal mol-1 மேலும் 40\(^{\circ}\)C ல் வினைவேக மாறிலி 1.8×10-5 s-1 எனில் அதிர்வுக் காரணி A ன் மதிப்பைக் கண்டறிக.
35.
VB கொள்கையின் வரம்புகள் யாவை?
36.
HF ஆனது ஒரு வலிமை குறைந்த அமிலம் ஆனால் பிற ஹாலஜன்களின் இருமை அமிலங்கள் வலிமை மிக்கதாக உள்ளன ஏன் என்பதற்கான காரணம் தருக.
37.
ஜியோலைட்டுகள் பற்றி குறிப்பு வரைக.
38.
AlCl33 ஆனது லூயி அமிலமாக செயல்படுகிறது. இக்கூற்றினை நிறுவுக.
39.
பொதிவுத் திறன் என்றால் என்ன?
40.
இடைநிலைத் தனிமங்களில் காணப்படும் பாரா காந்தத்தன்மை மற்றும் டையா காந்தத்தன்மை பற்றி எழுதுக.
41.
3,3 – டைமெத்தில் பியூட்டன் – 2 – ஆல் ஐ அடர் கந்தக அமிலத்துடன் வினைப்படுத்தும் போது டெட்ரா மெத்தில் எத்திலீன் முதன்மை விளைபொருளாக உருவாகிறது. தகுந்த வினை வழிமுறையைத் தருக.
42.
வினைவேக மாற்றம் பற்றிய இடைநிலைச் சேர்மம் உருவாதல் கொள்கையை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
1.
(d)
கிளர்வுறு ஆற்றல்
2.
(a)
+2,+4
3.
(c)
வில்லியம்சன் தொகுப்பு முறை
4.
(a)
அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்
5.
(a)
| A | B | C | D |
| (iv) | (i) | (ii) | (iii) |
6.
(c)
2-ஹைட்ராக்ஸிமெத்தில்செரீன்
7.
6.25 \(\times\) 10-6
\(\begin{aligned}
\alpha=\frac{\Lambda}{\Lambda_0} & =\frac{6}{400}
\end{aligned}\)
\(\begin{aligned}
K_a & =\alpha^2 C
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{6}{400} \times \frac{6}{400} \times \frac{1}{36}=6.25 \times 10^{-6}
\end{aligned}\)
8.
(c)
(CH3)3C NO2
9.
(a)
10-10
10.
(c)
பென்சீன் டையசோனியம் குளோரைடு
11.
(a)
0
12.
\(
\left(\frac{\sqrt{3}}{2}\right) \times 400 \mathrm{pm}\\
bcc ; \mathrm{r}=\frac{\sqrt{3}}{4} \mathrm{a}\)
அணுக்களுக்கு இடையேயான √3 = a தொலைவு \(=\frac{\sqrt{3}}{2} \mathrm{a}=\left(\frac{\sqrt{3}}{2}\right) 400 \mathrm{pm}\)
13.

(அ), (இ) மற்றும் (ஈ) ஆகிய வாய்ப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளவை சீர்மைக் கூறுகளை உடையவை. எனவே, அவைகள் ஒளிசுழற்றும் தன்மையற்றவை.
14.
(a)
6N
15.
(d)
உலோக சல்பைடுகளுக்கு, கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியன தகுந்த பொருத்தமான ஒடுக்கும் காரணிகளாகும்.
16.
திடப்பொருட்களை அவைகளில் காணப்படும் உட்கூறுகளின் அமைப்பினை பொறுத்து பின்வரும் இருபெரும் பிரிவுகளாகப் பார்க்கலாம். அவை:
(i) படிக வடிவமுடைய திடப்பொருட்கள்
(ii) படிவ வடிவமற்ற திடப்பொருட்கள்
17.
(i ) அணைவு அயனியில் உள்ள மைய உலோக அணுவையும் அதனுடன் இணைக்கப்பட்ட ஈனிகளையும் ஒருங்கிணைத்து இருக்கும் தொகுதி அணைவுக் கோளம் எனப்படும்.
(ii ) இவை ஒரு சதுர அடைப்பிற்குள் நிகர மின்சுமையோடு குறிப்பிட வேண்டும்.
உதாரணம் :
\(\left[ Co\left( { NH }_{ 3 } \right) _{ 6 } \right] { Cl }_{ 3 }\) என்ற அணைவுச் சேர்மத்தில் \(\left[ Co\left( { NH }_{ 3 } \right) _{ 6 } \right] ^{ 3+ }\) அயனி அணைவுக் கோளம் ஆகும்.
18.

19.
சாதாரண வெப்பநிலையில் t-பியூட்டைல் ஆல்கஹால் ஆக்சிஜனேற்றம் அடைவதில்லை ஆனால் உயரிய வெப்பநிலையில் மற்றும் வலிமை மிகு ஆக்சிஜனேற்றம் முன்னிலையில் C - C பிணைப்பில் பிளவு ஏற்பட்டு கலப்பின கார்பாக்ஸிலிக் அமிலங்களை தருகிறது.
20.
அதிகளவு HI
CH3 - O - CH2 - CH2 - CH3 + HI \(\rightarrow\) CH3I + CH3 - CH2 - CH2 - CH2 OH \(\longrightarrow\) CH3 - CH2 - CH2I + H2O
1- மீத்தாக்ஸி புரோப்பேன் மெத்தில் அயோடைடு (அ) அயோடோ மீத்தேன் 1- அயோடோ புரோப்பேன்
ஏனெனில், 1- மீத்தாக்ஸி புரப்பேனில் ஓரிணைய ஆல்கைல் தொகுதி உள்ளது. அதனால் இது SN² வினைவழிமுறையை பின்பற்றுகிறது.
21.
(i) C6H5NH2, (C2H5)2 NH,C2H5NH2
C6H5NH2 < (C2H5)2 NH < C2H5NH2
ii. கார வலிமையின் ஏறுவரிசை
a) அனிலீன், p- டொலுடின் மற்றும் p – நைட்ரோ அனிலீன்
அ) அனிலீன், p - டொலுடின் மற்றும் p - நைட்ரோ அனிலின்
p - டொலுடின் >அனிலின் > p - நைட்ரோ அனிலீன்
(e⊝) வெளியிடும் தொகுதி) ( e -ஈர்க்கும் தொகுதி)
b) C6H5NH2, C6H5NHCH3, மற்றும், p-Cl-C6H4-NH2
C6H5NH2 , C6H5NHCH3, p-Cl-C6H4-NH2
C6H5NH2 > C6H5NHCH3 > p-Cl-C6H4-NH2
iii. வாயுநிலைமைகளில் காரவலிமையின் இறங்கு வரிசை
C2H5NH2, (C2H5)NH, (C2H5)3N மற்றும் NH3
NH3 > (C2H5)NH2 > (C2H5)3NH > (C2H5)3N
1° அமீன் 2° அமீன் 3° அமீன்
iv. கொதிநிலையின் ஏறுவரிசை C6H5OH, (CH3)2NH, C2H5NH2
(CH3)2NH > C2H5NH2 > C2
2° அமீன் 1° அமீன்
22.
\(\mathrm{HClO}_4 \rightleftharpoons \mathrm{H}^{+}+\mathrm{ClO}_4^{-}\)
ப்ரான்ஸ்டட் அமிலம் புரோட்டான் இணைகாரம் HCIO4 ஆனது ஒரு புரோட்டானை வழங்கவல்லது. எனவே HCIO4 ஓர் அமிலம். அதன் இணைகாரம் CIO4-ஆகும்.
23.
(i) மாங்கனீசு டை ஆக்சைடு முன்னிலையில் குளோரைடு உப்புகள் அடர் கந்தக அமிலத்துடன் வினைபுரிந்து குளோரின் பெறப்படுகிறது
4 NaCl + MnO2 + 4H2SO4 ⟶ Cl2 + MnCl2 + 4NaHSO4 + 2H2O
(ii) ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கொண்டு ஆக்சிஜனேற்றமடையச் செய்து குளோரினைப் பெறலாம்.
2KMnO4 + 16HCl ⟶ 2KCl + 2MnCl2+ 8H2O + 5Cl2
24.
Br- ஐப் பொருத்து முதல் வகை மேலும் BrO3- ஐப் பொருத்து இரண்டாம் வகை எனவே, வினையின் ஒட்டுமொத்த வினைவகை 1 + 1 + 2 = 4
ஆ) அசிட்டால்ஹைடைப் பொருத்த வரையில் வினைவகை \(\frac{3}{2}\). ஒட்டு மொத்த வினை வகையின் மதிப்பும் \(\frac{3}{2}\)ஆகும்.
25.
இப்படிகங்களில் அடிப்படை அமைப்பு அலகுகளாக நேர் அயனிகள் மற்றும் எதிர் அயனிகள் காணப்படுகின்றன. இவைகள் வலிமையான நிலைமின்னியல் கவர்ச்சி விசையால் ஒன்றோடொன்று இறுக்கமாகப் பிணைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமின்னியல் கவர்ச்சி விசையானது பெருமமாக அமையும் வகையில் நேர் அயனியைச் சுற்றிலும் அதிகபட்சமாக எத்தனை எதிர் அயனிகள் இருக்க வாய்ப்புள்ளதோ அந்த அளவிற்கு அயனிகள் காணப்படுகின்றன. இதன் மறுதலையும் உண்மை.
எனவே அயனிப்படிகங்கள் கடினமாகவும், உடையும் தன்மை உடையதாகவும் உள்ளன.
26.
1. நவீன தனிம வரிசை அட்டவணையில் தொகுதி 3 வரிசை 6 யில் லாந்தனைடுகள் இடம் பெற்றிருக்க வேண்டும். எனினும் ஆறாவது தொடரில் லாந்தனத்திற்கு பிறகு எலக்ட்ரான்கள் 4f உட்கூட்டில் சேர்கின்றன. மேலும், லாந்தனத்தைத் தொடர்ந்து வரும் 14 தனிமங்களும் ஒத்த வேதிப் பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே இத்தனிமங்கள் அனைத்தும் ஒருங்கே ஒரே தொகுதியாக தனிம வரிசை அட்டவணையில் கீழ்புறம் தனியே இடம் பெற்றுள்ளன.
2. இதைப் போலவே ஆக்டினியத்தை தொடர்ந்து வரும் 14 தனிமங்களும் அவைகளில் இயற் மற்றும் வேதிப் பண்புகளில் ஒத்துக் காணப்படுகின்றன. இதனால் தனிமவரிசை அட்டவணையில் கீழே தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
27.
28.
(i) ஒற்றைப்படிகள் எத்திலீன் கிளைக்கால் மற்றும் டெரெப்தாலிக் அமிலம் (அல்லது டைமெத்தில் டெரெப்தாலேட்) ஆகியன ஒற்றைப்படிகளாக உள்ளன.
(ii) வினையூக்கி ஜிங்க் அசிட்டேட் மற்றும் ஆன்டிமனி ட்ரையாக்சைடு
(iii) வெப்பநிலை : 500 K
(iv) விளைபொருள் : டெரிலீன்
பயன்கள் : பஞ்சு அல்லது கம்பளி இழைகளுடன் கலத்தலிலும் பாதுகாப்பு தலைக்கவசங்களில் கண்ணாடி பொருளாகவும் பயன்படுகிறது.
29.
1. கடின நீரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புகள் உள்ளன .
2. சோப்புகளை நீரில் கரைக்கும் போது இது அயனிகளை இடப்பெயர்ச்சி அடையச் செய்கிறது.
3. எனவே, இவை கடின நீரில் கரைவதில்லை செயல்திறன் குறைகிறது.
30.
| வ.எண் | ஒரு படித்தான வினைவேக மாற்றம் | பலபடித்தான வினைவேக மாற்றம் |
| 1. | ஒரு படித்தான வினைவேக மாற்ற வினையில் வினைபடு பொருட்கள், வினை விளைபொருட்கள் மற்றும் வினைவேக மாற்றிகள் ஆகியன ஒரே நிலைமையில் உள்ளன. எ.கா: \(2 \mathrm{SO}_2+\mathrm{O}_2+[\mathrm{NO}] \rightarrow 2 \mathrm{SO}_3+[\mathrm{NO}]\) [NO] - வினைவேகமாற்றி; வாயுநிலை SO2, O2, & SO3 வாயுக்கள் |
ஒரு பலபடித்தான வினைவேக மாற்ற வினையில் வினைவேக மாற்றியானது வேறு நிலைமையில் இருக்கும். அதாவது, வினைபடு பொருட்கள் மற்றும் விளைபொருட்களைப் போல் ஒரே நிலைமையில் இருக்காது. எ.கா: \(\mathrm{N}_2+3 \mathrm{H}_2 \xrightarrow{\mathrm{Fe}} 2 \mathrm{NH}_3\) Fe - வினைவேகமாற்றி; திண்மம் N2,H2 & NH3, வாயுக்கள் |
| 2. | இது ஒரு தொடர்பு வினைவேக மாற்றம் அல்ல | இது ஒரு தொடர்பு வினைவேக மாற்றமாகும்; உலோக வினைவேக மாற்றியானது நன்கு தூள் செய்யப்பட்ட நிலையிலோ கம்பிவலைபோன்றோ இருக்கும். |
| 3. | இது இடைநிலை சேர்மம் உருவாதல் கொள்கையால் விளக்கப்படுகிறது. | இது பரப்புக்கவர்தல் கொள்கையால் விளக்கப்படுகிறது. |
31.
32.
(i) வலிமைமிக்க ஆக்சிஜனேற்றியாக பயன்படுகிறது
(ii) பல்வேறு தோல் தொற்றுநோய்கள் மற்றும் கால்களில் ஏற்படும் பூஞ்சை தொற்றுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது
(iii) நீரை தூய்மைப்படுத்தும் தொழிற்சாலைகளில், நிலத்தடி நீரிலிருந்து ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் இரும்பை நீக்கப் பயன்படுகிறது
(iv) கரிமச் சேர்மங்களின் நிறைவுறாத் தன்மையை கண்டறிய பேயரின் காரணியாக பயன்படுகிறது
(v) ஃபெர்ரஸ் உப்புகள், ஆக்சலேட்டுகள், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் அயோடைடுகளை அளந்தறியும் பகுமனறி பகுப்பாய்வுகளில் பயன்படுகிறது
33.
34.
\( \mathrm{k} =\mathrm{Ae}^{-\frac{\mathrm{E}_a}{R T}} \\ \log \mathrm{k} =\log \mathrm{A}-\frac{\mathrm{E}_{\mathrm{a}}}{2.303 \mathrm{RT}} \\ \log \mathrm{A} =\log \mathrm{k}-\frac{\mathrm{E}_{\mathrm{a}}}{2.303 \mathrm{RT}} \\ \mathrm{k} =1.8 \times 10^{-5} \mathrm{~s}^{-1} \\ \mathrm{E}_{\mathrm{a}} =22.5 \mathrm{~K} \mathrm{cal} \mathrm{mol}^{-1} \\ =22500 \mathrm{cal} \mathrm{mol}^{-1} \\ \mathrm{~T} =313 \mathrm{~K} \\ \mathrm{R} =1.987 \mathrm{cal} \mathrm{mol}^{-1} \mathrm{~K}^{-1} \\ \log \mathrm{A} =\log \left(1.8 \times 10^{-5}\right)+\frac{22500}{2.303 \times 1.987 \times 313} \\ \log \mathrm{A} =\log 1.8-5 \log 10+15.7 .1 \\ =0.2553-5+15.71 \\ \log \mathrm{A} =10.9653, \quad \mathrm{~A}=\mathrm{Antilog} 10.9653 \)
\(=9.2 \times 10^{10}\) மோதல்கள் விநாடி-1
35.
VB கொள்கையின் வரம்புகள்:
1. அணைவுச் சேர்மங்களின் நிறங்களை இக்கொள்கை விளக்கவில்லை.
2. இது சுழற்சியால் ஏற்படும் காந்தத் திருப்புத் திறனை மட்டுமே கருத்திற்கொண்டது. காந்தத் திருப்புத் திறனின் பிற கூறுகளை கருத்திற்கொள்ளவில்லை.
3. ஒரே உலோகத்தின் அணைவுச் சேர்மங்களில் சில, உள் ஆர்பிட்டால் அணைவுகளாகவும் மற்ற சில சேர்மங்கள், ஆர்பிட்டால் அணைவுகளாகவும் காணப்படுகின்றன. ஏன் இவ்வாறு மாறுபட்ட அணைவுகள் உருவாகின்றன என்பதற்கு உரிய விளக்கத்தினை இக்கொள்கை தரவில்லை.
4. எடுத்துக்காட்டு:
\(\left[\mathrm{Fe}(\mathrm{CN})_6\right]^{4-}\)ஆனது டையாகாந்தப்பண்புடையது (குறை சுழற்சி அணைவு) ஆனால் \(\left[\mathrm{FeF}_6\right]^{4-}\) ஆனது பாரா காந்தத்தன்மையுடையது (உயர் சுழற்சி அணைவு).
36.
HF ஆனது வலிமை குறை அமிலம். அதாவது 0.1M கரைசல் 10% மட்டுமே அயனியுறுகிறது. ஆனால் 5M மற்றும் 15M HF கரைசலில் வேதிச்சமநிலையின் காரணமாக HF வலிமையான அமிலமாக செயல்படுகின்றன.
HF + H2O ⇌ H3O+ + F-
HF + F- ⇌ HF2-
37.
(i) ஜியோலைட்டுகள் என்பவை அலுமினியம், சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை ஒழுங்கான முப்பரிமாண கட்டுமான அமைப்பில் கொண்டுள்ள முப்பரிமாண படிகத் திண்மங்களாகும்.
(ii) இவை நீரேறிய சோடியம் அலுமினோ சிலிகேட்டுகளாகும்.
(iii) பொதுவான வாய்ப்பாடு Na2O.(AI2O3).x(SiO2).y(H2O) (x = 2 முதல் 10; y = 2 முதல் 6 வரை)
(iv) ஜியோலைட்டுகள் நுண்துளை அமைப்பைக் கொண்டுள்ளன. இத்துளைகளில் ஒன்றை நேர்மின் சுமை கொண்ட சோடியம் அயனிகளும், நீர் மூலக்கூறுகளும் தளர்வாக இருத்தி வைக்கப்பட்டுள்ளன. பங்கிடப்பட்ட ஆக்சிஜன் அணுக்களின் மூலம் Si மற்றும் Al அணுக்கள் நான்முகி அமைப்பில் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
(v) ஜியோலைட்டுகள், களிமண் கனிமத்தை ஒத்துள்ளன. ஆனால் அவற்றின் படிகச் அமைப்பில் வேறுபடுகின்றன.
(vi) ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட தடங்கள் மற்றும் கூடுகளைக் கொண்ட, தேன்கூட்டு அமைப்பை ஒத்த முப்பரிமாண படிக அமைப்பை ஜியோலைட்டுகள் பெற்றுள்ளன. ஜியோலைட்டு கட்டமைப்பு நகராமல் இறுக்கமாக உள்ள போதும், நுண் துளைகளின் வழியாக நீர் மூலக்கூறுகள் உள்ளேயும், வெளியேயும் மிக எளிதாக நகர்கின்றன.
(vii) ஏறத்தாழ ஒரே சீராக அமைந்திருக்கும் நுண்துளைகளின் உருவளவு இக்கட்டமைப்பின் மற்றொரு ஜியோலைட்டுகள் நீரின் நிரந்தரக் கடினத் தன்மையை நீக்க பயன்படுகிறது.
38.
(i) அலுமினியமானது குளோரினுடன் மூன்று சகப் பிணைப்புகளை உருவாக்குகிறது: எனவே அதன் வெளிக்கூட்டில் 6 எலக்ட்ரான்கள் உள்ளன.
(ii) எட்டு அமைப்பை பெற Al ற்கு 2 மேலும் எலக்ட்ரான்கள் தேவை.
(ii) NH3 PH3 COCl2 உடன் சேர்மங்களை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டு AlCl3.6NH3
39.
பொதிவுத் திறன்:
(i) ஒவ்வொரு வரிசையிலும் கோளங்களுக்கு இடையே இடைவெளிகள் காணப்படுகின்றன.
(ii) மேலும், பல அடுக்குகள் அமையும் போது, அடுத்தடுத்த அடுக்குகளுக்கு இடையேயும் இடைவெளிகள் ஏற்படுகின்றன.
(iii) ஒரு அமைப்பில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கோளங்களின் ஒட்டு மொத்த கன அளவானது அவ்வமைப்பின் பொதிவுத் திறனைத் (Packing efficiency) தருகிறது.
(iv) முதலில் நாம் ஒரு எளிய கனச்சதுர அமைப்பின் பொதிவுத் திறனைக் கணக்கிடுவோம்.
(v) பொதிவுத் திறன் அல்லது பொதிவு பின்னம்
In ABC AC2 = AC2 +AB2 +BC2
AG = \(\sqrt { 3 } a\)
r = \(\frac { \sqrt { 3 } }{ 4 } a\ =\frac { \sqrt { 13 } }{ 16 } \pi { a }^{ 3 }\)
= \(\frac { \left( \frac { \sqrt { 13 } }{ 16 } \pi { a }^{ 3 } \right) }{ { a }^{ 3 } } \times\ 100\)
= 68%
40.
(i) இடைநிலைத் தனிமங்களில் பெரும்பாலான சேர்மங்கள் பாரா காந்தத் தன்மை உடையவை. மேலும் காந்த பண்புகள் அணுக்களின் எலக்ட்ரான் அமைப்புகளோடு தொடர்புடையவை.
(ii) எலக்ட்ரான்கள் அணுக்கருவைச் சுற்றிவரும் ஆர்பிட்டால் இயக்கத்துடன், தனது சுய அச்சினைப் பற்றி தனக்கு தானே சுழல்கிறது. இவ்வியக்கங்களின் காரணமாக ஒரு சிறிய காந்தப் புலம் உருவாகிறது. காந்த புலத்தினை காந்த திருப்புத்திறனைக் கொண்டு மதிப்பிடலாம்.
(iii) காந்த பண்புகளின் அடிப்படையில் பொருட்கள்
(1) பாரா காந்த தன்மையுடைய பொருட்கள்
(2) டையா காந்த தன்மையுடைய பொருட்கள் என வகைப்படுத்தலாம்.
(iv) இவற்றினைத் தவிர ஃபெர்ரோ மற்றும் எதிர் ஃபெர்ரோ காந்தப் பொருள்களும் காணப்படுகின்றன. டையா காந்தப் பொருட்கள், முதன்மை காந்த இரு முனைகள் எதனையும் பெற்றிருப்பதில்லை.
(v) அதாவது, ஒரு பொருளில் உள்ள அனைத்து எலக்ட்ரான்களும் இரட்டைகளாகக் காணப்பட்டால் அப்பொருள் டையா காந்தப் பண்பினைப் பெற்றுள்ளது எனவும் இதனைக் குறிப்பிடலாம்.
(vi) இத்தகைய பொருட்களை புற காந்தப் புலத்தில் வைக்கும் போது அவைகள் காந்தப் புலத்தால் விலக்கப்படுகின்றன. மேலும் அப்பொருளில் ஒரு காந்தத் தூண்டல் உருவாகிறது.
(vii) உருவாகும் காந்தத் தூண்டலானது, செயல்படுத்தப்படும் காந்தப்புலத்திற்கு எதிரான திசையில் ஒரு வலிமைக் குறைந்த காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது. பாரா காந்தப் பொருட்கள் இணையாகாத எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளன.
(viii) இவைகள் ஒன்றிடமிருந்து ஒன்று தனித்திருக்குமாறு காந்த இருமுனைகளைக் கொண்டுள்ளன.
(ix) புற காந்தப் புலம் செயல்படாத நிலையில் காந்த இரு முனைகள் ஒழுங்கின்றி அங்கும் இங்கும் அமைந்துள்ளன. எனவே இத்தகைய திடப் பொருட்கள் நிகர காந்தத் தன்மையைப் பெற்றிருப்பதில்லை.
(x) ஆனால் காந்தப் புலம் செயல்படுத்தும் போது காந்த இரு முனைகள் புற காந்தப் புலத்தின் திசையில் அவற்றிற்கு இணையாக ஒருங்கமைக்கின்றன. எனவே இவைகள் புற காந்தப் புலத்தினால் ஈர்க்கப்படுகின்றன.
(xi) ஃபெர்ரோ காந்தப் பொருட்கள் சிறிய பெருங்கூறு அமைப்புகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு பெருங்கூறு அமைப்பிலும் காந்த இருமுனைகள் ஒருங்கே அமைந்துள்ளன .
(xii) ஆனால் இது அடுத்தடுத்த பெருங்கூறுகளின் இருமுனை சுழற்சியானது ஒழுங்கின்றி அமைந்துள்ளது.
(xiii) இணையாகாத d எலக்ட்ரான்களைப் பெற்றுள்ள சில இடைநிலைத் தனிமங்கள் அல்லது அவைகளின் அயனிகள் ஃபெர்ரோ காந்தத் தன்மையை பெற்றுள்ளன.
(xiv) பெரும்பாலான நேர்வுகளில், பாரா காந்த தன்மையுடைய 3d இடைநிலை உலோகங்களின் காந்த திருப்புத்திறனானது அவைகளின் எலக்ட்ரான் சுழற்சியினால் உருவாகும் காந்த திருப்புத் திறனை மட்டுமே பொறுத்து அமைவதாக உள்ளது.
(xv) ஆர்பிட்டால் திருப்புத் திறன் (L) ஆனது அதனினுள் அடங்கியிருப்பதாக கருதப்படுகிறது. எனவே காந்தத் திருப்புத் திறனை பின்வருமாறு கணக்கிடலாம்.
\(\mu =g\sqrt { S(S+1) } { \mu }_{ B }\)
(xvi) இங்கு s என்பது இணையாகாத எலக்ட்ரான்களின் தற்சுழற்சி குவாண்டம் எண்களின் கூடுதலைக் குறிப்பிடுகிறது. மேலும், \({ \mu }_{ B }\) என்பது போர் மேக்னடான் ஆகும்.
(xvii) 'n' - தனித்த இணையாகாத எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள ஒரு அயனிக்கு \(S=\frac { n }{ 2 } \) மேலும் ஒரு எலக்ட்ரானுக்கு g = 2.
(xviii) எனவே, தற்சுழற்சியை மட்டுமே பொருத்தமையும் காந்த திருப்புத் திறனானது பின்வருமாறு
\(\mu =2\sqrt { \left( \frac { n }{ 2 } \right) \left( \frac { n }{ 2 } +1 \right) } { \mu }_{ B }\)
\(\mu =2\sqrt { \left( \frac { n(n+2) }{ 4 } +1 \right) } { \mu }_{ B }\)
\(\mu =\sqrt { n(n+2) } { \mu }_{ B }\)
(xix) மேற்கண்டுள்ள வாய்ப்பாட்டினைப் பயன்படுத்தி கணக்கிடப்பட்ட காந்தத் திருப்புத்திறன் மதிப்புகள் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்ட மதிப்புகளோடு ஒப்பிட்டு பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. பெரும்பாலான நேர்வுகளில் அவர்களுக்கிடையே பெரிய வேறுபாடுகள் ஏதுமில்லை.
41.

42.
வினைவேக மாற்றிகள், குறைந்த கிளர்வு ஆற்றலைக் கொண்ட புதிய பாதையை உருவாக்குகின்றன.
ஒரு படித்தான வினைவேக மாற்ற வினைகளில் ஒரு வினைவேகமாற்றியானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வினைபடு பொருட்களுடன் இணைந்து ஒரு இடைநிலை சேர்மத்தை உருவாக்குகிறது.
இந்த இடைநிலைச் சேர்மமானது, மற்றொரு வினைபடுபொருளுடன் வினைப்பட்டோ அல்லது தாமாக சிதைந்தோ வினைபொருட்களை உருவாக்குகின்றன.
மேலும் வினைவேகமாற்றியானது மீள் உருவாக்கம் பெறுகிறது.
\(\begin{aligned} \mathrm{A}+\mathrm{B} \xrightarrow{\mathrm{C}} \mathrm{AB} \end{aligned}\) ....(1)
A + C \(\rightarrow\) AC (இடைநிலை சேர்மம்) ....(2)
C என்பது வினைவேக மாற்றி
AC + B \(\rightarrow\) AB + C ....(3)
(2) மற்றும் (3) ஆம் வினைகளுக்கான கிளர்வுறு ஆற்றல்கள், வினை (1) ஐவிட குறைவாக உள்ளன. எனவே, இடைநிலைச் சேர்மம் உருவாதல் மற்றும் சிதைதல் மூலம் வினையின் வேகம் அதிகரிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு 1:
ஃபிரீடல் கிராஃப்ட் வினையின் வினைவழிமுறை.
நீரற்ற AlCl3
\(\mathrm{C}_6 \mathrm{H}_6+\mathrm{CH}_3 \mathrm{Cl} \xrightarrow{} \mathrm{C}_6 \mathrm{H}_5 \mathrm{CH}_3+\mathrm{HCl}\)
வினைவேக மாற்றியின் செயல்பாடு
\(\mathrm{CH}_3 \mathrm{Cl}+\mathrm{AlCl}_3 \rightarrow\left[\mathrm{CH}_3\right]^{+}\left[\mathrm{AlCl}_4\right]^{-}\)
(இடைநிலை)
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
\(\mathrm{C}_6 \mathrm{H}_6+\left[\mathrm{CH}_3^{+}\right]\left[\mathrm{AlCl}_4\right]^{-} \rightarrow \mathrm{C}_6 \mathrm{H}_5 \mathrm{CH}_3+\mathrm{AlCl}_3+\mathrm{HCl}\)
எடுத்துக்காட்டு 2:
\(2 \mathrm{KClO}_3 \xrightarrow{\mathrm{MnO}_2} 2 \mathrm{KCl}+3 \mathrm{O}_2\)
MnO2 முன்னிலையில் KCIO3 யின் வெப்பச்சிதைவு வினை பின்வருமாறு நிகழ்கிறது.
2KClO3 → 2KCl + 3O2, வினையில் நிகழும் படிகளை பின்வருமாறு எழுதலாம்.
\(2 \mathrm{KClO}_3+6 \mathrm{MnO}_2 \rightarrow 6 \mathrm{MnO}_3+2 \mathrm{KCl}\)
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
\(6 \mathrm{MnO}_3 \rightarrow 6 \mathrm{MnO}_2+3 \mathrm{O}_2\)
எடுத்துக்காட்டு 3:
\(2 \mathrm{H}_2+\mathrm{O}_2 \xrightarrow{\mathrm{Cu}} 2 \mathrm{H}_2 \mathrm{O}\)
Cu முன்னிலையில் H2, மற்றும் O2, ஆகியன வினைபுரிவதால் நீர் உருவாகும் வினையை பின்வருமாறு எழுதலாம்.
\(2 \mathrm{Cu}+\frac{1}{2} \mathrm{O}_2 \rightarrow \mathrm{Cu}_2 \mathrm{O}\)
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
\(\mathrm{Cu}_2 \mathrm{O}+\mathrm{H}_2 \rightarrow \mathrm{H}_2 \mathrm{O}+2 \mathrm{Cu}\)
சிறப்புகள்:
வினைவேக மாற்றியின் தேர்ந்து செயலாற்றும் தன்மை
வினைவேகமாற்றியின் செறிவு அதிகரிப்பை பொறுத்து வினையின் வேகம் அதிகரித்தல். ஆகியவற்றை இக்கொள்கை விளக்குகிறது.
வரம்புகள்:
வினைவேகமாற்ற நச்சு மற்றும் உயர்த்திகளின் செயல்பாடுகளை இடைநிலைச் சேர்மக் கொள்கையால் விளக்க இயலவில்லை.
பலபடித்தான வினைவேகமாற்ற வினைகளின் வினைவழிமுறையை இக்கொள்கையால் விளக்க இயலவில்லை.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards