12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/03/2021
12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Public Exam Model Question Paper with Answer key - 2021
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
.jpg)
என்ற வினையானது எதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
உர்ட்ஸ் வினை
வளையமாதல் வினை
வில்லியம்சன் தொகுப்பு முறை
கோல்ப் வினை
2.
தூக்கத்தை தூண்டும் மருந்துப் பொருளாக பயன்படுவது ___________
பாராசிட்டமால்
பைதியோனால்
குளோரோகுயின்
ஈக்வனில்
3.
4.
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று உடலில் தயாரிக்கப்படாதது?
DNA
நொதிகள்
ஹார்மோன்கள்
வைட்டமின்கள்
5.
25oC வெப்பநிலையில் 1MY– மற்றும் 1MZ- ஆகியவற்றை கொண்டுள்ள கரைசலின் வழியே 1 atm அழுத்தத்தில் X எனும் வாயு குமிழிகளாக செலுத்தப்படுகிறது. அவற்றின் ஒடுக்க மின்னழுத்தங்கள் Z>Y>X எனில்,____________
Y ஆனது X ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யும் ஆனால் Z ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யாது
Y ஆனது Z ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யும் ஆனால் X ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யாது
Y ஆனது X மற்றும் Z இரண்டையும் ஆக்ஸிஜனேற்றம் செய்யும்
Y ஆனது X மற்றும் Z இரண்டையும் ஒடுக்குமடையச் செய்யும்
6.
என்ற சேர்மத்தின் IUPAC பெயர் _______.
3 – டைமெத்தில் அமினோ – 3 – மெத்தில் பென்டேன்
3 (N,N – ட்ரை எத்தில்) – 3- அமினோ பென்டேன்
3 – N,N – ட்ரை மெத்தில் பென்டமீன்
N,N - டைமெத்தில் -3- மெத்தில் - பென்டன் -3- அமின்
7.
சம கனஅளவுள்ள 0.1M NaOH மற்றும் 0.01M HCl கரைசல்களை ஒன்றாக கலக்கும் போது கிடைக்கும் கரைசலின் pH மதிப்பு என்ன?
2.0
3
7.0
12.65
8.
பின்வரும் வினைகளில் எதில் புதிய கார்பன் – கார்பன் பிணைப்பு உருவாகவில்லை ?
ஆல்டால் குறுக்கம்
பிரீடல் கிராஃப்ட் வினை
கோல்ப் வினை
உல்ஃப் கிஷ்னர் வினை
9.
KMnO4 எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
குரோமைட் இரும்பு தாது
பைரோலுசைட்
பெரஸ் சல்பைடு
இரும்பு பைரைட்
10.
பிஷ்ஷர் ட்ரோப்ஷ் தொகுப்பு எதனை தயாரிக்கப் பயன்படுகிறது?
சிலிகோன்கள்
போரேன்கள்
ஹைட்ரோகார்பன்கள்
கார்போனில்கள்
11.
வேதி வினையில் வினைவேக மாற்றி பங்கேற்றால், வினையின் இறுதியில் அது ______________
சிதைவடைகிறது
மீளவும் பெறப்படுகிறது
வேதி மாற்றமடைகிறது
புதிய பொருளாக மாறுகிறது
12.
எளிய கனசதுர அமைப்பில் மொத்த கனஅளவில் அணுக்களால் அடைத்துக் கொள்ளப்படும் கனஅளவின் விகிதம் ___________
\(\left( \frac { \pi }{ 4\sqrt { 2 } } \right) \)
\(\left( \frac { \pi }{ 6 } \right) \)
\(\left( \frac { \pi }{ 4 } \right) \)
\(\left( \frac { \pi }{ 3\sqrt { 2 } } \right) \)
13.
பின்வருவனவற்றுள் இனான்சியோமர் இணைகளை தர வல்லது எது?
[Cr(NH3)6][Co(CN)6]
[Co(en)2Cl2]Cl
[pt(NH3)4][ptcl4]
[Co(NH3)4Cl2]NO2
14.
பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை?
நெஸ்லர் காரணி
IVம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு
IIIம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு
டாலன்ஸ் வினைப்பொருள்
15.
ஒடுக்க வினைக்கு உட்படுத்தும் முன்னர், சல்பைடு தாதுக்களை வறுத்தலில் ஏற்படும் நன்மையினைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
CS2 மற்றும் H2S ஆகியவற்றைக் காட்டிலும் சல்பைடின் \(\Delta \)Gf0 மதிப்பு அதிகம்
சல்பைடை வறுத்து ஆக்ஸைடாக மாற்றும் வினைக்கு \(\Delta \)Gr0 மதிப்பு எதிர்க்குறியுடையது.
சல்பைடை அதன் ஆக்ஸைடாக வறுத்தல் என்பது ஒரு சாதகமான வெப்ப இயக்கவியல் செயல்முறையாகும்.
உலோக சல்பைடுகளுக்கு, கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியன தகுந்த பொருத்தமான ஒடுக்கும் காரணிகளாகும்.
16.
ஃபீனைல் கீட்டோன்களைத் தயாரித்தல்?
17.
இருமோல் எத்தில் மெக்னீசியம் புரோமைடுடன் மெத்தில் பென்சோயேட்டை வினைப்படுத்தி பின் அமில நீராற்பகுக்க உருவாகும் முதன்மை விளைபொருள் யாது?
18.
கருத்தடை மருந்துகள் என்றால் என்ன ? எடுத்துக்காட்டுகள் தருக.
19.
சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் தயாரிக்க பயன்படும் இனிப்புச் சுவையூட்டி எது?
20.
டைஎத்திலமீனை பின்வரும் சேர்மங்களாக எவ்வாறு மாற்றுவாய்?
i) N, N – டை எத்தில் அசிட்டமைடு
ii) N – நைட்ரசோடை எத்திலமீன்
21.
HClO4 மூலக்கூறின் அமிலத்தன்மைக்கான காரணம் கூறு. ப்ரான்ஸ்டட் – லெளரி கொள்கையின் அடிப்படையில், அதன் இணை காரத்தை கண்டறிக.
22.
முனைவுற்ற மூலக்கூறு படிகங்கள் என்றால் என்ன?
23.
பாஸ்பீனின் ஒடுக்கும் பண்பு பற்றி எழுதுக
24.
அணைவுப் பன்முகி என்றால் என்ன?
25.
அயனிப்படிகங்கள் ஏன் கடினமாகவும், உடையும் தன்மையினையும் பெற்றுள்ளன?
26.
ஆக்டினாய்டுகள் என்றால் என்ன? மூன்று உதாரணங்கள் தருக.
27.
பாஸ்பைனின் வேதிப் பண்புகளை விளக்கும் இரு சமன்பாடுகளைத் தருக.
28.
பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.
அ. B (OH)3 + NH3 \(\longrightarrow\)
ஆ. Na2B4O7 + H2SO4H2O\(\longrightarrow\)
இ. B2H6 + 2NaOH + 2H2O\(\longrightarrow\)
ஈ. B2H6 + CH3OH\(\longrightarrow\)
உ. BF3 + 9 H2O\(\longrightarrow\)
ஊ. HCOOH + H2SO4\(\longrightarrow\)
எ. SiCl4 + NH3\(\longrightarrow\)
ஏ. SiCl4 + C2H5OH\(\longrightarrow\)
ஐ. B + NaOH\(\longrightarrow\)
ஒ. H2B4O7
29.
கரி மற்றும் CO ஆகிய இரண்டினுள் ZnO வை ஒடுக்க, சிறந்த ஒடுக்கும் காரணி எது? ஏன்?
30.
VBT கொள்கையைப் பயன்படுத்தி \(\left[ CoCl_{ 4 } \right] ^{ 2- }\)அயனியில் காணப்படும் தனித்த இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கையினைத் தீர்மானிக்கவும்.
31.
இடைநிலைத் தனிமங்கள் என்பவை யாவை ? இடைநிலைத் தனிமங்களின் பண்புகள் இரண்டினைக் குறிப்பிடுக.
32.
பின்வருவனவற்றை அவற்றின் கொதிநிலை மதிப்பின் அடிப்படையில் ஏறுவரிசையில் எழுதுக. மேலும் தாங்கள் வரிசைப்படுத்தியமைக்கு உரிய காரணம் தருக.
i. பியூட்டன் -2-ஆல், பியூட்டன் -1- ஆல், 2 – மெத்தில் புரப்பன்-2-ஆல்
ii. புரப்பன் -1 -ஆல், புரப்பன் – 1,2,3 – டைஆல், புரப்பன் – 1,3 – டை ஆல், புரப்பன் -2-ஆல்.
33.
ஒரு திரிதல் சோதனையில் , (X) எனும் கூழ்மத்தின் 10 mL கரைசலானது வடிகட்டிய நீர் , மற்றும் 0.1M செறிவுடைய AB எனும் மின்பகுளிக் கரைசல் ஆகியவற்றை சேர்த்து அதன் கனஅளவு 20 mL ஆக்கப்படுகிறது. 6.6 mL AB கரைசலைக் கொண்டுள்ள அனைத்து கரைசல்களும் 5 நிமிடங்களுக்குள் வீழ்படிவாக்கப்பட்டன என கண்டறியப்பட்டுள்ளது.கூழ்மம் (X) க்கு AB யின் துகள்திரட்டு மதிப்பு என்ன?
34.
வைட்டமின்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
35.
கால்வானிக் மின்கலத்தில் நேர்மின்முனையானது எதிர்குறி கொண்டதாகவும் எதிர்மின்முனையானது நேர்குறி கொண்டதாகவும் கருதப்படுகிறது ஏன்?
36.
ஒரு வேதிவினையின் வேகத்தை வினைவேக மாற்றி எவ்வாறு பாதிக்கின்றது என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
37.
இரண்டாம் வரிசை கார உலோகம் (A) ஆனது (B) என்ற போரானின் சேர்மத்துடன் வினை புரிந்து (C) என்ற ஒடுக்கும் காரணியினைத் தருகிறது. A, B மற்றும் C ஐக் கண்டறிக.
38.
பின்வருவனவற்றை பற்றி எழுது.
(i) லாந்தனாய்டுகளின் எலக்ட்ரான் அமைப்பு
(ii) ஆக்டினாய்டுகளின் எலக்ட்ரான் அமைப்பு
39.
பின்வரும் வினைகளை நிறைவு செய்க.




40.
வினைவேக மாற்றம் பற்றிய பரப்பு கவர்தல் கொள்கையை விவரி. [அல்லது ]
பலபடித்தான வினைவேகமாற்று வினையில் பரப்பு கவர்தலின் பங்கு என்ன?
41.
எளிய கனசதுர அமைப்பின் பொதிவு பின்னத்தை கணக்கிடுக.
42.
ஒரு வினையின் வினைவேக மாறிலி k ஆனது வெப்பநிலையினைப் பொருத்து பின்வருமாறு அர்ஹீனியஸ் சமன்பாட்டின் படி மாற்றமடைகிறது.
\(log\quad K=log\quad A-\frac { { E }_{ a } }{ 2.303R } \left( \frac { 1 }{ T } \right) \)
இங்கு Ea என்பது கிளர்வு ஆற்றல் log K Vs \(\frac{1}{T}\) வரைபடம் வரையும் போது -4000K சாய்வு உடைய நேர்கோடு பெறப்படுகிறது. கிளர்வு ஆற்றலைக் கணக்கிடுக.
43.
அணைவுச் சேர்மங்களில் காணப்படும் ஒளி சுழற்சி மாற்றியங்களை விளக்குக.
1.
(c)
வில்லியம்சன் தொகுப்பு முறை
2.
(d)
ஈக்வனில்
3.
(b)
4.
(d)
வைட்டமின்கள்
5.
Y ஆனது X ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யும் ஆனால் Z ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யாது.
Z ஆனது மிகவும் வலிமையான ஆக்ஸிஜனேற்றியாகும். (உயர்த்த திட்ட ஒடுக்க மின்னழுத்தம்)
X ஆனது மிகவும் வலிமையான ஒடுக்கியாகும். (மிகக் குறைந்த திட்ட ஒடுக்க மின்னழுத்தம்)
6.
(d)
N,N - டைமெத்தில் -3- மெத்தில் - பென்டன் -3- அமின்
7.
x ml 0.1 M NaOH + x ml 0.01 M HCl
NaOH ன் மோல்களின் எண்ணிக்கை
= 0.1 \(\times\) x \(\times\) 10-3 = 0.1 x \(\times\) 10-3 = 0.1x \(\times\) 10-3
HCl ன் மோல்களின் எண்ணிக்கை
= 0.01 \(\times\) x \(\times\) 10-3 = 0.01 x \(\times\) 10-3
கலந்த பின் NaOH ன் மோல்களின்
எண்ணிக்கை = 0.01 \(\times\) x \(\times\) 10-3 - 0.01 x \(\times\) 10-3
=0.09x \(\times\) 10-3
NaOH ன் தெறிவு \(=\frac{0.09 x \times 10^{-3}}{2 x \times 10^{-3}}=0.045\)
[OH-] = 0.045
pOH = -log (4.5 \(\times\) 10-2)
= 2 - log 4.5
= 2 - 0.65 = 1.35
pH = 14 - 1.35 = 12.65
8.
(d)
உல்ஃப் கிஷ்னர் வினை
9.
(b)
பைரோலுசைட்
10.
(c)
ஹைட்ரோகார்பன்கள்
11.
(b)
மீளவும் பெறப்படுகிறது
12.
கன அளவு விகிதம்
\(=\frac{\frac{4}{3} \pi r^3}{a^3}=\frac{\frac{4}{3} \pi\left(\frac{a}{2}\right)^3}{a^3}=\pi / 6\)
13.

(அ), (இ) மற்றும் (ஈ) ஆகிய வாய்ப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளவை சீர்மைக் கூறுகளை உடையவை. எனவே, அவைகள் ஒளிசுழற்றும் தன்மையற்றவை.
14.
(a)
நெஸ்லர் காரணி
15.
(d)
உலோக சல்பைடுகளுக்கு, கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியன தகுந்த பொருத்தமான ஒடுக்கும் காரணிகளாகும்.
16.

17.

18.
கருத்தடை மருந்துகள் எனப்படுபவை தொகுப்பு ஹார்மோன்கள் ஆகும். இவை அண்டவிடுவிப்பு மற்றும் கருவுறுதலை தடுக்கின்றன. இவை குழந்தை பிறத்தலை தடை செய்யும் மருந்துகளாக பயன்படுத்தப்படுகின்றன.
எ.கா: எத்தினைல் ஈஸ்ட்ராடையால் மென்ஸ்ட்ரனால், நாரீதின்ட்ரோன், நாரித்ரோனெல் etc..
19.
சுக்ரலோஸ் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரைப் பதிலீடுகளான சார்பிட்டால், சைலிட்டால் மற்றும் மேனிட்டால் ஆகியன இனிப்புச் சுவையுடையன. அவை இன்சுலின் அல்லாமல் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுகின்றன. செயற்கை இனிப்புச் சுவையூட்டிகளான அஸ்பார்டேம், அலிட்டேம் மற்றும் சாக்கரின் போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன. இவை புறக்கணிக்கத்தக்க ஊட்டசத்து மதிப்புடையவை.
20.
ii. N - நைட்ரசோ டை எத்திலமீன்:
லிபர்மேன் நைட்ரசோ ஆய்வு:
டை எத்திலமீன் நைட்ரஸ் அமிலத்துடன் வினைபுரிந்து N நைட்ரசோ டைஎத்திலமீன் என்ற எண்ணெய் போன்ற ஒரு மஞ்சள் நிற நீர்மத்தை தருகிறது. இது நீரில் கரைவதில்லை.
21.
\(\mathrm{HClO}_4 \rightleftharpoons \mathrm{H}^{+}+\mathrm{ClO}_4^{-}\)
ப்ரான்ஸ்டட் அமிலம் புரோட்டான் இணைகாரம் HCIO4 ஆனது ஒரு புரோட்டானை வழங்கவல்லது. எனவே HCIO4 ஓர் அமிலம். அதன் இணைகாரம் CIO4-ஆகும்.
22.
1. மூலக்கூறு படிகங்களில் உட்கூறுகளாக உள்ள மூலக்கூறுகள் முனைவுற்ற சகப்பிணைப்புகளாக ஒன்றொடொன்று பிணைத்து வைக்கப்பட்டால் அவை முனைவுற்ற மூலக்கூறு படிகங்கள் எனப்படும்.
2. இவை ஒப்பீட்டு அளவில் வலிமையான இருமுனை -இருமுனை இடை விசைகளால் ஒன்றொடொன்று பிணைக்கப்பட்டுள்ளன.
3. முனைவற்ற மூலக்கூறு படிகங்களைக் காட்டிலும் இவற்றின் உருகுநிலை அதிகம்.
4. (எ.கா) பனிக்கட்டி, குளுக்கோஸ், யூரியா
23.
பாஸ்பீன் சில்வர் நைட்ரேட்டை உலோக சில்வராக ஒடுக்குகிறது.
PH3 + 6AgNO3 + 3H2O ⟶ 6Ag + 6HNO3 + H3PO3
24.
மைய உலோக அயனியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள ஈனிகள் முப்பரிமாண வெளியில் குறித்த திசைகளில் அமைவதால் ஏற்படுவது அணைவுப் பன்முகி எனப்படுகிறது.
(எ.கா) K4 [Fe(CN)6] ல் அணைவுப்பன்முகியானது ஒரு எண்முகி ஆகும்.
25.
இப்படிகங்களில் அடிப்படை அமைப்பு அலகுகளாக நேர் அயனிகள் மற்றும் எதிர் அயனிகள் காணப்படுகின்றன. இவைகள் வலிமையான நிலைமின்னியல் கவர்ச்சி விசையால் ஒன்றோடொன்று இறுக்கமாகப் பிணைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமின்னியல் கவர்ச்சி விசையானது பெருமமாக அமையும் வகையில் நேர் அயனியைச் சுற்றிலும் அதிகபட்சமாக எத்தனை எதிர் அயனிகள் இருக்க வாய்ப்புள்ளதோ அந்த அளவிற்கு அயனிகள் காணப்படுகின்றன. இதன் மறுதலையும் உண்மை.
எனவே அயனிப்படிகங்கள் கடினமாகவும், உடையும் தன்மை உடையதாகவும் உள்ளன.
26.
ஆக்டினியத்தினைத் தொடர்ந்து வரும் 14 தனிமங்கள். அதாவது தோரியம் (Th) முதல் லாரன்சீயம் (GoLr) வரையிலான தனிமங்கள் ஆக்டினாய்டுகள் என அழைக்கப்படுகின்றன.
உதாரணம்: ஆக்டினியம், யூரேனியம், லாரன்சியம்.
27.
வெப்பநிலைப்புத்தன்மை: 4PH3 \(\underrightarrow { 317k} \) P4 + 6H2
எரித்தல் வினை:
4PH3 + 8O2 \(\underrightarrow { \Delta } \) P4O10 + 6H2O
P4O10 + 6H2O \(\underrightarrow { \Delta } \)4HPO3 + 4H2O
மெட்டா பாஸ்பாரிக் அமிலம்
28.

ஊ) HCOOH + H2SO4 ⟶ CO + H2O + H2SO4
29.
1. கரி மற்றும் CO ஆகிய இரண்டினுள் ZnO வை ஒடுக்க சிறந்த ஒடுக்கும் காரணி கரி (கார்பன்) ஆகும்.
2. ஒடுக்க வெப்பநிலையில் ஜிங்க், கார்பனுடன் சேர்ந்து உலோக கார்பைடினை உருவாக்காது. எனவே கார்பன் ஒடுக்கும் காரணியாக பயன்படுகிறது.
ZnO(S) + C ➝ Zn(S) + CO(g) ↑
3. எலிங்கம் வரைபடத்தில், ஜிங்க் ஆக்சைடு உருவாதலுக்கான வரைகோடு கார்பனுக்கு மேல் இடம் பெற்றுள்ளது. எனவே CO ஆனது ZnO ஐ விட அதிக நிலைப்புத் தன்மை உடையது. எனவே ZnO வை ஒடுக்கமடையச் செய்வதற்கு கார்பனை ஒடுக்கும் காரணியாக பயன்படுத்த இயலும். ஒடுக்க வினையின்போது ZnO விலிருந்து ஆக்ஸிஜன் ஒடுக்கும் காரணி கார்பனுடன் இணைந்து CO வை உருவாக்குகிறது.
30.
மைய உலோக அணு மற்றும் வெளிக்கோட்டு e - அமைப்பு : Co 2+: 3d74s2
31.
(i) நடுநிலை மற்றும் அயனி உலோகத் தனிமங்கள் பகுதியளவு நிரம்பிய d மற்றும் f உட்கூடுகளைக் கொண்டிருப்பவை அவை இடைநிலைத் தனிமங்களாகும்.
பண்புகள் : கடினமானவை அதிக உருகுநிலையை உடையவை
32.
i) 2 – மெத்தில் புரப்பன் -2- ஆல் < பியூட்டன் -2- ஆல் < பியூட்டன் -1- ஆல்

ii) புரப்பன் -2- ஆல் < புரப்பன் -1- ஆல், < புரப்பன் -1,3- டையால் <புரப்பன் -1,2,3- டையால்
33.
(i) கூழ்மத்தின் வீழ்படிவாக்க தேவையான மிகக் குறைந்த AB அளவு 6.6 mL அதன் AB ன் மோல்களின் எண்ணிக்கை.
=\(\frac { 6.6*0.1 }{ 20 } \)
= 0.033 மோல்கள்
(ii) 0.0033 மோல்கள் அதாவது 3.3 மிலி மோல்கள் 1L கூழ்மத்தை வீழ்படிவாக்க தேவைப்படுகிறது.
(iii) AB துகள்திரட்டு மதிப்பு x =3.3
34.
நீர் அல்லது கொழுப்பில் கரையும் தன்மையின் அடிப்படையில் வைட்டமின்கள் வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இரண்டு
அ) கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்:
இந்த வைட்டமின்கள், கொழுப்பு உணவுடன் எடுத்துக்கொள்ளும்போது சிறப்பாக உறிஞ்சப்பட்டு கொழுப்பு திசுக்கள் மற்றும் கல்லீரலில் சேமிக்கப்படுகின்றன. இந்த வைட்டமின்கள் நீரில் கரைவதில்லை, எனவே இவை கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் என்றழைக்கப்படுகின்றன. வைட்டமின் A,D,E & K ஆகியன கொழுப்பில் கரையும் வைட்டமின்களாகும்.
ஆ) நீரில் கரையும் வைட்டமின்கள்:
வைட்டமின்கள் B(B1, B2, B3, B5, B6, B7, B9 & B₁₂) மற்றும் C ஆகியன நீரில் எளிதாக கரைகின்றன. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் போலல்லாமல் இவற்றை சேமிக்க இயலாது. அதிகப்படியாக உள்ள வைட்டமின்கள் உடலில் சேமிக்கப்படாமல் சிறுநீரின் வழியாக வெளியேற்றப்படுகின்றன. எனவே, இவ்வகை வைட்டமின்கள் தொடர்ந்து உணவின் வழியாக நம் உடலுக்குள் செலுத்தப்பட வேண்டும்.
35.
நேர்மின்வாய் ஆக்ஸிஜனேற்றம்:
கால்வானிக் மின்கலத்தில் நேர்மின்முனை உலோகம், உலோக அயனிகளாகவும், எலக்ட்ரான்களாகவும் ஆக்ஸிஜனேற்றமடைகின்றன.
உலோக அயனிகள் கரைசலுக்குள் நுழைகின்றன. மேலும், எலக்ட்ரான்கள் நேர்மின்முனை வழியே வெளிச்சுற்றிற்கு பாய்கின்றன.
ஜிங்க் மின்முனையில் எலக்ட்ரான்கள் விடுவிக்கப்படுவதால், எதிர்குறியை (-ve) பெறுகிறது.
Zn(s) → Zn2+(aq) + 2e-
(எலக்ட்ரான் இழப்பு - ஆக்ஸிஜனேற்றம்)
எதிர்மின்வாய் ஒடுக்கம்:
எலக்ட்ரான்கள் மின்சுற்று வழியே ஜிங்க் பட்டையிலிருந்து காப்பர் பட்டைக்கு பாய்கின்றன.
கரைசலிலுள்ள Cu2+ அயனிகள் எலக்ட்ரான்களை ஏற்றுக்கொண்டு காப்பர் உலோகமாக ஒடுக்கமடைகின்றன.
காப்பர் மின்முனை எலக்ட்ரான்களை உட்கொள்ளப்படுவதால் நேர்க்குறியை (+ve) பெறுகிறது.
\(C u^{2+}{ }_{(a q)}+2 e^{-} \rightarrow C u_{(s)}\)
(எலக்ட்ரான் ஏற்பு - ஒடுக்கம்)
36.

1. ஒரு பொருள் எந்த ஒரு நிரந்தரமான வேதி மாற்றத்திற்கும் உட்படாமல் வினையின் வேகத்தினை மட்டும் மாற்றி அமைக்குமானால் அது வினைவேக மாற்றி எனப்படும்.
2. வினைவேக மாற்றிகள் வேதி வினைகளில் பங்கேற்றால், வினையின் இறுதியில் மீளவும் பெறப்படுகின்றன.
3. வினைவேக மாற்றி வினையின் கிளர்வு ஆற்றலைக் குறைக்கிறது. எனவே, ஆற்றல் தடையினை கடந்து சென்று விளைபொருளாக மாறும் வினைபடு மூலக்கூறுகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. இதனால் வினைவேகமும் அதிகரிக்கின்றன.
செயல்பாடு:
1. இரு சோதனைக் குழாய்களை எடுத்துக் கொண்டு A மற்றும் B எனப் பெயரிடுக. 7 ml 0.1 N ஆக்சாலிக் அமிலக் கரைசல் 5 ml 0.1-N KMnO4 5 ml 2N நீர்த்த H₂SO4 கரைசல் ஆகியனவற்றை இரு சோதனைக் குழாய்களிலும் எடுத்துக் கொள்ளவும்.
2. இரு சோதனைக் குழாய்களிலும் உள்ள கரைசல்கள் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்கும்.
3. சிறிதளவு மாங்கனீஸ் சல்பேட் படிகங்களை A சோதனைக் குழாயிலிடவும். இளஞ்சிவப்பு நிறமானது மறையத் துவங்கி இறுதியில் முழுவதும் மறைகிறது.
4. ஏனெனில் இந்நிகழ்வில் MnSO4 வினைவேக மாற்றியாக செயல்பட்டு MnO4 ஆல் \(\mathrm{C}_2 \mathrm{O}_4^{-2}\) ன் ஆக்சிஜனேற்றமடையும் வினையின் வேகத்தினை அதிகரிக்கிறது.
5. எனவே இளஞ்சிவப்பு நிறம் மறைகிறது.
6. சோதனைக் குழாய் B யில் இது நிகழவில்லை
37.
(i) இரண்டாம் வரிசை கார உலோகத்தின் ஹைட்ரைடு (A) என்பது LiH ஆகும். போரானின் சேர்மம் (B) ஆனது B2H6
(ii) (A) லித்தியம் ஹைட்ரைடு, போரானின் சேர்மம் டைபோரேனுடன் (B) வினைபுரிந்து ஒடுக்கும் காரணி லித்தியம் போரா ஹைட்ரைதைத் தருகிறது.
எனவே சேர்மம் (B) ஆனது டைபோரேன் மற்றும் சேர்மம் (C) ஆனது லித்தியம் போரோ ஹைட்ரைடு ஆகும்.
\(\underset { (B) }{ { B }_{ 2 }{ H }_{ 6 } } \) + 2LiH \(\underrightarrow { Ether } \underset { (C) }{ { 2LiBH }_{ 4 } } \)
| சேர்மம் | வாய்ப்பாடு | பெயர் |
| A | LiH | லித்தியம் ஹைட்ரைடு |
| B | B2H6 | டைபோரேன் |
| C | LiBH4 | லித்தியம் போரோ ஹைட்ரைடு |
38.
லாந்தனாய்டுகளின் எலக்ட்ரான் அமைப்பு :
(i)ஆஃப்பா தத்துவத்தின்படி எலக்ட்ரான்கள் வெவ்வேறு ஆர்பிட்டால்களில் நிரப்பப்படும்போது,அவைகளின் ஆற்றலின் ஏறுவரிசையில் நிரப்பப்படுகின்றன என நாம் அறிவோம்.
(ii) இவ்விதியின் படி 5s ,5p மற்றும் 6s ஆகிய ஆர்பிட்டால்கள் நிரப்பப்பட்ட பின் லாந்தனத்திலிருந்து 4f ஆர்பிட்டாலில் எலக்ட்ரான் நிரப்பப்படுவதால் தொடங்க வேண்டும்.
(iii) இதுவே லாந்தனத்தின் எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரான் அமைப்பு \(\left[ Xe \right] 4f^{ 1 }{ 5d }^{ 0 }6{ s }^{ 2 }\) ஆனால் லாந்தனத்தின் உண்மையான எலக்ட்ரான் அமைப்பு \(\left[ Xe \right] 4f^{ 0 }{ 5d }^{ 1 }6{ s }^{ 2 }\) எனவே, இது d தொகுதி தனிமத்தைச் சார்ந்தது.
(iv) 4f ஆர்பிட்டால் நிரப்பப்படுதல் சீரியத்தில் (Ce) துவங்குகிறது.
(v) இதன் எலக்ட்ரான் அமைப்பு \(\left[ Xe \right] 4f^{ 1 }{ 5d }^{ 1 }6{ s }^{ 2 }\) சீரியத்திலிருந்து மற்ற தனிமங்களை நோக்கிச் செல்லும் போது கூடுதல் எலக்ட்ரான்கள் 4f ஆர்பிட்டால்களில் தொடர்ச்சியாகச் சேர்கின்றன. இதனை பின்வரும் அட்டவணையிலிருந்து அறியலாம்.
ஆக்டினாய்டுகளின் எலக்ட்ரான் அமைப்பு
(i) ஆக்டினாய்டுகள் வரையறுக்கப்பட்ட எலக்ட்ரான் அமைப்பினைப் பெற்றிருப்பதில்லை.
(ii) இவற்றின் (5f தொகுதித் தனிமங்களின்) பொதுவாக இணைதிறக்கூட்டு எலக்ட்ரான் அமைப்பினை [Rn ]\(5f^{ 2-14 }{ 6d }^{ 0-2 }7{ s }^{ 2 }\) எனக் குறிப்பிடலாம். ஆக்டினாய்டு தனிமங்களின் எலக்ட்ரான் அமைப்பு பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
39.
1. 
2.

3.

4.

40.
லாங்மியூர் என்பவர் பலபடித்தான வினைவேகமாற்ற வினையில், வினைவேக மாற்றியின் செயல்பாட்டை, பரப்பு கவர்தலை அடிப்படையாக கொண்டு விளக்கினார். வினைபடு மூலக்கூறுகள் வினைவேக மாற்றியின் புறப்பரப்பில் பரப்பு கவரப்படுவதால், இதை தொடர்பு வினைவேக மாற்றம் எனவும் அழைக்கலாம். இக்கொள்கையின்படி, வினைபடு மூலக்கூறுகள், வினைவேக மாற்றியின் புறப்பரப்பில் பரப்பு கவரப்பட்டு கிளர்வு அணைவை உருவாக்குகின்றன. இவை உடனே சிதைந்து விளைபொருட்களை தருகின்றன.

பலபடித்தான வினைவேகமாற்ற வினையில் நிகழும் பல்வேறு படிநிலைகள்:
1. வினைபடு மூலக்கூறுகள் வினைவேக மாற்றியின் புறப்பரப்பை நோக்கி நகர்கின்றன.
2. வினைபடு மூலக்கூறுகள் வினைவேக மாற்றியின் புறப்பரப்பில் பரப்பு கவரப்படுகின்றன.
3. பரப்புகவரப்பட்ட வினைபடு மூலக்கூறுகள் கிளர்வுற்ற “கிளர்வு அணைவு" உருவாகிறது. மேலும், இந்த கிளர்வு அணைவு சிதைவடைந்து, விளைபொருட்களை உருவாக்குகின்றன.
4. விளைபொருள் மூலக்கூறுகள் பரப்பு நீக்கம் அடைகின்றன.
5. விளைபொருளானது வினைவேகமாற்றியின் புறப்பரப்பை விட்டு விலகிச் செல்கின்றன.
41.
விளிம்பு நீளம் 'a' கொண்ட கனசதுரத்தினைக் கருதுக.
கனசதுரத்தின் கன அளவு = a x a x a = a3.
கோளத்தின் ஆரம் 'r' என்க
படத்திலிருந்து a = 2r; r = \(\frac {a }{2}\)
ஆரம் r கொண்ட கோளத்தின் (அணு) கனஅளவு = \(\frac { 4 }{ 3 } { \pi r }^{ 3 }\)
\(=\frac { 4 }{ 3 } { \left( \frac { a }{ 2 } \right) }^{ 3 }\)
\(=\left( \frac { 4 }{ 3 } \right) \pi { \left( \frac { a }{ 2 } \right) }^{ 3 }\)
\(=\frac { 4 }{ 3 } \pi \frac { { a }^{ 3 } }{ 8 } \)
\(=\frac { { \pi a }^{ 3 } }{ 6 } \)
ஒரு எளிய கனசதுர அலகுக்கூட்டில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை = 1
ஃ எளிய கனசதுர அலகுக்கூட்டில் உள்ள அணுக்களின் மொத்த கனஅளவு \(=1\times \frac { { \pi a }^{ 3 } }{ 6 } \)
பொதிவு பின்னம்
\(=\frac { \frac { { \pi a }^{ 3 } }{ 6 } }{ { a }^{ 3 } } \times 100\)
\(=\frac { 100\pi }{ 6 } =52.31%\)%
அதாவது எளிய கனசதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில் கிடைக்கும் கன அளவில் 52.31% மட்டும் கோலங்களால் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள இடம் காலியாக உள்ளது. இந்த அமைப்பில் வெற்றிடம் அதிகமாக உள்ளதால் அணுக்களுக்கு இடையே வலுவான கவர்ச்சி ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளது.
42.
logK = logA-\(\frac { { E }_{ a } }{ 2.303R } \left( \frac { 1 }{ T } \right) \)
y = c+mx
\(m=-\frac { { E }_{ a } }{ 2.303R } \)
Ea = - 2.303 R m
Ea = - 2.303 x 8.314JK-1 mol-1x (-4000K)
Ea = 76,589J mol-1
Ea = 76.589 KJ mol-1
43.
(i) கரிமச் சேர்மங்களைப் போன்றே, கைரல் தன்மையைப் பெற்றுள்ள அணைவுச் சேர்மங்கள் ஒளி சுழற்சி மாற்றியங்களைப் பெற்றுள்ளன.
(ii) ஒளி சுழற்றும் தன்மையுடைய சேர்மங்கள், பொருள் மற்றும் அதன் ஆடி பிம்பம் என தொடர்புடைய மாற்றிய இணைகளாக இருந்தால் அவை இனான்சியோமெர்கள் எனப்படும்.
(iii) இம்மாற்றியங்களின் கரைசல்களின் வழியே தளமுனைவு கொண்ட ஒளியினைச் செலுத்தும்போது அவை ஒளியின் தளத்தினை வலப்புறமாக அல்லது இடப்புறமாக சுழற்றுகின்றன.
(iv) இதனைப் பொருத்து அவைகள் முறையே d மற்றும் ! மாற்றியங்கள் என அழைக்கப்படுகின்றன. \(\left[\mathrm{M}(\mathrm{xx})^3\right]^{\mathrm{n} \pm},\left[\mathrm{M}(\mathrm{xx})_2 \mathrm{AB}\right]^{\mathrm{n}} \) \(\left[\mathrm{M}(\mathrm{xx})_2 \mathrm{~B}_2\right]^{\mathrm{n} \pm}\) ஆகிய வகை எண்முகி அணைவுகள் ஒளி சுழற்சி மாற்றியப் பண்பினைப் பெற்றுள்ளன.

எடுத்துக்காட்டு:
1. \( {\left[\mathrm{Co}(\mathrm{en})_3\right]^{3+}}
\) ன் ஒளிசுழற்சி மாற்றியங்கள்
2. \( {\left[\mathrm{CoCl}_2(\mathrm{en})_2\right]^{+}}\) என்ற அணைவுச் சேர்மம் மூன்று மாற்றியங்களைக் கொண்டுள்ளன. அவைகளுள் இரு மாற்றியங்கள் ஒளிசுழற்றும் தன்மையுடைய சிஸ் மாற்றியங்கள் ஆகும். மற்றொன்று ஒளி சுழற்றும் தன்மையற்ற டிரான்ஸ் மாற்றியாகும். இவற்றின் வடிவமைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards