12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/03/2021
12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Three mark Important Questions with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
இருமோல் எத்தில் மெக்னீசியம் புரோமைடுடன் மெத்தில் பென்சோயேட்டை வினைப்படுத்தி பின் அமில நீராற்பகுக்க உருவாகும் முதன்மை விளைபொருள் யாது?
2.
3.
NH3 அல்லது CO2 ஆகிய இரண்டில் எது கரியின் புறப்பரப்பில் எளிதில் பரப்புகவரப்படுகிறது? ஏன்?
4.
கார்போஹைட்ரேட்டுகள் பொதுவாக ஒளிசுழற்றும் தன்மையை பெற்றுள்ளன. ஏன்?
5.
பின்வருவனவற்றிற்கு காரணம் கூறு
i. அனிலீன் பிரீடல் கிராப்ட் வினைக்கு உட்படுவதில்லை
ii. அலிபாட்டிக் அமீன்களை விட அரோமேட்டிக் அமீன்களின் டையசோனியம் உப்புகள் அதிக நிலைப்புத் தன்மை கொண்டது.
iii. அனிலீனின் pKb மதிப்பு மெத்திலமீனை விட அதிகம்
iv. காப்ரியல் தாலிமைடு தொகுப்பு வினை ஓரிணைய அமீன்களை தொகுப்பதற்கானது.
v. எத்தில்மீன் நீரில் கரையும் ஆனால் அனிலீன் கரையாது.
vi. அமைடுகளை விட அமீன்கள் அதிக காரத்தன்மை உடையது.
vii. அரோமேட்டிக் எலக்ட்ரான்கவர் பதிலீட்டு வினைகளில் அமினோ தொகுதி o – மற்றும் p – வழிநடத்தும் தொகுதியாக இருப்பினும் அனிலீனின் நைட்ரோ ஏற்றம் செய்யும் வினைகளில் m – நைட்ரோ அனிலீன் கணிசமான விளைபொருளாக கிடைக்கிறது.
6.
X மற்றும் Y ஆகியவற்றை கண்டறிக.
\(CH_3COCH_2CH_2COOC_2H_5 \overset{CH_3MgBr}\longrightarrow X \overset{H_3O^+}\longrightarrow Y\)
7.
Ti3+ , Mn2+ அயனியில் காணப்படும் இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கண்டறிக மேலும் அவைகளின் காந்ததிருப்பு திறன் மதிப்புகளைக் (μs) கண்டறிக.
8.
பின்வருவனவற்றிற்கு ஒரு உதாரணம் தருக.
(அ) ஐகோசோஜன்
(ஆ) டெட்ராஜன்
(இ) நிக்டோஜன்
(ஈ) சால்கோஜன்
9.
எரிக்கப்பட்ட படிகாரம் என்றால் என்ன ?
10.
தாமிரத்தின் பயன்கள் யாவை?
11.
காப்பர் பிரித்தெடுத்தலில் செயல்முறையில் சிலிக்காவின் பங்கு என்ன?
12.
கால்வானிக் மின்கலத்தில் நிகழும் நிகர வினையானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
2 Cr (s) + 3Cu2+ (aq) → 2Cr3+ (aq) + 3Cu (s)
மின்கல குறியீட்டை பயன்படுத்தி மின்கலத்தை விளக்குக, மேலும் அரை வினைகளை எழுதுக.
13.
மன அமைதிப்படுத்திகள் உடலில் எவ்வாறு செயல்புரிகின்றன?
14.
Fe3+ அயனிகள் திட்ட நிலைமைகளில் புரோமைடை புரோமினாக ஆக்ஸிஜனேற்றம் அடையச் செய்யுமா? கொடுக்கப்பட்டது: \(E^{0}_{Fe^{3+}|Fe^{2+}}=0.771\) \(E^{0}_{Br_{2}|Br^{-}}=1.09 V\).
15.
α-சுருள் உருவாதல் பற்றி குறிப்பு வரைக
16.
A,B மற்றும் C ஐ கண்டறிக \(CH_3-NO_2\overset{LiAlH_4}\longrightarrow A\overset{2CH_3CH_2Br}\longrightarrow B \overset{H_2SO_4}\longrightarrow C\)
17.
ஆய்வகத்தில் ஆக்சிஜன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
18.
சிவப்பு பாஸ்பரஸ் ஆக்சிஜனுடன் எவ்வாறு வினைபுரிகிறது?
19.
போரான் நியூட்ரான் கவர்தல் சிகிச்சை (BNCT) பற்றி குறிப்பு வரைக.
20.
டைபோரேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
21.
போராக்ஸின் நீர்க்கரைசல் காரத்தன்மை உடையது. ஏன்?
22.
எலிங்கம் வரைபடத்திலிருந்து உற்று நோக்கி உணரப்படுபவை யாவை?
23.
ஒருபடியின் (monomer) செறிவானது 0.05 mol L-1 ஆக உள்ள ஒரு இருபடி (dimer) உருவாகும் இரண்டாம் வகை வினையின் வினைவேகம் 7.5x 10-3 mol L-1s-1 வினைவேக மாறிலியினைக் கண்டறிக.
24.
பின்வரும் ஈனிகளை அவற்றில் உள்ள வழங்கி அணுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
அ) NH3
ஆ) en
இ) OX2-
ஈ) பிரிடின் (pyridine)
1.

2.
3.
NH3 ன் நிலைமாறு வெப்பநிலை 406 K மற்றும் CO2 வின் நிலைமாறு வெப்பநிலை 304 K ஆகும். எனவே NH3 ஆனது CO2 வை விட அதிக நிலைமாறு வெப்பநிலையையும், அதிக வான்டர்வால்ஸ் ஈர்ப்பு விசையையும் பெற்றுள்ளது. எனவே CO2 வை விட NH3 அதிக அளவில் பரப்பு கவரப்படுகிறது.
4.
அநேகமாக, அனைத்து கார்போஹைட்ரேட்டுகளும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சீர்மையற்ற கார்பன் அணுக்களை பெற்றிருப்பதால் அவை ஒளி சுழற்றும் தன்மையை பெற்றுள்ளன.
சீர்மையற்ற கார்பன் எண்ணிக்கையை பொறுத்து மாற்றுகளின் எண்ணிக்கை அணுக்களின் ஒளிச்சுழற்று அமைகிறது, அதாவது 2n மாற்றுகள் இங்கு n = சீர்மையற்ற கார்பன் அணுக்களின் மொத்த எண்ணிக்கை.
குளுக்கோஸில் 4* -C உள்ளன. எனவே இது 24 = 16 மாற்றுகளை பெற்றுள்ளது.
5.
I. அனிலீன் ஃபிரீடல் கிராப்ட் வினைக்கு உட்படுவதில்லை:
அனிலீன் ஃபிரீடல் கிராப்ட் வினைக்கு உட்படுவதில்லை; அனிலீன் ஃபிரீடல் கிராப்ட்ஸ் வினைகளுக்கு (அல்கைலேற்றம், அசிட்டைலேற்றம்) இயற்கையில் அனிலீன் காரத்தன்மையுடையது; மேலும் அது அதன் தனித்த இரட்டை எலக்ட்ரான்களை லூயி அமிலமான AICI3 க்கு வழங்கி ஒரு கூட்டுச் சேர்மத்தை உருவாக்குகிறது. இந்த கூட்டுச்சேர்மம் நடைபெறவிருக்கும் எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினையை தடைசெய்கிறது.
II. அலிபாட்டிக் அமீன்களை விட அரோமேட்டிக் அமீன்களின் டையசோனியம் உப்புக்கள் அதிக நிலைப்புத் தன்மை கொண்டவை:
இதற்கு காரணம் உடனிசைவாகும்.
அமீன் டையுசோனியம் அபனியின் மீதான நேர்மின்கமை பென்சீன் வளையம் முழுமைக்கும் விரவும் தன்மையை பெற்றிருப்பதால் அரீன்டையசோனியம் உப்புகள் நிலைப்புத் தன்மையைப் பெறுகின்றன.
III. அனிலீன் மதிப்பு PKb மெத்திலமீனை விட அதிகம்:
PKb மெத்திலமீன் 3.35; PKb அனிலின் 9.376. அனிலீனில் N மீது உள்ள தனித்த எலக்ட்ரான் இரட்டை பென்சீன் வளையம் முழுவதும் உள்ளடங்காத தன்மையைப் பெற்றுள்ளது. எனவே N மீதான எலக்ட்ரானின் அடர்த்தி குறைகிறது. எனவே மெத்திலமீனைவிட அனிலீனின் காரத்தன்மை குறைவாகும். இதன் காரணமாக, அனிலீனின் PKb மதிப்பு மெத்திலமீனை விட அதிகமாகும்.
IV. காப்ரியல் ஃப்தாலிமைடுை தொகுப்பு வினை ஓரிணைய அமீன்களை தொகுப்பதற்கானது.
தாலிமைடிலிருந்து உருவாகும் எதிர் அயனியுடன் அரைல் ஹேலைடுகள் சுருக்கவர்பொருள் பதியீட்டு வினைக்கு (SN2) உட்படுவதில்லை. அலிபாட்டிக் அமீன்கள் SN2 வழிமுறைக்கு உட்படுகின்றன. இம்முறையில் 1° அமீனானது தூயவடிவில் பெறப்படுகிறது. மற்ற அமீன்கள் SN2 வழிமுறைக்கு உட்படுவதில்லை.
V. எத்திலமீன் நீரில் கரையும்; ஆனால் அனிலீன் கரையாது.
எத்திலமீன் நீரில் கரைவதற்கு காரணம், அது நீர்மூலக்கூறுகளுடன் H பிணைப்புகளை ஏற்படுத்துகிறது. நீரிய கரைசலில், பதிலிடப்பட்ட அம்மோனியம் அயனியானது ஆல்கைல் தொகுதியில் எலக்ட்ரான் வெளியிடும் (+1) வினைவால் மட்டுமல்ல, நீர் மூலக்கூறுகளின் கரைப்பானேற்ற விளைவாலும் நிலைப்புத்தன்மை அடைகிறது. அயனியின் உருவளவு பெரிதெனில், கரைப்பானேற்ற விளைவு குறைவாகும்
அனிலீன் நீருடன் அதிகளவில் H- பிணைப்பை ஏற்படுத்துவதில்லை, காரணம், பெரிய நீர்வெறுக்கும் C6H5 தொகுதி இருப்பதாகும்.
VII. அமைடுகளை விட அமீன்கள் அதிக காரத்தன்மை உடையது:
ஏனெனில் அமைடுகளில் உள்ள கார்பனைல் தொகுதியானது அதிக எலக்ட்ரான் கவர் தன்மையுடையது இது, எலக்ட்ரான்களை தன்பக்கம் இழுக்கும் அதிக திறன் கொண்டது. இது அமைடு நைட்ரஜன் (-CONH2) மீதுள்ள தனித்த இரட்டை எலக்ட்ரான்களை, ஒரு புரோட்டானை ஏற்பதற்கு குறைவாக அனுமதிக்கிறது.
VII. அரோமேட்டிக் எலக்ட்ரான் கவர் பதியீட்டு வினைகளில் அமினோ தொகுதி மற்றும் p - வழி நடத்தும் தொகுதியாக இருப்பினும் அனிலீனின் நைட்ரோரற்றம் செய்யும் வினைகளில் . நைட்ரோ அனியின் கணிசமான விளைபொருளாக கிடைக்கிறது.
வலிமை மிகு அமில ஊடகத்தில், அனிலீன் புரோட்டோனேற்றம் அடைந்து அனிலினியம் அயனியை உருவாக்குகிறது. இது வழிநடத்தும் தொகுதியாகும். எனவே அனிலின் உருவாகிறது.
6.
7.
Ti ன் எலக்ட்ரான் அமைப்பு = 3d24s2
Ti3+ ன் எலக்ட்ரான் அமைப்பு = 3d1
இவற்றில் தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 1
சுழற்சியின் காந்ததிருப்புத்திறன் \({ \mu_s }_{ }=\sqrt { n (n +2) } \)
\(=\sqrt { 1 (1 +2) } \)
= \(\sqrt { 3 } \) = 1.732 BM
Mn ன் எலக்ட்ரான் அமைப்பு = 3d24s2
Mn2+ ன் எலக்ட்ரான் அமைப்பு = 3d5
இவற்றில் தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 5
சுழற்சியின் காந்ததிருப்புத்திறன் \({ \mu_s }_{ }=\sqrt { n (n +2) } \)
\(=\sqrt { 5(5+2) } \) = \(\sqrt { 35 } \) = 5.92 BM
8.
| தொகுதி பெயர் | உதாரணம் | |
| i | ஐகோசோஜன் | B, Al, Ga, In, Tl |
| ii | டெட்ராஜன் | C, Si, Ge, Sn, Pb |
| iii | நிக்டோஜன் | N, P, As, Sb, Bi |
| iv | சால்கோஜன் | O, S, Se, Te, Po |
9.
(i) பொட்டாஷ் படிகாரத்தை 365K வெப்பநிலைக்குச் சூடுபடுத்தும்போது உருகுகிறது.
(ii) 475 K வெப்பநிலையில் படிக நீரை இழந்து உருப்பெருக்கம் அடைகிறது.
(iii) இதுவே எரிக்கப்பட்ட படிகாரம் எனப்படுகிறது.
10.
தாமிரத்தின் பயன்கள்(Cu) :
(i ) முதன் முதலில் மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட உலோகம் தாமிரம் ஆகும்.
(ii ) மேலும் இதன் உலோகக் கலவையான வெண்கலத்தின் பயன்பாட்டினால் ' வெண்கலக் காலம் ' என்ற ஒரு சகாப்தம் உருவாக இது காரணமாக அமைந்தது.
தாமிரமானது, தங்கம் மற்றும் பிற உலோகங்களோடு இணைந்து நாணயங்கள் நகைப்பொருள்கள் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது.
(iv ) தாமிரம் மற்றும் இதன் உலோக கலவைகள் ஆகியன மின்கம்பிகள், நீர் செல்லும் குழாய்கள் மற்றும் பல மின் பொருளின் பாகங்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன.
11.
(i) காப்பர் பைரைட்டிலிருந்து காப்பரை பிரித்தெடுக்கும் செயல்முறையில் அடர்ப்பிக்கப்பட்ட தாதுவானது, அமிலத் தன்மையுடைய இளக்கியான சிலிகாவுடன் கலக்கப்பட்டு எதிர் அனல் உலையில் வெப்பப்படுத்தப்படுகிறது.
(ii) உருக்குதலால் உருவாகும் பெர்ரஸ் ஆக்சைடானது காரத்தன்மையினைப் பெற்றிருப்பதால் அது சிலிக்காவுடன்
இணைந்து பெர்ரஸ் சிலிக்கேட் கனிமக் கழிவினைத் தருகிறது.
\(2CuFeS_{ 2(s) }+{ O }_{ 2(g) }\longrightarrow 2FeS_{ (l) }+C{ u }_{ 2 }S_{ (l) }+SO_{ 2(g) }\)
\(2FeS_{ (l) }+3O_{ 2(g) }\longrightarrow 2FeO_{ (l) }+2SO_{ 2(g) }\)
\(FeO_{ (s) }+SiO_{ 2(s) }\longrightarrow FeSiO_{ 3(s) }\)
இளக்கி கனிமக்கழிவு கனிமக்கசடு
12.
நேர்மின்வாய் ஆக்ஸிஜனேற்றம் : 2Cr (s) → 2Cr3+ (aq) + 6e- .... (1)
எதிர்மின்வாய் ஒடுக்கம்: 3Cu2+ (aq) + 6e- → 3Cu (s) ....(2)
மின்கலக் குறியீடு
Cr (s)|Cr3+ (aq) || Cu2+ (aq)|Cu (s)
13.
இவை நரம்பு மண்டலத்தை தாக்கும் மருந்துகளாகும். வேலியம், டையசிபாம் போன்றவை மூளையிலுள்ள டோபமைன் எனும் நரம்புத் தூண்டல் கடத்தியை முடக்குவதன் மூலம் மைய நரம்பு மண்டலத்தின் மீது செயல்புரிகின்றன.
இவை, காமா அமினோ பியூட்ரிக் அமிலம் (GABA) என்ற நரம்புத் தூண்டல் கடத்தியின் செயல்பாட்டை தூண்டுகிறது. இதனால் மூளையில் நரம்பு உந்துதல் பரிமாற்றம் தடுக்கப்பட்டு பதற்றம் குறைகிறது. இவற்றின் பக்க விளைவுகள் பார்பிட்ரேட்டுகளைப் போல் உள்ளன. அதாவது தூக்கம் அயர்வு, நிலையற்ற நடைபோன்றவை.
14.
அரைகல வினைகளாவன:
\(\begin{aligned} 2 \mathrm{Br}^{-} \rightarrow \mathrm{Br}_2+2 e^{-} ; E_{\text {oxd }}^0=-1.09 \mathrm{~V} \end{aligned}\) .....(1)
\(\begin{aligned} 2 \mathrm{Fe}^{3+}+2 e^{-} \rightarrow 2 \mathrm{Fe}^{2+} ; E_{\text {red }}^0=+0.771 \mathrm{~V} \end{aligned}\) .....(2)
(1) மற்றும் (2) ஐ கூட்ட
\(\begin{gathered}
2 \mathrm{Fe}^{3+}+2 \mathrm{Br}^{-} \rightarrow 2 \mathrm{Fe}^{2+}+Br_2; \space E^0_\frac{Fe^{3+}}{Fe^{2+}}=?
\end{gathered}\) ....(3)
\(\begin{gathered} \mathrm{E}_{\text {cell }}^0=\mathrm{E}_{\text {oxd }}^0+E^0_\frac{Fe^{3+}}{Fe^{2+}}
\end{gathered}\)
= (-1.09 + 0.771) V
= - 0.319 V
\(\therefore\) E0cell ஆனது எதிர்குறியீடு உடையது; எனவே \(\Delta\)G + ve, எனவே மின்கல வினையானது தன்னிச்சையானது அல்ல. எனவே Fe3+ ஆனது Br- ஐ -ve Br2 ஆக ஆக்ஸிஜனேற்றம் செய்யாது.
15.
α-சுருள் துணை அமைப்பில், அமினோ அமிலங்கள் வலப்பக்க செங்குத்து சுருள் அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் இவை ஒரு அமினோ அமிலத்திலுள்ள (n-வது பகுதிக்கூறு) கார்பனைல் தொகுதி ஆக்சிஜனுக்கும் ஐந்தாவது அமினோ அமில (n+1 வது பகுதிக்கூறு) அமினோ ஹைட்ரஜனுக்கும் இடையே உருவாகும் ஹைட்ரஜன் பிணைப்புகளால் நிலைப்படுத்தப்படுகின்றன.
16.
17.
ஆய்வகத்தில் ஹைட்ரஜன் பெராக்சைடை MnO2 வினைவேக மாற்றி முன்னிலையில் சிதைத்தோ அல்லது பொட்டாசியம் பெர்மாங்கனேட் கொண்டு ஆக்சிஜனேற்றம் செய்தோ ஆக்சிஜனை தயாரிக்கப்படுகிறது
2H2O2 ⇌ 2H2O + O2
5H2O2 + 2MnO4- + 6H+ ⟶ 5O2 + 8H2O + 2Mn2+
18.
சிவப்பு பாஸ்பரஸ், ஆக்சிஜனுடன் வெப்பப்படுத்தும்போது வினைபுரிந்து பாஸ்பரஸ் டிரை ஆக்சைடு மற்றும் பாஸ்பரஸ் பென்டாக்சைடு உருவாகிறது
P4 + 3O2 ⟶ P4O6
P4 + 5O2 ⟶ P4O10
19.
(i) போரான் - 10 ஆனது நியூட்ரான் மீது கொண்டுள்ள நாட்டமே போரான் நியூட்ரான் கவர்தல் சிகிச்சையின் (BNCT) அடிப்படையாகும்.
(ii) இது மூளைக் கட்டிகளுக்கான சிகிச்சை முறையாகும்
(iii) போரான் - 10 ஐ குறைந்த ஆற்றலுடைய வெப்ப நியூட்ரான்களைக் கொண்டு தாக்கும் போது உருவாகும் அதிக நேரிய ஆற்றலுடைய α - துகள் மற்றும் Li துகளை தரும் அணுக்கரு வினையினை அடிப்படையாகக் கொண்டது.
(iv) மூளையில் கட்டி உள்ள நோயாளி ஒருவருக்கு போரானின் சேர்மங்கள் ஊசி வழியாக செலுத்தப்படும் போது, அவை மூளை புற்றுக்கட்டிகளில் சேகரமாகிறது.
(v) பின்னர் புற்றுக்கட்டிகளில் காணப்படும் பகுதியினை வெப்ப நியூட்ரான்களைக் கொண்டு கதிர் வீச்சிற்கு உட்படுத்தும்போது α - துகள் உருவாகிறது. இது புற்றுக்கட்டி திசுக்களை அழிக்கிறது.
(vi) ஒவ்வொரு முறை போரான் - 10 நியூட்ரானை கவரும் போது இது நிகழ்கிறது.
(vii) இவ்வாறாக புற்றுநோய் கட்டிகள் மட்டும் தொடர்ந்து அழிக்கப்படுகின்றன.
(viii) பிற மூளைத் திசுக்கள் குறைந்த அளவே பாதிக்கப்படுகின்றன
(ix) கழுத்து, மார்பு, கல்லீரல் போன்ற பிற இடங்களில் உருவாகும் புற்றுநோய் கட்டிகளின் சிகிச்சைக்கும் BNCT ஐ பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
20.
(i) டைக்லைமில் கரைந்துள்ள சோடியம் போரோ ஹைட்ரைடுடன் அயோடின் வினைபடும் போது டைபோரேன் உருவாகிறது.
2NaBH4 + I2 ⟶ B2H6 + 2Nal + H2
(ii) மெக்னீசியம் போரைடை HCl உடன் வெப்பப்படுத்தும் போது எளிதில் ஆவியாகும் போரேன்கள் உருவாகின்றன
2Mg3B2 + 12HCl ⟶ 6MgCl2 + B4H10 + H2
B4H10 + H2 ⟶ 2B2H6
21.
(i) வெந்நீர்க் கரைசலில் போராக்ஸ் சிதைந்து போரிக் அமிலம் மற்றும் சோடியம் ஹைட்ராக்ஸைடைத் தருகிறது.
Na2B4O7 + 7H2O ⟶ 3H3BO3 + 2NaOH
(ii) போரிக் அமிலம் ஒரு வலிமை குறைந்த அமிலம், சோடியம் ஹைட்ராக்ஸைடு ஒரு வலிமை மிக்க காரம்
(iii) எனவே உருவாகும் கரைசல் காரத்தன்மை உடையது.
22.
1. பெரும்பாலான உலோக ஆக்சைடுகள் உருவாகும் வினைகளின் சாய்வு, நேர்குறி மதிப்புடையது. காரணம், உலோக ஆக்சைடுகள் உருவாதலின் போது ஆக்சிஜன் வாயு பயன்படுவதால் அதன் ஒழுங்கற்றத் தன்மையில் குறைவு ஏற்படுகிறது. எனவே ∆S எதிர்குறி மதிப்பினை பெறுகிறது. இதனால் நேர்கோட்டின் சமன்பாட்டில் உள்ள T∆S ஆனது நேர்குறி மதிப்பினைப் பெறுகிறது.
2. கார்பன் மோனாக்சைடு உருவாதலுக்கான வரைபடம் எதிர்குறி சாய்வுடன் கூடிய நேர்கோடாகும். இந்நிகழ்வில் ஒரு மோல் ஆக்சிஜன் பயன்படும்போது இரு மோல் கார்பன் மோனாக்சைடு வாயு உருவாகிறது. எனவே ஒழுங்கற்ற தன்மை அதிகரித்து ∆S நேர்குறி மதிப்பு பெறுகிறது. இதிலிருந்து CO ஆனது அதிக வெப்பநிலையில் அதிக நிலைப்புத் தன்மை பெற்றுள்ளதை அறிய முடிகிறது.
3. வெப்பநிலை அதிகரிக்கும்போது, உலோக ஆக்சைடுகள் உருவாகும் வினைக்கான ∆G ன் மதிப்பு குறைவான எதிர்குறி மதிப்பினைப் பெற்று, ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் பூஜ்ய மதிப்பினை அடைகிறது. இவ்வெப்பநிலைக்குக் கீழ் ∆G மதிப்பு எதிர்குறியுடையது. மேலும் உலோக ஆக்சைடு நிலைப்புத் தன்மையுடையது. இவ்வெப்பநிலைக்கு மேல் ∆G நேர்குறி மதிப்பினை பெறுகிறது. பொதுவாக உயர் வெப்பநிலைகளில் உலோக ஆக்சைடுகள் குறைவான நிலைப்புத் தன்மையினைப் பெற்றுள்ளன, எனவே அவைகளைச் சிதைவுறச் செய்தல் எளிதானது.
4. நிலைமை மாற்றம் (உருகுதல், ஆவியாதல்) காரணமாக, ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் MgO, HgO போன்ற சில உலோக ஆக்சைடுகளின் சாய்வில் திடீரென மாற்றம் ஏற்படுகிறது.
23.
ஒரு படி ஆனது X என்க.
2X → X2
வினையின் வினைவகை இரண்டு ஆதலால், வேகம் = k[X]²
\(
\therefore-\frac{1}{2} \frac{\mathrm{d}[\mathrm{x}]}{\mathrm{dt}} =\frac{\mathrm{d}\left[\mathrm{x}_2\right]}{\mathrm{dt}}=7.5 \times 10^{-3} \mathrm{~mol} \mathrm{~L}^{-1} \mathrm{~s}^1 \\
\therefore 7.5 \times 10^{-3} =\mathrm{k} .[0.03]^2 \\
\mathrm{k} =\frac{7.5 \times 10^{-3}}{(0.03)^2} \mathrm{~mol}^{-1} \mathrm{Ls}^1=3 \mathrm{~mol}^{-1} \mathrm{IS}^{-1}
\)
24.
| ஈனி | வழங்கி அணுக்களின் எண்ணிக்கை | ஈனியின் வகை | |
|---|---|---|---|
| அ | NH3 | 1 | ஒரு முனை ஈனி |
| ஆ | en | 2 | இரு முனை ஈனி |
| இ | OX2- | 2 | இரு முனை ஈனி |
| உ | பிரிடின் (pyridine) | 1 | ஒரு முனை ஈனி |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards