12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/03/2021
12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Two mark Important Questions with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
குறிப்பு வரைக:
(i ) பிரிகைநிலைமை
(ii ) பிரிகைஊடகம்
2.
ஊடு கலத்தில் (intercalation ) என்றால் என்ன ?
3.
அரீனியஸ் கொள்கையை பயன்படுத்தி பின்வருவனவற்றை அமிலம் [அல்லது ] காரம் என வகைப்படுத்துக.
i) HNO3
ii) Ba (OH )2
iii) H3PO4
iv) CH3COOH
4.
Ka மதிப்பைக் கொண்டு வலிமை மிகு அமிலம் மற்றும் வலிமை குறை அமிலத்தை எவ்வாறு அறிவாய் ?
5.
லாந்தனாய்டுகளின் ஆக்சிஜனேற்ற நிலையை எழுதுக
6.
3d ஆர்பிட்டாலில் எலக்ட்ரான்கள் தொடர்ச்சியாக நிரப்பப்படுவதால் உள்ள இரு விதிவிலக்குகள் யாவை ? எடுத்துக்காட்டு தருக .
7.
பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க
i) \(2MnO_{ 2 }+4KOH+{ O }_{ 2 }\longrightarrow \)
ii) \(Cr_{ 2 }{ O }_{ 7 }^{ 2- }+14H^{ + }+6{ I }^{ - }\longrightarrow \)
8.
பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.
(i) \({ C }_{ 2 }{ H }_{ 4 }+{ O }_{ 2 }{ \longrightarrow }\)
(ii) \(Al+{ O }_{ 2 }\longrightarrow \)
9.
போராக்ஸ் என்பது யாது ? அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது ?
10.
தூய்மையாக்கும் செயல்முறை என்பது யாது ?
11.
சல்பைடு தாதுக்களை ஆக்சைடுகளாக மாற்ற பயன்படும் வழக்கமான முறை என்ன? அது நிகழ்வதற்கான சாத்தியக் கூறினை எழுதுக.
12.
\(A{ g }_{ 2 }O\) மற்றும் \(HgO\) சுய ஒடுக்கமடைகின்றன. ஏன் ?
13.
25°C. வெப்பநிலையில் 0.025M செறிவுடைய நீர்த்த கால்சியம் குளோரைடு கரைசலின் மோலார் கடத்துத்திறனை கணக்கிடுக. கால்சியம் குளோரைடு கரைசலின் நியம கடத்துத்திறன் மதிப்பு 12.04 × 10-2 Sm-1.
14.
அசிட்டோன் தயாரித்தல் ?
15.
0.001M HCl கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக
16.
α-D (+) குளுக்கோபைரனோஸின் அமைப்பை வரைக
17.
அலனினின் சுவிட்டர் அயனி அமைப்பை எழுதுக
18.
ஒரு நீர் மாதிரியில் உள்ள ஹைட்ராக்சைடு அயனிச் செறிவு 2.5\(\times\)10-6M என கண்டறியப்பட்டுள்ளது. கரைசலின் தன்மையை கண்டறிக.
19.
மூலக்கூறு படிகங்கள் என்றால் என்ன?
20.
அமில ஊடகத்தில் Mn(VI) அயனி சுய ஆக்சிஜனேற்ற ஒடுக்கமடையும் வினையினை எழுதுக
21.
Pt(II) சேர்மங்களை காட்டிலும் Ni(II) சேர்மங்கள் அதிக வெப்ப இயக்கவியல் நிலைப்புத் தன்மை உடையவை ஏன்?
22.
இடைநிலைத் தனிமங்கள், மற்ற தனிமங்களிலிருந்து எலக்ட்ரான் அமைப்பில் எவ்வாறு வேறுபடுகிறது
23.
பின்வருவனவற்றில் எவை நிறமுள்ள சேர்மங்களைத் தருகிறது Cu2+, Zn2+, Ti3+, Ti4+, Cd2+
24.
இடைநிலை உலோக அணுக்களில் காணப்படும் பொதிந்த அமைப்பு வகைகள் யாவை?
25.
செனான் டிரை ஆக்சைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
26.
ஆய்வகத்தில் கந்தக டை ஆக்சைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
27.
நைட்ரிக் அமிலத்தின் பயன்களை எழுது
28.
ஹேபர் தொகுப்பு முறை என்றால் என்ன?
29.
சிலிக்கன் டெட்ரா குளோரைடின் பயன்களை எழுதுக
30.
படிகாரம் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.
31.
NaOH உடன் டைபோரேனின் வினை யாது?
32.
போராக்ஸிலிருந்து போரிக் அமிலம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
33.
p - தொகுதி தனிமங்கள் என்றால் என்ன? அவற்றின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பினைத் தருக
34.
அணைவுக் கோளம் என்றால் என்ன?
35.
N3+3H2 ⟶ 2NH3 என்ற வினையின் வினைவேக சமன்பாட்டை எழுதுக.
36.
தாமிரத்தின் பயன்களை எழுது.
37.
வறுத்தல் செயல்முறை பற்றி எழுது.
38.
தாது என்றால் என்ன?
39.
\([Ag(NH_{ 3 })_{ 2 }]^{ + }\)என்ற அணைவுச் சேர்மத்தின் நிலைப்பு மாறிலி 1.7x 107 எனில் 0.2M NH3 கரைசலில் \(\cfrac { \left[ { Ag }^{ + } \right] }{ \left[ Ag\left( NH_{ 3 } \right) _{ 2 } \right] ^{ + } } \) விகிதத்தினைக் கண்டறிக.
40.
உள்இடைநிலை தனிமங்கள் என்றால் என்ன?
41.
போரிக் அமிலத்தை எவ்வாறு போரான் நைட்ரைடு ஆக மாற்றுவாய்?
42.
இரும்பை அதன் தாதுவான Fe2O3 யிலிருந்து பிரித்தெடுப்பதில் சுட்ட சுண்ணாம்புவின் பயன்பாடு யாது?
43.
பின்வருவனவற்றை அவற்றின் கொதிநிலை மதிப்பின் அடிப்படையில் ஏறுவரிசையில் எழுதுக. மேலும் தாங்கள் வரிசைப்படுத்தியமைக்கு உரிய காரணம் தருக.
i. பியூட்டன் -2-ஆல், பியூட்டன் -1- ஆல், 2 – மெத்தில் புரப்பன்-2-ஆல்
ii. புரப்பன் -1 -ஆல், புரப்பன் – 1,2,3 – டைஆல், புரப்பன் – 1,3 – டை ஆல், புரப்பன் -2-ஆல்.
44.
பால்மங்களின் மூன்று பயன்களை எழுதுக.
45.
Ag2CrO4 ன் கரைதிறன் பெருக்க மதிப்பு \(1\times10^{-12}\) ஆகும். 0.01M AgNO3 கரைசலில் Ag2CrO4 ன் கரைதிறனை கணக்கிடுக.
46.
அடிப்படை வினைகள் என்றால் என்ன? ஒரு வினையின் வினை வகை மற்றும் மூலக்கூறு எண் ஆகியனவற்றிற்கு இடையேயான வேறுபாடுகள் யாவை?
47.
பிற ஹாலஜன்களைக் காட்டிலும் ஃபுளுரின் அதிக வினைத் திறனுடையது ஏன்?
48.
படிக திண்மங்களை படிக வடிவமற்ற திண்மங்களிலிருந்து வேறுபடுத்துக.
49.
பின்வரும் பெயருடைய அணைவுச் சேர்மங்களுக்கு உரிய வாய்ப்பாட்டினைத் தருக.
அ) பொட்டாசியம் ஹெக்சாசயனிடோபெர்ரேட் (II)
ஆ) பென்டாகார்பனைல் இரும்பு (o)
இ) பென்டாஅம்மைன்நைட்ரிடோ -K-N-கோபால்ட் (III) அயனி
ஈ) ஹெக்ஸாஅம்மைன்கோபால்ட் (III) சல்பேட்
உ) சோடியம் டெட்ராபுளூரிடோடை ஹைராக்ஸிடோகுரமேட் (III)
50.
1.
(i ) பிரிகை நிலைமை : கூழ்மத்துகள் விரவியுள்ள சேர்மமானது பிரிகை நிலைமை எனப்படும்.
(ii ) பிரிகை ஊடகம் : கூழ்மத்துகள் விரவியுள்ள அடுத்த தொடர் நிலைமையானது பிரிகை ஊடகம் எனப்படும்.
2.
மீளக்கூடிய சேர்த்தல் அல்லது படல அமைப்பில் உள்ள திண்மப் பொருளில் மூலக்கூறுகளை இடைச் செருகல் முறை ஊடு கலத்தல் எனப்படும்.
உதாரணம் : கிராஃபைட்
3.
அமிலம் :
i) HNO3
iii) H3PO4
iv) CH3COOH
காரம் :
ii) Ba (OH)2
4.
(i ) பத்தை விட அதிகமான Ka மதிப்பை கொண்ட அமிலங்கள் வலிமை மிகு அமிலங்கள் எனவும்,
(ii ) ஒன்றை விட குறைவான Ka மதிப்பை கொண்ட அமிலங்கள் வலிமை குறைந்த அமிலங்கள் எனவும் கருதப்படுகின்றன.
5.
(i) லாந்தனாய்டுகள் பொதுவாக ஆக்சிஜனேற்ற நிலை +3 ஆகும்.
(ii) சில லாந்தனாய்டுகள் +3 ஆக்சிஜனேற்ற நிலையுடன் கூடுதலாக +2 அல்லது +4 ஆக்சிஜனேற்ற நிலைகளையும் கொண்டுள்ளது.
6.
3d ஆர்பிட்டலானது சரிபாதி நிரப்பப்படுவதற்கு அல்லது முழுமையாக நிரப்பப்படுவதற்கு வாய்ப்பு இருப்பின், அத்தகைய நிலைகள் மிகவும் நிலைப்புத் தன்மையுடையன என்பதால் அவை முன்னுரிமை பெறுகின்றன.
உதாரணம் : குரோமியம் மற்றும் தாமிரம்.
7.
(i) \(2MnO_{ 2 }+4KOH+{ O }_{ 2 }\overset { \Delta }{ \longrightarrow } { 2K }_{ 2 }{ MnO }_{ 4 }+2H_{ 2 }O\)
(ii) \(Cr_{ 2 }{ O }_{ 7 }^{ 2- }+14H^{ + }+6{ e }^{ - }\longrightarrow { Cr }^{ 3+ }+7H_{ 2 }O\)
8.
(i) \({ C }_{ 2 }{ H }_{ 4 }+{ 3O }_{ 2 }{ \longrightarrow { 2CO }_{ 2 } }+2H_{ 2 }O\)
(ii) \(4Al+{ 3O }_{ 2 }\longrightarrow 2Al_{ 2 }{ O }_{ 3 }\)
9.
(i ) போராக்ஸ் என்பது டெட்ராபோரிக் அமிலத்தின் சோடியம் உப்பாகும் .
(ii ) இது கோலிமனைட் தாதுவை , சோடியம் கார்பனேட் கரைசலுடன் கொதிக்க வைப்பதன் மூலம் பெறப்படுகிறது.
2Ca2B6O11 + 3Na2CO3 + H2O \(\overset { \Delta }{ \rightarrow } \) 3Na2B4O7 + 3CaCO3 + Ca(OH)2
10.
(i) ஒரு உலோகம் அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் போது பொதுவாக வினைபுரியாத ஆக்சைடுகள், பிற உலோகங்கள், அலோகங்கள் போன்ற மாசுக்கள் அதில் காணப்படலாம்.
(ii) இத்தகைய மாசுக்களை பண்படா உலோகத்திலிருந்து பிரித்தெடுத்தல் தூய்மையாக்கும் செயல்முறைகள் எனப்படுகிறது.
11.
(i) சல்பைடு தாதுக்களை ஆக்சைடுகளாக மாற்ற பயன்படும் வழக்கமானதொரு முறை வறுத்தல் செயல்முறை ஆகும்.
(ii) அடர்ப்பிக்கப்பட்ட தாதுவானது தகுந்த உலையில் எடுத்துக் கொள்ளப்பட்டு உலோகத்தின் உருகுநிலையை விட குறைவான வெப்பநிலையில் அதிக அளவு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு ஆக்சிஜனேற்றம் அடையச் செய்யப்படுகிறது.
\(2Pbs+3{ O }_{ 2 }\overset { \Delta }{ \longrightarrow } \ 2PbO+2S{ O }_{ 2 }\uparrow \)
12.
\(A{ g }_{ 2 }O\) மற்றும் \(HgO\) இன் சிதைவு வெப்பநிலை முறையே 600 மற்றும் 700 k ஆகும். இந்த ஆக்சைடுகள் மிதமான வெப்பநிலையில் நிலையற்றவை.
13.
மோலார் கடத்துத்திறன் = \(\wedge_m = \frac{\kappa(Sm^{-1})\times10^{-3}}{M}\) mol-1m3
\(\frac{(12.04)\times10^{-2} Sm^{-1}) \times 10^{-3} (mol^{-1}m^3)}{0.025}\)
481.6 × 10-2 Sm2mol-1
14.

15.
\(\underset{0.001M}{HCl}\overset{H_{2}O}{\rightleftharpoons}\underset{0.001M}{H_{3}O^{+}}+\underset{0.001M}{Cl^{-}}\)
10-3M HCl யில் உள்ள [H3O+] செறிவுடன் ஒப்பிடும் போது, நீரின் சுய அயனியாக்கத்திலிருந்து உருவாகும் [H3O+] (10-7 M) செறிவு ஒதுக்கத்தக்கது.
எனவே [H3O+] = 0.001 mol dm–3
pH = -log10[H3O+]
= -log10(0.001)
= -log10(10-3) =3
16.
17.
18.
[OH-] > 1 \(\times\) 10-7 M எனில் கரைசலானது காரத்தன்மையுடையதாகும்.
2.5 \(\times\) 10-6 M > 1 \(\times\) 10-7 M. எனவே கரைசலானது காரத் தன்மையுடையதாகும்.
19.
1. படிகங்களில் காணப்படும் உட்கூறுகள் நடுநிலை மூலக்கூறுகள் எனில் அவை மூலக்கூறு படிகங்கள் எனப்படும்.
2. இம்மூலக்கூறுகள் வலிமை குறைந்த வாண்டர்வால்ஸ் கவர்ச்சி விசையால் ஒன்றொடொன்று பிணைத்து வைக்கப்பட்டுள்ளன.
3. பொதுவாக இப்படிகங்கள் மென்மையானவை.
4. இவை மின் கடத்தும் தன்மையைப் பெற்றிருப்பதில்லை.
20.
3MnO2-4 + 4H+ ⟶ 2MnO4- + MnO2 + 2H2O
21.
Pt2+ உடன் ஒப்பிடும் போது Ni2+ உருவாக்க குறைவான அயனியாக்கும் ஆற்றல் தேவைப்படுவதால். Pt(II) சேர்மங்களை விட Ni(II) சேர்மங்கள் அதிக வெப்ப இயக்கவியல் நிலைப்புத் தன்மை உடையது.
22.
| தனிமங்கள் | d - தொகுதி தனிமங்கள் (இடைநிலைத் தனிமங்கள்) | மற்ற தொகுதி தனிமங்கள் |
| எலக்ட்ரான் அமைப்பு | (n-1)d1-10 ns0,1,2 | ns1,2; ns2np1-6 |
| d - ஆர்பிட்டால்களின் தன்மை | பகுதியளவு நிரம்பிய ஆர்பிட்டால்கள் | d - ஆர்பிட்டால்கள் இல்லை அல்லது முற்றிலும் நிரம்பிய d - ஆர்பிட்டால்கள் |
23.
| அயனி | எலக்ட்ரான் அமைப்பு | நிறம் | காரணம் |
| Cu2+ | 3d9 | நீலம் | (i) பகுதியளவு நிரம்பிய d ஆர்பிட்டால்கள் (ii) d - d எலக்ட்ரான் பரிமாற்றம் நடைபெறும் |
| Ti3+ | 3d1 | கருஊதா/td> | |
| Zn2+ | 3d10 | நிறமற்றது | (i) முற்றிலும் நிரம்பிய d ஆர்பிட்டால்கள் (ii) d - d எலக்ட்ரான் பரிமாற்றம் நடைபெறுகிறது |
| Ti4+ | 3d0 | நிறமற்றது | |
| Cd2+ | 4c10 | நிறமற்றது |
24.
1) அறுங்கோண நெருங்கி பொதிந்த அமைப்பு (hcp)
2) கன சதுர நெருங்கி பொதிந்த அமைப்பு (ccp)
3) பொருள் மைய கன சதுர அமைப்பு
25.
2XeF6 + SiO2 \(\underrightarrow { { 50 }^{ o }C } \) 2XeOF4 + SiF4
2XeOF4 + SiO2 ⟶ 2XeO2F2 + SiF4
2XeO2F2 + SiO2 ⟶ 2XeO3 + SiF4 (அல்லது) XeF6 + 3H2O ⟶ XeO3 + 6HF
26.
ஆய்வகத்தில் உலோகம் அல்லது உலோக சல்பைட்டினை கந்தக அமிலத்துடன் வினைப்படுத்தி கந்தக டை ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது
Cu+ 2H2SO4 ⟶ CuSO4 + SO2 + 2H2O
SO32- + 2H+ ⟶ SO2 + H2O
27.
நைட்ரிக் அமிலத்தின் பயன்கள்:
(i) இராஜ திராவகம் தயாரிப்பில் நைட்ரிக் அமிலம் பயன்படுகிறது
(ii) ஆக்சிஜனேற்றியாக பயன்படுகிறது
(iii) நைட்ரிக் அமில உப்புகள் புகைப்படத் தொழிலிலும் (AgNO3), துப்பாக்கிகளுக்கு தேவையான வெடிமருந்துகளிலும் (NaNO3) பயன்படுகின்றன
28.
வினைபடு பொருள்கள் : நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன்
நிபந்தனை : உகந்த வெப்பநிலை, அதிக அழுத்தம்
வினைவேக மாற்றி : இரும்பு
வினை விளை பொருள் : அம்மோனியா
N2 + 3H2 ⇌ 2NH3
∆Hf = - 46.2 KJmol-1
மேற்கண்ட அம்மோனியா தயாரிப்பு வினை ஹேபர் தொகுப்பு முறை எனப்படும்.
29.
சிலிக்கன் டெட்ரா குளோரைடு
i) குறைக்கடத்திகள் தயாரிப்பில் பயன்படுகிறது.
ii) சிலிக்கா ஜெல், பீங்கான் பொருட்களை ஒட்ட வைக்க பயன்படும் சிலிசிக் எஸ்டர்கள் ஆகியவற்றை தொகுக்கும் வினைகளில் ஆரம்பப் பொருளாக பயன்படுகிறது.
30.
1. பொட்டாசியம், அலுமினியம் சல்பேட்டின் இரட்டை உப்பானது படிகாரம் எனப்படுகிறது.
2. தற்போது M'SO4 M''2 (SO4)24H2O என்ற வாய்பாடு கொண்ட அனைத்து இரட்டை உப்புகளுக்கும் இப்பெயர் பயன்படுத்தப்படுகிறது.
இங்கு M' என்பது ஒன்றை நேர்மின் சுமையுடைய உலோக அயனி அல்லது NH+4
M" என்பது மூன்று நேர்மின் சுமையுடைய உலோக அயனி.
எ.கா:
K2SO4.AI2(SO2)3.24H2O பொட்டாஷ் படிகாரம்
K2SO4.Cr2(SO4)3.24H2O குரோம் படிகாரம்
31.
NaOH உடன் டைபோரேன் வினைபுரிந்து சோடியம் மெட்டா போரேட் உருவாகிறது
B2H6+ 2NaOH + 2H2O ⟶ 2NaBO2 + 6H2
32.
போராக்ஸ், HCl, H2SO4 அமிலங்களுடன் வினைபுரிந்து போரிக் அமிலத்தை உருவாக்குகிறது.
Na2B4O7 + 2HCl + 5H2O ⟶ 4H3BO3 + 2NaCl
Na2B4O7 + H2SO4 + 5H2O ⟶ 4H3BO3 + 2Na2SO4
33.
i) ஒரு தனிமத்தின் கடைசி எலக்ட்ரான் p - ஆர்பிட்டாலில் சென்று நிரம்பும் தனிமங்கள் அடங்கிய தொகுதி p - தொகுதி என்றும், அத்தனிமங்கள் p - தொகுதி தனிமங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
ii) தனிம வரிசை அட்டவணையில் 13 முதல் 18 தொகுதி வரை இடம் பெற்றுள்ளன.
iii) பொதுவான எலக்ட்ரான் அமைப்பு ns2np1-6
34.
ஒரு அணைவுச் சேர்மத்தின், அணைவு அயனியில் உள்ள மைய உலோக அணு / அயனி மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஈனிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் கோளம் அணைவுக்கோளம் எனப்படும்.
35.
வினை வேகம் \(\\ =-\frac { d[{ N }_{ 2 }] }{ dt } =-\frac { 1 }{ 3 } \frac { d\left[ { H }_{ 2 } \right] }{ dt } =+\frac { 1 }{ 2 } \frac { d[{ NH }_{ 3 }] }{ dt } \)
36.
1. மனிதர்களால் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட உலோகம் தாமிரம் ஆகும்.
2. இதன் உலோகக் கலவையான வெண்கலத்தின் பயன்பாட்டினால் வெண்கலக் காலம் என்ற சகாப்தம் உருவானது.
3. தங்கம் மற்றும் பிற உலோகங்களோடு இணைந்து நாணயங்கள், நகை பொருட்கள் தயாரிக்க தாமிரம் பயன்படுகிறது.
4. தாமிரம் மற்றும் அதன் உலோக கலவைகள் ஆகியன மின்கம்பிகள், நீர் செல்லும் குழாய்கள் மற்றும் பல மின் பொருளின் பாகங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
37.
1. வறுத்தல் செயல்முறை சல்பைடு தாதுக்களை ஆக்சைடுகளாக மாற்ற பயன்படும் ஒரு செயல்முறை ஆகும்.
2. அடர்ப்பிக்கப்பட்ட தாதுவானது தகுந்த உலையில் எடுக்கப்பட்டு உலோகத்தின் உருகுநிலையை விட குறைவான வெப்பநிலையில் அதிக அளவு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு ஆக்சிஜனேற்றமடையச் செய்யப்படுகிறது.
2PbS + 3O2 ⟶ 2PbO + 2SO2 ↑
3. ஆர்சனிக், சல்பர், பாஸ்பரஸ் போன்றவை அவைகளின் எளிதில் ஆவியாகும் ஆக்சைடுகளாக வெளியேற்றப்படுகின்றன.
4As + 3O2 ⟶ 2AS2O3
38.
எக்கனிமம் அதிக சதவீதத்தில் உலோகத்தினை பெற்று, அதிலிருந்து எளிதாகவும், பொருளாதார ரீதியாக சிக்கனமாகவும் உலோகத்தினை பிரிக்க இயலுமோ, அக்கனிமமே தாது எனப்படும்.
39.
Ag++ 2NH3 ⇌ [Ag(NH3)2]+
நிலைப்புத் தன்மை மாறிலி β = \(\frac { { \left[ Ag{ \left( { NH }_{ 3 } \right) }_{ 2 } \right] }^{ + } }{ { \left[ { Ag }^{ + } \right] \left[ { NH }_{ 3 } \right] }^{ 2 } } \)
[Ag (NH3)2]+ ⇌ Ag+ + 2NH3
நிலைப்புத் தன்மை மாறிலி \(\alpha =\frac { { \left[ { Ag }^{ + } \right] \left[ { NH }_{ 3 } \right] }^{ 2 } }{ { \left[ Ag{ \left( { NH }_{ 3 } \right) }_{ 2 } \right] }^{ + } } \)
∴ \(\beta =\frac { 1 }{ \alpha } \)
β = 1.7 x 107 α = ?
∴ \(\alpha =\frac { 1 }{ \beta } \)
\(=\frac { 1 }{ 1.7\times { 10 }^{ 7 } } \)
\(\alpha =\frac { 1 }{ 1.7\times { 10 }^{ 7 } } =5.88\times { 10 }^{ -8 }\)
40.
(n-2) f ஆர்பிட்டால்களின் கூடுதல் எலக்ட்ரான்கள் நுழையும் தனிமங்களை f தொகுதி தனிமங்கள் என்கிறோம்.
இவை இடைநிலை தனிமங்களுக்கு உள்ளேயே இடைநிலை வரிசையை உண்டாக்குகின்றன. எனவே இவை உள்இடைநிலை தனிமங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
f தொகுதி தனிமங்கள் அருமண்தனிமங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
உள் இடைநிலைத் தனிமங்கள் இரண்டு வரிசைத் தொடர்களைக் கொண்டுள்ளன. அவை
1. லாந்தனாய்டு வரிசை (4f தொகுதி தனிமங்கள்) மற்றும்
2. ஆக்டினைடு வரிசை (5f தொகுதி தனிமங்கள்)
41.
அம்மோனியா முன்னிலையில் யூரியாவுடன் போரிக் அமிலத்தை சேர்த்து 800 - 1200 K வெப்பநிலையில் உருக்கும் போது போரான் நைட்ரைடு உருவாகிறது.
B(OH)3 + NH3 \(\xrightarrow [ \Delta ]{ 800-1200K } \)BN + 3H2O
42.
மேற்கண்டுள்ள பிரித்தெடுத்தலில், ஒரு காரத்தன்மை உடைய இளக்கியான சுண்ணாம்புக்கல் (CaCO3) பயன்படுத்தப்படுகிறது. இத்தாதுவில் காணப்படும் சிலிக்கா கனிமக் கழிவானது அமிலத்தன்மையை பெற்றிருப்பதால், சுண்ணாம்புக்கல் அதனுடன் இணைந்து கால்சியம் சிலிக்கேட் எனும் கனிமக் கசடினைத் தருகிறது.
CaO(S)+ SiO2(S) ⟶ CaSiO3(S)
இளக்கி கனிமக்கழிவு கனிமக் கசடு
43.
i) 2 – மெத்தில் புரப்பன் -2- ஆல் < பியூட்டன் -2- ஆல் < பியூட்டன் -1- ஆல்

ii) புரப்பன் -2- ஆல் < புரப்பன் -1- ஆல், < புரப்பன் -1,3- டையால் <புரப்பன் -1,2,3- டையால்
44.
1. பால்மங்கள் உணவுத் தொழிலில் பயன்படுகின்றன. உணவுப்பொருட்களான பால், கிரீம், வெண்ணெய் போன்றவை பால்மங்களாகும்.
2. மருந்துகள் சம்பந்தமான தொழிலில் பால்மங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. அநேக மருந்துகள் பால்மங்களாகும். எ.கா: மெக்னீஷியா பால்மமானது வயிற்று உபாதைகளை சரிசெய்ய பயன்படுகிறது. அநேக லோஷன்களும், களிம்புகளும் பால்மங்களாகும்.
3. பால்ம பெயிண்டுகள், மை போன்றவை பால்மங்களாகும்.
4. அயனித் தன்மையற்ற பால்மங்கள் அவற்றின் குறைந்த நச்சுத்தன்மை காரணமாக பெயர் பெற்றவை.
5. நேர்மின் பால்மங்கள் எதிர் நுண்ணுயிர் பண்புகளை பெற்றவை.
6. விவசாயத் தொழிலில், பூச்சுக் கொல்லிகள், பூஞ்சை கொல்லிகள் மற்றும் உயிர்கொல்லிகள் ஆகியவற்றிற்கு தாங்கிகளாக பயன்படுகின்றன.
7. முடி மற்றும் தோல் கண்டிஷனர்களுக்கும் தாங்கிகளாக பயன்படுகிறது.
8. இரத்தம், தாவரம் மற்றும் விலங்கு செல்களிலுள்ள புரோட்டாபிளாசம் மற்றும் குடல்களிலுள்ள கொழுப்பு ஆகியவை பால்மங்களாகும்.
45.
\(\mathrm{Ag}_2 \mathrm{CrO}_4(\mathrm{~S}) \rightleftharpoons 2 \mathrm{Ag}^{+}(\mathrm{aq})+\mathrm{CrO}_4{ }^{2-}(\mathrm{aq})\)
(S) (2S) (S)
[Ag+] = 2S + 0.01
\(\simeq\)0.01
(\(\because\) 2S << 0.01)
\(\begin{aligned} {\left[\mathrm{CrO}_4{ }^{2-}\right]=\mathrm{S}} \end{aligned}\)
\(\begin{aligned} \mathrm{AgNO}_3(\mathrm{~s}) \rightleftharpoons \mathrm{Ag}^{+}(\mathrm{aq})+\mathrm{NO}_3^{-}(\mathrm{aq}) \end{aligned}\)
0.01 0.01 0.01
\(\begin{aligned} \mathrm{K}_{\mathrm{sp}}=\left[\mathrm{Ag}^{+}\right]^2\left[\mathrm{Cro}_4{ }^{2-}\right] \end{aligned}\)
\(\begin{aligned} 1 \times 10^{-12}=(0.01)^2(\mathrm{~s}) \end{aligned}\)|
\(\begin{aligned} \mathrm{S}=\frac{1 \times 10^{-12}}{10^{-4}}=1 \times 10^{-8} \mathrm{M} \end{aligned}\)
46.
ஒரு வேதிவினையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேதிக்கூறுகள் (வினைபடுபொருட்கள்) வினைபுரிந்து நேரடியாக விளைபொருட்களை ஒரே படியில் உருவாக்கினால் அவ்வினையானது அடிப்படை வினை எனப்படும். இதன் வேகவிதியில் அடுக்குக் குறியானது, சமன்பாட்டில் உள்ள வேதி வினைக்கூறு விகிதத்திற்கு சமமாக இருக்கும்
A + B → விளைபொருட்கள் எனில் வேகம்= k [A] [B]
ஃ இது ஓர் அடிப்படை வினையாகும்
| வ.எண் | வினை வகை | மூலக்கூறு எண் |
| 1. | சோதனை மூலம் கண்டறியப்பட்ட வேக விதியில் இடம் பெற்றுள்ள செறிவு உறுப்புகளின் அடுக்குகளின் கூடுதல் வினை வகை எனப்படும். | ஒரு அடிப்படை வினையில், இடம்பெறும் வினைபடு மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கை மூலக்கூறு எண் எனப்படும். |
| 2. | பூஜ்யமாகவோ, பின்னமாகவோ பிற முழு எண்களாகவோ இருக்கலாம். | இது எப்போதும் முழு எண் மதிப்பினை மட்டுமே பெறும். பூஜ்யமாகவோ, பின்ன எண்ணாகவோ இருக்க முடியாது. |
| 3 | ஒட்டு மொத்த வினைக்கும் வினை வகை வழங்கப்படுகிறது. | வினை வழிமுறையில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு படிநிலைக்கும் மூலக்கூறு எண் வழங்கப்படுகிறது |
47.
1. ஃபுளுரின் மற்ற ஹாலஜனை விட அதிக எலக்ட்ரான் கவர் தன்மையைப் பெற்றுள்ளது.
2. ஃபுளுரினைத் தவிர மற்ற ஹாலஜன்கள் நேர் ஆக்ஸிஜனேற்றம் உடையது.
3. இது அதிக எலக்ட்ரான் நாட்ட பண்பு உடையது.
உதாரணம் :
Cl2 O → +1
OF2 → -1
48.
| வ.எண் | படிக வடிவமுடைய திடப்பொருள் | படிக வடிவமற்ற திடப்பொருள் |
|---|---|---|
| 1 | இதன் உட்கூறுகள் நீண்ட எல்லை வரையில் ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. | ஒழுங்குத் தன்மையின் எல்லை குறைவு. இதன் உட்கூறுகள் அங்கும் இங்கும் ஒழுங்கின்றி அமைந்துள்ளன. |
| 2 | குறிப்பிட்ட வடிவமுடையது. | ஒழுங்கற்ற வடிவமுடையது. |
| 3 | படிக வடிவமுடைய திடப்பொருட்கள் பொதுவாக திசையொப்பு (aniotropic) பண்பற்றவை. | இவைகள் திரவங்களைப் போன்று திசையொப்புப் பண்பு (isotropic) உடையவை. |
| 4 | இவைகள் உண்மையான திடப்பொருட்களாகக் கருதப்படுகின்றன. | இவைகள் போலி திடப்பொருட்கள் அல்லது அதிகுளிரவைக்கப்பட்ட திரவங்களாகக் கருதப்படுகின்றன. |
| 5 | வரையறுக்கப்பட்ட உருகுதல் வெப்ப மதிப்பினைப் பெற்றுள்ளன. | இவைகள் வரையறுக்கப்பட்ட உருகுதல் வெப்ப மதிப்பினைப் பெற்றிருப்பதில்லை. |
| 6 | இவைகள் துல்லியமான உருகுநிலையைப் பெற்றுள்ளன | வெப்பநிலை அதிகரிக்கும் போது இவைகள் சீராக, மென்மையாக மாறும் இயல்புடையவை. எனவே இப்பொருட்களை எவ்வடிவமாகவும் வார்க்க இயலும். |
| 7 | எடுத்துக்காட்டு: NaCl, வைரம் போன்றவை |
எடுத்துக்காட்டு: இரப்பர், கண்ணாடி போன்றவை |
49.
அ) K4 [Fe (CN)6]
ஆ) [Fe(CO)5]
இ) [Co (NH3)5 (NO2)]2+
ஈ) [Co(NH3)6]2 (SO4)3
உ) Na3 [CrF4 (OH)2]
50.

12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards