12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Commerce Reduced Syllabus Annual Exam Model Question Paper with Answer key - 2021
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
பணச் சந்தைக்கு எடுத்துக்காட்டு தருக
2.
முதல் நிலைச் சந்தை என்றால் என்ன?
3.
புதுமைப்படுத்துதல் என்றால் என்ன?
4.
பெயரிடல் என்றால் என்ன?
5.
மனித வள மேலாண்மையின் இயல்புகளில் ஏதேனும் இரண்டு கூறுக.
6.
புறத்தோற்றமற்ற பத்திர கணக்கு என்றால் என்ன ?
7.
ஊகவணிகர்களின் வகைகள் யாவை?
8.
மூலதனச் சந்தை என்றால் என்ன?
9.
முக்கிய முடிவுப் பகுதிகள் (KRA) என்பது என்ன?
10.
மேலாளர் என்பவர் யார்?
11.
COPRA என்பதன் விரிவாக்கம் யாது?
Consumer precious Act
Consumer primary Act
Consumer Protection Act
Consumer prevention Act
12.
புறத்தோற்றமற்ற பத்திரங்களினால் முழுமையாக நீக்கப்படுவது
இழப்பு
திருட்டு
மோசடி
இவை அனைத்தும்
13.
அரைத்த மாவையே அரைக்காமல் புதிய பொருட்களை அறிமுகப்படுத்தி வெற்றி காண்பவர்கள்
முதல் தலைமுறை தொழில் முனைவோர்
நவீன தொழில் முனைவோர்
பாரம்பரிய தொழில் முனைவோர்
மேற்கூறிய எவருமில்லை
14.
_________ பத்திரங்கள் ஒரு எதிரெதிர் அல்லது இணையான சந்தையாகும்.
தங்க முனை
கடனீட்டு முனை
வைர முனை
பங்கு முனை
15.
அயல்நாட்டு மாற்று சீட்டுகள் எத்தனை படிகளில் தயாரிக்கப்படுகிறது?
ஐந்து
மூன்று
இரண்டு
நான்கு
16.
கீழ்க்கண்டவற்றுள் எது நிர்வாகத்தின் பணியாகும்?
நிர்வாகம் மற்றும் ஆளுமை
மேலாளர் மற்றும் நிர்வாகி
சட்டம் மற்றும் தீர்மானித்தல்
இவற்றில் எதுவுமில்லை
17.
சந்தையிடுகை செயலானது புரட்சியை காட்டிலும் _________ வளர்ச்சிக்கு மேலான ஒன்றாகும்.
மனித
பரிணாம
பொருளாதார
சந்தை
18.
பயிற்சி பணியாளர்களிடையே _________ பற்றிய நல் மனப்பாங்கு, நம்பகத்தன்மை ஏற்படுத்தப்படுகிறது.
பணி
நடத்தை
சம்பளம்
இவற்றில் ஏதுமில்லை
19.
நிறுமச் சட்டத்தின் படி கீழ்கண்ட அதிகாரங்களில் ஒன்று இயக்குநர்களின் குழுவால் செயல்படுத்த முடியும்
நிறுமத்தை விற்கும் அதிகாரம்
அழைப்பு பணத்துக்கு அழைப்பு விடும் அதிகாரம்
செலுத்தப்பட்ட மூலதனத்திற்கு மேல் கடன் வாங்கும் அதிகாரம்
தணிக்கையாளர்களை மீண்டும் பதவி நியமனம் செய்யும் அதிகாரம்
20.
அறுதியிடப்படாத பொருளைப் பொறுத்தவரை வாங்குநருக்கு எப்போது உரிமை மாறுகிறது?
அறுதியிடப்பட்ட பின்பு
ஒப்பந்தத்தின் பேரில் சரக்கினை ஒதுக்கி வைக்கும் போதும்
நிறையிட்டு அளந்த பிறகு
அ மற்றும் ஆ
21.
வணிகத்தின் பரந்த சூழல் ஒரு ______ காரணியாகும்.
கட்டுப்படுத்த முடியாத
கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது
சமாளிக்கக்கூடியது
சமாளிக்க முடியாதது
22.
நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம் _____.
அதிகமான இலாபம்
குறைவான இலாபம்
நுகர்வோர் திருப்தி
சமுதாயத்திற்கு சேவை
23.
பண்டங்கள் மற்றும் பணிகளை பணத்தின் அடிப்படையில் மாற்றம் செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
விற்பனையாளர்
சந்தையிடுகையாளர்
வாடிக்கையாளர்
மேலாளர்
24.
சரியான மனிதனை சரியான வேலையில் வைப்பது என்பது
பயிற்சி
பணியமர்த்தல்
பதவி உயர்வு
மாற்றம்
25.
மனித வளம் என்பது ஒரு _________ சொத்து.
கண்ணுக்கு புலனாகும்
கண்ணுக்கு புலனாகாத
நிலையான
நடப்பு
26.
நாட்டில் _____ பங்குச் சந்தைகள் உள்ளன.
21
24
20
25
27.
மூலதன சந்தை _____ ஐ வழங்குவதில்லை.
குறுகிய கால நிதி
கடனுறுதி பத்திரங்கள்
சமநிலை நிதி
நீண்ட கால நிதி
28.
ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்?
ஒரே ஒரு முறை
இரண்டு முறை
மூன்று முறை
பல முறை
29.
குறியிலக்கு மேலாண்மை செயற்முறையின் முதல் நிலை எது?
முக்கிய முடிவு பகுதியை நிர்ணயிப்பது
நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வது
குறிக்கோள்களுடன் வளங்களைப் பொருத்துவது
அமைப்பின் குறிக்கோள்களை வரையறுப்பது
30.
31.
நிதிச் சந்தை யாருக்கு உதவி புரிகின்றது?
32.
தரவரிசைக் கோட்பாடு என்பதை விளக்குக. (அல்லது) தரவரிசை தொடர் என்றால் என்ன? (அல்லது) ஆணையுரிமை வரிசை என்றால் என்ன?
33.
மரபு வழி மற்றும் நவீன வழி - நவீன சந்தையிடுகை கலவை கூறுகள் யாவை?
34.
சமூக சந்தையிடுதலின் நோக்கங்கள் யாவை?
35.
நுகர்வோர் பாதுகாப்பு அவசியமா?
36.
சந்தையிடுகையாளரின் பங்களிப்பு எவையேனும் மூன்றினை குறிப்பிடுக.
37.
பயிற்சி அளிப்பவர் மற்றும் பயிற்சி பெறுபவர் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
38.
மனோபாவச் சோதனை என்றால் என்ன?
39.
ஆட்சேர்ப்பு வரையறு.
40.
செயலூக்கமளித்தலின் நன்மைகளைக் குறிப்பிடுக.
41.
மேலாண்மையின் அடிப்படைக் கருத்துக்களை விளக்குக.
42.
சந்தையிடுகை பணிகளில் வசதிப் பணிகளை விளக்குக. (அல்லது) சந்தையிடுகை பணிகளின் துணைப் பணிகள் யாவை?
43.
பயிற்சியின் நோக்கம் யாது? அல்லது பயிற்சியின் அவசியம் என்ன?
44.
நிறுமச் செயலரின் பொறுப்புகளை விவரி.
45.
46.
வியாபார அடிப்படையிலான தொழில் முனைவு வகைப்பாட்டினை விவரித்து எழுதுக. (ஏதேனும் 5)
47.
மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் பிரச்சனைகளை விவரி. (ஏதேனும் 5)
48.
வியாபாரத்தின் நுண்ணிய சூழல் காரணிகளை விளக்கு. (ஏதேனும் 5)
49.
நுகர்வோர் பாதுகாப்பில் நுகர்வோரின் பங்கினை விளக்குக.
50.
மனித வள மேலாண்மையின் முக்கியத்துவத்தை விளக்குக. (ஏதேனும் 5)
51.
வணிக இரசீதின் இயல்புகள் மற்றும் வகைகளை விவரி.
52.
மூலதனச் சந்தையின் சிறப்பியல்புகளை விவாதிக்க.
53.
விதிவிலக்கு மேலாண்மையின் குறைபாடுகள் பற்றி விவரி.
54.
மேலாண்மையின் பல்வேறு பணிகளை விளக்குக. (ஏதேனும் 5)
1.
(i) கருவூலச் சீட்டுகள்
(ii) வணிக இரசீதுகள்
(iii) வைப்பு சான்றிதழ்கள்
(iv) அரசுப் பத்திரங்கள்
2.
நிறுமங்கள் முதன் முதலில் பத்திரங்களை விற்பனை செய்வதில் பங்குபெறும் அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்க பயன்படுத்தப்படும் சொல் முதல் நிலைச் சந்தை எனப்படும்
3.
வியாபார உலகில் செய்யப்படும் மாற்றங்களை எதிர்கொள்ள ஊழியர்களையும், அமைப்பையும் தயார்நிலைப்படுத்தும் செயல்பாடு ஆகும்.
4.
போட்டி பொருட்களிலிருந்து வேறுபடுத்தி காண்பதற்கு ஒரு பெயரையோ அல்லது வணிகக் குறியோ இடப்படுவதற்கு பெயரிடல் எனப்படுகிறது.
5.
(i) உலகளவில் பொருத்தமானது: (Universally relevant) மனித வள மேலாண்மை உலகளவில் பொருந்தக்கூடியதாக உள்ளது.
(ii) இலக்கு சம்பந்தமானது:
ஒரு நிறுவனத்தில் உள்ள மனித வளத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் அந்நிறுவனத்தின் குறிக்கோள்களை அடைவது சாத்தியமாகிறது.
6.
(i) புறத்தோற்றமற்ற பத்திரக் கணக்கு என்பது ஒருவர் மின்னணு அல்லது புறத்தோற்றமற்ற வடிவத்தில் வாங்கக்கூடிய அனைத்து பங்குகளையும் குறிக்கிறது.
(ii) புறத்தோற்றமற்ற பத்திரக் கணக்கு, சாதாரண வங்கிக் கணக்கைப் போலவே பங்குகள், பத்திரங்கள், அரசாங்கப் பத்திரங்கள், பரஸ்பர நிதிகள் மற்றும் பரிமாற்ற வர்த்தக நிதிகள் போன்றவைகளை வைத்துள்ளது.
7.
(i) இந்தியாவில் பங்கு மாற்றகங்களில் நான்கு வகையான ஊக வணிகர்கள் செயல்படுகின்றனர்.
(ii) அவர்கள் காளை, கரடி, கலைமான், முடவாத்து என்று அழைக்கப்படுகின்றனர்.
8.
(i) மூலதனச் சந்தை என்பது நிதி பத்திரங்களான பிணையங்கள், மற்றும் பங்குகளின் வர்த்தகத்தில் ஈடுபடும் வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் கூடும் ஒரு சந்தை ஆகும்.
(ii) தனிநபர் மற்றும் நிறுவனங்கள் போன்ற பங்கேற்பாளர்களால் வாங்குதல் மற்றும் விற்றல் மேற்கொள்ளப்படுகிறது.
9.
முக்கிய முடிவு பகுதிகள்:
(i) அமைப்பின் குறிக்கோள்களின் அடிப்படையில் முக்கிய முடிவுப் பகுதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
(ii) முக்கிய முடிவுகள் பகுதிகள் (Key Result Area - KRA) முன்னுரிமை அடிப்படையில் அமைக்கப்படுகிறது.
(iii) முக்கிய முடிவுப் பகுதிகள் ஒரு அமைப்பின் வலிமையை குறிக்கிறது. இலாபம். சந்தை நிலவரம், புதிய கண்டுபிடிப்புகள் போன்றவை முக்கிய முடிவுப் பகுதிகளுக்கு உதாரணங்களாகும்.
10.
(i) ஒரு நிறுவனத்தின் மேலாண்மைப் பணியை ஏற்பவர் மேலாளர்.
(ii) ஒரு மேலாளர் என்பவர் நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் பணி சார்ந்த செயல்பாடுகள் என இரண்டினையும் மேற்கொள்கிறார்.
11.
(c)
Consumer Protection Act
12.
(d)
இவை அனைத்தும்
13.
(b)
நவீன தொழில் முனைவோர்
14.
(a)
தங்க முனை
15.
(b)
மூன்று
16.
(c)
சட்டம் மற்றும் தீர்மானித்தல்
17.
(b)
பரிணாம
18.
(a)
பணி
19.
(b)
அழைப்பு பணத்துக்கு அழைப்பு விடும் அதிகாரம்
20.
(b)
ஒப்பந்தத்தின் பேரில் சரக்கினை ஒதுக்கி வைக்கும் போதும்
21.
(a)
கட்டுப்படுத்த முடியாத
22.
(c)
நுகர்வோர் திருப்தி
23.
(b)
சந்தையிடுகையாளர்
24.
(b)
பணியமர்த்தல்
25.
(b)
கண்ணுக்கு புலனாகாத
26.
(b)
24
27.
(a)
குறுகிய கால நிதி
28.
(d)
பல முறை
29.
(d)
அமைப்பின் குறிக்கோள்களை வரையறுப்பது
30.
(c)
31.
1. தனிநபர்கள்
2. விவசாய துறை
3. தொழில் துறை
4. சேவை துறை
5. நிதி நிறுவனங்களான வங்கிகள்
6. காப்பீட்டு துறை
7. அரசுத் துறை
32.
1. ஆணையுரிமையின் வரிசை உயர்மட்ட அலுவலரிடமிருந்து கீழ் மட்டத்தில் உள்ள பணியாளர் வரை படிப்படியாக கீழ்நோக்கி வருவதைக் குறிக்கும்.
2. உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை அனைத்து மேலாளர்களையும் அனைத்து மட்டங்களிலும் இணைப்பதன் மூலம் அதிகாரப்பூர்வமான தெளிவான ஒரு ஆணையுரிமை வரிசை இருக்க வேண்டும் என்பதை இக்கோட்பாடு விளக்குகின்றது.
33.
34.
1. சமூக சந்தைப்படுத்துதலின் முக்கிய நோக்கம் சமூக நலனை பாதுகாப்பது ஆகும்.
2. சமூகம் விரும்பத்தக்க மற்றும் உடல் நலனைப் பாதுகாக்கும் பொருள்களை சந்தையிடுவதை சமூக சந்தைப்படுத்துதலைக் குறிக்கும்.
3. சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் அல்லது பாதிக்கும் காரணிகளை நீக்கி தரமான வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் சமூக சந்தைப்படுத்துதலின் முக்கிய நோக்கமாகும்.
35.
(i) ஆம். நுகர்வோர் பாதுகாப்பு அவசியம்.
(ii) ஏனெனில் நவீன உலகில் நுகர்வோர்கள் வணிகத்தின் முக்கிய பகுதியாக உள்ளனர்.
(iii) அவர்கள் வியாபாரத்தின் முடிவுகளை தீர்மானிக்கிறார்கள்.
(iv) இருப்பினும் விற்பனையாளர்கள் சுரண்டப்படுகிறார்கள்.
(v) எனவே நுகர்வோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி நுகர்வோரை பாதுகாப்பது அவசியம்.
36.
(1) தூண்டுபவர் (Instigator)
சந்தையின் மேம்பாடு கருதி அவ்வப்போது சந்தையிடுகையின் வாய்ப்புகள் மற்றும் சந்தையில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கூர்ந்து கவனித்து அதற்கு ஏற்றவாறு சந்தையிடுகலவையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு புதிய கோணத்தை சந்தையிடுகையாளர் ஏற்படுத்துகிறார்.
(2) புதுமைபுகுத்துநர் (Innovator)
சந்தையிடுகையாளர் தனது பண்டங்கள் மற்றும் பணிகளை சந்தையில் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்துவதற்கு நடைமுறையில் இருந்து வரும் பொருட்களின் இயல்பை அதிகரித்தல் மதிப்பை கூட்டுதல், விலையில் மாற்றத்தை ஏற்படுத்துதல், பொருள்கொண்டு சேர்க்கும் முறை, தொழில் முறையில் மாற்றம் மற்றும் உற்பத்தி முறையில் மாற்றம் போன்றவற்றை செய்து வருகிறார்.
(3) ஒருங்கிணைப்பாளர் (Integrator)
பண்டங்கள் மற்றும் பணிகள் பற்றி நுகர்வோர் மற்றும் வாடிக்கையாளரின் மத்தியில் கருத்துக்களை பெற்றும் அதன் அடிப்படையில் அமைப்பின் ஒருங்கிணைப்பு பணியினை மேற்கொள்கிறார்.
37.
பயிற்சி அளிப்பவர்:
(i) பணியாளருக்குத் திறன்களை போதித்து பணியை சிறப்பாக செய்ய தயார் செய்யும் ஒரு நபர் பயிற்றுவிப்பாளர் ஆவார்.
(ii) பயிற்றுவிப்பவர் என்பவர் பயிற்சியாளர், ஆசிரியர் வழிகாட்டல், ஆலோசகர்,
ஆலோசகர் கையேடு, குரு, மேலாளர், கையாளுநர், ஆசிரியர் மற்றும் கல்வியாளர் போன்றோர்.
பயிற்சி பெறுபவர்:
(i) ஒரு வேலையின் திறனை கற்றுக் கொள்ளும் நபரே பயிற்சி பெறுபவர் ஆவர்.
(ii) பயிற்சி பெறுபவர் மனிதவள மேன்மைத் துறை அல்லது மேற்பார்வையாளரின் பரிந்துரையின் அடிப்படையிலும் தன் சுய ஆர்வத்தின் அடிப்படையிலும் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுகிறார்.
38.
(i) மனோபாவச் சோதனை என்பது குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பதாரர் எந்த அளவிற்கு பொருத்தமானவர் என்பதை அளவிட மேற்கொள்ளப்படும் உளவியல் தேர்வு ஆகும்.
(ii) இச்சோதனை பணியாளரின் எதிர்கால செயல்திறனை முன்கணிக்கவும் பயன்படுகிறது.
39.
1. பெர்க்மேன் மற்றும் டெய்லர் அவர்களின் கண்ணோட்டத்தில் "ஆட்சேர்ப்பு என்பது தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இருக்கும் இடத்தை அறிவது, அடையாளம் காண்பது மற்றும் ஈர்க்கும் செயல்முறை ஆகும்.
2. எட்வின் பி பிலிப்போ அவர்களின் கூற்றுப்படி " நிறுவன காலியிடங்களுக்கு திறன் வாய்ந்த வேலையாட்களை தேடி தூண்டுவதும் மற்றும் அவர்களை நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பிக்க ஊக்குவிப்பதும் ஆட்சேர்ப்பு செயல்முறை எனப்படுகிறது".
40.
1. செயலூக்கமளித்தல் மூலமே நிறுவனத்தின் நோக்கங்களை அடைய முடியும்.
2. ஒரு பணியை விரைவாக செய்து முடிப்பதிலும், பணியாளர்களின் பணியின் மீதான விருப்பத்தை வளர்ப்பதிலும் செயலூக்கமளித்தல் பயன்படுகிறது.
3. ஒரு வளமிக்க தலைமையின் கீழ் செயல்படுவதால் மேலாண்மையின் இலக்கை எளிதில் அடைய முடிகிறது.
41.
1. அறிவின் தொகுப்பு:
i. தற்போது மேலாண்மை உயர் தனிச்சிறப்பு வாய்ந்த மேலாண்மைக் கோட்பாடு மற்றும் தத்துவத்தை உருவாக்கியுள்ளது.
ii. வணிக உலகம் அல்லது அரசுத்துறை அல்லது தனியார் துறை போன்றவற்றின் வேலை வாய்ப்பு உலகில் வெற்றிகரமாக நுழைவதற்கு சிறந்த கடவுச்சீட்டு போன்றது மேலாண்மை ஆகும்.
2. மேலாண்மைக் கருவிகள்:
கணக்கியல், வணிகச் சட்டங்கள், உளவியல், புள்ளியியல், பொருளியல், தரவு செயலாக்கம் என மேலாண்மையின் கிளைகள் பல்கிப் பெருகி விரிவடைந்துள்ளது.
3. தனிப் பாடப்பிரிவு:
i. பல்வேறு பல்கலைக்கழகங்களும், உயர்கல்வி நிறுவனங்களும் மேலாண்மைக் கல்வியை தனிப் பாடப்பிரிவாக அங்கீகரித்திருக்கின்றன.
ii. ஏற்றுமதி மேலாண்மை, ஆள்சார் மேலாண்மை, உற்பத்தி மேலாண்மை, சந்தை மேலாண்மை, நிதி மேலாண்மை போன்ற சிறப்புப் பாடப் பிரிவுகள், பயிற்சித் திட்டங்கள் போன்றவற்றின் மூலம் மேலாண்மை நவீனமயமானதாகவும், பிரபலமடைந்தும் வருகின்றது.
4. சிறப்பீடுபாடு:
வணிகத்தின் ஒவ்வொரு செயல்பாட்டுப் பகுதியையும் சீரிய முறையில் மேலாண்மை செய்து வணிகத்தை சிறப்பாக நிர்வகிக்க உயர்கல்வித் தகுதியும், முறையான பயிற்சியும் பெற்ற, உரிய முன் அனுபவமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்த வேண்டும்.
5. நடத்தை விதி:
i. நுகர்வோர் சார்ந்த சந்தைப்படுத்துதல் கருத்தாக்கம் என்பது பெரு நிறுவன நடத்தை விதியினையும் பிரதிபலிப்பதாகும்.
ii. நுகர்வோர் இயக்கங்களின் அழுத்தம், தொழிற்சங்க வாதம், பொதுமக்கள் கருத்து மற்றும் சட்டம் ஆகியவை அறம் சார்ந்த விதிகளைத் தோற்றுவித்து மேலாண்மையை வலுவாகத் தூண்டுகிறது.
6. பணி ரீதியானதொரு அமைப்பு:
பல்வேறு நாடுகளில் மேலாண்மைப் பிரிவுகளில் அறிவுப் பரவலாக்கம் ஏற்படவும், மேலாண்மை சிறப்புத் தொழில் குறித்த பொதுமக்கள் மனதில் ஒரு சிறந்த தோற்றத்தை உருவாக்கவும் வணிக மேலாண்மை சங்கங்கள் நடவடிக்கை மேற்கொள்கிறது.
42.
1. நிதியிடல்:
i. நீண்ட கால நிதியிடல்
ii. மத்திய கால நிதியிடல்
iii. குறுகிய கால நிதியிடல்
2. இடர் ஏற்றல்
i. கால இடர்பாடு
ii. இடம் சார்ந்த இடர்பாடு
iii. போட்டி இடர்பாடு
iv. தேவை மாற்று இடர்பாடு
v. இயற்கை சார்ந்த இடர்பாடு
vi. மனித தொடர்பான இடர்பாடு
vii. அரசியல் தொடர்பான இடர்பாடு
3. சந்தை தகவல்:
கிளார்க் மற்றும் கிளார்க் என்பவரின் கூற்றுப்படி, "சந்தை தகவல் என்பது பொருட்கள் சந்தையிடுவது தொடர்பாக உள்ள உண்மைகள், எதிர்பார்ப்புகள், எண்ணங்கள் மற்றும் அனைத்து இதர தகவல்களை உள்ளடக்கியது ஆகும்.
4. தரப்படுத்துதல்:
i. தரப்படுத்துதல் என்பது பொருட்களை இயல்பான தரத்தின் அடிப்படையில் பிரித்து அமைப்பது ஆகும்.
ii. பொருட்களை தரப்படுத்துவதில் பல காரணிகள் தீர்மானிக்கின்றன.
iii. பொருளின் அளவு, வண்ணம், சுவை மற்றும் அதன் தோற்றம் போன்றவையாகும்.
5. வகைப்படுத்துதல்:
நிர்ணயம் செய்யப்பட்ட தர அலகுகளின் அடிப்படையில் பொருட்களை பல வகைகளாகப் பாகுபாடு செய்தலே வகைப்படுத்துதல் எனப்படும்.
6. பெயரிடல்:
போட்டி பொருட்களிலிருந்து வேறுபடுத்தி காண்பதற்கு ஒரு பெயரோ அல்லது வணிக குறியோ இடப்படுகிறது. இதுவே பெயரிடல் எனப்படும்.
7. கட்டுமம்:
i. பொருட்களை விற்பனை செய்வதற்கு முன்னர் எளிதில் கையாளுவதற்கு ஏற்றவாறு உறையிடுவதே கட்டுமம் எனப்படுகிறது.
ii. பொருட்கள் உடைதல், வீணாகுதல், கசிவு ஏற்படுதல் மற்றும் சேதம் ஏற்படுதல் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பதற்காக கட்டுமம் செய்யப்படுகிறது.
8. விலையிடல்:
i. விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக முடிவெடுப்பது வணிகர்களின் ஒரு முக்கிய பணியாகும்.
ii. இத்தகைய முடிவானது அமைப்பின் வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயிப்பதில் அதிக அளவு சார்ந்துள்ளது.
43.
1. பணியின் தரத்தினை உயர்த்துதல்:
i. பணியில் கவனம் செலுத்துவதுடன் பயிற்சி ஒரு குறிப்பிட்ட பணியாளரின் திறனை மேம்படுத்துகிறது.
ii. இது பணியாளரின் பணி தரத்தினை அதிகரிக்க வகை செய்கிறது.
2. பணியாளரின் வளர்ச்சியை மேம்படுத்துதல்:
பயிற்சி பெற்ற ஊழியர்கள் தங்கள் வேலையில் திறன் மிக்க ஊழியர்களின் செயல்திறன் மேம்பாட்டில் புதிய திறன்களை ஊக்குவிப்பது பயிற்சி ஆகும்.
3. வழக்கொழிவை தடுத்தல்:
i. சமீபத்தில் தொழில்நுட்பங்கள் மற்றும் நுட்பங்களைப் பற்றிய கூடுதல் அறிவைக் கற்றுக் கொள்ள பயிற்சி அளிக்கிறது.
ii. பணியாளர்கள் தற்கால தொழில்நுட்பம் மற்றும் போக்குடன் புதுப்பிக்கப்படுகிறார்கள்.
4. புதிய பணியாளர்களுக்கு விழிப்பூட்டல்:
பயிற்சியின் மூலம் புதிய பணியாளர்கள், வேலை முறைமை, நுட்பங்கள், அறிக்கைகள், பணியில் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் உபகரணங்களை பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் வேலை செய்யும் கலாச்சாரம் போன்றவற்றை கற்றுக் கொள்ளலாம்.
5. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்:
i. வேலையில் ஈடுபடும்போது பணியினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வினை முறையான பயிற்சியின் மூலம் பெறுகின்றனர்.
ii . இது வேலை இடத்தில் பணி பாதுகாப்பினை மேம்படுத்த மற்றும் விபத்துக்களை தவிர்க்க உதவுகிறது.
6. ஊழியர்களை ஊக்குவித்தல்:
i. ஒரு பணியாளர் தன் பதவி திட்டமிடுதலுக்கு ஏற்ப தொடர்ந்து தன் மேம்பாட்டிற்காக தன் பணி பாதையில் முன்னேறி செல்ல அவசியமாகிறது.
ii. பயிற்சியானது அவர்களுக்கு செயலூக்கம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் நிர்வாகத்தின் மீதான அக்கறையையும், மறு உணர்வையும் ஊட்டுகிறது.
7. அதிக உற்பத்தித் திறன் மற்றும் இலாபங்கள்:
சிறந்த பயிற்சியளிக்கப்பட்ட ஊழியர்களின் பங்களிப்பு மேலும் திறன்களையும் உத்திகளையும் அளித்து வேலையினை கச்சிதமாகவும், விரைவாகவும் முடிப்பதற்கு பயிற்சி முறை உதவுகிறது.
8. செலவு குறைப்பு:
i. பயிற்சியளிக்கப்பட்ட ஊழியர்கள் வளங்களை திறமையான முறையில் பயன்படுத்தலாம்.
ii. வள ஆதாரங்களை வீணடிக்க எந்த வாய்ப்புகளும் இல்லை.
iii. இது செலவுகளைக் குறைக்க வழிவகுக்கிறது.
9. குறைந்த மேற்பார்வை:
பயிற்சி அளிக்கப்பட்ட ஊழியர்கள் தங்கள் பணியை செய்வதற்கு தேவையான அனைத்து தெளிவு நிலையைப் பெற்றிருப்பதால் குறைவான மேற்பார்வை போதுமானது.
10. சிறந்த ஒத்திசைவு:
ஊழியர்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய மாற்றங்களை தொடர் பயிற்சியின் மூலம் தங்களை மாற்றிக் கொள்ள முடிகிறது.
44.
I . வருமானவரிச் சட்டம் :
a) பங்குனர்களுக்கு உரிய பங்காதாயம் குறிப்பிட்ட ஆண்டில் வழங்குவது.
b) பணியாளர்களின் சம்பளம் மற்றும் வட்டி ஆகியவற்றிலிருந்து வருமான வரியை கழித்து மீதியை செலுத்துவது.
c ) கழிக்கப்பட்ட வரி அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டதா என உறுதி செய்தல்.
d) பங்குனர்கள் ஊழியர்களுக்கு வருமானவரி கழிக்கப்பட்டதற்கான சான்றிதழ் வழங்குதல்.
e) வருமானவரி அதிகாரிகளுக்கு தாக்கல் செய்ய வேண்டிய கோப்புகளை சரிபார்த்து உரிய காலக்கெடுவிற்குள் வழங்குதல்.
II. இந்திய முத்திரை வரிச்சட்டம் :
பங்கு ஒதுக்கீடு கடிதம், பங்கு சான்றிதழ் போன்ற முக்கிய நிறும ஆவணங்களில் அஞ்சல் தலை ஒட்டப்பட்டுள்ளதா என சரிபார்த்தல்.
III. விற்பனை வரிச்சட்டம் :
விற்பனை மீதான வரியை உரிய நேரத்தில் உரிய முறையில் செலுத்துவதற்கும் தேவையான ஆவணங்களை சரிபார்த்து விற்பனை வரிதுறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டதா என உறுதி செய்தல்.
IV. இதர சட்டங்கள் :
நிறும செயல்பாட்டிற்கு தேவையான அனைத்து சட்டங்களை பற்றி தெரிந்து வைத்திருப்பது நிறும செயலரின் பொறுப்பு ஆகும்.
45.
46.
(i) உற்பத்தி தொழில் செய்யும் தொழில் முனைவோர்:
இவ்வகையான தொழில் முனைவோர் ஒரு பொருள் (அ) சேவை பொருளை உருவாக்க எண்ணி தொழில் முனைவை மேற்கொள்பவர். இவர் பெரிய அல்லது சிறிய அளவில் தொழிலை ஏற்படுத்தி தன் எண்ணத்தில் உதித்த பொருளை (அ) சேவைப் பொருளை தயாரித்து சந்தை இடுபவர்.
(ii) வணிகத் தொழில் முனைவோர்:
வியாபார தொழில் முனைவோர் பொருளை வாங்கி விற்கும் செயலில் மட்டும் தன்னை உட்படுத்தி கொள்பவர். இவர் உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ பொருளை வணிகம் செய்பவர். இவர்கள் பொருளை பகிர்வதில் நிபுணத்துவம் பெற்றவர்களாக விளங்குகின்றனர். குறிப்பாக தங்களது தொழில் முனைவில் கழிவு முறையில் இலாபம் ஈட்டுகின்றனர். பொருளை வெற்றிகரமாக சந்தை இடுவது இவர்களின் பலம்.
(iii) தொழிற்சாலை தொழில் முனைவோர்:
இவர்கள் வாடிக்கையாளரின் தேவைகளை துல்லியமாக கண்டுணர்ந்து அவர்களின் தேவைக்கேற்ப பொருளை உற்பத்தி செய்யும் தொழிலை முனைகின்றனர். இவர்கள் குறுந்தொழில் முனைவோராகவோ, நடுத்தர தொழில் முனைவோராகவோ அல்லது பெருந்தொழில் முனைவோராகவோ இருக்கலாம்.
(iv) கூட்டுப்பங்கு தொழில்முனைவோர்:
கூட்டுப்பங்கு தொழில்முனைவோர் என்பவர் நிறுவனத்தை கூட்டுப்பங்கு வடிவில் தொழிலை துவங்க முனைபவர் ஆவர். தொழிலை கூட்டுறு அடிப்படையில் துவங்க தோற்றப் பணிகளை மேற்கொள்கிறார்.
கூட்டுப்பங்கு நிறும வடிவத்தில் நிர்வாகமும் நிறும உரிமையும் வெவ்வேறு நபர்களிடம் உள்ளது. இயக்குநர்கள் அவையை பல்வேறு சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற வல்லுநர்களை பல பணிகளுக்கு அமர்த்தி அன்றாட நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர்.
(v) வேளாண் தொழில் முனைவோர்:
வேளாண் தொழில் முனைவோர் வேளாண் பொருட்களை விளைவித்து சந்தையிடும் தொழிலை முனைகின்றனர். இவர்கள் பல்வேறு இயற்கை சார்ந்த உள்ளீட்டு பொருட்களான உரம், விதை, தண்ணீர், பூச்சிக்கொல்லி மருந்துகள், உழைப்பு போன்ற இடு பொருட்களை கொண்டு உணவு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். அவ்வாறு உற்பத்தி செய்த தானியங்களை நேரடியாகவோ அல்லது கூட்டுறவு அமைப்புகள் மூலமாகவோ சந்தை இடுகின்றனர்.
(vi) சில்லறை தொழில் முனைவோர்:
இவர்கள் சிறு அளவில் பொருட்களை பல்வேறு மொத்த வணிகர்களிடமிருந்து பெற்று பலதரப்பட்ட பொருட்களை இருப்பு வைத்து ஒரு கூரையின் கீழ் இறுதி நுகர்வோருக்கு பொருளைத் தருவிக்கும் தொழிலை நடத்துபவர்கள்.
47.
மகளிர் தொழில் முனைவோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் : மகளிர் தொழில் முனைவோர்கட்கு மேற்குறிப்பிட்டவாறு ஏராளமான வாய்ப்புகள் இருந்தபோதும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம் என பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. அவைகளில் சிலவற்றை கீழே விவாதிப்போம்.
(i) நிதிப்பிரச்சினை: மகளிர் தொழில் முனைவோர்களுக்கு தங்களின் தொழில் வினையில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பது மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது. தங்களின் பெயரில் சொத்துக்கள் இல்லாத மகளிர் உரிமையாளர்கள் பிணைக்கடன் பெறுவதில் பெரும் இன்னல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
(ii) இயக்கத்தடை : மகளிர் தொழில் முனைவோர்கள்
நமது நாட்டு கலாச்சாரப்படி அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய சூழலில் வீட்டுப் பொறுப்புகளையும் சுமக்க வேண்டியுள்ளது. என்னதான் தொழில் உரிமையாளராக மகளிர் உயர்ந்தாலும் தாயாக, மனைவியாக, மகளாக, மருமகளாக, மாமியாராக, பாட்டியாக தன்னுடைய கடமைகளை தட்டிக்கழிக்க முடிவதில்லை. தொழிலை துவங்கிய பின் பல்வேறு காரணங்களுக்காக மகளிர் வெளியில் செல்ல முடிவதில்லை.
(iii) கல்வியறிவு இன்மை : ஏட்டறிவு இல்லா அல்லது குறைவாக படித்துள்ள மகளிர் தொழில் முனைவோர்கள் வியாபாரம் அல்லது தொழில் தொடர்பான கருத்துக்களை முழுவதாக புரிந்து கொள்ள முடியாதவராக உள்ளனர். உதாரணமாக கணக்கை பராமரித்தல், பணம் கொடுக்கல் வாங்கலை கணக்கு வைத்துக் கொள்ளுதல், பொருளை சந்தையிடத் தொழில்நுட்ப கருத்துக்களை உள்வாங்குதல் போன்ற பல தரப்பட்ட செய்திகளை தெளிவாக விளங்கிக் கொள்ள குறைவான படிப்பு அல்லது படிப்பறிவு இன்மை மிகப்பெரிய இடையூறாக இருக்கிறது.
(iv) ஆதரவு இன்மை : மகளிர் தொழில் முனைவோர் செம்மையாக தன் வினையை செயல்படுத்த பலதரப்பட்ட மக்களின் கனிவு, பரிவு மற்றும் ஆதரவு இவைகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக கணவன், பிள்ளைகள், பெற்றோர்கள், வாழ்க்கைப்பட்ட இடம், நண்பர்கள், அயல் அண்டையில் வசிப்பவர்கள் என பலரின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
v) கடும்போட்டி : தாராளமயமான போட்டி உலகில் மகளிர் தொழில் முனைவோர்கள் பெரிய நடுத்தர தொழில்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கின்றனர். போட்டியை வலுவாக எதிர்கொள்ள விளம்பரம் மற்றும் விற்பனைப் பெருக்க யுக்திகளை கையாள வேண்டியுள்ள சூழ்நிலையில் மகளிர் தொழில் முனைவோர்கள் ஈடுகொடுக்க முடியாமல் திணறுகின்றனர்.
48.
வியாபாரத்தின் செயல் திறனை உடனடியாக பாதிக்கும் சுற்றுச் சூழலாக இருக்கும் காரணிகளை நுண்ணிய சூழல் குறிக்கிறது. இதில் பின்வருவன அடங்கும்.
(அ) நிதி அளிப்பவர்கள்:
(i) கடனீட்டுப் பத்திரதாரர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வணிகம் சிறந்த முறையில் இயங்க முக்கிய பங்கினை வகிக்கிறார்கள்.
(ii) அவர்களின் நிதிதிறன், கொள்கை உத்திகள், இடர் பற்றிய அணுகுமுறை மற்றும் நிதிசாரா அமைப்புகளின் பங்கு முக்கியமாக உள்ளது.
(ஆ) சரக்கு விற்பனையாளர்கள் :
எந்தவொரு அமைப்பிலும் மூலப்பொருட்கள் மற்றும் இதர உள்ளீடுகளின் வழங்குநர்கள் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். விநியோகிப்பாளரிடமிருந்து பெறப்படும் பொருட்கள் உற்பத்திகளில் தொடர்ச்சியான செயல்பாட்டை செயல்படுத்துகிறது.
(இ) சந்தையிடுகை இடைநிலையர்கள்:
(i) உற்பத்தி பொருளை விற்பனை செய்யவும் நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதற்கும் விநியோகிப்பாளர்களின் உதவி தேவைப்படுகிறது.
(ii) இவர்கள் நிறுவனத்தையும், நுகர்வோரையும் இணைக்கும் திகழ்கின்றனர். மொத்த விற்பனையாளர்கள் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் முகவர்கள் பொருள்களை நுகர்வோரிடம் சேர்ப்பதை உறுதி செய்கின்றனர்.
(ஈ) பொது மக்கள்:
தொழிலில் தாக்கத்தை ஏற்படுத்தும் பின்வரும் குழுக்கள் பொது மக்கள் எனப்படுகிறது.அவையானவை ஊடகக்குழு, குடிமக்கள் குழு மற்றும் உள்ளூர் பொது மக்கள் போன்ற குழுக்கள் வியாபாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்களிடம் ஒரு வியாபாரத்தை உருவாக்குவதற்கும் அல்லது அழிப்பதற்குமான திறமை உள்ளது.
(உ) வாடிக்கையாளர்கள்
ஒவ்வொரு வியாபாரத்தின் நோக்கமும் அதன் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றுவதாகும். வாடிக்கையாளரே வணிகத்தின் மன்னராக கருதப்படுகிறார் மற்றும் அவர்களைச் சுற்றியே வணிகம் உள்ளது.
(ஊ) போட்டியாளர்கள்:
அனைத்து நிறுவனங்களும் எல்லா நிலைகளிலும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.உள்ளுர், தேசிய மற்றும் உலகளாவிய அளவில் ஒரே மாதிரியான பொருள் உற்பத்தி அல்லது தயாரிப்புகள் இருப்பதால் நிறுவனங்கள் பல்வேறு நிலைகளில் போட்டியிட கூடிய நிலை ஏற்படுகிறது.
49.
1. நுகர்வோருக்கு எதிரான நேர்மையற்ற வணிக நடைமுறைகளுக்கு நுகர்வோரால் மட்டுமே இறுதியாக முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
2. அரசாங்கம் சட்டங்களை ஏட்டளவில் வைத்துக்கொண்டு இல்லாமல் விதி மீறும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து நுகர்வோர் நலனை பாதுகாக்க வேண்டும்.
3. நுகர்வோர்கள் விழிப்புணர்வுடனும் நுகர்வோரை ஒன்றிணைத்து நுகர்வோர் இயக்கமாக செயல்பட்டு நுகர்வோர் நலனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
4. அப்பாவி நுகர்வோர்களிடம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் பற்றி எடுத்துக்கூறி அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நுகர்வோர் நடவடிக்கை குழுக்கள் செயல்படுத்துதல் :
1. கிராம அளவில் நுகர்வோர் நடவடிக்கை குழுக்களை உருவாக்குதல் - நுகர்வோர் உரிமைகள் குறித்து கல்வி புகட்டுதல் வேண்டும்.
2. நுகர்வோர் குறைகள் மற்றும் புகார்கள் மீது உரிய விசாரணை செய்ய மற்றும் அவற்றிற்கு தீர்வு காண நுகர்வோர் பாதுகாப்பு முகமைகள் மூலம் அமைப்பை உருவாக்குதல் வேண்டும்.
3. வணிக நிறுவனங்களை தொழில்துறை விதிகளின்படி ஒழுங்குபடுத்த வேண்டும்.
4. தன்னார்வ நுகர்வோர் குழுக்கள் நுகர்வோர் சட்டங்கள் குறித்த தகவல்களை ஊடகங்கள் வாயிலாக நுகர்வோருக்கு வழங்கி அவர்களுக்கு ஏற்படும். பாதிப்புகளுக்கு எதிரான கல்வியறிவு புகட்ட வேண்டும்.
5. வணிகர்களின் தவறான வணிக நடவடிக்கைகளுக்கு எதிராக நுகர்வோர் இயக்கங்களை ஏற்படுத்துதல்.
6. நுகர்வோர் கூட்டுறவுகளைப் பலப்படுத்துதல்.
7. பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை நுகர்வோர் குழுக்கள் அணுகி நுகர்வோரின் பிரச்சனைகளை பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பேசி அரசின் கவனத்தை ஈர்க்கச் செய்தல்.
8. பொருட்களின் தரத்தை பரிசோதிக்க பரிசோதனைக் கூடங்களை மாவட்டம் தோறும் உருவாக்குதல்.
9. தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஊடகங்கள் மூலம் உற்பத்தியாளர் மற்றும் வணிகர் எடுக்கச் செய்தலின் தவறுகளை சுட்டிக்காட்ட செய்தல்.
10. நுகர்வோர் சட்டத்தை மீறிச் செயல்படுவோர் குறித்த புகார்களை சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கச் செய்தல்.
50.
மனித வள மேலாண்மையின் முக்கியத்துவத்தின் பல்வேறு காரணிகள் பின்வருமாறு:
(i) மனித சக்தி தேவைகளை அடையாளம் காணுதல்:
ஒரு நிறுவனத்தில் மனிதவள தேவைகளைத் தீர்மானிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரு முதலீட்டு முறையாகும். செலவுகளை மேம்படுத்த, நிறுவனத்திற்கு தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கையை துல்லியமாக அடையாளம் காணப்பட வேண்டும்.
(ii) மாற்றங்களை இணைத்துக் கொள்ளல்:
மாற்றம் என்பது எந்த அமைப்பிலும் நிலையானது மற்றும் இந்த மாற்றத்தை நிறுவனத்தில் திறன்பட அறிமுகப்படுத்த மனித வள மேலாண்மை ஒரு முகவராக செயல்பட வேண்டும்.
(iii) மனித சக்தியின் சரியான தேவையை உறுதி செய்தல்:
மனித வள மேலாண்மையின் மூலமாக நிறுவனத்தில் எந்த நேரத்திலும் பணியாளர்கள் பற்றாக்குறை அல்லது உபரி ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
(iv) சரியான வேலைக்கு சரியான நபரை தேர்ந்தெடுத்தல்:
சரியான வேலைக்கு சரியான தகுதியுடைய நபர்களை மனிதவள மேலாண்மை உறுதிப்படுத்துவதால், நிறுவனத்தில் குறைதகுதி அல்லது மிகைதகுதி உடைய பணியாளர்கள் இல்லாத நிலை ஏற்படுகிறது.
(v) திறன் மற்றும் அறிவை மேம்படுத்துதல்:
பணியாளர் திறன் மற்றும் அறிவு மேம்பாடு செயல்பாடுகளை நிர்வகிப்பதில் மனிதவள மேலாண்மையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதோடு மட்டுமில்லாமல் பயிற்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் மூலம் இன்று வரை இருக்கும் தொழில் சார்ந்த அறிவை பணியாளர்களுக்கு வழங்குகிறது.
51.
வணிக இரசீதின் இயல்புகள்:
1. வரைவாளர்
2. ஏற்றுக் கொள்பவர்
3. செலுத்தல் பெறுநர்
4. வட்டம் செய்பவர்
5. மேல் எழுதுபவர்
6. மதிப்பீடு
7. முதிர்வு
8. கடன் தர மதிப்பீடு
வணிக இரசீதின் வகைகள்:
அ) தேவை மற்றும் பண்பாட்டு இரசீதுகள்:
(i) தேவை இரசீது என்பது பணம் செலுத்துவதற்கான தேதி எதுவும் குறிப்பிடப்படாத இரசீது ஆகும்.
(ii) தேவை இரசீது என்பது இந்த இரசீதை வைத்திருப்பவர் தனக்கு எப்பொழுது பணம் தேவைப்படுகிறதோ அப்போது இந்த இரசீதுக்கு பணம் பெற்றுக் கொள்ளலாம்.
ஆ) தூய்மை இரசீது மற்றும் ஆவண இரசீதுகள்:
(i) பொருட்களின் உரிமை ஆவணம் மூலம் இணைக்கப்பட்ட இரசீதுகள் ஆவண இரசீதுகள் எனப்படும்.
(ii) எந்த ஒரு ஆவணமும் எழுதி இணைக்கப்படாத இரசீதுகள் தூய்மை இரசீதுகள் ஆகும்.
இ) உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு இரசீதுகள்:
(i) இந்தியாவில் எழுதப்பட்ட மற்றும் செலுத்த வேண்டிய இரசீதுகள் உள்நாட்டு இரசீதுகள் எனப்படும்.
(ii) இந்தியாவிற்கு வெளியே எழுதப்பட்டு இந்தியாவிலோ அல்லது அயல்நாட்டிலோ செலுத்தப்படும் இரசீதுகளை அயல்நாட்டு இரசீதுகள் என்றழைக்கப்படும்.
ஈ) தனித்துவமான இரசீதுகள்:
வரைதல் மற்றும் ஏற்றுக் கொள்ளல் உள்ளூர் வழக்கப்படி அல்லது வர்த்தகப் பயன்பாட்டின் மூலம் நிர்வகிக்கப்படுவதை குறிக்கும்.
உ) இருப்பிட மற்றும் வழங்கள் இரசீதுகள்:
உண்மையான வியாபார நடவடிக்கைகள் அல்லாமல் உருவாக்கப்படும் இரசீதுகளை இருப்பிட மற்றும் வழங்கள் இரசீதுகள் என்று அழைக்கப்படுகின்றன.
52.
அ) பத்திரங்களின் சந்தை:
பங்குகள், கடனுறுதிப் பத்திரங்கள் போன்ற பத்திரங்கள் மூலதனச் சந்தையில் கையாளப்படுவதால் இது பத்திரங்களின் சந்தை என அழைக்கப்படுகிறது.
ஆ) விலை:
பத்திரங்களின் விலை மூலதனச் சந்தையில் பத்திரங்களின் தேவை மற்றும் அளிப்பை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.
இ) பங்கேற்பாளர்கள்:
மூலதனச் சந்தையின் ஈடுபடுபவர்கள் தனிநபர்கள், நிறுமங்கள், அரசு வங்கிகள், மற்றும் இதர நிதி நிறுவனங்கள் போன்றவர்கள் ஆவார்.
ஈ) இட அமைவு:
மூலதனச் சந்தைக்கான இடம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதில்லை, என்றாலும் பங்கு மாற்றகம் போன்ற நன்கு தெரிந்த இடமாக இருத்தல் வேண்டும்.
உ) நிதி சார்ந்த சொத்துக்களின் சந்தை:
மூலதனச் சந்தை நீண்ட கால நிதி சார்ந்த சொத்துக்களுக்கான ஒரு மேடையை வழங்குகிறது.
53.
(i) விதிவிலக்கு மேலாண்மையின் முக்கிய குறைபாடு என்னவென்றால், உண்மையில் மேலாளர்கள் மட்டுமே மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர்.
(ii) இது கீழ்நிலை ஊழியர்களுக்கான உற்சாகத்தை குறைக்கச் செய்கிறது.
(ii) மேலும், இது பிரச்சினையை மேலாளர்களுக்குத் தெரிவிக்க நேரம் எடுத்துக் கொள்கிறது. இயல்பான நடைமுறைகளில் இருந்து விலகிச் செல்லும் ஊழியர்களை நிர்வகிப்பது கடினமாகும்.
(iv) ஏனெனில் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு நிர்வகிக்கப்படுவதோடு வழக்கமான வரையறுக்கப்பட்ட வேலைக் கடமைகளுடன் தோல்வியின் புகாருக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து இறுதியாக வேலை நீக்கம் செய்கிறது/வேலையை விட்டு நிறுத்தி வைக்கிறது.
54.
மேலாண்மை பணிகளை இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம் அவை முக்கிய பணிகள் மற்றும் துணைப்பணிகள் ஆகும்.
முதன்மைப் பணிகள்:
(i) திட்டமிடுதல்:
திட்டமிடுதல் என்பது மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது ஆகும். திட்டமிடுதல் என்பது வருங்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆக்கபூர்வமான மதிப்பீடு ஆகும்.
(ii) அமைத்தல் :
பணியாளர்களுக்கு பணிகளை ஒப்படைவு செய்வதும் அப்பணிகளை நிறைவேற்றுவதற்கு போதிய அதிகாரங்களை வழங்குவதும் மேலும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பணியாளரே பொறுப்பேற்க செய்வதும் அமைத்தல் பணி எனப்படுகிறது.
(iii) பணியமர்த்தல் :
பணியமர்த்தல் என்பது பணியாளர்களைத் தேர்வு செய்தல் மற்றும் திறமையான பணியாளர்களுக்கு பணியிடமளித்தல் செயல்பாடுகளை பணியமர்த்தல் உள்ளடக்கியுள்ளது.
(iv) இயக்குவித்தல் :
தற்போதைய இலக்குகளை சாதிக்கும் பொருட்டு தொடர்ச்சியான அடிப்படையில் செயலூக்கமளித்தல், முன்னணியிலிருத்தல், வழிகாட்டுதல் மற்றும் கீழ்நிலைப் பணியாளர்களுடன் தொடர்புபடுத்துதல் போன்றன இயக்குதலைக் குறிக்கிறது.
(v) கட்டுப்படுத்துதல் :
ஊக்க ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு அளிக்கும் முடிவுகளை எடுப்பதற்கும் பணியாளர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும் கட்டுப்படுத்துதல் செயல்பாடு பயன்படுகிறது.
(vi) ஒருங்கிணைத்தல் :
ஒரு நிறுவனம் தனது குறிக்கோளை அடைவதற்கு பல்வேறு திறன்கள் கொண்ட பணியாளர்களை ஒருங்கிணைப்பது ஒருங்கிணைத்தல் எனப்படுகிறது. நிறுவனத்தின் ஒவ்வொரு மேலாண்மை பணிகளிலும் ஒருங்கிணைத்தல் பணி உள்ளடங்கியுள்ளது.
(vii) செயலூக்கமளித்தல் :
செயலூக்கமளித்தல் மூலமே நிறுவனத்தின் நோக்கங்களை அடைய முடியும். ஒரு பணியை விரைவாக செய்து முடிப்பதையும், பணியாளர்களின் பணியின் மீதான விருப்பத்தை வளர்ப்பதையும் செயலூக்கமளித்தல் என்ற சொல் உள்ளடக்கியுள்ளது.
துணைப்பணிகள் :
(i) புதுமைப்படுத்துதல் :
வியாபார உலகில் செய்யப்படும் மாற்றங்களை எதிர்கொள்ள ஊழியர்களையும் அமைப்பையும் தயார் நிலைப்படுத்தும் செயல்பாடு புதுமைப்படுத்துதல் என்பதைக் குறிக்கிறது. வியாபாரத்தில் தொடர்ச்சியான மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
(ii) பிரதிநிதித்துவம் :
ஒரு மேலாளர் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாக செயல்பட வேண்டும். வாடிக்கையாளர்கள், பொருட்கள் மற்றும் சேவையை அளிப்பவர்கள். அரசாங்க அதிகாரிகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இதைப் போன்றவர்களுடன் மேலாளர் தொடர்புடன் இருக்க வேண்டும்.
(iii) முடிவெடுத்தல் :
ஒரு அமைப்பின் ஒவ்வொரு பணியாளரும் பல்வேறு எண்ணிக்கையிலான முடிவுகளை ஒவ்வொரு நாளும் எடுக்கின்றனர்.ஒரு அமைப்பு இலகுவாக செயல்படுவதற்கு முடிவெடுத்தல் உதவுகிறது.
(iv) தகவல் தொடர்பு:
தொடர்பு என்பது மனித எண்ணங்களை, கண்ணோட்டங்களை அல்லது கருத்துக்களை ஒரு நபர் மற்றொரு நபருக்கு பரிமாற்றம் செய்வதைக் குறிக்கிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards