12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Commerce Reduced Syllabus Creative Three mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
நவீன சந்தையியலின் தலையாய நோக்கம் யாது?
2.
பாதிக்கப்பட்ட நுகர்வோர் தனது புகார் மனுவை யாரிடம் தாக்கல் செய்ய வேண்டும்?
3.
புறத்தோற்ற வர்த்தகம் யாரால், எப்பொழுது தொடங்கப்பட்டது?
4.
உரிமை பங்குகள் என்றால் என்ன?
5.
மேலாளர் மற்றும் இயக்குனருக்கான வேறுபாடுகளைக் கூறுக.
6.
தொழில் முனைவோருக்கு தேவைப்படும் நிதிகளை கூறுக.
7.
இந்தியாவில் காணப்படும் தேசிய பங்குச் சந்தைகள் நான்கினைக் கூறுக
8.
ஊக்குவிக்கப்பட்ட தொழில் முனைவோர் என்பவர் யார்?
9.
நிறும செயலருக்கு தேவையான பிற தகுதிகள் யாவை?
10.
உலகமயமாக்கலின் வடிவங்கள் கூறுக.
11.
நிறுவன வெற்றிக்கு தேவையானவை எவை?
12.
பணி ஒப்பந்தத்தில் எழுதப்படக்கூடிய விவரங்கள் யாவை?
13.
வணிக இரசீதின் இயல்புகளைக் கூறுக
14.
பணியாளர் வேட்டை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
15.
முதல் நிலைச் சந்தையில் மூலதனத்தை திரட்ட பயன்படுத்தும் மூன்று வழிகளை விளக்கு
16.
பிலிப்போ அவர்களின் மனித வள மேலாண்மையின் வரைவிலக்கணத்தை தருக.
17.
நிதிச் சந்தை யாருக்கு உதவி புரிகின்றது?
18.
மகளிருக்கு வழங்கப்படும் நிதிசாரா ஆதரவுகளைப் பட்டியலிடுக
19.
பண வசதி மாற்றுச் சீட்டு என்றால் என?
20.
மேலாண்மைக்கும், பணியாளர்களுக்கும் இணக்கம் ஏற்படுவதற்கான காரணிகள் யாவை?
21.
துணைப் பணிகளில் இடர் ஏற்றல் வகைகளைக் கூறுக.
22.
சந்தையின் தேவைகளைக் கூறுக.
23.
புலம் பயணம் முறை பற்றி குறிப்பு வரைக.
24.
மின் வணிகத்திற்கும் மின் வியாபாரத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
25.
நுகர்வோர் பாதுகாப்பில் அரசின் பங்கு யாது?
1.
நுகர்வோரை திருப்தி செய்வது என்பது நவீன சந்தையியலின் தலையாய நோக்கமாகும்
2.
(i) தயாரிப்பாளர் (அல்லது)
(ii) விற்பனையாளர் (அல்லது)
(iii) பொருளை விற்ற வணிகர்
3.
(i) 1996ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய பங்குச் சந்தை (NSE) முதன் முதலாக புறத்தோற்ற பத்திரங்களை வர்த்தகத்தை தொடங்கியது
(ii) ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முதலாக 100 பங்குகளை புறத்தோற்றமற்ற வடிவ பத்திரங்கள் விற்பனையில் ஈடுபட்டது
(iii) 1997, டிசம்பர் மாதம் மும்பை பங்குச் சந்தை புறத்தோற்ற பத்திரங்கள் வர்த்தகத்தை தொடங்கியது
4.
1. நிறுமத்தின் பங்களிப்பு மற்றும் பங்கு முதலை உயர்த்துவதற்காக வெளியிடப்படும் பங்குகள்.
2. இதன் வெளியீடு செயல்முறை விதிகளுக்குட்பட்டு இருக்கும்.
5.
| அடிப்படை | மேலாளர் | இயக்குனர் |
| பொருள் | நிறுமத்தின் குறிப்பிட்ட துறையின் பொறுப்பாளர் | நிறுமத்தை வழிநடத்துபவர் |
| பணியின் தன்மை | வேலைகளை ஒதுக்கீடு செய்பவர் | நிறும கொள்கைகளை நடைமுறைப்படுத்தி அது தொடர்பான பணிகளை மேலாளருக்கு வழங்குபவர் |
| மேலாண்மையின் நிலை | இடைநிலை மேலாண்மையில் உள்ளவர் | மேல்நிலை மேலாண்மையில் உள்ளவர் |
| பொறுப்புகள் | கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு | திட்டங்களும், கொள்கைகளும் இவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. |
6.
(i) நீண்ட கால நிதி - நிலையான சொத்துக்களை பெற தேவை.
(ii) குறுகிய கால நிதி - நடைமுறை செலவுகளை சமாளிக்க தேவை.
7.
1. இந்தியாவின் தேசிய பங்குசந்தை
2. இந்திய பங்கு வைப்பு குழு லிமிடெட்
3. தேசிய தீர்வைகள் மற்றும் வைப்பு முறை
4. இந்திய பங்கு பத்திரங்கள் விற்பனைக் கழகம்
8.
ஒரு புதிய தொழில் முனைவை துவங்கி வளர்ச்சியடைய செய்த பிறகு பிறருக்கு விற்கும் செயலை செய்பவர்.
9.
i. நிறும சட்டம் பற்றிய அறிவு
ii. வணிக சட்டம் பற்றிய அறிவு
iii. பொருளாதார சட்ட அறிவு
iv. கணக்கு வைப்பு தொடர்பான அறிவு
v. பணியாளர் சட்ட அறிவு
vi. அலுவலக நிர்வாகம் குறித்த அறிவு
10.
1. வெளிநாட்டு வர்த்தக கொள்கை
2. ஏற்றுமதி ஊக்குவிப்பு
3. நாட்டிற்கு வருமானத்தை எடுத்து வருவது
4. கட்டண குறைப்பு
5. சிறந்த போட்டிகளை ஊக்குவித்தல்
11.
1. நிறுவன வெற்றி மனித வளத்தினை சார்ந்துள்ளது.
2. நிறுவனத்தின் வெற்றிக்கு தரமான, திறமையான, சரியான அணுகுமுறை மற்றும் மனிதவள உறுதிப்பாடு அவசியம்.
12.
1. பணியின் தலைப்பு
2. கடமைகள் மற்றும் பொறுப்புகள்
3. சம்பளம்
4. வேலை நேரம்
5. பணியில் சேர்ந்த தேதி மற்றும் பணிக்காலத்தை கணக்கிடுவதற்கான அடிப்படை
6. பணி விதிகள்
7. குறை தீர் நடைமுறைகள்
8. ஒழுங்குமுறை நடைமுறை
9. உரிமைகள் தொடர்பான சிறப்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
13.
1. வரைவாளர்
2. ஏற்றுக் கொள்பவர்கள்
3. செலுத்துதல் பெறுநர்
4. வட்டம் செய்பவர்
5. மேல் எழுதுபவர்
6. மதிப்பீடு
7. முதிர்வு
8. கடன் தர மதிப்பீடு
14.
உயர் ஊதியம் மற்றும் அதிக பலன்கள் வாங்குவதன் மூலம் போட்டி நிறுவனங்களில் வேட்டை என்பதாகும்.
எடுத்துக்காட்டு : விற்பனை பிரதிநிதிகள், மேலாளர்கள், பட்டய கணக்காளர்கள்
15.
பொது வெளியீடு:
(i) புதிய நிறுமத்தால் பொதுமக்களுக்கு பத்திரங்கள் விற்பனை செய்வதன் மூலம் மூலதனம் திரட்டப்படுவது பொது வெளியீடு ஆகும்
(ii) இது மிகவும் பொதுவான முறையாகும்
உரிமை வெளியீடு:
ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிறுமம் கூடுதல் முதலீட்டை திரட்ட விரும்பும் போது முன்னுரிமை அடிப்படையில் தனது பங்குதாரர்களுக்கு முதலில் பங்குகளை முன்மொழிவது உரிமை வெளியீடு எனப்படும்
தனியார் வெளியீடு:
ஒரு சிறு குழு முதலீட்டாளர்களுக்கு பத்திரங்களை தனிப்பட்ட முறையில் விற்பனை செய்யும் முறை தனியார் வெளியீடு முறை ஆகும்
16.
மனித வள மேலாண்மை என்பது "நிறுவனத்தின் முக்கிய இலக்குகள் அல்லது நோக்கங்களை அடைவதற்காக அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் பங்களிப்பு பணிகளான பணியாளர் திரட்டுதல், வளர்ச்சி, இழப்பீடு, ஒருங்கிணைத்தல் மற்றும் பணியாளர் நிர்வகிப்பு ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்"
17.
1. தனிநபர்கள்
2. விவசாய துறை
3. தொழில் துறை
4. சேவை துறை
5. நிதி நிறுவனங்களான வங்கிகள்
6. காப்பீட்டு துறை
7. அரசுத் துறை
18.
1. மகளிர் தொழில்களுக்கு ஏற்ற கொள்கைகள் மற்றும் சட்ட அமைப்புகளை நிறுவுவதற்கான உதவி
2. நிதிசார் ஆலோசனை (ஆலோசனை மட்டும்)
3. தொழில் ஆலோசனை
4. சட்டத் தடைகளை களைய உதவுதல்
5. வியாபார தொடர்புகளை ஏற்படுத்துதல்
6. ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவுதல்
19.
பின்னாளில் ஒருவருக்கு உதவும் என்ற நோக்குடன் மறுபயன் இன்றி வரையப்படும் மாற்றுச் சீட்டு பணவசதி மாற்றுச் சீட்டு எனப்படும்
20.
1. இலாப உபரியை பணியாளர்களோடு பகிர்ந்து கொள்ளல்
2. பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல்
3. வேலைப் பகிர்வு
4. ஒற்றுமை உணர்வு
5. நேர்மறை மனநிலை
6. ஒழுங்குணர்வு
7. நேர்மை
21.
1. கால இடர்பாடு
2. இடம் சார்ந்த இடர்பாடு
3. போட்டி இடர்பாடு
4. தேவை மாற்று இடர்பாடு
5. இயற்கை சார்ந்த இடர்பாடு
6. மனித தொடர்பான இடர்பாடு
7. அரசியல் சார்ந்த இடர்பாடு
22.
1. பண்டங்கள் மற்றும் பணிகளை பரிமாற்றம் செய்ய வழிவகுக்கிறது.
2. விலைக் கொள்கை மூலம் தேவை மற்றும் அளிப்பை சரி செய்கிறது.
3. சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழிவகை செய்கிறது.
4. வாழ்க்கையின் புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது.
5. பொருள் மேம்பாடு மூலம் சந்தை பகுப்பை மேம்படுத்துகிறது.
23.
வழக்கமாக பணிபுரியும் இடத்தை விட்டு வேறு ஒரு இடத்திற்கு பணியாளர்கள் குழுவாக சேர்ந்து பயணித்து சென்ற இடத்தில் இருக்கும் தொழில் வல்லுநர்களிடம் விளக்கம் கேட்டு தங்களது திறனை வளர்த்துக் கொள்வதே புலப்பயணம் முறை சார்ந்த பயிற்சி எனப்படும்.
24.
| வ.எண். | அடிப்படை | மின் வணிகம் | மின் வியாபாரம் |
| 1. | பொருள் | மின் வணிகம் என்பது மின் வலைய தளத்தின் வழியாக பொருள்கள் மற்றும் சேவைகளை பெறுவதையும் அளிப்பதையும் குறிக்கும். | மின் வியாபாரம் என்பது பொருள் மற்றும் சேவைகளை பெறுவது, அளிப்பது மட்டுமின்றி அதற்கும் அப்பாற்பட்ட வழங்கல் வழி மேலாண்மை போன்றவைகளை உள்ளடக்கியதாகும். |
| 2. | வியாபாரம் | மின் வணிகம், மின் வியாபாரம் இரண்டும் ஒரே மாதிரியான பொருளை வியாபாரம் செய்கிறது. | இதிலும் ஒரே மாதிரியான பொருளை வியாபாரம் செய்கிறது. |
25.
(i) மத்திய மாநில அரசுகள் நுகர்வோரை பாதுகாக்க நாடு முழுவதும் பல்வேறு சட்டங்களை இயற்றி உள்ளன.
(ii) நுகர்வோரை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் நுகர்வோர் இன்னும் அது குறித்து அறியாதவர்களாகவும் செயலற்றவர்களாகவும் உள்ளனர்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards