12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Commerce Reduced Syllabus Three mark Important Questions - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
ஒரு தனியார் நிறுமத்தில் குறைந்த அளவு எத்தனை இயக்குநர்கள் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடுக.
2.
அரசியல் சூழல் என்றால் என்ன?
3.
தொழில் முனைவோர் மற்றும் மேலாளர் இவர்களை வேறுபடுத்தி காட்டுக. (ஏதேனும் 3)
4.
மாற்றுச் சீட்டு மற்றும் கடனுறுதிச்சீட்டினை வேறுபடுத்துக.
5.
தற்போதைய / இருக்கின்ற சரக்கு என்றால் என்ன?
6.
உலகமயமாக்கலின் ஏதேனும் மூன்று தாக்கங்களை எழுதுக.
7.
மின் சந்தையிடுதலின் நோக்கங்கள் யாவை? (ஏதேனும் 3)
8.
வியாபாரத்தின் மூன்று சுற்றுச்சூழல் காரணிகளை விளக்கு
9.
மாவட்ட மன்றம் ரூ. 20 லட்சம் வரம்பு மீறுகிறது நிலைமையை விளக்குங்கள் .
10.
ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பாதுகாப்பு உரிமைகள் பற்றி நீவீர் அறிவது என்ன?
11.
செயற்கைப் பற்றாக்குறை என்றால் என்ன?
12.
பொருளின் விலையை பாதிக்கும் காரணிகள் யாவை?
13.
காலத்தின் அடிப்படையில் சந்தையினை எப்படி வகைப்படுத்துவாய்?
14.
பயிற்சி திட்டத்தில் பல்வேறு படிகளை எழுதுக.
15.
ஒரு பணியாளரின் மருத்துவப் பரிசோதனை ஏன் அவசியமாகிறது?
16.
உள் மூல ஆட்சேர்ப்பின் அம்சங்கள் யாவை?
17.
மனித வளங்களின் இயல்புகள் யாவை? (ஏதேனும் 3)
18.
உள்வழி வர்த்தகம் என்றால் என்ன?
19.
காளை மற்றும் கரடி - விளக்குக.
20.
வைப்புச் சான்றிதழின் இயல்புகளை விவரி.
21.
மூலதனச் சந்தையின் ஏதேனும் இரண்டு பணிகளை விளக்குக.
22.
இரண்டாம் நிலைச் சந்தை- சிறு குறிப்பு வரைக.
23.
குறியிலக்கு மேலாண்மையில் ஈடுபட்டுள்ள செயல்முறைகள் யாவை?
24.
முடிவெடுத்தல் முக்கியமென்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?
25.
மேலாண்மை கலையா? அறிவியலா?
1.
நிறுமச் சட்டம் 2013 பிரிவு 149 (1) ஒவ்வொரு தனியார் நிறுமமும் ஒரு இயக்குனரை கொண்டிருக்க வேண்டும். பிற நிறுமங்கள் இரண்டு இயக்குநர்களை கொண்டிருக்க வேண்டும்.
2.
1. எந்த ஒரு அரசியல் காரணங்கள் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தவும், பாதிக்கவும் செய்கிறதோ அதுவே அரசியல் சூழல் எனப்படும்.
2. அந்த ஊக்கம் அல்லது பாதிப்பு ஊரக, தேசிய அளவில் கூட இருக்கலாம்.
3. தொழில் முனைவோர் அந்த அரசியல் காரணிகளை நன்கு ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
3.
| வ.எண் | அடிப்படை | தொழில் முனைபவர் | மேலாளர் |
| (i) | நோக்கு | ஒரு அமைப்பினை தேர்ந்தெடுத்து தன்னுடைய வினையை துவக்குவது. | துவக்கிய வினையில் செவ்வனே பணியாற்றுவது இவரின் நோக்கு. |
| (ii) | தகுநிலை | தொழில் முனைபவர் தான் துவங்கிய அமைப்பின் உரிமையாளர். | மேலாளர் ஊதியம் பெறும் உழைப்பாளி. |
| (iii) | இடர் ஏற்றல் | தொழில் முனைபவர் தான் துவங்கிய வினையினால் ஏற்படும் இடர்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மையை தாங்குபவர். |
மேலாளர்கள் வினையின் இடரில் பங்கு பெறுவது இல்லை. மாறாக இடர் ஏற்படும்போது வேறு நிறுமத்திற்கு தாவி விடும் பருவகால நண்பர்கள். |
| (iv) | வெகுமதி | தொழில் முனைபவர் தன்னுடைய இடர் ஏற்பிற்கு வெகுமதியாக இலாபத்தை பெறுகின்றனர். | மேலாளர்கள் இலாபத்தில் பங்கு பெறுவது இல்லை. ஊதியம் மேல் ஊதியம், படிகள், ஊக்க ஊதியம் பெறுபவர்கள். |
| (v) | ஆற்றல் | தொழில் முனைபவர்கள் படைப்பாற்றல். உள்ளுணர்வு மற்றும் எதையாவது புதியதாக செய்ய வேண்டும் என்ற உந்துதல் பெற்றவர்கள். | மேலாளர்கள் நல்ல கோட்பாட்டு அறிவும், மனித உறவு திறனும் பெற்றவர்களாக இருக்கவேண்டும். |
4.
| வ. எ | வேறுபாடுகளின் இயல்புகள் | மாற்றுச்சீட்டு | கடனுறுதி சீட்டு |
| 1 | உறுதிமொழி தன்மை | நிபந்தனையற்ற முறையாவணம் | நிபந்தனையற்ற பணம் தருவதற்கான கடன் உறுதிமொழி பத்திரம் |
| 2 | தரப்பினர் | மூன்று நபர்கள் இருப்பார்கள் 1. வரைபவர் 2. வரையப் பெற்றவர் 3. பணம் பெறுபவர் |
இரண்டு தரப்பினர் மட்டுமே இருப்பர் 1. வரைபவர் 2. பணம் பெறுபவர். |
| 3 | வரைபவர் | கடனாளர் | கடனாளி |
| 4 | தரப்பினர் அடையாளம் | எழுதுபவரும் பணம் பெறுபவரும் ஒரே நபராக இருக்கலாம். | இதனை எழுதுபவரே பணம் பெறுபவராக இருக்க முடியாது. |
| 5 | பொறுப்பாக்கப்படும் வரிசை | மாற்றுச்சீட்டை எழுதியவரின் பொறுப்பு இரண்டாம் பட்சமானது மாற்றுச் சீட்டை ஏற்றவர் பணம் தராமல் மறுக்கும் போது மட்டுமே வரைபவரின் பொறுப்பு எழும். | கடனுறுதி சீட்டை எழுதியவரின் பொறுப்பு முதன்மையானது. |
| 6 | கொணர்பவர் பத்திரம் | இதை கொணர்பவருக்கு கொடுக்கும்படி வரையலாம். | இதை கொணர்பவருக்கு தருவதாக வரைய சட்டம் தடை செய்கிறது. |
| 7 | ஏற்பு | இதனை எழுதப் பெற்றவர் ஏற்க வேண்டும் | இதை கடனாளியே எழுதுவதால் ஏற்க அவசியமில்லை |
| 8 | படிகள் (வடிவம்) | அயல்நாட்டு மாற்றுச் சீட்டு மூன்று படிகளில் தயாரிக்கப்படுகிறது | கடனுறுதி சீட்டு ஒரு படியில் மட்டுமே எழுதப்படுகிறது |
| 9 | நிபந்தனைக்கு உட்படுதல் | மாற்றுச் சீட்டினை நிபந்தனைக்கு உட்படுத்தலாம் | இதனை நிபந்தனைக்கு உட்படுத்த இயலாது |
| 10 | அவமதிப்பு அறிவிப்பு | மேலெழுதியவருக்கு (அ) வரைந்தவருக்கு மாற்றுச் சீட்டு அவமதிக்கப்பட்ட செய்தியை அறிவிக்க வேண்டும். | அவமதிப்பு அறிவிப்பு தேவையில்லை |
5.
ஒப்பந்தம் செய்யும் போது விற்பனையாளரின் கைவசம் உள்ள சரக்கு இருக்கின்ற சரக்கு. விற்பனை செய்ய முகவரின் வசம் ஒப்படைக்கப்பட்ட சரக்கும் அல்லது அடமானம் பெற்றவர் விற்கும் அடமான சொத்தும் இருக்கின்ற சரக்கு என்ற பொருளில் உள்ளடக்கம் பெறும்.
இருக்கின்ற சரக்கு: ஒப்பிய சரக்கு, உறுதி செய்யப்பட்ட சரக்கு, உறுதியிடா சரக்கு.
1. ஒப்பிய சரக்கு - விற்பனை ஒப்பந்தம் செய்யும் போது இனம் கண்டு ஒப்புக் கொள்ளப்பட்ட சரக்கு ஒப்பிய சரக்கு.
2. உறுதி செய்யப்பட்ட சரக்கு - ஒப்பிய சரக்கைப் போன்ற பொருள் உடையது தான் உறுதி செய்யப்பட்ட சரக்கு. அதாவது விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்பு இன்னதுதான் என்று உணரப்பட்ட சரக்கு உறுதி செய்யப்பட்ட சரக்கு.
3. உறுதியிடா சரக்கு - ஒப்பந்தம் செய்யும் முன்பாக இவைதான் என இனம் காணப்படாத சரக்கு.
6.
(i) குறைந்த இயக்கச் செலவுகளின் அடக்கம் மற்றும் புதிய மூல பொருட்கள் மற்றும் கூடுதல் சந்தை அனுகல் மூலம் பெரிய நிறுவனங்கள் போட்டி திறனை பெறுகின்றன.
(ii) பன்னாட்டு நிறுவனங்கள் (MNC's) பொருட்களை தயாரிக்க வாங்க மற்றும் பொருட்களை விற்பனை செய்ய முடிகின்றது.
(iii) உலகமயமாக்கல் நுகர்வோர் பொருட்களின் சந்தையை வெகுவாக (ஏற்றத்துடன்) பெருக்கிட உதவும் வாய்ப்பை உருவாக்கலாம்.
7.
மின் சந்தைப்படுத்தலின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:
1. சந்தையின் பங்கை மேலும் விரிவாக்கம் செய்தல்.
2. வழங்கீடு மற்றும் விற்பனை மேம்பாட்டு செலவுகளை குறைத்தல்.
3. பொருள் குறித்த அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
4. தகவல் தளத்தை பலப்படுத்துதல்.
8.
1. உட்புறச்சூழல்:
i) இது நிறுவனத்தின் உட்புறத்தோடு தொடர்புடைய காரணிகளாகும்.
ii) இவற்றை கட்டுப்படுத்துதல், மாற்றியமைத்தல் போன்றவற்றை எளிதில் மேற்கொள்ள முடியும்.
(எ.கா) கொள்கைகள் மற்றும் திட்டங்கள், நிறுவன கட்டமைப்பு, ஊழியர்கள், நிதி மற்றும் வளங்கள்.
2. நுண்ணிய சூழல்:
வியாபாரத்தின் செயல்திறனை உடனடியாக பாதிக்கும் சுற்றுச்சூழலாக இருக்கும் காரணிகளை இது குறிக்கிறது.
(எ.கா) நிதி அளிப்பவர்கள், சரக்கு விற்பனையாளர்கள், சந்தையிடுகை இடைநிலையர்கள், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் போட்டியாளர்கள்.
3. பரந்த சூழல்:
i) வணிகத்தின் வெற்றி பரந்த சூழலுக்கு பொருத்தக்கூடிய தன்மையை சார்ந்து இருக்கிறது.
ii) இவை கட்டுப்படுத்த முடியாத காரணிகள் ஆகும்.
iii) அவை வியாபாரத்திற்கான மகத்தான வாய்ப்புகளை வழங்குகின்றன.
iv) வியாபாரத்திற்கு தீவிர அச்சுறுதல்களை ஏற்படுத்துகின்றன.
9.
1. 20 இலட்சத்திற்கு குறைவாக நட்ட ஈடு கோரும் கோரிக்கைகளை மட்டும் மாவட்ட மன்றம் கையாள வேண்டும்.
2. புகார் மதிப்பு 20 இலட்சத்திற்கு மேல் இருந்தால் மாநில ஆணையத்தில் புகார் அளிக்க வேண்டும்.
10.
(i) சில தயாரிப்புப் பொருட்கள் நுகர்வோரின் உடல் நலம், சொத்துக்கள் மற்றும் வாழ்வு முறையில் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.
(ii) அத்தயாரிப்புகள் நுகர்வோரின் நலனுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கலாம்.
(iii) சிறந்த உதாரணமாக உணவு சேர்க்கைகள், நிறமிகள், உணவுப்பாதுகாப்பு இரசாயனங்கள் ஆகியவை ஆகும்.
(iv) உடல்நலக் கோளாறுகள் மற்றும் ஆரோக்கிய அபாயங்கள் எழும் வாய்ப்புகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் அல்லது முற்றிலும் குறைக்கப்பட வேண்டும்.
(v) உணவுகள் மற்றும் மருந்துகள் நுகர்வோரின் உயிரைக் காப்பாற்றுவதாகவும் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் இருக்க வேண்டும்.
(vi) இன்றைய சூழலில் தற்போதைய சட்டங்கள் பாதுகாப்பில்லாத பொருட்களை தயாரிப்பதோ அல்லது விற்பனை செய்வதோ கூடாது என்ற கடமை விற்பனையாளர்களுக்கும் மற்றும் உற்பத்தி செய்பவர்களுக்கும் உள்ளது.
11.
(i) சில சூழ்நிலைகளில் வணிகர்கள் தங்களின் வணிக நிறுவனங்களின் சரக்குகளை இருப்பு வைக்கும் இடங்களில் போதுமான அல்லது தேவைக்கு அதிகமான அளவு சரக்குகளை இருப்பு வைத்திருந்தாலும் கூட தங்கள் கடைகளின் முகப்பில் இருப்பு இல்லை எனும் பெயர்ப் பலகையை வைக்கின்றனர்.
(ii) இத்தகைய சூழ்நிலைகளில் நுகர்வோர் தங்களின் தவிர்க்க இயலாத தேவையின் அடிப்படையில் அப்பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
(iii) இதன் மூலம் வணிகர்கள் நேர்மையற்ற முறையில் பெருலாபம் ஈட்டுகின்றனர். திரையரங்குகளில் அரங்கம் நிறைவு (House full) என்னும் பெயர்ப்பலகை மாட்டப்பட்ட பின்னும் கள்ளச்சந்தையில் அதிக விலைக்குத் தாராளமாக அனுமதி சீட்டுகள் (Tickets) கிடைக்கின்றன.
12.
1. வாடிக்கையாளர் மனப்பாங்கு
2. நுகர்வோரின் தேவை
3. வழங்கல் வழிகள்
4. வாடிக்கையாளரின் பொருளாதார சூழல்
13.
(i) மிக குறுகிய கால சந்தை : இவ்வகை சந்தையில் மிக குறுகிய காலத்தில் பயன்படத்தக்க பொருட்கள் மட்டுமே கையாளப்படுகிறது. அதாவது அழுகக்கூடிய தன்மை உடைய பொருட்களான, பால், முட்டை, காய் மற்றும் கனிகள் போன்றவைகள் இத்தகைய சந்தையானது கிராமப்புறங்களில் இன்றளவும் நடைபெறுகிறது.
(ii) குறுகிய கால சந்தை : இத்தகைய சந்தையில் ஒரு சில பொருட்கள் இச்சந்தையில் தேவையை சமாளிப்பதற்கு அளிப்பின் அளவு சரிசெய்யப்படுகிறது. தேவை அளிப்பை விட அதிகமானது.
(iii) நீண்டகால சந்தை : நீடித்து உழைக்க கூடிய பொருட்களை கையாளத்தக்க வகையில் உள்ள சந்தையை இது குறிக்கிறது. இத்தகைய சந்தையில் நீண்ட காலத்திற்கு பயன்படுத்த ஏதுவாக உள்ள நுகர்வு பொருட்கள் மற்றும் சேவைகள் மட்டும் சந்தையிடுகை செய்யப்படுகிறது.
14.

(i) பயிற்சி யாருக்கு அளிக்க வேண்டும்?
பயிற்சி அளிக்கும் துறை முதன்முதலில் யாருக்கு பயிற்சி அளிக்க வேண்டுமோ அப்பணியாளர்கள் தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
(ii) பயிற்சி பெறுபவர் யார்?
ஒரு வேலையின் திறனை கற்றுக்கொள்ளும் நபரே பயிற்சி பெறுபவர் ஆவர்.
(iii) பயிற்சியாளர் யார்?
பணியாளருக்குத் திறன்களை போதித்து பணியை சிறப்பாக செய்ய தயார் செய்யும் ஒரு நபர் பயிற்றுவிப்பாளர் ஆவார்.
15.
1. சம்பந்தப்பட்ட வேலைக்கான உடல் தகுதி உடையவர் என அறிய;
2. புதிதாகத் தேர்ந்தெடுக்கும் பணியாளருக்கு இருக்கும் தொற்று நோய்களிலிருந்து வியாபார நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றும் பணியாளர்களின் உடல் நலனைப் பாதுகாக்க.
3. பணியாளரை பணியமர்த்திய பின் ஏற்படும் அபரிமிதமான மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளை தடுக்க மருத்துவப் பரிசோதனை அவசியமாகிறது.
16.
1. இடமாற்றங்கள்
2. பதவி உயர்வுகள்
3. மேம்படுத்தல்
4. பதவி இறக்கம்
5. ஓய்வு பெற்ற ஊழியர்கள்
6. வேலை சுழற்சி
7. இறந்துபோன பணியாளர்களை சார்ந்துள்ள நபர்கள்
17.
(i) மனித வளங்கள் உணர்ச்சி பூர்வமானவை.
(ii) நிதியுடன் அல்லது நிதியில்லாமலும் மனித வளங்கள் ஊக்குவிக்கப்படலாம்.
(iii) மனித வளங்களின் நடத்தைகளை ஊகிக்க முடியாது.
(iv) மனித வளங்களால் உண்டாகும் மதிப்பு மற்றும் பாராட்டுகள் நீண்ட காலத்திற்கு கிடைக்கிறது
(v) மனித வளங்கள் நகரும் தன்மை கொண்டது.
18.
நிறுவனத்தின் சில ரகசிய தகவலை அணுகும் மற்றும் ரகசிய தகவலைப் பயன்படுத்த விரும்பும் நபர்களான இயக்குனர்கள், தோற்றுவிப்பாளர்கள் மற்றும் பிற நபர்களால் மேற்கொள்ளப்படும் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் உள்வழி வர்த்தகம் (அல்லது) உள்வழி வியாபாரம் எனப்படுகிறது.
19.
காளை - தெஜிவாலா:
(i) பத்திரங்கள் எதிர்காலத்தில் விலையேற்றம் பெறும் என்று எதிர்பார்க்கின்ற ஊக வணிகர் காளை அல்லது தெஜிவாலா (Tejiwala) என்றழைக்கப்படுகிறார்.
(ii) ஒரு காளை தன்னுடைய கொம்புகளால் எதிரிகளை உயரே அல்லது மேல் நோக்கி தூக்கி ஏறிவது போன்று, இந்த வகை வணிக ஊக வணிகர் பிணையப் பத்திரங்களின் விலையை உயரச் செய்யும் நோக்கோடு செயல்படுவதால் காளை எனப் பெயரை பெற்றுள்ளார்.
(iii) இவர் எல்லாம் நன்மைக்காகவே நடைபெறும் (Optimism) என்ற மனப்பாங்கு கொண்டவர்.
கரடி - மண்டிவாலா:
(i) கரடி அல்லது மண்டிவாலா (Mandiwala) என்றழைக்கப்படும் ஊகவணிகர், எதிர்காலத்தில் குறிப்பிட்ட பத்திரங்களின் விலைகள் வீழ்ச்சி அடையும் என்று எண்ணுபவர்.
(ii) ஒரு கரடி வணிகர் எதிலும் பின்னோக்கிய மனப்பாங்கு(pessimism) கொண்டவர்.
(iii) ஒரு கரடி பொதுவாகத் தன்னுடைய எதிரியைத் தரையில் தள்ளி அழுத்துகிறது. அதேபோல் ஒரு கரடி ஊகவணிகரும் பங்குச் சந்தையில் பங்குகளின் விலையை கீழே தள்ளுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்
20.
1. கால வைப்புக்கான உரிமை ஆவணம்.
2. பிணையமற்ற மாற்றுமுறை ஆவணம்.
3. மேல் எழுதுதல் மூலம் எளிதில் மாற்றி வழங்கும் தன்மை உடையது.
4. முக மதிப்பிலிருந்து வட்டத்தில் வெளியிடுதல்
5. சலுகை நாட்கள் இல்லாமல் குறிப்பிட்ட தேதியில் திரும்பச் செலுத்தக்கூடியது.
21.
சேமிப்பு மற்றும் மூலதன உருவாக்கம்
சேமிப்பு மற்றும் மூலதன உருவாக்கம் மூலதனச் சந்தையில் பல்வேறு வகையான பத்திரங்கள் பல்வேறு துறையைச் சார்ந்து மக்களிடமிருந்து (தனிநபர், நிறுமங்கள், அரசு முதலியன) சேமிப்பை திரட்டுவதற்கு உதவி செய்கின்றது. பத்திரங்கள் முதலீடு செய்யும் மக்களுக்கு நிச்சயமான ஊக்கத் தொகையாக பங்கு மாற்றகத்தின் இரட்டை சிறப்பியல்புகளான நியாயமான வருவாய் மற்றும் நீர்மைத் தன்மை கிடைக்கிறது. இது நாட்டில் மூலதன உருவாக்கத்தை முடுக்குகிறது.
உடனடி மற்றும் தொடர்ச்சியான சந்தை
பங்கு மாற்றகம் வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் பத்திரங்களை வாங்க மற்றும் விற்பதற்கு ஒரு வசதியான மையத்தை வழங்குகிறது. எளிய சந்தையிடுதல் பத்திரங்களில் முதலீடு செய்வதில் மற்ற சொத்துக்களுடன் ஒப்பிடும் பொழுது அதிக நீர்மைத் தன்மையை உருவாக்குகிறது.
22.
(i) இரண்டாம் நிலைச் சந்தை ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்ட பங்குகளுக்கான சந்தை இரண்டாம் நிலைச் சந்தை ஆகும்.
(ii) இரண்டாம் நிலைச் சந்தையில் பங்கு மாற்றகம் ஒரு முக்கியமான நிறுவனம் ஆகும்.
23.
1. அமைப்பின் குறிக்கோள்களை வரையறுத்தல்
2. ஒவ்வொரு பிரிவின் இலக்குகள்
3. முக்கிய முடிவுப் பகுதிகள்
4. கீழ்நிலை ஊழியர்களின் குறிக்கோள்களை நிர்ணயித்தல்
5. குறிக்கோள்களுடன் வளங்களை ஒப்புநோக்குதல்
6. காலவாரியான மறு ஆய்வுக் கூட்டம் கூட்டுதல்
7. செயல்பாடுகளை மறு ஆய்வுக் கூட்டம் கூட்டுதல்
24.
1. முடிவெடுத்தல் என்பது மேலாண்மையில் ஒரு முக்கியமான பணியாகும்.
2. ஒரு அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஒவ்வொரு பணியாளரும் பல்வேறு எண்ணிக்கையிலான முடிவுகளை எடுக்கின்றனர்.
3. ஒரு அமைப்பு இலகுவாக செயல்படுவதற்கு முடிவெடுத்தல் உதவுகிறது.
25.
1. மேலாண்மை என்பது ஒரு கலையும் அல்ல, அறிவியலும் அல்ல, இரண்டின் தொகுப்பாகும்.
2. மேலாண்மை என்பது அதன் இயல்பின் அடிப்படையில் ஒரு செயலை செய்வதற்கான கலையோ அல்லது ஒரு செயலை பெறுவதற்கான அறிவியலா ஆகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards