12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Commerce Reduced Syllabus Two mark Important Questions - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
புறத்தோற்றமற்ற கணக்கை வைத்துக் கொள்வதன் மூலம் நாம் எதை பெற முடியும்?
2.
செபி என்பது யாது?
3.
"சந்தை மேற்கோள்" என்றால் என்ன?
4.
மறு விற்பனை பத்திர சந்தை என்பதன் பொருள் யாது?
5.
நேர்காணல் - வரைவிலக்கணம் தருக.
6.
துணைச் சந்தைக்கு எடுத்துக்காட்டு தருக
7.
வணிக இரசீது என்றால் என்ன?
8.
மூலதனச் சந்தைக்கு வரைவிலக்கணம் தருக
9.
இந்திய உடனடி பங்கு மாற்றத்தின் நன்மைகளைக் கூறுக
10.
மனித வள மேலாண்மை உள்ளடக்கியது எது?
11.
சந்தைப்படுத்தப்படும் சொத்துக்களுக்கு உதாரணம் தருக
12.
முக்கிய முடிவு பகுதிகளுக்கு எடுத்துக்காட்டு தருக.
13.
புதுமைப்படுத்துதல் என்றால் என்ன?
14.
மேலாண்மையில் உள்ள பிரிவுகளைக் கூறுக.
15.
பீட்டர் F. டிரக்கரின் மேலாண்மை வரைவிலக்கணம் தருக.
16.
பரிந்துரை சந்தையிடுதல் என்றால் என்ன?
17.
சந்தையிடுகை கலவையின் வரைவிலக்கணம் தருக
18.
பயிற்சி முறை - வரைவிலக்கணம் தருக.
19.
தீர்மானம் என்றால் என்ன?
20.
மேலாண்மையில் முக்கிய நபர்களை எவ்விதமான நிறுமங்கள் நியமனம் செய்திருக்க வேண்டும்?
21.
உரிமைப் பங்குகள் என்றால் என்ன?
22.
பங்கு என்றால் என்ன?
23.
ஏதேனும் இரண்டு அரசின் தொழில் முனைவோர் திட்டங்களின் பெயர்களை எழுதுக.
24.
கூட்டு பங்கு தொழில் முனைவோரின் மற்றொரு பெயர் என்ன?
25.
அகத்தொழில் முனைவோர் இலக்கணம் தருக.
26.
மாற்றுச்சீட்டு வரையறு.
27.
28.
தனியார்மயமாக்கல் என்றால் என்ன?
29.
பசுமை சந்தையிடுதல் என்றால் என்ன?
30.
பெருநிறுவன நிர்வாகத்தின் பொருள் என்ன?
31.
தேசிய ஆணையத்தினைப் பற்றி விவரி.
32.
தகவல் பெறும் உரிமை (Right to be informed) பற்றி சிறு குறிப்பு வரைக.
33.
"விற்பனையாளர் ஜாக்கிரதை" என்றால் என்ன?
34.
சந்தையிடுகை கலவையின் வரைவிலக்கணம் தருக.
35.
மொத்த விற்பனை சந்தைக்கும் மற்றும் சில்லறை விற்பனை சந்தைக்கும் இடையே உள்ள நான்கு வேறுபாடுகளை குறிப்பிடுக.
36.
ஒழுங்குமுறை சந்தை என்றால் என்ன?
37.
வழிகாட்டுதல் பயிற்சி முறை என்றால் என்ன?
38.
தன்விளக்கக் குறிப்பு பற்றி நீவீர் அறிவது யாது?
39.
வளாக ஆட்சேர்ப்பின் அம்சங்களில் ஏதெனும் இரண்டை குறிப்பிடுக.
40.
மனித வளத்தின் சிறப்பியல்புகளில் ஏதேனும் இரண்டை குறிப்பிடுக.
41.
செபியின் இரண்டு நோக்கங்களை எழுதுக
42.
இந்தியாவில் பங்கு வணிகநேரம் என்றால் என்ன?
43.
இந்தியாவில் உள்ள எதேனும் 5 பங்குச் சந்தைகளை பற்றி எழுதுக.
44.
ஏலமிடுதல் என்பதன் பொருள் யாது?
45.
பணச்சந்தையில் பயன்படுத்தப்படும் ஆவணங்கள் யாவை?
46.
47.
உடனடிச் சந்தை என்றால் என்ன?
48.
விதிவிலக்கு மேலாண்மையின் பொருளை எடுத்துக்கூறுக.
49.
மேலாண்மைக் கருவிகளைப் பட்டியலிடுக.
1.
(i) பங்குகள், பத்திரங்கள், அரசாங்கப் பத்திரங்கள்
(ii) பரஸ்பர நிதிகள் மற்றும் பரிமாற்ற வர்த்தக நிதிகள் போன்றவைகளை நாம் பெற முடியும்
2.
(i) இந்தியப் பத்திர மாற்றக வாரியம் (செபி)
(ii) பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்தப்படும், கட்டுப்படுத்தும், சட்டபூர்வமான அமைப்பு ஆகும்
3.
(i) பத்திரங்கள் வாங்குதல் மற்றும் விற்பனை செய்யப்படும் விலைகள் பதிவு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன
(ii) இந்த விலைகள் "சந்தை மேற்கோள்" என்று அழைக்கப்படுகின்றன
4.
(i) நிறுவனங்களால் ஏற்கனவே வெளியிடப்பட்ட பங்குகள், கடனீட்டுப் பத்திரங்கள் விற்பனையில் ஈடுபடுவதற்கு மறு விற்பனை பத்திர சந்தை என்று பெயர்
(ii) இது இரண்டாம் நிலை சந்தை என்றும் அழைக்கப்படுகிறது
5.
ஸ்காட் என்பவரது கூற்றுப்படி "நேர்காணல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு இடையே நிகழும் குறிப்பிட்ட நோக்கத்திற்கான கருத்துப் பரிமாற்றம், வினாக்களுக்கு விடை பகர்தல் மற்றும் தகவல் தொடர்பாகும்.
6.
(i) அழைப்பு பணச்சந்தை
(ii) ஏற்புச் சந்தை
(iii) மாற்றுமுறை ஆவணச் சந்தை
7.
(i) பொருட்களின் விற்பனையாளர் மூலம் பொருட்களை வாங்குவர் மீது எழுதி தயாரிக்கப்படும் ஒரு ஆவணமே வணிக இரசீது ஆகும்
(ii) இது சுய நீர்மைத் தன்மை கொண்டது
8.
மூலதனச் சந்தை என்பது, "பல்வேறு வகையான மூலதன ஆதாயங்களின் தேவை மற்றும் அளிப்பிற்கு இடையே தோற்றுவிக்கப்பட்ட இணைப்புகளுடன் நிறுவன முதலீடுகள் மற்றும் செயல்பாடுகளின் ஒரு கலவையே ஆகும்" - அருண் கே.தத்தா
9.
முதலீட்டாளர் மற்றும் நிறுமத்திற்கு சில பிரச்சனைகள் இருந்தபோதும் வெளிப்படைத் தன்மை, விரைவான முடிவு, நெகிழ்வுத் தன்மை ஆகிய நன்மைகளை அளிக்கிறது.
10.
1. பணியாளர் திரட்டுதல்
2. வளர்ச்சி
3. இழப்பீடு
4. ஒருங்கிணைப்பு
5. பணியாளர் நிர்வகிப்பு
11.
1. பட்டியலிடப்பட்ட நிறுமத்தின் பங்குகள்
2. அரசு பத்திரங்கள்
3. பொதுத்துறை நிறுவனங்களின் பிணையங்கள்
12.
1. இலாபம்
2. சந்தை நிலவரம்
3. புதிய கண்டுபிடிப்புகள்
13.
வியாபார உலகில் செய்யப்படும் மாற்றங்களை எதிர்கொள்ள ஊழியர்களையும், அமைப்பையும் தயார்நிலைப்படுத்தும் செயல்பாடு ஆகும்.
14.
1. உற்பத்தி
2. சந்தையிடல்
3. நிதி
4. கணக்கியல்
5. விநியோகம்
6. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி
15.
"மேலாண்மை என்பது பின்னோக்கு செயல், அது வியாபாரத்தை மேலாண்மை செய்கிறது. மேலும் பணியாளரையும், பணியினையும் மேலாண்மை செய்கிறது".
16.
வழக்கமாக பொருள்களைப் பற்றி விளம்பரம் செய்யாமல் ஒரு நிறுவனத்திற்குரிய ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர் மூலம் பொருள்களின் தன்மை மற்றும் சிறப்பைப் பற்றி மற்றவர்களுக்கு பரிந்துரை செய்ய தூண்டி விற்பனை அதிகரிக்கும் முறையை பரிந்துரை சந்தையிடுதல் எனலாம்.
17.
அமெரிக்கா சந்தையிடுகை கழகத்தின் கூற்றுப்படி, "சந்தையிடுகை என்பது மக்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை உள்ளடக்கி பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோருக்கு கொண்டு சேர்ப்பதையே சந்தையிடுகை ஆகும்".
18.
மதிஸ் மற்றும் ஜாங்சன் கூற்றுப்படி, "பயிற்சி என்பது கற்றல் நடைமுறை. இது ஊழியருக்கு திறன்கள், கருத்துக்கள், மனோபாவங்கள் மற்றும் இலக்குகளை அடைய உதவும் அறிவு".
19.
இயக்குநரவையால் எடுக்கப்பட்ட ஒரு முடிவை நடைமுறைப்படுத்த, சட்டப்படி குறைந்தளவு எண்ணிக்கை கொண்ட பங்குனர்களின் கூட்டத்தில், ஓட்டுப்பதிவு நடத்தியோ அல்லது வேறு முறையின் மூலமாக பங்குனர்களால் அளிக்கப்படும் ஒப்புதல் தீர்மானம் எனப்படும்.
20.
(i) ஒவ்வொரு பட்டியலிடப்பட்ட நிறுமம்
(ii) ₹10 கோடி அதற்கு மேல் பங்கு கொண்டுள்ள ஒவ்வொரு பொது நிறுமம்.
21.
(i) நிறுமத்தின் பங்களிப்பு மற்றும் பங்கு முதலை உயர்த்தும் நோக்கில் வெளியிடப்படும் பங்குகள் உரிமைப் பங்குகள் எனப்படும்.
(ii) இந்த உரிமைப் பங்குகளின் வெளியீடு செயல்முறை விதிகளுக்கு உட்பட்டு இருக்கும்.
22.
நிறுமத்தின் பங்கு முதலின் சிறு (பகுதி) பங்கு எனப்படும்.
எ.கா : நிறுமத்தின் பங்கு முதல் = Rs.10,000
பங்கு முதலை திரட்ட பங்குகளை பிரிக்க வேண்டும்.
Rs.10 க்கு வெளியிட்டால் 1,0000 பங்குகள் எனவும்
Rs 100க்கு வெளியிட்டால் 100 பங்குகள் எனவும் வெளியிடலாம்.
23.
(i) ஸ்டார்ட்டப் இந்தியா
(ii) இந்தியாவில் தயாரிப்பு திட்டம்
(iii) அடல் புதுமை புகுத்தல் திட்டம்
(iv) பெண்களுக்கு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான ஆதரவு
24.
தோற்றுவிப்புப் பணியாளர்.
25.
(i) ஒரு தொழில் முனைவோர் ஆரம்பித்த பணியில் பணிபுரிபவர்.
(ii) இவர் தனக்கு வழங்கப்பட்ட பணியில், நிறுவனத்தில் கிடைக்கக்கூடிய வளங்களைக் கொண்டு, தனது ஆற்றலை பயன்படுத்தி புதிய எண்ணங்களை புகுத்துபவர்.
26.
ஆவணத்தை கொணர்பவருக்கோ அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருவருக்கோ அல்லது அவரது ஆணைக்கோ, ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு, குறிப்பிட்ட ஒருவரை ஆணையிடும் விடுப்பவரால் கையொப்பம் இடப்பட்ட எழுத்தாலான நிபந்தனையற்ற ஆணை ஆவணமே மாற்றுச்சீட்டு - மாற்றுமுறை ஆவணச்சட்டம் 1881 பிரிவு (5).
27.
28.
தனியார்மயமாக்கல் என்றால் பொதுத்துறை நிறுவனங்களின் உரிமைகளை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றி தரும் நிகழ்வு அல்லது கொள்கையை குறிப்பிடுவதாகும். சுருங்கக் கூறின் தனியார்மயமாக்கல் என்பது பொதுதுறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களை தனியார் துறைக்கு மாற்ற அனுமதி அளிப்பதாகும்.
29.
சுற்றுச்சூழலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காமல் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதுகாப்பாக சந்தைப்படுத்துவதை பசுமை சந்தைப்படுத்துதல் எனலாம். நுகர்வோர்களின் தேவை மற்றும் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பொருள்கள் மற்றும் சேவைகளை உருவாக்கி, மேம்படுத்தி, தரமான செயல் திறன்மிக்க பொருள்களை, மலிவு விலையில் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதை பசுமை சந்தைப்படுத்தல் எனலாம்.
30.
(i) பெருநிறுவன ஆளுகை என்பது ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும் விதிகள் மற்றும் கொள்கைகள் ஆகும். ஒரு நிறுவனத்தை நிர்வகித்து அதன் குறிக்கோளை அடைவதற்கான ஒரு வடிவமைப்பை இது வழங்குகிறது. இது உட்கட்டுப்பாட்டு செயல்திறன் அளவீடு மற்றும் பெருநிறுவனத்தை வெளிப்படுத்துதல் ஆகியவற்றிற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
(ii) பெருநிறுவன ஆளுகை என்பது பயமின்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்பு மற்றும் பொறுப்பு ஏற்பு (Accountability) போன்ற நான்கு தூண்களை அடிப்படையாக கொண்டது.
31.
இவ் அமைப்பு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 ன் கீழ் ஒரு பகுதி நீதிமன்றமாக 1988 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைமையலுவலகம் புதுடெல்லியில் இயங்கி வருகிறது. இவ் தீர்ப்பாணையம் உச்சநீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதியை தலைவராக கொண்டு இயங்கி வருகிறது. இவ் அமைப்பு தேசிய தீர்ப்பாணையம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
32.
(i) பொருட்களை வாங்கும் பொழுது நுகர்வோர் அப்பொருட்களைப் பற்றிய பெயர், கலவை, பயன்படுத்தும் அளவு, உற்பத்தி மற்றும் காலாவதி நாள், தயாரிப்பு பிரிவு எண் மற்றும் எச்சரிக்கை போன்ற அனைத்து விதமான தகவல்களையும் கேட்டுப்பெற வேண்டும்.
(ii) மேலும் பொருட்களின் விலை, அதன் தயாரிப்பாளர் பெயர், வரியுடன் அல்லது வரியில்லாத விலை ஆகியவையும் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
33.
(i) "விற்பனையாளர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" (Let the Seller Beware) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
(ii) விற்பனையாளர்கள் தங்களது பொறுப்பிலிருந்து தப்பிக்க இயலாது. விளம்பரங்களில் "பொருட்கள் உள்ளது உள்ளபடி” என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டாலொழிய, பொருட்களை வாங்குபவருக்கு, அப்பொருளை வாங்குவதற்கான நோக்கத்தை அப்பொருள் நிறைவேற்றும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே' விற்பனையாளர் அப்பொருளை விற்பனை செய்ய வேண்டும்.
34.
திரு.ஜெரோமி எம்சி கார்தோ அவர்களின் கூற்றுப்படி, "சந்தையிடுகை கலவை நான்கு கூறுகளைக் கொண்டுள்ளது. அவையாவன, பொருள் கூறுகள், விலை கூறுகள், விற்பனை மேம்பாட்டு கூறுகள் மற்றும் இடக்கூறுகள் ஆகும்". என்கிறார்.
35.
| வ.எண் | அடிப்படை | மொத்த விற்பனை சந்தை | சில்லறை விற்பனை சந்தை |
| 1. | பொருள் | உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. | மொத்த விற்பனையாளர்களிடமிருந்து நேரடியாக பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. |
| 2. | கொள்முதல் அளவு | மொத்தமாக பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. | சிறு சிறு அளவில் பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. |
| 3. | யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது | சில்லறை விற்பனையாளருக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. | நுகர்வோர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறு சிறு அளவில் விற்பனை செய்யப்படுகிறது. |
| 4. | யாருக்கு விற்பனை செய்யப்படுவதில்லை | நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுவதில்லை. | நுகர்வோருக்கு தேவையான அளவில் விற்பனை செய்யப்படுகிறது. |
36.
அரசின் சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இதன் செயல்பாடுகள் அனைத்தும் சட்டமுறைப்படி கட்டுப்படுத்தப்படுகிறது.
உதாரணமாக மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை பங்கு சந்தைகள்.
37.
வழிகாட்டுதல் பயிற்சி முறையில் ஒரு பணியாளர் தங்களின் அறிவு மற்றும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் செயல்முறை ஆகும். இந்த பயிற்சியின் முக்கியத்துவம் பயிற்சியின் மனோபாவத்தின் வளர்ச்சியில் உள்ளது. இது பெரும்பாலும் நிர்வாக ஊழியர்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
38.
ஒரு விண்ணப்பதாரர் ஒரு நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கும் பொழுது, பணி அனுபவ காலம், கல்வித்தகுதி, மதிப்பெண், பணி நிபுணத்துவம், பணி தொடர்பு மற்றும் நடத்தைகள் பற்றி குறிப்பிடுவதே தன்விளக்க குறிப்பாகும்.
39.
1. கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று நல்ல கல்வித் தகுதியடைய விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
2. நேரம், செலவு போன்றவைகள் இதன்மூலம் சேமிக்கப்படுகின்றது.
40.
(i) உற்பத்தி செய்யும் ஒரே காரணியாக மனித வளம் திகழ்கிறது.
(ii) பிற அனைத்து வளங்களையும் மனித வளம் உருவாக்குகிறது.
41.
(i) பங்கு பரிவர்த்தனைகளின் ஒழுங்குமுறை : செபியின் முதல் நோக்கம் பங்குச் சந்தைகளை ஒழுங்குபடுத்துவதாகும்.
(ii) முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு : முதலீட்டாளர்கள் இல்லாத நிலையில் மூலதனச் சந்தை அர்த்தமற்றதாகும்.
42.
(i) இந்தியாவில் பங்குச் சந்தைகள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மூடப்படும்.
(ii) தேசிய விடுமுறை நாட்களிலும் சந்தைகள் மூடப்படும்.
(iii) சாதாரண பங்குகளுக்கான வர்த்தக நேரம் காலை 9.15 முதல் பிற்பகல் 3.30 வரை செயல்படும்.
(iv) பொருட்கள் சந்தைக்கான வர்த்தக நேரம் காலை 10 மணி முதல் 11.20 மணி வரை திங்கள் முதல் வெள்ளி வரை செயல்படும்.
(v) விவசாய பொருட்களுக்கான சந்தை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
(vi) சந்தை வியாபாரத்தின் போது உணவு இடைவேளையோ அல்லது தேநீர் இடைவேளையோ இல்லை.
43.
இந்தியாவிலுள்ள பல்வேறு பங்குச் சந்தைகளின் பெயர்கள் பின்வருமாறு
(i) தி பாம்பே பங்குச் சந்தை.
(ii) அகமதாபாத் பங்குச் சந்தை சங்கம் லிமிடெட்.
(iii) ஜெய்ப்பூர் பங்கு பரிவர்த்தனை லிமிடெட்.
(iv) கல்கத்தா பங்கு பரிவர்த்தனை சங்கம் லிமிடெட்
(v) பெங்களூரு பங்குச் சந்தை லிமிடெட்.
44.
வர்த்தகர்கள் ஒருவர் ஒருவரோடு போட்டியிடும் முறையில் பத்திரங்களை அதிகபட்ச விலைக்கு விற்க மேற்கொள்ளப்படும் ஒரு வர்த்தக முறையே 'ஏலம் விடுதல்' என அழைக்கப்படுகின்றது.
45.
(i) கருவூல சீட்டுகள்
(ii) குறுகியகால அறிவிப்பு மற்றும் அழைப்பு பணம்
(iii) வணிக இரசீதுகள் மற்றும் உறுதிமொழி பத்திரங்கள்
(iv) வணிகத் தாள்கள்
(v) வைப்பு இரசீதுகள்
(vi) வங்கிகளுக்கு இடையிலான பங்கேற்பு சான்றிதழ்கள்
(vii) மீள் வாங்கல் வீத ஆவணங்கள்
46.
47.
ஆவணங்களை வழங்கலும், ரொக்கம் பெறுதலும் உடனடியாக நடைபெறும் சந்தை உடனடிச் சந்தை ஆகும். அதாவது தீர்வு உடனடியாக நடைபெறுகிறது.
48.
விதிவிலக்கு மேலாண்மை என்பது நெறிமுறையிலிருந்து விலகிப் போகும் நிகழ்வுகளை அடையாளம் காண்பதற்கும், கையாளுவதற்கும் கவனம் செலுத்துகின்ற வணிக நிர்வாகத்தின் ஒரு பாணியாகும்.
49.
1) கணக்கியல்
2) வணிகச்சட்டங்கள்
3) உளவியல்
4) புள்ளியியல்
5) பொருளியல்
6) தரவு செயலாக்கம் போன்றவை மேலாண்மைக் கருவிகளாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards