12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
இவற்றில் எது சேவையகப் பயன்பாட்டு மொழி அல்ல என்பதை கண்டறிக.
PHP
HTML
ASP
JSP
2.
கணினி வலையமைப்பு ஒரு தரவை கொண் டு சென்று _______ என்கிறோம்.
hub
வளங்கள்
கணு
கேபிள்
3.
RFID-ன் விரிவாக்கம் _______.
Radio Free identification
real Frequency identity
Radio Frequency indicators
Radio Frequency Identification
4.
TLD குறிக்கிறது _______.
Top Level Data
Top Logical Domain
Term Level Data
Top Level Domain
5.
கொடுக்கப்பட்ட நிபந்தனை கோவையின் மதிப்பு பூலியன்(சரி) ஆக இருந்தால் மடக்கின் கூற்றுகள் செயல்படுத்தப்படும் தவறு எனில் மடக்கு முடிவுக்கு வரும் எந்த மடக்கு இவ்வாறு செயல்படுகிறது.
for மடக்கு
while மடக்கு
foreach மடக்கு
மேற்கண்ட அனைத்தும்
6.
7.
பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
< ?php
\($\)a= “” ;
if (\($\)a)
print “all”;
if else
print “some”;
? >
All
some
பிழை
வெளியீடு ஏதும் இல்லை
8.
அணியில் உறுப்புகளின் எண்ணிக்கையை கணக்கிட எந்த செயற்கூறு பயன்படுகிறது.
count
Sizeof
Array_Count
Count_array
9.
பின்வரும் PHP கூற்றின் வெளியீடு என்னவாக இருக்கும்?
< ?php
$num = 1;
$num1 = 2;
print $num . “+”. $num1 ;
?>
3
1+2
1. + .2
Error
10.
பண மதிப்பின் அடிப்படையில் மின்னணு கட்டணம் செலுத்தும் முறையை_______ மற்றும் _______ என வகைப்படுத்தலாம்
நுண் செலுத்தல் மற்றும் பேரின செலுத்தல்
நுண் மற்றும் நானோ செலுத்தல்
அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச செலுத்தல்
அதிகபட்ச மற்றும் பேரின செலுத்தல்
11.
தரவுத்தளத்திலிருந்து தகவலை பெறுவதற்கு எந்த மொழி பயன்படுகிறது?
உறவு நிலை (Relational)
கட்டமைப்பு (Structural)
வினவல் (Query)
தொகுப்பி (Compiler)
12.
3-D பாதுகாப்பு நெறிமுறை ______ ஆல் உருவாக்கப்பட்டது.
VISA
MASTERPAY
RUPAY
PAYTM
13.
பின்வருவனவற்றில் மின்னணு தரவு பரிமாற்றத்திற்கு (EDI) என சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிலையான வடிவமைப்பு எது?
TSLFACT
SETFACT
FTPFACT
EDIFACT
14.
பெட்டிகள் வரைவதற்குப் பயன்படும் கருவி ______.
Line
Ellipse
Rectangle
Text
15.
GIF பயன்படுத்தும் வண்ண தேடல் அட்டவணை _______.
8 பிட்
13 பிட்
8 MB
13 MB
16.
பயன்பாட்டு அடுக்கில் உள்ள பிரபலமான அடுக்குகள் யாவை?
17.
சமூக வலையமைப்புகளில் உள்ள பொதுவான பண்புகள் யாவை?
18.
பயனாளர் சேவையக கட்டமைப்பு வகைகளை விவரி.
19.
நிகழ்நிலை வங்கிச் சேவையைப் பயன்படுத்தி நிதி பரிமாற்றம் செய்வதற்கானப் படிநிலைகளை விவரி.
20.
படிவத்தை கையாளும் வழிமுறைகளை விவரி.
21.
டிஎன்எஸ் கூறுகளை சுருக்கமாக விளக்குக.
22.
foreach மடக்கை எடுத்துக்காட்டுடன் விவரி.
23.
மின்-வணிகத்தின் வளர்ச்சி பற்றி எழுதுக.
24.
MYSQL மேலாண்மை அமைப்பில் உள்ள திறந்த மூல மென்பொருள் கருவிகளை பற்றி குறிப்பு எழுதவும்
25.
அசைவூட்டல் திரைப்பட துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி கண்டறியவும்.
26.
விற்பனை முனை (POS) என்றால் என்ன?
27.
WAV பற்றி குறிப்பு வரைக.
28.
களப்பெயர் வெளியில் உள்ள வகைகள் யாவை?
29.
USB வடங்களின் பயன்கள் என்ன?
30.
NRCFOSS விளக்கம் தருக.
31.
டாட்காம் குமிழி மற்றும் டாட்காம் வெடிப்பு என்றால் என்ன?
32.
டைபோபைரஸி பற்றி சிறுகுறிப்பு வரைக.
33.
பேஜ்மேக்கரில் புதிய பக்கங்களை எவ்வாறு செருகலாம்?
34.
EDI துணைக்குழு பற்றி குறிப்பு வரைக.
35.
அணி மற்றும் அதன் வகைகளை விவரி.
36.
PHP ஸ்கிரிபிடிங் மற்றும் தரவுத்தள சேவையகத்திற்கு இடையேயான நடப்பிலுள்ள திறந்த தரவுத்தள இணைப்பை எவ்வாறு மூடுவாய்?
37.
ஈத்தர்நெட் அட்டையின் வகைகளை விவரி.
38.
மதிப்பு கூட்டப்பட்ட வலையமைப்பு (VAN) என்றால் என்ன?
39.
விரிவாக்கம் தருக ARP, ICMP, SMTP மற்றும் DNS.
40.
Switch மற்றும் if else கூற்றினை வேறுபடுத்துக
41.
வலை சேவையக பக்கம் மற்றும் கிளைன்ட் பக்கம் ஸ்கிரிப்டிங் மொழிகளை வேறுபடுத்துக
42.
ஏதேனும் இரண்டு மின்-வணிக பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பட்டியலிடுக.
43.
பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளையும் அதன் விசைப்பலகை குறுக்கு வழிகளையும் கூறு.
1.
(b)
HTML
2.
(c)
கணு
3.
(d)
Radio Frequency Identification
4.
(d)
Top Level Domain
5.
(d)
மேற்கண்ட அனைத்தும்
6.
(a)
7.
(c)
பிழை
8.
(a)
count
9.
(b)
1+2
10.
(a)
நுண் செலுத்தல் மற்றும் பேரின செலுத்தல்
11.
(c)
வினவல் (Query)
12.
(a)
VISA
13.
(d)
EDIFACT
14.
(c)
Rectangle
15.
(a)
8 பிட்
16.
பயன்பாட்டு அடுக்கு (Application Layer): TCP / IP மாதிரியின் பயன்பாட்டு அடுக்கு OSI குறிப்பு மாதிரியின் தொடர், விளக்கக் காட்சி, பயன்பாட்டு அடுக்குகளை ஒத்திருக்கும். மிகப் பிரபலமான பயன்பாட்டு அடுக்கு நெறிமுறைகள்.
பின்வருமாறு:
(i) Hypertext Transfer protocol (HTTP):இது உலகளாவிய வலையின் முக்கிய பொறிமுறை ஆகும்.
(ii) File Transfer Protocol (FTP): சேவையகத்திலிருந்து பயனருக்கு முழுமையான கோப்புகளை அனுப்பவும் பெறவும் அனுமதிக்கிறது.
(iii)Telnet: இணையத்தில் ஒரு கணினியை மற்றொரு கணினியோடு இணைக்கிறது.
(iv) Simple Mail Transfer Protocol: மின்னஞ்சல் சேவைகளை வழங்குகிறது.
(v) Domain Name System: பிற கணினிகளை எண்களைக் காட்டிலும் பெயர்களைக் கொண்டு குறிப்பிடுகிறது.
17.
சமூக வலையமைப்புகளில் உள்ள பொதுவான பண்புகள்:
உறுப்பினர் நிலை (Membership):
(i) சமூக வலைகள் அனைத்தும் போலிக்கணக்குகளைத் தவிர்க்கவும் இரகசியம் காக்கவும் பயனர்கள் பொதுவாக பெயர்கள் மற்றும் கணக்குகளை பதிவு செய்ய வலியுறுத்துகிறது.
(ii) பல சமூக வலையமைப்புகள் இலவச பதிவுகளை வழங்குகின்றன.
(iii) சில அமைப்புகள் தமது சிறப்பு சேவைகளுக்காக கட்டணம் வசூலிக்கின்றன.
(iv) தனியார் வலையமைப்புகள் (BANK ACCOUNT HOLDERS குழுக்கள் போன்றவை) சில தகுதிகளை நிறைவு செய்யும் நபர்களுக்கு மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கின்றன.
கருத்துப் பகிர்வு (Content Contribution):
இந்த வலையமைப்புகள் உறுப்பினர்கள் கருத்துகள், திரைப்படங்கள், இசை, குறும்படங்கள் மற்றும் புகைப்படங்களை மற்றவர்களுடன் எளிதில் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கின்றன.
அடிக்கடி திரும்பி வருதல்:
ஆரோக்கியமான சமூக வலை தொடர்ச்சியாக கருத்து பங்களித்தல் மற்றும் மேம்படுத்தலுக்காக உறுப்பினர்களின் மையத்தை அமைக்கிறது.
மனித உறவு கட்டமைத்தல்:
பெரும்பாலான சமூக வலையமைப்புகளின் பொதுவான குறிக்கோள் மக்கள் சமூகங்களுடன் வலுவான இணைப்புகளை உருவாக்குவதற்கான தொடர்பாடலை அனுமதிக்கிறது.
18.
மூன்று வகை பயனாளர் சேவையகக் கட்டமைப்பு :
1. ஒற்றை அடுக்கு கட்டமைப்பு
2. இரண்டு அடுக்கு கட்டமைப்பு
3. பல/மூன்று அடுக்கு கட்டமைப்பு
1. ஒற்றை அடுக்கு கட்டமைப்பு :
(i) சேவையகம் பயன்படுத்துகின்றது. பயனாளரால் அணுகப்படுகின்றது.
(ii) பயனாளர் பயன்பாடு சேவையக கணிப்பொறிக்குள்ளேயே இயங்குகின்றது.
2. இரண்டு அடுக்கு கட்டமைப்பு
(i) இந்த கட்டமைப்பைச் சேவையகம் பயன்படுத்துகின்றது.
(ii) இரண்டு அடுக்கு ஊடாடுதலை கொண்டு பயனாளரால் அணுகப்படுகின்றது.
(iii) அதாவது பயனாளர் அடுக்கு ஒன்றிலும் சேவையகம் அடுக்கு இரண்டிலும் இயங்குகின்றன.
3. பல/மூன்று அடுக்கு கட்டமைப்பு :
(i) இந்த கட்டமைப்பைச் சேவையகம் பயன்படுத்துகின்றது.
(ii) ஒன்றிற்கு மேற்பட்ட அடுக்கு ஊடாடுதலைக் கொண்டு பயனரால் அணுகப்படுகின்றது.
(iii) நிரலர் வணிக ரீதியான அடுக்குகளின் எண்ணிக்கையை மென்பொருளின் தேவையைப் பொறுத்து தீர்மானிக்கிறார்.
(iv) இந்த காரணத்தினால் இந்த மாதிரியை பல/மூன்று அடுக்கு கட்டமைப்பு என்கிறோம்.
19.
படி 1: முன்னதாக வங்கி வழங்கிய பிரத்யேக பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி நிகழ்நிலை வங்கிக் கணக்கில் உள்நுழையவும்.
படி 2: நிதி பரிமாற்றத்தைச் செயல்படுத்த பயனாளியை "பணம் பெறுபவரில் சேர்க்கவும்". பயனாளியின் வங்கிக் கணக்கு எண். பெயர், IFSC போன்றவற்றை, "புதிய பணம் பெறுபவரின் பிரிவை சேர்" பகுதியில் நிரப்பப்பட வேண்டும்.
படி 3: பயனாளி சேர்க்கப்பட்டவுடன், நிதி பரிமாற்ற முறையை (RTGS/NEFT/IMPS) தேர்வு செய்யவும்.
படி 4: பணத்தைச் செலுத்த வேண்டிய கணக்கைத் தேர்ந்தெடுக்கவும், பணம் பெறுபவரைத் தேர்ந்தெடுக்கவும், பணம் பெறுபவரைத் தேர்ந்தெடுக்கவும், அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிட்டு குறிப்புரையை (விரும்பத்தேர்வு) சேர்க்கவும்.
படி 5: சமர்பி கொடுக்கவும்.
படி 6: வங்கி கணக்குடன் தொடர்புடைய கைப்பேசி எண்ணுக்குப் பெறப்பட்ட OTP ஐ உள்ளீட்டு பரிவர்த்தனையை நிறைவு செய்யவும்.
நவீன மின்னணு பணப் பரிமாற்றம் தனிப்பட்ட அடையாள எண் (PIN). ஒரு முறை கடவுச் சொல் (OTP) போன்றவற்றால் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு தானியங்கி தீர்வை அமைப்பு (ACH) அதன் பின் பணம் செலுத்தும்.
20.
படிவ (< Form >)ஒட்டு, ஆவணத்திலுள்ள அனைத்து படிவ உறுப்புகளைக் கட்டுப்படுத்தவும். ஒரு வழிமுறையைக் குறிப்பிடவும் பயன்படுகின்றது.
PHP-ல் படிவத்தை கையாள்வதில் உள்ள அடிப்படைகள்:
1. POST வழிமுறை: உள்ளீடு செய்யப்படும் தரவானது Post வழிமுறை மூலம் சேவையகத்திற்கு அனுப்பப்பட்டு கிளை கணிப்பொறியின் HTTP request -னுடைய கோரிக்கை உடற்பகுதியில் (request body) சேமிக்கப்படுகின்றது.
2. GET வழிமுறை: உள்ளீடு செய்யப்படும் தரவானது, URL முகவரி வழியாக GET வழிமுறை மூலம் சேவையகத்திற்கு அனுப்பப்படுவதை வினவல் (query string) சரம் என்கிறோம்.
3. உள்ளீடு செய்யப்பட்ட அனைத்துத் தரவினையும் பயனர் Submit பொத்தானை கிளிக் செய்த பிறகும் காண முடியும்.
எ.கா:
Test.html:
< html >
< body >
< form action="welcome.php"method="post" >
Name: < input type="text" name="name" > < br >
E-mail: < input type="text" name="email" > < br >
< input type="submit" >
< /form >
< /body >
< /html >
Welcome.php:
< html >
< body >
Welcome < ?php echo $_POST["name"]; ? > < br >
Your email address is: < ?php echo $_POST["email"]; ? >
< /body >
< /html >
21.
களப்பெயர் முறைமையில் 4 முக்கிய கூறுகள் உள்ளன. அவை
1. பெயர்வெளி
2. பெயர் சேவையகம்
3. மண்டலம்
4. தீர்வி
1. பெயர்வெளி: களப்பெயர்கள் மிகவும் தனித்துவமானவையாகவும் மற்றும் பொருத்தமானவையாகவும் இருக்க வேண்டும். பெயர்வெளி இரண்டு வழிகளில் ஒருங்கமைக்கப்படலாம்.
i. கிடைப்பெயர்வெளி
ii. படிநிலை பெயர்வெளி
i. கிடைப்பெயர்வெளி : ஒரு IP முகவரிக்கு ஒரு பெயர் ஒதுக்கப்படுகிறது.
ii. படிநிலை பெயர்வெளி :
1. பெயர் பல பகுதிகளில் ஆனது. இதனை அடைய களப் பெயர்வெளி வடிவமைக்கப்பட்டது.
2. களப் பெயர்வெளி என்பது உயர் மட்டத்தில் மூல உறுப்பை கொண்ட ஒரு தலை கீழ் மர அமைப்பாகும். இந்த மர அமைப்பு மட்டங்கள் o முதல் 127 வரை மொத்தம் 128 மட்டங்களைக் கொண்டிருக்கும்.
3. சிட்டை என்பது ஒரு சரம், இது அதிகபட்ச 63 எழுத்துக்களை கொண்டிருக்கலாம். ஒரு மட்டத்தில் உள்ள ஒவ்வொரு முனையும் தனிப்பட்ட சிட்டைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
4. களபெயர் புள்ளியால் (.) பிரிக்கப்பட்ட சிட்டைகளின் வரிசையாகும். களப்பெயர் எப்போதும் இலை முனையிலிருந்து வேர் முனைவரை படிக்கப்படுகிறது. வேர் முனை எப்போதும் சரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே அனைத்து டொமைன் பெயரும் புள்ளியில் முடிவடையும்.
5. களப்பெயர் வெளி மர அமைப்பில் களங்களை துணை களங்களாக பிரிக்கலாம்.
2. பெயர் சேவையகள்: ஒரு கணினியில் இயக்கப்படும் நிரல்கள் மற்றும் அனைத்து மண்டலத் தரவையும் சேமிக்கின்றன. அவைகளில் வினவப்படும் போது இதனை நுகர்வுகளுக்கு வழங்குகிறது.
3. மண்டலம்: சேவையகம் அணுகக் கூடிய தொடர்ச்சியான பகுதியாகும். ஒரு மண்டலத்தில் ஒரே ஓரு களம் இருந்தால், அங்கு களமும், மண்டலமும் ஒன்றே.
4. தீர்வி: தீர்வி ( Resolver) என்பது ஒரு களப்பெயரை ஐபி முகவரியாக மொழி பெயர்க்கும் பணியை துவக்கும் நிரலாகும். தீர்வி புரவலன் கணினியிலேயே சேமிக்கப்பட்டு இருப்பதால், தீர்விக்கும் பயனர் நிரலுக்கும் இடையேயான தொடர்பை உருவாக்க எந்த நெறிமுறையும் அவசியமில்லை .ஒரு கிளையண்ட் /சர்வர் பயன்பாடு, இது களப் பெயர்களைத் தீர்க்கும் செயல்முறையைத் தொடங்குகிறது.
22.
foreach மடக்கு அணியில் உள்ள உறுப்புகளுடன் மீண்டும் மீண்டும் செயல்பட பயன்படுகிறது.
கட்டளை அமைப்பு:
foreach ($array as $value)
{
//code to be executed;
}
foreach மடக்கின் ஒவ்வொரு சுழற்சியின் போதும் நடப்பு அணி உறுப்பின் மதிப்பானது $value மாறியில் இருத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு :
அணியின் உறுப்புகளை அச்சிடுவதற்கான foreach மடக்கு
$array = array(1, 2, 3, 4, 5);
foreach ($array as $value) }
echo $value."
";
கீழ்க்கண்ட கட்டளை அமைப்பு பயன்படுத்தி தொடர்புருத்த அணியில் உள்ள திறவுகோல்கள் மற்றும் மதிப்புகளை foreach மடக்கின் சுழற்சியில் பயன்படுத்தலாம்.
கட்டளை அமைப்பு:
foreach ($array as $key => $value)
{
//code to be executed;
}
foreach மடக்கின் ஒவ்வொரு சுழற்சியின் போதும் நடப்பு அணி உறுப்பின் திறவுகோலானது Skey மாறியிலும், மதிப்பானது $value மாறியிலும் இருத்தப்படுகிறது.
வெளியீடு:
1
2
3
4
5
23.
(i) இணையம் கொண்டு வந்த மின்னணு வணிகமும் தகவல் புரட்சியும் தொடர் அலைகள் வழியாக விளக்கலாம்
1. மின் - வணிகத்தின் முதல் அலை: 1995 - 2003
(i) முதல் முதல் அலையின் Dotcom நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்கள் தான். அதனால் அதன் இணையதளங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன
(ii) Dotcom குமிழி முதல் அலை நிறுவனங்களுக்கு பெரும் முதலீடுகளை ஈர்த்திருந்தது
(iii) இணையம் வெறுமென படிக்க மட்டும் வலையாகவும் மற்றும் வலையமைப்புத் தொழில்நுட்பம் அதன் ஆரம்பக் கட்டத்திலிருந்தால் அலைக்கற்றை மற்றும் வலையமைப்புப் பாதுகாப்பு மிக குறைவாக இருந்தது
(iv) EDI மற்றும் கட்டமைக்கப்படாத மின்னஞசல் மட்டுமே நிறுவனங்களுக்கு இடையிலாக இருந்து வந்தது
(v) ஆனால் முதல் அலை நிறுவனங்கள் முதல்நகர்வு அனுகூலத்தை அனுபவித்ததோடு வாடிக்கையாளர்களுக்கு எந்த விருப்பத் தேவையும் கொடுக்கவில்லை
எ.கா: Amazon.com, eBay மற்றும் Yahoo.
2. மின் - வணிகத்தின் இரண்டாவது அலை: 2004 - 2009:
(i) Dotcom வெடிப்பிற்கு பின், மின் - வணிகத்தின் மறுபிறப்பு இரண்டாவது அலை ஆகும்
(ii) உலகளாவிய அலையாகக் கருதப்படுகிறது
(iii) விற்பனையாளர்கள் பல நாடுகள் மற்றும் பல மொழிகளில் வியாபாரத்தை விரிவுபடுத்தினர்
(iv) இரண்டாவது அலை வலையத்தளங்களில் மொழிபெயர்ப்பு மற்றும் நாணய மாற்றத்தில் கவனம் செலுத்தப்பட்டன
(v) இரண்டாவது அலை நிறுவனங்கள் தங்கள் சொந்த நிதிகளைப் பயன்படுத்தி தங்கள் மின்வர்தக வாய்ப்புகளைப் படிப்படியாக விரிவுபடுத்தி வந்தன
(vi) இதன் விளைவாக மின் வணிகம் மெதுவாக, இருந்தாலும் இன்னும் சீராக வளர்ந்தது
(vii) வலையமைப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் ஊடாடும் வலையின் விரிவான வளர்ச்சி நுகர்வோருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கிக் கொண்டிருந்தது
(viii) இரண்டாம் அலையின் போது அதிகரித்த இணையப் பயனாளர்கள் B2C மின் வணிக நிறுவனகளுக்கு ஊட்டமளித்தனர்
3. மின் வணிகத்தின் மூன்றாம் அலை 2010 நிகழ்காலம் வரை:
1. மூன்றாவது அலை கைபேசி தொழில்நுட்பங்களால் கொண்டு வரப்பட்டது
2. நிகழ் நேரம் மற்றும் தேவை அடிப்படையில் கைபேசி சாதனங்கள் மூலம் பயனர்களை இணைக்கப்படுகிறது
3. குறிப்பிட்ட இருப்பிடம் சார்ந்த தொகுக்கப்பட்ட தகவல்கள், நேர அடிப்படையில் மட்டுமல்லாமல் புவியியல் ஆயத் தொலைவுகள் மூலம் வடிகட்டப்படுகிறது
4. வலை 3.0 என்ற பதம், செயற்கை நுண்ணறிவு, Semantic Web, Generic Database போன்றவை அடங்கிய எதிர்கால இணையத்தின் பல்வேறு பண்புகளைச் சுருக்கமாகத் தொகுத்தளிக்கிறது
24.
தரவுதளத்தை சிறந்த மற்றும் திறமையான முறையில் வடிவமைப்பதற்கான, பல திறந்த மூல கருவிகள் கிடைக்கின்றன. phymyAdmin என்பது வலை நிர்வாகத்திற்கு மிகவும் பிரபலமானதாகவும். MYSQL Work bench மற்றும் Heidi SQ போன்றவை பிரபலமான டெக்ஸ்டாப் பயன்பாட்டு கருவிகளாகும்.
PHPMYADMIN (Web Admin):
(i) MYSQL -ன் நிர்வாகக் கருவி ஆனது - PHP -ல் எழுதப்பட்ட ஒரு வலைப்பயன்பாடாகும்.
(ii) இவைகள் வலைச் சேவைகளில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
(iii) CSV -ல் இருந்து தரவுகளை தருவித்தல் மற்றும் தரவுகளை பல்வேறு வடிவமைப்பில் வழங்குதலுக்கான வலை இடைமுகத்தை வழங்குவது இதன் முக்கிய அம்சமாகும்.
(iv) இது MYSQL சேவையாக செயல்களான இணைப்புகள், செயல்முறைகள் மற்றும் நினைவகப் பயன்பாடு போன்றவற்றை கண்காணிப்பதற்கான நேரடி வரைப்படங்களை (Charts) உருவாக்குகிறது. இது சிக்கலான வினவல்களை எளிமையாக்கவும் பயன்படுகிறது.
MY SQL Work bench (டெஸ்க்டாப் பயன்பாடு):
(i) இது நிரலர்கள் மற்றும் DBA - வால் முக்கியமாக காட்சிப்படுத்தலுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு தரவுதளக் கருவி ஆகும்.
(ii) இந்தக் கருவி தரவு மாதிரியாக்கம், SQLஉருவாக்கம், சேவையக மற்றும் MYSQLன் காப்புப் பிரதி (Back up) போன்றவற்றில் உதவுகிறது.
(iii) இதன் அடிப்படை வெளியீட்டு பதிப்பு 5.0 ஆகும். தற்போது 8.0 அனைத்து இயக்க அமைப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
(iv) இந்தக் கருவியின் SQL பதிப்பாளர் (editor) பல வெளியீடு தொகுதிகளை கையாளுவதில் நெகிழ்வுத் தன்மையுடனும் மற்றும் வசதியாகவும் உள்ளது.
HeidiSQL (டெக்ஸ்டாப் பயன்பாடு) :
(i) இந்த திறந்த மூலக்கூறுகள் சிறந்த தரவுத்தள அமைப்புகளின் நிர்வாகத்தில் உதவுகிறது.
(ii) இது சேவையக இணைப்பு, தரவுதளங்கள். அட்டவணைகள், காட்சிகள், தூண்டுதல்கள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவற்றுகான GUI (Graphical| User Interface) சிறப்பம்சங்களை ஆதரிக்கிறது.
25.
நம் காலத்தின் மிகப்பெரிய சினிமா படங்களின் பின்னால் சில டிஜிட்டல் அனிமேட்டர்ஸ் உள்ளனர். இன்றைய பாப் கலாச்சார சூழலில் டிஜிட்டல் அனிமேஷன் நடுநாயகமாகத் திகழ்கிறது என்பதற்கு லேம்ஸ் கேமரூனின் 'அவதார்' ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பல்வேறு தொழில் துறைகளில் டிஜிட்டல் அனிமேஷன் வேலைகள் சாத்தியமாகும்.
திரைப்படத் துறையில் உள்ள அனிமேஷன் வாய்ப்புகள் :
அசைவூட்டல் தொழில், ஆர்வம் மற்றும் ஆக்கப்பூர்வமான விருப்பங்களுக்கு ஏற்ப பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
1. முப்பரிமாண மாதிரிகளை உருவாக்குபவர்கள் :
(3D Modellers) : பார்வையாளர்கள் பொருளை நன்றாகப் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் குறிப்பிட்ட பொருளை அனைத்துக் கோணங்களிருந்து கணினி மாதிரிகளாக உருவாக்குபவர்கள்.
2. கதாபாத்திர அனிமேட்டர்ஸ் (Character Animators) : ஒரு கதையை சொல்லக் கூடிய கதாபாத்திரங்கள் மற்றும் பொருத்தமான உடல் இயக்கங்களை உருவாக்குபவர்கள்.
3. இயக்க வரைகலை கலைஞர்கள் (Motion Graphics Artists) : பல்வேறு நிலைகளில் ஆக்கபூர்வமான செயல்முறைக்கு பொறுப்பானவர்கள். இயக்கத்தை சித்தரிக்க இரு பரிமாண, முப்பரிமாண அசைவூட்டப் படங்களை உருவாக்குபவர்கள்.
4. நுண் அமைப்பு கலைஞர்கள் (Texture Artists) : அசைவூட்டம் செய்யப்பட்ட கதாபாத்திரங்கள், கதாபாத்திரத்தை (அ) கலை வேலைபாட்டைச் சுற்றியுள்ள உடைமைப் பொருட்களுக்கான அமைப்பு, வண்ணம் மற்றும் முப்பரிமாண பயன்படுத்துபவர்கள்.
5. ஒளி கலைஞர்கள் (Lighting Artists) : காட்சியை உண்மை தன்மையுடனும் முறைகளின்றி உருவாக்க, சரியான ஒளி மற்றும் நிழல் விளைவுகளை ஒளி துறையுடன் பணிபுரிபவர்கள்.
6. தந்திரக் கலைஞர்கள் (Rigging Arists) :
1. துல்லியமான மற்றும் விரிவான பார்வை தேவை உள்ளவர்கள்.
2. உருவாக்குதல் சவால்களைத் தீர்ப்பதற்கும் கதாபாத்திரங்களின் இயக்கங்களை சாத்தியமாக்குவதற்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு மாதிரிகளை உருவாக்குபவர்கள் மற்றும் அசைவூட்டக் கலைஞர்களோடு ஒத்திசைவுடன் வேலை செய்பவர்கள்.
இயக்கப்பட்ட தொடர் சித்திரக் கலைஞர்கள் (Story board Artists) :
கையாலோ கணினி மூலமாகவோ தொடர்/சினிமாக் காட்சிகளை ஒவ்வொரு சட்டங்களாக வரைந்து காட்சிப்படுத்துபவர்கள்.
தொகுத்தல் கலைஞர்கள் (compositing Artists) :
பல்லூடகப் பயன்பாட்டில் பின்-உருவாக்குதல் செயல்பாட்டிற்கான முக்கியமானக் கலைஞர்களில் இவர்களும் ஒருவர் ஆவர். திட்டப் பணிக்கு இறுதிச் செயல்பாடுகளை இவர்கள் தருகிறார்கள்.
26.
(i) விற்பனை முனையின் (POS) - இது வாடிக்கையாளர்கள் கடன் மற்றும் பற்று அட்டைகள் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கு பணம் செலுத்த வழிவகை செய்கிறது.
(ii) வாடிக்கையாளர் வசதிக்காக சில வங்கிகள் POS முனையங்களில் பற்று அட்டைகளைப் பயன்படுத்திப் பணத்தை பெற அனுமதிக்கின்றன.
27.
WAV (Waveform Audio File Format) :
1. விண்டோஸில் குறுக்கப்படாத ஒலி கோப்புகளைச் சேமிக்கும் மிகவும் பிரபலமான ஒலி கோப்பு வடிவமாகும்.
2. குறைக்கப்பட்ட கோப்பின் அளவைப் பெறுவதற்காக MP3 போன்ற மற்ற கோப்பு வடிவங்களுக்கு மாற்றி அமைக்க முடியும்.
28.
1. பெயர்வெளி (Name Space)
2. பெயர் சேவையகம் (Name Server)
3. மண்டலம் (Zone)
4. தீர்வி (Resolver)
29.
USB (Universal Serial Bus) வடம் விசைப்பலகை, சுட்டி மற்றும் பிற புறச் சாதனங்களை கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது
30.
National Resource Centre for Free and Open Source Software (NRCFOSS) என்ற இந்திய அரசாங்கத்தின் அமைப்பு இந்தியாவின் இலவச திறந்த மூல மென்பொருள் உருவாக்கம் மற்றும் மேம்பாட்டிற்கு உதவி செய்கிறது
31.
டாட்காம் குமிழி:
(i) டாட்காம் குமிழி சுமார் 1995 மற்றும் 2000ற்கு இடையே டாட்காம் நிறுவனங்களின் ஒரு வரலாற்று மிதமிஞ்சிய வளர்ச்சி ஆகும்.
(ii) மேலும் இது இணையத்தின் பயன்பாடு மற்றும் தகவமைப்பு ஆகியவற்றின் அதீத வளர்ச்சி காலகட்டம் ஆகும்.
டாட்காம் வெடிப்பு:
(i) NASDAQ கூட்டுப் பங்குச் சந்தை குறியீடானது 5046.86 லிருந்து 1114.11 ஆகச்சரிந்தது.
(ii) இது புகழ்பெற்ற டாட்காம் முறிவு அல்லது டாட்காம் வெடிப்பு என அறியப்படுகிறது.
32.
(i) டைபோபைரஸி என்பது சைபர் squatting ன் ஒரு வகையாகும்.
(ii) சில போலி வலைத்தளங்கள் பயனர்களின் பொதுவான தட்டச்சு பிழைகளை பயன்படுத்தி அவர்களை தங்கள் வலைத்தளத்திற்கு திசை திருப்பும் மோசடி ஆகும்.
எ.கா.:
www.goggle.com
www.faceblook.com
33.
(i) சேர்க்க வேண்டிய பக்கத்திற்கு முதல் பக்கத்தில் கிளிக் செய்யவும்.
(ii) பட்டிப்பட்டையில் Layout > Insert Pages என்பதைக் கிளிக் செய்யவும்.
(iii) Insert Page உரையாடல் பெட்டி தோன்றும்.
(iv) Insert உரைப்பெட்டியில் சேர்க்க வேண்டிய பக்கங்களின் எண்ணிக்கையை உள்ளிடவும்.
(v) தற்போதைய பக்கத்திற்கு பின்பு பக்கத்தைச் சேர்க்க, page(s) கீழிறங்குப் பட்டியில் 'after' என்பதைக் கிளிக் செய்யவும்.
(vi) Insert பொத்தானை அழுத்தவும்.
(vii) இப்பொழுது புதிய பக்கங்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.
34.
1. சிக்கற்பாடு காரணமாக துறை சார்ந்த EDIFACT துணைத்தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
2. EDIFACT ன் இந்த துணை தொகுப்புகள் குறிப்பிட்ட பயனர் குழுக்களுக்குரிய செயல்பாடுகளை மட்டுமே உள்ளடக்கியிருக்கும்.
எ.கா: CEFIC இரசாயன தொழில் துறை.
35.
அணி என்பது ஒரே தளவு வகையைச் சார்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை ஒரே நேரத்தில் வைக்கப் பயன்படும்.
வகைகள் :
1. சுட்டு எண்கள் கொண்ட அணிகள்
2. தொடர்புருத்த அணிகள்
3. பல பரிமாண அணிகள்
1. சுட்டு எண்கள் கொண்ட அணிகள் :
அணி மாறியியல் உள்ள மதிப்புகள் எண்களைச் சுட்டெண்களாகக் கொண்ட அணிகளாக இருப்பின் திறவிற்கு இணை மதிப்புகள் இருத்தப்படும். பயனர் இந்த திறவுகளைப் பயன்படுத்தி மதிப்புகளை எடுத்துக்கொள்வர்.
கட்டளை அமைப்பு :
அணியானது array ( ) என்ற சிறப்புச் சொல்லுடன் வரையறுக்கப்படுகிறது.
$teacher_name = array("Iniyan:,"Kavin","Nilant"),
echo"The student name are".
$teacher_name[0],"$$tyeacher_name[1] "and",$teacher_name[2]
?>
2. தொடர்புருத்த அணிகள் :
(i) பெயரிடப்பட்ட திறவுகளை இருத்தி வைக்கப்பயன்படுத்தப்படும்.
(ii) திறவும், மதிப்பும் இணைந்த தரவுக் கட்டமைப்பாகும்.
கட்டளை அமைப்பு :
array(key=>value, key=>,key=>value,etc,);
key=Specifies the key (numeric or string)
value=Specefies the value
எ.கா :
$marks = array("student1" =>"35");
echo"student 1 mark is ".$marks['student1'];
echo"Student 2 mark is",$marks['student2'];
3. பல பரிமாண அணி
(i) பல பரிமாண அணி என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணிகளைக் கொண்ட ஒரு அணி ஆகும்.
(ii) PHPல் பல்வேறு வகையான (அ) அளவுள்ள பல பரிமாண அணிகளை உருவாக்கமுடியும்.
(iii) அதாவது இரண்டு மூன்று நான்கு ஐந்து (அ) அதற்கும் அதிகமான அளவுள்ள பரிமாண அணிகளை உருவாக்கலாம்.
எ.கா:
//A two-dimensional array
$student=array
(
array("Iniyan",100,96),
array("Kavin",60,59),
);
?>
36.
mysqll_close( ) செயற்கூறு PHP ஸ்கிரிப்ட்டிங் மற்றும் MySQL தரவுத்தள சேவையகத்திற்கு இடையேயான நடப்பிலுள்ள திறந்த தரவுத்தள இணைப்பை மூடுவதற்குப் பயன்படுகிறது.
கட்டண அமைப்பு:
mysquli_close("Connection Object");
எ.கா:
< ? php
$con = mysqli_connect ("localhost", " $user", "$password", "SCHOOL_DB");
mysqli_close($con);
? >
37.
(i) ஈத்தர்நெட் அட்டை ஒரு விரிவாகக் அட்டை (அ) உள்ளிணைந்த அட்டையாக இருக்கலாம்.
(ii) விரிவாக்க வகை அட்டை (தனி மின்சுற்றுப் பலகை) என்பது PCI ஈத்தர்நெட் அட்டை எனவும் அழைக்கப்படுகிறது.
(iii) கணினியின் மதர்போர்டில் உள்ள PCI ஸ்லாட்டுக்குள் செருகப்படுகிறது.
(iv) தற்போது பெரும்பாலான கணினிகளில் அட்டைகள் உள்ளன.
(v) தற்போது ரேடியோ அலைகள் மூலம் தரவுகளைப் பரிமாறும் கம்பியில்லா ஈத்தர்நெட் அட்டைகளும் பயன்பாட்டில் உள்ளன
38.
1. ஒரு நிறுவனம் அதன் சொந்த வலையமைப்பை அடிப்டையாகக் கொண்டு மற்ற நிறுவனங்களுக்கு EDI சேவைகளை வழங்குவதை குறிக்கிறது.
2. இது வணிகர்களுக்கிடையே ஒரு இடைத்தரகர் போல் செயல்படுகிறது.
3. மதிப்பு கூட்டப்பட்ட வலையமைப்புகளின் கோட்பாடுகள் அணுகல் உரிமைகளை பயனர்களுக்கு ஒதுக்கீடு மற்றும் உயர் தரவுப்பாதுகாப்பு வழங்குதல் ஆகும்.
39.
| ARP | Address Resolution Protocol. |
| ICMP | Internet Control Message Protocol. |
| SMTP | Simple Mail Transfer Protocol. |
| DNS | Domain Name System. |
40.
| switch கூற்று | if else கூற்று |
| 1. பல்வேறு தொகுதிகளில் ஒன்றை செயல்படுத்தத் தேர்வு செய்கிறது. | இரு மாற்று வழிகளில் ஒரு தொகுதியைச் செயல்படுத்தத் தேர்வு செய்கிறது. |
| 2. சமம் என்ற ஒப்பீட்டை மட்டுமே சோதிக்கிறது. | சமம் என்ற ஒப்பீடுடன் மற்றும் தருக்கக் கோவைகளைச் சோதிக்கிறது. |
| 3. ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை ஒரே நேரத்தில் சோதிக்க முடியும். | ஒரு கோவையை மட்டுமே சரி பார்க்கிறது. |
| 4. எந்த ஒரு case தொகுதியுடன் கோவையின் மதிப்பு பொருந்தவில்லை என்றால் 'default' என்ற சிறப்புச் சொல்லின் கீழ்வரும் கூற்றுகள் செயல்படுத்தப்படும். | நிபந்தனை தவறு எனில், else என்ற சிறப்புச் சொல்லின் கீழ்வரும் கூற்றுகள் செயல்படுத்தப்படும். |
41.
| வலை சேவையக பக்க ஸ்கிரிப்டிங் | கிளைன்ட் பக்கம் ஸ்கிரிப்டிங் |
|---|---|
| 1. ஸ்கிரிப்ட் குறிமுறை முழுவதும் வலை சேவையைக் கணிப்பொறியில் இயங்குகிறது | ஸ்கிரிப்ட் குறிமுறை முழுவதும் வலை உலாவியில் இயங்குகிறது. |
| 2. கிளைன்ட் பக்கம் மூலக்கூறி முறையை பார்க்க முடியாதபடி மறைத்து வைத்து பயன்படுத்தப்படும். | வலை உலாவியில் முன்னின்று செயல்படுத்தப்படும். பயனர் மூலக்கூறி முறையைப் பார்க்க முடியும். |
| 3.சேவையகக் கணிப்பொறி உடனான ஊடுதல் தேவை. | சேவையகக் கணிப்பொறியுடனான ஊடாடுதல் தேவையில்லை. |
| 4. பாதுகாப்பானது | பாதுகாப்பற்றது. |
42.
1. தரவு சிதைப்பு (Tampering)
2. பண மோசடிகள் (Payment frauds)
3. தகவல் கசிவு (Information Leakage)
4. தீங்கிழைக்கும் நிரல் அச்சுறுத்தல்கள் (Malicious code threats)
5. பரவல் சேவை மறுக்கப்படல்,தாக்குதல்கள் (Distributed Denial of Service - DDoS)
6. சைபர் Squatting (Cyber Squatting)
7. டைபோபைரஸி (Typopiracy)
43.
| கருவிகள் | விசைப்பலகை குறுக்கு வழி |
| 1. பாயின்டர் டூல் (Pointer tool) | F9 |
| 2. ரொட்டேடிங் டூல் (Rotating tool) | Shift+F2 |
| 3. லைன் டூல் (Line tool) | Shift+F3 |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards