12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Creative Three mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
தரவுகளின் நம்பகத்தன்மை எவ்வாறு சிதைக்கப்படுகிறது?
2.
வலையமைப்பு நெறிமுறைகளின் வகைகள் எவற்றை உள்ளடக்கியது?
3.
தரவுத்தள இணைப்பை ஏற்படுத்தும் மாறிகள் சிறுகுறிப்பு தருக.
4.
பயனாளர் சேவையக கட்டமைப்பு வகைகளை விளக்குக.
5.
பிறமென்பொருள்களில் தயாரிக்கப்பட்ட கோப்புகளை பேஜ்மேக்கரில் எவ்வாறு செருக முடியும்? விளக்குக.
6.
சுட்டெண்கள் கொண்ட அணி மற்றும் தொடர்புருக்கு அணியை விவரி.
7.
WHERE பிரிவின் பயன் யாது?
8.
FLUSH PRIVILEGES என்றக் கட்டளையின் பயன் யாது?
9.
பெயர்வெளி (Name space) ஒழுங்கமைக்கப்படக்கூடிய வழிகள் யாவை?
10.
HTTPS - ன் பயன் யாது?
11.
மின் வங்கிச் சேவை குறிப்பு வரைக.
12.
வலைக்கட்டமைப்பு மென்பொருள் என்றால் என்ன? கட்டமைப்பு மென்பொருள்கள் சிலவற்றைப் பட்டியலிடு.
13.
HTML னுடைய INPUT பண்புக் கூறுக்கான செல்லுபடியாக்கல் விதிமுறைகளைப் பட்டியலிடு.
14.
ஒருங்கிணைந்த செலுத்துதல் இடைமுகத்தின் நன்மைகள் யாவை?
15.
பேஜ்மேக்கரில் ஒரு நேர் கோட்டை எவ்வாறு வரைவாய்?
16.
ஆல்ட் நாணயங்கள் என்றால் என்ன? எ.கா. தருக
17.
பேஜ்மேக்கரில், சேமிக்கப்பட்ட ஆவணத்தை வேறு பெயரில் அல்லது வேறு இடத்தில எவ்வாறு சேமிக்கலாம்?
18.
புனை மெய்ம்மை (Augmented Reality) பற்றிக் குறிப்பு வரைக.
19.
உரையைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் விசைப்பலகைப் குறுக்கு வழிகளைப் பட்டியிலிடு.
20.
NS2 ன் அம்சங்களை விவரி.
21.
டாங்கிள் என்றால் என்ன?
22.
MIDI படிவம்-குறிப்பு வரைக.
23.
OGG என்றால் என்ன?
24.
வரையறு: மறுதலிக்கப்படாதிருத்தல் (Non-repudiation).
25.
EDI தரப்பாடு - குறிப்பு வரைக.
1.
(i) தரவுகளின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மை தொடர்பான பிரச்சனை மின்-வணிகத்தின் முக்கிய சிக்கலாக உள்ளது.
(ii) இணையத்தின் வழியாக தரவுகளைப் பரிமாறும் போது ஹேக்கர்களால் அத்தரவுகள் பல்வேறு தொழில்நுட்பங்கள் வாயிலாக தவறானதாக மாற்றி இலக்கு கணிப்பொறிக்கு அனுப்பப்படுகிறது.
(iii) இதன் மூலம் தரவுகளின் நம்பகத்தன்மை சிதைக்கப்படுகிறது.
2.
(i) வலையமைப்பு தொடர்பு நெறிமுறைகள் என்பது HTTP, TCP / IP போன்ற அடிப்படைத் தரவு தொடர்பு நெறிமுறையாகும்.
(ii) வலையமைப்பு பாதுகாப்பு நெறிமுறைகள் என்பது, வலையமைப்பு தொடர்புகள் மற்றும் HTTP, SFTP மற்றும் SSL போன்றவற்றில் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.
(iii) வலையமைப்பு நிர்வாக நெறிமுறைகள் வலை அரசாண்மையை வழங்குகிறது மற்றும் ICMP, SNMP ஆகியவற்றை உள்ளடக்கி பராமரிக்கிறது.
3.
தரவுத்தள சேவையகத்துடன் இணைப்பை ஏற்படுத்த மூன்று மாறிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
$ surname - தரவுத்தள சேவையகத்தின் IP முகவரி
$ username - தரவுத்தள சேவையகத்தின் பயனர்
$ Password - தரவுத்தள சேவையகத்தின் கடவுச் சொல்
$ DB -Name - தரவுத்தளத்தின் பெயர்.
4.
(i) ஒற்றை அடுக்கு கட்டமைப்பு:
இந்த கட்டமைப்பைச் சேவையகம் பயன்படுத்துகின்றது. பயனாளரால் அணுகப்படுகின்றது. பயனாளர் பயன்பாடு சேவையக கணிப்பொறிக்குள்ளேயே இயங்குகின்றது.
(ii) இரண்டு அடுக்கு கட்டமைப்பு:
இந்த கட்டமைப்பை சேவையகம் பயன்படுத்துகின்றது. இரண்டு அடுக்கு ஊடாடுதலை கொண்டு பயனாளரால் அணுகப்படுகின்றது. அதாவது பயனாளர் அடுக்கு ஒன்றிலும் சேவையகம் அடுக்கு இரண்டிலும் உள்ளது.
(iii) பல / மூன்று அடுக்கு கட்டமைப்பு:
இந்த கட்டமைப்பு சேவையகத்தில் பயன்படுத்தப்படுகின்றது. ஒன்றிற்கு மேற்பட்ட அடுக்கு ஊடாடுதலை கொண்டு பயனரால் அணுகப்படுகின்றது. நிரலர் வணிகரீதியான அடுக்குகளின் எண்ணிக்கையை மென்பொருளின் தேவையைப் பொறுத்து தீர்மானிக்கிறார். இந்த காரணத்தினால், இந்த மாதிரியை பல / மூன்று அடுக்கு கட்டமைப்பு என்கிறோம்.
5.
Ms-Word போன்ற பிற மென்பொருள்களில் இருக்கும் உரைகளை பேஜ்மேக்கர் ஆவணத்தில் செருக முடியும்.
(i) பட்டிப்பட்டையில் File > Place என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். Place உரையாடல் பெட்டி தோன்றும்.
(ii) செருக வேண்டிய உரை உள்ள ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
(iii) Place உரையாடல் பெட்டியில் உள்ள Open பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது சுட்டுக்குறியானது உரையேற்றப்பட்ட (Loaded text) பணிக்குறியாக மாறி இருக்கும்.
(iv) இந்த உரையை இடுவதற்கு ஒரு உரைத்தொகுதியை உருவாக்க வேண்டும்.(அல்லது) அந்த ஆவணத்தின் ஒரு காலிப்பக்கத்தில் கிளிக் செய்தால் அப்பக்கத்தில் அவ்வுரை இடம்பெறும். நாம் செருக வேண்டிய உரை ஒரு பக்கத்தை விட அதிகமாக இருந்தால், அதை பல பக்கங்களில் வைக்க பேஜ்மேக்கர் அனுமதிக்கிறது. இதைத் தானமைவாகவோ அல்லது பயனர் கட்டுப்பாட்டிலோ அமைக்கலாம்.
6.
சுட்டு எண்கள் கொண்ட அணிகள் :
அணி மாறியியல் உள்ள மதிப்புகள் எண்களைச் சுட்டெண்களாகக் கொண்ட அணிகளாக இருப்பின் திறவிற்கு இணை மதிப்புகள் இருத்தப்படும். பயனர் இந்த திறவுகளைப் பயன்படுத்தி மதிப்புகளை எடுத்துக்கொள்வர்.
தொடர்புருத்த அணிகள் :
(i) பெயரிடப்பட்ட திறவுகளை இருத்தி வைக்கப்பயன்படுத்தப்படும்.
(ii) திறவும், மதிப்பும் இணைந்த தரவுக் கட்டமைப்பாகும்.
(i) PHP செயற்கூறுகளின் நன்மைகளைப் பட்டியிலிடு.
1. போலிக் குறிமுறைகள் வருவதை குறைக்கும்.
2. சிக்கலான கணக்கீடுகளை (அ) தீர்வுகளை எளிய பகுதிகளாக மாற்றுகிறது.
3. குறிமுறையை மேம்படுத்த உதவுகிறது.
4. குறிமுறையை மறுபயனாக்கம் செய்ய உதவுகிறது.
5. குறிமுறையை மேம்படுத்த உதவுகிறது.
(ii) PHP உள்ள செயற்கூறுகளின் வகைகளைக் பட்டியிலிடு.
1. பயனர் வரையறுத்த செயற்கூறுகள்.
2. முன் வரையறுக்கப்பட்ட (அ) அமைப்பு (அ) உள்ளிணைந்த செயற்கூறுகள்.
3. அளபுருக்களை கொண்ட செயற்கூறுகள்.
7.
1. SQL கட்டளைகளில் WHERE பிரிவு என்பது தரவுத் தேர்ந்தெடுப்பு அடிப்படையைக் குறிக்கிறது.
2. வினவலைப் பொறுத்து இந்தப் தேர்ந்தெடுப்பு அடிப்படையிலான தரவுகள் மீட்டெடுக்கப்படுகின்றன.
3. நிபந்தனைகளில்=,!=,>,>=,<,<= ஆகிய செயற்குறிகள் WHERE வினவல் கூற்றை வடிவமைக்கப் பயன்படுகின்றன.
4. WHERE பிரிவு SELECT மற்றும் UPDATE வினவல் கூற்றுகளில் நிபந்தனைகளைப் பயன்படுத்துகிறது.
8.
1. MYSQL > FLUSH PRIVILEGES என்ற கட்டளை, ஒவ்வொரு புதிய கணக்கை உருவாக்கிய பிறகு இயக்கப்படுகிறது.
2. இந்தக் கட்டளை சேவையகத்தை மறுதொடக்கம் செய்வதற்கு சமமானதாகும்.
3. இதன் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட பயனர் கணக்குகள் மற்றும் அணுகல் சிறப்புரிமைகள் சேவையகத்தில் புதுப்பிக்கப்படுகின்றன.
9.
பெயர்வெளி இரண்டு வழிகளில் ஒழுங்கமைக்கப்படலாம்.
(i) கிடைப்பெயர்வளி (Flat Name Space):
கிடைபெயர்வெளியில் ஒரு IP முகவரிக்கு ஒரு பெயர் ஒதுக்கப்படுகிறது.
(ii) படிநிலை பெயர்வெளி (Hierarchical Name Space): படிநிலை பெயர்வெளியில் பெயர் பல பகுதிகளால் ஆனது.
10.
(i) HTTPS என்பது Hyper Text Transfer Protocol Secure என்பதாகும்
(ii) குறிக்கப்பட்ட தரவை பாதுகாப்பான இணைப்பில் பரிமாற்றம் செய்வதற்கான நெறிமுறை ஆகும்.
(iii) HTTPS தரவை அதிகப்படுத்துகிறது மற்றும் Wi - Fi போன்ற பொது வலையமைப்புகளில் தரவுப் பாதுகாப்பை வழங்குகிறது.
11.
1. மின் வங்கி சேவைகள் என்பது இன்றைய நடைமுறை வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. இணையத்தின் மூலமாக எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் வங்கிச் சேவையைப் பெற முடியும்.
2. இதன் மூலம் வங்கியில் நேரடியாக செய்யப்படும் வேலையின் வேகத்தையும், செயல் திறனையும் விட மிகச் சிறந்த முறையில் செயல்படுகிறது.
3. இப்போது பரிவர்த்தனை கட்டணங்கள் மூலம் கட்டணம் செலுத்துவதற்காக அலுவலகத்தில் வரிசையில் நிற்பது தவரிக்கப்பட்டு இணையம் வழியாக கட்டணம் செலுத்தப்படுகிறது.
12.
கட்டமைப்பு மென்பொருள்: விரைவான பயன்பாடு உருவாக்கத்தை (RAD = Rapid Application Development) ஊக்குவிப்பதற்கான வடிவமைப்பையும், கட்டுமானத் தொகுதிகளையும் வழங்கும் மென்பொருள்.
எ.கா: PRADO, Cable PHP, Symforny, CodeIgniter, laravel, Yii framework மற்றும் Zend framework.
13.
| Name (Text Input) |
எழுத்துக்கள் மற்றும் வெற்றிடங்களை ஏற்கும். |
| Email (Text Input) | @ மற்றும் சரங்களை ஏற்கும். |
| Website (Text Input) | சரியான URL ஐ ஏற்கும். |
| Radio | குறைந்தபட்சம் ஒரு மதிப்பினைத் தேர்ந்தெடுக்க |
| Check box | குறைந்தபட்சம் ஒரு மதிப்பினைத் தேர்ந்தெடுக்க |
| Drop Down menu | குறைந்தபட்சம் ஒரு மதிப்பினைத் தேர்ந்தெடுக்க |
14.
(i) 24 x 7 நேரமும் மொபைல் சாதனத்தின் மூலம் உடனடியாக பணப் பரிமாற்றம்.
(ii) பல வங்கிக் கணக்குகளை அணுகுவதற்கான ஒற்றை மொபைல் பயன்பாட்டை பயன்படுத்துதல்.
(iii) ஒரு சொடுக்கில் நிதி பரிமாற்றத்திற்கான அங்கீகரிப்பு.
(iv) ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு அட்டை எண், கணக்கு எண், IFSC போன்ற விவரங்களை உள்ளிட்ட வேண்டிய அவசியமில்லை.
(v) மின் - பண்பை, கடன் அட்டை அல்லது பற்று அட்டை தேவைப்படாமல் மின்னணு பரிமாற்றங்கள் மிகவும் எளிதாக மாறிவிடும்.
15.
1. கருவிப் பெட்டியிலிருந்து லைன் டூலை தேர்ந்தெடுக்க வேண்டும். சுட்டுக்குறியானது crosshair ஆக மாறும்.
2. திரையில் தேவையான இடத்தில் கிளிக் செய்து இழுக்க வேண்டும்.
3. சுட்டியை அழுத்துவதை விட்டவுடன், ஒரு கோடு வரையப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். அந்தக் கோட்டின் இருபுறமும் அதன் அளவை மாற்றக்கூடிய கைப்பிடிகள் இருக்கும்.
4. தேவையினால் கைப்பிடியை கிளிக் செய்து இழுத்து கோட்டின் அளவை மாற்றிக் கொள்ளலாம்.
16.
(i) ஆல்ட் நாணயம் பிட் நாணயத்திற்குப் பிறகு தோன்றிய அனைத்து மறையீட்டு நாணயங்களையும் குறிக்கிறது.
(ii) 2011 ல் தொடர்கால ஆல்ட் நாணயங்களான Litecoin மற்றும் Namecoin ஆகியன வெளியிடப்பட்டன.
(iii) 2014 முதல் Mocero, Etherum and Nxt போன்ற இரண்டாம் தலைமுறை மறையீட்டு நாணையங்கள் தோன்றின்.
17.
1. பட்டிப் பட்டையில் File > Save As என்பதைக் கிளிக் செய்ய வேண்டும் (அ) கருவிப் பட்டையில் Shift+Ctrl+Save என்ற சாவிச் சேர்மானத்தை அழுத்த வேண்டும். (அ) விசைப்பலகையில் Ctrl+S என்ற சாவிச் சேர்மானத்தை அழுத்த வேண்டும். இப்பொழுது Save Publication உரையாடல் பெட்டி உரையாடல் பெட்டி திரையில் தோன்றும்.
2. உரைப் பெட்டியில் புதிய பெயரைத் தட்டச்சு செய்ய வேண்டும் (அ) புதிய இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. பிறகு Save பொத்தானை அழுத்தி ஆவணத்தை சேமிக்க வேண்டும்.
18.
1. AR என்பது இயல்பான உண்மையான பொருள்களை மெய் நிகர் கொண்டு புனைவதன் மூலம் மெய்நிகர் பொருள்களின் முப்பரிமாணக் காட்சியாக பார்க்கும் அனுபவம் ஆகும்.
2. இத்தொழில்நுட்பம் வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட உடையில் எவ்வாறு தோற்றமளிப்பார் என்பதைத் தாங்களாகவே பார்க்க அனுமதிக்கிறது. உண்மையில் குறிப்பிட்ட உடைய அணியடக் தேவையில்லை.
3. புனை மெய்ம்மை மற்றும் தோற்ற மெய்ம்மை ஆகியவை வாடிக்கையாளர் அனுபவங்களை மாற்றியமைக்கின்ற மற்றும் அவர்கள் மேம்பட்ட வாங்கும் அனுபவத்தைப் பெறுவதால் வாடிக்கையாளர்கள் கூடுதலாக வாங்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
19.
| தேர்ந்தெடுக்க | அழுத்த வேண்டியவை |
| ஒரு எழுத்து இடது புறமாக | Shift+\(\longleftarrow \) |
| ஒரு எழுத்து வலது புறமாக | Shift+\(\longrightarrow \) |
| ஒரு வரி மேலே | Shift+\(\uparrow \) |
| ஒரு வரி கீழே | Shift+\(\downarrow \) |
| வரியின் இறுதிவரை | Shift+End |
| வரியின் தொடக்கம் | Shift+Home |
| ஆவணம் முழுவதும் | Ctrl+A |
20.
(i) NS2ஐ உருவாக்க மற்றும் இயக்க. OTCL மற்றும் C++ உதவுகின்றன.
(ii) NS2 விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்கு தளங்களில் இயக்க கூடியது.
(iii) கம்பி மற்றும் கம்பியில்லா வலையமைப்பிற்கு ஆதரவளிக்கிறது.
(iv) கட்டளை வரி பயனர் இடைமுகத்தையும், API என்ற நிகழ்வு சார்ந்த மென்பொருள் கருவையாயும் பயன்படுத்துகிறது.
(v) இதில் உள்ள பல மாதிரிகள் மூலம் பயனர் விரும்பும் வெளியீட்டை எளிதில் பெற முடியும்
21.
1. டங்கில் ஒரு சிறிய புறச் சாதனம் ஆகும்.
2. இது இணையும் ஒரு SIM Slot ஐக் கொண்டிருக்கும்.
3. மேலும் இது கணினியை இணையத்துடன் இணைக்க மோடம் போல் செயல்படுகிறது
22.
Musical Isnstrument Digital Identifier (MIDI):
1. கணினிகள் மற்றும் மின்னணு கருவிகளுக்காக உருவாக்கப்பட்ட தரமான தொடர்பு கருவியாகும்.
2. பல்லூடகத்தில் இந்த கருவி நெகிழ்வானது மற்றும் செயல்திட்டங்களை இயற்ற எளிதானது.
3. ஒலி மற்றும் மென்பொருளை வரிசையாக தொகுக்கும் கருவிகள் MIDIக்கு தேவை.
23.
1. சிறந்த ஓட்டத்தினை அடைவதற்காக வடிவமைக்கப்பட்ட இலவச திறந்த மூல கொள்கலன் வடிவமாகும்.
2. உயர் இறுதி தர இலக்க பல்லூடாகத்தில் சிறிது சிறிதாக மாறி வருகிறது.
3. தரத்தின் அடிப்படையில் இதை MP3 கோப்புகளோடு ஒப்பிடப்படும்.
24.
1. மறுதலிக்கப்படாதிருத்தல் (Non-repudiation) உடன்படிக்கை மீறாதிருத்தல்.
2. ஆவணத்தில் எண்முறை கையொப்பமிட்டவர் அதை நிராகரிக்க முடியாததை உறுதிசெய்கிறது.
3. எண்முறை கையொப்பமிட்ட ஆவணங்கள் அதன் பெருநருக்கு ஆதாரத்தை வலுப்படுத்துகிறது.
4. எனவே, பின் ஒரு நேரத்தில் எளிதில் மறுக்க முடியாது என்பதால் எண்முறை கையொப்பத்தை, பெறுநர் வலுவாக வலியுறுத்த முடியும்.
25.
1. தரநிலை என்பது ஒட்டுமொத்த EDIல் மிக முக்கியமான பகுதியாகும்.
2. EDI தரவு பரிமாற்றம் என்பது ஒரு ஒப்புக்கொண்ட செய்தி வடிவமைப்பின் வடிவத்தில் இருப்பதால், ஒரு ஒருங்கிணைந்த EDI தரத்தை உருவாக்குவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
3. மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் EDI தரப்பாடுகள், ஐக்கிய நாடுகள் சபையின் UN/EDIFACT மற்றும் ANSI X12.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards