12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
EDIFACT கட்டமைப்பு (Structure) -குறிப்பு வரைக.
2.
கைப்பேசி வழி EDI -சிறு குறிப்பு வரைக.
3.
எதை தவிர்ப்பதற்காக எண்முறை கையொப்பங்களை பயன்படுத்தப்படுகின்றன?
4.
மின் வணிகத்தில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அங்கீகார நெறிமுறைகள் யாவை?
5.
தொடரேடு என்றால் என்ன?
6.
சந்தைப்படுத்தல் குறிப்பு வரைக.
7.
விரிவாக்க வகை அட்டை என்றால் என்ன?
8.
9.
உயர்நிலை களப்பெயர் என்றால் என்ன?
10.
செல் என்றால் என்ன?
11.
சக்தி வாய்ந்த தேடுபொறி சிலவற்றைக் கூறுக.
12.
மின் அரசாண்மையின் பயன்பாட்டைக் கூறு.
13.
கோப்பினை பதிவேற்ற PHP எப்படி பயன்படுத்தப்படுகிறது?
14.
அணி என்றால் என்ன?
15.
ER வரைபடம் என்றால் என்ன?
16.
ER மாதிரி குறிப்பு வரைக.
17.
பேஜ்மேக்கர் ஆவணத்தில் அளவுகோல்கள் பற்றிய குறிப்பு வரைக.
18.
பல்லூடகம் வழங்கும் சேவையை எழுதுக ?
19.
If else ladder என்று அழைக்கப்படுவது எது?
20.
PHP-ன் சிறப்பம்சங்களைப் பட்டியலிடு.
21.
கிடைப்பெயர் வெளியின் குறைபாடு யாது?
22.
MYSQL வில் WHERE பிரிவுடன் பயன்படுத்தக்கூடிய செயற்குறிகளைப் பட்டியலிடு.
23.
MYSQLல் ஒரு தரவுத்தளத்தை எவ்வாறு உருவாக்குவாய்?
24.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் தரவுத்தளங்களைப் பட்டியலிடுக.
25.
இணைப்புத் திறவுகோல் என்றால் என்ன?
26.
அட்டவணை என்றால் என்ன?
27.
உறவு நிலை மாதிரியை வரையறுக்கப் பயன்படும் இரண்டு சொற்கள் யாவை?
28.
DBMS-ன் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் யாவை?
29.
HTTPS - ன் வரம்பு யாது?
30.
Internet of things (IoT) என்றால் என்ன?
31.
வீட்டில் வலையமைப்புக்கள் இணைக்கப்படும் வழிகள் யாவை?
32.
தரவுத்தளம் என்றால் என்ன?
33.
HTML படிவத்தின் பயன் யாது?
34.
PIN என்றால் என்ன?
35.
மின் - காசோலைகள் எனக் குறிப்பிடப்படுபவை யாவை?
36.
மின்னணு செலுத்தல் முறைகளின் வகைகள் யாவை?
37.
இணைய அறுவடை என்றால் என்ன?
38.
மின் - வணிகத்தில் G2C மாதிரியை விளக்குக.
39.
Open NMS ன் வகைகள் யாவை?
40.
Crimping என்றால் என்ன?
41.
பேஜ்மேக்கரில் Document Master என்றால் என்ன?
42.
பேஜ்மேக்கரில் உரையின் நிறத்தை எவ்வாறு மாற்றுவாய்?
43.
பேஜ்மேக்கரில் ஜூம் டூலின் (ஜூம் டூல்) பயன் யாது?
44.
தானமைவு உரைப்பாய்வு மூலம், பிற மென்பொருள்களிலிருந்து உரையை எவ்வாறு செருகுவாய்?
45.
பல்லூடகமானது பெருமளவு பயன்படுத்தப்படும் துறைகளைப் பட்டியலிடுக.
46.
WMA படிவம் பற்றி குறிப்பு வரைக.
47.
BMP மற்றும் DIB என்றால் என்ன?
48.
ஒப்புமை ஒளிக்காட்சி (Analog Video) பற்றி குறிப்பு வரைக.
49.
புகழ் பெற்ற எண்முறைச் சான்றிதழ் வகைகள் யாவை?
50.
சைபர் (Cyber) Squatting என்றால் என்ன?
1.
(i) EDIFACT ஒரு படிநிலை அமைப்பாகும்.
(ii) EDIFACT-ன் மேல்நிலை அமைப்பு பரிமாற்றங்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
2.
கைப்பேசி வழி EDI :
(i) திறன்பேசி அல்லது பிற கையடக்க சாதனங்களை EDI ஆவணங்களை பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் போது அது கைப்பேசி வழி EDI எனப்படுகிறது.
(ii) கைப்பேசி வழி EDI பயன்பாடுகள், EDI பரிமாற்றங்கள் வேகத்தை கணிசமாக அதிகரிக்கிறது.
3.
நிதி ஆவணங்கள் அல்லது கடன் அட்டை தரவுகள் போன்ற முக்கிய ஆவணங்களில் மோசடி அல்லது தகவல் சிதைப்பை தவிர்ப்பதற்காக எண்முறை கையொப்பங்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
4.
மின்-வணிகத்தில் பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை மற்றும் பாதுகாப்பான சாக்கெட் அடுக்கு ஆகிய இரண்டு வகையான பாதுகாப்பு அங்கீகார நெறிமுறைகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
5.
தொடரேடு என்பது இரண்டு தரப்பினர் இடையே நடைபெறும் மறையீட்டு நாணயத்தின் பரிமாற்றங்களைத் திறமையாகவும் மற்றும் சரிபார்க்க கூடிய வகையிலும் பதிவு செய்யும் ஒரு திறந்த விநியோகிக்கப்பட்ட புத்தகம். ஒத்து blocks எனப்படும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட தொடர்ச்சியாக வளர்ந்துவரும் ஒரு பதிவுகளின் தொகுதி ஆகும்.
6.
(i) எந்த ஒரு தொழிலும் சந்தைப்படுத்துதல் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.
(ii) இணையம் மற்றும் சமூக ஊடகங்களைத் திறம்படப் பயன்படுத்தி உலகெங்கும் நமது தயாரிப்பை எடுத்துச் செல்லலாம். சந்தைப்படுத்துதலை மிக விரைவிலேயே தொடங்கலாம்.
(iii) கவர்ச்சியுள்ள தலைப்புகள் மற்றும் சின்னங்களை மேலும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன.
7.
(i) விரிவாக்க வகை அட்டை (தனி மின்சுற்றுப் பலகை) என்பது PCI ஈத்தர்நெட் அட்டை எனவும் அழைக்கப்படுகிறது.
(ii) இது கணினியின் மதர்போர்டில் உள்ள PCI ஸ்லாட்டுக்குள் செருகப்படுகிறது.
8.
9.
களப்பெயரின் கடைசி பகுதியே உயர்நிலை களப்பெயர் ஆகும். பொது உயர்நிலை களப்பெயர் என்பது பொதுவான நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றது.
10.
மொபைல் வலையமைப்பு அல்லது செல்லுலார் வலையமைப்பு 'செல்' என்று அழைக்கப்படும். அதிக எண்ணிக்கையிலான சமிக்ஞை பகுதிகளால் உருவாக்கப்பட்டது.
11.
(i) Internet Explorer, Yahoo, Bing போன்றவை தொடக்க நாட்களில் சக்தி வாய்ந்த தேடுபொறியாகும்.
(ii) கூகுளின் வருகைக்குப் பின்பு ஜிமெயில், யூடியூப், கூகுள் டிரைவ், கூகுள் மேப்ஸ் போன்றவை மிகவும் பயனுள்ள பயன்பாடுகளாகும்.
12.
(i) ஆரம்ப நாட்களில் ஒரு நபர் சான்றிதழைப் பெற அதிக செலவிடவும் மற்றும் அவர் நேரடியாக பல சிரமங்களை சந்திக்கவும் நேரிடும்.
(ii) இப்போது மின் அரசாண்மை மூலம் தங்கள் சான்றிதழ்களை எளிதாக பெற முடியும்.
(iii) இன்டர்நெட் மூலம் இந்த மின்வழங்கல் இலஞ்ச ஊழலைத் தவிர்க்க, சாதாரண மனிதனுக்கு ஒரு புதிய பாதையை அனுமதிக்கிறது.
13.
பயனர்களை சேவையகத்திற்கு கோப்புகளை பதிவேற்றம் செய்ய அனுமதிக்க PHP ஸ்கிரிப்டானது HTML படிவத்துடன் பயன்படுத்தப்படுகிறது.
14.
அணி என்பது ஒரே தரவு வகையை சார்ந்த (ஒரே மாதிரியான) ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை ஒரு அணியின் மாறியில் தேக்கி வைப்பதாகும்.
15.
ER வரைபடம் தரவு ஒன்றோடொன்று எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகிறது என்பதை வரைபடமாக அளிக்கிறது.இந்த மாதிரியானது தரவை உருப்பொருள்கள், பண்புக்கூறுகள், மற்றும் உருப்பொருள்களுக்கு இடையே உள்ள உறவுநிலை ஆகியவற்றை குறிப்பிடுவதற்கான தனி குறியீட்டைப் பின்பற்றுகிறது
16.
பொதுவாக ER மாதிரி தரவுதள வடிவமைப்புக் கருத்துருக்களை அறிந்து கொள்ளப் பயன்படுகிறது. இது உருப்பொருள்களின் (நிஜ உலக பொருள்கள்) தொகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த உருப்பொருள்கள் ஒவ்வொன்றும் நிபந்தனைகளால் இணைக்கப்பட்டு ஒன்றுடன் ஒன்று சார்ந்திருக்கும் (அதாவது ஒரு உருப்பொருள் மற்றொன்றை சார்ந்து இருக்கும்).
17.
பேஜ்மேக்கர் ஆவணத்தின் மேல் மற்றும் இடது ஓரத்தில் இரண்டு அளவுகோல்கள் உள்ளன.
(i) அளவுகோலை திரையில் காண்பிக்க, பட்டியலில் View > Show Rulers என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
(ii) அளவுகோலை மறைக்க, பட்டியலில் View > Hide Rulers என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
18.
சேமித்தல், தகவல் தொடர்பு , வழங்கல் மற்றும் உரை, ஒளி, நிழற்படம், வரைகலை மற்றும் ஒலி ஆகியவற்றின் உள்ளீடு வெளியீடு ஊடாடுதல் போன்ற சேவைகளை வழங்குகிறது .
19.
1.if -else கூற்றில், else தொகுதியில் உள்ள கூற்றுகள் அதற்கு இணையான if கூற்றின் நிபந்தனை தவறாகும் போது செயல்படும்.
2. else க்குப் பிறகு மற்றொரு நிபந்தனை சோதிக்கப்பட வேண்டுமெனில், else கூற்றை தொடர்ந்து if கூற்று இருக்கும். இதுவே ifelse ladder என்று அழைக்கப்படுகிறது.
20.
PHP யானது
1. திறந்த மூலம் ஆகும்.
2. எழுத்து வகை உணர்வு கொண்டவை.
3. செயல்திறன் மிக்க நிரலாக்க மொழி ஆகும்.
4. இயங்குதளம் சார்பற்ற நிரல் மொழி ஆகும்.
5. நிகழ்நேர அணுகல் கண்காணிப்பு நிரல் மொழி.
21.
கிடைப்பெயர் வெளியில் உள்ள முக்கிய குறைபாடு அவை பெரிய அளவிலான அமைப்பில் (large system) பயன்படுத்த முடியாது. ஏனெனில் பெரிய அளவிலான அமைப்புகளில் சிக்கல் மற்றும் உபரி நிலையைத் தவிர்ப்பதற்காக அவை மைய நிலையில் அணுகப்பட மற்றும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்
22.
| செயற்குறி வகை | செயற்குறி |
| கணக்கீட்டுச் செயற்குறி | +,-,*,% |
| ஒப்பிட்டுச் செயற்குறி | =,!=,<,> |
| தருக்கச் செயற்குறி | AND,ANY,BETWEEN,EXISTS,IN,LIKE,NOT,OR,UNIQUE |
23.
Create Database-புதிய SQL தரவுத்தளத்தை உருவாக்கப் பயன்படுகிறது.
தொடரியல்: CREATE database databasename ;
எ.கா : mysql > create database studentDB;
24.
1. DB2
2. SQLite
3. MySQL
4. SQL Server
5. Oracle
6. Sybase
7. PostgreSQL
25.
இணைப்புத் திறவுகோல் : அட்டவணையில் ஒன்றுக்கு மேற்பட்ட பண்புக்கூறுகளைக் கொண்டு தனித்தன்மையுடன் வரிசைகளை அடையாளம் காணும் திறவுகோல். கூட்டுத் திறவுகோல் என்றும் அழைக்கப்படுகிறது.
26.
1. வரிசை மற்றும் நெடுவரிசைகளில் ஒழுங்குபடுத்தப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும்.
2. உறவுகளின் எளிய உருவமைப்பாகும்.
27.
உறவுநிலை மாதிரி சான்றுரு (instance) மற்றும் திட்டம் (schema) என்ற இரண்டு சொற்களால் வரையறுக்கப்படுகிறது.
1. சான்றுரு: வரிசை நெடுவரிசைகளைக் கொண்ட ஒரு அட்டவணை.
2. திட்டம் : ஒவ்வொரு நெடுவரிசையின் பெயர் மற்றும் வகையை உள்ளடக்கிய கட்டமைப்பைக் குறிக்கிறது.
28.
1. தரவிற்கான பாதுகாப்பை வழங்குதல்.
2. பயனர்களுக்கு எளிமையான அணுகுதல்.
29.
HTTPS நெறிமுறையால் ஹோஸ்ட் முகவரிகள் போர்ட் எண்கள் குறியாக்கம் செய்ய முடியாது.
30.
(i) Internet of things (IoT) என்பது ஒவ்வொரு நாளும் நாம் பயன்படுத்தும் சாதனங்கள் பெரும்பாலும் இலக்க இணைப்பு மூலமாக இணையத்துடன் தொடர்பு கொண்டுள்ளதைக் குறிக்கிறது.
(ii) IoT ல் "Thing" என்பது மனித தலையீடு மற்றும் கையேட்டில் உதவி இல்லாமல் IP முகவரியை இருத்துகிறது.
(iii) தரவை வலையமைப்பில் இணைக்கும் மற்றும் பரிமாற்றம் திறன் கொண்ட ஒரு பொருளைக் குறிக்கிறது.
31.
வீட்டில் வலையமைப்புகள் இரு வழிகளில் இணைக்கப்பட்டுள்ளன.
1. கம்பி வலையமைப்பு
2. கம்பியில்லா வலையமைப்பு
(i) கம்பி மூலம் இணைக்கப்பட்ட பிணைய அமைப்பு. உதாரணமாக ஒலிபெருக்கி, cctv, அச்சுப் பொறிகள் மற்றும் வருடிகள் போன்ற சாதனங்கள் கேபிள்கள் மூலமாகவும் இணைக்கப்படுகிறது.
(ii) கம்பியில்லா வலையமைப்பு கேபிள்களே இல்லாமல் டேப்லெட் கம்ப்யூட்டர், உட்புற கேமராக்கள் மற்றும் e-readers போன்ற சாதனங்களை இணைக்கிறது.
32.
தரவுத்தளம்: ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும். இதில் தரவுகள் கணினியில் மின்னணு முறையில் தேக்கி வைக்கப்பட்டு தேவையானபோதெல்லாம் அணுகப்படுகின்றன.
33.
(i) ஒரு HTML படிவம் என்பது வலைத்தளத்தை பார்வையிடுவர் மூலம் உள்ளீடு பெற்று அதனை CGI, ASP ஸ்கிரிப்ட் (or) PHP ஸ்கிரிப்ட் மூலம் back-end பயன்பாட்டிற்கு அனுப்புகிறது.
(ii) back-end பயன்பாடானது அனுப்பப்பட்ட தரவின் மீது தேவையான செயல்பாடுகளைச் செய்கின்றது.
34.
PIN தனிநபர் அடையாள எண்: அட்டை அடிப்படையிலான பண பரிவர்த்தனைகள் பாதுகாக்க, நுகர்வோருக்கு ஒதுக்கப்படும் நிலையான எண்.
35.
EFT (Electronic Funds Transfer) அமெரிக்காவில் மின்னணு காசோலைகள் (அ) மின் - காசோலைகள் என்று குறிப்பிடப்படுகிறது.
36.
(i) நுண் மின்செலுத்தல் முறைகள் (Micro electronic - Payment System)
(ii) பேரின மின்செலுத்தல் முறைகள் (Macro electronic - Payment System)
37.
இணைய அறுவடை என்பது போட்டியாளர் வலைப்பக்கங்களிலிருந்தே வணிகத் தகவலைப் பிரித்தெடுக்கும் சட்டவிரோத நடவடிக்கையாகும்.
38.
1. மின் - வணிகத்தில் G2C, C2G யை மிகவும் ஒத்திருக்கிறது. இங்கே அரசாங்கம் தனது குடிமக்களுக்கு இணையதளத்தின் மூலமாக அதன் சேவைகள் மற்றும் தகவல்களைப் பெறுவதற்கான தளத்தை வழங்குகின்றது.
2. நிகழ்நிலையில் சான்றிதழ்களை வழங்குவதும் இவ்வகை சேவையில் அடங்கும்.
எ.கா: http://csc.gov.in/governmenttocitizen
39.
1. Meridian
2. Horizon
1. மெரிடியன்: நிறுவனம் மற்றும் வியாபார அமைப்பிற்கு ஏற்றது. திறன் மற்றும் நீண்ட கால சேவைக்கு ஏற்றது.
2. ஹரிசன்: புதிய கண்டுபிடிப்புகள் அடிக்கடி தேவைப்படும் IT Ecosystems மற்றும் புதிய மேலாண்மை திட்டத்திற்கு ஏற்றது.
40.
Crimping என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகத் துண்டு (அ) கம்பிகள் உருமாற்றி ஒற்றை பற்றிக் கொள்ளும் வகையில் இணைக்கும் செயலாகும்.
41.
பேஜ்மேக்கரில் உருவாக்கப்படும் அனைத்து ஆவணங்களிலும் இயல்புநிலையாக Document Master என்ற பெயரில் மாஸ்டர் பக்கம் இருக்கும்.
42.
1. வண்ணமிட வேண்டிய உரையைத் தேர்வு செய்ய வேண்டும்.
2. பட்டிப்பட்டையில் Window > show colors என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது colors palette தோன்றும். அதில் தேவையான வண்ணத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
43.
1. ஜூம் டூல் மூலமாக ஆவணத்தின் எந்தவொரு பகுதியையும் பெரிதாக்கியும், சிறிதாக்கியும் காட்ட முடியும்.
2. ஜூம் டூலை இருமுறை கிளிக் செய்து ஆவணப் பக்கத்தின் உண்மையான அளவையும், பொத்தானுடன் சேர்த்து இருமுறைக் கிளிக் செய்து ஆவணப் பக்கம் சன்னல் திரையுடன் பொருந்தும் அளவையும் பெற முடியும்.
44.
1. உரையை ஏற்றுவதற்கு முன்பு, பட்டிப்பட்டையில் Layout > Autoflow என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உரையை ஏற்ற வேண்டும். இப்பொழுது உரையேற்றப்பட்ட பணிக்குறி சற்று வேறுபட்டு squiggly arrow வாகத் தோன்றும்.
2. இப்பொழுது உரையேற்றப்பட்ட பணிக்குறியைப் பக்கத்தின் மேல் பகுதியில் கிளிக் செய்தால், உரையானது தானமைவாகத் தேவையான அளவிற்கு அடுத்தடுத்தப் பக்கங்களில் நிரப்பப்படும்.
45.
1. கல்வி
2. வணிக அமைப்பு
3. பொழுதுபோக்கு
4. பொது இடங்கள்
5. பல்லூடாகக் கலந்துரையாடல்
6. மருத்துவ சேவைகள்
46.
1. WMA (Windows Media Audio) வடிவத்தின் உரிமையாளர் மைக்ரோசாப்ட் ஆகும்.
2. பதிப்புரிமை பாதுகாப்பிற்காக DRM (Digital Rights Management) திறன்களோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
47.
BMP (Bitmap) :
1.தொடக்கத்தில் இந்த வடிவமானது விண்டோஸ் 3.1ல் பயன்படுத்தப்பட்டது.
2. மிகவும் பெரியது மற்றும் சுருக்கமற்றது.
3. எனவே, அதிக தெளிவுத்திறன் (அ) பெரிய நிழற்படங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
(ii) DIB (Device Independent Bitmap) :
1. இந்த வடிவம் BMP-யை ஒத்தாகும்.
2. கோப்புகளை பல்வேறு சாதனங்களில் காண்பிக்க அனுமதிக்கிறது.
48.
ஒளிக்காட்சியில், கணினி சாரா ஊடகமான ஒளி, நாடா, லேசர் வட்டு, படச்சுருள் ஆகியவற்றில் ஒளிக்காட்சி தரவுகள் சேமிக்கப்படுகின்றன. இது இரு வகைப்படும்.
1. கலப்பு ஒப்புமை ஒளிக்காட்சி
2. கூறு ஒப்புமை ஒளிக்காட்சி
(i) கலப்பு ஒப்புமை ஒளிக்காட்சி அனைத்து ஒளிக்காட்சி கூறுகளான பிரகாசம், நிறம் மற்றும் ஒத்திசைவு ஆகியவை இணைந்த ஒரு சமிக்ஞை ஆகும்.
(ii) ஒளிக்காட்சியின் கூறுகளை இணைப்பதனால் கலப்பு ஒளிக்காட்சியின் தரமானது நிறக்கலவை. குறைந்த காட்சித் தெளிவு மற்றும் அதிக தலைமுறை இழப்பு போன்ற விளைவுகளைத் தரும்.
(iii) இந்த பதிவு செய்யும் வடிவமானது, வாடிக்கையாளர் ஒப்புமை ஒளிக்காட்சி பதிவு நாடா வடிவமான Betamax மற்றும் VHS-ல் பயன்படுத்தப்பட்டது.
49.
Pretty Good Privacy (PGP) மற்றும் X.509.
50.
சைபர் Squatting (Cyber Squatting) என்பது பின்னர் அதிக இலாபத்திற்கு விற்க வேண்டும் என்ற நோக்கத்தில் மற்றொரு நபர் விரும்பக்கூடிய ஒரு இணைய களப்பெயரைப் பதிவு செய்யும் சட்டவிரோத நடைமுறையாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards