12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Five mark Important Questions - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
வணிகத்தில் வலையமைப்பின் பயனை விரிவாக எழுதுக.
2.
SQL-ல் Create,Drop,Select தொடரியலை எடுத்துக்கட்டுடன் விளக்குக.
3.
குறிப்பு வரைக:
1.பயனர் கட்டுப்பாட்டு உரைப் பாய்வு
2. தானமைவு உரைப் பாய்வு
4.
ஈத்தர்நெட் தொடர்பியின் (Port) ஊசி விவரங்களை விவரி.
5.
நிகழ்நிலை வங்கிச் சேவையைப் பயன்படுத்தி நிதி பரிமாற்றம் செய்வதற்கானப் படிநிலைகளை விவரி.
6.
மின் வணிகத்தின் பல்வேறு நிகழ்வுகளை விளக்கும் கல்கோட்டை வரைக.
7.
மின் வணிகத்தில் ஒரு வணிக நிறுவனத்திற்கான குறைபாடுகளை விவரி
8.
பல்லூடகம் பயன்படுத்தப்படும் துறைகள் சிலவற்றை விவரி.
9.
குறியாக்கத் தொழில் நுட்பத்தை விவரி.
10.
HTML படிவ உறுப்புகளை பற்றி விரிவாக எழுதுக.
11.
MySQL வினவல்களை எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.
12.
கணினி வலையமைப்பு / வணிக, வீட்டு, மொபைல், சமூக பயன்பாட்டில் பிணையத்தின் சில பயன்பாடுகளை குறிப்பிடவும்.
13.
TCP / IP மற்றும் OSI குறிப்பு மாதிரிக்கு இடையே உள்ள வேறுபாட்டை எழுதுக.
14.
களப்பெயர் வெளி என்பது யாது? விளக்குக.
15.
foreach மடக்கை எடுத்துக்காட்டுடன் விவரி.
16.
ஈத்தர்நெட் வடமிடலில் (Cabling) பயன்படுத்தப்படும் கூறுகளை விளக்குக.
17.
if else கூற்றினை விவரி
18.
அணி மற்றும் அதன் வகைகளை விவரி.
19.
பல்வேறு வகையான திறந்த மூல உரிமைகளைக் கூறு.
20.
மின்-வணிக வர்த்தக மாதிரிகளைப் பட்டியலிட்டு ஏதேனும் நான்கை சுருக்கமாக விளக்கவும்.
21.
வலைசேவையகம் உருவாக்குதலின் செயல்முறைகளை விரிவாக விளக்குக
22.
கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் முறையின் முக்கிய பங்களிப்பாளர்களை விளக்குக.
23.
MYSQL மேலாண்மை அமைப்பில் உள்ள திறந்த மூல மென்பொருள் கருவிகளை பற்றி குறிப்பு எழுதவும்
24.
சமச்சீர் குறியீடு குறியாக்கம் மற்றும் சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் வேறுபாடுகளை எழுதுக.
25.
பல்லூடக உருவாக்க குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் விரிவாக எழுதவும்
1.
வணிகத்தில் வலையமைப்பு:
1. இருபத்தோராம் நூற்றாண்டில் வெற்றிகரமான வணிக செயல்பாடுகளுக்கு கணினி வலையமைப்பு தொழில்நுட்பங்கள் அவசியமாகிறது.
2. இங்கு வேகமான கணினி வலையமைப்புகள்,வலிமையான இணையம் மற்றும் கம்பியில்லா தகவல்தொடர்பு வணிகத்தின் வழியை மாற்றிவிட்டன.
3. வணிகத்தில் ஒவ்வொரு நொடியும் பணம் என்று அனைவருக்கும் தெரியும்.
4. மின்-வங்கிச்சேவை மூலம் ஒருவருக்கொருவர் பணப் பரிவர்த்தனை செய்ய வழிவகை செய்கிறது, இதற்கு Payment Gateways வழிவகை செய்கிறது.
5. இங்கே வலையமைப்பு வழியாக B2B, B2C, B2G, C2B, C2C, C2G, G2B, G2C மற்றும் G2G போன்ற அனைத்து வகை வணிகமும் சாத்தியமாகிறது.
6. இந்த முறையிலேயே குறைந்த விலையில் பொருட்களை வாங்கவும் வழிவகை செய்கிறது.
7. இணைய சேவைக்கு முன்பு ஒரு பொருளின் Choice and Comparison மிகவும் கடினம். இன்று பொருட்களைப் பற்றி இணையத்தில் தேடுவது மிகவும் எளிது.
8. இணையத்தின் வழியாக மிக எளிமையாகவும் குறைந்த விலையில் ஒரு பொருளை வாங்க முடியும்.
9. ஒரு வாடிக்கையாளரால் ஒரு பொருளை தேடுவதன் மூலம் பழமையான நாட்களில் ஒரு குறிப்பிட்ட கடைக்காரர் சில பிராண்டுகள் இருக்கலாம், சில வகைகள் மற்றும் சில மாதிரிகள் கடையில் ஒரு இடத்திலிருந்து வேறுபட்டிருக்கலாம்,எனவே நிறுவனங்கள் தேவைப்படும் சில நபர்களை பிறர் பொருட்களைப் பிறர் தவறாகப் பயன்படுத்தலாம்.
10. நிறுவன உரிமம் புதுப்பித்தல், பிற சான்றிதழ்கள், பில் கட்டணங்கள், ரசீதுகள், விலைப்பட்டியல், பங்கு பராமரிப்பு, இன்டர்நெட் மற்றும் கணினி வலையமைப்புகள் வழியாக எந்த புவியியல் எல்லைகளையும் இல்லாமல் செய்ய முடியும்.
11. அரசு மானியங்களை மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் மூலம் வியாபாரத்தை ஊக்குவிக்கிறது.
12. இணையத்தால் நேரடி மனித உரையாடல்கள் குறைந்து வருகின்றன. உழைக்கும் சூழலும் கூட சுருங்கிவருகிறது. வாங்குபவரும் நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து குறைந்த செலவில் வாங்குவார், நடுத்தர நபர் தரகு கட்டணங்கள் குறைக்கப்படுகின்றன.
2.
தரவுத்தளத்தில் Create/Drop/Select
(i) தரவுத்தளத்தை உருவாக்க : Create Database- புதிய SQL தரவுத்தளத்தை உருவாக்கப் பயன்படுகிறது. ஒரு Student DB என்னும் தரவுத்தளத்தை உருவாக்க பயன்படும் தொடரியல் மற்றும் எடுத்துக்காட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Syntax:
CREATE database databasename;
எடுத்துக்காட்டு :
mysql>create database studentDB; உருவாக்கப்பட்ட தரவுத்தளத்தை பின்வரும் தொடரியல் கொண்டு பார்வையிடலாம்.
mysql>Show database; இதன் விடையாக, புதிதாக உருவாக்கப்பட்ட studentDB என்று தரவுத்தளம் பட்டியலிடப்படும்.
(ii) தரவுத்தளத்தை நீக்க: Drop database-ஏற்கனவே உள்ள ஏதேனும் ஒரு SQL தரவுத்தளத்தை நீக்குதல். Student DB என்ற தரவுத்தளத்தை நீக்கும் தொடரியல் மற்றும் எடுத்துக்காட்டு பின்வருமாறு,
Syntax:
DROP database database name;
எடுத்துக்காட்டு:
mysql>DROP database student DB; நீக்கப்பட்ட தரவுத்தளம் "Show databases"; என்ற கட்டளையைப் பயன்படுத்தி தரவுத்தளங்களைப் பட்டியலிடும் போது பட்டியலும் தோன்றாது.
(iii) தரவுத்தளத்தை தேர்ந்தெடுக்க: (Select database) பல தரவுத்தளங்களிலிருந்து தேவையான தரவுத்தளத்தை தேர்ந்தெடுக்க கீழ்வரும் கட்டளை உதவுகிறது.
Syntax:
USE database name;
எடுத்துக்காட்டு;
mysql>USE Student DB;
தரவுத்தளத்தை தேர்ந்தெடுத்த பிறகு பயன்பாட்டின் தேவைக்கேற்ப பல செயல்பாடுகள் செய்யப்படுகின்றன.
3.
பயனர் கட்டுப்பாட்டு உரைப் பாய்வு: (Manual Text flow)
(i) உரையேற்றப்பட்ட (Loaded text) பணிக்குறியை உரையை வைக்க வேண்டிய இடத்தில் கிளிக் செய்து தேவையான அளவிற்கு இழுத்துவிட வேண்டும்.
(ii) இப்பொழுது உரை நாம் வரையறுத்த உரைத்தொகுதிக்குள் வந்திருக்கும். இந்த உரைத்தொகுதிக்குள் உரை முழுவதும் வைக்க முடியவில்லை எனில், கீழ்ப்பக்க விண்டோ ஷேடில் சிவப்பு நிற முக்கோணம் தோன்றும். இதில் கிளிக் செய்தால் மறுபடியும் உரையேற்றப்பட்ட (Loaded text) பணிக்குறி தோன்றும்.
(iii) இப்பொழுது புதிய உரைத்தொகுதியை உருவாக்கி அதில் கிளிக் செய்ய வேண்டும்.
(iv) இந்த செயல்முறையை சிவப்பு நிற முக்கோணம் மறையும் வரை அல்லது செருக வேண்டிய உரை உள்ளவரை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும்.
(v) இதே போன்று ஒரு பக்கத்தில் உரையை செருக வேண்டுமெனில் பக்கத்தின் மேற்பகுதியில் உரையேற்றப்பட்ட (Loaded text) பணிக்குறியை வைத்து கிளிக் செய்ய வேண்டும். உரையானது அப்பக்கம் முழுவதும் நிரம்பும்.
(vi) ஒரு பக்கத்தை விட அதிகமான உரை இருந்தால், கீழ்ப்பகுதியில் உள்ள விண்டோ ஷேடில் சிவப்பு நிற முக்கோணம் தோன்றும்.
(vii) இதைக் கிளிக் செய்தால் உரையேற்றப்பட்ட (Loaded text) பணிக்குறி மறுபடியும் தோன்றும்.
(viii) இப்பொழுது பட்டிப் பட்டையில் Layout > Insert Pages என்பதைக் கிளிக் செய்து புதிய பக்கத்தை உருவாக்கி,பக்கத்தின் மேல் பகுதியில் உரையேற்றப்பட்ட (Loaded text) பணிக்குறியைக் கிளிக் செய்ய வேண்டும்.
(ix) இதை செருக வேண்டிய உரை உள்ளவரை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும்.
தானமைவு உரைப் பாய்வு (Automatic text flow):
(i) உரையை ஏற்றுவதற்கு (Importing) முன்பு பட்டிப் பட்டையில் Layout > Autoflow என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உரையை ஏற்ற வேண்டும்.
(ii) இப்பொழுது உரையேற்றப்பட்ட (Loaded text) பணிக்குறி சற்று வேறுபட்டு squiggly arrow வாகத் தோன்றும்.
(iii) இப்பொழுது உரையேற்றப்பட்ட (Loaded text) பணிக்குறியை பக்கத்தின் மேல் பகுதியில் கிளிக் செய்தால்,உரையானது தானமைவாக தேவையான அளவிற்கு அடுத்தடுத்தப் பக்கங்களில் நிரப்பப்படும்.
4.
ஈத்தர்நெட் தொடர்பியின் (Port) ஊசி விவரங்கள்:
1. இதில் இரண்டு முக்கிய சமிக்ஞைகள் உள்ளன. ஒன்று TX (தரவை அனுப்ப) மற்றும் RX (தரவைப் பெற).
2. முதல் ஊசி தரவை அனுப்பப் பயன்படும் நேர்மின் முனையாகும் (TX+)
3. இரண்டாவது ஊசி தரவை அனுப்பப் பயன்படும் எதிர்மின் முனையாகும் (TX-)
4. மூன்றாவது ஊசி தரவைப் பெறப் பயன்படும் நேர்மின் முனையாகும். (RX+)
5. நான்காவது, ஐந்தாவது ஊசிகள் பிற்கால பயன்பாட்டிற்கான விடப்பட்டிருக்கும்.
6. ஆறாவது ஊசி தரவைப் பெறப் பயன்படும் எதிர்மின் முனையாகும். (RX-)
7. ஏழாவது, எட்டாவது ஊசிகள் பிற்காலப் பயன்பாட்டிற்காக விடப்பட்டிருக்கும்
8. அனைத்தும் இரு வழி செயல்பாட்டு (Bidirectional) ஊசிகள் ஆகும்.
5.
படி 1: முன்னதாக வங்கி வழங்கிய பிரத்யேக பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி நிகழ்நிலை வங்கிக் கணக்கில் உள்நுழையவும்.
படி 2: நிதி பரிமாற்றத்தைச் செயல்படுத்த பயனாளியை "பணம் பெறுபவரில் சேர்க்கவும்". பயனாளியின் வங்கிக் கணக்கு எண். பெயர், IFSC போன்றவற்றை, "புதிய பணம் பெறுபவரின் பிரிவை சேர்" பகுதியில் நிரப்பப்பட வேண்டும்.
படி 3: பயனாளி சேர்க்கப்பட்டவுடன், நிதி பரிமாற்ற முறையை (RTGS/NEFT/IMPS) தேர்வு செய்யவும்.
படி 4: பணத்தைச் செலுத்த வேண்டிய கணக்கைத் தேர்ந்தெடுக்கவும், பணம் பெறுபவரைத் தேர்ந்தெடுக்கவும், அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிட்டு குறிப்புரையை (விருப்பத்தேர்வு) சேர்க்கவும்.
படி 5: சமர்ப்பி கொடுக்கவும்.
படி 6: வங்கி கணக்குடன் தொடர்புடைய கைப்பேசி எண்ணுக்குப் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு பரிவர்த்தனையை நிறைவு செய்யவும்.
நவீன மின்னணு பணப் பரிமாற்றம் தனிப்பட்ட அடையாள எண் (PIN). ஒரு முறை கடவுச் சொல் (OTP) போன்றவற்றால் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு தானியங்கி தீர்வை அமைப்பு (ACH) அதன் பின் பணம் செலுத்தும்.
6.
7.
மக்கள் அனைத்துப் பொருட்களையும் நிகழ்நிலையில் வாங்குவதில்லை:
1. விலையுயர்ந்த நகைகள், ஆடைகள் அல்லது அலங்காரப் பொருட்கள் போன்ற சில தயாரிப்புகளை மக்கள் நிகழ்நிலையில் வாங்க விரும்பாதவை .
போட்டி மற்றும் பெருநிறுவன பாதிப்பு:
1. உலகளாவிய சந்தையை அணுகுதல் என்பது எப்போதும் ஒரு போட்டியுடன் இணைத்தே வருகிறது.
2. பல வியாபார நிறுவனங்கள் ஏற்கனவே இணைய மயமாக்கப்பட்ட வணிக போட்டியாளர்களிடமிருந்து சர்வதேசப் போட்டியை எதிர்கொண்டிருக்கின்றன.
3. ஒரு நிறுவனத்தின் போட்டி நிறுவனங்கள் வலைத்தளத்திலிருந்து அதன் பொருட்களை பற்றிய விவரங்கள், விலைப் பட்டியல்கள் போன்ற வியாபார தகவலைப் பெற முடியும்.
4. இதன் மூலம் அந்நிறுவனம் இணைய அறுவடை பாதிப்புக்குள்ளாக்குகிறது.
பாதுகாப்பு:
1. பாதுகாப்பு என்பது மின் - வணிகத்தில் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது.
2. மின் வணிக பரிவர்த்தனையில் அதிக இணைய மோசடிகள் நடைபெறுகின்றன என்பதால் மக்கள் பொதுவாக தங்கள் தனிப்பட்ட தகவலை வழங்கப் பயப்படுகிறார்கள்
வாடிக்கையாளர் பற்றிணைப்பு:
1. பற்றுறுதியான வாடிக்கையாளர்களைக் கொள்ளாமல் வணிகம் நீண்டகாலம் நீடித்திருக்க முடியாது.
2. வாடிக்கையாளர்கள் எப்போதும் தங்களுக்குச் சிறந்த சலுகைகளை அளிக்கும் ஒரு வலைப்பக்கத்திலிருந்து மட்டுமே வாங்க விரும்புவார்கள்.
திறன்மிக்க ஊழியர்களின் பற்றாக்குறை:
1. மின் - வணிகத்தின் பொதி கட்டுதல் மற்றும் விநியோகம் போன்ற சில துறைகளுக்கு உடல் உழைப்பும் மனித மேற்பார்வையும் தேவைப்படுகின்றன.
2. போக்குவரத்து தாமதங்களுடன் தொடர்புடைய சிக்கல்களை தீர்க்க தொழில்நுட்ப தகுதி வாய்ந்த ஊழியர்கள் தேவைப்படலாம்.
பரிவர்த்தனைகள் அளவு மற்றும் மதிப்பு:
1. ஒரு பேனாவின் விநியோக செலவு பேனா விலையையே விஞ்சும். மின் - வணிகம் பெரும்பாலும் பணம் செலுத்துவதற்காக கடன் அட்டைப் பயன்படுத்துகிறது.
2. கடன் அட்டை மூலமாக பணம் செலுத்துவதிலுள்ள கட்டுப்பாடுகளால் மிகச் சிறிய மற்றும் மிகப்பெரிய பரிவர்த்தனைகள் நிகழ்நிலையில் நடைபெறுவதில்லை.
8.
1. கல்வி
2. பொழுதுபோக்கு
3. வணிக அமைப்பு
4. மருத்துவ சேவைகள்
5. பல்லூடகக் கலந்துரையாடல்
6. பொது இடங்கள்
1. கல்வி (Education) :
(i) பாரம்பரிய கற்பித்தல் முறைக்குப் பதிலாக சிறந்த மாற்று முறையினை வழங்குவதில் பல்லூடகம் முக்கிய பங்கு ஆற்றுகின்றது. இது மாணவர்களை, அசைவூட்டல் மூலம் பல்வேறு கருத்துக்களை பற்றி ஆய்வு செய்யவும், கற்றுக் கொள்ளவும் அனுமதிக்கின்றது.
(ii) மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இந்த பல்லூடக வழிக் கற்றல் முறையையும் மற்றும் பல்லூடக கற்றல் பொருட்களையும் விரும்புகின்றனர்.
(iii) பல கல்வியாளர்கள், பல்லூடகம், புதிய வழிகளில் வகுப்பறையில் சிந்திப்பதை அறிமுகப்படுத்தியுள்ளது என்பதனை ஏற்றுக் கொள்கின்றனர்.
(iv) ஜெர்மனியிலுள்ள GMU ஆனது பல்லூடக வழி கற்பித்தல் மற்றும் கற்றல் அமைப்பிற்கு MODULO எனப் பெயரிட்டுள்ளது.
(v) இது இணையத்தை தழுவிய சூழல் கொண்டு உருவாக்கப்பட்டு மாற்றத்தக்க மற்றும் பரவலாக்கப்பட்ட கற்றல் சூழலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
(vi) இந்தியாவில், மின் வழிக் கற்றல் (e-learning) தொலைதூர
வழி கற்றல் (distance learning)/மெய்நிகர் கற்றல் (Virtual Learning) போன்றவற்றை கற்பித்தல் மற்றும் கற்றலுக்காக பல்வேறு வழிகளில் பல்லூடகம் பயன்படுத்துகின்றன.
(vii) EDUSAT (Educational Satellite) என்பது கல்வி துறையில் மெய்நிகர் வகுப்பறைகள் பயனுள்ள முறையில் உருவாக்குவதற்கான சேவைகளை வழங்க இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோளாகும்.
2. பொழுதுபோக்கு (Entertainment):
(i) பொழுதுபோக்கு தொழில் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு பல்லூடக தொழில்நுட்பம் முக்கிய காரணமாகும்.
(ii) இந்த தொழில்நுட்பமானது வானொலி, தொலைக்காட்சி ஆன்லைன் விளையாட்டு, தேவைப்படும் ஒளிக்காட்சி போன்ற அனைத்து வகையான பொழுதுபோக்கு அம்சங்களில் தேவைப்படுகிறது.
(iii) தேவைப்படும் ஒளிக்காட்சி (அ) தேவைப்படும் திரைப்படத்தை வீடுகளில் உள்ள தொலைக்காட்சி பெட்டிக்கு தனிப்பட்ட முறையில் வழங்குவது ஒரு சேவையாகும்.
3. வணிக அமைப்பு (Business Systems):
(i) பல்லூடக வணிகப் பயன்பாடுகள் வழங்குதல், பயிற்சி, இணைய நெறிமுறை போன்றவற்றை உள்ளடக்கியது.
(ii) சந்தைப்படுத்துதல் மற்றும் விளம்பர நிறுவனங்கள் அசைவூட்ட தொழில்நுட்பத்தை வியாபார முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துகின்றனர்.
(iii) பணியாளர் அடையாளத்தை (ID) உருவாக்குவதில் பல்லூடகமானது பொதுவாக பயன்படுத்துகின்றது.
(iv) பல்லூடகத்தை வழங்குவதற்கு அதிக தெளிவு திறன் கொண்ட படவீழ்த்தி (Projectors) தேவை, புளுடூத் (Bluetooth) மற்றும் தனிப்பட்ட இலக்க உதவியாளர் (Personal Digital Assistant) ஆகியவை வணிகத்திற்கான பல்லூடகத் தொடர்புகளை மிகவும் பயனுள்ளதாக உருவாக்குகின்றன.
4. மருத்துவ சேவைகள் (Medical Service) :
(i) பல்லூடகத்தின் வளர்ச்சியினால் மருத்துவ சேவைகளும் வியத்தகு முறையில் வளர்ச்சி அடைந்துள்ளன.
(ii) மருத்துவ மாணவர்கள் உண்மையாக அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் உருவாக்கப்படுதல் (Simulation) மூலம் அறுவை சிகிச்சை முறைகளைப் பற்றி பயிற்சி செய்கின்றனர்.
(iii) சிறிய இலக்க கேமராக்கள் மனித உடலில் செருகப்பட்டு உடலின் உட்பகுதியானது காட்சியாகக் காண்பிக்கப்படுகின்றது.
(iv) இதன் மூலம் மருத்துவ பயிற்சியாளர்கள் உடலினை வெட்டி சோதிக்காமல் உடலின் உட்பகுதிகளை பார்க்க முடிகின்றது.
5. பொது இடங்கள் (Public Places)
(i) தொழில் கண்காட்சி, நூலகங்கள், இரயில் நிலையங்கள், அருங்காட்சியகம், பெரிய கடைகள், விமான நிலையங்கள் உணவகங்கள் மற்றும் கண்காட்சி போன்ற பொது இடங்களில் தானியங்கு சேவை வழங்கி (Kiosks) வடிவத்தில் பயன்படுத்துகின்றது.
(ii) இது வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை வழங்கி உதவுகின்றது.
(iii) தானியங்கு சேவை வழங்கியில் Kiosks-ல் வழங்கப்பட்ட தகவல்களானது அசைவூட்டம், ஒளிக்காட்சி, அசையா படங்கள், வரைகலை வரைபடம், படங்கள், ஒலி மற்றும் உரை கொண்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.
4. வங்கிகள் தானியங்கு சேவை வழங்கிகளை (Kiosks) ATM இயந்திர வடிவில் பயன்படுத்துகின்றன.
6. பல்லூடக கலந்துரையாடல் (Multimedia Conferencing) :
(i) பல்லூடக கலந்துரையாடல் (அ) ஒளிக்காட்சி கலந்துரையாடல் என்பது ஒரு அமைப்பாகும்.
(ii) இதில் பங்கேற்கும் பயனர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்தும் ஒரே அறையில் அமர்ந்து ஆலோசிப்பதைப் போன்று நேருக்கு நேராக கலந்துரையாட முடியும்.
9.
1. குறியாக்கத் தொழில் நுட்பம் என்பது ஒரு செயல்திறன் மிக்க தகவல் பாதுகாப்பு அமைப்பாகும்.
2. குறியாக்க வழிமுறைகளைப் பயன்படுத்தி ஒரு மூல உரையை அர்த்தமற்ற மறைஎழுத்து உரையாக மாற்றுவது குறியாக்கம் என்று வரையறுக்கப்படுகிறது.
3. இதனால் தரவுகளின் இரகசியத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.
4. குறியாக்கம் மற்றும் மறைகுறியாக்கம் வழிமுறைகள் தரவை குறியாக்கம் (அ) குறிநீக்கம் செய்ய குறியீட்டை உபயோகப்படுத்துகிறது.
5. இரண்டு குறியாக்கத் தொழில்நுட்பங்கள்
i. சமச்சீர் குறியீடு குறியாக்கம்
ii. சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம்
i. சமச்சீர் குறியீடு குறியாக்கம்:
1. சமச்சீர் குறியீடு குறியாக்கம், நெறிமுறை குறியாக்கம் மற்றும் மறைக் குறியாக்கம் ஆகிய இரண்டிற்கும் ஒரே குறியீட்டை பயன்படுத்துகின்றன.
2. இதில் ஒரு குறிப்பிட்ட நீளமுடைய இயல் உரையை பல சிக்கலான செயல்பாடுகள் மூலம் அதே நீளம் கொண்ட மறைகுறி உரையாக மாற்றப்படுகிறது.
3. சமச்சீர் குறியீடு குறியாக்கம் வழிமுறைகள் ஒரு குறியீட்டை மட்டுமே பயன்படுத்துவதால், கோட்பாட்டின் படி, குறியாக்கம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட துல்லியமான குறியீட்டை அறிந்தவர்கள் மட்டுமே மறைகுறியாக்கம் செய்ய முடியும்.
4. AES, RC4, DES, 3DES போன்ற பிரபலமான குறியாக்கத் தொழில்நுட்பங்கள் சமச்சீர் குறியீடு குறியாக்கம் நெறிமுறைகளைப் பயன்படுத்துகின்றன.
ii. சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம்:
1. சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் பொது குறியீடு குறியாக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
2. பொது குறியீடு மற்றும் எண்முறைச் சான்றிதழ்களைப் பயன்படுத்துகிறது.
3. இதில் தகவல் பரிமாற்றம் செய்யும் நபர்களுக்கு மற்றவரின் தனிப்பட்ட குறியீடு தெரிந்திருக்க வேண்டியதில்லை.
4. ஒவ்வொரு பயனரும் தனிப்பட்ட குறியீடு மற்றும் பொது குறியீடு என அவர்களின் சொந்தக் குறியீட்டு ஜோடியை உருவாக்குவர்.
5. பொதுக் குறியீட்டு குறியாக்கம் முறையில் ஒரு பொதுக் குறியீட்டை கொண்டு இயல் உரையை மறை உரையாக மாற்றி பின் ஒரு தனிப்பட்ட குறியீட்டை கொண்டு மறை உரையை மீண்டும் இயல் உரையாக மாற்றப்படுகிறது.
எ.கா: RSA, DSS தொழில் நுட்பங்கள்
10.
HTML படிவத்தில் படிவ உறுப்புகளின் வகைகள் பின்வருமாறு:
1. உரைபெட்டி (Text box)
2. தேர்வுப்பெட்டி (Check box)
3. கோப்பு தேர்ந்தெடுத்தல் (File select)
4. பொத்தான்கள் (Buttons)
5. ரேடியோ பொத்தான் (Radio button)
6. படிவ ஒட்டு (Form tag)
1. உரையினை உள்ளிட உரைப்பெட்டி (Text box) மற்றும் உரை பரப்பு (Text area) போன்ற உறுப்புகள் உள்ளன.
2. Submit பொத்தான், reset பொத்தான் மற்றும் cancel பொத்தான் போன்ற பொத்தான்கள் உள்ளன.
3. தேர்வு பெட்டி (Check box) HTML படிவத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மதிப்பினை தேர்ந்தெடுக்கும் அம்சமாகும் .
4. ரேடியோ பொத்தானும் தேர்வுப்பெட்டி போன்றதுதான், ஆனால் ரேடியோ ஒரு மதிப்பினைத் தேர்வு செய்ய முடியும்.
5. கிளை கணிப்பொறியிலிருந்து சேவையகக் கணினியில் உள்ள ஒரு கோப்பினைத் தேர்வு செய்ய File Select உறுப்பு சிறந்ததாகும்.
11.
MySQL வினவல்கள்:
(i) MySQL மற்றும் PHP-ஐ இணைத்தலின் மிக முக்கிய நோக்கம் MySQL தரவுத்தள சேவையகத்திலிருந்து தரவுகளை மீட்டெடுத்தல் மற்றும் கையாளுதல் ஆகும்.
(ii) SQL PHP, MySQL: நீட்டிப்புடன் சேர்ந்து MySQL மற்றும் PHP இணைப்பின் நோக்கத்தை அடைவதற்கு உதவுகின்றன. mysqli_query() என்பது PHP மொழியிலுள்ள SQL வினவல் கூற்றுகளை இயக்குவதற்கு உதவுகின்றது.
கட்டளை அமைப்பு :
mysqli_query ("Connection Object", "SQL query)
எடுத்துக்காட்டு :
$con=mysqli_connect("localhost", "my_user", "my_password", "Student_DB"); $sql = "SELECT student_name,student_age FROM student";mysqli_query($con,$sql);
12.
வணிகத்தில் வலையமைப்பு:
1. வேகமான கணினி வலையமைப்புகள், வலிமையான இணையம் மற்றும் கம்பியில்லா தொடர்புகள் வணிகத்தின் வழியை மாற்றிவிட்டன.
2. கிளவுட் கம்பியூட்டிங் போன்ற சமீபத்திய தொழில்நுட்பப் பயன்பாடு மூலம், பாதுகாப்பை அதிகரிக்கவோ (அ) பயனர் அணுகலைக் கட்டுப்படுத்தவோ முடியும். இங்கே இணைய உரையாடல்கள் விரைவாக நடக்கும், விரைவு முடிவு எடுத்தல் நிறைய நேரத்தை சேமிக்கிறது. வணிகத்தில் ஒவ்வொரு நொடியும் பணம் என்று அனைவருக்கும் தெரியும்.
3. மின் வங்கிச் சேவை மூலம் ஒருவருக்கொருவர் பணப்பரிவர்த்தனை செய்ய வழிவகை செய்கிறது. இதற்கு Payment Gateways வழிவகை செய்கிறது.
4. இந்த முறையிலேயே குறைந்த விலையில் பொருட்களை வாங்கவும் வழிவகை செய்கிறது.
5. இன்று பொருட்களை பற்றி இணையத்தில் தேடுவது மிகவும் எளிது.
6. இணையத்தின் வழியாக மிக எளிமையாக குறைந்த விலையில் ஒரு பொருளை வாங்க முடியும்.
7. நிறுவன உரிமம் புதுப்பித்தல், பிற சான்றிதழ்கள், பங்கு பராமரிப்பு, இன்டர்நெட் மற்றும் கணினி வலையமைப்புகள் வழியாக எந்த புவியியல் எல்லைகளையும் இல்லாமல் செய்ய முடியும்.
8. அரசு மானியங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் வியாபாரத்தை ஊக்குவிக்கின்றன.
9. இணையத்தால் நேரடி மனித உரையாடல்கள் குறைந்து வருகின்றன. உழைக்கும் சுழலும் கூட சுருங்கி வருகிறது.
10. வாங்குபவரும் நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து குறைந்த செலவில் வாங்குவார், நடுத்தர நபர் தரகு கட்டணங்கள் குறைக்கப்படுகின்றன.
வீட்டு வலையமைப்புகள்:
E-banking, e-learning, e-governance, e-health, telemedicine, அழைப்புதவி மையங்கள், வீடியோ கான்பரன்சிங், நினைவுகள் டிஜிட்டல்மயமாக்கல் போன்றவற்றை எளிதாக அணுகவும் மற்றும் பயன்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இ-சந்தையில் (அ) ஆன்லைன் ஷாப்பிங் மூலம் கார், ஆபரணங்கள், அனைத்து பயண டிக்கெட் மற்றும் ரயில் டிக்கெட்டுகள், விமான டிக்கெட்டுகள் இணையம் மற்றும் கணினி வலையமைப்பு மூலமாக எளிதாக செய்ய முடியும்.
மொபைல் வலையமைப்பு:
1. மொபைல் (அ) செல்லுலார் ஃபோன் வழியாக இணையத்தை அணுகுவதற்கு எளிதாக உள்ளது. எங்கு சென்றாலும் நாம் அணுகலாம்.
2. மொபைல் வலையமைப்பு வழியாக யாருடனும் தொடர்பு கொள்ளலாம்.
3. கணினி அறிவு இல்லாத பயனரும் எளிதாக இணையத்தை அணுக மொபைல் வலையமைப்பு உதவுகிறது.
சமூகப் பயன்பாடு:
1. சமூக வலையமைப்பு என்பது ஊடகத்தில் அனைத்து மக்களையும் எளிதாகவும், விரைவாகவும் இணைக்கும் ஊடகமாகும்.
2. உதாரணமாக WhatsApp, முகநூல் (Facebook), டிவிட்டர் வலைப்பதிவுகள் (blogs), Pinterest, instagram, class mates மற்றும் பல.
3. மேலே உள்ள சமூக ஊடகங்கள் மூலம் நாம் வெவ்வேறு வடிவங்களில் நமது சிந்தனைகளை பகிர்ந்து கொள்கிறோம்.
13.
| ஒப்பீடு அடிப்படையில் | TCP/IP மாதிரி | OSI மாதிரி |
| விரிவாக்கம் | Transmission Control Protocol/ Internet Protocol | Open System Interconnection |
| நோக்கம் | இது இணையத்தில் தரவு பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் | இது கணினி முறைமைக்கு பயன்படுத்தப்படும் ஒரு கோட்பாட்டு மாதிரி ஆகும். |
| அடுக்குகளின் எண்ணிக்கை | 4 அடுக்குகள் | 7 அடுக்குகள் |
| உருவாக்கப்பட்டது | பாதுகாப்பு துறை (DOD) Department of Defense | ISO |
| உறுதித்தன்மை | ஆம் | இல்லை |
| பயன்பாடு | பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. | ஒரு போதும் பயன்படுத்தியது இல்லை |
14.
களப்பெயர் வெளி:
1. களப்பெயர்களை ஒரு படிநிலை மற்றும் தருக்க மர அமைப்பில் கொண்டுள்ள ஒரு பெயரிடும் அமைப்பு.
2. படிநிலை பெயர்வெளியை அடைய களப் பெயர்வெளி வடிவமைப்பில் குறிக்கப்படுகிறது.
3. இதில் பெயர்கள் தலைகீழ் மர வடிவமைப்பில் குறிக்கப்படுகிறது.
4. இதன் வேர் உறுப்பு மேலிருக்கும் வகையில் அமைந்திருக்கும்.
5. இந்த மர அமைப்பு, மட்டங்கள் 0 முதல் 127 வரை மொத்தம் 128 மட்டங்களைக் கொண்டிருக்கும்.
6. மேற்காண் படம் களப்பெயர்வெளியை குறிக்கிறது. இங்கு வேர் உறுப்பு மிக உயர்ந்த மட்டத்தில் அதாவது மட்டம் 0 வில் உள்ளது.
7. வேர் உறுப்பு எப்போதும் NULL சரத்தைக் குறிக்கிறது.
8. வேர் உறுப்புக்கு அடுத்த மட்டத்தில் முனைகள் (வேர் உறுப்புகளின் குழந்தைகள்) உள்ளன.
9. மர அமைப்பில் ஒவ்வொரு முனையும் ஒரு சிட்டை/ அடையாளம் மற்றும் களப் பெயரைக் கொண்டிருக்கும்.
15.
foreach மடக்கு அணியில் உள்ள உறுப்புகளுடன் மீண்டும் மீண்டும் செயல்பட பயன்படுகிறது.
கட்டளை அமைப்பு:
foreach ($array as $value)
{
//code to be executed;
}
foreach மடக்கின் ஒவ்வொரு சுழற்சியின் போதும் நடப்பு அணி உறுப்பின் மதிப்பானது $value மாறியில் இருத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு :
அணியின் உறுப்புகளை அச்சிடுவதற்கான foreach மடக்கு
$array = array(1, 2, 3, 4, 5);
foreach ($array as $value) }
echo $value."
";
கீழ்க்கண்ட கட்டளை அமைப்பு பயன்படுத்தி தொடர்புருத்த அணியில் உள்ள திறவுகோல்கள் மற்றும் மதிப்புகளை foreach மடக்கின் சுழற்சியில் பயன்படுத்தலாம்.
கட்டளை அமைப்பு:
foreach ($array as $key => $value)
{
//code to be executed;
}
foreach மடக்கின் ஒவ்வொரு சுழற்சியின் போதும் நடப்பு அணி உறுப்பின் திறவுகோலானது $key மாறியிலும், மதிப்பானது $value மாறியிலும் இருத்தப்படுகிறது.
வெளியீடு:
1
2
3
4
5
16.
ஈத்தர்நெட் வடமிடலில் நான்கு முக்கிய பகுதிகள் உள்ளன.
(1) இணைப்பு வடம் (Patch Cable)
(2) RJ45 (RJ45 Connector)
(3) ஈத்தர்நெட் தொடர்பி (Ethernet Port)
(4) கிரிம்பிங் கருவி (Crimping Tool)
1. இணைப்பு வடம் (முறுக்கப்பட்ட இணை கம்பிகள்):
(i) இந்த வடங்கள் பொதுவாக எட்டு வெவ்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன.
(ii) அவைகளில் நான்கு திட (Solid) நிறங்கள். மற்றவை கோடிடப்பட்டவை (Striped).
(iii) ஈத்தர்நெட் வடங்கள் பொதுவாக பல்வேறு தொழில்துறை தரங்களில் உற்பத்திசெய்யப்படுகின்றன. அவை CAT 3, CAT 5, CAT 6, CAT 62, CAT 7. இதில் CAT என்பது Category என்ற வார்த்தையில் இருந்து உருவாக்கப்பட்டது.
2. RJ45 (RJ45 Connector):
(i) RJ45 இணைப்பி ஒரு தொலைபேசி ஜாக் (Jack) போலவே தோற்றமளிக்கிறது.
(ii) ஆனால் இது அளவில் சற்று பெரியது.
(iii) RJ45 இல் "RJ” என்பது Registered Jack மற்றும் "45" என்பது வடத்தின் இடைமுகத் தரத்தை குறிக்கிறது.
(iv) RJ45 ஈத்தர்நெட் இணைப்பி ஒரு சிறிய பிளாஸ்டிக் cube ஆகும்.
3. ஈத்தர்நெட் தொடர்பி:
(i) ஈத்தர்நெட் தொடர்பி என்பது ஈதர்நெட் அட்டையின் ஒரு திறவுப் (Opening) பகுதியாகும். இது ஈத்தர்நெட் வடத்தின் RJ45 இணைப்பியை ஏற்கிறது.
(ii) தனியாள் கணினிகள், மடிக்கணினிகள், திசைவிகள், சுவிட்சுகள், மையங்கள் (hub) மற்றும் மோடம்கள் போன்றவற்றில் இது காணப்படுகிறது.
4. கிரிம்பிங் கருவி (Crimping Tool):
(i) Crimping என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கம்பிகள் ஒன்றை ஒன்று பற்றிக் கொள்ளும் வகையில் இணைக்கும் செயலாகும்.
(ii) ஈத்தர்நெட் வடமிடலின் முக்கிய செயல் 45 இணைப்பியை முறுக்கு இணைக்கம்பியின் இருபுறமும் இணைப்பதாகும்.
(iii) crimping கருவி என்பது வடத்துடன் ஈத்தர்நெட் இணைப்பியை இணைக்கப் பயன்படும் ஒரு கருவி ஆகும்.
17.
1. if கூற்று என்பது ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட கூற்றுகளை ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் அடிப்படையில் பயனர் விரும்பும் வகையில் செயல்படுத்துவதாகும்.
2. நிபந்தனை தவறு எனில் else தொகுதி செயல்படுத்தப்படும்
< ?php
$Pass_Mark=35;
$Student_ Mark=70;
if($Student_Mark>=$Pass_Mark){
echo 'The Student is eligible for the promotion";
}
else {
echo "The Student is not eligible for the promotion";
}
? >
18.
அணி என்பது ஒரே தரவு வகையைச் சார்ந்த (ஒரே மாதிரியான) ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை ஒரு அணியின் மாறியில் தேக்கி வைப்பதாகும்.
PHP-ல் மூன்று வகைகள் :
1. சுட்டு எண்கள் கொண்ட அணிகள்
2. தொடர்புருத்த அணிகள்
3. பல பரிமாண அணிகள்
1. சுட்டு எண்கள் கொண்ட அணிகள் :
தரவு தொகுப்பில் உள்ள மாறியின் ஒவ்வொரு உறுப்புக்கும் சுட்டெண் மதிப்பிடப்படுகிறது
'array" என்ற சிறப்பு சொல்லை பயன்படுத்தி வரையறுக்கப்பட்ட மாறி. நேரியல் அணியில் உள்ள மாறியின் ஒவ்வொரு உறுப்புக்கும் 0-ல் தொடங்கி n-1 ல் முடியும் சுட்டெண் மதிப்பிடப்படுகிறது. பயனர் அணியின் பெயரை தொடர்ந்து அதன் சுட்டெண்ணையும் பயன்படுத்தி அணியின் உறுப்புக்களை அணுகமுடியும்.
கட்டளை அமைப்பு :
Array defines with the keyword array()
அணியானது array( ) என்ற சிறப்புச் சொல்லுடன் வரையறுக்கப்படுகிறது.

< ?php
$teacher_name = array("Iniyan", "Kavin",'Nilani'');
echo ''The students name are " .
$teacher_name[0] . " , " .$teacher_name[1] .
"and" . $teacher_name[2] .
? >
2. தொடர்புருத்த அணிகள் :
தொடர்புருத்த அணிகள் என்பது திறவும் (Key) மதிப்பும் (Value) இணைந்த தரவு கட்டமைப்பாகும். நேரியல் அணியில் (Linear array) தரவுகளை தேக்கி வைப்பதற்கு பதிலாக தொடர்புருத்த அணிகளை கொண்டு தரவுகளை தேக்கி வைக்கலாம்.
கட்டளை அமைப்பு :
Associative Arrays Syntax
array(key=>value,key=>value,key=>value,etc.);
key = Specifies the key (numeric or string)
value = Specifies the value
(எ.கா)
$Marks=array(“Student1”=>“35”,“Student2”=>“17”,“Student3”=>“43”);
echo “Student1 mark is” . $Marks[‘Student1’] . “ is eligible for qualification”;
echo “Student2 mark is” . $Marks[‘Student2’] . “ is not eligible for qualification”;
?>
3. பல பரிமான அணி :
1. பல பரிமாண அணி என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணிகளைக் கொண்ட ஒரு அணி ஆகும்.
2. PHP ல் பல்வேறு வகையான (அ) அளவுள்ள பல பரிமாண அணிகளை உருவாக்க முடியும்.
3. அதாவது இரண்டு மூன்று நான்கு ஐந்து (அ) அதற்கும் அதிகமான அளவுள்ள பரிமாண அணிகளை உருவாக்கலாம்.
எ.கா " // A two-dimensional array
$student=array
(
array(“Iniyan”,100,96),
array(“Kavin”,60,59),
array(“Nilani”,1313,139)
);
echo $$student[0][0].”: Tamil Mark: “.$student [0][1].”. English mark: “.$student [0]
[2].”
”;
echo $$student[1][0].”: Tamil Mark: “.$student [1][1].”. English mark: “.$student [1][2].”
”;
echo $$student[2][0].”: Tamil Mark: “.$student [2][1].”. English mark: “.$student [2]
[2].”
”;
?>
19.
● Apache license 2.0
● BSD 3-Clause “New” or “Revised” License
● BSD 2-Clause “Simplified” or “Free BSD” License
● GNU General Public License (GPL)
● GNU Library of “Lesser” General Public License (LGPL)
● MIT License
● Mozilla Public License 2.0
● Common Development and Distribution License
● Eclipse Public License
20.
1. வணிகம் - வணிகம் (B2B)
2. வணிகம் - நுகர்வோர் (B2C)
3. வணிகம் - அரசாங்கம் (B2G)
4. நுகர்வோர் - வணிகம் (C2B)
5. நுகர்வோர் - நுகர்வோர் (C2C)
6. நுகர்வோர் - அரசாங்கம் (C2G)
7. அரசாங்கம் - வணிகம் (G2B)
8. அரசாங்கம் - நுகர்வோர் (G2C)
9. அரசாங்கம் - அரசாங்கம் (G2G)
1. வணிகம் - நுகர்வோர் (B2C):
(i) B2C மின் வணிகத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் அதன் இறுதி - நுகர்வோருக்கு இடையே இணையகம் வழியாக நேரடி வர்த்தகம் நடைபெறுகிறது
(ii) B2C நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு நிகழ்நிலையில் பொருட்கள், தகவல் (அ) சேவைகளை அதிக தனிப்பட்ட மற்றும் சக்தி வாய்ந்த சூழலில் விற்பனை செய்கின்றன
(iii) ஒரு மரபு சார்ந்த கடைக்காரருக்கு உண்மையான போட்டியாளராக கருதப்படுகிறது
(iv) இவ்வகை மின் - வணிக மாதிரி நுகர்வோருக்குப் பயனளிக்கக் கூடியது. மின் வணிகம் இணையத்தின் சில்லறை விற்பனையாக செயல்படுகிறது என்றும் கூறலாம்
எ.கா: வாடிக்கையாளர்களுக்குப் புத்தகங்களை நேரடியாக விற்பனை செய்யும் ஒரு புத்தக நிறுவனம்
2. வணிகம் - அரசாங்கம் (B2G):
(i) B2G என்பது பொருட்கள், சேவைகள் (அ) தகவல்களை அரசாங்கத்திற்கோ (அ) அதன் நிர்வாகத்திற்கோ விற்பனை செய்யும் வியாபார அமைப்புகளைக் குறிப்பிடும் ஒரு வணிக மாதிரியாகும்
(ii) ஒரு நிறுவனம் தனது பொருட்கள் அல்லது சேவைகளுக்கு இணையம் மூலம் அரசாங்கத்திடம் பணம் பெறும் போது அது B2G மின் வணிக மாதிரி என்று அழைக்கப்படுகிறது.
எ.கா: ஒரு அரசு (அ) அதன் நிர்வாகம் ஒரு வணிக நிறுவனத்திடமிருந்து மாணவர்களுக்கான மடிக்கணினிகளை வாங்குதல்
3. நுகர்வோர் - வணிகம் (C2B)
(i) இந்த மின் - வணிக மாதிரியில் வாடிக்கையாளர்களால் பரிவர்த்தனை துவக்கப்படுகிறது
(ii) குறிப்பிட்ட விலை (அ) தேவைகளில் தொகுப்பை நிர்ணயித்து நுகர்வோர்கள் ஒரு சேவை (அ) பொருளைக் கோருவோர்கள்
(iii) C2B மாதிரி தலைகீழ் ஏல மாதிரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வாடிக்கையாளர் ஒரு சேவை அல்லது ஒரு தயாரிப்புக்கான விலையை நிர்ணயம் செய்கிறார்.
(iv) பின் அந்த வலைத்தளம் வாடிக்கையாளரின் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்யும் பல்வேறு வாய்ப்புகளை கண்டறியும்.
எ.கா: ஒரு பயண வலைத்தளத்தில் ஒரு வாடிக்கையாளர் அவரது பயண தேதி, புறப்படும் மற்றும் சேரும் இடம், பயணிகளின் எண்ணிக்கை மற்றும் தங்கும் விடுதியின் தரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்
4. நுகர்வோர் - அரசாங்கம் (C2G):
(i) C2G மின் வணிகத்தில் நுகர்வோரும் அரசும் ஈடுபடுகின்றனர். இங்கு ஒரு தனி நுகர்வோர் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்கிறார்
(ii) C2G மாதிரிகள் வழக்கமாக வருமான வரி அல்லது வீட்டு வரி செலுத்துதல்கள், சான்றிதழ்கள் அல்லது பிற ஆவணங்களை வழங்குவதற்கான கட்டணங்கள் செலுத்துதல் ஆகியவை அடங்கும்
21.
படிநிலை 1 :
Apache foundation வலைத்தளத்திற்கு சென்று Httpd வலைசேவையக மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யவும்.
http;//http.apache.org\download.cgi
படிநிலை 2 :
1. MSI கோப்பினை Apache foundation வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த பிறகு, பயனர் MSI கோப்பினைத் துவக்கி சேவையகக் கணிப்பொறியில் நிறுவுதலை முடிக்க தொடர்ந்து வரும் Next பொத்தான்களைக் கிளிக் செய்ய வேண்டும்.
2. மென்பொருள் தானமைவு, இடைமுக எண்ணாக 130 (அ) 130130 யை எடுத்து கொள்ளும்.
3. ஒருமுறை பயனர் இதனை முடித்து பிறகு வலை சேவையக மென்பொருளானது சேவையக கணிப்பொறியில் ஒரு சேவையாக நிறுவப்பட்டு கட்டமைக்கப்படும்.
படிநிலை 3 :
1. Apache Httpd வலை சேவையகத்தின் நிறுவுதலை சோதிக்க, பயனாளர் கணிப்பொறியில் நிறுவப்பட்டுள்ள வலை உலவியிலிருந்து கீழ்கண்ட URL யை உள்ளீடு செய்ய வேண்டும்.
http"localhost:130/ (or)
http ://localhost :130130
"It Works" என்பதை வெளியீட்டு பக்கம் காட்டும்.
படிநிலை 4 :
விண்டோஸ் கட்டுபாட்டு பலகம் மூலமாக நிர்வாகியான பயனர் வலை சேவையக எந்த நேரத்திலும் தொடங்கலாம். நிறுத்தலாம் மற்றும் மீண்டும் தொடங்கலாம் சேவைகள் நிறுத்தப்பட்ட பின் சேவையக கணிப்பொறியிலிருந்து பதில் செய்தியினை பயனாளர் கணிப்பொறி பெற இயலாது.
படிநிலை 5 :
"http.conf" என்ற வலைசேவையகக் கட்டமைப்பை நிறுவும் கோப்பு 'Apache Installation'அடைவின் (directory) கீழ் conf என்ற அடைவுக்குள் அமைந்துள்ளது. இந்த கோப்பினை மாற்றம் செய்து PHP ஸ்கிரிப்டிங் மொழியை இயக்க PHP தொகுதியை செயல்படுத்துகின்றது.
22.
கடன் அட்டை பரிவர்த்தனையின் முக்கிய பங்களிப்பாளர்கள்:
1. வாடிக்கையாளர் : கடன் அட்டை கணக்கை வைத்திருப்பவர், கடனை முழுமையாக (transactor) அல்லது அதில் ஒரு பகுதியை (revolver) மட்டும் (மீதமுள்ள தொகை மற்றும் வட்டி கணக்கில் முன்னோக்கி எடுத்துச் செல்லப்படும்) செலுத்த வேண்டியவர்.
2. வியாபாரி : கடை உரிமையாளர் அல்லது விற்பனையாளர் அல்லது சேவை வழங்குபவர், கடன் அட்டை மூலம் தனது வாடிக்கையாளர்களால் செய்யப்படும் பணம் செலுத்தல்களைப் பெறுகின்றவர்.
3. பெறுபவர்: வியாபாரியின் சார்பாக பணம் பெற்றுக் கொள்வதற்கு உதவும் வங்கி. இது உரிய வழியில் கடன் அட்டை வழங்குபவருக்கு அங்கீகார கோரிக்கைகளை அனுப்பும்.
4. கடன் அட்டை அமைப்பு: இது வங்கிகளுக்கு இடையேயான இடைநிலை அமைப்பு, இந்த நிறுவனம் பெறுபவர் மற்றும் வழங்குபவர் இடையே பரிவர்த்தனை தகவல் பரிமாற்றங்களுக்கு பொறுப்புடையது. எடுத்துக்காட்டு: விசா, மாஸ்டர்கார்டு, RUPAY.
5. வழங்குபவர்: கடன் அட்டையை வழங்கும் வங்கி, கொள்முதலுக்கான வரம்பை அமைக்கிறது. பரிவர்த்தனைகளின் அங்கீகாரத்தைத் தீர்மானிக்கிறது. பணம் செலுத்துவதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பது, காப்பீடு, கூடுதல் அட்டைகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது.
23.
தரவுதளத்தை சிறந்த மற்றும் திறமையான முறையில் வடிவமைப்பதற்கான, பல திறந்த மூல கருவிகள் கிடைக்கின்றன. phymyAdmin என்பது வலை நிர்வாகத்திற்கு மிகவும் பிரபலமானதாகவும். MYSQL Work bench மற்றும் Heidi SQ போன்றவை பிரபலமான டெக்ஸ்டாப் பயன்பாட்டு கருவிகளாகும்.
PHPMYADMIN (Web Admin):
(i) MYSQL -ன் நிர்வாகக் கருவி ஆனது - PHP -ல் எழுதப்பட்ட ஒரு வலைப்பயன்பாடாகும்.
(ii) இவைகள் வலைச் சேவைகளில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
(iii) CSV -ல் இருந்து தரவுகளை தருவித்தல் மற்றும் தரவுகளை பல்வேறு வடிவமைப்பில் வழங்குதலுக்கான வலை இடைமுகத்தை வழங்குவது இதன் முக்கிய அம்சமாகும்.
(iv) இது MYSQL சேவையாக செயல்களான இணைப்புகள், செயல்முறைகள் மற்றும் நினைவகப் பயன்பாடு போன்றவற்றை கண்காணிப்பதற்கான நேரடி வரைப்படங்களை (Charts) உருவாக்குகிறது. இது சிக்கலான வினவல்களை எளிமையாக்கவும் பயன்படுகிறது.
MY SQL Work bench (டெஸ்க்டாப் பயன்பாடு):
(i) இது நிரலர்கள் மற்றும் DBA - வால் முக்கியமாக காட்சிப்படுத்தலுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு தரவுதளக் கருவி ஆகும்.
(ii) இந்தக் கருவி தரவு மாதிரியாக்கம், SQLஉருவாக்கம், சேவையக மற்றும் MYSQLன் காப்புப் பிரதி (Back up) போன்றவற்றில் உதவுகிறது.
(iii) இதன் அடிப்படை வெளியீட்டு பதிப்பு 5.0 ஆகும். தற்போது 8.0 அனைத்து இயக்க அமைப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
(iv) இந்தக் கருவியின் SQL பதிப்பாளர் (editor) பல வெளியீடு தொகுதிகளை கையாளுவதில் நெகிழ்வுத் தன்மையுடனும் மற்றும் வசதியாகவும் உள்ளது.
HeidiSQL (டெக்ஸ்டாப் பயன்பாடு) :
(i) இந்த திறந்த மூலக்கூறுகள் சிறந்த தரவுத்தள அமைப்புகளின் நிர்வாகத்தில் உதவுகிறது.
(ii) இது சேவையக இணைப்பு, தரவுதளங்கள். அட்டவணைகள், காட்சிகள், தூண்டுதல்கள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவற்றுகான GUI (Graphical| User Interface) சிறப்பம்சங்களை ஆதரிக்கிறது.
24.
| சமச்சீர் குறியீடு குறியாக்கம் | சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் |
| மறைகுறியாக்கம் மற்றும் குறியாக்க இரண்டிற்கும் ஒரே குறியீடு பயன்படுத்தப்படுகிறது | மறைகுறியாக்கம் மற்றும் குறியாக்க இரண்டிற்கும் வெவ்வேறு குறியீடுகள் பயன்படுத்தப்படுகிறது |
| மறைகுறியாக்கம் அல்லது குறியாக்கத்தின் வேகம் மிக அதிகம் | மறைகுறியாக்கம் அல்லது குறியாக்கத்தின் வேகம் குறைவு |
| மூலஉரை மற்றும் மறைக் குறியீட்டு உரை இரண்டும் ஒரே அளவானதாக இருக்கும் | தெளி உரை மற்றும் மறைக் குறியீட்டு உரை இரண்டும் ஒரே வெவ்வேறானதாக இருக்கும் |
| DES, AES, RC4 போன்ற நெறிமுறைகள் சமச்சீர் குறியீடு குறியாக்கத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன | RSA, ECC, DSA போன்ற நெறிமுறைகள் சமச்சீரற்ற குறியீடு குறியாக்கத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன |
| இது தரவுகளுக்கு இரகசியத் தன்மையை வழங்குகிறது | இது இரகசியத் தன்மை, அங்கீகாரம் மற்றும் மறுதலிக்கப்படாதிருத்தல் போன்ற நன்மைகளை வழங்குகிறது |
| பயனரின் எண்ணிக்கையை பொறுத்து பயன்படுத்தப்படும் குறியீடுகளின் எண்ணிக்கை அடுக்குகளில் அதிகரிக்கிறது. | பயனரின் எண்ணிக்கையை பொறுத்து பயன்படுத்தப்படும் குறியீடுகளின் எண்ணிக்கை நேர்க்கோட்டில் அதிகரிக்கிறது. |
25.
1. தயாரிப்பு மேலாளர் : பல்லூடக உருவாக்குதலில் குறித்த நேரத்தில் முழு தரத்துடன் பல்லூடகத் திட்ட உருவாக்கத்தை வரையறுப்பது மற்றும் ஒருங்கிணைப்பது.
2. பொருளடக்க வல்லுநர் : ஏற்கனவே திட்டமிட்ட பயன்பாட்டின் பொருளடக்கத்தைப் பற்றி அனைத்து ஆராய்ச்சி செயல்பாடுகளையும் செய்வதற்கு பொறுப்பானவர்.
3. ஸ்கிரிப்ட் எழுத்தாளர் : கருத்துக்களை முப்பரிமாண சூழல்களில் காட்சிப்படுத்துகிறார். தேவை ஏற்படின் நிரல் மீது மெய்நிகர் உண்மை ஒருங்கிணைப்பைப் பயன்படுத்தலாம்.
4. உரைப் பதிப்பாளர் : உரை எப்பொழுதும் கட்டமைப்பாகவும் சரியான இலக்கணத்தோடும் இருக்க வேண்டும் என்பதற்கு பொறுப்பானவர்.
5. பல்லூடக வடிவமைப்பாளர் : பல்லூடகத்தின் அனைத்து அடிப்படைத் தொகுதிகளைப் படைப்பாக மென்பொருளைப் பயன்படுத்தி அசைவூட்டல் போன்றவற்றை ஒருங்கிணைப்பவர்.
6. கணினி வரைகலை கலைஞர் : நிரலின் வரைகலைக் கூறுகளான பின்னணி புல்லட்கள், பொத்தான்கள், பாடப்பதிப்பாய்வு, 3D பொருள்கள், அசைவூட்டல் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றைக் கையாளும் பங்கினை வகிப்பவர்.
7. ஒலி மற்றும் ஒளிக்காட்சி வல்லுநர் : பதிவு செய்தல், ஒலி விளைவுகளைப் பதிப்பாய்வு செய்தல் மற்றும் இலக்கமாக்கல் ஆகியவற்றுக்கு பொறுப்பானவர்.
8. கணினி நிரலர் : பொருத்தமான மொழியில் குறிமுறை (அ) ஸ்கிரிப்ட் வரிகளை எழுதுபவர்.
9. வலை வல்லுநர் : ஒரு இணைய வலைப் பக்கத்தை உருவாக்க, அதை பராமரிப்பது மற்றும் இணைய சேவைகள் மூலம் பரவலான சமூக அணுகுதலை வழங்குதல்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards