12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Five mark Important Questions with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
வலையமைப்பு அடுக்கில் செயல்படும் முக்கியமான இணைய நெறிமுறைகள் யாவை?
2.
கணினி வலையமைப்புகளின் பொதுவான பயன்பாடுகளை விளக்கமாக எழுதுக.
3.
SQL கட்டளைகளின் வகைகளை எழுதி விளக்குக.
4.
சுட்டி அல்லது விசைப்பலகை மூலம் உரையை எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் என்பதை பற்றி விரிவாக எழுதுக.
5.
while மடக்கினை விவரி
6.
Crimping கருவியைப் பயன்படுத்தி ஈத்தர்நெட் வடத்தை உருவாக்குவதற்கான செயல்முறையை விவரி.
7.
நூலகங்களில் உள்ள பல்லூடகத் தொழில்நுட்பம் பயன்பாடுகளை விவரி.
8.
HTTP பதிவேற்ற செயல்பாட்டின் கருத்துருவினை பற்றி விளக்குக.
9.
MySQL இல் உள்ள செயற்கூறுகளை எடுத்துக்காட்டுடன் விவரி.
10.
கணினி வலையமைப்பு மற்றும் இணையம் வரையறுக்க.
11.
இணையம், அக இணையம் மற்றும் புற இணையம் விரிவாக விளக்குக?
12.
களப்பெயர் வெளி என்பது யாது? விளக்குக.
13.
foreach மடக்கை எடுத்துக்காட்டுடன் விவரி.
14.
ஈத்தர்நெட் கேபிளிங்கில் பயன்படுத்தப்படும் கூறுகளை விளக்குங்கள்.
15.
if... elseif ....else கூற்றை எடுத்துக்காட்டுடன் விவரி.
16.
பயனர் வரையறுக்கும் செயற்கூறை எடுத்துக்காட்டுடன் விவரி.
17.
திறந்த மூல மென்பொருளின் நன்மைகளை விளக்குக.
18.
மரபு சார்ந்த வணிகம் மற்றும் மின்- வணிகம் ஆகியவற்றை எவ்வாறு வேறுபடுத்துவீர்கள்?
19.
வலைதளம் உருவாக்குதலின் செயல்முறைகளை விரிவாக விளக்குக
20.
மின்னணு கணக்கு பரிமாற்றம் மற்றும் அதன் வகைகளை சுருக்கமாக விளக்குக.
21.
தரவுதள மேலாண்மை அமைப்பில் (DBMS) உள்ள பல்வேறு தரவுதள மாதிரிகளை விவரி.
22.
குறிப்பு வரைக
அ. எண்முறைச் சான்றிதழ்
ஆ. எண்முறைக் கையொப்பம்
23.
பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.
24.
25.
அசைவூட்டல் நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.
1.
வலையமைப்பு அடுக்கில் செயல்படும் முக்கியமான இணைய நெறிமுறைகள் :
(i) இணைய நெறிமுறை (Internet protocol - IP):
பொட்டலங்களை வழங்க IP முகவரிகளைப் பயன்படுத்தி வழிப்படுத்தும் நெறிமுறை ஆகும். இது ஒரு நம்பகத் தன்மை இல்லாததாகும். இது தகவலை விநியோகிக்க உறுதி அளிக்கிறது.
(ii) முகவரி தீர்வு நெறிமுறை (Address Resolution Protocol - ARP):
IP MAC (Medium Access Control) முகவரிகளாக உறுதி செய்கிறது.(MAC முகவரி என்பது வலையமைப்பில் ஒவ்வொரு சாதனத்தையும் தனிப்பட்ட முறையில் கண்டறியும் வன்பொருள் அடையாள எண் ஆகும்.) அதாவது IP வலையமைப்பு முகவரியை MAC முகவரிக்கு இணைக்கிறது.
(iii) இணைய கட்டுப்பாட்டு செய்தி நெறிமுறை (Internet Control Message Protocol - ICMP):
இது பிழை செய்திகள் மற்றும் செயல்பாட்டுத் தகவல்களை அனுப்ப வலையமைப்பு சாதனங்களால் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : ஹோஸ்ட் (Host) அல்லது ரவுட்டரை அணுக முடியவில்லை அல்லது கேட்கப்பட்ட சேவை வழங்கப்படவில்லை.
(iv) இணைய குழு மேலாண்மை நெறிமுறை (Internet Group Management Protocol - IGMP):
இது பல IP முகவரிகளை ஒரே நேரத்தில் பல குழுக்களின் செய்திகளை அனுப்புவதற்கு ஹோஸ்ட்கள் மற்றும் ரவுட்டர்களால் பயன்படுத்தப்படும் தொடர்பு நெறிமுறை ஆகும்.
2.
கணினி வலையமைப்புகளின் பொதுவான பயன்பாடுகள்.
(i) தொடர்பாடல் (Communication)
(ii) வளப்பகிர்வு (Resource Sharing)
(iii) தரவு அல்லது மென்பொருள் பகிர்வு (Data/Software Sharing)
(iv) பணம் சேமிப்பு (Money Saving)
தொடர்பாடல் :
(i) கணினி வலையமைப்புகளைப் பயன்படுத்துவதால், உலகெங்கிலும் உள்ள ஒருவர் மற்றவர்களிடம் தொடர்புகொள்ளலாம்.
(ii) பரவலாக பிரிக்கப்பட்ட குழுக்கள், பல்வேறு மொபைல், சமூக ஊடகம், தொலைபேசி, மின்னஞ்சல், அரட்டை, வீடியோ தொலைபேசி, வீடியோ கான்பரன்சிங், எஸ்எம்எஸ், எம்எம்எஸ் மற்றும் பலவற்றின் ஊடகங்கள் மூலம் மிகக் குறைந்த விலையில் எளிதாக தொடர்பு கொள்ளலாம்.
வளப்பகிர்வு:
(i) வளப்பகிர்வு என்பது பல அமைப்புகள் அணுகும் ஒரு சாதனமாகும்.
(ii) இது அனைத்து வகையான நிரல்கள்,உபகரணங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய இருப்பிடத்தை பொருட்படுத்தாமல் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.
(iii) இங்கு வளம் என்பது அச்சுப்பொறிகள், ஸ்கேனர், PDA, தொலைநகல் இயந்திரம் மற்றும் மோடம்கள் போன்றவை ஆகும்.
(iv) உதாரணமாக வலையமைப்பில் பல கணினிகள் ஒரே அச்சுப்பொறியை அணுகலாம்.
மென்பொருள் (அல்லது) தரவு பகிர்வு :
(i) கணினி வலையமைப்பு சேவையகத்தில் ஒரு மென்பொருள் அல்லது பயன்பாடு சேமிக்கப்பட்டிருக்கும்.
(ii) அதனை முனையங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
(iii) இது தரவுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.
(iv) எடுத்துக்காட்டாக, எல்லா கோப்புகளையும் ஒன்றுக்கும் மேற்பட்ட கணினிகளில் காப்புப் பிரதி எடுக்கவோ அல்லது நகலெடுக்கவோ முடியாது.
(v) எனவே வன்பொருள் செயல்பாடு என்றால் சேவையகத்தில் உள்ள பிரதிகளைப் பயன்படுத்தலாம்.
பணம் சேமிப்பு :
(i) கணினி வலையமைப்புகளை பயன்படுத்துவது மூலம் ஒரு நிறுவனம் அதிக பணத்தை சேமிக்க முடியும்.
(ii) இது காகித வேலை, மனித சக்தி மற்றும் நேரத்தை சேமிக்கிறது.
(iii) ஊதியம், சரக்கு, விலைப்பட்டியல் போன்றவற்றைக் கணக்கிடுவதில் துல்லியம்.
(iv) உதாரணமாக ஒரு நிறுவனம் ஒவ்வொருவருக்கும் முதல்நிலை கணிப்பொறியை வழங்க முடியும்.
(v) ஆனால் இணையத்தை பயன்படுத்தி தனியாள் கணிப்பொறியில் முதல்நிலை கணிப்பொறியின் செயல்பாட்டை வழங்க முடியும்.
3.
பல்வேறு செயல்பாடுகளைச் செய்ய பல்வேறு SQL கட்டளைகள் அதன் செயல்பாட்டை பொறுத்து ஐந்து முக்கிய வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
(i) தரவு வரையறை மொழி (Data Definition language-DDL) :
DDL கட்டளைகள் தரவுத்தளத்தை வரையறுக்கப் பயன்படுகின்றன. தரவுத்தள பொருளின் கட்டமைப்பை உருவாக்கவும் மாற்றம் செய்யவும் இது பயன்படுகிறது. Create, Alter, Drop, Rename மற்றும் Truncate கட்டளைகள் இந்த வகையைச் சார்ந்தவை ஆகும்.
| SQL DDL கட்டளைப் பட்டியல் |
| கட்டளைகள் | விளக்கம் |
| CREATE | அட்டவணைகள் அல்லது தரவுத் தளங்களை உருவாக்கப் பயன்படுகிறது. |
| ALTER | ஏற்கனவே இருக்கும் தரவுத்தள அல்லது அட்டவணைக் கட்டமைப்பை மாற்றி அமைக்கிறது. |
| RENAME | தரவுத்தளத்தில் ஏற்கனவே உள்ள பொருளின் பெயரை மாற்றப் பயன்படுகிறது. |
| TRUNCATE | அட்டவணையில் உள்ள அனைத்து பதிவுகளையும் நீக்க பயன்படுகிறது. |
(ii) தரவு கையாளுதல்மொழி (Data manipulation language DML):
இந்த மொழியில் அமைந்திருக்கும் SQL கட்டளைகள் தரவுத்தளத்தில் அமைந்திருக்கும் SQL கட்டளைகள் தரவுத்தளத்தில் உள்ள தரவை கையாளுவதற்கு உதவுகிறது.அதிகமான SQL கட்டளைகள் DML க்கு கீழ் வருகின்றன.
| SQL DML கட்டளைப் பட்டியல் விளக்கம் |
| கட்டளைகள் | விளக்கம் |
| INSERT | தரவுத்தள அட்டவணையில் புதிய வரிசைகளைச் சேர்க்கிறது. |
| UPDATE | ஒரு அட்டவணையில் ஏற்கனவே தரவுகளுடன் புதிய தரவுகளை மாற்றி அமைக்கிறது. |
| DELETE | அட்டவணையில் இருந்து பதிவுகளை நீக்குகிறது. |
(iii) தரவு வினவல் மொழி (Data Query language - DQL):
தரவு வினவல் மொழியில் (DQL) உள்ள தரவுத்தள அட்டவணைகளிலிருந்து தரவை மீட்டெடுக்க SELECT என்கிற SQL கட்டளை மட்டுமே பயன்படுகிறது.
| SQL DQL கட்டளைப் பட்டியல் |
| கட்டளைகள் | விளக்கம் |
| SELECT | அட்டவணையில் இருந்து தரவை மீட்டெடுக்க. |
(iv) பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழி (Transaction Control Language-TCL):
இதில் உள்ள SQL கட்டளைகள் தரவுத்தளத்தில் உள்ள பரிவர்த்தனைகளை நிர்வகிக்கிறது. மேலும் அது மாற்றங்களை நிரந்தரமாக தரவுத்தளத்தில் சேமிக்க உதவுகிறது. COMMIT, ROLLBACK, SET TRANSACTION மற்றும் SAVE POINT ஆகிய கட்டளைகள் இந்த வகையைச் சார்ந்ததாகும்.
| SQL TCL கட்டளைப் பட்டியல் |
| கட்டளைகள் | விளக்கம் |
| COMMIT | தரவுத்தளத்தில் நிரந்தரமாக சேமிக்கிறது. |
| ROLLBACK | கடைசியான COMMIT கட்டளையிலிருந்து தரவுத்தளத்தை அசல் வடிவத்திற்கு மீட்டெடுக்க. |
| SET TRANSACTION | படிக்க-எழுத அல்லது படிக்க மட்டும் அணுகல் போன்ற பரிவர்த்தனை பண்புகளை அமைக்கிறது. |
| SAVE POINT | பரிவர்த்தனைகளை தற்காலிகமாக சேமித்து எப்பொழுதும் வேண்டுமானாலும் பழைய நிலைக்குத் திரும்பச் செய்யும். |
(v) தரவுக்கட்டுப்பாட்டு மொழி (Data Control Language-DCL): இது அட்டவணை, பார்வை, சேமித்த செயல்முறை போன்ற தரவுத்தள பொருட்களில், SQL கட்டளைகள் பாதுகாப்பை அமல்படுத்துகின்றன. GRANT மற்றும் REVOKE கட்டளைகள் இதன் வகையைச் சேர்ந்ததாகும்.
| SQL DCL கட்டளைப் பட்டியல் |
| கட்டளைகள் | விளக்கம் |
| GRANT | குறிப்பிட்ட தரவுத்தள பொருள்களான அட்டவணை,பார்வை போன்றவற்றில் குறிப்பிட்ட பயனர்களுக்கு அனுமதி வழங்கப் பயன்படுகிறது. |
| REVOKE | குறிப்பிட்ட தரவுத்தள பொருள்களான அட்டவணை, பார்வை போன்றவற்றில் குறிப்பிட்ட பயனரிடமிருந்து அனுமதியை திரும்பப் பெற பயன்படுகிறது. |
4.
சுட்டி அல்லது விசைப்பலகை மூலம் உரையை தேர்ந்தெடுக்கலாம்.
சுட்டி மூலம் உரையைத் தேர்ந்தெடுத்தல்:
சுட்டியின் மூலம் உரையைத் தேர்ந்தெடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்.
(i) செருகும் புள்ளியை தேர்ந்தெடுக்க உரைத்தொகுதியின் தொடக்கத்தில் வைக்க வேண்டும்.
(ii) சுட்டியின் இடது பொத்தானை அழுத்திப் பிடித்தவாறு உரையின் மீது நகர்த்த வேண்டும்.
(iii) தேவையான உரை தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் சுட்டியை அழுத்துவதை விட்டுவிட வேண்டும்.
(iv) இப்பொழுது உரை உயர்த்திக் காட்டப்பட்டிருக்கும்.
விசைப்பலகை மூலம் உரையை தேர்ந்தெடுத்தல்:
விசைப்பலகை மூலம் உரையைத் தேர்ந்தெடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்.
(i) செருகும் புள்ளியை தேர்ந்தெடுக்க வேண்டிய உரையின் தொடக்கத்தில் வைக்க வேண்டும்.
(ii) Shift விசையை அழுத்தியவாறு நகர்வுப் பொத்தான்களைப் பயன்படுத்தி உரையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
(iii) உரை தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் Shift விசையை அழுத்துவதை விட்டுவிட வேண்டும்.
5.
(i) while மடக்கு என்பது முக்கியமான மடக்கு அமைப்பு ஆகும். இது எளிய பன்முறை செயல்பாட்டிற்குப் பயன்படுகிறது.
(ii) இது நிபந்தனையினை சரி (அ) தவறு என சோதிக்கிறது
(iii) கொடுக்கப்பட்ட நிபந்தனை சரி எனில் மடக்கினை செயல்படுத்தும்.
கட்டளை அமைப்பு:
while(condition is true) {
code to be executed;
}
எ.கா:
$scount = 10;
$sno = 1;
while($sno<=$scount)
{
echo "The student number is: $sno < br > ";
$sno++;
}
? >
6.
1. வடத்தை தேவையான நீளம் வெட்டிக் கொள்ளவும்.
2. வடத்தின் இருபுறமும் இருந்து 1 அங்குல அளவிற்கு பாதுகாப்பு உறையை நீக்கவும். இதனால் முறுக்கப்பட்ட இணை கம்பிகள் வெளியே தெரியும்.
3. கம்பி அகற்றப்பட்ட பிறகு, சிறிய கம்பிகளை அவிழ்த்து, சரியான வயரிங் அமைப்பில் வைக்கவும்
4. கம்பிகளை ஒன்றாக வைத்து அவற்றை ஒரே அளவுள்ளதாக (1/2 அங்குல) வெட்டவும்.
5. இணைப்பில் உள்ள 8 பள்ளங்களில் இந்த 8 நிற கம்பிகளை சேர்க்கவும். பிளாஸ்டிக் உறை இணைப்பின் உள்ளே செல்லும் வகையில் செருகப்பட வேண்டும்.
6. Crimping கருவியைப் பயன்படுத்தி RJ45 இணைப்பியை வடத்தில் பொருத்தவும். கையால் இழுத்தால் வெளிவராத அளவிற்கு நன்கு பொருந்தியிருக்க வேண்டும். இப்போது வடம் தரவு பரிமாற்றத்திற்குத் தயாராக உள்ளது.
7. தேவைப்பட்டால் வடத்தின் இணைப்பைச் சரிபார்க்க ஒரு வட சோதிப்பானை (Cable Tester) பயன்படுத்தவும்.
7.
(i) பல்லூடகத் தானியங்கு சேவை வழங்கி.
(ii) வலை ஒளிபரப்பு மற்றும் ஒளிக்காட்சி கலந்துரையாடல்.
(iii) பயனரை ஒழுங்குபடுத்தும் திட்டம்.
(iv) உள்ளமைவு பல்லூடக வளங்கள் உருவாக்கம் மற்றும் மின் பதிப்பகம்.
(v) இலக்க பல்லூடக நூலகங்கள்.
1. பல்லூடகத் தானியங்கு சேவை வழங்கி :
(i) பயனர்கள் தொடுதிரை மூலம் தகவல்களை பெற அனுமதிக்கும் ஒரு பல்லூடக கணிப்பொறியாகும்.
(ii) விமான நிலையங்கள் மற்றும் பிற பொது இடங்களில் திசைகள் மற்றும் சில அவசியமான தகவல்களை பயனருக்கு வழங்க உதவுகின்றது.
(iii) நூலகங்களில் தானியங்கி சேவை வழங்கியானது வழக்கமாக நுழைவாயிலுக்கு அருகே வைக்கப்பட்டிருக்கும்.
(iv) இது அறிவிப்புகளை காண்பிக்கவும், பட்டியல்கள் நூலக பயனரிடமிருந்து வரும் குறிப்புகள் மற்றும் ஆலோசனைகளை படிக்கவும் மற்றும் நூலகத்தின் செயல்பாடுகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்களையும் வழங்க உதவுகின்றது.
2. வலை ஒளிபரப்பு மற்றும் ஒளிக்காட்சி கலந்துரையாடல் :
(i) நிகழ் நேர நிகழ்ச்சிகளை இணையத்தின் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்வது வலை ஒளிபரப்பு எனப்படும்.
(ii) ஒளிக்காட்சி கலந்துரையாடல் என்பது வெவ்வேறு இடங்களில் உள்ள இரண்டிற்கும் மேற்பட்ட பங்காளர்களுக்கிடையே கலந்துரையாடலை நடத்தி அதன் ஒலி மற்றும் ஒளித் தரவுகளை கணினி வலையமைப்பு மூலம் அனுப்பும் ஒரு செயலாகும்.
3. பயனரை ஒருமுகப்படுத்தும் திட்டம் :
(i) பல்லூடகத்தின் ஊடாடும் செயல்பாடு காரணமாக பள்ளி கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள நூலகங்களுக்கு பயிற்சி அளிப்பதில் பல்லூடகம் முக்கிய பங்காற்றுகின்றது.
(ii) மேலும் பேராசிரியர்களுக்கு கருத்தாழமிக்க பாடங்களில் பயிற்சி அளிக்க உதவுகின்றது.
4. உள்ளமைவு பல்லூடக வளங்கள் உருவாக்கம் மற்றும் மின் பதிப்பகம் :
(i) பெரும்பான்மையான நூலகங்கள் உள்ளமைவாக பல்லூடக வளங்களை பெரிய அமைப்புக்கு சேவை வழங்குவதற்காக உருவாக்குகின்றன.
(ii) பல்லூடகக் கருவிகள் பல்வேறு மூலங்களிலிருந்து வரும் தகவல்களை புதுப்பித்தலை எளிதாக்கி உள்ளன.
(iii) நூலக பயனர்களுக்கு பயன்படுத்துவதற்கு எளியதாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையிலும் உள்ளது.
5. இலக்க பல்லூடக நூலகங்கள் :
(i) இலக்க வடிவத்தில் உள்ள தகவலானது இலக்க நூல்கள், ஸ்கேன் செய்யப்பட்ட நிழற்படங்கள், வரைகலை மற்றும் இலக்க முறையாக்கப்பட்ட ஒலி-ஒளி பதிவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
(ii) தொடக்கத்தில் இலக்க நூலக திட்டமானது உரை வடிவத்திலான தரவினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது.
(iii) பிறகு இது பிற பல்லூடகக் கூறுகளான நிழற்படங்கள், ஒலி மற்றும் ஒளிக்காட்சி பதிவுகள் ஆகிய அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு இலக்க நூலகத்தின் தொகுப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
8.
1. கோப்பினை பதிவேற்றம் செய்தல் என்பது கிளைக் கணிப்பொறியிலிருந்து ஒரு கோப்பினைத் தேர்ந்தெடுத்து சேவையக கணிப்பொறிக்கு அனுப்பப் பயன்படும் முக்கிய அம்சமாகும்.
2. படிவ ஒட்டானது POST அல்லது GET வழிமுறையைக் குறிப்பிடவும் enctype பண்புக் கூறானது multipart /form -data என்பதைக் குறிப்பிடவும் பயன்படுகின்றது.
3. < input >ஒட்டில் type = 'file' பண்புக் கூறானது. உள்ளீட்டு புலத்தை கோப்பு தேர்ந்தெடுத்தல் (file-select) உறுப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து Browse பொத்தானைக் காட்டப் பயன்படுகின்றது.
4. சேவையகக் கணிப்பொறியில் உள்ள 'PHP.ini' கோப்பில் file uploads directive -வினைத் தேடி அதனை on என மாற்றவும்.
1. மேலே குறிப்பிடப்பட்டுள்ள படிவமானது தரவினை "student -photo-upload. PHP என்ற கோப்பிற்கு அனுப்புகின்றது.
2. Upload பொத்தானைக் கிளிக் செய்தபிறகு அந்தக் கோரிக்கையானது student -photo-upload.php கோப்பினை அடைகின்றது.
3. கோப்பிலுள்ள $_FILES மாறியானது பதிவேற்றம் செய்யப்பட்ட கோப்பின் அனைத்து தகவல்களையும்.
உதாரணமாக கோப்பின் அளவு மற்றும் கோப்பின் விரிவு ஆகியவற்றைச் சேகரிக்கிறது. அனைத்து விவரங்களும் முழுவதுமாக பரிசோதிக்கப்படுகின்றது. மற்றும் பிழைகள் ஒரு அணி மாறியில் சேமிக்கப்படுகின்றது .
4. இந்த அணியின் பிழை மாறிகள் காலியாக இருந்தால் எந்த பிழையும் சேமிக்கப்படவில்லையெனில் கோப்பானது இறுதியாக image கோப்புகளுக்கு நகர்த்தப்படுகிறது.
எ.கா:
< !DOCTYPE html >
< html >
< body >
< form action="Student-photo_upload.php" method="post"
enctype ="multipart / form-data" >
Select image to upload:
< input type="file" name="fileToUpload" id="fileToUpload If >
< input type="submit" value="Upload Image" name="submit" >
< /form >
< /body >
< /html >
Student_photo _upload.php:
< ?php
if(isset($ _ FILES['image'])) {
$errors= array ( );
$file_name = $FILES['image']['name'];
$file_size =$FILES['image']['size'];
$file_tmp =$_FILES['image']['tmp_name'];
$file_type $_FILES[;image'['type'];
$file_ext=strtolower(end(explode('.', $_FILES ['image']['name'])));
$extensions=array("jpeg","jpg","png");
if (in_array($file_ext,$extensions)===false){$errors[]="extension not allowed, please choose a JPEG or PNG file.";
}
if ($file_size must be exactly 2MB';
}
if (empty ($errors)==true){
move_uploaded_file($file_tmp,"images/".$file_name);
echo"Success";
}else{
print_r($errors);
}
}
? >
9.
PHP நிரல் மொழியில் MySQL தரவுத்தள இணைப்பு மற்றும் தரவுத்தள வினவலைச் செயல்படுத்துவதற்காக பல செயற்கூறுகள் உள்ளன. MySQLi என்பது PHP மொழியின் நீட்டிப்பு ஆகும். இது MySQL தரவுத்தளத்தை அணுகப் பயன்படுகிறது.
இதன் தற்போதைய பதிப்பு 5.0.0 MySQLi நீட்டிப்பு MySQL தரவுத்தள இணைப்பு மற்றும் மேலாண்மையுடன் தொடர்புடைய கீழ்க்கண்ட முக்கிய செயற்கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது.
(i) mysqli_connect() Function
(ii) mysqli_close() Function
(iii) mysqli_query() Function
தரவுத்தள இணைப்புகள்:
MySQL தரவுத்தளத்தை அணுகுவதற்கு முன் mysqli_connect() செயற்கூற்றைப் பயன்படுத்தி PHP நிரல் மொழி வழியாக தரவுத்தள சேவையகக் கணினியை இணைக்க வேண்டும்.
கட்டளை அமைப்பு :
mysqli_connect ("Server Name", "User Name", "PassWord", "DB Name");
இந்த செயற்கூறு தரவுத்தள சேவையகத்துடன் இணைப்பை ஏற்படுத்துவதற்கு நான்கு அளவுருக்களைக் கொண்டுள்ளது.
தரவுத்தள இணைப்பை மேலாண்மை செய்தல்:
கீழ்க்காணும் நிரல் தரவுத்தள இணைப்பை மேலாண்மை செய்ய உதவும் முறைகளையும் அதன் சிறப்புகளையும் விவரிக்கிறது.
$servername = "localhost";
$username = "username";
$password = "password";
$DB_name = "School_DB";
$conn = mysqli_connect($servername,
$username, $password,$DB_name);
if (!$conn) {
die("Connection failed:".
mysqli_connect_error()); }
echo "Connected successfully";
?>
வினவல்களைச் செயல்படுத்துதல் :
(i) MySQL மற்றும் PHP-ஐ இணைத்தலின் மிக முக்கிய நோக்கம் MySQL தரவுத்தள சேவையகத்திலிருந்து தரவுகளை மீட்டெடுத்தல் மற்றும் கையாளுதல் ஆகும் .
(ii) SQL PHP, MySQL நீட்டிப்புடன் உடன் சேர்ந்து MySQL மற்றும் PHP இணைப்பின் நோக்கத்தை அடைவதற்கு உதவுகின்றன. mysqli_query() என்பது PHP மொழியிலுள்ள SQL வினவல் கூற்றுகளை இயக்குவதற்கு உதவுகின்றது.
கட்டளை அமைப்பு:
mysqli_query("Connection Object", "SQL query.
எடுத்துக்காட்டு :
$con=mysqli_connect("localhost", "my_user", "my_password", "Student_DB "); $sql="SELECT student_name,student_age FROM student"; mysqli_query($con,$sql);
இணைப்பை மூடுதல்:
(i) mysqli_close() செயற்கூறு PHP ஸ்கிரிப்டிங் மற்றும் MySQL தரவுத்தள சேவையகத்திற்கு இடையேயான நடப்பிலுள்ள திறந்துள்ள தரவுத்தள இணைப்பை மூடுவதற்குப் பயன்படுகிறது.
கட்டளை அமைப்பு:
mysqli_close("Connection Object");
எடுத்துக்காட்டு :
$con=mysqli_connect ("localhost", "$user", "$password", "SCHOOL_DB"); mysqli_close($con);
?>
10.
கணினி வலையமைப்பு:
கணினி வலையமைப்பு என்பது வளங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்திற்காக இணைக்கப்பட்ட கணினிகளின் தொகுப்பு. இது இலக்க வகை தொலைத்தொடர்பு வலையமைப்பின் ஒரு நுட்பமாகும்.
இணையம் :
இணையம் என்பது வலையமைப்புகளின் வலையமைப்பு - உலகளாவிய வலையமைப்பு ஆகும்.
இது உலகளாவிய தனிப்பட்ட வலைப்பின்னல்களின் இணைப்பு. இது கல்வி, தொழில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் தனித்தனியாக இயக்கப்படுகிறது.
11.
இணையம் :
(i) இணையத்தில் வலை (Net) என்பது கணினி வலைத் தொகுதியின் உலகளாவிய அமைப்பாகும்.
(ii) வலையமைப்பில் ஒரு கணினிப் பயனர், அனுமதி பெற்றிருந்தால் மற்ற பிற கணினியிலிருந்து தகவலைப் பெறலாம். இணையம் என்பது உலகளாவிய இணைப்பின் வலையமைப்பாகும்.
(iii) இது தனிப்பட்ட, பொது, வணிகம், கல்வி மற்றும் அரசு வலையமைப்புகளை உள்ளடக்கியது.
(iv) இது கம்பியில்லா மற்றும் ஃபைபர் ஆப்டிக் (Fiber Optic) தொழில் இணைக்கப்பட்டுள்ளது. நுட்பத்தால்
(v) இது 1969 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கத்தின் ARPA (Advanced Research Projects Agency) உணரப்பட்டு ARPANET என்று அங்கீகரிக்கப்பட்டது.
(vi) இணையம் மற்றும் உலகளாவிய வலையமைப்பு ஆகியவை ஒன்றுக்கு ஒன்று மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. எனினும் அவைகள் துல்லியமாக ஒன்றல்ல.
(vii) இணையம் என்பது, வன்பொருள் மற்றும் உள்கட்டமைப்பை பொருத்த உலகளாவிய தொடர்பாகும். ஆனால், வலை என்பது இணையத்தில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள சேவைகளில் ஒன்றாகும்.
அக இணையம் :
(i) இது தனிப்பட்ட ஒரு வலையமைப்பு ஆகும். ஒரு நிறுவனத்தின் உள்ளே உள்ள பணியாளர்களின் தரவுகளையும் வளங்களையும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
(ii) இது ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட பல குறும்பரப்பு (LAN) வலையமைப்புகளை கொண்டது.
(iii) இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேட்வே (Gateway) கணினிகள் மற்றும் இணையத்திற்கு வெளியே உள்ள கணினிகள் ஆகியவற்றின் மூலம் இணைப்புகளை உள்ளடக்கியது.
(iv) இரண்டு வலையமைப்புகளை வெவ்வேறு நெறிமுறைகளை பயன்படுத்தி ஒன்றாக இணைப்பதே நெறிமுறை மாற்றி எனப்படும்.
புற இணையம் :
இது ஒரு தனிப்பட்ட வலையமைப்பு ஆகும். இது இணைய தொழில்நுட்பம் மற்றும் பொது தொலைத்தொடர்பு ஆகியவற்றின் மூலம் விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் வணிகர்கள் ஆகியவர்களுடன் வணிகத் தகவல்களைப் பாதுகாப்பாக பகிர்ந்தளிக்கிறது.
12.
களப்பெயர் வெளி:
1. களப்பெயர்களை ஒரு படிநிலை மற்றும் தருக்க மர அமைப்பில் கொண்டுள்ள ஒரு பெயரிடும் அமைப்பு.
2. படிநிலை பெயர்வெளியை அடைய களப் பெயர்வெளி வடிவமைப்பில் குறிக்கப்படுகிறது.
3. இதில் பெயர்கள் தலைகீழ் மர வடிவமைப்பில் குறிக்கப்படுகிறது.
4. இதன் வேர் உறுப்பு மேலிருக்கும் வகையில் அமைந்திருக்கும்.
5. இந்த மர அமைப்பு, மட்டங்கள் 0 முதல் 127 வரை மொத்தம் 128 மட்டங்களைக் கொண்டிருக்கும்.
6. மேற்காண் படம் களப்பெயர்வெளியை குறிக்கிறது. இங்கு வேர் உறுப்பு மிக உயர்ந்த மட்டத்தில் அதாவது மட்டம் 0 வில் உள்ளது.
7. வேர் உறுப்பு எப்போதும் NULL சரத்தைக் குறிக்கிறது.
8. வேர் உறுப்புக்கு அடுத்த மட்டத்தில் முனைகள் (வேர் உறுப்புகளின் குழந்தைகள்) உள்ளன.
9. மர அமைப்பில் ஒவ்வொரு முனையும் ஒரு சிட்டை/ அடையாளம் மற்றும் களப் பெயரைக் கொண்டிருக்கும்.
13.
foreach மடக்கு அணியில் உள்ள உறுப்புகளுடன் மீண்டும் மீண்டும் செயல்பட பயன்படுகிறது.
கட்டளை அமைப்பு:
foreach ($array as $value)
{
//code to be executed;
}
foreach மடக்கின் ஒவ்வொரு சுழற்சியின் போதும் நடப்பு அணி உறுப்பின் மதிப்பானது $value மாறியில் இருத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு :
அணியின் உறுப்புகளை அச்சிடுவதற்கான foreach மடக்கு
$array = array(1, 2, 3, 4, 5);
foreach ($array as $value) }
echo $value."
";
கீழ்க்கண்ட கட்டளை அமைப்பு பயன்படுத்தி தொடர்புருத்த அணியில் உள்ள திறவுகோல்கள் மற்றும் மதிப்புகளை foreach மடக்கின் சுழற்சியில் பயன்படுத்தலாம்.
கட்டளை அமைப்பு:
foreach ($array as $key => $value)
{
//code to be executed;
}
foreach மடக்கின் ஒவ்வொரு சுழற்சியின் போதும் நடப்பு அணி உறுப்பின் திறவுகோலானது $key மாறியிலும், மதிப்பானது $value மாறியிலும் இருத்தப்படுகிறது.
வெளியீடு:
1
2
3
4
5
14.
ஈதர்நெட் கேபிளிங்கில் பயன்படுத்தப்படும் கூறுகள்:
(i) RJ45 ஈத்தர்நெட் இணைப்பி ஒரு சிறிய பிளாஸ்டிக் cube ஆகும். இதில் கம்பிகள் இணைக்கப்பட்டு இணையத்தொடர்பினை ஏற்படுத்த தயார் செய்யப்படுகிறது
(ii) RJ45 இணைப்பி ஒரு தொலைபேசி ஜாக் (Jack) போலவே தோற்றமளிக்கிறது. ஆனால் அளவில் சற்று பெரியது
(iii) ஒவ்வொரு RJ45 இணைப்பிற்கும் எட்டு ஊசிகள் (pins) உள்ளன
(iv) RJ45 இணைப்பிகள் ஈத்தர்நெட் வடத்தின் இருமுனைகளிலும் இணைக்கப்பட்டுள்ளது
(v) இது 8 - position, 8 - contact (8P8C) இணைப்பி என்றும் அறியப்படுகிறது
1. இணைப்பு வடம் (முறுக்கப்பட்ட இணைக்கம்பிகள்):
(i) இந்த வடங்கள் பொதுவாக எட்டு வெவேறு வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன
(ii) அவைகளில் நான்கு திட நிறங்கள், மற்றவை கோடிடப்பட்டவை
(iii) பச்சை, வெள்ளை - பச்சை ஆரஞ்சு, வெள்ளை - ஆரஞ்சு, நீளம், வெள்ளை - நீலம், பழுப்பு மற்றும் வெள்ளை - பழுப்பு ஆகியவை அந்த எட்டு வண்ணங்கள் ஆகும்
(iv) பல்வேறு தொழில்முறை திறன்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன
(v) CAT 3, CAT 5, CAT 6, CAT6e மற்றும் CAT 7 இதில் CAT என்பது Category என்ற வார்த்தையில் இருந்து உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வரும் எண் வடத்தின் மதிப்பைக் குறிக்கிறது
2. RJ 45 இணைப்பி:
(i) RJ45 ஈத்தர்நெட் இணைப்பி ஒரு சிறிய பிளாஸ்டிக் cube ஆகும். இதில் கம்பிகள் இணைக்கப்பட்டு இணையத்தொடர்பினை ஏற்படுத்த தயார் செய்யப்படுகிறது
(ii) RJ45 இணைப்பி ஒரு தொலைபேசி ஜாக் (Jack) போலவே தோற்றமளிக்கிறது. ஆனால் அளவில் சற்று பெரியது
(iii) ஒவ்வொரு RJ45 இணைப்பிற்கும் எட்டு ஊசிகள் (pins) உள்ளன
(iv) RJ45 இணைப்பிகள் ஈத்தர்நெட் வடத்தின் இருமுனைகளிலும் இணைக்கப்பட்டுள்ளது
(v) இது 8 - position, 8 - contact (8P8C) இணைப்பி என்றும் அறியப்படுகிறது
3. ஈத்தர் தொடர்பி :
1. ஈத்தர்நெட் போர்ட் (அ) தொடர்பி என்பது ஈத்தர்நெட் அட்டையில் ஒரு திறவுப் பகுதியாகும். இது RJ45 இணைப்பியை ஏற்கிறது
2. ஈத்தர்நெட் வடத்தின் RJ45 இணைப்பியை ஏற்படுகிறது
3. மதர்போர்டில் உள்ள ஈத்தர்நெட் அட்டையுடன் ஈத்தர்நெட் வடத்தை இணைக்கிறது
4. கிளிப்பிங் கருவி:
வடத்துடன் ஈத்தர்நெட் இணைப்பியை இணைக்கப் பயன்படும் ஒரு கருவி
1. வடத்தை தேவையான நீளம் வெட்டிக்கொள்ளவும்.
2. வடத்தின் இருபுறமும் இருந்து 1 அங்குல அளவிற்கு பாதுகாப்பு உறையை நீக்கவும். இதனால் முறுக்கப்பட்ட இணை கம்பிகள் வெளியே தெரியும்.
3. கம்பி அகற்றப்பட்ட பிறகு, சிறிய கம்பிகளை அவிழ்த்து, சரியான வயரிங் அமைப்பில் வைக்கவும். (T568 B பொதுவாக விரும்பப்படுகிறது)
15.
1. if...elseif...else கூற்று என்பது PHP இல் ஒரு நிபந்தனை கூற்றாகும்.
2. இந்தக் கூற்றானது பல நிபந்தனைகளைச் சரிபார்த்து, எந்த நிபந்தனை உண்மை என்பதை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு குறிமுறையை இயக்க அனுமதிக்கிறது.
3. இவ்வகையான கூற்றானது 'if' என்ற சிறப்புச் சொல்லுடன் தொடங்கும். அதனைத் தொடர்ந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட 'elseif' இடம் பெறலாம். இறுதியாக 'else' பகுதியுடன் முடிவடையும்.
கட்டளை அமைப்பு:
if (condition1)
{
// code to be executed if conditionl is true;
}
elseif (condition2)
{
// code to be executed if condition1 is false and condition2 is true;
}
elseif (condition3)
// code to be executed if condition1 and condition2 are false and condition3 is true;
}
else
{
// code to be executed if all conditions are false;
}
எடுத்துக்காட்டு
<?php
$ x = 12 ;
if ($x > 20)
{
echo "x is greater than 20";
}
elseif ($x > 15)
{
echo "x is greater than 15 but not greater than 20;
}
elseif (\$ x > 10 )
{
echo "x is greater than 10 but not greater than 15;
}
else
{
echo "x is not greater than 10;
}
?>
வெளியீடு:
x is greater than 10 but not greater than 15
16.
பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள் (User- defined Functions):
பயனர் வரையறுக்கும் செயற்கூறுகளானது 'function' என்னும் சிறப்புச் சொல்லுடன் தொடங்க வேண்டும். அதனைத் தொடர்ந்து செயற்கூறின் பெயர் மற்றும் பிறை அடைப்புக் குறிகள் (Parentheses) இடம் பெற வேண்டும்.
செயற்கூறு அறிவிப்பு : கட்டளை அமைப்பு
function functionName([parameter list])
{
// code to be executed
}
(i) இதில் "function" என்னும் சிறப்புச் சொல் செயற்கூறு வரையறையைக் குறிக்கிறது.
(ii) functionName என்பது செயற்கூறின் பெயர். இது PHP இல் உள்ள எந்தவொரு குறிப்பெயராகவும் இருக்கலாம். ஆனால் சிறப்புச் சொல்லாக இருக்கக் கூடாது.
(iii) parameter list என்பது காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட மாறிகளின் பெயரைக் கொண்டிருக்கும். இது ஒரு விருப்பத் தேர்வாகும். இதில் நமக்குத் தேவையான அளபுருக்களின் எண்ணிக்கையைப் பயன்படுத்தலாம்.
(iv) நெளிவு அடைப்புக் குறிகளுக்குள் செயற்கூறு செயல்படுத்த வேண்டிய குறிமுறைத் தொகுதியைக் கொடுக்க வேண்டும். இவற்றில் PHP கூற்றுகள், மடக்குகள், நிபந்தனைகள் மற்றும் பல இடம் பெறலாம்.
17.
திறந்த மூல மென்பொருளின் நன்மைகள்:
(i) பலவித திறந்த மூல மென்பொருள்கள் உள்ளன. எனவே நமக்குப் பொருத்தமான மென்பொருளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியும்.
(ii) மென்பொருளின் அனைத்து வசதிகளையும் எந்தவித செலவும், கட்டுப்பாடும் இன்றி பயன்படுத்த முடியும்.
(iii) நமது திட்டம் / கருத்துக்களை குழுவிடம் பகிர்ந்து கொள்ளவும், குறிமுறைகளை எழுதி அதை பலரிடம் பகிரவும் முடியும்.
(iv) குழுவில் உள்ள பலரது நிரல் எழுதும் உத்திகளை அறிய முடிவதால் நமது நிரல் எழுதும் திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.
(v) திறந்த மூல மென்பொருளில் உள்ள குறிமுறைகள் ஆர்வத்துடன் இணைந்த பல நிரலர்கள் மூலம் உருவாக்கப்படுகின்றன. எனவே நாம் நிரலில் ஏதேனும் பிழை இருப்பதாகத் தெரிவித்த அது குழுவில் உள்ள பலரால் விரைவாக செய்யப்படும்.
(vi) நாம் திறந்த மூல மென்பொருளில் மாற்றம் செய் முடிவதால் நமக்குத் தேவையான வசதியை மென்பொருளில் சேர்த்துக் கொள்ள முடியும். பல திறந்த மூல மென்பொருள்கள் பயனர் பயன்படுத்த எளிதானவை.
18.
| மரபு சார்ந்த வணிகம் | மின் வணிகம் |
| 1.மரபு சார்ந்த வணிகம் என்பது பொருட்கள் மற்றும் நேரடியாக மாற்றம் செய்கிறது | மின் - வணிகம் இணையம் மூலம் மின்னணு முறையில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்கிறது |
| 2. வாடிக்கையாளர்கள் வியாபாரியை எளிதில் அடையாளம் காணவும், அங்கீகரிக்கவும், பேசவும் முடியும் | வாடிக்கையாளரோ, வியாபாரியோ மற்றவரைப் பார்ப்பதில்லை |
| 3. பொதுவாகக் கடைகள் அனைத்து நேரத்திலும் நிறைந்திருக்க முடியாது | இங்கு இணையம் மூலம் வருடத்தின் நாட்களிலும் எல்லா நேரத்திலும் வணிகம் நடைபெறும் |
| 4. வாங்கும் முன் பொருட்களை நேரடியாக ஆய்வு செய்யலாம் | வாங்கும் முன் பொருள்களை நேரடியாக ஆய்வு செய்ய முடியாது |
| 5. வணிகத்தின் வரையெல்லை குறிப்பிட்ட பகுதிக்கு உட்பட்டது | வணிகத்தின் வரையில் உலகளாவியது விற்பனையாளர்கள் உலகெங்கும் தங்கள் தொழிலை விரிவுபடுத்தலாம் |
| 6. மரபுசார் வணிகத்தில் விநியோகம் சார்ந்த (supply side) பயன்படுத்தப்படுகிறது. | மின்-வணிகத்தில் தேவை சார்ந்த (demand side) வள முன்னிறுத்த கோட்பாடு பயன்படுத்தப்படுகிறது. |
| 7. மரபுசார் வணிகத்தில் நேர்கோட்டு (Linear) வணிக உறவு முறை பின்பற்றப்படுகிறது. | மின் வணிகத்தில் End to End என்ற வணிக உறவுமுறை பின்பற்றப்படுகிறது. |
| 8. பெரும்பாலான பொருட்கள் உடனடியாக விநியோகம் செய்யப்படுகின்றன | பொருட்களை விநியோகம் செய்ய சில காலம் தாமதமாகும் |
19.
1. வலையமைப்பு மூலம் வலைத்தள உருவாக்கம் மற்றும் வழங்குதல் பற்றி வலை உருவாக்க கருத்துரு விரிவாக விவரிக்கிறது.
2. வலைப் பொருளடக்க உருவாக்கம், வலைபக்க வடிவமைத்தல், வலைதள பாதுகாப்பு போன்ற வலை உருவாக்கச் செயல்களைக் கொண்டுள்ளது.
3. PHP ஸ்கிரிப்ட் எவ்வாறு வேலை செய்கிறது.
(i) ஸ்கிரிப்ட்டைப் பயன்படுத்தி, வலைதளம் (அ) வலைப்பக்கம் நிரலால் உருவாக்கப்படுகிறது.
(ii) இறுதியாக, வலைதள குறிமுறைகள் அனைத்தும், தொலைதூர சேவையகப் பாதைக்கு நகர்த்தப்படும்.
(iii) பயனாளர் சார்ந்த கணிப்பொறியில் இருந்து இறுதிப்பயனர் உலவியைத் திறந்து, வலைதளம் (அ) வலைப்பக்கத்தில் URL லைத் தட்டச்சு செய்து, வலையமைப்பில் தொலைதூர சேவையகக் கணிப்பொறிக்கு கோரிக்கையைத் தொடங்கி வைக்கிறது.
(iv) பயனாளர் கணிப்பொறியிலிருந்து கோரிக்கையைப் பெற்ற பிறகு, தொலைதூர கணிப்பொறியில் உள்ள குறிமுறையை வலைசேவையகம் தொகுத்து, மொழி பெயர்க்க முயற்சி செய்யும்.
(v) பிறகு பதில் உருவாக்கப்பட்டு வலையமைப்பிலுள்ள வலைச் சேவையகத்திலிருந்து பயனாளர் கணிப்பொறிக்குத் திருப்பி அனுப்பப்படும்.
(vi) இறுதியாக பயனாளர் கணிப்பொறியில் நிறுவப்பட்ட உலவி பதிலைப் பெற்று வெளியீட்டைப் பயனருக்கு காண்பிக்கும்.

20.
கணிப்பொறிகள் இணையத் தொழில்நுட்பங்கள் மற்றும் மின்னணு தகவல்தொடர்பு ஆகியவற்றின் வருகையால் பல மற்றும் மின்னணு பணம் செலுத்துதல் முறைகளும் உருவாகியுள்ளன
1. மின்னணு தீர்வைச் சேவைகள் (ECS)
2. மின்னணு நிதிப் பரிமாற்றம் (EFT)
3. நிகழ் நேர மொத்த தீர்வை (RTGS)
1. மின்னணு தீர்வைச் சேவைகள்
(i) மின்னணு தீர்வை சேவை (Electronic Clearing Services - ECS) என்பது ஒரு வங்கிக் கணக்கிலிருந்து பல வங்கிக் கணக்கிலிருந்து பல வங்கிக் கணக்குகளுக்கோ அல்லது பல வங்கிக்கணக்கிலிருந்து ஒன்றிற்கோ, கணினி மற்றும் இணைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணப் பரிமாற்றும் செய்வது ஆகும்
(ii) இந்த அமைப்பு காகிதமற்ற பணம் செலுத்தும் வசதியை வழங்குகிறது
(iii) இந்த முறையின் நன்மைகள் திரள் பணம் செலுத்துதல், உத்தரவாதமான பணம் செலுத்துதல் மற்றும் பணம் செலுதும் தேதிகளை நினைவில் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
(iv) வரவு மற்றும் பற்று இரண்டு நோக்கங்களுக்காகவும் ECS ஐப் பயன்படுத்த முடியும். அதாவது மொத்தமாகப் பணத்தை செலுத்துவதற்கும் (அ) மொத்தமாகப் பணத்தைச் சேகரிக்கவும் பயன்படுத்தலாம்
2. மின்னணு நிதிப் பரிமாற்றம்:
(i) மின்னணு திதிப் பரிமாற்றம் (Electronic funds transfer - EFT) என்பது நிகழ்நிலையில் 'மின்னணு' மூலம் பண மதிப்பை பரிமாற்றம் செய்வதாகும்
(ii) இதில் அனுப்புநரின் வங்கிக் கிளையிலிருந்து அனுப்பப்பட்ட தொகை, அதே நாளில் தொகுதியாகப் பெருநரின் வங்கிக் கிளைக்கு வரவு வைக்கப்படுகிறது
(iii) EFT முறை B2B வணிக மாதிரிகளில் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு நிதிகளை மாற்றுவதற்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் முறையாகும்.
3. நிகழ் நேர மொத்த வணிகத் தீர்வு:
(i) நிகழ் நேர மொத்த வணிகத் தீர்வு (Real Time Gross Settlement - RTGS) நிதி நிறுவனங்களுக்கு குறிப்பாக வங்கிகளுக்கு இடையிலான பரிவார்த்தனைகளில் தீர்வுக்காக பயன்படுத்தப்படும் ஒரு நிகழ் நேர செலுத்தல் முறையாகும்
(ii) RTGS பரிமாற்றங்கள் பொதுவாகப் பெரிய மதிப்பு செலுத்துதல்கள், அதாவது அதிக மதிப்பு பரிவத்தனைகள் ஆகும்
21.
தரவுதள தொழில்நுட்பம், உறவுநிலை மற்றும் பொருள் உறவுநிலை பண்புகளைக் கொண்ட மாதிரிகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. முக்கியமான தரவுதள மாதிரிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
1. படிநிலை தரவுதள மாதிரி :
(i) IBM- இன் முதல் DBMS ஆன IMS (Information Management System) தகவல் மேலாண்மை அமைப்பு என்பது ஒரு பிரபலமான படிநிலை தரவுதள மாதிரியாக இருந்தது.
(ii) இந்த மாதிரியின் ஒவ்வொரு பதிவிலும் (records) தகவல்கள் மரக்கிளை அமைப்பைப் போன்று பெற்றோர் குழந்தை உறவுநிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
(iii) இது உறவுநிலை மாதிரியின் அட்டவணைகளுக்கு (Tables) நிகரானது.

2 . வலையமைப்பு மாதிரி :
(i) முதன் முதலில் Honeywell-இல் உருவாக்கப்பட்ட தரவு மாதிரி IDS (Integrated Data Store) ஆகும்.
(ii) இது படிநிலை தரவுத்தள மாதிரியை ஒத்திருக்கும் தவிர ஒவ்வொரு உறுப்பினரும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட உரிமையாளரைக் கொண்டுள்ளனர்.
(iii) பலவற்றுடன் பல உறவுநிலையானது எளிய முறையால் கையாளப்படுகிறது. மூன்று தரவுதள கூறுகளைக் கொண்டுள்ளது.
(iv) அவை, வலையமைப்புத் திட்டம், துணைத் திட்டம் மற்றும் தரவு மேலாண்மைக்கான மொழி ஆகும்.

3. உறவுநிலை மாதிரி :
(i) Oracle, DB2 ஆகியவை தற்போது பயன்பாட்டில் உள்ள சில உறவுநிலை மாதிரிகள் ஆகும்.
(ii) உறவுநிலை மாதிரி சான்றுரு (instance) மற்றும் திட்டம் (schema) என்ற இரண்டு சொற்களால் வரையறுக்கப்படுகிறது.
(iii) சான்றுரு: வரிசை மற்றும் நெடுவரிசைகளைக் கொண்ட ஒரு அட்டவணை ஆகும்.

4. பொருள் சார்ந்த தரவுத்தள மாதிரி :
(i) இந்த மாதிரி பொருள் நோக்கு நிரலாக்க கருத்துருக்கள் (oop's) மற்றும் தரவுத்தள தொழில்நுட்பங்கள் ஆகிய பிணைப்பை உள்ளடக்கியது. இந்த மாதிரி உறவுநிலை மாதிரியின் அடிப்படையாக உள்ளது.
(ii) பொருள் என்ற மீண்டும் பயன்படுத்தக்கூடிய எளிய மென்பொருளை பொருள் நோக்கு நிரலாக்கம் பயன்படுத்துகிறது. இவை பொருள் நோக்கு தரவுத்தளத்தில் சேமிக்கப்படுகின்றன.

22.
அ. எண்முறைச் சான்றிதழ்:
1. ஒரு எண்முறைச் சான்றிதழ் (அ) பொது குறியீட்டு சான்றிதழ் என்பது ஒருவரது பொது குறியீட்டின் உரிமையை நிரூபிக்க பயன்படுத்தப்படும் ஒரு மின்னணு ஆவணம் ஆகும்.
2. இந்த சான்றிதழில் அனுப்புநரின் அடையாளம் பற்றிய தகவல்கள், அனுப்புநரின் எண்முறைக் கையொப்பம் மற்றும் அவரின் பொது குறியீடு போன்ற தகவல்கள் அடங்கியிருக்கும்.
3. இது அங்கீகரிக்கப்பட்ட சான்றளிப்பு அதிகாரிகளால் வழங்கப்படுகிறது.
4. ஒருவர் எண்முறை சான்றிதழைக் கோருகையில் சான்றளிப்பு அதிகாரி விண்ணப்பதாரரின் அடையாளத்தை சரிபார்ப்பார்.
5. விண்ணப்பதாரர் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தால் மட்டுமே, சான்றளிப்பு அலுவலர் அவரின் சான்றிதழை வழங்குவார்.
6. NIC, Safescript, TCS, MTNL, e-Mudhra ஆகியவை இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றளிக்கும் நிறுவனங்கள் ஆகும்.
ஆ. எண்முறைக் கையொப்பம்:
1. ஒரு குறிப்பிட்ட மின்னணு ஆவணம், செய்தி அல்லது பரிவர்த்தனை நம்பகமானதா என சரிபார்க்கப் பயன்படும் அமைப்பு ஆகும்.
2. இது ஒரு பெறுநருக்கு, தகவல் குறிப்பிட்ட அனுப்புநரால் தான் உருவாக்கப்பட்டது என்பதற்கான உத்தரவாதம் அளிக்கிறது.
3. மேலும் இந்த தகவல், கையொப்பம் இடுபவரிடம்தான் தோன்றியதாகவும், நடுவில் உள்ள ஒரு Cracker மூலம் மாற்றம் செய்யப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
4. எண்முறை கையொப்பங்கள், மின்னணு ஆவணங்களின் தோற்றம், தனித்துவம், நிலை மற்றும் அனுப்புநரின் ஒப்புதல் போன்றவற்றின் ஆதாரப்பூர்வமான உறுதி மொழிகளை வழங்குகிறது.
5. எண்முறை கையொப்பங்கள், அதிக அளவு பாதுகாப்பு மற்றும் உலக அளவிலான ஏற்பு ஆகியவற்றை வழங்குவதற்காக, பொதுக் குறியீடு உள்கட்டமைப்பு (PKI) என அழைக்கப்படும். ஒரு உலகளாவிய ஏற்றுக்கொள்ளப்பட்ட தர நிலையை பயன்படுத்துகின்றன.
23.
| கருவியின் பெயர் | கருவிப் பெட்டி | சுட்டுக் குறி | பயன் |
| பாயின்டர் டூல் | உரை மற்றும் வரைகலைப் படங்களைத் தேர்ந்தெடுக்க நகர்த்த அளவை மாற்ற | ||
| டெக்ஸ்ட் டூல் | உரையை உள்ளிட தேர்ந்தெடுக்க பதிப்பிக்க | ||
| ரொடேட்டிங் டூல் | பொருட்களைத் தேர்ந்தெடுக்க மற்றும் சுழற்ற | ||
| க்ராப்பிங் டூல் | வரைகலைகளை ஒழுங்கமைக்க | ||
| லைன் டூல் | ![]() |
நேர்கோடு வரைய | |
| கன்ஸ்ட்ரெய்ன்டு டூல் | ![]() |
கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் கோடுகள் வரைய | |
| ரெக்டாங்கல் டூல் | ![]() |
சதுரம் மற்றும் செவ்வகம் வரைய | |
| ரெக்டாங்கல் ஃபிரேம் டூல் | ![]() |
உரை மற்றும் வரைகலைகளை வைப்பதற்கான செவ்வகங்களை வரைய | |
| எலிப்ஸ் டூல் | ![]() |
வட்டம் மற்றும் நீள்வட்டம் வரைய | |
| எலிப்ஸ் ஃபிரேம் டூல் | ![]() |
உரை மற்றும் வரைகலைகளை வைப்பதற்கான நீள்வட்டங்களை வரைய. | |
| பாலிகான் டூல் | ![]() |
பல கோணங்கள் வரைய | |
| பாலிகான் ஃபிரேம் டூல் | ![]() |
உரை மற்றும் வரைகலைகளை வைப்பதற்கான பல கோணங்களை வரைய | |
| ஹேண்ட் டூல் | பக்கத்தை திரை உருளல் செய்ய | ||
| ஜூம் டூல் | ![]() |
![]() |
பக்கத்தின் அளவை பெரிதாக்கியும் சிறிதாக்கியும் பார்க்க. |
24.
25.
அசைவூட்டல் :
அசையா படங்களை மிக விரைவாக காண்பிப்பதன் மூலம் அவற்றைத் தொடர்ச்சியான அசைவு போன்ற உணர்வை கொடுக்கும் செயல்.
அசைவூட்டலில் திரை பொருள் என்பது ஒரு வெக்டர் படமாகும்.
சிறப்பம்சம் :
1. எண் மாற்றத்தைப் பயன்படுத்தி ஒருங்கிணைப்புகளை வரையறுக்க படத்துடன் அதன் பாதையின் இயக்கம் கணக்கிடப்படும்.
2. குறைந்தபட்ச சட்டக விகிதம் விநாடிக்கு 16 சட்டங்கள் என இருந்தால் மென்மையான தோற்றத்தைப் கொடுக்கும்.
3. இயற்கை தோற்றத்திற்கு குறைந்தபட்சம் விநாடிக்கு 25 சட்டகங்களாக இருத்தல் வேண்டும்.
தொழில்நுட்பம் :
(i) அசைவூட்டல் இரு அல்லது முப்பரிமாணங்களைக் கொண்டது.
(ii) திரையில் X மற்றும் Y அச்சுகளுக்கு இடையேயான பரப்பில் இரு பரிமாண அசைவூட்டல் நிழற்படத்தை உயிரோட்டமாகக் கொண்டு வருகிறது.
(iii) முப்பரிமாண அசைவூட்டத்தில் X, Y மற்றும் Z ஆகிய மூன்று அச்சுகளுக்கிடையே உயிரோட்டம் நடைபெறுகிறது.
(iv) அசைவூட்டல் கருவிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை ஆகும். இரண்டு வகையான அசைவூட்டல்களாவன:
1. பாதை அசைவூட்டல்
2. சட்டக அசைவூட்டல்
1. பாதை அசைவூட்டல் :
மாறாத பின்னணியைக் கொண்ட திரையில் ஒரு பொருளை நகர்த்துவதை உள்ளடக்கியது.
2. சட்டக அசைவூட்டல் :
பல பொருட்கள் ஒரே சமயத்தில் நகர்வதற்கு அனுமதிக்கிறது மற்றும் பின்னணி (அ) பொருள்களும் மாறுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards